Saturday, November 29, 2008

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின்றது என்பது நாம் யாவரும் அறிந்ததே. மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் நம்மூர் மக்களில் இருவர் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.

ஆமாத்மா : "அய்ஷாமா, யான்வுளே கேக்குறிய, குடிக்க தண்ணி இல்லாம நாங்க படுற பாடு அல்லாஹ் ஒருத்தனுக்கு தான் தெரியும்."

அய்ஷாமா : "ஆமாவுளே எங்க வீட்லயும் தான், இவ்வோ வாப்பா தான் சொன்னாக, மல தண்ணிய புடிச்சு காச்சி குடிக்கலாம் னு, அப்டி தான் நேத்து சோறு கூட ஆக்கினோம்"

ஆமாத்மா : "அதான்வுளே பண்ண வகை இல்லாம போச்சு, சரி சரி வா, புதுமன தெருவுல அடி பைப்புல எல்லோரும் தண்ணி பிடிக்குறாகளாம், வா நாமலும் போய் ஒரு கொடம் பிடிச்சுட்டு வருவோம்."

அய்ஷாமா : "இந்தா வர்றேன்"

ஆமாத்மா : "அப்டியே ஒன்ற செல் ஃபோனையும் எடுத்துடு வா, ஜனரேட்ட்டர் ல சார்ஜ் போட்டு தர்றாங்களாம்,ஃபோனுக்கு பத்து ரூவாயாம் சார்ஜ் பன்றதுக்கு"

அய்ஷாமா : "நல்லதா போச்சு, எங்க வீட்ல மட்டும் அஞ்சு ஃபோனு, அம்பது ரூவா, கொடுவா பிசுக்கு வாங்குற காசு, நல்லா சம்பாதிக்குறானுவோ, சரி என்னா பன்றது? கொடத்தையும் ஃபோனையும் எடுத்துட்டு வர்றேன்"(போய் குடம் எடுத்து வருகிறார்)

ஆமாத்மா : "SKS-ல ஜனரேட்டர் தருவாங்களாம், ஒரு மோட்டாருக்கு 300 ரூவாயாம், ஒரு மணி நேரம் ஓடுமாம், டேங்க் நிரஞ்சாலும் நிரையாட்டியும் ஒரு மணி நேரம் தான் ஓடுமாம்"

அய்ஷாமா : "ஆஹா, அப்படியா???"

ஆமாத்மா : "அது மட்டும் இல்லை, ஜனரேட்டர் கேக்க போனா SKS காரவனுவோ 'உங்க வீட்ல நீர் மூழ்கியா? இல்லை சாதா மோட்டாரா? னு' கேப்பாங்களாம், நீர் மூழ்கியா இருந்தா வரமாட்டானுவளாம், ஏன்னா நீர் மூழ்கி சீக்கிரம் நெரஞ்சுடுமாம், வருமானம் கம்மி ஆயிடுமாம் "

அய்ஷாமா : "அல்லாஹ்வே, கொள்ள நயம்டீ, கெட்டி காரனுவோ, பொலச்சுகிடுவானுவோ"

ஆமாத்மா : "மல வந்தாலும் வந்துச்சு, எல்லா வெலையும் ஏறி போச்சு, உம்மாடி, காய்கறியெல்லாம் நெருப்பு வெல விக்குது"

அய்ஷாமா : "ஆமாவுளே, அதுக்கு கூட ஜனம் போட்டி போட்டு வாங்குதுவோ"

ஆமாத்மா: "என்னத்த சொல்ல, நம்ம ஊர்ல ஒரு கடையிலயும் மொலவுதிரி கெடைக்கல, வீடல் இருந்த அரிக்கலாம்புக்கும் எண்ணை இல்லை,
புள்ள குட்டிவொள வச்சுகிட்டு ரொம்ப செரமமா இருக்குவுளே"

அய்ஷாமா : " ஆமா, அல்லாஹ் இருக்கான், இன்னும் ஒன்னு ரெண்டு நாளைல எல்லாம் சரி ஆகிடும், அடி பைப்பு வந்துடுச்சு, வாங்க வரிசைல நிப்போம்"

ஆமாத்மா : "சரிவுளே"

உங்களுக்காக அடி பைப்பில் தண்ணி பிடித்துக்கொண்டே,
உங்கள் நண்பன்

Friday, November 28, 2008

சிந்தீப்பீர்.....

ஒரு காலத்தில் நமது ஊர் பெண்கள் கிணற்றில் தண்ணிர் எடுத்து தனது தேவைகளை நிறைவேற்றி கொண்டனர். ஆதலால் நோய் நொடி இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர். ஆனால் இபொழது நிலமை தலைகீழாக இருக்கிறது.இருந்த இடத்தில் இருந்து கொண்டு வேளை ஏதும் செய்யாமல் தேவைகளை பூர்த்தி செய்வதால் பெயர் தெரியாத வியாதிகளெல்லாம் வந்துவிட்டன.

நமது ஊரின் இன்றய நிலமை என்ன என்று பார்த்தால் ஊரே தண்ணீரில் மிதக்கிறது ஆனால் நமது தேவைகளை நிறைவேற்றி கொள்ள தண்ணிர் இல்லை காரணம் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் வினியோகம் இல்லாத காரணத்தினால் நமது மக்கள் மிகுந்த சிரமத்து ஆளாகி இருக்கின்றனர்.

இப்பொழது ஊரில் தண்ணீர் டேங் நிறைத்துக்கொள்ள ஜெனேரேட்டர் வடாகை 250/= இதையெல்லாம் நாம் கருத்தில் கொண்டு காலங்கள் மாறினாலும் நாம் நம்து மூதாதையர்கள் காட்டித்தந்த வாழ்க்கை முறையை கடைபிடித்தால் இந்த மாதிரி பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளாலாம். நமது ஊர் மக்கள் இனியாவது சிந்திப்பார்களா............

ஹபீப் ரஹ்மான் - ஜித்தா

Thursday, November 27, 2008

தமிழகத்தை மிரட்டும் நிஷா புயல்!

வங்க கடலில் உருவான புயலை தொடர்ந்து, தமிழக முழுவதும் பலத்த மழை கடந்த 4 நாட்களாக இடைவிடாது பெய்து வருகிறது, இதனால் தமிழகமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.புயல் நாகப்பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிகளவு மழைப் பெய்து வருகிறது.

தலைநகர் சென்னையில் பலமான காற்றுடன் நல்ல மழைப் பெய்து வருகிறது, ஆங்காங்கே ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது மற்றும் பெரிய பெரிய மரங்களும் விழுந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடக்கவிருந்த பல பழ்கலைக்கழக தேர்வுகள் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நமதூரை (அதிரையை) பொருத்தவரையில் கடந்த 3 நாட்களாக மின் வினியோகம் இல்லை. பல தெருக்களில் மரங்கள் சாய்ந்துள்ளது, மின் கம்பங்களும் மழையால் சாய்ந்து கிடக்கின்றன. அதிகளவு காற்றுடன் நல்ல மழைப் பெய்து வருகிறது. காலேஜ் ரோட்டில் (ECR) உள்ள கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊரில் உள்ள எல்லாக்குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிமாக உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான பகுதிக்குச்செல்லுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளார்கள். சென்னையில் இருந்து நமதூருக்கு புறப்படும் தனியார் சொகுசு பஸ்கள் அனைத்தும் கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்படவில்லை.

சற்றுமுன் கிடைத்த தகவலின் படி நிஷா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்புயல் காரைக்காலில் இன்று காலை கரையைக் கடந்ததுள்ளது, முன்னதாக இந்தப் புயல் சி்ன்னம் வேதாரண்யம்-நாகப்பட்டினம் இடையே நேற்றே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நகரவில்லை. ஒரே இடத்தில் நிலை கொண்டது. இந் நிலையில் இப்போது புயல் நாகப்பட்டிணம் கரையோரமாக நகர ஆரம்பித்தது பின்னர் அது மேலும் வட மேற்காக நகர்ந்து காரைக்காலில் இன்று காலை கரையைக் கடந்ததுள்ளது.

-Abdul Barakath.

Wednesday, November 26, 2008

பயிரிடமிருந்து பாதுகாப்பு கேட்கிறது வேலி.

பயிரிடமிருந்து பாதுகாப்பு கேட்கிறது வேலி.

அன்பானவர்களே,
பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பதற்காக பல்வேறு சட்டங்கள் நம்நாட்டில் இயற்றப்பட்டுள்ளது. அதையும் தாண்டி பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் எழுப்ப பல்வேறு பரிமாணங்களில் மாதர் சங்கங்களும், ஏனைய பெண்ணுரிமை அமைப்புகளும் நிறையவே இருக்கின்றது. இருப்பினும், பெண்கள்மீதான பாலியல்கொடுமைகள் ,வரதட்சனைக்கொடுமைகள், அதையொட்டிய தற்கொலைகள் நாட்டில் குறைந்ததற்கான அறிகுறியைக்கானவில்லை.
இப்போது,பெண்களால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்றுகூறி 'ஆண்கள் பாதுகாப்புச்சங்கம்' என்ற பெயில் சங்கம் உருவாகியுள்ளதாகவும் அச்சங்கத்தின் சார்பாக,வரும் டிசம்பர் ஆறு அன்று போராட்டம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதைபடிக்கும்போது வியப்பாக இருக்கிறது ஏனெனில்,பாதுகாப்பளிக்க வேண்டியவர்களே பாதுகாப்பு தேடுவதுதான்.சமீபத்தில் இவர்கள் சென்னை மாநகர கமிஷனரை சந்தித்து மனு ஒன்றையும் அளித்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் செய்தியாளரிடம் ;என் மனைவி கூலிப்படையை ஏவி என்னைத்தாக்கினார் என்கிறார்.

மற்றொருவர் ;நான் என்மனைவியை அடித்ததால் கோபமுற்ற அவள் காவல்நிலையம் சென்று,என்மீதும்,எந்தாய் மற்றும், என்தங்கை மீது நாங்கள் வரதட்சனை கேட்டுதுன்புறுத்துவதாக புகார்கூற காவல்துறை எங்களை அள்ளிச்சென்றது பின்பு நாங்கள் விடுவிக்கப்பட்டாலும் இது எண்கள் மனதை பெரிதும் பாதித்துவிட்டது.என்கிறார்.

அன்பர்களே,ஒருபுறம் கணவனால் மனைவி பாதிக்கப்படுவதும்,மறுபுறம் மனைவியால் கணவன் பாதிக்கப்படுவதும் எதனால் என்று சிந்தித்தால் அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாததுதான். கணவன் மனைவிக்குள் பிரச்சினை வரும்போது பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் பெரும்பாலும் மதிக்கப்படுவதில்லை.. ஆனால்,இஸ்லாத்தில் வாழ்க்கையும் வணக்கமாக சொல்லப்பட்டுள்ள காரணத்தால் பெரும்பாலும் முஸ்லீம் தம்பதிகளிடம் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.அப்படியும் சில முஸ்லீம் தம்பதிகளிடம் ஏற்ப்படுமாயின், அவர்கள் மார்க்கத்தை விளங்காதவர்ஆகத்தான் இருப்பார்கள்.

இப்போது வல்லோன் வகுத்துத்தந்த வாழ்க்கை திட்டத்தை பாருங்கள்;
பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)
பெண்ணை தேர்ந்தெடுக்கும்போதே, அழகாக இருக்கிறாளா? காசு பணத்தை அள்ளி தருவாளாஎன்று பாராமல் நல்ல ஒழுக்கமுள்ள பெண்ணாக தேர்ந்தெடுத்திருந்தால் வடிவேலு மாதிரி[படத்தில்தான்] அடிவாங்குற நிலைமை வருமா
பெண்களுக்கு அவர்களின் மகர்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள்.[அல்-குரான்]
கல்யாணம் செய்யும் போது அவளிடம் கையேந்தாமல் நீ கொடுத்திருந்தால் உன்மீது வரதட்சனை தடுப்பு பிரிவில் கேஸ் போடமுடியுமா ?
ஆண்கள் தமது செல்வங்களை செலவிடுகிறார்கள் என்பதாலும்,ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். [அல்-குரான்]

மனைவியை வேலைக்கு அனுப்பாமல் நீங்கள் சம்பாதித்து குடும்பத்தை நிர்வாகம் செய்திருந்தால் அவள் உன்னை மிஞ்ச முடியுமா..?
அவர்கள்[மனைவியர்]உங்களுக்கு ஆடை;நீங்கள் அவர்களுக்கு ஆடை.[அல்குரான்]
ஆடை எப்படி மானத்தை காக்குமோ அதுபோல் கணவனும் மனைவியும் ஒருவர் மானத்தை ஒருவர் காக்கவேண்டுமென நினைத்திருந்தால் மானத்தை கப்பலேர்ற காவல்நிலைய படி ஏறுவார்களா..? பிணக்கு ஏற்ப்படும் என்று[மனைவியர்விசயத்தில்] அஞ்சினால் மனைவியருக்கு அறிவுரை கூறுங்கள். படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள்.அவர்களை [லேசாக] அடியுங்கள்[அல்குரான்]

.
ந்த வழியை கையாண்டால் எந்த மனைவியும் வழிக்கு வந்துவிடுவார்கள். அப்படியே வழிக்கு வராமல் விவாகரத்து பண்ணிவிட்டால் கூட ,
[விவாகரத்து செய்துகொண்ட தம்பதியர்]இருவரும் இணக்கத்தை விரும்பினால் மூன்று மாதவிடாய் காலத்திற்குள் மீண்டும்[ திருமணமின்றி ]சேர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு விவாகரத்து செய்தல் இரண்டுதடவைகளே, [இதன்பிறகு] நல்லமுரையில் சேர்ந்து வாழலாம் அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம்.[அல்குரான்]
இவ்வளவு எளிமையான அழகான சட்டத்தை
அனைவரும் கடைபிடித்தால், அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் தேவையில்லை. ஆளுக்கொரு சங்கங்களும் தேவையில்லை. ஆர்ப்பாட்டங்களும் தேவையில்லை.இடுகையிட்டது நிழல்களும் நிஜங்களும்.
.

__,_._,___

Tuesday, November 25, 2008

ஆரோக்கியமான உணவுகள்

கோழிக்கறியில் கிடைக்கும் சத்துகள்

அசைவ உணவு உண்போரால் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுவது கோழி இறைச்சிதான். இதற்கு முக்கியக் காரணம், இதனுடைய சுவை. கோழி இறைச்சிக் கொண்டு ஆயிரக்கணக்கில், அறுசுவையிலும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.கோழிக்கறி புரதச்சத்து மிகுந்த உணவாகும். கொழுப்புச்சத்து மிகவும் குறைவு.

கோழி முட்டையில்தான் கொழுப்பு அதிகம். அதிகம் எண்ணெய் சேர்க்காமல், தந்தூரி முறையில் செய்யப்படும் கோழிக்கறி உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. கொழுப்பை தவிர்க்க நினைப்பவர்கள், மற்ற இறைச்சிகளை ஒதுக்கிவிட்டு கோழி இறைச்சியை சாப்பிடலாம்.

கோழி இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள்

சக்தி (Energy)109 கலோரிகள், ஈரப்பதம்/நீர் (Moisture)72.2 கிராம், புரதம் (Protein)25.9 கிராம், கொழுப்பு (Fat)0.6 கிராம், தாதுக்கள் (Minerals)1.3 கிராம், கால்சியம் (Calcium)25 மி.கி, பாஸ்பரஸ் (Phosporous)245 மி.கி., ரைப்போஃப்ளேவின் (Riboflavin)0.14 மி.கி.,போலிக் அமிலம் (Folic acid)6.8 மை.கி.

முட்டையில் கிடைக்கும் சத்துகள்

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. புரோட்டீன் (Protein) அதிகம் நிறைந்தது. விட்டமின் A (Vitamin A), விட்டமின் B (Vitamin B) அளவில் அதிகம் இருப்பதால், தோல் ஆரோக்கியத்திற்கும், பார்வை திறனுக்கு வலுவூட்டவும், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் மிகவும் உகந்தது.

சைவ உணவு உண்பவர்கள்கூட இன்று அதிகம் விரும்பிச் சாப்பிடும் சுவையான, ஊட்டம் நிறைந்த உணவுப் பொருள் இது. முட்டையை அவித்து சாப்பிடலாம், ஆம்லெட் போட்டு சாப்பிடலாம் என்று இருந்த நிலை போய், இன்று எண்ணற்ற விதங்களில், சுவைகளில் பல்வேறு உணவுகள் முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றினை இந்தப் பக்கத்தில் தொகுத்து தருகின்றோம்.

முட்டை100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள்

சக்தி (Energy)173 கலோரிகள், ஈரப்பதம்/நீர் (Moisture)73.7 கிராம், புரதம் (Protein)13.3 கிராம், கொழுப்பு (Fat)13.3 கிராம், தாதுக்கள் (Minerals)1 கிராம், கால்சியம் (Calcium)60 மி.கி., பாஸ்பரஸ் (Phosporous) 220 மி.கி, இரும்பு (Iron)2.1 மி.கி., கரோட்டீன் (Carotene)420 மை.கி., தையாமின் (Thiamine)0.10 மி.கி., ரைப்போஃப்ளேவின் (Riboflavin)0.40 மி.கி, நியாசின் (Niacin)0.1 மி.கி., போலிக் அமிலம் (Folic acid)78.3 மை.கி.

மீனில் கிடைக்கும் சத்துகள்

மீன்கள் இந்தியாவில் சில இடங்களில் சைவ உணவாகவே கருதப்படுகின்றது. மீன்களில் புரதச்சத்து மட்டுமன்றி கால்சியமும் மிகுதியாய் உள்ளது. மீன்களின் வகைகளைப் பொறுத்து அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களும் வித்தியாசப்படுகின்றன. கெண்டை மீன்களில் ஆட்டிறைச்சியில் உள்ளது போல் இருமடங்கு கொழுப்பு சத்து உள்ளது.

கெலங்கா (கெழக்கன்) போன்ற மீன்களில் கொழுப்பு மிகவும் குறைவு. மீன் இறைச்சி உடல் சூட்டை உண்டாக்குவது இல்லை. கடல் உணவுகளில் பெரிதாக கலப்படம் செய்ய வாய்ப்பில்லை என்பதால் அனைத்து தரப்பினரும் கவலை இன்றி சாப்பிட மீன் இறைச்சி ஒரு சிறந்த உணவு.ஒவ்வொரு மீனுக்கும் சத்துக்கள் விபரம் வித்தியாசப்படுவதால், பொதுவாக மீன்களுக்கு என்று கொடுப்பது கடினம். அதிகம் உணவாகும் வௌவால் மீனின் சத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

100 கிராம் (வெள்ளை) வௌவால்(வவ்வாள்) மீனில் அடங்கியுள்ள சத்துக்கள்

சக்தி (Energy)87 கலோரிகள், ஈரப்பதம்/நீர் (Moisture)78.4 கிராம், புரதம் (Protein)17 கிராம், கொழுப்பு (Fat)1.3 கிராம், தாதுக்கள் (Minerals)1.5 கிராம், கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)1.8 கிராம், கால்சியம் (Calcium)200 மி.கி., பாஸ்பரஸ் (Phosporous)290 மி.கி., இரும்பு (Iron)0.9 மி.கி., நியாசின் (Niacin)2.6 மி.கி., ரைப்போஃப்ளேவின் (Riboflavin)0.15 மி.கி.

Source: National Institute of Nutrition - Hyderabad

தொகுப்பு:உம்முஅப்துற்றஹ்மான்

ஈயின் அறிவுரை

ஒரு ஈயிடம் அதன் தாய் இறக்கும் முன் அறிவுரை கூறியது. "மகனே, எப்போதுமே பளபளப்பான ஒட்டிக் கொள்ளக் கூடிய காகிதங்களில் இருந்து விலகியே இரு. உன் தந்தை அதில் சிக்கி தான் இறந்து போனார்." அந்த ஈயும் தாயின் அறிவுரையைக் கேட்டு பளபளப்பான ஒட்டும் காகிதங்களில் இருந்து சில காலம் விலகியே இருந்தது.

ஆனால் பல இளைய ஈக்கள் அந்த ஒட்டும் காகிதங்கள் அருகில் அனாயாசமாக பறந்து செல்வதைக் கண்ட போது அதற்கு ஆச்சரியமாக இருந்தது. சில ஈக்கள் வேகமாகச் சென்று உட்கார்ந்ததுடன் பிரச்சி
னை ஏதும் இல்லாமல் திரும்ப வந்த போது அந்த ஈயிற்கு தாய் அனாவசியமாக பயப்பட்டதாகத் தோன்றியது.

அந்த பளபளத்த காகிதங்களின் அருகில் சென்ற போது ஈக்களின் பிரதிபலிப்பு பார்த்த போது அது பார்வைக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. அந்த ஈ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெள்ள அந்தக் காகிதத்தின் அருகே சென்று சென்று வந்தது. பிரச்சினை எதுவுமில்லை. சிறிது நேரத்தில் அதற்கு தைரியம் கூடியது. மின்னல் வேகத்தில் சென்று அந்தக் காகிதத்தில் அமர்ந்து பார்த்து நொடியில் மின்னல் வேகத்திலேயே கிளம்பியது. பிரச்சினை இல்லை.

அந்தக் காகிதத்தில் அப்படியே ஈக்கள் உட்கார்ந்து அனாயாசமாக போவதைப் பார்த்த அந்த ஈயிற்குத் தன் அனுபவமும் சேர்த்து யோசிக்கையில் இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. பகட்டும் பளபளப்பும் நிறைந்த அந்தக் காகிதத்தில் அமர்ந்து விளையாடுவது ஜாலியாக இருந்தது. போய் சற்று அதிக நேரம் தங்கி வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மிக களைப்படைந்து விட்ட ஈ அப்படியே உறங்கி விட்டது. அது விழித்த பிறகு பறக்க நினைத்த போது ஒரு இறகு அந்த காகிதத்தில் நன்றாகவே ஒட்டிப் போயிருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. அந்தக் காகிதத்தில் இருந்து அந்த ஈ தப்பிக்க முடிந்தாலும் கூட அந்த ஒட்டி போன இறகை இழந்தேயாக வேண்டும்.

அது இறகை இழந்ததா, இல்லை வாழ்க்கையையே இழந்ததா என்று நாம் ஆராயப் போவதில்லை. இந்த உதாரணத்தைத் தன் நூல் ஒன்றில் சொன்ன ரால்ப் வாலெட்டும் அது பற்றிக் கூறவில்லை.

நாம் ஆராயப் போவதெல்லாம் அந்த ஈக்கு அந்தக் காகிதத்தின் மீது சென்று அமரும் அவசியம் இருந்ததா என்பதை மட்டும் தான். அந்த அவசியம் இருக்கவில்லை என்பதே உண்மை. அது ஆபத்தானது என்பதையும் அது தந்தையின் உயிரையே குடித்தது என்பதையும் ஈ முன்பே அறிந்திருந்தது. ஆனால் அந்தக் காகிதத்தின் பளபளப்பு, போய் ஓரிரு தடவை ஒன்றும் ஆகவில்லை என்கிற தைரியம், மற்றவர்களும் செய்கிறார்கள் என்ற சமாதானம், ஜாலியாக இருக்கிறது என்கிற எண்ணம் எல்லாமாக சேர்ந்து அதன் அறிவை மழுங்கடித்து ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது.

தீ தான் சார்ந்திருக்கும் பொருளை எல்லாம் சாம்பலாக்கும் வல்லமை படைத்தது. அந்தத் தீயை விட ஆபத்தான தீயவை இருக்கின்றன.

உலகில் அந்த பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதத்தைப் போன்ற தீய விஷயங்கள் பல இருக்கின்றன. சூதாட்டம், போதைப் பழக்கம், தகாத உறவு வைத்துக் கொள்ளல் , தொலைக் காட்சி , வலைகள் போன்ற எத்தனையோ இருக்கின்றன. ஆரம்பத்தில் அது போன்ற வலையால் பெரிய தீங்கு ஏற்படாத நிலைமை கூட இருக்கலாம். ஆனால் அதை வைத்து ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அதில் தங்க ஆரம்பிக்கும் போது உங்களை உடும்புப்பிடியுடன் அந்த வலை உங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும். பெரும் சேதத்தையோ, நாசத்தையோ ஏற்படுத்தாமல் அந்த விஷ வலை உங்களை தப்பிக்க விடாது.

வாழ்க்கையில் பல விஷயங்கள் இல்லாமல் நாம் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் நாம் அப்படி நினைக்கத் தவறுவது தான் பல வருத்தங்களுக்கு மூல காரணமாக உள்ளது. அந்த ஈயின் இயல்பான வாழ்க்கைக்கு எப்படி அந்த பளபளப்புக் காகிதம் எந்த விதத்திலும் தேவையாக இருக்கவில்லையோ, அப்படியே நாம் மகிழ்ச்சியாக நிறைவான வாழ்க்கை வாழ முன்பு குறிப்பிட்டது போன்ற தீய வலைகள் தேவையில்லை. இப்படி ஏதாவது ஒரு வலை உங்கள் வாழ்க்கையில் கவர்ச்சியை ஏற்படுத்துமானால் இந்த ஈ கதையை நினைவுபடுத்திக் கொண்டு புத்திசாலித்தனமாக விலகிச் செல்லுங்கள்.

-Abo Sumayya. Jeddah.-

Monday, November 24, 2008

மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாத்தை ஏற்றார்?!

அமெரிக்க பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாத்தை ஏற்றதாக பிரபல பத்திரிக்கைகளை மேற்கோள் காட்டிய மடல்கள் மின்மடல்களிலும் மடற்குழுமங்களிலும் வலம் வருகின்றன். செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்காக மைக்கேல் ஜாக்ஸனின் இணைய பக்கத்திற்குச் சென்று பார்த்தால், THRILLER பாடல் ஆல்பத்தின் விளம்பரமே தெரிகிறது!

மைக்கேல் ஜாக்சன் குறித்த வதந்திகளுக்குப் பஞ்சமில்லை என்றாலும் அவர் இஸ்லாத்தை ஏற்றது குறித்து பிரபல பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டிருப்பதால் ஓரளவு நம்பக்கூடியதாகவே இருக்கிறது. எப்படியோ மைக்கேல் இஸ்லாத்தை ஏற்றது உண்மையாக இருப்பின் மனதார வாழ்த்தி வரவேற்போம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

சமீப வருடங்களாக மைக்கேல் ஜாக்ஸன் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து வழக்குகளுக்கும் ஆளாகி வந்துள்ளார். தன்னுடைய பாப் இசை ஆல்பம் வெளியீட்டு ஒப்பந்தத்தை மீறியதாதாக பஹ்ரைன் இளவரசர் ஏழு மில்லியன் பவுண்ட்ஸ் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கும் சூழலில் மைக்கேல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டச்செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

மைக்கேலின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்ஸன் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கைநெறியாக ஏற்று ஹஜ்ஜுக்கு சென்று திரும்பியபோது பல்வேறு வழக்குகளால் மனம் சோர்ந்து போயிருந்த மைக்கேல் ஜாக்ஸனுக்கு குர்ஆன் மொழிபெயர்ப்புடன் இஸ்லாமியப் புத்தகங்களையும் பரிசாக வழங்கியதோடு இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்ததாகவும் சொன்னார். R

முன்பு இங்லாந்தின் பிரபல பாப் பாடகர் CAT STEVENS இஸ்லாத்தில் இணைந்து யூசுப் இஸ்லாம் என்று பெயர்மாற்றி முழுநேர இஸ்லாமிய அழைப்பாளராக இருப்பதையும் குறிப்பிட வேண்டும். மைக்கேல் ஜாக்ஸன் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றபோது இவரும் உடனிருந்ததாகச் சொல்லப் படுகிறது. தனக்கெனதனி ரசிகர் பட்டாளத்துடன் பஞ்சமில்லா சொத்து,சுகம், புகழ் இருந்த போதும் அவற்றினால் கிடைக்காத மனநிம்மதியும் ஆதம திருப்தியும் இஸ்லாத்தில் இருப்பதை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

பிறப்பால் முஸ்லிமாகி,விரும்பியோ அல்லது விரும்பாமலோ முஸ்லிம் பெயருடன் நடமாடிவரும் நம்மில் எத்தனைபேர் அல்லாஹ் வழங்கியுள்ள அருகொடைகளிலெல்லாம் சிறந்த அருட்கொடையான 'முஸ்லிம்' என்ற அடையாளம் குறித்து சிந்தித்திருப்போமா? மைக்கேல் ஜாக்ஸனும் கேட் ஸ்டீவனும் இஸ்லாத்தில் அடைக்கலமாக நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்களாயின.எந்தவொரு முயற்சியும் செய்யாமலேயே பிறவிமுதல் முஸ்லிமாகியுள்ளோம்! அல்ஹம்துலில்லாஹ்!

அமெரிக்க அரசு வழங்கும் சிறப்புப் பாதுகாப்புடன் தனது சொந்த பாதுகாப்பு அதிகாரிகளைமீறி மைக்கேலின் பண்ணை வீடுவரைச் சென்று எந்தவொரு முஸ்லிம் படைத்தளபதியும் வாளேந்திப் போரிட்டு மைக்கேலை கட்டாய மதமாற்றம் செய்யவில்லையே!

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது, முஸ்லிம் மன்னர்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தார்களென இதுவரை இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் மனம்போனபோக்கில் பொய்ச்செய்திகளை பரப்பிவந்த உலகமகா ஊடகங்களே இனியேனும் உங்கள் பசப்புரைகளுக்கு முடிவுரை எழுதுங்கள். இஸ்லாம் பழமைவாதிகளுக்கே உரிய மார்க்கம் என்ற உடைந்த இசைத் தட்டாக ரீங்காரமிட்டவர்களே இனியேனும் உங்கள் சுருதியை மாற்றிக் கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: வழக்கமான வதந்திகளுடன் மைக்கேல் ஜாக்ஸன் மீக்காயில் என்று பெயர்மாற்றி முஸ்லிம் ஆனதாகச் சொல்லப்படும் இச்செய்தியும் வதந்தியாக இருப்பின், இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ யாதொரு இழப்பில்லை.

"மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழியில் நாம் செலுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கிறான்" (குர்ஆன்-029:069)

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ

<<<அபூஅஸீலா-துபாய்>>>

Friday, November 21, 2008

மைக்கல் ஜாக்சன் இஸ்லாத்தை தழுவினார், அல்ஹம்துலில்லாஹ். அவருடைய பெயர்: மீக்காயில்.

Michael Jackson embraces Islam, spells `Mikaeel'

London: Troubled pop star Michael Jackson has converted to Islam and has changed his name to Mikaeel.

Thesun.co.uk reports that Jackson, 50, was dressed in the Islamic garb as he pledged his allegiance to the Koran at a friend's house in Los Angeles. He sat on the floor as an Imam officiated the ceremony.

Jackson, who was raised a Jehovah's Witness, decided to convert after discussing religion with a music producer and songwriter on his new album, both of them converts to Islam.

"They began talking to him about their faith and how they thought they had become better after they converted. Michael soon began warming to the idea. An Imam was summoned, and Michael went through the shahada, which is the Muslim declaration of belief," a source was quoted as saying.

Mikaeel is the name of one of Allah's angels.
Source: Indo-Asian News Service

MSN Special:
Michael Jackson to present evidence in person in court
Arab sheikh sues Michael Jackson

News Source :
http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=1661526
http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=1703792

லாஸ் ஏஞ்செலஸ்: பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரையும் மிகயீல் எனவும் அவர் மாற்றி விட்டார்.

பனோராமா என்ற இதழின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தான் இஸ்லாமின் ஐந்து கடமைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், பெயரை மிகயீல் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது மத மாற்றத்தை அறிவிப்பேன் எனவும் ஜாக்சன் இந்த இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனில் செட்டில் ஆகிறார்:

மேலம் விரைவில் பஹ்ரைனுக்குப் போய் ஜாக்சன் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே அவர் செயற்கைத் தீவு ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மத மாற்றம் குறித்து நெருக்கமானவர்களிடம் ஜாக்சன் பேசுகையில், எனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு சரியான மதமாக இஸ்லாம் உள்ளது. யூதர்கள் எல்லாம் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் எனக் கூறினாராம் ஜாக்சன்.


தொடர்ந்து ஜாக்சன் கூறுகையில், இந்த அட்டைப் பூச்சிகளால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். யூதர்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள், கார்கள், வசதிகள் என சந்தோஷமாக இருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களின் சதி செயலால் கிடைப்பவை.

விரைவில் எனது ஸ்டுடியோவையும், சொத்துக்களையும் அமெரிக்காவிலிருந்து பஹ்ரைனுக்கு மாற்றிக் கொள்ளப் போகிறேன். அமெரிக்காவில் இதுவரை எனக்குக் கிடைக்காத சுதந்திரம் பஹ்ரைனில் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜாக்சன்.

சமீபத்தில் லாஸ் ஏஞ்செலஸில் உள்ள தனது நண்பரின் வீட்டில், குரான் முன்பு தான் இஸ்லாமில் நம்பி்ககை வைத்துள்ளதாக சத்தியம் செய்தாராம் ஜாக்சன். அங்குதான் அவர் முறைப்படி இஸ்லாமியராகவும் மாறினார் என்று கூறப்படுகிறது.

எளிமையாக நடந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு இமாம் கலந்து கொண்டுள்ளார். தரையில்,விரிக்கப்பட்டிருந்த துணியில், தலையில் தொப்பியோடு ஜாக்சன் அமர்ந்திருக்க, அவருக்கு இஸ்லாம் மத மார்க்கப்படி மத மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/11/21/world-michael-jackson-converts-to-islam.html

-Abdul Barakath.

Thursday, November 20, 2008

இல்லத்தரசிகளின் வேண்டுகோள்

பிஸ்மில்லாஹ்
  • அதிரை எக்ஸ்பிரஸாருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் வாசகர் (வசாகிகள் இருக்கிறார்களோ இல்லையோ இருந்தால் அவர்களுக்கும்) எனது அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்). ஊர் சுத்தி உமர் காக்கா அவர்களோ அரசியல் பற்றி வெகு விமர்சையாக எழுதுகிறார்கள், தஸ்தகீர் அவர்களோ காவிகளை தோலுரித்து கவிதையாக் கட்டுரை எழுதுகிறார், அபு ஹசன் அவர்களோ இனிய மார்க்கமாகிய இஸ்லாத்தைப்பற்றியும் அரசியலுடன் எளியவர்களும் வியக்கியானம் படிப்பவர்களுக்கு செப்பையில் அடிப்பது போலவும் கட்டுரையிலும் அரட்டையிலும் வந்து விளாசிட்டு போறார், அபூ அஸீலவோ கார்த்திகை மாசத்து மழை போல் கோடை இடியுடன் அவ்வப்போது வந்து செல்கிறார். ஆனால் ஊரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டா இத்தளத்தில் எல்லோரும் வெளிநாட்டில் இருந்து கொண்டுத்தான் கட்டுரைகள் எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது.ஏனென்றால் யாரும் ஊரில் வீட்டுப்பெண்களான எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை யரும் எழுதவில்லை ஆதலால்தான் எனக்கு இந்த துணிவு வந்தது அல்லாஹ்வின் துணையுடன் எழுதுகிறேன் தவறுகள் இருப்பினும் அல்லாஹூக்காக மண்ணித்துக் கொள்ளவும்
இல்லத்தரசிகளின் பிரச்சனைகளில் முதலிடம் பெறுவது கேஸ் சிலிண்டர் இரண்டு மதத்திற்கு ஒருமுறைதான் பதியப்பட்டு மீண்டும் இரண்டு வாரங்கள் கழித்து தரப்படுகிறது வீட்டில் கேஸ் முடிந்தவுடன் ஏஜென்ஸிக்கு போன் செய்து கேட்டால் ஒழுங்கற்ற பதில் தரப்படுகிறது. எனக்கு கிடைத்த பதில் உங்கள் வீட்டில் இரண்டு நபர்கள் தானே இருக்கிறீர்கள் ஏன் அவசரபடுகிறீர்கள் என்கின்றனர், கேஸ் சிலிண்டருக்கு 1986ல் நான் பதியும் போது நாங்கள் உண்மையாக இருவர்தான் 22வருடமாக நங்கள் என்ன குழந்தை எதுவும் பெற்றுக்கொள்ளாமல் மலடியாகவக இருந்துவிட்டோம் நாங்கள் இருவர்தான் என கணிக்க இவர்கள் யார் நகர் புறங்களில் இதைபோல் கேள்வி கேட்டுவிடமுடியுமா?

அதிராம்பட்டினத்திற்கு என்று தனியாக கேஸ் ஏஜென்ஸி அவசியம் வேண்டும் கேஸ் வந்த புதிதில்(1985) பட்டுக்கோட்டை தாலுக்க மக்கள் தொகையில் 25 சதவீதம் வீட்டில் மட்டும் தான் கேஸ் அடுப்பு உபயோகித்தனர் ஆனால் இன்றோ அரசாங்கம் இலவசமாக கேஸ் அடுப்பு சிலிண்டர் கொடுக்கும் அளவுக்கு எங்கும் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள் இன்று 100 சதவீதம் முழுமையாக பயண்பாட்டிற்கு வந்துவிட்டது இன்னும் காலம் தாமதிக்காமல் அதிரையில் உள்ள பல மாறுபட்ட இயக்கத்தினர் இல்லத்தரசிகளான எங்களுக்காக நல்லமுடிவு எடுக்கவேண்டுகிறோம்.இதனால் பயன் அடையபோவது குடும்பதலைவர்கள், மேலும் அவர்களின் பணமும், நேரமும்தான்.
இல்லத்தரசிகளுக்கா
  • உம்முஅப்துல்ரஹ்மான்

Wednesday, November 12, 2008

குண்டு வைத்து கொலை செய்வது எப்படி ?

ஒரு பாட்டில் ரம்முக்காக சோரம் போன அதிகாரிகளைக் கொண்ட பெருமை நம் ராணுவத்துக்கு உண்டு. இப்போது ஒருபடி மேலே போய்விட்டார்கள். குண்டு வைத்து கொத்துக் கொத்தாய்க் கொலை செய்வது எப்படி என்று தீவிரவாதிகளுக்குப் பயிற்சி தருகிறார்கள். நல்ல முன்னேற்றம்தான்!

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. மோட்டார் பைக்கில் வைத்த குண்டு வெடித்து 6 பேர் இறந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நவராத்திரியை ஒட்டி நடந்த குண்டுவெடிப்பு என்பதால் வழக்கம்போல் இஸ்லாமிய தீவிரவாதிகள் மேல்தான் பழிபோடப்பட்டது. ஆனால் உண்மையில் குண்டுவைத்தவர் இந்து பெண் சாமியார் என்று அறியவந்தபோது பலர் அதிர்ந்தனர்.

தீவிரவாத எதிர்ப்புப் படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில்தான் இந்தத் திடுக்கிடும் தகவல் அம்பலமானது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அபினவ் பாரத் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா தாக்கூர்தான் இக் குண்டுவெடிப்புக்கு மூல காரணம். அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். போலீசுக்கு முதலில் சாமியார் ஒத்துழைக்க மறுத்தார். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

மாலேகான் குண்டுவெடிப்பில் பெண் சாமியாருக்கு இருந்த தொடர்பு பற்றி செய்தி வெளியான சில நாள்கள் வரை சங் பரிவாரங்கள் எந்த மூச்சையும் விடவில்லை. பின் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினர். ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றார் பா.ஜ. செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத். பா.ஜ. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் ஆவேசத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். "குண்டுவெடிப்பு விசாரணை என்ற பெயரில் பிரக்யா தாக்கூரை மும்பை போலீசார் துன்புறுத்தி வருகின்றனர். அவரிடம் மூன்று, நான்கு முறை உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசுக்கும் போலீசுக்கும் முக்கிய பங்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.

குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புள்ளவர் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஒருவரிடம் விசாரணை நடத்துவதையே ராஜ்நாத் தவறு என்கிறார். ஆனால் முஸ்லிம் என்பதாலேயே, குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பற்றவர்கள்கூட விசாரிக்கப்படாமலேயே கைதிகளாகப் பல ஆண்டுகள் சிறையில் வாடுவதை அவர் மறந்துவிட்டார்.

மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ராம்ஜியுடன் பெண் சாமியார் பேசிய தொலைபேசி உரையாடல் சாட்சியம் அரசு தரப்பில் நாசிக் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் சாமியார்தான் காரணம் என்பதை அந்த உரையாடல் தெளிவாக உணர்த்துகிறது. கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட உரையாடல் சாட்சியம் இதுதான்:

பிரக்யா: அநேகமாக இன்று மாலைக்குள் என்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள்.

ராம்ஜி: எப்படிச் சொல்கிறீர்கள்?

பிரக்யா: குண்டுவெடிப்பில் என் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியிருப்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டார்கள். அதுசரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏன் அதிகம் பேர் சாகவில்லை? கூட்டமான பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லையா?

ராம்ஜி: இடம் கிடைக்கவில்லை. கடைசியாக கிடைத்த இடத்தில் பார்க் செய்தேன். அங்கே அவ்வளவாகக் கூட்டம் இல்லை.

இப்படிப் போகிறது உரையாடல்.

ஆனாலும் ஜோடிப்பு வழக்கு என்று திரும்பத்திரும்பச் சொல்கின்றனர் பரிவார்கள். இப்போது வி.எச்.பி.க்கும் இதில் பங்கிருப்பது தெரியவந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வி.எச்.பி. பிரமுகர்கள் 3 பேருக்கு இதில் தொடர்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எந்த மதத்திலும் தீவிரவாதிகள் உருவாவதைக்கூட ஏற்றுக்கொண்டுவிடலாம். ஆனால் நாட்டின் ராணுவ அதிகாரிக்கும் இதில் பங்கிருக்கிறது என்பதுதான் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்திருக்கிறது. ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து வரும், புனேவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் புரோகித் என்பவர் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பணம், ஆர்டிஎக்ஸ், துப்பாக்கிகள் சப்ளையுடன் சதித் திட்டமும் தீட்டிக் கொடுத்ததாக இவர் கைதாகியுள்ளார். தீவிரவாதத் தொடர்பு சம்பந்தமாக ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த விவகாரத்தில் மேலும் பல ராணுவ அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த ராணுவத்தின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

''தீவிரவாதக் குற்றத்துக்காக ராணுவ அதிகாரி ஒருவர் கைதாகி இருப்பது ராணுவத்தின் கவுரவத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தடம் புரளும் அதிகாரிகளைக் கண்காணிக்க ராணுவத்திடம் செயல்திட்டங்கள் உள்ளன. அவற்றை இனித் தீவிரமாகப் பயன்படுத்துவோம்'' என்று துணைத் தளபதி தில்லான் கூறியுள்ளார். இது காலம்கடந்த ஞானமாகத்தான் தெரிகிறது. தீவிரவாத-ராணுவத் தொடர்பு எந்த அளவு படர்ந்திருக்கும் என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாத நிலைதான் உள்ளது.

ராணுவ அதிகாரியைக் கைது செய்ததற்கும் பா.ஜ. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குஜராத் முதல்வர் நரேந்திரமோடிதான் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். ''மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவி ராணுவ அதிகாரிகளை மும்பை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் தாய்நாட்டின் பாதுகாப்புக்காக அல்லும்பகலும் அயராது உழைக்கும் ராணுவத்தினரின் மனஉறுதியை சீர்குலைத்துவிடும்'' என்று சொல்லியிருக்கிறார்.

குண்டுவைத்தது முஸ்லீம் இயக்கமாக இருந்தால் அவர்கள் தீவிரவாதிகள். இந்து இயக்கமாக இருந்தால் அவர்கள் அப்பாவிகள் என்பதுதான் மோடி சொல்லும் தத்துவம். பெரும்பான்மை ஊடகங்களும், அமைப்புகளும் இப்படித்தான் நினைக்கின்றன. இந்த விவகாரத்தில் காட்டப்படும் கனத்த கள்ள மவுனமும் அதைத்தான் உணர்த்துகிறது.

நாக்கைப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி

மாலேகான்(மகாராஷ்ட்ரா) மற்றும் மொடாசா(குஜராத்) குண்டுவெடிப்புகளில் சங்பரிவாரச் சாமியாரிக்குத் தொடர்புள்ள விசயம் ஊடகங்களில் கசியத் தொடங்கியதும் பாஜகவும் அதன் ஊதுகுழல்களும் "இந்துக்களை இழிவு படுத்தும் சூழ்ச்சி" என்று ஒப்பாரி வைத்தார்கள்.தீவிரவாத ஒழிப்புப்படையினர் அடுத்தடுத்த ஆதாரங்களை வெளியிட்டதும் சாமியாரிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்லி சாமியாடினர். குற்றச்சாட்டிற்கான அசைக்க முடியாத ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டதும் சாமியாரினிக்கு வேண்டிய சட்ட உதவிகளை பாஜகவே செய்யும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்கிறார்.

வழக்கமாக இதுவரையிலான குண்டு வெடிப்புகளில், சம்பவம் நடந்த ஓரிரு மணிநேரத்திற்குள் இதைச் செய்தவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் சிமி, ஹுஜி,முஜாஹிதீன் என்றெல்லாம் சொல்லாவிட்டால் கஷ்டப்பட்டு குண்டு வைத்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடுமென்பதால் அஹிம்சாவாதி அத்வானி உடனடியாக அறிக்கை விடுவார். அத்வானிக்குச் சளைத்தவனா என்பதுபோல் உலகமகா அஹிம்சாவாதி குஜராத் படுகொலைகள் புகழ் நரேந்திரமோடி மத்திய அரசை ஏற்கனவே நான் எச்சரித்திருந்தேன். அதை சீரியசாக எடுத்திருந்தால் இந்தவார குண்டு வெடிப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என்று நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்.

இந்தியா சுதந்திரமடைந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றதால் மனம் வெதும்பி இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைத் "தற்கொலை" செய்த நாதுராம் கோட்சே என்ற இந்து ஞானமரபைச் சார்ந்த சமூக சீர்திருத்தவாதி கைது செய்யப்பட்டபோது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்(RSS) முதலில் கோட்சேக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று கைகழுவியது. நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே சிறுவயதுமுதலே கோட்சே பிரதர்ஸிற்கு RSSஉடன் இருந்த தொடர்புகளை புட்டு வைத்தான். பாஜகவின் பொற்காலஆட்சியில் நாதுராம் கோட்சேக்கு கோயில் கட்டுமளவுக்கு புகழ்ந்தார்கள் என்பது தனிக்கதை.

சரி விசயத்திற்கு வருவோம். குண்டு வெடிப்புகள் முஸ்லிம்களின் ஏகபோக உரிமை என்பதுபோல் பேசி, எழுதி, முழங்கி வந்தவர்கள் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்வீர்களா?

1) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இனிவரும் சுதந்திர மற்றும் குடியரசு தினத்தன்றும் வரலாறு, புவியியல்,அறிவியல்....................காணாத பாதுகாப்பை இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு(ம்) வழங்குவீர்களா?

2) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதுக்களையும் சாத்விக்களையும் சிலவாரங்களுக்குக் கைது செய்து சிறையிடைப்பீர்களா?

3) கோழி களவாணி/ ஆடு களவாணி/பிளேடு பக்கிரி/ கேப்மாறி/ மொள்ளமாறி/ முடிச்சவிழ்க்கி யாராவது பிடிபட்டால் பி.ஜெய்னுலாபிதீன்/ ஜவாஹிருல்லா/ காதர் முஹைதீன் இவர்களில் யாருக்காவது கொலைமிரட்டல் ஈமெயில் வந்திருப்பதாகச் சொல்லி போலீஸ் பாதுகாப்பு கொடுப்பீர்களா?

4) ரயில் நிலையம்,பேரூந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடுமிடத்தில் விபூதி வைத்த, பூணூல் போட்ட, சபரி மலை, திருப்பதி, பழனிக்கு மாலை போட்டவர்களிடம் துருவித்துருவி விசாரிப்பீர்களா?

இதை வாசித்துக் கொண்டிருக்கும் இந்துமத நண்பர்களே! என்னடா இவன் இப்படி எல்லோரையும் சகட்டுமேனிக்கு சந்தேகப்பட்டு எழுதியிருக்கிறான்! யாரோ ஒருசிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த இந்துக்களையும் குற்றஞ்சொல்வது எவ்வகையில் நியாயம் என்று கேட்கத் தோன்றுகிறதா?

இதே கேள்வியைத்தானே நாங்களும் கடந்த 10-15 வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! என்ன செய்வது தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தானே அடுத்தவரின் வலி சிலருக்குப் புரிகிறது!

இப்படிக்கு,

WWW.ஊர்சுத்தி.உமர்

Saturday, November 8, 2008

வெள்ளை மாளிகையில் குடிபுக இருக்கும் கருப்பு நிலாவே!!!

அம்மாவாசை போன்று இருள் சூழ்ந்திருந்த நிறவெறி பிடித்திருந்த அமெரிக்க மக்களின் மத்தியில் ஒரு கருப்பு நிலாவைப்போன்று அமெரிக்க சரித்திரத்தை புரட்டிப்போட்டு வெற்றி வாகை சூடிய "பராக் ஹுசைன் ஒபாமாவே" உம் வருகை அகிலத்தின் அமைதிக்கு நல்வரவாகட்டுமாக.
உம்மிடத்தில் நாம் ஒன்றும் பெரும் பரிசை எதிர்பார்க்க வில்லை. அமைதிப் புறாக்கள் பறக்கும் இப்பரந்த வானில் அணுகுண்டை சுமந்த ஏவுகணைகள் பறப்பதை நாம் விரும்பவில்லை. அது மழைபோல் தூவிச்செல்லும் குண்டுகளால் எத்தனை, எத்தனை பச்சிளம் பாலகர்கள் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட கொடூரம்.. இனி ஒருபோதும் வேண்டாமைய்யா....அதைக் கனவிலும் நினைத்திடல் கொடுமையைய்யா....
எங்களுக்கு நீ பரிசு மழை பொழியாவிட்டாலும் பரவாயில்லை. அதை எதிர்பார்க்கவும் இல்லை. எம்மேனிகளை உருக்குலைய வைக்கும் குண்டு மழை பொழியாமல் இருந்தாலே எங்களுக்கு சந்தோஷம் தான்.
சுறாக்களை வேட்டையாடுகிறோம் என்று சொல்லி, ஒன்றுமறியா பச்சிளம் குட்டி மீன்களையும் உம் படைகள் வேட்டையாடி விடுகின்றனர். விடியலை தேடி காலமெல்லாம் காத்திருந்த கருப்பின மக்களுக்கு விடி வெள்ளி போன்று வந்தாயே!
நாம் காலை விடியலில் குருவிகளின் இனிமையான கூக்குரலைத் தான் கேட்க விரும்புகிறோம். குண்டு மழை பொழியும் போர் விமானங்களின் இரைச்சலையல்ல.
எங்கள் நாட்டில் பாலாறு ஓடாவிட்டாலும் பரவாயில்லை. ரத்த ஆறு ஓடாமல் இருந்தாலே பெரு மகிழ்ச்சி தான் எங்களுக்கு.
உம் ஆட்சி தராசின் தட்டில் உள்ள முள் போல் சரிசமமாக நீதி வழங்கட்டும். ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தால் உம் நீதித்தட்டு நிலை குலைந்து, தாழ்ந்து விட வேண்டாம்.
உன் நாட்டு நலனில் அதிகம் கவனம் கொள். பிறநாட்டு விவகாரங்களில் அழையா விருந்தாளியாய் ஒரு போதும் போக வேண்டாம். நேர்மை தவறாமல் இரு உன்னை செல்வங்கள் தானே தேடி வரும்.
வேட்டைக்கார இஸ்ரேல் ராணுவத்திடம் குருவி போல் சுட்டுக்கொல்லப்படும் பாலஸ்தீனிய மக்களுக்கு உம் வருகை ஒரு வசந்த கால தென்றலாய், தேனமுதமாய் திகழட்டும். இதுவே எம் எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கம்.
கல்நெஞ்சம் கொண்ட கயவர்களின் மத்தியில் மிருதுவான பஞ்சு போன்ற உள்ளம் கொண்ட மனிதனாய் நீ விளங்கிடல் வேண்டும். அமைதிப் புறா என்றும் உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்க வேண்டும். கழுகுகள் பல பயமுறுத்தினாலும் அதற்காக பயந்து பறந்துவிடாதே.
உன் வருகையால் உலகில் ஆயுதக்கலாச்சாரம் எனும் களைகள் பிடுங்கப்பட்டு அமைதி எனும் பயிர் செழிப்புடன் வளரட்டுமாக.
இவ்வுலகில் தொலைந்து போன மனிதாபிமானத்தை தூர்வாற்றி, செப்பனிட்டு சீர்படுத்த உம் பயணம் இனிதே தொடங்கட்டுமாக. அதற்கு நாமெல்லாம் கருத்து வேறுபாடுகளை களைந்து உம் பயணத்தினூடே வரும் தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி நடை போட நிபந்தனை ஏதுமின்றி உதவுவோம்.
எண்ணெய் வளத்தை தன் வசப்படுத்த ஆதிக்க சக்திகளின் ஆதரவில் காரணமின்றி செய்து முடித்தப் போர்களும், அதனால் இம்மானுடம் சிந்திய குருதிகளும் போதுமய்யா...போதும்.
இருள் சூழ்ந்த வானில் இடி முழக்கமா? அல்லது வெடிச்சத்தமா? என அமைதியற்ற இவ்வுலகில் சாந்தியைத் தான் எதிர்பார்கிறோம். சமாதானத்தைத் தான் விரும்புகிறோம்.
புதியதோர் உலகு செய்ய வேண்டியதில்லை. இறைவனால் முன்பே வடிவமைக்கப்பட்டு மானுடம் அமைதியுடன் வாழ இலவசமாக வழங்கப்பட்ட இவ்வுலகில் வாழும் காலம் சிறிதே என்றாலும், உன் வரவால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் பெரிதே.
உலகமே உன் வருகைக்காக காத்துக் கிடக்கும் இவ்வேளையில், ஆணவம் எனும் அழுக்கான உடைகளை களைந்து, அமைதி எனும் புத்தாடை அணிந்து, நீதி எனும் மிடுக்கான நடையில், மனித நேயம் எனும் தெளிவான பார்வையில் வெற்றி நடைபோட நாமெல்லாம் வாழ்த்தி உம்மை வரவேற்கிறோம்.
அதிரை எக்ஸ்பிரஸிற்காக,
வழங்கி மகிழும்.
அபு_ஹசன்.