Saturday, September 29, 2007

இறைவனின் படைப்பு - சுப்ஹானல்லாஹ்!

திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் படைப்புகளைப் பற்றிச் சொன்னது. அப்போது மைக்ரோஸ்கோப் போன்ற நுண்ணுருப்பெருக்கிகள் இல்லை. எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு இன்றைய விஞ்ஞானம் ஒப்புக் கொண்டுள்ள உண்மைகளைச் சொன்னவர் யாராக இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டியது பகுத்தறிவு பெற்ற மனிதர்களின் கடமை!

கீழ்கண்ட படங்களைப் பாருங்கள்! திருக்குர்ஆன் உயிரின் படிநிலைகளை எவ்வளவு தெள்ளத் தெளிவாகச் சொல்லியுள்ளது என்று வியப்பீர்கள்! படைப்புகளின் ரகசியத்தை எப்படி இவ்வளவு ஆணித்தரமாக ஒருவரால் சொல்ல முடிந்தது? படடப்புகளின் இரகசியத்தை அறிந்தவனின் கட்டளையே திருக்குர்ஆன் என்பதற்கு இன்னுமோர் உதாரணம்! படைப்பாளிகளிலெல்லாம் அழகிய படைப்பாளன் அல்லாஹ்வே! சுப்ஹானல்லாஹ்!Egg egg egg egg egg


egg


3egg


egg


egg


egg egge

படம் மூலம்: மின்னஞ்சல்

Thursday, September 27, 2007

அதிரையின் அவலங்களுக்குக் காரணம் யார்?

முப்பது வருடங்களுக்கு முன் சட்டமன்றத் தொகுதியாகவும் நகராட்சி அந்தஸ்த்தில் பட்டுக்கோட்டையை விட அதிக தகுதிகளுடனும் இருந்த அதிராம்பட்டினம் இன்னும் பேரூராட்சி, தேர்வு நிலை பேரூராட்சி என்ற அளவிலேயே இருந்து வருகிறது.

நிலவரி அதிகரிக்கும் என்பதாலும் (!) நகராட்சியானால் தியேட்டர்கள், விடுதிகள்,லாட்ஜுகள் அதிகரித்து (!!) ஒழுக்கச் சீர்கேட்டிற்கு வாய்ப்புள்ளது என்ற காரணங்களைச் சொல்லி நமதூர் அரசு நிர்வாக ரீதியில் பின்தங்கி விட நாமே காரணமாக இருந்திருக்கிறோம்.

செல்வந்தர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், இயற்கை வளங்கள், ஆள்பலம், பணபலம் ஆகியயை இருந்தும் காலம் காலமாக அதிரை மக்கள் ஒன்று சேர வாய்ப்பின்றி அல்லது ஆண்டுக்கொருமுறை ஏதாவது பரபரப்பான விசயத்தை விவாதித்து முடிவின்றி கலையும் நிலையிலேயே இருந்து வருகிறோம்.

நடுத்தெருவான், கடற்கரைத் தெருவான், மேலத்தெருவான் என்று தெரு வாரியாக நம்மை நாமே பிரித்துக் கொண்டுள்ளோம்.முஸ்லிமாகப் பிறந்தும் (தெருப்) பெருமை பேசியும் ஒற்றுமையின்றியும் இருந்து வருகிறோம். இவர்களை ஒன்று சேர்க்க எந்தத் தெரு கணவான்களும் முயற்சி செய்யவே இல்லை!

ஊருக்குப் பொதுவான தன்மானப்பிரச்சினையாகிவிட்ட அல் அமீன் பள்ளி விசயத்தில்கூட எதிராகச் செயல்படும் குறிப்பிட்டத் தெருவின் பெருந்தலை, தெரு ரீதியிலேயே 'பஞ்ச் டயலாக்' விட்டு அனுதாபம் பெற முயன்றார்.

செல்வந்தர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட சிலர், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தானுண்டு தன் வேலைகள் உண்டு என்று ஊரின் எந்தப் பிரசினையிலும் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அப்படியே அரைகுறையாக ஈடுபட்டாலும் அதில் பொருள்சார் பலன்களை முன்னிறுத்தியே தலையிடுகிறார்கள்.

வளைகுடா,அமெரிக்கா, ஜப்பான், லண்டன், ஆஸ்திரேலியா என்று திரைகடல் ஓடி திரவியம் தேடியதால் திடீர் பணக்காரர்கள் ஆனதால் பழம் பணக்காரர்களை மதிப்பதில்லை.இன்னும் சிலரோ சுயமாக அல்லது யார் தயவின்றியும் மார்க்கத்தை அறிந்து கொண்டோம் என்று இதுநாள்வரை மார்க்கத்திற்காக தங்கள் வாழ்நாளை அற்பணித்த ஆலிம்களை மதிப்பதில்லை.

ஒழுக்கமாக பாதுகாக்கப்பட வேண்டிய நமது இளம் பெண்கள், ஓடுகாலிகாளாக யார் காரணம்? கோடிகோடியாக பணமிருந்தும் ஊரில் நிம்மதியாக வாழ முடியவில்லையே! என்பதை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா?

நம்மிடம் பண்டிகைக் காலங்களில் அன்பளிப்பை எதிர்பார்த்த(சமூகத்த)வரெல்லாம் எதிர் கேள்வி கேட்கும் அளவுக்கு நாம் நிலை தாழ்ந்து விட்ட அவலம் இன்னுமா நமக்கு உறைக்கவில்லை?

தெருரீதியாகவும், திடீர் செல்வங்களால் சான்றோர்களை மதியாமலும் பணத்தாசையில் நம் வாழ்நாளை வெளிநாடுகளில் முதலீடாக வைத்து சொந்தங்களைப் பிரிந்திருக்கும் நாம், நமது அடுத்த தலைமுறையினருக்கு எதை விட்டுச் செல்லப்போகிறோம் என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வோமாக!

-ஊர்சுத்தி உமர்-

ஒரு அப்பாவியின் காதில் விழுந்தவை...

  1. அல் அமீன் பள்ளிவாசல் பற்றி ஒன்றுமே தெரியாது!பள்ளிவாசல் சார்பாக, என்னிடம் இதுவரை யாருமே முறையாக அணுகவில்லை!
  2. பள்ளிவாசல் கட்டுவதற்குத் தடையாக இருப்பதாக என்மீது அவதூறு செய்கிறார்கள்; நான் தடையாக இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.
  3. சில குறிப்பிட்ட தெருக்காரர்கள் சிலரின் சூழ்ச்சியினால், அல்அமீன் பள்ளிவாசலுக்கு எதிராக நான் செயல்படுவதாகச் சொல்கிறார்கள். உங்கள் தெருக்காரனாகிய என்மீது சுமத்தப்பட்ட பழியை நீங்களும் ஆதரிக்கப் போகிறீர்களா?
  4. பள்ளிவாசல் பிரச்சினையில் என்பெயரை இழுத்து இதுநாள்வரை கட்டிக் காத்த பெருமையை சிதைத்து விட்டார்கள்.
  5. அரசாங்க நிலத்தில் ஆக்கிரமிப்புச் செய்து பள்ளிவாசல் கட்டுவதை, எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
  6. அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினையை தீர்த்து வைத்து, அதனைக் கட்டிக் கொடுக்கப் போவதும் நானே!

இவையெல்லாம் போகிற போக்கில் காதில் விழுந்தவை. உங்கள் காதிலும் விழுந்திருக்கலாம். தெரியாமல்தான் கேட்கிறேன்,

1) அல் அமீன் பள்ளி பொதுச்சொத்தாகும். முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமானப் பள்ளியைக் கட்ட யார் யாரிடம் அணுக வேண்டும்? பஞ்சாயத்து போர்டுக்கு தினமும் வரும் போது, பிரச்சினைகளுக்கு முன்பு என்ன ஏது என்று நீங்கள் விசாரித்தால், யாரும் பதில் சொல்லி இருக்கவா மட்டார்கள்? ஊரின் அனைத்து நிகழ்வுகளிலும் குறிப்பாக திருமணம், மவ்த்து போன்றவற்றில் யாரும் அழைக்காமலேயே கலந்து கொண்டு சிறப்பிக்கும் பண்பாளர், ஊருக்கே பொதுவான பள்ளிவாசல் விசயத்தில் பாராமுகமாக இருப்பது நியாயமா?

2) பள்ளிவாசலின் முன்புறம் கழிப்பிடம் அமைத்தது, பள்ளிவாசலின் பேரூந்து நிலைய கேட் முன்பு குப்பை வண்டிகளை நிறுத்தி, கேட்டை சீல் வைத்து மூடும் நிலைக்குத் தள்ளியது, பள்ளிவாசல் சார்பாக பஞ்சாயத்து போர்டுடன் சமரசப் பேச்சுக்கு அழைத்து, பொய்வழக்கு புணைந்தது, பள்ளி வாசலின் மின்சாரத்தைத் துண்டித்தது, பள்ளிவாசலுக்கான பட்டாவை ரத்து செய்யக் கோரியது, கேட்டைத் திறக்கச்சொல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் கேட்டைத் திறக்காமல் மெத்தனமாக இருக்கும் அலுவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பது - இவைகளெல்லாம் என்னவாம்?

3) முன்னூறு ஆண்டுகளாக 'அந்தக் குறிப்பிட்ட தெருக்காரர்களின்' நிர்வாகத்தில் இருந்த ஜும்ஆ பள்ளிக்கு முத்தவல்லியாக இருப்பதை ஏற்றுக் கொண்டவர்களும் அந்தக் குறிப்பிட்ட தெருக்காரர்களே! அல்அமீன் பள்ளிவாசல் விசயத்தில் 'உங்கள்' தெருக்காரர்களில் பெரும்பாலோர் ஆதரிக்கும்போது சிலர் மட்டும் காரணமேயில்லாம எதிர்க்கிறார்களே, அது யாருடைய சதிவேலை?

4) மெயின்ரோட்டில் பள்ளிவாசல் கட்டி, அதிரை மக்களின் ஐம்பதாண்டுக் கனவை நிறைவேற்றி, அல்லாஹ்விடமும் பெறக்கூடிய பெருமையை விடவா உங்களின் பழம்பெருமைகள் சிறந்தவையாகி விட்டன?

5) கிரயத்திற்கு வாங்கிய நிலத்துடன், பள்ளிக்கு என்று உரிமையாளர்களால் வக்ப் செய்யப்பட்ட நிலத்தில்தான் அல்அமீன் பள்ளிவாசல் அமைந்துள்ளது. வக்ப் செய்யப்படாத நிலத்தில் இறையில்லம் உண்டாக்குவதை மார்க்கம் அனுமதிக்கவில்லை. உண்மையிலேயே பள்ளிவாசலுக்கு வக்ப் செய்யப் பட்ட நிலத்தில் உள்ள கால்நடை மருத்துவமணையும், பஞ்சாயத்து போர்டும்தான் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டவை என்பது தெரியுமா?

6) அதைத்தானே ஊர்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்! யாரும் கேட்காமல் தானாக முன்வந்துச் செய்து அல்லாஹ்விடத்திலும், ஊர்மக்களிடத்திலும் சிறப்படையுங்கள் சாச்சா!

-அப்பாவி-

Saturday, September 22, 2007

வேலம்மாள் ஸ்கூல் - பிலால் கொலை நடந்தது என்ன?...


சென்னையின் பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் டிரஸ்ட்டுக்கும் சர்ச்சை-களுக்கும் அப்படி என்னதான் உறவோ... அடிக்கடி செய்திகளில் அந்த டிரஸ்ட் அடிபடுகிறது.

கடந்த 2003&ம் ஆண்டு வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த ராமு அபிநவ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டான். சமீபத்தில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவன் ஒருவன் விபத்தில் அடிபட்டுத் துடிக்க... அந்த வழியாக வந்த அதே கல்லூரிப் பேருந்து அவனை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று காப்பாற்றவில்லை என்று மாணவர்கள் போராட்டம் செய்தனர்.

இப்போது லேட்டஸ்ட்டாக, திருவள்ளூர் மாவட்டம் பஞ்சட்டி கிராமத்தில் உள்ள வேலம்மாள் சர்வதேச உறைவிடப் பள்ளியில் படித்த பிலால் என்ற மாணவன் மர்மான முறையில் இறந்துபோய்... அது பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது!

தஞ்சை அதிராமபட்டினத்தை சேர்ந்த சாகுல் அமீது, சவுதி அரேபி யாவில் இன்ஜினீயராக இருக்-கிறார். இவர் மகன் பிலால், பிளஸ் ஒன் படித்து வந்தார். கடந்த 12&ம் தேதி அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகப் பள்ளி நிர்வாகம் சொன்னது. ஆனால், ‘இது திட்ட மிட்ட கொலை’ என்கிறார்கள் பிலால் குடும்பத்தினர்.


பிலாலின் தந்தை சாகுல் அமீதை சந்தித்தோம். ‘‘எனக்கு அவன் ஒரே பையன். அவனை நல்லாப் படிக்க வைக்கணும்னுதான் வேலம்மாள் ஸ்கூல்ல சேர்த்தேன். வருடத்-துக்கு ஐந்து லட்ச ரூபாய் ஃபீஸ். பிலால் நாலு வருஷம் அங்கேயே தங்கிப் படித்து வந்தான். 12&ம் தேதி இந்திய நேரப்படி காலை ஏழு மணிக்கு சவுதியில இருந்த எனக்கு போன் வந்தது. ‘நான் பிரின்ஸிபால் பேசுறேன். உங்க பையன் ஜாக்கிங் போக எழுந்திருக்கவில்லை. லோ பி.பி. ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போறோம்’னு சொல்லி போனை கட் பண்ணிட்டாங்க.

கொஞ்ச நேரத்திலேயே திரும்பவும் போன்... ‘உங்க பையன் இறந்துட்டான்’ என்றார்கள்! அடிச்சுப் பிடிச்சு இந்தியா வந்தேன். என் பையனைப் பொட்டலமாத் தான் கொடுத்தாங்க’’ என்று கேவி அழ ஆரம்பித்தார்.

அவரே தொடர்ந்து, ‘‘ஆறு அடி உயர எக்சர்சைஸ் பாடி. தினமும் ரொம்ப தூரம் ஓடுவான். அத்லெட்டிக்ஸில் நிறைய பரிசுகள் வாங்கி இருக்கான். பேஸ்கட் பால் பிளேயர். இப்படிப்பட்டவனுக்கு எப்படி லோ பி.பி. வரும்? அவனுக்கு உடல் நலம் சரியில்லை என்றால், அருகில் இருக்கும் பொன்னேரிக்கு உடனே அழைத்துப் போயிருக்கலாம். இல்லையென்றால், செங்குன்றத்தில் இருக்கிற மருத்துவமனைக்குக் கூட்டிப் போயிருக்கலாம். அறுபது கிலோமீட்டர் தாண்டி சென்னையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு ஏன் கூட்டிட்டுப் போனாங்கன்னு தெரியலை.

அன்றைக்கு நள்ளிரவு ஒரு மணிவரையில் கல்ச்சுரல்ஸ§க்காக ஒத்திகை செய்திருக்கிறான். அந்த நேரத்துக்கும் அதிகாலைக்கும் நடுவில்தான் என்னமோ நடந்திருக்கு. அவன் படுக்கையில் யூரின், மலம் இருந்ததாக அவன்கூடப் படிக்-கும் பசங்க சொன்னாங்க. ஆஸ்பிட்டல்ல பிலாலை நான் பார்த்தபோது, உடல் சுத்தமாகக் கழுவப்பட்டிருந்தது. தலையில் சோப்பு வாசனை அடித்தது. தலையில் தாக்கப்பட்டிருந்தான். கண்களில், மூக்கில் ரத்தம் வழிந்திருந்தது. அவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, கூடப் படிக்கும் மாணவர்கள் ரெண்டு பேர் வந்திருக்காங்க. அவங்ககிட்ட என்ன காரணத்துக்காகவோ மிரட்டி கையெழுத்து வாங்க நிர்வாகம் முயற்சி செய்திருக்கிறது. இயற்கையான மரணம் இல்லை என்று சந்தேகம் வந்ததுமே, போஸ்மார்ட்டம் பண்ணனும்னு வற்புறுத் தினோம்.

ஆனால், நிர்வாகமும் போலீஸ§ம் ‘முஸ்லிம் சமூகத்துல உடலைக்கூறுபோட மாட்டாங்க. இது இயற்கையான மரணம்தான்’னு சொல்லி எங்களை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள். தொழில்முறைக் கொலையாளி களை வைத்து நடத்தப்பட்ட படுகொலைதான் இது. இதை மறைப்பதற்காக போலீஸ் துணையுடன் என் பையனைப் பத்திப் புதுசு புதுசா கதைகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். காதல் தோல்வி, போதைப் பழக்கம் இருந்தது என்கிறார்கள். அவன் மூன்று முறை ஹஜ் யாத்திரை போய் வந்தவன். இறை நம்பிக்கை உடையவன். அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும்இல்லை.


முதலில் உடல் நலம் சரியில்லை என்றவர்கள், இப்போது கேரக்டரை டேமேஜ் செய்கிறார்கள். இது பள்ளி நிர்வாகத்தின் மீதான சந்தேகத்தைக் கூட்டுகிறது. தவிர பள்ளிக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ&க்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் என்று எத்தனையோ பேர் ‘இதைப் பெரிதாக்க வேண்டாம்’ என்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைக்கு இப்படி நடந்திருந்தால் சும்மா இருப்பார்களா?’’ என்று கோபத்தோடு சொன்னார் சாகுல் அமீது.

பிலாலின் கார்டியனாக இருந்தவர், பெரியகுளம் காங்கிரஸ் எம்.பி&யான ஜே.எம்.ஆரூண். சாகுல் அமீதும் ஆரூணும் உறவினர்கள். அவரிடம் பேசினோம்.

‘‘ஸ்கூல் லீவுல எங்க வீட்டுல வந்துதான் பிலால் தங்குவான். நானே அவனைப் பலமுறை ஸ்கூலுக்குக் கூட்டிப் போயிருக்கேன். கார்ல போகும்போது சில சமயம் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது கார் நகர்ந்தால் ‘அங்கிள், ரூல்ஸ் மீறாதீங்க...’னு சொல்லுவான். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கக் கூடியவன். பள்ளியில் நடந்த சில தவறுகளை அவன் சுட்டிக் காட்டியிருப்பான். அதனால் அவனை யாராவது அடித்துக் கொலை செய்திருக்கலாம். பள்ளியில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றும் ஒருசிலர் மீது எங்களுக்கு சந்தேகம். என் மச்சான் மகன் இப்ராஹிம் அங்கேதான் படிக்கிறான். அவனை சிலர் பள்ளியிலேயே தாக்கியிருக்கிறார்கள். அவனுக்குத் தலையில் மட்டும் 16 தையல்கள் போடப்பட்டது. ஆனால், தலையில் பூட்டு விழுந்து அடிபட்டது என்று விஷயத்தை மறைத்து-விட்டது நிர்வாகம்.

இதே போல சில மாதங்களுக்கு முன் மணல் மூட்டையைத் தலையில் போட்டு ஒரு மாணவனைக் கொடுமைப்படுத்தி இருக்-கிறார்கள். பிலாலின் மரணம் திட்டமிட்ட கொலை என்ப தற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால்தான் உடனே ஆர்.டி.ஓ. விசாரணைவேண் டும் என்று கேட் டேன். ஆனால், அதற்கு நிறைய தடைகள் ஏற் பட்டது. தலைமைச் செயலாளரிடம் புகார் செய்த பிறகு ஆர்.டி.ஓ. விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை லோக்கல் போலீஸ் விசாரித்தால் உண்மைகள் வெளிவராது. பள்ளி நிர்வாகம் இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சிப்பதால், சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இதை விசாரிக்க-வேண்டும்’’ என்றார்.

வேலம்மாள் பள்ளி நிர்வாகத் தரப்பை அறிய, அங்கு போனோம். நிர்வாகத் தரப்பிலிருந்து வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர்ப்பாண்டியன், ‘‘பிலாலின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவன் உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன், பள்ளியில் இருக்கும் டாக்டரை அழைத்துக் காட்டினார்கள். பல்ஸ் குறைவாக இருந்ததால் அவனை எப்படியாவது காப்பாற்ற எண்ணி, பெரிய மருத்துவமனையான அப்போலோவில் சேர்த்தார்கள். ஆனாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. பிலால் மரணம் பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தர-விடப்பட்டிருக்கிறது. அதன் முடிவும், பிரேதப் பரிசோதனை முடிவும் வந்தால், பள்ளி நிர்வாகம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரியும். மனிதா-பிமான அடிப்படையில் அந்த மாணவனின் பெற்றோரிடம் நிர்வாகத் தரப்பு பேசியது உண்மை. ஆனால், அவர்கள்தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நடந்து-கொண்டார்கள்’’ என்றார்.

-எம்.பரக்கத் அலி;படன்ங்கள்: ஜே.ராஜ் வினோத்
நன்றி:ஜூனியர் விகடன்

அதிரையில் மாத இதழ் வெளியீடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக, கடந்த 13.09.07 சனிக்கிழமை அன்று ரமலான் இரவுத் தொழுகைக்குப் பின் சமுதாய ஒற்றுமை என்ற மாத இதழ் வெளியிடப்பட்டது.

மார்க்க மற்றும் சமுதாய செய்திகள், மார்க்க கேள்வி பதில் பகுதிகள், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் நடைபெற்று வரும் தஃவா பணிகள் மற்றும் பயனுள்ள துணுக்கு செய்திகள் என 8 பக்கங்களில் மிளிறும் சமுதாய ஒற்றுமை இதழின் முதல் பிரதியை தஞ்சை தெற்கு மாவட்ட தாயி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி வெளியிட துபையிலிருந்து வருகை தந்திருக்கும் அதிரை இஸ்லாமிக் மிஷன் A.I.M மக்கள் தொடர்பு செயலாளர் முஹமது அமீன் பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைக்காக S. ஹைதர் அலி வெளியீட்டளராக பொறுப்பு வகிக்க அபூ மர்யம் அவர்கள் ஆசிரியராக பணியாற்றும் இவ்விதழில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எழுத விரும்பும் அனைவருக்கும் தங்களின் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள வாய்ப்பாளிக்கப்பட உள்ள அதே வேளையில் இவ்விதழை அதிரையில் வீடு வீடாக இலவசமாக விநியோகிக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது.

தகவல்: அதிரையிலிருந்து அமீன் நன்றி:www.tntj.net

Thursday, September 20, 2007

ஆண் துணை இல்லாமல் பெண் பயணம் செய்யக்கூடாது

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)


இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!


பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.


மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:

(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.

(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.

(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.

(4) ஆணாக இருக்க வேண்டும்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

Monday, September 17, 2007

வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆகாது!

மார்க்க அறிவாலும்,கலாச்சார வளர்ச்சியாலும் புகழ் பெற்று
திகழ்ந்த நமதூரின் மானம் மரியாதை தற்கால இளைஞர்களால் கேவலப்படுவதை நினைத்து அனைவரும் வேதனைப்படுவதை எல்லோரும் அறிவோம்.
கூடிக்கூடிப் பேசிவிட்டு கலைவது,சும்மா இருக்கும் வாய்க்கு
அவல் கிடைத்ததைப் போல வெட்டிப் பேச்சு வீணர்களுக்கு ஒரு பொழுதுப் போக்கு.ஒவ்வொரு அதிரைவாசியும் இன்று நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டால் தான் புரியும் நாம் முஸ்லிமாக பிறந்தது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஆனால் நம் ஊருக்கு நம்மால் என்ன பயன்,இந்த மார்கத்திர்காக என்ன தியாகத்தை நாம் செய்து விட்டோம் என்ற கேள்வியை எப்போது ஒருவன் சிந்திக்கிறானோ அப்போதே அவன் தனது அன்றாட வாழ்வில் மார்க்க பணியையும்,சமுதாய பணியையும் இணைத்துக் கொள்வான்.அவன் தான் உண்மையான முஸ்லீம்.

த.மு.மு.க., டி.என்.டி.ஜெ, முஸ்லிம் லீக், விடியல், இன்னும் வட மாநிலங்களில் எத்தனையோ முஸ்லீம் இயக்கங்கள் சமுதாயப் பணிகளை செய்கிறார்கள்,மேலும் எத்தனையோ பெரும் தலைவர்கள் சமுதாயப் பணியை தனது வாழ்க்கையாக வாழ்ந்து மறைந்து விட்டார்கள்,இவர்கள் எல்லாம் நமக்கு ஏன் வம்பு, நம்ம வேலையைப் பார்த்துக்கொண்டு போவோம் என்று உறங்கி இருப்பார்கள் என்றால் நாம் எல்லாம் முஸ்லீமாக இந்தியாவில் வாழ்வதே கேள்விக்குறி என்பதை ஒவ்வொருவரும் உளமாற உணர வேண்டும்.

நாம் சிறந்த சமுதாயம்,நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரி என்று நபிகளாரின் (ஸல்)ஹதீத் மொழிகிறது.

வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆவாது,புறம் பேசி தன்னையே அழித்துக் கொள்ளாமல் நம் ஊரில் அன்றாடும் நடக்கும் சம்பவங்கள் என்ன,அதை தடுப்பது எப்படி,நடந்த சம்பவங்களுக்கு பரிகாரம் என்ன செய்வது என்பதை உள்ளுர்வாசிகளும்,வெளிநாட்டுவாழ் அன்பர்களும் அவர்கள் வாழும் நாடுகளில் ஒன்றாகக் கூடி ஆலோசனை செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எதிர்காலத்தில் நம் சமுதாயம் தலை நிமிர்ந்து ஊரில் வாழ்வதர்க்கு வழிவகுக்கும்.
தற்போதைய காலத்தில் யாரும் சுதாரிக்கவில்லை என்றால், காலப்போக்கில் காஃபிர்கள் நம் வீடுகளில் குடும்பம் நடத்துவான்(அல்லாஹ் பாதுகாப்பனாக).,காஃபிர்களுக்கு நாம் அடிமைப்பட்டு வாழ வேண்டும்.
தற்போதே பாருங்கள் நம் முஸ்லீம் ஆண்களும்,பெண்களும் குடும்பப் பிரச்சினைகளை தீர்க்க கரையூர் தெரு பஞ்சாயத்திற்க்கும், குணசேகரனிடமும்(தி.மு.க.),உதயக்குமார்(பி.ஜெ.பி.) வாண்டையார் மகனிடமும் செல்கிறார்கள்.இவர்கள் கூறும் காரணம் என்னத் தெரியுமா ?-நம் பஞ்சாயத்தார் சரி இல்லை,நியாயத்தைப் பேசமாட்டங்கிறார்கள். ஏன் நியாயம் பேச தெறியாதவர்களை பஞ்சாயத்து தலைவர்களாக நியமித்து உள்ளீர்கள் என்பதை அந்த அந்த தெருவாசிகள் சுயப்பரிசோதனை செய்து தரமான நபர்களை பஞ்சாயத்து தலைவர்களாக,நிர்வாகிகளாக நியமிப்பதின் மூலமாகவே நம் சமுதாய பெண்கள் காஃபிர்களிடம் தொடர்பு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும். அதோடுமட்டுமல்ல குடும்பப் பிரச்சினை,சொத்துப் பிரச்சினை மற்றும் எந்த பிரச்சைனையாக இருந்தாலும் தெரு பஞ்சாயத்தின் கவனத்திற்குத் தான் கொண்டு வர வேண்டும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டத்தை கொண்டு வாருங்கள்,சரியான முறையில் மிகுந்த கவனத்துடன் பஞ்சாயத்து செய்யுங்கள் எதிர்காலத்தில் வெளியூர் பஞ்சாயத் எல்லாம் நம் பஞ்சாயத்தை நாடி வருவார்கள் இன்ஷா அல்லாஹ்.

ஒரு காலம் இருந்தது இப்படித்தான் – காலம் சென்ற ரஹ்மத்துல்லா ஹாஜியார் மற்றும் அவர்களது காலத்து சகத் தோழர்கள் எட்டுப்பட்டி கிராமத்தையும் கட்டி ஆண்டார்கள்,அவர்களைத் தேடிப் பல ஊர்களிலிருந்து நியாயம் கேட்டு அதிரையை நாடி வந்தார்கள்.அல்லாஹ்வுக்காக தெளிவான,நியாயமான பஞ்சாயத்து செய்தார்கள்.அந்த காலத்தை மீண்டும் இளைஞர்களாகிய நாம் நினைத்தால் கொண்டு வரலாம் அல்லாஹ் நிறைவேற்றித் தருவான் ஆமீன்.
நம் ஊரில் பல காதல் பிரச்சினைகள் நடந்தேறின,நாம் கண்டுக்கொள்ளவில்லை,காதலிப்பது குற்றம் இல்லை, அந்தக் காதல் கண்ணை மறைக்ககூடாது, காதலிப்பதிலும் புத்திசாலித்தனம் வேண்டும்,நம் ஊரில் 4 நாளைக்கு முன் என்ன நடந்தது,ஒரு இந்து ஆண் நம் குடும்பத்தைச் சேர்ந்த x பெண்ணை கடத்திக் கொண்டு போய் 3 நாள் வேலாங்கண்ணியில் தங்கிவிட்டு அவனது பேரில் அதிரை த.மு.மு.க. மூலமாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டதை அறிந்து பெண்ணை அவளது வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு பெண்ணின் பெற்றோரிடம் நான் தான் கலியாணம் பன்னுவேன்,வேறு யாருக்காவது கலியாணம் பன்ன முயற்சித்தால் நடப்பது வேறு என்று தைரியமாக மிரட்டி உள்ளான்.இந்த சம்பவத்திற்கு காசு வாங்கிக் கொண்டு கலியாணம் பன்னி வைக்கும் சம்பந்தப்பட்ட முஹல்லாவாசிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். சொல்லப்போனால் கேவலம் எந்த ஜமாத்தும் அவனுடைய மயிரைக் கூட புடுங்க முடியவில்லை.
சமுதாயத்தின் மீது எந்த கவலையும் இல்லாத இப்படிப்பட்ட ஜமாத்தார்களைத் தூக்கி வீசுவதே இளைஞர்களாகிய நம் பணியாகும்.வாருங்கள் இணைவோம், செயல்பட காத்திருக்கிறோம்.

துபை வாழ் அதிரைவாசிகளை ஒன்றிணைத்து ஒரு ஐக்கிய அமைப்பாக செயல்படுவதற்காக கடந்த 3 மாதத்திற்க்கும் மேலாக ஒருங்கணைந்த ஐக்கிய குழு செயல்பட்டு வருகிறது அனைத்து அதிரைவாசிகளும் உங்கள் கரங்களை அவர்களுடன் கோர்த்துக்கொள்ளுங்கள், ஊரின் நன்மைக்காக பாடுபடுங்கள் உங்களின் நன்மையின் தட்டு மஹ்ஸரிலே தாழ்ந்து நீங்கள் அனவரும் சுவனத்தை சுவாசிப்பீர்கள் இன்ஷா அல்லாஹ் ஆமீன்.
அதிரை நண்பன்

Sunday, September 16, 2007

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது

கிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ஒதுக்கி உத்தரவிடப்பட்ட அரசின் அவசர சட்டம் அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவீதம் கிறிஸ்தவர்களுக்கு, 3.5 சதவீதம் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த இட ஒதுக்கீடு 15ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்காக நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் விசாரணை மற்றும் ஆய்வு செய்து உரிய பரிந்துரை வழங்க அரசு கேட்டுக் கொண்டது. ஆணையம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், அண்ணா துரையின் 99ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் 15ம் தேதி முதல் இந்த தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசு கெஜட்டில் கவர்னர் பர்னாலா கையொப்பமிட்டு வெளியிடப்பட்டது. சிறப்பு வெளியீடாக பகுதி -4 பிரிவு -2ல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கஸ்டப்பட்டு கிடைத்த 3.5 முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை தகுதியானவர்கள் உடனடியாக பயன்படுத்துவதே அரசிடம் அதிகப்படியான இட ஒதுக்கீடு கேட்டு மீண்டும் கோரிக்கை வைக்க முடியும்.நமக்குள் இருக்கும் வேறுபாட்டை கலைந்து வேலையை கேட்டு பெறுவதில் ஒற்றுமையாக இருப்பதே புத்திசாலிகளின் அடையாளமாகும்.இந்த வெற்றி அனைவரையும் சாருமே தவிர எந்த தனிப்பட்ட இயக்கத்தையம் சாராது என்பதை இயக்கவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே உருது முஸ்லீம்கள் அரசு வேலை வாய்ப்பை அனுபவித்து வருகிறார்கள் எனவே அனைத்து தமிழர்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது எதிர் கால சந்ததிகளின் கண்ணீரை துடைக்கும்.
அதிரை நண்பன்

Saturday, September 15, 2007

வேலம்மாள் பள்ளிக்கூடமா கொலைக்கூடமா?

மாணவர் பிலால் படித்த வேலம்மாள் பள்ளி இன்டெர்நேசனல் பள்ளிக்கூடமாகும். இந்த பள்ளியில் தங்கி படிக்கும் மாணவர்களை இருட்டு அறைகளில் பூட்டிவைத்து கொடுமைப்படுத்துதல் போன்றவை நடந்துள்ளதாக 2003ம் ஆண்டில் தி ஹிந்து பத்திரிக்கை செய்தி ஒன்று கிடைக்கப்பெற்றது. இந்த பள்ளியில் இதுவரை இரண்டு மாணவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். பிலால் மூன்றாவதாகும்.

பிலால் கொலையில் மதுரையைச்சேர்ந்த எம்.எல்.ஏ மகன் ஒருவனுக்கு தொடர்பு இருப்பதாக பிலாலின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிலால் கொலைக்கு ஆர்டிஒ விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பல கனவுகளுடன் படிக்க வைத்த பிலாலின் பெற்றோர்களுக்கு மகனின் இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அல்லாஹ் தருவானாக.இறந்தது வெளியூர்காரனல்ல,நம் ஊர் ஆஸ்பத்திரி தெருவை சார்ந்த்தவர் என்பதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

சாகுல் ஹமீத் (பிலாலின் தகப்பனார்)அவர்களின் உறவினர் துபாயிலிருந்து மின்னஞ்சலில் அனுப்பிய ஆங்கிலத் தகவல்.

Student Mohamed Bilal is the only son of my cousin and co-brother Janab Shahul Hameed (Nafcel, Jeddah). May Almighty Allah grant him the status of Shaheed and make his Qabur a paradise and a play ground for this young Muslim boy, who was brutally tortured and murdered by a group of Kafirs in the school campus. May Almighty Allah give courage to the parents, kith and kin of Shaheed Mohamed Bilal to take this irrepairable loss.

Although most of you would have heared or read from various newspapers about the incident, there are several facts which would have not been spelt out.

Janab Shahul Hameed, working in Jeddah for the last 25 years had put his son Mohamed Bilal in Velammal Matriculation School during April 2005. He learnt about the school from few sources and thought it would be the best fit for his child to make him better in his academic career. His selection of the
school seemed right as Bilal imporved well in his studies, participated in several sports and extra curricular activities and passed his Matriculation in April 2007.

Everything went on well, until recently during our annual vacation in India when Bilal started talking about some disturbances he has been facing in the school campus, especially from a co-student, who is the son of one Tamil Nadu MLA. Bilal has been saying that his growth has made the other boy feel
too jealous and he felt disturbed. None of us took that serious and the parents advised Bilal not to make enemity with anyone and left the issue.

One by one we all returned back from vacation during August/September.

In the early morning of 12th September, my uncle Janab A.S.M. Abul Hassan, Advocate who is the local gaurdian of Bilal recieved a call from the school saying that the boy was unconcious while waking him up from the bed and he has died while taking him to Apollo Hospital. The Principal has also called the parent in Jeddah and informed about the death of their child.

Meanwhile, our family members rushed to the hospital and saw the body of Bilal and told us that he was as if lying in sleep, which made us believe that the boy could have died naturally for some unknown problem. The body was accompanied by 2 students of the school, who explained to our families that he was normal during previous night and that he was breathing with difficulty when found in the bed and he only lost his breath while on the way to the hospital. The police and the hospital authorities did not let us look at the body except for the face. This led to suspicion and our people started arguing with them to show the entire body. Meanwhile, Janab J.M. Haroun, M.P, who is a close friend of Mr. Shahul Hameed (Jeddah) was informed about the death while he was in Delhi and he immediately left to Chennai. The news of Janab Haroun's coming to Chennai reached the police and hospital authorities and they thought that if MP arrives, then it would be difficult to prevent him from investigating the matter and hence planned for immediate evacuation of the body from Apollo. They took the body into the ambulance and tried to leave to GH, Chennai. Mr. Haroun's people who were at the hospital watching for any foul play, successfully prevented the body from leaving to GH. Our suspicion further grew about the nature of the
boy's death.

After Mr. Haroun's arrival, he let the body be seen entirely by force and was surprised to see lot of bleeding from the back of his head and the attempts that were made to clean and wash the blood stains with soap. He immediately took steps to file a murder case with the concenred area police against the school authorities. It was also found that a girl's name was written in his hand to mislead the case by saying that it was a suicide due to love failure. Meanwhile, the school authorities issued reports to the news papers insisting that it was a suicide due to some personal issues.

The next day morning at 3.00 am, the parents reached Chennai from Jeddah and were shocked to see the body of the boy. The body was taken during the afternoon to GH for postmortem. Since, there has been several attempts to cover up the murder, the doctors who were to condut the postmortem where
choosen by our people and a full video coverage of the post mortem was done. After Asar prayer, the janasah was buried at Royapettah burial ground.

Meanwhile, Janab Haroun asked for RDO enquiry and it is going on now. An appointment with the Cheif Minister has also been sought and the parents will be meeting him within the next 2-3 days.

The school authorities are trying their best with all their muscle power to kill the matter, similar to how they have done earlier.

I was shocked to read an article today in a website of "World Corporal Punishment Forum" under the heading "Corporal Punishment in Indian Schools". The article written in 2003 states that there has been similar deaths in Velammal Matriculation School. A student called Abhinav and another one called Thowfeeq has died during different period in the same school campus. The school authorities has successfully made people believe that it was a suicide due to family problems. Moreover, the article also
explains how the Velammal School's management encourages their teachers to use torture tactics and that the school also has a dark chamber for torture. The article can be found here http://www.corpun.com/ins00307.htm

An article published in THE HINDU dated June 21, 2003 exposes the attempt made by Velammal School to clean the issue http://www.hindu.com/2003/06/21/stories/2003062105090500.htm

Whatever happens, we are not going to get back our Mohammed Bilal. It is a permanent loss.

May Almighty Allah give us wisdom to choose the best path to live in this world and to seek for the hereafter. May Almighty Allah protect us from the evils in this world and the fire of hell.

May Almighty Allah give strength and courage to the parents of Shaheed Mohamed Bilal and all of us.

Thursday, September 13, 2007

பிலால் மர்மச்சாவு

கும்மிடிப்பூண்டி, செப். 13- 2007

தனியார் பள்ளிக்கூட விடுதியில் தங்கிப்படித்தபிளஸ்-1 மாணவர் மர்மச்சாவுபோலீசார் விசாரணை

தனியார் பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-1 மாணவர் மர்மமாக இறந்தார். அவருடைய சாவுக்கு காதல் பிரச்சினை காரணமா? என்று, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. விடுதி மாணவர் அங்கு ஏறத்தாழ 1200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் 800 மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி உள்ளனர். விடுதியில் தங்கி, பிளஸ்-1 வகுப்பில் (`காமர்ஸ்' பிரிவு) படித்து வந்தவர், பிலால் (வயது 16). அவருடைய தந்தை சாகுல் அமீது, சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். பெரியகுளம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண், பிலாலுக்கு `காப்பாளரா'க கையெழுத்து போட்டு பள்ளியில் சேர்த்து இருக்கிறார்.
பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மாணவர் பிலாலை நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் `வாக்கிங்' செல்வதற்காக வார்டன் ராஜராஜன் எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது வலிப்பு வந்து மயங்கிய நிலையில் கிடந்த பிலால் உடனடியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிலால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் அஜீஸ், கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர் பிலாலின் சாவில் மர்மம் இருப்பது தெரிய வந்தது. பிலாலின் பெட்டியில் இருந்து பல காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினார்கள். அதே பள்ளியில் படிக்கும் ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த ஒரு மாணவியை பிலால் காதலித்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. காதல் பிரச்சினையால், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு பிலால் தற்கொலை செய்து இருக்கலாமா? என்ற சந்தேகம் முதலில் ஏற்பட்டது. ஆனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது, பிலாலின் தலையின் பின்புறத்தில் காயம் இருந்ததாக தெரிய வந்ததால், அவருடைய சாவுக்கு வேறு காரணங்கள் இருக்கலாமா? என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதையொட்டி, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக ஜே.எம்.ஆரூண் எம்.பி. கவரப்பேட்டை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகிறார்.

ஜே.எம்.ஆரூண் எம்.பி. பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிலால் எனது நண்பரின் மகன். பிலாலின் தந்தை என்ஜினீயராக பணிபுரிகிறார். அவருக்கு பிலால் என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. பிலால் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக பள்ளியில் படித்தான். அதன் பிறகு கடந்த 3 வருடங்களாக இந்த பள்ளியில் படித்து வந்தான். விடுமுறை நாட்களில் என் வீட்டில் தான் இருப்பான். நல்ல குணம் உடையவன். இந்த நிலையில் காலை 7.30 மணிக்கு பிலாலின் அப்பாவுக்கு பள்ளியில் இருந்து ஒரு போன் செய்துள்ளனர். அதில் பிலால் உடல் `ஜில்' என்று இருக்கிறது. உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். அடுத்த 5 நிமிடம் கழித்து பிலால் இறந்துவிட்டான் என்று சொல்லி இருக்கிறார்கள். உடனே அவர் பதறிப்போய் எனக்கு போன் செய்தார். அப்போது நான் டெல்லியில் இருந்தேன். உடனே விமானம் மூலம் சென்னை வந்தேன். ஆஸ்பத்திரியில் விசாரித்தபோது பிலால் வரும்போதே உயிருடன் இல்லை என்று தெரிவித்தனர். பிலாலின் உடலை பார்த்தேன். இரு கண்களிலும் உள்ளே சிவப்பாக அழுத்தமான இரண்டு கோடுகள் உள்ளன. அதை பார்க்கும்போது யாரோ பலவந்தமாக அழுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. விலா எழும்பு பகுதிகளிலும் ரத்தம் கட்டியுள்ளது. தலையில் பின்பகுதியிலும் சிறிது காயம் உள்ளது. அவன் நல்ல விளையாட்டு வீரன். எந்த நோயும் அவனுக்கு கிடையாது. எனவே பிலால் கொலை செய்யப்பட்டுள்ளான் என்பது தெரிய வருகிறது. இது சம்பந்தமாக தீவிரமாக போலீசார் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜே.எம்.ஆரூண் தெரிவித்தார்.
பாவிகள் நம் சகோதரனை கொன்றுவிட்டார்கள்,வல்ல நாயன் அவருடைய பாவங்களை மன்னித்து நல்லோருடன் சேர்ப்பதற்க்கு அனைவரும் இந்த ரமளான் மாதத்தில் துஆ கேளுங்கள்

Tuesday, September 11, 2007

சென்னைவாழ் அதிரை BSNL வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி

சென்னையில் இருக்கும் அதிரைவாசிகள், நமதூர் CHASECOM நிறுவனத்தாரின் சீரிய முயற்சியால் ஏர்டெல் தொலைபேசி வாடிக்கையாளர்கள் சென்ட்ராக்ஸ் வசதி பெற்று அனுபவித்து வருவதை நாம் அறீவோம்.

இந்த வசதி BSNL வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருந்தது. இவற்றிற்கு சமீபத்தில் UNITED FOUNDATION நிர்வாகத்தினரால் BSNL உயர்மட்ட அதிகாரிகளிடம் கலந்து பேசி சென்ட்ராக்ஸ் (centrex) வசதி செய்து தர முடிவுசெய்திருக்கிறார்கள்.

இந்த வசதியினால் உள்ளூர் அழைப்புகளுக்கு (centrex group) கட்டணம் ஏதுமில்லை. இத்திட்டத்தின்படி இதில் இணைந்த வாடிக்கையாளர்களின் கட்டணத்தொகையை UNITED FOUNDATION மொத்தமாக (Group Billing) திட்டம் மூலமாக செலுத்திவிடும். வழக்கம்போல் வாடிக்கையாளர்களுக்கும் BSNL பில் அனுப்பிவைக்கப்படும். கட்டணத்தொகையை வாடிக்கையாளர்கள் UNITED FOUNDATION ல் செலுத்திக்கொள்ளலாம். இதற்காக எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லை. பில் தொகையைத் தங்கள் இடத்திற்கு வந்து வசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கு சமீபத்திய BSNL பில் ஒன்றுடன் UNITED FOUNDATION ஐ அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு
United Foundation,
George Town,
Mannady,
Chennai

அதிரை ஏர்டெல் சென்ட்ராக்ஸ் (Chasecom குழும) வாடிக்கையாளர்களுக்கு

அதிரை ஏர்டெல் சென்ட்ராக்ஸ் (Chasecom குழும) வாடிக்கையாளர்களுக்கு!

நமதூரைச்சார்ந்த சென்னை சாஸ்காம் நிறுவத்தினரின் முயற்சியால் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் அவர்களுடைய ஒப்பந்தத்தின் மூலம் சென்ட்ராக்ஸ் குழும வசதியை அதிரை வாசிகளுக்கு பெற்று அதை அனுபவித்து வருகிறோம்.

ஆனால் இந்த வசதியை தற்பொழுது தொடரமுடியாத நிலையில் உள்ளது. இந்த வசதியை தொடர்ந்து பெற சென்னையில் இயங்கும் UNITED FOUNDATION பொறுப்பேற்று உள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வசதியின் மூலம் அதிரை மக்களின் தொலைப்பேசிக் கட்டணம் சுமார் பல ஆயிரம் வரை மிச்சமாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த வசதியை திரும்பப் பெறுவதற்கு செலவினமாக குறைந்தபட்சமாக சுமார் மாதம் 100 ரூ வீதம் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்ய முடிவுசெய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் சென்று வசூல் செய்ய இயலாதாகையால் வருட சந்தாவாக பெறுவது என்று முடிவுசெய்துள்ளார்கள்.

எந்த ஒரு விசயத்தையும் பொது அமைப்பின் மூலம் கோரிக்கை கேட்டு பெறுவது எளிது, எனவே இந்த வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். மேலும் விபரம் அறிய UNITED Foundationஐ தொடர்புகொள்ளவும்.

தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்:
அ. இ. அப்துல் ரஜாக் 7781
எம்.எஸ். சிஹாபுதீன் 7864
chasecomthehindu@gmail.com

Sunday, September 9, 2007

குளிப்பு கடமையான நிலையில் நோன்பு


நபி(ஸல்) அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு
கடமையான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து
பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: புகாரி,முஸ்லிம்
விளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது இரவில்
ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸுப்ஹுடைய பாங்குக்குப்
பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பு
பரிபூரணமானதுதான். அதையே பழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது.

அதே போல் பகல் நேரத்தில் நோன்புநோற்றவர் தூக்கத்தினால்
குளிப்பு கடமையாகிவிட்டால் குளித்துக் கொண்டால் மாத்திரம் போதும்.
ஆனால் வேண்டுமென்றே ஒருவர் நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில்
முழுக்காளியாவது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றமாகும்.
அது நோன்பையும் முறித்துவிடும். பரிகாரமும் செய்ய வேண்டும்.

பெருந்தொடக்குள்ள பெண்கள்
நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது (மாதவிடாய்
காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும்
மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) சுத்தமானதும்
நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபியவர்கள்
எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால் விடுபட்ட
தொழுகைகளைத் தொழும்படி ஏவமாட்டார்கள் என
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதீ)

விளக்கம்: பெண்கள் மாதவிடாய் மற்றும் பிள்ளைப்
பேறினால் சுத்தம் இல்லாத காலங்களில் நோன்பு நோற்கக்
கூடாது, சுத்தமானதும் விடுபட்ட நோன்புகளை நோற்க
வேண்டும். அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத்
தேவையில்லை.

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்
யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ நோன்பு
நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு
பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு
நோற்றவரின் நன்மையிலும் எதுவும் குறையாது என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும்.
நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவுக்கு
உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பேரீத்தம்
பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த
நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின்
வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.
அதிரை நண்பன்

Saturday, September 8, 2007

அல்அமீன் பள்ளியில் இஃப்தார் ஏற்பாடு

நமதூர் அல்அமீன் பள்ளியில் அல்லாஹ்வின் அருளால் பல தடைகளையும் மீறி தொழுகை மற்றும் இதர வழிபாடுகள் நடந்து வருகின்றன. எதிர்வரும் ரமழானில் நோன்பாளிகளுக்கு நொன்பு திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு, நன்கொடையாளார்களிடம் கமிட்டியார்கள் நன்கொடி வசூலித்து வருகிறார்கள்.

நோன்பு முழுவதும் இஃப்தார் செலவுக்கு நாளொன்றுக்கு ரூபாய்.3,500 (மூவாவிரத்து ஐநூறு மட்டும்) என்று தோரயமாக மதிப்பிடப் பட்டுள்ளது. முக்கிய சாலையில் பள்ளிவாசல் அமைந்துள்ளதால் கடந்து செல்லும் வெளியூர் பயணிகளும் நோன்பு திறக்க அல்அமீன் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் பள்ளிவாசல் கட்டுமானம் பூர்த்தியானதும் அல்லது சேதுசாலை செயல்படத் துவங்கியதும் நோன்பாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மற்ற அனனத்து அமல்களுக்கும் அல்லாஹ் அதிகமானக் கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவான். நோன்புக்குக் கூலியாக நானே இருக்கிறேன் என்று நோன்பின் மகத்துவத்தைச் சொல்வதாக அறிவோம். ஆகவே, அத்தகைய நோன்பாளிகள் நோன்பு திறக்கச் செய்யப்படும் அமலுக்கு எத்தகைய கூலி அல்லாஹ்விடம் கிடைக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

அதிரையின் ஏனைய பள்ளிவாசல்களுக்கு அந்தந்த முஹல்லா செல்வந்தர்கள் இஃப்தார் ஏற்பாட்டைக் கவனித்துக் கொள்கிறார்கள். அல்அமீன் பள்ளியைச் சுற்றிலும் ஏழைகளும் வெளியூர் வணிகர்களுமே முஹல்லாவாசிகளாக இருப்பதால் இஃப்தார் ஸ்பான்சர்சிப் போதிய அளவுக்குச் சேரவில்லை.

அதிரையின் தன்மானச் சின்னமாக விளங்கும் அல்அமீன் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியின் மூலம் மாற்றுமதச் சகோதரர்கள் முஸ்லிம்களின் தர்ம உணர்வை அருகிலிருந்து அறியும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே, வசதியுள்ள செல்வந்தர்கள் தங்களால் முடிந்த நிதி, அரிசி, தேங்காய், காய்கறி மற்றும் இதரவகையிலும் வருடத்தில் ஒரு நாளைக்கு ரூ.3,500 என்ற அளவிலும் உதவலாமே!

நமதூரில் தி.மு.கவின் அனுதாபியான மரைக்காயர் ஒருவர் அல்அமீன் பள்ளி சர்ச்சைக்குறிய பள்ளியாக இருப்பதால் அங்கு தொழுவதே கூடாது; இந்த நிலையில் இஃப்தார் செலவுக்கு நான் எப்படி உதவ முடியும் என்று முகத்தில் அடித்தாற்போல் மறுத்து விட்டாராம். அல்லாஹ்வின் பள்ளிக்கு உதவுவதை விரும்பாமல் இருக்கலாம். ஆனால், உண்மைக்குப் புறம்பாக அல்அமீன் பள்ளிக்கு இடையூறு செய்பவர்கள் சொல்வதைப் போல் இப்படி பேசலாமா? பள்ளிவாசல் நிலம் 100% பள்ளிக்கு உரியவர்களால் வக்பு செய்தும் கிரயம் பெற்றும் பெறப்பட்டது என்பதை யாராவது அந்தப் பெரியவருக்கு எடுத்துச் சொல்லலாமே!

-ஊர்சுத்தி உமர்-

Thursday, September 6, 2007

ரமலானை வரவேற்போம்

- மௌலவி இப்றாஹிம் மதனி
அல்லாஹ் நமக்கு விதித்த மிக முக்கியமான கடமைகளில் ஒன்று தான் ரமலான் நோன்பு. அதாவது புசிப்பதற்கு உணவிருந்தும் நம்மைப் படைத்த இறைவனுக்காக பசித்திருக்கிறோம், குடிப்பதற்கு பானம் இருந்தும் தாகித்திருக்கிறோம், மனைவி நம்முடன் இருந்தும் ஆசைகளை கட்டுப்படுத்துகின்றோம் இதனால் தான் மற்ற வணக்கங்களுக்கு கொடுக்கப்படாத நன்மைகள் நோன்புக்கு வழங்கப்படுகின்றது.அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.நோன்பைத்தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு வரை நன்மைகள் பன்மடங்காக்கப்படுகின்றது. அது(நோன்பு) எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்)அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காகவிட்டு விடுகின்றான். நோன்பாளிக்கு இரண்டு சந்தோஷங்கள் இருக்கின்றது அவன் நோன்பு திறக்கும் போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும். நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி என்னும் வாசனையை விட மிகவும் மணமானது. (ஆதாரம்: முஸ்லிம்)எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான், அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்தி சொல்வதற்கு காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ்(மனத்தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால்தான். எனவே நோன்பு விஷயத்தில்அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று மற்ற எல்லா விஷயங்களிலும், எல்லா காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோமாக...நோன்பும் இறையச்சமும் நோன்பைப் பொறுத்தவரை மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை
எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல்நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இவைகளை வெறும்சடங்கிற்காக செய்யக்கூடாது, வணக்கம் என்றஎண்ணத்தோடு செய்ய வேண்டும். நோன்பின் நோக்கமேஇறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
நன்றி சுவனப்பாதை
அதிரை நண்பன்