Tuesday, July 31, 2007

தனியார் உப்பளத்தை கண்டித்து முத்துப்பேட்டையில் சாலை மறியல்.

தனியார் உப்பளத்தை கண்டித்து முத்துப்பேட்டையில் வரும் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறது.

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக உப்பு உற்பத்தி செய்து விவசாயம், நிலத்தடிநீர், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தனியார் உப்பள கம்பெனியை தடை செய்ய கோரியும், இதுதொடர்பாக போராடும் விவசாயிகள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போடுவதை கண்டித்தும் முத்துப்பேட்டையில் வரும் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் மேற்கொள்கின்றனர். எம்எல்ஏ உலநாதன் தொடங்கி வைக்கிறார்.

இதில் தமிழ்நாடு விவசாயி சங்க மாவட்ட தலைவர் பக்கிரிசாமி, முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கல்யாண சுந்தரம், வட்டார செயலாளர் முருகையன் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொள்கின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் முருகையன் கூறினார்.
-ஜப்பான்-

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் துணிகரம்

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் துணிகரம்
பயணியை தாக்கி ரூ.10 ஆயிரம் பறிப்பு
ஓட ஓட விரட்டிச் சென்று மர்ம கும்பல் அட்டகாசம்

பட்டுக்கோட்டை,ஜுலை.31-

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணியை ஓட, ஓட விரட்டி தாக்கி ரூ.10 ஆயிரம் பறித்த மர்ம கும்பலை போலீசார் தேடிவரு
கின்றனர்.

பஸ்பயணி

பட்டுக்கோட்டையை அடுத்த புனல் வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ஸ்டான்லி (வயது 32) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மயிலாடுதுறைக்கு சென்றுவிட்டு ரெயிலில் பட்டுக்கோட்டைக்கு வந்தார்.

தொடர்ந்து சொந்த ஊருக்கு போகவேண்டிய டவுன் பஸ்சுக்காக பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது பஸ்நிலையத்தில் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று தனியாக நின்ற ஜோசப் ஸ்டான்லியிடம் ` நீ எந்த ஊர்... பெயர் என்ன?' மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறிக்க
முயன்றனர்.

ஓட, ஓட தாக்குதல்

நிலைமையை புரிந்துகொண்ட ஜோசப் ஸ்டான்லி மர்ம கும்பலிடம் இருந்த தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் விடாமல் ஜோசப்பை ஓட ஓட விரட்டி, உருட்டு கட்டை, செங்கல்லால் தாக்கினர். அத்துடன் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துவிட்டு குற்றுயிராக விட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவத்தை பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம கும்பல் சுவர்ஏறி குதித்து தப்பி சென்றனர். உடலில் பலத்த காயத்துடன் கிடந்த ஜோசப் ஸ்டான்லி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி
வருகிறார்.

பாதுகாப்பு வேண்டும்

பயணிகளின் நெஞ்சை பதற செய்யும் இந்த சம்பவம் பற்றி பட்டுகோட்டை பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

`பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இரவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கணவனுடன் வரும் பெண்களின் நகைகளை பறிப்பது, அதனை தட்டிகேட்கும் கணவனை தாக்குவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை தட்டிகேட்டால் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

பஸ் நிலையத்தின் அருகில் போலீஸ் நிலையம் இருந்தும், இரவில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, பஸ் நிலையத்தில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.'

இவ்வாறு அவர் கூறினார்.

 

வளர்த்த கடா! மார்பில் பாய்ந்ததடா!!

அதிராம்பட்டினத்தில் திமுக நகரத் தலைவராக இருக்கும் இராம.குணசேகரன் அருகிலுள்ள ராசியாங்காடு கிராமத்திலிருந்து அதிரையில் குடியேறியவர். அதனால்தான் அதிரையின் பூர்வீக இந்துக்கள், குறிப்பாக கரையூர் தெரு பூர்வீகக்குடிகள் குணசேகரன் கோஷ்டி தி.மு.கவினரை மதிப்பதில்லை.

திமுக தொடங்கப்பட்டது முதல் அதிரை நகரச் செயலாளராக இருந்த N.K.S. ஜக்கரியா (NKS சவுண்ட் சர்வீஸ்) தற்போதைய இராம.குணசேகரனின் தந்தை இராமச் சந்திரனிடம் அதிரை நகரத் திமுக தலைவர் பதவியை ரூபாய் எட்டாயிரம் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்தார். கட்சியை வளர்க்க தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்ததால் தனது மைக்செட் வாடகை நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவே அப்பணம் பெற்றிருக்கலாம். அரசியலில் இதெல்லாம் சகஜமே?!

கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்து, பலனை அனுபவிக்கும் காலத்தில் சொற்பத் தொகைக்கு பதவியை வாங்கிய இராமச்சந்திரனின் வாரிசுகளான இராம.குணசேகரன் தற்போது திரை நகர தி.மு.க. தலைவராக இருந்து கொண்டிருப்பதோடு, அதிரை பேரூராட்சியின் துணை சேர்மனாக இருக்கிறார். பாரம்பரிய திமுக அனுதாபிகளான அதிரை முஸ்லிம்களிடமிருந்து கட்சிப் பதவியை தட்டிப்பறித்த மறைந்த பெரியவர் இராமச்சந்திரனின் வாரிசுகள், இன்று திமுகவை அதிரை முஸ்லிம்களிடமிருந்து அப்புறப்படுத்தி, இந்து முன்னனியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்அமீன் பள்ளிவாசலுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும் இராம.குணசேகரனின் சகோதரர் சோமுவுக்குச் சொந்தமான டிராக்டர் அதிரைச் சுற்றுவட்டாரத்தில் மணல் கொள்ளைக்குப் பயன்படுத்தப் படுவதும் ஆளும் கட்சியின் பதவிகள் தங்கள் குடும்பம் வசம் இருக்கும் தைரியத்தில்தான்!

மக்தூம் பள்ளிவாசல் அருகிலுள்ள மண்ணப்பன் குளத்தை தூர் வாருகிறேன் என்று பேரூராட்சியின் நிதியை சுருட்டியதோடு, அள்ளப்பட்ட குளத்து மண்ணை, ஒரு லோடு ரூ.600 வீதம், புதிய கட்டுமான வீடுகளை நிரப்பத் தனியாக விற்று சில இலட்சங்கள் சுருட்டினர்.

அல் அமீன் பள்ளிவாசல் மணைநிலத்தை நிரப்பவும் சோமுவின் டிராக்டர் வாடகைக்குப் பயன்படுத்தப் பட்டது என்ற நன்றியுணர்வு கூட இல்லாமல், வளர்த்து விட்ட அதிரை முஸ்லிம்களின் மாரில் பாயும் குணசேகரன் சகோதரர்களை அதிரை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். -ஊர்சுத்தி உமர்-

அதிரை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள்

நமதூர் மேலத்தெருவில் சங்பரிவார சதிகாரர்களால் உண்டாக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவையும் மீறி இருந்து கொண்டிருக்கும் 'திடீர் முனிக்கோவில்' பற்றி புதுவை சரவணன் என்ற பொய்யன் இன்டர்நெட்டில் துவேசமாக எழுதியுள்ளான்.


விஜய பாரதம் என்ற விசமப்பத்திரிக்கை, ஆர்.எஸ்.எஸ்ஸின் தமிழ் நச்சு ஊடகமாகும். அதிரை முஸ்லிம்கள் மட்டுமல்லாது இதர தமிழ் முஸ்லிம்களையும் அவர்களின் கலாச்சாரங்களையும் பற்றி துவேசமாக எழுதி வருவதே புத்கை சரவணன் என்ற பொய்யனின் வேலையாகும்.


அதிரையைப் பற்றியும் பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார் பற்றியும் விசமத்தனமாக எழுதியுள்ளதை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.


=========


தமிழகத்தின் அயோத்தி தொக்காலிக்காடு!


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இருக்கிறது தொக்காலிக்காடு என்ற சின்னஞ்சிறு கிராமம். அதிராம்பட்டினத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காவிரியின் கடைமடைப் பகுதியான இந்தக் கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. 100 சதவீதம் ஹிந்துக்கள் வசிக்கும் தொக்காலிக்காடு கிராம மக்கள், முஸ்லிம்களால் கடந்த 7 ஆண்டுக்காலமாக அனுபவித்து வரும் பலவிதக் கொடுமைகளைக் கேட்டால் கலங்காத கண்ணும் கலங்கும். கல் நெஞ்சும் கரைந்துவிடும்.


அதிராம்பட்டினம் பேரூராட்சியின் துணைத்தலைவராக இருப்பவர் எம்.எம்.எஸ். அப்துல் வஹாப். இவர் தொக்காலிக்காடு கிராம எல்லையில் ஷ்ரீ முனீஸ்வரர் கோயிலுக்கு அருகில் சர்வே எண் 153.1 ல் உள்ள 6.96 ஏக்கர் நிலத்தை 1977ல் இருந்து படிப்படியாக ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். அப்துல் வஹாப்பால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த 6.96 ஏக்கர் நிலத்தில்தான் தொக்காலிக்காடு சுடுகாட்டிற்கு சொந்தமான பெத்தான் குளம் இருந்தது. அரிஜனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவானது இந்த சுடுகாடு. பிணத்தைத் தகனம் செய்துவிட்டு பெத்தான் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்புவதுதான் தொக்காலிக்காடு கிராம மக்களின் வழக்கம். இப்போது அந்த பெத்தான் குளம் தென்னந்தோப்புகளாகவும், மிகப்பெரிய மாட மாளிகைகளாகவும் மாறியுள்ளது.தொக்காலிக்காடு ஊராட்சிக்குச் சொந்தமான சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்த 6.96 ஏக்கர் நிலத்தையும் ஏகபோகமாக அனுபவித்து வந்த அப்துல் வஹாப்பிற்கு தான் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் இருந்த ஷ்ரீ முனீஸ்வரர் கோயில் உறுத்தியது. ஒதிய மரத்தடியில் ஒரு சூலாயுதத்துடன் கட்டிடம் ஏதும் இல்லாதிருந்த முனீஸ்வரர் கோயிலை 5-5-1999 அன்று இரவோடு இரவாக அப்புறப்படுத்தினார் அப்துல் வஹாப்.மறுநாள் கோயில் இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதைப் பார்த்த தொக்காலிக்காடு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முனீஸ்வரராய் தாங்கள் வழிபட்ட ஒதிய மரம் வேரோடு வெட்டி வீசப்பட்டிருந்ததைப் பார்த்த அவர்களின் மனம் கொதித்தது.


பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், தி.மு.கவின் மாவட்டப் பிரதிநிதியுமான பி.ஜெயபால் தலைமையில் இதுபற்றி ஆலோசனை செய்தனர். 6-5-1999 அன்று ஷ்ரீமுனீஸ்வரர் கோயிலை அப்புறப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீண்டும் அதே இடத்தில் கோயிலைக் கட்டக் கோரியும் போலீசில் புகார் செய்தனர்.

அப்போது தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருந்த டாக்டர் ஜெயந்த் முரளி, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அடங்கிய ஒரு அமைதிக் குழுவை அமைத்தார். அதிகாரிகள் மத்தியில் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. கோயிலைப் பெரிதாகக் கட்டக் கூடாது, முன்பிருந்த மாதிரிதான் இருக்க வேண்டும், திருவிழாக்களை விமர்சையாகக் கொண்டாடக் கூடாது, அதிக எண்ணிக்கையில் கிடா வெட்டக் கூடாது என்று முஸ்லிம்கள் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதித்தனர். எங்கே கோயில் நம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் கோயிலை முன்பிருந்தபடியே பராமரிக்கிறோம் என்று தொக்காலிக்காடு கிராம மக்கள் உறுதியளித்தனர். அதன்படியே ஷ்ரீ முனீஸ்வரர் கோயிலைக் கட்டி, சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து வழிபட்டு வந்தனர்.கோயில் இருந்தால், தாங்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கு என்றாவது ஒருநாள் ஆபத்து வரும் என்று நினைத்த முஸ்லிம்கள், ஒவ்வொரு வருடமும் திருவிழா நேரத்தில் பிரச்சினை செய்தனர்.


பணபலத்தால் அதிகார வர்க்கத்தை விலைபேசிவிட்ட ஆக்கிரப்பாளர்கள் போலீசை ஏவிவிட்டனர். ஒருமுறை நள்ளிரவில் தொக்காலிக்காடு கிராமத்திற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான போலீசார் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் அடித்துத் துவைத்தனர். அடித்துத் துன்புறுத்தி 50க்கும் மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் கைது செய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தினார்கள்.


தொக்காலிக்காடு கிராமத்தில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்பட்ட இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் போலீசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2000ம் ஆண்டில் அங்கு வருகை தந்தார். நிலைமையை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் முனீஸ்வரர் கோயிலில் தினமும் நான்கு பேர் உண்ணாவிரதம் இருங்கள் என்று ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனையை ஏற்று மறுநாளே பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயபாலின் மனைவியும், தொக்காலிக்காடு ஊராட்சித் தலைவருமான திருமதி செல்வராணி ஜெயபால் தலைமையில் நான்கு பெண்கள் உண்ணாவிரதம் இருக்கச் சென்றனர். அவர்களைக் கைது செய்ய 500 போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வண்டிகளுடனும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசும் வாகனங்களுடனும் காத்திருந்தனர்.


போலீசார் செல்வராணி உள்ளிட்ட நான்கு பெண்களையும் கைது செய்தனர். 28 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகே அவர்கள் வெளியே வரமுடிந்தது. தொடர்ந்து ஒரு வாரம் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஒவ்வொரு நாளும் 500 போலீசார் காத்திருந்து ஏதோ மும்பை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை கைது செய்வதுபோல் அகிம்சை வழியில் ஆக்கிரமிப்பை அகற்றப் போராடியவர்களைக் கைது செய்தனர்.

தொக்காலிக்காடு ஊராட்சித் தலைவரான செல்வராணி மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டத்தின்கீழ் அப்துல் வஹாப் ஆக்கிரமித்துள்ள பெத்தான் குளத்தை 12-12-2005அன்று மீட்கப் போவதாக அறிவித்தார். இதற்காக அன்றைய தினம் பஞ்சாயத்து ஊழியர்களுடனும், கிராம மக்களுடனும் அங்கு சென்ற அவர், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு இது பஞ்சாயத்திற்குச் சொந்தமான மரம் என்பதற்கு அடையாளமாக எண்களைக் குறித்தார். அப்துல் வஹாப் தூண்டுதலால் அங்கு குவிந்திருந்த போலீசார் தனது கடமையைச் செய்த பஞ்சாயத்துத் தலைவர் செல்வராணியைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது கொலை முயற்சி(307) உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மறுநாள் செல்வராணியின் கணவர் ஜெயபாலையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். கணவனும் மனைவியும் 350 கி.மீ. இடைவெளியில் இரு நகரங்களில் 45 நாட்கள் சிறைபட்டுக் கிடக்க, அவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் பொங்கல் திருநாளைக்கூட அப்பா அம்மாவுடன் கொண்டாட முடியாமல் அனாதைகள்போல தவித்தனர்.


செல்வராணி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் சிறையின் வார்டனாக இருந்த ஒரு முஸ்லிம் பெண், `முஸ்லிம்களையா எதிர்க்கிறாய்?' என்று தினமும் வார்த்தைகளால் அவரை இம்சித்திருக்கிறார். பஞ்சாயத்துத் தலைவராவதற்காக அரசு வேலையை ராஜினாமா செய்த செல்வராணி, சிறையில் கழிவறையை சுத்தம் செய்யும் கொடுமையையும் அனுபவித்துள்ளார்.


தங்கள் பஞ்சாயத்திற்குச் சொந்தமான நிலத்தை மீட்பதற்காக செல்வராணியோடு தொக்காலிக்காடு ஊராட்சி உறுப்பினர் புஷ்பவள்ளியும் 45 நாட்கள் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கடைசியில் திருச்சியில் தினமும் தங்கி கையெழுத்துப் போடவேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அவர்கள் ஜாமீனில் வர முடிந்தது.பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், அதிகாரத்தை வளைத்து முஸ்லிம்கள் நடத்தும் எல்லையில்லா அட்டூழியங்களை தொக்காலிக்காடு கிராம மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும் ஷ்ரீ முனீஸ்வரர் கோயிலையும், 6.96 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தையும் மீட்டே தீருவேன் என்கிறார் இந்த வீரப்பெண்மணி. திருமதி செல்வராணியைப் போல ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் முனீஸ்வரர் கோயிலை மட்டுமல்ல, அயோத்தியில் ராமர் கோயிலையும் கட்டிவிடலாம்.


(குறிப்பு: பத்தடி இரும்பு வேலியாக உள்ள முனீஸ்வரர் கோயிலை ஹிந்துக்கள் விரிவுபடுத்தி, கட்டாமல் தடுப்பதற்காக 1999லிருந்து 7 ஆண்டுகளாக 24 மணிநேரமும் அந்த இடத்தை போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.ஆனால் கோயிலுக்கு அருகில் ஆக்கிரமிப்பு நிலத்தில் முஸ்லிம்கள் கட்டிவரும் பங்களாக்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.)


2வது நாளாக கடலில் சீற்றம்

பலத்த காற்று வீசுவதாலும், அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதாலும் தஞ்சை மாவட்ட மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், செம்பைபட்டினம், செந்தலைப்பட்டினம், சோமநாதபட்டினம் உள்ளிட்ட 37 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.

இங்கிருந்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், பைபர் படகுகள், 100க்கு மேற்பட்ட விசை படகுகள் கடலுக்கு செல்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பலமாக வீசியது. இருப்பினும் அன்றைய தினம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் மீன்துறை எச்சரிக்கை காரணமாகவும், காற்றும், அலைகளின் சீற்றமும் நிற்காததாலும் சனிக்கிழமையில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மீனவர் தேவேந்திரன் கூறுகை யில், இரண்டு தினங்களாக காற்று கடுமையாக உள்ளது. எங்கள் துறைமுகத்தில் இதுபோன்ற கடல் சீற்றத்தை இதுவரை நான் பார்த்தது இல்லை. கடல் தண்ணீர் 200 மீட்டர் தூரம் வரை ஏரி வருகிறது. இதுபோன்ற மாற்றங்கள் சுனாமிக்கு பிறகுதான் நடைபெறுகிறது என்று கூறினார்.

மீன்துறை ஆய்வாளர் உமா கூறுகையில், விசை படகு மீனவர்களும், நாட்டுப்படகு மீனவர்களும் கடனுக்கு மீன பிடிக்க செல்லக்கூடாது. 24 மணி நேரத்தில் காற்றின் வேகம் 45 லிருந்து 50 கி வேகத்தில் வீசும். இந்த காற்றின் வேகத்தால் கடல் அலைகள் உயரமாகவும், கடல் சீற்றமாகவும் காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிரை த.மு.மு.க. தலைவருக்குக் கொலை மிரட்டல்

நமதூர் அல் அமீன் பள்ளிவாசலின் பிரச்சனைக்குறிய கேட் திறப்பதற்கு நீதிமன்றம் பள்ளிவாசலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.(அல்ஹம்துலில்லாஹ்)

இதன் அடிப்படையில் இன்று ஜும்மாவிற்குப் பிறகு தாசில்தாரால் சீல் வைக்கப்பட்ட அந்த கேட்டை திறக்க பள்ளிவாசல் நிர்வாகம் முயற்ச்சிகளை மேற்க்கொண்டிருக்கும் வேளையில் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் நகர தமுமுக தலைவர் ஷாஹுல் ஹமீத் அவகர்ளை பார்த்து பஞ்சாயத்போர்டு தலைவர், தமுமுக "அதிரை தலைவருக்கு தலை இருக்காது" என ஆவேசமாக கத்தியுள்ளார்.

கொதிப்படைந்த தமுமுக நகர நிர்வாகிகள் மாநிலத்தலைவர் அவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இக் கொலைமிரட்டலை பகிரங்கமாக விடுத்த பஞ்சாயத்போர்டு தலைவரை கைது செய்யக்கோறி தமுமுக தலைமை காவல்துறை உயரதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

-ஜப்பான்-

Monday, July 30, 2007

விளம்பர சந்தை


ஷான் மசாலா (Shan Masala) இப்போது சென்னையிலே!அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் உலக தரமும் பிரபலமும் வாய்ந்த "ஷான் மசாலா"(Shan Masala Made in Pakistan) இப்போது சென்னையிலும் கிடைக்கிறது. 

பாரம்பரிய சுவைகளில் கைதேர்ந்த தொழில் நுட்பத்துடன் 80 வகையான கலவைகளில் (Spice Mix) கிடைக்கிறது. 

பிரியாணி வகைகள் (8) கபாப் (9)  வகைகளிலும் இனிப்பு வகைகள் (7) , நோன்பிற்கு ஏற்ற ஹலீம் மிக்ஸ் மசாலா கிடைக்கும். 

அதிரை அதன் சுற்று வட்டாரங்களில் விற்பனை செய்ய விரும்புவோர்கள் தொடர்பு கொள்ளவும்.


SPICE MADRAS, Authorized Stockist, 
Contact # +91 98414 93737 e-mail:shanmasalachennai@gmail.com
வீடு விற்பனைக்குகட்டப்பட்ட வீடு - 40/70
தென்னை மரத்துடன் கூடிய பின்புற நிலம் - 60/70..


இடம் :
பழஞ்செட்டி தெரு, அதிராம்பட்டினம்-614701.
தொடர்புக்கு : +91 9688353235

அதிரை எக்ஸ்பிரஸில் விளம்பரம் செய்ய adiraixpress@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் விளம்பரத்தை அனுப்பி பயனடையுங்கள்.

Saturday, July 28, 2007

தேர்தல் முன்விரோதம் ஒருவருக்கு வெட்டு.

அதிராம்பட்டினத்தை அடுத்த தொக்காலிக்காடு பகுதியை சேர்ந்த ரெத்தினம் மகன் பன்னீர்செல்வம் (45). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரெத்தினம் மகன் ஆதியப்பன் (40) என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக பகை இருந்தது. இச்சூழலில் டீக்கடையில் நின்ற பன்னீர்செல்வத்தை ஆதியப்பன் அரிவாளால் வெட்டினார். அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டார். அதிராம்பட்டினம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
-ஜப்பான்-

Friday, July 27, 2007

காட்டுப்பள்ளி சந்தனக்கூடு.


Unlimited freedom, unlimited storage. Get it now

Thursday, July 26, 2007

பட்டுக்கோட்டையில் வரதட்சணை கேட்டு புதுப்பெண் சித்ரவதை.

கணவர் உள்பட 4 பேர் மீது புகார்!!
 
பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது25) இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில வாரங்களுக்கு பின்னர் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட தொடங்கியது.

இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். இந்த நிலையில் செந்தில்குமார், அவரது தந்தை ஜீவானந்தம், தாயார் குணவதி, உறவு பெண் மஞ்சுளா ஆகியோர் வரதட்சணை கேட்டு பிரியாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரியா பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகார் மனுவில் தனது கணவர் செந்தில்குமார், அவரது பெற்றோர் ஜீவானந்தம், குணவதி, உறவு பெண் மஞ்சுளா ஆகியோர் தன்னிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த தாக தொìவித்து உள் ளார். இந்த புகார் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

திருமணம் ஆன சில மாதங்களிலேயே வரதட் சணை தொடர்பாக ஏற்பட்ட இந்த புகார் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ஜப்பான்-

அதிரை தமுமுக சார்பில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்.

நமதூர் த மு மு க கிளை சார்பாக வரும் 29.07.2007 அன்று மாலை   6 மணியளவில் ஷஹீத் பழனிபாபா அரங்கம் (தக்வாப்பள்ளிஅருகாமையில்) நடைப்பெற இருக்கிறது. 

விழாவிற்க்கு தஞ்சைமாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார் தலைமைவக்கிறார்.இதில் தமுமுக மாநில செயலாளரும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான செ.ஹைதர் அலி அவர்கள் சமுதாயம் பெற வேண்டிய படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்கள்.

கோவை ஜாஹிர் அவர்கள் இறைஇல்லமும் நாமும் என்ற தலைப்பில் உறையாற்ற இருக்கிறார்கள் இதற்க்காண ஏற்பாட்டினை அதிரை தமுமுகவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
-ஜப்பான்-

Wednesday, July 25, 2007

காட்டுப்பள்ளி தர்கா கந்தூரி விழா நிறைவு.

நமதூர் காட்டுப்பள்ளிதர்கா கந்தூரி விழா கடந்த பத்துநாட்களாக நடந்துவந்தன.இந்த பத்துநாட்களிலும் தர்கா எதிர்புறம் அமைதுள்ள மின்சார கலை அரங்கில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

நேற்று இரவு 10வது நாள் நிகழ்ச்சியாக ஹத்தம் ஓதி ஹதியா செய்யப்பட்டது.இன்றிரவு கூட்டுறாவு எனப்படும் சந்தன கூடு அலங்கரிக்கப்பட்டு தர்கா எதிபுரம் வந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க நிருத்தப்படும்.இதில் ஏராளமான ஆண்காளும் திரளாக கலந்து கொள்வார்கள்.

இன்றைய நிகழ்ச்சியாக இன்று அபிநயா நடனநாட்டிய நிகழ்ச்சி மிகச்சிறப்பான முறையில் நடத்துவதாக கந்தூரி விழாகுழுவினர் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியினை அனைத்தும் கீழத்தெரு வாசிகளால் நடத்தப்படுகிறது.

மல்லிப்பட்டினம் மனோராவில் தூய்மைப்பணி.

அதிராம்பட்டினத்தை அடுத்த சுற்றுலா தலம் மனோரா கடற்கரை பகுதியை தூய்மை படுத்தும் பணி நடந்தது.

நமதூர் அதிராம்பட்டினத்தை அடுத்த சேதுபாவாசத்திரம் யூனியனில் அமைந்துள்ள சுற்றுலா தலம் மனோரா. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் உணவு, குடிநீர், தின்பண்டங்கள் போன்றவற்றில் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் வீசிச் செல்கின்றனர்.இவை கடல் நீரில் மிதப்பதால், கடல் வாழ் உயிர்கள் பாதிக்கப்படுகிறது.இவற்றை சுத்தம் செய்வது குறித்து பட்டுக்கோட்டை பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓம்கார் தொண்டு நிறுவனம் சார்பில் விளக்க கூட்டம் நடந்தது.

தன்னார்வ தொண்டு மாணவர்கள் 20 பேர் மூலம் மனோரா கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது. தண்ணீர் பாட்டில், பாக்கெட், கேரி பேக், துணி, வலை போன்ற பொருட்களை 20 சாக்குப்பைகளில் சேகரித்து அகற்றினர்.இதுபற்றி ஓம்கார் நிறுவன இயக்குனர் பாலாஜி கூறுகையில்...இதுபோன்று கடற்கரை ஓரங்களில் குவிந்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல் சூழ்நிலை மண்டலத்தை மாசுபடுத்துவதுடன், கடல் வாழ் உரியினங்களையும் பாதிக்கிறது. இக்கழிவுகளை ஆண்டுக்கு ஒரு முறை அகற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இதுகுறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்றார்.

Tuesday, July 24, 2007

வேண்டுகோள்.

நமதூர் வழியாக அமைக்கப்படும் E C R சாலையின் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன இந்த நேரத்தில் நாம் ஒன்றை மறந்து விட்டோம். நம்முடைய பிள்ளைகள் காதிர் முஹைதீன் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் இச்சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த வழியாக வரும் வாகனங்கள் அதிக வேகத்துடன் வரும் சமையத்தில் பல விபத்துக்கள் நேரிட வாய்ப்புகள் இருக்கின்றன(அல்லாஹ் பாதுகாப்பானாக)

எனவே, இது சம்பந்தமாக பள்ளி நிர்வாகத்திடமும் சாலை போக்குவரத்து துறையிடமும் நாம் முன்கூட்டியே முறையிட்டு மாற்று ஏற்பாடாக சாலையின் கீழ்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தவேண்டும் . இதை நமதூர் சங்கங்கள் முன்னின்று முறையிட வேண்டியது கட்டாயம். செய்வார்களா?

- ஜப்பான் -

பேராவூரணி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 19 பேர் படுகாயம்.

பேராவூரணி அரசு போக்கு வரத்துக்கழக பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது.

அழகியநாயகிபுரம் என்ற இடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பஸ்சை முந்துவதற்காக வலது பக்கத்தில் திருப்பிய போது பள்ளத்தில் இறங்கி பஸ்குப்புறக்கவிழ்ந்தது.

அதனால் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 19 பேர் படு காயம் அடைந்தனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. எம்.ரெங்கசாமி (வயது36)

2. ஜெயபால் (40)

3. பத்மநாதன் (40) அரசு பஸ் என்ஜினீயர்

4. ஆரோக்கியதாஸ் (50)

5. வெங்கடாசலம் (41)

6. இப்ராஹிம்ஷா (58)

7. அருண் (16)

8. கணேசமூர்த்தி (12)

9. மாரிமுத்து (60)

10. சுந்தரம்பாள் (மாரிமுத்து மகள்)

11. மகாலட்சுமி (2) சுந்தரம்பாள் மகள்.

12. தலைமை ஆசிரியர் பிரதீபா (37)

13. எலிசபெத்ராணி (36) ஆசிரியை

14. மாலதி (38) ஆசிரியை

15. முத்துலட்சுமி (30) ஆசிரியை

16. மல்லிகா (43)

17. புனித செல்வி (33)

18. சித்ரா (30)

19. பஸ் கண்டக்டர் திராவிட மணி (45)

பஸ் டிரைவர் குமார் காய மின்றி தப்பினார்.

Monday, July 23, 2007

மரண அறிவிப்பு.

நடுத்தெரு 14வது வார்டு உறுப்பினர் செய்யது அவர்களின் மகள்வீட்டுப் பேரனும் அஹம்மத் ஹாஜா, யுசுப் இம்ரான் இவர்களின் ராத்தா மகனும் சம்சுதீன் அவர்களின் மகன் இப்ராஹீம் (12) காலமாகிவிட்டார். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூவூன்.

இவர் சமீப காலமாக உடல் நிலை சரியில்லாமல் சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இன்று பிற்பகல் வஃபாத்தாகி விட்டார். அவரது உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சென்னையிலிருந்து அதிரைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு மரைக்காப்பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படுவதாக தெரிகிறது. இவரின் மஃபிரத்துக்கும் அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

சென்னையில் அல்அமீன் பள்ளி நிர்வாக செலவிற்கு சந்தா சேர்ப்பு !

நமதூர் அல் அமீன் பள்ளி நிர்வாகிகள் அதிரை பஞ்சாயத்து போர்டு மற்றும் சமுதாயத் துரோகிகளால் சந்தித்துவரும் பல பிரச்சினைகளை பலரும் அறிவர். இவர்கள்மீது பல பொய்வழக்குள் சுமத்தப்பட்டு கோர்ட்டு வீடு என அல்லல் பட்டுக்கொண்டுருக்கும் இவர்களுக்கு உதவிகரம் நீட்டும் வண்ணமாக, பள்ளி நிர்வாக செலவிற்கு சாந்தா சேர்க்க சென்னைவாழ் இளைஞர்கள் முன்வந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மூஃமீனாகளாகிய நாம் இப்பிரச்சனையை நமது சொந்த பிரச்சினையாகக் கருதி இப்பள்ளிக்கு உதவும் நோக்கோடு சென்னையிலுள்ள அதிரைவாழ் இளைஞர்கள் அப்பள்ளிக்கு மாத சந்தா சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

எனவே இப்பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு தங்களால் முடிந்த அளவில் உதவிகளை செய்திடவேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

சென்னையில் சந்தா விஷயமாக தொடர்புக்கொள்ள கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

9841648430 , 9840298197
(குறிப்பாக இந்த சந்தாபணம் பள்ளி நிர்வாகச் செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்த கமிட்டியார்களிடம் கோரிக்கை வைக்கப்படும்)
-சென்னைத்தம்பி-

வெளிநாடு அழைத்து செல்வதாக பண மோசடி.

சேதுபாவாசத்திரம் பகுதியில் வெளி நாட்டுக்கு அழைத்துச் செல்வதாக நட பணமோசடியில் இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் நுõர்முகம்மது மகன் சதக்கத்துல்லா (35). இவருக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பள்ளத்துõரை சேர்ந்த ராமலிங்கம், பழனிவேல் ஆகியோரிடம் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யும்படி கூறினார். ரூ.ஐந்து லட்சத்து 30 ஆயிரம் தன்னிடம் வழங்கினால் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக கூறினார். கடந்த 2003ம் ஆண்டில் ரூ.5.30 லட்சத்தை சதக்கத்துல்லா வழங்கினார். இன்று வரை வெளிநாட்டுக்கும் அழைத்துச் செல்லாமல், பணத்தையும் திரும்ப வழங்காமல் இருவரும் இழுத்தடித்தனர்.சேதுபாவாசத்திரம் போலீஸில் சதக்கத்துல்லா புகார் செய்தார். ராமலிங்கம், பழனிவேல் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Saturday, July 21, 2007

மரண அறிவிப்பு.

சேது ரோட்டை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் நூர்முஹம்மது மரைக்காயர் முஹம்மது சேக்காமரைக்காயர் இவர்களின் சகோதரருமாகிய ஹஸனா மரைக்காயர்(80)அவர்கள் காலமாகிவிட்டார்கள் (இன்னா.....)

அன்னாரின் ஜனாஸா நாளைக்காலை பத்து மணியளவில் தக்வாபள்ளிமையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படுவதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

மர்ஹூம் ஹஸனா மரைக்காயர் அவர்களின் புதல்வர் சமிபத்தில் குவைத் நாட்டில் சாலை விபத்தில் இறந்த மன்சூர் என்பவரின் தந்தை இவர் ஜாவியா காலங்களில் சுபஹாநல்லஹி வபிஹம்திஹி சுபஹாநல்லஹி ழழிம் என்று தனது கனீர் குரலால் அதிரவைத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

பள்ளிக்கூடமா பன்றிகளின் சரணாலயமா ?

நமதூர் நடுத்தெரு ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார்400க்கும் மேற்பட்ட நமதூர் பிள்ளைகள் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பள்ளிக்கு அருகாமையில் ஊரின் அனைத்துபகுதிகளிருந்து வரக்கூடிய கழிவு நீர் செட்டியார்குளத்தில் கலக்கிறது.

இதனால் இக்குளத்தை சுற்றிலும் அதிரை பேரூராட்ச்சியின் துப்புறவு தொழிளாலாளர்களால் வளர்க்கப்படும் பன்றிகளை இங்கு மேய விடுகின்றனர் இதன் காரணமாக இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் பயிற்ருவிக்கும் ஆசிரியர்களுக்கும் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இப்பன்றிகள் இரவு நேரத்தில் சத்துணவு தயாரிக்கும் சமையல் கூடங்களில் வலம் வருகின்றன இதனால் இப்பள்ளியில் சத்துனவு சாப்பிடும் குழந்தைகளின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

இரக்கம் காட்டும் இளைஞன்.

அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரி வளாகத்தில் நேற்று 2 கழுகுகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டன. இதில் ஒரு கழுகு மயக்கமடைந்து கீழே விழுந்தது. இதைக் கண்ட கல்லூரி வாட்ச்மேன், அந்த கழுகுக்கு தண்ணீர் கொடுத்து அதன் மயக்கத்தை தெளிவித்து மீண்டும் பறக்க விட்டார்.
நன்றி :தினகரன் (21.07.2007)

அதிரை கால்பந்து இறுதிப்போட்டி-வீடியோ

அதிரையை கடந்த ஒருமாதமாக மையம் கொண்டிருந்த கால்பந்து போட்டிகள் இன்று முடிவுக்கு வந்தன. அதன் இறுதிப்போட்டியின் ஒருசில காட்சிகளை வீடியோ வடிவில் வழங்குகிறோம்.

இத்தளத்தில் பார்க்க முடியாதவர்கள் கூகில் வீடியோ பக்கங்களில் http://video.google.com/videoplay?docid=-5074906826864394370 என்ற சுட்டியிலும் காணலாம்.
கால்பந்தாட்டப் போட்டிகள் பற்றிய செய்திகள்,நோட்டீஸ் மற்றும் வீடியோக் காட்சிகளை வழங்கிய அன்பர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, July 20, 2007

அதிரையில் நடந்த எழுவர் கால்பந்து தொடர் போட்டி நிறைவு.

மன்னச்சநல்லூர் சுழற்கோப்பையை கைப்பற்றியது !
நமதூரில் கடந்த 40 நாட்களாக நடந்து வந்த கால்பந்து தொடர் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியின் பட்டுக்கோட்டை காவல்துறை SPமருதப்பிள்ளை மற்றும் காதிர்முஹைதீன் கல்லூரி தாளாலர் SMS அஹமது அஸ்லம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இன்று நடைப்பெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை அணியினரும் மன்னச்சநல்லூர் மோதினர். இதில் தலா 3 கோல்கள் போட்டு சமநிலையில் ஆடிமுடிதானர்.

மன்னச்சநல்லூர் அணியினர் நேற்று நடந்த முதல் சுற்று இறுதி ஆட்டத்தில் 1 கோல் அடித்ததின் காரணத்தால் இன்று அடித்த மூன்று கோலுடன் மொத்தம் 4 கோலாக கணக்கிட்டு மன்னச்சநல்லூர் அணியினருக்கு வெற்றி என அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை பட்டுகோட்டை SP மருதப் பிள்ளை பரிசுகள வழங்கினார். ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஆராவாரத்துடன் இன்றைய நிறைவு ஆட்டத்தை கண்டு களித்தனர் இன்றைய ஆட்டத்திற்க்கு எப்பொழுதும் இல்லாத வகையில் பலத்தபோலிஸ் பாதுகாப்பு போட்டிருந்தனர்.

Thursday, July 19, 2007

அதிரை கால்பந்து முதல் சுற்றில் மன்னச்சநல்லூர் வெற்றி!

நமதூரில் இன்று நடைப்பெற்ற கால்பந்தாட்ட இறுதி முதல் சுற்று போட்டியில் சென்னை அணியினரும் மன்னச்சநல்லூர் அனியினரும் சிறப்பாக விழையாடினர் இதில் மன்னச்சநல்லூர் அணியினர் சென்னை அணியினருக்கு எதிராக ஒரு கோல் பொட்டு ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னேரினர் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியினருக்கே சுழற்கோப்பை மற்றும் ஏராளமான சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என கால்பந்து கமிட்டியினர் தெரிவித்தனர்.

அதிரை அருகே சாலை விபத்து.

முத்துப்பேட்டையில் இருந்து அதிரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று  காலை 9.00 மணிக்கு  கரிசைகாடு அருகே மரத்தின் மீது மோதியதில் 15 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் காயம் அடைந்த அனைவரும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆவார்கள்.
இந்த விபத்து அரசு பேருந்துக்கும் தனியார் பேருந்துக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக நடந்த விபரீதம் என இவ்விபத்தை நேரில் பார்த்த அக்கிராமத்தினர் கூரினர்.

-குண்டூசி-

கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம்

அதிரையில் நடைப்பெற்று வரும் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார ரசிகப்பெருமக்கள் அனைவரும் விளையாட்டரங்கை நோக்கி சாரை சாரையாக சென்றுகொண்டிருக்கிரார்கள். இதன் காரணமாக மைதானத்தின் அருகில் திடீர் கடைகளும் கடலை வண்டிகளும் வலம் வருகின்றன. எவ்வருடமும் இல்லாத வகையில் இறால் வாடாக்கடைஒன்று அந்த பகுதியில் வருபவர்களை வாசத்தால் சுண்டி இழுக்கிறது!

வர்ணனையாளர்கள் மற்றும் கமிட்டியாளர்கள் மிக்க சுறுசுறுப்புடன் தனது பணிகளை செவ்வனே செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்த இறுதிபோட்டி இன்றும் நாளையும் நடைப்பெறும் என கமிட்டியாளார்கள் தெரிவிக்கிறார்கள் இப்போட்டியில் சென்னை மற்றும் மன்னச்சநல்லூர் அணியினரும் விளையாட இருக்கிறார்கள்.

இவ்விரு அணியினரும் நாளை நடைபெறும் இறுதிஆட்டத்திலும் பங்கேற்று விளையாடுவார்கள் என தொலைப்பேசிவாயிலாக கமிட்டியாளர் ஒருவர் தெரிவிதார்.

-குண்டூசி-

Wednesday, July 18, 2007

இறுதிச்சடங்கில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.

பட்டுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ம.தி.மு.க.,வைச் சேர்ந்த விஸ்வநாதன் மரணமடைந்தார். இறுதிச்சடங்கில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.

பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயலைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தற்போது ம.தி.மு.க., மாநில தீர்மானக்குழு உறுப்பினராக இருந்தார். இவர் முன் தி.மு.க.,வில் இருந்தபோது 1986 முதல் 1991 வரை பட்டுக்கோட்டை நகராட்சி தலைவராக செயல்பட்டார். தி.மு.க.,வில் இருந்து வைகோ பிரிந்த பின், இவர் ம.தி.மு.க.,வில் இணைந்தார். 2001 முதல் 2006 வரை இவரது மனைவி ஜெயபாரதி விஸ்வநாதன், பட்டுக்கோட்டை நகராட்சி தலைவராக இருந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஸ்வநாதன் நேற்று முன்தினம் மாலை இறந்தார். இவரது இறுதிச்சடங்கு நேற்று பண்ணவயலில் நடந்தது.

இறுதி நிகழ்ச்சியில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, அ.தி.மு.க., முன்னாள் ஜெ., பேரவை செயலாளர் மகாதேவன், மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தலைவர் திவாகரன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். இவரது மறைவால் பட்டுக்கோட்டை நகரத்தில் நேற்று முழு கடையடைப்பு நடந்தது.

-ஊர்சுத்தி உமர்-

வெல்ல போவது யார்?

நமதூரில் நடைபெற்று வரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நாளைய தினம் நடைப்பெற இருக்கிறது இதில் சென்னை அணியினரும் இன்று நடைப்பெரும் அரை இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணியினறும் நாளையதினம் இறுதி போட்டியில் மோதுவார்கள் இப்போட்டியை காண அதிரை மற்றும் சுற்று வட்டார கால்பந்து ரசிகர்கள் மிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Tuesday, July 17, 2007

அதிரை மக்ளிடம் ஓர் கருத்துக்கணிப்பு!

நமதூர் அல் அமீன் பள்ளிவாசல் கட்டுவதற்க்கு அதிரை பேரூராட்ச்சி நிர்வாகமும் அதன் தலைவர் M M S அப்துல் வஹாப் மற்றும் துனைத்தலைவர் இராம குணசேகரன் ஆகியோர் தலைமையிலான நிர்வாகமும் பெரும்பாலான வார்டு உறுப்பினர்களும் இப்பள்ளிகட்டுவதற்க்கு எதிற்ப்பு தெரிவிக்கிறார்கள் இதனால் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில்கடும் கண்டனகுரல் ஒலிக்கிறது இதனை கருத்தில் கொண்டு ஒரு பிரத்தியோக கருத்துக்கணிப்பைஅதிரை கல்லூரி மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ள அதிரை மக்களிடம் நடத்தியது அதில் பள்ளிவாசல் கட்டுவதற்க்கு தடையாக இருப்பவர்கள் யார் என்ற கேள்விக்கு 69% பேர் MMS என்றும் 30% பேர் இராம குணசேகரன் என்றும் 1%  பேர் கவுன்சிலர்கள் என்றும் தெரிவித்தனர். பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஏன் ஆக்கிரமிக்க பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு 81% பேர் தங்களுடைய சொத்தாக்கி கொள்ள என்றனர்.பல் கொட்டிய பிறகும் கெட்டியாக பதவியை ஏன்பிடித்துள்ளார் என்ற கேள்விக்கு ஊழல் பெருச்சாலிகளை தன் கைவசம்வைத்து பிழைப்பு நடத்த என 66% பேர் தெரிவிக்கிறார்கள் அதிரை பேரூராட்ச்சி நிர்வாகத்தை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடந்தால் MMSக்கும் இப்போதைய கவுன்சிலருக்கும் வாக்களிப்பீர்களா? என்பதற்க்கு எதிரி அத்வானிக்கு வாகளித்தாலும் அழிப்போம் ஆனால் துரோகிகளுக்கு எங்கள் வாக்கு கிடையாது என்றனர்
.
குண்டூசி

மதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் சு.விசுவநாதன் மரணம்

பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்றத்தலைவரும் ம தி மு க பிரமுகருமான சு.விசுவநாதன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்கப்பட்டார் இவருக்கு தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் அவரது உடல்நிலைமிகவும் கவலைக்கிடமான நிலையில் இன்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமையில் ( 16.07.07) காலமானார்.

இதனால் பட்டுகோட்டையில் அனைத்து வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

பட்டுக்கோட்டை தொகுதியில் ம.தி.மு.க கட்சியை வளர்த்ததில் பெரும்பங்காற்றியவர் என்பதும், மணிக்கூண்டு பள்ளிவாசலுக்கு இடையூறாக இருந்த சாராயக்கடையை வேறொரு பகுதிக்கு சுமூகமாக மாற்ற உதவியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு.சு.விசுவநாதன் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

-சென்னை செய்தியாளர்-

Sunday, July 15, 2007

லண்டன் மாப்பிள்ளை கைது

முதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததுடன் முதல் மனைவியையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டு,விட்டு 2-வது திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.


நாகையை அடுத்த நாகூரில் உள்ள முடுக்குத் தெரு சந்து பகுதியைச் சேர்ந்தவர் மஸ்முதுமரைக்காயர்(வயது42). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பவுசியா சீலத்திற்கும்(31) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். பவுசியாசீலத்தின் பெற்றோர் லண்டனில் வசித்து வந்ததால் திருமணத்திற்கு பின்பு மருமகனையும், மகளையும் லண்டனிற்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருமகன் மஸ்முதுமரைக்காயருக்கு ஒரு வேலையும் அவர்கள் வாங்கி கொடுத்தனர். லண்டனில் சில நாட்கள் தான் பவுசியாசீலத்தும், மஸ்முதுமரைக்காயரும் சந்தோசமாக வாழ்க்கை நடத்தினர். அதன்பின்பு அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பல்வேறு வகையில் பவுசியாசீலத்தை, மஸ்முதுமரைக்காயர் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.
கணவன், மனைவி இருவரும் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவார்கள் என்று எண்ணிய பவுசியாசீலத்தின் பெற்றோர், மகளின் நிலைமையை எண்ணி மிகவும் கவலை அடைந்தனர்.

இந்தநிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு பவுசியாசீலத்தின் பெற்றோர், லண்டனில் இருந்து நாகூருக்கு புறப்பட்டு வந்தனர். அதன்பின்பு மனைவியை மஸ்முதுமரைக்காயர் அதிகமாக கொடுமைப்படுத்தினார்.

தன்னுடைய 4 குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணிய பவுசியாசீலத், கணவனின் கொடுமையை எல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்தார். கடந்த 1ஷி மாதத்திற்கு முன்பு மஸ்முதுமரைக்காயர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை லண்டனில் விட்டுவிட்டு தான் மட்டும் தனியாக நாகூருக்கு வந்தார். சில நாட்களில் லண்டனுக்கு திரும்பி வந்துவிடுவார் என்று பவுசியாசீலத்தும் எண்ணிக் கொண்டு இருந்தார்.

ஆனால் மஸ்முதுமரைக்காயருக்கு 2-வது திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சிகள் நாகூரில் தடபுடலாக நடைபெற்றன. இதை அறிந்த உறவினர் ஒருவர் லண்டனில் உள்ள பவுசியாசீலத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நாகூரில் உள்ள தன்னுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, உடனே திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கூறினார். அவர்களும் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.

ஆனால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனால் மனம் உடைந்த பெற்றோர், லண்டனில் உள்ள தனது மகளுக்கு தொடர்பு கொண்டு நாகூரில் திருமணம் நடக்கக்கூடிய விபரத்தை தெரிவித்தனர். எப்படியாவது திருமணத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டனில் இருந்து பவுசியாசீலத் புறப்பட்டு சில நாட்களுக்கு முன்பு நாகூருக்கு வந்தார்.

ஆனால் அதற்கு முன்பாக கடந்த 5-ந் தேதி அதிராம்பட்டினத்தில் வைத்து 17 வயது பெண்ணை மஸ்முதுமரைக்காயர் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த பவுசியாசீலத் நேராக தனது கணவரை சந்தித்து என்னையும், குழந்தையும் விட்டுவிட்டு வேறு திருமணம் செய்ய எப்படி மனது வந்தது என்று முறையிட்டார். ஆனால் மஸ்முதுமரைக்காயர் அதற்கு செவிசாய்க்கவில்லை.

என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் பணம் கொண்டு வா? என்று கூறினார். ஆனால் பெற்றோருக்கு வயதாகிவிட்டது. இவ்வளவு பணம் தன்னால் கொடுக்கமுடியாது என்று பவுசியாசீலத் கூறினார்.

அப்படி இல்லையென்றால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்கையாவது சென்று விடு, மீண்டும் இங்கே வந்தால் உன்னையும், குழந்தைகளையும் கொன்று புதைத்து விடுவேன் என்று மஸ்முதுமரைக்காயர் மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பவுசியாசீலத் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பின்பு போலீஸ் நிலையத்தில் சென்று முறையிடுவதற்கு முடிவு செய்தார். அதன்படி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்பனாநாயக்கிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதுடன், தன்னையும், குழந்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை பார்த்த போலீஸ் சூப்பிரண்டு கல்பனாநாயக், நாகை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் மனுவை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மேற்பார்வையில் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து மஸ்முதுமரைக்காயரையும், அவருடைய சகோதரரையும் கைது செய்தார். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினத்தந்தி

ரெண்டு நீர்த்தொட்டிகளும் 'ரெண்டுங்கெட்டான் வார்டு' மெம்பர்களும்...

சுமார் 25 வருடங்களுக்கு முன் அதிராம்பட்டினத்தின் குடிநீர் தேவையை வண்டிப்பேட்டை ரோட்டிலுள்ள மண்ணப்பன் குளம் நிறைவேற்றி வந்தது. தலையிலும் இடுப்பிலுமாக தலா ஒருகுடத்துடன் குளத்துத் தண்ணீரை குடிநீராகச் சுமந்து ஒருசில கிலோமீட்டர்கள் நடந்து வந்தததன் பலனாக மகபேறுகளும் சுகப்பிரவசங்களாக இருந்தன. அது ஒரு காலம்.!

புண்ணியவான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கருணையால் 1980 களில் மேலத்தெருவில் மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு அதிரையின் குடிநீர் தேவையை குழாய் மூலம் பூர்த்தி செய்தது. சிலவருடங்களுக்கு முன் ஷிஃபா மருத்துவமணை அருகில் இன்னொரு மேல்நிலைத் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டி மேலத்தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டியைவிட இருமடங்கு கொள்ளளவு கொண்டது!

வயற்காடுகள் மணைகளாகி ஊரும் பெரிதாகி விட்டதால் ஒட்டு மொத்த குடிநீர் தேவைக்கு இரு தொட்டிகள் அவசியம்தானே என்று நினைத்தீர்கள் என்றால் பாவம் நீங்கள் விபரம் அறியாதவர்! மேலத்தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டி ஊரின் 90 சதவீத பகுதிகளுக்கும், அதைவிட பெரிய தொட்டியான ஷிஃபா பகுதியிலுள்ள தொட்டியிலிருந்து கரையூர் தெரு உள்ளிட்ட 3-4 தெருக்களுக்கும் என்று பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது!

மிலாரிக்காட்டு ஊற்றுகளிலிருந்து வரும் அதிரையின் சுவையான நீரை, பேரூராட்சிக்கு வரிகளை வாரிவழங்கும் நடுத்தெரு, புதுமனைத்தெரு, CMP லேன் பகுதி மக்கள் குடிப்பதற்கு கொடுப்பினையில்லை!

95% மக்களுக்கு குறைந்த கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும், 5% மக்களுக்கு இருமடங்கு கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியுமாக பங்கு போட்டுள்ளதைக் கண்டு கொள்ளாமல்,அல்அமீன் பள்ளிவாசலுக்கு எதிராகச் செயல்படும் மெம்பர்களை 'ரெண்டுங்கெட்டான் மெம்பர்கள்' என்று அழைப்பதில் தவறில்லைதானே?

மேலத்தெரு தண்ணீர் தொட்டியிலிருந்து வரும் குடிநீரைக் குடித்தால்,உப்புத் திண்டவன் கதைதான்! அவ்வளவு தாகம் எடுக்கிறது! வசதியுள்ளவர்கள் உவர்ப்பு நீரை சுவையான நீராக மாற்றும் சாதனங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். இச்சாதனத்தின் விலை சுமார் 10,000 ரூபாய்! எல்லோருக்கும் இது வசதிப்படுமா?

அடுத்தமுறை ஓட்டு கேட்டு வந்தால் இலவச தொலைக்காட்சிப்பெட்டிக்குப் பதிலாக இலவச குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் வேண்டும் என்று கேட்டுப் பார்க்கலாமே!

-ஊர்சுத்தி உமர்-

Friday, July 13, 2007

அல் அமீன் பள்ளிவாசல் நிர்வாகி தாக்கப்பட்டார்

அல் அமீன் பள்ளிவாசல் நிர்வாகி ஜனாப்.அன்சாரி (குலாப்ஜான்) அவர்களை அதிராம்பட்டினம் புதுத்தெரு வார்டு மெம்பர் அன்சர்கான் நேற்று (11-07-2007) இரவு அன்சாரியின் வீடுபுகுந்து பயங்கரமாகத் தாக்கியுள்ளார்.

பொய்வழக்கிலிருந்து இருநபர் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஜனாப். அன்சாரி (குலாப்ஜான்) அவர்களைத் திட்டமிட்டு தாக்கியதோடு அதிரை திமுக தலைவரும் அல் அமீன் பள்ளிவாசலுக்கு பல்வேறு இடையூறுகள் செய்து வருபவருமான இராம.குணசேகரனுடன் சென்று குலாப்ஜான் அன்சாரி அவர்களுக்கு எதிராக அதிரை காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர்.

அல் அமீன் பள்ளிவாசல் கட்டுமானப் பிரச்சினையில் கமிட்டியார்களை புதுத்தெரு வார்டு மெம்பர் அன்சர்கான் தொடர்ந்து மிரட்டி வருவதால் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள புகாரைச் சுட்டிக்காட்டி, அதற்கு பழிவாங்கும் நோக்கிலும் ஜாமீனில் வெளிவந்திருக்கும் கமிட்டியார்களின் ஜாமினை ரத்து செய்யும் நோக்கிலும் இராம.குணசேகரன் மற்றும் அன்சர்கான் திட்டமிட்டே குலாப்ஜான் அன்சாரி அவர்களைத் தாக்கியதை விளக்கியதும், அன்சாரி மீதான புகாரை அதிரை காவல்துறை அதிகாரிகள் பதிவு செய்யவில்லை.

திட்டமிட்டு வேண்டுமென்றே வம்பு செய்ததற்காகவும், கொலைவெறியுடன் தாக்கியதற்காகவும் வார்டு மெம்பர் அன்சர்கான் மீது குலாப்ஜான் அன்சாரி அவர்கள் சார்பில் மேலும் ஒரு வழக்கை அதிரை காவல்துறை பதிவு செய்து கொண்டு FIR போடாமல் புகாருக்கான ரசீது கொடுத்துள்ளனர்.

திமுக ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு இறையில்லம் பாடுபடும் அதிரை சகோதரர்களைத் தாக்கிய அன்சர்கான் மீது ஊர்மக்களும் வார்டு மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

-ஊர்சுத்தி உமர்-

அல் அமீன் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு ஜாமீன் கிடைத்தது

பொய்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிரை அல்அமீன் பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் அன்சாரி (குலாப்ஜான்), தமீம் அன்சாரி (அதிமுக) உள்ளிட்டவர்களை பட்டுக்கோட்டை குற்றவியல் மன்றம் கடந்த 10-07-2007 அன்று இருநபர் ஜாமீனில் வெளிவர அனுமதித்துள்ளது.

இறையில்ல எதிரிகளுக்கு சட்ட ரீதியில் கிடைத்துள்ள முதல் அடியாகும்! இன்ஷா அல்லாஹ் பொய்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து அதிரை சகோதரர்களும் வெற்றிகரமாக வழக்கிலிருந்து முற்றிலும் விடுதலை பெற வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக!

-நமது நிருபர்-

Monday, July 9, 2007

கடலில் மீன்பிடிக்க சென்றவர் பலி

அதிராம்பட்டினத்தை அடுத்த மங்கனங்காடு கிராமத்தை சார்ந்தவர் முருகையன் (வயது44) மீனவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை லாரி டிïபில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். பொதுவாக அதிகாலையில் மீன்பிடிக்க சென்றால் காலை 11 மணிக்கு கரைக்கு திரும்புவார். ஆனால் இந்த முறை வழக்கமாக கரைக்கு திரும்பும் நேரத்தில் முருகையன் கரைக்கு திரும்ப வில்லை. மேலும் கடலில் பயங்கரமான அலைகள் அடித்தன. இதனால் கலக்கமுற்ற உறவினர்கள் முருகையனை பல இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் நேற்று முருகையன் சென்ற லாரி டிïபும், அவரது உடலும் கரை ஒதுங்கின. உடலை கைப்பற்றிய உறவினர்கள் இதுப்பற்றி அதிராம்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களின் வழங்கினர். இறந்த முருகையனுக்கு வசந்தா என்ற மனைவியும், மூன்று மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

நன்றி: தினத்தந்தி

செக்கடிமேட்டில் எழுபது இலட்சம்!

அதிரை பேரூந்து நிலையம் அருகே பேரூராட்சிக் குறவர்களின் பன்றிகள் உழலும் குட்டையாக இருந்த சாக்கடையை ஆஸ்பத்திரி தெரு ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பில் நிலஉரிமையாளர்களிடமிருந்து கிரயத்திற்கு வாங்கி அல் அமீன் பள்ளிவாசல் உண்டாக்கினார்கள்.

மெயின்ரோட்டில் இறையில்லம் அவசியம் எனக்கருதிய அதிரை தனவந்தர்கள் மற்றும் பொதுமக்களின் நன்கொடை வசூல்மூலம் சிலமாதங்களுக்கு முன் சிறுதொகை திரட்டப்பட்டு செக்கடி மற்றும் ஆலடிக்குளங்களை தூர்வாரி அல் அமீன் பள்ளியின் சுற்றுப்பகுதியை மேடாக்கினர்.

இதற்கிடையில் அதிரை பேரூராட்சியின் பொய்வழக்குகளால் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எவ்வித நிதிவசூலும் செய்ய முடியாமல் போனதையும், வழக்குச் செலவுகளுக்கு பள்ளிவாசல் பணத்தைப் பயன்படுத்த முடியாது என்பதையும் ஊர் மக்கள் நன்கு அறிவர்.

நிலைமை இவ்வாறிருக்க, செக்கடிமேட்டில் விவாதிக்கப்பட்ட?! விசயங்களில் அல் அமீன் பள்ளிவாசலுக்கு இதுவரை எழுபது இலட்ச ரூபாய் வசூலாகி உள்ளதாகப் பேசப்பட்டதாம்!

அதிரை மக்களின் வருவாய்கள் மூலம் வயிறு வளர்ப்பதோடு அதிரை மக்களுக்கு எதிராகப் பொய்வழக்கை போட்டுள்ள பேரூராட்சியின் ஊழல் மெம்பர்களும்கூட இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வருவதுதான் வேதனை கலந்த வேடிக்கை!

மின்கட்டணம்,முஅத்தின் சம்பளம், பராமரிப்பு என அவசியத் தேவைகளுக்கு அருகிலுள்ள வர்த்தகர்களும் பொதுமக்களும் மாதச்சந்தாவாக தலா நூறு ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளனர்.

இத்தகைய வதந்திகளைப் பரப்புவதன் மூலம் இறையில்லம் கட்டுற்கு வரும் நன்கொடைகளைத் தடுக்க முடியும் என்பதே அவர்களின் நோக்கம்.

"இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி வழங்கப்படும் தர்மங்களுக்கு ஒன்றுக்கு பல மடங்கு என்ற விகிதத்தில் அல்லாஹ் வழங்குவான்" என்பதை 'எழுபது இலட்சம்' வதந்தி பரப்புவோர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்களோ என்னவோ!

உண்மை வீட்டை விட்டுக் கிளம்பும்முன், வதந்தி உலகம் சுற்றி வந்துவிடும்! வதந்திகளை நம்பாதீர்கள்.

-ஊர்சுத்தி உமர்-

அல்அமீன் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு சொந்த ஜாமீன்

அல் அமீன் பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது பஞ்சாயத்து போர்டு நிர்வாகத்தால் போடப்பட்ட பொய்வழக்கை எதிர்கொள்வதற்கு, முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நிர்வாகிகள் 09-07-2007 அன்று பட்டுக்கோட்டை நடுவர் மன்றத்தில் ஆஜராக உள்ளார்கள்.

தனிநபர் மற்றும் சொந்த ஜாமினில்/பிணையில் வர அனுமதி வேண்டியுள்ளனர். பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மனின் அரசியல் பழிவாங்கலாலும், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு இடையூறு செய்யவும் போடப்பட்ட பொய் வழக்குகளால் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் படிப்பைக் கூட கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு கோர்ட்டு,கேஸு என்று சென்னைக்கும் மதுரைக்கும் அலைந்து மிகவும் சோர்வுடன் காணப்பட்டாலும், அல்லாஹ்வின் ஆலயம் எழும்ப எத்தகைய இடையூறுகளையும் இறைவன் உதவியால் சந்திப்போம் என்று தெரிவித்தார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் (அல்குர்ஆன்)

-நமது செய்தியாளர்-

அல் அமீன் பள்ளிக்கு வழங்கப்பட்ட 'பட்டா' ரத்து செய்யப்படுமா?

அல் அமீன் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டிருந்த 'பட்டா' அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி அதிரை பேரூராட்சி அலுவலகம் சார்பில் விண்ணப்பிக்கப் பட்டிருந்த மணு இன்று (9-07-2007) விசாரனைக்கு வருகிறது.

முஸ்லிம்களின் இடத்தில் அனுமதியின்றி இயங்கும்? அதிரை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முறையான 'பட்டா' இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

பள்ளிவாசல் நிர்வாகம் முறையான ஆவனங்களை வைத்திருப்பதால் 'பட்டா' ரத்து செய்ய வாய்ப்பில்லை. எனினும்,பேரூராட்சி அதிகார வர்க்கம் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ரத்து செய்ய வைக்க முயற்சிக்கலாம்.

ஆடும்வரைதான் ஆட்டம்! ஆட்டம் முடிந்தால் எவருக்கும் 'பட்டா' தேவையில்லாத ஆறடி நிலம் மட்டுமே மிஞ்சும் என்பதை இறைவனை மறந்து இறையில்லத்திற்குத் தடையாகச் செயல்படுபவர்கள் நினைவில் வைக்கட்டும்!

-ஈமெயில் செய்தி-

தொடரும் பஞ்சாயத்து போர்டின் அத்துமீறல்கள்

அல் அமீன் பள்ளிக்கு பேரூந்து நிலையம் வழியாகச் செல்லும் நுழைவு வாயிலை தேவையற்ற பதட்ட சூழலை உருவாக்கி 15-06-2007 அன்று அடைத்ததோடு, பள்ளிவாயிலின் பேரூந்து நிலைய நுழைவு வாயில் அருகே காங்கிரீட் பில்லர்களை எழுப்பியுள்ளனர்.

வழக்கு விசாரணை முடியும்வரை பிரச்சினைக்குறிய பேரூந்து நிலைய நுழைவு வாயில்,தாசில்தார் உத்தவின்பேரில் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது. அதேசமயம் இருதரப்பினரும் தீர்ப்பு வரும்வரை பிரச்சினைகளை உண்டாக்கக் கூடாது என்ற தாசில்தாரின் எச்சரிக்கையையும் மீறி, குப்பை வண்டிகளை நிறுத்துவதற்காக என்று சொல்லி பிரச்சினைக்குறிய பகுதியில் நுழைவு வாயிலுக்கு நிரந்தரமாகத் தடை ஏற்படுத்தும் நோக்கில் பில்லர்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இதற்காக பேரூராட்சியில் சிறப்புத் தீர்மாணம் 15-06-2007 க்குப் பின்னர் நிறைவேற்றியுள்ளனர். இந்திய தகவல் அறியும் சட்டத்தின்கீழ் தீர்மான நகலைக் கோரியதை அலட்சியப்படுத்தி தகவல்தர மறுத்து விட்டதாகச் சம்பந்தப்பட்ட முஹல்லா நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

சட்டத்தையும் பொதுமக்களின் உரிமையையும் காலில்போட்டு மிதிக்கும் அதிரை பஞ்சாயத்து அதிகார வர்க்கத்தின் திமிரை அடக்கப்போவது யார்?

-தோழன்-

Saturday, July 7, 2007

அல் அமீன் பள்ளிக்கு மறுமின்னிணைப்பு

கடந்த வாரம் அதிரை மின்சார வாரியத்தின் அடாவடித்தனத்தால் தொழுகை நடந்து கொண்டிருக்கும் அல் அமீன் பள்ளிவாசலின் மின் இணைப்புத் துண்டிக்கப் பட்டது. மின் இணைப்புக்கோரி விண்ணப்பித்திருந்த கோரிக்கையை தாமதப் படுத்தி வந்த அதிரை மின்சார வாரியத்தின் பாசிசப் போக்கால் அதிரை மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி் உயர்திரு. முத்துக்கருப்பன் அவர்களின் ஆணையின்பேரில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்கப் பட்டுள்ளது.

ஒருபக்கம் அதிரையில் இறையில்லத்திற்கு முஸ்லிம் பெயர்தாங்கி சுயநல அரசியல்வாதி ஒருவர் தடையாக இருப்பதோடு அதிகார துஷ்ப்பிரயோகம் செய்து வருவதையும், இன்னொரு பக்கம் மாற்றுமத அதிகாரி இறையில்லத்தில் தொழுகை நடைபெற நேர்மையாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளதையும் பொதுமக்கள் ஒப்பிட்டுப் பேசிக்கொள்கின்றனர்.

-ஊர்சுத்தி உமர்-

Monday, July 2, 2007

உங்கள் சொந்தக்குரலில் தகவல் சொல்லலாம்!!!

அதிரை எக்ஸ்பிரஸ் என்ற இத்தளம் அதிராம்பட்டினம் மக்களின் பொதுவான தகவல் பரிமாற்றக் களமாக தாய் மொழியாம் தமிழில் இயங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் நமதூர் மக்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளனர். நமதூரில் நடக்கும் அன்றாடச் செய்திகளை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினாலும் அதற்கான வழிமுறைகள் செலவு மிகுந்தவை.

வசதியுள்ளவர்களுக்கோ இணைய நுட்பங்கள் அறியாத காரணத்தினால் தாங்கள் அறிந்த செய்திகளை சுற்றியுள்ளவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வதோடு மறந்து விடுகின்றனர். ஈமெயில் வசதியுள்ளவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ செய்திகளை இலகுவாக தட்டச்சு செய்து அனுப்பி விடுகின்றனர். இது ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கும்.

மேலும், கேள்விப்பட்ட செய்தியை பிறருக்குத் தெரிவிக்கும் போது நம்முடைய எழுத்துத் திறனை பிறர் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்களே என்று அமைதியாக இருந்து விடுகின்றனர் அல்லது கேள்விப்படும் செய்திகள் வெவ்வேறு விதமாகச் சொல்லப்படுவதால் தேவையற்ற குழப்பங்களும் புரளியும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இத்தகைய சிரமங்களைக் கருத்தில் கொண்டு அதிரை எக்ஸ்பிரஸ் என்ற இத்தளம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது. இதன்மூலம் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்திகளை உங்கள் சொந்தக் குரலிலேயே இரண்டு நிமிட ஒலிப் பதிவாகச் சொல்ல முடியும். இத்தளத்தின் வலது மூலையில் உள்ள செய்திப் பெட்டியில் உங்கள் கருத்துக்கள்,வாழ்த்துக்கள் மற்றும் தகவல்களை இலவசமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு செய்தித்தளம் அதுவும் நாளிதழ்கள்,ஊடகங்களில் கிடைக்காத உள்ளூர் செய்திகளைச் சொல்லும் தளம் என்பது ஒருசிலரால் மட்டும் சாத்தியப்படாது. வருகைதரும் அனைவரும் முடிந்தவரையில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் உற்சாகமாகவும் பயனுள்ள வகையிலும் தடையற்றக் கருத்துப்பரிமாற்றம் செய்ய முடியும்.

உண்மையைச் சொல்ல தயங்குவது பொய் சொல்வதற்குச் சமம்! ஆகவே உள்ளதை உள்ளபடி சொல்லத் தயங்க வேண்டாம்.

சொல்வீராக!!

Sunday, July 1, 2007

அதிரையில் அனல் பறக்கும் கால்பந்து போட்டிகள்

அதிரை மக்களுக்குப் பொழுதுபோக்கு வசதிகள் மிகவும் குறைவு. ஊரின் மையப்பகுதியில் இருந்த பொதுநூலகமும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக மக்கல் நடமாட்டமில்லாத பகுதியில் உள்ளது.சரியான பொழுதுபோக்குகள் இல்லாமல் மாலை நேரத்தில் வண்டிப்பேட்டை ஆலடிக்குளம் மேட்டில் அரட்டையடிக்கும் இளைஞர்களுக்கு கடற்கரைத் தெரு ITI மைதானத்தில் கடந்த ஒருமாதமாக தரகர் தெரு மர்ஹும் S.S.குல் முஹம்மது அவர்கள் நினைவு எழுவர் கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரவாரமாக நடந்து வருகின்றன.அண்டைமாவட்டக் கால்பந்தாட்ட அணிகளோடு, கேரளம், கர்நாடகம் போன்ற வெளிமாநில அணிகளும், நைஜீரியா,கென்யா போன்ற ஆப்பிரிக்க அணிகளும் விளையாடி வருகின்றனர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 15,000 ரொக்கப்பணமும், இரு சுழல் கோப்பைகளும் காத்திருக்கின்றன.
நுழைவுக்கட்டணமாக ரூ.20/- (நாற்காலி), ரூ.15 (கேலரி), ரூ.10 (திறந்தவெளி) என்று வசூலிக்கப்படுகிறது. சூடான இரால் வாடா, வாழக்காய் பஜ்ஜி, கடலை ஆகியவையும் விற்கப்படுகிறது. லையன்ஸ் C.இப்ராஹீம் சாச்சாவும், பேராசிரியர் M.A. அப்துல்காதர் அவர்களும் வர்ணனைகளோடு விளையாட்டுச் செய்திகளையும் தொகுத்து வழங்குகிறார்கள்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களோடு முதியவர்களும் கைதட்டி ரசிக்கும் இது போன்ற போட்டிகள் வரவேற்கத்தக்கவை.

-ஊர்சுத்தி உமர்-