அதிரையில் கொடிக்கட்டிப் பறக்கும் லாட்டரித்தொழில்

கண்டும்காணாமல் அதிரை காவல்த்துறை ...
கடந்த ஆட்சிக்காலத்தின் போது செய்த ஒரேயொரு நல்லகாரியம் தமிழகத்திலிருந்து லாட்டரியை முற்றிலுமாக ஒழித்தது. அப்பாவி ஏழை தினக்கூலிகள் இதற்கு அடிமையாகி வாங்கிய சம்பளத்தின் ஒருபகுதியை லாட்டரிக்கும் மற்றொரு பகுதியை மதுவுக்கும் செலவு செய்துவிடுகின்றனர்.
மறுநாள் கஞ்சிக்கு கூட வழியின்றி கஷட்டப்படும் அவலங்களை ஒரளவுக்கு தடுத்தது இந்த லாட்டரி தடைச்சட்டம், ஆனால் அதுஅதிரைக்கு மட்டும் பொருந்தாது காவல்துறையின் ஆசியுடன் அதிரையில் (கடைத்தெரு அஸ்லம் ஆபரண மாளிகைக் கடை முன்பு) முக்கியகடைவீதியில் வெளிப்படையாக அண்டை மாநில லாட்டரிகளை இருமடங்கு விலைக்கு விற்று பணம்
பார்க்கிறார்கள்.

இதை ஏழை தினக்கூலிகள் வாங்கி ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது . அதிரையின் முக்கியவீதியில் அதுவும் வெளிப்படையாக இப்படி லாட்டரி தொழிலை நடத்துவது காக்கிகளின் கண்ணுக்கு மட்டும் தெரியவில்லையா ? அல்லது வேண்டுமென்றே கண்டுக்கொள்வதில்லையா? எனபொதுமக்கள் கேட்கின்றனர்.
Share:

அதிரை இளைஞர்களின் விடுமுறைக் கொண்டாட்டம்

உலகெங்கும் செல்வம் திரட்டத் தங்கள் உடலுழைப்பையும் அறிவையும் வழங்கும் நம் மக்களில் பெரும்பாலோர் கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்கள். மாதம் தவறாமல் வீட்டினரின் செலவுக்கு தங்கள் மாதச்சம்பளத்தில் பெரும் பகுதியை அனுப்பி விட்டு, பெரும்பாலோர் கவுரவக் கடனாளிகளாகவே இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட வளைகுடாவில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த பலர் இன்றும் கஷ்டப்பட்டுக் கொண்டும் கடனிலும் இருக்கிறார்கள். படிப்பிலும் பொது அறிவிலும் சற்று முன்னேறிய பிறகு கொஞ்சம் கவுரவமான வேலைகளில் மற்ற சமூகத்தவருக்கு இணையாக சம்பளம் பெறுகிறார்கள்.

நமதூர் இளைய தலைமுறையினரில் சிலர் துபாயில் தங்கள் நான்கு நாட்கள் பெருநாள் விடுமுறையில் அபூதாபி அருகிலுள்ள தீவுக்குச் சென்று விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்துள்ளார்கள். அவர்களின் மகிழ்ச்சியை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.மேலும் சில வீடியோக்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.

1) Adirai Based Dubaiboyz boating in Lulu Island

2)Adirai Based Dubaiboyz rocking in Fujairah

3)Adirai Based Abulhasan(Vengaachi) in full musical mood
Share:

அதிரை ஆக்ஸிஸ் வங்கியும் பிற வங்கிகளும்

கடந்த 3 வருடங்களாக யுனைடட் பவுன்டேஷன் குழு பலமுறை அதிரையில் பல வங்கிகளையும் நேரில் அணுகி ஏ.டி.எம் (ATM) நிறுவக்கோரி பெரும் முயற்சி எடுத்தது. சரியான பதில் இல்லை!

இவர்களுக்கு ஏ.டி.எம் ஒரு கேடா? என்பதுபோல் பதில்கள், உதாசீனம், 40 வருடமாக நடக்கும் கனரா வங்கி, கோடிக்கணக்கில் நம்மக்களின் முதலீடுளைப் பெற்று லாபகரமாக அனுபவிப்பதைத் தவிர அதிரை மக்களுக்கு அவசரத்திற்கு உதவுவதில்லை. முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத சூழல்களில் / நிர்ப்பந்தத்தில் அவசரத்திற்கு லோன் கேட்டால் இல்லை என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம் அல்லாத மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீண்ட கால லோன் வழங்குகிறார்கள்.

டெபாசிட் செய்யவரும் பெண்களை அலட்சியப்படுத்தியும், அதிகாரத் தோரணையுடன் நடத்துவதும் கனரா / இந்தியன் வங்கிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. NRI டெபாசிட் கின்னஸ் சாதனை அளவைத் தொட்டுவிடும் அளவுக்கு 2 வங்கிகளிலும் நிரம்பி வ்ழிகிறது.

இனி நம் சகோதரர்கள்/சகோதரிகள் கவனமாக இருந்து நமதூரின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிதாக ஏ.டி.எம் வசதியைத் தொடங்கியுள்ள ஆக்ஸிஸ் வங்கிக்குக் ஆதரவளிப்போம். வங்கியே இல்லாமல் ஏ.டி.எம் திறந்தவர்கள் பெரிதா? வங்கியும் இருந்து நம்மை அலட்சியம் செய்தவர்கள் பெரிதா?

ஆக்ஸிஸ் வங்கியை ஒருமுறைதான் அணுகிய உடனேயே, செயலில் காட்டி விட்டார்கள். இவ்வளவு நாள் கனரா ஏன் ஏ.டி.எம் நிறுவவில்லை? அவர்க்ளுக்கு நம் டெபாசிட் மட்டும்தான் முக்கியம்! ஆக்ஸிஸ் வரும்வரை நம்மைக் கண்டு கொள்ளாதவர்களை நாம் அலட்சியப்படுத்துவது தவறல்ல.

இதன் மூலம் விரைவில் நாம் ஆக்ஸிஸ் வங்கியையும் நமதூருக்குக் கொண்டு வருவோம்! நம்மை மதித்த வங்கியை நாமும் மதிப்போம். நமது ஊருக்கு இன்னும் நிறைய தேவைகளை செய்து மேலும் நவீன மயமாக்குவோம்.

இதற்கு முழுக்காரணமாக இருந்த சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களுக்கு நன்றி! மேலும் எங்கள் சேவை தொடரும்.

தகவல் உதவி: சகோதரர்.அன்சாரி

பின்குறிப்பு:

1) ஆக்ஸிஸ் வங்கியின் ஏ.டி.எம்மிற்கு குறைந்த பட்ச பயன்பாட்டு அளவை எட்டாவிட்டால்,வேறு இடத்துக்கோ/அதிகம் பயன்பாடுள்ள இடத்திற்கோ ஏ.டி.எம் மெஷினை மாற்றக்கூடிய வாய்ப்புகள் எழலாம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாகப் புழங்கும் கடைத்தெருவில் ஆக்ஸிஸ் ஏ.டி.எம். இருப்பதே முஸ்லிம்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் பாதுகாப்பு என்பதை வெளிநாட்டு வாழ் அதிரைவாசிகள் கவனத்தில் கொண்டு தங்கள் ஆதரவை புதிதாக அக்கவுண்ட் திறந்து வழங்கவும்.

2) அதிரை மக்களின் நன்மையைக் கருதி மின்மடலில் வந்தச் செய்தியை இங்கு பிரசுரித்துள்ளோம். குறிப்பிட்ட நிறுவனங்களுக்கோ அல்லது நபர்களுக்கோ விளம்பரம் செய்யும் நோக்கம் இல்லை. சம்பந்தப்பட்ட பிற வங்கிகள் தங்கள் விளக்கங்கள்/சேவைகள் விபரம்/ஆட்சேபனை இருந்தால் adiraixpress@gmail.com என்ற மின்முகவரிக்கு மடலிடலாம்

-அதிரை எக்ஸ்பிரஸ்-
Share:

வரிவசூல் என்ற பெயரில் அத்துமீறல்.

அதிரையில் கடந்தசிலதினங்களாக அதிரை பேரூராட்ச்சி நிர்வாகம் தீவிர வரிசூல் என்ற பெயரில் ஆண்கள் இல்லாத வீடுகளில் உள்ளேபுகுந்து கடப்பாறை மண்வெட்டியுடன் உடனே வீட்டுவரி தண்னிர்வரிகட்ட சொல்லி மிரட்டப்படுகிறார்கள்.

சில வீடுகளில் தண்னிர்வரி வீட்டுவரிகட்டி இருந்தும் அடவடியாக கதவைத்தட்டி நீங்க... பணம் கட்டியாச்சா என திமிர்தனமாக கேட்கிறதாக அதிரைவாசிகள் மனவேதனையுடன் கூறுகிறார்கள்.

(சில தினங்களுக்குமுன் இதுபோன்ற ஒரு நிகழ்வை நானும் சிங்கப்பூர் அஸ்லம்காக்கா அவர்களும் நேரில் கண்கூடாக கண்டு எச்சரித்து அனுப்பினோம்)

இதைகண்டித்து கேட்கவேண்டிய நமது சமுதாய வார்டு உறுப்பினர்கள் என்னத்தான் பண்னுகிறார்களோ?...
- JP -
Share:

அதிரையில் ஏரி குளங்கள் நிரம்பின...

கடந்த வாரம் அதிரையில் பெய்த பலத்தமழையின் காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பின இப்பொழுது அதிரைபகுதியில் கடுமையான பனி பொழிவு காரணமாக கடுமையான குளிர்காற்று வீசூகிறது அதிகாலை நேரங்களிலும் பனிபொழிவு காணப்படுகின்றன. இப்பொழுது செக்கடிகுளத்திற்க்கு ஆற்று நிர் வந்துக்கொண்டுள்ளது.
படம் மற்றும் செய்தி : அதிரை பரக்கத்
Share:

போலி சுவரொட்டி

அதிரையில் பரபரப்பு

அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர்.

அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.

- JP -

Share:

வெள்ளிநிலா மாதமிருமுறை தமிழிதழ் வெளியீடு

நமது வட்டார செய்திகளைத்தாங்கி மாதம் இருமுறை மலரும் இந்த இதழின் வெளியீடு மிக எளிமையான முறையில்நடைப்பெற்றது. இதில் தமுமுக முன்னாள் மாவட்டத்தலைவர் சரபுதீன் ஆசிரியராகவும் ஹசன்(அதிரைபுதியவன்)துணையாசிரியராகவும் செயல்படுகின்றனர்.
இது எந்த இயக்கமும் சாராமல் நடுநிலையுடன் செய்திகளைத்தாங்கி வெளிவரும் இதற்க்கு நமதுபகுதி பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வெள்ளி நிலாபிரகாசிக்க அனைவரும் ஒத்துழைப்புதருமாறு இதழ்வெளியீட்டாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இதழ் தஞ்சை மாவட்டம் முழுவதும் வினியோகிக்க பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தங்களது மேலானகருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பவேண்டிய முகவரி
வெள்ளிநிலா
த.பெ.எண்:1208
சென்னை.01
தொலைபேசிஎண்.:044 42625304 /05
-J P-
Share:

அதிரை அநாதை இல்லத்தின் வேண்டுகோள்

நமதூரில் மஸ்ஜித் அக்ஸா (மரைக்காயர் பள்ளி) அருகில் கடந்த 30வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் எதிம்கானா என்கிற அநாதை இல்லத்தில் தற்பொழுது சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பள்ளிக்கூடம், மதரஸா போன்றவற்றில் படித்து வருகிறார்கள். உணவு உடை, இருப்பிடம், கல்விச்செலவு, மருத்துவச் செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் அனைத்தும் இந்த ஸ்தாபனமே ஏற்றுக்கொண்டு செவ்வனே செய்து வருகிறது.

உஸ்தாதுகள் மூன்று பேர் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்து செலவுகளுக்கும் பொதுமக்கள் தரும் நன்கொடைகள்/சந்தா/ஜகாத்/ குர்பானித் தோல்கள் இவைகள் மூலமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆகவே, தங்களால் முடிந்த அளவு இந்த அநாதை இல்லத்திற்கு உதவுமாறு கேட்டுகொள்கிறோம், இது மிகச் சிறந்த தர்மமாகும்.

குறிப்பு:

1.இந்த வருட கூட்டு குர்பானி கொடுக்க நிய்யத்து உள்ளவர்கள், மாடு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடு ஒன்றுக்கு ரூ 600 வீதம் அனுப்பவும்.

2. அத்துடன் வீட்டிலே குர்பானி கொடுப்பவர்கள் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு முன்கூட்டியே தெரியப்படுத்தினால், வீட்டில் வந்து குர்பானித் தோலைப் பெற்றுக்கொண்டு ரசீது அளிப்பார்கள்.

தொடர்புக்கு....
ஜனாப். சாகுல் ஹமீது(கண்கானிப்பாளர்)
கைப்பேசி; 9842482494
அலுவலக எண்: 04373-241918

Share:

ஏழைகளுக்கு செல்வந்தர்கள் உதவ வேண்டும்

ஜாவியா இரண்டாம் நாளில் மொளலவி அப்துல்காதிர் ஆலிம் உரை


ஜாவியாவில் நடந்துவரும் புனிதமிக்க புகாரி ஷரிப் 10:12:2007 (நேற்று) காலை துவங்கியது. இரண்டாம் நாளான இன்று மொளலவி அப்துல் காதர் ஆலிம் அவர்களின் சிறப்பு பயான் நடைப்பெற்றது இதில் மூசா நபியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விளக்கப்பட்டது.

ஒருதடவை மூசா நபியிடம் மிகவும் அறிவாளி யார் என உம்மத்தார்கள் கேட்டார்கள் அதற்க்கு நபியவர்கள் நான்தான் என பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ் மூசா நபியை நீண்ட தூரம் பயனம் செய்ய கட்டளையிட்டான் மூசா நபியும் பயனித்தார்கள் போகும் வழியில் கடுமையான பசி ஏற்ப்பட்டது அப்பொழுது பசி இருந்து இல்லாமல் அதை அல்லாஹ் மரக்கசெய்த்துவிட்டான் அப்பொழுது அறிவாளி வல்ல ரஹ்மானைத்தவிர வேறுயாரும் இல்லை என நபி மூசா (அலை)உணர்ந்தார்கள். இதில் ஏராளமான படிப்பினைகள் நமக்கு இருக்கிறது.

துல்ஹஜ் மாதம் பிறை 1 முதல் 10வரை ஏற்றமிகு நாட்களாகும் கலா நோன்பு உள்ளவர்கள் இந்த பத்து நாட்bகளில் நோன்பு வைத்தால் மிகவும் ஏற்றமாகும் இதேபோல் சுன்னத்தான நோன்புகளும் நோற்கலாம். குர்பானி கொடுப்பவர்கள் இந்த 10நாட்களிலும் நகம் முடிமழித்தல் கூடாது .குர்பானி கொடுக்க ஆடு மிகவும் சிறந்தது இம்மாதத்தில் ஏழைகளுக்கு அதிகதிகமாக உதவிகளை செய்யவேண்டும் என பல்வேறு சுன்னத்தான விஷயங்களை விளக்கமாக கூறினார். இந்த புகாரிஷரிப் தொடந்து 40 நட்கள் வரையும் நடைப்பெரும். ஏராளமான ஆண்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் பெண்களுக்கு அருகில் உள்ள வீடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

தகவல் : அஜ்மீர் ஷாகுல்

-JP-

Share:

ஸ்டார் ஏவியேஷன் விமானசேவை

ஸ்டார் ஏவியேஷன், துபாய் தமிழ் நிறுவனமான ஈடிஏ அஸ்கான் இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் குறைந்தபட்ச கட்டண விமான சேவை. இந்நிறுவனமே குறைந்தபட்ச விமானசேவை துவக்க அனுமதி பெற்றுள்ள முதல் தனியார் நிறுவனம்.

இப்புதிய விமான சேவை மூன்று முதல் ஐந்து விமானங்களைக் கொண்டு தென்னிந்திய நகரங்களான சென்னை, பெங்களூர் அல்லது ஹைதராபாத் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு செயல்படத்துவங்கும் என அதன் நிர்வாக இயக்குநர் சையத் எம் ஸலாஹ¤த்தீன் தெரிவித்தார்.

இச்சேவை ஆறு அல்லது ஒன்பது மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் மற்றும் கொச்சி ஆகிய தென்னிய்ந்திய நகரங்களை ஸ்டார் ஏவியேஷன் இணைக்கும் வண்ணம் தனது சேவையைத் துவங்கும்.

http://archive.gulfnews.com/articles/07/12/09/10173549.html
Share:

அதிரைக்கு வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா!


நமதூர் கடற்பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. மரவாக்காடு கடலோரப்பகுதியில் மீன்களை கொத்தி திண்பதற்காக ஏராளமான பறவைகள் காத்திருக்கின்றன.
நன்றி : தினகரன் (10:12:2007)
Share:

அதிரை ஏடிஎம் வசதி!

அதிரைக்கு புதிதாய் ஏடிஎம் வசதியை ஆக்ஸிஸ் வங்கி வருகிற 10 ம் தியதி திறப்பு விழா காண்கிறது. திறப்பு விழாவில் ஜனாப் MMS அப்துல் வகாப் அவர்கள் தலைமையேற்று திறந்து வைக்கிறார்கள்.

மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் இந்த வசதிக்காக வெளிநாடு வாழ் அதிரை பொதுமக்கள் அதிகமாக கணக்குகளை திறக்க இந்தவங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.


Share:

பாப்ரி மஸ்ஜித்

15 வருடங்கள் ஆகிவிட்டது,அல்லாஹ்வின் இல்லம் பாப்ரி மஸ்ஜித் இரத்தக்காட்டேறிகளால் தகர்க்கப்பட்டு.போலி வாக்குறுதிகளும் நம்பிக்கைத்துரோகங்களும் உயிரழப்புகளும் பொருளிழப்பும் என்க்கெளண்டர்களும் இன்னும் பல மஸ்ஜித்கள் தகர்க்கப்பட்டதும் தான் கடந்த 15 வருடங்களாக நடந்துவருகிறதை தவிர எந்த நீதியும் நியாயமும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இல்லை.

வழக்கம்போல் இவ்வருடமும் இயக்கங்கள் தங்கள் இருப்பைக்காட்டுவதற்கான மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பட்டங்களும் பேரணிகளும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கடையடைப்பும் நடைபெறும்.போஸ்டர்கள் ஒட்டப்படும்.பாராளுமன்றத்தில் ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் சில கூக்குரல்களை எழுப்பும் அதெற்கெதிராக சில காண்டாமிருகங்கள் உறுமும்.உடனே மாலை வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.சில வக்கில்லா முஸ்லிம் தலைவர்கள் நீதிமன்றத்தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கொடுக்கும் பேட்டிகள் மறு நாள் பத்திரிகைகளின் கடைசி பக்கத்தின் ஓரத்தில் இடம்பெறும். அதற்கு முன்பாக இந்திய உளவுத்துறையின் பொய் பீதிச்செய்திகளால் பலத்த பாதுகாப்புகளால் இரயில் நிலையங்களும் விமானநிலயங்களும் திணரும்.இவ்வாறு சடங்குகளாக டிசம்பர் 6 முடிவுறும்.இதுதான் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இறையில்லங்களை இழந்து உயிர்களை இழந்து பொருளை இழந்து மானத்தை இழந்தபின்னரும் இந்த முஸ்லிம் சமூகம் சிந்திக்கவில்லை.முஸ்லிம்களை நசுக்கிக்கொண்டிருக்கும் ஓநாய்கள் எக்காளமிட்டு வலம்வரும்பொழுது இழப்புக்கிற்கு ஆளான சமூகம் இரந்து நிற்கின்றது.பள்ளி வாசலை கட்டவும் பாதிப்புகளை சரிச்செய்யவும் பதிலடிக்கொடுக்கவும் இவர்களிடம் திட்டங்களும் இல்லை வழி நடத்தக்கூடிய தலைமையும் இல்லை.

மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொ டர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.(AlQuran13:11)

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் க ொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறான ோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்த ோனுமாக இருக்கின்றான்.(AlQuran22:40)
Share:

அதிரைக்கு அகல ரயில்பாதை ரயில்வே அமைச்சரின் கடிதம்


சமூக நல சங்கத்தின் சார்பில் நமதூர்வழியாக காரைக்குடி வரையிலும் அகல ரயில் பாதை அமைக்க கோரி பல்வேறு விதமான கோரிக்கைகளை வைத்து வருவதை நாம் அனைவரும் அரிவோம்.

அதன் ஒரு பகுதியாக ரயில்வேதுறை இணை அமைச்சர் ஆர் வேலு அவர்களுக்கு சமூக நல சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் திருமதி ஆர் பிரேமா எழிசபத் MABL ஒரு கடிதம் அனுப்பினார் அதற்க்கு ரயில்வேத்துறை இணைஅமைச்சர் வேலு அவர்கள் பதில் கடிதம் எழுதியதில் பட்டுக்கோட்டைக்கு பதிலாக புதுக்கோட்டை என்று தவறுதலாக பிரசுரம் செய்து அனுப்பியுள்ளார் அதை திருத்தி அனுப்பிவைக்குமாறு சமூக நல சங்கத்தின் சார்பில் பதில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதாக பிரேமா எழிசபத் MABL கூறினார்.

-JP-
Share:

நமதூர் பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 30 பள்ளிக்கூடங்களில் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் நேற்று பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

அதில் ஒரு பகுதியாக நமதூர் காதர் முகைதீன் ஆண்கள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 30 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகளை நேரடியாக கண்காணித்து ஊக்கப்படுத்தினார்.

நமதூரில் பல்வேறு பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணண் மாணவ மாணவிகளிடம் பாடசம்மந்தமான கேள்விகளை கேட்டரிந்தார்.
Share:

ஆன்லைனில் புகைப்பட வாக்காளர் அட்டை பதிவு

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடை‌சி நா‌ள் டிச‌‌ம்ப‌ர் 8ஆ‌ம் தே‌தி எ‌ன்று த‌மிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கையில், ராயபுரம், தாம்பரம், ஆலந்தூர் சட்டசபை தொகுதிகளைத் தவிர மற்ற சட்டசபைகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த 3 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 3ஆ‌ம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் மூலம் பதிவு செய்யும் வசதிக்கு பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பு உள்ளது. இதுவரை பெயர் சேர்ப்பதற்காக ஆயிரத்து 564 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக சென்னையில் இருந்து 331 விண்ணப்பங்களும், காஞ்‌சிபுரம் மாவட்டத்தில் 241, திருவள்ளூர் மாவட்டத்தில் 154 விண்ணப்பங்களும் வந்துள்ளன. தாம்பரம், ஆலந்தூர் தொகுதிகளுக்கு இந்த வசதி இனிமேல் செய்யப்படும்.

சுட்டி (1) சுட்டி (2)

பட்டுக்கோட்டை தொகுதி வாக்காளர்கள் பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

-இணையராசா-
Share:

அதிரைவாசிகள் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு

திட்டமிட்டு மறுக்கப்பட்டதால் உரிமைகளை மறந்துவிட்ட சமுதாயம், படித்தாலும் அரசு வேலை கிடைக்காது என்ற விரக்தியால் வெளிநாட்டுக்கு கூலிகளாய் பறந்ததன் விளைவு இன்று வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைத்த பின்பும் அதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரியாத நிலையிலேயே சிறுபான்மை சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள் உள்ளனர்.


ஏனென்றால், இவையெல்லாம் (உணர்வின் மூன்றாம் காரணி தவிர வேறு) யாரும் வலியுறுத்தி சொல்லித் தராத புதிய நடைமுறைகளாக தெரிவது தான். இந்த மந்த நிலையை மாற்றிடவும், படித்த, படித்துக் கொண்டிருக்கின்ற மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து கிளைகளுக்கும் ஒரு அழகிய முன்மாதிரியை ஏற்படுத்திடவும், முதற்கட்டமாக அதிரையிலிருந்து மாணவ, மாணவிகளுடன் பட்டதாரிகளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக நகரப் பொருளாளர் அஸ்ரப் தலைமையில் தஞ்சாவூரில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஏற்பாடுகளை அதிரை கிளையை சார்ந்த மஹ்சீன், தமீம், முகமது அமீன், ஹபீபுல்லா ஆகியோர் நகர நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு ஒருங்கிணைத்தனர். அனைத்து செலவுகளையும் கிளை ஏற்று செய்த நிலையிலும் மாணவிகள் மத்தியில் ஏற்பட்ட ஆர்வத்தோடு ஒப்பிடும்போது மாணவர்களின்; (அடிமை வாழ்க்கை) வெளிநாட்டுக் கனவுகள் இன்னும் கலையவில்லை என்றே தோன்றுகிறது, இந்நிலையை மாற்றிட இன்னும் நாம் உழைக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் உண்மை.


தகவல் மற்றும் புகைப்படங்கள்: அதிரை தமீம் அன்சாரி
Share:

அதிரைக்கு ஏடிஎம் வசதி அறிமுகம்

சென்னையில் இயங்கும் யுனைடெட் பவுன்டேசனின் முயற்சியால் அதிரையில் வருகிற டிசம்பர் 10 ஆம் தியதி அன்று அதிரையில் ஆக்ஸிஸ் வங்கியின் கிளை அலுவலகமும் ஏடிஎம் வசதியும் திறக்கப்பட இருக்கிறது.

அதிரை கடைத்தெருவில் அமைய விருக்கும் இந்த வங்கிக்கு வெளிநாடுகளிலிருந்தும் NRI கணக்கு வசதியும் இணையத்தில் கணக்குகளை உடனுக்குடன் பார்க்க இணைய தள வசதியும் உண்டு.

உள்நாட்டில் வசிப்போர் ஊருக்கு பணம் அனுப்ப உள்ளூரிலே ஏடிஎம் வசதியிருப்பதால் 24 மணிநேரமும் உடனடியாக பணம் மாற்ற முடியும்.

அதிரையில் கொட்டைப்போட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கனவான ஏடிஎம் வசதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் விரக்தியடைந்த வாடிக்கையாளர்கள் இந்த வங்கிக்கு விரைவில் மாறுவார்கள் என்பதும் அதே வசதியை மற்ற வங்கிகளும் அறிமுகம் செய்யலாம் என்பது திண்ணம்.

WWW.AXISBANK.COM இந்த முகவரியிலிருந்தே NRI கணக்குகளைத் திறக்க முடியும்.

உள்ளூரில் இருப்போர் சகோ. அப்துல் ரஜாக்(
CHASECOM- THE HINDU) அவர்களை +91 98410 44165 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Share:

புகைப்பிடித்தல் சொட்டைக்கு நல்லது

ஒரு வேளை சாம்பிரானி புகையாயிருக்குமோ, அட அகிலாய் இருக்குமோ, சரி படித்துத் தான் பார்ப்பமே என்று நீங்கள் வந்தால் ஏமாந்து போவீர்கள். இது சிகெரெட் சமாச்சாரம். எப்போழுதும் "புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கெடுதி", "புகை நமக்குப் பகை" என்று எழுதியிருந்தாலோ, சிகெரட் பிடிப்பதால், புற்றுநோய், நெஞ்சுவலி(மார்படைப்பு), மலட்டுத் தன்மை போன்றவைப் பற்றியெல்லாம் வாய்கிழிய உலகமே கூவினாலும் யார் காது கொடுத்து கேட்பது.

புகைப் பிடிப்பவனைவிட அதன் அருகில் இருந்து சுவாசிப்பவனுக்குத்தான் அதிகமே கெடுதல் என்று சொன்னாலும் செல்லப்பிள்ளைகளின் அருகில் அமர்ந்து புகைப்பிடிப்பவர்கள் ஏராளம்.சமீபத்திய ஆய்வு ஒன்று புகைப்பிடிப்பதால் முடி உதிர்ந்து வழுக்கைத் தலை (சொட்டைத் தலை) ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இங்கு செல்லவும்யாராகினும் இதன் மொழியாக்கத்தை பின்னூட்டத்தில் இட்டால் உபயோகமாய் இருக்கும்.

Share:

கலைஞருக்கு வேண்டுகோள்


நாளையதினம் சென்னை நேரு உள்விழையாட்டரங்கில் நடைப்பெரும் தமுமுகவின் சார்பில் நடக்கும் கலைஞருக்கு பாரட்டுவிழாவில் நமதூர் அகலரயில்பாதையை விரைவாக அமல்படுத்தகோரி தமிழகமுதல்வர் டாக்டர் கருணாநீதியை நேரில் சந்தித்து சமூக நல சங்கத்தின் சார்பில் மனுகொடுக்க உள்ளது அதன் நகலை இங்கு பதியப்பட்டுள்ளது இது சம்பந்தமாக ஆலோசனைகளை பின்னூட்டமாக இடலாம்.

மேலும் தகவலுக்கு:
சமூகநல சங்கம்
9840262361
-JP-
Share:

எங்கே வருவாய் அலுவலகம்?

நமதூர் பழஞ்செட்டிதெருவில் இருக்கும் (Revenue inspector) ஆர் ஐ அலுவலம் (?) இது... தற்பொழுது எங்கு செயல் படுதுன்னு கூட தெரியலன்னு ஊர்மக்கள் மற்றும் மாணவர்கள் புலம்புகிறார்கள்.. ஏன்னா மாணவர்களுக்கான அரசுஊக்கத்தொகைக்கு ஆர் ஐ தான் சிபாரிசு செய்யனும். இது சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கும் மன்டையில் எட்டவில்லைபோலும் ஒரு அறிவிப்பு பலகை வைக்கலாம்முன்னு...

படம்:அதிரை பரக்கத்
-JP-
Share:

துபாய் மற்றும் புஜைராவில் இலவச மருத்துவ முகாம்


23.11.07 அன்று துபாய் மற்றும் புஜைராவில், முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - துபாய் மண்டலம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அமிரகத்தில் வசிப்பவர்கள் கலந்து பயன்பெறவும்.Share:

இலவச மருத்துவச் சேவை

பெங்களூரைச்சார்ந்த சத்ய சாய் பொதுசேவை நிறுவனம் வசதியற்ற இதயக்கோளாறுக் கொண்ட ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சேவையை செய்கிறது.

சிறுவன் ஜியாவுதீனுக்கு பெங்களூரில் வசிக்கும் நமது சகோதரர்கள் விசாரித்து உதவும் படி அதிரை எக்ஸ்ப்ரஸ் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

For any kind of heart surgery free of cost ..
Contact :
Sri Sathya Sai Institute Higher Medical Sciences,
E.P.I.P. Area,
WhiteField,
Bangalore

Write to us
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka, INDIA.
Call us
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related +91- 080- 28411500 Ext. 415
Email us
General Queries: adminblr@sssihms.org.in

Pass it to all, it will help some one.
Share:

அதிரை எஸ்டிடி பூத்கள் லாபமா? பாவமா?

பல்வேறு வகையில் சாதனைப் படைத்துவரும் அதிராம்பட்டிணம் தற்பொழுது தொலைபேசித் துறையிலும் சாதனைப்படைத்து வருகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர் மக்கள் மூலமாக தஞ்சைமாவட்டத்திலேயே அதிக அந்நியச் செலவானியை பெற்றுத் தருகின்றனர். அத்துடன் தற்பொழுது தொலைபேசித்துறைக்கும் கடந்த ஒரிரண்டு ஆண்டுகளாக அதிக வருவாயைப் பெற்றுத் தரும் ஊராகவும் திகழ்கிறது.


UAE போன்ற நாடுகளில் தொலைபேசி நிறுவனங்கள் monopoly முறையில் இயங்குவதால் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகமானதாக இருக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு இந்தியாவிற்கு பேச சுமார் 2 திர்ஹம் வரை செலவாகிறது. அதாவது சுமார் 21 ரூபாய். அதுவே இந்தியாவிலிருந்து வெறும் 11 -13 ரூபாய்கள் தான். இதனை அறிந்த நமதூர் சகோதரர்கள் சிலர் ஆரம்பகட்டத்தில் (நாமறிந்த வகையில் மார்கெட்டில் கடைநடாத்தி வரும் அன்சாரி, மேலத்தெரு மாஜிதீன் போன்றவர்கள்) கான்பெரென்ஸ் முறையில் அதிரையிலிருந்து இணைப்புகளைப் பெற்று துபைக்கு கொடுத்து வந்தனர்.

இவற்றைப் பற்றி அறிந்த மேலும் சிலர் இதே தொழிலில் இறங்கினர். தற்பொழுது 124 தொலைப்பேசி பூத்கள் இயங்கிவருகின்றன. ஒரு பூத்களில் குறைந்தது சுமார் ஐந்து வழித்தடங்கள் இயங்குகின்றன. அதிகபட்சமாக 20க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் கூட உண்டு.

அதிரை எஸ்.டி.டி பூத்கள் பற்றி ஒருவரிடம் பேசும்பொழுது அதிகவருவாயைத் தருவது போல் இருந்தாலும் அதிக கடன் சுமைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். துபையில் உள்ள ஏஜென்ட் அல்லது நடத்துனர் தனியே வேலைக்குச்செல்வதாலும், நம்பிக்கை அடிப்படையில் இணைப்புகள் பெற்றுக் கொடுப்பதாலும் பணம் வசூல் செய்வதில் காலதாமதம் ஆகிறது. இதனால் இவர்கள் தொலைபேசி சந்தாவைக் குறித்த நேரத்தில் கட்டுவதில் மிகவும் சிரமம் அடைவதாகத் தெரிவித்தனர்.

தொலைபேசி நிறுவனங்கள் இவர்களுக்கு கமிசனாக 20 முதல் 25 சதவீதம் வரைத் தருகின்றனர். ஆனால் சந்தா செலுத்த கால அவகாசம் ஏதும் தருவதில்லை. ஒரு நாளைக்குள் கட்டிவிட வேண்டும் என்கிற கட்டாயம். இல்லையேல் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. தொழில் பாதிப்படைகிறது. இதனால் மனஉழைச்சலுக்கு ஆளாகும் இவர்கள் நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து பணத்தை கட்டுவதாக பூத் உரிமையாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள்:பணத்தை மிச்சம்பிடிப்பதாக இருந்தாலும் பல்வேறுக் குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன. குறிப்பாக
குடும்பப் பேச்சுக்கள், கணவன் மனைவி இடையே பேசும்பொழுது ஒத்துக்கேட்பது போன்றவற்றை சிலர் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. பணம் அனுப்பிய விவரங்களை அனுபவம் வாய்ந்த வாடிக்கையாளர்கள் கான்ப்ரன்சிங் முறையில் பேசுவதற்கு தயங்குகின்றனர். பள்ளிவாசல் பிரச்சினையில் இது போன்ற ஒற்றர்கள் மூலம் எதிர் அணியினருக்கு (மா மாமாக்களுக்கு) செய்திகளை உடனுக்குடன் பரிமாறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.

துபை ஏஜெண்ட் என்ன சொல்கிறார்? துபை வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அடுத்த பதிவில்...

உங்கள் கருத்துக்கள்/ அனுபவங்களைப் பின்னூட்டமிடுங்கள்... adiraixpress[at]gmail.com க்கும் மின்னஞ்சல் செய்யலாம்.

Share:

கல்வி உதவி

முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்


B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B. Tech.,B.D. S.,M.B.B. S.,M.S.,M. D.,M.E.,M. S.W.,M.Tech. ,M.C.A மற்றும் Professional/ Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.


இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.


2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றும் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs .gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.


சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002


மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.


சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007
Share:

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள்

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் குறித்த விவரத்தை மாணவர்கள் தனக்கு விரிவான புகாராக அனுப்பினால், சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நேற்று கோவை வந்த ப.சிதம்பரத்திடம், கல்விக் கடன் வழங்க பல வங்கிகள் மறுப்பதாகவும், இதுதொடர்பாக நிதியமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், கல்விக் கடன் வழங்க மறுத்த, மறுக்கும் வங்கிகள் குறித்த அனைத்து விவரத்தையும் மாணவ, மாணவியர் எனக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பப்படும் புகார்கள் குறித்து விசாரித்து, தவறு செய்த வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நான் உறுதி அளிக்கிறேன்.

இதுதொடர்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் எனக்கு தனித் தனியாகவே புகார்களை அனுப்பலாம். இதன் மூலம் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும் என்றார் அவர்.

இந்த சமயத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவ, மாணவியர் சிலருடன் அமைச்சரை அணுகினார். அவரிடம், இந்த மாணவ, மாணவியருக்கு வங்கிகள் படிப்புக் கடன் வழங்க மறுத்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவ, மாணவியரிடம் இதுதொடர்பாக தனக்கு விரிவான தகவல்களைத் தருமாறு ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
Share:

கேட்க நாதியில்லையா?

நமதூர் பேரூந்து நிலையத்தில் நெல்லுக்குள்அரிசி வகையறா வாரிசுகளால் ஆஸ்பத்திரிதெரு ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கு வக்ப் செய்யப்பட்ட நிலத்தில் "மஸ்ஜித் அல்அமீன்" என்ற பெயரில் பள்ளிவாசல் கட்டப்பட்டு தொழுகை நடந்து வருவதை அறிவீர்கள்.

இன்னும் ஓரிரு வருடங்களில் சேது நெடுஞ்சாலை வழியாக நமதூரைக் கடந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையம் வழியாக பள்ளிக்குள் வந்துசெல்ல அமைக்கப்பட்டிருந்த வாசலை அதிரை பேரூராட்சி துணைச் சேர்மன் இராம.குணசேகரனின் தூண்டுதலின் பேரிலும், சேர்மன் M.M.S வஹ்ஹாப் சாஹிப் அவர்களின் நல்லாசியுடன் பேரூராட்சி மன்ற அலுவலர், பள்ளிவாசல் கமிட்டியாளர்களுக்கு எதிராக பல்வேறு தொந்தரவுகளையும் செய்து வருகிறனர்.

1. பள்ளியின் பேரூந்து நிலைய வாசலில் குப்பை வண்டிகளை நிறுத்தியது.
2. சமரசப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் மீது பொய்வழக்கு போட்டது.
3. பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பைத் துண்டித்தது.
4. மழை நீரினால் அரிக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் மணல் அடித்த டிராக்டர் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது.
5. உயர் நீதிமன்ற உத்தரவைக் கண்டு கொள்ளாமல், பள்ளிவாசல் கமிட்டியார்களை காவல்துறையினர் மூலம் அச்சுறுத்துவது....

என சங்பரிவாரச் சிந்தனையுடன் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பேரூராட்சி அலுவலரின் அடாவடிகளைக் கேட்பதற்கு வக்கில்லாமல் நம்மால் தேர்ந்தெடுத்து, நமது குறைகளைத் தீர்க்க பேரூராட்சிக்கு அனுப்பி வைக்கப் பட்ட வார்டு மெம்பர்களும் பேசாமடந்தைகளாக இருப்பதுடன், சேர்மன், துணைச் சேர்மன்,அலுவலர் ஆகியோரின் அடிமைகளாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

உள்ளூரில் வசிக்கும் பெருந்தகைகளும் கணவான்களும், இவர்களைப் பகைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழ முடியாது?! என்ற அச்சத்தில் எல்லா அடக்குமுறைகளையும் கண்டும் காணாமல்,தாங்களுண்டு தங்கள் தேங்காய் தோப்புகளுண்டு என சுயநலமாக இருந்து வருகிறார்கள்.

எவர் வீடோதானே எரிகிறது, நமக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் இருந்தால் ஒருநாள் நமது வீடும் எரியும்போது அணைக்க யாரும் வர மாட்டார்கள். இறையில்லத்திற்கு இடையூறு செய்பவர்கள், நாளை நமது இல்லங்களுக்கும் இடையூறு செய்யத் தயங்கமாட்டார்கள்.

தோலுரித்த பாம்புகளாக அடுத்த பொதுத்தேர்தலுக்கு கும்பிட்டவாறு ஓட்டுக் கேட்டு வரும்போது, சுரணையற்ற சிலர் வழக்கம்போல் கொடி பிடிப்பார்கள். அதிரை மக்களே! இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!! அதிரை நலன் விரும்பும் மக்களே! நீங்கள் வசிக்கும் பகுதியுளுள்ள நமதூர் மக்களை ஒன்று திரட்டி, இந்த அராஜக அக்கிரமக்காரர்களைக் கண்டியுங்கள்.

அல்லாஹ்வின் இல்லத்தை இடிப்பேன் என்று இறுமாப்பாக யானைப் படையுடன் வந்த ஏமன் நாட்டு மன்னன் அப்ரஹாம், மென்று போடப்பட்ட வைக்கோலைப்போல் சின்னாபின்னமாகி சீரழிந்தான். இறையில்லத்திற்கு இடையூறு செய்பவர்கள், இன்ஷா அல்லாஹ் விரைவில் ஈருலகிலும் இழிவடைவார்கள் என்பதை நினைவூட்டுங்கள்!

அல்அமீன் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படும்வரை தங்கள் ஆசாபாசங்களை தியாகம் செய்து அல்லாஹ்விற்காக ஒன்றுணைந்துள்ள கமிட்டி மற்றும் சங்கத்தினருக்காக துஆச் செய்யுங்கள். அகிலத்தைக் காக்கும் அல்லாஹ் தனது, அல்அமீன் இல்லத்தையும் நிச்சயம் காப்பான்! மனம் தளராதீர்கள் முஸ்லிம்களே! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்!

-கான்ஷாகிப்-
Share:

தொடரும் அரசு இயந்திரங்களின் அடாவடி

அல் அமீன் பள்ளிவாசலுக்கு பல்வேறு வகையில் தொல்லைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசு இயந்திரங்களின் அடாவடிகளில் ஒன்றாக ஆர்டிஓ கடிதத்தை போலீஸ் மூலம் அனுப்பி பயமுறுத்த நினைத்தனர். ஜனாப் தமீம் கடிதத்தை வாங்க மறுத்ததால் சுவற்றில் ஒட்டி போட்டோ எடுத்துக் கொண்டு சென்றனர் போலீஸார்.

கடிதத்தின் நகல் மக்கள் பார்வைக்கு...Share:

அதிரைப் பேரூராட்சி சாதனை

அதிரை மக்களின் நீண்டநாள் கணவான திட்டங்களை நிறைவேற்றுவதில் கூட்டணிக் கட்சிகளான திமுகவும் காங்கிரஸும் போட்டோ போட்டிக்கொண்டு செயல்பட்டுவருகின்றன. அவற்றின் ஒருபகுதியாகத்தான் கீழே உள்ள இந்த புகைப்படங்கள்.

தலைவர் அப்துல்வகாப் சாகிப் மற்றும் துணைத்தலைவர் இராம. குணசேகரன் அவர்களின் உத்தரவின் பேரில் இந்தியாவிலேயே முதன்முறையாக குப்பை அள்ளும் வாகனங்களுக்கான செட் இலட்சரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இச்சாதனைக்கு முதல்வரின் பரிசிலுக்காக அனுப்பிவைக்க இருப்பதாக தெரிகிறது.
பேரூராட்சிக்கு வாழ்த்துக்கள்!!


பஞ்சாயத்து போர்டு பொறத்தால கட்டப்பட்டிருக்கும் நவீன சொகுசு கக்கூஸ். நான்கு லச்சரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது (கீழே)

அடப்பாவிகளா ஒரு சொகுசு வீடு கட்ட ஆகும் செலவா? என்று கேட்கின்றான் அரசியல் தெரியாத ஒர்அப்பாவி.ஒரு குடும்பம் சீரான குடும்பம்:
வீட்டு இலக்க எண்கள் அடிப்பதற்காக பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு ரூ 10 வீதம் வசூல் செய்து அதில் "கருத்துக்களுடன்" கூடிய தகரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிரையில் உள்ள சுமார் 30 ஆயிரம் வீடுகள் பயன்பெறும். ரூ 3 லச்சம் தேறும்.

இதுவும் பேரூராட்சியின் மிகப்பெரிய சாதனையாக கூறப்படுகிறது.

தலைவர்களின் சிந்தனைகளை எண்ணி பொதுமக்கள் புழங்காகிதம் அடைகின்றனர்.

Share:

அதிரை பகுதியில் இறால் வளர்ப்பு துவங்கியது

அதிராம்பட்டினம், கடற்கறை பகுதிகளில் இறால் வளர்ப்பு பணி துவங்கியுள்ளன. இந்தாண்டு அதிகமான கடலோர பகுதிகளில் குட்டைகள் அமைத்து இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த வளர்ப்பு முறையால் ஆண்டிற்கு இருமுறை இறால் அறுவடை செய்யலாம். உற்பத்தி செய்யும் இறால்கள் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுவதால் உலக வணிக அரங்கில் நல்ல வருமானம் ஈட்டித்தரும் ஒரு லாபகரமான தொழில் இதுவாகும். வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து இறால் வளர்ப்பு தொழில் செய்வதற்கு இப்பகுதிக்கு பலர் வருகை தருகின்றனர்.

அதிராம்பட்டினம் கடற்கரையோர பகுதிகளில் பண்ணைகள் அமைத்து இறால் வளர்க்கப்பட்டு வருகிறது. வளர்ப்பு இறால்களுக்கு தீவணம் போடும் பணியில் இந்த தொழிலாளி ஈடுபட்டுள்ளார்.

தஞ்சை கடற்பகுதி மீனவர்களுக்கு இறால் வளர்ப்பை பற்றி சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம், கடலோர சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. தஞ்சை மாவட்ட கடற் கரை பகுதியை பொருத்தவரை இறால் வளர்ப்புக்கான வள வாய்ப்புகள் அதிகமான அளவு வரவேற்பு பெற்றுள்ளது.

இன்றைய 80 சதவீத பரப்பளவில் இறால் குட்டைகளை அமைத்து அறிவியல் முறைப்படி இறால்கள் வளர்க்கப்படுகின்றன. இறால் விலை சற்று சரிந்து இருந்தாலும் அதிரை கடலோர பகுதிகளில் இறால் வளர்ப்பு அதிகரித்துள்ளது.
Share:

பள்ளிவாசல் கேட்டை நிரந்தரமாக பூட்ட E.O. திட்டம்

அல் அமீன் பள்ளி பஸ்ஸான்ட் வழியாக உள்ள தற்காலிகமாக பூட்டப்பட்ட கேட்டை நிரந்தரமாக பூட்டவேண்டும் என்று E.O வின் கோரிக்கையின் பேரில் ஆர்டிவோ சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

E.0. வால் கொடுக்கப்பட்ட மனுவில் மேற்கண்ட கேட்டை திறக்கும் பட்சத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அதிரை முஸ்லிம்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் "கல்வரம்" வரும் என்
று எழுத்துமூலம் எழுதிக்கொடுத்துள்ளார், பிராமன E.O.

மேற்கண்ட தகவல், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறியப்பட்டது.

மேலும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நம்மிடம் கூறுகையில் அதிரை வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து இட்டால் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுப்பதாக ஆர்டி.ஓ உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக பொதுமக்கள் வார்டு உறுப்பினர்களிடம் உடனடியாக வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த கேட்டை திறக்க வேண்டும் என்று ஏற்கெனவே கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்ட் தீர்ப்புக்குப் பின் பள்ளிவாசல் கேட் எதிரே (சாச்சா ஆபீஸ் பின்புறம்) எடுக்கப்பட்ட ஆழ்குழாய்கிணறு.


Share:

ஹாஜிகளின் கவனத்திற்கு...

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஹாஜிகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள். ஹஜ் பயணம் குறித்த தமிழ்விளக்கத்தை இஸ்லாம் கல்வி தளத்தில் வீடியோவாகக் காணலாம். கணினியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம்.
Linked to IslamKalvi.com, Haj Bookஹாஜிகளின் துஆக்களையும் நிய்யத்துக்களையும் வல்ல அல்லாஹ் நிறைவேற்றுவானாக! ஆமின்.

நன்றி: இஸ்லாம் கல்வி டாட் காம்
Share:

அதிரை:சுவர் இடிந்து விழுந்து தாய் மகன் படுகாயம்

நமதூரில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகன் படுகாயம் அடைந்தனர். அதிராம்பட்டினம் தொக்கலிக்காட்டை சேர்ந்தவர் மாணிக்கம். விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி பானுமதி(47), மகன் ஜீவரத்தினம்(27) ஆகியோருடன் நேற்று அதிகாலை படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் அப்போது மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மாணிக்கத்தின் கூரை வீட்டின் சுவர் இடிந்து பானுமதி, சீவரத்தினம் ஆகியோர் மீது விழுந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாசில்தார் சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதிராம்பட்டினம் போலீசார் நேற்று மாலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Share:

அதிரை பேரூராட்சி சேர்மன் மீது வழக்கு

அல் அமீன் பள்ளியின் பேரூந்து நிலைய வாசலைத் திறப்பதற்கு உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்தும் அதனை மதியாமல் சட்டத்தைக் காலடியில் போட்டு மிதித்து அதிரை நகர முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பள்ளிவாசலுக்குத் தொடர்ந்து இடையூறு செய்து வரும் அதிரை பஞ்சாயத்து போர்டு சேர்மன் ஹாஜி.M.M.S. அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மீது அல் அமீன் பள்ளிவாசல் கமிட்டியார்கள் சார்பில் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புகாரை ஏற்று சம்பந்தப்பட்ட பேரூராட்சி சேர்மன் மீது வழக்கு பதிவாகி உள்ளதாக எமது அதிரை செய்தியாளர் தெரிவித்தார்.

-பச்சபுள்ள-
Share:

பள்ளிவாசலுக்கு உதவினால் அபராதம்

கடந்த மாதங்களாகப் பெய்து வந்த அடைமழையினால் அல்அமீன் பள்ளிவாசலின் தற்காலிகக் கொட்டகை பலவினமடைந்தது.

பள்ளிவாசலின் அஸ்திவாரம் மழைநீரினால் அரிக்கப்பட்டதால் சுமார் 25 லோடு மணல் அடிக்கப்பட்டது.

சென்றமுறை பள்ளிவாசல் நிலத்திற்கு செக்கடிக்குளம் மற்றும் ஆலடிக்குளத்திலிருந்து மண் எடுக்க அதிரை பேரூராட்சியின் துணைச்சேர்மன் இராம.குணசேகரனின் சகோதரர் சோமுவின் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு லோடுக்கு ரூபாய் அறுநூறு வீதம் கிட்டத்தட்ட 500 லொடு மண் அடித்து தாழ்வான பள்ளி நிலம் உயர்த்தப்பட்டது.

இந்தமுறை, அதிரை இந்து முன்னணியின் பினாமியாகச் செயல்படும் இராம. குணசேகரனின் சகோதரர் சோமுவின் டிராக்டர் பயன்படுத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் பஞ்சாயத்து போர்ட் அதிகாரத்தைப் பயன்படுத்தி மழையினால் பாதிக்கப்பட்ட அல் அமீன் பள்ளிக்கு மண் அடித்த ஏழு டிராக்டர்களுக்கு தலா இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

குணசேகரனின் இந்த அட்டாவடித்தனம் அதிரை மக்களை மிகவும் அப்செட் செய்துள்ளது. தி.மு.கவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாக்கு வங்கியையும் குணசேகரன் குழிதோண்டிப் புதைக்காமல் விடமாட்டார் என்றே திமுக அனுதாபிகள் கவலைப் படுகிறார்கள்.

-பச்சப்புள்ள-
Share:

அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்

அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாடு தீர்மானம்


அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 9-வது மாநாடு நடைபெற்றது. எம்.கணேசன், ஞானசேகரன், சாரதாம்பாள் ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர் எஸ்.கந்தசாமி வரவேற்றார். ஆர்.ஜவகர் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.


முன்னாள் எம்.எல்.ஏ. வீரையன் மாநாட்டை தொடங்கி வைத்தார். ஏ.கோவிந்தசாமி இரங்கல் தீர்மானத்தையும் எம்.அய்யாவு வேலை அறிக்கையையும் வாசித்தனர். எம்.செல்வம் ஒன்றியக்குழு செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு ஜி.நீலமேகன், மாவட்டச் செயலாளர் ஆர்.சி.பழனிவேல் ஆகியோர் பேசினர். மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. வளர்ந்து வரும் பட்டுக்கோட்டை நகருக்கு அரசு பொறியியல் கல்லூரி அமைத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
  2. நகரத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
  3. நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-தஞ்சை அரியலூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
  4. நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  5. 54 பேரை பலிவாங்கிய மகாராஜசமுத்திரம் பாலத்தை மேம்பாலமாக மாற்றி அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
  6. பட்டுக்கோட்டையில் தொடங்க உள்ள தென்னை வணிக வளாகத்தை உடனே தொடங்க வேண்டும்.
  7. அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம்அமைத்து கொடுக்க வேண்டும்.
  8. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை போக்கி மருத்துவமனையை ஒருங்கிணைந்த கட்டிடமாக மாற்றி அமைக்கவும், மருத்துவர்கள் அதிகமாக நியமிக்கவும், உயிர்காக்கும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

நன்றி: தினத்தந்தி

Share:

ஐசிஐசிஐ க்கு 50 இலட்சம் அபராதம்

குண்டர்களை வேலைக்கு அமர்த்தி கார் லோன் பெற்ற ஒருவரை அடித்து வசூலித்ததின் பேரில் ஐசிஐசிஐக்கு டெல்லி நுகர்வோர் கமிஷன் ரூ 50 இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சமீபகாலமாக ஐசிஐசிஐயின் அடாவடிகள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பும் மும்பையில் இது போன்ற தீர்ப்பு (ஐசிஐசிஐ க்கு எதிரான) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குண்டர்களின் தொல்லையால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல் ஐசிஐசிஐ யின் கிரெடிட் கார்ட் காரணமாக அதிக தொல்லைகளுக்கு ஆளாகுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அனுபவங்களை பின்னூட்டமிடுங்கள்...
Share:

உயிர்கொல்லிக் கதண்டுகள் அழிப்பு

அதிராம்பட்டினத்திலிருந்து லாரல் மெட்ரிக்குலேஷன் பள்ளி அருகில் சாலையோர மரத்தில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தன. அருகில் பள்ளிக்கூடம் இருந்ததால் கதண்டுகளை அழிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கதண்டுகளுக்கு இரவில் கண் தெரியாது என்பதால் நவம்பர்-2 ஆம் தேதி இரவு தீயணைப்பு துறையினர் தீ வைத்து கதண்டுகளை அழித்தனர்.
Share:

அதிரை பைத்துல்மாலுக்கு நன்றி

கடந்த மாதம் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசால் முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இந்த அரிய சந்தர்ப்பத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குத் தேவையான முஸ்லிம் மாணவர்களை உருவாக்குவதும், படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்குத் தேவையான பயிற்சி வழங்க வேண்டிய தேவையை அறிந்து, நமதூர் அதிரை பைத்துல்மாலின் மேற்பார்வையில் "அதிரை பட்டதாரிகள் பேரவை" தொடங்கப்பட்டுள்ளது.அதன் நோக்கங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்களை விளக்கி நமதூர் குத்பாப் பள்ளிகளில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

நமதூர் மக்களின் பல்வேறு தேவைகளையும் அறிந்து குறிப்பாக அரசு வழங்கிய 3.5% இடஒதுக்கீட்டிற்குத் தகுதிபடுத்தும்படி அதிரை மாணவர்களை ஒருங்கிணைக்கவும் திற்மையாளர்கள் ஆகவும் வழியேற்படுத்தும் வகையில் அதிரை பட்டதாரிகள் பேரவையை ஏற்படுத்திய நல்லுள்ளம் கொண்ட கல்வியாளர்களை அதிரை எக்ஸ்பிரஸ் மனதாரப் பாராட்டுகிறது.

படங்கள் உதவி: அஹமது முனாஸ்கான்
Share:

உதவிக்கரம் நீட்டுவோம்...

நமதூர் மேலத்தெருவை சேர்ந்த ஹாஜா அலாவுதீன் என்பவரின் மகன் ஜியாவுதீனுக்கு இதயத்தில் ஓட்டைகள் இருப்பதால் அவரை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சேர்க்குமாறு தஞ்சை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

சென்னையில் பரிசோதித்த மருத்துவர்கள் இதற்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் சரியாகும் என கூறிவிட்டனர். இதற்கான செலவு மட்டும் ஒருலட்சத்து ஐம்பத்தையாயிரம் வரும் என டாக்டர்கள் கூறிவிட்டனர்.இவ்வளவு பணம் தோது பண்ணும் நிலையில் இக்குடும்பம் இல்லை. எனவே நமதூர் சகோதரர்கள் இச்சிறுவனின் சிகிச்சைக்கு தங்களால் இயன்ற அளவு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

தங்களுடைய உதவிகளை கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

UR,அலாவுதீன் கனரா வங்கி கணக்கு எண்: 36839

அதிராம்பட்டினம் கிளை

மேலும் விபரங்களுக்கு 9865787540

-JP-

Share:

அதிரை முஸ்லிம் மீடியா (UAWC)

உலகமெல்லாம் பரவியுள்ள நமதூர்வாசிகள் இணையம் மற்றும் ஈமெயில் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், உள்ளூர் சங்கதிகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு உறவையும் நட்பையும் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன் நமதூர் நலம் விரும்பும் இளைஞர்களால் அதிரை இணைய குழுமம் (AWC) ஏற்படுத்தப் பட்டது.


AWC இல் கடந்த வருடங்களில் நமதூர் பற்றிய பல விடயங்கள் காரசாரமாகவும், தகவலுக்காகவும் விவாதிக்கப்பட்டன. இக்குழுமத்தில் வைக்கப்பட்ட பல விவாதங்கள் முடிவற்ற நிலையிலேயே இருக்கின்றன.
அளப்பரிய கருத்துச் சிந்தனையும் சமூக நன்னோக்குமுள்ள நம்மக்களால் ஏன் தெளிவான முடிவை எட்ட முடியவில்லை என ஆராய்ந்தபோது பெரும்பாலான விவாதங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் விசய ஞானம் மிக்கவர்கள் தங்கள் ஆலோசனைகள் ஓரளவு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதப்படும் போது, எதிர்கருத்துக் கொண்டவர்களால் குறைகாணப்பட்டு ஏளனப்படுத்தப் படுமோ என்ற தயக்கம் அல்லது தான் சொல்ல வரும் கருத்தை தெளிவாக எடுத்துரைக்குமளவுக்கு ஆங்கிலப்புலமையின்மை ஆகியவே என்ற முடிவுக்கு வந்தோம்.


இந்தக் குறைகளைக் களையவும், அந்நிய மொழி ஆதிக்கத்தால் மெல்ல மறைந்து வரும் தாய்மொழியாம் தமிழில் பிறமொழிக்கு ஈடாக கருத்துப்பரிமாற்றம் செய்யவும் UAWC (யுனைடட் AWC) என்ற இக்குழுமம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.


இதில் உறுப்பினராவதன் மூலம் ஏற்கனவே செயல்பட்டுவரும் AWC, DUBAIBOYZ, ACD ஆகிய இணையக் குழுமங்களை ஒரே குழுவாக்கி பரஸ்பரம் கருத்து/தகவல் பரிமாற்றத்தை ஒரே நேர்கோட்டில் இணைத்து தெளிவான முடிவுக்கு வர வழிவகை செய்யவே இக்குழுமம். இது மேற்கண்ட குழும நோக்கங்களுக்கும் செயல்பாட்டிற்கும் எதிரானதல்ல.


இக்குழுமம் பற்றிய சில சந்தேகங்களும் அவற்றிற்கான விளக்கங்களும்:


1) UAWC இன் சிறப்புக்கூறுகள் யாவை?
அ) தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்து யூனிகோட் (UTF-8) என்ற என்கோடிங் முறையில் எழுதுவதன் மூலம் எந்தவகை கணினியிலும் எழுத்துரு (FONT) நிறுவாமல் படிக்க முடியும்.
ஆ) இணைப்புகளால் (ATTACHMENTS) மின்மடல் வழங்குனரின் கொள்ளலவு ஆக்கிரமிக்கப்படுவது GMAIL இல் இல்லை. ஆகவே கட்டுப்பாடற்ற மின்மடல்களை கையாளவும், அவற்றை அழிக்காமல் பாதுகாக்கவும் முடியும்.
இ) கூகிலின் தேடல் (ALERT) வசதியின் மூலம் நமதூர் சம்பந்தப்பட்ட செய்திகள், தகவல்கள் இணையத்தில் எங்காவது புதிதாக இடம்பெற்றால் அவற்றை நம் தேவைக்கேற்ப இக்குழுமத்தில் தானாகவே தொடுப்புக் கொடுக்கப்படும். இதன் மூலம் அதிரை பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ஏதுவாகும்.
ஈ) பிற முன்னனி இணைய சேவையாளர்களுடன் கூகில் வர்த்தகப் போட்டியில் ஈடுபட்டுள்ளதால் அன்றாடம் புதுப்புது சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது.


2) தமிழில் எப்படி டைப் பண்ணுவது?
அ) "யூனிகோட்" உமர் தம்பி அவர்கள் யூனிகோடில் சுலபமாக டைப் பண்ண சில இலவச கோப்புகளைகளையும் மென்பொருட்களையும் அவ்வப்போது மெருகூட்டியும் உருவாக்கியும் வருகின்றார்கள். இவற்றைக் கொண்டு டைப் செய்து அனுப்பலாம்.


ஆ) ஈகலப்பை 2.0 என்ற இலவச தமிழ் மென்பொருளை பதிவிரக்கம் செய்து நிறுவினாலும் தமிழில் டைப் செய்யலாம்.


இ) ஏற்கனவேயுள்ள இணைய தள/நாளிதழ் செய்திகளை மேற்க்கோள் காட்டவும் "யூனிகோட்" உமர் தம்பி அவர்களின் உள்ளிணைப்பு மென்பொருளை நிறுவுவதன் மூலம் மீண்டும் டைப் பண்ணும் நேரம் மிச்சமாகும்.


3) இணைப்புகளை அனுப்ப முடியுமா?
முடியும். இணையத்தில் வைரஸ் பிரச்சினை இருப்பதால் சந்தேகத்திற்குறிய அட்டாச்மெண்ட்களை அனுப்புவதையும் அல்லது அனுப்புனரால் அறியப்படாமல் வைரஸ் மூலம் அனுப்பட்ட கோப்புகளை திறப்பதையும் தவிர்க்கவும்.


4) கட்டுப்பாடுகள்/கெடுபிடிகள் உண்டா?
இல்லவே இல்லை. ஆனால் பிறர் மனதை புண்படுத்தும் அல்லது தனிப்பட்ட பகைமை பாராட்டும் தகவல் பரிமாற்றங்களை பகிர்ந்து கொள்பவர் நிரந்தரமாக குழுமத்திலிருந்து நீக்கப்படுவார். அனுப்புனர் கட்டாயம் சொந்த பெயரிலேயே எழுத வேண்டும்; ஈமெயில் முகவரியோ அல்லது பெயரோ அனுப்புனரை அடையாளப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஏற்கனவே நமதூர் இணையக் குழுமங்களில் பரிச்சயமானவர்கள் தவிர மற்றவர்கள் மிகுந்த ஆய்வுக்குப் பிறகே இணைக்கப்படுவார்கள்.


5) அதிரைவாழ் மாற்றுமதத்தவர்கள் இதில் இணைய முடியுமா?
முடியாது. இக்குழுமம் அதிரை முஸ்லிம்களுக்குள் சகோதரத்துவத்துடனும் உரிமையுடனும் கருத்துப் பரிமாற்றம் செய்யவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.இத்தளத்தின் மேல்பகுதியில் வலது பக்கத்தில் இருக்கும் அதிரை முஸ்லிம் மீடியா என்ற பெட்டியில் உங்கள் ஈமெயில் முகவரியை இடவும். உறுப்பினர்களின் சேர்க்கை பரிசீலினைக்கு உட்பட்டது. சுய அறிமுகம்/ போதிய தகவல் இல்லாதவர்களின் ஈமெயில்கள் கண்டிப்பாக புறக்கணிக்கப் படும்.
Share:

சேதுசமுத்திரதிட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்ச்சி

நமதூரில் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தின் கீழ் மீனவ பெண்களுக்கு இலவச தையற் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழை கடலோர சமுத்திர மேம்பாட்டுத்திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் வழங்கினார். அருகில் ஸ்கியூபா தொண்டு நிறுவன இயக்குனர் கனகராஜ் ஜோசப்.

நன்றி:தினகரன்
Share:

மரண அறிவிப்பு

வண்டிப்பேட்டை மர்ஹும் ஜனாப் AM அப்துல் மஜிது அவர்களின் மகனும் பராக்கா அஸ்ரஃப் அவர்களின் சகோதரர் முகம்மது மீரான் (மீயன்னா) அவர்கள் இன்று அதிரையில் சாலைவிபத்துஒன்றில் வஃபாத்தாகிவிட்டார்கள் இண்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவுன் ...

அன்னாரின் ஜனாசா தக்வாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுவதாக தெரிகிறது. இவரின் மஃபிரத்து நல்வாழ்க்கைக்கு அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.
Share:

இரயில் சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்

கடந்த 15 வருடங்களாக மயிலாடுதுறை - காரைக்குடிக்கு, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக சென்னையிலிருந்து அகலப் பாதை ரயில் திட்டத்தை அமுல் படுத்த பல வகையான முயற்சிகள் எடுத்து சென்ற 2007 ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கென 404 கோடி ரூபாய் செலவகும் என்று திட்ட மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்.

முதல் கட்டமாக ரூ 10 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி ரூபாயை ஒதுக்கி துரிதமாக மேற்படி வேலையை எடுத்து செயல படுத்துவதற்கு ரயில்வே துறை மத்திய அமைச்சர்களையும், தமிழக முதல்வர் அவர்களையும், மேலும் ரயில்வே இணை அமைச்சர் மாண்புமிகு திரு வேலு அவர்களையும் மற்றூம் ரயில்வே துறை உயர் அதிகாரிகளையும் அழைத்து சென்னையிலோ அல்லது அதிராம்பட்டிணத்திலோ பொது மாநாடு ஏற்பாடு செய்வதென முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதற்குன்டான பொருளாதார தேவைகளை பொது மக்களிடம் திரட்டுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாராளமாய் நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இதற்கான விபரங்கள் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.


சமூக நலச் சங்கம்

M.K.S. அகமது அலி ஜாபர்,
23/11, ஜோன்ஸ் தெரு,
சென்னை 600 001
தொலைபேசி: 9840262361
Share:

"இலஞ்சப் பெருச்சாலி 2007" போட்டி அறிவிப்பு

அதிரை எக்ஸ்ப்ரெஸ் முதல் முறையாக வாசகர்களுக்கான போட்டி ஒன்றை பெருமையுடன் அறிமுகம் செய்கிறது.

அதிரை எக்ஸ்ப்ரஸின் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள், கட்டுரைகளின் தரம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கருத்துக் கணிப்பில் குறைந்தது 300 ஓட்டுக்கள் இருக்க வேண்டும்.

நீங்கள தான் ஓட்டு போட்டீர்கள் என்கிற விவரம் யாருக்கும் தெரியாது ஆகையால் தைரியமாய் ஓட்டு போடுங்கள்.


போட்டிகள் விவரம்:

இரண்டு போட்டிகள், இரண்டுக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும்.

1. கட்டுரைப் போட்டி
2. போட்டோசாப் லோகோ போட்டி

கட்டுரையின் தலைப்பு: இலஞ்சப் பெருச்சாலி


போட்டியின் நிபந்தனைகள்:

1. குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது அந்த பெருச்சாலி உங்களிடமிருந்து சாப்பிட்டிருக்கவேண்டும்.
2. சம்பந்தப்பட்டவரின் பெயர் நக்கலாக எழுதப்பட்டிருக்கவேண்டும்.
3. ஏதாவது ஒரு உண்மைச் சம்பவம் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பெயர் அதில் விரும்பினால் சேர்க்கலாம்.
4. தமிழ் யுனிகோடில் தட்டச்சிட்டிருக்கவேண்டும்.
5. உங்கள் கட்டுரைகள் முதலாவதாய் தேர்ந்தெடுக்க இலஞ்சம் தரவேண்டுமென்கிற அவசியமில்லை. (தந்தால் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை என்பது வேறு விசயம்)


லோகோ போட்டி
1. லோகோ அளவு 160*200 பிக்சல்
2. லோகோவில் கண்டிப்பாய் பெருச்சாலி படம் இருக்கவேண்டும். (கூகிளில் தேடலாம்)
3. பெருச்சாலியின் மேல் சாணி அடிக்கப்பட்டது போல் லேயர் இருக்கவேண்டுமென்கிற அவசியமில்லை. நன்றாய் இருந்தால் போடலாம்.
4. சாணி அடிக்கப்பட்டிருந்தால் அதில் இந்திய ரூபாய் சேர்க்கக்கூடாது (கண்டிப்பாய், நிஜமாலுமே)
5. மனித பெருச்சாலி புகைப்படம் கண்டிப்பாய் இருக்கக்கூடாது (நிஜமாலுமே)

தேர்ந்தெடுக்கப்படும் லோகோவை அதிரை எக்ஸ்ப்ரஸ் கருத்துக்கணிப்பில் வெளிவரும் முடிவில் "இலஞ்சப் பெருச்சாலி 2007" என்கிற பட்டம் அவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்படும்(?).


லோகோ வந்து சேரவேண்டிய கடைசி நாள் நவம்பர் 25 2007.

லோகோவை adiraixpress[@]gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும்.

போட்டியில் வெற்றிபெரும் அதிருச்ட சாலிகளுக்கு நிஜாம் கடை ரொட்டியுடன் நூர் லாட்ஜ் அல்வாவும் பிறகு கமால் கடை டீ உண்டு, வெற்றி பெற்ற அன்றைய தினம் சந்தோசமாய் நண்பர்களுடன் காசு கொடுத்து வெற்றிபெற்றவர்கள் சாப்பிடலாம். கமால் கடை டீ கிடைக்காவிட்டால் சூப் கிடைக்கலாம்.

"இலஞ்சப் பெருச்சாலி 2007" பட்டம் பெறும் பெருச்சாலிக்கு ஓசி(ஊசிப்போன) பிரியானியும், தண்டச்சோறும் வழங்கப்படும்.

என்ன காக்காவாப் பறந்துட்டீங்களா? போட்டிக்கு ரெடியாயிட்டீங்களா?

குறிப்பு: போட்டி முடிவு இலஞ்சத்திற்கு உட்பட்டது. அதைக் குறைக்கவோ கூட்டவோ உரிமையுண்டு.

அட சீரியஸ்பா....Share:

குஜராத் கலவரம் சங்பரிவாரத்தின் வாக்குமூலம். VIDEO

குஜராத் கலவரம் உண்மைகளை இறைவன் அருளால் சங்பரிவாரகும்பலை தன்வாயாலேயே ஒப்புக்கொண்ட வீடியோக்காட்ச்சிக்கு

Share:

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட சகோதரி அனுராதா அவர்கள் தன்னுடைய அனுபவங்களை வலைப்பதிவுகளின் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரின் வலைப்பதிவு முகவரி: http://anuratha.blogspot.com

அவருடைய வலைப்பதிவு பக்கம் ஒன்றிலிருந்து சில தகவல்கள். அதில் முக்கியமான குறிப்பு ஒன்று கிடைத்தது. அது இஸ்லாம் வலியுறுத்தும் தாய்ப்பால். ஆண் குழந்தைக்கு 2 வருட காலம் என்று இஸ்லாம் கட்டாயக் கடமையாக்கியிருக்கிறது.

சில காலமாக அதிரையில் புற்றுநோய் உடையப் பெண்கள் பற்றி அறிய முடிகிறது.

கேன்சர் நோய் வருவதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மருத்துவம் முன்னேறிய பிறகு மார்பகப் புற்றுநோய் வந்த நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள்,அவர்களின் வாழ்க்கைமுறைகள் போன்ற விபரங்களைப் புள்ளிவிபரங்களாகத் தொகுத்துக் கணக்கிட்டுப் பார்த்ததில் சில உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அவை என்ன?

1.பெண்ணாக இருப்பதுவே மார்பகப் புற்றுநோய் வர முதல் காரணம்.

2.பெண்கள் வயது ஆக ஆக இந்நோய் வர வாய்ப்பு கூடுகிறது.நாற்பத்துஐந்து வயதுக்கும் கீழே உள்ள பெண்களுக்கு எட்டுக்கு ஒன்று என்ற விகிதத்திலும் ஐம்பத்துஐந்து வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயது ஆனவர்களுக்கு மூன்றில் இரண்டு என்ற விகிதத்திலும் இந்நோய் காணப்படுகிறது.

3.பரம்பரையாக இந்த நோய் வந்தது என்று கண்டறியப்பட்ட நோயாளிகள் ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் பேர்.

4.உங்கள் தாயாருக்கோ,சகோதரிக்கோ,மகளுக்கோ இந்நோய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்நோய் வ்ருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு ஆகிறது.இவ்வாறு மிகநெருங்கிய உறவினர்கள் இரண்டு பேர்களுக்கு இருந்தாலோ உங்களுக்கு வரும் வாய்ப்பு ஐந்து மடங்கு ஆகிறது.

5.மார்பகப் புற்றுநோய் உள்ள ஒரு பெண்ணுக்கு அதே மார்பகத்தில் வேறு பாகத்திலோ அல்லது மற்றொரு மார்பகத்திலோ புதிய புற்று நோய் தோன்றக்கூடிய அபாயம் மூன்றிலிருந்து நான்கு மடங்காகும்.

6.பனிரெண்டுவயதுக்குள் வயதுக்கு வந்தவர்களுக்கும்,ஐம்பத்துஐந்து வயதுக்கு மேல் மெனோபாஸ் அடைந்தவர்களுக்கும் இந்நோய் வரலாம்.

7.குழந்தை பெறாத பெண்கள்,முப்பது வயதுக்கு மேல் முதல் குழந்தை பெறும் பெண்கள் ஆகியோருக்கும் வரலாம்.

8.கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்களுக்கும் வரலாம்.

9குழந்தை பெற்ற தாய்கள் குறைந்தது ஒன்றரை வயது முதல் இரண்டு வயது வரையிலாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் இந்நோய் வரக்கூடிய வாய்ப்பு குறைகிறது.

10.ஆல்கஹால் உபயோகிக்கும் பெண்களுக்கு இந்நோய் வரக்கூடிய அபாயம் உண்டு.

11.அதிக எடையுள்ள பெண்களுக்கும் இந்நோய் வரலாம்.மெனோபாஸ் வந்த குண்டானபெண்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம்.

12.நைட் ஷிஃப்ட் பார்க்கும் பெண்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் உண்டு என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.வெளிச்சத்தின் காரணமாக ''மெலடோனின்''என்ற ஹார்மோன் பாதிக்கப்படுவது தான் காரணம் என்கிறார்கள்.

இவ்வாறாக ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.மனித குலத்தின் நன்மைக்காக இவர்களின் தொண்டு மகத்தானது.

நன்றி: சகோதரி அனுராதா அவர்கள்

Share:

அதிரை பகுதியில் கடல்நீர் கரையை தாண்டியது

மீனவர்கள் அச்சம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடல் நீர் 300 மீட்டர் நீளத்துக்கு கரையை தாண்டியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திடீரென அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, காந்தி நகர் ஆகிய மீன்பிடி துறைமுக பகுதிகளில் கடல் நீர் 300 மீட்டர் தூரத்துக்கு கரையை தாண்டி வெளியேறியது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை படகு வாய்க்காலுக்கு கொண்டு வந்து நிறுத்தினர். தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று 3வது நாளாக நேற்றும் கடலுக்கு செல்லவில்லை. அதே சமயம் ஒரு சில விசைப்படகு மீனவர்கள் கடலு க்கு சென்றனர். இதே போல் அதிராம்பட்டினம் பகுதியில்உள்ள உப்பளங்களில் நீர் தேங்கி இருப்பதால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.குடோன்களில் கருவாடு காய வைக்க முடியாததால் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய கருவாடுகள் புழு வைத்து பாதிக்கப்பட்டன. இவற்றை மீனவர்கள் குப்பையில் கொட்டி வருகின்றனர்.

நன்றி : தினகரன்
Share:

குஜராத் - பயங்கரங்களின் ஆணிவேர்

தெஹல்கா பத்திரிக்கை குஜராத் இனப்படுகொலை-2002 தொடர்பாக (பொத்தான் அளவு) இரகசிய கேமரா உதவியுடன் துப்பறிந்து செய்த துணிகரமான, அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை வாக்குமூலங்கள்....

அதிர்ச்சியான வீடியோ கோப்புகள் நிறைந்த இத்தளத்தை படிக்க/ பார்க்க மனதைரியம் உடையவர்களால் மட்டுமே முடியும்...

நிறைமாதக் கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றிலிருந்து சிசுவை கிளித்து எரிந்தவனையும் அவனையறியாமலே சொல்ல வைத்ததும், ராக்கெட் லாஞ்சர், பாம் பேக்டரிகளையும் தயாரிக்கும் பிஜேபி எம்.எல்.ஏ போன்றவர்களையும் அவர்களின் வாயாலே சொல்லவைத்து வீடியோவில் பதிந்ததும்....வார்த்தைகளால் எழுதுவதற்கே தைரியம் வேண்டும்....

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107gujrat_sec.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Editor'sCut.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Reporter'sDiary.asp


Share:

கனமழையால் அதிரை கடலில் கொந்தளிப்பு

அதிராம்பட்டினம் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. நமதூர் காந்தி நகரில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டுப்படகுகள்.


நமதூரில் தொடந்து பெய்துவரும் கனமழையால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை இதன் காரணமாக மீன்விலை கிடுகிடுவென உயந்துள்ளது.
-JP-
Share:

தமிழகம் முழுவதும் கண்டன போஸ்டர்கள்


சில பொய் வழக்குகளால் பினைக்கப்பட்டு சமிபத்தில் பிணையில் வெளிவந்த நமதூர் தவுஃபீக்கை சமிப காலமாக மீன்டும் பொய்வழக்கு போட துடிக்கும் திருச்சிகாவல்த்துரையின் செயல் பாட்டையும் தீவிரவாதி என முத்திரைகுத்தி அவதூறு செய்திகளை பரப்பும் பத்திரிக்கயை கண்டித்தும் பல்வேறு தலித் அமைப்புகள் தவுஃபீக்கு ஆதரவாக கண்டன போஸ்டர்களை தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
Share:

மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

பட்டுக்கோட்டையில் உள்ள மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். எனவே பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை எடுத்துக்கூறி தீர்வு பெற்று பயனடையலாம் என்று பட்டுக்கோட்டை மின்சார வாரிய செயற்பொறியாளர் சின்னையன் கேட்டுக்கொண்டுள்ளார்.இதை ஒரு வாய்பாக கருதி நமதூரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை பற்றி புகார் கூறலாம்.

-ஜப்பான்-
Share:

தன்னம்பிக்கையே வாழ்க்கையின் உயிர்!


1995 ஆம் ஆண்டு வாகன விபத்து ஒன்றில் லாரி ஏறியதில் பாதி உடம்புடன் உயிர் பிழைத்த அதிசய மனிதர்.தன்னம்பிக்கையே வாழ்க்கையின் உயிர் என்பதை இவர் நிரூபித்திருக்கிறார்.
(போட்டோசாப் போன்றவற்றை அறிந்தவர்கள் இவையெல்லாம் ஏமாற்றுவேலை என்று நினைக்கிறோம்... அல்லாஹ் அஃலம், எதற்கும் கூகிளில்
"Peng Shulin" தேடிப்பாருங்களேன்)

Miracle man walks again

Monday, July 9, 2007
He survived against all the odds; now Peng Shulin has astounded doctors by learning to walk again.
When his body was cut in two by a lorry in 1995, it was little short of a medical miracle that he lived.


It took a team of more than 20 doctors to save his life.
Skin was grafted from his head to seal his torso – but the legless Mr Peng was left only 78cm (2ft 6in) tall.
Bedridden for years, doctors in China had little hope that he would ever be able to live anything like a normal life agan.But recently, he began exercising his arms, building up the strength to carry out everyday chores such as washing his face and brushing his teeth.
Doctors at the China Rehabilitation Research Centre in Beijing found out about Mr Peng's plight late last year and devised a plan to get him up walking again.
They came up with an ingenious way to allow him to walk on his own, creating a sophisticated egg cup-like casing to hold his body with two bionic legs attached to it.
He has been taking his first steps around the centre with the aid of his specially adapted legs and a resized walking frame.
Mr Peng, who has to learn how to walk again, is said to be delighted with the device.

What a Selfconfidence !!!! Great

Share:

அதிரை பட்டதாரிகள் கலந்தாய்வு கூட்டம்

AGF இன் கலந்தாய்வு கூட்டம் சென்ற 21ந் தேதி அஸருக்குபின் அதிரை பைத்துல்மாலில் நடைப்பெற்றது இதில் அதிரையை சேர்ந்த படித்த பட்டதாரிகளும் பயின்றுகொண்டிருக்கும் பட்டதாரிகளும் கலந்துக்கொண்டார்கள்.

கூட்டத்தில் நமதூர் இளைஞர்கள் படிக்கும் திரனை வளர்த்து வாழ்வில் வெற்றிகாண நாம் அவர்களுக்கு கைகொடுக்கவேண்டும் என கலந்துக்கொண்டவர்கள் பேசினார்கள் இதில் AGF இன் தலைவராக எல்.எம்.எஸ் லெப்பைதம்பி ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார் இவருக்கு அதிரை பட்டதாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் காதிர் முகைதீன் பள்ளி முன்னாள் முதல்வர் ஹாஜாமுஹைதீன், பேராசிரியர் பர்கத் ,வழக்குரைஞர் முனாஃப், பகுருதீன், ஜலீல், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

படம்:அதிரை அப்துல்பரக்கத்.
-ஜப்பான்-

Share:

அதிரையில் இன்று மின்சாரம் கட்

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பட்டுக்கோட்டை மின் வாரிய செயற் பொறியாளர் சின்னையன் தெரிவித்துள்ளார்.
Share:

அதிரையில் புதிய சுற்றலாத் தலம்

ஏரிப்புறக்கரை கடற்கரை தற்போது அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தின் பொழுதுபோக்கு இடமாக உள்ளது. அதிரையிலிருந்து மட்டுமின்றி சுற்றுவட்டாரத்திலிருந்தும் மக்கள் பொழுதுபோக்க அதிரை கடற்கரைக்கு வருகிறார்கள்.
பக்கத்திலுள்ள மல்லிப்பட்டணம் அருகேயுள்ள மனோரா சுற்றுலாத் தளம் இந்திய அரசின் மாதிரிக் கிராமமாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் தமிழக ஆளுநர் மாண்புமிகு பாத்திமா பீவி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.


பெருநாள் மற்றும் விடுமுறை தினங்களில் பிக்னிக் ஸ்பாட்டாக விளங்கும் மல்லிப்பட்டினத்தில் RSS இந்து முன்னனி இயக்கத்தினர் அடிக்கடி சுற்றுலா வரும் பெண்களிடம் சில்மிஷம் செய்வதும், ஆண்களிடம் வீண் வம்பு செய்வதாலும் பாதுகாப்பற்று இருக்கிறது.


இந்தச் சூழலில் இயற்கையாக உருவாகிய அதிரை கடற்கரை பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்கு ஆறுதலான விடயம்.

சம்பந்தப்பட்ட பேரூராட்சி வார்டு மெம்பர்கள் அதிரை மக்களுக்குத் தேவையான வசதிகளையும் பெண்களுக்குப் பாதுகாப்பையும் உறுதி படுத்தியும், பொழுது போக்கு, விளையாட்டு உபகரணங்களை ஏற்படுத்தவும் செய்தால் அப்பகுதி மக்களுக்கு வருமானமும், விருந்தினர்களுக்கு பொழுது போக்கிடமாகவும் விளங்கும்.

மேலும் புகைப்படங்களுக்கு முனாஸ்கான் தளத்தைப் பார்வையிடவும்.

-ஊர்சுத்தி உமர்-

படங்கள் உதவி: சகோதரர் முனாஸ்கான்

Share:

அதிரை எஸ்ப்ரஸ் - சில விளக்கங்கள்

அதிரை எக்ஸ்ப்ரஸ் என்ற இத்தளம் பற்றிய சில விளக்கங்களை வாசகர்களுக்குத் தெளிவு படுத்துவது அவசியமாகிறது.

1) தனிமனித தாக்குதல்கள்:

இத்தளத்தில் சாட்டிங் பகுதியிலோ அல்லது கமெண்ட் பகுதியிலோ தனிமனித தாக்குதல்களை தயவு செய்து யாரும் தொடர வேண்டாம். கருத்துக்கள்/தகவல் சொல்பவர்கள் தங்கள் சொந்தப் பெயர் குறிப்பிட்டு எழுதுவதையே அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினர் எதிர்பார்க்கிறோம். நமதூரில் பொதுநலனுக்கு எதிராகச் செயல்படுபவர்களை பொதுவில் விமர்சிப்பதால், அவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் என்று அஞ்சுபவர்கள் புணைப்பெயரில் எழுதலாம்.

2) செய்திகள்:

எந்த ஒரு தளமும் தொடர்ந்து இயங்க அத்தளத்தின் செய்திகளில் மேம்பாடும் நம்பகத் தன்மையும் இருக்க வேண்டும். அதிரை செய்திகளை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இயங்கினாலும், பயனுள்ள பொதுவான செய்திகளும் வாசகர்களைக் கவரும்.

RSS என்ற இணைய நுட்பத்தின் மூலம் மற்றத் தளங்களின் செய்திகளை அத்தளங்களுக்குச் செல்லாமலேயே அதிரை எஸ்ப்ரஸில் இருந்தவாறே பார்வையிடலாம். அந்த அடிப்படையில்தான் பிறச் செய்திகள் பகுதி இணைக்கப்பட்டது. அப்பகுதிக்கான செய்திகளை நிர்ணயிப்பது சம்பந்தப்பட்ட தளமே தவிர அதிரை எக்ஸ்ப்ரஸ் அல்ல. சினிமா மற்றும் பயனற்ற செய்திகளை விளம்பரப்படுத்துவது எமது நோக்கமல்ல என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.

இத்தலத்திற்கு வாசகர்கள் நேரடியாக செய்திகளை அனுப்ப adiraixpress.mail@blogger.com என்ற முகவரியை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். Spam எனப்படும் எரிதங்கள் தங்கள் விளம்பரங்களை நம் தளத்தில் பதிக்கவும் முடியும் என்பதால் மடல் முகவரியை .mail எனும் இடத்தில் .direct என்று மாற்றி அனுப்பினால் நேரடியாகப் பதிக்கலாம்.

இதன் மூலம் செய்திகளை நிர்வாகியின் அனுமதியின்றி உடனடியாகப் பதிக்க முடியும். ஆங்கிலச் செய்திகளை குறிப்பாக Forwarded மடல்களை அப்படியே அனுப்பாமல் தங்கள் கருத்துக்களுடன் அனுப்பவும். எந்தச் செய்தியாக இருந்தாலும் தேவைப்பட்டால் நிர்வாகி மற்றும் மட்டுறுத்தல் குழுவினரால் மாற்றவோ திருத்தம் செய்யவோ முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

3) புகைப்படங்கள்

செய்திகளை படங்களுடன் அனுப்பினால் நம்பகத் தன்மை அதிகரிக்கும். adiraixpress@gmail.com அனுப்பப் படும் செய்திகளும் பரிசீலித்து பதியப்படும். அதிரைச் செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

4) எழுத்தாற்றல்:

அதிரை கல்லூரி, பள்ளி மாணாக்கர்கள் தங்களின் படைப்புகளைப் புகைப்படங்களுடன் அனுப்பினால் இத்தளத்தில் பிரசுரிக்கிறோம்.

மற்ற விளக்கங்கள் தேவைப்படும்போது வைக்கப்படும். உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மடலிலோ அல்லது பின்னூட்டத்திலோ மறக்காமல் எழுதவும்.

இப்படிக்கு,
தளநிர்வாகி மற்றும் குழுவினர்
Share:

அதிரையில் பலத்த மழை


நமதூர் அதிராம்பட்டிணத்தில் நேற்று காலை இடைவிடாமல் 3மணி நேரம் பலத்த மழை பெய்த்தது இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்தும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
Share:

தனலெட்சுமி வங்கியின் வெள்ளி விழா அழைப்பிதழ்!

அதிரை தனலெட்சுமி வங்கியின் வெள்ளி விழாவை முன்னிட்டு வரும் 22-10-2007 அன்று வங்கியில் வெளிநாட்டு வாடிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூரில் இருக்கும் என்.ஆர்.ஐ அதிரைவாசிகள் நமதூரின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் எடுத்துச் சொல்ல இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் மாணவர்களின் கல்விக்கடனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி வலியுறுத்தலாம். பெண்களுக்கு தனி இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளதால், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டு தாங்கள் சந்திக்கும் அசவுகரியங்களைச் சொல்லலாம்.

Share:

ஹஜ் பயணிகளுக்கு தஞ்சையில் தடுப்பூசி போட ஏற்பாடு.

தஞ்சை மாவட்டத்தில் சுகாதாரப்பணிகள் கட்டுபாட்டின்கீழ் உள்ள சுமார் 352 ஹஜ் புனித யாத்திரை பயனாளிகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இவர்கள் அனைவருக்கும் வரும் 23ம் தேதி காலை 8 மணி முதல் தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள கவிதா மன்றத்தில் தடுப்பூசி போடப்பட உள் ளது.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் நிலையத்திலிருந்து தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. இப்பணிக்காக சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையில் மாவட்ட மலேரியா அலுவலர், மருத்துவ அலுவலர் மற்றும் இதர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நபர்கள் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் பெறப்பட்ட கடிதம் மற்றும் அதற்குரிய சான்றிதழ் ஆகியவைகளுடன் வரும் 23ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொள்ள வருமாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சந்திரமோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விபரங்களுக்கு கீழ் கண்ட தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

044-28222973 / 28227617 / Fax: 28222971
Share:

பள்ளி, கல்லூரிகளில் செல்போனுக்கு தடை விதிக்க கோரி ஆர்ப்பாட்டம்.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று தஞ்சை தெற்கு மாவட்ட தமிழக மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் விஜயரஜினி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ஹாஜா மைதீன், மாணவரணி அமைப்பாளர் தாவுதுஷா, இளைஞரணி துணைச்செயலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் செல்போனுக்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை நகர இளைஞர் சங்கத்தலைவர் ஷேக்முகமது, ஜெய்லானி, மாலிக், ஷேக் அலாவுதீன், முகமது இப்ராகிம், நைனாமுகமது, பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Share:

நமதூரில் ATM மையம் திறப்பு.

நமதூரில் ஆக்ஸிஸ் வங்கியின் ATM மையத்தை 15.10.2007 அன்று கடைத்தெருவில் நிறுவியுள்ளது.

இது இன்னும் ஒரு சிலநாட்களில் செயல் பட தொடங்கும் என இம்மையத்தை திறந்து வைத்த மேளாலர் ஒருவர் தெரிவித்தார் மேலும் வாடிக்கையாளர்களின் வரவேற்ப்பை பொறுத்து அதிரையில் தனது கிளையை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

எனவே வாடிக்கையாளர்கள் இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கோரினார் இதற்க்கான முழுமுயற்ச்சிகளையும் நமதூர் யுனைட்டட் ஃபவுண்டேஷன் சிறப்பாக செய்து வருகிறது.

குறிப்பாக நமதூரில் பலநெடுங்காலமாக நமதூரின்75% வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் கனரா வங்கி கூட நமதூரில் ATM மையத்தை நிறுவ முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படம் மற்றும் செய்தி:அதிரை அப்துல் பரக்கத்
Share: