நமதூர் பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 30 பள்ளிக்கூடங்களில் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் நேற்று பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

அதில் ஒரு பகுதியாக நமதூர் காதர் முகைதீன் ஆண்கள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 30 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகளை நேரடியாக கண்காணித்து ஊக்கப்படுத்தினார்.

நமதூரில் பல்வேறு பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணண் மாணவ மாணவிகளிடம் பாடசம்மந்தமான கேள்விகளை கேட்டரிந்தார்.
Share:

ஆன்லைனில் புகைப்பட வாக்காளர் அட்டை பதிவு

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடை‌சி நா‌ள் டிச‌‌ம்ப‌ர் 8ஆ‌ம் தே‌தி எ‌ன்று த‌மிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கையில், ராயபுரம், தாம்பரம், ஆலந்தூர் சட்டசபை தொகுதிகளைத் தவிர மற்ற சட்டசபைகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த 3 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 3ஆ‌ம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் மூலம் பதிவு செய்யும் வசதிக்கு பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பு உள்ளது. இதுவரை பெயர் சேர்ப்பதற்காக ஆயிரத்து 564 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக சென்னையில் இருந்து 331 விண்ணப்பங்களும், காஞ்‌சிபுரம் மாவட்டத்தில் 241, திருவள்ளூர் மாவட்டத்தில் 154 விண்ணப்பங்களும் வந்துள்ளன. தாம்பரம், ஆலந்தூர் தொகுதிகளுக்கு இந்த வசதி இனிமேல் செய்யப்படும்.

சுட்டி (1) சுட்டி (2)

பட்டுக்கோட்டை தொகுதி வாக்காளர்கள் பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

-இணையராசா-
Share:

அதிரைவாசிகள் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு

திட்டமிட்டு மறுக்கப்பட்டதால் உரிமைகளை மறந்துவிட்ட சமுதாயம், படித்தாலும் அரசு வேலை கிடைக்காது என்ற விரக்தியால் வெளிநாட்டுக்கு கூலிகளாய் பறந்ததன் விளைவு இன்று வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைத்த பின்பும் அதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரியாத நிலையிலேயே சிறுபான்மை சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள் உள்ளனர்.


ஏனென்றால், இவையெல்லாம் (உணர்வின் மூன்றாம் காரணி தவிர வேறு) யாரும் வலியுறுத்தி சொல்லித் தராத புதிய நடைமுறைகளாக தெரிவது தான். இந்த மந்த நிலையை மாற்றிடவும், படித்த, படித்துக் கொண்டிருக்கின்ற மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து கிளைகளுக்கும் ஒரு அழகிய முன்மாதிரியை ஏற்படுத்திடவும், முதற்கட்டமாக அதிரையிலிருந்து மாணவ, மாணவிகளுடன் பட்டதாரிகளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக நகரப் பொருளாளர் அஸ்ரப் தலைமையில் தஞ்சாவூரில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஏற்பாடுகளை அதிரை கிளையை சார்ந்த மஹ்சீன், தமீம், முகமது அமீன், ஹபீபுல்லா ஆகியோர் நகர நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு ஒருங்கிணைத்தனர். அனைத்து செலவுகளையும் கிளை ஏற்று செய்த நிலையிலும் மாணவிகள் மத்தியில் ஏற்பட்ட ஆர்வத்தோடு ஒப்பிடும்போது மாணவர்களின்; (அடிமை வாழ்க்கை) வெளிநாட்டுக் கனவுகள் இன்னும் கலையவில்லை என்றே தோன்றுகிறது, இந்நிலையை மாற்றிட இன்னும் நாம் உழைக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் உண்மை.


தகவல் மற்றும் புகைப்படங்கள்: அதிரை தமீம் அன்சாரி
Share:

அதிரைக்கு ஏடிஎம் வசதி அறிமுகம்

சென்னையில் இயங்கும் யுனைடெட் பவுன்டேசனின் முயற்சியால் அதிரையில் வருகிற டிசம்பர் 10 ஆம் தியதி அன்று அதிரையில் ஆக்ஸிஸ் வங்கியின் கிளை அலுவலகமும் ஏடிஎம் வசதியும் திறக்கப்பட இருக்கிறது.

அதிரை கடைத்தெருவில் அமைய விருக்கும் இந்த வங்கிக்கு வெளிநாடுகளிலிருந்தும் NRI கணக்கு வசதியும் இணையத்தில் கணக்குகளை உடனுக்குடன் பார்க்க இணைய தள வசதியும் உண்டு.

உள்நாட்டில் வசிப்போர் ஊருக்கு பணம் அனுப்ப உள்ளூரிலே ஏடிஎம் வசதியிருப்பதால் 24 மணிநேரமும் உடனடியாக பணம் மாற்ற முடியும்.

அதிரையில் கொட்டைப்போட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கனவான ஏடிஎம் வசதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் விரக்தியடைந்த வாடிக்கையாளர்கள் இந்த வங்கிக்கு விரைவில் மாறுவார்கள் என்பதும் அதே வசதியை மற்ற வங்கிகளும் அறிமுகம் செய்யலாம் என்பது திண்ணம்.

WWW.AXISBANK.COM இந்த முகவரியிலிருந்தே NRI கணக்குகளைத் திறக்க முடியும்.

உள்ளூரில் இருப்போர் சகோ. அப்துல் ரஜாக்(
CHASECOM- THE HINDU) அவர்களை +91 98410 44165 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Share:

புகைப்பிடித்தல் சொட்டைக்கு நல்லது

ஒரு வேளை சாம்பிரானி புகையாயிருக்குமோ, அட அகிலாய் இருக்குமோ, சரி படித்துத் தான் பார்ப்பமே என்று நீங்கள் வந்தால் ஏமாந்து போவீர்கள். இது சிகெரெட் சமாச்சாரம். எப்போழுதும் "புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கெடுதி", "புகை நமக்குப் பகை" என்று எழுதியிருந்தாலோ, சிகெரட் பிடிப்பதால், புற்றுநோய், நெஞ்சுவலி(மார்படைப்பு), மலட்டுத் தன்மை போன்றவைப் பற்றியெல்லாம் வாய்கிழிய உலகமே கூவினாலும் யார் காது கொடுத்து கேட்பது.

புகைப் பிடிப்பவனைவிட அதன் அருகில் இருந்து சுவாசிப்பவனுக்குத்தான் அதிகமே கெடுதல் என்று சொன்னாலும் செல்லப்பிள்ளைகளின் அருகில் அமர்ந்து புகைப்பிடிப்பவர்கள் ஏராளம்.சமீபத்திய ஆய்வு ஒன்று புகைப்பிடிப்பதால் முடி உதிர்ந்து வழுக்கைத் தலை (சொட்டைத் தலை) ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இங்கு செல்லவும்யாராகினும் இதன் மொழியாக்கத்தை பின்னூட்டத்தில் இட்டால் உபயோகமாய் இருக்கும்.

Share:

கலைஞருக்கு வேண்டுகோள்


நாளையதினம் சென்னை நேரு உள்விழையாட்டரங்கில் நடைப்பெரும் தமுமுகவின் சார்பில் நடக்கும் கலைஞருக்கு பாரட்டுவிழாவில் நமதூர் அகலரயில்பாதையை விரைவாக அமல்படுத்தகோரி தமிழகமுதல்வர் டாக்டர் கருணாநீதியை நேரில் சந்தித்து சமூக நல சங்கத்தின் சார்பில் மனுகொடுக்க உள்ளது அதன் நகலை இங்கு பதியப்பட்டுள்ளது இது சம்பந்தமாக ஆலோசனைகளை பின்னூட்டமாக இடலாம்.

மேலும் தகவலுக்கு:
சமூகநல சங்கம்
9840262361
-JP-
Share:

எங்கே வருவாய் அலுவலகம்?

நமதூர் பழஞ்செட்டிதெருவில் இருக்கும் (Revenue inspector) ஆர் ஐ அலுவலம் (?) இது... தற்பொழுது எங்கு செயல் படுதுன்னு கூட தெரியலன்னு ஊர்மக்கள் மற்றும் மாணவர்கள் புலம்புகிறார்கள்.. ஏன்னா மாணவர்களுக்கான அரசுஊக்கத்தொகைக்கு ஆர் ஐ தான் சிபாரிசு செய்யனும். இது சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கும் மன்டையில் எட்டவில்லைபோலும் ஒரு அறிவிப்பு பலகை வைக்கலாம்முன்னு...

படம்:அதிரை பரக்கத்
-JP-
Share:

துபாய் மற்றும் புஜைராவில் இலவச மருத்துவ முகாம்


23.11.07 அன்று துபாய் மற்றும் புஜைராவில், முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - துபாய் மண்டலம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அமிரகத்தில் வசிப்பவர்கள் கலந்து பயன்பெறவும்.Share:

இலவச மருத்துவச் சேவை

பெங்களூரைச்சார்ந்த சத்ய சாய் பொதுசேவை நிறுவனம் வசதியற்ற இதயக்கோளாறுக் கொண்ட ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சேவையை செய்கிறது.

சிறுவன் ஜியாவுதீனுக்கு பெங்களூரில் வசிக்கும் நமது சகோதரர்கள் விசாரித்து உதவும் படி அதிரை எக்ஸ்ப்ரஸ் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

For any kind of heart surgery free of cost ..
Contact :
Sri Sathya Sai Institute Higher Medical Sciences,
E.P.I.P. Area,
WhiteField,
Bangalore

Write to us
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka, INDIA.
Call us
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related +91- 080- 28411500 Ext. 415
Email us
General Queries: adminblr@sssihms.org.in

Pass it to all, it will help some one.
Share:

அதிரை எஸ்டிடி பூத்கள் லாபமா? பாவமா?

பல்வேறு வகையில் சாதனைப் படைத்துவரும் அதிராம்பட்டிணம் தற்பொழுது தொலைபேசித் துறையிலும் சாதனைப்படைத்து வருகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர் மக்கள் மூலமாக தஞ்சைமாவட்டத்திலேயே அதிக அந்நியச் செலவானியை பெற்றுத் தருகின்றனர். அத்துடன் தற்பொழுது தொலைபேசித்துறைக்கும் கடந்த ஒரிரண்டு ஆண்டுகளாக அதிக வருவாயைப் பெற்றுத் தரும் ஊராகவும் திகழ்கிறது.


UAE போன்ற நாடுகளில் தொலைபேசி நிறுவனங்கள் monopoly முறையில் இயங்குவதால் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகமானதாக இருக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு இந்தியாவிற்கு பேச சுமார் 2 திர்ஹம் வரை செலவாகிறது. அதாவது சுமார் 21 ரூபாய். அதுவே இந்தியாவிலிருந்து வெறும் 11 -13 ரூபாய்கள் தான். இதனை அறிந்த நமதூர் சகோதரர்கள் சிலர் ஆரம்பகட்டத்தில் (நாமறிந்த வகையில் மார்கெட்டில் கடைநடாத்தி வரும் அன்சாரி, மேலத்தெரு மாஜிதீன் போன்றவர்கள்) கான்பெரென்ஸ் முறையில் அதிரையிலிருந்து இணைப்புகளைப் பெற்று துபைக்கு கொடுத்து வந்தனர்.

இவற்றைப் பற்றி அறிந்த மேலும் சிலர் இதே தொழிலில் இறங்கினர். தற்பொழுது 124 தொலைப்பேசி பூத்கள் இயங்கிவருகின்றன. ஒரு பூத்களில் குறைந்தது சுமார் ஐந்து வழித்தடங்கள் இயங்குகின்றன. அதிகபட்சமாக 20க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் கூட உண்டு.

அதிரை எஸ்.டி.டி பூத்கள் பற்றி ஒருவரிடம் பேசும்பொழுது அதிகவருவாயைத் தருவது போல் இருந்தாலும் அதிக கடன் சுமைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். துபையில் உள்ள ஏஜென்ட் அல்லது நடத்துனர் தனியே வேலைக்குச்செல்வதாலும், நம்பிக்கை அடிப்படையில் இணைப்புகள் பெற்றுக் கொடுப்பதாலும் பணம் வசூல் செய்வதில் காலதாமதம் ஆகிறது. இதனால் இவர்கள் தொலைபேசி சந்தாவைக் குறித்த நேரத்தில் கட்டுவதில் மிகவும் சிரமம் அடைவதாகத் தெரிவித்தனர்.

தொலைபேசி நிறுவனங்கள் இவர்களுக்கு கமிசனாக 20 முதல் 25 சதவீதம் வரைத் தருகின்றனர். ஆனால் சந்தா செலுத்த கால அவகாசம் ஏதும் தருவதில்லை. ஒரு நாளைக்குள் கட்டிவிட வேண்டும் என்கிற கட்டாயம். இல்லையேல் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. தொழில் பாதிப்படைகிறது. இதனால் மனஉழைச்சலுக்கு ஆளாகும் இவர்கள் நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து பணத்தை கட்டுவதாக பூத் உரிமையாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள்:பணத்தை மிச்சம்பிடிப்பதாக இருந்தாலும் பல்வேறுக் குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன. குறிப்பாக
குடும்பப் பேச்சுக்கள், கணவன் மனைவி இடையே பேசும்பொழுது ஒத்துக்கேட்பது போன்றவற்றை சிலர் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. பணம் அனுப்பிய விவரங்களை அனுபவம் வாய்ந்த வாடிக்கையாளர்கள் கான்ப்ரன்சிங் முறையில் பேசுவதற்கு தயங்குகின்றனர். பள்ளிவாசல் பிரச்சினையில் இது போன்ற ஒற்றர்கள் மூலம் எதிர் அணியினருக்கு (மா மாமாக்களுக்கு) செய்திகளை உடனுக்குடன் பரிமாறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.

துபை ஏஜெண்ட் என்ன சொல்கிறார்? துபை வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அடுத்த பதிவில்...

உங்கள் கருத்துக்கள்/ அனுபவங்களைப் பின்னூட்டமிடுங்கள்... adiraixpress[at]gmail.com க்கும் மின்னஞ்சல் செய்யலாம்.

Share:

கல்வி உதவி

முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்


B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B. Tech.,B.D. S.,M.B.B. S.,M.S.,M. D.,M.E.,M. S.W.,M.Tech. ,M.C.A மற்றும் Professional/ Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.


இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.


2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றும் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs .gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.


சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002


மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.


சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007
Share:

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள்

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் குறித்த விவரத்தை மாணவர்கள் தனக்கு விரிவான புகாராக அனுப்பினால், சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நேற்று கோவை வந்த ப.சிதம்பரத்திடம், கல்விக் கடன் வழங்க பல வங்கிகள் மறுப்பதாகவும், இதுதொடர்பாக நிதியமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், கல்விக் கடன் வழங்க மறுத்த, மறுக்கும் வங்கிகள் குறித்த அனைத்து விவரத்தையும் மாணவ, மாணவியர் எனக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பப்படும் புகார்கள் குறித்து விசாரித்து, தவறு செய்த வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நான் உறுதி அளிக்கிறேன்.

இதுதொடர்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் எனக்கு தனித் தனியாகவே புகார்களை அனுப்பலாம். இதன் மூலம் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும் என்றார் அவர்.

இந்த சமயத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவ, மாணவியர் சிலருடன் அமைச்சரை அணுகினார். அவரிடம், இந்த மாணவ, மாணவியருக்கு வங்கிகள் படிப்புக் கடன் வழங்க மறுத்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவ, மாணவியரிடம் இதுதொடர்பாக தனக்கு விரிவான தகவல்களைத் தருமாறு ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
Share:

கேட்க நாதியில்லையா?

நமதூர் பேரூந்து நிலையத்தில் நெல்லுக்குள்அரிசி வகையறா வாரிசுகளால் ஆஸ்பத்திரிதெரு ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கு வக்ப் செய்யப்பட்ட நிலத்தில் "மஸ்ஜித் அல்அமீன்" என்ற பெயரில் பள்ளிவாசல் கட்டப்பட்டு தொழுகை நடந்து வருவதை அறிவீர்கள்.

இன்னும் ஓரிரு வருடங்களில் சேது நெடுஞ்சாலை வழியாக நமதூரைக் கடந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையம் வழியாக பள்ளிக்குள் வந்துசெல்ல அமைக்கப்பட்டிருந்த வாசலை அதிரை பேரூராட்சி துணைச் சேர்மன் இராம.குணசேகரனின் தூண்டுதலின் பேரிலும், சேர்மன் M.M.S வஹ்ஹாப் சாஹிப் அவர்களின் நல்லாசியுடன் பேரூராட்சி மன்ற அலுவலர், பள்ளிவாசல் கமிட்டியாளர்களுக்கு எதிராக பல்வேறு தொந்தரவுகளையும் செய்து வருகிறனர்.

1. பள்ளியின் பேரூந்து நிலைய வாசலில் குப்பை வண்டிகளை நிறுத்தியது.
2. சமரசப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் மீது பொய்வழக்கு போட்டது.
3. பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பைத் துண்டித்தது.
4. மழை நீரினால் அரிக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் மணல் அடித்த டிராக்டர் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது.
5. உயர் நீதிமன்ற உத்தரவைக் கண்டு கொள்ளாமல், பள்ளிவாசல் கமிட்டியார்களை காவல்துறையினர் மூலம் அச்சுறுத்துவது....

என சங்பரிவாரச் சிந்தனையுடன் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பேரூராட்சி அலுவலரின் அடாவடிகளைக் கேட்பதற்கு வக்கில்லாமல் நம்மால் தேர்ந்தெடுத்து, நமது குறைகளைத் தீர்க்க பேரூராட்சிக்கு அனுப்பி வைக்கப் பட்ட வார்டு மெம்பர்களும் பேசாமடந்தைகளாக இருப்பதுடன், சேர்மன், துணைச் சேர்மன்,அலுவலர் ஆகியோரின் அடிமைகளாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

உள்ளூரில் வசிக்கும் பெருந்தகைகளும் கணவான்களும், இவர்களைப் பகைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழ முடியாது?! என்ற அச்சத்தில் எல்லா அடக்குமுறைகளையும் கண்டும் காணாமல்,தாங்களுண்டு தங்கள் தேங்காய் தோப்புகளுண்டு என சுயநலமாக இருந்து வருகிறார்கள்.

எவர் வீடோதானே எரிகிறது, நமக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் இருந்தால் ஒருநாள் நமது வீடும் எரியும்போது அணைக்க யாரும் வர மாட்டார்கள். இறையில்லத்திற்கு இடையூறு செய்பவர்கள், நாளை நமது இல்லங்களுக்கும் இடையூறு செய்யத் தயங்கமாட்டார்கள்.

தோலுரித்த பாம்புகளாக அடுத்த பொதுத்தேர்தலுக்கு கும்பிட்டவாறு ஓட்டுக் கேட்டு வரும்போது, சுரணையற்ற சிலர் வழக்கம்போல் கொடி பிடிப்பார்கள். அதிரை மக்களே! இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!! அதிரை நலன் விரும்பும் மக்களே! நீங்கள் வசிக்கும் பகுதியுளுள்ள நமதூர் மக்களை ஒன்று திரட்டி, இந்த அராஜக அக்கிரமக்காரர்களைக் கண்டியுங்கள்.

அல்லாஹ்வின் இல்லத்தை இடிப்பேன் என்று இறுமாப்பாக யானைப் படையுடன் வந்த ஏமன் நாட்டு மன்னன் அப்ரஹாம், மென்று போடப்பட்ட வைக்கோலைப்போல் சின்னாபின்னமாகி சீரழிந்தான். இறையில்லத்திற்கு இடையூறு செய்பவர்கள், இன்ஷா அல்லாஹ் விரைவில் ஈருலகிலும் இழிவடைவார்கள் என்பதை நினைவூட்டுங்கள்!

அல்அமீன் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படும்வரை தங்கள் ஆசாபாசங்களை தியாகம் செய்து அல்லாஹ்விற்காக ஒன்றுணைந்துள்ள கமிட்டி மற்றும் சங்கத்தினருக்காக துஆச் செய்யுங்கள். அகிலத்தைக் காக்கும் அல்லாஹ் தனது, அல்அமீன் இல்லத்தையும் நிச்சயம் காப்பான்! மனம் தளராதீர்கள் முஸ்லிம்களே! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்!

-கான்ஷாகிப்-
Share:

தொடரும் அரசு இயந்திரங்களின் அடாவடி

அல் அமீன் பள்ளிவாசலுக்கு பல்வேறு வகையில் தொல்லைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசு இயந்திரங்களின் அடாவடிகளில் ஒன்றாக ஆர்டிஓ கடிதத்தை போலீஸ் மூலம் அனுப்பி பயமுறுத்த நினைத்தனர். ஜனாப் தமீம் கடிதத்தை வாங்க மறுத்ததால் சுவற்றில் ஒட்டி போட்டோ எடுத்துக் கொண்டு சென்றனர் போலீஸார்.

கடிதத்தின் நகல் மக்கள் பார்வைக்கு...Share:

அதிரைப் பேரூராட்சி சாதனை

அதிரை மக்களின் நீண்டநாள் கணவான திட்டங்களை நிறைவேற்றுவதில் கூட்டணிக் கட்சிகளான திமுகவும் காங்கிரஸும் போட்டோ போட்டிக்கொண்டு செயல்பட்டுவருகின்றன. அவற்றின் ஒருபகுதியாகத்தான் கீழே உள்ள இந்த புகைப்படங்கள்.

தலைவர் அப்துல்வகாப் சாகிப் மற்றும் துணைத்தலைவர் இராம. குணசேகரன் அவர்களின் உத்தரவின் பேரில் இந்தியாவிலேயே முதன்முறையாக குப்பை அள்ளும் வாகனங்களுக்கான செட் இலட்சரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இச்சாதனைக்கு முதல்வரின் பரிசிலுக்காக அனுப்பிவைக்க இருப்பதாக தெரிகிறது.
பேரூராட்சிக்கு வாழ்த்துக்கள்!!


பஞ்சாயத்து போர்டு பொறத்தால கட்டப்பட்டிருக்கும் நவீன சொகுசு கக்கூஸ். நான்கு லச்சரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது (கீழே)

அடப்பாவிகளா ஒரு சொகுசு வீடு கட்ட ஆகும் செலவா? என்று கேட்கின்றான் அரசியல் தெரியாத ஒர்அப்பாவி.ஒரு குடும்பம் சீரான குடும்பம்:
வீட்டு இலக்க எண்கள் அடிப்பதற்காக பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு ரூ 10 வீதம் வசூல் செய்து அதில் "கருத்துக்களுடன்" கூடிய தகரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிரையில் உள்ள சுமார் 30 ஆயிரம் வீடுகள் பயன்பெறும். ரூ 3 லச்சம் தேறும்.

இதுவும் பேரூராட்சியின் மிகப்பெரிய சாதனையாக கூறப்படுகிறது.

தலைவர்களின் சிந்தனைகளை எண்ணி பொதுமக்கள் புழங்காகிதம் அடைகின்றனர்.

Share:

அதிரை பகுதியில் இறால் வளர்ப்பு துவங்கியது

அதிராம்பட்டினம், கடற்கறை பகுதிகளில் இறால் வளர்ப்பு பணி துவங்கியுள்ளன. இந்தாண்டு அதிகமான கடலோர பகுதிகளில் குட்டைகள் அமைத்து இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த வளர்ப்பு முறையால் ஆண்டிற்கு இருமுறை இறால் அறுவடை செய்யலாம். உற்பத்தி செய்யும் இறால்கள் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுவதால் உலக வணிக அரங்கில் நல்ல வருமானம் ஈட்டித்தரும் ஒரு லாபகரமான தொழில் இதுவாகும். வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து இறால் வளர்ப்பு தொழில் செய்வதற்கு இப்பகுதிக்கு பலர் வருகை தருகின்றனர்.

அதிராம்பட்டினம் கடற்கரையோர பகுதிகளில் பண்ணைகள் அமைத்து இறால் வளர்க்கப்பட்டு வருகிறது. வளர்ப்பு இறால்களுக்கு தீவணம் போடும் பணியில் இந்த தொழிலாளி ஈடுபட்டுள்ளார்.

தஞ்சை கடற்பகுதி மீனவர்களுக்கு இறால் வளர்ப்பை பற்றி சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம், கடலோர சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. தஞ்சை மாவட்ட கடற் கரை பகுதியை பொருத்தவரை இறால் வளர்ப்புக்கான வள வாய்ப்புகள் அதிகமான அளவு வரவேற்பு பெற்றுள்ளது.

இன்றைய 80 சதவீத பரப்பளவில் இறால் குட்டைகளை அமைத்து அறிவியல் முறைப்படி இறால்கள் வளர்க்கப்படுகின்றன. இறால் விலை சற்று சரிந்து இருந்தாலும் அதிரை கடலோர பகுதிகளில் இறால் வளர்ப்பு அதிகரித்துள்ளது.
Share:

பள்ளிவாசல் கேட்டை நிரந்தரமாக பூட்ட E.O. திட்டம்

அல் அமீன் பள்ளி பஸ்ஸான்ட் வழியாக உள்ள தற்காலிகமாக பூட்டப்பட்ட கேட்டை நிரந்தரமாக பூட்டவேண்டும் என்று E.O வின் கோரிக்கையின் பேரில் ஆர்டிவோ சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

E.0. வால் கொடுக்கப்பட்ட மனுவில் மேற்கண்ட கேட்டை திறக்கும் பட்சத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அதிரை முஸ்லிம்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் "கல்வரம்" வரும் என்
று எழுத்துமூலம் எழுதிக்கொடுத்துள்ளார், பிராமன E.O.

மேற்கண்ட தகவல், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறியப்பட்டது.

மேலும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நம்மிடம் கூறுகையில் அதிரை வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து இட்டால் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுப்பதாக ஆர்டி.ஓ உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக பொதுமக்கள் வார்டு உறுப்பினர்களிடம் உடனடியாக வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த கேட்டை திறக்க வேண்டும் என்று ஏற்கெனவே கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்ட் தீர்ப்புக்குப் பின் பள்ளிவாசல் கேட் எதிரே (சாச்சா ஆபீஸ் பின்புறம்) எடுக்கப்பட்ட ஆழ்குழாய்கிணறு.


Share:

ஹாஜிகளின் கவனத்திற்கு...

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஹாஜிகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள். ஹஜ் பயணம் குறித்த தமிழ்விளக்கத்தை இஸ்லாம் கல்வி தளத்தில் வீடியோவாகக் காணலாம். கணினியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம்.
Linked to IslamKalvi.com, Haj Bookஹாஜிகளின் துஆக்களையும் நிய்யத்துக்களையும் வல்ல அல்லாஹ் நிறைவேற்றுவானாக! ஆமின்.

நன்றி: இஸ்லாம் கல்வி டாட் காம்
Share:

அதிரை:சுவர் இடிந்து விழுந்து தாய் மகன் படுகாயம்

நமதூரில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகன் படுகாயம் அடைந்தனர். அதிராம்பட்டினம் தொக்கலிக்காட்டை சேர்ந்தவர் மாணிக்கம். விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி பானுமதி(47), மகன் ஜீவரத்தினம்(27) ஆகியோருடன் நேற்று அதிகாலை படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் அப்போது மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மாணிக்கத்தின் கூரை வீட்டின் சுவர் இடிந்து பானுமதி, சீவரத்தினம் ஆகியோர் மீது விழுந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாசில்தார் சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதிராம்பட்டினம் போலீசார் நேற்று மாலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Share:

அதிரை பேரூராட்சி சேர்மன் மீது வழக்கு

அல் அமீன் பள்ளியின் பேரூந்து நிலைய வாசலைத் திறப்பதற்கு உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்தும் அதனை மதியாமல் சட்டத்தைக் காலடியில் போட்டு மிதித்து அதிரை நகர முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பள்ளிவாசலுக்குத் தொடர்ந்து இடையூறு செய்து வரும் அதிரை பஞ்சாயத்து போர்டு சேர்மன் ஹாஜி.M.M.S. அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மீது அல் அமீன் பள்ளிவாசல் கமிட்டியார்கள் சார்பில் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புகாரை ஏற்று சம்பந்தப்பட்ட பேரூராட்சி சேர்மன் மீது வழக்கு பதிவாகி உள்ளதாக எமது அதிரை செய்தியாளர் தெரிவித்தார்.

-பச்சபுள்ள-
Share:

பள்ளிவாசலுக்கு உதவினால் அபராதம்

கடந்த மாதங்களாகப் பெய்து வந்த அடைமழையினால் அல்அமீன் பள்ளிவாசலின் தற்காலிகக் கொட்டகை பலவினமடைந்தது.

பள்ளிவாசலின் அஸ்திவாரம் மழைநீரினால் அரிக்கப்பட்டதால் சுமார் 25 லோடு மணல் அடிக்கப்பட்டது.

சென்றமுறை பள்ளிவாசல் நிலத்திற்கு செக்கடிக்குளம் மற்றும் ஆலடிக்குளத்திலிருந்து மண் எடுக்க அதிரை பேரூராட்சியின் துணைச்சேர்மன் இராம.குணசேகரனின் சகோதரர் சோமுவின் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு லோடுக்கு ரூபாய் அறுநூறு வீதம் கிட்டத்தட்ட 500 லொடு மண் அடித்து தாழ்வான பள்ளி நிலம் உயர்த்தப்பட்டது.

இந்தமுறை, அதிரை இந்து முன்னணியின் பினாமியாகச் செயல்படும் இராம. குணசேகரனின் சகோதரர் சோமுவின் டிராக்டர் பயன்படுத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் பஞ்சாயத்து போர்ட் அதிகாரத்தைப் பயன்படுத்தி மழையினால் பாதிக்கப்பட்ட அல் அமீன் பள்ளிக்கு மண் அடித்த ஏழு டிராக்டர்களுக்கு தலா இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

குணசேகரனின் இந்த அட்டாவடித்தனம் அதிரை மக்களை மிகவும் அப்செட் செய்துள்ளது. தி.மு.கவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாக்கு வங்கியையும் குணசேகரன் குழிதோண்டிப் புதைக்காமல் விடமாட்டார் என்றே திமுக அனுதாபிகள் கவலைப் படுகிறார்கள்.

-பச்சப்புள்ள-
Share:

அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்

அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாடு தீர்மானம்


அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 9-வது மாநாடு நடைபெற்றது. எம்.கணேசன், ஞானசேகரன், சாரதாம்பாள் ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர் எஸ்.கந்தசாமி வரவேற்றார். ஆர்.ஜவகர் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.


முன்னாள் எம்.எல்.ஏ. வீரையன் மாநாட்டை தொடங்கி வைத்தார். ஏ.கோவிந்தசாமி இரங்கல் தீர்மானத்தையும் எம்.அய்யாவு வேலை அறிக்கையையும் வாசித்தனர். எம்.செல்வம் ஒன்றியக்குழு செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு ஜி.நீலமேகன், மாவட்டச் செயலாளர் ஆர்.சி.பழனிவேல் ஆகியோர் பேசினர். மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. வளர்ந்து வரும் பட்டுக்கோட்டை நகருக்கு அரசு பொறியியல் கல்லூரி அமைத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
  2. நகரத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
  3. நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-தஞ்சை அரியலூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
  4. நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  5. 54 பேரை பலிவாங்கிய மகாராஜசமுத்திரம் பாலத்தை மேம்பாலமாக மாற்றி அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
  6. பட்டுக்கோட்டையில் தொடங்க உள்ள தென்னை வணிக வளாகத்தை உடனே தொடங்க வேண்டும்.
  7. அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம்அமைத்து கொடுக்க வேண்டும்.
  8. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை போக்கி மருத்துவமனையை ஒருங்கிணைந்த கட்டிடமாக மாற்றி அமைக்கவும், மருத்துவர்கள் அதிகமாக நியமிக்கவும், உயிர்காக்கும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

நன்றி: தினத்தந்தி

Share:

ஐசிஐசிஐ க்கு 50 இலட்சம் அபராதம்

குண்டர்களை வேலைக்கு அமர்த்தி கார் லோன் பெற்ற ஒருவரை அடித்து வசூலித்ததின் பேரில் ஐசிஐசிஐக்கு டெல்லி நுகர்வோர் கமிஷன் ரூ 50 இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சமீபகாலமாக ஐசிஐசிஐயின் அடாவடிகள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பும் மும்பையில் இது போன்ற தீர்ப்பு (ஐசிஐசிஐ க்கு எதிரான) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குண்டர்களின் தொல்லையால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல் ஐசிஐசிஐ யின் கிரெடிட் கார்ட் காரணமாக அதிக தொல்லைகளுக்கு ஆளாகுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அனுபவங்களை பின்னூட்டமிடுங்கள்...
Share:

உயிர்கொல்லிக் கதண்டுகள் அழிப்பு

அதிராம்பட்டினத்திலிருந்து லாரல் மெட்ரிக்குலேஷன் பள்ளி அருகில் சாலையோர மரத்தில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தன. அருகில் பள்ளிக்கூடம் இருந்ததால் கதண்டுகளை அழிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கதண்டுகளுக்கு இரவில் கண் தெரியாது என்பதால் நவம்பர்-2 ஆம் தேதி இரவு தீயணைப்பு துறையினர் தீ வைத்து கதண்டுகளை அழித்தனர்.
Share:

அதிரை பைத்துல்மாலுக்கு நன்றி

கடந்த மாதம் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசால் முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இந்த அரிய சந்தர்ப்பத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குத் தேவையான முஸ்லிம் மாணவர்களை உருவாக்குவதும், படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்குத் தேவையான பயிற்சி வழங்க வேண்டிய தேவையை அறிந்து, நமதூர் அதிரை பைத்துல்மாலின் மேற்பார்வையில் "அதிரை பட்டதாரிகள் பேரவை" தொடங்கப்பட்டுள்ளது.அதன் நோக்கங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்களை விளக்கி நமதூர் குத்பாப் பள்ளிகளில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

நமதூர் மக்களின் பல்வேறு தேவைகளையும் அறிந்து குறிப்பாக அரசு வழங்கிய 3.5% இடஒதுக்கீட்டிற்குத் தகுதிபடுத்தும்படி அதிரை மாணவர்களை ஒருங்கிணைக்கவும் திற்மையாளர்கள் ஆகவும் வழியேற்படுத்தும் வகையில் அதிரை பட்டதாரிகள் பேரவையை ஏற்படுத்திய நல்லுள்ளம் கொண்ட கல்வியாளர்களை அதிரை எக்ஸ்பிரஸ் மனதாரப் பாராட்டுகிறது.

படங்கள் உதவி: அஹமது முனாஸ்கான்
Share:

உதவிக்கரம் நீட்டுவோம்...

நமதூர் மேலத்தெருவை சேர்ந்த ஹாஜா அலாவுதீன் என்பவரின் மகன் ஜியாவுதீனுக்கு இதயத்தில் ஓட்டைகள் இருப்பதால் அவரை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சேர்க்குமாறு தஞ்சை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

சென்னையில் பரிசோதித்த மருத்துவர்கள் இதற்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் சரியாகும் என கூறிவிட்டனர். இதற்கான செலவு மட்டும் ஒருலட்சத்து ஐம்பத்தையாயிரம் வரும் என டாக்டர்கள் கூறிவிட்டனர்.இவ்வளவு பணம் தோது பண்ணும் நிலையில் இக்குடும்பம் இல்லை. எனவே நமதூர் சகோதரர்கள் இச்சிறுவனின் சிகிச்சைக்கு தங்களால் இயன்ற அளவு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

தங்களுடைய உதவிகளை கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

UR,அலாவுதீன் கனரா வங்கி கணக்கு எண்: 36839

அதிராம்பட்டினம் கிளை

மேலும் விபரங்களுக்கு 9865787540

-JP-

Share:

அதிரை முஸ்லிம் மீடியா (UAWC)

உலகமெல்லாம் பரவியுள்ள நமதூர்வாசிகள் இணையம் மற்றும் ஈமெயில் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், உள்ளூர் சங்கதிகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு உறவையும் நட்பையும் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன் நமதூர் நலம் விரும்பும் இளைஞர்களால் அதிரை இணைய குழுமம் (AWC) ஏற்படுத்தப் பட்டது.


AWC இல் கடந்த வருடங்களில் நமதூர் பற்றிய பல விடயங்கள் காரசாரமாகவும், தகவலுக்காகவும் விவாதிக்கப்பட்டன. இக்குழுமத்தில் வைக்கப்பட்ட பல விவாதங்கள் முடிவற்ற நிலையிலேயே இருக்கின்றன.
அளப்பரிய கருத்துச் சிந்தனையும் சமூக நன்னோக்குமுள்ள நம்மக்களால் ஏன் தெளிவான முடிவை எட்ட முடியவில்லை என ஆராய்ந்தபோது பெரும்பாலான விவாதங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் விசய ஞானம் மிக்கவர்கள் தங்கள் ஆலோசனைகள் ஓரளவு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதப்படும் போது, எதிர்கருத்துக் கொண்டவர்களால் குறைகாணப்பட்டு ஏளனப்படுத்தப் படுமோ என்ற தயக்கம் அல்லது தான் சொல்ல வரும் கருத்தை தெளிவாக எடுத்துரைக்குமளவுக்கு ஆங்கிலப்புலமையின்மை ஆகியவே என்ற முடிவுக்கு வந்தோம்.


இந்தக் குறைகளைக் களையவும், அந்நிய மொழி ஆதிக்கத்தால் மெல்ல மறைந்து வரும் தாய்மொழியாம் தமிழில் பிறமொழிக்கு ஈடாக கருத்துப்பரிமாற்றம் செய்யவும் UAWC (யுனைடட் AWC) என்ற இக்குழுமம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.


இதில் உறுப்பினராவதன் மூலம் ஏற்கனவே செயல்பட்டுவரும் AWC, DUBAIBOYZ, ACD ஆகிய இணையக் குழுமங்களை ஒரே குழுவாக்கி பரஸ்பரம் கருத்து/தகவல் பரிமாற்றத்தை ஒரே நேர்கோட்டில் இணைத்து தெளிவான முடிவுக்கு வர வழிவகை செய்யவே இக்குழுமம். இது மேற்கண்ட குழும நோக்கங்களுக்கும் செயல்பாட்டிற்கும் எதிரானதல்ல.


இக்குழுமம் பற்றிய சில சந்தேகங்களும் அவற்றிற்கான விளக்கங்களும்:


1) UAWC இன் சிறப்புக்கூறுகள் யாவை?
அ) தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்து யூனிகோட் (UTF-8) என்ற என்கோடிங் முறையில் எழுதுவதன் மூலம் எந்தவகை கணினியிலும் எழுத்துரு (FONT) நிறுவாமல் படிக்க முடியும்.
ஆ) இணைப்புகளால் (ATTACHMENTS) மின்மடல் வழங்குனரின் கொள்ளலவு ஆக்கிரமிக்கப்படுவது GMAIL இல் இல்லை. ஆகவே கட்டுப்பாடற்ற மின்மடல்களை கையாளவும், அவற்றை அழிக்காமல் பாதுகாக்கவும் முடியும்.
இ) கூகிலின் தேடல் (ALERT) வசதியின் மூலம் நமதூர் சம்பந்தப்பட்ட செய்திகள், தகவல்கள் இணையத்தில் எங்காவது புதிதாக இடம்பெற்றால் அவற்றை நம் தேவைக்கேற்ப இக்குழுமத்தில் தானாகவே தொடுப்புக் கொடுக்கப்படும். இதன் மூலம் அதிரை பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ஏதுவாகும்.
ஈ) பிற முன்னனி இணைய சேவையாளர்களுடன் கூகில் வர்த்தகப் போட்டியில் ஈடுபட்டுள்ளதால் அன்றாடம் புதுப்புது சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது.


2) தமிழில் எப்படி டைப் பண்ணுவது?
அ) "யூனிகோட்" உமர் தம்பி அவர்கள் யூனிகோடில் சுலபமாக டைப் பண்ண சில இலவச கோப்புகளைகளையும் மென்பொருட்களையும் அவ்வப்போது மெருகூட்டியும் உருவாக்கியும் வருகின்றார்கள். இவற்றைக் கொண்டு டைப் செய்து அனுப்பலாம்.


ஆ) ஈகலப்பை 2.0 என்ற இலவச தமிழ் மென்பொருளை பதிவிரக்கம் செய்து நிறுவினாலும் தமிழில் டைப் செய்யலாம்.


இ) ஏற்கனவேயுள்ள இணைய தள/நாளிதழ் செய்திகளை மேற்க்கோள் காட்டவும் "யூனிகோட்" உமர் தம்பி அவர்களின் உள்ளிணைப்பு மென்பொருளை நிறுவுவதன் மூலம் மீண்டும் டைப் பண்ணும் நேரம் மிச்சமாகும்.


3) இணைப்புகளை அனுப்ப முடியுமா?
முடியும். இணையத்தில் வைரஸ் பிரச்சினை இருப்பதால் சந்தேகத்திற்குறிய அட்டாச்மெண்ட்களை அனுப்புவதையும் அல்லது அனுப்புனரால் அறியப்படாமல் வைரஸ் மூலம் அனுப்பட்ட கோப்புகளை திறப்பதையும் தவிர்க்கவும்.


4) கட்டுப்பாடுகள்/கெடுபிடிகள் உண்டா?
இல்லவே இல்லை. ஆனால் பிறர் மனதை புண்படுத்தும் அல்லது தனிப்பட்ட பகைமை பாராட்டும் தகவல் பரிமாற்றங்களை பகிர்ந்து கொள்பவர் நிரந்தரமாக குழுமத்திலிருந்து நீக்கப்படுவார். அனுப்புனர் கட்டாயம் சொந்த பெயரிலேயே எழுத வேண்டும்; ஈமெயில் முகவரியோ அல்லது பெயரோ அனுப்புனரை அடையாளப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஏற்கனவே நமதூர் இணையக் குழுமங்களில் பரிச்சயமானவர்கள் தவிர மற்றவர்கள் மிகுந்த ஆய்வுக்குப் பிறகே இணைக்கப்படுவார்கள்.


5) அதிரைவாழ் மாற்றுமதத்தவர்கள் இதில் இணைய முடியுமா?
முடியாது. இக்குழுமம் அதிரை முஸ்லிம்களுக்குள் சகோதரத்துவத்துடனும் உரிமையுடனும் கருத்துப் பரிமாற்றம் செய்யவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.இத்தளத்தின் மேல்பகுதியில் வலது பக்கத்தில் இருக்கும் அதிரை முஸ்லிம் மீடியா என்ற பெட்டியில் உங்கள் ஈமெயில் முகவரியை இடவும். உறுப்பினர்களின் சேர்க்கை பரிசீலினைக்கு உட்பட்டது. சுய அறிமுகம்/ போதிய தகவல் இல்லாதவர்களின் ஈமெயில்கள் கண்டிப்பாக புறக்கணிக்கப் படும்.
Share: