Monday, March 31, 2008

ஏமாந்தியளா!

ஒரு சிலர் ஆண்டுதோறும் ஏப்ரல் ஒன்றாம் தேதியை முட்டாள்கள் தினமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், அன்னையர் தினம் போல இதையும் நினைத்து, அன்றைய தினத்தில், நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் நேரிலோ தொலைபேசி மூலமோ ஒரு பொய்யைக் கூறி அவரைப் ஏமாற்றிப் பின் அவர் ஏமாந்து நிற்கும் நிலையைப் பார்த்து, "நீங்கள் முட்டாளாகி விட்டீர்கள், நான் உங்களை முட்டாளாக்கி விட்டேன்" என்று கூறிச்சிரிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியர்களுக்கு, வயது முதிர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற நண்பர்களுக்கு 'இங்க்' அடிப்பது, 'வண்டிப்பசையை குரும்பையில்' தேய்த்து மற்றவர்களின் சட்டையில் சீல் வைப்பது போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.

மற்றவரைத் துன்புறுத்தி அவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து ரசிப்பதில் அப்படி என்ன மகிழ்ச்சியோ?

இந்த அற்ப சந்தோசத்திற்காக வாழ்நாளில் விலை மதிப்பில்லாத ஒரு நாளை விணாக்குவதா? அன்றைய தினம், பொய் சொல்லி ஏமாற்றுவதில் மாணவர்கள்தான் அதிகம் ஈடுபடுகின்றனர். அதுவும் பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறும் இந்தப் பொன்னான நேரத்தில் இது தேவையா? இதனுடைய விளைவுகளை நாம் நினைத்துப் பார்த்தால் இந்த முட்டாள்கள் தினத்தைக் கடைபிடிக்கவும் வேண்டுமா என்பதை யோசிக்கத் தோன்றும்.

April Fool's Day பிறந்தது எப்படி?

'1564-ம் ஆண்டு பிரான்சை ஆண்ட ஒன்பதாம் சார்லஸ் (Charles IX of France) என்ற மன்னர் புதிய காலண்டர் முறையைக் கொண்டு வந்தார். அதற்கு முன்பு இருந்த காலண்டர் முறைப்படி ஏப்ரல் 1-ம் தேதி யிலிருந்துதான் புத்தாண்டு துவங்கியது. ஆனால் புதிய காலண்டர்படி ஜனவரி 1-ம் தேதியிலிருந்து புத்தாண்டு ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சிலர் புதிய முறையை ஏற்க மறுத்து பழையபடி ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டின் முதல் நாளாகக் கருதி கொண்டாடினர். புதிய காலண்டர் (ஜனவரி 1-ம் தேதி) முறையை ஏற்றுக் கொண்டவர்கள், ஏப்ரல் 1-ஐ முதல் நாளாகக் கொண்டாடிய `பழமைவாதிகளை' முட்டாள்களாக்கிக் கேலி செய்தனர். `முட்டாள்கள் தினம்' பிறந்தது இப்படித்தான்.'

இந்த April Fool's Day பற்றி Mark Twain என்ற அறிஞர் மிக அழகாக கூறுகிறார்,

"நாம் ஓர் ஆண்டின் மற்றைய 364 நாட்களில் எப்படிப் பட்டவர்களாக இருந்திருக்கின்றோம் என்பதை நினைவுபடுத்துவதுதான் இந்த முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதல் தேதியாகும்."

"The first of April is the day we remember what we are the other 364 days of the year. " (- Mark Twain.)

அல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், எந்தக் காலத்தை மனிதன் வீணடித்து விடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.

''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்தும், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத் தவிர''.

நேரத்தை வீணடித்தவன் நாளை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்துக்குரியவன்.

மரணவேலை வந்துவிட்டால் மலக்குகள் ஒரு நொடியேனும் முந்தாமலும் பிந்தாமலும் நமக்கு குறித்திருக்கும் நேரத்தில் கனகச்சிதமாக உயிரை எடுத்து விடுவார்கள். அந்நிலை வருமுன் மரணத்தை நோக்கிய இந்த வாழ்க்கைப் பயணத்தில் கிடைக்கப் பெற்ற இந்நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த முயற்சி செய்வோம்.

ஒரு நண்பனை நீண்ட நாட்களுக்குப்பின் சந்திக்க நேரிட்டது பழைய கதைகள் பேசிவிட்டு, பள்ளி நாட்களில் நடந்த நிகழ்வுகளை அசை போட ஆரம்பிதோம், "அந்த சார் (குறிப்பிட்ட ஆசிரியரின் பெயர் சொல்லி) நல்ல மனுசன், பாவம்டா மாப்ளே... அவருக்கு பட்டப் பெயர் வைத்து ஏப்ரல் 1-ந்தேதி அவர் சட்டையில் நான் இங்க் அடித்ததைப் பார்த்து, மற்றவர்களும் சேர்ந்து இங்க் அடித்தார்கள். அவர் எங்களைப் பார்த்து ஒன்றுமே சொல்லாமல், புன்முறுவல் மட்டுமே செய்தார். அந்தப் புன்முறுவலுக்கான அர்த்தம் என் பிற்கால வாழ்க்கையில் நிறையவே தெரிந்தது. படிப்பும் ஏறவில்லை, வெளிநாடுக்குபோய் சரியான வேலையும் கிடைக்க வில்லை, நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து வருவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது" என்றவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் தவித்தேன்.

(இக்கட்டுரை யாரையும் குறிப்பிட்டு புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, நான் படித்த சில கட்டுரைகளில் என்னைக் கவர்ந்த கருத்துக்கள்தான் இதை எழுதத் தூண்டியது)

(அப்துல் கபூர்- U.S.A)

Sunday, March 30, 2008

மொழிப்பற்று நம் பெயரிலும் அவசியமா?

நமக்கு தாய்மொழி பற்று தேவைதான்,இருப்பினும் நமது கலாச்சாரதில் சிறு குழ்ப்பமும் செய்கிறது.அவர்கள் கூற்றுப்படி உயிறுள்ள மனிதனுக்கு பெயரில் முதல் எழுத்து "உயிர்மெய்" எழுத்துக் கூடாது, உயிர் எழுதுத்தான் வரவேண்டும் என்ற கட்டாயம் -நான் பள்ளியில் படிக்கும்போது இருந்தது. வருகைப் பதிவேட்டில் ரஹ்மத்துல்லாஹ்- இரஹ்மத்துல்லா என்றும், ஹிதாயதுல்லாஹ்வை, இதயத்துல்லா, இரபீக் அகமது,ஹாரூன் ஆரூனாகவும் புதுப்பெயரிட்டு அழைப்பார்கள்,நீண்ட நாளாக இது நடைமுறையில் இருக்க்கிறது.இப்படி அழைப்பதால் நம் அழகிய பெயர்கள் அர்த்தமில்லாமல் ஆகிவிடுகிற்தே! இது சரியா? எனக்கு விடை தெரியவில்லை? விளக்கம் தரவும்.

ஒவ்வொரு விசயத்திலும் அர்த்தமும், ஆச்சர்யமும் இருக்கிறது இஸ்லாத்தில்

நான் சில மாதங்களுக்கு முன் தமிழ்ப் பத்திரிக்கைகளை இணைய தளத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் தினமலர் நாளேட்டில் (தேதி சரியாக ஞாபகம் இல்லை) உலகச் செய்திகள் பக்கத்தில் ஒரு செய்தி வந்திருந்தது. அதாவது தும்மலைப் பற்றி,

அமெரிக்க நாட்டின் விஞ்ஞானிகள் ஏதோ ஒரு நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு மனிதனுக்கு வரும் தும்மலைப் பற்றி நன்கு ஆராய்ந்து அதன் ஆய்வறிக்கையை வெளியிட்டு இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

அதில் மனிதனுக்கு தும்மல் ஏற்படும் பொழுது அவன் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும், முக்கியமாக மூளை, இருதயம் போன்ற எல்லா உறுப்புகளும் தும்மல் வரும் அந்த நொடிப் பொழுதில் (கண்சிமிட்டும் நேரத்தில்) தன் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி விடுகின்றன.
எல்லா உறுப்புகளின் செயல்பாடும் அந்த நொடிப் பொழுதில் நிறுத்தி வைக்கப் பட்டு பிறகு அவை அனைத்திற்கும் உயிரூட்டம் கொடுக்கப்படுகிறது. இதுதான் அந்த ஆய்வறிக்கையின் முடிவு.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் ஏதோ நீண்ட ஆய்வுக்குப் பின் உலகுக்கு புதிய செய்தியை அறிவிப்பதாக அதில் எழுதப்பட்டிருந்தது.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத, அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் என்றால் என்ன என்று கேட்கும் அக்காலத்தில் முரடர்களும், மூடர்களும், கட்டுமிராண்டிகளும் வாழ்ந்து வந்த பாலைவனத்தில் பிறந்த எம்பெருமானார் கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைவன் தனக்கு வஹி மூலம் கற்றுக் கொடுக்கப் பட்ட/வழங்கிய உன்னத அறிவாலும், தன்னிகரில்லா ஆற்றலாலும் இக்கால விஞ்ஞானிகளெல்லாம் அறிய முடியாத, தன் கர்ப்பனைக்கு கூட எட்டாத செய்திகளையும், அறிவியல் உண்மைகளையும், இன்றைய விஞ்ஞான உலகமே வியந்து ஆச்சர்யம் அடையக்கூடிய வகையில் ஏராளமான தகவல்களைத் தந்து அதன் மூலம் ஏகத்துவத்தையும், அதன் மூலம் கிடைக்கும் பலாபலன்களையும் இலவசமாக தந்துள்ளார்கள்.


இங்கு பெருமானாரின் விளக்கம் என்னவெனில், ஒரு மனிதன் தும்மும் பொழுது அவனுடைய உயிர் (அதாவது அவன் உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாடு) நொடிப் பொழுது நிறுத்தி வைக்கப் பட்டு பிறகு இறைவனின் கட்டளைப் படி மீண்டும் அவனுக்கு மறு உயிர் அளிக்கப் படுகிறது. எனவே எவரேனும் தும்மும் பொழுது அல்ஹம்துலில்லாஹ் என்று கண்டிப்பாக சொல்லவேண்டும். அதாவது எனக்கு மறு உயிர் அளித்த இறைவனுக்கு நான் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன் என்பதாகும். அதைக் கேட்ட அருகில் இருக்கும் மனிதர் "யா ரஹ்மக்குமுல்லாஹ்" என்று சொல்ல வேண்டும். அதாவது இறைவனின் கிருபை உங்களுக்கு உண்டாகட்டும் என்பது பொருள்.

இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் (அது எந்த விசயமாக இருக்கட்டும்) அதற்கு தெளிவான விளக்கம் தந்து அதன் மூலம் எப்படி நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும் என கற்றுக் கொடுத்து சென்றிருக்கிறார்கள் அருமை நாயகம் எம்பெருமானார் ரசூல் ஸல்லாஹு அலைஹிவஸல்லம்.

கடைசியாக அந்தப் பத்திரிக்கையின் தும்மல் பற்றிய செய்தி படித்து அதற்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த நபி பெருமானாரின் தெளிவான விளக்கம் மிகவும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுபோல் ஆயிரமாயிரம் உண்மைகளும்,ஆச்சர்யங்களும், அறிவியல் அதிசயங்களும் இஸ்லாத்தில் புதைந்துள்ளன. இதை நாம் முறையாகவும், தெளிவாகவும் விளங்கிப் பயன் படுத்திக் கொள்வோமாக.... (ஆமீன்)

அன்புடன்,

எம்.ஐ. நெய்னா முகம்மது (சவுதியிலிருந்து)

பிரார்த்திக்க வேண்டுகிறேன்!

அன்பானவர்களே,

நமதூர் ஷிபா மருத்துவமனையில் 'ஹோமியோபதி' மருத்துவராக பணிபுரிந்து வரும் மதிப்பிற்குரிய 'டாக்டர் வெங்கடேசன்' அவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (25-03-08) தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்த போது அதிரை-பட்டுக்கோட்டை ரோட்டில் விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்றுவரை (30-03-08) உணர்விழந்த (Coma stage) நிலையில் உள்ளார்.

கணிவு, பரிவு, அடக்கம் போன்ற சிறந்த பண்புகளுடைய 'ஐயா வெங்கடேசன்' அவர்கள் பூரண குணமடைந்து வழமைப்போல் பணிக்கு திரும்ப வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்.

(அப்துல் கபூர்- U.S.A)

Saturday, March 29, 2008

அட கலிச்சல்ல போவ(?)

நம் ஊரில் மிகவும் சர்வ சாதாரனமாக நம் பெண்களிடையே புழங்கும் 'வாழ்த்துச் சொல்' இது. உண்மையில் கலிச்சல்ல போவான் என்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலேயே அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். கலிச்சல் - கழிச்சல் என்றால் பேதி என்று பொருள்படும். அது என்ன கழிச்சல்ல போறது? 'காலரா' நோய் தீவிரமாக தாக்கினால் வாந்தி-பேதி வந்து அதன் காரணமாக மரணம் ஏற்படும். இதைத்தான் 'கழிச்சல்ல போவ' என்று தான் பெற்ற பிள்ளைகளைக் கூட திட்டுகின்றனர்.
இன்னும் சிலர் நேரிடையாக 'பேதியில போவ' என்றும் 'கொல்லையில போவ' என்றும் திட்டுகின்றனர். கொல்லையில போவ என்றால் 'கொல்லை நோய் (கொடிய நோய் - உயிர் கொல்லி நோய்) வந்து உனக்கு மரணம் சம்பவிக்கட்டும் என்று அர்த்தம்.
ஒரு வேளை தன் பிள்ளைகளையோ சகோதரனையோ திட்டும்போது அல்லாஹ் நாடினால் அதுவே பிரார்த்தனையாக ஏற்றுக் கொள்ளப்படும். நினைத்துப் பாருங்கள்.
ஹதீஸ்களில் கூறியிருப்பதாவது:-
'இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதை கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும் உறவினரை பகைப்பதையும் பிரார்த்திக்காதிருக்க வேண்டும்'. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல்: ஹாகிம்)'
'உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்துவிடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிரான அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் நூல் : முஸ்லிம்)'
அது சரி தவறு செய்யும் பிள்ளைகளை வேறு எப்படித்தான் கண்டிப்பது?

நான் மிக மோசமான தவறுகள் செய்தபோது என் தாயார் என்னை எப்படித்திட்டுவார்கள் தெரியுமா?
"அட நல்லா ஈந்திருவா நீ", (அட நீ நன்றாக இருப்பாய்)'

"யாண்டா வாப்பா இப்படி இருக்கிறா?".,

இப்படி என் தாயார் கேட்டவுடன் எனக்கு என்னவோ போல் ஆகி விடும். இனி சிறு தவறுகள் செய்யகூடாது என்ற முடிவுக்கு வந்து விடுவேன்.

'தாய்மார்களையும் சகோதரிகளையும் முயற்சி செய்து பார்க்க சொல்லுங்களேன்!'.

(அப்துல் கபூர்-U.S.A)

Friday, March 28, 2008

புதிய குரான் பள்ளிக்கட்டிடம் திறப்பு.

தக்வாப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வந்த சிறுவர்-சிறுமியருக்கான குரான் பள்ளிக்கட்டிடம் கடந்த 23/03/2008 தேதியன்று மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு திறந்து வைக்கப்பட்டது. எளிமையாக நடந்த இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் உலமாப்பெருமக்கள், முஹல்லாவாசிகள், ஊர்ப்பொதுமக்கள் மற்றும் பள்ளி கமிட்டியார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

குரான் பள்ளி காலை 7 மணியிலிருந்து 8:30 மணி வரைக்கும், மாலை மஹ்ரிப் தொழுகை முடிந்ததிலிருந்து இஷா பாங்கு சொல்லும் வரையிலும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்பி பயன்பெறச் செய்யுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
//யா அல்லாஹ் இப்பள்ளியின் மூலம் எங்கள் பிள்ளைகளின் தீன் கல்வியை வளர்ப்பாயாக, யா அல்லாஹ் உனது திருவேதத்தை அழகிய முறையிலே அர்த்தம் புரிந்து ஓத தவ்பீக் செய்வாயாக. கியாமத்து நாள் வரை இப்பள்ளி நடக்க தவ்பீக் செய்வாயாக ஆமீன். //
படம் மற்றும் செய்தி : அப்துல் பரக்கத்

மரண அறிவித்தல்

அதிராம்பட்டினம், புதுத்தெரு, அஹமது தாஹா, தமீம் அன்சாரி (சக்கீனா ரைஸ் மில்) ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் அப்துல் வாஹித் மரைக்காயர் அவர்களின் மனைவியுமாகிய ' உம்மல் பௌஜியா அம்மாள்' அவர்கள் 27-03-2008 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் புதுத்தெரு (வடபுரம்) இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் 'இண்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்'.

அன்னாரின் ஜனாஸா தக்வாபள்ளி மையவாடியில் மகரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நண்பர் ஷேக் அலி (Lukmans) இத்தகவலை தெரியப்படுத்தி தன்னுடைய சிறிய தாயாரின் மஃபிரத்து நல்வாழ்க்கைக்கு அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி கேட்டுக்கொள்கிறார்.

"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதேயாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்." (அல்குர்ஆன் 29:57)

"உலக வாழ்க்கை (வெறும்) வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 6:32)"

(Gafoore USA)

Thursday, March 27, 2008

அதிரை (உள்ளூர்) தமிழையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பண்டைய காலங்களில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் முன்னோர்களைப் பற்றி பாடப்புத்தகங்களில் படித்திருப்போம். சஙகமேதும் வைக்காமல் (அதாவது ஷம்சுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு சங்கம், கீழ்த்தெரு சங்கம், கடல் கரைத்தெரு சஙகம் என்று அர்த்தமல்ல) வளர்ந்து நம்மூர் மக்களிடம் (பெரும்பாலும் பெண்களிடம்) விளையாடி வரும் சில தமிழ்ச்சொற்களையும், அதன் பொருளையும் சற்று தெரிந்து கொள்ளுங்களேன்.
 
உள்ளூர்த் தமிழ் சொற்களும், அதன் பொருளையும் கீழே காண்போம்.
 
திடுதூரா                                         =   திடீரென
ஈக்கிது                                            =  இருக்கிறது
ஓங்காரம்                                       = வாந்தி
மசக்கம்                                          = மயக்கம்
கோதாரி                                         = வறட்டு பிடிவாதம்
கூப்பாடு                                          = விருந்தழைப்பு
திட்டு முட்டு, செரவடி, தெகரடி  = சொல்லயியலாப் பிரச்சினை
இங்கிரு                                           = இங்கேப் பார்
எசலு, சலுவு                                  = காரணமில்லால் வம்பு இழுத்தல்
வார்த்தை சொல்                          = விவாகரத்து செய்
பொவ்மானம்                                 = திமிர், ஏளனம்
ஒரு வாட்டி                                   = ஒரு தடவை
வல்லாநாலையில                        = தேவையில்லாத சிரமம்/விசயம்
காக்கா                                             = அண்ணன்
அக்கச்சியா                                     = உடன் பிறந்த சகோதரி
காக்கம்மா                                      = தாயின் மூத்த சகோதரி
வாப்பிச்சா                                     = தந்தையின் தாய்
சாச்சி                                              = தாயின் இளைய சகோதரி
தாயபுள்ள                                       = சொந்த பந்தம்
தெக்கத்தியான்                               = தெற்கிலிருந்து வருபவன்
பொரத்தியான்                                = அந்நியன்
இந்தாவுள                                       = பெண்ணே (பெண் பால்)
சும்மாத்துக்கும்                              = வெறுமனே
உட்ரு/உர்ரா                                     = விட்டு விடு
என்னன்டு                                         = என்ன வென்று
குண்டாமத்து                                   = இது ஒரு திருமண ஒப்பந்தம்
நாசுவென்                                         = நாவிதன்
வெலக்காரி                                       = கூடையில் திண்பண்டங்கள் விற்பவள்
உச்சிஉரும நேரம்                           = உச்சி வெயில் நேரம்
மாலமணி நேரம்                             = சூரியன் மறையும் நேரம்
வீதல்ரோடு                                        = உடைந்த கண்ணாடி துண்டு
மாக்குண்டு சாஞ்சிருவான்              = மாண்டு போவான்
சீந்தாப்பு                                              = மழைத்தூரல்
சீக்கனம்,வெள்ளனமே, சுருக்கன     = சீக்கிரம்
பொத்தல்                                            = ஓட்டை
ஒசக்கெ                                               = உயரத்தில்
கானு                                                   = சாக்கடை
சர்சராக்குழி                                        = வீட்டின் நீர் வடிகால் துளை
முடுக்கு                                              = சந்து
அவுருவம்                                          = அரிதானது
நல்ல நாளு, பெரிய நாளு               = முக்கியமான நாட்கள்
இருட்டுக்கசம், மைக்கசம்                 = இருள்
தினுசு, தினுசா                                    = வித, விதமாய்
ஹொதரத்து                                       = அதிசயமாய்
மப்பு                                                     = மேக மூட்டம்
கெழமெராவு                                       = வியாழன் இரவு
மூடாத்து                                             = விவரம் இல்லாதவன்/முட்டாள்
என்னான்டாக்கா                                 = என்ன வென்றால்
லாஹையா                                        = ஒரு மாதிரியா
குட்டான்                                             = கையால் நெய்த கூடை
 
 
தயவு செய்து மேற்கண்ட (உள்ளூர்) சொற்களுக்கு யாரும் தமிழ் அகராதியில் பொருள் தேட முயல வேண்டாம் (காரணம் ஜென்மத்திற்கும் பொருள் கிடைக்காது என்பதனால் தான்).
 
மேற்கண்ட சொற்கள் நம் ஊருக்கு வெளி ஊர்களிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கும், புதிதாக குடியேற உள்ளவர்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

சேகரிப்பும் அதன் மொழியாக்கமும்,

எம்.ஐ. நெய்னா முகம்மது (சவுதியிலிருந்து)

Wednesday, March 26, 2008

எங்களுக்கும் தெரியும்ல......

கடந்த 03/25/08 அன்று அதிரை எக்ஸ்பிரஸில் சகோ. 'அபூ அஸீலா' எழுதிய 'தமிழ் பேசு-தங்கக்காசு'...பதிவில் கட்டுரையின் தாக்கத்தை அறிய, ஒருசில சொற்களுக்குச் சரியான/ நிகரான தமிழ் அர்த்தங்களை பின்னூட்டமிட கேட்டுகொண்டார். என்னால் இயன்றவரை முயன்றுள்ளேன். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன். 
 
1.Helicopter - காற்றாடி விமானம், உலங்கூர்தி, சுரிப் பறனை.
 
2.Switch - விசை, மாற்று
 
3.Visiting card- ஆளறி அட்டை,  வருகையாளர் முகவரிச் சீட்டு (Visitor's card).
 
4.Courier- விரைவு அஞ்சல்
 
Bi-Cycle Spare parts - மிதிவண்டி உதிரிப் பாகங்கள்
Bench- இருக்கை, பலகை,
Pedal-மிதி, மிதிப்படி, ('கொரங்கு பெடலுக்கெல்லாம்' நாம்தான் 'அதிரை அகராதி'யில் தமிழாக்கம் எழுத வேண்டும் )
Mud Guard - சேறு காப்பான்,
Bell- மணி, 
Tube- காற்றுக்குழல்,
Tyre - உருளிப்பட்டை,சக்கரம்,
Pump- காற்றடிப்பாண்
Brake - நிறுத்து(ம்)க் கருவி.
Head Light - முகப்புவிளக்கு
 
(Cycle) Rickshaw - மிதி இழுவை வண்டி, (மிதியிழுவண்டி),  
Helmet - தலையந்தளகம் (தலைக்கவசம் அல்ல),
Dinosaur - தொன்மா (டைனோஸர் அல்ல),
Computer - கணிப்பொறி, கணினி,
Disc - வட்டு,
(Gas) Cylinder - வாயூகலன்,
Grinder - மின்னறவை
X-Ray - ஊடுக்கதிர்,
Xerox - நகல் பொறி, நகலி, (இந்தியாவில் மட்டும் தான் Xerox என்கிறார்கள், மற்ற நாடுகளில் 'Photo copy' , அமெரிக்காவில் வெறும் 'Copy' தான்)
 
 
தமிழ்சொற்களின்  தமிழாக்கம்(?)
 
1) சந்தா - கொடையம், கட்டணம் (subscription)
 
2) சகஜம் - வழக்கம் (Usually-வழக்கமாக), ("அரசியல் இதெல்லாம் சகஜமப்பா" - நன்றி கவுண்டமனி)
 
3) ஆயுசு - வயது
 
4) லாடம் - குளம்புப்பூண் (Horse shoeing  - குதிரை 'லாடம்' அடித்தல்), காவல் நிலையத்தில் வேற 'லாடம்' கட்டுவார்கள்.
 
5) சாக்கு - காரணம் (மழுப்பல்), சாக்கு பை,
 
ஜாக்கிரதை (சாக்கிரதை) - எச்சரிக்கை (விழிப்பு),
 
பம்பு செட்டு (Pump set)- நீர் இறைப்பி.
 
சகோதரர் 'அபூ அஸீலா' எனக்கு 'தங்கக் காசு' தருவதாக இருந்தால்,  'அதிரைவிரைவான்' -(adirai(e)xpress) இனையதள மேம்பாட்டிற்கு அனுப்பி விடவும். 'போயிட்டு போவுது'.
 
-(அப்துல் கபூர்)

Tuesday, March 25, 2008

கனத்த மழைக்குப் பின்னர் அதிரை (புகைப்படச் செய்தி)

அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக பலத்த மழை பெய்துவருகிறது.பள்ளிகளுக்கு விடுமுறைகளும் அளிக்கப்பட்டுவருகிறது.அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதை காணமுடிகிறது. 24.03.08 இன்று மழையின் அளவு குறைந்து வெயில் அடித்தது.இம்மழையின் காரணமாக அனைத்து குளங்களும் ஏரிகளிலும் தண்ணீர் ஏறியுள்ளது.நன்றி: சகோ.முனாஸ்கான்
(படங்கள் மற்றும் செய்திகள்)

அதிரையின் அருந்தவப் புதல்வர்கள்

உலகில் எத்தனையோ பேர் பிறக்கிறார்கள்; சில வருடங்கள் வாழ்கிறார்; பின்னர் இறந்து போகிறார்கள். அவர்களை நினைவில் வைத்திருப்பவர்கள் அனேகமாக உற்றாரும் உறவினரும் மட்டுமே. வாழ்நாளில் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பயனாக வாழ்ந்தவர்களையே வரலாறு தக்கவைத்துக் கொள்கிறது. பிறந்தோம்-இறந்தோம் என்றிராமல் சாதித்தோம் என்றும் சில சாதனையாளர்கள் நம்மைக் கடந்து சென்றுள்ளார்கள்.

வரலாற்றில் உண்மைகளை உரிய நேரத்தில் பதிந்து வைக்கத் தவறினால் பொய்களின் ஆதிக்கம் வலுக்கும். ஆக்கிரமிப்பாளர்களும் கலாச்சாரக் கெடுமதியாளர்களும் முதலில் பாரம்பர்ய நினைவுச் சின்னங்களையும் வரலாற்றையும் சிதைப்பதையே பிரதானமாகக் கொள்வர். சிலுவைப்போரில் எரிக்கப்பட்ட நூலகங்கள், கருவூலங்கள் மற்றும் ஈராக்கில் தகர்க்கப்படும் இஸ்லாமியச் சின்னங்கள், மஸ்ஜிதுகள்,உள்பட நம்நாட்டு பாபர் மஸ்ஜித் தகர்ப்பு ஆகிய எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னணியில் இதுவே காரணமாக இருக்கிறது.

அதிரை எக்ஸ்ப்ரஸ் அரட்டை அரங்கத்தில் சகோதரர் அன்சாரி அவர்கள் நமதூரின் தெருக்களுக்கு பட்டேல், திலகர், அம்பேத்கர் என்று தொடர்பற்றப் பெயர்களைச் சூட்டியுள்ளதைக் குறிப்பிட்டிருந்தார்கள். அம்பேத்கர், படேல், திலகர் போன்றோர் நம்நாட்டின் பிதாமகன்கள் என்பதிலும் அவர்கள் நினைவு கூறப்படத்தக்கவர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் அதிராம்பட்டினம் போன்ற சிற்றூரின் தெருக்களுக்குச் சூட்டும் அளவுக்கு அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

அதிரையில் வாழ்ந்து மறைந்த எண்ணற்றத் தியாகிகள் உளர். அதிரைக்குச் சேவை செய்து சாதனையாளார்களாக நினைவுகூறத் தக்கவர்கள் குறித்து எமது கவனத்தில் வந்தவர்களை மட்டும் இங்கு மீள்பதிவு செய்கிறேன். வாசகர்களும் தங்கள் பங்குக்கு தாங்கள் அறிந்த அதிரையின் அருந்தவப் புதல்வர்களின் பெயர்,குடும்பம்,தெரு,சந்ததியினர் போன்றவற்றையும் போற்றத் தகுந்த அவர்களின் சாதனைகளையும் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொண்டால் நமது இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவக்கூடும்.

1) அ.மு.க. முஹம்மது ஷரீப் மரைக்காயர்

(ஆஸ்பத்திரி தெரு - மறைவு 12-02-1945)

* அதிரையிலிருந்த மஸ்ஜித்களின் தண்ணீர் செலவுக்காக நான்கு கடைகளை வக்ஃப் செய்தது.

* மண்ணபங்குளத்திலிருந்து குடிதண்ணீர் கொண்டு வர வண்டியுடன் மாடுகளையும் இலவசமாக வாங்கிக்கொடுத்தது.

*கள்ளிச்செடிகளை ஒழிக்க ஏற்பாடு செய்தது.

2) செ.நெ. முஹம்மது இப்றாஹிம் ஹாஜியார்

* மார்க்கக் கல்விக்காக "ஸ்காலர்ஷிப்" எனும் உதவித்தொகை வழங்கியது.

* உர்து பள்ளியை நிறுவியது. (தற்போது அதிரையில் இருப்பதாகத் தெரியவில்லை)

3) மு.மீ.முஹம்மது மீராசாஹிப் ஹாஜியார்

*அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்க உதவியது. (அதிரைக்காரன் பதிவில் குறிப்பிடப்பட்டது இவரைத்தான் என்று நினைக்கிறேன்)

*கம்பன் எக்ஸ்ப்ரஸில் சென்னைவரை செல்வதற்கு தனிப்பெட்டியை இணைக்கக்கோரி, நிறைவேற்றவும் பாடுபட்டது.

*கல்லூரி மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகை வழங்கியது.

4) அ.மு.க. முஹம்மது ஷேக் மரைக்காயர் (மறைவு: 1948)

*மேலத்தெரு பழைய ஜும்ஆ பள்ளிக்குத் தானே நெய்த வெள்ளை விரிப்புகளை வழங்கியது.

* அனைத்து சமூகத்தினரின் விருந்துகளுக்கும் சமையல் பாத்திரம், உபகரணங்களை இலவசமாக வழங்கியது.

*விவசாயத்தில் புதிய விதைகளை அறிமுகப்படுத்தி, தஞ்சை விவசாயப் பண்ணையின் பாராட்டைப் பெற்றதுடன், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பல யுக்திகளை இலவசமாக வழங்கியது.

இவர்களன்றி செல்வச்சீமான்களாகவும் கொடைவள்ளல்களாகவும் பரவலாக அறியப்பட்டவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சிலர்:

5) மு.கி.ம. அப்துல் ஜப்பார் மரைக்காயர் - (ஆஸ்பத்திரி தெரு)

6) A.M. அரபு மரைக்காயர் (கிட்டங்கித் தெரு)

7) A.S.ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் (ஆஸ்பத்தித் தெரு)

8) S.M. உமர் தம்பி மரைக்காயர் (மேட்டுத் தெரு)

9) M.M.S. ஷேக் தாவூது மரைக்காயர் (மேலத் தெரு)

10) S.M.S. ஷேக் ஜலாலுத்தீன் ஹாஜியார் (சேர்மன் வாடி)

11) மீ.மு.முஹம்மது தம்பி ஹாஜியார்

12) கிராம முன்ஷீப் (இப்றாஹீம்?) ஹாஜியார் (நடுத்தெரு)

13) ஷேக் முஹம்மது (எ) ஷோமப்பா (நடுத்தெரு)

14) குத்தூஸ் அப்பா (புதுமனைத்தெரு)

15) நெ.மு.க. ஷம்சுதீன் ஹாஜியார் (ஆலடித்தெரு)

16) "கொடைவள்ளல்" காதி முகைதீன் அப்பா (கிட்டங்கித் தெரு)

17) மு.முஹம்மது சாலிஹ் ஹாஜியார் (நடுத்தெரு)

18) முஹம்மது அபூபக்கர் ஆலிம் (ஆஸ்பத்திர்த் தெரு)

19) அண்ணாவியார் (மேலத்தெரு)

20) 'யூனிகோட்' உமர் தம்பி - நடுத்தெரு

அதிரையின் பூர்வீகம் கடற்கரைத் தெருவிலிருந்தே தொடங்கியது. நமது கவனத்தில் பலதெருவையும் சார்ந்த சாதனையாளர்கள்/சேவகர்கள் எட்டவில்லை. இப்படியாகத் தன்னலமின்றி தங்கள் சேவைகளை அதிரைக்கு அர்ப்பணித்த எத்தனையோ பேர் வரலாற்றில் மறைக்கப் பட்டுள்ளார்கள்.

அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து மேலும் பல சாதனையாளர்களை உருவாக்கவும் முன் மாதிரியாகக் குறைந்த பட்சம் அதிரை தெருக்களுக்கு அவர்களின் பெயர்களையிடுவது ஆட்சியாளர்களின் கடமையாகும். இதற்காக பேரூராட்சி மன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரவும் முன்வர வேண்டும். இக்கோரிக்கையை அதிரை எக்ஸ்ப்ரஸ் மூலம் வைத்த சகோதரர் அன்சாரிக்கு நன்றிகள்.

<<அபூஅஸீலா-துபாய்>>

தமிழ்பேசு தங்கக்காசு - தாய்மொழிக் கல்வியின் அவசியம்

"எம்புள்ளை என்னாமா இங்கிலீஸ் பேசுறான் பார்த்தீங்களா?" என்று தங்கள் பிள்ளைகளின் ஆங்கில மொழித் திறமையை மெச்சும் பெற்றோர்கள் ஒரு பக்கம். "ச்சே...! தமிழ் மீடியத்தில் படித்ததால் கஷ்டப்படுகிறேன்" என்று தாய் வழிக்மொழிக் கல்வியை நொந்து கொள்பவர்கள் இன்னொரு பக்கம்.

தமிழல்லாத பிறமொழியறிவு அவசியம் என்ற போதிலும் தமிழைப் புறக்கணிப்பது அறிவான செயலல்ல என்றே நினைக்கிறேன்.குறைந்த பட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது தமிழை பயிற்று மொழியாக ஏற்று ஆரம்பக் கல்வி கற்பது அவசியம்.

ஆங்கிலத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி கல்வி பயின்ற பலருக்கு தமிழில் மிகுந்த தடுமாற்றம் ஏற்படுவதுண்டு. ல,ள,ழ/ ர,ற/ன,ண போன்ற எழுத்துக்களை எங்கெங்கு உபயோகிப்பது என்ற குழப்பம் நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. உரையாடும்போது இக்குழப்பத்தை யாரும் கண்டு கொள்வதில்லை; ஆனால் எழுதும்போது இத்தகைய எழுத்துப் பிழைகள் வாக்கியத்தையே மாற்றி விடும். (அதிரைக்காரர்களில் பலர் "பாட்டுப்பாடு" என்பதை "பாட்டுப் படி" என்றே சொல்கிறோமே ஏன்?:-)

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் பலருக்கு பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் பேரூந்தின் பெயர்ப்பலகையை வாசிக்கத் தெரியாமல் தடுமாறியிருப்பதைக் கண்டிருக்கிறேன். (வெண்டா கோட்டை Vs. சேண்டா கோட்டை) ஆங்கிலம் கற்பது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் தமிழ் மொழியை பிழையின்றி அறிந்து கொள்வது அதைவிட அவசியம்.

தாய்மொழிவழிக் கல்வியினால் மாணாக்கர்களின் கற்றுக் கொள்ளும் திறன் துரிதமாவதாகவும் சொல்லப்படுகிறது. உதாரணமாக மாங்காய் என்பதை (Mango) மேங்கோ என்று ஆங்கிலம் வழியாக அறிந்து கொள்ளும்போது மொழிபெயர்ப்பு மற்றும் அறிந்து கொள்ளுதல் ஆகிய இருவேலைகளைச் ஒரே நேரத்தில் செய்ய வேண்டியுள்ளது. (முதலில் சொற்களைக் கற்றுக் கொண்டு பிறகு தேவைப்பட்ட மொழிமாற்றம் செய்து கொள்ளலாமே!)

நானறிந்த வரையில் தாய்மொழியை விடுத்து பிறமொழிகள் மீதான மோகம் அனேகமாக தமிழர்களிடம் மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறேன். காரணம் என்னவென்று தெரியவில்லை! கட்டுரையின் தாக்கத்தை அறிந்து கொள்ள, கீழ்கண்ட சொற்களுக்குச் சரியான சொற்களை பின்னூட்டலாமே:

1) Bi-Cycle Spare Parts (பெஞ்ச்,சீட்,பெடல்,மெர்கார்ட்,பெல்....)

2) Helicopter

3) Switch

4) Business Card / Visiting Card

5) Courier

அதேபோல், கீழ்கண்ட தமிழ்சொற்களின்? தமிழாக்கத்தையும்! எழுதவும்:

1) சந்தா

2) சகஜம்

3) ஆயுசு

4) லாடம்

5) சாக்கு

<<அபூஅஸீலா>>

Monday, March 24, 2008

அறிவிப்பு; விட்டாச்சு லீவு...??

அதிரை எக்ஸ்ஸில் அரட்டை வசதி இருப்பது நாமறிந்ததே. அதில் நமதூரைச்சார்ந்த வாசகர்கள் பல்வேறு தகவல்களை பறிமாறி வருகின்றனர். அரட்டையின் மூலம் சிறந்த கருத்து செறிவுள்ள வாசகர்களை கண்டறிந்து அவர்களை எழுத்தின்பக்கம் ஈர்க்க இந்த கருவி பயன் தரும் என்று எண்ணினியிருக்கிறோம். நம்முடைய இத்தகைய எண்ணத்தை அல்லாஹ் நிறைவேற்றுவானாக!

அரட்டையில் சிக்கியவர்களை மாதத்தில் ஓரு கட்டுரைகளாவது ஆக்கம் செய்யத்தூண்டும் விதமாக அரட்டைவசதியை மாதத்தில் ஒருவார காலம் பூட்டி வைக்கலாமென்ற எண்ணியிருக்கிறோம். இந்த காலத்தில் வாசகர்கள் தங்களுடைய பால்ய கால அனுபவங்கள், தங்களுடைய வெளிநாட்டு அனுபவங்கள், உள்ளூர் செய்திகள், துணுக்குகள், உலகம், விளையாட்டுச் செய்திகள், இஸ்லாமிய கட்டுரைகள், விடுகதைகள், மருத்துவச்செய்திகள் இன்னும் பலவற்றை அதிரை எக்ஸ்ப்ரஸிற்கு அனுப்பி தங்களுடைய எழுத்தார்வத்தை வளர்த்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு எழுத்துப்பிழைகள் வருமென்று எண்ணினால் நேரிடையாக பதியாமல் மின்னஞ்சலுக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்

அதேசமயம் பதிவுகள் எழுதயியலாதவர்கள் தங்கள் கருத்துக்களை புதிய படைப்பாளிகளுக்கு பின்னூட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்தலாம்.

இந்த அறிவிப்புத் தொடர்பாக உங்களின் மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி
அதிரை எக்ஸ்பிரஸ்

உலகச் செய்திகள்

இன்றுடன் இராக்கில் அமெரிக்க வீரர்களின் கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை 4000 த்தை எட்டியுள்ளது. 2003 ல் அமெரிக்க அதிபர் இராக்கிற்கு விஜயம் செய்தப்பிறகு தான் 97 சதவீத கொலைவெறித்தாக்குதல்கள் நடைபெற்றதாக பிபிஸி இணையதளம் தெரிவிக்கிறது.

சில தினங்களுக்கு முன் மூன்று ட்ரில்லியன் டாலர் செலவிலான இராக் போர் வெற்றி என்று கூறினார் அமெரிக்க அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

US military Iraq toll hits 4,000
--------------------
பாக்கிஸ்தானின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜிலானி அதிபர் முஷரபால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி இப்திகார் சௌதிரியை காவலிலிருந்து விடுவித்துள்ளார்.
----------------

இரான் தன்னுடைய நாட்டின் தேவைகளுக்கான (civilian purposes) அணு உலைகளை அமைத்து வருவதும் அதற்கு எதிராக அமெரிக்க ரௌடி கச்சை கட்டி போருக்கு சவடால் விடுவதும் நாமறிந்ததே. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நேற்று தனது நாடு வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுத்துறைப் பேரவையின் (IAEA) அனுமதியுடன் உலக நாடுகளின் ஒத்தாசையுடன் மின்சாரம் போன்ற தேவைகளுக்காக அணு உலை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டு அதிபர் சர்கோசியுடன் ஒப்பந்தம் கடந்த சனவரியில் கையெழுத்தானது. அமைச்சரவையின் கூட்டம் நேற்று நடைபெற்றப்பிறகு இது பற்றிய அறிவிப்பு வெளியானது.

http://www.gulfnews.com/nation/Government/10199888.html


அணு உலை தொடர்பான சுட்டி

புதிய நீர் தேக்கத்தொட்டி திறப்பு விழா :-(
நமதூர் பழஞ்செட்டிதெரு அ.ஜ மில் அருகில் புதிதாகட்டப்பட்டுள்ள குடிநீர் தேக்கதொட்டியை நமது நகரத்தந்தை(?) திரந்துவைத்தார் இதில் ஏராளமான பாஷிச கூட்டனியினர் கலந்துக்கொண்டனர்.

Saturday, March 22, 2008

துபாய் ஈமான் நடத்திய மீலாதுப் பெருவிழா

துபாய் ஈமான்  அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா 
இந்திய தூதரக அதிகாரி பி.எஸ். முபாரக் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
 
 
துபாய் ஈமான்  அமைப்பு 19.03.2008 புதன்கிழமை மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் மீலாதுப் பெருவிழாவினை நடத்தியது. இறைவசனஙகளுடன் துவங்கிய விழாவுக்கு பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி துவக்கவுரை நிகழ்த்தினார்.
 
 
மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி விழாப்பேருரை நிகழ்த்தினார். துபாய் இந்திய தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக், லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் எம். ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ, ஈமான் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான்,  இலங்கை புஷ்ரா ஆசிரியர் மௌலவி ஏ.எல். பதுறுத்தீன் ஷர்க்கி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
 
துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாது விழாவினையொட்டி பேச்சுப்போட்டியினை அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் வகையில் நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை ஈமான் அமைப்பின் கல்விக்குழுத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ், துணைத்தலைவர்கள் அப்துல் கத்தீம், அஹமது மொஹிதீன், அப்துல் ரஹ்மான், இந்தியா சில்க் ஹவுஸ் பங்குதாரர் அபுதாகிர் உள்ளிட்டோர் வழங்கினர்.
 
பரிசு பெற்றவர்கள் விபரம் வருமாறு :
 
பொதுமக்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் பெண்கள் தட்டிச்சென்றனர். அதன் விபரம் வருமாறு : எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்கும் துபாய் - சென்னை - துபாய் விமானச்சீட்டினை பாத்திமா ஹலீமாவும், இரண்டாம் பரிசினை ரஷாதி ஹஜ் சர்வீஸ் வழங்கும் இலவச உமரா பயண வாய்ப்பை செய்யது ரிழ்வானாவும், மூன்றாம் பரிசினை ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் 500 திர்ஹத்திற்கான பரிசுக் கூப்பனை கதீஜா நஸ்ரியாவும் பெற்றனர்.
 
மேலும் லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் 4 கிராம் தங்க நாணயம் அப்துல் வாஹிதுக்கும்,அல்ஹஸீனா வழங்கும் 200 திர்ஹத்துக்கான பரிசுக் கூப்பன்களை ஹபிப் பாத்திமா, முத்து பீவி பாத்திமா, பாயிஸா ரஹ்மான், கிருஷ்ணமூர்த்தி, முஹியித்தீன், மஷ்ரிக் இண்டர்னேஷனல் வழங்கும் ஜெனார்ட் வாட்சினை ஜஸீலா ரியாஸ், முஹம்மது ரஸீம், ஜஹ்பர் சாதிக், ஹஸீனா அன்சாரி, இராஜவேல் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கான போட்டியில் பரிசுபெற்றவர்கள் ஆவர்.
 
ஆலிம்களுக்காக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசினை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் துபாய் சென்னை துபாய் விமானச்சீட்டு மௌலவி முஹம்மது ரபீக் பிலாலியும், இரண்டாம் பரிசினை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் வழங்கிய 500 திர்ஹம் பரிசுக் கூப்பனை மௌலவி ஹுசைன் மக்கியும் மூன்றாம் பரிசான அல்ஹஸீனா ஜுவல்லர்சின் 200 திர்ஹம் பரிசுக்கூப்பனை சர்புதீன் ஆலிமும் பெற்றனர்.
 
மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் 500 திர்ஹத்துக்கான பரிசுக் கூப்பனை ரஃபீகா சாலிஹ், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் 4 கிராம் தங்க நாணயம் சித்தி ரஃபீகாவுக்கும், அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் 200 திர்ஹம் பரிசுக் கூப்பன் ஹஸீனா காத்தூன், வஸ்பி ஸஜ்ஜாத் இம்தியாஸ், ரஷீதா இப்றாஹிம், காதிரி ஸலீம், சில்மியா ஹபிப் ரஹ்மான், ஷமீஹா பர்வீன் உள்ளிட்டவர்களும் பரிசு பெற்றனர்.
 
கல்விக்குழு செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் நன்றி கூறினார்.
 
நிகழ்ச்சியினை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹியித்தீன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் அப்துல் கத்தீம், அஹமது முஹைதீன், கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின்,  இஸ்மாயில் ஹாஜியார், காயல் ஷேக் முஹம்மது உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
தகவல் : முதுவை ஹிதாயத்
 
 
 
 

 

 


கொட்டிக்கிடக்குது துபாயிலே....?


சுமார் 20-25 வருடங்களுக்கு முன் தலா அரைக்கிலோ எடையுள்ள பேட்டரிக் கட்டையில் இயங்கும் ATC ரேடியோக்கள் பிரபலமாக இருந்த காலத்தில் சவூதிக்கு பொருளீட்டச் சென்ற நமது மூத்தத்தலைமுறையினர் SANYO / National Panasonic கேசட் ப்ளேயர் ஒன்றை மூன்று வருடம் கழித்து ஊர்வரும் போது தன்னுடன் கொண்டு வருவர்.

இத்தகைய ரேடியோக்கள் தற்போது புழக்கத்திலுள்ளதா என்று தெரியாது; FM உடன் கூடிய மல்டி மீடியா அலைபேசிகள் 1000-2000 ரூபாயில் கிடைக்கும் தற்காலத்தில் அனேகமாக நரிக்குறவர்களிடம் மட்டுமே இத்தகைய ஹெவி வெயிட் ரேடியோக்கள் இருக்கக்கூடும் அல்லது அவர்களும் 3G /மல்டிமீடியா மொபைலுக்கு மாறி இருக்க்கூடும்!

சவூதியிலிருந்து கேசட் ப்ளேயருடன் நூறு மஸ்ஸலா,நாகூர் ஹனீஃபா பாடிய பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை...மற்றும் ஷெக் முஹம்மது பாடிய கப்பலுக்குப் போன மச்சான், கண்ணு ரெண்டும் ஆசை வச்சான்... ஆகிய இஸ்லாமியக் கீதங்களுடன் (?) "கொட்டிக் கிடக்குது சவூதியிலே" என்ற சமுக நாடகம் ஒன்றையும் கொண்டு வருவார்கள். நகை நட்டை வச்சோ அல்லது கடன-உடன வாங்கியோ பணம் கட்டி சவூதிக்கு வந்து கஷ்டப்படுபவர்களைப் பற்றிய சமூக நாடகம் அது.


இருபது வருடங்களுக்கு முன்பிருந்த அதே கஷ்டங்களும் புலம்பல்களும் இன்றும் தொடர்கின்றன என்பதை 'ரெண்டுங்கெட்டான்' தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள், இளைய தலையதலைமுறையினரை எச்சரித்து விழிப்படையச் செய்யும் முயற்சியாக சில ஆலோசனைகள்:

*படித்து முடித்ததும் உடனடியாக ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை,படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் மனதில் விதைப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

*படிக்கும் காலத்தில் எதற்காகப் படிக்கிறோம் என்று தெரியாமலேயே +2 படித்த பிறகு ஏதாவது ஒரு டிகிரியை எடுத்துப் படித்து விடுகிறார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட படிப்பிற்குறிய வேலை கிடைக்காமல், கிடைக்கக் கூடிய ஏதேனும் வேலையைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

*குறிக்கோளின்றி படித்துவிட்டு,போதிய அனுபவமின்றி வெளிநாடு வந்தால் 12-15 வருடப் படிப்பை ஆபீஸ்பாய் அல்லது எடுபிடி வேலைக்காக தியாகம் செய்ய நேரிடும். இத்தகைய வேலைகளுக்கு SSLC படித்திருந்தாலே அதிகம் என்பதை மனதில் வைக்கவும்.

*படித்து முடித்து, போதிய அனுபவங்களுடன் வெளிநாடுவரும் சிலர் தங்கள் பயோடேட்டா/RESUME/CV யில் POSITION APPLIED FOR:___________ எனுமிடத்தில் "ANY SUITABLE JOB" என்று தங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கிறார்கள்! இதன்மூலம் உங்கள் தகுதியை குறைத்து மதிப்பிட வாய்ப்பளிக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும்.

*துபாயிக்கு விசிட் விசாவில் வந்து வேலை தேடுவது சுலபம் என்றாலும் சவூதியைவிட அதிகமான போட்டியாளர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் இந்நாட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட ஏதேனும் பிறமொழியை அறிந்திருப்பது லாஜிம்/Important/ஜரூர் etc.,


*அலுவலகங்களில் ஆண்களுடன் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட சவூதியில் மிக மிகக் குறைவு.எனவே துபாய்க்கு விசிட் விசாவில் வர முடிவெடுக்கும் முன்பு சவூதி வேலைவாய்ப்புக்களையும் சற்று அறிந்துகொள்வது நலம். "துபாயில் வேலை தேடுவது/கிடைப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்குமென்று முன்பே தெரிந்திருந்தால் அழகா சவூதிக்காச்சும் சென்றிருப்பேன்" என்றோ அல்லது ச்சே................இன்னேரம் லண்டனுக்காச்சும் அமெரிக்கவுக்காச்சும் அடிச்சிருக்கலாம் ? என்ற புலம்பல்களைத் தவிர்க்கலாம்.

*குறைந்தது 2-3 வகையான பயோடேட்டாக்களை வைத்திருக்க வேண்டும். எந்த நிறுவனத்திற்கு/வேலைக்கு எந்த பயோடேட்டாவை அனுப்பினோம் என்பதைக் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நேர்முகத்திற்கு அழைப்பவரிடமே "எந்த வேலைக்கு அழைக்கிறீர்கள்? என்று கேட்கும் துர்பாக்கிய நிலை ஏற்படக்கூடும்!

தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்று கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல! I am not responsible / It is not my job - இந்த வார்த்தையையும் துபாயில் அடிக்கடி கேட்க நேரும்! ஆகவே உஷார்! உஷார்!! உஷார்!!!

மச்சான்/மாமா/காக்கா/தம்பி/மாமனார் தருவிக்கிறேன் (விசா அனுப்புறேன்) சொல்லியிருக்காரு என்று உள்ளூரில் வெள்ளைவேட்டி பழுக்கும் வரை புட்பால்/கிரிக்கெட் மேட்ச்-மீன்மார்க்கட்-ஜாவியா-சலாத்து நாதியா-வலிமா விருந்து என்று 'ஊர்சுத்தி உமர்' காக்கா மாதிரி இருக்காமல் உருப்படியா அதிரைக்காரன் மாதிரி இருக்க வாழ்த்துக்கள். :-)))

-அதிரைக்காரன்-

Thursday, March 20, 2008

அதிரை கல்லூரியில் வளாக தேர்வு !

நமது காதிர்முகைதீன் கல்லூரி வரலாற்றில் முதல்முறையாக ரிலையன்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்க்கு தகுதியுள்ள ஆட்களை தேர்வு செய்ய வரும் 23.03.2008 அன்று கல்லூரிக்கு நேரில் சென்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக இன்றுகாலை நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்துள்ளனர் கல்லூரி நிர்வாகம்.

இதை கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு வாழ்வில் வெற்றிபெற "அதிரைஎகஸ்பிரஸ்" வாழ்த்துகிறது.
-JP-

Tuesday, March 18, 2008

அரசு மருத்துவமனை தொடர்பான அய்டாவின் கடிதம்

சவூதியிலிருந்து இயங்கும் அய்டா மூன்று வருடங்களுக்கு முன் நமதூர் அரசு மருத்துவமனை தொடர்பாக அரிமா சங்கத்திற்கு எழுதிய கடிதத்தின் நகல்.படத்தை சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.

இதுபோல் வெளிநாடுகளில் இயங்கும் நமதூர் அமைப்புகள் தங்கள் பணிகளை அதிரை எக்ஸ்ப்ரஸில் பகிர்ந்துக்கலாமே!

தொடர்புடைய செய்தி;
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை புதுப்பிக்கப்படும்

இம்மாத வெள்ளிநிலாவில்...

திருந்தாத ஊடகங்கள்... என்ற தலைப்பில் (சமிபத்தில் கைதான தென்காசி பாஷிச பயங்கரவாதிகளை கண்டுகொள்ளாத ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் கட்டுரை)

மேலும் நமது அதிரை எக்ஸ்பிரசில் வெளியான அதிரைக்காரரின் "மாவரைத்தாயா மஞ்சளரைத்தாயா...?(அதிரை பேரூர்மன்றம் வரிவசூல் என்ற பெயரில் தான்தோன்றிதனமாக செயலாற்றுவதை அப்பட்டமாக தோலுரித்து காட்டும் கட்டுரை புகைபடங்களுடன்)

இன்னும் பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பான செய்திகளுடன் வெளிவந்துவிட்டது. வெள்ளிநிலா படிக்க தவராதீர்!

தற்பொழுது இலவசமாக வழங்கும் இவ்விதழ் இனிவரும் மாதங்களிலிருந்து விற்பனைக்கு தயாராகிறது பொதுமக்கள் இப்பணி தொய்வின்றி தொடர தோல்கொடுக்க வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் அலைப்பேசிகளை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.: 9344872523 , 9952916167.

Monday, March 17, 2008

ஷிஃபாவுக்கு வைத்தியம்!!!


அதிரை ரூரல் டெவலப்மெண்ட் (ARDA) மேற்பார்வையில் செயல்பட்டு வரும் ஷிஃபா மருத்துவமனை,பல்வேறு காரணங்களால் உள்ளூர் மக்களின் ஆதரவின்றி பல்வேறு சிரமங்களுக்கிடையில் செயல்பட்டு வருகிறது. சாதாரண காய்ச்சல் தலைவலிக்குக்கூட பட்டுக்கோட்டைக்குச் சென்று வைத்தியம் பார்க்கும் மோகம் நமதூர் மக்களிடம் மேலோங்கியுள்ளது.

இச்சசூழலில் அதிராம்பட்டினம் அரசுப் பொது மருத்துவமனை 42.5 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளதை அறிந்தோம். இதனால் நமதூருக்கும் ஷிஃபாவுக்கும் ஏற்படும் சாதக பாதகங்களை அலசும் ஓர் ஆய்வு.

அதிரை மக்களின் தாராள மனம், தயாள குணம் ஆகியவற்றால் பொதுநலன் கருதி நீண்டகால நோக்கில் அரசுக்கு இலவசமாக அதிரை முஸ்லிம்களால் வழங்கப்பட்ட நிலத்தில்தான் தற்போதைய அரசு மருத்துவமனை 1947 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனை நிறுவப்பட்டப் பின்னர் அது அமைந்துள்ள ஷாதுலியா தெரு, பின்னர் ஆஸ்பத்திரித் தெரு/ ரோடு என்று பெயர்மாற்றம் பெற்று அறியப்படுகிறது.

1980களில் வளைகுடா நாடுகளில் நமதூர் மக்கள் பொருளீட்டத் துவங்கிய காலகட்டத்தில் நமதூரில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால், பட்டுக்கோட்டை,தஞ்சாவூர், சென்னை என்று வைத்தியம் பார்க்க வேண்டிய நிலை இருந்தது. அதிரைக்காரர்களின் அரபு நாட்டு சம்பாத்தியத்தை கருத்தில் கொண்டு ஆளாளுக்கு சுரண்டினர்.

முஸ்லிம்களால் நிலம் வழங்ககப்பட்ட அதிரை அரசு பொதுமருத்துவ மனையில் முஸ்லிம்கள் பயன்பெற முடியாத நிலைக்குக் காரணங்களாக கீழ்கண்டவை இருந்தன:

1) பல்வேறு சமூக மக்களும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்படுவதால் கோஷாமுறையைப் பேணும் முஸ்லிம் பெண்கள் சங்கோஜத்துடன் தங்கியிருந்து மகப்பேறு பார்க்கும் அவலநிலை.

2) பெண்களுக்கென தனியாக பெண் மருத்துவர் இல்லாத காரணத்தினால், முஸ்லிம் பெண்களிடமிருந்து அரசுப்பொது மருத்துவமனை முற்றிலும் அன்னியப்பட்டுப் போனது.

3) அடிதடி,வெட்டுக்குத்து போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்படும். மென்மையான சுபாவம் கொண்ட அதிரைவாசிகள், அரசு பொதுமருத்துவமனையை தவிர்த்தனர்.

மேற்கண்ட காரணங்களால் நமதூருக்கென சகல வசதிகளும் கொண்ட நம்பகமான, குறைந்த செலவில் வைத்தியம் பார்க்க நவீன மருத்துவமனை அவசியம் என்று கருதிய நல்லுள்ளம் படைத்தோரின் முயற்சியினால் அரபு நாடுகளிலும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் பொருளீட்டிய அதிரைவாசிகள் தங்கள் ஒருமாத ஊதியத்தை அதிரை ஷிஃபா மருத்துவ மனைக்காகக் கொடுத்து பட்டுக்கோட்டை ரோட்டில் கரிசல்மண் (கருச்ச மணி) குளத்திற்கு அருகில் ஷிஃபா மருத்துமனை இயங்கி வருகிறது.

ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்ட ஷிஃபா மருத்துவமனை தொடங்கிய ஓரிரு வருடங்கள் மிகுந்த முன்னேற்றத்துடன் அதிரை மக்களின் நம்பிக்கையைப் பெற்று இயங்கி வந்தது. அவசர ஊர்தி, வாரம் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வருகை, ECG, X-Ray, Scan, LAB,மருந்தகம் ஆகிய வசதிகளோடு ஹோமியோபதி மருத்துவப் பிரிவும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஷிஃபா மருத்துவமனைக்காக நிதிவசூலிக்க அரபு நாடுகளுக்கு வந்தவர்கள், நன்கொடை செலுத்துபவர்கள் பங்குதாரர்களாகக் கருதப்பட்டு, இலாபத்தில் பங்கு,இலவச/சலுகைக் கட்டணத்தில் மருத்துவம் என்று ஆசைகாட்டி நிதி வசூலித்ததாகவும், அவ்வாறு நன்கொடை செலுத்தியவர்கள் பின்னர் புறக்கணிக்கப்பட்டதாகவும் வளைகுடாவாழ் அதிரைவாசிகள் சொல்வர்.

ஷிஃபா மருத்துவமனையின் வசதிகளையும் வருவாய் வாய்ப்புகளையும் ஆய்வு செய்த சென்னை அப்பல்லோ மருத்துவக் குழுமம், ஷிஃபா மருத்துவ மனையை ஏற்று நடத்த முன்வந்ததாகவும், சேவை நோக்கில் துவங்கபட்ட ஷிஃபா, இலாப நோக்கில் தடம்மாறி அதிரை மக்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்பதால், ஷிஃபா நிர்வாகம் தவிர்த்து விட்டதாகவும் சொல்லப்படுவது எந்தளவு உண்மையென்று தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன் மேலத்தெரு ஜும்ஆ பள்ளியில் அதிரையின் பெருந்தலை/கைகள் தலைமையில் நடந்தக் கலந்தாலோசனையில் ஷிஃபா நிர்வாகத்தில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை ஏற்று, இதற்கு தயாராக இருக்கும் இளைஞர்கள் யாவர் என்று நிர்வாக்த்தினரால் கேட்கப்பட்டதற்கு அப்போதைய சூழலில் யாருமே முன்வரவில்லை என்று AWC மின்மடற்குழுவில் பரிமாறப்பட்ட மடலிருந்து அறிந்தோம்.

ஷிஃபா மருத்துவமனையின் நிர்வாகச் செலவு மற்றும் திட்டங்களுக்கு ஜகாத், சதக்கா நிதிகளைக் கோரும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டதை கடந்த வருடம் பலருக்கும் அனுப்பப்பட்ட தனி மின்மடல்களின் மூலமும் அறிந்தோம்.

இப்படியாக ஊர்மக்களின் நன்மையைக் கருதி, இலாப நோக்கமின்றி துவங்கப்பட்ட அதிரை ஷிஃபா மருத்துவமனை இன்னும் சில வருடங்களில் முற்றிலும் பின்தள்ளப்பட்டு மூடப்படும் அபாயம் உள்ளது. அப்படியொரு நிலையில், நஷ்டத்தில் இல்லாவிட்டாலும் இலாபமின்றி இயங்கிவரும் ஷிஃபா ஆஸ்பத்திரி, வணிக வளாகமாகவோ அல்லது வேறு வளாகமாக மாற்றப்பட்டால் இழப்பு அதிரை மக்களுக்கே.

இன்னொரு புறம் சேதுச்சாலைத் திட்டத்தினால் அதிரை பொது மருத்துவ மனை பிஸியாகி அரசின் நலத்திட்டங்கள் அரசு மருத்துமனைக்கேச் செல்லும். ஏற்கனவே பயன்படுத்தப்படாமல் தவிர்த்து வந்த அரசுப் பொது மருத்துவமனையை அதிரைவாசிகள் இனியும் பயன் படுத்துவார்களா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

இந்நிலையில் ஷிஃபாவுக்கு மூடுவிழா நடக்காமல் தவிர்க்க வேண்டுமானால் ஷிஃபா நிர்வாகம் கீழ்கண்ட ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும்.

1) துவக்கத்தில் நன்கொடையளித்த புரவலர்களின் பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அவர்களுக்கு மருத்துவத்தில் முன்னுரிமை, சலுகை மற்றும் இலாபத்தில் பங்கு ஆகியவற்றை வாக்களித்தபடிச் செய்ய முன்வர வேண்டும்.

2) ஷிஃபா மருத்துவமனையின் கிளைகளை பரவலாக அதிரையில் 4-5 இடங்களில் ஏற்படுத்தி சிறிய வைத்தியங்களுக்கு கிளைகளிலும் தேவைப் பட்டால் கிளை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் தலைமையகத்திலும் வைத்தியம் பார்க்கலாம்.

3) பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்கு வருடத்திற்கு ஓரிரு முறை இலவச மருத்துவ ஆலோசனை கேம்ப் நடத்தி,அதிரையின் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நம்பிக்கையையும் பெறலாம்.

4) நடமாடும் மருத்துவ ஊர்திகளை மாதம் அல்லது வாரம் ஒருமுறை அதிரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உலவவிட்டு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி சுற்றுவட்டார மக்களின் நன்மதிப்பையும் பெறலாம்.

5) கருத்தரித்த நாள் முதல் மகப்பேறு வரையிலும் ஷிஃபாவை தொடர்ந்து நாடும் இல்லத்தரசிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் வருடத்திற்கு ஓரிருவரைத் தேர்ந்தெடுத்து குழந்தைக்கு ஐந்தாம் வகுப்புவரை இலவசக் கல்வி அல்லது இலவச மருத்துவம் என ஊக்கப்படுத்தி அதிரை மக்களுக்கு ஷிஃபாவின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தலாம்.

6) பைத்துல்மால், லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி சேவைகளை பரஸ்பரம் விளம்பரப் படுத்தலாம்.

7) NRI அதிரைவாசிகளை மீண்டும் முறைப்படி பங்குதாரர்களாகச் சேர்த்து நிதி ஆதாரங்களைப் பெருக்கி பரஸ்பரம் பயனடையலாம்.

8) குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை குறைந்த கட்டணத்தில் செயல்படுத்துவதன் மூலம் நிலையான வாடிக்கையாளார்களைப் பெறலாம்.

9) ஷிஃபா மீதான குற்றச்சாட்டுகளையும் குறைகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க தெருவாரியாக சமுதாய நோக்கில் செயல்படும் முகவர்களை நியமிக்கலாம். இதன் மூலம் அவதூறுகளிலிருந்து நிர்வாகம் தூய்மையடையலாம்.

10) மருந்தகத்திற்கு (Pharmacy) தனியாகப் பங்குதாரர்களைச் சேர்த்து, ஆதாயமாக இலாபம் அல்லது சலுகைவிலையில் மருந்துகளை விற்பதன் மூலம் இலாபகரமாக மருந்தகத்தை நடத்தலாம்.

மேற்கண்ட ஆய்வுகள் ஷிஃபா நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் நேரில் பார்த்த,கேட்ட,கேள்விப்பட்டத் தகவல்களை வைத்து சுயமாக எழுதப்பட்டவை.இதுகுறித்த கருத்துக்களை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் பகிர்ந்து கொண்டால் நிச்சயமாக ஷிஃபா மருத்துவமனை புத்தணர்வு பெற்று குணமடையும் :-) என்று நம்புகிறேன்.

துபாயிலிருந்து அபூஅஸீலா

Saturday, March 15, 2008

Education Loan form for Tamil Muslim Students

Dear Brothers,Assalaamuallikum
TAMAM (TAmil Muslim Association Muscat) is helping the Muslim students in our state every year financially.This year too the scheme is launched and please check the attachment and provide the necessary details on or before 30-05-2008 and avail the loan.InshaAllahPlease circulate this and let our brothers make use of this
Please remember in your duas
Wasalaam
Abu Bucker
iabubuckerin@yahoo.com

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க . . .


வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க . . . .
 
வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கல்லூரிகளில் B.E./B.Tech. / B. Arch. மற்றும் முதுநிலைப்படிப்புகளில் சேர்க்க 2008 -09 ஆம் கல்வியாண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
கிண்டி பொறியியல் கல்லூரி
ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரி
கட்டிடக்கலை & திட்டவியல் பள்ளி ( School of Architecture & Planning Campus )
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி
 
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய www.annauniv. edu
அல்லது
இயக்குநர் ( சேர்க்கை )
சென்டர் ஃபார் இண்டர்நேஷனல் அஃபையர்ஸ்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
சென்னை 600 025
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 200 அமெரிக்க டாலர் வங்கி வரைவோலையுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு இளநிலைப் படிப்புக்கு 06 ஜுன் 2008 க்கு முன்னதாகவும், முதுநிலைப் படிப்புகளுக்கு 30 ஜுன் 2008 க்கு முன்னதாகவும் அனுப்ப வேண்டும்.
 

Director ( Admissions ) / Director
Centre for International Affairs
Anna University Chennai
Chennai 600 025
 
 
Source : Gulf News March 6,2008 Advt in Business section
Page No. 38

.

__,_._,___

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை புதுப்பிக்கப்படும்

ரூ.421/2 லட்சம் மதிப்பில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை புதுப்பிக்கப்படும்
ரெங்கராஜன் எம்.எல்.ஏ. தகவல்

அதிராம்பட்டினம், மார்ச்.13-அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை ரூ. 42 1/2 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரெங்கராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.

மருத்துவமனை தினவிழா

அதிராம்பட்டினத்தில் மருத்துவமனை தினவிழா அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. டாக்டர் சண்முகவேல் வரவேற்றார். பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல்வகாப் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் மங்கையர்கரசி, துணைத்தலைவர் ராமகுணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் ஆர்.ராஜேந்திரன், செல்வராஜ், சீனிவாசன், சுவாமிநாதன், காவல்துறை ஆய்வாளர் கண்ணதாசன், உதவி ஆய்வாளர் செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-

பழமையான கட்டிடம்

அதிராம்பட்டினம் அரசு பொதுமருத்துவமனை 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்டு மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் பக்தவாச்சலத்தால் திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனை 61 ஆண்டுகளாக செயல்பட்டு பழமை வாய்ந்த கட்டிடமாக உள்ளது. அதனை புதுப்பிக்க என்னிடம் அதிராம்பட்டினம் பேரூராட்சிமன்ற தலைவர் அப்துல்வகாப் பலமுறை கேட்டுக் கொண்டார்.

அதன்படி இம்மருத்துவமனைக்கு ரூ. 42 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மருத்துவமனை புதிய பொலிவு காண உள்ளது. அதற்காக டெண்டர் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் நியமனம்

மேலும் இம்மருத்துவமனையில் 13 பேர் மட்டும் பணியாற்றி வருகிறோம் என டாக்டர்கள் சொன்னார்கள். 5 ஊழியர்கள் இடம் காலியாக உள்ளது என கூறினர். அந்த காலி இடம் விரைவில் நிறைவு செய்யப்படும். பெண் மருத்துவர் நியமிக்கப்படுவர்.

சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த அளவுக்கு பெரிய மருத்துவமனை கிடையாது. இதனை கருத்தில் கொண்டு ஒதுக்கியுள்ள ரூபாயை கொண்டு ஆபரேஷன் தியேட்டர், டெக்னீசியன் லேப் போன்ற மருத்துவதுறை சம்பந்தமான கருவிகள் வாங்கி கொடுக்கப்படும். புதிய வடிவமைப்பில் கட்டிக் கொடுக்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

முடிவில் டாக்டர் சூரியமூர்த்தி நன்றி கூறினார்.

Source: http://www.dailythanthi.com/article.asp?NewsID=399508&disdate=3/13/2008&advt=2

Posted by ஜமீல் to அதிரை Express at March 13, 2008 3:12 PM

கதை கேளு, கதை கேளு, கச்சத்தீவின் கதை கேளு....

தினம் தினம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வர். இதனைத் தொடர்ந்து கடலோர கிராமங்களில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவும், உடனே தமிழக அரசியல் கட்சிகள் 'கச்சத் தீவை மீட்போம்' என்று ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்தி, வேறொரு சம்பவம் நடக்கும்  வரை, மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் கச்சத்தீவின் கதையை பார்ப்போம்.
 
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 13 மைல் தூரத்திலும் இது அமைந்துள்ளது. கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது.

கச்சத்தீவில் கிறிஸ்தவ தேவாலயம் (CHURCH) ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் இங்கு திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில் செல்வார்கள்.

இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிப்பது உண்டு. அங்கு சற்று ஓய்வு எடுத்து, மீன் வலைகளை காய வைப்பர். கச்சத்தீவில் குடிதண்ணீர் இல்லாத்தால், அங்கு மக்கள் நிரந்தரமாக குடியிருக்க வாய்ப்பில்லாமல் போனது.  

கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது  ஏன் ?

கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.  ஆனால், கச்சத்தீவு தங்களுக்கே சொந்தம் என்று பல ஆண்டுகளாக  இலங்கை உரிமை கொண்டாடியது.

1974 மே மாதம் 18 ஆம் தேதி, ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில், இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.
ஐ.நா. சபையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு,  இந்தியா பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்தது.
 
'இதற்கு கைமாறாக இலங்கை அரசு கச்சத்தீவை இந்தியாவிடமிருந்து கேட்டது.'

இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் டெல்லி வந்திருந்த போது, பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது.

 இதற்கு தமிழக அரசும், தமிழக மக்களும் கடுமையாக எதிர்த்தனர், பலத்த எதிர்ப்பையும் மீறி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று மத்திய அரசு 'சர்வாதிகாரப் போக்குடன்' முடிவு செய்து,  இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு '28-6-1974' அன்று டெல்லியிலும், இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில், பிரதமர் இந்திராகாந்தி கையெழுத்திட்டார்.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: "இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காக இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை."

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து இன்றுவரை  இலங்கை படைகள், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பக்கம் வந்தாலே ஒன்று சுடுகிறது அல்லது பிடித்துக் கொண்டு போய் இலங்கை சிறைகளில் அடைக்கிறது.
 
கச்சத்தீவின் உரிமையை இந்தியா மீண்டும் முடியுமா?
 
பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள "பால்மஸ் மியான்ஜஸ்' எனும் தீவு (Palmas Miangas Island) , நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் பயன்படுத்தாமல் இருந்ததால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் 'உலக நீதிமன்றத்தில்' (The International Court of Justice in Hague) வழக்குத் தொடர்ந்து, இழந்த தீவின் உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல நாமும் வழக்குத் தொடர்ந்து, கச்சத்தீவில் உரிமையை  மீண்டும் பெறலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 
 
(இக்கட்டுரை புத்தகங்கள், வலைதளங்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் திரட்டப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இயற்றப்பட்டது, இதைப் படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த விவரங்களை அல்லது மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அதையும்  பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தலாம்.) - Abdul Gafoor

Wednesday, March 12, 2008

ஊர் சுத்தி உமருடன் ஓரு மாலைப் பொழுதில்...

யார்ரா இவரு, சக்கைப் போடுறாரு, இவர கண்டு பிடிச்சு எப்படியாவது பல விசயத்த கரந்து அவர முந்திக்கனும்னு நானும் சுத்திகிட்டே இருந்தேன்.

ஒரு வழியா கண்டு பிடிச்சு பேச்ச போட்டேன். மனுசர் புதிதாக ஹிந்தி கத்துன்டு இருக்காராம், தமிழுக்கு மரியாதை இல்லன்டு வர்றவங்க போறவங்கட்ட புலம்பின்டு இருக்காராம். கேட்டால், சிதம்ப்ரம் வழியா ஊருக்கு வந்தாராம். ஆனால் பாவம் அவருக்கு கியாராஹ்,பாராஹ், தேராஹ் 'க்கு அப்புறம் வரமாட்டேங்குதாம். திட்டிட்டே இருக்கார்.

நைசா போட்டு வாங்கினேன், காக்கா இப்ராகிம், 13 ஓட்டு வித்தியாசத்துல தான் ஜெயிச்சாராமே?

அட நீ வேற தம்பி, மந்திரி கோ.சி. மணி, முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலு, தற்போதைய எம்.எல்.ஏ திரு ரெங்கராஜன் னு வந்து ஏதோ முதல்வர் தொகுதில நடாக்குற இடைத்தேர்தல் போல இருந்துச்சுப்பா, வெறும் 700 வோட்டுக்கு.

ஓ அப்படியா எனக்கு தெரியாதே. அவரோ, அட போங்கப்பா, உங்களுக்கு ஊர்ல நடாக்குறது ஒன்னுமே தெரியாதுப்பா.

அட என்னப்பா, அதைவிட முக்கியம் இத்தொகுதிக்கு, after shock என்பார்களே அதுபோல வெறும் 13 ஓட்டுகளே வித்தியாசத்தில் ஜெயிச்சதில கோ.சி.மணி யே வந்து வார்ட பார்த்துட்டு ஐந்து இலட்சம் ஒதுக்கி சாக்கடை வசதி செய்து தர உத்தரவிட்டிருக்கிறார்ல.

ரொம்ப மகிழ்ச்சியான சேதியா இருக்கே. ஆமாம் கோசி. வந்தார்னா முக்கியமான மேட்டரா இருக்கனுமே - இது நான்.

ஆமாம்ப்பா, பொதுவா அதிமுக பக்கம் அதிரை மக்கள் எப்பொழுதும் வெறுப்போடு தான் இருப்பார்கள், சமீபத்துல கூட மோடிக்கு வரவேற்பளித்த செயலலிதா மேல முஸ்லிம்கள் கடும் அதிருப்தில, வெறுப்பில இருக்கிறது எல்லோருக்கும் தெரியும். இந்த சூல்நிலையிலும் வார்டு இடைத்தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சதில் அதிருப்தியாம். இவரை எதிர்த்து நின்ற தமீம் அதிமுகவின் பக்கம். அதோட மந்திரி, முன்னாள், தற்போதைய எம்.எல்.ஏ க்கள், மாவட்ட தலைவர்கள்னு ஒரே பரபரப்பா இருந்தது.

ஆனா இருந்த 700 சொச்சம் ஓட்டுல வெறும் 200 ஓட்டுக்கள் பெற்றதுல சரியான அதிர்ச்சியாதான் இருந்திருக்கும். ஜெயிச்ச செய்தி வந்தவுடன் நம்ம மரியாத காப்பாத்தப்பட்டது ன்னு சொன்னாராம் பேரூராட்சித்தலைவர்.

திமுக கோட்டையாயிருந்த அதிரை, பள்ளிவாசல் பிரச்சனை காரணமா தலைகீழா மாறியதற்கு அதன் திமுக கருப்பாடுகள் தான் காரணம்ங்கிறது புரிஞ்சா சரிதான்.

இன்னொன்னு தெரியுமா தம்பி, காலங்காலமா திமுகவிற்கு கொடி பிடித்த பிள்ளைகளுக்கு எதிரா இரண்டு பேர் மேல வழக்கு போட்டாங்கல்ல அது மந்திரியின் வற்புறுத்தல் பேர்ல தான் திமுக காரங்க போட்டாங்கலாம். எஸ்.ஐ செல்வம் இது தேர்தலுக்காக பொய் வழக்குன்டு மறுத்தாராம். இப்ப பொய் வழக்குன்னு பாதிக்கப்பட்டவங்க எதிர் வழக்கு போட்டிருக்காங்க.

மோடிய வாழ்த்திய கட்சிதான் இப்ப இந்த வழக்க நடாத்த இருக்கிறாங்களாம்.

காக்காவ முகைதீன் பள்ளியில நார்சா வாங்க போலாமான்னு கேட்டன், முறைச்சதுல நான் எஸ்கேப்.

Tuesday, March 11, 2008

அதிரை அரசு அதிகாரியின் லட்சனம் பாரிர்...நமதூர் கடைத்தெரு கிரானிமளிகை மாடியில் இயங்கும் கிராம நிர்வாக அதிகாரி மீது இப்பகுதி பொதுமக்கள் பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்திவருகின்றனர்.

அதை நிருபிக்கும் வன்னமாக கடந்த இரண்டு நாட்களுக்குமுன் பட்டுகோட்டை அமாட்ராவல்ஸ் ஹாலிது அவர்கள் திரு கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒருகையெழுத்து வாங்க சென்ற்ற்வரிடம் தேவை இல்லாத கேள்விளை கேட்டு எரிச்சலூட்டி தெனாவட்டாக நடந்துள்ளதை ஒருவர் தத்ரூபமாக படம்பிடித்துள்ளார்.

அவர் பணியிலிருக்கும் பொழுது வீட்டில் உள்ளது போல் வாயில் தம் வயிற்றில் ரம் இதுதான் இந்த கிராம அதிகாரியின் அன்றாட நிகழ்வு என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
-JP-

Sunday, March 9, 2008

தமிழ் எழுதுவதற்கான ஃபயர்பாக்ஸ் நீட்சிகள்.(plugins)..

அதிரை எக்ஸ்பிரஸின் வேண்டுகோளுக்கிணங்கி, இதுவரை தங்கள் ஆதங்கத்தை, எண்ணங்களை அரட்டையில் பகிர்ந்து கொண்டிருந்த சகோதரர்கள் தங்களுடைய எண்ணங்களை ஆக்கங்களாக்கி கட்டுரை வடிவில் தந்து அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களை மகிழ்வித்து விருந்தாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களும், நன்றியும். மேலும் சிலர் தமிழில் தட்டச்சிட முயல்வதும் நம்மால் அறிய முடிகிறது.

சிலர் நமது வலைப்பதிவில் உள்ள உமர் எழுதுகருவியின் உதவியால் தட்டச்சிட்டு பிறகு வெட்டி ஒட்டி வருகின்றனர். இக்கருவி அவசரத்திற்கு நிச்சயம் உதவக்கூடியது.

நிரந்தரத் தீர்வாக பயர்பாக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கு பல்வேறு தமிழ் நீட்சிகள் இலவசமாக கிடைக்கின்றன. இவற்றில் வெட்டி ஒட்டுதல் போன்ற பிரச்சினை இல்லாமல் தினத்தந்தி, தினமணி போன்ற நாளிதழ்களை யுனிகோடில் படிக்க 'அதியன்' என்கிற நீட்சியும் பிரசித்தம்.

1. தமிழ் தட்டச்சு நீட்சி (plugin for firefox) https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994
2. தமிழ் யுனிகோட் மாற்றி
https://addons.mozilla.org/en-US/firefox/addon/3864

தமிழ் தட்டச்சு நீட்சியில் தமிங்கலம், மற்றும் தமிழ் 99 விசைப்பலகைகளைக்( keyboards) கொண்டு தட்டச்சிடலாம்.

இத்தகைய நீட்சிகளைக் கொண்டு Internet Explorer ல் உபயோக்ப் படுத்த முடியாது. அவற்றிற்கு எகப்பை என்கிற கருவி வேண்டும்.

புதிதாக வந்துள்ள nhm.in ல்லும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

----------
உங்களுக்கு சந்தேகம் வரும் பட்சத்தில் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.

Saturday, March 8, 2008

வரி! வட்டி!! வசூல்!!! - மாவரைத்தாயா, மஞ்சளரைத்தாயா...?

அதிரை பேரூராட்சியின் அடாவடிகளை அவ்வப்பொழுது தோலுரித்துக் காட்டிவரும் அதிரை எக்ஸ்ப்ரஸ் உள்ளூர் செய்தியாளார்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

ஊழல்மிகு அதிரை பேரூராட்சி வரிபாக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக அவமரியாதை நடவடிக்கை எடுக்க இருப்பதை செய்தியின் மூலம் அறிந்து கொதித்த வண்ணம் இம்மடலை எழுதுகிறேன். தலைப்போ உள்ளடக்கமோ யாரின் மனதையும் புண்படுத்தினால் அதற்கு பேரூராட்சியின் அடாவடியே காரணம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரிவசூலிக்கும் ஆங்கிலேயருக்கு எதிராகக் கொந்திந்தெழும் கட்டபொம்மன் வரி! வட்டி!! வசூல்!!! - மாவரைத்தாயா, மஞ்சளரைத்தாயா...? என்று அனல் தெரிக்க பேசுவார். அதையே நமதூர் பேரூராட்சி நிர்வாகத்தை நோக்கியும் கேட்கத் தோன்றிகிறது.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் நான்கு வகையான விகிதாச்சாரத்தில் உள்ளூர் வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அரசின் குடிநீர், நூலகம், சாலைவசதி மற்றும் பெரும்பாலான திட்டங்களில் அதிகம் பயனடையும் பகுதி மக்கள் குறைந்த வரியும், பேரூராட்சியினால் புறக்கணிக்கப்படும் பிறபகுதிகளுக்கு அதிக விகித வரியும் வசூலிக்கப்படுகிறது. ஒரே ஊரில் ஏனிந்த நால்வகை வரிவீதங்கள்?

அதிகம் வரிசெலுத்தியும் தண்ணீர் பஞ்சத்தில் வாடும் CMP லேன், புதுமனைத் தெரு, ஆலடித்தெரு ஆகிய தெருக்களுக்குக் குறைவான கொள்ளளவுள்ள, ஊரின் பிறபகுதிகளுக்கும் பகிரப்பட்டுள்ள மேலத்தெரு மேல்நிலைக் குடிநீர் தொட்டியிலிருந்தும்,குறைந்த வரி செலுத்தும் கரையூர் தெரு, பழஞ்செட்டித் தெரு ஆகிய பகுதிகளுக்கு அதிக கொள்ளளவு கொண்ட ஷிஃபா குடிநீர் தொட்டியிலிருந்தும் குடிநீர் வழக்க்ப்படுவதன் மர்மம் என்ன?

இயற்கை மழை பொய்க்கும் மாதங்களில் குளங்களின் நீர்மட்டம் குறைந்து வீட்டு போர்செட் பம்புகளில் சேரும் சகதியும் வரக்காரணம் குளங்களை தூர் வாராமல் விட்டதே. (அப்படியே தூர் வாரினாலும் காசு பார்க்கும் நமதூர் பேரூராட்சி துணைச்சேர்மன் பற்றி ஏற்கனவே இத்தளத்தில் அறிந்தோம்). இப்படியாகத் தூர்வாராமல் காசு மட்டுமே வாரும் பேரூராட்சிக்கு எதற்கு நாங்கள் வரி செலுத்த வேண்டும்?

பொதுமக்கள் பயன்படுத்தும் நூலகத்தை படிப்பறிவில் பின்தங்கி இருக்கும் பெரும்பாலான நேரத்தைக் கடலில் கழிக்கும் நமதூர் மீனவ சமுதாய மக்கள் வசிக்கும் கரையூர் தெரு பகுதிக்குக் கடத்தி 90% மக்கள் பயன் பெற முடியாதவாறு ஊரின் நடுவிலிருந்த அதிரை கிளை நூலகத்தைக் கொண்டு சென்று விட்டு, எதற்காக அதிக வரி செலுத்தும் பகுதி மக்களிடம் நூலக வரியை வீட்டு வரியுடன் சேர்த்து வசூலிக்க வேண்டும்?

மூளைக்காய்ச்சலுக்கும் பிற தொற்று நோய்களுக்கும் காரணமான, கொசு உற்பத்திப் பண்ணைகளான சாக்கடைகளில் உழலும் பன்றிகளை ஒழிப்பது பேரூராட்சியின் பணிகளில் ஒன்று. ஆனால், ஊரில் திரியும் பன்றிகளின் உரிமையாளர்களே பேரூராட்சியின் துப்புறவுப் பணியாளர்களாக இருக்கும் போது, பன்றிகளை ஒழிக்க முடியுமா? இதற்கு அதிரை பேரூராட்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

அல் அமீன் பள்ளியின் மெயின் ரோடு கேட்டில் குப்பை அள்ளும் கயலான் கடை வண்டிகளை நிறுத்தி பள்ளிக்கு இடையூறு செய்யும் பேரூராட்சியே, அந்த வண்டிகளால் வரிசெலுத்தும் மக்களுக்கு ஏதாவது பயனுண்டா?

இப்படியான பலகேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு,பேண்டு வாத்தியம் முழங்க ஊருக்குள் வாருங்கள்! இல்லாவிட்டால் தலைப்பில் சொன்னபடி அதிரை மக்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் நினைவில் வைத்து உங்கள் அடாவடிகளைத் தொடருங்கள்!

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் அடாவடிக்கு இன்னும் ஓரிரு வருடங்களே! மீண்டும் ஓட்டு கேட்டு உமிழ்ந்த எச்சில்களைத் துடைத்துக் கொண்டு கூழைக்கும்பிடுகளுடன் வெட்கமில்லாமல் ஊர்வலம் வர வேண்டியுள்ளதும் இதே மக்களிடம்தான் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!

கொதிப்புடன்,

துபாயிலிருந்து அதிரைக்காரன்

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்....

நான் 'தீவிரவாதிகளால்' கடத்தப்பட்டவன், என்னைக் காண்பித்து பத்திரிக்கைகள், டி.வி, ரேடியோ போன்றவை நிறைய 'காசு' பார்த்தன, என்னைக் கடத்திய தீவிரவாதிகள் 'காசு' பார்த்தார்களா? என்பது தெரியவில்லை, (திரை மறைவில் ஏதேனும் நடந்திருக்க வாய்ப்பிருந்ததாக அப்போது பலர் பேசிக்கொண்டார்கள்). என்னைக் காட்டி மிரட்டி தங்கள்  'தீவிரவாதி' நண்பர்களை விடுவித்துக் கொண்டார்கள். பிறகுதான் என்னையும் விட்டார்கள்.  தங்கள் காரியம் முடிந்ததும் அனைவரும் என்னை அம்போவென விட்டு விட்டார்கள், சரி, பத்திரிக்கைகளுக்கும், மக்களுக்கும் அதற்கப்புறம் என் தேவை ஏற்ப்படவில்லை, ஆனால் அரசாங்கம் கூட கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதே, என்ன கொடுமைங்க இது?... 
அட, என்னடா  'ஓவர் பில்டப்' கொடுக்கிறானே?, யாரடா இவன் என்று கேட்ப்பது, எனக்கு கேட்கிறது..... நான் யார்?..

நான் தான் ' iC- 814', ....... என்ன, ஏதாவது புரியுதா?, என் கதையைக் கேளுங்கள்.

கடந்த டிசம்பர் 24, 1999. அன்று நேபாள தலை நகர் காட்மாண்டுவிலுருந்து  டில்லி  நோக்கி வந்து கொண்டிருந்த 'iC- 814' விமானத்தை தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள 'கந்தகாருக்கு'  கடத்திக்கொண்டு போய், விமானத்தையும் அதில் பயணம் செய்த பயணிகளையும் விடுவிக்க வெண்டுமென்றால் இந்தியச் சிறையில் இருக்கும் தங்கள் 'தீவிரவாத' தோழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று 'மிரட்டல்' விடுத்து, அதில் வெற்றியும் பெற்ற கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த நாயகன் (Hero)  'iC-814' விமானத்தின் தற்போதைய கதை (கதி) என்ன தெரியுமா?.

'20' ஆண்டுகள் மாடாய் உழைத்து, பாடாய் பட்ட பிறகு, 2001 ஆம் வருடம் 'iC- 814' க்கு பணி ஓய்வு கொடுத்தார்கள், இதற்கிடையில் 'பஞ்சாப்'  நீதிமன்றத்தில் மேற்கண்ட கடத்தல் வழக்கு நடந்து கொண்டிருந்தது, வழக்கு நிலுவையில் இருக்கும் போது அது சம்பந்தப்பட்ட பொருளோ, உடமையோ நீதிமன்றம் அல்லது காவல் நிலையம் பொருப்பில் இருக்க வேண்டுமென்ற சட்டத்தை 'அதிரை' மக்களாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேன்டியதில்லை, (எத்தனை ஆட்டோ,கார்,ஏன்  படகுகள் கூட காவல் நிலையத்தில் கிடந்து மன்னோடு மன்னாய்ப் போனதை நாம் பார்த்திருப்போம்).
 
சரி, வழக்கின் நாயகன் 'iC-814' எந்த நீதிமன்றத்தில் அல்லது காவல் நிலையத்தில் நிறுத்துவது?. நிறுத்தினார்களே!,... எங்கே?,
 
'பார்க்கிங்' செய்த இடம்,மும்பை, சான்டா க்ரூஸில் உள்ள 'Indian Airlines Engineering Base'  (இந்தியன் ஏர்லைன்ஸ் பொறியியல்துறை தளம், 'தமிழாக்கம் சரியா?')
 
அதுசரி கொண்டு வந்து நிறுத்தினால் மட்டும் போதுமா?, கவனிக்க வேன்டாமா?, பராமரிப்புச் செலவு, அதென்ன?,
 
ஆமாம் ... ஓடாத விமானத்தைப் பராமரிப்பதற்க்கு கூட 'ஒருபாடு' தொகை வருமே.  எப்படித் தான் சமாளித்தார்கள்?. 
 
'ஐயோ' அதை மட்டும் கேட்காதீர்கள். 'கடப்பாரையை விழுங்கி சுக்குக் கசாயம் குடித்தது' போலாயிற்று நிலை.
 
வேறு வழியே இல்லாமல், நீதி மன்றத்திடம் மன்றாடி நம் நாயகன் 'iC- 814' - ஐ 'Metal Scrap Trading Corporation (MSTC)'  மூலம் விற்று விட முடிவு செய்தார்கள், ஏலம் எடுக்க பயங்கர போட்டியாக இருந்திருக்குமே, என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை,
 
சீண்டுவதற்க்கு ஆளில்லை. கடைசியில்  ரொம்ப பரிதாபப்பட்டு ஒரு நிறுவனம் அடி மாட்டு விலைக்கு, அதாவது ரூபாய் 22 லட்சத்திற்க்கு (உள்ளூர் வரிகள் தனி)  ஏலம் எடுத்து காயலான் கடைக்கு ('பப்பரிசி' மகன் கடையை விட கொஞ்சம் பெரிசு) அனுப்பி, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துவிட்டார்கள்.
 
'ஓடம் ஒரு நாள் வண்டியிலும், வண்டி ஓடத்திலும்  கானவும்படும்', என்றாயிற்று நிலைமை.
 
'எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்', பார்த்தீங்களா?.
 
-அப்துல் கபூர் (U.S.A)
 

அது ஒரு காலம் - என் பசுமையான நினைவுகளிலிருந்து.

வீட்டின் பல கஷ்டங்களையும், பணப் பிரச்சினைகளையும் தாண்டி குடும்ப சுமைகளையெல்லாம் மறந்து சுதந்திரமாய் சுற்றித்திரிந்த அந்த காலம் இனி திரும்பி வருவது எப்போது?
மழைக்காலங்களில் நம்மூர் குளங்களை மண்வெட்டியால் நிரப்பி அதில் இரு கண் சிவக்க குளித்து கும்மாளமிட்டு இக்கரையிலிருந்து அக்கரை சேர தன் வேட்டியையே தற்காலிக பலூன்களாக்கி குதூகலம் கண்ட அக்காலம் இனி திரும்புவது எப்போது?
கார்கால மேகம் இருண்டு வரும் அநேரத்தில்-நம் பள்ளி, கல்லூரி மாணவர்களின் இதயங்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டு வரும் தற்காலிக பள்ளி, கல்லூரி விடுமுறையை எண்ணி.
மழை நீரால் நம் வீடுகள் ஆங்காங்கே ஒழுகி நனைந்திருந்தாலும், உள்ள சந்தோஷத்தால் நாம் மாட மாளிகையில் அல்லவா வசித்து வந்தோம் அக்காலத்தில்?
கொக்கு, குருவிகள் அடிக்க அக்கால இயந்திர துப்பாக்கியாய்-நாம் பயன்படுத்திய அட்டபில்லும், அதன் களிமண் குண்டுகளும் இன்று காணாமல் போனது ஏனோ?
வயது வித்தியாசமில்லாமல் விளையாடி மகிழ்ந்த பம்பரம், பளிங்கு, கிட்டிக் கம்பு பந்தயப் போடிகளும், கண்ணா மூச்சி, தொட்டு விளையாட்டுக்களும், இன்று சிறுவர்கள் மத்தியில் கொஞ்சம், கொஞ்சமாய் தொலைந்து போனது
ஏனோ?
சிறுவர்கள் மத்தியில் உள்ளூர் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க விளையாட்டாய் நடத்திய தேர்தல்களும், அதற்கு அடுத்த தெரு வாக்காளர்களை அழைத்து வர பயன் படுத்திய கயிறு ரயில் வண்டிகளும் இடை இடையே நினைவில் வந்து மறைந்து செல்கிறது.
கட்சிக்கொடிகளையும், கலர் காகிதங்களையும் வண்ணப் பட்டங்களாய் செய்து அதை வானில் பறக்க விட்டு அதற்கு தந்திகளும் அனுப்பி மகிழ்ந்த அந்த காலம் இனி திரும்பி வருவது எப்போது?
கட்சிக் கொடிகளையெல்லாம் நம் இதயத்தில் சுமந்து கண்விழித்து கட்சித்தலைவர்களை காண சென்றதும், பிறகு வென்றதும் அக்கட்சிகளே ஒரு காலத்தில் நம் சமுதாயத்தை எட்டி உதைத்ததும் யார் தான் மறக்க முடியும்?
ஒவ்வொரு வருடமும் உள்ளூரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்தாட்டத்தை ஓசியில் பார்க்க எடுத்துக் கொண்ட எல்லா முயற்சிகளும் இன்றும் ஞாபகத்தில் உள்ளது.
பள்ளிக்கூட விடுமுறையில் வீட்டு முன்னே வைத்த சர்பத், கடலை மிட்டாய்க்கடைகளும், இறுதியில் அதனால் அடையும் பெறும் லாபங்களையும் (பத்து (அ) பதினைந்து ரூபாய்க்குள்) இன்று மறந்து விட முடியுமா?
கட்சி, தெரு, குடும்பப் பிரச்சினைகளால் பிரிந்து கிடந்தாலும் அவை எல்லாம் மறந்து நம் மாணவப் பருவத்தில் ஒருவருக்கொருவர் மெய் மறந்து அரட்டை அடித்த அந்த நாட்கள் இனி திரும்பி வருவது எப்போது?
வருடா வருடம் வரும் நம்மூர் இஸ்லாமிய வாழ்வியல் வசந்தமாம் (ஜாவியா) புகாரி ஷரீப்பினுள் செல்ல அளவு இல்லாவிட்டாலும் உயரமான தொப்பியும், செருப்பும் மிடுக்குடன் அணிந்து வந்து எப்படியோ உள்ளே சென்று விட்டால் இமிக்ரேசன் ஆபிஸரைக் கடந்து வந்தது போல் அப்படியொரு சந்தோஷம் நம் உள்ளத்தில்.
ராஜாக்களை வர வேற்க குதிரைப் பட்டாளத்துடன் செல்வது போல், அரபு நாடுகளிலிருந்து வரும் நம் வீட்டு ராசாக்களை வரவேற்க குதிரை வண்டியுடன் நமதூர் ரயில் நிலையத்தில் கால் வலியில்லாமல் காத்திருந்த அந்த இனிய நாட்கள் இனி வருமா?
நோன்பு வருகிறது என்றாலே நம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளங்களிலும் ஆனந்த வெள்ளம். நம் பள்ளி வாசல்களிலோ இறையச்சத்தின் சங்கமம்.
பகல் இரவுக் காட்சிகளாய் நோன்பில் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுக்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து வருவது ஏனோ?
அன்றிருந்தவர்கள் இன்றில்லை நம்முடன் - இன்றிருப்பவர்கள் நாளை இருப்பதிலும் எவ்வித நிச்சயமும் இல்லை. இறுதியில் நாம் அவனிடமே (அல்லாஹ்) மீள வேண்டி இருக்கிறது.
ஊரே கலவரத்தாலும், கதவடைப்புகளாலும், பல்வேறு காரணங்களாலும் அமைதி இழந்து காணப்பட்டாலும், ஒருவர் மட்டும் வர தவறுவதில்லை-நம் தெரு ஆச்சிகள் கூடை நிரைய திண் பண்டங்களுடன்.
அன்று சொந்த, பந்தங்களால் ஒட்டி உறவாடி உரிமை கொண்டாடிய நம் சமுதாயம்-இன்று ஏதேதோ பிரச்சினைகளால் சீர்குலைந்து கிடப்பது ஏனோ?
அன்று வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட போதிய வருமானம் இல்லை எனினும் வாழ்வை ஏதோ சமாதானத்துடன் சந்தோஷமாகத்தான் கழித்தோம்.
இன்று நம் குடும்ப நலனுக்காக (தேவைகளுக்காக) தன் நலனையும், வாலிபத்தையும் அயல் நாடுகளில் தொலைத்து வயோதிகத்தில் நோயுடன் வீடு திரும்புகிறோம் தன் பிள்ளைகளின் வாலிபத்தை தொலைக்க-வாழையடி வாழையாக.
முதலில் பிறப்பும், இடையில் வாழ்வும், பிறகு இறப்பும் இவை எல்லாம் ஒரு முறைதான். சிந்திப்போம் பல முறை நம் சீரிய நல் வாழ்விற்காக.
இதில் விடுபட்டக் கருத்துக்களையும், உங்களின் இளமைக் கால அனுபவங்களையும் நீங்கள் உங்கள் படைப்புகள் மூலம் தொடரலாம் இப்பகுதியில்.
இனிமையான நினைவுகளுடன்,
எம்.ஐ. நெய்னா முகம்மது - சவுதியிலிருந்து.

Thursday, March 6, 2008

பேரூராட்சியின் தொடரும் அடாவடி...

வரி வசூல் செய்வது தவறில்லை, தனியார் வங்கிகள் குண்டர் படை வைத்து லோன் வசூல் செய்றது போலுள்ளது. மனிதர்களின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற பேரூராட்சியின் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உங்கள் விமர்சனங்களை, கருத்துக்களை, கண்டனங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். (அரட்டையில் அல்ல)

நன்றி; தினத்தந்தி
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய
வரிபாக்கிகளை செலுத்தத் தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்
நிர்வாக அதிகாரி எச்சரிக்கை

அதிராம்பட்டினம், மார்ச்.6-

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கிகளை செலுத்தத் தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார்.

இதுபற்றி, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும்

அதிராம்பட்டினம் போரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, உரிமக்கட்டணங்கள் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளவர்கள் உடன் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் மற்றும் முகவரி ஆகியவை அடங்கிய பட்டியல் தகவல் பலகையில் எழுதி பேரூராட்சி அலுவலகம் முன்புறம் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்படும். சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர் மற்றும் முகவரி முதலிய விவரங்கள் அடங்கிய முதல் பட்டியல் பேரூராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. வரி பாக்கி வைத்துள்ளவர்கள் வீடுகளுக்கு பேண்ட் வாத்தியம் இசைக்கச் செய்து நேரில் வந்து வசூலிக்கப்படும். மேலும் வரிபாக்கி வைத்துள்ளவர்களுக்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அட, அவனா இவன்?

எப்படியோ அடித்து பிடித்து அமெரிக்கா வந்தாச்சு..அது மட்டும் போதுமா?ஊருக்கு பணம் அனுப்பனுமே, வேலை தேடினேன், தேடினேன், தேடிக்கொண்டேயிறுந்தேன். கடைசியில் ஒரு நண்பரின் உதவியால் ஒரு தென்னிந்திய உணவத்தில் வேலை கிடைத்தது. முதல் நாள் மேனேஜரை சந்தித்த போது, "உங்களுக்கு என்னன்ன தெரியும், எத்தனை மொழி தெரியும்?" என்றெல்லாம் கேட்டார். எனக்குத் தெரிந்த விவரங்களை எடுத்து விட்டேன். சரி தற்போதைக்கு, 'வெய்ட்டர்' வேலை பாருங்கள் என்றார். நானும்  சரி என்று வேலை பார்க்க தொடங்கினேன்.

பல சிரமங்கலுக்கு இடையில் வேலையும் தொடர்ந்தது. ஒரு நாள், வழக்கம் போல் வந்த கஸ்டமர்களை கவனித்துக் கொண்டிருந்தபோது, ஒரு தமிழ்க் குடும்பம் நான் கவனிக்கும் டேபிளுக்கு அருகில் அமர்ந்து எதை பற்றியோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள், எதேச்சையாக அந்தக் குடும்பத் தலைவரை பார்த்த போது இந்த ஆளை எங்கேயோ பார்த்திருக்கிரோமே என்ற சந்தேகத்துடன் அருகில் சென்ற போது, அவர் என்னை அருகில் அழைத்து " நீங்க, நீங்க... அடடே, பாய், எப்படி இருக்கீங்க, சௌக்கியமா? என்ன இங்கே". (அடையாளம் கண்டு கொண்டார்). அவர் வேறு யாருமில்லை, என்னுடன் ஒன்றாக பள்ளியில் படித்த 'குமார்'. குடும்பத்துடன் வந்திருந்தான். 'சாப்ட்வேர் இன்ஜினியராக' அருகில் உள்ள ஒரு நகரத்தில் வேலை செய்வதாக சொன்னான். பள்ளியில் படிக்கும் போது அவன் சராசரி மாணவன் தான். தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தான் (2 பிள்ளைகள்). அவர்கள் என் குடும்பதினரைப் பற்றி கேட்டார்கள், நானும் என் குடும்பத்தினரைப் பற்றி சொல்லி,  என் பர்சில் எப்போதும் வைத்திருக்கும் என் பிள்ளைகளின் 'PHOTO'  வைக் காட்டினேன், (வேலைப் பளு காரணமாக 1 வாரமாக பார்க்காமல் இருந்த என் பிள்ளைகளின் PHOTO -வை நானும் பார்த்துக்கொண்டேன்).
 
அவர்கள் விடைபெறுமுன் எங்கே 'TIPS' எதுவும் தந்து தர்ம சங்கடத்தில் விடுவானோ, என்று பயந்து ஹோட்டல் நிர்வாகத்தைக் குறை சொல்வது போல, "இங்கு டிப்ஸ் எல்லாம் நிர்வாகமே எடுத்துக் கொள்வார்கள், பாவம் வெயிட்டர்கள் (என்னையும் சேர்த்து)", என்று சமயோசிதமாக சொல்லி, தர்ம சங்கடத்தை தவிர்த்துவிட்டேன்.
 
அவன் விடை பெற்றுக் கிளம்பும்போது, ரொம்ப அருமையான 'PERFUME' வாசனை அவனிடமிருந்து வந்தது,  வழக்கமாக ஊரிலிருக்கும் போது நான் பயன் படுத்துவது.  
 
'பள்ளியில் படிக்கும் போது அவனிடமிருந்து வரும் வியர்வை வாடை இப்போது என்னிடமிருந்து'.
 
(இது என் கதையல்ல, நண்பர் ஒருவரின் அனுபவம்).
 
Abdul Gafoor
(USA)
 

Wednesday, March 5, 2008

அதிரை பைத்துல்மால் சிறப்புச் செய்திகள்

1.தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பும் வகையில், தமிழ்நாட்டில் ஊணமுற்றோர் கணக்கெடுப்பிற்கான கையேடு- ஊணமுற்றோர் பற்றிய விபரங்கள் பெரும் வகையில் விளம்பரம் மற்றும் பிரசுரம் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. நமதூர் ஜூம்ஆ பள்ளிகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் 221 மாதிரிப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அரசுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளன.

கணக்கெடுப்பின்படி அதிரையிலுள்ள ஊணமுற்றோர்.
கை, கால் ஊணமுற்றோர் 114
மனவளற்ச்சி குன்றியோர். 41
வாய் பேசாமைஇ காது கேளாமை 55
கண் பார்வையிளந்தோர் 11.

2. இந்த சீரியப்பணியை எடுத்து செய்பவர்.
ஜனாப் எ. பஹாத் முகமது. D.A.C., DCHT.,
ஊணமுற்றோர் நலச் சங்க செயலாலர்.
14ஃ9ஐ வெற்றிலைக்காரத் தெரு.
அதிராம்பட்டினம். Cell - 9865939831

3. சென்ற மாதம் முதல் அதிரை பைத்துல்மால் நிறுவனத்தின் கணிணி பொறுப்பாளராக நியமனம் பெற்றிருப்பவர்:
ஜனாப் எம். ஹாஜா நசுருதீன். டீ.ளுஉ.இ
44-எ கீழத் தெரு
அதிராம்பட்டினம். Cell – 9994006201
e-Mail.hajanasurudeen@yahoo.com

இன்ஷா அல்லாஹ், இவர் இரண்டான்டுகள் தொடர்ந்து இங்கு இருக்க ஒப்புக் கொண்டுள்ளார். கணிணி துறையில் சிறந்த பயிற்சியைப் பெற்றுள்ள இவரைக்கொண்டு யுடீஆ கணிணி மையத்தைப் புதுப்பிக்கலாம் எனத்திட்டமிடப்பட்டுள்ளது.

தஎ+;சாவூர் கவிதா மன்றத்தில், தஎ+;சாவூர் பைத்துல்மால் தொடக்க விழா நடந்தது அதில அதிரை பைத்துல்மால் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

4. 10.02.2008 திங்கள் கிழமையன்று அதிரைபைத்துல்மால் நிர்வாகிகளின் சிறப்புக்கூட்டகூட்டம் நடந்தது.
விவாதப் பொருட்கள்
1. ஆண்டுச்சந்தா வசூல்.
2. கணிணி பொருப்பாளர் நியமனம்.
3. மேளாளர் சம்பள உயர்வு.
4. வெளிநாட்டிலுள்ள அதிரை பைத்துல்மாலின் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அணைவருக்கும் அந்தந்த நாட்டு கிளைகளே அடையாள அட்டைகளை வழங்குதல்.
5. அதிரை பைத்துல்மால் நிறுவனதின் தேர்தலை நடத்தி நிற்வாகிகளை தேர்தெடுப்பது.
6. அதிரை பைத்துல்மாலி சட்ட விதிகளை ஆய்ந்து திருத்தம் செய்வது, திருத்தங்களை ஏற்று மாற்றம் கொண்டு வருவது, 60 நாட்களுக்குப்பிறகு பொது தேர்தல் நடத்துவது, எல்லா கிளைகளின் நிர்வாகிகளரது ஆளோசனைகளைப்பெருவது.
7. ABM (BY LAW) சட்ட விதிகளில் திருத்தங்களைப் பரிந்துரைக்க ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

5. 29.02.2008 வெள்ளிக் கிழமையன்று அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் மாதாந்திரக் கூட்டம் நடந்தது.

6. சிறப்பு அழைப்பின் பெயரில் சம்சுல் இஸ்லாம் சங்க செயலர் ஜனாப் ஏம்.பி. அபூபக்கர் மற்றும் முன்னாள் நகர தமுமுக தலைவர் ஜனாப் எ. சரஃபுதீன் ஆகியோருடன் 15 அதிரை நகர சமுதாய நலனில் ஈடுபாடுள்ள இளைஞர்கள் களந்துரையாடலில் கலந்து கொண்டார்கள் இரு தரப்பினரும் சுமூகமான முறையில் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். மக்களுக்கு நலம் தரும் பணிகளில் ஒன்று பட்டு உழைப்பது என்ற தீர்மானத்துடன் கூட்டம் இனிதே முடிந்நது.

7. அதிரை பைத்துல்மால் தமாம் கிளையிடமிருந்து 14.02.2008 தேதியிடப்பட்ட கடிதம் பெறப்பட்டது. கடிதத்தில் கன்டுள்ள வேண்டுகோளின்படி கடனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பிவைக்கப்படும்.

ரயில்வே பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு

அதிருப்தி!ரயில்வே பட்ஜெட்டில் வட மாவட்டங்கள் கொழிப்பு. தென் மாவட்டங்கள் வழக்கம் போல் புறக்கணிப்பு

வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் வட மாவட்டங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மத்திய நிதி அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட காரைக்குடி பகுதிக்கு கூட போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. மயிலாடுதுறை-திருவாரூர்- காரைக்குடி இடையே ரயில் பாதை அமைக்க பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முழுப் பணியும் முடிவடைய 344 கோடி ரூபாய் தேவை. இதனால் இத்திட்டம் வரும் 2010ம் ஆண்டில் கூட முடிவடையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 903 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. புதிய ரயில் பாதைக்கு 51 கோடி ரூபாயும், மீட்டர்கேஜ் பாதைகளை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிக்கு 475 கோடி ரூபாயும், இரட்டை ரயில் பாதைக்கு 231 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் - காட்பாடி இடையே 161 கி.மீ., அகல ரயில் பாதை திட்டத்திற்கு 276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்த பட் ஜெட்டில் 121 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்-பாலக்காடு- பொள்ளாச்சி- கோவை இடையே 224 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்க 613.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி - நாகூர் - காரைக்கால் இடையே 200 கி.மீ., தூரம் அகலப்பாதை அமைக்க 447.34 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டு திருவாரூர் வரை பணி முடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் - நாகூர் இடையே பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு கடந்த ஆண்டு 281 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்துடன் நாகூர் - காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் -வேளாங் கண்ணி, முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான
திருக்குவளை - திருத்துறைப்பூண்டி வரை புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. மொத்தத்தில் இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

திருச்சி - மானாமதுரை இடையே 150 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் காரைக்குடி வரை ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. காரைக்குடி - மானாமதுரை பணி நடந்து வருகிறது. இதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மானாமதுரை - விருதுநகர் இடையே 66 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்க 148 கோடி ரூபாய் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் முடிவடைய 83 கோடி ரூபாய் வேண்டும்.

மயிலாடுதுறை- திருவாரூர்-காரைக்குடி இடையே 224 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்க 404.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள் ளது. இதற்கு கடந்த ஆண்டு 10 கோடி ரூபாயும், இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இத்திட்டம் முடிக்கப்பட 344.19 கோடி ரூபாய் தேவை. இத்திட்டம் 2010ம் ஆண்டில் கூட முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே 192 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்க 372 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கு கடந்த ஆண்டு 340 கோடி ரூபாயும், இந்த ஆண்டு 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே பணி நடந்து வருகிறது.இத்திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் கொள்ளிடம் பாலம் அமைக்கும் பணி மிகவும்தாமதமாக நடந்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் போக்குவரத்து துவங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நெல்லை - தென்காசி இடையே உள்ள மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றவும், மதுரை - போடி மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.அடுத்த நிதி ஆண்டுக்குள்ளாவது தமிழகத்தில் மீட்டர்கேஜ் பாதைகள் ஒழிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.

கோவை - திண்டுக்கல் அகல பாதை பணி எப்போது முடிவடையும்? :கோவை - திண்டுக்கல் ரயில்வே பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு 2006ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் 224.88 கி.மீ., தூரத்திற்கு பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு தயாரிப்புக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அடுத்து 2007ம் ஆண்டு பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகபட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் இப்பகுதிகளில் அகல ரயில்பாதை பணிகள் துவங்கியதற்கான அறிகுறிகள் இல்லை.இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டிலாவது முழுமையான அளவு நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், நடப்பாண்டு ரயில்வே பட்ஜெட்டில் திண்டுக் கல்- பொள்ளாச்சி- பாலக்காடு, பொள்ளாச்சி-கோவை அகல ரயில்பாதை திட்டத்திற்கு 613.61 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடாக குறிப்பிடப்பட்டு, அதில், 65 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; திட்டமதிப்பீடு 38.15 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 31 கோடி ரூபாயில் இதுவரை ஏழு கோடி ரூபாய் மட்டுமே
செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியில், திட்டமதிப்பீடு, அலுவலகம், டெண்டர் ஆகிய பணிகள் மட்டுமே நடந்துள்ளது.இந்நிலையில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள குறைந்த அளவு தொகையில் ஓரிரு பாலங்கள் மற்றும் நிர்வாக செலவினங்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.இதனால், கோவை-திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டப் பணிகள் முடிவடையுமா என சந்தேகம் எழுந்துள்ளது

பயன் பெறும் வட மாவட்டங்கள் :சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கடலூருக்கு புதிய ரயில் பாதை, விழுப்புரம் - காட்பாடி இடையே ரயில் பாதை, சென்னை விழுப்புரம் இடையே இரட்டை ரயில்பாதை என எல்லாமே வட மாவட்ட திட்டங்கள். தென் மாவட்ட திட்டங்கள் பல அறிவிப்போடு நிற்கின்றன. பணம் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. வழக்கம்போல் தென் மாவட்ட எம்.பி.,க்கள் மவுனம் காப்பதே இதற்கு காரணம்.

DINAMALAR-சிறப்பு நிருபர்