ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்

இனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்

 

 முன்னவரின் கடமையது இரமளான் நோன்பு

...முஸ்லிம்கள் பேணுவதும் அதனைத் தானே

எண்ணமதைச் சுத்திசெய்யும் இந்த மாதம்
....இதயத்தில் ஒளிவீசும் விரதத் தூய்மை

விண்ணவரின் வாழ்த்துக்கு உரிய தாக

....விளங்குகின்ற வாய்ப்பளிக்கும்; உயர்வு நல்கும்

மன்னவரோ  மற்றவரோ வயிறால் ஒன்றே!

....மண்ணுலகின் பசிபஞ்சம் மாய்த்தல்  நன்றே!

 

 

வணக்கத்தை இறைவனுக்கே உறுதி செய்து

....வளமாகும் நல்லுணர்வும் வாய்க்கப் பெற்று

இணக்கத்தை வளர்க்கின்ற ஈகை மனங்கள்

....இன்பத்தை அதனாலே எடுத்துக் கொள்வார்

சுணக்கத்தை நற்செயலில் செய்து வந்தோர்

....சுறுசுறுப்பை செயல்தனிலே சேர்த்துக் கொள்வார்

பிணக்கென்றால் வேண்டாமே என்று சொல்லி

....பிள்ளைநிலா முழுமதியாய் பிரகா சிக்கும்.

 

ஒன்றுக்குப் பத்தேழாய் வழங்கும் நோன்பு

....உயர்வான வெற்றிக்கு வழியைச் சொல்லும்

நன்றாக ஏற்கின்ற நண்பர் யார்க்கும்

....நாளைக்கு நற்சாட்சி நோன்பில் உண்டு

மன்றாடும் இறையடியார் மன்னிப் படைவார்

....மகத்தான ஓரிறையின் மார்க்கம் கொள்வார்

அன்றாட வாழ்நாளில் நோன்பின் பயிற்சி

....அற்புதங்கள் வெளிப்படுத்தும் ஆன்ம மாட்சி.

 

 

மெய்யான இறையச்சம் மனதில் கொண்டால்

....மேற்படியான் சாத்தானும் தோற்றுப் போவான்

ஐயமில்லாப்  பேருண்மை அரிய நோன்பில்

....அடைந்தாரே அடைகின்றார் அதுவே நோக்கம்.

வையத்தில் வைக்கின்ற விரத மெல்லாம்

.... வயிற்றுக்கே உணவுக்கே என்றி ருக்க

பொய்யில்லா  இஸ்லாமின்  இந்த நோன்பு

....புலனடக்கம்  போதிக்கும்  பேரா சானே!

 

இறைவேதம் அருளான இந்த மாதம்

....எண்ணத்தை வளமாக்கும்; ஓடிப் போகும்

விரைவாக மீண்டுவர உள்ளம் வேண்டும்

...விண்மதிகள் பதினொன்று முழுதாய் ஆகும்

பிறைபார்க்க பெருநாளும் பூத்து நிற்கும்

....பேரன்பை ஈகையிலே பார்த்தி ருக்கும்.
நிறைவான நேரங்கள் நோன்பில் என்றும்

....நிலையான வெகுமதியும் இறையின் நாட்டம்

 
நன்றி: கவிஞர் பஃக்ருத்தீன்- பரங்கிப்பேட்டை
அனுப்புதல்: <<<அபூஅஸீலா-துபாய்>>>

Share:

வக்கிரம் புடிச்ச ஆசிரியைகளின் அக்கிரமம்.

கடலூர், செப். 24: மாணவியை செல்ஃபோனில் படம் எடுத்து துன்புறுத்திய கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைது செய்யப்படுவார்கள் என்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் ஆசிரியர்களுக்கும் முதல்வருக்கும் இடையே எழுந்த பிரச்னைகள் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியைகளின் தூண்டுதல் காரணமாகவே, மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை பி.ஏ. ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஷகநாச்பேகம், வகுப்புக்குச் சென்று இருந்தார்.

பாடம் நடத்த வராத ஆசிரியைகள் அவரை, பல கோணத்தில் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.

புதன்கிழமை அந்த மாணவி தனது பெற்றோருடன் வந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் எஸ்.பி. செய்தியாளர்களிடம் கூறியது:

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள பிரச்னை, ஆசிரியைகளுக்கும் முதல்வருக்கும் இடையேயானது. இது மாணவிகள் பிரச்னை அல்ல. இப்பிரச்னைக்குக் கல்லூரி நிர்வாகம்தான் தீர்வு காணவேண்டும். ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கூட்டி இருந்த கூட்டத்துக்கு வந்த பெற்றோரை, ஆசிரியைகள் மிரட்டி இருக்கிறார்கள். திங்கள்கிழமை கோட்டாட்சியரை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறார்கள்.

ஆனால் அவர் இது குறித்துக் காவல்துறையில் புகார் செய்ய வில்லை. வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச் பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து ஆபாசமாகத் திட்டி இருக்கிறார்கள்.

செல்ஃபோன் படங்களை தவறாகப் பயன்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தி, கைது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள, கடலூர் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

ஏற்கெனவே சாலை மறியலுக்கு மாணவிகளைத் தூண்டியது தொடர்பான வழக்கைக் கைவிடவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். கல்லூரி வளாகத்துக்குள் வெளியாட்கள் நுழைவது குற்றம். விழாக்கள் எதுவும் இல்லாதபோது, முன்னாள் மாணவிகள் வருவதும் குற்றமாகும். போலீஸôரையும் செய்தியாளர்களையும் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது, என் தகவலுக்கு வந்துள்ளது. அச்சகத்தின் பெயர், அச்சிட்டோர் பெயர் இல்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டக் கூடாது. அவ்வாறு போஸ்டர் வெளியானால் அச்சகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

கல்லூரி பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்லூரி நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார் எஸ்.பி.முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச்பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தியதற்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அவை புதன்கிழமை அறிவித்து உள்ளன.

ஷகநாச்பேகம் தனது பெற்றோர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு அளித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஷேக்தாவூத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் துணைத் தலைவர் முகமுது கமாலுதீன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முகமது முஸ்தபா ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.

இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:

மாணவியைக் கல்லூரி ஆசிரியர்களே செல்ஃபோனில் படம் எடுத்து மிரட்டிய சம்பவம் மோசமானது. வேறு எங்கும் நிகழாதது. இது ""சைஃபர் கிரைம்'' பிரிவில் வரும்.

சம்பந்தப்பட்ட ஆசிரியைகளைக் கைது செய்து, போலீஸôர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்.

ஷகநாச்பேகம் மன உளைச்சலில் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். மாணவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள்தான் பொறுப்பு.

இது குறித்து மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பி இருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியைகளை அழைத்துப் பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கல்லூரி முதல்வர் ஆர்.வள்ளி, புதன்கிழமை விடுமுறையில் சென்றுள்ளார்.

எத்தனை நாள் விடுமுறை என்று தெரியவில்லை. பொறுப்பு முதல்வராக ரமாமணி நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதன்கிழமை மாணவிகள் கல்லூரிக்குச் சென்று இருந்தனர்.
நன்றி:சகோ.முதுவை ஹிதாயத்
Share:

இஃப்தார் நேரடி ஒளிபரப்பு !!!

இனஷா அல்லஹ் இன்றையதினம் சென்னையில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியை அதிரை மீது அக்கரை கொண்ட சில அமைப்புகளால் இன்று அங்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள மியாசி பள்ளி வளாகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது (இன்ஷா அல்லாஹ்). இதில் மத்திய ரயில்வே இணையமைச்சர் இரா. வேலு IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

அவ்வமையம் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயாலாத வெளிநாடு வாழ் அதிரை மக்களின் தாகத்தை தீர்க்ககும் வண்னம் அதை இணையத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய ஏற்ப்பாடு செய்யப்பள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.

எனவே வெளிநாடு வாழ் அதிரை மக்கள் கீழ் கானூம் சுட்டியை சொடுக்கி அந்நிகழ்வை நேரடியாக கண்டுகளிக்கலாம்.

www.vconnect-cs.com

Share:

போலி....................................ஸ் மரியாதை!

நோன்புக் கஞ்சியை மூலிகைக் கஞ்சின்னு சொல்லி பாக்கெட் போட்டு விற்றால் நல்லா விலைக்குப் போகும். காய்கறி பிரியாணியையும் மூலிகை பிரியாணின்னு அமெரிக்காவுல விக்கிறதாக் கேள்விபட்டேன். நம்ம ஊருப் புள்ளைங்க விசாரிச்சு அப்படியே ஒரு ப்ளேட் பார்சலும் அனுப்பி வச்சா ஒருநாள் சஹருக்குச் சாப்பிட்டுட்டு துஆச் செய்வேன்!

என்னதான் சொல்லுங்கம்மா நம்மூர் ஜாவியா நார்சா பிரியாணியை அடிக்க இதுவரை எந்த பிரியாணியும் பொறக்கலே ;-) ஜாவியா பிரியாணியைக் காயவச்சி வெளியூர்களுக்கும் பரக்கத்துக்காக? அனுப்புவார்கள் தெரியுமா? எது எப்படியோ பிரியாணிக்கும் இந்திய முஸ்லிம்கள் காப்புரிமை (PATENT) வாங்கி வச்சுடுறது நல்லது. இல்லேன்னா அமெரிக்காக்காரன் முந்திக்கிட்டா நம்ம பாடு திண்டாட்டமாகி விடும்.

இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தாகச் சொல்லி, அவர்கள் கட்டியதில் தாஜ்மஹால், செங்கோட்டை போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு பாபர் பள்ளிவாசலை அவமானச்சின்னம் என்று இடித்த மானம் கெட்டதுகள், மொகலாயர்கள் கொண்டுவந்த பிரியாணியைச் வெட்கமில்லாமல் சாப்பிட்டு விட்டுத்தான் இடித்தான்கள்.

எதையோ சொல்ல வந்துட்டு என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்கேன். முந்தாநேத்து தொலைக்காட்சிச் செய்திகளில் டெல்லி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களைக் காட்டினார்கள். முகம் துணியால் மறைக்கப்பட்டிருந்தன. வழக்கமா கருப்புத் துணியால் அல்லது கோனிப்பையால் மூடி ஊடகங்கள் முன்னிறுத்துவதுதான் வழக்கம். ஆனால்,வழக்கத்துக்கு மாத்தம வெள்ளை சிகப்புக் கட்டம்போட்ட சவூதி அரேபியர்கள் அணியும் தலப்பாத் துணியால் அவர்களின் முகம் மறைக்கப்பட்டிருந்தது!

அரபு நாட்டுக்குப் போகவர இருக்கும் சபுராளிகள் அந்தமாதிரி துணியைச் சால்வைகளாகப் போட்டு பந்தா பண்ணுவார்கள். கீழத்தெரு காதர் பிஞ்சு பழசாப்போன ஒரு சால்வையைத் தோளில்போட்டுக் கொண்டு திரியிறார். பள்ளிவாசலில் தொழவைக்கும் இமாம்களும், தொழஅழைக்கும் சாபுகளும் (முஅத்தின்), மதரஸா மாணவர்களும் பெருமிதத்துடன் தோளில் போட்டுத் திரிவார்கள்.சிங்கப்பூர்/ மலேசியா சியா சட்டை, இந்தோனேசியா கைலி மாதிரி இந்த சவூதி தலைப்பாவும் பிரபலம். அதைத் தோளில் போட்டுக் கொண்டு குத்பாவுக்கு போனால் ராஜகம்பீரம் போங்க!

(இச்சால்வைகள் குஜராத்திலிருந்துதான் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. குஜராத்தில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த பின், சீனாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன என்று பேப்பரில் படித்தேன்.)


நாடு முழுவதும் எத்தனையோபேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகப்பட்டுக் கைது செய்யப்படுகிறார்கள். போலீஸ்காரர்களில்கூட சங்கிலித் திருடன், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். அவர்களை யூனிபார்ம் போட்டு அழைத்து வருவதில்லை! பிக்பாக்கெட் முதல் பயங்கரக் குற்றம் செய்தவர்களை எல்லாம் சாதாரணமாக அழைத்துவரும் போலீஸ், முஸ்லிம்களை மேற்படி கெட்டப்புடன் அரபு நாட்டு சால்வையுடன் செய்தி ஊடகத்தினர் முன்பாக நிறுத்தும் மர்மம் விளங்கவில்லை!

அதேபோல், காசுக்காக கண்ட கம்முணாட்டிக்கும் முந்தானை விரிக்கும் டிவி, சினிமா நடிகைகள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்திற்காக அணியும் பர்தாவுடன் அழைத்து வருவதும்,ஆண்களை அரபுநாட்டு தலைப்பாவால் முகத்தை மூடியும் காட்சிப் பட்டுத்துவதிலும் காவல்துறையில் ஊடுருவி உள்ள காவித்துறையின் சதித்திட்டம் அம்பலமாகிறது.

சென்ற இடமெல்லாம் கலவரம் செய்யும் வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பொதுமக்களுக்குக் காவல் என்ற பெயரில் அணிவகுக்கும் காவலர்களில் பெரும்பாலோர் பக்திப் பரவசத்துடனே செல்வர். சாதிக் கலவரங்களால் பதட்டமடையும் தென்மாவட்ட தேரிழுப்புகளில் போலீஸாரே பக்தியுடன் தேரிழுப்பதையும் அரோகரா கோஷம் போடுவதையும் காணலாம்!

கலவரங்களில் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைப்பது சட்டரீதியானதுதே. தடியடியின்போது வழக்கமான போலீஸ் லத்திகளை, முழங்காலுக்குக்கீழே மிதமாக அடிப்பதுதான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், திண்டுக்கல் விநாயகர் ஊர்வலத்திலும் வேலூர் தினமலர் எதிர்ப்புப் போராட்டங்களிலும் தடியடியில் போலீஸார் கொலைவெறியுடன் ஆளுயர சிலம்பங்களைக் கொண்டு தனியா மாட்டிகிட்ட ஒருவரை ஐந்தாறு காவலர்கள் சேர்ந்து ஊடுகட்டியடிப்பதைக் கண்டபோது, சங்கபரிவாரங்களின் சூலாயுதக் குத்தலே பரவாயில்லையோ எனுமளவுக்கு கொடுமையாக இருந்தது.

குற்றவாளிகளைக் கையாள்வதில் முஸ்லிம்களிடம் ஒரு அணுகுமுறையும் இந்துக்குற்றவாளிகளிடம் வேறு அணுகுமுறையும் கொண்டிருப்பதிலிருந்து, காவல்துறை பெரும்பாலான சூழல்களில் காவித்துறையாகவே செயபட்டு வந்துள்ளது. கோவைக் கலவரங்களில் காவித்துறைக்கும் காவல்துறைக்கும் கொஞ்சமும் வித்தியாமின்றி முஸ்லிம்களை இணைந்து வேட்டையாடினர். குஜராத்திலும் இதேநிலைதான்!

மாலை போட்டிருந்தால் திருப்பதி,சபரிமலை ஆடையுடன் சீருடையின்றிப் பணியாற்றவும் அனுமதி உண்டு! கமிஷனராகவே இருந்தாலும் மலைக்கு மாலை போட்டிருந்தால் (குரு)சாமியாகி விடுவார்! தாடி வைத்துக் கொண்டு ஒரு முஸ்லிம் சாதாரண ஏட்டாகப் பணியாற்ற முடியுமா என்று தெரியாது!

போலீஸ்காரங்களோட உன்னதமானப் பணியை மனதார மதிப்பவன் நான்; மற்ற அரசுப் பணியாளர்களைப்போல் இவர்களுக்கு யூனியனோ சங்கமோ இல்லை. பண்டிகை நாட்களிலும் டூட்டி இருக்கும். எந்நேரமும் டூட்டிக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதால் நிம்மதியாகக் குடும்பத்துடன் கழிக்க முடியாது. இவர்கள் மத மாச்சாரியங்களுக்கும் சாதிப்பாகுபாட்டிற்கும் அப்பாற்பட்டுச் செயல்பட்டால்தான் சட்டம் ஒழுங்கை நேர்மையாகக் காக்க முடியும்; அதைப் பெரும்பாலோர் தற்போது பின்பற்றுவதில்லை என்பதால் போலீஸாரில் பலர் போலி-களாகவே இருக்கிறார்கள்.

இவ்ளோ செஞ்சாலும் பாருங்க, நம்ம புள்ளைங்க வருசா வருசம் நடத்தும் கால்பந்து போட்டியின் மொதநாளன்று கால்பந்தை உதைத்துத் தொடங்கி வைக்கும் மொதல் மரியாதையை சுற்றுவட்டார போலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவிக்கிறோம். நம்ம சாச்சாவையும் அவருடன் நிற்க வைத்து போட்டோ எடுப்போம்.இதையெல்லாம் நம்ம தினமலர் நிருபரோ தினத்தந்தி நிருபரோ ஒருநாளாச்சும் போட்டோவுடன் செய்தியாகப் போட்டதாகத் தெரியவில்லை.

பின்குறிப்பு: விருந்துகளில் விரிக்கப்படும் பேப்பரை சஹன் வைக்கும் வரை சீரியசாகப் படிக்கும் யாராச்சும் அதுமாதிரி போட்டோவோ செய்தியோ கண்டிருந்தால் மறக்காமப் பின்னூட்டம் போட்டு வைங்கமா.

www.ஊர்சுத்தி.உமர்
Share:

சீன பயணம் ஓர் அனுபவம்

சென்னை பூங்கா நகர் வணிக அங்காடிகள் பகுதியை சைனா பஜார் என்றழைத்ததுண்டு. வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு பர்மா பஜார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் விமரிசையாக சுதந்திர தின விழாக்களை கொண்டாடிவிட்டு பணி நிமித்தமாக சீனா வந்திறங்கியதிலிருந்து ஆச்சரியம் பூச்சொறிந்துக் கொண்டு தானிருக்கிறது.

சீன தேசம் எவ்வளவு முன்னேறிவிட்டது. மேகத்தில் தலை துவட்டிக் கொள்ளும் வானுயர்ந்த ஏராளமாக கட்டிடங்கள், வணிக வளாகங்கள், பூங்கா மற்றும் இளைப்பாற பல இடங்கள், சொகுசுப் பேருந்துகள், மிகச் சவுகரியமான மலிவான பாதாள ரயில்கள், ஆடவரும் பெண்டிரும் பஸ் டிரைவர், நடத்துனர்கள், ரயில்வே துப்புரவு, டிக்கட் பரிசோதகர் என்று எல்லாத்துறைகளிலும் சுறுசுறுப்பாக பணிபுரிகிறார்கள். சீன மக்கள் உடை விஷயத்தில் கூட பளிச். மின்வெட்டு, தண்ணீர் தட்டுபாடு இல்லாத நகரங்கள். நாம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளில் இதுபோன்ற பாரதத்தைக் காணப் போகிறோம்?

ரயிலில் ஆறு படுக்கை(பெர்த்)க்கு ஒரு வெண்ணீர் ஃபிளாஸ்க்கில் கேட்காமலேயே தரப்படுகின்றது. வேண்டியவர்கள் கிரீன் டீ உறிஞ்சிக்கொள்ளலாம் அல்லது நூடுல்ஸ் இட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். ரயிலில் பணிப்பெண்கள் தள்ளுவண்டியில் நொறுக்குத் தீனி விற்கின்றனர். கழிவறைகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகிறகின்றன. நம் ஊர் என்றால் பணிப்பெண்ணுக்கு பாதுகாப்பாக(?) நான்கு ஜொள்ளர் அல்லது மன்மதன்கள் இருந்து கொண்டேயிருப்பர்.

ஷாங்காய் என்ற வர்த்தக நகரமானாலும் சரி, பெய்ஜிங் ஆனாலும் சரி, ஊக்ஸி என்ற தொழிற்சாலை நகரமானாலும் சரி மக்கள் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான பண்பாடு. ஆங்கிலம் கிலோ என்ன விலை? என்பதுபோன்று அதிகமானோருக்கு தெறியவில்லை. ஒன், டூ, த்ரி கூட அவர்கள் மொழியிலே கூற நம் விழிகள் பிதுங்கிவிடும். இங்கே மக்காவில் ஹஜ் பயணிகள் ஷாப்பிங் செய்யும் போது மொழி தெறியாத கடைக்காரர் கால்குலேட்டரில் அடித்து காண்பிப்பது போலத்தான் அங்கும்.

அவர்கள் கூறும் விலைக்கு பாதி விலையில் (அடிமாட்டு விலைக்கு) கேட்டால்.. கடைக்காரர்கள் வாயகன்று சிரித்துவிட்டு நம் கன்னத்தை செல்லமாக தட்டிக் கொடுத்து கட்டுபடியாகாததைச் சொல்லுகின்றனர். நம்மூரில் "வந்துட்டான்ய்யா சாவு கிராக்கி..!" என்பது போல அழகிய அர்ச்சனைகள் கிடைக்கும்.

நம் நாட்டில் உள்ளதுபோல எல்லாப்பிரச்சினைகளும் சீனர்களுக்கும் உண்டு. மக்கள் தொகை நம்மைவிட அதிகம். வேலையில்லா திண்டாட்டம் அங்கும் உண்டு. சுற்றுப்புறச்சூழல், மாசு, 800க்கு மேற்பட்ட மொழி, மத, இன வேற்றுமைகள் எல்லாவற்றையும் முண்டியடித்துக்கொண்டு சீனா முன்னேறி வந்திருக்கும்போது இந்தியா மட்டும்…. நெஞ்சு கனக்கிறது.

பயணத்தை முடித்துக் கொண்டு ஜித்தா திரும்புகையில் ஏர் இந்தியாவின் டிரான்ஸிட் பயணியாக டில்லி விமான நிலையத்தில் விமானத்தின் ஜன்னல் வழியாக தாய்நாட்டைப் பார்த்தபோது, தன் தாயை வறுமையுடன் பரிதாபாமாக பார்ப்பது போன்று நெஞ்சு பரிதவிக்கிறது.With Regards.

M. Rafia Ahamed.

Jeddah – Saudi Arabia.

Share:

இஃப்தார் அழைப்பிதழ்


Share:

மின் அஞ்சலில் வந்த ஒரு நியாய குமுறல்

முஸ்லிம்களின் பாதுகாவலன் நோன்பு கஞ்சி புகழ் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் வேளையில் கோயம்புத்தூரில் போக்குவரத்து காவலர் திரு. செல்வராஜ் படுகொலை செய்யப்பட்ட பிறகு இரு சம்பவங்கள் நடந்தேறின.

சம்பவம் ஒன்று: காவல்துறையில் இயங்கும் இரத்தவெறி கொண்ட சங்கபரிவார வல்லூறுகள், சங்கபரிவாரத்துடன் இணைந்து காவல்துறையைக் காவிதுறையாக்கி கோவை நகரம் முழுவதும் முஸ்லிம்களை நரவேட்டையாடியது. இதில் 19 அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டனர். கோடிகணக்கான முஸ்லிம் பொருளாதாரம் எரித்து சாம்பலாக்கப்பட்டன. முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கிரமங்கள் எங்கும் தலைவிரித்தாடியது. பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவரை காவல்துறையினர் முன்னிலையிலேயே மருத்துவமனை வளாகத்தினுள் வைத்து சங்கபரிவாரத்தினர் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

இத்தனை நடந்தப் பின்னரும் அப்பொழுது முதல்வராக இருந்த நோன்பு கஞ்சி கருணாநிதி, முஸ்லிம் சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமத்தை ஏன் என்று திரும்பி கூடப்பார்க்கவில்லை. அக்கிரமம் இழைத்த காவிபரிவாரத்தினர் ஒய்யாரமாக நகர்வலம் வந்தனர். உடைமை இழந்தவர்களுக்கு நிவாரணமோ உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆறுதலோ அக்கிரமம் இழைத்தவர்களைக் கைது செய்யவோ எதுவுமே நோன்பு கஞ்சி கருணாநிதி செய்யவில்லை.

சம்பவம் இரண்டு: காவிகளால் கூட்டமாகக் கருவறுக்கப்பட்டப் பின்னரும் கண்டு கொள்ளாத நோன்புக் கஞ்சி கருணாநிதி, வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பாதிக்கப்பட்டக் கோவைக்கு இரத்தம் குடித்த சங்கபரிவாரத்தின் தலைவன் அத்வானியை வர அனுமதித்தார். அரசியல் இலாபம் தேடும் எண்ணத்தில் புல்லுருவிகள் எவரோ வைத்தக் குண்டில் அப்பாவிகள் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதுவரை செத்துக் கிடந்த கருணாநிதியின் அரசு இயந்திரம் விழித்துக் கொண்டது. 19 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட வேளையில் டாய்லெட் சென்றிருந்த நோன்பு கஞ்சி கருணாநிதி, அப்பொழுது தான் விழித்தெழுந்தார் போலும்!. கருணாநிதிக்கு உடனடியாகக் கோவை வர விமானமும் கிடைத்தது. 168 முஸ்லிம்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு லட்சங்கள் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டன. ஒருவருக்குக் கூட ஜாமீன் வழங்காத வழக்கில் 9 வருடத்திற்குப் பிறகு, கேரள மக்கள் கட்சி தலைவர் மதானி நிரபராதி என விடுவிக்கப்பட்டார். 9 வருடம் வாழ்வைத் தொலைத்தவருக்கு, வாய்மூடி இருக்க வேண்டும் என அன்புக்கட்டளையும் போட்டு கருணாநிதி வழியனுப்பி வைத்தார். மற்றவர்கள் 10 ஆண்டுகளாக இன்னமும் சிறையில் உள்ளனர்.

இன்று மீண்டும் ஆட்சியில் இருக்கும் கருணாநிதி, அண்ணா பிறந்தநாளையொட்டி 7 ஆண்டுகளுக்கு மேளாக சிறையில் இருக்கும் 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்கிறார். 10, 7 ஐ விடக் குறைவு போலும். கோவை வழக்கில் கைது செய்யப்படு 10 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஒரு முஸ்லிமைக் கூட துரோகி கருணாநிதி விடுதலை செய்யவில்லை.

அதே சமயம், மதுரை கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களும், உயர்நீதிமன்றத்தால் "சமூகத்துடன் இணைந்து வாழவே தகுதியற்றவர்கள்" என்ற புகழ்மாலை சூட்டப்பட்டவர்களுமான மகன் அழகிரியின் குண்டர்களை விடுதலை செய்துள்ளார்.

இந்நிமிடம் சிந்திக்க: கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட கோவை அட்டூழியம் தொடர்பான வழக்கு இன்னும் ஒரு அடி கூட நகரவில்லை. அதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் உல்லாசமாக கோவையை இன்றும் வலம் வருகின்றனர்..

நீதி என்றால் இதுவல்லவோ நீதி!

துரோகி கருணாநிதி வாழ்க!

முஸ்லிம்களின் பாதுகாவலன் என்றப் பெயரை அவனுக்கு வழங்கிய நோன்பு கஞ்சி வாழ்க!

கிழட்டு நரிக்கு இன்னமும் உடனிருந்து வெண்சாமரம் வீசும் சமுதாய இயக்கங்கள் வாழ்க!

ஜனநாயகம் வாழ்க!

ஜெய் ஹிந்த்-
அனுப்பியவர்: நவ்சாத்
Share:

அதிரையில் ஒரு ஐ ஏ எஸ் -2

அறிவு என்பது பார்த்து கேட்டு படிக்கும் அனுபவங்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் ஞானமோ முயற்ச்சியும் ஆராய்ச்சியும் உடையவர்களுக்கே கிடைக்கிறது. எந்த ஒரு துறை முன்னோடியும் அதற்குமுன் அந்த அறிவை பெற்றவரில்லை. தாமஸ் ஆல்வா எடிசன் எண்ணை விளக்கை வைத்துக் கொண்டுதான் மின் விளக்கை கண்டுபிடித்தார்.
முழுமையான ஞானம் இறைவனின் புரத்திலிருக்கிறது. அவனே அதன் மறைவான வாசல்களை திறந்து விடுகிறான். இறைவனே மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான். ஞானத்தை தேடிக் கொள்பவர்கள் இறைவனுக்கு பிரியமானவர்களாயிருக்கிறார்கள்.

நாம் விரும்பும் எந்த ஒரு நன்மையையும் அடைய முதலில் அதைப்பற்றி கனவு காண வேண்டும். பிறகு அதற்காக உழைக்க வேண்டும். நமது இலட்சியத்தை நிர்ணயித்து விட்ட பின் நமது சொல் செயல் எண்ணம் யாவுமே நமது இலட்சியத்தோடு இணைந்திருக்க வேண்ட்டும்.

இரண்டடி எடுத்து வைத்தாலும் இலட்சியத்தை நோக்கியே நடக்க வேண்டும்.

நல்லது. இப்போது ஐ பி எஸ் ஐ ஏ எஸ்ஸை நமது இலட்சியமாக நிர்ணயித்துக் கொண்ட பின் அந்தத் தேர்வில் எப்படி நடத்தப்படுகிறது என்பதை பார்ப்போமா..

ஐ பி எஸ் ஐ ஏ எஸ் தேர்வுக்குள் நுழைய முதலில் யூ பி எஸ் சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல வேண்டும். இது ஒரு பொதுத்தகுதித்தேர்வு(நுழைவுத்தேர்வு). இதில் வெல்வதற்கு முதலில் இந்த தேர்வு எப்படி நடத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் சில கேள்விகளுக்கு விடை காண்போமா..

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
மிக சுலபம். இதற்கான விண்ணப்பமும் தகவல் புத்தகமும் நாட்டின் அணைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்கும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை:

Secretary,

Union Public Service Commission,

Dholpur House,

New Delhi - 110011.

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாமா? அதற்க்கு தகுதி ஏதாவது வேண்டுமா?
கீழ்க்காணும் தகதிகள் பெற்ற எவரும் விண்ணப்பிக்கலாம்:


கல்வித்தகுதி:
இந்தியப்பல்கலைக்கழகம் ஏதாவதொன்றில் பட்டப்படிப்ப அல்லது அதற்கு நிகரான படிப்பு. (பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்)


இதர தகுதிகள்:
இந்தியக் குடியுரிமை. (இன்னும் சில அண்டைநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)


ஆகஸ்ட் முதல் தேதியில் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும் முப்பது வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உள்ள யாவரும் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு எப்போது நடத்தப்படுகிறது?
தேர்வு அறிவிப்பு (துறைகள் மற்றும் பாடத்திட்டம்) எம்ப்ளாய்மென்ட் நியூஸ், ரோஸ்கர் சமாச்சார், கெஜட் ஆஃப் இன்டியா மற்றும் சில முக்கிய நாளிதழ்களில் டிஸம்பர் மாதத்தில் வெளியாகும். இந்த அறிவிப்பை ஒரு நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


முதற் கட்ட தேர்வுகள் மே- ஜுன் மாதங்களிலும் முக்கியத்தேர்வு அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும் நடக்கும். (முதற்கட்ட முக்கிய தேர்வுகள் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்)
ஒரே முயற்சியில் தேறுவது கடினம் என்றால் எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?

பொதுவாக ஒவ்வொருவரும் நான்கு முறை முயற்சிக்கலாம்.
தேர்வு எங்கெங்கு நடத்தப்படுகிறது?

சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது.

அடுத்து தேர்வு முறை பற்றி பார்க்கலாம்.

இது ஒரு கடினமான கட்டம். ஓராண்டு காலம் நீடிக்கும் தேர்வு. எனவே முதலில் தேர்வு முறையை புரிந்து கொள்வது நலம்.

மே ஜுனில் நடக்கும் முதற்கட்ட தேர்வு இரண்டு பேப்பர்களை கொண்டது.
பொதுஅறிவு (150 மதிப்பெண்கள்)
விருப்பப் பாடங்கள் (300 மதிப்பெண்கள்)

இது நுழைவுத்தேர்வு போன்றது. ஏராளமான விண்ப்பதாரர்களிலிருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் தகுதித்தேர்வு மட்டுமே. இதன் மதிப்பெண்கள் அடுத்த கட்ட முக்கியத்தேர்வு மதிப்பெண்களோடு சேர்த்துக் கொள்ளப்படாது.

பொது அறிவு மற்றும் விருப்பப் பாடங்கள் என்றால்..
பொது அறிவு தேர்வில் கீழ்காணும் விஷயங்கள் குறித்த கேள்விகள் இடம்பெறும்:

இந்திய அமைப்பு மற்றும் பொருளாதாரம்.இந்திய வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு.இந்திய மற்றும் உலக புவியியல்உள்நாட்டு வெளிநாட்டு தற்போதைய நிகழ்வுகள்.தினசரி பொது அறிவியல்புத்தி சாதுர்யம் மற்றுமம் புள்ளிவிபரம்.

இது தவிர..

திட்டம், பட்ஜெட், நலத்திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் ஆட்சிப் பொறுப்பு கிராம நிர்வாக அமைப்பு, தேர்தல் முறை, இயற்கை வளம், பண்பாடு, வளர்ச்சி விகிதம், கழகங்கள் கமிஷன்கள் முதலியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

பாடத்திட்டம் அதிகமாகவும் சிக்கலாகவும் இருந்தாலும் சுலபமாக தயார் செய்து கொள்ளலாம்.

விருப்பப்பாடத்தில்..

விவசாயம், கால்நடை வளர்ப்பு, தாவரவியல், வேதியியல், சிவில்,மெக்கானிகல், எலக்ட்ரிகல் இஞ்சினியரிங், வணிகவியல், பொருளியல், புவியியல், வரலாறு, சட்டம், கணிதம், மருத்துவம், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல், மனோதத்துவம், பொது மேலாண்மை, சமூகவியல், புள்ளியியல், விலங்கியல்.
உள்ளிட்ட துறைகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

ஐ ஏ எஸ் தேர்வை சந்திக்க நீங்கள் ஒரு பட்டதாரியாக இருப்பது அவசியம். விண்ணப்பிக்கும் எவரும் தாங்கள் பட்டம் பெற்ற துறையில்தான் ஐ ஏ எஸ் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நீங்கள் விரும்பும் எந்தத்துறையையும் உங்கள் விருப்பப் பாடமாக எடுக்கலாம்.

இந்த முதல் கட்ட தேர்வை வெற்றிகரமாக எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்க வேண்டும். முடிவுகள் ஜுலை-ஆகஸ்ட் மாதங்களில் தெரிந்துவிடும். இதில் தேறியவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள்.

அடுத்த கட்ட மெயின் எக்ஸாம் ஒன்பது தாள்களை கொண்டது.
1. இந்திய மொழி தகுதித் தேர்வு (கட்டுரை) – 300 மதிப்பெண்கள்

2. ஆங்கிலப் புலமைத் தேர்வு – 300 மதிப்பெண்கள்

3. பொது கட்டுரை தேர்வு (200 மதிப்பெண்கள்)

4. இரண்டு பொது தேர்வுகள் (600 மதிப்பெண்கள்)5. நான்கு விருப்பப் பாடங்கள் (1200 மதிப்பெண்கள்)

இந்த முதல் மற்றும் அடுத்த கட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை http://www.civilserviceindia.com/ என்ற இணையதளத்தில் காணலாம்.
இவ்விரண்டு தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு நேர்காணலுக்கு செல்ல வேண்டும். இந்த இன்டர்வியூவில் உங்கள் ஆளுமை மற்றும் அறிவுக்கூர்மை ஆகியவை சோதிக்கப்படும். பொதுவாக இன்டர்வியூக்களில் அந்தந்த வேலைகளுக்கு நீங்கள் தகுதியானவர்தானா என்று சோதிப்பார்கள். ஆனால் ஐ ஏ எஸ் தேர்வின் இன்டர்வியூவில் அந்தப்பனி உங்களுக்கு ஏற்றதா என்று சோதிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வுகள் உங்கள் விசாலமான அறிவை ஏற்கெனவே நிரூபித்து விட்டதால் இந்த இன்டர்வியூவை சந்திக்கும் மனதிடம் உங்களுக்கு ஏற்கெனவே வந்திருக்கும். எனவே மிகுந்த தன்னம்பிக்கையுடன் இதை நீங்கள் எதிர் கொள்வீர்கள்.
உங்கள் ஆளுமை மற்றும் அறிவால் உங்களை நேர்காண்பவரை கவர்ந்துவிட்டால் நீங்களும் ஒரு வெற்றியாளரே.

கடும் உழைப்பும் விடாமுயற்சியும் மனோதிடமும் கொண்டு சவால்களை சந்திக்கும் இந்த ஓராண்டு கால படிப்பும் தேர்வும் ஒரு வெற்றிகரமான முடிவுக்கு வருகிறது.

அதன் பிறகு உங்கள் இலட்சியப்படி ஐ ஏ எஸ்ஸையோ ஐ பி எஸ்ஸையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இனி..
இந்தத் தேர்வுகளுக்காக எப்படி நம்மை தயாரித்துக் கொள்வது என்பது பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


ஆக்கம்:அபூஸமீஹா

Share:

மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்!

மனிதகுலம் அனைத்திற்குமான வழிகாட்டியான அருள்மறை குர்ஆன் வழங்கப்பட்ட இரவான லைலத்துல் கத்ர் இரவிற்கான வணக்கங்கள் குறித்த ஐயங்கள் நம் சகோதரர்களிடையே நிலவுகின்றன. இரவில் நின்று வணங்குதல் தவிர நன்மையை அதிகமாக நாடும் விருப்பமுள்ளவர்கள் ரமளானின் கடைசிப் பத்து இரவுகளில் பள்ளியில் தங்கி நல்லமல்களில் ஈடுபட்டு நன்மையைத் தேடும் இஃதிகாஃப் என்னும் வணக்கமும் இந்த இரவிற்கான வணக்கங்களில் சேரும் என்பதால் இவ்விரண்டையும் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக அமைந்துள்ளது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97 : 1-5)

திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று இங்கே அல்லாஹ் கூறுகிறான். மேலே நாம் குறிப்பிட்ட வசனத்தில் ரமளான் மாதத்தில்தான் குர் ஆன் அருளப்பட்டது எனவும் இறைவன் கூறுகிறான். அந்த ஓர் இரவு நிச்சயம் ரமளான் மாதத்தில் தான் அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அந்த இரவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் வரும் ஒற்றையான இரவுகளில் அமைந்திருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகறை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலத்துல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),புகாரி, முஸ்லிம்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது:

நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

லைலத்துர் கத்ர் என்பது 27 வது இரவு மட்டுமே என்கின்ற தவறான கருத்து இந்தியத் துணைக்கண்டத்திலும் இன்னும் சில நாடுகளிலும் பரவலாக நிலவுகிறது. இதனைப் பற்றிய ஹதீஸ்:

''எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ்கள் ஒற்றைப்படை இரவில் தேடுமாறும் அந்த ஒற்றைகளை கோடிட்டுக்காட்டி அந்த நாட்களில் தேடுமாறும் வலியுறுத்தியுள்ளார்கள். தவிர எந்த ஒரு நாளையும் இது லைலத்துல் கத்ர் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை, அதற்கான காரணத்தை நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, முதலில் அந்நாளைப்பற்றி இறைவனால் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டதாகவும், அது முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மையாக இருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்கள். எனவே இவ்விஷயத்தில் ஆழ்ந்த சர்ச்சையோ, சச்சரவோ, கொள்ளாமல் பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னபடி நடந்து கொள்வது நல்லது

ரமளானின் கடைசிபத்து நாட்களில் புரிய வேண்டிய வணக்க வழிபாடுகளையும் செய்துக் காட்டியுள்ளார்கள். பிற மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகப்படியான வணக்க வழிபாடுகளை இரவிலும் பகலிலும் நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் நின்று வணங்குவதை ஆர்வமுடன் செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசி பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:

லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்

இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிபத்து நாட்களின் ஒற்றைபடை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது உலகக் காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழிபாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். அறிவிப்பாளர்: அபூஸஈத் அல் குத்ரீ(ரலி), முஸ்லிம்

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும்.

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவிர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்:

இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (அல்குர்ஆன் 2 : 187)

ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க அவர்கள் நாடியபோது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது. இது முந்தைய ஹதீஸின் தொடர்ச்சியாகும்.

பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதற்காக ஒரு கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. ஆயினும் இது பொதுவான அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இந்த ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகிறது.

உடனே ஸைனப்(ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் மற்றும் சிலரும் அவ்வாறு உத்தரவிட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பஜ்ரு தொழுததும் பார்த்தபோது பல கூடாரங்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள் " இவர்கள் நன்மையைத் தான் நாடுகிறார்களா?" என்று கேட்டு விட்டு தனது கூடாரத்தைப் பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது. ரமளான் மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டு விட்டு ஷவ்வாலின் கடைசிப்பத்து நாளில் இஃதிகாஃப் இருந்தனர். இதுவும் அந்த ஹதீஸின் தொடர்ச்சியாகும்.

இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா என்ற கேள்வியும், அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாஃப்பை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகிறது.

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மனிதனின் அவசியத்தேவை (மலஜலம் கழித்தல்)களுக்காகத் தவிர வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரி விடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

இஃதிகாஃப் இருக்கும்போது தலையை வாரிக்கொள்ளலாம். மனைவியைத் தொடலாம். பள்ளியின் ஒரு பகுதியாக வீடு அமைந்திருந்தால் வீட்டுக்குள் தலையை நீட்டி மனைவியை வாரி விடச் செய்யலாம் என்பதை எல்லாம் இதிலிருந்து விளங்க முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். அறிவிப்பாளர்: அன்னை சபிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

மனைவி பள்ளிக்கு வந்து இஃதிகாஃப் இருக்கும் கணவனுடன் பேசலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். அவர்களின் வீடு பள்ளி வாசலுக்குள் புகுந்து செல்லும் விதமாக பள்ளியை ஒட்டி அமைந்திருந்தது. பள்ளியை விட்டு வெளியே சென்று மனைவியை வீட்டில் விட்டு விட்டு வந்தார்கள் என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது.

இஃதிகாஃப் இருப்பவர், நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலிருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமல் இருப்பதும் நபி வழியாகும். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) நூல்: அபூதாவூத்

இவற்றை எல்லாம் பேணி இஃதிகாப் இருக்க வேண்டும். இவ்வாறு நல்லமல்கள் புரிந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடையும் நல்லடியார்களில் நம்மை ஆக்க வல்ல இறையோனிடம் இறைஞ்சுவோமாக!
---சத்தியமார்கம்.காம்
அபூ ஸாலிஹா.
Share:

மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி

சென்னை மன்னடி அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள மியாசி பள்ளி வளாகத்தில் 23-9-2008 அன்று சென்னை வாழ் அதிரை வாசிகளின் சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் சிறப்பு விருந்தினராக ரயில்வே இணையமைச்சர் இரா. வேலு அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். அது சமயம் நமது நீண்ட நாள் கோரிக்கையான அகல ரயில் பாதை சம்பந்தமாக விரிவாக ரயில்வே அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. அது சமயம் நமது அதிரை வாசிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Share:

நம் முன்னோர்களின் புத்திக்கூர்மை (சிரிக்க அல்ல; சிந்திக்க)

அது ஒரு வறட்சியான கோடைகால அழகிய ரமளான் மாதம். குளங்கள் எல்லாம் நீர் இன்றி வற்றி இருந்த சமயம். நமதூர் செக்கடிப் பள்ளி வெளி வராண்டாவில் தராவீஹ் தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அச்சமயம் தொழ வரும் பெரியவர்களில் சிலர் தராவீஹ் முழுவதும் தொழுத பின்னரோ அல்லது இடையிலோ சற்று களைப்பாற பள்ளி வராண்டாவிற்கு கீழே உள்ள படிக்கட்டு திண்ணையில் அமர்ந்து செல்வது வழக்கம்.

அதுபோல் ஒரு நாள் (தராவீஹ் தொழுகை முடியும் தருணம்) அத்திண்ணையில் சஹீத் அப்பாஸ் ஹாஜியார் அவர்களும், நம்மில் பலர் அன்பாக மாமா என்றழைக்கப்பட்ட மர்ஹூம் உவைஸ் (ஹாஜி சாகுல் ஹமீது மற்றும் யூசுஃப் அவர்களின் தகப்பனார்) அவர்களும் அமர்ந்திருந்தனர்.

தொழுகை நடந்து கொண்டிருந்த அச்சமயம் பள்ளிக்கு வந்த சிறுவர்களில் யாரோ ஒருவன் விளையாட்டாய் பள்ளி ஹவுதிலிருந்து ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்து பள்ளியின் மேல் மூலையிலிருந்து கீழே அமர்ந்திருந்த அவ்விரு பெரியவர்களின் மீது ஊற்றி விட்டான். பிறகு யாரும் அறியாத படி விரைந்து சென்று தொழுகையின் வரிசையில் (நுழைந்து) சேர்ந்து கொண்டான். அச்சமயம் அவ்விரு பெரியவர்களும் தங்களின் சட்டையெல்லாம் நனைந்து கடும் சினங்கொண்டவர்களாக பள்ளிக்கு மேலே வந்து விட்டனர் தங்களின் மேல் தண்ணீர் ஊற்றியவனைப் பிடிப்பதற்காக. உடனே அப்பெரியவர்களில் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டுக் கொள்கிறார் "முதலில் இங்குள்ள எல்லாச் சிறுவர்களையும் பிடியுங்கள். பிறகு அவர்கள் யாவரின் நெஞ்சையும் தொட்டுப் பாருங்கள் அதில் யாருக்கு திக்கு, திக்கு என்று அடிக்கிறதோ கண்டிப்பாக அவன் தன் நம்மேல் தண்ணீர் ஊற்றி இருக்க வேண்டும்" என்று யாரும் யோசிக்காத ஒரு உடனடி தீர்ப்பையும் சொன்னார்கள்.

இங்கு நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விசயம் என்னவெனில் நம் முன்னோர்கள் உலகில் பெரும் குற்றங்களை கண்டுபிடிக்க பிரசித்திப் பெற்றதாக கூறப்படும் CIA, FBI, INTERPOL & SCOTLAND YARD போன்ற அமைப்புகளில் பணியாற்றியவர்கள் அல்லர்.இருப்பினும் அவர்களின் புத்திக் கூர்மையாலும், மதி நுட்பத்தாலும் தான் இன்னும் நம் மனதில் அவர்களுக்கென்ற தனி அந்தஸ்துடன் நீங்கா இடம் பெற்றுள்ளனர். அவர்களைப்போல் நம்மூரில் பல தெருக்களில் வாழ்ந்து மறைந்த எத்தனையோ ஆண்கள் மற்றும் பெண் உத்தமர்கள் யாவரின் கப்ருகளும் இப்புனித ரமளானின் பொருட்டு சொர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆகட்டுமாக! ஆமீன்...

கடைசியில் தான் தெரிந்து கொண்டேன் இப்படித்தான் உலகின் பல குற்றங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுகிறார்கள் என்று. இறுதியில் தண்ணீர் ஊற்றிய அச்சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு நியாயமான அடிகள் கொடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டானா? அல்லது மன்னித்து விடுவிக்கப்பட்டானா? என்ற மேலதிக விவரங்களுக்கு சகோ. தஸ்தகீர் அவர்களைத் தொடர்பு கொண்டால் தெரியும் என நினைக்கிறேன்.

என்றும் இனிக்கும் மலரும் நினைவுகளுடன்,

உங்களில் ஒருவன்,

எம்.ஐ. நெய்னா முகம்மது.
Share:

அமீரகத்தில் அதிரை எக்ஸ்ப்ரஸ் தெரியவில்லை!!!

சமீபத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டிய தினமலம் நாளிதழின் இஸ்லாம் விரோத விஷமத்தனத்தை பரவலாக தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்று, வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்படுவதற்குத் காரணமாகச் செயல்பட்ட இணைய தளங்களில் அதிரை எக்ஸ்ப்ரஸின் பங்களிப்பு மெச்சத் தகுந்த அளவில் இருந்ததை அறிந்திருப்பீர். அல்ஹம்துலில்லாஹ்!

துரதிஷ்டவசமாக,கடந்த ஓரிரு நாட்களாக நமது அதிரை எக்ஸ்ப்ரஸும் தவறுதலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். தவறான தகவலின் அடிப்படையில் அல்லது தினமலரில் வெளியான சர்ச்சைக்குறிய படங்களின் சுட்டியைக் கொண்டிருந்ததால் இணையசேவை வழங்கும் எதிசாலாத் (www.etisalat.ae) ஆல் தடுக்கப்பட்டிருக்கக் கூடும். மற்ற நாடுகளில் இப்பிரச்சினை இருந்தால் தயவுசெய்து அந்தந்த நாட்டு இணைய சேவை வழங்கும் நிறுவனத்திற்குத் மின்மடல் மூலம் தெரியப்படுத்தவும்.

எதிசாலாத் வழியாக அதிரை எக்ஸ்ப்ரஸ் தளத்திற்குச் செல்லும்போது, தடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் பக்கத்தின் கீழே FEEDBACK என்ற தொடுப்பை அழுத்தி, UNBLOCK என்ற தகவல் பெட்டியில் அதிரைவாசிகள் UNBLOCK REQUEST வைக்க வேண்டப்படுகிறார்கள்.

http://www.etisalat.ae/index.jsp?type=proxy என்ற இணையமுகவரியிலோ அல்லது help@eim.ae மின்மடலுக்கோ கீழ்கண்ட வாசகத்தை JUSTIFICATION (விளக்கம்) என்ற பகுதியில் கொடுக்கவும்.

Dear Sir/Madam,

http://adiraixpress.blogspot.com is a community based tamil blog for promoting regional,cultural and islamic news. Kindly unblock the above link as it has neither consisting nor permitting any news,article against etisalat's internet policy.


வழக்கமாக FEEDBURNER (தபால்காரன்) பெட்டியில் தங்கள் மின்முகவரியைப் பத்திந்து வைத்திருப்பவர்களும், RSS FEEDS அனுமதிக்கும் மின்மடல்கள் மூலமும் (http://adiraixpress.blogspot.com/rss.xml) அதிரை எக்ஸ்ப்ரஸில் வெளியாகும் பதிவுகளைப் பெறலாம்.

கோரிக்கைகளின் எண்ணிக்கையைப் பொருத்து எதிசாலாத் பரிசீலிக்கலாம். தவறும் பட்ச்த்தில் மாற்று ஏற்பாடுகளை அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினர் செய்வார்கள். மறக்காமல் மேற்கண்ட கோரிக்கையை தங்கள் நண்பர்கள் மற்றும் மின்மடல் குழுமங்களில் தெரிவித்து எங்கள் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பைக் அன்புடனும் உரிமையுடனும் கோருகிறோம்.

-அதிரை எக்ஸ்ப்ரஸ் டீம்-
Share:

அதிரையில் ஒரு ஐ ஏ எஸ்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கக்கூடிய ஒரு சில ஊர்களில் அதிரையும் ஒன்று. பொருளாதார நல்வாழ்வுக்கோ பொழுதுபோக்கிற்கோ ஏற்றதாக அமையக்கூடிய எந்த ஒரு ஊருக்கும் சிறப்பும் முக்கியத்துவமும் எப்படியோ வந்து சேர்ந்து விடுகிறது. சிறப்புடைய ஊர்களில் வாழ்வதையே பெருமையாக கூறிக்கொள்ளும் மக்கள் வாழக்கூடிய இந்நாட்டில்தான் சிறப்புக்குறிய மக்கள் வாழ்வதை ஊருக்கே பெருமையாகவும் கூறிக்கொள்கின்றனர். பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க அதிரைகென்று ஏதாவது சிறப்புள்ளதா? அதிரையில் வாழ்வதில் ஏதும் பெருமையிருக்கிறதா? அல்லது பெருமைக்குரிய மக்கள் யாராவது அதிரையில் வாழ்ந்தனரா? வாழ்கின்றனரா? கடந்த காலத்தை பின்நோக்கிப் பார்க்கும்போது எம் கே எம் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளை மட்டுமே அதிரைக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் தெரிகிறது. இவ்வறக்கட்டளையின் சமகாலத்தில் துவங்கப்பட்ட பல கல்விச்சாலைகள் இன்று பல்கலைக்கழக அந்தஸ்தில் உயர்ந்துள்ளன. ஆனால் அதிரையிலோ இன்னும் கல்லூரியே முழு வளர்ச்சியடையாத நிலையிலிருக்கிறது. இது ஒருபுறமிருக்க இக்கல்வி நிறுவனத்தில் பயின்ற உள்ளூர்வாசிகள் யாராவது நாடறிந்த பெரிய பதவிகளை வகித்துள்ளார்களா? பெரும்பதவிகளை விடுங்கள் குறைந்த பட்சம் எத்தனைபேர் அரசுத்துறைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றுகின்றனர். அதையும் விடுங்கள் அரசு ஊழியர்கள்தான் எத்தனை பேர்? எண்ணிப்பார்த்தால் வருத்தமே மிஞ்சுகிறது. பாரம்பரியமிக்க இவ்வூரில் அத்தகுதிகள் யாருக்கும் இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அரசுப்பதவிகளை யாரும் பெரிதென நினைப்பதில்லை.

முன்பு வளைகுடா நாடுகளிலும் இன்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் புழங்கும் செல்வத்தை தேடி ஓடும் நம் மக்கள் இந்தியாவில் செழிக்கும் செல்வத்தை அறிவதில்லை. நூறு கோடி மக்களில் முதியோர் பெண்கள் குழந்தைகள் என்று முக்கால் கோடியை கழித்தாலும் மீதி கால் கோடிப்பேர் இங்குதானே சம்பாதிக்கின்றனர். அத்தனை பேருமா வெளிநாட்டுக்கு ஓடுகின்றனர். உள்நாட்டிலேயே அவர்கள் உழைத்து தொழில் செய்து உலக வரிசை செல்வந்தர்கள் ஆகவில்லையா? ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இந்நாட்டில் ஒரு அடையாளமும் அங்கீகாரமும் இருக்கின்றது. அதைக்கொண்டு அச்சமுதாயங்கள் நாட்டின் வளத்தில் தங்கள் பங்கை அனுபவிக்கின்றனர். அதற்க்கு வாய்ப்பளிக்கவும் வழிகாட்டவும் அரசு நிர்வாகத்தில் அச்சமுதாயத்திலிருந்து அறிவும் திறமையுமுள்ளவர்கள் பங்காற்றுகின்றனர். அடையாளமோ அங்கீகாரமோ இல்லாத ஒரு சமுதாயம் உண்டென்றால் அது தமிழக முஸ்லிம் சமுதாயம்தான். வாழ்வாதாராங்கள் குறைந்த முஸ்லிம் ஊர்களில் அன்றாட உணவுக்கே அல்லாடுபவர்களை விட்டுவிடுவோம், குடும்பத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தி பணம் தேடிச்சென்ற தற்கால முதல் தலைமுறையையும் விட்டுவிடுவோம், ஆனால் இரண்டு மூன்று தலைமுறைக்கு சொத்திருக்கும் குடும்பத்தினர் கூட வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க என்ன அவசியம் வந்தது? தன்நிறைவடைந்த குடும்பங்களில் கூட உயர் கல்வியும் உயர்பதவியும் அடையவேண்டும் என்ற ஆசை இல்லையே. கடந்த இருபத்தைந்தாண்டுகளில் அதிரை எத்தனையோ மடங்கு முன்னேறியிருக்கிறது.

மக்கள் கூடி அரட்டையடிக்கும் செக்கடி மேடு கமால் கடை கார்னர் தற்போது வண்டிப்பேட்டை போன்ற பகுதிகளில் எங்காவது என்றாவது உயர்கல்வி உயர்பதவி என்ற வார்த்தை புழங்கியிருக்கிறதா? அமெரிக்காவுக்கு எவ்வளவு ஆஸ்திரேலியாவுக்கு எவ்வளவு என்ற கணக்குகள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. எந்த ஒரு விஷயமும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட வேண்டும். அதை யாராவது முதலில் செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் அதை பின்பற்ற நினைக்கிறார்கள். முன்பு மன்னடியில் ஒருவர் லுங்கி கடை வைத்தால் ஆறுமாதம் கழித்து பார்த்தால் ஒரு நூறு பேராவது லுங்கி வியாபாரத்தில் நுழைந்திருப்பார்கள். இப்படியே டிராவல்ஸ் எண்ணெய் கடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். அது போன்ற ஒரு தூண்டுதலை ஏற்படுத்தவே இந்தக் கட்டுரை.

நமது தாய் தந்தையரைப் போலல்லாமல் நம் சமுதாயத்தின் மூத்த தலைமுறை இளைஞர்களாவது தமது தம்பி தங்கை மகன் மகள் ஆகியோரை ஐ ஏ எஸ், ஐ பி எஸ் போன்ற பெருமைக்குறிய மனிதர்களாக்கி அதிரைக்கு பெருமை சேர்க்க முன் வர வேண்டும். ஐ ஏ எஸ் என்றால் என்ன? ஐ பி எஸ் என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன? ஐ ஏ எஸ் - இந்தியன் அடமினிஸ்ட்ரேஷன் சர்வீஸ் (இந்திய மேலாண்மை பணி) ஐ பி எஸ் - இந்தியன் போலீஸ் சர்வீஸ் - (இந்திய காவல்துறை பணி) இந்த பதவிகளை வகிப்பதன் மூலம் நீங்கள் அரசாங்கத்தில் ஒரு அங்கம் ஆவீர்கள். சாதாரண பொதுமக்கள் அரசு நிர்வாக முறைகள் தெரியாமல் விளங்காமல் வெளியிலிருந்து அங்கலாய்கிகின்றனர். ஆனால் நீங்கள் அரசு நிர்வாகத்தின் உள்ளே நுழைகிறீர்கள். நடைமுறைகள் திட்டங்கள் சலுகைகள் உட்பட எல்லாவற்றையும் அறிந்து அலச முடியும். இன்னும் சொல்லப்போனால் ஆட்சியும் அதிகாரமும் கொண்டு 'YOU CAN CHANGE THE SYSTEM..!' (பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் பதவிக்கு முட்டி மோதும் நம் மக்கள் அதைத்தான்டி ஏன் யோசிப்பதில்லை?) எத்தனை அரசு நலத்திட்டங்கள் நம் மக்களை சென்றடைந்துள்ளன. அரசின் உதவி தேவையில்லாத அளவுக்கா நம் மக்கள் தன்னிறைவடைந்து விட்டனர். வங்கிக்கடன் கல்விக்கடன் விவசாய மானியம் பெற்றவர்கள் நம்மில் எத்தனைபேர்? இதை பற்றிய அறிவாவது நமக்கு இருக்கிறதா? நம்முள் ஒருவராவது அரசு இயந்திரத்தின் ஒரு அங்கமாக இருந்தால் இந்த சலுகைகளின் பலன்கள் நம்மை வந்து சேராதா? ஐ பி எஸ் பதவியும் காவல் துறையில் மதிப்பு மிக்க தகுதியாகும். இத்துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பதவிகளில் பெரும்பாலும் ஐ பி எஸ்களே அமர்த்தப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான இஞ்சினியர்களும் டாக்டர்களும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும் நிறைந்த அதிரையில் ஒரே ஒரு போலீஸ் அதிகாரியாவது இருக்கின்றாரா? அட கைசேதமே..! போலீஸாரின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் அடக்குமுறைக்கும் அதிரை மக்கள் எத்தனை முறை ஆளாகியிருக்கிறோம்? சந்தேக கேஸ் தொடங்கி கலவர கேஸ் முதல் தீவிரவாதம் வரை எத்தனை குற்றச்சாட்டுகள்? ஏன்? எதற்கு? எப்படி? என்று ஏதாவது தெரியுமா? (இது தொடர்புடைய துறையான சட்டத்துறையிலும் நமது சார்பாக எந்தப்பங்களிப்பம் இல்லாமல் போனது துரதிஷ்டமே!) சரி இனியும் புலம்பிக் கொண்டிருக்காமல் விஷயத்திற்கு வருவோம்.

ஐ பி எஸ் ஐ ஏ எஸ் பணிகள் ஆட்சியதிகாரம் என்ற வட்டத்துக்கு வெளியிலிருந்து பார்க்கையில் ஒரு சுவாரசியமான வேலையுமாகும். வேலை செய்து சம்பாதித்து பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு இது எவ்விதத்திலும் உகந்ததல்ல. மாறாக சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு மிகச்சரியான தேர்வு இத்துறையே! அரசு வழங்கும் ஊதியம், உபரியான வசதிகள் மற்றும் சலுகைகளைக் கொண்டு கண்ணியம் கவுரவம் மற்றும் கம்பீரமாக வாழ முடியும். ஐ பி எஸ் ஐ ஏ எஸ் ஆவது அத்தனை சுலபமல்ல. ஓராண்டுகாலம் நீளும் மிகக்கடும் போட்டியும் சவால்களும் நிறைந்த தேர்வை சந்திக்க வேண்டும். ஒரே முயற்சியில் இத்தேர்வை வென்றவர்கள் மிகக்குறைவு. தேர்வில் வென்றாலும் அதிக மதிப்பெண் பெறுபவர்களே இப்பதவிகளை வகிக்க முடியும். தேர்வு விபரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை இதன் தொடர்ச்சியில் பார்க்கலாம்.

ஆக்கம்: அபூஸமீஹா
Share:

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்

கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.

இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான்; சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகனமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாக்கிஸ்தானில் லஷ்க்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடுமுழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.

தேசபிதா காத்தியடிகளை கொலைசெய்த, சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும், முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளை கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு, ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள். ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து, சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.

தேசத்துரோகி கோட்சேயின் அதே பர்முலாவை கையாண்டு, அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும், ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.

இதை போலத்தான் குஜ்ராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும், முஸ்லிம் பெண்களை கற்பழித்ததும், அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.

கடந்த 4 வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை, அமெரிக்காவுடன் அனு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புறிந்துகொண்டதின் கோரவிளைவுதான் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.

பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருனத்தில், தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னனியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.

பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி, குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.

நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய் 'நாங்கள் 10 நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்' என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவன்தானே எப்படி எங்கே எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய்உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு 'தேசநலன், தீவிரவாதிகள்' என்று ஏதேதோ சொல்லி நிலமையை சமாளித்தார்.

குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி, அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ? அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30 பேர்கள் பலியாக்கப்பட்டும், 100ம் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்கப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.

கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.

ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்? இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.

இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால், நாக்பூரிலும், மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும், செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும், இதற்க முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கம் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.

மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும், துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து, நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்? என்பதும் வெட்டவெளிச்சமாகும்.

இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உளாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில், டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும்;, பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா அல்லது மிரட்டலா என்பது நரேந்திர மோடிக்கும், பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும், தமிழக காவல்த்துறையுமே சாரும்.

தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்க்கரே தைய்யியா, சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்கள் மத்திய மாநில அரசுகள் கைது செய்யுமா? நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி : இஸ்லாமிய இணையப் பேரவை
Share: