Thursday, January 24, 2008

URGENT : Pls. pass this information / attachments to your Jama'ath

---------- Forwarded message ----------
From: Kuwait Tamil Islamic Committee < ktic.kuwait@gmail.com>
Date: Jan 23, 2008 4:22 PM
Subject: URGENT : Pls. pass this information / attachments to your Jama'ath
To: abkaleel@gmail.com

Assalaamu Alaikkum Warahma...

 

Dear Brother/s :

 

Pls. pass this information / attachments to your Jama'ath by taking photocopy or forwarding this email, here in Kuwait / India / wherever you are.

 

Website    : www.k-tic.com

 

 

Emails  : q8tic@yahoo.com  / ktic.kuwait@gmail.co m  

 

 

To be get updated please subscribe to :

Yahoo Group : http://groups.yahoo.com/group/K-Tic-group

 

 

Wassalaam.

 

 

Education Wing,

Kuwait Tamil Islamic Committee (K-Tic)

Tuesday, January 22, 2008

Urgent Message for Tamil Muslims / ஓர் அவசர செய்தி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஜமாஅத் தலைவர்கள் , நிர்வாகிகள் , ஆலிம்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) அறிவிக்கும்

ஓர் அவசர செய்தி!

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம ...

      தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு இஸ்லாமிய கட்சிகள் , கழகங்கள், இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் பல்வேறு போராட்டங்களுக்கு பின் தமிழக அரசின் 3.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து நடைமுறைக்கு வந்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ் ...!

      இதற்காக பாடுபட்ட, உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன்... பாடுபட்டு கிடைத்த இடஒதுக்கீட்டின் பலன்களை நமது சமுதாயம் அனுபவிப்பதற்குண்டான நடைமுறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதையும் இங்கு சுட்டிகாட்ட விரும்புகின்றது .

      கடந்த கல்வியாண்டில் அதாவது 2007 ம் வருடம் பொறியியல் (Engineering ) கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் நமது முஸ்லிம் சமுதாய மாணவ , மாணவியர் 2.1 விழுக்காடு மட்டுமே சேர்ந்துள்ளனர். இது 3.5 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதற்கு முன்பாக இருந்த நிலை .

      ஆனால், இவ்வருடம் முதல் 3.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்த நிலையில் குறைந்த கட்டணத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் நமது சமுதாய மாணவ , மாணவியர் சேர்ந்து பொறியியல் கல்வி கற்பதற்குண்டான பிரகாசமான சூழல் ஏற்பட்டுள்ளது .

            இந்நிலையில் இவ்வருடமும் அதாவது 2008ம் ஆண்டிலும் கடந்த 2007 ம் ஆண்டைப் போன்றே 2.1 விழுக்காடு மாணவ, மாணவியர் மட்டும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தால் ... ஏறத்தாழ ஆயிரம் (1000) பொறியியல் இடங்களை அதாவது இவ்வருடம் மட்டும் நமது சமுதாயத்தை சேர்ந்த ஆயிரம் பொறியாளர்களை இழக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும் . இதனால் கிடைத்த இடஒதுக்கீட்டின் பயனை / பலனை நமது சமுதாயம் அடைய முடியாது என்பதை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) கவலையுடன் கவனிக்கின்றது .

            பொறியியல் கல்வியில் மட்டுமே நமது சமுதாயத்திற்கு இவ்வளவு இழப்பு என்றால் மருத்துவம் , கலை ( Arts), தகவல் தொழிற்நுட்பம் (I.T ), தொழிற்கல்வி உள்ளிட்ட ஏராளமான பட்ட (Degree ) / பட்டயப் (Diploma ) படிப்புகளில் நாம் இழந்துவிட்ட / இழக்கப்போகின்ற எண்ணிக்கைகளை கணக்கெடுத்தால் நமது சமுதாயத்தின் அவல நிலைகள் நம்மை நிச்சயம் சிந்திக்க வைப்பது மட்டுமில்லாமல் நிகழ்காலத்திலோ / வருங்காலத்திலோ நமது சமுதாய முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எடுப்பதற்கு வழிவகுக்கும். இன்ஷா அல்லாஹ் ...!

நம்மில் சிலர் ஜமாஅத் தலைவராக அல்லது நிர்வாகியாக அல்லது ஆலிமாக அல்லது கல்வியாளராக ... ஏன் பெற்றோராகவாவது இருப்போம் . அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?

            இவ்வருடம் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் தேர்வெழுத இன்னும் சில வாரங்களே உள்ளன. எனவே , நமது சமுதாயத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ , மாணவியருக்கு ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அல்லது மதரஸாவிலும் அல்லது மதரஸா உள்ளிட்ட பள்ளிவாசல் வளாகத்திலும் தனித்தனியாக இலவச பயிற்சி மையம் (Tuition Center) அமைக்க ஒவ்வொரு ஜமாஅத்தார்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் .

            பள்ளிவாசல் மற்றும் அதனுடன் சம்பந்தப்படும் இடங்களில் ஏற்பாடு செய்வதால் பிற சமூக மக்கள் தவறாக நினைக்கவும் வாய்ப்பில்லை . மாணவர்களும் தொழுகையை பேணுபவர்களாக ஆவார்கள் . மாணவிகள் பர்தா அணிந்து வர வாய்ப்பும் ஏற்படும். மாதம் இருமுறை ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்களை கொண்டு மார்க்கக் கல்வியும் கொடுக்கலாம்.

            இது போன்ற இலவச பயிற்சி மையங்கள் (Tuition Center )   கடந்த 4 மாதங்களாக இராமநாதபுரம் மாவட்டம் முழவதும், மதுரை , தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .

            எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் , சிற்றூர்களிலும் , பேரூர்களிலும் அந்தந்த பகுதி புரவலர்கள் உதவியுடன் ஜமாஅத்தார்கள் இலவச பயிற்சி மையங்களை (Tuition Center) தொடங்கி நமது சமுதாய மாணவ, மாணவியரின் கல்வி முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும்.

            இது குறித்து மேலதிக விபரங்களை அறிந்த கொள்ள இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ் . எம். ஹிதாயத்துல்லாஹ் ( அலைபேசி எண்: 9840040067) அவர்களையும் , தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இலவச பயிற்சி மையங்கள் குறித்த தகவல்களை பெற கீழ்க்கண்டவர்களையும் தொடர்பு கொள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic ) வேண்டுகோள் விடுக்கின்றது. 
                                  
இராமநாதபுரம் மாவட்டம்                                                    மதுரை மாவட்டம்

மவ்லவி பஷீர் சேட்            94436 10495                        அல்ஹாஜ் ராஜா ஹஸன்   94432 26374

அல்ஹாஜ் ஜவஹர் அலி       97893 66135                  அல்ஹாஜ் மவ்லவி ஏ. பீர் முஹம்மது பாகவீ                                                                                                                                                             94439 79187

சிவகங்கை மாவட்டம்                                                              திண்டுக்கல் மாவட்டம் 

முஸஃப்பர் அப்துர் ரஹ்மான்  94439 19984                 அல்ஹாஜ் முஹம்மது அலி          94437 40098

பேராசிரியர் ஆபிதீன்             94436 10350                       ஷே க் தாவூத்                          98423 82053

தேனி மாவட்டம்

பேராசிரியர் அப்துஸ் ஸமது    93642 66001                       கம்பம் முஹம்மது அலி                99652 31110                                                     

'பார்த்திபனூர் மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது முஸ்தஃபா அறக்கட்டளை ' சார்பாக ' சிந்தனைச் சரம்' மாத இதழில் (ஜனவரி 2008, துல்ஹஜ் 1428) வெளியிடப்பட்ட இந்த அவசர செய்தி சில இணைப்புகளுடன் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக நமது சமுதாய நலன் கருதி வெளியிடப்படுகின்றது.

 

வருங்கால சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ... நிகழ்கால செல்வங்களுக்கு கல்வி அளிப்போம்!

அறியாமை நம்மை விட்டும் தொலைந்து போக... நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்குவோம்!!

கருத்து வேறுபாடுகளை களைவோம்! கல்விப் பணிகளில் ஒன்றிணைவோம்!!

 


அன்புடன் அழைக்கும்...

 

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic )

 

மின்னஞ்சல் : q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com
இணையதளம் : www.K-Tic.com   
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group 

Sunday, January 20, 2008

முக்கிய அறிவிப்பு!!! (அதிரை எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்டுள்ளது)

முக்கிய அறிவிப்பு!!! (அதிரை எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்டுள்ளது)

 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நமதூர் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த அதிரை எக்ஸ்ப்ரஸ் ( http://adiraixpress.blogspot.com) என்ற இக்கருத்துப் பரிமாற்றக்களம் (Hacking) கடத்தப்பட்டுள்ளது என்பதை இம்மடல் மூலம் அறியத் தருகிறோம்.அயல்நாடுகளில் வசிக்கும் அதிரைவாசிகளுக்கு உள்ளூர் நடப்புகளை முடிந்த வரை அறியத்தருவது என்ற நோக்கில், ஆர்வங்கொண்ட உலகின் பல பாகங்களில் வாழும் அதிரை நண்பர்கள் மற்றும் உள்ளூர் மாணவர்களால் நேரடியாகச் செய்திகளைப் பதியும் வண்ணம் உள்நுழையும் கடவுச்சொல்லை(Password) வெளிப்படையாக வைத்திருந்தோம். சென்ற 10-01-2008 முதல் யாரோ ஒருவரால் கடவுச் சொல் மாற்றப்பட்டு உரிமையாளர்கள் உள்நுழைய முடியாமல் செய்யப்பட்டுள்ளது.

 

நமதூர் மக்களை ஒருங்கிணைத்து நல்ல நோக்கங்களை ஒருமித்தக் கருத்துடன் அணுகி ஊருக்கும் சமுதாயத்துக்கும் பலன் தரவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் உள்ளூர் நடப்புகளை முடிந்தவரை உடனுக்குடன் பகிர்ந்து வந்தோம்.எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் சுயவிளம்பரமின்றி கணினி அறிவு மற்றும் சமுதாயநலன் கொண்ட நமதூர் இளைஞர்கள் சிலரின் உதவியினால் இச்சேவைகளை குறைந்தபட்ச குறைகளுடன் அதிரை எக்ஸ்ப்ரஸ் விரிவாகச் செய்து வந்தது.
 

அல்-அமீன் பள்ளிவாசல் கட்டுவதற்கு இடையூறாக இருந்த ஊர் நலனில் அக்கரையில்லாத சுயநலமிகளையும் பிரமுகர்களையும் ஆதாரங்களுடன் அடையாளம் காட்டினோம் .அவர்களும் நமது சகோதரர்களே என்ற போதிலும் அல்லாஹ்வை வணங்கும் பள்ளிவாசலுக்கு இடையூறாக இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர்களைப் பற்றியச் செய்திகள் முன்னிலைப்படுத்தப் பட்டனவே தவிர எவ்விதத் தனிநபர் வெறுப்போ உள்நோக்கமோ எங்களுக்கு இல்லை.

 

அல்-அமீன் பள்ளி நிர்வாகிகள்மீது பொய்வழக்குகள் புனையப்பட்டு , நீதிமன்ற வழக்குகளில் அலைக்கழிக்கப்பட்ட போது,காரணமானவர்களை அயல்நாடுகளில் வசிக்கும் அதிரைவாசிகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, பொய்வழக்குகளிலிருந்து ஜாமினில் வரவைக்க சட்ட ரீதியில் உதவினோம்.
 

மேலும், நமதூர் மேலத்தெருவைச் சார்ந்த சிறுவன் ஜியாவுதீனுக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக நிதியுதவிகோரி முதல் பக்கத்தில் வைத்த கோரிக்கை பலரையும் சென்றடைந்து அல்லாஹ்வின் பெருங்கருணையால் அச்சிறுவனுக்கு ஆபரேசன் செய்ய போதுமான நிதியுதவி நேரடியாகவே கிடைக்க வழிவகை செய்தோம். அல்ஹம்துலில்லாஹ்.

 

இவையன்றி அரசு அலுவலர்களின் ஊழல்/சுரண்டல்,பஞ்சாயத்து போர்டின் அலட்சியம், பாரபட்ச வரிவசூல்கள், தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடையின்றி நடத்தி அதிரை ஏழை உழைப்பாளிகளை சோம்பேறிகளாக்கும் சுரண்டல் பேர்வழிகள் என சமுதாய நோக்கத்தை மட்டுமே முன்னிருத்தி மிரட்டல்களுக்கும் அச்சுருத்தல்களுக்கும் செவிசாய்க்காமல் அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சியவர்களாகச் செய்து வந்தோம் .

 

அதிரை எக்ஸ்ப்ரஸ் தளத்திற்கு நமதூர் செய்திகளை எங்களுடன் இணைந்து வழங்கும்படி ஏற்கனவே நாங்கள் அணுகியவர்களே இத்தகைய கயமைத்தனம் செய்தவர்கள் என்பதைக் கண்டு வேதனை அடைந்தோம். இணைந்து செயல்பட அழைத்தும் ஏற்காமல், நயவஞ்சமாகச் செய்யல்படும் இவர்கள் புதிதாக தளம் அமைத்தும் செயல்படுகிறார்கள் என்பதும் எங்களது கவனத்திற்கு வந்தது . உள்ளொன்றும் புறமொன்றுமாகச் செயல்படும் இவர்களிடமிருந்து சமுதாய நலன் பேணும் செய்திகளை எதிர்பார்க்க முடியாது.
 

இவர்கள் அதிரை எக்ஸ்ப்ரஸுடன் இணைந்து செயல்பட விரும்பா விட்டாலும் விருப்பப்பட்ட வேறு அடையாளங்களில் நமதூருக்குச் சேவையாற்றுவதை வரவேற்கிறோம். அவர்களைப் பற்றிய அனைத்து ரகசிய விபரங்களையும் வெளியிட்டு அடையாளம் காட்ட முடியும் என்ற போதிலும் . ஓரளவு படித்து, வளர்ந்து வரும் நிலையிலுள்ள அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதால் பெருந்தன்மையாக தற்போதைக்கு விட்டுவிடுகிறோம் .எனவே, முதன் முதலாக எங்களிடமிருந்து பெற்ற கடவுச் சொல்லை அதிரை எக்ஸ்ப்ரஸுக்குக் கொடுத்து மீண்டும் பழைய நிலைக்குத் திருப்புமாறு இங்குப் பொதுவான கோரிக்கையாக வைக்கின்றோம் .

 

கடவுச் சொல்லை திருடியவர்களைப் பற்றி மேலதிக தகவல் கிடைத்தால் தயவு செய்து adiraimm@gmail.com என்ற புதிய மின்மடலுக்கு அறியத் தரவும். அவர்கள் ஒருசமயம் அதிரை எக்ஸ்ப்ரஸை தவறாகப் பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு உட்படுத்த உதவும்.

 

இணைய வசதிகளை அறிந்த எவரும் இதுபோல் செய்தித் தளங்களை சுயமாக செய்ய முடியும்; நேரமும் ஆர்வமும் இருந்தால் அவரவர் விருப்பப்பட்ட வகையில் அமைத்துக் கொள்ளவும் முடியும் . அதிரை எக்ஸ்ப்ரஸ் மூலம் ஓரளவு சேவை செய்ததாக நம்புகிறோம் . அதிரை எக்ஸ்ப்ரஸ் சேவைகளால் மென்மேலும் பயன் இருப்பதாக நம்பினால் , adiraimm@gmail.com என்ற புதிய மின்மடலுக்குச் செய்திகளை அனுப்பலாம் .

 

அதுவரை http://adiraipattinam.blogspot.com (கவனிக்கவும்: அதிரைபட்டினம்.ப்ளாக்ஸ்பாட்) என்ற முகவரியிலிருந்து தொடர்பு கொள்வோம் . தயவு செய்து இச்செய்தியை நமதூர் வாசிகள் புழங்கும் இணைய தளங்கள் மற்றும் மடல் குழுமங்களில் தெரியப்படுத்தவும். இதுநாள் வரை சவூதி, அமீரகம், குவைத், கத்தார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, புருணை ஆகிய நாடுகளிலிருந்து நமதூர்செய்திகளைப் பகிர்ந்து கொண்ட அதிரை நலன் விரும்பிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.