நோன்பு திறக்க சில ஆகாரம்

மெது வடை
-----------
தேவையான பொருள்கள்:

வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ,
ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி,
இஞ்சி- சிறிய துண்டு,
பச்சை மிளகாய்-10,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொஞ்சம்,
உப்பு தேவையானது,[கல் உப்பு]
கல் உப்பு போடுவதால் எண்ணெய் குடிக்காது,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-1/2 கப்,

செய்முறை:

பருப்பு, அரிசி,ஊற வைத்து, வடித்து கெட்டியாக அரைத்து கொண்டு மாவை எடுத்தால் பந்து மாதிரி கையில் ஒட்டாமல் வர வேண்டும். அதில் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, போட்டு கலந்து, உப்பை மாவை எடுக்கும் சமயம் போட்டு அரைத்து எடுக்கவும்] எண்ணெய் காய வைத்து வடைகளாக தட்டி எடுக்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால் கொஞ்சம் ரவை சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பை மிதமாக எரிய விட வேண்டும். பொன்கலரில், மொறு, மொறுப்பான வடை ரெடி. தயிர் வடை வேண்டும் எனில் தேவையான தயிரில் கொஞ்சம் கேரட்டை துருவி போட்டு, 1 ஸ்பூன் தேங்காய், 2 பச்சைமிளகாய் அரைத்து கலந்து கொஞ்சம் உப்பு தூவி, கடுகு தாளித்தால் தயிர் வடை ரெடி. மேலே மல்லி தழை தூவி அலங்கரிக்கவும். தயிர் புளிக்காமல் இருக்க வேண்டும்.


முப்பருப்பு வடை.
-----------

தேவையான பொருள்கள்:

கடலைபருப்பு- 1 கப்,
துவரம்பருப்பு- 2 ஸ்பூன்,
பட்டாணிபருப்பு-1 கப்,
வரமிளகாய்-10,
இஞ்சி-சிறிய துண்டு,
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/4 கப்,
கறிவேப்பிலை சிறிது,
உப்பு தேவையானது,

செய்முறை:

எல்லா பருப்புகளையும் கலந்து 30நிமிடம் ஊற வைத்து, மிளகாய், கல் உப்பு , இஞ்சி போட்டு கரகரப்பாக அரைக்கவும்.அரைத்தபின் வெங்காயத்தையும் போட்டு நன்கு கலந்து, வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அரைக்கும் மாவு கெட்டியாக இருந்தால்தான், வடை ரொம்ப நேரம் இருந்தாலும் மொறு,மொறுப்பாக இருக்கும்.

-முஹம்மது தஸ்தகீர்.
Share:

2 comments:

  1. mohamedthasthageerAugust 29, 2008 at 12:26 AM

    வீட்டுகாரவோ சொல்லித்தாங்கோ எழுதியது

    ReplyDelete
  2. mohamedthasthageerAugust 31, 2008 at 12:32 AM

    அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதர்களுக்கு. எமக்கும் வேலைப்பழு அதிகம் .சில சகோ.கேட்டப்படி நான் வடைசெய்யும் முறை அனுப்பினேன்.இப்படி யெழுதுவது எனக்கு பொழுது போக்கல்ல,ஏதாவது வகையில் நன்மையை கொள்ளை அடிக்க மாட்டோமா?சிலருக்கு உதவியாக இருக்கும் ( நோன்பே பிரதாணம்)என்று எண்ணியே எதை வெளியிட்டேன்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது