Monday, December 31, 2007

அதிரையில் கொடிக்கட்டிப் பறக்கும் லாட்டரித்தொழில்

கண்டும்காணாமல் அதிரை காவல்த்துறை ...
கடந்த ஆட்சிக்காலத்தின் போது செய்த ஒரேயொரு நல்லகாரியம் தமிழகத்திலிருந்து லாட்டரியை முற்றிலுமாக ஒழித்தது. அப்பாவி ஏழை தினக்கூலிகள் இதற்கு அடிமையாகி வாங்கிய சம்பளத்தின் ஒருபகுதியை லாட்டரிக்கும் மற்றொரு பகுதியை மதுவுக்கும் செலவு செய்துவிடுகின்றனர்.
மறுநாள் கஞ்சிக்கு கூட வழியின்றி கஷட்டப்படும் அவலங்களை ஒரளவுக்கு தடுத்தது இந்த லாட்டரி தடைச்சட்டம், ஆனால் அதுஅதிரைக்கு மட்டும் பொருந்தாது காவல்துறையின் ஆசியுடன் அதிரையில் (கடைத்தெரு அஸ்லம் ஆபரண மாளிகைக் கடை முன்பு) முக்கியகடைவீதியில் வெளிப்படையாக அண்டை மாநில லாட்டரிகளை இருமடங்கு விலைக்கு விற்று பணம்
பார்க்கிறார்கள்.

இதை ஏழை தினக்கூலிகள் வாங்கி ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது . அதிரையின் முக்கியவீதியில் அதுவும் வெளிப்படையாக இப்படி லாட்டரி தொழிலை நடத்துவது காக்கிகளின் கண்ணுக்கு மட்டும் தெரியவில்லையா ? அல்லது வேண்டுமென்றே கண்டுக்கொள்வதில்லையா? எனபொதுமக்கள் கேட்கின்றனர்.

Friday, December 28, 2007

அதிரை இளைஞர்களின் விடுமுறைக் கொண்டாட்டம்

உலகெங்கும் செல்வம் திரட்டத் தங்கள் உடலுழைப்பையும் அறிவையும் வழங்கும் நம் மக்களில் பெரும்பாலோர் கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்கள். மாதம் தவறாமல் வீட்டினரின் செலவுக்கு தங்கள் மாதச்சம்பளத்தில் பெரும் பகுதியை அனுப்பி விட்டு, பெரும்பாலோர் கவுரவக் கடனாளிகளாகவே இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட வளைகுடாவில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த பலர் இன்றும் கஷ்டப்பட்டுக் கொண்டும் கடனிலும் இருக்கிறார்கள். படிப்பிலும் பொது அறிவிலும் சற்று முன்னேறிய பிறகு கொஞ்சம் கவுரவமான வேலைகளில் மற்ற சமூகத்தவருக்கு இணையாக சம்பளம் பெறுகிறார்கள்.

நமதூர் இளைய தலைமுறையினரில் சிலர் துபாயில் தங்கள் நான்கு நாட்கள் பெருநாள் விடுமுறையில் அபூதாபி அருகிலுள்ள தீவுக்குச் சென்று விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்துள்ளார்கள். அவர்களின் மகிழ்ச்சியை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.மேலும் சில வீடியோக்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.

1) Adirai Based Dubaiboyz boating in Lulu Island

2)Adirai Based Dubaiboyz rocking in Fujairah

3)Adirai Based Abulhasan(Vengaachi) in full musical mood

அதிரை ஆக்ஸிஸ் வங்கியும் பிற வங்கிகளும்

கடந்த 3 வருடங்களாக யுனைடட் பவுன்டேஷன் குழு பலமுறை அதிரையில் பல வங்கிகளையும் நேரில் அணுகி ஏ.டி.எம் (ATM) நிறுவக்கோரி பெரும் முயற்சி எடுத்தது. சரியான பதில் இல்லை!

இவர்களுக்கு ஏ.டி.எம் ஒரு கேடா? என்பதுபோல் பதில்கள், உதாசீனம், 40 வருடமாக நடக்கும் கனரா வங்கி, கோடிக்கணக்கில் நம்மக்களின் முதலீடுளைப் பெற்று லாபகரமாக அனுபவிப்பதைத் தவிர அதிரை மக்களுக்கு அவசரத்திற்கு உதவுவதில்லை. முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத சூழல்களில் / நிர்ப்பந்தத்தில் அவசரத்திற்கு லோன் கேட்டால் இல்லை என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம் அல்லாத மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீண்ட கால லோன் வழங்குகிறார்கள்.

டெபாசிட் செய்யவரும் பெண்களை அலட்சியப்படுத்தியும், அதிகாரத் தோரணையுடன் நடத்துவதும் கனரா / இந்தியன் வங்கிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. NRI டெபாசிட் கின்னஸ் சாதனை அளவைத் தொட்டுவிடும் அளவுக்கு 2 வங்கிகளிலும் நிரம்பி வ்ழிகிறது.

இனி நம் சகோதரர்கள்/சகோதரிகள் கவனமாக இருந்து நமதூரின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிதாக ஏ.டி.எம் வசதியைத் தொடங்கியுள்ள ஆக்ஸிஸ் வங்கிக்குக் ஆதரவளிப்போம். வங்கியே இல்லாமல் ஏ.டி.எம் திறந்தவர்கள் பெரிதா? வங்கியும் இருந்து நம்மை அலட்சியம் செய்தவர்கள் பெரிதா?

ஆக்ஸிஸ் வங்கியை ஒருமுறைதான் அணுகிய உடனேயே, செயலில் காட்டி விட்டார்கள். இவ்வளவு நாள் கனரா ஏன் ஏ.டி.எம் நிறுவவில்லை? அவர்க்ளுக்கு நம் டெபாசிட் மட்டும்தான் முக்கியம்! ஆக்ஸிஸ் வரும்வரை நம்மைக் கண்டு கொள்ளாதவர்களை நாம் அலட்சியப்படுத்துவது தவறல்ல.

இதன் மூலம் விரைவில் நாம் ஆக்ஸிஸ் வங்கியையும் நமதூருக்குக் கொண்டு வருவோம்! நம்மை மதித்த வங்கியை நாமும் மதிப்போம். நமது ஊருக்கு இன்னும் நிறைய தேவைகளை செய்து மேலும் நவீன மயமாக்குவோம்.

இதற்கு முழுக்காரணமாக இருந்த சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களுக்கு நன்றி! மேலும் எங்கள் சேவை தொடரும்.

தகவல் உதவி: சகோதரர்.அன்சாரி

பின்குறிப்பு:

1) ஆக்ஸிஸ் வங்கியின் ஏ.டி.எம்மிற்கு குறைந்த பட்ச பயன்பாட்டு அளவை எட்டாவிட்டால்,வேறு இடத்துக்கோ/அதிகம் பயன்பாடுள்ள இடத்திற்கோ ஏ.டி.எம் மெஷினை மாற்றக்கூடிய வாய்ப்புகள் எழலாம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாகப் புழங்கும் கடைத்தெருவில் ஆக்ஸிஸ் ஏ.டி.எம். இருப்பதே முஸ்லிம்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் பாதுகாப்பு என்பதை வெளிநாட்டு வாழ் அதிரைவாசிகள் கவனத்தில் கொண்டு தங்கள் ஆதரவை புதிதாக அக்கவுண்ட் திறந்து வழங்கவும்.

2) அதிரை மக்களின் நன்மையைக் கருதி மின்மடலில் வந்தச் செய்தியை இங்கு பிரசுரித்துள்ளோம். குறிப்பிட்ட நிறுவனங்களுக்கோ அல்லது நபர்களுக்கோ விளம்பரம் செய்யும் நோக்கம் இல்லை. சம்பந்தப்பட்ட பிற வங்கிகள் தங்கள் விளக்கங்கள்/சேவைகள் விபரம்/ஆட்சேபனை இருந்தால் adiraixpress@gmail.com என்ற மின்முகவரிக்கு மடலிடலாம்

-அதிரை எக்ஸ்பிரஸ்-

Thursday, December 27, 2007

வரிவசூல் என்ற பெயரில் அத்துமீறல்.

அதிரையில் கடந்தசிலதினங்களாக அதிரை பேரூராட்ச்சி நிர்வாகம் தீவிர வரிசூல் என்ற பெயரில் ஆண்கள் இல்லாத வீடுகளில் உள்ளேபுகுந்து கடப்பாறை மண்வெட்டியுடன் உடனே வீட்டுவரி தண்னிர்வரிகட்ட சொல்லி மிரட்டப்படுகிறார்கள்.

சில வீடுகளில் தண்னிர்வரி வீட்டுவரிகட்டி இருந்தும் அடவடியாக கதவைத்தட்டி நீங்க... பணம் கட்டியாச்சா என திமிர்தனமாக கேட்கிறதாக அதிரைவாசிகள் மனவேதனையுடன் கூறுகிறார்கள்.

(சில தினங்களுக்குமுன் இதுபோன்ற ஒரு நிகழ்வை நானும் சிங்கப்பூர் அஸ்லம்காக்கா அவர்களும் நேரில் கண்கூடாக கண்டு எச்சரித்து அனுப்பினோம்)

இதைகண்டித்து கேட்கவேண்டிய நமது சமுதாய வார்டு உறுப்பினர்கள் என்னத்தான் பண்னுகிறார்களோ?...
- JP -

Wednesday, December 26, 2007

அதிரையில் ஏரி குளங்கள் நிரம்பின...

கடந்த வாரம் அதிரையில் பெய்த பலத்தமழையின் காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பின இப்பொழுது அதிரைபகுதியில் கடுமையான பனி பொழிவு காரணமாக கடுமையான குளிர்காற்று வீசூகிறது அதிகாலை நேரங்களிலும் பனிபொழிவு காணப்படுகின்றன. இப்பொழுது செக்கடிகுளத்திற்க்கு ஆற்று நிர் வந்துக்கொண்டுள்ளது.
படம் மற்றும் செய்தி : அதிரை பரக்கத்

போலி சுவரொட்டி

அதிரையில் பரபரப்பு

அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர்.

அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.

- JP -

Tuesday, December 18, 2007

வெள்ளிநிலா மாதமிருமுறை தமிழிதழ் வெளியீடு

நமது வட்டார செய்திகளைத்தாங்கி மாதம் இருமுறை மலரும் இந்த இதழின் வெளியீடு மிக எளிமையான முறையில்நடைப்பெற்றது. இதில் தமுமுக முன்னாள் மாவட்டத்தலைவர் சரபுதீன் ஆசிரியராகவும் ஹசன்(அதிரைபுதியவன்)துணையாசிரியராகவும் செயல்படுகின்றனர்.
இது எந்த இயக்கமும் சாராமல் நடுநிலையுடன் செய்திகளைத்தாங்கி வெளிவரும் இதற்க்கு நமதுபகுதி பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வெள்ளி நிலாபிரகாசிக்க அனைவரும் ஒத்துழைப்புதருமாறு இதழ்வெளியீட்டாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இதழ் தஞ்சை மாவட்டம் முழுவதும் வினியோகிக்க பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தங்களது மேலானகருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பவேண்டிய முகவரி
வெள்ளிநிலா
த.பெ.எண்:1208
சென்னை.01
தொலைபேசிஎண்.:044 42625304 /05
-J P-

Friday, December 14, 2007

அதிரை அநாதை இல்லத்தின் வேண்டுகோள்

நமதூரில் மஸ்ஜித் அக்ஸா (மரைக்காயர் பள்ளி) அருகில் கடந்த 30வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் எதிம்கானா என்கிற அநாதை இல்லத்தில் தற்பொழுது சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பள்ளிக்கூடம், மதரஸா போன்றவற்றில் படித்து வருகிறார்கள். உணவு உடை, இருப்பிடம், கல்விச்செலவு, மருத்துவச் செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் அனைத்தும் இந்த ஸ்தாபனமே ஏற்றுக்கொண்டு செவ்வனே செய்து வருகிறது.

உஸ்தாதுகள் மூன்று பேர் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்து செலவுகளுக்கும் பொதுமக்கள் தரும் நன்கொடைகள்/சந்தா/ஜகாத்/ குர்பானித் தோல்கள் இவைகள் மூலமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆகவே, தங்களால் முடிந்த அளவு இந்த அநாதை இல்லத்திற்கு உதவுமாறு கேட்டுகொள்கிறோம், இது மிகச் சிறந்த தர்மமாகும்.

குறிப்பு:

1.இந்த வருட கூட்டு குர்பானி கொடுக்க நிய்யத்து உள்ளவர்கள், மாடு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடு ஒன்றுக்கு ரூ 600 வீதம் அனுப்பவும்.

2. அத்துடன் வீட்டிலே குர்பானி கொடுப்பவர்கள் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு முன்கூட்டியே தெரியப்படுத்தினால், வீட்டில் வந்து குர்பானித் தோலைப் பெற்றுக்கொண்டு ரசீது அளிப்பார்கள்.

தொடர்புக்கு....
ஜனாப். சாகுல் ஹமீது(கண்கானிப்பாளர்)
கைப்பேசி; 9842482494
அலுவலக எண்: 04373-241918

Tuesday, December 11, 2007

ஏழைகளுக்கு செல்வந்தர்கள் உதவ வேண்டும்

ஜாவியா இரண்டாம் நாளில் மொளலவி அப்துல்காதிர் ஆலிம் உரை


ஜாவியாவில் நடந்துவரும் புனிதமிக்க புகாரி ஷரிப் 10:12:2007 (நேற்று) காலை துவங்கியது. இரண்டாம் நாளான இன்று மொளலவி அப்துல் காதர் ஆலிம் அவர்களின் சிறப்பு பயான் நடைப்பெற்றது இதில் மூசா நபியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விளக்கப்பட்டது.

ஒருதடவை மூசா நபியிடம் மிகவும் அறிவாளி யார் என உம்மத்தார்கள் கேட்டார்கள் அதற்க்கு நபியவர்கள் நான்தான் என பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ் மூசா நபியை நீண்ட தூரம் பயனம் செய்ய கட்டளையிட்டான் மூசா நபியும் பயனித்தார்கள் போகும் வழியில் கடுமையான பசி ஏற்ப்பட்டது அப்பொழுது பசி இருந்து இல்லாமல் அதை அல்லாஹ் மரக்கசெய்த்துவிட்டான் அப்பொழுது அறிவாளி வல்ல ரஹ்மானைத்தவிர வேறுயாரும் இல்லை என நபி மூசா (அலை)உணர்ந்தார்கள். இதில் ஏராளமான படிப்பினைகள் நமக்கு இருக்கிறது.

துல்ஹஜ் மாதம் பிறை 1 முதல் 10வரை ஏற்றமிகு நாட்களாகும் கலா நோன்பு உள்ளவர்கள் இந்த பத்து நாட்bகளில் நோன்பு வைத்தால் மிகவும் ஏற்றமாகும் இதேபோல் சுன்னத்தான நோன்புகளும் நோற்கலாம். குர்பானி கொடுப்பவர்கள் இந்த 10நாட்களிலும் நகம் முடிமழித்தல் கூடாது .குர்பானி கொடுக்க ஆடு மிகவும் சிறந்தது இம்மாதத்தில் ஏழைகளுக்கு அதிகதிகமாக உதவிகளை செய்யவேண்டும் என பல்வேறு சுன்னத்தான விஷயங்களை விளக்கமாக கூறினார். இந்த புகாரிஷரிப் தொடந்து 40 நட்கள் வரையும் நடைப்பெரும். ஏராளமான ஆண்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் பெண்களுக்கு அருகில் உள்ள வீடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

தகவல் : அஜ்மீர் ஷாகுல்

-JP-

ஸ்டார் ஏவியேஷன் விமானசேவை

ஸ்டார் ஏவியேஷன், துபாய் தமிழ் நிறுவனமான ஈடிஏ அஸ்கான் இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் குறைந்தபட்ச கட்டண விமான சேவை. இந்நிறுவனமே குறைந்தபட்ச விமானசேவை துவக்க அனுமதி பெற்றுள்ள முதல் தனியார் நிறுவனம்.

இப்புதிய விமான சேவை மூன்று முதல் ஐந்து விமானங்களைக் கொண்டு தென்னிந்திய நகரங்களான சென்னை, பெங்களூர் அல்லது ஹைதராபாத் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு செயல்படத்துவங்கும் என அதன் நிர்வாக இயக்குநர் சையத் எம் ஸலாஹ¤த்தீன் தெரிவித்தார்.

இச்சேவை ஆறு அல்லது ஒன்பது மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் மற்றும் கொச்சி ஆகிய தென்னிய்ந்திய நகரங்களை ஸ்டார் ஏவியேஷன் இணைக்கும் வண்ணம் தனது சேவையைத் துவங்கும்.

http://archive.gulfnews.com/articles/07/12/09/10173549.html

Monday, December 10, 2007

அதிரைக்கு வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா!


நமதூர் கடற்பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. மரவாக்காடு கடலோரப்பகுதியில் மீன்களை கொத்தி திண்பதற்காக ஏராளமான பறவைகள் காத்திருக்கின்றன.
நன்றி : தினகரன் (10:12:2007)

Sunday, December 9, 2007

அதிரை ஏடிஎம் வசதி!

அதிரைக்கு புதிதாய் ஏடிஎம் வசதியை ஆக்ஸிஸ் வங்கி வருகிற 10 ம் தியதி திறப்பு விழா காண்கிறது. திறப்பு விழாவில் ஜனாப் MMS அப்துல் வகாப் அவர்கள் தலைமையேற்று திறந்து வைக்கிறார்கள்.

மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் இந்த வசதிக்காக வெளிநாடு வாழ் அதிரை பொதுமக்கள் அதிகமாக கணக்குகளை திறக்க இந்தவங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.


Thursday, December 6, 2007

பாப்ரி மஸ்ஜித்

15 வருடங்கள் ஆகிவிட்டது,அல்லாஹ்வின் இல்லம் பாப்ரி மஸ்ஜித் இரத்தக்காட்டேறிகளால் தகர்க்கப்பட்டு.போலி வாக்குறுதிகளும் நம்பிக்கைத்துரோகங்களும் உயிரழப்புகளும் பொருளிழப்பும் என்க்கெளண்டர்களும் இன்னும் பல மஸ்ஜித்கள் தகர்க்கப்பட்டதும் தான் கடந்த 15 வருடங்களாக நடந்துவருகிறதை தவிர எந்த நீதியும் நியாயமும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இல்லை.

வழக்கம்போல் இவ்வருடமும் இயக்கங்கள் தங்கள் இருப்பைக்காட்டுவதற்கான மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பட்டங்களும் பேரணிகளும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கடையடைப்பும் நடைபெறும்.போஸ்டர்கள் ஒட்டப்படும்.பாராளுமன்றத்தில் ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் சில கூக்குரல்களை எழுப்பும் அதெற்கெதிராக சில காண்டாமிருகங்கள் உறுமும்.உடனே மாலை வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.சில வக்கில்லா முஸ்லிம் தலைவர்கள் நீதிமன்றத்தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கொடுக்கும் பேட்டிகள் மறு நாள் பத்திரிகைகளின் கடைசி பக்கத்தின் ஓரத்தில் இடம்பெறும். அதற்கு முன்பாக இந்திய உளவுத்துறையின் பொய் பீதிச்செய்திகளால் பலத்த பாதுகாப்புகளால் இரயில் நிலையங்களும் விமானநிலயங்களும் திணரும்.இவ்வாறு சடங்குகளாக டிசம்பர் 6 முடிவுறும்.இதுதான் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இறையில்லங்களை இழந்து உயிர்களை இழந்து பொருளை இழந்து மானத்தை இழந்தபின்னரும் இந்த முஸ்லிம் சமூகம் சிந்திக்கவில்லை.முஸ்லிம்களை நசுக்கிக்கொண்டிருக்கும் ஓநாய்கள் எக்காளமிட்டு வலம்வரும்பொழுது இழப்புக்கிற்கு ஆளான சமூகம் இரந்து நிற்கின்றது.பள்ளி வாசலை கட்டவும் பாதிப்புகளை சரிச்செய்யவும் பதிலடிக்கொடுக்கவும் இவர்களிடம் திட்டங்களும் இல்லை வழி நடத்தக்கூடிய தலைமையும் இல்லை.

மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொ டர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.(AlQuran13:11)

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் க ொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறான ோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்த ோனுமாக இருக்கின்றான்.(AlQuran22:40)

Monday, December 3, 2007

அதிரைக்கு அகல ரயில்பாதை ரயில்வே அமைச்சரின் கடிதம்


சமூக நல சங்கத்தின் சார்பில் நமதூர்வழியாக காரைக்குடி வரையிலும் அகல ரயில் பாதை அமைக்க கோரி பல்வேறு விதமான கோரிக்கைகளை வைத்து வருவதை நாம் அனைவரும் அரிவோம்.

அதன் ஒரு பகுதியாக ரயில்வேதுறை இணை அமைச்சர் ஆர் வேலு அவர்களுக்கு சமூக நல சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் திருமதி ஆர் பிரேமா எழிசபத் MABL ஒரு கடிதம் அனுப்பினார் அதற்க்கு ரயில்வேத்துறை இணைஅமைச்சர் வேலு அவர்கள் பதில் கடிதம் எழுதியதில் பட்டுக்கோட்டைக்கு பதிலாக புதுக்கோட்டை என்று தவறுதலாக பிரசுரம் செய்து அனுப்பியுள்ளார் அதை திருத்தி அனுப்பிவைக்குமாறு சமூக நல சங்கத்தின் சார்பில் பதில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதாக பிரேமா எழிசபத் MABL கூறினார்.

-JP-