Sunday, August 31, 2008

ரமழான் ஸ்பெஷல்: துபையில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி ( www.quran.gov. ae ) செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 20 ஆம தேதி வரை துபாய் அல் மம்சார் பூங்கா அருகில் அமையப்பெற்றுள்ள கலாச்சார மற்றும் அறிவியல் கழகத்தில் நடைபெற இருக்கிறது.

இப்போட்டிகள் 1997 ஆம் வருடம் துவங்கப்பட்டு 12வது வருடமாக அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களது ஆதரவில் நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க இருப்பதாக இப்போட்டிகளுக்கான ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் இப்ராஹிம் முஹம்மது பு மெல்ஹா தெரிவித்துள்ளார். முதல் முறையாக ஸ்விட்சர்லாந்து, உஸ்பெஸ்கிஸ்தான், போஸ்ட்வானா மற்றும் ஜான்சிபார் உள்ளிட்ட நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்கின்றன.

கடந்த காலங்களை விட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அல்ஜீரியாவில் இருந்து பங்கேற்கு ஒன்பது வயது மாணவர் பதேஹ் பாதி மிகவும் இளவயது போட்டியாளர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் வருடந்தோறும் பங்கேற்று வருகின்றன.

இப்போட்டியினையொட்டி சிறப்பு தொலைக்காட்சி சேனலும் துவங்கப்பட இருக்கிறது. போட்டிகள் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் உலகெங்கும் உள்ளோர் பார்க்கும் வண்ணம் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி நடத்தும் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞர் விருது, அமீரக அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி, சிறைக்கைதிகளுக்கான திருக்குர்ஆன் மனனப் பயிற்சி, இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள், திருக்குர்ஆன் அறிவியல் நிகழ்ச்சி உள்ளிட்ட பலவேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

சிறந்த இஸ்லாமிய அறிஞர் விருதுக்காக தேர்வு செய்யப்படுவருக்கு திர்ஹம் ஒரு மில்லியன் வழங்கப்படும். திருக்குர்ஆன் மனனப்போட்டியில் வெற்றி பெறும் முதல் பத்து போட்டியாளர்களுக்கு முறையே திர்ஹம் 250000, 200000, 150000,65000, 60000,55000, 50000,45000, 40000,35000 வழங்கப்படும். 

இப்போட்டிகளுக்கான நடுவர்கள் சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், நைஜீரியா, சிரியா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.

தகவல் அனுப்பியோர்: சகோ முதுவை ஹிதாயத் மற்றும் சகோ. A.J. தாஜுதீன்,ஜித்தா

ரமழான் ஸ்பெஷல்: நோன்புக் கஞ்சி சமைப்பது எப்படி?

தேவையானப் பொருட்கள்
அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை - கால் கப்
கொத்து கறி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
மல்லித் தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி (தேவைக்கேற்ப)
தேங்காய் - ஒரு மூடி
பட்டை - ஒன்று
கிராம்பு - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஊரவைத்த ஜவ்வரிசி அல்லது சேமியா - சிறிதளவு கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம் (added by adiraixpress)

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும்.

கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொத்திய கறியை போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும்.

எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும்.

அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடவும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும்.

தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். மேலே கொத்தமல்லி தழையினைத் தூவவும்.

நன்றி :arusuvai.com

சிக்கன் 65 அதிர்ச்சி ரிப்போர்ட்

ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்?

தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.

இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது :

``உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.

இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ``ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.

உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

செய்தி, படங்கள் : டி.ஜோசப்

கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும்.

நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது'' என்று எச்சரிக்கிறார்.

நன்றி - குமுதம்

வசந்த காலத்தின் வாயிற்படி நோன்பு!

வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.

இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :

நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.

வயிற்று உபாதைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்)இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல் :

இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.

மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் கொடுத்து, நோன்பை முழுமையாக நிறைவேற்றி, அதற்கான முழுமையான நற்கூலியைப் பெற்றுக் கொண்டவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்!!


நன்றி,மற்றும் டாக்டர் பற்றிய மேலும் தகவல் பெற:<
முதுவை ஹிதாயத் தகவல் பலகை.

Saturday, August 30, 2008

அதிரை எக்ஸ்பிரஸின் ரமழான் சிறப்பு பரிசுப்போட்டிக்கான அழைப்பு

இன்னும் ஓரிரு நாட்களில் புனித மிக்க ரமழான் மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது. அதனைப்போற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸின் வாசகர்கள் தங்களது கருத்தாக்கத் திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம்.
மிகச்சிறப்பான முறையில் பங்களிக்கும் நபருக்கு சிறப்புப் பரிசாக ரூ 2000/- வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் உண்டு (இன்ஷா அல்லாஹ்)


இப்புனித மிக்க ரமளான் மாதத்தில் அதிரை முஸ்லிம்களின் கலாச்சாரம் பற்றி எந்த ஒரு தலைப்பிலும் அதிரை எக்ஸ்பிரஸிற்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.

* நோன்புக்காலங்களில் அதிரை, சிறப்பிக்கப்படும் பள்ளிவாசல்கள், ஹிஜ்ப் ஓதும் நிகழ்ச்சிகள், மார்க்க சொற்பொழிவு இடங்கள் etc...
* நோன்புக்கால அதிரை புகைப்படங்கள் (பள்ளிவாசல்களில் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி, பெருநாள் தொழுகைகள், etc...)
* சிறப்புச்செய்திகள், 'பத்ரு படை'(?) கூட்டம், நார்சா விவரங்கள், உங்கள் குடும்ப குழந்தைகளின் முதல்(தல) நோன்பு செய்திகள், சிறுவயது ஹாபிழ்கள் தொழவைக்கும் நிகழ்ச்சிகள் போன்றவை.
* ரமழான் சிறப்புக் கட்டுரைகள்
* நோன்புக்கால சிறப்பு உணவுப்பதார்த்தங்கள் செய்வது எப்படி (வாடா, கஞ்சி, கடப்(ற்)பாசி போன்றவை...), சத்தான உணவுகள், ரமழான் துணுக்குகள் ...
* ரமழான் மாதத்தில் அதிரையின் இரவுப்பொழுதுகள் (கபாப் கடைகள், புதிய தேனீர் கடைகள், பக்கிரிசாவின் மேலம், வித்ருத்தொழுகை, கண்விழிக்கும் இளைஞர்கள் ...)
* நோன்புக்காலங்களில் நடக்கும் அனாச்சாரங்கள், தவிர்க்கும் வழிகள்...

நீங்கள் பார்க்கும் அதிரையை அப்படியே புகைப்படங்களாகவோ, கட்டுரைகளாகவோ, செய்திகளாகவோ அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் கலந்து கொண்ட (நோன்பை ஒட்டிய) ஒரு நிகழ்வை (இப்ஃதார் நிகழ்ச்சி...) அப்படியே உங்களது சுய வலைப்பதிவாக எண்ணிப் பதியலாம்.

உங்களது ஆக்கங்கள் அனைத்தும் அதிரை முஸ்லிம்களின கலாச்சாரத்தை பிரதிபலிப்பனவாக இருக்க வேண்டும். மேற்கண்ட வகையில் சிறப்பான முறையில் பங்களிப்பாற்றும் புதிய வாசக பங்களிப்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன(இன்ஷா அல்லாஹ்).

குறிப்பு:
1. போட்டியில் பங்குபெற உங்களது பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை adiraixpress[at]gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.
2. உங்கள் படைப்புகளை adiraixpress[at]gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்
3. கட்டுரைகள், செய்திகள் யுனிகோட் தமிழில் தட்டச்சிடப்பட்டிருக்கவேண்டும்.
4. உங்களது ஆக்கங்கள் அனைத்தும் http://adiraixpress.blogspot.com என்கிற இந்த வலைப்பதிவில் இடம்பெறும்.
5. ஏற்கெனவே பங்களிப்பாளராக உள்ளவர்களும் இந்தப்பணியைச் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.
6. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்களாகி தொடர்ந்து எழுதலாம்.

டிஸ்கிளைமர்:
மேற்சொன்னவை அதிரையில் நடந்த/நடந்துவரும் விசயங்களே. ரமழான் மாதம் அமல்கள் மூலம் நன்மைகளை அறுவடை செய்யும் மாதம். எனினும் சினிமா, வீடியோகேம், கேரம், கிளித்தட்டு, SMS என நேரத்தை வீணடிக்காமல், அதிரையின் கலாச்சாரத்தைப் பதிவு செய்து வைத்தால், அவற்றின் நல்ல/கெட்ட விசயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பாகும் என்பதே எங்களின் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

வாழ்த்துக்கள்!!!

கண்னியமிக்க தலைமைக்கு மரியாதை.

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் புடைசூழ அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி(ஸல்) அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம் வந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால்(ரலி) பாங்கு சொன்னார்கள். (அதன் பிறகும்) நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. எனவே, பிலால்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, ‘நபி(ஸல்) அவர்கள் (வேலையின் காரணத்தால் உடனே வர முடியாமல்) தாமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டது. எனவே, தாங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித் தொழுகை நடத்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘சரி, நீங்கள் விரும்பினால் தொழுகை நடத்துகிறேன்” என்று கூறினார்கள். உடனே, பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் சொல்ல, அபூ பக்ர்(ரலி) (தொழுகை நடத்துவதற்காக) முன்னால் சென்றார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் வரிசைகளுக்கிடையே நடந்தவர்களாக வந்து, இறுதியில் முதல் வரிசையில் நின்றார்கள். உடனே, மக்கள் கைதட்டத் தொடங்கி இறுதியில் கைத்தட்டலை அதிகரித்தார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையின்போது திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். இருந்தாலும் (மக்கள் கைதட்டும் ஓசையைக் கேட்டு) திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னே, அங்கே நபி(ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுகை நடத்தும்படி கட்டளையிட்டார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுகை நடத்தும்படி கட்டளையிட்டார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) தம் கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, திரும்பாமல் அப்படியே பின்பக்கமாக நகர்ந்து, இறுதியில் வரிசைக்குள் புகுந்து கொண்டார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முன்னால் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்த பின் மக்களை நோக்கி, ‘மக்களே! நீங்கள் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபகரமான விஷயத்தைக் காண) நேர்ந்தால் கைதட்டத் தொடங்கி விடுகிறீர்கள். பெண்கள் தான் கைதட்ட வேண்டும். (ஆண்களில்) ஒருவர் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபணைக்குரிய விஷயத்தைக்) காண நேர்ந்தால், அவர் ‘சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ்வே தூய்மையானவன்’ என்று கூறட்டும். ஏனெனில், அதைக் கேட்பவர் எவரும் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்” என்று கூறிவிட்டு, ‘அபூ பக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்குத் தொழுகை நடத்தவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுகை நடத்துவதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை” என்று பதிலளித்தார்கள்.
-முஹம்மது தஸ்தகீர்.

Thursday, August 28, 2008

ஓர் ஒற்றைப் பயணம்!

காலம்: அனைத்து கிழமை நாட்களிலும்.
பயணி பற்றிய விபரம்:

தகுதியானோர் : ஆதமின் மக்கள்
மூல உற்பத்தி :கருப்பு களிமண்!
விலாசம் : பூமியின் மேற்பகுதி!
பயணச் சீட்டு பற்றிய விபரம்: -
பயண வழி : ஒன்வே ஒன்லி (ஒற்றைப் பயணம் மட்டும், திரும்பும் சீட்டு கிடையாது)!
விலை : முற்றாக இலவசம்!
முற்பதிவு : ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது!
பொதி(சுமை) பற்றிய விபரம்: -
ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பயணி மட்டுமே அனுமதி!
கூடுதலாக 5 மீட்டர் வெள்ளைத் துணியும் சிறிய அளவு காட்டனும் எடுத்துக் கொள்ளலாம்!
பெறுமதி வாய்ந்த பொதி பற்றிய விபரம்: -
மனத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தர்மங்கள்,
சத்தியத்திற்காக செய்த தியாகங்கள்,
குழந்தைகளை நல்லவர்களாக ஆக்க எடுத்துக் கொண்ட உண்மையான கரிசணைகள் மற்றும்
இது போன்ற நற்காரியங்கள் மட்டும்.
பயணம் பற்றிய விபரம்: -
பயணத்தளம் : பூமியின் எந்தப் பகுதியுமாக இருக்கலாம்.
பயணிக்கும் நேரம் : மரணத்தைத் தொடர்ந்து!
இறங்கும் இடம் : மறு உலகம்.
குறிப்பு: பயணச் சீட்டு, கடவுச் சீட்டு, பிரயாண ஆவணங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. தயாராக மட்டும் இருந்து கொண்டால் போதுமானது!
தங்குமிட வசதி: -
தற்காலிகமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படும்!!
அறையின் அளவு : கிட்டத்தட்ட 2 அடி அகளமும் 6 அடி நீளமுமாகும்!
அறையின் சிறப்பம்சம் : வெரும் புழுதி மணலினாலும் சிறிய கற்களினாலும் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!
தங்குமிட வசதி பற்றிய விபரம் : பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் ஒரே வகையான வசதி மட்டும்தான் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தயவு செய்து கவணத்திற் கொள்க!
கீழ்காணும் செளகரியங்கள் காணப்படும் :
குளிரூட்டி (ஏ.சி) : 0 டொன் !!!
நீர் விநியோகம் : கிடையாது !!!
மின் விநியோகம் : கிடையாது !!!
தொலை பேசி : கிடையாது !!!
டீ.வி மற்றும் சேனல்கள் : சுவனம் அல்லது நரகம் !!!
பத்திரிக்கைகள் அல்லது புத்தகஙகள் : கிடையாது !!!
ரூம் சர்விஸ் : அல்லாஹ்வுக்கு எந்தளவு கட்டுப்பட்டு நடந்தோம் என்பதைப் பொருத்து அமையும்!
முக்கிய கவணத்திற்கு :
அனைத்து பயணிகளும் மேற் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் தயவு செய்து கவணத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!
பயணச் சீட்டு ரத்துச் செய்யப்படுவதோ அல்லது பிறருக்கு மாற்றுவதோ முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது!
எனவே, தயவு செய்து அனைவரும் (விதிவிலக்கு கிடையவே கிடையாது) பயணத்திற்கு தயாராக இருந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
மலக்குல் மெளத் எனப்படும் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்தவுடன் பயணம் ஆரம்பமாகும் என்பதையும் அறியத்தருகின்றோம்!
மேலதிக தகவல்களுக்கு: -
உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை படிக்கவும்.
----------------------------------------
எழுதியவர்:மௌலவி லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
அனுப்புதல், அபு ஜுலைஹா

நோன்பு திறக்க சில ஆகாரம்

மெது வடை
-----------
தேவையான பொருள்கள்:

வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ,
ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி,
இஞ்சி- சிறிய துண்டு,
பச்சை மிளகாய்-10,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொஞ்சம்,
உப்பு தேவையானது,[கல் உப்பு]
கல் உப்பு போடுவதால் எண்ணெய் குடிக்காது,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-1/2 கப்,

செய்முறை:

பருப்பு, அரிசி,ஊற வைத்து, வடித்து கெட்டியாக அரைத்து கொண்டு மாவை எடுத்தால் பந்து மாதிரி கையில் ஒட்டாமல் வர வேண்டும். அதில் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, போட்டு கலந்து, உப்பை மாவை எடுக்கும் சமயம் போட்டு அரைத்து எடுக்கவும்] எண்ணெய் காய வைத்து வடைகளாக தட்டி எடுக்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால் கொஞ்சம் ரவை சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பை மிதமாக எரிய விட வேண்டும். பொன்கலரில், மொறு, மொறுப்பான வடை ரெடி. தயிர் வடை வேண்டும் எனில் தேவையான தயிரில் கொஞ்சம் கேரட்டை துருவி போட்டு, 1 ஸ்பூன் தேங்காய், 2 பச்சைமிளகாய் அரைத்து கலந்து கொஞ்சம் உப்பு தூவி, கடுகு தாளித்தால் தயிர் வடை ரெடி. மேலே மல்லி தழை தூவி அலங்கரிக்கவும். தயிர் புளிக்காமல் இருக்க வேண்டும்.


முப்பருப்பு வடை.
-----------

தேவையான பொருள்கள்:

கடலைபருப்பு- 1 கப்,
துவரம்பருப்பு- 2 ஸ்பூன்,
பட்டாணிபருப்பு-1 கப்,
வரமிளகாய்-10,
இஞ்சி-சிறிய துண்டு,
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/4 கப்,
கறிவேப்பிலை சிறிது,
உப்பு தேவையானது,

செய்முறை:

எல்லா பருப்புகளையும் கலந்து 30நிமிடம் ஊற வைத்து, மிளகாய், கல் உப்பு , இஞ்சி போட்டு கரகரப்பாக அரைக்கவும்.அரைத்தபின் வெங்காயத்தையும் போட்டு நன்கு கலந்து, வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அரைக்கும் மாவு கெட்டியாக இருந்தால்தான், வடை ரொம்ப நேரம் இருந்தாலும் மொறு,மொறுப்பாக இருக்கும்.

-முஹம்மது தஸ்தகீர்.

பாவங்களும் அதைப்போக்கும் பரிகாரங்களும்.

பொதுவாக மனித சமூகத்தில் பெரும்பாலும் தனக்கு அல்லது பிறருக்குச் செய்யும் செயல்களில் பாவங்கள் கலந்து காணப்படுகின்றன. பாவங்களைச் செய்யும் மனிதன் தன் பாவங்களை உணரும் போது தன்னைப் படைத்தவன் அப்பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். சில வேளையில் பரிகாரங்கள் செய்து தனது பாவங்களைப் போக்கி படைத்தவனின் மன்னிப்பைப் பெற எண்ணுகின்றான். பரிகாரங்கள் என்ற பெயரிலும் பாவங்களைத்தான் செய்கின்றான்.
பாவங்களைப் போக்கி மன்னிப்பு வழங்கும் விசயத்தில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பல நற்செயல்களைக் கற்றுத்தந்துள்ளது. அந்நற்செயல்களை முறைப்படி செய்தால் பாவங்கள் அழிக்கப்பட்டு மன்னிக்கப்படுகின்றன.

இஸ்லாமில் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் போக்கப்படுவதற்கும் ஒரே இறைவனை அவனுக்கு இணை, துணையற்ற நிலையில் நம்பிக்கை கொள்வது முக்கிய அடிப்படையாகும். இக்கொள்கை விசயத்தில் மாறுசெய்தால் ஒரு முஸ்லிமின் எந்தப் பாவமும் மன்னிக்கப்படமாட்டாது. எனவே பாவமன்னிப்பின் முதல் நற்செயலாக கலப்பற்ற (ஈமான்) இறைநம்பிக்கைதான் இடம் பிடித்துள்ளது.

அல்லாஹ் எச்சரித்து வாக்களிக்கிறான்:
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்) தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (4:48)

மேலும், அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் நல்லறங்கள் அழிந்து நட்டமடைந்தவர் பட்டியலில் சேர்ப்பேன் என்றும் கூறுகிறான்.
அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்துவிட்டிருக்கும். (6:88)
(நபியே) நீர் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்தாலும் உமது நல்லறம் அழிந்து, நீர் நட்டமடைந்தவராவீர். (39:85)
நல்லறங்களும் பாவமன்னிப்பும்:
உண்மையான முஸ்லிமைப் பொறுத்தவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த முறைப்படி நல்லறங்கள் செய்து கொண்டிருந்தால் அவர்கள் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படும். அத்துடன் அந்நல்லறங்கள் தொடரும் போது அவர்களிடம் இருக்கின்ற பாவங்கள் பெரும்பாலும் அழிந்துவிடும். பெரும் பாவங்களான இணைவைத்தல், மூமினைக் கொலை செய்தல், வட்டி போன்ற பெரும் பாவங்களை விட்டொழித்து நல்லறங்கள் அதிக அதிகமாகச் செய்யும்போது அவர்களிடம் உள்ள சிறு சிறு பாவங்களும் தவறுகளும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். அத்துடன் நல்லறங்களுக்கான கூலியும் வழங்கப்படும்.(சில நாட்கள் நம்பிடையே இருந்த பலர் நம்மிடை இல்லை.சகோ.அபூபக்கரும் நேற்று இறந்துவிடார். ஆனால் அபூபக்கர் ஹஜ் காலங்களில்,நமதூர் மக்களுக்கு மட்டுமின்றி தமிழகத்திலிருந்து வரும் அனைத்து ஹாஜிமார்களுக்கும் அவர்கள் பணிவிடை செய்து,அவர்களின் அன்பையும்,துவாவையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் அவர் அளவிடாத நன்மை பெற்று மறைந்துவிட்டார்,இதுபோல் பல நல்லவர்களும் நன்மை சம்பாத்தித்து மரணமுற்றவர்கள்.ஆனால் நாம்?வல்ல அல்லாஹ் நம்மையும் நல்லவர்கள் கூட்டத்தில் சேர்த்து நற்காரியம் செய்யவும், நல்ல மொவுத்தை தர அருள்பாலிப்பானாக.ஆமீன்).
-முஹம்மது தஸ்தகீர்.

Wednesday, August 27, 2008

அதிரை பைத்துல்மாலின் ஜகாத் வேண்டுகோள்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் அனைவரது சார்பில் தங்களுக்கு புனித ரமளான் வாழ்த்துக்கள். ரமளான் மாத்த்தில் அடைந்துகொள்ள வேண்டிய பேறுகளை தாங்களும், தங்களது குடும்பத்தினர் அனைவரும் அடைந்து கொள்ள அல்லாஹ்விடம் நெஞ்சார துஆ செய்கிறோம்.

அதிரை பைத்துல்மாலின் மக்கள் நலத் திட்டங்களில் முதன்மையானது ஜகாத் நிதி வசூலும், பங்கீடுமாகும். இறைமறைக் கட்டளைக்கு ஏற்ப 8 வகையான நபர்களுக்கு, தகுதிக்கு ஏற்ப மொத்தமாக வழங்கப்படுகிறது. இது தவிர ஏழ்மை, வறுமை, இயலாமை, வருமானமின்மை, பிணி, மூப்பு போன்றவைகளால் அவதியுறுபவர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் நேரடி விசாரணையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத உதவித்தொகையாக ரூ 250 வீதம் 58 பேருக்கு வழங்கப்படுகிறது.

ஜகாத் நிதி வேறெந்த திட்டத்திற்கும் பயன்படுத்தப்படுவதில்லை. முழுக்க முழுக்க ஏழை, எளிய மக்களின் உதவிக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறோம். வறுமையிலும், ஏழ்மையிலும் வாடும் மக்களுக்கு உரிய உதவியை உரிய நேரத்தில் வழங்குவதற்கு ஜகாத் நிதியைத் தவிர வேறெந்த நிதி ஆதாரமும் அதிரைபைத்துல்மாலிடம் இல்லை. தாங்கள் வழங்கும் ஜகாத், ஸதக்கா, நேர்ச்சை, உதவிகள் தான் நிதி ஆதாரமாக உள்ளது.

எனவே, தாங்கள் மனமுவந்து கணிசமான அளவில் ஜகாத் நிதியை வழங்கி ஆதரவு நல்கிட அன்புடன் வேண்டுகிறோம். தங்களது உதவிக்கு பன்மடங்கு நன்மையை இம்மையிலும், மறுமையிலும் தங்களுக்கு வழங்கிட அல்லாஹ்விடம் நெஞ்சார துஆ செய்கிறோம்.

வஸ்ஸலாம்,
தங்கள் நலம் நாடும்,

பேரா. S. பரக்கத், M.A.,M.Phil, M.Ed.,PGDTE.,
தலைவர்

A. முனாப், B.A, B.L.,
செயலர்

யாகவராயினும் '' நா''காக்க.

ஒரு மனிதன் நினைத்தால் ஒரு சமூகத்தையே ஒன்று படுத்திடவும் இயலும், பிளவு படுத்திடவும் இயலும். இந்த இரு வேறு நிலைகளுக்கும் உதவுவது நாக்கு தான். சின்னஞ்சிறிய இந்த உறுப்புத்தான் பெரும் குழப்பங்கள், பிரச்சினைகள், சண்டைகள், சச்சரவுகள் உருவாகவும் அவற்றை களையவும் பயன்படுகிறது.

இந்த நாவின் மூலம் ஏற்படும் நன்மைகளை மட்டுமே மனித சமூகம் அடைய வேண்டும். அதன் தீமைகளை அடையக் கூடாது.

‘நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களை கேலி செய்ய வேண்டாம்.இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. எவர்கள் இவற்றிலிருந்து மீளவில்லையோ அத்தகையவர்கள் அநியாயக்காரர்களாவார்கள்’.

‘நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள். உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து மீள்வதை ஏற்றுக்கொள்பவன். நிகரற்ற அன்புடையோன்.’ (அல் குர்ஆன்- 49:11,12)

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது. (அல் குர்ஆன்-61:2,3)

‘குறை கூறிப் புறம்பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்’.(அல்குர்ஆன்-104:1)

‘அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக்காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை, கவலைப் படவும்மாட்டார்கள்’.(அல் குர்ஆன்-2:262)

‘…..பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்’.(அல் குர்ஆன்-22:30)

ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான், ஆனால் அதைப்பற்றி நல்லதா? கெட்டதா? என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)

புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் புறம் பேசுதலைப் பற்றி கூறினார்கள்.

உனது சகோதரன் எதை வெறுப்பானோ அதை அவன் விஷயத்தில் கூறுவதாகும். அப்போது, நான் கூறுவது எனது சகோதரனிடத்தில் இருந்தால்? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ சொல்வது உனது சகோதரனிடத்தில் இருந்தால் நீ புறம் பேசியவனாய் கருதப்படுவாய். நீ சொல்வது அவனிடத்தில் இல்லையெனில் நீ அவதூறு கூறியவனாய் கருதப்படுவாய் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-முஸ்லிம்)

ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-முஸ்லிம்)

கோள் சொல்லுபவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும் மாட்டான், அவர்களை பார்க்கவும் மாட்டான், அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனையுன்டு என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அந்த நபர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன், தனது கீழாடையை (பெருமைக்காக கரண்டைக்கு கீழ்) தொங்கவிடுபவன். (தான் செய்த தருமத்தை) சொல்லிக் காட்டுபவன். பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-முஸ்லிம்)

ஒரு மனிதர் இன்னொரு மனிதனை பாவி என்றோ, காஃபிர் என்றோ சாட வேண்டாம். ஏனெனில் குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் பக்கமே திரும்பி விடும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

யார் தன் சகோதரன் பற்றி கூறப்பட்ட குறையை மறைக்கின்றாரோ அவரது முகத்தைவிட்டும் நாளை மறுமையில் அல்லாஹ் நரகத்தைத் தடுத்துவிடுவான்.(நூல்-அஹ்மத்)

புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)

நயவஞ்சகனின் அடையாளம் மூன்று அவர்கள் தொழுதாலும், நோன்பு வைத்தாலும், தான் ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே. 1.பேசினால் பொய்யுரைப்பான். 2.வாக்களித்தால் மாறு செய்வான். 3.நம்பினால் மோசம் செய்வான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி, முஸ்லிம்)

மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்க்காகப் பொய் கூறுபவனுக்கு கேடு உண்டாவதாக! அவனுக்கே கேடு, அவனுக்கே கேடு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-முஸ்லிம்)

மாபெரும் சதி யாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)

இறந்தவர்களை ஏசாதீர்கள். ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதைப் பெற்றுக் கொண்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும். இல்லையெனில் வாய் மூடி இருக்கட்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)

எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்று நபி(ஸல்;) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது எவருடைய நாவினாலும், கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறாரோ அவரே என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்-புகாரி)

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள் அவர்களது குறைகளைத் ஆராய்ந்து கொண்டிராதீர்கள் யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திருகின்றாரோ அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்-அஹ்மத்)

அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அவர் யார் ? என்று கேட்கப்பட்டது. ‘எவருடைய துன்பத்திலிருந்து அன்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்-புகாரி)

ஒரு மூஃமீன் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-திர்மிதி).
ஒரு சொல் சொல்லுவதற்கு முன் பல முறை யோசிக்கவும்.
தவறாக சொல்லிய சொல் பிறர் மனதை துன்பப்படுத்துவதுடன் நமக்கும் தீமையை அள்ளித்தருகிறது. அது பெரும் பாவமாய் நம்மை நரகத்தில் தள்ளிவிடுகிறது.
வார்த்தை சொல்லும் வரை நமக்குச் சொந்தம், சொல்லிவிட்டால் பிறருக்குச் சொந்தம். இப்படி, பிறருக்குச் சொந்தமாகும் ஒருப்பொருளை நல்ல பொருளாகக் கொடுத்தால் சுற்றமும் சூழ வாழ்த்துமே.
-முஹம்மது தஸ்தகீர்

Monday, August 25, 2008

நேரம் பொன்னைவிட மேலானது.

காலண்டரில் ஒரு தாளைக்கிழித்தால் ஒரு தாளை மட்டும் கிழிக்கவில்லை, உனது ஆயுளில் ஒரு நாளையும் கிழித்து விடுகிறாய். உனது வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்று பொருள். உனது மரணம் நெருங்கி வந்துவிட்டது என்று விளங்க வேண்டும்.
ஒரேயொரு நொடி நேரத்தில் உலகில் எத்தனையோ பல லட்சம் சம்பவங்கள் நிகழ்கின்றன. பல்லாயிரக்காணக்கான குழந்தைகள் பிறக்கின்றன, பல்லாயிரக்காணக்கானோர் மரணமடைகின்றனர். ஒரு நொடி நேரத்தின் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிய வேண்டுமா? நீங்கள் ரயிலையோ, பேருந்தையோ, விமானத்தையோ தவறவிட்டு அரை நிமிடத்திற்கு பின்னர் அந்த இடத்தில் நீங்கள் போய்ச்சேர்ந்தால் அப்போது புரியும், அந்த ஒரு நிமிட நேரத்தின் முக்கியத்துவம்.ஒரு நொடி தான், இல்லையெனில் நான் அந்த விபத்தில் சிக்கியிருப்பேன் என்று விபத்தில் தப்பிப் பிழைத்தவர் அந்த நொடியின் மகத்துவத்தைச் சொல்வார்.நேரம் யாருக்காகவும் காத்திருக்காது, பறந்து போய்விடும். பின்னர் அது வரவே வராது.‘Time is Gold’ ‘நேரம் பொன் போன்றது’ என்று சொல்கின்றார்களே தவிர அதை வீணாக கழிக்கின்றனர் பெரும்பாலான மக்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் என்னென்ன வேலைகளைச் செய்தோம் என்பதனை மிகத் துல்லியமாக மிகச் சரியாக பத்து நாட்களுக்கு எழுதி வைத்துப்பார்த்தால் நாம் எவ்வளவு நேரங்களை வீணாகக் கழித்தோம். எவ்வளவு நேரம் அரட்டை அடித்தோம் எவ்வளவு நேரம் டிவி பார்ப்பதில் கழிந்தது எனக் தெரியவரும். நேரம் பொன் போன்றது என்றால் அதை பாதுகாக்க வேண்டுமல்லவா? அதை வீணாகக் கழிக்கக் கூடாதல்லவா?தங்கம், பணம், காசுகள் போன்ற கண்ணிற்குத் தெரியும் செல்வத்துக்கு கணக்குப் பார்க்கும் பலர் கண்ணுக்குத் தெரியாத இறை அருட்கொடையாகிய நேரத்துக்கு கணக்குப் பார்ப்பதே இல்லை. வீணாக கழித்து விடுகின்றனர்.
நேரம் என்பது நமது வாழ்க்கை ஆகும். வாழ்க்கை தான் நேரம் ஆகும். நேரம் சென்று விட்டால் நமது வாழ்க்கை சென்று விடுகிறது எனப் பொருள் என்பதை பலர் உணர்வதேயில்லை. அதனால் தான் வீணாக நேரத்தை கழிக்கின்றனர்
குறிப்பாக ஒரு முஸ்லிம் நேரத்தை மிகப் மிகப் பேணுதலாகச் செலவழிக்க வேண்டும். நேரத்தின் முக்கியத்துவத்தை அல்லாஹ் குறிப்பிடும் பல வசனங்களை அல்குர்ஆனில் காணலாம். நேரத்தின் பல பகுதிகளைக் குறிப்பிட்டு அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறி நேரத்தின் அருமையைப் புரிய வைக்கின்றான். காலத்தின் மீது சத்தியமாக என்று ஆரம்பமாகும்
103 வது அத்தியாயம். முற்பகல் மீது சத்தியமாக! இருண்ட இரவின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 93:1-2)இரவின் மீதும் சத்தியமாக! பகலின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 92:1-2)

விடியற்காலையின் மீது சத்தியமா! பத்து இரவுகளின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1-2)
மறுமை நாளைக் கொண்டு நான் சத்தியம் செய்கின்றேன் (அல்குர்ஆன் 75:1)
நேரம் அல்லாஹ் தந்த அருட்கொடை அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் அதற்கு நன்றி செலுத்துதல் என்பது அதை நல்வழிகளில் பயன்படுத்துவதாகும்.
அல்லாஹ்-வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், மறுமை நாளில் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் ஒரு அடியானின் கால் பாதங்கள் (ஓரடி கூட) நகர முடியாது
1. அவன் தனது ஆயுளை எப்படிக் கழித்தான்?
2. அவன் கற்ற கல்வியினால் என்ன செய்தான்?
3. அவன் செல்வத்தை எப்படிச் சேர்த்தான்?
4. அவனது உடலை எப்படி பயன் படுத்தினான்?
ஆகியவை அந்த நான்கு கேள்விகள் ஆகும். (திர்மிதி ஹ. எண். 2417)

இந்த நபிமொழியை நன்கு சிந்தித்துப் பாருங்கள். அவன் தனக்கு வழங்கப்பட்ட ஆயுளை எப்படிக் கழித்தான்? என்று பதில் சொல்ல வேண்டும். பயனுள்ள வழியில் கழித்தாயா? அல்லது வீணாக டிவி விளையாட்டு, கேளிக்கை போன்றவற்றிலும் தீய வழிகளிலும் கழித்தாயா? என்று நேரம், காலத்திற்க்குக் கூட பதில் சொல்லியாக வேண்டும் என்றால் நாம் நமது நேரத்தை எப்படிப் பயனுள்ள வழிகளில் கழிக்க வேண்டுமென்று இன்றே இப்போதே திட்டமிட வேண்டும்.

நபி (ஸல்) கூறினார்கள், ‘மனிதர்களில் அதிமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு இழப்புக்குள்ளாகி விடுகின்றனர் 1. ஆரோக்கியம் 2. ஓய்வு (புஹாரி)

ஓய்வு நேரத்தையும் பயனுள்ள வழிகளில் பயன்படுத்த வேண்டும். ஓய்வு என்று கூறிக்கொண்ட இரவில் அதிக நேரம் கண் விழிப்பதும் தொலைக்காட்சியில் மூழ்குதலும் உடலுக்கு மிக் பெரும் தீங்காகும்.

மேலும் உங்களுக்கு உறக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம், மேலும் இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 78:9-10)

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்கு முன்பு தூங்குவதையும் இஷா தொழுத பின்பு (வீணாகப்) பேசிக் கொண்டிருப்பதையும் வெறுத்திருக்கிறார்கள் (புஹாரி, முஸ்லிம்)

இந்த நபி மொழியிலிருந்து இஷாவுக்குப் பின் அவசியமின்றி வீணான பேச்சுக்களில் ஈடுபடுதல் நல்லதல்ல என்று விளங்குகிறது. ஆனால் கல்வி, ஆராய்ச்சியில் ஈடுபடுதல், மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுதல், விருந்தினர்களுடன் அளவளாவுதல் போன்ற அவசியமான காரியங்களில் ஈடுபடுவது தவறில்லை என்ற விபரம் வேறு பல நபிமொழிகளில் இருந்து அறியப்படுகிறது.

ஒரு மனிதன் ஓய்வு நேரத்தை வீணாகக் கழித்து விட்டு இரவில் தூங்காமல் ஓய்வெடுக்காமல் இருந்தால் மறுநாள் பணிகளில் ஈடுபட முடியாது. கண் எரிச்சல் ஏற்படும், உடல் சமநிலையில் இருக்காது, உடல் சூடாகக் காணப்படும், எந்த வேலையும் செய்ய முடியாது.

சிலர் நேரத்தை திட்டுகின்றனர். எனக்கு காலம் சரியில்லை, என் நேரம் சரியில்லை என்றெல்லாம் கூறுகின்றன். ஸஃபர் பீடை மாதம் என்று கூறுகின்றனர். ஆடி மாதம் என்றால் மாற்றுமதத்தவர் எந்த நல்ல காரியத்திலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சில முஸ்லிம் நண்பர்கள் மாற்று மத சகோதரர்களை விடவும் மோசமானவர்கள். மாற்று மத சகோதரர்கள் ஆடி மாதத்தில் மட்டும் தான் எந்த நல்ல காரியமும் செய்வதில்லை. சில முஸ்லிம் நண்பர்களோ அவர்கள் நம்பிக்கைபடி ஆடி மாதத்திலும் நல்ல காரியம் செய்வதில்லை. ஸஃபர், முஹ்ரம் போன்ற மாதங்களிலும் நல்ல காரியத்தில் ஈடுபடுவதில்லை. ஆக இவர்கள் அவர்களை விடவும் மோசமானவர்கள் தானே?

மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள், ‘நமது இந்த வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை) கிடையாது, நாம் இறக்கிறோம், ஜீவிக்கிறோம். ”காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பத்தில்லை” என்று கூறினார்கள். அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது. (அவர்கள்) இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதை தவிர வேறில்லை.’ (அல்குர்ஆன்: 45:24)

”காலத்தை திட்டுவதன் மூலமாக ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கிறான். நான் காலமாக இருக்கின்றேன். இரவு பகலை நானே மாறி மாறி வரச் செய்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: அபூதாவூத், நஸயீ, புஹாரி ஹதீஸ் எண் 7491)

அறியாமைக்கால அரபுகள் தமக்குத் தீமை நேர்ந்து விடும்போது காலத்தை ஏசினார்கள். அதைக்கண்டித்தே அல்லாஹ் மேற்கண்ட 45:24 வது வசனத்தில் குறிப்பிடுகிறான். இதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வையே ஏசுகின்றனர். அல்லாஹ் தான் நன்மை தீமைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துபவன். காலம் அல்ல என்பதனை பல்வேறு வசனங்கள் உணர்த்துகின்றன (பார்க்க 7:168, 21:35)

எனவே காலத்தை ஏசாமல் அல்லாஹ்-விடம் பணிந்து தொழுது முறையிட்டால் அல்லாஹ் நமது கவலைகளை, கஷ்டங்களைப் போக்க வல்லவன்.

நமது நேரங்களை எப்படி பயனுள்ள வழிகளில் கழிக்கலாம்?

1. தனது செயல்பாடுகள் குறித்த கணக்கீடு செய்தல்:

ஒவ்வொரு மனிதனும் தான் என்னென்ன செயல்களைச் செய்திருக்கிறோம். அவை நமக்கு சமுதாயத்திற்கு, நமது மறுமை வாழ்வுக்கு நன்மை பயக்கும் செயலா? தீமை பயப்பதா என்று சிந்தனை செய்து தன்னைத்தானே மதிப்பீடு செய்ய வேண்டும்.

அவ்வாறு தினமும் தனது செயல்பாடுகளை மதிப்பிட்டு தீமைகளில், அல்லது பயனற்ற வழிகளில் வீணாக நேரத்தைக் கழித்திருந்தால் திருந்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

2. யார் நமது நேரங்களை பயனுள்ள வழிகளில் கழிக்கின்றார்களோ அவர்களுடன் நட்பு கொள்வது:

தமது நேரங்களைத் திட்டமிட்டு பயனுள்ள வழிகளில் கழிப்பவருடன் மட்டும் நட்புக் கொள்ள வேண்டும். தீமைகளில் ஈடுபடுவோரும், பயனற்ற வழிகளில் நேரத்தை கழிப்போருடன் நாம் சேரக்கூடாது. (பார்க்க: புஹாரி ஹதீஸ் எண்: 5534)

3. மரணத்தை நினைவு கூறல்:

காலம் கடந்து செல்லச் செல்ல நமது மரணம் நெருங்கி வருகிறது என்பது பொருள். மரணம் எப்போது வரும் என்பதை யாரும் அறியோம். எனவே நாம் நல்லறங்களை முற்படுத்தி மரணத்தை நினைவு கூறல் வேண்டும்.

4. பயனுள்ள கல்வி கற்பதில் ஈடுபடுதல்:

‘உங்களில் மிகச் சிறந்தவர் தானும் குர்ஆனைக் கற்று பிறருக்கும் குர்ஆனை கற்றுக்கொடுப்பவர் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)

மனிதன் இறந்த பின்பும் பயன் தரும் சில நல்லறங்களை இஸ்லாம் கூறியுள்ளது.

மனிதன் இறந்து விட்டால் அவனது மூன்று செயல்கள் தவிர மற்றவை துண்டிக்கப்பட்டு விடும். அவையாவன:
i). நிலையான தர்மங்கள்
ii). பயன் தரும் கல்வி
iii). அவனுக்காகப் பிரார்த்தனை புரியும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் 1631, அபூதாவூத் 2880, திர்மிதி 1376 மற்றும் புஹாரி 6514)

5. இறை நினைவில் ஈடுபடுதல்:

இறைவன் அதிகமாகச் செய்யும்படிக் கூறும் காரியம் இறைநினைவு (திக்ர்) மட்டுமே.

இறைவிசுவாசிகளே! இறைவனை அதிகமதிகம் நினைவு கூறுங்கள் (அல்குர்ஆன்: 33:41)

இறைநினைவில் மிக முக்கியமானது தொழுகையாகும். அதை உரிய நேரத்தில் கூட்டமாக (ஜமா அத்தோடு) நிறைவேற்ற வேண்டும்.

6. உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல்:

கடமையான தொழுகைகள், நோன்புகள், ஜகாத் போன்ற கடமையான வழிபாடுகள் போக மேல் மிச்சமான உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் நேரத்தைப்ப பயனுள்ள வழிகளில் செலவிடலாம். (பார்க்க புஹாரி, ஹதீஸ் எண் 7405)

7. எந்த ஒரு நல்லறத்தையும் தள்ளிப்போடலாகாது:

நாளை பார்த்து கொள்ளலாம் நாளை செய்து கொள்ளலாம் என்ற எந்த ஒரு நல்ல காரியத்தையும் தள்ளிப்போடக்கூடாது. காரணம் மனிதனது முடிவு எப்போது என்பது யாருக்கும் தெரியாது (பார்க்க புஹாரி ஹதீஸ் எண்: 6416)

சில காரியங்களை அப்போதைக்கு அப்போதே செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பின் தள்ளிப்போட்டால் பின்னர் பல வேலைகள் வந்து அந்த முக்கியமான காரியத்தை செய்ய முடியாது போய்விடும். பின்னர் நேரமில்லை என வருந்த வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு கார் உரிமையாளர் காரில் ஏதோ சப்தம் வருகிறது என்றால் உடனே அதைக் கவனிக்க வேண்டும். கார் தான் ஓடுகிறதே என்று அலட்சியமாக இருந்தால் 100 ரூபாய் செலவு செய்து பழுது நீங்கயிருந்த அந்த கோளாறு ஆயிரம் ரூபாய் செலவு வைத்து விடும்! பள்ளி மாணவன் அன்றாடம் படிக்க வேண்டிய பாடங்களை படிக்காமல் தேர்வுக்குத்தான் இன்னும் நாலைந்து மாதங்கள் உள்ளதே அப்போது படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் தேர்வு நெருங்கிவிட்ட போது எதைப் படிக்க இதைப் படிக்கவா அதைப்படிக்கவா என்று தவிக்க நேரிடும். வீட்டை அன்றாடம் கூட்டிப் பெருக்காமல் விட்டு விட்டால் வீடே குப்பைத் தொட்டியாகிவிடும்.

A Stitch in time saves nine. ஓட்டை சிறிதாக இருக்கும் போதே தைத்துவிட வேண்டும் இல்லையெனில் ஒன்பது தையல்கள் போட வேண்டி வரும் என்றொரு பழமொழி உண்டு. தக்க நேரத்தில் போட வேண்டிய தையல் பல தையல் போடுவதை விட்டும் பாதுகாக்கும் என்பது இதன் கருத்து. எனவே நாட்களை தள்ளிப்போடாமல் உடனடியாக காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும். ஏனெனில் வருங்காலம் தற்காலத்தை விட மோசமானதாக அமையும் என்பது கண்கூடு (பார்க்க புஹாரி ஹதீஸ் எண் 7068)

சிலர் எப்போது பார்த்தாலும் நான் ரொம்ப பிஸி என்றே கூறிக்கொண்டிருப்பார்கள். நன்றாக பார்த்தோமானால் ஒன்றுமே இருக்காது. உலகில் படைக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும், ஒரு வாரத்திற்கு 7 நாட்களும், மாதத்திற்கு 30 நாட்களும், வருடத்திற்கு 365 நாட்களும் சமமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்க நேரமே இல்லை என்று எப்படிச் சொல்கிறார்கள்? அதே நேரத்தில் மற்றவர்கள் நமது நேரத்தை பயன்படுத்தி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என இவர்கள் சிந்திப்பதில்லை.

சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் மிகச்சரியாக உதிக்கின்றன. மிகச் சரியாக மறைகின்றன. மனிதனுக்கு நேரம் மற்றும் காலம் காட்டும் கருவி அடுத்த வருடத்திற்கான அல்லது பல்லாண்டுகள் கழித்து குறிப்பிட்ட நாளில் சூரியன் எந்த நேரத்தில் உதிக்கும் சந்திரன் எந்த நாளில் எந்த நேரத்தில் தோன்றும், மறையும் முற்கூட்டியே கணித்து காலண்டர் போட்டு விடுகிறான். அவை தாமதமாகத் தோன்றினால் முன்பே எப்படி காலண்டர் தயாரிக்க முடியும். அவை நேர காலங்களை மிகச்சரியாக பயன்படுத்தி தமக்கு இடப்பட்ட கட்டளைப்படி சுழல்கின்றன. மனிதன் தான் கால நேரத்தில் பணிகளைச் செய்யாமல் காலம் கடத்தி பின்னர் கைசேதப்படுகிறான்.

நமது நேர காலங்களை பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதுடன் உரிய நேரத்தில் காரியங்களைச் செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான், ”அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் போது அவன் என் இறைவனே என்னை திரும்ப (உலகுக்கு) திருப்பி அனுப்புவாயாக என்று கூறுவான். நான் விட்டு வந்ததில் நல்ல கரியங்களை வெய்வதற்காக! அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே அன்றி வேறு இல்லை” அல்குர்ஆன் 23:99-100)

இந்த வசனங்களில் மனிதன் வாழ்நாளெல்லாம் நல்லறங்கள் செய்யாது கழித்துவிட்டு மரணம் நெருங்கும் வேளையில் நல்லறம் செய்ய முற்பட்டால் எந்தப்பயனும் அவனுக்குக் கிடைக்காது என்பதை தெளிவுபடுத்துகிறான். எனவே பொன் போன்ற நமது காலங்களை பயனுள்ள காரியங்களில் பயன்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுங்கள்.

”நீண்ட ஆயுள் கொடுக்கப்பட்டு, அவரது செயல்பாடுகளையும், நல்லவையாக அமைத்தவர் தான் மனிதர்களிலேயே மிகச் சிறந்தவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி ஹதீஸ் எண் 2330).
(படித்து ஒவ்வொறு நொடிகளையும் அர்தமுள்ள பயனுளவையாக ஆக்கி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக ஆமின்.வரும் ரமலானை இவ்வாறு நல்லவை விதைத்து மேலும் , நன்மையை அறுவடை செய்வோமாக!)-
தகவல் தந்த உள்ளங்களுக்கு அல்லாஹ்வின் கிருபை உண்டாகட்டும்.
சகோ.முஹம்மது தஸ்தகீர்

Sunday, August 24, 2008

ஒலிம்பிக்: ஹிஜாப் அணிந்து முன்னேறிய முஸ்லிம் மங்கை


பஹ்ரைனைச்சார்ந்த ருகையா அல் கஸ்ரா வின் சாதனை முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது। அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து விளையாட்டில் பங்கு பெறும் பெண்களுக்கு।

ஹிஜூத் ( Hijood - sporty ஹிஜாப்) என்னும் உடையை (தலைமுதல் கால் வரை மறைக்கப்பட்ட உடை) அணிந்து 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பிரான்ஸ் வீராங்கனையை பின்னுக்குத்தள்ளி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் தன்னுடைய அக அழகை கூட்டும் ஹிஜாபினால் தன்னுடைய விளையாட்டிற்கு தடங்களில்லை என்பதை உலகிற்கு நிறுபித்திருக்கிறார்.

இவருக்கான உடையை ஆஸ்திரேலியாவைச்சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கான உடையை தயார் செய்யும் நிறுவனம் தனியாக தயார் செய்து அனுப்பியது।

இந்த சம்பவத்தைப்பற்றி ஒரு ஆங்கில வலைப்பதிவர் கூறும் போது...

I know it's just a meaningless preliminary victory, but not only will that moment have a strong effect on Bahraini, Arab, and Muslim men and women alike, but will and has served to open up a dialogic space in that region and here as well.

மேலும் கூறுகிறார்...
I'll tell you why I love watching Olympic events with Arabs participants in public places. It gives me a chance to add some complexity to the general public's limited and simple understanding of the socio-political and cultural situation in the Middle East.

தொடர்புடைய சுட்டிகள்

அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்பான கேள்வி பதில்கள்

அதிரை எக்ஸ்பிரஸில் ஊர் சம்பந்தமான செய்திகள் குறைந்துவிட்டனவே?
நாய் மனிதனை கடித்தால் அது செய்தியல்ல. நாயை மனிதன் கடித்தால் தான் செய்தி.

சமீபத்தில் வெளியான நோட்டீஸில் அதிரை எக்ஸ்பிரஸின் பங்குண்டா?

அபாண்டம். ஆனால் 'கை' ஓங்கியிருந்துச்சாமே?


விரும்பி சாப்பிடும் மீன் பன்னாவா? கெழுத்தியா?
எந்த மீனாலும் நல்லா கழுவி சமைத்தால் ஒரு கை பார்க்க வேண்டியதுதானே. (அப்ப அடுத்த கந்தூரிலே எல்லா மீனுக்கும் ஒரு கூடு வைக்க இந்த வருசமே நல்லா சம்பாதிக்கனுமா?)

இது என்ன அதிரை எக்ஸ்பிரஸா நடுத்தெரு எக்ஸ்பிரஸா?
'உண்மை'க்கு நேர்மாறான கருத்து. அதுதொடர்பான எமது முந்தைய அறிவிப்பை வாசகர்களுக்கு நினைவுறுத்துகிறோம். இந்த அறிவிப்பு இப்பொழுதும் பொருந்தும்.


கருணாநிதியை போட்டுத் தாக்குகிறீர்களே?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே। கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகத்தைச்சார்ந்த தாமரங்கோட்டை ஏழை மாணவி மாவட்டத்தில் முதலும் மாநிலத்தில் மூன்றாவது இடம் பிடித்ததற்கு முதலமைச்சர் வெறும் 5000 ரூ கொடுத்தாரே?


அதிரை எக்ஸ்பிரஸை நடத்துவது யார்?
பொதுவான தளங்களை நேர்மையுடனும், துணிச்சலுடனும், பாஸிடிவாக அனுகுவதில் உள்ள சிரமங்களை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், இதுபோன்ற அநாவசிய கேள்விகளை தவிர்க்கவும்.

உங்கள் பலம் - பலவீனம்?
பலம்:அதிரையை தாண்டிய வாசகர் வட்டம் (கூட்டம் வரலேன்னு ஒன்னால சொல்ல முடியுமா? http://www.youtube.com/watch?v=dy4AzEp6YuY)

பலவீனம்: அதிரை செய்திகளை அதிரையிலிருந்து அப்டேட் செய்பவர்கள், பங்களிப்பாளர்கள் குறைவு அல்லது இல்லாமை।

அரட்டை அரங்கத்தில் பரிமாற்றங்கள் குறைந்துவிட்டனவே?
வரவேற்கத்தக்க மாற்றம்பின்னூட்டங்களில் மக்கள் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்கள்.

'தியாகி' என்கிற வாசகம் பற்றி அதிரை எக்ஸ்பிரஸ் ஒன்றும் எழுதவில்லையே?
அணைந்த நெருப்பை தீயிட்டு பற்ற வைக்கும் அபாயம். வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. மீண்டும் பிரிவினையை ஏற்படுத்தும். தெருப்பெயரில் கூட அந்த பெரியவரின் பெயரை தக்கவைக்க முடியாமையின் வெளிப்பாடு என்றுதான் சொல்லவேண்டும்.

முந்தைய கேள்வி பதில்:

அதிரை எக்ஸ்பிரஸ் மீது அதன் வாசகர்களால் தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்

சவுதி ஓஜர் கம்பெனிக்கு சென்னையில் நேர்முக தேர்வு

அஸ்ஸலாமு அலைக்கும்.{வரஹ்}

இதை தகவலுக்காக தருகிறேன்:-

இன்ஷாஅல்லாஹ் வரும் 26 & 27 தேதிகளில் சென்னையில் சவுதி ஒஜர் கம்பெனிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. 400 க்கும் மேற்பட்ட நபர்கள் தேவை (அனைத்து துறையிலும்). சென்னை என்பதனால் நம் ஊர் நபர்கள் சுலபமாக சென்று முயற்சிக்கலாம்.

முகவரி:-
Asiapower Overseas Employment ServicesGovernment Approved Recruiting Agent28, Aarti Arcade, 86, Dr. Radhakrishna Road,
Mylapore,Chennai - 600 004.
INDIA.Tel : ( 0091 - 44 ) 2811 4437
Fax : ( 0091 - 44 ) 2811 1390
E-mail : chennai@asiapoweroverseas.com

அன்புடன்
Jamal - saudioger ltd. ரியாத்

தகவல்
Meerasan Ahamed.
Jubail-Saudi Arabia.

(இத் தகவல் லால்பேட்டைசெய்திகள் என்றத் தளத்தில் வந்த செய்தி.விருப்பபடும் நபர்கள் சரியான,முறையான வேலை.ஆள் எடுக்கும் ஏஜென்ஸி முறைதானா என்று சரிபார்த்து பயன் பெறலாமே?).
சகோ.தஸ்தகீர்.

சீர்கெடுக்கும் சினிமாவை முற்றிலும் தலைமுழுகுவோம்.

நாட்டு மக்களிடையில் பொதுவாகவும், இளைய தலைமுறையினரிடையில் குறிப்பாகவும் பரவி வரும் ஒழுக்கச் சீர்கேடுகள். கலாச்சார சீரழிவுகள், நாடெங்கும் பரவி வரும் வன்முறை சம்பவங்கள், பயங்கரவாதச் செயல்கள், கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற எல்லாவிதமான அநியாயங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது சினிமா தான். இப்படிப்பட்ட சீரழிக்கும் சினிமாவினால் எவ்வளவு பெரிய அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டாலும், ஒழுக்கச் சீர்கேடுகளான காட்சிகள் காட்டப்பட்டாலும் அவற்றையெல்லாம் அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை, ஆட்சியாளர்களும் பெரிதுபடுத்துவதில்லை. மாறாக இதுபோன்ற சீரழிவுகளை வளர்க்கும் சினிமாவுக்கு அரசாங்க பணத்திலிருந்து மானியம் கொடுத்து உற்சாகப்படுத்துவதைத் தான் பார்க்க முடிகிறது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு ஆட்டக்காரிகள் நிகழ்த்துகின்ற ஆட்டங்களைப் பார்த்து இளைஞர்கள் முதல் கிழவர்கள் வரை சீர்கெட்டு போகின்ற நிலை நாடு முழுவதும் பரவி வருகின்றது. விபசாரத்தை ஊக்குவித்து அதற்கு அங்கீகாரம் கொடுத்து சமுதாயத்தில் பரவ விட்டிருப்பது சினிமாவில் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஒரு பெண்ணை எப்படியெல்லாம் தன் வலையில் சிக்கவைக்கலாம், அவளுடைய கற்பை எப்படி சூரையாடலாம் என்பன போன்ற காட்சிகளை சினிமாவில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது கணவனுடன் தனி அறையில் ஈடுபடவேண்டிய காட்சிகளையெல்லாம் திரையில் காட்டி உணர்வுகளை கிளரிவிடுகின்ற கேவலமான கலாச்சாரத்தை சினிமாவில் தான் பார்க்க முடிகிறது.

ஒரு பெண் மறைக்க வேண்டிய அங்க அவயங்களைத் திறந்து காட்டுகின்ற காட்சிகள், தன்னுடைய உடலைக் குலுக்கி குலுக்கி ஆடி ஆடவர்களை ஆடவைக்கின்ற அவலக்காட்சிகள் இல்லாத சினிமா எடுபடுவதில்லை என்ற அளவிற்கு நிலைமை கீழ்த்தரமாக உள்ளது.

நிதி நிறுவனங்களில் எப்படி கொள்ளையடிக்க வேண்டும்? வீடுகளில் தொழில் ஸ்தாபனங்களிலும் எவ்வாறு திருட வேண்டும் என்ற பயிற்சியெல்லாம் சினிமாவில் கொடுக்கப்படுகிறது. அதைப்பார்த்து கொள்ளைக்காரர்கள் செயல்படுத்திக் காட்டுகின்றார்கள்.

பொதுவாக நாட்டில் நடக்கின்ற எல்லாவிதமான தீவரவாதங்கள், பயங்கரவாதங்கள் வன்முறை, கற்பழிப்புகள், கொலை, கொள்ளை போன்ற சீரழிவுகள் சினிமாவினால் தான் ஏற்படுகிறது.

ஒரு பெண் சினிமாவில் நடித்துவிட்டால் அவளை ஏதோ பெரிய சாதனை படைத்தவள் போன்று சமுதாயத்தில் தனி மதிப்பும் மரியாதையும் கொடுத்து, வானளாவ தூக்கிப் புகழ்வதும், மீடியாக்களில் அவர்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதும் வியாபாரப் பொருட்களின் விளம்பரங்களில் அவர்களை இடம்பெறச் செய்வதும், சமுதாய விழாக்களில் அவர்களை இடம்பெறச்செய்வதும் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.

சினிமாக்காரிகளின் அரை நிர்வாணப்படங்கள் முகப்பில் இடம் பெறுகின்ற பத்திரிகைகள் தான் சிறந்த பத்திரிகை என்று கருதும் அளவிற்கு எந்த பத்திரிகையை எடுத்தாலும் மானம் கெட்ட பண்பற்ற சினிமாக்காரிகளின் படங்கள் தான் பெரிய அளவில் இடம் பெறுகின்றன.

சினிமாவில் முத்தக் காட்சிகள் இடம் பெறுவதை பெரிய தவறாக இந்திய மக்கள் கருதிய காலங்கள் மாறி இப்போது எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு பொதுமக்களுக்கு முன்னிலையிலேயே எங்கோ உள்ள சினிமாக்காரனும், எங்கோ உள்ள சினிமாக்காரியும் கட்டிப் புரண்டு முத்தம் கொடுக்கின்ற கேவலமான வெட்கம் கெட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்ற நிலைக்கு நாடு சீரழிந்து செல்கிறது.

எய்ட்ஸ் நோய் பரவுவதற்கு சினிமா தான் காரணம். அப்படியிருக்க எய்ட்ஸ் ஒழிப்பு நிகழ்ச்சியில் சினிமாக்காரிகளை கொண்ட வந்து பங்கு பெறச் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியாவைச் சார்ந்த ஒரு சினிமாக்காரியை வெளிநாட்டைச் சார்ந்த சினிமாக்காரன் நான்காயிரம் லாரி டிரைவர்கள் முன்னிலையில் கட்டிப்பிடித்து சரமாரியாக வெறியோடு முத்தங்கள் கொடுத்து காமவெறியை வெளிப்படுத்திய நிகழ்ச்சி ஓர் அளவாவது வெட்க உணர்வுள்ள இந்தியர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிபோய் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச நாட்களில் வீதியிலே திரிகின்ற நாய்கள் தங்களுக்குள் புணர்ந்து கொள்வதுபோன்று மனிதர்களும் இந்திய தெருக்களிலே நடந்து கொள்கின்ற நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

மானமுள்ள இந்தியப் பெண்கள் திரண்டு சினிமாவில் உள்ள ஒழுக்கவீனங்களுக்கு எதிராக குரல்கொடுத்து சீரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது கடமையாகும்.

தஸ்தகீர்.

Saturday, August 23, 2008

திருமணங்களில் வீணடிக்கப்படும் குடிநீர்

நீரின்றி அமையாது உலகு:

எத்தனை வகை வகையாக விருந்தளித்தாலும் அவற்றுடன் குடிக்க தண்ணீர் இல்லையென்றால் விருந்து ருசிக்காது. அந்த வகையில் இன்றைய விருந்துகளில் குடிநீராக பயனபடுவதும் பரிமாறப்படுவதும் பாக்கெட் தண்ணீர் எனப்படும் பிளாஸ்டிக் உறையில் அடைக்கப்பட்ட தண்ணீர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் வரும் இவ்வகையான பாக்கெட் தண்ணீரில் ஒரு வகையான (பிளாஸ்டிக்) நாற்றம் சேர்ந்து வருவதால் இதனை தற்போது யாரும் விரும்பி அருந்துவதில்லை. திருமண நிகழ்ச்சியின்போது உணவு உண்டபின் கை கழுவுவதற்கே அதிகம் பயன்படும் இந்த பாக்கெட் தண்ணீர் அவசரத்திற்கு மட்டும் (தொண்டையில் உணவு அடைபடும் தருணங்களில்) சிலர் அருந்துகின்றனர். மற்றபடி இதனை அதிகப்படியாக உபயோகிப்பது (குடிப்பதற்கும் சரி, விளையாடுவதற்கும் சரி) குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமியர்களே.


கெமிக்கல் கலந்த இன்கினால் பிரிண்ட் செய்யப்படும் தயாரிப்பு தேதிகூட (சாப்பாட்டு தட்டின் மீது வைத்து தருவதால் அந்த தேதியும்) மறைந்து அழிந்து சற்று இளஞ்சூடாக தண்ணீர் இருப்பதால் இது பல வியாதிகளுக்கு காரணமாக அமைகிறது என்கிறார் ஒரு சமூக ஆர்வளர்.


எக்ஸ்ட்ரா தகவல்:
'நீரின்றி அமையாது உலகு'. ஆனால், இந்த காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று கூறி, கலப்பட தண்ணீரினை கேன்களில் அடைத்து விற்கும் கும்பல் ஒன்று சென்னையில் ஆங்காங்கே அலைகிறது. அசுத்தமான தண்ணீர் பாக்கெட் மினரல் வாட்டர் என்று விற்ற காலம் போய், இப்போது போலி ஐ.எஸ்.ஐ. முத்திரைகளுடன் கேன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்ற வாரமும், தாம்பரம் பகுதியில் நிக்ரா மினரல் வாட்டர் நிறுவனம் நிக்ரா, மானட்சா, கிளாஸ், ஜாய், இமேஜ் என்னும் பெயர்களில் போலி ஐ. எஸ். ஐ. முத்திரைகளுடன் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, 1986 ஆண்டு இந்திய தர நிர்ணய சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் அம்பதாயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் (ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ) விதிக்கப்படலாம்.


இது போன்ற போலிகள் பற்றி நாம் வேறெங்கிலும் காண்போமேயானால், கீழ்க்காணும் முகவரிகளில் புகார் தெரிவிக்கலாம்:
இந்திய தர நிர்ணய நிறுவனம்,
தென் மண்டல அலுவலகம்,
சி. ஐ. டி. வளாகம்,
4வது குறுக்கு சாலை,
தரமணி, சென்னை – 113.
தொ. பே.: 10914422541087,
மின்னஞ்சல் : sro@bis.org.in

----நன்றி:சகோ.M.Gee.ஃபக்ருத்தீன்
http://mypno.blogspot.com/2008/08/blog-post_22.html

Friday, August 22, 2008

புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள் : இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த மே 13 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணையானது, சி.பி.ஐ., ரா, ஐ.பி. உள்ளிட்ட அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் காவிமயமாகியிருப்பதை மீண்டுமொருமுறை அம்பலப்படுத்திக் காட்டி விட்டன. இக்குண்டு வெடிப்புகள் நடந்த மறுநிமிடமே, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்இதொய்பா, வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹர்கத் அல்ஜமாத்இஇஸ்லாம், இந்திய முஜாஹிதீன் உள்ளிட்ட சில முசுலீம் தீவிரவாத அமைப்புகள் மீது பழி போடப்பட்டது. குண்டு வைத்த சதிகாரர்கள் என விளம்பரப்படுத்தப்பட்டு, ஓரிரு முசுலீம்களின் உருவப் படங்கள் வெளியிடப்பட்டன. இராசஸ்தான் மாநில போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், 500 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கைகளின் மூலம், குண்டு வெடிப்போடு தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாகிவிட்டது; இனி வழக்கு நடத்தி, அவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டியது தான் பாக்கி என்கிற மாதிரியான பிம்பம் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, இந்துக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கு சம்பந்தமான புலனாய்வுகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன என்பதும்; போலீசார் தங்களின் தோல்வியை மறைத்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே, கைது எண்ணிக்கையைக் காட்டியுள்ளனர் என்பதும் தற்பொழுது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இக்குண்டு வெடிப்பை நடத்திய சதிகாரர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட உருவப்படங்கள் தற்பொழுது போலீசாராலேயே கைகழுவப்பட்டு விட்டன; ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வகை வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் கூறியதை, அவர்களே இப்பொழுது மறுத்துள்ளனர். இக்குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட 500 பேரில், 499 முசுலீம்கள் குற்றமற்றவர்கள் எனக் "கண்டுபிடிக்கப்பட்டு' விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். முகம்மது இலியாஸ் காரி என்ற ஒருவர் மீது மட்டும்தான் இராசஸ்தான் போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனினும், அந்த வழக்கிற்கும், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பிற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. கள்ள பாஸ்போர்ட் வைத்திருந்ததாக காரியின் மீது வழக்கு தொடர்ந்துள்ள போலீசார், அதற்கான ஆதாரங்களைக் கூட காட்ட மறுத்து வருகிறார்கள்.
சிறப்புப் புலனாய்வுப் படை, முகம்மது காரியை மே 22ஆம் தேதி பரத்பூர் எனும் ஊரில், அவரது வீட்டில் வைத்து கைது செய்தது; ஆனால், அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், காரியை ஜெய்ப்பூரில் வைத்து ஜூன் 8ஆம் தேதிதான் கைது செய்ததாக போலீசார் புளுகியுள்ளனர்; உள்ளூர் போலீசாருக்குக்கூடத் தெரியாமல், பரத்பூரிலிருந்து காரியைக் கைது செய்து கடத்திச் சென்ற சிறப்புப் புலனாய்வுப் படை, மூன்று நாட்கள் கழித்துதான் காரியை ஜெய்ப்பூரில் வைத்து விசாரிப்பதாக, அவரது உறவினர்களுக்குத் தகவல் அளித்திருக்கிறது. காரியோடு சேர்த்து, 15 வயது முசுலீம் சிறுவனையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றது சிறப்புப் புலனாய்வுப் படை.
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு தொடர்பாக, முகம்மது இலியாஸ் காரி உள்ளிட்ட 500 முசுலீம்களைக் கைது செய்து விசாரிக்க, மத்தியமாநில போலீசார் முடியைப் பிய்த்துக் கொண்டோ, மூளையைக் கசக்கிக் கொண்டோ புலனாய்வு செய்யவில்லை. வங்கதேச அகதிகளைப் போலத் தெரியும் முசுலீம்கள் அல்லது குடும்ப அட்டை இல்லாத முசுலீம்கள்; ஜெய்ப்பூர் நகரில் ரிக்ஷா இழுக்கும் அல்லது குப்பை பொறுக்கும் முசுலீம்கள்; இந்திய முசுலீம் மாணவர் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன்பாக, அவ்வமைப்பில் செயல்பட்ட முசுலீம்கள்; முசுலீம் மத குருமார்கள்; மதரசாக்களில் ஆசிரியர்களாக வேலை பார்க்கும் முசுலீம்கள் இந்தப் பிரிவினரைக் குறிவைத்துதான் போலீசின் தேடுதல் வேட்டையே நடந்திருக்கிறது.
இராசஸ்தானின் மாதோபர் மாவட்டத்திலுள்ள உதய் கல்யாண் என்ற ஊரில் இருக்கும் மதரசாவில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் முகம்மது சஜித்துக்கும், போலீசார் வெளியிட்டிருந்த குண்டு வெடிப்பு குற்றவாளிகளின் உருவ அமைப்புக்கும் எவ்வித ஒற்றுமையும் கிடையாது; எனினும், முகம்மது சஜித், பொது மக்களின் எதிர்ப்பையும் மீறிச் சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார். முகம்மது சஜித், இந்திய முசுலீம் மாணவர் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன்பாக, அவ்வியக்கத்தின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்தார் என்பதுதான் போலீசாரின் சந்தேகத்துக்குப் பின்னிருந்த ஒரே காரணம்.
மின்னணுப் பொறியாளரான ரஷீத் ஹூசைன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அவர் பெங்களூருவில் படிக்கும் பொழுது, இந்திய முசுலீம் மாணவர் இயக்கத்தின் தொடர்பில் இருந்தார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டார். ஹருண் ரஷீத், இப்திகார் அகமது, முகம்மது ஆஸம் உள்ளிட்ட பலரும் முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காகவே, மதவாத கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு, சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பும், துக்கமும் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதனைப் போன்றே, போலீசாரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இந்த 500 முசுலீம்களின் இழப்பையும் துக்கத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

நன்றி‍: புதிய ஜனநாயகம்.

Thursday, August 21, 2008

ஆலிம்களின் நிலை

நமதூரில் நடக்கும் அனாச்சாரங்களைத் தட்டிகேட்பதில் ஒரேயொரு ஆலிம் தவிர மற்ற எல்லா ஆலிம்களும் கடமை தவறியதாகச் சொன்னதில் முழு உண்மையில்லை என்பதையும், ஆலிம்களுக்கு உரிய கண்ணியம் காக்கப் பட்டக் காரணத்தால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வழக்குகளைத் தீர்க்கும் பஞ்சாயத்துத் தீர்ப்பாயமாக அதிரை விளங்கியது என்பதை முந்தைய பதிவிலும் பார்த்தோம்.தற்போதைய நமதூர் ஆலிம்களின் நிலையை நடுநிலையுடன் அலசினால்,அவர்கள் மீதான விமர்சனங்களின் நியாயம் விளங்கும். எனவே, முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக இப்பதிவை வாசிக்கவும்.

நமதூரில் ஹாபிழ்களாகவும் ஆலிம்களாகவும் ஏதோ நேர்ச்சைக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகளைப் போன்று குறிப்பிட்ட சிலரே பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறார்கள்.பெரும்பாலும் பள்ளிக்கூடம் செல்லாமல் அல்லது வீட்டுக்குக் கட்டுப்படாத பிள்ளைகளைத் திருத்தி தர்பியத் பண்ணுவதற்காக மதரஸாவிற்கு அனுப்புகிறார்கள் அல்லது ஆலிம்சா வீட்டில் பிறந்த பாவத்திற்காக(?) பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டு மதரஸாவிற்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

பெண்களைப் பொருத்தவரை, பருவ வயதடைந்த பின்னர் ஆண்கள் பயிலும் பள்ளிக்கூடம் சென்றால் கெட்டுப்போய்விடக்கூடும் (?!) என்று பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு,வீட்டில் 'சும்மா' இருக்காமல் குர்ஆன் ஓதிப் பட்டம் பெற்றால் திருமணத்திற்கான உபரித்தகுதியாக இருக்குமென்ற காரணத்தால் தான் பெரும்பாலான பெண்கள் மதரஸாவிற்கு அனுப்பப் படுகிறார்கள்.

(உலகக் கல்வி, (மறுமை)மார்க்கக்கல்வி என்று முஸ்லிம்கள் கல்வியைப் பிரித்தததால் பொதுக்கல்வி என்றால் என்னவென்றே அறியாமல் சிலரும், மார்க்கக் கல்விக்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று சிலரும் கல்வியை விட்டு தூரமாகி விட்டார்கள். இதையும் மீறி இரண்டு கல்வியிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மிகச் சொற்பமானவர்களே இருக்கிறார்கள். மதரஸாக்களில் நவீன கல்விகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பது ஆறுதலான செய்தி!)

ஆலிம், ஹாபிழ் பட்டம் பெற்றவர்களில் பலருக்கு உலகக் கல்வியின்றி போனதால் சாதாரண டைப்பிஸ்ட் வேலைக்குக்கூடத் தகுதியற்று கருணை அடிப்படையில் கிடைக்கும் வேலைகளைச் செய்து காலம்தள்ள வேண்டும். தெரிந்த நிறுவனங்களில்கூட "குர்ஆன் ஓதி முடித்திருக்கிறார்;ஐவேளை தொழுவார்! பொய் பேசமாட்டார்" என்று இவையெல்லாம் ஆலிம்களுக்கும் ஹாபிழ்களுக்கும் மட்டுமே உரித்தானதுபோல் பேசி ஏதாவது ஒரு வேலை போட்டுக் கொடுங்க! என்றுதான் பெரியமனிதர்களின் சிபாரிசுகள் இருக்கும்!

குர்ஆனைக் கற்ற/ கற்பித்த பாவத்திற்காக!?! மற்றவர்ர்களைப்போன்று சிகை, ஆடை அலங்காரங்களைப் பண்ண முடியாது! ஜிப்பா, தொப்பி, தாடி, மழித்த மீசை இவைதான் இவர்களின் அடையாளங்கள்! இவற்றை விடுத்து வேறு தோற்றத்தில் காணப்பட்டால் "பேருக்குத்தான் ஆலிம்சா! போட்டிருக்கிற ட்ரஸைப் பாரு!" என்ற எள்ளலுடன் அர்ச்சனைகளையும் ஏற்க வேண்டும்! சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆலிம் என்றால் அவருக்கு இவ்வுலகில் எதுவுமேயில்லை என்ற மனப்பான்மை தெரிந்தோ தெரியாமலோ நம்மில் பலரிடம் குடிகொண்டிருந்தது.

பொதுக்கல்விக்குச் சீருடை, போக்குவரத்து, டியூசன் போன்ற இத்யாதிகளை பேரம்பேசாமல் செலவளிக்கத் தயங்காத நாம்,ஈருலகிலும் நன்மை பயக்கும் குர்ஆனின் அரிச்சுவடியைப் போதிக்கும் பள்ளி உஸ்தாதுகளுக்கு அவ்வாறு மனமுவந்து வழங்குவதில்லை.பள்ளிகளில் பெரும்பாலும் உஸ்தாதுகளாக லெப்பைக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே இருந்து வந்தார்கள். இவர்கள்தான் தேவையற்ற அனாச்சாரங்களை மார்க்கமாக்கி, உண்மையான ஆலிம்களின் தரத்தைக் குறைத்தார்கள்.தகுந்த ஊதியம் வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு தொழிகளில் ஈடுபடுத்தியிருந்தாலோ மார்க்கத்தின் பெயரால் நடந்த பல அனாச்சாரங்கள் தடுக்கப்பட்டிருக்கக் கூடும்!

பெரும்பாலும் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் விழாக்களில் கிராஅத் ஓதவும், விருந்து வைபங்களில் பாத்திஹா ஒதவும், ரமழான் மாதத்தில் தராவிஹ் தொழவைக்கவுமே ஆலிம்களும் ஹாபிழ்களும் நம் நினைவில் வருகிறார்கள். இந்தளவுக்குத்தான் இருந்தது நாம் அவர்களுக்கு வழங்கிய அங்கீகாரம்! இடித்துரைப்பவரரை ஆலோசகராகக் கொண்டிராத மன்னன்கூட கெட்டழிவான் என்பது தெரிந்தும், நம்மில் எத்தனை பேர் ஆலிம்களின் இடித்துரைத்தலைக் கேட்டிருக்கிறோம்?

தெருக்களில் விளையாடும் பருவந்தொட்டு ஆலிம்களைக் கண்டால் சந்து பொந்துகளில் ஓடிஒளிந்தவர்கள் அல்லவா நாம்? நோன்பு, பெருநாள் பிறை விசயத்தில் நம்மில் எத்தனைபேர் ஆலிம்கள் பேச்சைக் கேட்டிருக்கிறோம்? அப்போதெல்லாம் எங்கிருந்தார்கள் குறைகூறும் 'திடீர்' SO & SO வாதிகள்?தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மதரஸாக்களை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி இஸ்லாத்தை அழித்தொழிக்கும் ஒருகூட்டம் குர்ஆனைக் கற்றவர்களை தனிமைப் படுத்தியதென்றால்,இன்னொரு கூட்டம் இவர்களை எள்ளி நகையாடி,வசைபாடி,தாங்களே இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லி இறைமறையை நெஞ்சில் ஏந்திய ஆலிம்களுக்கிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் கெடுத்தார்கள்.

ஹத்து,தாயத்து எழுதி/ஓதிக்கொடுப்பவர்களுடன் குர்ஆன் ஓதிக் கொடுக்கும் மாண்புமிகு ஆலிம்களையும் சேர்த்தனர். வாழும் வகையற்று,வயிற்றுப் பிழைப்பின்றி குர்ஆன் மதரஸாவில் ஆசிரியர் தொழிலுக்கு ஊதியம்பெற்றக் காரணத்தால் ஆலிம்களை 'புரோகிதர்கள்' என்று கொச்சைப் படுத்தினர்! இத்தனை இழிவுகளையும் அவமானங்களையும் சுமந்து, விடாப்பிடியாக சுன்னத்தான அடையாளங்களுடன் நம்கண்முன் உலாவிக் கொண்டிருக்கும் ஆலிம்களைப் பற்றி யாரோ ஒரு 'உலவி' சொன்னதைக் கேட்டு 'உண்மை' என்று வசைபாடுவது நியாயமா? என்பதை வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டு விடுவோம்!

<<<அபூஅஸீலா-துபாய்>>>

Wednesday, August 20, 2008

அதிரை எக்ஸ்ப்ரஸ் எங்கே செல்கிறது?

அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களாக நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களால் இதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிரை/அதிரைவாசிகள் குறித்தச் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளவும்,மறைந்துகிடக்கும் எழுத்தாற்றலையும் கருத்தாக்கமாக்கி ஊடகப் பயிற்சி பெறவுமே அதிரை எக்ஸ்ப்ரஸ் என்ற இத்தளம் தொடங்கப்பட்டது.

அல்லாஹ்வின் பேரருளால் நமதூர் அல்அமீன் பள்ளிவாசல் பிரச்சினையை உலகலாவிய அளவில் நம்மக்களிடம் எடுத்துச் சென்று, பொய்வழக்குகளில் தேடப்பட்டவர்கள் சட்டரீதியாக வெளிவருவதற்குத் தேவையான நிதியுதவி கிடைப்பதில் பெரும்பங்காற்றியது. மட்டுமின்றி, அதிரை நகரப் பேரூராட்சி மன்றத்தின் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வையும், தொடர்ந்த அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் ஓரளவு வெளிச்சம்போட்டுக் காட்டியது.

மேலும், சிறுநீரகம் மற்றும் இதய சிகிச்சைக்கு மருத்துவ நிதியுதவி கோரிய விளம்பரத்தைப் முகப்பில் பிரசுரித்ததுடன்,சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அரசின் நிதியுதவி கிடைக்கவும் உதவியது.அல்ஹம்துலில்லாஹ்!

இணையமும் ஈமெயிலும் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையில் நம் மக்கள் குறித்தச் செய்திகளை ஊடகங்களில் தேடிப்பிடித்து தேவைப்படின் மொழியாக்கம்,எழுத்துருமாற்றம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்து வருகிறோம். எழுத்தாற்றல் மிக்கவர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர அதிரை எக்ஸ்ப்ரஸ் ஓர் வடிகாலாகச் செயல்படுகிறது.

எழுத நேரமில்லாதவர்கள் அரட்டை அரங்கச் சாளரத்தில் ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துக்களைப் பதிக்கவும், பின்னூட்டம் மூலமாக தொடர்புடைய அல்லது மாற்றுக் கருத்துக்களையும், எவ்விதத்தடையுமின்றி பதிக்கவும் வசதியுள்ளது. சுருக்கக்கூறின் ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்த நமது செய்திகளை குறிப்பாக அதிரைவாசிகள் குறித்தவற்றை ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொள்ளும் நோக்கில்தான் இலவசமாகக் கிடைக்கும் இத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.

எவ்வித முன்முடிவுமின்றி, விருப்பு/வெருப்பின்றி, எந்த இயக்கத்தையும் சார்ந்து/எதிர்த்து எழுதாமல் உண்மையை உள்ளபடிச் சொல்லவே அதிரை எக்ஸ்ப்ரஸை கூட்டாக,சேவை மனப்பான்மையுடன் இணைந்து இயங்கி வருகிறோம்.

இணையத்தில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு யார் வேண்டுமானாலும் இலவசமாக இதுபோன்ற சேவையைச் செய்ய முடியும்.ஆனால் தனிநபர் கையாளும்போது தெரிந்தோ தெரியாமலோ தன் விருப்பு வெருப்புகளுக்கு இடமளித்து நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு கூட்டாக மாறுபட்ட கருத்துக்களையும் அனுமதித்து வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறோம். நமதூரைச் சார்ந்தவர்கள் தயங்காமல் இங்கு சுதந்திரமாக எழுத அனுமதிக்கிறோம். சிலபாதுகாப்புக் காரணத்திற்காகவும், நம்கபத்தன்மையை உறுதி செய்வதற்காகவும புதிய பதிவர்களின் உண்மை அடையாளங்களை அறிந்து கொண்டு தளத்தில் எழுத அனுமதிக்கிறோம்.

சமீபநாட்களாக அரட்டை மற்றும் பின்னூட்டங்களில் கருத்திடுபவர்கள் நிதானம்தவறி, உணர்ச்சிவயப்பட்டு, பெயரை மட்டும் வைத்து யாருடன் உரையாடுகிறோம் என்றே தெரியாமல் மனம்போக்கில் கருத்தாடுகிறார்கள். ஊடகங்களில் நமதூர் பெயர் சமீபநாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டதால் பத்திரிக்கையாளர்கள்,உளவுத்துறையினர், ஊடகத்துறையினர் உட்பட நமதூர் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடும்போது அதிரை எக்ஸ்ப்ரஸ் முன்னனியில் வந்து நிற்பதால் இங்கு நடைபெறும் கருத்துப்பரிமாற்றங்கள் பலராலும் கவனிக்கப்படுகிறது என்பதை நினைவுறுத்துகிறோம்.

தனிநபர் விமர்சனம், இயக்கவெறி,தெருப்பாகுபாடு போன்ற ஊர்ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கும் செயல்களை அதிரை எக்ஸ்ப்ரஸ் அனுமதிக்காது. சுயமாக எழுதலாம் என்பதற்காக கட்டுப்பாடின்றி இதில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குறைந்தபட்சம் இத்தளத்தில் மென்மேலும் உரையாட முடியாதவாறு தடுக்க முடியும். தேவைப்பட்டால் நிரந்தரமாக தடுக்கவும் மட்டுறுத்தல் செய்யவும் முடிந்தபோதிலும் ஒருசிலரின் பொறுப்பற்றச் செயலுக்காக பலருக்கும் பயன்படும் இவ்வசதிகளை தடுக்க விருப்பமின்றியே தவிர்த்து வருகிறோம்.

சிலமாதங்களுக்குமுன் நமதூரில் தனிநபர்களிடையே நடந்த ஹராமானச் செயலை யாரோசில விஷமிகள் சீடிக்களாகவும்,நோட்டிஸாகவும் சிலருக்கு அனுப்பி வைத்து "அதிரை எக்ஸ்ப்ரஸுக்கு நன்றி"என்றும் குறிப்பிட்டுள்ளது எங்கள் கவனத்திற்கு வந்து அதிர்ச்சி அடைந்தோம். அவர்களுடன் அதிரை எக்ஸ்ப்ரஸிற்கு எவ்விதத் தொடர்புமில்லை என்பதையும் இங்கு தெளிவு படுத்த விரும்புகிறோம்.

சுதந்திரமாக எழுத வாய்ப்பளித்திருக்கும்போது பதிவாக, முடிந்தால் சொந்தப் பெயருடன் அல்லது அதிரைவாசிகள் அறிந்து கொள்ளும்படியான புணைப் பெயருடன் எழுதலாம். இனியும் சம்பந்தப்பட்டவர்கள் உணர மறுத்தால் மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கும் நிர்ப்பந்தத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினருக்குத் தரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்தில் பொதுவானச் செய்திகளை அந்தந்த தளங்களில் சென்றே படிக்கும் வசதி இருப்பின் அவற்றைக் காப்பி பேஸ்ட் செய்யாமல் சுட்டியை அரட்டை அரங்கத்திலோ அல்லது பின்னூட்டமாகவோ சுட்டலாம். விகடன், நக்கீரன் போன்ற இணைய சஞ்சிகைகளில் இடம்பெறும் செய்திகளை பணம் செலுத்தி வாசிப்பவர்கள் விரும்பினால் யூனிக்கோட் எழுத்துருவில் சேமித்து மின்மடலாக அனுப்பி வைத்தால் அதிரை எக்ஸ்ப்ரஸ் பரிசீலித்து பதிவாக மீள்பதிவு செய்யலாம்.

அதிரை குறித்த செய்திகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் முடிந்தவரை நமதூர் குறித்தச் செய்தியைக் கண்டவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்க. அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா,லண்டன், மலேசியா, சிங்கப்பூர்,வளைகுடா நாடுகள் மற்றும் சென்னை,அதிரை எனப் பகுதிவாரிச் செய்திகளை எழுத விரும்பும் அதிரைவாசிகள் தயங்காமல் மடல் தொடர்பு கொள்ளவும். தேவைப்படின் வலைப்பூ குறித்த பயிற்சியுடன் எங்களுடன் இணைந்து எழுதவும் வாய்ப்பளிக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தயவு செய்து தெருப்பாகுபாடு, இயக்கவெறி, தேவையற்ற தனிநபர் சாடல் / துதிபாடல் போன்றகருத்துப் பரிமாற்றங்களை அதிரை எக்ஸ்ப்ரஸ் அரட்டை அரங்கிலோ அல்லது பின்னூடத்திலோ யாரும் செய்ய வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இங்கு நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் நம்மனநிலையை பிறர் உடனடியாக அறிந்து கொள்ள உதவுகிறது என்பதை மனதில் இருத்தி கண்ணியமாகவும், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றக் களமாக அதிரை எக்ஸ்ப்ரஸ் தொடர்ந்து இயங்க உதவுங்கள்.

இச்சேவையை மென்மேலும் சிறப்பாகச் செயல்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மின்மடல் மூலமோ அல்லது பின்னூட்டமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ளலுக்கு நன்றி!

அன்புடன்,

அதிரை எக்ஸ்ப்ரஸ் குழு
adiraixpressஅட்gmailடாட்com

ஊடகங்களில் தொடரும் தனிமனிதத் தாக்குதல்கள்

ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை.

ஒரு சமுதாயம் முன்னேற்றம் பெறுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் அச்சமுதாயத்தின் இளவல்கள்தாம் பெரும் பங்காற்றக் கூடியவர்கள். அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் சாதித்துக் காட்டுவார்கள். அவர்களை நெறிப் படுத்தத் தவறினால் தங்களுக்கும் தம் தலைவர்களுக்கும் தம் சமுதாயத்திற்கும் அவர்களால் விளையும் தீங்குகள், அவமானங்கள் எல்லை மீறிவிடும்.

காட்டுப்பாடற்ற இணைய வசதியான மின்னஞ்சல் என்ற ஊடகம் இயக்க வெறிபிடித்த இளைஞர்களிடம் சிக்கியபோது தம்மை மறந்தனர்; தரம் தாழ்ந்தனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் சில முஸ்லிம் இயக்கங்களின் இளவல்களின் கரங்களில் மின்னஞ்சல் வசதி சிக்கிப் படாத பாடுபட்டது. மாற்றி மாற்றித் தூற்றிக் கொள்வற்கும் அவற்றைப் பெறுபவரது அனுமதியின்றிப் பலருக்கும் அனுப்பி வைப்பதுமாக ஃபித்னாக்களைப் பரப்புவதில் இயக்க இளவல்கள் படு உற்சாகத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது நமக்குக் "குரங்கு கையில் பூமாலை" பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

நிலைமை மாறுதலடைந்தது; அதாவது மிக மோசமடைந்தது! இலவச வலைப்பூக்கள் இணையத்தில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து இளவல்கள் ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டு, ஷைத்தானின் குணங்களை ஆவணப் படுத்தத் தொடங்கினர்.

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கும் கொள்கை விளக்கங்களுக்கும் அருமையாகப்பயன் படத்தக்க வகையில் அல்லாஹ் வழங்கியுள்ள அற்புதமான ஊடகங்களான மின்னஞ்சலையும் வலைப்பூக்களையும் "முகத்திரையைக் கிழிப்போம்", "தோலுரித்துக் காட்டுவோம்", "வேஷத்தைக் கலைப்போம்" போன்ற கொள்கை(?) முழக்கங்களோடு கட்டற்ற இணைய வசதியை எதிர்க் கருத்துக் கொண்டவர்களை நோக்கி இளவல்கள் திருப்பினர். தாக்குதல்-எதிர்த் தாக்குதல் ஆகிய பாவங்களில் சிந்தனையைச் செலவு செய்து, தங்களது பொன்னான நேரத்தை வீணடிப்பதில் வீறு கொண்டு எழுந்தனர்.

"இளவல்களின் ஆர்வக் கோளாறுக்குத் தலைவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நாம் நல்லெண்ணம் கொண்டிருந்ததைக் கடந்த 17ஆம் தேதி (17.08.2008) இரவு விண் தொலைக்காட்சி நிகழ்ச்சி உடைத்துப் போட்டது.

ரமளான் பிறை, ஈதுப் பெருநாள் ஆகியவற்றுள் மாற்றுக் கருத்துகள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பின் நிர்வாகிகளை, "இறையச்சம் அற்றவர்கள்", "கருத்தில் தெளிவில்லாதவர்கள்", "தனித்துக் காட்டுவதற்காகத் தவறுகளைச் செய்யச் கூடியவர்கள்" என்றெல்லாம் அவைப் பண்பாடுகளை மறந்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் திட்டித் தீர்த்தது மட்டுமின்றி, எதிர்க் கருத்துக் கொண்டவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிப் பார்த்ததுபோல் "உள்நேக்கம் தெரிகிறது" என்றார்கள்.

உதிரத்தை வியர்வையாக்கிக் காசு சம்பாதித்து அனுப்புபவனிடம் ஓயாமல் நிதி வேண்டிக் கோரிக்கை வைப்பவர்கள், அந்தக் காசு எதற்காகச் செலவிடப் படவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்களது கருத்துகளைச் சான்றுகளின் அடிப்படையில் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளில் வலுவில்லை என்றால், அதையும் - அதாவது கருத்தை மட்டும் - விமர்சனம் செய்ய வேண்டும்.

அதை விடுத்துத் தனிநபர் தாக்குதலைத் தொலக்காட்சியில் நடத்தித் தங்கள் இளவல்களுக்குப் போலி உற்சாகம் அளிக்க வேண்டாம் என்பது சம்பந்தப் பட்ட இயக்கத் தலைவர்களுக்கு நாம் முன்வைக்கும் வேண்டுகோளாகும்.

அமைப்புகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் தஃவாவுக்கென்று தருகிறார்கள்; ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து தாக்கிக் கொள்வதற்கல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் என்பதை இங்கு அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். தலைவர்கள் பண்பாட்டைச் சிறிது கைவிட்டால், இளவல்கள் முழுவதுமாகக் கைவிடுவர் என்பதையும் நினைவுறுத்துகிறோம்.

நல்லதை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை; எடுப்பதும் விடுப்பதும் அவரவர் உரிமை.

அனைத்து நிகழ்வுகளையும் தீர்ப்புக்காகக் கணக்கெடுத்து வைப்பது அல்லாஹ்வின் தனியுரிமை. இதை உணர்ந்து செயல் பட்டால் அனைவர்க்கும் பெருமை!

"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டக் கூடாது. நீதி செய்வீர்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! நீங்கள் செய்பவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான்" (அல்-குர் ஆன் 005:008).

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, August 19, 2008

உலகம் முழுவதும் ஒரே நாளில் நோன்பு மற்றும் பெருநாள்..?

எனதருமை சகோதரர்களே! இன்னும் சில நாட்களில் மகத்துவமிக்க மாதமான 'ரமளான்' நம்மை வந்தடைய உள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்புமிக்க ஈத் பெருநாளும் வர இருக்கின்றது. சமுதாயம் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு புனித கடமையாற்ற வேண்டிய இந்த சிறப்பு மிக்க மாதத்தில்தான் பிறை குறித்த சர்ச்சை ஏற்படுவதும், நோன்பு மற்றும் பெருநாட்களில் சில இடங்களில் மார்க்கத்திற்கு முரணான வகையில் சன்டை சச்சரவுகள் ஏற்படுவதும் சமீபகாலமாக நடைபெற்றுவரக்கூடிய ஒன்றாக இருக்கின்றது.

'எனது சமுதாயத்திற்கு மகிழ்ச்சியான தினங்கள் இரு பெருநாட்களே' என்ற நபிமொழியின் கருத்திற்கு மாற்றமாக அந்த மகிழ்ச்சியான நாட்களில் தான் இன்று பிறையின் பெயரால் பல பிரச்சனைகள் நடப்பதும், ஒரே ஊரைச் சார்ந்தவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டிய அந்த நாட்களில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பொருநாட்களைக் கொண்டாடுவதும் மிகவும் வருத்தத்திற்குறிய ஒன்று. இந்த நிலையில் இது சம்பந்தமாக சத்தியமார்க்கம் என்றத் தளத்தில் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் எழுதபட்டிருந்தது. அதை இங்கே பதிக்கின்றேன். இது சம்பந்தமாக ஏதேனும் மாற்றுக் கருத்து இருப்பின் சகோதரர்கள் பின்னூட்டமிடலாம். (பதிவாளன்)

கேள்வி:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று, மத்ஹபு மட்டும் நான்கா? என்று பிரச்சினை வந்த பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படி அறிவுப்பூர்வமாக கேட்டவர்களே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் என்று பிரிந்து நிற்கிறார்கள். ரமளான் மற்றும் ஹஜ்ஜூ பெருநாள்களை ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எப்படியோ அது எனக்குத்தேவையில்லை.

இதனால் எனக்கு குழப்பமாக உள்ளது. இன்று பெருநாள் தொழுவதா? இல்லை நாளை தொழுவதா? என்று குழப்பம். அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று பெருநாள் மட்டும் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் வேறுபடுமா? ஒரே நாளில் பெருநாள் கிடையாதா? ஷரிஅத் அடிப்படையில் ரமளான் மற்றும் ஹஜ்ஜூ பெருநாள்களை என்று கொண்டாட, குறிப்பாக தொழ வேண்டும்? விளக்கம் தேவை.
வஸ்ஸலாம் - முகம்மது சாதிக்.


தெளிவு:

வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துப் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலில் இக்கேள்வியை எழுப்பியச் சகோதரர் முகம்மது சாதிக் அவர்களுக்கு, மார்க்கத்தில் மேலும் அதிகப்பற்றை இறைவன் ஏற்படுத்துவானாக.

சமூகத்தில் பாமர முஸ்லிம்களுக்கிடையில் மட்டுமின்றி அறிஞர்களுக்கிடையேயும் நீண்டகாலமாக நிலவும் குழப்பமான ஒரு விஷயத்தைத் தொட்டு சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒத்தக் கருத்து இல்லாத விஷயங்களில் ஓரளவாவது தெளிவு ஏற்படும் வரை, மார்க்க அறிவு முழுமையாகப் பெறாதப் பாமர முஸ்லிம்கள் எந்நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே, இத்தகைய ஒன்றுக்கு மேற்பட்டக் கருத்துகள் நிலவும் விஷயங்களில் சந்தேகங்கள் எழ அடிப்படைக் காரணமாகும். இத்தகைய விஷயங்களில் ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் எனில் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

தொலைதூரத் தகவல் தொடர்பு ஏற்படாத காலத்தில் அந்தந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அவர்கள் முடிவு செய்யும் நாளே பெருநாளாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அக்காலத்தில் ஆசியா கண்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் எந்நாளில் பெருநாள் கொண்டாடினார்கள் என ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தெரியாது.

ஆனால், இன்று உலகம் சுருங்கி விட்டதோ எனும் அளவுக்கு உலகத்தின் எந்த ஒரு மூலையில் நடக்கும் சிறு சம்பவத்தையும் அந்த நிமிடத்திலேயே உலகம் முழுவதும் அறிவித்து விடும் அதிவேக நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை இக்கால மக்கள் பெற்றிருக்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என முஸ்லிம் மக்கள் வெவ்வேறு நாட்களில் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு வித்தியாசமான நாட்களில் பெருநாளைக் கொண்டாடுவது அதிவேகத் தகவலாக அறிவிக்கப்பட்டு இதனால், முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையுடன் ஒரே நாளில் ஏன் பெருநாள் கொண்டாடுவதில்லை? என அநேகரிடையே கேள்வியை எழுப்புகிறது.

சகோதரர் எழுப்பியுள்ளக் கேள்வி இன்று அவருக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமூகம் முழுமையாக வியாபித்துக் காணப்படும் குழப்பமே இக்கேள்வியின் ஊற்று கண்ணாகும். சகோதரர்கள் முதலில் அடிப்படையாக ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்கம் என்பது எப்பொழுதுமே தெளிவானது தான். அதனை விளங்கிப் பின்பற்றுபவர்களின் சிந்தனை மாற்றங்களே சில வேளைகளில் ஒரு சில விஷயங்களில் கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்துகின்றன. அது அவரவர்களின் ஆய்வு திறன், கல்வியறிவு, ஒரு பிரச்சனையை ஆழமாகக் கூர்ந்து நோக்கும் திறமை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றது.

இவ்வாறு கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களைப் பொறுத்தவரை அதனை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருபவர்களுக்கு அவ்வாய்வுகள் தவறாக இருப்பினும் குறைந்தபட்சம் ஒரு நன்மை கிடைத்து விடுகின்றது. சரியாக இருந்து விட்டால் இரு நன்மையும் கிடைத்துவிடுகின்றது. (இதனை நபிமொழிகள் வாயிலாக நாம் அறிந்துக் கொள்கின்றோம்)

இங்கு (ஒன்றும் அறியாத) மற்றவர்களைக் குறித்துத் தான் பிரச்னையே. மார்க்கத்தைத் தெளிவாக ஆய்ந்துப் பின்பற்ற இயலாதப் பாமரன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதில் கிடைத்து விட்டால் இங்கு கேட்கப்பட்டுள்ள பெருநாள் போன்ற அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் கொண்ட விஷயத்தில் எதைப் பின்பற்ற வேண்டும் என்பதுத் தெளிவாகி விடும்.

இஸ்லாம் எப்பொழுதுமே 'இபாதத்' (வணக்க வழிபாடுகள்) சார்ந்த மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சமூகக் கூட்டமைப்போடு நிறைவேற்றப் பணிக்கின்றது. அது தொழுகையாக இருந்தாலும் சரி, ஹஜ்ஜாக இருந்தாலும் சரி, ஜகாத்தாக இருந்தாலும் சரியே!

இதன் அர்த்தம், இஸ்லாம் எச்செயலின் மூலமும் சமூகத்தில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த நாடுகின்றது என எடுத்துக் கொள்ளலாம். அது போன்றே இந்தப் பெருநாள் விஷயத்திலும் தற்போதைய குழப்ப நிலைக்கு இஸ்லாம் ஒரு தீர்வை முன்வைக்கிறது.

'நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் நோன்பு, நீங்கள் நோன்பை விடும் நாளில் தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள் தான் ஹஜ்ஜிப் பெருநாள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்த ஆதரப்பூர்வமான நபிமொழி திர்மிதீ, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)

(அதாவது பிறை சம்பந்தப்பட்ட நோன்பு, மற்றும் பெருநாட்களில் ஜமாஅத் என்ன முடிவு எடுக்கின்றதோ அதன் படி நடக்கவேண்டும் என்பது இந்த நபிமொழியின் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது. காரணம் முஸ்லிம்களின் மகிழ்ச்சி மிக்க இருதினங்களான இந்த ஈத் தினங்களில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது என்பதற்காகவே இஸ்லாம் நமது நலன் கருதி இந்த விஷயத்தில் நமது முடிவுக்கே விட்டுவிடுகின்றது என்பதை நாம் விளங்கவேண்டும்)

இந்த நபிமொழியை மனதில் கொண்டு இன்றைய முஸ்லிம்களின் சமூகச் சூழலை எண்ணிப் பார்த்தால் ஒட்டு மொத்தமாக இப்பெருநாள் விஷயத்தில் அது பின்பற்றப்படாமையைக் கண்டு கொள்ளலாம். அதற்காக பிளவுப்பட்டு வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதில்லை. சமூக ஒற்றுமைக்காக அறிஞர்கள் தங்கள் பிடிவாதங்களைச் சற்றுத் தளர்த்திக்கொண்டு (அருகருகே அமைந்த ஊர்களிலாவது) ஒரே நாளில் பெருநாள் கொண்டாடக் கருத்தொற்றுமை ஏற்படுத்த முன்வர வேண்டும், இறைவன் அருள் புரியட்டும். நாம் ஏங்கிக் கிடக்கும் உலகளாவிய இஸ்லாமிய இமாரத் ஒன்று ஏற்பட்டு, இதற்கு முடிவான தீர்வு கிடைக்கும்வரை நாம் ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்திருக்கும் அந்தந்த ஊர் ஜமாஅத் முடிவு செய்யும் நாளில் அவ்வூர் மக்களுடன் இணைந்துப் பெருநாள் தொழுகை நிறைவேற்றுவதே சாலச் சிறந்ததாகும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: சத்தியமார்க்கம். காம்

Monday, August 18, 2008

ஆகஸ்ட் 15 - தடையை தாண்டிய இஸ்லாமிய படை

தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என மூன்று மாநிலங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்த போவதாக அறிவித்த தினத்தில் இருந்து இந்த அணவகுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட ஃபாசிச சக்திகளோடு உளவுத்துறை, காவல் துறை என அரசின் அனைத்து துறைகளும் கங்கனம் கட்டிக் கொண்டு களம் இறங்கின. காவல்துறையும், உளவுத் துறையும், ஃபாசிச சக்திகளோடு சோந்து பல சதித் திட்டங்களை திடு்டி நிறைவேற்றின. தமிழகத்தில் இது இன்னும் கனஜோராக நடந்தது

தமிழக காவல்துறை இன்னும் ஒரு படி மேலே போய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் முயற்சியில் இரங்கியது. இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள், வெடி குண்டு புரளிகள் கிளப்பப்பட்டன, தினமலர் போன்ற ஃபாசிச ஆதரவு பத்திரிகைகள் இந்த பதட்டத்தை சற்றும் குறையாமல் தகடக வைத்துக் கொள்ளும் முயற்சியல் ஈடுபட்டன. நமது சமுதாய காவலர்கள் என கூறிக்கொள்ளும் தமுமுக, முஸ்லிம் லீக் உட்பட ஆழும் கட்சி கூட்டனியில் அங்கம் வகிக்கும் எவரும் இதை கண்டிக்கவோ அல்லது அரசை எதிர்த்து போராட்டங்களை அறிவிக்கவோ இல்லை ஒரு சில அறிக்கைகள் வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்ததென இருந்து விட்டார்கள்.. சரி எதிர்க்கட்சியின் கூட்டனியில் இருக்கும் ததஜவோ இல்லை புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கும் இந்திய தேசிய மக்கள் கட்சியோ அரசின் முழு ஆதரவுடன் தமிழகத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நடந்து வரும் இந்த அடக்குமுறை குறித்து மூச்சு கூட விட மறுத்துவிட்டனர்.
அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை என இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன, முஸ்லிமகள் சித்திரவதைக்காளாக்கப்பட்டார்கள். இதை எந்த சமுதாய பத்திரிகைகைளும் கண்டிக்காத நிலையில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சில சகோதரர்களால் நடத்தப்பட்டு வரும் அதிரை எக்ஸ்பிரஸ் என்ற வலைப்பதிவு மட்டும் காவல்துறை மற்றும் ஃபாசிச பத்திரிகை சக்திகள் நடத்தி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை கண்டித்து பல கட்டுரைகளை வெளியிட்டு இந்த இக்கட்டான சமயத்தில் சமுதாயத்தின் குரலாக அவ்வப்போது ஒலித்து வந்தது சற்று ஆறுதலான செய்தி.
தமிழகமெங்கும் மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர், காவல்துறைக்கு முறைப்படி தகவல் அளித்து விட்டு நடந்த மனித நீதிப் பாசறையின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகள் ஃபாசிச பத்திரிகைகளால் பயங்கரவாத செயலாக சித்தறிக்கப்பட்டன. இதற்கு நமது சமுதாய அமைப்புகளே துனை போனது தான் கொடுமையிலும் கொடுமை. எப்படியாவது இந்த அணிவகுப்பை தடுத்து விடுவது என்று மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மிரட்டப்பட்டார்கள். இறுதியாக இந்த அணிவகுப்பை தடைசெய்து காவல் துறை ஆனை பிறப்பித்தது. இதை எல்லாம் எதிர் பார்த்திருந்த மனித நீதிப் பாசறை உடனடியாக இன்றும் சாகாமல் இருக்கும் இந்திய நீதித்துறையை அனுகியது. உடனடியாக காவல்துறையின் தடையை நீக்கிய நீதிமன்றம் மனித நீதிப் பாசறை தனது சுதந்திர தின அணிவகுப்பை எந்த சிரமமும் இல்லாமல் நடத்த உத்தரவு பிறப்பித்தது
திட்டமிட்டபடி கடந்த ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று அனைத்து தடைகளையும் தகர்த்த மனித நீதிப் பாசறையின் போராளிகள் தங்கள் சுதந்திர தின அணிவகுப்பை செவ்வென நடத்திக்காட்டினர். மதுரை மாட்டுத்தாவனி பேரூந்து நிலையம் அருகில் உள்ள விறகுபேட்டையில் வெள்ளையருக்கு எதிராக போராடிய இந்திய சுதந்திர போராளியான மாவீரன் மருதநாயகம் பெயரில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் சரியாக மாலை 3.00 மணிக்கு அணிவகுப்பு மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மறியாதைக்குறிய அபுபக்கர் சாஹிப் அவர்கள் அணிவகுக்க தயாரான முஸ்லிம் படையினரின் முதல் மறியாதையை பெற்றுக் கொள்ள அணிவகுப்பு துவங்கியது. 20 வீரர்கள் அடங்கிய "பேன்ட் ட்ரூப்ஸ்" எனப்படும் இசைக்குழுவினர் தேசிய ஒருமைப்பாட்டு கீதமான "ஸாரே ஜஹான் சே அச்சா" என்ற கீதத்தை உணர்ச்சி பெருக்போடு வாசிக்க மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் 800 போராளிகள் அணிவகுத்து செல்ல நிகழச்சிகள் ஆரம்பமாயின.

" இறைவனின் திருப்பெயரால் இந்த உறுதி மொழியை எடுத்து கொள்கின்றோம், சுதந்திர போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும், உடைமைகளையும், உடலுறுப்புக்களையும் இழந்து ஏற்றி வைத்த இந்த சுதந்திர கனலை நாங்கள் என்றும் ஏந்திச் செல்வோம், அரும்பாடு பட்டு பெறப்பட்ட இந்த சுதந்திரத்தை நாங்கள் எந்த வலை கொடுத்தேனும் தக்க வைத்து கொள்வோம். எங்கள் தாய்த்திருநாடு இந்தியாவையும், இந்தியர்களனைவரையும் நாங்கள் நேசிக்கின்றோம், இனமோ,நிறமோ, மொழியோ, எவ்வித பேதங்களும் எம்மை பிறிக்காது. பிறப்பினால் யாரும் உயாந்தோர், தாழ்ந்தோர் இல்லை, நாட்டின் சுதந்திரமான அரசியல் சட்ட திட்டங்களையும், பாதுகாப்பையும், நீதியையும் நாங்கள் பாதுகாப்போம். சுதந்திரம் என்பது எமது பிறப்புரிமை, எமது நாடு ஆதிக்க சக்திகளின் முன் அடிமைப்படுத்தப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதியோம், இந்திய மக்களை தூண்டி விட்டு அவர்களிடையே கலவரத்தை விதைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளச் செய்யும் ஃபாசிச சக்திகளை நாம் தோற்கடிப்போம், வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்திய தேசியக் கொள்கைகைய நாம் பற்றிப்பிடிப்போம், இதற்கு கடவுள் சாட்சியாக இருக்கட்டும்"
என்ற உறுதிமொழியை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா அவர்கள் வாசிக்க திரன்டிருந்த மக்கள் கூட்டமும் அணிவகுத்து நின்ற இஸ்லாமிய படையும் உறுதிமொழியை சோந்து கூறி உறுதி மொழி எடுத்தது. பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்கள் தனது உரையை ஆரம்பித்தார், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பணிகளை புகழந்த அவர் கட்டாயம் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அரசியில் அடியெடுத்து வைக்க வேண்டும் என வலியுருத்தினார். அதன் பின்னர் பேசிய உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்கள், ஃபாசிஸ்ட்டுகள் தான் உண்மையான தீவிரவாதிகள் என்றும், இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் என அணைத்து தரப்பு மக்களாலும் போராடி பெறப்பட்ட சுதந்திரத்தை திருட முனைவதாகவும், இன்னும் தமிழக அரசு உடனடியாக சிறையில் உள்ள 8 வருடங்களை கடந்த கைதிகள் அனைவரையும் இன பேதம், மத பேதம் இல்லாமல் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுவிகக் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்களான மறியாதைக்குறிய வைத்தியலிங்கம் அவர்கள், மறியாதைக்குறிய குலாம் அப்துல் ஆரிஃப், மறியாதைக்குறிய சேக், மறியாதைக்குறிய மாயன்டி பாரதி ஐயா ஆகியோரை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் கவுரவித்தார்கள்.பின்னர் பேசத் துவங்கிய பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்கள் பல்வுறு சோதனைகள் மற்றும் தடைகளை தாண்டி சுதந்திர தினத்தை கொண்டாட திரண்டிருந்த மக்களை புகழந்தார். அரசு தனது குடிமக்களை சரிசமமாக நடத்தாததால்தான் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா இந்த அஜென்டாவை கையில் எடுத்ததாக் குறிப்பிட்ட அவர், நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புக்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் மீது பலியை போட்டுவிட்டு உண்மையான குற்றவாளிகள் எளிதாக தப்பி செல்வதற்கு உதவி வரும் அரசை வண்மையாக கண்டித்த அவர், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த பிரச்சினைகளை மறைக்க மத்திய அரசே அஹமதாபாத்தில் குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியாதாக பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜின் பேச்சை குறிப்பாக சுட்டிக் காட்டி பேசினார். 1993 ல் இருந்து நாட்டில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புக்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான கமிசனை அமைக்க கோரிக்கை விடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த கடந்த 61 வருட காலமாக இந்திய முஸ்லிம்கள் அரசியலில் நேரேதிர் நிலையை எடுத்ததன் விளைவு இந்திய முஸ்லிம்கள் சொல்லெனா துயருக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இனிவரும் காலங்களில் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதங்காக வேண்டி இஸ்லாமியர்கள் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் இன்னும் தலித்துகளோடு கைகோர்த்து பணி செய்ய வேண்டும் என்றும் குறிபபிட்டார்.பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்களின் உரைக்கு பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்களும், நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்களும், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா ஆகியோரும் கவுரவிக்கப்பட்டார்கள்.
பின்னர் மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி் அவர்கள் தனது சிறப்புரையை துவக்கினார், இந்திய சுதந்திரப் போரில் தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்து உயிர் உடமைகளை இழந்த இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு இன்று இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடப்படுவதற்கு அரசே அனுமதி மறுக்கும் நிலையை சுட்டிக்காட்டி பேசுகையில் "இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் உரிமை இந்திய முஸ்லிம்களுக்கே இல்லை என்றால் வேறு யாருக்குமு் அந்த உரிமை கிடையாது" என்றும், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்த காவல் துறையை கடுமையாக கண்டித்த அவர் மதுரை மாநகர கமிசனர் நந்தகோபாலனுக்கும் ஆர்.எஸ்.எஸ ஃபாசிச சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை விசாரிப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுருத்தினார். இன்னும் தமிழக சிறைகளில் 8 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளையும் வரும் செப்டம்பர் 25 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.நிகழச்சியின் இறுதியாக மனித நீதிப் பாசறையின் பொருளாலரும், விடியல் வெள்ளி ஆசிரியருமான திரு. எம். முகம்மது இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை வழங்கினார் அதன் பின்னர் கூடியிருந்த கூட்டம் அமைதியாக கலைந்து சென்றது.மதுரையை உலுக்கும் வகையில் நடந்த இந்நிகழச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் , அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவர் ஹாபிழ் ரஷீத் சவுத்திரி, மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா , மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி், உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன், மதுரை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் பொருளாலர் திரு. நிஷ்ட்டர் அஹமத், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா உட்பட பலர் கலந்து கொண்டார்கள், நிகழச்சியை காண தமிழகமெங்கும் இருந்து பல ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரன்டு வந்திருந்தனர்.

செய்திகள் உதவி: திரு. A. முகம்மது யூசுஃப் , மிடீயா கன்வீனர், மனித நீதிப் பாசறை
நன்றி TMPOLITICS.NET