Thursday, August 30, 2007

அறியாமையோ ?


நமது முன்னால் ஜனாதிபதி காட்சி அளிக்கும் மேலேக்கண்ட படக்காட்சி இந்திய முஸ்லீம்களை குறிப்பாக தமிழக முஸ்லீம்களை இந்திய அளவிலும்,உலக அளவிலும் தலைக்குனிய வைத்துள்ளது.அவருடைய ஈமானுக்காக து ஆ செய்வதை தவிர வேறு வழி இல்லை.மார்க்க அறிஞர்கள் அவருக்கு ஈமானுடைய விளக்கத்தையும்,தீனுடைய விளக்கத்தையும் கொடுப்பார்களா ?.
எந்த முஸ்லீமும் மார்கத்தில் எந்த சமுதாய மக்களுடனும் சமாதானம் செய்துக் கொள்ளமாட்டான்.

அதிரை நண்பன்

Wednesday, August 29, 2007

பாடம் பெறுமா அதிரை பஞ்சாயத்து போர்டு?

அல் அமீன் பள்ளியின் மெயின் கேட்டை அடைத்ததற்காக நியாயம் கேட்ட கமிட்டியார்கள் மீது பொய்வழக்குப் போட்டனர் அதிரை பஞ்சாயத்து போர்டு அதிகரிகள்.

கடையநல்லூரில் பொதும்மக்களின் பிரச்சினைக்களைக் கண்டு கொள்ளாத பஞ்சாயத்து போர்டுக்கு பொதுமக்கள் சீல் வைத்துள்ளனர். இனியாவது பேரூராட்சி நிர்வாகிகள் இலஞ்சம் வாங்காமல் கடமையச் செய்து பொதுப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். செய்வார்களா?

கடையநல்லூர்: குடிநீர்ப் பிரச்சினை, தெரு விளக்கு பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினையை கண்டுகொள்ளாத நகராட்சியைக் கண்டித்து ஆணையரின் அறைக்குப் பூட்டுப் போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 31வது வார்டு பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனை நிலவி வருவதாகவும், அதை விரைந்து சீர் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

பொது மக்கள் பலமுறை நகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுக்க வந்த போதிலும் அவர் அலுவலகத்தில் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கனக்கானோர் தங்கள் வார்டு பிரச்சனையை கூற நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அப்போது அலுவலகத்தில் ஆணையாளர் இல்லாததாலும், அவருடைய அறை பூட்டி இருந்ததாலும் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் அறைக்கு இன்னொரு பூட்டைப் போட்டுப் பூட்டி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

-நமது நிருபர்-

அமீரக பொது மன்னிப்பு காலக்கெடுவில் சிறிய மாற்றம்

நேற்று வெளியான காலக்கெடு நீட்டிப்புக்கு மாற்றாக இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அபுதாபி உள்துரை அமைச்சக லெப்டினன்ட் ஜெனரல் செய்க் சைஃப் பின் ஜயித் அல் நஹ்யான் வெளியிட்டுள்ளார்.காலெக்கெடு நீட்டிக்கப்படவில்லை,செப்டம்பர் 3 வரை தான் சட்டத்திற்கு புறம்பாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக்கான அவகாசம்,அதன் பிறகு தங்கி இருப்பவர்கள் மீது கடுமையான் நடவடிக்கை எடுக்கப்படும்.ஆனால் செப்டம்பர் 3க்குள் நாட்டை விட்டு வெளியாவதற்கான நடைமுறைகளை சம்பந்தப்பட்டவர்கள் பூர்த்தி செய்து விட்டால் நவம்பர் 3 வரை அவர்கள் நாட்டை விட்டு வெளியாக காலவயரை உள்ளது என்று அறிவித்துள்ளார்.இது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
அதிரை நண்பன்

Tuesday, August 28, 2007

அமீரகத்தில் பொதுமன்னிப்பு நீட்டிப்பு

அம்னஸ்டி எனப்படும் பொது மன்னிப்பு காலக்கெடு வரும் செப்டம்பர் 3ல் முடியும் சூழலில் நேற்று திங்கள் கிழமை அதிகாரிகள் Gulf news க்கு கொடுத்த பேட்டியில் எதிர்வரும் நோன்பு பெருநாள் முடியும் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள். ஆனால், இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. இது ஒரு நல்ல வாய்ப்பு!

இதுவரை யரேனும் சட்டத்திற்குப் புறம்பாக தங்கி இருப்பவர்கள் நிதானமாக தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். இம்முறை சட்ட நடவடிக்கை கடுமையாக இருப்பதால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் செய்தியை சொல்வது பெரிய உதவியாக இருக்கும்.

மேலும் அம்னஸ்டி காலக்கெடு முடிந்த பின்பு தங்கி இருப்பவர்கள்,தங்க இடம் கொடுத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை மனதில் கொள்ளவும்.

-அதிரை நண்பன்-

Monday, August 27, 2007

பாடாய் படுத்திய சட்டம்

சாத்தான் குளத்தை சேர்ந்த ஹென்ஸ் குமார் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருச்சூர் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸில் ரயிலில் முன் பதிவு செய்தார் ,அவருக்கு வெயிட்டிங் டிக்கெட் கிடைத்தது.

பயண நாளன்று டிக்கெட் கன்பார்ம் இல்லை, டிடிஆர் நாகர்கோவிலில் கன்பார்ம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்.டிக்கெட் கன்பார்ம் ஆகிவிட்டது. ஆனால் 100/- கொடுக்கனும் என்று டிடிஆர் கூறியிருக்கிறார் ஹென்ஸ் குமார் பணம் இல்லை என்று சொன்னவுடன் அடுத்த ஸ்டேஸனில் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்.

இது குறித்து சென்னையில் உள்ள தென்னக ரெயில்வே மேலாளருக்கு புகார் அனுப்பியும் எந்த பலனும் இல்லை. எனவே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தனது புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு தென்னக ரெயில்வேக்கு கடிதம் அனுப்பினார்.

தென்னக ரெயில்வே அதிகாரிகளும்,டிடிஆரும் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொண்டனர்.வேலை போகும் நிலைக்குத் தள்ளப்பட்ட டிடிஆர் சம்பந்தப்பட்ட நபரிடம் கெஞ்சி கூத்தாடியது தான் இந்த சட்டத்தின் சிறப்பு அம்சம்,

பின்பு ஹென்ஸ் குமார் பாவப்பட்டு கேஸை வாபஸ் வாங்கி கொண்டார்.

சரியான முறையில் கையாளப்படும் எந்த நடவடிக்கைக்கும் பலன் உள்ளது என்பதை அதிரைவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

-அதிரை நண்பன்-

Sunday, August 26, 2007

இந்து முன்னணி தீர்மானம்

பட்டுக்கோட்டை நகர இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது,அதில் இவ்வாண்டு 18ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எதிர் வரும் 11ம் தேதி பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் 51 சிலைகளை பூஜை செய்வது 17ம் தேதி அச்சிலைகளை கரிகாடுவரை எடுத்து வருவது,அதனைத் தொடர்ந்து 18ம் தேதி அதிராம்பட்டினம் வண்டிப் பேட்டையிலிருந்து இந்து எழுச்சி ஊர்வலம் என்ற தலைப்பில் சிலையை தூக்கிச் செல்வதாக தீர்மானம் போட்டு இருக்கிறார்கள்.

மேலும் பட்டுக்கோட்டையில் இருக்கும் பெந்தகோஸ்த ஜபக்கூடாரங்களின் ஒலிப்பெருக்கியினால் இந்துக்களின் வழிப்பாட்டுக்கும் பள்ளி மாணவர்களின் படிப்பிற்கும் இடையூராக இருக்கிறதாம். எனவே போலீஸ் உடனடியாக் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

ஒலிப்பெருக்கியே தெரியாதவர்களைப் போல தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நமது அப்பாவி முஸ்லிம்கள்மீது பொய்வழக்குப் போடப்பட்டதை மனதில் கொண்டு இந்து முன்னணி விஷமிகளின் சதிவலையில் வீழாமல் உஷாராக இருந்து ஊரின் பொதுஅமைதியைக் காப்பது அதிரை நலன் விரும்பிகளின் அவா!


-அதிரை நண்பன்-

Saturday, August 25, 2007

ஒற்றுமைக்கு விடை காணுங்கள்

பிரிந்து கிடக்கும் மக்களே!
ஒற்றுமையை சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்-செயல்படுதுங்கள்,காலம் நமது கையில் இல்லை.
அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினை என்று கேள்விபட்டதும் கிட்டதட்ட 175 அதிரைவாசிகள் கூடினீர்கள் என்பதில் சந்தோசம்.ஆனால் எல்லோரின் உணர்வுகளும் சோடா பட்டில் கதைபோல் இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.ஆரம்பதில் இருக்கும் அதே உணர்வு கடைசிவரை நீடிப்பதில்லை,இது ஏன் என்று புரிவதுமில்லை.இருப்பினும் கவலை உள்ள சில நபர்கள் உதவி கரம் நீட்டினார்கள்,அல்லாஹ் அவர்களின் உதவியை ஏற்று கொள்வனாக. ஒரு சில நபர்களின் சூழ்ச்சியால் கடந்த பல வருடங்கலாக தெருவாரியாக பிரிந்து கிடக்கும் நமதூர்வாசிகளை ஒன்றிணைக்கும் பணியை துபை வாழ் ஐக்கிய குழு நமதூர்வாசிகளை சந்தித்து ஒற்றுமையை வழியுறுத்தி வருகிறது,உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பு தான் அவர்களின் முயற்ச்சிக்கு ஊக்கத்தை தரும்.யார் ஒற்றுமையை நாடுகிறீர்களோ அல்லாஹ் அவர்களை மேலோங்க செய்வான் மற்றும் யார் தருமத்தை அல்லாஹ்வுடையப் பள்ளிக்கு முன் வந்து தருகிறார்களோ அவர்களுடைய தேவைகளை அல்லாஹ் பூர்த்தியாக்குவான்.எனவே இதுவரை அல்லாஹ்வுடையப் பள்ளிக்கு அள்ளிக் கொடுக்காதவர்கள் தருமத்தைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் தங்களது கரத்தை முற்படுத்துங்கள். எதிர் வரும் நோன்பை கருத்தில் கொண்டு அல் அமீன் பள்ளிவாசலுக்கு கஞ்சி மற்றும் நார்சாவுக்கு உங்களது பங்கை அளியுங்கள்.தொடர்புக்கு
1.ஹாஜா எஸ்.பி மேலத்தெரு - 050-5593275
2.ஜமாலுதீன் ஆஸ்பத்திரி தெரு – 050-4737200
3.சகுல் ஹமீது எஸ்.எம்.எ. கடற்கரை தெரு – 050-3792167
4.அமீன்.ஜெ நடுத்தெரு – 050-5050922
5.அப்பாஸ் கீழத்தெரு – 050-6557432
6. நிஜாம்.டி புதுத்தெரு – 050-793236

மரண அறிவிப்பு

அதிரை- ஆஸ்பத்திரி தெரு ஜனாப்.யாக்கூப் ஹசன் ஹாஜியார் -ராஹிலல அம்மாள் இவர்களின் மகள் வீட்டுப் பேத்தியும் ஜனாப்.அஸ்ரப் அலி-தஸ்லீமா இவர்களின் மகளும் மீராஷாகிப், பெளஜி ஆகியோரின் சகோதரியும் ஜனாப். அஷ்ரப் அவர்களின் மனைவியுமான ஷஹீதா நேற்று 23-08-2007 அன்று வஃபாத்தாகி விட்டார். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் வெற்றியாக்கி வைக்கவும், குடும்பத்தினருக்கு இவ்விழப்பைத் தாங்கி கொள்ளும் மனவலிமையை வழங்கவும் துஆச் செய்வோமாக! ஆமீன்!!

-சித்தி கதீஜா-

தாசில்தார் அலுவலகத்தின் அலட்சியம்

நமதூர் அல்அமீன் பள்ளிவாசலுக்கு எதிராக பேரூராட்சி நிர்வாகத்தினரின் சதியால் பேரூந்து நிலைய மெயின் கேட்டைப் பட்டுக்கோட்டை தாசில்தார் 15-06-2007 அன்று பூட்டி சீல் வைத்தார். இதனால் மெயின்ரோட்டிலிருந்து பள்ளிக்குத் தொழுக வரும் முஸ்லிம்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

அல்அமீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில், தாசில்தாரால் பூட்டி சீல் வைக்கப் பட்ட கேட்டைத் திறக்க உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 26-07-2007 அன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை, வழக்கிற்கான சரியான சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கவில்லை என்றும், நில உரிமையாளார்களான வாதிக்கு உரிய சட்ட உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் சொல்லி தாசில்தாரின் ஆணையை ரத்து செய்தார்.

மேலும் பூட்டப்பட்ட கேட்டை உடனே திறக்கவும் அறிவுறுத்தி உள்ளார். உயர்நீதிமன்ற ஆணை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்ற காரணத்தைச் சொல்லி ஏற்கனவே மூன்று வாரங்களைக் கடத்தி காலம் தாழ்த்தியதோடு, தற்போது தாசில்தார் பத்து நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் சொல்லப்பட்டு வேண்டுமென்றே கேட்டைத் திறப்பதை தாமதப் படுத்துகிறார்கள்.

இவ்விசயத்தில் ஊரின் பெரும்புள்ளி ஒருவர் தீவிர கவனம் செலுத்தி, பேரூந்து நிலைய கேட்டு திறப்பதை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் வழிகளைச் செய்வதாகவும், அவரின் வலியுறுத்தலால் கேட்டு திறக்கப் பட்டதாகச் சொல்லி பெயர் தட்டிச் செல்லலாம் என்று கணக்குப் போட்டிருப்பதாகவும் தெரிகிறது.

'சூழ்ச்சியாளார்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்' என்பதையும் அல்லாஹ்வுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்கள் எல்லோருமே மென்மேலும் அவமானப் பட்டார்கள் என்பதை வரலாறு சொல்கிறது. இதனை அல்அமீன் பள்ளிவாசல் விசயத்தில் தொடந்து சூழ்ச்சி செய்து வருபவர்கள் உணர வேண்டும்.

-ஊர்சுத்தி உமர்-

Thursday, August 23, 2007

பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை எம்.பி.தொகுதி

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தொகுதி சீரமைப்பில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டுள்ளது; மேலும் அதன் உள்ளிருந்த சட்டமன்றத் தொகுதிகளும் பிற நாடாளுமன்றத் தொகுதிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது, அந்த மாவட்டத்து மக்கள், அமைப்புகள், கட்சிகள் அனைவரின் அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளது. இதைக் கண்டித்து ஆகஸ்டு 18 அன்று புதுக்கோட்டையில் முழு அடைப்பு நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 5 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தற்போது சீரமைப்பு அணையத்தின் பரிந்துரைப்படி புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, திருமயம் என 6 சட்டமன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

திருமயம் தவிர அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளும் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் முன்பு இருந்தன.இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியே இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளையும் திருச்சி (புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை தனி) கரூர், (விராலி மலை), சிவகங்கை (ஆலங்குடி, திருமயம்), ராமநாதபுரம் (அறந்தாங்கி) என 4 மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் சிதறடிக்கப்பட்டுள்ளன.

மேலும் சட்டமன்றத் தொகுதிகளை மாற்றினாலும் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியே இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஒரு முழு நாடாளுமன்றத் தொகுதியே தேவையான 6 சட்டமன்ற தொகுதியே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பதால் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் புதுக்கோட்டை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்டதுமான புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியைப் பிரிக்காமல் அப்படியே மாற்றி அமைக்க வேண்டி ஏற்கெனவே தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை பிரித்தாலும் அதனை ஏதாவது ஒரு தொகுதியில் சேர்க்காமல் 4 மாவட்டத்திலுள்ள 4 நாடாளுமன்ற தொகுதியில் சேர்ப்பதால் அரசியல் ரீதியாக மட்டுமின்றி அரசாங்க நிர்வாகத்திற்கும் பெரும் இடையூறு உருவாகும் சூழ்நிலை உள்ளது.

எனவே புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் உருவாக்கும் வரை போராடுவதற்கு ஏதுவாக அனைத்து கட்சிகள், பொது நல அழைப்புகள் உள்ளிட்ட தொகுதி மீட்புக் குழு அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, August 22, 2007

அதிரை-வீட்டுமணைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பு

கடந்த ஆகஸ்ட்-1,2007 முதல் தமிழகஅரசு, வீட்டு மணைகளுக்கான மதிப்பை உயர்த்தியுள்ளது.அதன்படி நமதூரின் வீட்டுமணை நிலங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டு மதிப்பை தெருவாரியாகவும் சர்வே எண் வாரியாகவும் காணலாம்.

1) தெருவாரியாக

2) சர்வேஎண் வாரியாக

3) மேலதிக விபரங்கள் அறிய பதிவுத்துறையின் இணையதளத்தைப் பார்வையிடவும்

Monday, August 20, 2007

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக..."இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - திரைக்கு வந்து சிலமாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்" என்ற அறிவிப்பை தினமும் கேட்டிருப்பீர்கள். கடந்த சனிக்கிழமை (18-08-2007) அன்று சன் தொலைக் காட்சியில் திரையிடப்பட்ட "செங்காற்று" என்ற படத்தில் அதிரையைச் சார்ந்த புதுத்தெரு இளைஞன் அப்துல் ரஹ்மான் நடித்திருக்கிறார்.

சிலமாதங்களுக்கு முன் பட்டுக்கோட்டையில் வெற்றிகரமாக ஒருநாள் ஓடியதாகவும், அதிரையிலிருந்து இலவசமாக ஆட்டோவில் ரசிகப் பெருமக்களை அழைத்துச் சென்று தியேட்டர் இருக்கைகள் நிரம்பியதாகவும் நமது ஊர்சுத்தி உமர் மடலிட்டிருந்தார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் நடிகர் அப்துல் ரஹ்மானுக்கு சினிமாவிற்காகச் சூட்டப்பட்ட பெயர் நிஷாந்த்!!! படம் பார்க்க வருவபர்களுக்கு படத்தின் ஆடியோ CD இலவசமாகக் கொடுக்கும் அளவுக்கு மானாவாரியாக பாடல்கள் நிறைந்த படம். தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் அளவுக்கு ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள்.

ஹீரோ நிஷாந்த் சண்டைக்காட்சிகளில் குறைந்தது நூறு பேரையாவது அடிக்கிறார். 1975 ஐல் வெளிவந்திருந்தால் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகி இருக்க வாய்ப்பிருந்திருக்காது.

நமது அதிராம்பட்டினத்திற்கு "ஆட்டைக் கழுதையாக்கிய ஊர்" என்ற பட்டபெயர் உண்டு; ஆட்டை மட்டுமா கழுதையாக்கினோம்?

இப்படத்தின் சினிமா விமர்சனம் மற்றும் போட்டோக்களைக்காண கீழ்கண்ட சுட்டிகளைத் தட்டவும்

விமர்சனம்-இணையராசா

Saturday, August 18, 2007

புதுக்கோட்டை MP தொகுதியைக் காணவில்லை!!!

சமீபத்தில் தேர்தல் ஆணையம் தொகுதிகளை மறுசீரமைப்பு என்ற பெயரில் மாற்றி அமைத்தது. அதில் பல தொகுதிகள் பிரித்துக் கட்டப்பட்டன.அதிராம்பட்டினம் வாக்காளர்களைக் கொண்ட புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி நான்காக பிரிக்கப் பட்டுள்ளதால், பட்டுக்கோட்டை,அதிராம்பட்டினம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப் பட்டுள்ளது.

புதுக்கோட்டை தொகுதி காங்கிரஸின் கோட்டை என்பது நாட்டிலேயே இரண்டாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற முன்னாள் எம்.பி. சுந்தர்ராஜ் காங்கிரஸை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.புதுக்கோட்டை தொகுதியில் முஸ்லிம்களும் கள்ளர் இணத்தவரும் பெரும்பான்மை என்பது குறிப்பிடத்தது.

எம்பி தொகுதி-புதுக்கோட்டையில் இன்று 'பந்த்'
-மாவட்டமே ஸ்தம்பித்தது


ஆகஸ்ட் 18, 2007

புதுக்கோட்டை: புதுக்கோட்டை எம்பி தொகுதியை நீக்கியதை கண்டித்து இன்று அந்த மாவட்டம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதிகள் சீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரையின்படி அவை 6 தொகுதிகளாக (புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வகோட்டை (தனி), திருமயம்) பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் திருமயம் தவிர மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் இருந்தவை. இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட பட்டியலில் புதுக்கோட்டை எம்பி தொகுதியே இல்லை.

இங்குள்ள 4 சட்டமன்ற தொகுதிகள் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி) ஆகியவை திருச்சி எம்பி தொகுதியுடனும், விராலிமலை தொகுதி கரூர் எம்பி தொகுதியுடனும், ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை எம்பி தொகுதியுடனும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் எம்பி தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுக்கோட்டை எம்பி தொகுதியே காலியாகிவிட்டது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட அனைத்துக் கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் இந்தத் தொகுதியை உருவாக்கக் கோரி இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பந்த் நடத்தப்படுகிறது.

ஆளும் திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

மாவட்டம் முழுவதும் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ரயில் மறியலும் நடந்தது, இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/08/18/pudukottai.html

Friday, August 10, 2007

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினையில் எதிரிகளின் சூழ்ச்சியை வென்று இன்ஷா அல்லாஹ் இறையில்லம் இனிதே எழும்ப அதிரை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ள சூழலில், ஒற்றுமை இருந்தால் வெல்ல முடியாத எதிரியையும் எளிதில் வெல்லலாம் என்பதைச் சொல்லும் உண்மையான நிகழ்வு! நடந்தது ஆப்பிரிக்கக் காட்டில்!!

தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் ஒருபக்கம் முதலை இன்னொரு பக்கம் சிங்கம். மாட்டிக் கொண்ட காளைக் கன்று கதறி அழைத்தது! அவ்வளவுதான் தன் இனக்குட்டியின் குரலைக் கேட்ட காளைகள் கும்பலாகச் சேர்ந்து கொண்டு சிங்கத்தை அடித்து விரட்டி, குட்டியை மீட்ட அற்புதமான ஒளிப்படம்! இணைய தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை இதுவரை கிட்டத்த ஒரு கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இன்றைய சன் செய்தியிலும் இடம் பெற்றது.ஒற்றுமையின் அவசியத்தைச் சொல்லும் இத்தகைய டாகுமெண்டரிப் படம் தற்போதைய அவசியம் என்றால் மிகையில்லை!

மீண்டும் சொல்கிறோம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

-இணையராசா-

Thursday, August 9, 2007

பி.எஸ்.என்.எல். செல்போன் சந்தாதாரர்கள் அவதி

பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல். செல்போன் தொடர்புகள் சரிவர கிடைக்காததால் சந்தாதாரர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பட்டுக்கோட்டையை தலைமையாகக் கொண்டு பி.எஸ்.என்.எல். செல்போன் அலுவலகம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர் ஆகிய பகுதிகளுக்கு செல்போன் இணைப்புகளை வழங்கி வருகிறது. இப்பகுதியில் தற்போது 10 செல்போன் டவர்கள் இயங்கி வருகின்றன.

ஆனால் இப்பகுதியில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட டெலிபோன்களும், 50 ஆயிரம் செல்போன் சந்தாதாரர்களும் இருப்பதால் கடந்த சில மாதங்களாகவே ஒருநாளில் பல மணி நேரம் செல்போன் தொடர்புகளே கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் திண்டாடும் அவலநிலை ஏற்பட்டது.

இதற்கெல்லாம் போதிய செல்போன் டவர்கள் இல்லாததே காரணம் என்று சொல்கிறார்கள். பல இடங்களில் டவர்கள் அமைக்க உத்தரவு வந்தும் அமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை என்றும், சில இடங்களில் டவர்கள் அமைக்கும் வேலை முடிந்து விட்டது என்றும் சொல்கிறார்கள்.

பொதுவாக பட்டுக்கோட்டை டிவிஷன் பகுதியில் பி.எஸ்.என்.எல். விரிவாக்கப்பணியில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. போதிய கருவிகள் இருந்தால் தான் பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள்.

பி.எஸ்.என்.எல்.தொடர்பு கிடைக்காததால் அதன் வாடிக்கையாளர்கள் தற்போது தனியார் செல்போன்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசுத்துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் அலட்சியம் காட்டுவதும், கூடுதல் டவர்கள் நிறுவுவதில் தாமதப்படுத்துவதும் தீர்வாகாது என்று சந்தாதாரர்கள் குமுறுகின்றனர்.

Tuesday, August 7, 2007

அல் அமீன் பள்ளிவாசல் Vs. முஸ்லிம்களின் கடமை!

அல் அமீன் பள்ளிவாசலின் பழைய புகைப்படங்கள்:
அல் அமீன் மஸ்ஜிதின் அவசியத்தை உணராமல் நமதூர் மக்களில் சிலர் விதண்டாவாதமாகச் செயல்படுவதோடு இறையில்லத்தை நிர்மாணிக்கும் மார்க்கக் கடமையில் தங்களை அர்ப்பணித்துள்ள நமதூர் சகோதரர்களை இழிவாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.

நமதூரில் ஏற்கனவே பல பள்ளிவாசல்கள் இருக்கிறதே! பிரச்சினைக்குறிய இடத்தில் இன்னொரு பள்ளிவாசல் ஏன்? அப்படியே பள்ளிவாசல் கட்டினாலும், பள்ளிக்கு பேரூந்து நிலைய வாசல் அவசியமா? என்றும் கேட்கிறார்கள்.

நமதூரில் எத்தனை பள்ளிகள் இருந்தாலும், அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் (வக்ப்) செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலும் தொழுகையை கியாமத் நாள் வரையில் தொடர்ந்து நடத்தி வருவது லாஇலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக்கடமையாகும். பள்ளிவாசலின் சொந்த நிலத்தில் தடைகளை ஏற்படுத்தி பிரச்சினைகளை உண்டாகுவது காழ்புணர்வு கொண்ட சிலரே தவிர, பள்ளிவாசல் நிர்வாகம் அல்ல!

மேலும், மெயின்ரோடு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த சரியான இடம் இல்லாததைக் கருத்தில் கொண்டு, ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பில் வாங்கப்பட்ட நிலத்துடன்,பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட நிலத்தில் பள்ளி வாசலை நிர்மாணிப்பது நமதூர் முஸ்லிம்களின் மீது கடமையாகி விட்டது.

பேரூந்து நிலையம் வழியாக வாசல் பள்ளிவாசலுக்கான சொந்தமான நிலத்தில்தான் வாசல் வைக்கப்படுகிறது என்ற பிரதானக் காரணம் போக, பொதுமக்களின் பயன்பாட்டிற்கான எந்த ஒரு முயற்சியையும் சட்டப்படி வசதி செய்து கொடுப்பது சம்பந்தப்பட்ட அரசு, பஞ்சாயத்து அலுவலர்களின் பொறுப்பாகும்.

ஆனால்,பஞ்சாயத்து அலுவலகம் நமதூர் சகோதரர்களின் மீது பொய்வழக்கு போட்டும், பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டிருந்த மின்சாரத்தை துண்டித்தும், பள்ளிவாசலுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட பட்டா அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரியும் பாரபட்சமாகச் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சியின் பாரபட்ச அநியாயத்தைத் தட்டிக்கேட்க நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களோ பஞ்சாயத்து போர்டின் ஊழல்களில் பங்கெடுத்துக்கொண்டு மெத்தனமாக இருக்கிறார்கள்.

இன்னும் ஓரிரு வருடங்களில் தொடங்கப்படவிருக்கும் சேதுசாலை வழியாகச் தினமும் செல்லவிருக்கும் 500-600 பேரூந்து பயணிகளுக்குத் தொழுகவும் முஸ்லிம் பெண்களுக்கு இயற்கைத் தேவைகளுக்காகவும், நீண்ட தூரப்பயணத்தில் ஓய்வெடுக்கவும், தொழுகை முறையையும் கலாச்சாரத்தையும் மாற்றுமதச் சகோதரர்கள் அறிந்து கொள்ளவும் வசதியாக, பேரூந்து நிலையம் வழியாக மெயின் ரோட்டை இணைக்கும் வாசல் அவசியமாகும்.

இத்தகைய பல்வேறு நல்ல அம்சங்களைக் கொண்ட அல்அமீன் பள்ளிவாசல் நிர்மாணத்திற்குத் தடையாக இருப்பவர்கள் திருக்குர்ஆனின் போதனையை மீறும் பாவத்தைச் செய்கிறார்கள்.

2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்¢ மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

மேலும், "எவரொருவர் தொழுவதற்காகப் பள்ளிவாசலை உண்டாக்கினாரோ அவருக்கு மறுமையில் (சுவர்க்கத்தில்) அல்லாஹ் மாளிகையை ஏற்பாடு செய்துள்ளான்" என்பது நபிமொழியாகும். அதர்கு தகுதியானவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

-ஆலிம்-

அரசியல் கணக்கீடு

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 21 வார்டுகளில் 14 வார்டு மெம்பர்களின் ஆதரவுடன் தற்போதைய சேர்மனாக ஜனாப். M.M.S. அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார் அவர்கள் உள்ளார்கள்.இவர்களில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும் அடங்குவர்.மீதி 7 திமுக மெம்பர்களின் ஆதரவுடன் துணைச் சேர்மனாக இராம.குணசேகரன் இருந்து வருகிறார்.

திமுகவிலிருந்து கொண்டு இந்துமுன்னனியை வளர்த்து வரும் துணைச் சேர்மனுக்கு அதிரை பஞ்சாயத்துத் தலைவராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற கடந்த தேர்தலில் முயற்சி செய்ததை அதிரை மக்கள் நன்கு அறிவர். மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்துடன் மல்லு கட்டியதுபோல், குணசேகரணுக்கு அதிரை நகர பஞ்சாயத்து சேர்மன் பதவியைபெப்படியாவது பிடித்து விடவேண்டும் என்ற நப்பாசை நீண்ட நாட்களாக இருக்கிறது.

பட்டுக்கோட்டை தொகுதியில் பரவலாக உள்ள 'கள்ளர்' இனத்தவருக்கே பெரும்பாலான அரசியல் கட்சிகள் சட்டமன்ற வேட்பாளர் வாய்ப்பை வழங்குகின்றன.எத்தனை நாளைக்குத்தான் பஞ்சாயத்து போர்டில் குப்பை கொட்டுவது? மற்றவர்கள் போல சட்டமன்ற அரசியலுக்கு வந்து குப்பை கொட்ட வேண்டாமா? என்ற ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்!

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படகூடாது; குணசேகரன் எம்.எல்.ஏ என்று போட்டுக் கொள்ள ஆசை இருக்காதா? ஆனால், அரசியல் கட்சிகள் குறைந்த பட்சம் பஞ்சாயத்து சேர்மன் பதவி வகித்து கட்சிப்பணி ஆற்றி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாலும், ஜாதி ஓட்டுக்களைக் கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் பஞ்சாயத்து சேர்மன் பதவியிலிருந்து எம்.எல்.ஏ ஆகும் முயற்சியைத் தொடங்கினால் தடையின்றி சீட்டு கிடைத்து விடும்.

அதிரையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், மொத்த 21 வார்டுகளில் பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் கட்சி ரீதியில் பிரிந்து விட்டால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், பிற்காலத்தில் முஸ்லிம் பஞ்சாயத்துச் சேர்மனைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு குறைந்துவிடும். இதனைக் கருத்தில் கொண்டு அதிராம்பட்டினத்தின் பஞ்சாயத்து வார்டு தொகுதிகளை அதிகரிப்பதன் மூலம் பிற்காலத்தில் முஸ்லிம்கள் ஆதரவு இல்லாமலேயே சேர்மன் பதவியை பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்படலாம்.

பெரும்பான்மை முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கும்போதே, அல் அமீன் மஸ்ஜித் போன்ற பொதுக்காரியங்களுக்கு இடையூறு செய்யும் குணசேகரன், முஸ்லிம்கள் ஆதரவு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிரையின் நிலை என்னவாகும்? அதிரையின் பஞ்சாயத்து வார்டுகளை மாற்றியமைத்து அல்லது அதிகப்படுத்தி பிற்காலத்தில் சேர்மனாகும் திட்டத்திற்கு காய் நகர்த்தி வருவதாக அறிகிறோம்.

அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினையில் கைகட்டி,வாய் பொத்தி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட அதிரை வார்டு மெம்பர்கள், இவ்விசயத்தில் கவனமாக இருந்து, ஊருக்குப் பயன் இல்லாவிட்டாலும் பிரச்சினைகளை உருவாக்காத சேர்மனைத் தேர்ந்தெடுப்பதே வார்டு மக்களுக்கு மெம்பர்கள் செய்யும் நன்மையாகும்.

-ஊர்சுத்தி உமர்-

அல்அமீன் மஸ்ஜித் வரலாறு


அதிரை முஸ்லிம்களின் தன்மானச் சின்னமாகிவிட்ட அல்அமீன் மஸ்ஜித் பற்றிய பின்னணித் தகவல்களை அறிந்து கொண்டால்,அதிரைமுஸ்லிம்களின் உரிமையை நசுக்கும் பஞ்சாயத்து போர்ட் மற்றும் நிர்வாகிகளின் சதிவலையையும் ஆணவப்போக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் என்ற நோக்கில், நமது செய்தியாளர் திரட்டிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.


1) நாற்பது வருடங்களுக்கு முன்னர் நமதூர் 'சமுதாயநல மன்றம்' சார்பில் மெயின் ரோட்டில் ஒரு பள்ளிவாசல் கட்ட முயற்சி நடைபெற்றது. ஏதோ சிலக் காரணங்களால் அம்முயற்சிகளைச் செயல்படுத்த முடியாமல் கைவிடப்பட்டது என்பதை ஆஸ்பத்திரி தெரு முஹல்லாவில் செயல்பட்டு வரும் 'ஹிமாயத்துல் இஸ்லாம்' அமைப்பின் கவனத்திற்கு வந்தது.

2) சேதுரோட்டைச் சார்ந்த நெல்லுக்குள் அரிசி வகையறாக்களின் சார்பாக மர்ஹூம் மீ.ச. அப்துல் மஜீது அவர்களின் வாரிசுகளிடமிருந்து 36 செண்ட (15,880 சதுர அடி) நிலம் பள்ளிவாசல் கட்டுவதற்காக வக்ப் செய்யப்பட்டது.

3) அதே ஆண்டு மெயின் ரோட்டிலிருந்து கடைத்தெருவிற்குச் செல்லும் சாலையில், பள்ளிவாசலுக்கு வக்ப் செய்யப்பட்ட இடத்தையொட்டிய சிறிய வீட்டை ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பில் நிதிவசூல் மூலம் கிரயம் செய்யப்பட்டு வாங்கப்பட்டது.

4) 13-01-2006 அன்று புதுத்தெரு மிஸ்கீன் சாகிபு பள்ளியிலும் 20-01-2006 ஆம் ஆண்டு கடைத்தெரு தக்வா பள்ளியிலும் அல்ஹாஜ்.லெ.சி.மு.முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்கள் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டு, மஸ்ஜிதே அல்அமீன் என்று பெயர் சூட்டப்பட்டு, பள்ளிவாசல் கட்டுமானக் கமிட்டி அமைக்கப்பட்டது.


5) கடற்கரைத் தெரு S.M.A அக்பர் ஹாஜியார், தரகர் தெரு S.M.முஹைதீன் ஹாஜியார், நடுத்தெரு ஹாஜி.A.செய்யது அலி மரைக்காயர், புதுத்தெரு A.ஹனீபா ஹாஜியார் மற்றும் முஹல்லா நிர்வாகிகள் சார்பில்,சுமார் இரண்டு மணிநேரம் நமதூர் M.M.S. அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார் அவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. பள்ளிவாசல் கட்டுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக M.M.S. அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார் உறுதியளித்தார்கள்.


6) 15-11-2006 அன்று பள்ளிவாசலுக்கு பேரூந்து நிலையம் வழியாக பாதை அமைக்க வரைபடத்தின்படி கட்டிட கமிட்டியாளர்கள் திட்டமிட்டிருந்த இடத்தில், பேரூராட்சியின் கட்டணக் கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இவ்விசயத்தை அதிரை பஞ்சாயத்துபோர்ட் சேர்மன், துணைச்சேர்மன் மற்றும் அனைத்து வார்டு மெம்பர்களுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டது.


7) மேற்படி கொடுக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மதிக்காமல் 05-12-2006 அன்று நமதூர் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் கட்டுமான கமிட்டியார்கள் ஆலோசனையின் பேரில், பொதுமக்கள் பள்ளிவாசலின் எல்லையை அறிந்து கொள்வதற்காக பேருந்து நிலைய வாசலில் 15-01-2007 அன்று ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.


8) 24-01-2007 அன்று பேரூராட்சி நிர்வாகத்தினர் பழஞ்செட்டித் தெரு பாலு என்கிற பாலசுப்ரமணியன் (காங்கிரஸ்), இன்பநாதன் (தி.மு.க), அன்சார்கான் (தி.மு.க) ஆகியோர் பள்ளிவாசல் நிலத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி பிர்கா சர்வேயர் மூலம் அளந்தார்கள்.இதனால் பள்ளிவாசல் கமிட்டி சார்பில் அறிவிப்புப்பலகைக்கும் பள்ளிவாசலுக்கும் பாதுகாப்பு வேண்டி 29-01-2007 அன்று அதிரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.


9) 03-02-2007 அன்று திமுக கட்சியின் நகரச் செயலாளர் இராம.குணசேகரன் பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு தடை வாங்கப்போவதாகப் ப்ரவலாகச் செய்தி பேசப்பட்டதைத் தொடர்ந்து, 12 ஆவது வார்டு திமுக கட்சியின் முன்னாள் செயலாளரும் பள்ளிவாசல் கமிட்டியின் துணைத்தலைவருமான S.K.M.அஹமது அன்சாரி (குலாப்ஜான்) 03-02-2007 அன்று நகர திமுகவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்காக விளக்கம் கேட்கப்பட்டது.


10) 04-02-2007 அன்று இரவு எட்டுமணிக்கு இராம.குணசேகரனிடம் மேற்படி கடிதத்திற்கு நேரில் விளக்கம் கேட்கப்பட்டதற்கு, "பள்ளிவாசல் கட்ட ஒரு இஞ்ச் நிலம்கூட விட்டுத் தரமுடியாது" என்று வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சொன்னார்.


11) 05-02-2007 அன்று பள்ளிவாசலின் அறிவிப்புப்பலகையை அதிரை நகரக் காவல்துறை உதவியுடன் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அப்புறப்படுத்தினார்.


12) 08-02-2007 அன்று பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து, அல் அமீன் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி பேரூராட்சி செயல் அலுவலர் மணு கொடுத்ததால், ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கு நோட்டீஸ் வந்தது.


13) 09-02-2007 அன்று பள்ளிவாசல் கட்டும் இடத்தில் சங்கத்தினர் பிரவேசிக்கக் கூடாது என்று பட்டுக்கோட்டை முன்சீப் கோர்ட் மற்றும் சப்கோர்ட்டிலிருந்து சங்கத்தின் பெயருக்கு கேவிட் நோட்டீஸ் வந்தது.


14) 14-06-2007 அன்று பள்ளிவாசலில் பேரூந்து நிலைய வாசலை பட்டுக்கோட்டை தாசில்தார் பூட்டி சீல் வைத்தார்.


15) 15-06-2007 அன்று இதுவிசயமாக பேச்சுவார்த்தைகளுக்கு நியமிக்கப் பட்டிருந்த பள்ளிவாசல் கமிட்டியார்கள் மீதும், பள்ளிவாசலுக்கு ஆதரவாகச் செயல்படும் பிற சேவை இயக்கங்களைச் சேர்ந்த அதிரை சகோதரர்கள் மேல் ஐந்துக்கும் மேற்பட்ட பொய்வழக்குகள் போடப்பட்டுள்ளது.


16) 31-07-2007 அல் அமீன் பள்ளியின் பேரூந்து நிலைய வாசலைத் திறக்க மதுரை உயர்நீதிமன்றம், பட்டுக்கோட்டை தாசில்தாருக்கு ஆணையிட்டுள்ளது.

Thursday, August 2, 2007

பட்டுக்கோட்டையில் பரபரப்பு.

ரூ.3 லட்சம் மதிப்பு ஜவுளி பண்டல்கள் கொள்ளை
 
பட்டுக்கோட்டையில் பார்சல் ஆபீசை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பண்டல்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில்கூறியதாவது:

பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை சாலையில் பார்சல் சர்வீஸ் நிறுவத்ம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த நிறுவனத்தின் ஏஜெண்ட் பாண்டியன் ஆபீசை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலையில் வந்து பார்த்த போது ஆபீசின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது சேலைகள் அடங்கிய 19 ஜவுளி பண்டல்கள் கொள்ளளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாண்டியன் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிந்து ஜவுளி பண்டல்களை திருடியவர்களை தேடி வருகிறார்.
-ஜப்பான்-

Wednesday, August 1, 2007

பேய்களுக்குப் பின்னால்

பேய்களுக்குப் பின்னால்
 
அதிரையின் நடுத்தெரு பகுதிகளில் சமீப நாட்களாக 'பேய்' நடமாடுவதாக வதந்திகள் உலவுகின்றன. இது போன்ற வதந்திகளுக்கு பின்னால் ஏதாவது ஓழுக்கக்கேடு அல்லது திருட்டு அரங்கேறும். சமூக விரோதிகள் போர்வையில் 'சமய விரோதிகளும்' நடமாடக்கூடும். உள்ளூர் இளைஞர்கள் இது பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


- புதியவர் நடமாட்டங்களை கண்காணித்து விசாரிக்க வேண்டும்.
- சந்தேகத்துக்கிடமானவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
- இரவில் அக்கம் பக்கத்தில் சப்தம் கேட்டால் உடனே சென்று பார்க்க வேண்டும்.
- அடுத்தவீடு எதிர்வீடு செல்போன் எண்களை கொடுத்து,வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- வீட்டிலுள்ள செல்போன் எண்களில் காவல் நிலைய டெலிபோன் எண்ணை ஸ்பீட் டயலில் சேர்த்து பெண்களுக்கும் முதியோர்களுக்கும் விளக்க வேண்டும்.

'தினத்தந்தியில்' வந்த செய்தி..

தஞ்சையின் சுற்றுப்புறப் பகுதிகளில் 'மோகினிப் பிசாசு புரளி'
இரவு நேரத்தில் தண்ணீர் கேட்டு வருகிறதாம்


தஞ்சாவூர்இஆக.1-

இரவு நேரத்தில் தண்ணீர் கேட்டு மோகினிப் பிசாசு வருவதாக கிளப்பி விடப்பட்ட புரளியால் தஞ்சையின் புறநகர்ப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

திடீர் புரளி

சமீபகாலமாக தஞ்சையின் புறநகர்ப் பகுதிகளில் புதுவிதமான புரளி கிளம்பி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பீதியில் உள்ளனர்.

'இரவு நேரத்தில் திடீரென பூட்டியிருந்த வீட்டுக்கதவை கைக்குழந்தையுடன் வரக்கூடிய மோகினிப் பிசாசு தட்டுகிறது. கதவை திறந்தவர்களிடம் அந்த மோகனிபிசாசு தண்ணீர் கேட்கிறது. அப்படி தண்ணீர் கொடுப்பவர்கள் சிலர் நேரத்தில்

இறந்துவிடுகிறார்கள்'' என்ற புரளி தான் தற்போது பொதுமக்களை ஆட்டி படைக்கிறது. பெரம்பலூர், துறையூர் ஆகிய பகுதிகளில் பரவிய இந்த புரளி தஞ்சை மாவட்டம் திருவையாறு, புனவாசல் ஆகிய பகுதிகளிலும் பரவியது.

தப்போது தஞ்சை பள்ளியக்கிரகாரம் கடைத்தெரு, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் இந்த புரளி பரவி உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கக்கூடியவர்கள் தங்களுடைய வீடுகளின் முன்பு வேப்பிலையை செருகி வைத்துள்ளனர். மேலும் மஞ்சள்

கலந்த தண்ணீரை வீட்டின் முன்பு தெளித்து வருகின்றனர். வேப்பிலை மற்றும் மஞ்சள் தண்ணீர் தெளிக்கக்கூடிய வீடுகளுக்கு மோகினிபிசாசு வராது என்பது அந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த புரளியினால் மாலை நேரத்திற்கு பின்பு யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதே இல்லை. இதனால் தெருவே வெறிச்சோடிக் கிடக்கிறது. ஒரு சிலர் மாலை நேரத்தில் வெளியே செல்வதாக இருந்தாலும் கையில் வேப்பிலையுடன் தான்

செல்கின்றனர்.

பெண்கள் கருத்து

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-

இரவு நேரத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் வந்து வீட்டின் கதவை தட்டுவதாகவும்இ கதவை திறந்தால் தண்ணீர் கேட்பதாகவும், தண்ணீர் கொடுப்பவர்கள் இறந்துவிடுவதாகவும் சிலர் கூறினார்கள். திருவையாறு, புனவாசல் பகுதியில் சுற்றி

திரிந்த இந்த மோகினிபிசாசு தற்போது பள்ளியக்கிரகாரம் பகுதிக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்கள்.

இதனால் தான் நாங்கள் வீட்டின் முன்பு வேப்பிலையை செருகி வைத்துள்ளோம். மேலும் மஞ்சள் தண்ணீரையும் வீட்டின் முன்பு தெளித்து வருகிறோம். இரவு நேரத்தில் யாரும் வீட்டை விட்டு செல்வது கிடையாது. கதவை திறப்பதற்கே

அச்சப்படுகிறோம். ஆனால் நாங்கள் யாரும் மோகினிப்பிசாசை பார்த்தது இல்லை. எல்லோரும் கூறுவதால் வேப்பிலையை செருகி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆனால் ஒரு சிலர் தங்களுடைய வீடுகளில் வேப்பிலை வைக்கவில்லை. மஞ்சள் தண்ணீரையும் தெளிக்கவில்லை. இது வெறும் புரளி தான். இவற்றில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.