Monday, June 30, 2008

அதிரையில் படிப்பகம் திறப்பு!

வரும் 5.7.2008அன்று அதிரை செக்கடிமேட்டில் நடைப்பெற இருக்கிறது இதனை முன்னிட்டு அன்று காலை 9 மணிமுதல் தஞ்சை இரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பான ஏற்பாடுகளை தியாகி அப்பாஸ் ஹாஜியார் படிப்பக இளைஞர்கள் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்இரத்தம் கொடுத்து இன்னுயிர்க்காக அனைவரும் முன் வருமாறு அழைக்கப்படுகிறார்கள் இந்த சேவை தொடர்ந்து செயல்பட இறவனிடம் பிராத்திக்க வேண்டிகிறோம்.

அதிரையில் 24மணிநேரமும் இரத்தம் தேவைபடுவோர் எங்களை அனுகவும் ,
சரஃபுதீன் 9944450965, B.அஸ்ரஃப் 9976438566, அனஸ்9790282278 முகம்மத்9894848745 , தாரிக்9894988713

தலித்கள் முடி வெட்டத் தடை!

இந்த விஞ்ஞான யுகத்திலும்... திண்டுக்கல் மாவட்ட வத்திப்பட்டியில் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அங்கிருக்கும் சலூன்களில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை த­த் மக்களை சங்கடத்திலும் சஞ்சலத்திலும் ஆழ்த்த... கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமரின் அனுபவம் இது... ''என் மகள் வைதேகியை... முடியை கட் பண்ணிட்டு ஸ்கூலுக்கு வான்னு டீச்சர்கள் சொன்னதால்... சேதுராமன் வச்சிருக்கும் சலூனுக்கு என் மகளுடன் போனேன். ஆனா அவர் நாங்க பி.சி.க்கு மட்டுதான் முடி வெட்டுவோம். எஸ்.சி.க்கெல்லாம் வெட்டமாட்டோம்னு சொல்­ட்டார். முடி வெட்ட டவுனுக்கு பிள்ளையைக் கூட்டிட்டுப் போக னும்னா.. என்னோட ஒருநாள் கூ­வேலை பாதிக்குமேன்னு ஊர்ல இருக்கும் மத்த மூணு சலூன்கடைகளுக்கும் அழைச்சிக்கிட்டுப் போயும் யாருமே வெட்டிவிட மாட்டேன்னு சொல்­ட்டாங்க. அப்புறம் வேற வழியில்லாம ஸ்கூலுக்கு ஒருநாள் லீவு போடச் சொல்­ட்டு பிள்ளைக்கு இதுக்காக டவுனுக்குஅழைச் சிட்டுப் போனேங்க. எனக்கு மட்டும் ஏன் இங்க முடிவெட்ட மாட்டேங்குறாங்கன்னு விவரம் புரியாத எம்பொண்ணு கேக்குது. என்ன பதிலைச் சொல்றது?'' என்கிறார் ஆதங்கமும் வருத்தமுமாய்.

''ஒரு நல்லது கெட்டதுக்கு ஷேவிங் பண்ணிக் கிறதுக்குக் கூட நாங்க நத்தத்துக்குதான் போக வேண்டியிருக்கு. கொஞ்சநாளைக்கு முன்ன வரை டீக்கடை பெஞ்சில் நாங்க உட்காரமுடியாது. இரட்டை டம்ளர் வச்சிருப்பாங்க. கொஞ் சம் கொஞ்சமா போராடித்தான் ஓரளவு உரிமைகளை அடைஞ்சிருக்கோம். ஆனா லும் இந்த சலூன்களின் தீண்டாமைதான் எங்களை சங்கடப்படுத்திக்கிட்டு இருக்கு...'' என்கிறார் பொன்னப்பன் கவலையாய்.

பள்ளி மாணவனான ஜெயராமச் சந்திரனோ, ''அண்ணே நாங்க நத்தத்துக்குப் போய் முடிவெட்டறதுன்னா கூடுதலா பஸ் டிக்கெட்டுக்கு 15 ரூபாவரை ஆகுது. என்ன பண்றது? மூணுமாசத்துக்கொருதரம் ஸ்கூல் பசங்களான நாங்க ஏழெட்டுபேரா சேர்ந்து... நத்தத்துக்குப் போய் முடிவெட்டிக்கிட்டு வர்றோம். நத்தத்தில் உள்ளவங்க... உங்க ஊரைவிட்டுட்டு இங்க எதுக்கு வர்றீங் கன்னு பரிதாபமா கேக்கும் போதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. யாருண்ணே இந்த சாதி மதங்களையெல்லாம் உருவாக்கினா?'' என்கிறான் அப்பாவியாய்.

''எங்க அப்பாவுக்கு ஒரு வருஷமா உடம்பு சரியில்லை. நடக்கமுடியாம படுத்த படுக்கை தான். தலைமுடி மண்டிப்போய் கிடந்ததால் கைத்தாங்கலா எங்கப்பாவை சலூனுக்கு அழைச்சிக்கிட்டுப்போனேன். முடிவெட்ட முடியாதுன்னு சொல்­ அனுப்பிட்டாங்க. அதனால் முடிவெட்ட முடியாமலே படுத்துக் கிடக்கு எங்க அப்பா'' இது சின்னப்பொண்ணுவின் வேதனை.

'அம்பேத்கார் ஜனசக்தி' இயக்கத்தின் பொதுச் செயலாளரான பெரியசாமி சொல் கிறார்.. ''வத்திப்பட்டியைப்போலவே... இந்த பஞ்சாயத்தில் இருக்கும் ரெட்டியபட்டி, புதுக்கோட்டை, கலசம்பட்டி, காவணம் பட்டிகள்லயும் த­த்துகளுக்கு சலூன்காரங்க முடிவெட்ட மாட்டாங்க. இந்த கொடுமைக்கு முடிவு கட்டுங்கன்னு கலெக்டருக்கு மனு கொடுத்திருக்கோம். அடுத்து போராட்டத்தில் குதிக்கப்போறோம்'' என்றார் காட்டமாய்.

இவர்களின் புகார்கள் குறித்து சலூன் கடைக்காரர்கள் சார்பில் வெள்ளிமலையிடம் நாம் கேட்டபோது,''ஊர்ல கட்டுப்பாடு இருக்கு. அதை நாங்க மீறமுடியாது. மீறி அந்த மக்களுக்கு நாங்க முடி வெட்டினால்... பெரும்பான்மையா இருக்கும் அம்பலக்காரங்க முடிவெட்டிக்க வரமாட்டாங்க. அதோட கடையையும் கா­ பண்ணச்சொல்­டுவாங்க. இப்படி நிறைய நடந்திருக்கு. அதனால் தான்...'' என் றார் தயக்கமாய்.

அம்பலக்காரர்கள் தரப்பில் இது குறித்துக் கேட்டபோது...

''காலம்காலமாக இப்படிதாங்க. யாரை எங்க வைக்கணுமோ அவங்களை அங்க வச்சிருக்கோம். இதில் தப்பு என்ன இருக்கு? வேணும்னா த­த்துகள் தங்களுக்குன்னு முடிவெட்ட ஒரு கடையை வச் சிக்கட்டுமே..'' என்கிறார்கள் கொஞ்சமும் சங்கோஜம் இல்லாமல்.

இந்தத் தீண்டாமை விவகாரத்திற்கு தீர்வு கிடையாதா என மாவட்ட ஆட்சியர் வாசுகியிடமே நாம் கேட்டபோது, ''எனக்கும் புகார் வந்தது. உடனே தாசில்தாரையும் டி.எஸ்.பி.யையும் அங்கே அனுப்பி விசாரணை நடத்தினோம். அதேபோல் அங்கே பீஸ் கமிட்டியை அமைத்து... எல்லா இடங்களிலும் த­த்துகளுக்கு சம உரிமை கொடுக்கணும்னு வ­யுறுத்தியிருக்கோம். இதை மீறி யாராவது தீண்டாமைக் கொடுமைகளைக் கடை பிடிச்சா... கடுமையான நடவடிக்கை எடுப்போம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

சம உரிமையை வ­யுறுத்தினால் மட்டும் போதாது. அதைக் கண்காணிக்க ஒரு அதிகாரிகள் குழுவையும் மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும். அப்போதுதான் நல்ல தீர்வு ஏற்படும்.

நன்றி : நக்கீரன்
-----------------------


இது போன்ற பிரச்சினைகளுக்கொல்லாம் ஒரே தீர்வு இஸ்லாத்தை தங்கள் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொள்வது மட்டுமே.

இஸ்லாத்தை இந்த யுகமெங்கும் எடுத்துரைப்போம். தீண்டாமை எனும் தீய சக்தியை இம்மண்ணைவிட்டும் துடைத்தெறிவோம்.

சுவர் விளம்பரம் செய்யலாம்,வாங்க!

விளம்பரம் இன்றி தொழில் மட்டுமல்ல,எதுவும் மக்களை சென்றடைவதில்லை.பளிச்சென்ற பற்களை காட்டித்தான் டூத் பேஸ்ட் விற்கமுடியும்!இது மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டுமல்ல-நாளிதழ்கள்,மாத இதழ்கள் போன்ற பிரிண்ட் மீடியாக்களுக்கும் பொருந்தும்.(பெஸ்ட் கண்ணா பெஸ்ட்,புதுசு கண்ணா புதுசு,ஹிஹி,இது குங்குமம் விளம்பரங்கோ)இது அதிரை எக்ச்பிரசுக்கும் பொருந்தும்.(அட்லீஸ்ட் வாய் வழி விளம்பரமாவது).ஆக,விளம்பரம் அவசியம்.(அடடே இது விளம்பர உலகமப்பா).இன்று விளம்பரம் தொலைக் காட்சி,இன்டர்நெட்,பத்திரிக்கை,ரேடியோ,படங்கள்,கட் அவுட்கள்,பிட் நோடிஸ்கள்,சுவர்,மற்றும் டிஜிடல் என விளம்பரம் எல்லா வகையிலும் வியாபித்துள்ளன.சரி,சரி,அதுக்கு என்ன ? என கேள்விகள் எழலாம்.இதன் விடை,இந்த விளம்பர யுகத்தை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது?இஸ்லாத்தின் அழகிய நெறியை பாரெல்லாம் பரப்ப,இவ்விளம்பரத்தை நாமும் ஏன் பயன்படுத்தக்கூடாது?

பொதுவாக,தொலைக் காட்சி,இன்டர்நெட்,ரேடியோ,பத்திரிகைகள்,என இஸ்லாம் குறித்த விவரங்கள் உலா வருவது நாம் அறிந்ததே.நான் சொல்ல விழைவது,"சுவர் விளம்பரங்கள்" பற்றியதே.

உதாரணமாக நம் ஊரை எடுத்துக்கொண்டால்,ஒரு தெருவில் பல சீர்கள்(லைன்கள்) இருக்கும்.ஆக,அந்த லைனில் உள்ள ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து,வீட்டாரின் முன் அனுமதி பெற்று,நல்ல அழகு கையெழுத்தில்,பெரிய எழுத்துக்களில் ஆயில் பெயிண்டிங் கொண்டு திருக் குரான்,ஹதீஸ் வசனங்களை எழுதி வைத்தால்,அப்பக்கம் போவோர் வருவோர் கண்களில் பட்டு குரான்,ஹதீஸ் வசனங்கள் மனனம் ஆகும்,மேலும் அல்லாஹ்வின் அச்சமும்,உதாரணமாக,விபச்சாரம்,குடி,வட்டி,ஷிர்க் வைத்தல்,தர்கா வழிபாடு போன்ற செயல்களால் அல்லாஹ்வின் கோபம் ஏற்பட்டு,நரகம் கிடைக்கும் என்பதையும்,தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ்,போன்ற கடமைகளை செய்வதன் மூலம் கிடைக்கும் கூலியும் அதன் பால் வரும் சொர்க்கம் போன்ற கருத்துக்களையும் மக்களிடம் விளம்பரப் படுத்தினால் இன்ஷா அல்லாஹ்,இதன் மூலம் பயன் கிடைக்கும்.

நம் ஊரின் விசாலமான தெருக்களும்,அந்த தெருக்களினூடே உள்ள லைன்களையும் கணக்கிட்டால் நிறைய குரான் ஹதீஸ் எழுத முடியும்.அப்ப என்ன சுவர் விளம்பரம் எழுத ரெடிதானே!'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்

புகாரி

Sunday, June 29, 2008

Read more - xpress blog tips for contributors.

If the article size is lengthy kindly follow this 3 steps to hide some paragraph for better reading experience to our readers.

*************************************************************************
some paragraphs....
கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் Janjagruti Samiti மற்றும் Sanatan Sanstha ஆகிய ஹிந்துத்துவாக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
*************************************************************************
step -1: add this two lines after 2-3 paragraph
//
<a id='20080629-01' href='javascript:void(0)' onclick='show("20080629-02");hide(this.id)'>read more...</a>
<div id='20080629-02' style='display:none'>
//
*************************************************************************
step 2:
change 20080629-01,20080629-02 to related date and some no.
//
remaining paragraph
ராய்காட் மாவட்டத்திலுள்ள வார்சாய் கிராமத்தில் உள்ள விக்ரம் பாவே மற்றும் மங்கேஷ் தின்கர் நிகம் ஆகியோரின் வீட்டிலும் விளைநிலத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

*************************************************************************
step 3: lines at last

<a href='javascript:void(0)' onclick='show("20080629-01");hide("20080629-02")'>collapse...</a>
</div>
*************************************************************************

Saturday, June 28, 2008

இந்து பயங்கரவாதிகளின் வீடுகளில் வண்டி வண்டியாக வெடிமருந்து!
முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று ஜோடிக்கப்பட்டு வரும் சூழலில்,

தானே நகர தியேட்டர் ஒன்றில் வெடித்த வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன் படுத்தப் பட்ட வெடிமருந்துகள், மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் இந்துத் தீவிரவாதிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

புதிய மும்பையின் வாஷி பகுதியில் உள்ள விஷ்ணு தாஸ் பாவே அரங்கத்திலும் தாணே பகுதியில் உள்ள கட்காரி ரங்கயாதன் அரங்கத்திலும் மிகப்பெரிய உயிர்சேதத்தை விளைவிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்ட நால்வரை மஹாராஷ்டிரக் காவல் துறைக் கைது செய்துள்ளது.

அவர்கள் பெயர்கள் பின்வருமாறு:
1. மங்கேஷ் தின்கர் நிகம்
2. ரமேஷ் ஹனுமன்த் கட்கரி
3. சந்தோஷ் ஆங்ரே மற்றும்
4. விக்ரம் பாவே

கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் Janjagruti Samiti மற்றும் Sanatan Sanstha ஆகிய ஹிந்துத்துவாக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

read more...

GOD BLESS AMERICA!

கடந்த ஒரு வார காலமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 800இடங்களில் தீ பற்றி,அது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை,வீடுகளை அழித்தும் மேலும் அதன் மூலம் புகை கிளம்பியதால் இம் மாநிலத்தின் நிறைய இடங்களில் பரவ ஆரம்பித்தது.இதனால் எங்கு நோக்கினும் புகை மயமாகவும்,அதன் நெடியும் பரவ ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் வயதான சில பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது,எனினும் பயப்படும்படியாக எவ்வித பாதிப்பும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.


அதனால் இம்மாநிலத்தில் அவசர நிலை (emergency )பிரகனப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில கவர்னர் அர்னால்ட் சுவாசிநேகர் தெரிவித்துள்ளார்.மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து தீ அணைப்பு வீரர்கள் தருவிக்கப்பட்டு,தீ அணைக்கும் முயற்சிகள் ஈடுபட்டுள்ளனர்.தற்போது தீ பெருமளவு கட்டுக்குள் வந்துவிட்டதாகவும்,ஓரிரு நாட்களில் முழுதும் அனைக்கப்பட்டுவிடும் எனவும் கூறப்படுகிறது.


"On Tuesday, fire crews from Nevada and Oregon arrived after Schwarzenegger requested extra help. Smoke from the fires has darkened skies in the San Francisco Bay area and Central Valley, causing public health officials to issue air-quality warnings." CNN.

கலிபோர்னியாவில் பல நகரங்களிலுமுள்ள அதிரை மக்கள் நலமுடன் உள்ளார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அமெரிக்காவிற்கு அருள் செய்வானாக.

பிராமணன் பூர்ணய்யாவின் சதி! தீரர் திப்பு சுல்தான் அவர்களின் வாழ்கை வரலாறு பாகம் 3

""ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'' என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.


திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், பிளாசிப் "போரில்' பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, ""இப்போது நாம் "தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்'' என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.


இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.


அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர் பூர்ணய்யா செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத் தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது

இன்ஷா அல்லாஹ் தொடரும்

தகவல் உதவி அபு ஜுலைஹா

Friday, June 27, 2008

பணவீக்கம் என்னும் மோசடி!

............................ரவிக்குமார் எம்.எல்.ஏ

ஒருவர் டீ கடைக்குப் போகிறார். அங்கிருக்கும் கேக் ஒன்றை எடுத்துச் சாப்பிடுகிறார். அதற்கு விலையாக ஐந்து கோடி ரூபாய் நோட்டை எடுத்துத் தருகிறார். கடைக்காரரும் முணுமுணுத்தபடியே வாங்கிக்கொண்டு, மீதி ஒன்றரை கோடி ரூபாய் சில்ல ரையைத் தருகிறார்!


ஐந்து கோடி ரூபாய் நோட்டா?! மண்டை குழம்பு கிறதா?

இது காமெடி சினிமாவிலோ, சயன்ஸ் ஃபிக்ஷன் எதிர்காலக் கதையிலோ வரும் சம்பவமல்ல. ஜிம்பாப்வே நாட்டில் நடக்கும் உண்மைச் சம்பவம். அங்கு பதினைந்து கிலோ உருளைக்கிழங்கின் விலை 26 கோடி டாலர். ஜிம்பாப்வே நாட்டுப் பணத்துக்கும் டாலர் என்றுதான் பெயர். ஆனால், அதன் மதிப்பு மிக மிக மிகக் குறைவு. ஜிம்பாப்வே பணத்தில் ஐந்து கோடி டாலர் என்றால் அமெரிக்காவின் ஒரு டாலருக்கு சமம்.

இப்போது இருக்கும் நிலையே நீடித்தால் அடுத்த தலைமுறையில், இந்தியாவிலும்கூட எல்லோரும் 'கோடீஸ்வரர்கள்' ஆகிவிடலாமோ என்னவோ..! அதுதான் பணவீக்கம் செய்யக்கூடிய ஜாலம்! பணவீக்கம் என்றால் பணத்துக்கு மதிப்பு குறைவது. விலைவாசி உயர்வது. அதன் விளைவு வறுமை... மிக மோசமான நிலைமையில் பட்டினிச்சாவு, உள்நாட்டுக் குழப்பம். இந்தியாவில் 13 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது பணவீக்கம் பதினோரு சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. இதற்கு முன்பு இதுபோல பணவீக்கம் உயர்ந்த காலத்தில், இன்று பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் அவர்கள்தான் நிதியமைச்சராக இருந்தார். அவருக்கும் பணவீக்கத்துக்கும் அப்படியரு உறவு! அவரைத்தான் நாம் எல்லோரும் தலைசிறந்த பொருளாதார மேதையென்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அவரோடு, இன்னொரு 'பொருளாதார மேதையான' நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஜோடி சேர்ந்திருக்கிறார். பிறகென்ன? கேட்கவா வேண்டும்!

உலகில் பணவீக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலைப் பார்த்தால் அவை யாவும் உள்நாட்டு யுத்தங்களால், ராணுவ கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜிம்பாப்வே, ஈராக், மியான்மர், உஸ்பெகிஸ்தான், காங்கோ, ஆப்கானிஸ்தான், செர்பியா - இப்படிப் போகிறது அந்தப் பட்டியல். அந்த நாடுகளில் ஜனநாயக ஆட்சி கிடையாது. அமைதி கிடையாது. அங்கு மக்கள் இன்னும் உயிர் பிழைத்திருப்பதேகூட அடுத்தடுத்து கொல்லப்படுவதற்குத்தான் என்ற நிலைமை. இதெல்லாம் இல்லாமலே ஜனநாயக இந்தியா இப்போது அந்த நாடுகளோடு பணவீக்கத்தில் போட்டி போடத் துவங்கியி ருக்கிறது. இப்படியே போனால், அந்த நாடுகளைப் போலவே இந்தியாவும் உள்நாட்டு குழப்பத்தால் சீரழிந்து போகுமோ என்பதுதான் பயமே! பணவீக்கம் ஈராக்கில் 53 சதவிகிதம், ஆப்கனில் 17 சதவிகிதம், செர்பியாவிலோ 15.5 சதவிகிதம். அவற்றோடு இந்தியாவை ஒப்பிடுவது சரியா? நம்முடைய பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பலாம். உண்மையில், நமக்குத் தரப்படுகிற பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் பொய்யானது, மோசடியானது. சரியாகக் கணக்கிட்டால் இப்போது இந்தியாவிலுள்ள பணவீக்கத்தின் அளவு சுமார் 25 சதவிகிதம் வரை இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் இந்தியா, பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் இருக்கிறது என்பதே உண்மை.

இப்போது கூறப்படும் பணவீக்க விகிதம் தவறானது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று சிலர் கேட்கலாம். நம்முடைய நாட்டில் பணவீக்கத்தை அளவிடுவதற்கு 'மொத்த விலை குறியீட்டு எண்'ணைத்தான் (Whole sale price index - WPI) நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த முறை கிடையாது. அவர்களெல்லாம் 'நுகர்வு விலை குறியீட்டு எண்'ணைத்தான் (Consumar Price Index - CPI) அடிப்படையாக வைத்திருக்கிறார்கள். நம்முடைய நாட்டில் அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கு மட்டும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு பொருளின் உண்மையான விலை என்பது நாம் வாங்கும்போது எவ்வளவு கொடுத்து அதை வாங்குகிறோமோ அதுதான். அந்த விலைதான் விற்பனை விலை அல்லது நுகர்வு விலை ஆகும். அரிசியையே எடுத்துக் கொண்டால், மண்டியில் டன் ஒன்றுக்கு இத்தனை ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதைவைத்து ஒரு கிலோ அரிசியின் விலையை நாம் கணக்கிட முடியாது. கடையில் நாம் வாங்கும்போது எவ்வளவு கொடுத்து வாங்குகிறோமோ அதுதான் அரிசியின் உண்மையான விலை. ஆனால், நம்முடைய அரசாங்கமோ மொத்த விலையைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறது; விற்பனை செய்யப்படும் விலையை அல்ல. மொத்த விலைக்கும் சில்லரை விலைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும் என்பது நமக்குத் தெரியும். அரசாங்கம் விலைவாசியை இந்த லட்சணத்தில்தான் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது.

1998-99ல் நம்முடைய அரசாங்கமே ஒரு பட்டியலை வெளியிட்டது. 'மொத்த விலை குறியீட்டு எண்' அடிப்படையிலும், 'நுகர்வு விலை குறியீட்டு எண்' அடிப்படையிலும் பணவீக்கத்தை மதிப்பிட்டுப் பார்த்ததில், மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக வைத்து கணக்கிடும் பணவீக்கத்தைப்போல, நுகர்வு விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக வைத்து கணிக்கப்படும் பணவீக்கம் இருமடங்கு இருந்தது தெரியவந்தது. ஆக, தற்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள பணவீக்க விகிதமான 11.05 சதவிகிதம் என்பது நுகர்வு விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்பட்டால், நம்முடைய பணவீக்கம் மிக அதிகமாகவே இருக்கும். சரி, இந்த மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான விவரமாவது சரியாகத் தரப்படுகிறதா? அதிலும் ஏகப்பட்ட மோசடிகள். இந்த மொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படுகிறது. இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி பார்த்தால், கடந்த ஆறு மாதங்களில் கோழிக்கறியின் விலையில் ஒரு மாற்றமும் இல்லை. உருளைக்கிழங்கின் விலை ஜனவரியில் இருந்ததைவிட நாற்பது பாயின்ட்கள் குறைந்திருக்கிறதாம். முட்டை, மைதா போன்றவற்றின் விலையும் குறைந்துவிட்டதாம். மார்க்கெட்டில் போய் இந்தப் பொருட்களை வாங்குகிறவர்களுக்கு அரசாங்கம் சொல்வது உண்மையா என்பது உள்ளங்கைப் புண்ணாக பளிச்சென்று புரியும்!பணவீக்கத்தைக் கண்டறிவதற்கான மொத்தவிலை குறியீட்டு எண்ணை அளப்பதற்கு 435 பொருட்களின் விலையைக் கணக்கிலெடுத்துக் கொள்கிறார்கள். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல பொருட்கள் இப்போது மக்களின் பயன்பாட்டில் இல்லாதவை. நம்முடைய பொருளாதாரத்தின் மீது செல்வாக்கு செலுத்துகிற தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இப்போதுள்ள பட்டியல் 1993-94-ம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப் பட்டதாகும். மறைந்த முரசொலி மாறன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது எஸ்.ஆர்.ஹஷீம் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தயாரித்து அளித்த பட்டியல் அது. அதன்பிறகு இந்தப் பட்டியல் திருத்தப்படவில்லை. 1993-94-ம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப்பட்டியல், வெகுவேகமாக மாறிவரும் இன்றைய பொருளாதாரச் சூழலில் பொருத்தமில்லாததாக மாறிவிட்டது என்பதே உண்மை.

பணவீக்க விகிதத்தைத் தீர்மானிப்பதற்கான இந்த மொத்த விலை விவரங்களை எப்படி சேகரிக்கிறார்கள் என்பது இன்னுமொரு தமாஷ். அதற்கென்று தனியே எந்தவொரு அமைப்பும் கிடையாது. முக்கியமான உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் போன்றவற்றின் விலை விவரம் அரசு அலுவலகங்கள் மூலமாகத் திரட்டப்படுகிறது. மற்ற பொருட்களின் விலைகளை 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்', வர்த்தக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் மூலமாகத் திரட்டுகிறார்கள். முதலாளிகளிடம் விலையைக் கேட்டால் உண்மை நிலவரம் வெளிப்படுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


எஸ்.ஆர்.ஹஷீம் தலைமையிலான குழு மறைந்த முரசொலி மாறனிடம் பரிந்துரைகள் சிலவற்றையும் அளித்திருந்தது. வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில் இப்போதுள்ளதுபோல் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்தவிலை குறியீட்டுப் பட்டியலைத் தயாரிப்பது சரியாக இருக்காது. எனவே, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; விலைகள் பற்றிய புள்ளி விவரங்களைத் திரட்டுவதற்கு சுயேச்சையான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்; பணவீக்கத்தைக் கண்காணிப்பதற்கு நிரந்தரமான நிலைக்குழு (Standing Committee) ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எஸ்.ஆர்.ஹஷீம் குழு கூறியிருந்தது. இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, பணவீக்கத்தை மதிப்பிடுவதற்கு இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறை சரியல்ல என்றும் அந்தக்குழு கூறியிருந்தது. ஒரு பொருளின் விலையை அது நுகர்வோரால் வாங்கப்படும் இறுதி நிலையில் வைத்துத்தான் கணக்கிடவேண்டுமே தவிர, இடைப்பட்ட நிலையில் கணக்கிடக் கூடாது என்றும் அந்தக் குழு உறுதியாகக் கூறியிருந்தது. தெளிவாகக் கூறினால், இப்போது பின்பற்றப்பட்டுவரும் மொத்த விலை குறியீட்டு எண்ணின் அடிப்படையிலான நடை முறையைக் கைவிட்டு, உலகின் ஏனைய நாடு களில் உள்ளதுபோல நுகர்வு விலையை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை மதிப்பிடவேண்டும் என்பதே அதற்கு அர்த்தம். ஆனால், இந்த பரிந்துரைகளை இதுவரை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இப்போதுள்ள பணவீக்கம் மழைக் காலத்துக்குப்பிறகு குறைந்துவிடும் என்று நிதியமைச்சர் கூறி வருகிறார். அது அப்பட்டமான பொய்யே தவிர வேறல்ல. நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டால் வருணபகவானை நோக்கிக் கையைக் காட்டுவது ஒரு நிதி அமைச்சருக்கு அழகல்ல. பிரதமரோ விலைவாசிப் பிரச்னை பற்றி கவலைப்படாமல் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். அது தன்னுடைய கௌரவப் பிரச்னையென்று பிரதமர் கருதுவதாக செய்திகள் வருகின்றன. பணவீக்கம் இந்த அளவு மோசமாகி வருவதோ, விலைவாசி ஏறுவதோ, அதனால் மக்கள் அவதிப்படுவதோ அவருக்கு கௌரவப் பிரச்னையாக இல்லை. அமெரிக்க எஜமானர்களுக்கு சாதகமாக இருப்பதுதான் கௌரவப் பிரச்னை. இப்படி யரு பிரதமரைப் பெறுவதற்கு நாமெல்லாம் என்ன 'தவம்' செய்தோமோ?!

இப்போதைய பணவீக்கத்துக்கு எண்ணெய் விலை மட்டுமே காரணமல்ல. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே இதற்கு முதன்மையான காரணம். பொதுத்தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இப்படி தாறுமாறாக விலைவாசி ஏறிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், மீண்டும் மக்கள் தமக்கு வாக்களிப்பார்களா என்ற கவலை பிரதமருக்கு இருக்காது. ஏனென்றால் அவர் எந்த மக்களிடமும் கும்பிடு போட்டு ஓட்டு வாங்கி பதவிக்கு வரவில்லை. எனவே, அவருக்கு மக்களின் கஷ்டம் புரியாது. ஆனால், காங்கிரஸில் உள்ள அர்ஜுன்சிங் போன்ற மூத்த அமைச்சர்கள் அப்படி இருக்க முடியாது. அவர்களாவது பிரதமருக்கும், சோனியா அம்மையாருக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும்.

''நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்'' என்ற குறளின் பொருள் மன்மோகன் சிங்குக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதை உணர்ந்த நம்முடைய முதல்வராவது அவருக்கு எடுத்துச்சொல்லக் கூடாதா?

- நன்றி: ஜூனியர் விகடன்

நாத்திகவாதிகளே நாசம் தவிர்ப்பீர்!

பகுத்தறிவுகாரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும்.

கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறி ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?

அந்த கனவானின் நன்னடைத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு சென்று பார்க்கும் போது விருந்துக்குறிய அத்தனை ஏற்படுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள் இது யாருக்கு பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா?

ஒரு மாட்டையோ , ஒரு ஆட்டையோ விழித்து ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? ஜயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு செயலா -மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள்.

எனவே கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம் அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும்.

இறைவனையும், மறுமையையும் கண்ணால் பார்த்த பின்னரே ஏற்பேன் என்பது பகுத்தறிவு வாதமே அல்ல. விருந்து கொடுத்த அந்த கண்ணியமான கனவானைப் போல் ஏன் அதைவிட ஆயிரம் மடங்கு கண்ணியத்திற்கும், உண்மைக்கும் உரித்தானவர்களான இறைத்தூதர்களை ஏற்று அவர்களின் உபதேசங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து ஏற்பதே பகுத்தறிவாகும்.

விருந்துடைய குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் விருந்து கொடுப்பவரின் வீட்டுக்குப் போயே விருந்துடைய ஏற்ப்பாட்டைக் கண்ணால் பார்க்க முடியவில்லையே. இந்த நிலையில் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமையின் வாழ்க்கையை இவ்வுலகிலிருந்து கொண்டே கண்ணால் பார்க்க முற்படுவது எவ்வளவு பெரிய மதியீனம் என்பதைச் சிந்தியுங்கள்.

மேலும் கண்ணால் கண்ட பின் ஏற்பதற்கு மனிதனுக்கு பகுத்தறிவு அவசியமில்லை. மிருகங்களுக்கு இருக்கும் ஜயறிவே தாரளாமாகப் போதும். இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா? அல்லது பார்த்தறிவாளர்களா அதாவது ஐந்து அறிவு கொண்டவர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

இறைவன் வழங்கி அருளிய நெறி நூலைப் பற்றி அறியாத மனிதன் கூடத் தன்னைச் சூழ்ந்துள்ளவற்றை, உற்று நோக்கிச் சிந்தித்தால், இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். புரிந்துகொள்ள கூடிய மக்களுக்கு உலகில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ( 3:191,192)

வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன. இத்தகையோர் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும்போதும் அல்லாஹ்வை நினைந்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, “எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பார்கள். (3:191,192)

நாத்திகவாதிகளே சிந்தனை செய்வீர்,சீர் பெறுவீர்.

Thursday, June 26, 2008

பனாத்வாலா சாஹிப் ...... சில நினைவுகள்!

குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.


மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.


பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்… முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்… வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.


ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் ‘சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் ‘விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் ‘சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான ‘மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். ‘பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் ‘முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.


காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார்.


‘மார்க்கமும் - அரசியலும் ‘சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்.

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.


இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.


கடந்த ஜூன் 20,21 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.


அவர் மறைவு நம் இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொண்டு,ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர் சுவர்க்கம் நல்குவானாக.ஆமீன்.

Wednesday, June 25, 2008

முஸ்லிம் லீக் அகில இந்தியத்தலைவர் மறைவு.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா உடல் நிலைபாதிக்கபட்ட அவர் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.
இவர் கடந்த21ஆம் திகதி சென்னையில் நடைப்பெற்ற முஸ்லிம்லீக் மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புசொற்பொழிவாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பொழுது அதிரையை சார்ந்த KSA அப்துல் ரஹ்மான், சேக்காமரைக்காயர், MKM,இப்ராஹிம், ஆகியோர்களுக்கு முஸ்லிம் லீக் சார்பாக சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் விருது பெற்றவர்களை பனாத்வாலா வாழ்த்திபேசினார் .அன்னாரின் மஃபிரத்து நல்வாழ்விற்க்கு துஆ செய்ய வேண்டுமாய் அதிரை நகர முஸ்லீம்லீக் கேட்டுகொள்கிறது.
-JP-

வருத்தப்படாத வயோதிகர்கள் சங்கம்

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதைவிட உலகிலேயே மதச்சுதந்திரத்திற்கு பெயர் பெற்ற நாடு என்றால் மிகையாகாது. இந்நாட்டில் வாழும் அனைத்து சமுதாயத்திற்கும் ஏற்றவகையில் அவர்களின் மதக்கோட்பாடுகளை கடைபிடிக்கும் உரிமையை வழங்குகிறது. இங்கு இஸ்லாமியருக்கென்று முஹம்மதன் சட்டமும் உண்டு. இதில் இஸ்லாமிய குடும்பவியல் சட்டம் முதல் சொத்து உரிமை சட்டம் வரை நாமே நமக்கென்றுள்ள இஸ்லாமிய முறைப்படி பின்பற்ற முடியும். இதனை எதிர்த்து பாசிச பாஜக நாடெங்கிலெலும் எல்லோருக்கும் ஒரே சட்டமாய் பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய முறைப்படி இதுபோன்ற திருமணம் போன்றவற்றை நாமே செய்துகொள்ள இந்திய மதச்சுதந்திரம் அனுமதிப்பதால் நமக்கென்று சங்கங்கள் அமைக்கப்பட்டு அங்கு நம்முடைய திருமணம், சொத்து பிரிப்பு போன்றவற்றிற்கு பேசப்பட்டு பதியப்படுகிறது. இது இந்தியா அரசால் முழுதும் அங்கீகரிக்கக்கூடியது.

ஆனால் இஸ்லாமிய முறைப்படி நடக்கவேண்டிய சங்கங்கள் இஸ்லாமிய கொள்கைகளை குழிதோண்டி புதைப்பதோடல்லாமல், மக்களை தானாவே மற்ற சட்ட நடைமுறைகளுக்கு செல்லும்படியாக தூண்டுகிறது. இது பிற்காலத்தில் என்னவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற சங்கங்களில்,
* 'ஆம்பிளை அப்படித்தான் படுப்பான்யா, பொம்பளைதான் பொத்திக்கினு இருக்கனும்' - தலைசிறந்த தலைவரின் தீர்ப்பு
* இங்கு ஏழை விபச்சாரிக்கு ஒரு சட்டம், உடலை விற்கும் பணக்கார விபசாரிக்கு ஒரு சட்டம்.
* குற்றம் செய்தவர்கள் தாங்கள் தான் என்று சபை முன்னிலையிலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும் கண்டிக்காமை, தண்டனை கொடுக்காதது.
* ஒருதலை பட்சமான, வசதிபடைத்தவர்களுக்காக ஒரவஞ்சனையான கட்டப்பஞ்சாயத்துக்கள்.
* அரசியலை கலந்து சாணியை அள்ளிப்பூசிக்கொள்வது.
* அரசியல் காழ்ப்புணர்ச்சியை எழுதப்படாத சட்டமாக்கி பின்பற்றுவது.
* மார்க்கம் தெரிந்து தேர்ந்த இறையச்சம் உள்ள ஆலிம்களின் தலைமையின்மை.
* பித்அத்கள், வரதட்சனைகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ தெரிந்தும் கண்டிக்காமை, நடவடிக்கை எடுக்காமை.

இன்னும் நிறைய சொல்லலாம். பழமையான சங்கம் பாழடைந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?

ஒரு கட்சியும் வேணாம்,ஒரு கொடியும் வேணாம்!

ஆயிரத்தெட்டு பிரச்சனைகளை சந்திக்கும் ஒரே சமுதாயம் நம் முஸ்லீம் சமுதாயமாகத்தான் இருக்க முடியும்,வெளியிலிருந்துதான் பிரச்சனைகள் என்றால் நம் சமுதாயத்தின் உள்ளேயும் பிரச்சனைகள்.இது ஒரு சாதரண ,பாமர மக்களிடையேயுள்ள பிரச்சனை என்றால் அட்லீஸ்ட் பேசி தீர்க்கலாம்.ஆனால் இருப்பதோ நம் அரசியல் கட்சிகளும்,இயக்கங்களிடமும்தான்.


இயக்கம் அல்லது கட்சி ஆரம்பிக்கும்போது உள்ள முழக்கம்,சமுதாய ஒற்றுமை.ஆரம்பித்தபின்,மக்கள் அவர்கள் பின் திரண்ட பின்,எல்லாமும் மறந்து போய்விடுகிறது.

எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,சமுதாயத்திலிருந்து பிரிந்து விடக்கூடாது என்று பேசி விட்டு,அந்த ஆள் சரி இல்லை,அது சரி இல்லை,இது சரி இல்லை என்று ஒரு காரணம் சொல்லிக்கொண்டு ஆளுக்கொரு கட்சி,நாளுக்கொரு பேச்சு என அவரவர்களின் பொழுது போய்க்கொண்டிருக்கிறது.


முஸ்லிம்களின் கல்வி,வேலை வாய்ப்பு மற்றும் ஆதிக்க சக்திகளின் ஆக்டோபஸ் கரங்கள் நம்மை நசுக்க எடுத்து வரும் முயற்சிகள் குறித்த எச்சரிக்கை இது பற்றி எடுத்துக்கூறவேண்டிய சமுதாய இயக்கங்களின் இதழ்களும்,தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் இன்று ஒருவருக்கொருவர் வசை பாடி,மக்கள் கொடுத்த பணம் இன்று விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது.

நான் பெரியாளா?நீ பெரியாளா? என்ற சண்டையில்,பாவம் தொண்டர்கள் என்ற பெயரில் மாட்டிக்கொண்டு முழிப்பது என்னவோ அப்பாவி ஜனங்கள்தான்.

எல்லாரும் ஒன்றாக நின்று,கை கோர்த்து,என்ன பிரச்சனை என்றாலும் ஒன்றாக சட்டப்பூர்வமாக கலம் கண்டவர்கள்,இன்றோ எதிர் எதிர் அணியில்,நினைக்கும்போது நெஞ்சம் விம்முகிறது,துக்கம் தொண்டையை அடைக்கிறது.என்று நமக்கு விடியல், இறைவனிடம் பிரார்த்திப்போம்.


யா அல்லாஹ்,சமுதாய தலைவர்களுக்கு நல்ல புத்தி கொடு!

" மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது." (அல்-குர்ஆன் 10:57)


யாரேனும் நல்லவற்றின் பக்கம் வழிகாட்டினால் அதனை செய்பவரைப் போன்று -வழிகாட்டியவருக்கும் நன்மையுண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் - ரலி, நூல் : முஸ்லிம்)

Tuesday, June 24, 2008

நீங்கள் புகை பிடிப்பவரா.......ஓரு நிமிடம்

1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களைச் சிறுக சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இளம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவி கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?
10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?
16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?
18) புகைப்பிடிப்பது நாகரிகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரிகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களா?

முஸ்லிம்களே கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! அறிஞர் அண்ணா பாகம் 3

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம்.

அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் - இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் - அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன்.

இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு.

அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!

எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.

இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை - கருப்பொருள் - கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.

Monday, June 23, 2008

தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்!

இஸ்லாத்திற்கு எதிராக பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிராக நடத்தும் எழுத்து மற்றும் கருத்துப்போரை பார்க்கும்போது அந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.

அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். அதைப்போல நாலொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிருப்பதால் தொலைகாட்சி கேட்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் விழ வைத்திருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நமக்கு பல சான்றுகள் தருகின்றன.

ராவுத்தர்கள் எடுக்கும் படத்தில்கூட முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அதே போல முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தும் இணையதளத்தில் ஒரு முஸ்லிம் இந்துமதத்தைப் பற்றி எழுதினால் வரவேற்கிறார்கள், பதிவு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப்பற்றி எந்த செய்தியும் பதிவு செய்வதில்லை. (அப்படியே பதிவு செய்தாலும் அது தர்கா புராணமாகத்தான் இருக்கும்).

காந்தியை கொன்ற கோட்சே 'அவர்' என்று மரியாதையாகவும் சந்தேக கேஸில் மாட்டிக்கொண்ட முஸ்லிம்களை 'அவன்' என்று மரியாதை குறைவாகவும் செய்திகள் வெளியிடுவை பார்க்கலாம்.

இதற்கு தூபம் போடத்தான் அன்றே, பாட நூல்களில் மொகலாயர்களின் படையெடுப்பு, ஆரியர்களின் வருகை என்று ஆக்கிவிட்டார்கள் போலும்.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற மீடியா, இன்னொரு பக்கம் தீவிர வாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று செய்திப்பத்திரிக்கைகளை புரட்டினால் பி.ஜே.பி அல்லது ஆர்.எஸ்.எஸ் செய்திதான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு குக்கிராமத்தில் இவர்களின் கூட்டம் நடந்தால் கூட அது வெளிச்சப் படுத்தப்படுகிறது.

அவர்களுக்கு முஸ்லிம்களை தன் வலையினுள் கொண்டுவருவது மிகச்சுலபம். ஆட்டோ ஓட்டுகிறாயா? வா! எங்களின் ஆட்டோ சங்கத்தில் இணைந்துக்கொள். கார் ஓட்டுகிறாயா? வா எங்கள் கார் சங்கத்தில் இணைந்துக்கொள். எங்கள் தலைவர் பி.ஜே.பி என பேத்தலாம். எங்கள் தலைவரின் தலைவர் ஆர்.எஸ்.எஸ். -ல் அங்கம் வகிக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு உதவும் நல்மனம் கொண்டவர். அவரின் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கலாம். அவர் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல என்று முஸ்லிம்களை மூலைச்சலவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வகுப்பு சண்டைகள் நடந்த இடத்தின் வரலாற்றைப் புரட்டி பார்ப்போமேயானால் ஒன்றை மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.

இவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்தானே, நண்பரின் சகோதரி தானே, குழுந்தைதானே என்றெல்லாம் எந்த எண்ணமும் வருவதில்லை. முஸ்லிம் என்றால் பரவாயில்லை கற்பழிக்கலாம், கொல்லலாம், கண்டந்துண்டுகளாக வெட்டலாம், உயிருடன் எரிக்கலாம் என்றுதான் இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், இல்லையில்லை புரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். குஜராத்தின் சம்பவம்தான் இதற்கு வெட்ட வெளிச்சம். குஜராத் மோடியின் மனிதப் படுகொலைக்காக குரல் கொடுத்த கவிஞர்களின் சில வரிகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமான்:
முன்பு இந்துத்துவா என்றால்
பாரதப் பண்பாடு
இப்போது
கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து
சிசுக் கருவை
எடுத்துத் தீயில் வீசுதல்

கவிஞர் இன்குலாப்
எரியும் கொழுந்துகளில்
ஆண்கள்
பெண்கள்
வகிர்ந்த வயிற்றிலிருந்து
குருதி சொட்டும்
கொப்புள் கொடியோடு
கண் விழிக்காத
கருவறைச் சிசுக்கள்

கவிஞர் பொன்னீலன்
குறிகளுடனும் குண்டாந்
தடிகளுடனும்
வாள்களுடனும்,
சூலாயுதங்களுடனும்
மறுபடியும்
குகை விட்டுக் கிளம்பின - அந்தக்
கற்கால மிருகங்கள்
....
நிறைச் சூலி வயிறுகீறி
கண் திறவா பசும் குருத்தை
கோரைப் பற்கள் துருத்தும்
கடைவாயில் சிவப்பொழுக
கிழித்துக் கிழித்து
விழுங்கி ஆனந்தித்தன.

கவிஞர் சுகுணா திவாகர்
சுன்னத் குறியினரை தேடியலையும்
வாளின் பசி முன்
கையறு நிலையன்றி யாதுமில்லை
மறைப்பதற்கோ, காட்டிக்கொடுப்பதற்கோ
வென்றாயின அடையாளங்கள்

இப்படிப்பட்டவர்களிடம் கட்டைப் பஞ்சாயத்து நீதிக்கென கதவைத் தட்டுகிறார்கள். வாடகை வீட்டை காலி செய்யனுமா? வா நம் அண்ணனிடம் போகலாம் என்று முஸ்லிம்களை அழித்தொழிப்பவர்களிடமே தஞ்சம் போகிறார்கள். வரப்பு யாருக்குச் சொந்தம் என்ற சண்டை வக்கீலிடம் போனால் வயல் வக்கீலுக்கு சொந்தமாகிவிட்டது என்பார்கள். அதுபோலத்தான். அண்ணன் தம்பி பிரச்சினைக்கு தாதாக்களிடம் கட்டைப்பஞ்சாயத்துக்கு போக, சொத்து அண்ணனுக்கும் அல்ல தம்பிக்கும் அல்ல அவர்களுக்கு ஆகிவிடுகிறது. குரங்கு அப்பத்தை பங்கு போட்ட கதைதான்.

சரி இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் எப்பொழுது சமூகத்திற்கு சுட்டிக்காட்ட போகிறீர்கள்?. இத்தகைய அநியாயங்களை தோலுரித்துக் காட்டுவது நம் அனைவரின் பணியல்லவா?

எழுதப்பழகுங்கள்! உங்களுக்கென்று பல மக்கள் மன்றங்கள், விவாத அரங்குகள், வலைப்பூக்கள் இணையத்தில் இருக்கின்றது.

படியுங்கள், கண்ணியமாக கருத்துச் சொல்ல பழகுங்கள் பல இணையதளங்கள் இருக்கின்றது. உங்கள் எழுத்தினால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன்கிடைக்குமா என்று பார்த்து எழுதுங்கள் (புகழுக்காக அல்ல.

அதிகமாக எழுதுபவர்களை, அவர்களுக்கு ஃப்ரீ நேரம் இருக்கிறது என்று விமர்ச்சிக்கிறார்கள். அதிகமான எழுத்தாளர்கள் அவர்களின் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு, நண்பர்களிடம் பிரச்சினைகளை பகிர்வதை விட்டுவிட்டு, மனைவி குழந்தைகளிடம சந்தோசமாக பேசிமகிழும் நேரத்தை குறைத்துக்கொண்டு, வெளியில் ஜாலியாக போய் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை.


தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்! புதிய சரித்திரம் படைத்திடுங்கள்!
-------------------------------------------------------------

http://egathuvam.blogspot.com

தவ்ஹீத் (ஏகத்துவம்)

அல்லாஹுதஆலா நம்மை படைத்தான் அவன் தான் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியவன் அல்லாஹ் அவன் மிக உயர்ந்தவன் அவன் ஞானமிக்கவன் அவனை புகழ் வதற்கு நம்மால் இயலாது நபி (ஸல்) சொன்னார்கள் யாஅல்லாஹ் உன்னை எந்த முறையில் அறிய வேண்டுமோ அந்த முறையில் அறியவில்லை யாஅல்லாஹ் உன்னை எந்த முறையில் வணங்க வேண்டுமோ அந்த முறையில் வணங்கவில்லை.

நாம் சிந்திக்க வேண்டும் எவ்வளவு உயந்த நபி (ஸல்) கால்கள் வீங்கும் அளவுக்கு அல்லாஹ்வை வணங்கிய நபி (ஸல்) இப்படி சொன்னார்கள் என்றால் நாமல்லாம் எம்மாத்திரம் முதலாவது நாம் அல்லாஹ்வை அறிந்துக்கொள்வது மிக அவசியம்.இன்று ஏன் இஸ்லாமியர்கள் யார்யாரிடமோ சென்று தேவைகளை கேட்கின்றார்கள் காரணம் அல்லாஹுடைய தன்மையை அல்லாஹ்வும் அவனுடை தூதர் முஹம்மது (ஸல்) எப்படி சொன்னார்களோ அந்த முறையில் நாம் அறியவில்லை இது தான் முஸ்லிம்களை அல்லாஹ்வை விட்டும் துரமாகக்கூடிய செயலாக இருந்துக்கொண்டிருக்கின்றது இது சம்பந்தமான இறை வசனங்கள் மற்றும் நபி மொழிகள் எழுதப்படுகின்றன்.மற்றும் இந்த ஏகத்துவத்துக்கா பாடுப்பட்ட நன் மக்களுடை சரித்திரத்தையும் நாம் பார்போம் குறிப்பாக இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களுடை தியாகத்தை பார்ப்போம்.

1. (நபியே!) நீர் கூறுவீராக: அவன்_ “அல்லாஹ்” ஒருவனே!

2. அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவைற்றவன்

3. அவன் (எவரையும்) பெறவில்லை ; (எவராலும்) பெறப்படவில்லை.

4. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.
(அத்தியாயம் :111 வசனங்கள்:4)

மற்றும் பல இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான் அவற்றின் சிலவற்றை நாம் பார்ப்போம்:
(2) அவனைப்போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன்; பார்கிறவன் (அத்தியாயம் :42 வசனம்: 11)

(3)எந்த பொருளையும் நாம் சிருஷ்டிக்க கருதினால்) கண் சிமிட்டுவதுபோல ஒரு வார்த்தை (கூறுகையில்) நம் கட்டளை ஆகிவிடும் (அத்தியாயம் :54 வசனம்: 50)

(4) பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) யாவும் எழுது கோள்களாகவும், சமுத்திர (நீர் மையாகவு)ம் இருந்து (அது தீர்ந்து) பின்னும் எழு சமுத்திரங்கள் (மையாக) இருந்து (எழுதிய) போதிலும்,அல்லாஹ்வுடை வசனங்கள் நிச்சயமாக (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும்,ஞானமுடையோனுமாக இருக்கின்றான் (அத்தியாயம் :42 வசனம்: 28)


இன்ஷாஅல்லாஹ் தொடரும்...

ஹாஃபிழ் ஹம்தூன் அதிரை

ஒரு கருவின் கதறல்....

குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது கருவில் உள்ள குழந்தையை கூட விட்டு வைக்காமல் கொன்று குவித்தார்கள். அப்பொழது அந்த தீவிரவாதிகளால் கருவில் வைத்து கொல்லப்பட்ட குழந்தையின் கண்ணீர் கதை........

இந்த கட்டுரை என் மின்னஞ்சலுக்கு வந்த கட்டுரை.....

உருத்தெரியாமல் போய்விட்ட எட்டு மாத கரு பேசுகிறேன். பூமியில் வாழ வருவதற்கு முன் தெருவில் தீக்கிரையாக்கப்பட்ட கருவின் முனகல் சப்தம் இது. வேடிக்கையாக இருக்கிறது அம்மா.. கடிதங்கள் சுமக்கும் கருக்களுக்கு மத்தியில் ஒரு கருவே இங்கு கடிதம் எழுதுகிறது பாரேன்..? உன்னுடைய வடிவில் இறைவனை சந்திக்க நினைத்தேன். இப்பொழுது இறைவனின் முகத்தில் உன்னை கண்டு கொண்டிருக்கின்றேன். ம்..ஆமாம்மா.. நான் இப்போது இறைவனின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கின்றேன். அவன் என்னை உலகத்தில் எல்லோரைவிடவும் அதிகமாக விரும்புகின்றான். என்னம்மா நீ நக்கலாக சிரிப்பது போல தெரிகின்றது. "ம் என்னடா உலகத்தில் யார் யார் எப்படி எப்படி என்னை விரும்புவார்கள் என்று தெரிவதற்கு முன்னரே என்னை அழித்து விட்டார்களே..? எனக்கு எப்படி யார் அதிகமாய் விரும்புவார் என்று தெரியும் என்கிறாயே...? " யார் எப்படியோ தெரியாதம்மா ஆனால் நீ என்னை அதிகமாய் விரும்பியிருக்கிறாய் என்று உன் வயிற்றிலிருக்கும்போது நீ தந்த ஸ்பரிசத்திலிருந்து மெல்ல மெல்ல உணர்ந்தேன். நான் உன்னுடைய குழந்தையாக மாற நினைத்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இதுவரை உணர முடியவில்லை. ஏனம்மா என்னை கருவில் அழித்தார்கள்? உன் வயிற்றினுள் இருக்கும் அந்த அறையில் நான் மெய் மறந்து இருந்தேன் தெரியுமா..? அந்த பாதுகாப்பான இருட்டறை எவ்வளவு சுகமாய் இருந்தது? எந்த குழாய் வழியாகவோ வருகின்ற உணவுகள்.. யாரோ எனக்கும் சேர்த்து மூச்சு விடுவது போன்ற உணர்வுகள்.. நீ அங்குமிங்கும் நடக்கும்போது மேகங்களுக்கு மத்தியில் நான் உலா வருவது போன்ற கனவுகள்.. திடீரென்று ஆசிர்வதித்து விட்டு மறைந்து போகும் கைகள்.. எனக்கு முளைத்துள்ள குட்டி குட்டி விரல்கள்... எல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அம்மா.. அந்த இருட்டு உலகத்தில் எப்பொழுதும் யோசனையுடனும் தூக்கத்துடனும் என்னுடைய பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன.. அவ்வப்போது நீ சமைக்கும்போது வருகின்ற குக்கர் விசிலின் சத்தம் கேட்டு நானும் பதிலுக்கு விசில் கொடுக்க நீ பரவசப்பட்டு ஒரு தட்டு தட்டுவாயே..? உன்னை நானும் என்னை நீயும் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் உனக்கும் எனக்கும் உள்ள அந்த நெருங்கிய உறவுக்கு என்ன பெயர் வைப்பது என்று இதுவரை என்னால் சொல்ல முடியவில்லையம்மா. எப்போதும் வயிற்றில் காதுவைத்து என் சத்தங்கள் கேட்டு மகிழ்ந்து என்னைவிடவும் ஒரு குழந்தையாக மாறி கத்துவாரோ என் தந்தை.. அந்தச் சத்தங்கள் எல்லாம் தொப்புள் கொடி வழியாக என்னைத் தொட்டுக்கொண்டிருந்தன.

2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 வது நாள் நாம் தங்கியிருந்த குஜராத் மாநிலம் நரோடா பாடியாவில் திடீரென்று எனக்குள் பூகம்பம் வந்தது போன்ற உணர்வு... என்ன நடந்ததென்று தெரியவில்லை என்னைத் தூக்கிக்கொண்டு நீ ஓடுகிறாய் என்று நினைக்கின்றேன்.... பல வித்தியாசமான குரல்கள் எல்லாம் என்னைச் சுற்றிக் கேட்கின்றது.. "கௌஸர் பானு.. இங்க வந்திரு.. சீக்கிரம் வா..அந்த அயோக்கியங்க வராங்கம்மா..." என்று உன் பெயரைச் சொல்லி யாரோ பதறிப்போய் கத்துகிறார்கள். அதன்பிறகு உன்னைச்சுற்றி எத்தனையோ காலடித்தடங்கள் என் காதுகளுக்கு கேட்கிறது. ஏதோ சில கோஷங்கள் வேறு... உறவினர்கள் கேலி பேசும்பொழுது உன் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கும். அந்த அதிர்வினில் எனக்குள் வருகின்ற தொப்புள் கொடிகள் கூட மகிழ்ந்து இதமாய் விரியும்.. ஆனால் இன்று உன்னைச் சுற்றிய அந்தப் பேச்சுகளில் நீ மகிழ்வதாய் தெரியவில்லை. உன் இதயம் வழக்கத்தை விடவும் அதிகமாய் பயத்தில் துடிக்க தொப்புள் கொடிகளில் உஷ்ணக் காற்று அடிக்கிறதம்மா.. ..எனக்கும் அந்தக் குரல்கள் இதுவரை பழக்கப்படவில்லை.. "என்னம்மா ஆயிற்று ? ..யாரவர்கள்..? " திடீரென்று நீ கதறி அழ ஆரம்பிக்கின்றாய்.."வேண்டாம் ..வேண்டாம் விட்டுறுங்க .."என்று கெஞ்சுகிறாய்.. தந்தையின் குரல் வேறு பதட்டத்தோடும் உன்னைச் சுற்றி கதறியபடியும் கேட்கிறது.. ஒரு அரை மணி நேரமாவது நீடித்திருக்கும் அந்தக் குரல்களும் அப்பாவின் கதறல்களும், அதன் பிறகுதானம்மா அந்த உச்சக்கட்ட பயங்கரம் நடந்தது. ஒரு கூர்மையான சூலாயுதம் ஒன்று மெல்ல மெல்ல இருட்டறையைத் துளைத்துக் கொண்டு என்னை நோக்கி வருவதைக் கண்டேன்.. அந்த சூலாயுதம் துளைத்த ஓட்டை வழியாக பார்த்தால் சுற்றி எவரெவர்களோ ஆயுதங்களோடு நான் இருந்த இருட்டறையின் இருட்டை விடவும் மிகவும் இருட்டாய் உன்னைச் சுற்றிக் கொண்டு நிற்பதை.. நான் பயத்தில் அலற ஆரம்பித்து விட்டேன் அம்மா. ஆனால் என்னுடைய அலறல் உங்களுடைய காதுகளுக்கு கேட்டிருக்குமா என்று எனக்குத் தெரியாது.. ? பயங்கர சப்தத்துடன் விழுகின்ற அருவியின் அருகே ஒரு கட்டெறும்பின் கதறல் யாருக்கு கேட்கும்.? வெள்ள நீர் வீட்டுக்குள் நுழைந்து விட குடிநீரைப் பற்றி யாரும் கவலைப்படுவதுண்டோ..? நான் கதறுகிறேன்.. என்னுடைய கதறலையும் மிஞ்சி நீ கதறுகிறாய் அம்மா.. பாரேன் கதறலில் கூட நம் குரல்கள் ஒரே சீரில் ஒலிக்கின்றது.. வெகு தூரத்தில் இருந்து சில பெண்களின் குரல்கள் வேறு பரிதாபமாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட தவளையின் முனகலாய்;. என்னுடைய வலியைவிடவும் அந்தப்பெண்களின் அபாயக் கதறல்கள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது. யாரம்மா அந்தப் பரிதாபக் குரலுக்குச் சொந்தக்காரர்கள்.? அந்த அபாயச் சப்தங்களுக்கிடையே என்னுடைய வலியின் கதறல்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை.. அந்த சூலாயுதம் முதலில் நம்மை இணைத்த தொப்புள் கொடிகளை அறுத்தெறிந்து பின் என்னுடைய பிஞ்சு வயிற்றில் வந்து நிற்கிறது அம்மா.. நான் மறுபடியும் கதறுகின்றேன்.. நம் கதறல்களின் சப்தத்தோடு சுற்றியுள்ளவர்களின் கோஷ சப்தங்கள் ஓங்கி ஒலிக்கின்றது. சிரிப்புச் சப்தங்களும் கேட்கின்றது... அவர்கள் யாரம்மா..புதியாய் உலகத்தில் தோன்றிவிட்ட மிருக ஜாதிகளோ..? அந்த சூலாயுதம் என் சதைகளில் குத்தி உருவப்படும்பொழுது எனக்குண்டான வலியை கேட்கும் சக்தியும் உனக்கு இல்லை.. அந்த வலியில் கதறுகின்ற உனது வலியை உணரும் சக்தியும் எனக்கு இல்லாமல் போயிற்று.. "அம்மா அம்மா காப்பாற்றுங்கள் என்னை..ரொம்ப வலிக்கிறது அம்மா..தாங்க முடியவில்லை....
என்னை விட்டு விடச்சொல்லுங்களேன்..""இனிமேல் இந்த உலகத்தின் எவர் கருவுக்கும் அனுப்பிவிடாதே என்று இறைவனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.. அவர்களிடம் சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள் அம்மா " வலி பொறுக்க முடியாமல் நான் மீண்டும் மீண்டும் கத்துகிறேன்.. எனது வயிற்றின் வழியாக பாய்ந்த அந்த சூலாயுதம் எனது குட்டி கண்கள் , குட்டி மூக்கு, குட்டி உதடுகள் , பட்டு விரல்கள் எல்லாம் தாறுமாறாய் கிழித்துப் போகிறது.
பட்டுகளை அழித்துபுடவை! ஏனிந்தமொட்டுக்களை அழிக்கும் மடமை?
என்னுடைய கைகளை மட்டும் தனியே பிய்த்துப் போட்டது அந்த சூலாயுதம்.. என் கால் விரல்களின் சதைகள் அந்த சூலாயுதத்தின் முனைகளால் கவ்வப்பட்டு கண் பகுதியில் வந்து ஒட்டிக் கொண்டது. அத்தோடு அவர்களின் வெறி தணியவில்லை.. அந்த சூலாயுதத்தின் கூர்மையான பகுதியின் முனையில் குத்தி அம்மா உன் வயிற்றைக் கிழித்து என்னை வெளியில் தூக்குகிறார்கள். ஆ..அம்மாஆஆஆஆஆ.. அந்த வலியை சொன்னால் மொழிகள் கூட முனகும்...... எல்லோரும் தாயின் வழியாகத்தானே உலகத்தை பார்க்கிறார்கள். நான் மட்டும் சில பேய்களின் வழியாக உலகம் பார்க்கின்றேன். எனக்கு மட்டும் ஏனம்மா விதிவிலக்கு? சூலாயுதத்தின் முனையிலிருந்து நான் கண்ணைத்திறந்து பார்க்கின்றேன்.... பதறிப்போய்விட்டேனம்மா...இதயம் இறந்த சிலர்..நினைவு மறக்கும் வரையிலும் ஒருவனை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்! டயரும் உயிரும் சமத்துவமாய் எரிக்கப்படுகின்றது.. குடும்பம் குடும்பமாய் உயிர்கள் கொளுத்தப்பட்டு மனிதநேயம் மட்டும் கடலில் கரைக்கப்படுகின்றது. ஆங்காங்கேவயது வித்தியாசமில்லாமல் ..பெண்கள் மீது பலாத்காரங்கள்! அட தூரத்தில் பாருங்களேன்... தேசமாதாவையும் ஒருவன் துரத்திக்கொண்டு ஓடுகின்றான் கையில் சூலாயுதத்தோடு !அய்யோ.. கருவான எனக்கே கண் கலங்குகிறதே..? என்னம்மா இது.. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் யுத்தம் நடக்கிறதா என்ன..? அதிர்ச்சியாக இருக்கிறது இந்தியாவில் கூட மனிதர்களைத் தின்னும் கூட்டங்களா..?இதற்கிடையில் சூலாயுதத்தின் முனையில் என்னைத் தூக்கியவர்கள் யாருடைய பெயரையோ திரும்ப திரும்ப சொல்லி வெற்றி முழக்கமிட்டு எக்காளத்துடன் சிரிக்கிறார்கள். நீ சொல்லவேயில்லையம்மா.. மனிதர்கள் இவ்வளவு பயங்கரமானவர்களா..? அந்த வலியிலேயே நான் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கின்றேன். கண்ணை மூடுவதற்கு முன் உன் முகம் பார்க்க முற்பட்டேன் ஆனால் முடியவில்லையம்மா.. என்னை நெருப்பில் வீசி அழித்துவிட்டார்கள்.. அய்யோ என்னவெல்லாம் நான் கற்பனை செய்து வைத்திருந்தேன் தெரியுமா..?
*கருவுக்குள் என்னை பாதுகாப்பாய் அடைகாத்த உன் மடியிலே விளையாடி மகிழவேண்டும்
*உன் கண்ணீரைக் என் கைகளால் துடைக்க வேண்டும்
*எப்போதும் உன்னை மகிழ்ச்சி படுத்தி வைக்க வேண்டும்
*குறும்புகள் ஏதும் செய்யாமல் உன் சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் இப்படி ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருந்தேன்..
நான் உன்னுடைய குழந்தையாக மாற நினைத்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இதுவரை உணர முடியவில்லை.

ஏனம்மா என்னை கருவில் அழித்தார்கள் .....? ? ? ?

அதிரை பைத்துல்மாலுக்கு டைரியின் கேள்விகள்

பிரம்மாண்டமான திருக்குர் ஆன் மாநாட்டை வருடந்தோரும் நடத்தி வரும் அதிரை பைத்துல்மால் மற்ற ஊர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதை யாராலும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ இயலாது. ஏழை எழிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் அதிரை பைத்துல்மால் செய்துவரும் தொண்டு பாராட்டக்குரியது(எல்லாப் புகழும் இறைவனுக்கே!). இத்தொண்டு நிர்வனத்தார் மீது எனக்குள் எழுந்துள்ள கேள்விகளை இங்கு தொகுத்துள்ளேன்.

1) ஆஸ்பத்திரி தெருவில் இந்த நிர்வனத்திற்கு சொந்தமான போதிய இடவசதியுள்ள அலுவலகம் இருந்தும் நடுத்தெருவில் மீண்டும் எந்தவொரு வருவாயும் இல்லாத மற்றுமொரு அலுவலகம் அமைக்க அவசியமென்ன?
2) புதிதாக இஸ்லாத்தை தழுவி நமது ஊருக்கு வரும் சகோதரர்களுக்கு சிறு வியாபாரம் தொடங்குவதற்கு கூட எந்தவொரு நிதியுதவி செய்வதற்கு எந்தவொரு தொண்டு நிர்வனமும் முன் வருவதில்லை என மரைக்கா பள்ளியில் கூடும் இளம் உலமாக்களின் கேள்விகளுக்கு நிர்வனத்தாரின் பதில் என்ன?

3) வட்டியில்லா கடன் மூலம் நகை அல்லது சொத்துக்களின் மீது கடன் வழங்கும் அதிரை பத்துல்மால் எந்தவொரு வசதியில்லாத ஏழைகளுக்கு பரம்பரை பரம்பரையாக நமதூர் மண்ணில் வாழ்ந்து வரும் குடும்பத்தாருக்கு கடன்கொடுக்க மறுப்பது ஏன்?

4) வட்டியை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்நிர்வனம் இருந்தும் புதுக்கோட்டையிருந்து வரும் ஃபைனான்சியர்கள் சுவற்றின்மீது ஏறி நமது சகோதிரிகளிடம் வட்டியை வசூல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டக் காரணம் என்ன? இதைப்பற்றிய உங்களுடைய ஆய்வு அல்லது சொலூஷன்/கன்குலூஷன் தான் என்ன?

5) அதிரை பைத்துல்மாலின் ஆண்டு வரவு சிலவு அறிக்கை, நீங்கள் செய்துவரும் நற்காரியங்கள் என்ன, அடுத்தக்கட்ட திட்டங்கள் என்ன போன்ற விபரங்கள் எந்த இணையதலத்தில் பதியப்பட்டுள்ளது அல்லது ஆண்டு அறிக்கை புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பதை தெரியப்படுத்தினால் என்னை போன்று கேள்வி எழுப்புவோர்களுக்கு உங்களுடன் சேர்ந்து நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
-Diary

'விளம்பரமின்றி' பல்வேறு சேவைகளை தொய்வின்றி செய்துவரும் பைத்துல்மாலின் மீது டைரி கேட்டுள்ள கேள்விகள் நியாயமானதே. அதனை பைத்துல்மால் பதிலளிக்கும் என எதிர்பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

அதிரை பைத்துல்மாலில் படிக்கும் காலங்களில் போய் வர இருந்த சில சகோதரர்கள் ஏனோ படித்தபின் செல்வதில்லையாம். இது வருத்தத்திற்குரியது. பொது அமைப்பான இதற்கு தொழில் நுட்ப ரீதியில் சேவை செய்ய தன்னார்வலர்கள் தேவை என்பதை அறிய முடிகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் http://baithulmal.org என்கிற இணையதளம் அதிரை பைத்துல்மாலுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப தன்னார்வலர்களின் பங்களிப்பு இல்லாததால் அது ஏனோ முன்னேற்றமின்றி தொடர்கிறது.

பொது அமைப்பாயினும் இக்காலகட்டத்தில் விளம்பரம் அவசியம் என்பதை அதிரை பைத்துல்மால் உணர்ந்தால் சரிதான்.

--அதிரை எக்ஸ்பிரஸ்

அதிரை எக்ஸ்பிரஸின் Terms & Conditions, Privacy policy

We are in a situation to put our Terms & Conditions and also to publish our privacy policy. Though these scripts are in starting stage, insha allah we will add timeupon.

Also, Thanks to Br. ABDUL RAZAK message
//
IF UNPARLIMENTED WORDS & SENTENCE POSTED IN ADIRAIXPRESS ON INDIVIDUAL WILL BE LEGALLY PRSOSICUTED..AVOID INSIULT ANY INDIVIDUAL.ALLAH WATCHING US.
//

1. He reminds chat users about their hatred, insult words in chat box and told it can be possible for legal action against those propagating hatred, insult individuals etc.

2. At the same time even though they knew it is the audience, chat users writing their comments, one or two people in chat, by intentionally de-promoting Adiraixpress in our own Chat box :-)

Anyhow, We would like to inform them, we always welcome your suggestions, feedback, even negative feedback in right manner. We pleased to request you to write as an article and send to adiraixpress.direct[at]blogger.com, on what basis you feel Xpress is bad/wrong. Come on write your view. People will justify and give their comments. At the same time, If you have good skill in writing you too can serve as a contributor. It is chance that you can prove your writing skill as well as you can write your thinking against Xpress, It will helps us.

It is free Media. Free speech, everyone can speak on their own.


we knows everyone's IP address and their location due to that, in chat box. Since we too from adirai, we easily recognize you (and laugh at sometimes). (Please see privacy policy)

Adirai xpress Terms and Conditions:

1. Adirai Xpress already knows well that any hatred, insult, abusive words in its writing can lead to/ have to face legal action. And so, Adiraixpress carefully take care of every articles it posted in it. And if some author post with/without their intention with such hatred, insult, abusive words, adirai Xpress have record that it acted promptly and removed such content immediately when it knows. And Insha Allah it will follow the same in its future too.

2. We would like to inform the chat users, that if you are posting hatred, abusive, or any words you used in chat box that Adirai xpress feel is not good or inappropriate, then Adirai xpress will remove those words immediately (when it finds it). And may or maynot you may be penalized for your IP Ban for a week or more.

3. AdiraiXpress Contributors should not post hatred, personal attacks which in turn lead to legal action. Must avoid such topics. But in case of, if it is must due to community necessity, you are welcome but with mild and polite language. In that situation, you can put the article in 'Save as Draft' and write an email to AdiraiXpress and even you can discuss with your friends/writers circle for any help/modification you may need. AdiraiXpress moderator will revive your article/news and may or may not approve those things/topics/posts.

4. Adiraixpress will never take Chat box messages as suggestions/complaints to xpress. Any suggestions feedback should reach to adiraixpress[at]gmail.com stating the problem. Can copy & paste the script.

5. We will try our best to publish every article we received through email, but due to some circumstances we may neither emailed you nor published. It may be due to time availability to its moderators to revive and publish or may be due to your article may not have enough, appropriate informations relate to your topic,post, content.

6. We may add points whichever, whenever or timeupon when we feel we need it.

Privacy policy:

1. Our readers are our asset and we respect their feelings. They have every right to post their comments, suggestions, feedback, or even hating us (Adiraixpress). Even if they did mistakes by writing hatred in chat for any/some reason, (may be short term angry), though we remove that, We never disclose to anyone their details like persons IP/user, or location from where he entered his/her scripts. Insha Allah.

Also, Adiraixpress Requests its contributors to follow the same and never disclose privacy related issues with non-contributors or anyone.

And in case you feel your privacy is disclosed, kindly email us, we will enquire within us. And if in case if it was, at the least, for the best we will send you an apology :-)

2. But, in case of, legal terminologies, if government law agencies asks the details, we will hand over the details. This may be the chat history and they can get the other details from blogger.com itself directly or from us.

3. If the person(s) depromoting Adirai Xpress continuously or rarely with intentionally, in which if we feels to answer, at that time we may or may not publish the location of the users.

மேற்கண்டவற்றை வாசகர்கள் அவசியம் பின்பற்றவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
வஸ்ஸலாம்
அதிரை எக்ஸ்பிரஸ்

Note: we need volunteers to write disclaimer for Adiraixpress. Here is a great article to prepare for that Writing a Blog Disclaimer

ஆட்டு மந்தை !

இறைவன் எந்த நோக்கத்திற்காக மனிதனைப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கம் நிறைவேற மனிதன் மனிதனாக வாழவேண்டும். அப்போதுதான் மனிதன் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிப் பாதையை அடையமுடியும். ஆயினும் மனிதன் அந்த வெற்றிப் பாதையில் நடைபோட ஷைத்தான் தடையாக இருக்கிறான். அவனது சபதம் எப்படியும் மனித வர்க்கத்தை எரியும் கொடும் நரகில் கொண்டு தள்ளுவதே. எந்த மனிதனின் காரணமாக தனக்கு நரக தண்டனை கிடைத்ததோ அந்த மனிதனையும் நரகத்தில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறான் ஷைத்தான்.


இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கையாக இருப்பதால் பரிட்சையின் நிமித்தம் அல்லாஹ் மனிதனுக்கு அவனது விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள இரண்டு வழிகளைக் கொடுத்துள்ளான். ஒரு வழி அவனை சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். இரண்டாவது வழி அவனை நரகில் கொண்டு சேர்க்கும். மனிதனின் படைப்பில் அடிப்படையில் அவனுக்கு இயற்கையான பல உணர்வுகள் இருக்கின்றன. பசி உணர்வு, காம உணர்வு, இன உணர்வு, மொழி உணர்வு, பிரதேச உணர்வு, தேச உணர்வு என்றெல்லாம் அந்த உணர்வுகள் பரிணமிக்கின்றன. ஷைத்தான் இந்த உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு மனிதனை மனித நிலையிலிருந்து மிருக நிலைக்கு மாற்றி விடுகிறான்.


ஷைத்தானின் இந்த முயற்சிக்கு மனித இனத்திலிருந்தே சிலர் துணை போகிறார்கள். அவர்கள் மறுமையை மறந்து இவ்வுலக சுகத்தில் மயங்கி தறி கெட்டுச் செல்கிறார்கள். இவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் மதப்புரோகிதரர்கள், அரசியல்வாதிகள். இறைவனை நெருங்கச் செய்வதாக கூறிக்கொள்ளும் புரோகிதரர்கள் அவர்கள் உண்டு கொழுப்பதற்கும், உலக சுகங்களை அடைவதற்கும் சேவையைப் பிழைப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். எனவே அவர்கள் மக்களின் உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்; உலக ஆதாயம் அடைகிறார்கள்.


இதே போல் அரசியல்வாதிகளும் ஆட்சியில் அமரும் ஆசையில் மக்களின் வாக்குச் சீட்டைக் குறியாகக் கொண்டு இன, மொழி பிரதேச உணர்வுகளை தூண்டி விடுகின்றனர். உணர்வுகள் மிதமாக இருக்கும்போது மனித வர்க்கம் பலன் பெறுகிறது. அவை வெறிகளாக மாறும்போது மனிதனே மனிதனை வெட்டிச் சாய்க்கும், மனித இரத்தத்தை ஆறாக ஓடச் செய்யும் நிலை ஏற்படுகிறது.


புரோகிதரர்களும், அரசியல்வாதிகளும் தங்களின் அற்ப சுகங்களை தியாகம் செய்து மக்களின் நல்வாழ்வுக்கு துணை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது குதிரைக் கொம்பாகும். எனவே மக்களே அவர்களின் கெடுதிகளைப் புரிந்து அவர்களை ஓரம் கட்டவேண்டும். ஆனால் கைசேதம் கசாப்புக் கடைக்காரர் பின்னால் செல்லும் ஆடுகளைப்போல், மக்கள் வெள்ளமும் இந்த புரோகிதரர்களின் பின்னாலும் அரசியல்வாதிகளின் பின்னாலும் செல்லுவது அதிகரித்தே வருகிறது. காரணம் மக்களிடையே போதிய சுய சிந்தனை இல்லை.


மக்களின் இந்த நிலையை மாற்றிட ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அவனது போதனைகளை கடைப்பிடிப்பதின் மூலம்தான் இவர்களிடமிருந்து இந்த மனித சமுதாயம் விடுபட முடியும். எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இந்த சுயநல வாதிகளான அரசியல் தலைவர்களையும் மதப்புரோகிதரர்களையும் நம்பிச் செயல்படுவதைக் கைவிடுங்கள். உங்களை ஏமாற்றி அவர்கள் ஆதாயம் அடைவதில் இந்த இருசாரரும் கூட்டுள்ளவர்கள்தான். இந்த நிலை மாற வேண்டுமானால் மக்கள் இந்த அரசியல் தலைவர்கள் பின்னாலும், மதப்புரோகிதரர்கள் பின்னாலும் கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத் தனமாகச் செல்வதைக் கைவிட வேண்டும். ஒவ்வோரு ஆணும், பெண்ணும் சுய சிந்தனையாளர்களாக மாற வேண்டும்.

Sunday, June 22, 2008

தீரர் திப்பு சுல்தான் அவர்களின் வாழ்கை வரலாறு பாகம் 2

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (179092) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான்.
திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு.
மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. ""30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது'' என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.
பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது. மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு.
1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

தகவல் உதவி அபு ஜுலைஹா

தொ(ல்)லைக்காட்சியும் குழந்தைகளும்

பெற்றோர்களே ! உங்கள் குழந்தைகளை தொலைக்காட்சி யின் பக்கம் நெருங்க விடாதீர்கள் குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது. அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும். நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம். மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை. சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள். ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது. ( ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)

பெற்றோர்களே! உஷார்!!

பெற்றோர்களே ! இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா ?
சதாவும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள். சன் டிவியின் ' சுட்டி ' போன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை. விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை. பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை. ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை.

சிலைகளாக

பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான். உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள்.கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா ?

குழந்தைகளின் எதிர்காலம் ?

இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?
உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள். அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும் , அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அலட்சியம் காட்டாதீர்!

இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள்.
எனவே ! பேற்றோர்களே ! குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி .வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள். அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும்.
இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை. இதுவே அவர்களுக்கு அழகு. குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும், நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைவன் நம் அனைவரையும் காத்தருள்வானாக!

அன்புடன் TATA

பிறப்பு இந்துவாக,இடையில் கிறிஸ்துவராக,இப்போது முஸ்லிமாக!

அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக் கவனம் பெற்றன.


அந்த நூல்கள் அவருள் பிரள யத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்டஉதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.


அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள். தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.

சென்னை டெபுடி கமிஷ்னர் காமினி யின் அழைப்பின் பேரில் தமுமுக வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.

இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.
*******************************************************************************
அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக்கூற முடியாதவை. உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம்.

நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.

என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு. யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத் திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை. கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன். இதில் எந்த ஒரு உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன். உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள். மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா அழாதீங்கம்மா!

ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு..
ரஜிதா (எ) ஹமிதா

நன்றி www.tmmk.in

அண்ணல் நபி அவர்களின் அழகிய BUSINESS MANAGEMENT!

அண்ணல் நபி அவர்கள் சொல்லித்தராத துறை இல்லை எனும் அளவுக்கு எல்லா விஷயங்களையும் நமக்கு சொல்லிச் சென்றுள்ளார்கள்.அதில் ஒன்று வியாபாரம்,கொடுக்கல்-வாங்கல் பற்றி,இனி-

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது "உங்களுடைய இறைவனின் அருளைத் தேடுவது உங்களின் மீது குற்றமில்லை" என்ற (திருக்குர்ஆன் 02:198) வசனம் அருளப்பட்டது என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.


"ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார்கள்.


"தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.


அபுல் மின்ஹால்(ரஹ்) அறிவிக்கிறார்கள், "நான் நாணய மாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், "நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு "உடனுக்குடன் மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால்அது கூடாது "என அவர்கள் பதில் அளித்தார்கள்.ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்கள், "நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுகை தொழுது கொண்டிருந்தபோது வணிகக் கூட்டம் ஒன்று வந்தது. உடனே, பன்னிரண்டு நபர்களைத் தவிர மற்றவர்கள் (வணிகக் கூட்டத்தை நோக்கி கலைந்து) ஓடிவிட்டனர். அப்போது, "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால், நின்ற நிலையில் உம்மைவிட்டுவிட்டு அங்கே ஓடி விடுகிறார்கள்!" என்னும் (திருக்குர்ஆன் 62:11) இறைவசனம் அருளப்பட்டது!"


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண் தம் வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால் (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்கூலி அவளுக்கு கிடைக்கும். (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்கூலி அவளுடைய கணவனுக்கு உண்டு. கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோல் (நற்கூலி) கிடைக்கும். ஒருவர் மற்றவரின் கூலியில் எதனையும் குறைத்து விடமாட்டார்" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.


"ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்" என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்.


"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என மிக்தாம்(ரலி) அறிவிக்கிறார்கள்.


"பிறரிடம் யாசகம் கேட்படை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விறகச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இதை அபூ ஹுரைரா(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) இருவரும் அறிவிக்கிறார்கள்.


வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்.


"(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்." என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.

Saturday, June 21, 2008

Assalamu alaikkum

The Importance of Halal in Islam

Allah (swt) says in Qur’an: “O you who believe! Eat of the lawful things that we have provided you with, and be grateful to Allah (swt), If it is He whom you worship” (S2,v172)

“O Messengers! Eat of the Tayiyyibat (Halal foods) which Allah has made lawful (meat of eatable animals, milk products, fats, vegetables, fruits, etc.) and do righteous deeds”’ (S23,v51)

In both the ayats Allah (swt) orders the Messengers and all Muslims to abstain from eating Haram food, in the same way Halal food and pure things are emphasised for consumption whilst showing thanks (shukr) for this blessing. By eating Haram food bad characteristics are borne in an individual, the desire to perform good deeds disappears and du’aas are not accepted. By eating Halal food, nur (spiritual light) is created. This results in good characteristics and an attraction to do good deeds. A person starts to hate evil deeds. His du’aas are accepted

 Abu Hurairah (ra) states: ‘For one of you to fill his mouth with the dirt of the earth is better for you, than to put a morsel of Haram food in your mouth.’ (Al Kabair, Ahmed)

 Ibn Ka’b bin Ujra (ra) states that Rasulullah (saw) said: ‘That body will not enter Jannah which was nurtured by Haram substances.’ (Tirmidhi)

 Abu Hurairah (ra) states that Rasulullah (saw) said: ‘A time will come upon the people that they will not care for that which is being taken/earned, if it is from Halal or Haram sources.’ (Bukhari)

 Ibn Umar (ra) states that Rasulullah (saw) said : ’Four characteristics are such that, if they are within a person, they are enough for him, (1) the care of a trust in your possession, (2) to speak the truth, (3) good characteristics, (4) to care for Halal and Haram in eating and drinking. ‘ (Al Targib wal Tarhib)

Many people are such that in matters of eating and drinking they do not think whether there is a Haram ingredient in the food, or whether the meat has been slaughtered according to Shari’ah or not, i.e. Halal. There are also people who take care of the food being Halal but they do not care about the income that they use to buy the food. Whether it is Haram or not, in both instances, it is not permissible and the food will be regarded Haram. Some individuals open bank accounts to use the interest to assist the poor, but after a while they forget the needy and use the interest for personal gain and enjoyment.

A trustworthy trader’s status in Islam

 Abu Said Al Khudri (ra) states that Rasulullah (saw) said: ‘The merchant/trader who is completely honest & truthful in his trade will be with the Prophets , the Truthful and Martyrs on the Day of Qiyamah.’ (Tirmidhi)

 Ibn Masood (ra) states that Rasulullah (saw) said: ‘The worry and striving to earn Halal is Compulsory (Fardh) after the major Fardh acts (salaat, saum, etc.) (Baihaqi)

 Umar (ra) said: ‘Do not give up earning from Halal sources, and do not say that Allah (swt) provides an earning, for Allah (swt) does not send gold and silver from the skies, he has the ability to do that, but Allah (swt) has the habit of using different means to sustain his creation.’ (Aksir hidayat)

 Abdullah bin Mubarak (rah) said: ‘ I prefer to return one dirham (silver coin) due to suspicion more than giving 100,000 dirhams in Sadaqah.’ (Al Kabair)

My dearest friends! Everyone has to die and will be placed in their own grave. We should be ashamed that we say ‘the time is such that we can’t differentiate between Halal/Haram’. May Allah (swt) save us from that. Eating Haram food will cause immodesty, shamelessness and disregard for the laws of Allah (swt). If children are nurtured with Haram food, they will be rebellious and have the worst of characteristics. It is plainly evident that from purity comes good and from dirt comes evil.

My Brothers and Sisters! Let us think whether our earnings ,and let us ensure that we eat only Halal food. May Allah (swt) grant us the means to live according to His orders and attain His pleasure. Aameen.

Thanks to Mufti Yusuf Danka
By
Adiraian 4m UK.
Wassalam

THE TEARS OF RASULULLAH .....

Suddenly, there was a person said salaam.
'May I come in?' he asked.
But Fatimah did not allow him enter the room.
'I'm sorry, my father is ill,' said Fatimah turned her body back and closed the door.
She went back to her father who had opened his eyes and asked Fatimah, 'Who was he, my daughter?'
'I don't know, my father. It was the first time for me to see him,' Fatimah said gently.
Then, Rasulullah looked at his daughter with trembled look, as if he wanted
to reminisce about every part of her daughter's face.
'Know one thing! He is who erases the temporary pleasure; he is who separates the companionship in the world.


He is the death angel,' said Rasulullah .
Fatimah bore the bomb of her cry. The death angel came toward him,


But Rasulullah asked why Jibril did not come along with him.
Then, Jibril was called. Jibril was ready in the sky to welcome the soul of Habibullah and the leader of the earth.
'O Jibril, explain me about my rights in front of ALLAH?' Rasulullah asked with a weakest voice.
'The doors of sky has opened, the angels are waiting for your soul.'
'All jannats open widely waiting for you,' Jibril said.
But, in fact, those all did not make Rasulullah relieve, his eyes were
still full of worry.
'You are not happy to hear this news?' asked Jibril.
'Tell me about the destiny of my people in future?'

'Don't worry, o Rasul ALLAH . I heard ALLAH told me: 'I make jannat haram for every one, except the people of Muhammad are inside it,' Jibril said.
It became closer and closer, the time for Malaekat Izrail to do his work.
Slowly, Rasulullah's soul was pulled. It was seemed that the body of Rasulullah was full of sweat; the nerves of his neck became tight.
'Jibril, how pain this sakaratul maut is!'
Rasulullah uttered a groan slowly. Fatimah closed her eyes, Ali sat beside
her bow deeply and Jibril turned his face back.
'Am I repugnant to you that you turn your face back o Jibril?' Rasulullah asked to the Deliverer of Wahyu.
'Who is the one who could see the Habibullah in his sakaratul maut,' Jibril said.

Not for a while, Rasulullah uttered a groan because of unbearable pain.
'O ALLAH, how greatest is this sakaratul maut. Give me all these pains,don't to my people.'
The body of Rasulullah became cold, his feet and chest did not move anymore.
His lips vibrated as if he wanted to say something, Ali took his ear close to Rasulullah .
'Uushiikum bis salati, wa maa malakat aimanuku - take care the salaat and
take care the weak people among you.'
Outside the room, there were cries shouted each other, sahabah held each
other. Fatimah closed her face with her hands and, again,
Ali took his ear close to Rasulullah's mouth which became bluish.
'Ummatii, ummatii, ummatii?' - 'My people, my people, my people.'
And the life of the noble man ended.

Could we love each other like him? Allahumma salli 'ala Muhammad wa baarik
wa salim 'alaihi. How deep is Rasulullah's love to us.

அநீதி இழைக்காதே!

இன்று அநீதி இழைப்பதும்,ஒருவர் ஒரு செய்தியை சொல்லிவிட்டார் என்றால் முறையான சாட்சிகளோ அல்லது விசாரணையோ இன்றி ஒருவர் மேல் அவதூறு சொல்வது,உதாரணமாக ஒரு பெண்ணின் கற்பையோ,அல்லது இன்னார் ஒரு திருட்டுப் பேர்வழி,அல்லது இன்னார் இப்படி என்று இட்டுக் கட்டுவதும் இக்காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த ஹதீஸ் நமக்கு பாடம் கற்றுத்தருகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்). (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

Friday, June 20, 2008

தீரர் திப்பு சுல்தான் அவர்களின் வாழ்கை வரலாறு பாகம் 1

"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. """இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?'' என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர்.


இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

தகவல் உதவி அபு ஜுலைஹா

சமுதாயத்தின் எடுத்துக்காட்டு நபிகள் நாயகம் அவர்கள்! அறிஞர் அண்ணா பாகம் 2

இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி.இன்றைய சீர் திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?

நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவு வரவேண்டும்.ஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை.

அரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் "360 உருவங்களும் ஆண்டவனல்ல" என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்

.பொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.

நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று!சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு!