ஆகஸ்ட் 15 - தடையை தாண்டிய இஸ்லாமிய படை









தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என மூன்று மாநிலங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்த போவதாக அறிவித்த தினத்தில் இருந்து இந்த அணவகுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட ஃபாசிச சக்திகளோடு உளவுத்துறை, காவல் துறை என அரசின் அனைத்து துறைகளும் கங்கனம் கட்டிக் கொண்டு களம் இறங்கின. காவல்துறையும், உளவுத் துறையும், ஃபாசிச சக்திகளோடு சோந்து பல சதித் திட்டங்களை திடு்டி நிறைவேற்றின. தமிழகத்தில் இது இன்னும் கனஜோராக நடந்தது

தமிழக காவல்துறை இன்னும் ஒரு படி மேலே போய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் முயற்சியில் இரங்கியது. இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள், வெடி குண்டு புரளிகள் கிளப்பப்பட்டன, தினமலர் போன்ற ஃபாசிச ஆதரவு பத்திரிகைகள் இந்த பதட்டத்தை சற்றும் குறையாமல் தகடக வைத்துக் கொள்ளும் முயற்சியல் ஈடுபட்டன. நமது சமுதாய காவலர்கள் என கூறிக்கொள்ளும் தமுமுக, முஸ்லிம் லீக் உட்பட ஆழும் கட்சி கூட்டனியில் அங்கம் வகிக்கும் எவரும் இதை கண்டிக்கவோ அல்லது அரசை எதிர்த்து போராட்டங்களை அறிவிக்கவோ இல்லை ஒரு சில அறிக்கைகள் வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்ததென இருந்து விட்டார்கள்.. சரி எதிர்க்கட்சியின் கூட்டனியில் இருக்கும் ததஜவோ இல்லை புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கும் இந்திய தேசிய மக்கள் கட்சியோ அரசின் முழு ஆதரவுடன் தமிழகத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நடந்து வரும் இந்த அடக்குமுறை குறித்து மூச்சு கூட விட மறுத்துவிட்டனர்.
அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை என இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன, முஸ்லிமகள் சித்திரவதைக்காளாக்கப்பட்டார்கள். இதை எந்த சமுதாய பத்திரிகைகைளும் கண்டிக்காத நிலையில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சில சகோதரர்களால் நடத்தப்பட்டு வரும் அதிரை எக்ஸ்பிரஸ் என்ற வலைப்பதிவு மட்டும் காவல்துறை மற்றும் ஃபாசிச பத்திரிகை சக்திகள் நடத்தி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை கண்டித்து பல கட்டுரைகளை வெளியிட்டு இந்த இக்கட்டான சமயத்தில் சமுதாயத்தின் குரலாக அவ்வப்போது ஒலித்து வந்தது சற்று ஆறுதலான செய்தி.
தமிழகமெங்கும் மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர், காவல்துறைக்கு முறைப்படி தகவல் அளித்து விட்டு நடந்த மனித நீதிப் பாசறையின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகள் ஃபாசிச பத்திரிகைகளால் பயங்கரவாத செயலாக சித்தறிக்கப்பட்டன. இதற்கு நமது சமுதாய அமைப்புகளே துனை போனது தான் கொடுமையிலும் கொடுமை. எப்படியாவது இந்த அணிவகுப்பை தடுத்து விடுவது என்று மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மிரட்டப்பட்டார்கள். இறுதியாக இந்த அணிவகுப்பை தடைசெய்து காவல் துறை ஆனை பிறப்பித்தது. இதை எல்லாம் எதிர் பார்த்திருந்த மனித நீதிப் பாசறை உடனடியாக இன்றும் சாகாமல் இருக்கும் இந்திய நீதித்துறையை அனுகியது. உடனடியாக காவல்துறையின் தடையை நீக்கிய நீதிமன்றம் மனித நீதிப் பாசறை தனது சுதந்திர தின அணிவகுப்பை எந்த சிரமமும் இல்லாமல் நடத்த உத்தரவு பிறப்பித்தது
திட்டமிட்டபடி கடந்த ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று அனைத்து தடைகளையும் தகர்த்த மனித நீதிப் பாசறையின் போராளிகள் தங்கள் சுதந்திர தின அணிவகுப்பை செவ்வென நடத்திக்காட்டினர். மதுரை மாட்டுத்தாவனி பேரூந்து நிலையம் அருகில் உள்ள விறகுபேட்டையில் வெள்ளையருக்கு எதிராக போராடிய இந்திய சுதந்திர போராளியான மாவீரன் மருதநாயகம் பெயரில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் சரியாக மாலை 3.00 மணிக்கு அணிவகுப்பு மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மறியாதைக்குறிய அபுபக்கர் சாஹிப் அவர்கள் அணிவகுக்க தயாரான முஸ்லிம் படையினரின் முதல் மறியாதையை பெற்றுக் கொள்ள அணிவகுப்பு துவங்கியது. 20 வீரர்கள் அடங்கிய "பேன்ட் ட்ரூப்ஸ்" எனப்படும் இசைக்குழுவினர் தேசிய ஒருமைப்பாட்டு கீதமான "ஸாரே ஜஹான் சே அச்சா" என்ற கீதத்தை உணர்ச்சி பெருக்போடு வாசிக்க மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் 800 போராளிகள் அணிவகுத்து செல்ல நிகழச்சிகள் ஆரம்பமாயின.

" இறைவனின் திருப்பெயரால் இந்த உறுதி மொழியை எடுத்து கொள்கின்றோம், சுதந்திர போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும், உடைமைகளையும், உடலுறுப்புக்களையும் இழந்து ஏற்றி வைத்த இந்த சுதந்திர கனலை நாங்கள் என்றும் ஏந்திச் செல்வோம், அரும்பாடு பட்டு பெறப்பட்ட இந்த சுதந்திரத்தை நாங்கள் எந்த வலை கொடுத்தேனும் தக்க வைத்து கொள்வோம். எங்கள் தாய்த்திருநாடு இந்தியாவையும், இந்தியர்களனைவரையும் நாங்கள் நேசிக்கின்றோம், இனமோ,நிறமோ, மொழியோ, எவ்வித பேதங்களும் எம்மை பிறிக்காது. பிறப்பினால் யாரும் உயாந்தோர், தாழ்ந்தோர் இல்லை, நாட்டின் சுதந்திரமான அரசியல் சட்ட திட்டங்களையும், பாதுகாப்பையும், நீதியையும் நாங்கள் பாதுகாப்போம். சுதந்திரம் என்பது எமது பிறப்புரிமை, எமது நாடு ஆதிக்க சக்திகளின் முன் அடிமைப்படுத்தப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதியோம், இந்திய மக்களை தூண்டி விட்டு அவர்களிடையே கலவரத்தை விதைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளச் செய்யும் ஃபாசிச சக்திகளை நாம் தோற்கடிப்போம், வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்திய தேசியக் கொள்கைகைய நாம் பற்றிப்பிடிப்போம், இதற்கு கடவுள் சாட்சியாக இருக்கட்டும்"
என்ற உறுதிமொழியை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா அவர்கள் வாசிக்க திரன்டிருந்த மக்கள் கூட்டமும் அணிவகுத்து நின்ற இஸ்லாமிய படையும் உறுதிமொழியை சோந்து கூறி உறுதி மொழி எடுத்தது. பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்கள் தனது உரையை ஆரம்பித்தார், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பணிகளை புகழந்த அவர் கட்டாயம் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அரசியில் அடியெடுத்து வைக்க வேண்டும் என வலியுருத்தினார். அதன் பின்னர் பேசிய உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்கள், ஃபாசிஸ்ட்டுகள் தான் உண்மையான தீவிரவாதிகள் என்றும், இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் என அணைத்து தரப்பு மக்களாலும் போராடி பெறப்பட்ட சுதந்திரத்தை திருட முனைவதாகவும், இன்னும் தமிழக அரசு உடனடியாக சிறையில் உள்ள 8 வருடங்களை கடந்த கைதிகள் அனைவரையும் இன பேதம், மத பேதம் இல்லாமல் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுவிகக் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்களான மறியாதைக்குறிய வைத்தியலிங்கம் அவர்கள், மறியாதைக்குறிய குலாம் அப்துல் ஆரிஃப், மறியாதைக்குறிய சேக், மறியாதைக்குறிய மாயன்டி பாரதி ஐயா ஆகியோரை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் கவுரவித்தார்கள்.பின்னர் பேசத் துவங்கிய பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்கள் பல்வுறு சோதனைகள் மற்றும் தடைகளை தாண்டி சுதந்திர தினத்தை கொண்டாட திரண்டிருந்த மக்களை புகழந்தார். அரசு தனது குடிமக்களை சரிசமமாக நடத்தாததால்தான் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா இந்த அஜென்டாவை கையில் எடுத்ததாக் குறிப்பிட்ட அவர், நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புக்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் மீது பலியை போட்டுவிட்டு உண்மையான குற்றவாளிகள் எளிதாக தப்பி செல்வதற்கு உதவி வரும் அரசை வண்மையாக கண்டித்த அவர், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த பிரச்சினைகளை மறைக்க மத்திய அரசே அஹமதாபாத்தில் குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியாதாக பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜின் பேச்சை குறிப்பாக சுட்டிக் காட்டி பேசினார். 1993 ல் இருந்து நாட்டில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புக்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான கமிசனை அமைக்க கோரிக்கை விடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த கடந்த 61 வருட காலமாக இந்திய முஸ்லிம்கள் அரசியலில் நேரேதிர் நிலையை எடுத்ததன் விளைவு இந்திய முஸ்லிம்கள் சொல்லெனா துயருக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இனிவரும் காலங்களில் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதங்காக வேண்டி இஸ்லாமியர்கள் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் இன்னும் தலித்துகளோடு கைகோர்த்து பணி செய்ய வேண்டும் என்றும் குறிபபிட்டார்.பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்களின் உரைக்கு பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்களும், நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்களும், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா ஆகியோரும் கவுரவிக்கப்பட்டார்கள்.
பின்னர் மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி் அவர்கள் தனது சிறப்புரையை துவக்கினார், இந்திய சுதந்திரப் போரில் தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்து உயிர் உடமைகளை இழந்த இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு இன்று இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடப்படுவதற்கு அரசே அனுமதி மறுக்கும் நிலையை சுட்டிக்காட்டி பேசுகையில் "இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் உரிமை இந்திய முஸ்லிம்களுக்கே இல்லை என்றால் வேறு யாருக்குமு் அந்த உரிமை கிடையாது" என்றும், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்த காவல் துறையை கடுமையாக கண்டித்த அவர் மதுரை மாநகர கமிசனர் நந்தகோபாலனுக்கும் ஆர்.எஸ்.எஸ ஃபாசிச சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை விசாரிப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுருத்தினார். இன்னும் தமிழக சிறைகளில் 8 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளையும் வரும் செப்டம்பர் 25 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.நிகழச்சியின் இறுதியாக மனித நீதிப் பாசறையின் பொருளாலரும், விடியல் வெள்ளி ஆசிரியருமான திரு. எம். முகம்மது இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை வழங்கினார் அதன் பின்னர் கூடியிருந்த கூட்டம் அமைதியாக கலைந்து சென்றது.மதுரையை உலுக்கும் வகையில் நடந்த இந்நிகழச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் , அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவர் ஹாபிழ் ரஷீத் சவுத்திரி, மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா , மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி், உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன், மதுரை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் பொருளாலர் திரு. நிஷ்ட்டர் அஹமத், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா உட்பட பலர் கலந்து கொண்டார்கள், நிகழச்சியை காண தமிழகமெங்கும் இருந்து பல ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரன்டு வந்திருந்தனர்.

செய்திகள் உதவி: திரு. A. முகம்மது யூசுஃப் , மிடீயா கன்வீனர், மனித நீதிப் பாசறை
நன்றி TMPOLITICS.NET




Share:

16 comments:

  1. MNP க்கு கொள்கையே கிடையாது. அன்று இவர்கள் ஜனநாயகம் ஷிர்க் என்றார்கள், இன்று தெரு தெருவாக கொடி பிடித்து அழைகிறார்கள். மார்க்கம் தெரியாமல் மக்களை வழிகொடுக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் கல்வியை பாழக்கி, அவர்களின் வாழ்க்கையில் மண்ணை அல்லி போடும் இவர்களை மக்கள் தெளிவாக அடையாளம் காண வேண்டும்.

    ReplyDelete
  2. சகோ அனானி சொல்லும் வாதங்கள் தவறானது. MNP யில் இருக்கும் சகோதரர்கள் முக்கியமாக கல்வியை கட்டாயமாக்கி மார்க்கவிஷயத்திலும் அருமையாக கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் தவறு செய்பவர்களை மரைமுகமாக கண்கானித்து கண்டித்து வருகின்றனர் இதனால் தவறுகள் குறைந்து கண்னியதுடன் வாழ்கின்றனர் என்பதை அறியவும்...

    ReplyDelete
  3. பாஷிசத்தின் புகலிடமான மதுரையில் இப்பேரணியை நடத்திக்காட்டியது எம் என் பி க்கு கிடைத்த மாபெரும் வெற்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அன்பனுக்கு,

    MNP க்கு கொள்கையின் கொள்கை என்ன என்று தெளிவுபடுத்தினால் நல்லது.

    மார்க்கம் தெரியாமல், தவறு செய்யும் பெண்களை கூட, வீடு புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் என்ன ஆதாரம் உள்ளது?

    MNP காலத்திற்கும், இடத்திற்கும் தகுந்தால் போல் மக்களிடம் வேடம் போட்டு இயக்கம் வளர்த்து வருகிறது.

    - முகம்மது

    ReplyDelete
  5. யின் பிரதான கொள்கை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியமைத்து அனைவருக்கு சம உரிமை கிடைக்க பாடுப்படுகிறது. இதைவிட வேறென்ன வேண்டும்? நீங்கள் இஸ்லாமிய ஆட்சியை வறவேற்கிறீர்களா?

    ReplyDelete
  6. MNPயின் பிரதான கொள்கை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியமைத்து அனைவருக்கு சம உரிமை கிடைக்க பாடுப்படுகிறது. இதைவிட வேறென்ன வேண்டும்? நீங்கள் இஸ்லாமிய ஆட்சியை வறவேற்கிறீர்களா?

    ReplyDelete
  7. அன்பனுக்கு,

    இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைத்தால் எந்த கொள்கை அடிப்படையில் அமைப்பீர்கள்? உதாரணத்திற்கு, உங்கள் இஸ்லாமிய ஆட்சி, தர்ஹாக்களை இடிக்குமா அல்லது கட்டுமா?

    ReplyDelete
  8. ஒரு அனானிமஸ் (பல பெயர்களில் அதிரை எக்ஸ்ப்ரஸில் கமென்ட் மற்றும் சேட்டில் எழுதிக்கொண்டிருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சர்ந்தவர்(இது குறித்து இப்பொழுது விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கின்றேன்)) எம்என்பி குறித்து சில கருத்துக்களைச் சொல்லியுள்ளார்.

    //MNPக்கு கொள்கையே கிடையாது. அன்று இவர்கள் ஜனநாயகம் ஷிர்க் என்றார்கள்இ இன்று தெரு தெருவாக கொடி பிடித்து அழைகிறார்கள். மார்க்கம் தெரியாமல் மக்களை வழிகொடுக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் கல்வியை பாழக்கிஇ அவர்களின் வாழ்க்கையில் மண்ணை அல்லி போடும் இவர்களை மக்கள் தெளிவாக அடையாளம் காண வேண்டும்.//

    இது இவர்களது அபார கண்டுபிடிப்பு. அதாவது முன்பு இது போன்று எம்என்பி வேறு ஒன்று சொன்னதாம். இப்பொழுது வேறு ஒன்று சொல்கிறதாம். இது பொதுவாகவே ததஜவினர் mnpயினரைப் பார்த்து கேட்கும் கேள்வி.

    இதே போல் பிஜே நேரத்திற்கு ஒன்றும் மாதத்திற்கு ஒன்றும் மாற்றி மாற்றி சொன்னால் அதற்கு மட்டும் மார்க்கம் என்று ஆதாரம் காட்டுவார்கள் இவர்கள். பீஜே தனக்கு தகுந்தார்போல் மாற்றுவாராம். அது சரியானது தானாம். ஆனால் எம் என் பி மட்டும் ஆரம்பத்தில் என்ன சொன்னார்களோ அதிலேயே இருக்க வேண்டுமாம். அது தான் கொள்கைப் பிடிப்புக்கு அர்த்தமாம்.

    mnp யினரின் தற்போதைய ஆய்வில் இன்றைய மாற்றம் சரியாக பட்டால் அதன் படி மாற்றிக் கொள்வதில் என்ன தவறு? உங்கள் பீஜே தனது சுயநலத்துக்காக அவரது கொள்கைளை அடிக்கடி மாற்றும் பொழுது இவர்கள் மார்க்கத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுக்காக தங்களுக்கு சரி என்று படுவதை மாற்றக்கூடாதா? என்னய்ய... உங்கள் தலைவர் பீஜேக்கு ஒரு சட்டம் MNP க்கு ஒரு சட்டம்?

    ஆரம்பத்தில் ஜிஹாது செய்ய வேண்டும் என்றார். அதைச்சொல்லி சிலரை சிறை செல்ல வைத்தார். இப்பொழுது அது கூடாது என்கிறார். ஆரம்பத்தில் 11 ரக்அத் தான் தராவிஹ் தொழ வேண்டும் என்றார் இப்பொழுது எத்தனை வேண்டுமானாலும் தொழழாம் என்கிறார். ஆரம்பத்தில் ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்றார். இப்பொழுது வாழ்நாளில் ஒரு முறை கொடுத்தால் போதும் என்கிறார். ஜூம்ஆவுக்கு முன் சுன்னத் இல்லை என்றார். இப்பொழுது இருக்கு என்கிறார். ஆரம்பத்தல் உலகம் முழுவதும் ஒரே பிறை என்றார். இப்பொழுது ஊருக்கு ஊர் பிறை என்கிறார். இது போல் எத்தனையோ பரினாமங்கள் அவரது வாழ்வில். ஆனால் ததஜ மடையர்களுக்கு இவை எல்லாம் கண்ணுக்குத் தெரியாது. அந்தோ பரிதாபம்.

    //இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைத்தால் எந்த கொள்கை அடிப்படையில் அமைப்பீர்கள்? உதாரணத்திற்கு, உங்கள் இஸ்லாமிய ஆட்சி, தர்ஹாக்களை இடிக்குமா அல்லது கட்டுமா?//

    இப்படி எல்லாம் ஒரு முஸ்லீம் எழுதுகின்றான் என்றால் அவனது ததஜ இயக்க வெறி எப்படி முற்றிப் போய்விட்டது என்று கவனித்தீர்களா சகோதரர்களே! ஒவ்வொருவனும் அவனவன் விரும்பும் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புவான். திமுக காரன் திமுக ஆட்சி வரவேண்டும் என்று விரும்புவான். அதிமுக காரன் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்று விரும்புவான். பாஜக காரன் ராமர் ஆட்சி வேண்டும் என்று கூட விரும்புவான். அதே போல் ஒரு இஸ்லாமியன் இஸ்லாமிய ஆட்சி வரவேண்டும் என்று விரும்புகிறான். ஓவ்வொரு உன்மையான முஸ்லீமும் இப்படித்தான் விரும்ப வேண்டும். ஆனால் இந்த இயக்க வெறி பிடித்த அனானி என்ற ததஜகாரர் மறுப்பு என்றப் பெயரில் என்ற எழுதியுள்ளார் என்று பார்த்தீர்களா? இஸ்லாமிய ஆட்சி என்ற சிந்தனையை பெயருக்காவது வரவேற்றிருக்கலாம். அந்த சிந்தனையையே கேளிசெய்வது போல் கேள்வி எழுப்பியுள்ளார் என்றால் இவர்களின் எண்ணத்தைப் புரிந்துக்கொண்டீர்களா? தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம்களுக்கு எத்தனையோ கருத்துவேறுபாடுகள் இருக்கின்றது. அது இருக்கும் பட்சத்தில் இஸ்லாமிய ஆட்சிக்கான வாய்ப்புகள் வந்தாலும் அமைக்கக்கூடாது என்கிறீர்களா? எல்லோரும் ஒன்றாக இனைந்தபின் தான் ஆட்சி அமைய வேண்டும் என்று சொன்னால் அது சாத்தியமா? இந்தியாவில் கூட காங்கிரஸ் கொள்கைக்கு மாற்றமான பாஜக ஆட்சிக்கு வருகின்றது. அது போல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகின்றது. வேறுபட்ட இரு கொள்கையுடையவர்கள் ஆட்சிக்கு வந்து ஆட்சி நடத்தும் போது நபி (ஸல்) அவர்களின் வழியில் இஸ்லாமிய ஆட்சி மட்டும் நடத்த முடியாதா என்ன? கேட்டால் ஏகத்துவத்தைப் பரப்புகின்றார்களாம். என்னக் கொடுமையா இது.

    ReplyDelete
  9. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் - வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை.

    ReplyDelete
  10. பிரச்சனையை திசை திருப்ப ததஜ தான் சரியான வழி என்பது தமுமுக வின தெண்டனுக்கு நன்றாக தெரியும்.

    அதை முன்னால் ததஜகாரன் என்று கூறி பொய்களை புலுகி வருபவர் சொல்லுகிறார். முடிந்தால், பொது மேடையில் ததஜவின் குறை நிருபியுங்கள். MNP ஜனநாயகம் ஷிர்க் என்று சொல்லி கொண்டே, கொடியும் பிடிக்கிறது என்பது உங்களை போன்றவர்களுக்கு தெரியாததை நினைத்தால் கொஞ்சம் கவலையாக உள்ளது.

    ReplyDelete
  11. சரி MNP யினர் மார்க்கம் தெரியாதவர்கள் என வைத்துக்கொள்வோம். மார்க்கத்தை கறைத்துகுடித்த நம்ம அண்னன் அவர்கள் தஞ்சையில் நடந்த தமுமுக மாநாட்டில் கலந்துகொண்டபோது அங்கு அணிவகுப்பில் குதிரை இன்னும் தேவை இல்லாத அனாச்சாரங்களை ஜவகிருல்லா மற்றும் அவரது கூட்டத்தினர் செய்துவிட்டதாகவும் அது தனக்குபிடிக்கவில்லை எனவும் கூறிய அண்னன் சமிபத்தில் தஞ்சை வல்லத்தில் நடன்த மாநாட்டில் 7 குதிரைகள் அணிவகுக்க அதை பார்த்து ரசித்த அண்னன் வாயடைத்து நின்றாறே. இது என்ன நியாயம் கூறுங்கள் சகோதரர்களே.
    அரசியல் சக்கடை தமுமுக அதில் இரங்கிவிட்டது நாங்கள் ஒருகாலும் கொடிபிடித்து வாழ்க ஒழிக கோஷம் போடமாடோம் என்று சொல்லிய அண்னன் அன்று "ஜெ"க்கு ஜே போட்ட காரணம் என்ன?
    அதுல்லாம் சரி நீங்கள் சொன்னபடி இடஒதுகீடு கொடுத்துள்ளிர்கள் இனீமே நாங்க உங்கலை தான் ஆதரிப்போம்ன்னு கலைஞ்ருக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தாரே அண்னன் நாளை பாஜ உடன் கூட்டனி வைத்துக்கொண்டால் உங்களது வாகுறுதி என்ன? கொடுத்தவாக்குறுதியை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை பாஜ வுடன் கலைஞர் கூட்டு சேர்ந்தால் இவ்வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் செய்வாரா அண்னன்?

    ReplyDelete
  12. முஜம்மில்,

    கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். பிரச்சனையை திசை திருப்பாதீர்கள்.

    - முகம்மது

    ReplyDelete
  13. திருந்தியவன்August 19, 2008 at 8:59 PM

    ததஜ சகோதரர்களை இதுபோன்று நிறைய எழுதவிட்டு டவுசரை கிழிக்க வையுங்கள்.

    அன்பன் விட்ட மற்ற சிலவைகள், டவுசர் போட்டு தொழலாம், இன்சூரன்ஸ் கூடும், உண்டியல் பணம் ஜாக்'கு அனுப்பினால் தேச விரோத செயல் அதே ததஜவுக்கு அனுப்பினால் ஹலால் இன்னும் ....

    ReplyDelete
  14. முஸ்லிம்களாக பிறந்த நாங்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதில் சடைத்தவர்கள் இல்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளது ஒவ்வொரு அமைப்பு சார்ந்த சகோதர்களின் விமர்சனகளும்!!! நபி(ஸல்) அவர்களைத் தவிர எமக்கு யாதொரு தலைவனுமில்லை என்று ஒவ்வொரு முஸ்லீமும் எண்ணாத வரை, இந்த வேறுபாட்டை நீக்கவே முடியாது.

    ReplyDelete
  15. "கலீபா உமர்(ரலி)அவர்களின் ஆச்சி இந்தியாவிற்கு வேண்டும்" என்றார் மகாத்மா காந்தி! அவரின் கனவை நினைவாக்க பாடுபடும் எம்.என்.பி க்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  16. ஆட்சி என்பதற்கு பதிலாக ஆச்சி என தவறாக பதிந்து விட்டேன்!

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது