Saturday, May 31, 2008

மாநிலத்தில் 3-வது இடம் பெற்ற மாணவி ரிபையா பேகம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்ற தஞ்சை மாவட்டம், தாமரங்கோட்டையைச் சேர்ந்த மாணவி எம். ரிபையா பேகம், டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வதே தனது லட்சியம் என்று கூறினார்.

மாநிலத்தில் மூன்றாம் இடம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி ரிபையா பேகம் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

மேலும், தஞ்சை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்:- தமிழ்-96, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-90.

மளிகைக் கடை
நடத்தியவரின் மகள்

ரிபையா பேகத்தின்
பெற்றோரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம். 5-ம் வகுப்பு வரை கோட்டைப்பட்டினம் பள்ளியில் படித்தார். பின்னர், இவருடைய தந்தை முகமது மைதீன், மளிகைக் கடை வைத்து நடத்துவதற்காக தாமரங்கோட்டை வந்தார். அப்போது தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரிபையா பேகம் 6-ம் வகுப்பு சேர்ந்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வேலைக்காக தந்தை முகமது மைதீன் புரூனை நாட்டுக்குச் சென்றார். இவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தாய் பாத்திமா 5-ம் வகுப்பு வரை படித்தவர். தங்கை நபியா பேகம் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

டாக்டராவதே லட்சியம்

மாநில அளவில் 3-வது இடம் பெற்றது குறித்து ரிபையா பேகம் கூறியதாவது:-

எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என் தாய் பாத்திமா அதிக ஆதரவு அளித்தார். பள்ளி ஆசிரியர்கள், ஊர்க்காரர்கள் அனைவரும் சிறந்த மதிப்பெண் எடுக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினர். பள்ளியில் தனிக்கவனம் எடுத்து எனக்கு பயிற்சி அளித்தனர். வீட்டில் டி.வி. இல்லை. எப்போதாவது பக்கத்து வீடுகளில் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பேன். நூலகம் சென்று படிப்பேன்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போல மருத்துவராகி, ஏழைகளுக்கு சேவை செய்வதே எனது குறிக்கோளும், லட்சியமும் ஆகும். தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆங்கில வழி இல்லை என்பதால்,
பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்து பயில உள்ளேன்.

இவ்வாறு ரிபையா பேகம் கூறினார்.

தாமரங்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தின
குமார் கூறியதாவது:-

எங்கள் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. ஆரம்பம் முதலே ரிபையா பேகம் நன்றாக படிப்பார். அவருக்கு ஆசிரியர் ரவிச்சந்திரன் சிறப்பு பயிற்சி அளித்தார்.

இவ்வாறு ரத்தினகுமார் கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=415916&disdate=5/31/2008&advt=2

சஹானாவின்....

எனது முதல் கட்டுரைக்கான மறுப்பு சார்ந்த வாழ்த்து பதில்கள் பார்த்தேன் மகிழ்ச்சி. முதலில் என்னுடைய ரிஷிமூலம் சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விருப்பங்கள் குறைவு.

எல்லாத்துறையையும் சார்ந்த கட்டுரைகளை தொடர்ந்து வழங்கலாம் என்பதே எனது அவா. அவைகளில் பிழையோ மறுப்போ கூடாதென்பது எனது அவா இல்லை. பொதுவாக எந்த
ஒரு விஷயங்களிலும் (நகைச்சுவை கூட) தகவல்கள் சார்ந்த கட்டுரைகளோ விளக்கங்களோ இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் "சுஜாதா" தனமான ஆசை.

நர்கீஸ் விவகாரத்தில் அதன் அடிப்படை விஷயங்களுடன் கிண்டலும் கலந்திருப்பின் அந்த கட்டுரை 100% முழுமை பெற்றிருக்கும் என்பதே என் கருத்து. மற்றபடி இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை ஏதோ ஒரு விஷயங்களுடன் சில தகவல்கள் உட்பட மனித சமூதாயத்தின்(முக்கியமாக நமது சமூதாயத்தின்) மனித மனங்களை சில முறை மகிழ்ச்சியையும், சில முறை யோசிக்கவைக்கவும், சில முறை கவலைகொள்ளவும், என் எழுத்துக்களை பயன்படுத்தவேண்டும் என்பதே என் நம்பிக்கை.

ஒருவேளை உங்களை எவருக்கேனும் நல்ல தலைப்பிலோ, அல்லது அறிவியல் சார்ந்த கேள்விகளோ, இருப்பின் பொதுவில் தெரியப்படுத்தினால் அவைகளை பற்றி முடிந்த அளவிற்க்கு தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கு எளிமையாக தெரியப்படுத்தும் நோக்கமும் எனக்குள் உண்டு. மற்றபடி உங்களின் எல்லா வகையான விமர்ச்சனங்களும் 360' பார்வை கொண்டு வரவேற்கிறேன்.

சுயப்புராணம் மிகுந்திருப்பின் மன்னிக்க. நன்றி

சஹானா
காயல்பட்டிணம்

'நர்கீஸ் புயல்' - விளக்கத்திற்க்கு விளக்கம்!

வேலைப் பளு காரணமாக adiraixpress வலைதளத்தை வெறும் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவோடு இருந்த நேரத்தில் "நர்கீஸ்" ஓர் விளக்கம்.. என்ற கட்டுரையைப் பார்க்க நேரிட்டது 'நர்கிஸ் புயல் பற்றிய இரண்டு கட்டுரைகளை எழுதியது நான் என்பதால் அக்கட்டுரைகள் பற்றி சில விளக்கங்களை குறிப்பிட எண்ணுகிறேன்.

ஒவ்வொரு முறை ஒவ்வொரு புயல் வரும்போதும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் பெயரிடும் என்பதையும் நானறிவேன்.

கட்டுரையில் நகைச்சுவை உணர்வு இழையோடுவதற்காக மட்டுமே நடிகைகள் பெயரை ஒப்பிட்டு எழுத நேரிட்டதே தவிர தாங்கள் குறிப்பிடுவது போல புயலின் பெயர்க் காரணம் அறியாமல் எழுதபட்ட்து அல்ல. இன்னும் சொல்லப் போனால் சட்டசபையிலேயே கூட இப்புயல் பற்றி நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு நகைச்சுவையான ருசிகர விவாதம் நடைபெற்றதையும் என் இரண்டாவது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன், அப்படியானால் சட்டசபையில் நம் அமைச்சர்கள் விவரம் அறியாமல் பேசினார்களா? விளக்குங்களேன்!


'ஒட்டு மொத்த வலைப்பூவின் தரத்தையும் சந்தேகிக்க ஏதுவாகிவிடும்', என்று தாங்கள் சொல்வது எந்த வகையில் என்பது புரியவில்லை. என்னைப்போல் அரைகுறையாகப் படித்தவர்களுக்கு தெளிவாக புரிய வைக்க தனியொரு கட்டுரை எழுதுங்களேன்!


உண்மையிலேயே தாங்கள் காயல்பட்டினத்தைச்சேர்ந்த சஹானா என்ற பெண்ணாக இருந்தால் தங்கள் முயற்சி மற்றும் துணிச்சல் பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்!

(அப்துல் கஃபூர்)

Miracle of Allah in Saudi Arabia

You can't believe this in present materialistic life but this has happened in Saudi Arabia.

A SAND FOUNTAIN... SUBHANALLAH

The description says: A fountain of sand erupted in the desert of Saudi Arabia and

until today geologists don't have a clue or an explanation to what is going on. Scientists say that

this will bring out some minerals and metals that we have never seen or encountered before..

IT IS JUST ANOTHER MIRACLE FROM ALLAH

Suddenly, a 9-meter fountain appeared, in the Al-Ahsa City, Eastern Saudi Arabia.

Immediately, Aramco Geological teams and Scientists hurry to deal with this strange phenomenon,

but they did not succeed in explaining what happened! But they agreed on a theory (...)

that these are -what so called- burdens of the Earth. Allah says in the Quran :

'And the earth throws up her burdens (from within)' 99.2

Some scientists said this phenomenon will lead to appearance of new materials,

Which will change the humanity way of life ..

We will show them Our signs in all the regions of the earth and in their own souls,
until they clearly see that this is the truth ...'

(Holy Quran: Chapter Fussilat, 41: Verse 53)

The Day of Judgment is near when there is a single star in the sky, straightaway the path of forgiveness will close. The writing in the Quran will vanish. The sun will lower itself with the earth.
Prophet Muhammad (peace be upon him) said who ever delivers this news to someone else I will on the day of judgment make him a place in paradise, Aameen.


video

Friday, May 30, 2008

"நர்கீஸ்" ஓர் விளக்கம்..

தங்களின் வலைதளத்தில் நர்கீஸ் புயலுக்கான கிண்டல் கலந்த செய்திக்கு எனது கணிவான பதில். புயல் என்பதில் பல்வேறு மாதிரியான புயல்கள் உண்டு ஆங்கிலத்தில் Strom,Twister, tornado, Hurricane என பல பெயர்களில் அதன் வீரியத்தை கணக்கிட்டு பெயரிடுகிறார்கள் இவைகள் எல்லாம் புயல்களின் வகைகள்தான்.

இந்த மாதிரியான புயல்கள் உலகின் கடற்கரை தேசங்களில் அவ்வப்போது வந்து போய்கொண்டிருக்கும் சமாச்சாரம். புயல் அடிக்கடி வீசும் பகுதிகளை பல பகுதிகளாக (Geographically) பிரித்து அவ்வப்பொழுது உருவாகும் அந்த புயல்களுக்கு ஒரு பெயரும் இட்டு அதனை அடையாளம் காணுவர் பின்பு வரலாற்றிலும் குறிப்பிடுவர்.

இப்படி இந்த புயல்களுக்கு பெயரிடும் வாய்ப்பு முன்னமே சொன்னது போல் இந்த நாட்டு பகுதிகளை சேர்ந்த நாடுகள் பெயரிடும் உரிமைகளை பெறுவர். உதாரனமாக North Indian Ocean பகுதியை சேர்ந்த புயல்களுக்கு இந்தியா பாகிஸ்த்தான் உட்பட மொத்தம் எட்டு நாடுகள் பெயரிடும் அதிகாரம் பெற்றுள்ளன.

ஒவ்வொறுமுறை ஒவ்வொறு புயல்கள்கள் உருவாகும் பொழுதும் சுழற்ச்சி முறையில் ஒவ்வொறு நாடும் பெயரிடும் இந்த முறை நர்கிஸ் புயலுக்கு பெயரிட்டது பாகிஸ்த்தான். புயலும் அதன்காரணங்களும் இன்னும்விளக்கமாகவும் ஆதாரங்களுடனும் எழுத வேண்டுமானல் ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம். இங்கு நர்கிஸ் என்ற புயலின் பெயர்காரணம் அறியாமல் அதைகேலி செய்து (முக்கியமாக சினிமா நடிகைகளின் பெயருடன் ஒப்பிட்டு) இருப்பது, விபரம் அறிந்த வாசகர்கள் படிக்கும் பொழுது ஒட்டு மொத்த வலைப்பூவின் தரத்தையும் சந்தேகிக்க ஏதுவாகிவிடும்.

சஹானா
காயல்பட்டிணம்

Thursday, May 29, 2008

வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண்!

பசி எடுத்தாலோ அல்லது உணவு உண்ட பிறகோ வயிற்றில் ஒரு வித எரிச்சல் ஏற்படும். இதைத்தான் வயிற்று எரிச்சல் என்று செல்கிறார்கள்.

வயிற்றில் புண் இருப்பதற்கான அறி குறியாகவும் இது இருக்கும்.

நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிகக் காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப் புண் வரக்கூடும்.

மேலும், வயிற்றில் உள்ள இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல், கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

முக்கியமாக இரைப்பையில் தோன்றும் அமில மிகைப்பு நோயில் இந்த அறிகுறி அடிக்கடி ஏற்படும்.

இது தவிர இரைப்பை அழற்சி, இரைப்பை புண், முன் சிறுகுடல் புண், இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண் போன்றவை வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்குக் காரணங்களாக இருக்கும்.

மேலும் அல்சர் வருவதற்கு முக்கியக் காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடப்படும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.

பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து வாந்தி எடுப்பவர்களுக்கும் வயிற்றுப் புண் ஏற்படலாம்.

புகைப்படிப்பது, மது அருந்துவது போன்றப் பழக்க வழக்கங்களினாலும் வயிற்றுப் புண் வருகிறது.

அதிகமான பதற்றம், கோபம் போன்றவற்றாலும் நமது உடலில் வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது.

வாயில் எப்போது பார்த்தாலும் சுயிங்கம் போட்டு மென்று கொண்டிருப்பவர் களுக்கு இந்த அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் வர அதிக வாய்ப்புகள் உண்டு.

ஆண்டுக் கணக்கில் சுயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் புற்று நோய் கூட வரலாம்.

சிலர் புகைப்பதை விடுவதற்காக சுயிங்கம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதுவும் தவறு.

தெடர்ந்து சுயிங்கம் சாப்பிடுவதை தவிர்த்தல் நலம்.வயிற்றுப் புண் வராமல் இருக்க தினமும் மூன்று வேளை உணவையும் குறிப் பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களை தவிர்த்து, உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

சுயிங்கம், புகைப்பழக்கம், மது அருந்துவது போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

வயிறு புடைக்க உண்பதை விட பசிக்கேற்ப உண்பதே சிறந்தது.

அடிக்கடி உண்ணாமல் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உண்பதும் அவசியம்.காலை மற்றும் இரவு நேரத்தில் தவறாமல் உணவு உண்பது அவசியம்.

ஏனெ னில் இரவுநேர உணவுக்கும், காலை உணவுக்கும் அதிக நேர இடைவெளி இருப்பதால் இவற்றை தவிர்ப்பது உடலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவதும் வயிற்றுக்கு ஏற்றது.

தண்ணீர் என்றால் அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம்.

ஏனெனில் தண்ணீர் மூலமாகத்தான் பல நேய்கள் நம்மைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வாஞ்ஜுர்

தொகுப்பு ஹாஜா


சகோ. ஹாஜாவின் உபயோகப்பூர்வமான கட்டுரைத்தொகுப்புகளை பார்த்தால் நமக்கும் வயிற்றெரிச்சல், நம்மனால இதுபோல நல்ல கட்டுரைகளை தொகுக்க முடியலையேன்னு. நல்ல முயற்சி ஹாஜா அவர்களே. வாழ்த்துக்கள்.

வாஞ்ஜூர் தளத்திற்கான முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com இத்தளம் ஒரு பொக்கிஷம், தினமும் படிக்கவேண்டிய ஒரு வலைப்பதிவு.

Give back responsibility to Hyder Ali Hazrat in Imam Shafi School

This could be of a trick played by money earning ulamas. We all, who love Allah and his apostle should condemn this type of activity. Nowadays unity is the prime need for Muslim world and Adirai

community in particular. As to my knowledge, Hyder Ali Hazrat is the only capable scholar among our people who can preach vigorously putting commands of the Allah right in the minds of our people. But

some lectures are mere poetries tuned in religious manner. they used to and still have a gang of ladies around him in the name of lecture and Dhikr. He is leading Dhikr majlis among ladies. Whereas

Allah restricts women from raising their voice out. When ladies gathering to listen the lectures of Hyder Ali Hazrat money earning ulama becomes jealous feeling that he may divert all away. But those people who rejects Hyder Ali Hazrat should bare one thing in mind that the one who introduce him to Adirai is Haji Abdul Qadhir Aalim whom all group in our place do respect. We all should address a

message to Haji M.S.Tajudeen requesting him to reinstate Hyder Ali Hazrat in Imam Shafi School.

Ahamed Anver (K.S.A)

உடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள்.

தினசரி மாலை நேரம் ஒரு மஞ்சள் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கட்கு தூக்கம் இயல்பாக வருகின்றதாம். தூக்க மாத்திரைக்குப் பழக்கமானவர்கள் அதற்குப் பதிலாக வாழைப் பழத்திற்கு அடிமையாகலாம். அதனால் பின் விளைவு வராது.

மூளையைச் சுறுசுறுப்பாகவும், அதிகமான தூக்கமிருந் தால் அதனைக் கட்டுப்படுத்தவும் உறுதுணையாகும் செரடோனின் எனும் `நியூரோ டிரேன் ஸ்மிட்டர்’ வாழைப் பழத்தில் உள்ளதாம்.

இங்கிலாந்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வாழைப் பழத்தை ஆராய்ச்சி செய்து அதில் இரண்டு வேதிப் பொருட்களைக் கண்டறிந்தனர். அதனைச் சோதித்தபோது `குடற் புண்ணை’ ஆற்றும் திறன் அவற்றுக்கு இருப்பது உறுதியானது

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பு: கடுமையான ஆஸ்துமா உள்ளவர்கள், நீண்ட கால சர்க்கரை நோய் உள்ளவர்கள், கை, கால் வலிப்பு உள்ள வர்கள், உடல் பருமன் மிக்கவர்கள் வாழைப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

நன்றி வாஞ்ஜுர்

தொகுப்பு ஹாஜா


Wednesday, May 28, 2008

Artilce (Few tips for learning english or improve your english)

Speak without Fear
The biggest problem most people face in learning a new language is their own fear. They worry that they won't say things correctly or that they will look stupid so they don't talk at all. Don't do this. The fastest way to learn anything is to do it – again and again until you get it right. Like anything, learning English requires practice. Don't let a little fear stop you from getting what you want.
Use all of your Resources
Even if you study English at a language school it doesn't mean you can't learn outside of class. Using as many different sources, methods and tools as possible, will allow you to learn faster. There are many different ways you can improve your English, so don't limit yourself to only one or two. The internet is a fantastic resource for virtually anything, but for the language learner it's perfect.
Surround Yourself with English
The absolute best way to learn English is to surround yourself with it. Take notes in English, put English books around your room, listen to English language radio broadcasts, watch English news, movies and television. Speak English with your friends whenever you can. The more English material that you have around you, the faster you will learn and the more likely it is that you will begin "thinking in English." .
Listen to Native Speakers as Much as Possible
There are some good English teachers that have had to learn English as a second language before they could teach it. However, there are several reasons why many of the best schools prefer to hire native English speakers. One of the reasons is that native speakers have a natural flow to their speech that students of English should try to imitate. The closer ESL / EFL students can get to this rhythm or flow, the more convincing and comfortable they will become.
Watch English Films and Television
This is not only a fun way to learn but it is also very effective. By watching English films (especially those with English subtitles) you can expand your vocabulary and hear the flow of speech from the actors. If you listen to the news you can also hear different accents.
Listen to English Music
Music can be a very effective method of learning English. In fact, it is often used as a way of improving comprehension. The best way to learn though, is to get the lyrics (words) to the songs you are listening to and try to read them as the artist sings. There are several good internet sites where one can find the words for most songs. This way you can practice your listening and reading at the same time. And if you like to sing, fine..
Study As Often As Possible!
Only by studying things like grammar and vocabulary and doing exercises, can you really improve your knowledge of any language.
Do Exercises and Take Tests
Many people think that exercises and tests aren't much fun. However, by completing exercises and taking tests you can really improve your English. One of the best reasons for doing lots of exercises and tests is that they give you a benchmark to compare your future results with. Often, it is by comparing your score on a test you took yesterday with one you took a month or six months ago that you realize just how much you have learned. If you never test yourself, you will never know how much you are progressing. Start now by doing some of the many exercises and tests on this site, and return in a few days to see what you've learned. Keep doing this and you really will make some progress with English.
Record Yourself
Nobody likes to hear their own voice on tape but like tests, it is good to compare your tapes from time to time. You may be so impressed with the progress you are making that you may not mind the sound of your voice as much.
Listen to English
By this, we mean, speak on the phone or listen to radio broadcasts, audiobooks or CDs in English. This is different than watching the television or films because you can't see the person that is speaking to you. Many learners of English say that speaking on the phone is one of the most difficult things that they do and the only way to improve is to practice..

பொறாமைத் தீ

This is an article about Jealousy.....
JEALOUS
Undoubtedly jealousy destroys excellences (good deeds, virtues) and inclines one towards sins. It is a disease with which even the great personalities are suffering. This jealousy has ruined people and put them into the fire of Hell.
Know well that 5 evils crop up due to jealousy:

1. Evil in Obedience
The Prophet (saw) said: 'Jealousy eats up virtues (Aa'maal) just as fire eats fuel.' (Abu Dawood)

2. Sins & Mischief
Wahb ibn Munabbah says: 'When he is face to face he flatters, when he is not face to face he backbites; and when any calamity befalls others he feels happy.'

The greatest proof of the evil of jealousy is that Allah (swt) has enjoined us to seek refuge in Allah against the jealousy of the jealousy ones.
Allah (swt) says: '...And from the evil of an envious on when he envies.' (113:5)

Allah (swt) has mentioned the evil of jealousy along with Shaytaan and soothsayers, and enjoined us to seek refuge against all of them. Ponder over this as to how great an affliction jealousy is and how great is its evil. It is for this reason Allah (swt) has said that in order to remain protected from their evil seek Allah's help and come under his refuge.

3. Attachment of Anxiety and Purposeless Grief and Worry
Along with grief and worry a sort of burden and inclination towards disobedience appears:
Ibn Sammak(ra) said: 'Besides an envier I have not found any cruel person more resembling with the oppressed. Such a person remains ever sorrowful, scattered in thought and ever engaged in grief.'

4. Blindness of the Heart
The heart becomes so blind that the capability to understand any command of Allah (swt) is removed from it:
Sufyan Ath-Thawri (ra) said: 'Adopt the habit of remaining ever silent. This will generate within you wara'(piety). Don't be greedy so that you may remain protected from trials. Don't criticise others so that you may remain protected from the blame and abuse of the people. Don't be jealous so that you may be endowed with the sharpness of understanding.'

5. Disgrace and Deprivation
Man does not become successful in any of his purpose, nor can he overpower an of his rivals:

Hatim Asamm(ra) said: 'One who keeps malice cannot be a man of faith, one who finds fault in others cannot be a worshipper, one who backbites cannot attain peace, one who is jealous is deprived of help from Allah (swt).'

How can a jealous individual succeed in his purpose when his purpose is that all the favours of Allah (swt) be taken away from all his servants and given to him? How can a jealous person overpower his rivals when they are the pious men of Allah (swt)?

Abu Yaqub (ra) prayed: 'O Allah! Keep us protected from envying the favours that you have showered on your servants, rather make their states better.'

Jealousy is such a disease, which destroys the reward and compensation of worship and sows the seeds of evil and disobedience. It finishes ones peace and tranquility. It deprives him of understanding his faith. With it a man cannot overpower his rival nor can he become successful in his purpose. It is understood that no disease is more dangerous than envy (and jealousy) which needs immediate cure. Hence don't become careless in this respect and take care to eliminate this disease of jealousy.

May Allah (swt) protect us from this evil and inculcate in us the ability to recognise our faults, Ameen
By
Adiraian 4m UK..
(thanks to Mufti Yusuf Danka
Al-Kauthar)

ஆங்கிலத்திலெல்லாம் கட்டுரைகள் எழுதுகிறார்களே என்று அதிரை எக்ஸ்பிரஸை பார்த்து யாராவது பொறாமை பட போறாங்கப்பா.

மொழி மாற்றம் செய்வதும் திறமையின் வெளிப்பாடுதான். இது போன்ற கட்டுரைகளை மொழி மாற்றம் செய்தால் எல்லோருக்கும் பயனாயிருக்கும். மனைவி மக்களெல்லாம் படிப்பார்கள் தானே?

மாணவ பங்களிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்

மாபெரும் வரவேப்பை பெற்றுள்ள அதிரை எக்ஸ்ப்ரஸ்தினமும் அதிக வாசகர்கள் பார்க்கும் தமிழ் வலைப்பதிவுகளில் ஒன்றாக திகழ்கிறது. அதிலும் ஒரு குறிப்பிட்ட ஊருக்கென்று அந்த ஊரிலுள்ளவர்களால் உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொண்டு நடத்தப்படும் பெருமையும் அதிரை எக்ஸ்பிரஸிற்கு சாரும். அத்துடன் இங்கு பரிமாறப்படும் செய்திகள், குறைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உடனுக்குடன் சென்றடைகின்றது என்பதை கண்கூடாக காண முடிகிறது. இணையம் பற்றி அறியாதவர்களும் இங்கு பகிரப்படும் செய்திகளை கதைப்பதாகவும் கேள்வியுறுகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த முயற்சி தொடர்ந்து வெற்றிபெற தன்னார்வலர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் மேலத்தெரு, கடற்கரைத்தெரு பகுதி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சிறந்த கட்டுரைகளை செய்திகளை எழுதும் அம்மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். எழுத விருப்பமிருந்தும் அதுபற்றி தெரியாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

அதிரை எக்ஸ்ப்ரஸ் பொதுவான செய்தி வலைப்பதிவாகும். இதில் உங்கள் பகுதி செய்திகளை அதிரை எக்ஸ்பிரஸிற்கு மின்னஞ்சல் செய்தால் பிழைகளை சரிபார்த்தப்பிறகு பதியப்படும். gmail கணக்கு வைத்து பங்களிக்க விரும்பும் மாணவர்கள் adiraixpress[@]gmail.com (remove [,]) மின்னஞ்சல் செய்தால் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும். அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டபின் நீங்கள் நேரிடையாக அதிரை எக்ஸ்பிரஸில் செய்திகளை பதியமுடியும்.

Be a Citizen Reporter with AdiraiXpress!

"நட"ப்பதெல்லாம் நன்மைக்கே!

"நடை" ஒரு கலை. வாழும் கலை.எல்லாம் வல்ல இறைவன் நம்மை அழகுற படைத்து வடிவமைதுள்ளான். நாம் மறு இடம் செல்ல நமக்கு
கால்களை தந்துள்ளான்.இடப்பெயர்ச்சி அதி முக்கியம் அல்லவா? இன்று நம்மில் எத்தனை பேர் நடக்கிறோம்.காலை எழுந்து இரவு படுக்கும் வரை,பைக்,கார் ,ஆட்டோ ,பஸ் என ஊர்வதில்தான் நாம் கவனம் செலுத்துகிறோம்,சிறு தூரம் போக வேண்டும் என்றாலும் நமக்கு "வீல்" தேவைப்படுகிறது, ஆனால் யதார்த்தம் என்ன என்றால்,நடப்பது ஒன்று மட்டுமே நம் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது.

ஆனாலும் இதை நிறைய பேர் உணர்ந்ததாக இல்லை.நடப்பதால் சில பல நோய்கள் அண்டாது.டயாபடீஸ் எனும் நீரிழிவு நோய்க்கு அரு மருந்து நடை,நடை,நடைதான். நம் உடலில் உள்ள நச்சு அமிலங்கள் நடப்பதால் வெளியாகி விடுகின்றன.ஆதலால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு பொலிவு பெறுகிறது . நடைக்கு மிஞ்சி வேறு இல்லை எனும் அளவுக்கு ரொம்ப முக்கியம்.நடக்கவும் செய்யாமல்,நோய்களையும் விலைக்கு வாங்கி கொண்டு ,மாத்திரைகளை எதோ சாப்பாடு மாதிரி விழுங்கிக்கொண்டு,கடைசியில்,உணவேமருந்து எனும் நிலை மாறி,மருந்தே உணவு எனும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறோம் எனவே இனியாவது நடைக்கு முக்கியத்துவம் கொடுத்து,தினமும் சரிவர செய்தால்,உடல்,உள்ளம்,பயன் பெறும்,காசுந்தேன்!

என் சிறு முதல் முயற்சி.
என்றும் அன்புடன்
ஏ.ஆர்.அப்துல் லத்தீப்.பட்டணத்தில் வாழ்க்கை வேகமாக நகர்கிறதாம் என்பதை கூற இப்படி கூறுவார்கள் "காலில் சக்கரம் மாட்டிக்கொண்டு நடக்கிறார்கள் என்று". ஆனால் யாரும் காலில் சக்கரம் மாட்டிக்கொண்டு நடப்பதில்லை. மாறாக தங்கள் வாகனங்களில் பறக்கின்றனர்.

வாழ்த்துக்கள் லத்தீப். தொடர்ந்து எழுதுங்கள் - அதிரை எக்ஸ்ப்ரஸ்

சுய கௌரவம் எந்த வீட்டில்?

ஆண்களுக்கு சுயகௌரவம் எந்த வீட்டில் கிடைப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்? குறிப்பாக மாமியார் வீட்டிற்கு 'வீட்டோட மாப்பிள்ளை'யாக செல்லும் நம்மூர் பழக்கத்தை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது பற்றி அறிந்து கொள்வதற்காக நடத்தப்படும் கருத்துக்கணிப்பு.

(வலது பக்கம் உள்ள பெட்டியில் உங்கள் வாக்குகளைப் பதியலாம்).

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

Tuesday, May 27, 2008

பி.எஸ். அப்துர் ரஹ்மான் ஜக்காத் ஃபவுண்டேஷன் கல்வி உதவித்தொகை அறிவிப்பு


நோக்கம்:

சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல்.

தகுதி:

நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தால் வேண்டும். பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள்:

ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்களாக இருத்தல். படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவி தொகை நிறுத்தப்படும்.

படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்ப்பித்தல் வேண்டும்.

படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்ப்ற்றுதல் வேண்டும்

விண்ணப்பங்கள்

பெற் மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்

அல்லது

விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பெற

www.bsazakaat.org
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் செப்டம்பர் 30,2008 (முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள்)

ஜுலை 31,2008 (முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள்)

ஜுலை 15,2008 (முதல் ஆண்டு தவிர)

மேலும் விவரங்களுக்கு

B.S.ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING # 4, MOORES ROAD, CHENNAI - 600 006
Phone: 044 - 4226 1100 / Fax: 044 - 2823 1950
www.bsazakaat.org / email: admin@bsazakaat.org,
bsazakaat@gmail.com

தகவல்; அபுஹஸ்னா

Monday, May 26, 2008

28-ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வரும் 28-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.7.99 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வு எழுதினர். சுமார் 1 லட்சம் பேர் மெட்ரிக்குலேசன் தேர்வு எழுதியுள்ளனர்.


இந் நிலையில் வரும் 28-ம் தேதி (புதன்கிழமை) இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10th Std Examination Results are available at the following websites:

source 1


source 2

source 3 Mobile Compatible display

Government of Tamil Nadu, Directorate of Government Examinations

Other sources seen below.


http://www.chennaionline.com http://results.sify.com
http://www.chennaivision.com http://www.southindia.com
http://www.cscindiajobs.com http://www.squarebrothers.com
http://www.dinamalar.com http://www.studentsmart.in
http://www.indiaresults.com http://www.timeschennai.com
http://www.indiavarta.com http://www.tnagar.com
http://www.maalaimalar.com http://www.webulagam.com

'வீண்பழியும் பொய்க்குற்றச்சாட்டுக்களும்' குறித்த விளக்கமும் மன்னிப்பும்

அன்புடையீர், அதிரை எக்ஸ்ப்ரஸ் என்ற தன்னார்வ உள்ளூர் செய்தித்தளம் நமதூர் செய்திகளை உலகெங்கும் பரவியுள்ள அதிரைவாசிகளுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஊடகங்களில் மறைக்கப்பட்ட நமதூர் மக்கள் குறித்த உண்மைகளை உள்ளூரில் கண்ட,கேட்ட நம்பகமான தகவல்களின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சியவர்களாக சில தன்னார்வலர்களால் நேரடியாகவும், மின்மடல்கள்மூலமும், சிலசமயம் அரட்டை அரங்கில் சொல்லப்பட்டும் தகவல்களின் அடிப்படையிலும் விசாரித்து செய்திகளாக்குகிறோம்.

பரபரப்புக்காக எதையாவது எழுதி சர்க்குலேசனையும் வாசகர்களையும் அதிகரிக்கும் தேவை அதிரை எக்ஸ்ப்ரஸ்க்கு இல்லாததால், செய்திகளை நடுநிலையோடு அணுகுகிறோம். .உள்ளுர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நமதூர் குறித்து கேள்விப்பட்டவைகளையும் தங்கள் அனுபவங்களையும் செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் அனுப்பி வைக்கிறார்கள்.

அதிரை எக்ஸ்ப்ரசுக்கு வந்த ஆக்கங்களில் எழுத்துப்பிழைகளை மட்டுமே திருத்தம் செய்து பதிக்கிறோம். எவ்வித உள்நோக்கமோ அல்லது தனிநபர் தாக்குதலோ இல்லாமல் நமதூர் மக்களின் நலனை முன்னிறுத்தியே இதுவரை செய்திகளை வழங்கிக் கொண்டிருப்பதாக நம்புகிறோம்.

சமீபத்தில் நமதூர் சகோதரர் தவ்பீக் குறித்து காவல்துறையினர் அவதூறாக செய்தி பரப்பியபோதும், தன்மீதான பழிகளைப் பின்தள்ளி நமதூர் நலனில் முன்னின்றதையும் அறிவோம். சமுதாய அமைப்புகளாலும், ஊடகங்களாலும் புறக்கணிக்கப்பட்ட எம் சகோதரன் ஒருவன் அநியாயமாக தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில், துணிச்சலாக அவர் குறித்த உண்மைச் செய்திகளை அதிரை எக்ஸ்ப்ரஸில் எழுதினோம். அந்தவகையில் போலீஸ் சகவாசம் கெட்டதாகவே இருக்கிறது என்பதைச் சுட்டும்விதமாக எழுதப் பட்ட "கெட்ட சகவாசம்" என்ற பதிவையும் பதித்தோம். இதில் தவ்பீக்கைக் குறை சொல்வதோ அல்லது அவரின் சமுதாயப் பணிகளை தப்பர்த்தம் கற்பிப்பதோ அதிரை எக்ஸ்ப்ரஸுக்கு இல்லை.

கட்டுரையாளர் சொல்ல வந்த விசயம் நம்மவகளை எச்சரிக்கும் நோக்கில் சொல்லப்பட்டிருப்பதாக நம்பியதால் எவ்வித திருத்தமும் இன்றி பதிந்தோம். கட்டுரையின் சில வரிகள் சகோதரர் தவ்பீக் குறித்து எதிர்மறை எண்ணம் எழவும் வாய்ப்பிருப்பதை அவரின் சகோதரர் தமீம் அவர்களின் மனம் திறந்த மடல் மூலம் அறிந்தோம்.

மனிதர்கள் தவறுகளுக்கு உட்பட்டவர்களே. யாரையும் புண்படுத்துவதோ அல்லது யார்மீதும் தவறான அபிப்ராயம் ஏற்படுத்துவதோ அதிரை எக்ஸ்ப்ரஸின் நோக்கமல்ல என்பதால் கெட்டசகவாசம் என்ற கட்டுரையை முழுவதும் நீக்க எண்ணினாலும், பொதுவான எச்சரிக்கையைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதால், சகோ. தவ்பீக் குறித்த ஒப்பீடுகள் பதிவுக்குத் தேவையற்றது என்று உணரப்பட்டதால்,பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர் குறித்த வரிகளை மட்டும் அக்கட்டுரையிலிருந்து நீக்குவதோடு தவறுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும் வேண்டுகிறோம்.

-அதிரை எக்ஸ்ப்ரஸ்-

Sunday, May 25, 2008

வீண் பழியும், பொய்க் குற்றச்சாட்டுகளும்!

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்.

சமீப காலமாக என் சகோதரர் தவ்பீக்கை பற்றி 'அதிரை எக்ஸ்பிரஸில்' வரக்கூடிய கருத்துக்கள் வேதனை அளிக்கின்ற்ன "பெருமை, மமதை மிக்கவர், தன்னைத் தவிர மற்றவர் அறிவில் தாழ்ந்தவர் என்ற எண்ணம் கொண்டவர், ஏதோ தான் மட்டும்தான் பெரிதாக எதையோ சாதித்து விட்டதாக எண்ணுபவர், தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்பவர். கெட்டவர்களோடு சகவாசம் உள்ளவர். போலிஸோடு கூடா நட்பு கொண்டவர். என்ற ரீதியில் சின்னத்தனமான கருத்துக்களை விஷமத்தனமாக தலைப்புச் செய்தியிலும் அரட்டை அரங்கிலும் வெளியிட்டு வருகின்றனர்.

எத்தனையோ முறை RSS இயக்கத்தவர் ஆலடிதெரு, தட்டாரத்தெரு, தச்சத்தெரு போன்ற தெருக்களில் செய்த அட்டகாசஙகளை வசதியாக மறந்துவிட்டனர். நம்மவரின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வண்டிப்பேட்டை பள்ளிவாசலுக்கருகில் வெரும் 20 RSS பயங்கரவாதிகளை எதிற்க துணிவில்லாமல் அங்கு இஸ்லாமிய சமூகத்தவர் விட்டுச்சென்று ஓடிய நூற்றுக்கணக்கான செருப்பு ஜோடிகள் அவர்தம் வீரம் பகரும். வீரத்தின் விலை நிலமாம் இஸ்லாத்தில் உம்மை போன்றோரின் வெட்டிப்பேச்சும், அரட்டை அரங்கில் காணும் ஏகாந்த உணர்வுகளும் தவ்ப்பீக்கிற்கு இல்லை என்பதும் தன் இனம் மட்டுமல்லாமல் எந்த இனமும் யாரிடத்தும் அடங்கி நடக்க வேண்டியதில்லை என்ற எண்ணமும் அப்படி பயந்து வாழும் எவரையும் வெளிப்படையாக கிண்டல் செய்வது அவரின் மறுக்கவியலா கெட்ட குணம் அது முற்றிலும் தவறுதான். அதை அவர் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்று எண்ணம் எமக்கு இல்லை என்பதையும்இங்கு குறிப்பிட விரும்புகிறேன். "துர்ப்பழக்கம் உடையவரோடு தொடர்பு, போலிஸோடு தொடர்பு" என்று முற்றிலும் அவரைப்பற்றி அறியாதார் போன்று அரைவேக்காட்டுத்தனமான இந்த செய்திக்கு இறைவனிடமே பொறுப்பு சாட்டிட நினைத்தேன் ஆனால் எவரும் மறுமை வாழ்வில் நட்டம் அடைந்துவிடலாகாது எனும் நல்லெண்ணத்தில் இங்கேயே முடித்துக்கொள்வோம் எனக்கருதி இதை எழுதுகிறேன்.

கெட்டபழக்கம் உடையவரை திருத்தவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டார். கெட்ட நடத்தை உள்ளவரின் செயல்கள் அவருக்கு இருந்ததாக அரவே எனக்கு தெரியவில்லை. நானே அவரிடம் ஒரு குறிப்பிட்ட நபர்களைக் குறித்து அவரிடம் கேட்டிருக்கிறேன். இந்த நபர் சிகரெட் குடிப்பதைப் பார்த்தேன், இந்த நபர் தொழுகை நேரத்திலும் வெளியில் நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தார், நான் பார்ப்பதே இவ்வளவு என்றால் மறைவாக என்ன என்னவோ நடக்கலாமே என்றேன் அதற்கு அவர்,
"நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டேன். நான் சொல்லத்தான் முடியும், துஆ செய்யலாம். அதற்குமேல் அல்லாஹ்தான் திருத்தவேண்டும்", என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு போலிஸுடன் உறவு இருந்தால், அவரை மீட்க என்னற்ற லட்சங்களை செலவு செய்திருக்க வேண்டியதில்லையே. பல வழக்குகளை சந்தித்திருக்க வேண்டியதில்லையே. இன்றும் பல லட்சஙகளுக்கு கடனாளியாக இருக்க வேண்டியதில்லையே.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிறுத்தப்பட்டபொழுது செக்கடி மேட்டு இளைஞர்கள் காங்கிரஸ், தி.மு.க. என்ற பலமான கூட்டணியோடு எம்.எல்.ஏ. ரெங்கராஜன் 25000 ரூபாய் உடற்பயிற்சிக்கூடம் கட்ட பணம் கொடுத்தார் என்பதற்காக சகோ. தவ்ஃபீக்கிர்க்கு எதிராக செயல்பட்டனர். தவ்ஃபீக்கால் உடல் உதவி பெற்ற ரத்த உறவுகள்கூட பல வருட கட்சி உறுப்பினர் பதவியை காரணம் காட்டி மாற்றி ஓட்டுப்போட்டார்கள். மாறி வேலை செய்தார்கள். சிலர் நஜாத் என்று சொன்னார்கள்.

ஓட்டுக்கள் எண்ணப்பட்டு பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை திரும்பி வரும்பொழுது குதூகளங்களோடு நடுத்தெரு இளைங்கர்கள் என். ஆர். ரெங்கராஜன் அவர்களுக்கு வெற்றி வாங்கி கொடுத்த மகிழ்ச்சியை கொண்டாடியவாறு பல கார்களில் எங்களின் இரண்டு ஆட்டோக்களைக் கடந்து பறந்து சென்றனர். பின்னால் எங்களைத் திரும்பிபார்த்து சிரித்துக்கொண்டே சென்றது இன்னும் ஆறாத வடுவாக மனதை நெருடிக்கொண்டே இருக்கிறது. சகோ.தவ்ஃபீக்கை மாய்த்து, ரெங்கராஜன் அவர்களை உயர்த்துவதில் அப்படி என்ன அவர்களுக்கு மகிழ்வு என்று தெரியவில்லை.

அந்த கணமான நேரத்தில் சகோ.தவ்ஃபீக் தனது 4ம் வருடத்தை சிறைக் கொட்டடியிலே முடிக்கிறார். நாங்களோ என்னவென்றே புரியாத கவலையுடன் கூடிய சுறுங்கிவிட்ட இதயம் படைத்த மனிதர்களின் உலக சிறையிலே. தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல எங்கள் சகோதரன் இந்திய சமூக அமைப்புக்கு கட்டுப்பட்டவர்தான் என்பதை பறை சாட்டவும், பயங்கரவாதி என்ற பழிச்சொல்லை அகற்றவும், துரித விடுதலைக்காகவும் தான் எம்.எல்.ஏ.தேர்தலில் நிறுத்தப்பட்டாரே தவிர வேரெதெற்காகவுமில்லை.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவரை சிறையில் சந்தித்த பொழுது நான். அவரிடம் நடந்து முடிந்த தேர்தலில் நம்மவர்களே நமக்கு செய்த துரோகத்தை மனதில் சுமந்தவாறு நான் " நம் சமுதாயத்திற்கு எது நடந்தாலும் நமக்கென்னவென்று நாம் ஒதுங்கி இருக்கவேண்டும் நம் குடும்ப காரியஙளை மட்டும் பார்க்க வேண்டும்" என்று சொன்னபொழுது, " நான் என் குடும்பத்துக்காக மட்டும் படைக்கப் பட்டவன் அல்ல. எங்கு அநியாயம் நடந்தாலும் அது எந்த சமூகம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா சமூகங்களுக்கும் அவர்களின் உரிமைகளை பெற்றுகொடுக்கவேண்டும் என் தகுதிக்குட்பட்டு, யார் நமக்கு சாதகம் செய்தார்கள், யார் நமக்கு பாதகம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டியதில்லை. அதை இறைவன் பார்த்துக்கொல்வான் என்று சொன்னார். ஒரு உலக விஷயத்துக்காக நாம் இவ்வளவு கவலை கொள்ளவேண்டியதில்லை. அப்படியே அவர்கள் நமக்கு எதிராக செயல்பட்டிருந்தாலும் அவர்களைப் பழிவாங்கினாலோ அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்", என்று கேட்டு வாயடைக்கச் செய்தார்.

எனவே சகோ. தவ்ஃபீக் குறித்து வெளிப்படையான அவரின் செயல்களைக் வைத்துக்கொண்டு அவசர கதியில் ஒன்றும் முடிவெடுக்காதீர்கள். பார்வையில் அவரின் செயல்கள் தவறாகத்தெரிந்தாலும் அவருக்காக துஆ செய்யுங்கள். தயவு செய்து அரட்டை அரங்கில் சகோ. நன்பன் என்பவர் சொன்னதுபோல் "தினமலம்போல் துர்ப்பிரச்சாரம் செய்யாதீர்கள்.

எப்படி இருந்தாலும் இந்த தருனத்தில் உங்களின் இந்த விமர்சனங்கள் தேவையா? நம் அனைவரின் பாவத்தையும் மன்னித்து தன் திருப்தி பெற்ற அடியாரின் கூட்டத்தில் நம்மை இறைவன் சேர்த்துக்கொள்வானாக.


ஜஸாகல்லாஹு ஹைரன்
எஸ்.முஹம்மத் தமீம்.

Saturday, May 24, 2008

கெட்ட சகவாசம்

முன்பெல்லாம் படிக்காமல் தறி(/று)தலையாக திரிபவர்களைப் பற்றிச் சொல்லும்போது "இந்த நிலைக்குக் அவனுடைய கெட்ட சகவாசம்தான் காரணம்!" என்று சொல்வார்கள். ஒட்டுபீடி (பீடித்துண்டு),ஸ்கூல் கட்டடித்து விட்டு தியேட்டருக்குச் செல்வது, மது, திருட்டு போன்ற துர்குணமுள்ள, ஏற்கனவே படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வெட்டியாக ஊர்சுற்றிக் கொண்டிருப்பவர்களுடன் (ஊர்சுத்தி உமர் காக்கா விதிவிலக்கு;-) நட்பு கொண்டிருப்பது ஆகியவற்றை கெட்டசகவாசத்தின் அடையாளங்களாகச் சொல்வார்கள்.

காலம் மாறிவிட்டது! பெண்களுக்கும், டயட்டில் (DIET) இருப்பவர்களுக்கு என்றெல்லாம் தனித்தனி பிராண்ட் சிகரெட்கள் சந்தைக்கு வந்து விட்டன. புகைப்பிடித்துக் கொண்டே தீவிரமாக டிஸ்கஸ் பண்ணும் சாஃப்ட்வேர் சீமாட்டிகளை சென்னை போன்ற பெருநகரங்களில் காண முடிகிறது. அரசாங்கமே டாஸ்மார்க் கடைகளை ஆங்காங்கு தொடங்கி விட்டதால் ஒளிந்து கொண்டு சாராயம் அடித்தவர்கள், அரசு உதவியுடன் கண்ணியமாக ? பார்களில் மது அருந்துகிறார்கள். கெட்டசகவாசத்திற்கு அடையாளமாகச் சொல்லப்பட்டவைகள் இன்று 'நல்ல' சம்பாத்தியத்திலிருக்கும் படித்தவர்கள் தத்தெடுத்து விட்டார்கள்.

இன்னொரு பக்கம், காவல்துறையின் 'உங்கள் நண்பன்' என்ற ரெடிமேட் வாசகங்களுடன் போர்டு மாட்டி பேரூந்து நிலையம், கடைவீதி போன்ற பொதுமக்கள்கூடும் இடங்களில் "எங்கள் உதவி உங்களுக்கு வேண்டுமா?" என்று வீற்றிருப்பார்கள். அரசியல் கட்சிகளும் சாதிச்சங்கங்களும் தினம் ஒரு ஊர்வலம் என்று நடத்துவதால் சிலைகளுக்கும், கட் அவுட்களுக்கும் பாதுகாவல் கொடுக்கச் சென்று விடுவதால் பெரும்பாலான இத்தகையக் காவல்நிலையங்களில் ஓரிரு காவல்காரர் மட்டுமே தினந்தந்தியும் மாலைமுரசும் படித்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

சொல்லவந்த விசயம் என்னவென்றால், முன்பெல்லாம் கெட்ட சகவாசம் என்று சொல்லப்பட்டவற்றை நல்லவர்கள் பிடித்துக் கொண்டுவிட்டதால், நல்ல சகவாசமாக இருந்த காவல்துறையினருடனான நெருக்கம் தற்போது கெட்ட சகவாசம் என்ற பட்டியலில் இணைந்து விட்டது. காவல்துறைக்கு உளவு சொல்லும் "ஒற்றர்கள்" (SPY AGENTS) குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு யாரைப் பற்றி தகவல் சொன்னார்களோ அவர்களுடன் இணைக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

நமது நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது தண்டனை நிலுவையுள்ள காஷ்மீர் இளைஞர் அப்சல் குரு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரின் ஆரம்பகால சகவாசம் காஷ்மீரில் இயங்கும் பாகிஸ்தான் ஆதரவாளர்களுடன் நட்பு கொண்டு, அவர்களின் திட்டங்களை ராணுவத்திற்குச் சொல்வதாக இருந்தது. உறவாடிக் கெடுக்கும் இந்த ஒற்றுவேலைக்காக ராணுவ அதிகாரிகளும் அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து செல்லப்பிள்ளையாக வைத்திருந்தனர்.

இத்தகைய நம்பத்தகுந்த ஒற்றர்கள் கொடுக்கும் 'துப்பு'ச் செய்திகளைப் புலண் விசாரணைகளாகப் பதிவு செய்து அரசிடமிருந்து பதவி உயர்வு, மெடல்கள் என தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்ள பரஸ்பரம் ஒற்றர்கள் ராணுவ அதிகாரிகளுக்கும் தேவையாக இருந்தனர்.

கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் இருப்பக்கமும் நம்பிக்கையை வளர்த்து 'துப்பு' (கெட்ட?)த் தொழிலைச் செய்து வந்த அப்ஷல் குருவுக்கு இன்று மரண தண்டனை காத்திருக்கிறது. காரணம்,குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தன்னால் இந்த துப்பு வேலையை இனியும் செய்ய முடியாது; சுய தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றப்போவதாக ஒதுங்கி, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வந்தார்.

ஏற்கனவே பெற்றிருந்த அரசு அதிகாரிகளின் தொடர்பை தன் தொழிலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்தார். ஒரு நம்பத் தகுந்த அதிகாரி சொன்னதன் பேரில் காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு, பழைய வாகனம் வாங்குவதற்கு வந்த அப்சல் குருவிற்கு, நாடாளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஒரு செல்போன் அழைப்பு வந்தததால், அப்ஷல் குரு, தீவிரவாதிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டு இன்று மரண தண்டனைக் குற்றவாளியாக்கும் அளவுக்குச் கொண்டு வந்துள்ளது. கவனிக்கவும் அப்சல் குருவின் மொபைலுக்கு வெளியிலிருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது, இவர் அழைக்கவில்லை!

தமிழகக்காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. காவல் துறையினரின் ஒருசில கருப்பாடுகளால் ஒட்டு மொத்த காவல் பணியைச் செய்துவரும் உன்னத சேவையாளர்களுக்கும் கெட்ட பெயர்.மற்ற அரசுத்துறை ஊழியர்களைப்போல் பண்டிகைக்கால விடுமுறை கிடைப்பதில்லை. தங்களின் கோரிக்கைகளை போராடிப் பெறமுடியாத ஒரே அரசுத்துறை காவல்துறை மட்டுமே.உயரதிகாரிகள்/அரசியல்வாதிகளின் வீட்டுவேலைகளைச் செய்யும் துர்ப்பாக்கியக் காவலர்களும் உளர் என்பதை நியாயக் கண்ணோட்டத்தில் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

காவல்துறையினரே நீங்கள் உண்மையான மக்கள் நண்பர்களா? அல்லது கூட இருந்தே கொல்லும் கிருமிகளா? அப்பாவிகள் மீதான உங்கள் அணுகுமுறை மூலமே மக்களிடம்நீங்கள் அளவிடுகிறீர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு உண்மையாகவே கடமை! கண்ணியம்!! கட்டுப்பாடு ஆகியவற்றுடன் பணியாற்றிச் சிறக்க வாழ்த்துக்கள்!

-எழிலன்-

மிகச்சிறப்பாக நடந்து முடிந்த கால்பந்து தொடர்போட்டிஅதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் (AFFA)ஐந்தாம் ஆண்டாக மிகச்சிறப்பாக நடத்திய மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியினை காண்பதற்காக நமதூர் மற்றும் பிற ஊர்களிலிருந்தும் 3000-க்கும் மேற்ப்பட்ட கால்பந்து ரசிகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு இப்போட்டியினை கண்டு ரசித்தனர்.

இறுதி போட்டியை திரு M. கண்ணதசன் அதிராம்பட்டினம் காவல் துறை ஆய்வாளர் அவர்கள் துவக்கி வைத்தார். மற்றும் இவ்விழாவை சிறப்பிக்க ஜனாப் M.B அபூபக்கர் அவர்கள், ஜனாப் ஹாஜி Ln C.M. இபுறாஹிம் அவர்கள், ஜனாப் S.M அக்பர் ஹாஜியார் அவர்கள், திரு கோபால கிருஷ்ணன் அவர்கள் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பட்டுக்கோட்டை மற்றும் திரு A. வாசுதேவன் அவர்கள் உடற்கல்வி இயக்குனர், பட்டுக்கோட்டை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சென்ற ஆண்டில் இறுதிப்போட்டியில் கலைவானர் செவன்ஸ் கண்டனூர் பாலையூர் அணியும், V.V.F.C மனச்சை அணியும் மோதின. இந்த ஆண்டும் இந்த இரு அணிகளும் இறுதிபோட்டியில் மோதின.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் இரு பகுதி நேர ஆட்டத்திலும் கோல் ஏதும் போடமல் சம நிலையில் ஆடி முடித்தனர்.
இப்போட்டியின் முடிவு ட்றை பிரேக்கர் மூலம் 5 க்கு 4 என்ற கோல் கணக்கில் மனச்சை அணியினர் வெற்றி பெற்றனர்.

சென்ற ஆண்டில் கலைவானர் செவன்ஸ் கண்டனூர் பாலையூர் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


வெற்றி பெற்ற மனச்சை அணியினருக்கு முதல் பரிசாக ரூபாய் 8000/- மற்றும் AFFA கேடயம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டன.

இரண்டாம் இடம் பெற்ற கலைவானர் செவன்ஸ் கண்டனூர் பாலையூர் அனியினருக்கு இரண்டாம் பரிசு ரூபாய் 6000/- மற்றும் AFFA கேடயம் மற்றும் ரன்னர் கோப்பை வழங்கப்பட்டன.

இத்தொடர் போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடிய 10 வீரர்களுக்கு AFFA சார்பாக 10 தனி கோப்பைகள் வழங்கப்பட்டன.

இறுதி போட்டியில் விளையாடிய இரு அணியினருக்கும் AFFA பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

மேலும் நமதூர் சிறுவர்களை கால்பந்து விளையாட்டில் ஊக்குவிப்பதற்க்காக அவர்களுக்கு AFFA சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

இத்தொடர் போட்டி முழுவதும் சிறப்பாக நடை பெறுவதற்கு பொருளாதார உதவிகள் வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் AFFA குழுவினர்கள் நன்றியினை தெரிவித்தனர்.

இப்போட்டியை மிகச்சிறப்பாக ஒருங்கினைத்து நடத்திமுடித்த இளைஞர்களை அனைவரும் பாராட்டினர்.

Friday, May 23, 2008

தமிழகத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் புரளி கிளப்பும் போலிசார்!

தமிழக ஊடகங்களில் சில நாட்களா கவே முஸ்லிம் தீவிரவாதிகள் கைது, சர்வதேச தீவிரவாதியை தேடிக் கொண் டிருக்கிறோம் என்ற ரீதியில் செய்திகள் செய்தித்தாள்களில். தீவிரவாதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு என்ற செய்திகள் நம்மை சந்தேகப்பட வைத்ததால் உண் மையை அறிய களத்தில் இறங்கினோம். செய்திகளின் பின்னணியில் நமக்கு புலனானது காவல்துறையின் வழக்கமான புளுகு மூட்டைகள்தான்.

ஒவ்வொரு குண்டு வெடிப்பு களுக்குப் பின்னா லும் வழக்கம் போல கண்காணிப் புகளை பலப்படுத் துவது காவல்துறை யின் வழக்கம். மற்ற நேரங்களில் இவர் கள் தூங்கி விடு வார்கள் என்பது வேறு விஷயம். இது போன்ற நேரங்களில் நள்ளிரவில் லாட்ஜ்களில் சோதனை, வாகன கண் காணிப்பு ஆகியவை நடைபெறும். சந்தேகத்திற்குரிய மற்றும் பழைய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அந்த அடிப்படையில் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின் சென்னை மண்ணடி பகுதியில் லாட்ஜ்களில் சோதனை நடைபெற்றது. அப்போது மண்ணடி பகுதியில் தங்கியிருந்த முஸ்லிம் இளைஞர்களை சந்தேகத்தின் அடிப் படையில் விசாரிக்க வேண்டும் என்று 7 இளைஞர்களை அழைத்து சென்றிருக் கிறார்கள். இதையடுத்து வழக்கறிஞரும் தலித் போராளியுமான ரஜினிகாந்த் பூக்கடை காவல் நிலையத்திற்கு சென்று விசாரிக்க சந்தேகத்தின் பேரில் தான் விசாரிக்க அழைத்து வந்தோம் என்று நான்கு இளைஞர்கள் விடுவிக்கப்பட்ட னர். மீதமுள்ள மூன்று இளைஞர்களை விடுவிக்க அருகிலுள்ள காவல்நிலையத் திற்கு செல்வதற்குள் அவர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு விடுகிறார்கள். அன்றைய நாள் தலைப்புச் செய்திகளாக வெளிவந் தது. 'ராமகோபாலனை கொல்ல வந்த முஸ்லிம் தீவிரவாதிகள் கைது' என்ற செய்தி. இதற்கிடையில் இறைவன் ஒருவனே என்ற அமைப்பின் தலைவர் தவ்பீக் என்பவர் தலைமையில் தமிழகத் தில் குண்டுகள் வைக்கவும், இந்துத் தலைவர்களை கொல்ல சதி நடப் பதாகவும், தப்பிச் சென்றுள்ள தவ்பீக் மற்றும் அபூதாஹிர் ஆகியோரை போலிஸ் தேடி வருவதாகவும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இந்த செய்திகள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர்களின் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டோம்.

குண்டு வைக்க சதி, தீவிரவாதிகள் கைது என்பதெல்லாம் சுத்த பொய். இவர்கள் சொல்லும் தவ்பீக் என்பவர் மண்ணடியில் பல மாதங்களாக அறை எடுத்து தங்கி வருகிறார். நரேந்திர மோடி சென்னை வந்தபோது முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தவ்பீக் மற்றும் சில இளைஞர் கள் கைது செய் யப்பட்டார்கள். அப்போது உயர்நீதிமன்றம் மூலமாக பிணையில் வந்தார். தவ்பீக் மீது உள்ள அனைத்து வழக்குகளி லுமே அவர் விடு தலை செய்யப்பட்டு விட்டார். மும்பை குண்டு வெடிப்பிலே சம்பந்தப்பட் டதாக அவர் மீது தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் கடலூர் சிறையில் வேறு வழக்கில் அவர் சிறை வைக்கப்பட்டிருந் தார். இதனால் அவ்வழக்கிலும் விடுதலை செய்யப் பட்டார். இதுபோன்று 2002ம் வருடம் கொடுங்கையூரில் குண்டு வைக்கவும், இந்து தலைவர்களை கொல்லவும் சதி செய்ததாக கூறி இன்று கூறும் இதே காரணங்களை காட்டி பொய் வழக்கு போட்டனர். அதிலும் விடுதலை செய்யப்பட்டார். ஏதேனும் ஒரு காரணத்தை காட்டி முஸ்லிம் இளைஞர் களை கைது செய்யும் போக்கு தொடர்கிறது. தவ்பீக்கை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லவே போலிஸ் இது போன்ற தீவிரவாத வதந்திகளை பரப்பி வருகிறது. இதை சட்டரீதியாக எதிர்கொள் வோம் என்றார். வன்முறை பாதைக்கு இளைஞர்களை அழைத்துச் செல்லும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் சட்டத்திற்கே புறம்பாக காவல்துறை என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்தால் அது பொது அமை திக்கு நல்லதல்ல என்றே நடுநிலையாளர் கள் கருதுகிறார்கள்.

எனவே காவல்துறை தீவிரவாத வதந்தி பரப்புவதை விட்டு விட்டு அந்த இளைஞர்கள் குற்றம் செய்திருப்பதாக கருதினால் சட்டத்தின் முன் நிறுத்துவது தான் சரி. இல்லையென்றால் வன்முறை யில் நாட்டம் கொண்ட பல இளைஞர் களை சமுதாயத்தில் உருவாக்கிட காவல்துறையின் போக்கு காரணமாகி விடும் என எச்சரிக்கின்றோம்.

நன்றி: தமுமுக இணையதளம்

Thursday, May 22, 2008

அதிரை காவல்துறை மாமூல் வாங்குகிறதா? - லாட்டரித்தொழிலை ஊக்குவிக்கிறதா?

அதிரை தக்வா பள்ளிக்கு சொந்தமான கடைத்தெரு மீன் மார்கெட்டில் சுரண்டல் லாட்டரிகளும், வெளிமாநில தொழிலும் தாராளமாக கொடிகட்டிப் பறக்குது. பள்ளிவாசலின் நிர்வாகிகளை கேட்டால் ஏற்கெனவே இது தொடர்பாக காவல்துறைக்கு மனு கொடுத்துவிட்டு அலுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர்.

இதுபற்றி மேலும் விசாரிக்க நமதூர் அமைப்புகளின் முகவரிகள் கிடைக்கவில்லை, பாவம் அவர்கள் பத்து அடிக்கு ஒரு சுவற்றில் தீன்வளர்க்க சுவர் விளம்பரம் செய்து கொண்டிருப்பார்களோ என்னவோ.

அதிரையில் லாட்டரி தொடர்பாக ஏற்கெனவே அதிரை எக்ஸ்பிரஸில் இதுபற்றிய செய்தி புகைப்பட ஆதாரத்துடன் வந்துள்ளது.

பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் இஸ்லாமிய மத கோட்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் தொழிலை நடத்துபவர்களை இந்த நாட்டின் காவல்துறை மாமூல் வாங்கிக்கொண்டதோடல்லாமல், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை என்கவுண்டர் என்று சொல்லிக்கொண்டு சிறுபான்மை சமூகத்தினர் அச்சத்துடன் வாழ் என்று சொல்ல நினைக்கிறதா என்று மக்கள் கேட்கின்றனர்.

மேலே படத்தில் அதிரையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் காரணமாக காவல்துறையின் ஒற்றர்படை (?) செக்கடிப்பள்ளியின் கீழ் இளைஞர்கள் அமர்ந்து சுதந்திரமாக பேசிக்கொண்டிருக்கும் போது வாயை பிளந்து கேட்பவர்.

வேண்டாம் இனி என்கவுண்டர்

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகளை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுத் தள்ளுவது காவல்துறையின் நடை முறையாகி விட்டது. ரவுடிகளை முளையிலேயே கிள்ளி எறியாமல் வளர்த்து பராமரிப்பது அரசியல் வாதிகளும், காவல்துறையும் என்பது ஊரறிந்த ரகசியம். கொலை, கொள்ளை, ரவுடித்தனம் செய்யும் ரவுடிகள் காவல்துறைக்கு தெரியாமல் வளர முடியாது என்பது மட்டுமல்ல. காவலர்களுக்கு மாமூல் கட்டாமல் எவராலும் தாதா ஆகவும் முடியாது.

இது இப்படி இருக்க குற்றவாளி களின் குற்றச்சாட்டுக்களை தக்க ஆதாரத்துடன் நிரூபித்து தண்டனை வாங்கித் தர முடியாமல் சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக் கொண்ட என்கவுண்டர் என்ற பச்சைக் கொலையை அரசு ஆதரவுடன் காவல்துறை செய்து வருவது சட்டத்திற்கு மட்டுமல்ல இயற்கை நீதிக்கும் எதிரானது.

ரவுடிக் கும்பல் களை ஒழிப்பது ஒருபுறமிருக்க முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதி கள் என்ற பெயரில் சிறையிலடைப்பது பொய் வழக்குகள் போடுவதும் காவல்துறையின் நீண்டகால செயல் பாடாக இருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் னாள் கோவையில் முஸ்லிம் அமைப்பு ஒன்றின் இளைஞர்கள் தீவிரவாதிகள் என செய்தி பரப்பப் பட்டு கைது செய்யப்பட்ட போது தமிழக மீடியாக்கள் அனைத்தும் அலறின. பின்னர் அவையெல்லாம் செட்டப் நாடகம் என்பது அம்பல மானது. சமீபகாலமாக முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யவும் நாடகங்களை நிறுத்தி வைத்திருந்த தமிழக காவல்துறை மீண்டும் இப்போது பழைய பல்லவி பாட ஆரம்பித்திருக் கிறது.

தீவிரவாதிகள் பதுங்கல், இந்து தலைவர்களை கொல்ல சதி என இன்னொரு என்கவுண்டருக்கு பாதை போட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை கொன்றே தீர வேண்டும் என கங்க ணம் கட்டி சிலர் காவல்துறையில் செயல்படுவதாக செய்திகள் வருகின் றன. சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற பழ மொழி காவல்துறைக்கு தெரியாததல்ல.

பழனிபாபா படுகொலைக்கு பின்னாலும், இமாம் அலி என் கவுண்டருக்கு பின்னாலும் தமிழகத் தில் ஏற்பட்ட விபரீதங்களை காவல் துறை அறியாததல்ல. அது போன்ற விபரீதத்தை மீண்டும் தமிழகத்தில் நடைபெற காவல்துறையில் உள்ள சில அதிகப் பிரசங்கிகள் முயற்சிப்பதை காவல்துறை உயர் அதிகாரிகளும், திமுக தலைமையிலான அரசும் தடுத்து நிறுத்த வேண்டும்.

சட்டத்தை மீறுபவர்களையும், வன்முறையில் ஈடுபடத் துணிபவர்களையும் சட்டத் தின் அடிப்படையில் தண்டனை வாங்கிக் கொடுப்பதும் தான் மக்களாட்சி நடைபெறும் நாட்டிற்கு நல்லது. இந்தியா மக்களாட்சி நாடு என்பதை தமிழக காவல்துறை உணர்ந்தால் நல்லது.

என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலைகளை தொடருவது சட்டத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்து விடும். எவ்வளவு பெரிய தீவிரவாதியாக இருந்தாலும் சரி... அவரை நீதிமன்றம் தான் தண்டிக்க வேண்டும். காவல்துறை தன் கடமையை சட்டத்தின் வழி நின்று செய்ய வேண்டும். மனித உரிமை களை மிதித்து, சட்டத்தை கிழித்து சர்வாதிகாரம் மூலம் நீதியை நிலை நாட்ட துடிப்பது நியாயமல்ல. அது காவல்துறையின் வேலையும் அல்ல.
நன்றி: மக்கள் உரிமை

தவ்பீக்கிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கேட்டு சகோதரர் மனு

சென்னை, மே 21: சென்னையில் தப்பிய தவ்பீக்கை சுட்டுக்கொல்ல போலீஸôர் திட்டமிட்டுள்ளதால் அவருக்கும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தவ்பீக்கின் அண்னன் சாதிக் (44), சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு பதிலளிக்க உள்துறைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப புதன்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து சென்னை மண்ணடியில் போலீஸôர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பழனி உமர், மேலப்பாளையம் சைது காசிம், மண்ணடி காதர்பாட்சா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் "இறைவன் ஒருவன்' என்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த அமைப்பின் தலைவர் தெளஃபிக் மற்றும் அபுதாகீர் ஆகியோர் தப்பிவிட்டதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில், தவ்பீக் அண்னன் சாதிக், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

எனது மூத்த சகோதரர் தெளஃபிக், தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டணத்தில் வசிக்கிறார். தீவிரவாத செயல்கள் தொடர்பாக தவ்பீக்கை போலீஸôர் தேடி வருவதாகவும், அவரை சுட்டுக்கொல்ல போலீஸôர் முடிவு செய்துள்ளதாகவும் செய்தி படித்தேன்.

போலீஸôரின் இந்த முடிவு மனித உரிமை மீறலாகும். இதனை அறிந்து எங்கள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடந்துள்ளோம். தெளஃபிக் சமூக சேவையில் நாட்டம் உள்ளவர். எங்களுக்குத் தெரிந்த வரையில் அவர் எந்தவித சமூகவிரோத செயலிலோ அல்லது தீவிரவாத செயலிலோ ஈடுபடவில்லை.

போலீஸôர் போட்ட இரண்டு பொய் வழக்குகளில் அவர் விடுதலையாகி உள்ளார். தற்போது அவரை போலீஸôர் தேடி வருவதால், போலி என்கவுன்ட்டரில் அவரை சுட்டுக்கொல்லவும் போலீஸôர் தயங்க மாட்டார்கள்.

எனவே தெளஃபிக்கிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் உடனடி போலீஸ் பாதுகாப்பு தேவை. இது தொடர்பாக தெளஃபிக் மனைவி மர்லியா மே 18-ம் தேதி காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தந்தி அனுப்பி உள்ளார் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன், உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNM20080521135815&Title=Chennai+Page&lTitle=%F9Nu%FB%5D&Topic=0&dName=No+Title&Dist==

அதிரை/முஸ்லிம் செய்திகளை திரிக்கும் தினமலர்

அலுவலகத்தில் பணியாற்றிய சக பெண்ஊழியரிடம் பாலியல் சில்மிசம் செய்து நாறிப்போன பின்னணி கொண்டது முதல் "சண்டேன்னா ரெண்டு" என்ற ஆபாச/வக்கிர விளம்பரத்துடன் பொய்ச்செய்திகளை முந்தித்தரும் தினமல(ர்)ம், முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை திரித்தும் ஆதாரம் இன்றியும் எழுதி, முஸ்லிம்கள்மீது வாசிப்பவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் செய்திகளைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் தினமலரை "தினமலம்" என்று அழைக்கிறார்கள்.


சண்டேன்னா twice


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசயமாக்கவும், இல்லாத ராமர் பாலத்தை நாசா விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டதாகவும் புழுகும் திறமை மற்ற பத்திரிக்கைகளைவிட தினமலருக்குக் கொஞ்சம் "ஜாஸ்தி"

இந்திய கட்டிடம் ஒன்று உலகப்புகழ் பெறுவதால் இந்தியராகிய நமக்குப் பெருமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.தினமல(ர்)த்தின் நோக்கம் முஸ்லிம்களின் பாரம்பர்ய அடையாளத்தைச் சொல்லும் மொகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹாலை பின்னுக்குத் தள்ளி மதுரை மீனாட்சியம்மன் கோவிலை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதாலேயே தமிழ் பத்திரிக்கைகளில் தினமல(ர்)ம் மட்டுமே ஒரு வருடத்திற்கும் மேலாக இதை விளம்பரப்படுத்தி பக்கத்தையும் நேரத்தையும் வீணடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகமலர் என்ற பெயரில் பார்ப்பனச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து, கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியாரின் அருளுரைகளை எழுதி வருவதோடு, தாழ்த்தப்பட்ட இந்துக்களின் தெய்வ வழிபாட்டை மூடநம்பிக்கை என்பதாகவும், அசைவம் சாப்பிடுவதால் உடலுக்குக் கேடு; மாட்டு மூத்திரம் (கோமியம்) உடலுக்கு நல்லது; மருத்துவக் குணமுள்ளது என்றெல்லாம் எழுதி தனது மேல்சாதித் திமிரை அவ்வப்போது காட்டியும் வருகிறது.

தமிழ் நாளிதழ் என்ற பெயரை வைத்துக் கொண்டு "நச்" நறுக்" "சதக்" "ஏவ்" "ஸ்வாஹா" என்றெல்லாம் தமிழரையும் தமிழையும் கிண்டலடிக்கும் தமிழர் விரோத தினமல(ர்)ம் முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான சிறுசெய்தியாக இருந்தாலும் பேணை பெருமாளாக்கித் தேவையற்ற வெறுப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவதை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.

தவ்பீக் குறித்து பரபரப்பான செய்திகள் என்ற பெயரில் இல்லாததும் பொல்லாததுமாக எழுதிவருவதை அதிரையைப் பற்றியும் தவுபீக் பற்றியும் அறியாதவர்கள் வேண்டுமானால் நம்பலாம். உள்ளூர்வாசிகளால் இதை எப்படி நம்பமுடியும்?

கடந்த நான்கு நாட்களாக தவ்பீக் பற்றிய செய்திகளை தினமலர் எழுதும் விதம் அதிராம்பட்டினம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தினமலரின் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.தன்மீதான வழக்குகளை நடத்தக் கஷ்டப்பட்டுவரும் நபர் ஹவாலா பிசினஸ் செய்து இயங்கி வருவதாகச் சொல்வது நகைப்பிற்குறியது. .

"பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பணத்துக்காக மட்டுமே "ஹவாலா' தொழிலில் ஈடுபடுவோரால், வரி ஏய்ப்பு மட்டுமே நடக்கிறது.ஆனால், மத அடிப்படைவாதிகள் இது போன்ற தொழிலில் களமிறங்குவது, நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தானது" என்று ஹவாலாவை மார்வாடி சேட்கள் செய்து வருவதை நியாயப்படுத்தியுள்ளது. தேசதுரோகச் செயலை யார் செய்தாலும் தேசத்திற்கே ஆபத்து என்று சொல்லாமல் முஸ்லிம்கள் செய்தால் மட்டுமே ஆபத்து என்பதுபோல் எழுதியிருப்பது அயோக்கியத் தனத்தின் உச்சம்!

மேலும், "தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.இவர்களில் பலர், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பும் போது, அன்னிய செலாவணி சட்டவிதிகளை பின்பற்றுவதில்லை. மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து "ஹவாலா' ஏஜென்ட் வழியாக பணத்தை அனுப்புகின்றனர்; இதற்கு "உண்டியல் டிரான்ஸேக்ஷன்' என்ற அடைமொழியும் உண்டு"

என்று எழுதி இருப்பதன் மூலம் மேற்கண்ட ஊர்மக்கள் மட்டும்தான் தமிழகத்தில் ஹவாலா மூலம்பணம் அனுப்பி வருவதாகவும் மற்றவர்கள் வங்கிகள் மூலமே பணப்பரிவர்த்தனை செய்வதாகவும் காழ்புணர்வுடன் எழுதியுள்ளதும். மேற்குறிப்பிட்ட ஊர்களில் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால் தினமல(ர்)த்தின் வெறி தெளிவாக விளங்குகிறது.

தொடர்புடைய தினமல(ர்)ம் நாளிதழ் செய்திகளின் சுட்டிகள்:

http://www.dinamalar.com//Sambavamnewsdetail.asp?News_id=2022

http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2022&cls=row3&ncat=TN

http://www.dinamalar.com//kutramnewsdetail.asp?News_id=606

இனியும் தினமலர் முஸ்லிம்கள் குறித்த செய்திகளில் காழ்புணர்வைக் கொட்டி எழுதி வந்தால், தினமலர் பரவலான அதிரை மற்றும் முஸ்லிம் வாசகர்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

Wednesday, May 21, 2008

குமுதத்தில் தவ்ஃபீக்கின் பேட்டி

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஸ்கர் - இ - தொய்பா வலுவாக கால் ஊன்ற ஆரம்பித்துவிட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாசகார வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் `இறைவன் ஒருவனே' என்ற அமைப்பு பின்புலமாகச் செயல்படுகிறது. இந்து மதத் தலைவர்களைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்... என்ற ரீதியில் வெளியாகும் தகவல்களும், சென்னையில் பிடிபட்ட மூன்று தீவிரவாதி களிடம் பெறப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வாக்குமூலங்களும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின், சென்னை மண்ணடி, கொடுங்கையூர் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பழனி உமர், மேலப்பாளையம் சையது காசிம், மண்ணடி காதர் ஆகியோர் பிடிபட்டனர். இதுபற்றிய தகவல்களை வெளியிட்ட போலீஸார், "தேடுதலில் பிடிபட்டவர்கள் `இறைவன் ஒருவனே' அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதன் தலைவர் தவ்ஃபீக், அபுதாகீர் ஆகியோர் தப்பியோடிவிட்டனர். ரியாத்துக்கு வேலை தேடிச் சென்றபோதுதான் தவ்ஃபீக்குக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு லஸ்கர் - இ - தொய்பா அமைப்பில் ஆயுதப் பயிற்சியை எடுத்துக் கொண்டார். ஆந்திராவில் லஸ்கர் - இ - தொய்பா மாநிலத் தலைவர் அப்துல் அஜீஸுடன் சேர்ந்து செயல்பட்டார். ஒரு சண்டையில் அஜீஸ் சுட்டுக் கொல்லப்பட்டதும், சென்னைக்கு வந்து தீவிரவாத வேலைகளைத் தொடங்கினார் தவ்ஃபீக். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் `இறைவன் ஒருவனே' என்ற அமைப்பிற்கு முக்கியத் தொடர்பிருக்கிறது. தவ்ஃபீக்கைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.

தவ்ஃபீக்கின் மனைவி மர்லியாவும், கடந்த 17-ம் தேதி தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஃபேக்ஸ் ஒன்றில் `என் கணவர் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக உழைத்து வருகிறார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் அவரைப் பற்றி அவதூறாக பத்திரிகைகளில் செய்தி பரப்புகின்றனர். அவர் பிடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டால் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக இப்படியெல்லாம் செய்கின்றனர். என் கணவர் எந்தவித தீவிரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை. அரசுதான் கருணையோடு அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

தவ்ஃபீக்கின் வக்கீல்களிடம் பேசிய போலீஸாரும், `ஜமாத் ஆட்களின் உதவியோடு அவரைக் கூட்டி வாருங்கள். என்கவுன்ட்டர் பயம் தேவை யில்லை' என்று கூறியுள்ளனர். நாமும் தவ்ஃபீக்கைச் சந்திக்க அவரது வக்கீல்கள் மூலம் தொடர்ந்து முயற்சி செய்தோம். நமது தேடுதலை அறிந்து கொண்ட தவ்ஃபீக் நமது செல்போன் எண்ணுக்கே லைனில் வந்தார்.

"வணக்கம். என் பேர் தவ்ஃபீக். இந்தப் பேரைச் சொல்வது என்பது புரியாத அரபு பாஷையைச் சொல்வதுபோல்தான். அதனால் `இறையுதவி' என பெயரை மாற்றிக் கொண்டேன். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட் டினம்தான் எனக்குச் சொந்த ஊர். மர்லியா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். சிறு வயது முதலே இஸ்லாத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். மற்ற இஸ்லாமிய அமைப்பு களைக் காட்டிலும் தமிழ் மரபு சார்ந்த விஷயங்களைப் பற்றி நான் பேசும் முறைகள் மார்க்க பெரியவர்கள் பலருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. என் வாழ்நாளில் சிறுபான்மையினர் நலனுக்காகப் பாடுபட்டு வருகிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு நான்காயிரம் ஓட்டுக்களை வாங்கினேன்.

ஆரம்பகாலத்தில் அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். அப்போது ஊருக்குள் கள்ளச்சாராயம் பெருகியிருந்தது. போலீஸார் கண்டுகொள்ளாததால் எனக்கும், போலீஸாருக்கும் இடையில் பலமுறை சண்டை வரும். அவர்களும் என்னைப் பழிதீர்க்க நேரம் பார்த்திருந்தார்கள். அப்போது (2000-ம் ஆண்டு) அதிராம்பட்டினத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அதில் நான்தான் முக்கியக் குற்றவாளி எனக் கைது செய்தார்கள். கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். ஜாமீனில் வெளிவந்ததும் சென்னை மண்ணடிக்குக் குடிபெயர்ந்தேன்.

சமயம் சார்ந்து உள்ள மரபுகள் பற்றியும், தமிழ் மரபை இன்னொரு மரபு ஆயிரம் ஆண்டுகாலமாக எப்படியெல்லாம் அடிமைப்பட வைத்திருக்கிறது என்பது பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் மேடைகளில் பேசி வருவது தான் எனக்கு முக்கிய வேலை. கடந்த 2002-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட் டர்களை போலீஸார் கண்டெடுத்தனர். இதை நான்தான் மறைத்து வைத்திருந்ததாக என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதுதான், அந்தக் கொடுமை நடந்தது. மும்பை காட்கோபர் பகுதியில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து இரண்டு பேர் பலியானார்கள். அதில் நான்தான் கைப்பைக்குள் குண்டு வைத்து, வெடிக்க வைத்ததாக மும்பை போலீஸார் விசாரணைக்காக என்னைக் கொண்டு சென்றனர். சொல்லப்போனால் போலீஸார் என்னை 26.11.02-ம் தேதியன்று கைது செய்தனர். 29-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியும் போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பி வைத்தார். இதைப் பற்றி பத்திரிகைகளிலும், உங்கள் குமுதம் ரிப்போர்ட்டரிலும் என்னைப் பற்றி செய்தி வெளியானது.

மும்பையில் குண்டு வெடித்தது டிசம்பர் 2-ம் தேதி. போலீஸாரின் கஸ்டடியில் இருந்த நான், எப்படி மும்பை போய் குண்டு வைக்க முடியும்?. நான் முஸ்லிம் என்பதற்காகவே தீவிரவாதியாக சித்திரிக் கப்பட்டேன். மராட்டிய போலீஸார் என்னை சித்திரவதை செய்தனர். என்னைப் போலவே இருபத்தைந்து அப்பாவிகள் சிறையில் இருந்தனர். மும்பை வழக்கில் என் மீது பொடா சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டனர். மும்பை தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். தமிழக போலீஸாரின் கஸ்டடியில் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபித்ததால் `நான் குற்றவாளி அல்ல' என விடுதலையாகிவிட்டேன். அதிராம்பட்டினம் டிரைவர் கொலையில் இருந்தும் விடுதலையாகிவிட்டேன். டெட்டனேட்டர் பதுக்கியிருந்ததாக போலீஸார் தொடுத்த வழக்கில் சிறையில் நீண்ட காலம் இருந்ததால், நீதிபதி பெயில் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதன்பிறகு தமிழ்நாடு உளவுத்துறையும், மத்திய உளவு அமைப்புகளான ஐ.பி.யும் என்னைச் சுற்றியே வருவார்கள். நானும் அவர்களிடம் சகோதர பாசத்துடன்தான் பழகி வந்தேன். கடலூர் மத்திய சிறையில் இருக்கும் போதே, பழ.நெடுமாறன் உள்பட பல முக்கியமான மனிதர்கள், மனித உரிமை ஆர்வலர்களிடம் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இதைப் பார்த்த உளவுப் பிரிவு போலீஸார், `அவர்களோடு உங்களுக்கு என்ன தொடர்பு? தடை செய்யப்பட்ட அமைப்புகளைப் பற்றி எங்களுக்குத் தகவல் சொல்லுங்கள்?' என்று நிர்ப்பந்தித்தனர். நானோ, `என்னால் மாமா வேலை பார்க்க முடியாது' என முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டேன். இதில் என் மீது போலீஸாருக்கு ஏக கோபம்.

தமிழ் மரபு சார்ந்து கூட்டங்களில் பேசும்போதெல்லாம், உளவுப் பிரிவு போலீஸார், `நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். மற்ற சமயத்தவர்கள் பற்றிப் பேசுவது மிகவும் ஆபத்தானது' என்றெல்லாம் சொல்வார்கள். நான் ஒருமுறை சவூதிக்குப் போய் வந்தேன். அங்கு வெளிநாட்டு பிரஜை என்பதற்கான அடையாள அட்டை யை நான் ரினீவல் (புதுப்பிப்பு) செய்யவில்லை. உடனே என்னை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். நான் சவூதிக்குப் போய் வந்ததைத் தெரிந்து கொண்ட ஐ.பி. போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். `நீ அல்கொய்தா, லஸ்கர் - இ - தொய்பா அமைப்புகளின் தொடர்புகளை மேம்படுத்திக் கொள். அவர்களின் செயல் பாடுகளை எங்களுக்குச் சொன்னால் வேண்டிய பணம் தருவோம். உன் குடும்பத்திற்கும் உதவி செய்வோம். உன்னால் எளிதாக தொடர்புகளை ஏற்படுத்த முடியும்' என்றனர். நான், `அப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் போலீஸ், தீவிரவாதிகள் என ரெண்டு பக்கமும் எனக்கு ஆபத்து உள்ளது. என்னால் முடியாது' என்று சொல்லிவிட்டேன்.

இதன்பிறகு நான் `லஸ்கர் - இ - தொய்பா' தீவிரவாதி என்பதைப் போலவே போலீஸார் பிரசாரம் செய்தார்கள். நரேந்திர மோடி சென்னை வந்தபோது `முன்னெச்சரிக்கை நடவடிக்கை' என்று சொல்லி என்னைக் கைது செய்து, பதினெட்டு நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த நேரத்தில் தான் என்னைச் சுற்றி போலீஸார் வளையம் போட ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிறன்று (4-ம் தேதி) மண்ணடி அங்கப்பநாயக்கர் தெருவில் பள்ளிவாசல் தொழுகை முடித்துவிட்டு ஓட்டலில் நண்பர்களோடு டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எஸ்.ஐ.யூ (ஸ்பெஷல் இன் வெஸ்டிகேஷன் யூனிட்) போலீஸ் எஸ்.ஐ. அசோக் என்னை மறைந்திருந்து நோட்டம் விட்டார். எனது நண்பர்களும், `அவர் நீண்ட நேரமாகவே உங்களை வாட்ச் செய்கிறார்' என்றனர். நான் அசோக்கின் செல்போன் எண்ணை வாங்கி அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் போனை எடுக்கவில்லை. உடனே, உளவுப் பிரிவு போலீஸாருக்குப் போன் செய்து விசாரித்தேன். அவர்களும் மழுப்பிவிட்டனர். அந்தப் பகுதியில் மஃப்டியில் பல போலீஸார் நின்று கொண்டிருந்தனர். ஏதோ நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து தப்பி, நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர்.

கடந்த 11-ம் தேதி எனது நண்பர் ரிட்டயர்டு எஸ்.பி ஜேம்ஸ்ராஜ் வசிக்கும் சூளைமேடு வீட்டிற்குப் போன கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சுதர்சன், என்னைத் தேடி வந்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், தன்னை சூளைமேடு ஸ்டேஷன் ஏட்டு என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். விசாரிக்கும்போதுதான் உண்மை நிலவரம் தெரிந்துள்ளது.

`இறைவனால் உருவாக்கப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றிப் பறிக்காதீர்கள்' என்று குரான் சொல்கிறது. ஆனால், என் உயிரைப் பறிக்க போலீஸார் அலைந்து கொண்டிருக்கின்றனர். எனக்கும், இஸ்லாத்தின் மார்க்க அறிஞர்களுக்கும் இடைவெளி இருக்கிறது. அதனால் தவ்ஹீத் துகள், த.மு.மு.க என யாருமே எனக்காகக் குரல் கொடுக்க வர மாட்டார்கள். அதுதான் போலீஸாருக்கு கூடுதல் தைரியத்தைக் கொடுத் திருக்கிறது. இறைவன் கருணையால்தான் நான் உயிர் தப்பியிருக்கிறேன். என் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளும் புனையப்பட்டவைதான். எதிலும் எனக்குச் சம்பந்தம் கிடையாது. நாங்கள் இறைப்பணியையும், மக்கள் பணியையும் மட்டும்தான் செய்து வருகிறோம். இதற்காக எங்கு குண்டு வெடித்தாலும் தவ்ஃபீக்தான் காரணம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?. நான் அல்கொய்தாவும் இல்லை. லஸ்கர் - இ - தொய்பாவும் இல்லை. என்னைப் படுகொலை செய்ய போலீஸார் செய்யும் சூழ்ச்சியை மாநிலம் முழுவதும் கூட்டம் போட்டு எங்கள் அமைப்பினர் அம்பலப்படுத்துவார்கள். அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம்'' என்றதோடு முடித்துக் கொண்டார் தவ்ஃபீக்.

ஆனால், கியூ பிரிவு போலீஸாரோ, " என்னைக் கொல்ல முயற்சிக் கிறார்கள் என்று தவ்ஃபீக் சொல்வது வீண் விளம்பரம்தான். அப்படியொரு எண்ணமே போலீஸாருக்குக் கிடையாது. கேரளாவில் உள்ள வழக்குகளில் அவர் மீது பிடிவாரண்ட் போடப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் ரிட்டயர்டு எஸ்.பி வீட்டில் தவ்ஃபீக்கைத் தேடி போலீஸார் சென்றுள்ளனர். காரணம், அவர் வீட்டில்தான் வாடகைக்கு அலுவலகம் எடுத்துச் செயல்பட்டு வந்தார் தவ்ஃபீக். `இறைவன் ஒருவனே' அமைப்பினர் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் உள்பட மூன்று பேரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்திருந்தனர். அவர் தவறே செய்யவில்லையென்றால் எதற்காக ஓடி ஒளிய வேண்டும்? போலீஸார் மீது அவதூறு பிரசாரத்தைக் கிளப்பு வதுதான் அவரது வாடிக்கை'' என்கின்றனர். ஸீ


http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php

"எனக்கு சட்டம் தெரியாதுப்பா"

ரொம்ப நாளைக்கப்புறம் நெட்டுப் பக்கம் வந்திருக்கேன். என்னாடா கொஞ்ச நாளா 'ஊர்சுத்தி உமரை'க் கண்மாசியாக் காணலேயே, சாதாரணமா 40 நாள் கேப் இருந்தால் சில்லா ஜமாத்துல போயிருக்கேன்னு நினைத்திருக்கலாம். அதுக்கும் மேல 3-4 மாசமா மனுசன் நெட்டுல ஊர் செய்தியே தரலியே, ஜப்பான்/அமெரிக்கா/லண்டன்னு எங்காச்சும் பறந்துட்டேனோ என்றெல்லாம் என்னைப் பற்றி பேசிக்கொண்டதாக செக்கடிமேடு செய்யது சொன்னார்.

ஃபுட்பால் மேட்சுல பந்து உதைபடுற மாதிரி நம்ம் ஊருப் பேரு எல்லா செய்தியிலும் உதைபடுது. நிலைமை ரொம்ப மோசமா இருக்குன்னு ஒரே வரில சொல்லிட்டு போயிடலாம். என்னத்தப் பொழம்பி என்னா ஆகப் போவுதுமா? நானும் பல விசயத்தை எழுதியிருக்கிறேன். நம்ம மக்களும் படிச்சிட்டு போனதோட சரி. இதுக்காமா வேல மெனக்கெட்டு எழுதுறோம்?

இண்டர்நெட்டு வந்தப்பின்னாடி நியூஸ் பேப்பர நெட்டுலதான் படிக்கிறேன். இன்னும் சிலவருடங்களில் பிரிண்டட் பேப்பர்களுக்கு மவுசு இருக்காது. அப்புறம் ஜாவியாலுக்கு நார்ஸா வாங்க பேப்பர் தேடுறது ரொம்பக் கஷ்டமாகி விடும். ரெண்டு மூனு நாளா ஒரே பரபரப்பான செய்திதான். தினத்தந்தி, தினகரன், தினமலர் மற்றும் எல்லா செய்திகளிலும் அதிராம்பட்டினம் பெயர் அடிபடுகிறது. கொஞ்சம் விலாவாரியா இதுபத்தி பேசுவோம்.

இந்துத் தலைவர்களைக் கொல்லச்ச் சதித்திட்டம் தீட்டியதாக போலீஸார் சந்தேகத்தின் பேருல சில இளைஞர்களைக் கைது செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்று போலீசாரால் மட்டுமே சொல்லப்படுபவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் "இறைவன் ஒருவனே" இயக்கத்தின் தலைவரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள செய்திகளைப் படித்ததும் சொலக்குன்னு போட்டுச்சு!

பேப்பர்ல படிச்சதும்தான் இப்படி ஒரு இயக்கம் இருப்பதும், அதன் தலைவர் அதிராம்பட்டினம் தவுபீக் என்றும் தெரிந்தது. சாதாரணமாக தீவிரவாத இயக்கத்தின் பேர்கள் பாதுகாப்புப் படை, மீட்புப்படை, முன்னணி என்றுதான் இருக்கும்! முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொல்வதற்காக "அல்" என்று முன்னால் சேர்த்துக் கொள்வார்கள்! அதென்ன "இறைவன் ஒருவனே" என்று இருக்கிறதேன்னு இயக்கத்தின் பேரைப்பார்த்ததும் சிரிப்புத்தான் வருது.

"இறைவன் ஒருவனே" என்பது கோடிக்கணக்கான உலக முஸ்லிம்களின் நம்பிக்கை. இதில் உலக முஸ்லிம்கள் அனைவரும் உறுப்பினர்கள். இதன் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். பத்திரிக்கைகள் இப்பெயரை தீவிரவாதத்துடன் சேர்த்து பரபரப்பாக எழுதுறாங்க.அவங்களுக்கென்ன சம்பந்தப்படவர்கள் மறுக்கும்வரை எதையும் பரபரப்பாக எழுதுவார்கள்.

பத்திரிக்கைக்காரங்க குற்றவாளின்னு ஒருவரை தீர்மானித்து விட்டுத்தான் வாழ்க்கை வரலாற்றையே எழுதுவார்கள். குற்றவாளி இல்லை என்று நீதி மன்றம் விடுவித்தால் பெட்டிச்செய்தியில் போட்டுவிட்டு தங்கள் கடமை முடிந்தது என்று போய்விடுவார்கள்.

தினநாளிதழ் காரர்களுக்கு இன்னும் சவுதிக்கும் துபாய்க்குமே வித்தியாசம் தெரியவில்லை. சவூதியில் இந்தியருக்குத் தலைவெட்டு என்றால் "துபாய் நாட்டில்.."என்று தொடங்குவார்கள். எனக்கே பலதடவை துபாய் சவுதிலதான் இருக்குதோன்னு சந்தேகம் வந்திருக்கு.

போன வருசம் சென்னை மவுண்ட்ரோடுல உள்ள ஸ்பென்சர் ப்ளாசாவில் தீ விபத்து நடந்தபோது, ஆசியாவிலேயே மிகப்பெரிய வணிக வளாகம் என்று எழுதியிருந்ததிலிருந்து இவங்களின் பொதுபுத்தியின் இலட்சனம் விளங்கியது. இத்தகைய உலகமகா அறிவுஜீவிகள்தான் அன்றாட தலைப்புச் செய்திகளை தீர்மானிக்கிறார்கள். சரி விசயத்துக்கு வருவோம்.

நம் நாட்டுச்சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு சிறையிடலடிக்கப்பட்டவர் ஜாமினில் வந்து தன்மீதான வழக்குகளை எதிர்கொண்டு தன்னை நிரபராதி என்று நிரூபிக்க ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உரிமையுண்டு. அவ்வாறு ஜாமினில் வெளிவந்து வழக்குகளை முறையாக எதிர் கொண்டு வரும் ஒருவர் மீது புதிய புதிய குற்றச்சாட்டு சுமத்தி தங்கள் கஸ்டடியில் கொண்டவர போலீஸார் முயல்வதும், சக்தியுள்ளவர்கள் டேக்கா கொடுத்து வருவதும் சம்பிரதாயமான ஒன்றுதான்.

ஜாமின் கொடுக்கும் முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்றத்துக்கு நம்பிக்கை இல்லையென்றாலோ அல்லது சட்டம்-ஒழுங்கு சீர்கெடும், சாட்சிகள் மிரட்டப்படக்கூடும் என்று நீதிமன்றம் கருதினாலோ மட்டுமே வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யவும், தலைமறைவானால் பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் வழியுள்ளது.

ஜாமினில் வந்து தன்மீதான பழைய வழக்குகளை நடத்தவே கஷ்டப்பட்டு வருபவர், என்கவுண்டர் ஆணை பிறப்பிக்குமளவுக்கு தீவிர குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பாரா என்பது சந்தேகமே. . அப்படி ஏதேனும் சதித்திட்டம் தீட்டி இருந்தால், அதற்கான தண்டனையை நீதி மன்றம் மூலம் பெறத்தான் வேண்டும். அல்லாஹ்தான் அறிவான். என்கவுண்டரெல்லாம் டூ மச்!

தன்மீது குற்றம் சுமத்தி,சிறையிலடைத்தவர்களின் சதியை அம்பலப்படுத்தி, தனக்கு இழைக்கப்பட்ட உரிமை மீறலை நீதிமன்றத்தில் முறையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்ட முன்மாதிரிகளும் நடந்துள்ளன.

சந்தேகத்தின் பேரில் தேடப்படும் ஒருவரைக் கண்டதும் சுட்டு பிடிக்கும் அளவுக்கு நமது தமிழகக் காவல்துறையினர் ஒன்றும் கையாளாகதவர்கள் அல்ல! பெரும்பாலான என்கவுண்டர் கொலைகளில், குற்றம் சுமத்தப் பட்டவரைச் சுட்டுக் கொல்வதே நடந்துள்ளது. முஸ்லிம்கள் விசயத்தில் இத்தகைய 99%என்கவுண்டர்கள் பாரபட்சமாகவே நடந்தேறியுள்ளதை நியாயமுள்ள ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளதையும் சொல்லி ஆகனும்.

சந்தேக வளையத்தில் எதிரியாகக் கருதும் எவரையும் கொண்டு வந்து, அவர் குறித்த பிம்பத்தைப் பூதாகரப்படுத்தி இறுதியில் போலீசாரைத் தாக்கி விட்டு தப்பி ஓடும்போது, தற்காப்புக்காகச் சுட்டதில் இறந்து விட்டார் என்று ஃபைலை மூடுவதும் வாடிக்கையான ஒன்று. திரைப்படங்களில் இதை நம்ம ஹீரோக்கள் பெருமையாகச் சொல்வதையும் கண்டுள்ளோம்.

இருபது வருசத்துக்கு முன்னாடி கலவரத்தை அடக்குகிறேன் என்று வந்த காவலர்களால் அப்பாவி சிறுவன் நூருல் ஹசன் ஷஹீதான அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை. இந்த நேரத்தில் கண்டதும் சுட உத்தரவு என்று படித்ததும் கையும் ஓடலே காலும் ஓடலே. பேப்பர் செய்திகளில் "கண்டதும் சுட உத்தரவு" என்று வாசித்ததும் அதிரை மக்களிடம் தற்போதுள்ள கேள்விகள் இதுதான்.

முந்தாநேத்து செடியங்குளத்தில் குளிக்கச் சென்றபோது கீழத்தெரு காதர் வேறு சில சந்தேகங்களைக் கேட்டார். நமக்கு சட்டம்பற்றி அவ்வளவுக்குத் தெரியாதுமா. வேணும்னா நம்மூரு புள்ளைங்ககிட்ட கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டு, குறிப்பெடுத்துக் கொண்டு வந்துட்டேன். அவை நியாயமான கேள்விகளான்னு பாருங்க.

1) சந்தேகப்பட்டு பிடிபட்டவர்களின் வாக்குமூலங்கள் மட்டுமே ஒருவரை என்கவுண்டர் செய்யப் போதுமான ஆதரமாக முடியுமா? என்கவுண்டர்தான் கடைசி தீர்வு என்றால் நீதிமன்றங்களில் எதற்கு வழக்குகளை ஆண்டுக் கணக்கில் இழுத்தடித்து அரசின் நிதியை வீணாக்கணுமா காக்கா?

2) இந்துத்தலைவர்களைக் கொல்லச் சதி என்று ராம.கோபாலன் பெயரைக் குறிப்பிட்டு தினமலரில் எழுதியுள்ளார்கள். எல்லா இந்துக்களுக்கும் ராம.கோபாலன் தலைவர் என்பதுபோல் படத்துடன் போட்டிருப்பதிலிருந்து செய்தியாசிரியரின் இனப்பற்றும் நேர்மையும் பல்லிளிக்குது.

3) ராம.கோபாலனுக்கு எதிராக இந்து மதத்துக்குள்ளேயே வேறு தீவிரவாத அமைப்பும், பெரியாரை அடிக்கடி அவமதிப்பதால் பெரியார் விரும்பிகளும், சேதுக்கால்வாய் திட்டத்தை எதிர்ப்பதால் ஆளும் கட்சியிலும்கூட எதிரிகள் இருக்கலாமே! அதெப்படி காக்கா முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டால் மட்டும் அவர்கள் இந்து மதத் தலைவர்களையும், கோவில்களையும் தாக்கத் திட்டமிட்டார்கள் என்று பொசுக்குண்டு எழுதுறாங்க?

4) பிடிபடும் தீவிரவாதிகளிடம் பயங்கர ஆயுதங்களாக சிடி,டைரி,மொபைல் போன் போன்றவற்றையே ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இவையெல்லாம் பயங்கர ஆயுதங்களா காக்கா?

5) பயங்கரச் சதித்திட்டம் தீட்டியுள்ளவர்கள், தாக்குதல் நடத்துவது பற்றி டைரியிலும்,சீடியிலும் எழுதி வைத்துக்கொண்டா அலைவார்கள்? எல்லாத் தேடுதல் வேட்டைக்கும் இதையே எல்லா போலீசும் சொல்லி வருவது நம்பும்படியாக இல்லையே காக்கா?

6) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களைப் பிடிக்க முகாமிட்டுள்ள காவல் துறை அதிகாரிகளும், உளவுத்துறையினரும் மாறுவேடத்தில் ஊருக்குள் சுற்றி வருவதும், அப்பாவிகளைச் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும், உள்ளூர் மக்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்காதா? குடிமக்களின் உரிமையையும் அமைதியையும் பாதுகாப்பதும் போலீசின் கடமைதானே?

7) வணக்கத்திற்குறிய இறைவன் ஒருவனே என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. அதை நம்புவதற்கு நமது அரசியல் சட்டமும், ஐக்கிய நாடுகள் சபைப் பிரகடனமும் அனுமதிக்கிறது. தீவிரவாதிகளுடன் இந்நம்பிக்கையை தொடர்புபடுத்துவது அந்த இறைநம்பிக்கையாளர்களைப் புண்படுத்தாதா?

8) தீவிரவாதிகளின் புகைப்படங்கள் என்று கற்பனையாக வரைந்த சில படங்களை வெளியிட்டு, அதனையொத்த முகச்சாயல் கொண்டவர்களை சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்து விசாரிப்பது நியாயமான அணுகு முறையா? நேத்து பாருங்க ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக் குற்றவாளிகள் போட்டோவெல்லாம் தவறாம். போலீஸார் வெளியிட்ட படங்களை வாபஸ் வாங்கிட்டாங்க!

9) குற்றஞ்சாட்டப்பட்டவரின் வயதை தினமலர் முப்பது என்றும், தினகரன் நாற்பது என்றும் குறிப்பிடுள்ளது. வயது விசயத்திலேயே தெளிவில்லாத இவர்கள் தரும் செய்திகள் எப்படி நம்பத் தகுந்தவையாக இருக்கும்? இது குற்றம் சாட்டப்பட்டவரைப் பற்றிய முக்கியமான அடையாளம் அல்லவா?

இப்படிப் பலகேள்விகள் கேட்டார். முக்கியமாக எனக்கு பதில் தெரியாதை மட்டும் குறிப்பெடுத்துக் கொண்டு இங்கு எழுதியிருக்கிறேன். தெரிந்தவர்கள் பதில் சொன்னாக்கா நல்லது. மனுசனுக்கு என் மொபைல் நம்பர்வேற தெரிஞ்சிடிச்சு. ஒரே மிஸ்டுகாலா போட்டுத்தள்ளுரார். என்னைப் பார்க்கும் போதெல்லாம் என்னா உமராக்கா எதாச்சும் பதில் கிடைச்சுச்சான்னு கேட்டு நச்சரிக்கிறார்.

நேத்து நடுத்தெருல ஒரு கல்யாண விருந்துல பக்கத்து சஹன்ல வந்து உட்கார்ந்து கொண்டு கேட்டார். சஹனுக்கு விரிக்க வைத்திருந்த இங்லீஸ் பேப்பரை சீரியசாப் படிக்கிற மாதிரி நைசா நழுவிட்டேன். கல்யான சீசன் கலை கட்டியிருக்குது. மத்த மத்த விருந்துகளுக்கும் காதர் வந்துட்டா நம்ம பாடு திண்டாட்டம்தான். பேசாம பொதுவாழ்விலிருந்து விலகி பழையபடி சுண்டல் விற்கப்போயிடலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கிறேன்.

நூறு குற்றவாளிகள் தப்பிவிட்டாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்ற காந்தியின் தத்துவம் இந்திய முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என்பதை மட்டுமே இப்போதைக்கு என்னாலச் சொல்ல முடியும்.

அல்லாதான் எல்லாப் பிரச்சினையையும் லேசாக்கி, ஆலத்து மக்களையும் காப்பாத்தி, நம்ம மக்களையும் காப்பாத்தனும்.

இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் தாய்மதம்! வாழ்க பாரதம்!!

என்றென்றும் முஸ்லிம் இந்தியனாக,

WWW.ஊர்சுத்தி.உமர்

ஆலிமிற்கு பார்ட்டியா?

அநாச்சாரங்கள் நிறைந்து காணப்படும் இக்கால கட்டத்தில் சத்தியத்தை உள்ளது உள்ளபடி எடுத்துச்சொல்லும் மார்க்க விற்பன்னர்களுக்கு பலவகையில் துன்பங்கள் வந்துகொண்டே இருக்கும் என்பது நாமறிந்ததே.

இந்த வகையில் நமதூரில் மதிப்பிற்குரிய அப்துல்காதர் ஆலிம் அவர்களால் நமதூருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட மதிப்பிற்குரிய ஆலிம் ஹைதர் அலி அவர்கள் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் பித்னாக்களை சாடி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதில் முக்கியமாக பெண்கிடத்தில் அவர்களது சொற்பொழிவுகள் சென்றடைகின்றன.

அத்துடன் ஆலிம் அவர்கள் நமதூர் தனியார் பள்ளி ஒன்றில் மாணாக்கர்களுக்கு மார்க்க வகுப்புகளில் பாடம் எடுத்து வருகிறார்கள்.

நமதூரில் ஒன்றிரண்டு திருமணங்களில் கலந்து கொண்ட ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மணமகன் ஒருவருக்கு தாய்மொழியாம் தமிழில் நிக்காஹ் செய்து வைத்திருக்கிறார்கள். இதுகாறும் தம்முடைய வயித்துப்பிழைப்பாக இருந்து வந்த லெவைத்தொழிலுக்கு பங்கம் வருவதை அறிந்து கொதிப்படைந்த சில லெவைமார்கள் ஹஜ்ரத் நைனா அவர்களுடைய தூண்டுதலின் பேரில் அப்துல்லா ஹஜ்ரத் அவர்களின் கீழ் கூடி நமதூர் ரஹ்மானியா மதரஸாவின் தலைமை ஆசிரியர் ஆலிம் முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்களிடம் முறையிட்டிருக்கின்றனர்.

மதராஸாவில் வைத்து 'நீங்கள் வெளியூர்காரர் உள்ளூர் விசயத்தில் தலையிடக்கூடாது, நிக்காஹ் அரபியிலல்லாமல் தமிழில் சொல்லுவது கூடாது என்றதோடல்லாமல்

சுற்றியிருந்த லெவைமார்கள் நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவேண்டும் என்றும் முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்களின் முன்னிலையில் சொல்ல 'அரபியல்லாத மொழிகளில் திருமணம் செய்து வைப்பது பற்றி தடையிருப்பதாக குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரம் காண்பிக்க முடியுமா, அல்லது புகழ்பெற்ற நமதூர் மதரஸாவின் தலைமைப்பொறுப்பிலிருக்கும் முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள் அது தொடர்பாக பத்வா வழங்கயியலுமா?' என்று ஹைதர் அலி ஆலிம் அவர்கள் வினவியிருக்கிறார்கள்.

'நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவேண்டும் ' என்று லெவைமார்கள் அதிரையின் கார்ப்பரேட் முதலாளிபோன்ற தொனியில் பேசியதை 'ஒன்று குர்ஆனில் இருக்கவேண்டும், அல்லது ஹதீஸில் இருக்கவேண்டும் அல்லது நீங்கள் சொல்வதை கேட்பதற்கு நீங்கள் நபியாக இருக்கவேண்டும்? என்று கூறியதைவைத்துக்கொண்டு, ஒருவரை பார்த்து நபியென்று சொல்லிவிட்டார் என்று எப்பொழுதும் போல் இட்டுக்கட்டி மேற்கண்ட தனியார் பள்ளிக்கும் தொலைபேசியில் சொல்லியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே வட்டி விசயத்தில் சிறிய வட்டியானாலும் பெரிய வட்டியானாலும் வட்டி வட்டிதான் என்றும், கோ எஜுகேஷன் முறையை மறுபடியும் கொண்டுவருவதற்கும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தான் வேலை செய்யும் பள்ளியில் மார்க்க அடிப்படையில் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் மேற்கண்ட லெவைமார்களின் தொலைபேசி மிரட்டலுக்கு பள்ளி நிர்வாகம் பயந்து உடனடியாக பள்ளியிலிருந்து நீக்கி 'உங்கள் சேவை இனி எங்களுக்குத் தேவையில்லை' என்று கடிதம் கொடுத்திருக்கிறது.

அவர்களை நமதூர் பள்ளி ஒன்றிலிருந்து நீக்கியது தொடர்பாக ஏற்கெனவே எக்ஸ்பிரஸில் நமதூர்காரர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தோம்.


பள்ளி நிர்வாகத்திடம் நமதூர் இளைஞர்கள் சென்று மறுபரிசீலனை செய்ய வேண்டி சந்திக்கச்சென்றிருந்தனர். பள்ளியின் டைரக்டர் செய்யது முஹம்மது நசீர் அவர்களிடம் இதுபற்றி விசாரித்த நமதூர் இளைஞர்கள் ' திடுதிப்பென்று நீக்கிவிட்டீர்களே' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் 'அப்படியானால் அவருக்கு டீபார்ட்டி கொடுத்து வெளியே அனுப்பலாமா' என்று ்திமிர்த்தனமாக ஊரே மதிக்கும் ஒரு மார்க்க அறிஞரை உதாசீனம் செய்து சொல்லியிருக்கிறார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நமதூர் இளைஞர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிவருகிறார்கள்.

மார்க்க கல்வியுடன் உலகக்கல்வியும் மிகச்சிறப்பாக இதுநாள் வரை வழங்கி வந்த இப்பள்ளி, மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு தரும் மரியாதை கவலையளிப்பதாக உள்ளது.

Tuesday, May 20, 2008

கல்யாணமாம் கல்யாணம்...

முன்பெல்லாம் ரமளான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு (அதென்ன ஆறு நோன்பு அய்யாறு நோன்பு?) முடிந்தபின் அதிரை களைகட்டும். பெரும்பாலும் வளைகுடாவில் பணிபுரிந்து பணம் ஈட்டிய அதிரைவாசிகள் நோன்புப் பெருநாளைக்கு ஊர் வருவது மட்டுமின்றி, அவர்களின் வருகையையொட்டி ஆங்காங்கே நடைபெற்ற திருமணங்கள்தான் இவற்றிற்குக் காரணம். ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றதுண்டு.

இந்தியா உலகமயமாக்கலைத் தேர்ந்தெடுத்தபின் அதிரைவாசிகளின் வாழ்க்கையிலும் எண்ணற்ற மாற்றங்கள். பொருளீட்டுவதற்கு வளைகுடாவை மட்டுமே நம்பியிருந்த நம்மவர்கள் மேலை நாடுகளை நாட ஆரம்பித்தனர். பத்தாம் வகுப்பு தவறினால் அல்லது பன்னிரண்டாம் வகுப்பு தேறினால் கடவுச்சீட்டுக்குக்காக காத்திருந்தவர்கள் இப்போது கல்லூரிகளின் அட்மிஷனுக்காகவும் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். மேற்படிப்பு படிப்பதற்குத் தோதுவாக தங்கள் குழந்தைகளின் கல்வித்தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மழலையர் வகுப்பு முதலே சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர். குழந்தைகளின் கல்விக்காகவே அதிரையை விட்டு சென்னை போன்ற நகரங்களில் குடியேறுகின்றனர். (கல்விக்கு நம் மக்கள் அளிக்கும் முக்கியத்துவம் மகிழ்வளிக்கிறது.)

பொதுவாக கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறை என்பதால் சென்னை வெப்பத்திலிருந்து தப்பிக்க அதிரை வருகின்றனர். அதிரைவாசிகள் பெரும்பான்மையோர் ஊரில் இருப்பார்கள் என்பதால் நோன்புப் பெருநாளுக்குப் பிறகு நடைபெற்று வந்த திருமணங்கள் இப்போது ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகின்றன. ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், இரண்டு மூன்று வேளை விருந்து என அதிரை அக்னி வெயிலிலும் களை கட்டியிருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரவு வேளைகளில் மட்டுமே நடைபெற்று வந்த திருமணங்கள் காலை, அஸருக்குப்பின், மக்ரிபுக்குப் பின், இஷாவுக்குப் பின் என்று பல நேரங்களில் நடைபெறுவதால் கல்யாண வரவேற்புக்குச் செல்பவர்களும் நடைபயிற்சி செய்வது போல் வரவேற்புகளில் கலந்து கொள்கின்றனர். முன்பு காணப்பட்ட குதிரை சவாரி, பேண்டு வாத்தியங்கள், பைத்து சபா, கக்கிலி வட்டம் போன்றவை (ஒருசில பகுதிகளில் நடைபெற்றாலும்) பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதிகமான திருமணங்கள் பள்ளிகளிலேயே நடைபெறுகின்றன. தேவையற்ற பல வழக்கங்கள் குறைந்துவிட்டது மகிழ்ச்சியே.

எல்லாம் சரி, வரதட்சணை?

ஆக்கம்: அபூசுஹைமா

தலைப்புச் செய்திகளில் அதிராம்பட்டினம்.

சமீப நாட்களாக நமதூர் அதிராம்பட்டினம் குறித்த பயங்கரச் செய்திகள் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக வலம் வருகின்றன. பத்திரிக்கைகள் தங்கள் யூகங்களைக் கற்பனை கலந்துச் செய்திகளாக்கி மக்களிடம் பீதியைக் கிளப்பி தங்கள் விற்பனையை அதிகரித்துக் கொள்கிறார்கள். இத்தகைய பொறுப்பற்ற தன்மை சிறுபான்மையினர் குறித்த செய்திகளில் அதிகம் காணப்படுவது வேதனையையும் நம்பிக்கையின்மையையும் அதிகரிக்கிறது.

http://www.maalaisudar.com/newsindex.php?id=13615%20&%20section=1

http://chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7B7AB2E24C-2CCD-46C7-B54E-887D797074A4%7D&CATEGORYNAME=CHN

http://www.tamilnews.dk/article/indiannews/2252/

http://www.tamilnews.dk/article/indiannews/2251/

ஈருலகக் கல்வியாளர்கள், கணினி வல்லுனர்கள், நன்கொடையாளர்கள், செல்வச் சீமான்கள் எனப் பரவலாக பலரும் நிறைந்திருக்கும் அதிரையில் இன்று காவல்துறையினரும் உளவுத்துறையினரும் சீருடையிலும் மாறு வேடத்திலும் உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்டதும் நெஞ்சடைக்கிறது. நடைபாதை வியாபாரிகள், தெருக்கூட்டும் தொழிலாளிகள் போன்ற வேடத்தில் புதுமுகங்கள் ஆங்காங்கு காணப்படுவதால் அச்சம் வலுக்கிறது.

அரசாங்க இடஒதுக்கீட்டிற்கு முன்னரும் பின்னரும் சொந்த நாட்டில் கிடைக்காத வேலை, அயல்நாடுகளில் கிடைத்ததால் பெற்றோர்,மனைவி, பிள்ளைகளைத் துறந்து அடிமை வாழ்க்கையாக இருந்தாலும் வயிற்றுப் பிழைப்புகாக வந்திருக்கும் பலருக்கும் சமீபத்திய செய்திகள் நிம்மதி இன்மையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்தையும், தன்னைச் சார்ந்தவர்களையும் நேசிப்பது ஒரு முஸ்லிமின் கடமை. இதனை மறந்து சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ள எவருக்கும் உரிமையில்லை. இஸ்லாமிய நாடாகவே இருந்தாலும்கூட தனிமனிதன் சட்டத்தைக் கையிலெடுத்து தீர்ப்பெழுத முடியாது என்பதை, இவ்வளவு அமளிகளுக்கும் காரணமானவர்கள் உணர வேண்டும்.

உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வந்த தகவல் யுகத்தில், தயவு செய்து யூகங்களைச் செய்தியாக்காதீர்கள் பத்திரிக்கையாளர்களே! சந்தேகத்தின் பலன் குற்றவாளிக்கே என்று நியாயத்துடன் நடக்கும் நீதிமுறையைக் கொண்டுள்ள நம்நாட்டில், சந்தேகத்திற்குட்படவரெல்லாம் குற்றவாளிகளே என்று அவசரத் தீர்ப்பெழுதாதீர்கள் ஜனநாயகக் காவலர்களே!

சட்டம் தன் கடமையைச் செய்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று நம்புபவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் எங்களூரில், தீவிரவாத வேட்டை என்ற பெயரில் பதட்டத்தை அதிகரிக்காமல், பொது மக்களிடம் நம்பிக்கையை விதைத்து,பொதுக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து, காவல்துறை குறித்த ஐயத்தை பொதுமக்களிடம் நீக்கித் தெளிவு படுத்த முன்வாருங்கள் சட்டம் ஒழுங்கு காக்கும் காவலர்களேஎ!

தமிழக ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இரண்டிலும் கூட்டணி கொண்ட சமுதாய இயக்கத்தைச் சார்ந்தவர்களே, நீங்கள் அழைத்தபோதெல்லாம் கொடிபிடித்து, கூட்டம் காட்ட தங்கள் பொருள், நேரத்தைச் செலவு செய்து வந்த பலரும் உங்கள் இயக்கத்தில் நீங்கள் சொல்பவற்றை நம்பிக் கொண்டிருக்கிறோம். அரசு மற்றும் அதிகாரிகளுடன் உங்களுடைய நெருக்கத்தைப் பயன்படுத்தி சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படும் எம்மக்களின் துக்கம் தீர்க்க முயற்சி செய்யுங்கள் சமுதாயக் காவலர்களே!

அன்புடனும் எதிர்பார்ப்புடனும்,

அப்பாவி அதிரைவாசி

Monday, May 19, 2008

INDEPENDANT PLAY GROUND FOR OUR YOUTH IN ADIRAI


Assalamu alaikkum. This is the right time to awake our brothers of all walks of life to think about a play ground.

Our society, It is developing amazingly. In every developed countries it is a must to introduce some parks for younger kids and grown up kids when promoting a new housing area for community. The area is added with pre-school, kinder garten, community hall, clinic and prayer place. And also play grounds for adults and game courts like tennis, volley ball and basket ball.

Our good hearted land lords are good to provide a place only for masjid. It is becuase then only the local community will come rushing to buy housing plots with a tendency of having plots close to the masjid. What if land lords have a soft corner in their hearts to provide some places for little kids to play at least.

When the plots for houses are drawn prior to sale, the land lord posseses an artistical skill not to waste even an inch of land. After purchasing mindlessly, the locality become an open jail. Shrinked lanes with curves and turns in every 30 mtrs. Sometimes the curves takes a 90 degree arc and you will be encountered with a mad dog snarling or cows with big horns the children and women turn back running and screaming because the big animals like cows can not turn back in the small trench like lanes. After crossing these all hardships, you (new to our area) will stand and stare all of a sudden, yes becuase it will be an dead end. You have to search for a small gape to slip in through to a main street. Let us have a wish to have a well planned urban township in future.

The Kirani play ground is the only place for 100 to 200 youths to play within 1 mile radius from CHEKKADI MODU. If Kirani family permits kind heartedly, we can proceed to talk about purchasing the whole play ground with the help of Adirai NRI's and local people. Trusting that Kirani family will hand over the land not for cheap but for reasonable and buyable price for benefiting our community for 100s years to come if Allah wills 1000s of years to come. And if possible, will avail to have some moneytary aid from political parties through some influenced persons. Local youths must have consensus on this.

GATHER AND COMMUNICATE TO UNDERSTAND THINGS Insha Allah.


Jazakallahu khairan
S. Mohamed Thameem

Friday, May 16, 2008

AFFA - வின் கால்பந்து தொடர்ப்போட்டி 8-ம் நால் செய்திகள்.


(16-05-08) இன்று நடைப்பெற்ற போட்டியில் ராயல் F.C அதிரை அணியும் பட்டுக்கோட்டை 7's பட்டுக்கோட்டை அணியும் மொதின. இப்போட்டியில் பட்டுக்கோட்டை அணி 6 - 0 என்ற கோல் கணக்கில் சுலபமாக வெற்றி பெற்றது.
முதல் பகுதி நேர ஆட்டத்தில் 4 கோலை அடித்த பட்டுக்கோட்டை அணி இரண்டாவது பகுதி நேர ஆட்ட முடிவில் மற்றும் 2 கோல்களை அடித்து எலிதாக வெற்றி பெற்றது. பட்டுக்கோட்டை அணியின் கனேஷ் 3 கோல்களை அடித்தார்.


AFFA நடத்தும் 5-ம் ஆண்டு கால்பந்து தொடர்ப்போட்டி 7-ம் நாள் செய்திகள்


நேற்று (15-05-08)
அதிரை கிரானி திடலில் நேற்று ஏழாம் நாளாக நடைபெற்ற கால்பந்து தொடர் போட்டியில் A.F.C ஆலத்தூர் ஃபுட்பால் கிளப் அணியினரும் சென்ற ஆண்டு இரண்டாம் பரிசு வெற்றி பெற்ற V.V.F.C மனச்சை அணியினரும் மோதினர்.

இரண்டு அணியும் பலமாக இருந்ததாள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது இவ்வாட்டம். இப்போட்டியின் முதல் பகுதி நேர ஆட்டத்தில் மூன்றாவது நிமிடத்தில் V.V.F.C மனச்சை அணி தன் முதல் கோலை அடித்தனர். அதை தொடர்ந்து பத்தாவது நிமிடத்தில் தன் இரண்டாவது கோலையும் அடித்து பலமான நிலையில் ஆடிகொண்டிருந்தது மனச்சை அணி. தன் முதலாவது கோலை ஆலத்தூர் அணி மிக சிறப்பான முறையில் அடித்தன. முதல் பகுதி நேர ஆட்டத்தின் முடிவில் மனச்சை 3 - 1 என்ற கோல் கணக்கில் முனிலையில் ஆடிமுடித்தனர்.
இரண்டாவது பகுதிநேர ஆட்டத்தில் தனது நான்காவது கோலை அடித்த மனச்சை அணி 4 - 1 என்ற கோல் கனக்கில் இவ்வாட்டத்தில் வெற்றிபெற்றனர்.
மனச்சை அணியை சேர்ந்த பில்லா( ஆடை எண் 27) 2 கோல்களை அடித்து தன் அணியைய் வெற்றிபெற செய்தார்.