சீர்கெடுக்கும் சினிமாவை முற்றிலும் தலைமுழுகுவோம்.

நாட்டு மக்களிடையில் பொதுவாகவும், இளைய தலைமுறையினரிடையில் குறிப்பாகவும் பரவி வரும் ஒழுக்கச் சீர்கேடுகள். கலாச்சார சீரழிவுகள், நாடெங்கும் பரவி வரும் வன்முறை சம்பவங்கள், பயங்கரவாதச் செயல்கள், கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற எல்லாவிதமான அநியாயங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது சினிமா தான். இப்படிப்பட்ட சீரழிக்கும் சினிமாவினால் எவ்வளவு பெரிய அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டாலும், ஒழுக்கச் சீர்கேடுகளான காட்சிகள் காட்டப்பட்டாலும் அவற்றையெல்லாம் அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை, ஆட்சியாளர்களும் பெரிதுபடுத்துவதில்லை. மாறாக இதுபோன்ற சீரழிவுகளை வளர்க்கும் சினிமாவுக்கு அரசாங்க பணத்திலிருந்து மானியம் கொடுத்து உற்சாகப்படுத்துவதைத் தான் பார்க்க முடிகிறது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு ஆட்டக்காரிகள் நிகழ்த்துகின்ற ஆட்டங்களைப் பார்த்து இளைஞர்கள் முதல் கிழவர்கள் வரை சீர்கெட்டு போகின்ற நிலை நாடு முழுவதும் பரவி வருகின்றது. விபசாரத்தை ஊக்குவித்து அதற்கு அங்கீகாரம் கொடுத்து சமுதாயத்தில் பரவ விட்டிருப்பது சினிமாவில் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஒரு பெண்ணை எப்படியெல்லாம் தன் வலையில் சிக்கவைக்கலாம், அவளுடைய கற்பை எப்படி சூரையாடலாம் என்பன போன்ற காட்சிகளை சினிமாவில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது கணவனுடன் தனி அறையில் ஈடுபடவேண்டிய காட்சிகளையெல்லாம் திரையில் காட்டி உணர்வுகளை கிளரிவிடுகின்ற கேவலமான கலாச்சாரத்தை சினிமாவில் தான் பார்க்க முடிகிறது.

ஒரு பெண் மறைக்க வேண்டிய அங்க அவயங்களைத் திறந்து காட்டுகின்ற காட்சிகள், தன்னுடைய உடலைக் குலுக்கி குலுக்கி ஆடி ஆடவர்களை ஆடவைக்கின்ற அவலக்காட்சிகள் இல்லாத சினிமா எடுபடுவதில்லை என்ற அளவிற்கு நிலைமை கீழ்த்தரமாக உள்ளது.

நிதி நிறுவனங்களில் எப்படி கொள்ளையடிக்க வேண்டும்? வீடுகளில் தொழில் ஸ்தாபனங்களிலும் எவ்வாறு திருட வேண்டும் என்ற பயிற்சியெல்லாம் சினிமாவில் கொடுக்கப்படுகிறது. அதைப்பார்த்து கொள்ளைக்காரர்கள் செயல்படுத்திக் காட்டுகின்றார்கள்.

பொதுவாக நாட்டில் நடக்கின்ற எல்லாவிதமான தீவரவாதங்கள், பயங்கரவாதங்கள் வன்முறை, கற்பழிப்புகள், கொலை, கொள்ளை போன்ற சீரழிவுகள் சினிமாவினால் தான் ஏற்படுகிறது.

ஒரு பெண் சினிமாவில் நடித்துவிட்டால் அவளை ஏதோ பெரிய சாதனை படைத்தவள் போன்று சமுதாயத்தில் தனி மதிப்பும் மரியாதையும் கொடுத்து, வானளாவ தூக்கிப் புகழ்வதும், மீடியாக்களில் அவர்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதும் வியாபாரப் பொருட்களின் விளம்பரங்களில் அவர்களை இடம்பெறச் செய்வதும், சமுதாய விழாக்களில் அவர்களை இடம்பெறச்செய்வதும் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.

சினிமாக்காரிகளின் அரை நிர்வாணப்படங்கள் முகப்பில் இடம் பெறுகின்ற பத்திரிகைகள் தான் சிறந்த பத்திரிகை என்று கருதும் அளவிற்கு எந்த பத்திரிகையை எடுத்தாலும் மானம் கெட்ட பண்பற்ற சினிமாக்காரிகளின் படங்கள் தான் பெரிய அளவில் இடம் பெறுகின்றன.

சினிமாவில் முத்தக் காட்சிகள் இடம் பெறுவதை பெரிய தவறாக இந்திய மக்கள் கருதிய காலங்கள் மாறி இப்போது எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு பொதுமக்களுக்கு முன்னிலையிலேயே எங்கோ உள்ள சினிமாக்காரனும், எங்கோ உள்ள சினிமாக்காரியும் கட்டிப் புரண்டு முத்தம் கொடுக்கின்ற கேவலமான வெட்கம் கெட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்ற நிலைக்கு நாடு சீரழிந்து செல்கிறது.

எய்ட்ஸ் நோய் பரவுவதற்கு சினிமா தான் காரணம். அப்படியிருக்க எய்ட்ஸ் ஒழிப்பு நிகழ்ச்சியில் சினிமாக்காரிகளை கொண்ட வந்து பங்கு பெறச் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியாவைச் சார்ந்த ஒரு சினிமாக்காரியை வெளிநாட்டைச் சார்ந்த சினிமாக்காரன் நான்காயிரம் லாரி டிரைவர்கள் முன்னிலையில் கட்டிப்பிடித்து சரமாரியாக வெறியோடு முத்தங்கள் கொடுத்து காமவெறியை வெளிப்படுத்திய நிகழ்ச்சி ஓர் அளவாவது வெட்க உணர்வுள்ள இந்தியர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிபோய் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச நாட்களில் வீதியிலே திரிகின்ற நாய்கள் தங்களுக்குள் புணர்ந்து கொள்வதுபோன்று மனிதர்களும் இந்திய தெருக்களிலே நடந்து கொள்கின்ற நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

மானமுள்ள இந்தியப் பெண்கள் திரண்டு சினிமாவில் உள்ள ஒழுக்கவீனங்களுக்கு எதிராக குரல்கொடுத்து சீரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது கடமையாகும்.

தஸ்தகீர்.
Share:

3 comments:

 1. அருமையான கட்டுரை பெண்களை கவர்ச்சி பொருளாக காட்டும் இந்த சினிமாவின் சீரழிவை மிக அருமையான எடுத்து சொன்ன CRWON-க்கு வாழ்த்துகள். இந்த கட்டுரையில் நபி ஸல்லலாஹீ அலைஹி வஸ்ஸல்லம் அவர்களுடைய பொன் மொழிகளையும் கட்டுரையுடன் சேர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 2. Assalamu alaikum,

  Nice article, my comment is same as brother said above. good job keep on write more.. Allah will help u,

  Jazakala hair.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  அல்ஹம்துலில்லாஹ், மிகத் தெளிவான கட்டுரை.
  உலகம் ஒழுக்கச் சீர்கேடுகளை ஏதோ சாதனை என்று எண்ணி சர்வ சாதாரனமாக அரங்கேற்றிக் கொன்டிருக்கிற இவ் வேலையில் மிகக் குறைந்த பட்சம் நம்மை மட்டுமாவது பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் நம் அனைவக்கும் உள்ளது.
  அதே சமயம், குறிப்பாக இச்சையை, விபச்சாரத்தை தூண்டும் வகையில் நம்மை சுற்றி சைத்தானால் பிண்ணப்பட்டிருக்கிற வலையிலிருந்து நம்மை எவ்வறு பாதுகாத்துக் கொள்வது?
  "உங்களின் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள்", "முதல் பார்வை எதேட்சையானது, இரண்டாவது பார்வை சைத்தானுடையது" என்ற அல்லாஹ்-வின், அவனுடைய தூதரின் வார்த்தைகளே நம் பாதுகாப்பு கவசங்கள். பொதுவாக ஒன்றை உற்று நோக்கும் போதே அதிலுள்ள கவற்சியும், ஈர்ப்பும் நம் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் நம் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. மேலும் சைத்தானும் கூடுதல் உந்து சக்தியாக செயல் படுகிறான்.
  எனவே, குர்ஆனும், ஹதீஸுமே அனைத்து சூழலிலும் நம்மை பாதுகாத்து வழி நடத்திச்செல்லுகின்ற இரண்டு சிறந்த வழிகாட்டிகள் என்பதை உண்ர்ந்து, அதன்படி வாழ்ந்து ஈருலக வெற்றியையும் பெற்றுகொள்ளக்கூடிய வாய்ப்பை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக ஆமீன்.
  மஅஸ்ஸலாம்...
  அபு ஈசா

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது