Wednesday, December 31, 2008

மூட நம்பிக்கைகள் உலகில் மறையப்போவது எப்போது?

அன்பான எனதருமை நமதூர் வாசக சகோதர, சகோதரிகளே உங்கள் யாவருக்கும் முதற்கண் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

ஒரு நேரத்தில் நமதூர் மக்களிடையே பெரும்பாலும் இல்லத்தரசிகளிடம் நிலவி வந்த ஒரு மூட நம்பிக்கையைப் பற்றி இங்கு ஒரு சிறு கட்டுரை மூலம் விளக்க
விரும்புகிறேன்.

வெளிநாட்டு வாழ்வில் வருடங்கள் பல உருண்டோடி விட்டதால் அப்பழக்கம் இன்றும் நம்மக்களிடம் இருக்கிறதா என்பது தெரியவில்லை... இருப்பினும் சின்னஞ்சிறு பிராயத்தின் அனுபவத்திலிருந்து ஒன்றை இங்கு எழுத வருகிறேன்.

ஆங்கிலப்புத்தாண்டு பிறந்து விட்ட முதல் நாள் அன்று நம் பகுதிகளின் வீடுகளில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டால் அல்லது ஏதேனும் அசொளகரியம் ஏற்பட்டு விட்டால் அன்றைய தினம் சிகிச்சைக்காக
மருத்துவமனை செல்வதை விரும்பமாட்டார்கள். முடிந்தவரை மருத்துவமனை செல்வதை தவிர்த்து விடுவார்கள். காரணம் அன்று மருத்துவமனை சென்றால் அவ்வருடம் முழுவதும் மருத்துவமனை செல்ல நேரிடும் என்ற மூட நம்பிக்கையால்
தான் .

நம் அறியாமையினாலும், மார்க்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வமின்மையாலும் முஹர்ரம் என்றால் என்ன? என்று கேட்பவர்களாகவும் மாறாக ஆங்கிலப்புத்தாண்டை
வரவேற்க அறியாமலேயே சிகப்புக் கம்பளம் விரிப்பவர்களாகவும் தான் நம்மில் பெரும்பாலானோர் இருந்து வருகிறோம்.

வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், நேரங்கள் மற்றும்
மணித்துளிகளெல்லாம் மனிதன் தன் வாழ்க்கை கட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல அவனாலேயே ஏற்படுத்தப்பட்டது தான் இவைகள் யாவும் என்பதை நாம் இங்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

புத்தாண்டு தினம் ஒருவன் சூழ்நிலையால் அழ நேரிடும் பொழுது அவன் ஆண்டு முழுவதும் அழப்போவதில்லை. மாறாக ஒருவன் அத்தினம் சிரித்து மகிழ்வதால்
அவ்வாண்டு முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கப் போவதில்லை.

உலகில் நல்ல நேரம், கெட்ட நேரம் எதுவும் உண்டா? என சஹாபாப் பெருமக்கள் எம்பெருமானார் நபி (ஸல்...) அவர்களிடம் வினவியபோது.. அதற்குப் பெருமானார்
கூறியது என்னவெனில் "எவன் ஒருவன் ஃபஜர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுகிறானோ அன்றைய முழு தினமும் அவனுக்கு நல்ல நாள் தான்" என்று இயம்பியதாக நாம் ஹதீஸில் பார்க்கின்றோம்.

நம் வாழ்வில் மூட நம்பிக்கைகளுக்கு அவிழ்க்க முடியா முடிச்சிட்டு நல்ல (மார்க்க) நம்பிக்கைகளை சுதந்திரமாக அவிழ்த்து விட முயல வேண்டும். உள்ளங்கை நெல்லிக்கனி போல் மார்க்கத்தை நம் கைகளில் வைத்துக்கொண்டு நாம்
சின்னஞ்சிறு விசயங்களுக்கெல்லாம் அந்நியர்களின் அதாவது
இறைநிராகரிப்போரின் உதவியை நாடுகிறோம். இனி வரும் காலங்களில் நம் யாவரையும் இத்தகைய பெரும் தவறுகள் செய்வதிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக...ஆமீன்..

குடும்பத்தில் பல கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும் புத்தாண்டு தினம் சாதாரன நாட்களைப் போல் அல்லாது நல்ல கறி சமைத்து சாப்பிடுவது, புத்தாடை அணிவது, மத்தாப்பு கொளுத்துவது இவைகளெல்லாம் மார்க்கத்தில் நிச்சயம் சொல்லப்படாத ஒன்று.

அதுபோல் பிறந்த நாள் அன்று அழுக்கை சட்டை அணிந்திருப்பவன் அன்றே சாகப்போவதுமில்லை. புத்தாடை அணிந்து ஆடம்பர பவனி வருகிறவன் நூற்றாண்டுகள்
பல இவ்வுலகில் வாழப்போவதுமில்லை...

கடலில் மூழ்குபவனுக்கெல்லாம் விலையுயர்ந்த முத்துக்கள்
கிடைப்பதில்லை..ஆனால் மூழ்காமல் ஒருவனுக்கும் முத்துக்கள் கிடைப்பதில்லை. இறைவன் நாடியவனுக்கே தன் ஹிதாயத் என்னும் நேர்வழியைக் காட்டுகின்றான்..

காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எல்லாம் உலக சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஆதிக்கம் செலுத்துபவனின் கட்டளைப்படியே நடக்கக் கூடியதாக இருக்கின்றது.

இதுபோல் ஆயிரம் மூட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் நம் பகுதிகளில் நிறையவே நிரம்பி இருக்கின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அதை ஒவ்வொன்றாகவோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ நம் தளத்தில் கட்டுரையாக பதிய வேண்டுகிறேன்.

எனவே நாம் முடிந்தவரை உண்மையான முஸ்லிமாக வாழ முயற்சிப்போம். முடியாவிட்டாலும் முயற்சிப்போம்... நரக நெருப்பிற்கு இரையாக, விறகாக யார் தான் விரும்புவர்? அவைகளெல்லாம் மாயை/இல்லை என்பவர்களைத் தவிர.

இத்தளம் மெருகூட்டப்பட்டு இன்னும் பல தகவல்களுடன் நம்மக்களின் நல்லாதரவுடன் அகிலமெங்கும் வலம் வர வேண்டும் என இத்தருணத்தில் வல்ல இறைவனைப் பிரார்த்தித்தவனாக....

அபுஹசன் - சவுதியிலிருந்து.

அதிரை எக்ஸ்ப்ரஸ் - புத்தாண்டுத் திட்டங்கள்


அதிரை எக்ஸ்ப்ரஸில் நமதூர் மக்கள் பலரும் எழுத வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தியும், அவ்வாறு எழுதப்பட்ட தனிப்பதிவுகளை நமது தளத்தில் பட்டியிலிட்டு ஊக்கப்படுத்தி வருகிறோம் என்பதை அனைவரும் நன்கறிவோம். சமீப நாட்களாக இத்தளத்திற்கு அனுப்பப்பட்ட பதிவுகள் பிரசுரிக்கப் படவில்லை என்று சில பங்களிப்பாளர்கள் முறையிட்டிருந்தனர். அவர்களின் பதிவுகளைப் புறக்கணிக்கும் நோக்கம் சிஞ்சிற்றும் இல்லை. வரும் ஆக்கங்களைப் பிரசுரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களின் பணிச்சுமையே, தாமதமான வெளியீட்டிற்குக் காரணம்.

சகோதரர் ஜாஹிர் ஹுசைன் மற்றும் பங்களிப்பாளராக இருக்க விரும்பும் எவரும் தயங்காமல் தங்கள் சுயவிபரங்களையும் ப்ளாக்கர் அக்கவுண்ட்/ ஈமெயில் விபரத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் அட் ஜிமெயில் என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பினால் எக்ஸ்ப்ரஸ் தளத்தில் நேரடியாகவே பதிக்கும் வசதியை வழங்குகிறோம்.

மேலும், அனுமதி காத்திருக்கும் பதிவுகளைப் பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்கும் அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்க விரும்புகிறோம். விரும்பும் சகோதரர்களும் உடனடியாக தங்கள் விபரத்தை மேற்சொன்ன முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதன்மூலம் பிரசுரமாவதிலுள்ள தாமதங்கள் தவிர்க்கப் படும்.

அப்புறம், நமதூர் மக்கள் அனைவரும் இத்தளத்தில் தெருப்பாகுபாடின்றி உரிமையுடன் பயன்படுத்த வேண்டும் என்பதும் நமது நோக்கங்களில் ஒன்றாகும். அதனடிப்படையில் பிரிவினையைத் தூண்டாத தெருவாரியாகப் பதிவர்களையும் நியமிக்க விரும்புகிறோம். உதாரணமாக சகோ.அபூஅஸீலா ஆஸ்பத்திரி தெரு மற்றும் சுற்றுவட்டாரச் செய்திகளையும் அது சார்ந்த/ சாரத பொதுவான கட்டுரைகளையும் வழங்கலாம். அதேபோல், மேலத்தெரு, கடற்கரைத் தெரு, புதுமனைத்தெரு, நடுத்தெரு,மக்தூம்பள்ளி தெரு, CMPலேன் என பகுதிவாரியாக பதிவர்களை நியமித்து அந்தந்த தெருச்செய்திகளையும் பதியும்படி செய்ய உத்தேசித்துள்ளோம்.

இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்வதெனில் வாரம் ஒரு தெருவீதம் முன்னுரிமை கொடுத்து அந்தந்த பகுதி குறித்தவற்றை செய்தியாகவோ கட்டுரையாகவோ பதியச் செய்து ஆவணப்படுத்தலாம். உதாரணமாக கீழத்தெரு தியாகி. S.S.இப்றாஹிம் அவர்கள் குறித்தத் தகவலை மற்ற தெருவாசிகளைவிட கீழத்தெருவாசிகள் அதிகம் அறிந்திருப்பர்.

இவ்வாறாக வாரம் ஒரு தெருவாரியாக பதிவுகளைத் தொகுத்து ஆண்டு இறுதியில் அதிரை குறித்த நிகழ்வுகளைக் கொண்ட ஆண்டுமலர் போன்று வெளியிடலாம். தற்காலத்தில் முஸ்லிம்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஆவணப்படுத்தத் தவறினால் பிற்கால சந்ததியினரிடம் மறைக்கப்படும் அல்லது தவறான தகவல் கொடுக்கப்படும் சாத்தியமுண்டு என்பதை நினைவில் கொள்ளவும்.

நமதூர்வாசிகள் உலக நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ளனர். அங்கிருந்து தாங்கள் பணியாற்றும் நகரச் செய்திகளையும் நடப்புகளையும் வழங்கலாம். இதற்கும் நாடுகள், நகரங்கள் வாரியாக பங்களிப்பாளர்கள் வரவேற்கப் படுகிறார்கள். உதாரணமாக, சகோ. அபூ ஹசன் சவூதி செய்தியாளராகப் பொறுப்பேற்கலாம்.

இவையே அதிரை எக்ஸ்ப்ரஸில் புத்தாண்டுமுதல் நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்விசயங்கள் குறித்து சகோதரர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

வாசகர்கள் அனைவருக்கும் முகரம், ஜனவரி மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இப்படிக்கு

எக்ஸ்ப்ரஸ் டீம்

Tuesday, December 30, 2008

பகுத்தறிவே இது நியாயமா? (கற்றதும் பெற்றதும்)


இரண்டாம் வகுப்புப் படிக்கும் மகனின் குளிர்கால விடுமுறையில் வீட்டுப் பாடங்களில் தமிழ்குறிப்பேட்டில் டைனோசர் படத்தை ஒட்டிவரச் சொல்லி இருந்ததால் டைனோசார் படம் தேடியபோது மனதில் பட்டது.ஜுராசிக்பார்க் திரைப்படம் வெளியாகும் முன்புவரை பெரும்பாலோர் டைனோசர் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

கிங்காங், காட்ஜில்லா வரிசையில் வெளியான படங்களில் டைனோசர் போன்ற பிரம்மாண்ட ராட்சத ஜந்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். ஜப்பானியர்களின் நம்பிக்கையின்படி, உலகில் அநியாயங்கள் மிகைக்கும் போது காட்ஜில்லா கடலிலிருந்து வெளிப்பட்டு பிரளயத்தை ஏற்படுத்தும் என்று வாசித்த நினைவு.

ஜுராசிக் பார்க் படத்தில் ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரைக் கடித்த ஒரு கொசுவின் உடல், மரப்பசையால் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு, பின்னர் கொசுவின் உடலிலிருந்து டைனோசரின் DNAவை பிரித்தெடுத்து முட்டையுடன் இணைத்து, டைனோசர் உருவாக்க முடியும் என்ற நாவலின் அடிப்படையில் உருவான திரைப்படமே ஜுராசிக் பார்க்.

ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரைப் பார்த்த எவருமில்லை.அறிவியல் கூற்றுக்களின்படி மனிதஇனம் சஞ்சரிக்கும் முன் டைனோசர் போன்ற பிரம்மாண்ட உயிரினங்கள் பூமியில் உலாவி வந்தன, விண்கற்கள் பூமியைத் தாக்கியதால் அவை அழிந்து போயிருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

யாருமே அறிந்திராத ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதைப் போன்ற இன்னொன்றுடன் ஒப்பிட்டுச் சொல்வது வழக்கம். யானை உடல், முதலைப் பற்களுடன் கற்பனையாகச் சொல்லப்பட்ட டைனோசர் உருவம் நம்மனங்களில் பதிய வைக்கப்பட்டது இப்படியே. கற்பனையும் அறிவியலும் இணைந்து சொல்லப்பட்ட டைனோசர் பற்றி நம்பும் பகுத்தறிவு, கண்முன் தெரியும் மனிதப்படைப்பைக் குறித்துச் சொல்லப்படும்போது நகைக்கிறது.

சோதனைக்குழாய் ஆய்வின் அடுத்த கட்டமான குளோனிங் படைப்புகளைப் பார்த்துவிட்டு, படைப்பாளனுக்குப் போட்டியாக நாங்களும் இருக்கிறோம். செல்களைப் பிரித்தெடுத்து தேவைக்கேற்ப குறைபாடற்ற படைப்புகளை எங்களால் கடவுளைவிடச் சிறப்பாகப் படைக்க முடியும் என்று மார்தட்டும் விஞ்ஞானிகளால் உயிருள்ள செல்களை ஏன் படைக்க முடியவில்லை?

மண்னோடு மக்கிப்போன கொசுவிலிருந்து டைனோசர் செல்லைப் பிரித்து மீண்டும் டைனோசர் படைக்க முடியும் என்று நம்பப்படும்போது, மண்ணின் மூலச்சத்திலிருந்து மனிதனைப் படைத்ததாகச் சொல்லப்படும் கூற்றையும் நம்பலாம்தானே!

பொழுதுபோக்குக்காக ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் சொன்னதை காசுகொடுத்துப் பார்த்து நம்பும்போது,படிப்பினை பெறுவதற்காக அல்லாஹ் சொன்னதை நம்பத்தயங்கலாமா?

தொடரும்....

<<<அபூஅஸீலா-துபாய்>>>

Monday, December 29, 2008

அதிரை எக்ஸ்ப்ரஸ் - சில விளக்கங்கள்

அதிரை மக்களின் இணையக் குரலாய் இயங்கிவரும் அதிரை எக்ஸ்ப்ரஸ் என்ற இத்தளம் கடந்த சில மாதங்களாக பொலிவிழந்துள்ளதாக சிலர் கருத்திட்டிருந்தார்கள். வேறுசிலரோ அதிரை எக்ஸ்ப்ரஸ் 'குறிப்பிட்டச் சில தெருவாசிகள்' மட்டுமே அதிகம் புழங்குவதாக குற்றம் சாட்டியிருந்தார்கள். மேலும் சிலர் சிறப்பாக எழுதிவந்தவர்கள் ஏன் அடிக்கடி தென்படுவதில்லை? என்று உரிமையுடன் கேட்டிருந்ததோடு,அதிரையின் ஒட்டுமொத்தக் குரலாக அதிரை எக்ஸ்ப்ரஸை முன்னிறுத்தலாமே என்ற ஆலோசனையும் வழங்கி இருந்தார்கள்.

ஏற்கனவே பலமுறை சொல்லியபடி, அதிரை எக்ஸ்ப்ரஸ் நமதூர் மக்களின் உணர்வுகளுக்கு இணைய வடிகாலாகவும், அதிரைவாசிகளுடன் நேரடியாக தொடர்புடைய அல்லது பயனாக இருக்கும் இதரச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் மட்டுறுத்தலற்ற, சுதந்திரமான செய்தித்தளம் என்ற அடிப்படை நோக்கத்திலிருந்து விலகாமலேயே இதுவரை செயல்பட்டு வருகிறது என்பதை மீண்டும் நினைவுறுத்தி, மேற்கண்ட விசயங்கள் குறித்தும் சில விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

1) பொலிவிழந்துள்ளதா?

கடந்த ரமழானில் தினமலர் வேலூர் பதிப்பில் நமது உயிரினும் மேலான முஹம்மது நபியைக் (ஸல்) கேலிசெய்த பத்திரிக்கைச் செய்தியைச் சுட்டி தொடுப்பாகக் கொடுத்து, முஸ்லிம்களைச் சீண்டியதை அதிரை எக்ஸ்ப்ரஸே முதலில் வெளிக்கொண்டு வந்தது. இதையடுத்து பலவளைகுடா நாடுகளில் தினமலர் இணையதளம் தடைசெய்யப்பட்டபோது செய்தியைச் சுட்டியை நமது தளமும் அமீரகத்தில் தெரியாதவகையில் மட்டுறுத்தப்பட்டுள்ளது. தடையை நீக்கக்கோரி உரியமுறையில் தொடர்பு கொண்டும் பயனில்லை.

அதிரை எக்ஸ்ப்ரஸின் பெரும்பாலான பதிவர்கள், வாசகர்கள் மற்றும் அரட்டையாளர்கள் அமீரகவாசிகளாக இருந்ததால், அதிரை எக்ஸ்ப்ரஸ் இணையதளத்திற்கு நேரடியாக அணுகமுடியவில்லை. இதன்காரணமாக அதிரை எக்ஸ்ப்ரஸின் அமீரகப் பங்களிப்பாளர்களால் செய்தி மற்றும் அரட்டையில் கலந்து கொள்ள முடிவதில்லை என்பதே பிரதானக் காரணம்.

மேலும்,அதிரை எக்ஸ்ப்ரஸ் போன்ற வெவ்வேறு பெயர்களில் தனிபதிவுகள் சிலவும் இருப்பதால் ஓரிடத்திற்கு வரவேண்டிய செய்திகள் வெவ்வேறு பதிவுகளில் பதியப்படுகிறது. இதன்மூலம் ஓரிடத்தில் இணைய வேண்டிய அதிரைவாசிகள் வெவ்வேறு தளங்கள் நோக்கி திசைதிருப்பப்பட்டுள்ளார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

அதிரை வலைப்பதிவுகளையும் வலைப்பதிவர்களையும் ஊக்கப்டுத்துவதில் அதிரை எக்ஸ்ப்ரஸ் என்றுமே தயங்கியதில்லை. எனினும், பொதுவான செய்திகளை அதிரை எக்ஸ்ப்ரஸில் பதிந்தால் மேற்கண்ட பின்னடைவு ஏற்படாது. சம்பந்தப்பட்ட வலைப்பதிவர்களின் ஆலோசனையும் புரிந்து கொள்ளலும் வரவேற்கப்படுகிறது.

2) தெருப்பாகுபாடு?

இத்தளம் பிரபலமாகக் காரணம் அல்-அமீன் பள்ளிவாசல் பிரச்சினையைக் குறித்து யாருக்கும் அஞ்சாமல் உண்மைச் செய்திகளைப் பகிரங்கமாக எழுதியதும் ஒரு காரணம். இப்பிரச்சினையில் நமதூர் 'பெரியவர்' குறித்தும் எழுதப்பட்டதால், சம்பந்தப்பட்ட தெருவாசிகள் அல்லது அப்பெரியவரின் ஆதரவாளர்கள்/விசுவாசிகள் மட்டுமே இவ்வாறு அவதூறு சொல்கிறார்கள். அதிரை எக்ஸ்ப்ரஸை தொடக்கம்முதல் அவதானித்து வரும் வாசகர்கள் அதிரை எக்ஸ்ப்ரஸின் செயல்பாடுகளை புரிந்துள்ளார்களென்பதால் இது போன்ற அவதூறுகளைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

3) பதிவர்கள் பஞ்சம்?

பெரும்பாலானப் பதிவர்கள் அமீரகத்திலிருந்தே எழுதி வந்தார்கள். அதிரை எக்ஸ்ப்ரஸ் அமீரகத்தில் தெரியாதக் காரணத்தால் அவர்கள் சோர்வடைந்து இருக்கக்கூடும். எனினும் மின்மடல் மூலம் செய்திகள் மற்றும் கட்டுரைகள் நேரடியாகப் பதியும் வசதி இருப்பதால் இதைப் பயன்படுத்தி தொடர்ந்து எழுதலாம்.

4) செய்திகள் மட்டுறுத்தப்படுகிறதா?

இல்லை. நேரடியாகப் பதியும் வசதியை வலைப்பு வழங்கியான ப்ளாக்கர் செய்து கொடுத்திருந்தாலும், எரிதம் எனப்படும் SPAM விளம்பரங்களும் நேரடியாகப் பதிய முடியுமென்பதால் பிரசுரிக்க அனுமதிக்கும் அதிகாரத்தை சில பங்களிப்பாளர்களிடம் வழங்கி இருந்தோம். அவர்களும் அமீரகவாசிகள் என்பதால் அதிரை எக்ஸ்ப்ரஸிலிருந்து அந்நியப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்!

அதிரை எக்ஸ்ப்ரஸ் முகவரியை மாற்றி, பழைய செய்திகளும் தொடர்ந்து தெரியும்படிச் செய்வதற்கான நுடப்நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. அனேகமாக வரும் ஜனவரி-1,2009 க்குள் புதிய முகவரியில் அதிரை எக்ஸ்ப்ரஸை அமீரகவாசிகளும் அணுகுவதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மாதிரியை http://adiraiexpress.wordpress.com என்ற முகவரியில் காணலாம்.

http://adiraixpress.wordpress.com என்ற முகவரி ஏற்கனவே யாரொ பதிவு செய்துள்ளதால் முகவரியில் Xpress என்பதற்குப் பதில் Express என்று மாற்றி உள்ளோம். http://adiraixpress.wordpress.com ஐப் பதிவு செய்து வைத்துள்ள சகோதரர் அதன் கடவுச் சொல் விபரத்தை adiraixpress@gmail.com முகவரிக்கு அறியத் தந்தால் அதிரைவாசிகளுக்குக் குழப்பமில்லாமல் ஒரே செய்திதளமாக்கும் எமது முயற்சிக்கு வசதியாக இருக்கும்.

வாசகர்கள் மறக்காமல் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பின்னூட்டமாகவும/மின்மடலாக அறியத்தந்தால் அவற்றையும் பரிசீலித்து நமது இணையக் குரலாக அதிரை எக்ஸ்ப்ரஸை புதுப்பொழிவுடன் ஒலிக்கச் செய்வோம்.

இப்படிக்கு,

-எக்ஸ்ப்ரஸ் டீம்-

தலைஎழுத்து

அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மத்துல்லாஹ்.

இறைவன் உனக்கு எழுதி வைத்த தலைஎழுத்து என்று சொல்லுவார்கள்' அப்படியிருக்கும் போது அதன் படிதான் மனிதனும் நடக்கின்றான். குடிக்காரன் குடிக்கிறான் கெட்டவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், இதுவும் இறைவன் எழுதிய எழுத்து என்றால், ஏன் இறைவன் தண்டனை தர வேண்டும்? எல்லாமும் இறைவனின் விதிப்படிதானே நடக்கின்றது. பிறகு நாம் எப்படி குற்றவாளியாவோம் என்ற எண்ணம்பரவலாக எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கின்றது.

இறைவன் நாடியதுதான் நடக்கும், இறைவன் நாடாமல்எதுவொன்றும் நடக்காது என்ற கருத்தில் அமைந்தகுர்ஆன் வசனங்களை இவர்கள் தங்களின் விதிநம்பிக்கைக்கு சாதகமாக நினைத்துக் கொள்கின்றார்கள்.விதியைப் பற்றியோ அல்லது குர்ஆன் வசனங்களைவிளங்காமையோதான் இத்தகைய சிந்தனைக்குஅவர்களைத் தள்ளுகின்றது. அவர்கள் விளங்கும் விதத்தி்ல் நாமும் சிலகேள்விகளைக் கேட்போம்...இறைவன் விதித்தப்படிதான் எல்லாமும் நடக்கின்றது என்று கூறினால் அதே இறைவன் தான் தூதர்களை அனுப்பி, வேதங்களை வழங்கி 'தூதர் காட்டியவழியிலும், வேதத்தின் வழியிலும் வாழுங்கள்'என்கிறான். இதுவும் இறைவனின் விதிதான். விபச்சாரம்செய்து விட்டு 'இது விதி' என்று சொல்லுபவர்கள்,தவறான காரியங்களில் ஈடுபட்டு விட்டு 'இது விதி'என்று கூறுபவர்கள் இறைவன் விதித்த "நல்வழியில்செல்லுங்கள்' என்ற விதியை ஏன் புறக்கணிக்கிறார்கள்.அதுவும் விதிதானே..

விபச்சாரம் செய்வதற்கோ, திருடுவதற்கோ, கொலைசெய்வதற்கோ, மோசடிப் போன்ற அநேக ஈனச்செயல்செய்வதற்கோ அதில் ஈடுபடுபவர்கள் புறத்திலிருந்துஒரு முயற்சி இருக்கத்தான் செய்கின்றது. அவர்களின்சுய முயற்சி இல்லாமல் இதுவெல்லாம் நடப்பதில்லை.இதே முயற்சியை அவர்கள் நல்லக்காரியங்களில்செய்து விட்டு 'விதிப்படிதான் நடக்கின்றது' என்றுசொல்லிப் பார்க்கட்டும் அப்போது விதியின் அர்த்தம் புரியும். விதிவாதம் பேசுபவர்கள் தங்கள் வீட்டில் ஒருதிருட்டுப் போனால் விதிப்படி போய்விட்டது என்றுபேசாமல் இருப்பதில்லை. அதை கண்டுப்பிடிக்கமுயல்கிறார்கள், காவல் நிலையம் செல்கின்றார்கள்.சொந்த பந்தஙகள் சொத்துப் போன்றவற்றைஅபகரித்துக் கொள்ளும் போது விதியென்று மெளனமாகஇருக்காமல் நீதிமன்றம் செல்கின்றார்கள்...

வீட்டில்இருக்கம் கன்னிப் பெண்களுக்கு 'விதிப்படி கல்யாணம்நடக்கும்' என்றில்லாமல் நல்லக் கணவனைத் தேடிஅலைகின்றார்கள். இப்படி சொல்லிக் கொண்டேபோகலாம். இதையெல்லாம் அவர்கள் சிந்தித்தால் விதிஎன்னவென்பது அவர்களுக்கு விளங்கும். இஸ்லாம் விதியை நம்ப சொல்கின்றது. அதன் அர்த்தம் என்ன? எந்த ஒரு காரியம் நம் கட்டுப்பாட்டையெல்லாம் மீறிநடக்கின்றதோ அது இஸ்லாமியப் பார்வையில் விதி. மரணம் நம் கட்டுப்பாட்டையெல்லாம் கடந்துநடப்பதாகும் அது விதி.

இழப்பு (உதாரணம் சுனாமி) நம்பாதுகாப்பு அரண்களை மீறி நடந்ததாகும் அது விதி. விபத்துக்களில் உயிரிழப்பது, கடும் நோய்களால்அவதிப்பட்டு மடிவது, குழந்தைப்பேறுக்காக அனைத்துமுயற்சிகளையும் செய்த பிறகும் குழந்தைப் பாக்கியம்இல்லாமல் போவது, பருவ மழைத் தவறிவிவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவது போன்ற உதாரணங்களை இங்கு சொல்லலாம்.ஈராக், பாலஸ்தீனம், சோமாலி, ஆப்ரிக்காவின் அநேகநாடுகளாக இருந்தால் இதே உதாரணங்கள் அங்குவேறு விதமாக வெளிப்படும்.

நம் கட்டுப்பாட்டுக்குள் ஒரு தவறு நடந்தால் அதற்குநாம் தான் பொறுப்பு. (உதாரணம் தற்கொலை) இதற்குஇறைவன் தண்டனை அளிப்பான். வட்டி - சூது -திருட்டு - அபகரிப்பு போன்ற பாவங்கள் நம்கட்டுப்பாட்டுக்குள் இருந்து நடப்பதாகும். அதாவது அதற்கு நாமே முயற்சிக்கிறோம் என்பதால் அதற்குதண்டனையுண்டு. ஏனெனில் இவ்வாறு நடந்துக்கொள்ளக் கூடாது என்று இறைவன் தான் விதித்துள்ளான். இவற்றைப் புரிந்துக் கொண்டால் விதி என்றால்என்னவென்று விளங்கும். சிலர் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்றுகாரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம்காட்டாமல் இருந்து வருகின்றனர்.

"நாம் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம்"என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சிஇல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம்நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில்எழுதப்பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒருபயனும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர்கள்நினைக்கின்றனர். விதியை நம்பச் சொல்கின்றஇறைவன் தான் முயற்சிகள் மேற் கொள்ளுமாறும்நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்துவிடுகின்றனர். மேலும் அவர் உண்மையிலேயேவிதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவேவணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார் என்றால்எல்லா விஷயத்திலும் அவர் இவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்.

ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் 'விதி' இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை.இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமைபோன்றவையும் பட்டம் பதவிகள் போன்றவையும்விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்றுதான் இஸ்லாம் கூறுகின்றது. இறைவணக்கத்தில்ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப்போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ளவேண்டுமல்லவா? தனக்கு எவ்வளவு செல்வம்கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படிசெல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர்எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக்கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடிஅலைவார். இந்த அக்கறையை வணக்கவழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர்நினைக் காதது முரண்பாடாகவும் உள்ளது.

எனவே, விதியைப் பற்றி சர்ச்சை களைத் தவிர்த்து விட்டுமனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டுவிஷயங்களை அல்லாஹ் வைத்திருக் கிறான் என்றுமுடிவு செய்து, விதியை நம்பியதால் கிடைக்கும்பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான்நல்லது. விதியை விளக்ககும் இறைவசனம். "உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள்கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்." (திருக்குர்ஆன் 57:23)

அன்புடன்,

சகோ. அபூஃபைஸல் ரியாத், சவூதி அரேபியா

Sunday, December 28, 2008

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு,

நடுத் தெரு மர்ஹூம் மு.க.மு.கி. முகைதீன் சாகிபு அவர்கள் மணைவியும்.கட்டிடா காண்ட்ராக்டர் M.S. முஹம்மது தமீம் (மாப்பிள்ளை சாச்சா)அவர்களின் தாயாரும் அபூபக்கர் ஹாஜியார் (A.H.Export,Chennai) அவர்களின்மாமியருமாகிய சல்மா அம்மா அவர்கள் (27-12-08) இன்று இரவு வபாத்தாகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹிராஜிஹூன்,

அன்னாரின் மஹ்பிரத்துக்காக துஆ செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்

Thursday, December 25, 2008

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.
தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை? எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?
பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா. ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன்என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது
அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன். உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள். இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது.
புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.
கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்'-

ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா

'தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'-

விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள். ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

தொகுப்பு - மக்பூல்

Friday, December 19, 2008

HAJEES MEET 2008

தியாக திருநாளாம் ஹஜுப் பெருநாளை தொடர்ந்து
இவ் வருடம் ஹஜ் செய்த உள்ளூர் மற்றும் வெளியூர் ஹாஜிகள்
கலந்துகொண்ட HAJEES MEET2008 வெகு சிறப்பாக
நடை பெற்றது!!! ஹஜ்ரத் ஹுசைன் மன்பயீ,
ஹஜ்ரத் ஷம்சுதீன் காசிமி மற்றும் மலேசியா ஷேய்க் முஹம்மது நூரி
ஆகியோர் உரை நிகழ்தினர்.

முன்னோர்களின் தியாகம், ஹஜ்ஜுக்குப் பின்... மற்றும் சகிப்புத் தன்மை போன்ற தலைப்புகளிள் பேசினர்.


மேலும் Bushraa Haj Service, Dolphine Haj Service, makkah tours Agentகளும் மற்றும் சங்கரன் பந்தல்,
அய்யம்பேட்டை, ராஜகிரி, காயல்பட்னம், மதுரை சிவகங்கை போன்ற ஊர் ஹாஜிகள் மற்றும் மலேசியா அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நம் ஊர் புஸ்ரா ரஜாக் ஹாஜியார், டால்பின் தீன் ஹாஜியார், MSM முஹம்மது சாளிஹு ஹாஜியார், மாடர்ன் ப்ராசெஸ் பாக்கர் ஹாஜியார் போன்றோர்களும் பெண்களும் வருகை தந்தனர் ஜித்தா வாழ் அதிரை சகோதர சகோதரிகள் நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த INDIA FERTENITY FORUM பொறுப்பாளர்கள் அந்த அமைப்பினரின் சகோதார்களின் மினா- அரபா சேவை பாராட்டப்பட்டது. மேலும் RDB கல்லூரி தலைவர் ராஜகிரி தாவூது பாட்சா அவர்களின் கல்விச் சேவை புகழப்பட்டது இறுதியில் அனைவருக்கும் இரவு உணவருந்திச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு சகோ. ரபி அகமது (ரஃபியா) செய்திருந்தார்.

தொகுப்பு - ஆதில்

Thursday, December 18, 2008

குளங்கள் நிரம்பின.

சமீபத்தில் பெய்த அடை மழையால்...

* நம் ஊரில் உள்ள அனைத்துக்குளங்களும் நிரம்பி வழிகின்றன.

* பிலால் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

* பல தெருக்களில் உள்ள வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளது.

* பேருந்து நிலைய சாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

* தெருக்களை இணைக்கும் கால்வாய் பாலங்களில் உள்ள மேல் தளத்தில் உடைப்பு ஏற்பட்டு பெரும் ஒட்டை ஏற்பட்டுள்ளது.

* பல தெருக்களில் ஏற்கனவே போதிய சாலை வசதி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

* பேருந்து நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள குளம் நிரம்பி வழிவதால் அதன் அருகாமையில் உள்ள சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் அவ்வழியே செல்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இந்த சாலை பேருந்து நிலையத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

* புதிதாக அமைத்த ECR (முத்துப்பேட்டைக்கு செல்லும் வழியே உள்ள) சாலையில் அரிப்பு ஏற்படுள்ளது.

* காய்கறிகள், கோழி மற்றும் ஆட்டுக்கறியின் விலை கடுமையாக உயர்ந்து தற்பொழுது இறங்க துவங்கியுள்ளது.

* வழக்கம் போல் மின்வெட்டு உள்ளது.


* இலங்கைக்கும் தமிழகக்கடற்கைரைக்குமிடையே அவ்வப்பொழுது உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திடீர் திடீரென்று மழை கடந்த ஒரு மாதமாக நமதூரில் பெய்து வருகிறது.

-Abdul Barakath.

Wednesday, December 17, 2008

இறைவசனத்தின் சக்தி


இன்று 17th Dec 2008 THE STAR மலேசியா ஆங்கில தினசரியில் வந்தது செய்தி

ஹஜ் பெருநாளைக்கு வெளியூர் சென்ற ஒருவர் தனது கடையில் உள்ள பொருள்கள் திருடப்படாமல் இருக்க சில 'தொழுகை/ துவா ' செய்து விட்டு சென்றுள்ளார். இரவில் திருட வந்த திருடன் 3 நாள் பூட்டிய கடையை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டதையும், வெளியே செல்லமுயற்சிக்கும்போது ஏதோ தன்னை தடுப்பது போல் உணர்ந்ததும் பிறகு கடை திறக்கப்பட்டதும் , திருடன் பிடிபட்டதும் செய்தி.

இறைவசனங்களுக்கு சக்தி இருக்கிறதா என கேட்கும் நண்பர்கள் கவனத்திற்க்கு "கேவலம் திட்டப்படும் வார்த்தைகளுக்கு நீங்கள் கோபப்படும்போது அந்த வார்த்தைகளில் தானே கோபப்பட்டீர்கள் ! பிறகு எப்படி படைத்தவனின் வார்த்தைக்கு சக்தி இல்லாமல் போகும் ?

Zakir Hussain

Monday, December 15, 2008

புஷ்ஷுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.

பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.


அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார். ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.

முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது. 2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.

இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.

பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, December 11, 2008

மரண அறிவிப்பு

பிரபலதொழிலதிபரும்ஊர் நலனில் அதிக அக்கரை கொண்டவரும்மான லாஃபிர்காக்கா(சேத்துபட்டு) அவர்கள் மாரடைப்பால் அண்னாரது அதிரை இல்லத்தில் காலமாகி விட்டார்கள் இன்னா... அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடுமென்று உறவினர்களின் ஒருவர் நம்மிடம் கூறினார்.அன்னாரது மஹ்ஃபிரத்து நல் வாழ்விற்க்கு துஆ செய்ய வேண்டுமாய் கேட்டுகொள்ள படுகிறார்கள்.

Monday, December 8, 2008

தியாகத் திருநாள் கொண்டாட்டம்

ஜித்தாவில் உள்ள அதிரை வாசிகள் அனைவரும் ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகையை கடற்கரை அருகில் உள்ள ஹானி பள்ளியில் தொழுது விட்டு காலை உணவை (பெருநாள் பசியாற) பள்ளி வராண்டாவில் முடித்த காட்சி நமது ஊரில் கல்யாண வீட்டில் மாப்பிளை சகனில் சாப்பிடுவது போல இருந்தது. ஒவ்வொரு வரும் அவரவர் தயார் செய்த பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

பிறகு பகல் உணவுக்கு சகோதரர்கள் ஜெய்லானி, ஹனிபா, அஜ்வா நெய்னா, ராஃபியா, ரபீக் ஆகியோர் தலைமையில் ஆடு அறுத்து கொண்டுவந்து பெரிய மந்தி சாப்பாடு (PPT) சிறப்பாக நடைப்பெற்றது. அது சமயம் ஜித்தாவில் உள்ள அழைக்கப்பட்ட அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.

உலகமெங்கும் பரவிக்கிடக்கும் நமதூர் சகோதர சகோதரிகள் மற்றும் அனைவருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழுவின் உள்ளம் நிறைந்த தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பொன்மாலைப் பொழுது

நம் சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் எமது தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் !

சமீப காலங்களாக நம் சகோதரர்கள் அவ்வளவாக எழுதுவதில்லை. வாசிப்பு பழக்கமும் குறைந்து விட்டதோ ..என்ற அச்சமும் ,பேச்சு மற்றும் எழுத்துத் திறன் நம் மக்களிடையே வளர்க்க வேண்டும் என்ற ஆதங்கமும் கைகோர்த்துக் கொள்ள இந்தச் சிறிய முயற்சி! அதாவது ..நாம் ஒரு சிறிய சப்ஜெக்ட் / சம்பவத்தை எடுத்துக் கொள்வோம்.

அதை நம் சகோதரர்கள் மத்தியில் கொண்டு செல்வோம். மக்கள் அலசட்டும்! எழுதட்டும்!! இதோ நகைச்சுவையோடு கூடிய நமக்கே நேர்ந்த ஒரு சம்பவம். கருத்துக்களை மார்க்கம் பாதிப்பு இல்லாமல், மூர்க்கப் பார்வையின்றி, சிரித்து சிந்திக்குமாறு எழுதுக !எதிர்பார்கிறோம்!

அன்றொரு வியாழனின் இனிய மொன்மாலைப் பொழுது, மறுநாள் விடுமுறையாதலால், Holiday ஐ Holy day-யாக வரவேற்றுக் குதூகலத்துடன் தேனீரை ருசித்துக் கொண்டே தொலைக்காட்சியை ரசித்தவாறு கல்யாணம் பண்ணிய பிரம்மச்சாரிகள் (Bachlors) அறையில் அமர்ந்திருந்தோம். தொலைக்காட்சி சிறுவர்கள் நிகழ்ச்சியில் ஒரு ஒல்லிப்பிச்சான் மாணவன் வீரபாண்டி கட்டபொம்மனாக சூளுரைத்துச் சென்றான். அடுத்து ஏதோ ஒரு வித்யாலயா மாணவிகளின் பரத நாட்டியம் - தா.. தை.. தத்.. தா..

அந்நேரத்தில் A.R.ரஹ்மானின் சமீபத்திய மெட்டொன்றை கர்ணக்கடூரத்தில் சீட்டியடித்து பாடிக்கொண்டு, சகோதரன் அலிபாபா அதிரடியாக பிரவேசம் செய்யவே, தொலைக்காட்சிப் பக்கம் பார்த்தவன், "ச்சே யாங் காக்கா இந்த சாமி பாட்டையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கியளுவோ!.. சேனலை மாத்துங்க!" -ன்னான். மாற்றினோம்.

ஆடைப் பஞ்சத்தில் இரண்டரை டஜன் பெண்மனிகள் "மே.. மாதம்… 98-ல்.. மேஜர் ஆனேனே.." என்ற தத்துவப்(?!) பாடலை பாடி பேஜார் பண்ணிக்கொண்டிருக்க, "ஆங்.. இது ஓகே!" என்று அனைவரும் ஏகோபித்த குரலில் ஏற்றனர்.ஆக கலைக்கும் பிறமதக் கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாததாலா? அல்லது மற்ற மத ஆச்சாரம்தான் கூடாதது, தவிர ஆபாசம் தேவலாம் என்ற மனப்போக்கா?

இதைப் படிக்கும் வாசகரான உங்கள் கருத்து என்ன?

By

ரஃபியா

Sunday, December 7, 2008

மும்பைத் தாக்குதல் வெளிப்படுத்தும் சந்தேகங்கள் - அமரேஷ் மிஸ்ரா!
சனி, 06 டிசம்பர் 2008
வரலாற்றாசிரியரும் சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. அமரேஷ் மிஸ்ரா, உலகை நடுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மொஸாதும் ஹிந்துத்துவமுமே என்றும் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியங்கள் என்ன என்பதையும் முன்னர் தெரிவித்திருந்தார். அவரின் அக்கட்டுரை வெளியான நாளிலிருந்து அவருக்கு எதிராகப் பல மிரட்டல் குரல்களும் ஏளன குரல்களும் உயர்ந்திருந்தன. மும்பைத் தாக்குதல் குறித்து தான் ஏன் அவ்வாறான நிலைக்கு வர வேண்டி இருந்தது என்பதையும் தான் முன்னர் கூறிய "மொஸாதும் ஹிந்துத்துவமுமே" மும்பை தாக்குதலில் செயல்பட்டுள்ளன என்பதற்கான உறுதியான மேலும் பல கேள்விகளையும் தொடுத்து பதிலளித்துள்ளார்.அவரின் கூற்றிலிருந்து...

"மும்பைத் தாக்குதலின் பின்னணியில் மொஸாதும் ஹிந்துத்துவத் தீவிரவாதிகளும் செயல்பட்டுள்ளனர்" என்ற என்னுடைய குற்றச்சாட்டைக் குறித்துச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். எதனைக் குறித்து வேண்டுமானாலும் சந்தேகப்படவும் கேள்வி எழுப்பவும் அனைவருக்கும் முழு உரிமை உண்டு. சரியான பாதைக்கான எல்லா சிந்தனைகளின் பிறப்பிடம் சந்தேகம்தான். மும்பைத் தாக்குதலைக் குறித்து இணையம் வழியாக இந்தக் கருத்தைத் தெரிவித்த எனக்கு, கொலை மிரட்டல்கள், வசவு மெயில்கள் போன்றவற்றிற்கு மேலாக என்னுடைய தைரியத்தையும் பகுத்தறிவினையும் கேலிக்குள்ளாக்கிய எச்சரிக்கைகளும் கிடைக்கப் பெற்றன. சிலர் என்னைக் கேலிக்குள்ளாக்குவதை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், பிரபல அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் கிரிமினல் முகங்களையும் அவர்களின் இலட்சியங்களையும் மறைத்து வைப்பதற்கான தந்திரம்தான் இக்கேலிகள் என்ற உண்மையை நான் சற்று முக்கியத்துவத்துடனே எதிர் கொள்கிறேன். சங் பரிவார தலைமையிடங்களே மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டுள்ளன என்ற சந்தேகத்திற்குத் தற்பொழுது வலு கூடியுள்ளது. யதார்த்தத்தில் சங் பரிவாரம் என்பதை விட மோடி என்பதே சரியானது. அவர் ஹிந்துத்துவ 'ஃபாஸிசத்தின் நவீன முகமாவார். இந்தியாவிற்கு எதிரானவரும் நெறிகெட்ட வியாபாரிகளில் ஒருவருமான ரத்தன் டாடாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்தான் இந்த மோடி. 19 ஆம் நூற்றாண்டில் சைனாவிற்குப் போதைப்பொருள் கடத்தித்தான் டாடாவின் குடும்பம் பணம் சம்பாதித்தது. ஆங்கிலேயர்களுடன் போராடி 10 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த வேளையில், 1857இல் ஆங்கிலேயர்களுடன் இணைந்து தங்களுக்கான வருமானத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள்தான் இவரது குடுப்பத்தினர். பலவிதத்திலும் மோடி ஆர்.எஸ்.எஸ்ஸைப் பின் தள்ளி இருக்கின்றார். இவர் இந்தியாவுக்கான மொஸாத் குழுவின் முதல் நபராவார். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதிர்ந்த தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்: "அமரேஷ், கேடர்களின் மீது எங்களுக்கான கட்டுப்பாடு தற்பொழுது கைவிட்டுப் போய் விட்டது. ஒரிஸ்ஸாவிலும் கர்நாடகாவிலும் காரியங்கள் கைமீறிச் சென்று விடக்கூடாது என்பதில் எங்களுக்கு தீர்மானம் இருந்தது. ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவத் தலைவர்களுடன் ஒரு கூட்டு அறிக்கைக்கே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், கீழ்மட்டத்திலிருந்து அதற்கெதிராக எதிர்ப்பு உருவானது. பஜ்ரங்தளும் வி.ஹெச்.பியும் இதனை அங்கீகரிக்கத் தயாராயில்லை. மோடியின் இரகசிய ஆதரவு இவர்களுக்கு இருந்ததே அதற்கான காரணம். தெளிவாகக் கூறினால் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தோம்".உண்மையில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அவர்கள் உருவாக்கி விட்டுள்ள 'ஃப்ராங்கஸ்டைன்' பூதத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலையே உள்ளது. மோடியின் உருவத்தில் இந்த ப்ராங்கஸ்டைன் மொஸாதுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரிவினை தலைவிரித்தாடும் ஐ.எஸ்.ஐயுடன் மொஸாதிற்குத் தொடர்பு உண்டு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். மொஸாதோ சிஐஏயோ ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் மத்திய வர்க்க மக்கள் வாழும் பகுதிகளில் சில ஜிஹாதி குழுக்களை வழிநடத்துகின்றன என்பதையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ஓமானில் உள்ள ஒரு ஜிஹாதி இயக்கம் மொஸாதின் உருவாக்கம் என்பது சமீபத்தில் கண்டறியப் பட்டிருந்தது. அதனால்தான் மும்பையை ஆக்ரமித்த இளைஞர்கள் பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுபவர்களாக இருப்பதற்குச் சாத்தியம் உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் நாடுகள் வெவ்வேறாகும்.சிலர் பிரிட்டீஷ் முஸ்லிம்களாவர். இவர்களில் ஒருவருக்காவது மொரீஷியஸ் பாஸ்போர்ட் உண்டு என்பது உறுதியாகும். இந்த ஜிஹாதிகளை ஒன்றிணைத்து அனுப்பியது சௌதி அரேபியக்காரன் என்ற(மௌலானா பேதி என்று அந்த நபர் இப்பொழுது அழைக்கப்படுகிறார்) செய்தி இப்பொழுது உயர்ந்து வருகிறது.இந்நபருக்கு ஏதாவது இந்திய/மோடி ஏஜண்டுகள் பணம் கொடுத்திருக்கலாம். இந்தச் சூத்திரதாரிகளுக்குத் தனியாக மதமோ நம்பிக்கையோ எதுவும் கிடையாது. இவர்கள் அமெரிக்காவின் சிருஷ்டிகளாவர்; பணத்திற்காக வேலை செய்பவர்கள். சிலவேளைகளில் அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராகவும் இவர்கள் செயல்படுவர். இது ஏற்றுக் கொள்வதற்குச் சற்று கடினமான, ஆனால் வெளிப்படையான உண்மையாகும். ஒபராய் ஹோட்டலின் உரிமையாளர் நந்தாவும் மோடியின் நெருங்கிய நண்பராவார். இவருக்குக் குஜராத்தில் கோடிகணக்கான ரூபாய்களுக்கான முதலீடுகள் உள்ளன. இத்தாக்குதலுக்குப் பல நாட்களுக்கு முன்பே தாஜிலும் ஓபராயிலும் தீவிரவாதிகள் மறைந்திருந்தது எப்படி?. இரண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் நாட்கணக்காக ஆயுதங்களும் வெடிபொருட்களும் பாதுகாத்து வைக்க முடிந்தது எப்படி?அறிந்தோ அறியாமலோ ஹோட்டல் நிர்வாகிகளின் உதவியில்லாமல் இதெப்படி சாத்தியமாகும்?அறிந்தோ அறியாமலோ தங்களின் கட்டிடத்தைத் தகர்ப்பதற்கு உரிமையாளர்கள் உதவி செய்தனர் எனக் கருதுவது அவ்வளவு கடினமான காரியமா?தாஜ் நமக்கு மஹத்தான ஒன்றாக இருக்கலாம். ஆனால், டாட்டாவைப் பொறுத்தவரை தனிப்பட்ட வகையிலோ பொருளாதார ரீதியிலோ அதிலுள்ள பயன் என்ன?. மிக இலகுவான நிபந்தனைகளுடன் 'நானோ ப்ளாண்'டிற்கு மோடி வழங்கிய அனுமதி டாட்டாவிற்கு இதனைவிட முக்கியமாகும். இவ்விஷயத்தை நான் உங்களுடைய சிந்தனைக்கு விடுகிறேன்.நரிமான் ஹவுஸிற்கு வரும்பொழுது, மொஸாதின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் யூதரைக் கொல்வதற்கான காரணம் என்ன? என்ற சிலரின் கேள்வி என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!. ஏன் அவ்வாறு நடக்கக் கூடாது? தீவிரமான சியோனிஸத்தையே மொஸாத் பின்பற்றுகிறது. அது, ஹிந்துத்துவத்திற்குச் சமமான மத ஃபாஸிஸ தத்துவ சாஸ்திரமாகும். சனாதன தர்மத்துடன் ஹிந்துத்துவதிற்கு யாதொரு தொடர்பும் இல்லாதது போன்று, சியோனிஸம் என்பதும் யூத மதத்தின் ஓர் அங்கமல்ல.ஹிந்துத்துவவாதிகள் (தீவிர இராம பக்தரான) மஹாத்மா காந்தியைக் கொலை செய்தது போன்று, மொஸாதும் சியோனிஸவாதிகளும் சாதாரண யூதர்களைக் கொலை செய்கின்ற விஷயம் புறந் தள்ளக் கூடிய ஒன்றல்ல. பரவலான முஸ்லிம்-விரோத, இந்திய-விரோதக் கலவரத்திற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக கோத்ரா ரயில் தீ வைப்பின் மூலம் தங்களின் கூட்டத்தில் உள்ள பலரைக் கொலை செய்யத் துணை நின்றவர்தான் இந்த மோடி!அத்வானி மற்றும் மோடியின் ஆதரவாளர்கள் எனத் தன்னைத் தானே பெருமையுடன் கூறிக் கொள்பவர்கள், காந்தியைக் கொலை செய்தக் கயவர்களின் ஆதரளவாளர்களுமாவர். மத சார்பற்ற இந்தியா என்ற கொள்கைக்குத் துவக்கம் முதலே ஹிந்துத்துவ அரசியலும் அவர்களின் கொள்கைகளும் எதிராகவே இருந்து வந்துள்ளன. இவர்கள் 1947இல் இந்தியாவிற்கு எதிராகக் கலவரத்தை முன் நின்று நடத்தியவர்களாவர். முஸ்லிம்களுக்கு எதிரானத் தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் முக்கியமானவரான கோல்வார்க்கர் ஆங்கிலேயப் படைகளுடன் இணைந்துச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. யுனைட்டட் ப்ரோவின்ஸஸில் (இன்றைய யு.பி) உள்துறை செயலராக இருந்த ராஜேஷ்வர் தயாளின் கவனத்திற்கு இவ்விஷயம் வந்திருந்தது. அன்றைய முதலமைச்சர் கோவிந்த் வல்லப பந்திடம் இவ்விஷயத்தை அவர் தெரிவித்துமிருந்தார். இனி கார்கரே கொல்லப் பட்ட நிகழ்வை எடுத்துக் கொள்வோம். இரண்டு விதமான அபிப்பிராயங்கள் இதற்குள் வெளியாகி விட்டன. அவர் எவ்விதம் கொல்லப்பட்டார் என்ற விஷயம் இதுவரை தெளிவாகவில்லை. இதில் ஏதோ சதி நடந்துள்ளது என்ற சந்தேகம் நிலை நிற்கின்றது. தன் மகன் கொல்லப்பட்டது எப்படி என்பதைத் தெளிவிக்க வேண்டும் என கார்கரேயின் அன்னை ஆக்ரோசத்துடன் தொலைகாட்சியின் முன்னிலையில் கோரிக்கை வைத்த சம்பவமும் நடந்துள்ளது. மற்றொரு அதிகாரியான ஸலஸ்கரின் மைத்துனரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதாவது (நாட்டிற்காக உயிர்நீத்த) தீரமான உயிர் தியாகிகளின் உறவினர்கள் நீதி தேடுகின்றனர். தாங்கள் அறிந்தவற்றிற்கும் பின்னால் அறியாத பல விஷயங்கள் தீரமிக்கக் காவலர்களது கொலையின் பின்னணியில் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். கார்கரே, காந்தே, ஸலஸ்கர் ஆகியவர்களின் மரணத்திற்கும் மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். மோடி அறிவித்த ஒரு கோடி ரூபாயைக் கார்கரேயின் மகன் நிராகரித்தது எதனால்?. சிந்தித்துப் பாருங்கள்; குஜராத் அரசின் துணையில்லாமல் மும்பையை நோக்கிய தீவிரவாதிகளின் படகு பிரயாணத்திற்கு எந்த ஒரு சாத்தியமும் இல்லை. கார்கரேயும் காந்தேயும் மும்பைக் காவல்துறையில் உள்ளவர்களுள் மிகச் சிறந்த மதச்சார்ப்பற்றவர்களும் சனாதன இந்துக்களுமாக இருந்தனர். நடுநிலைமையின் மனித உருவங்களாக அவர்கள் இருந்தனர். குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்த கார்கரே எவ்விதம் குண்டு துளைத்து இறந்தார்?. அவருக்குக் குண்டு துளைத்தது நெஞ்சிலா? அல்லது கழுத்திலா?. அநேகமாக இவை எதுவுமே நமக்குத் தானாக வெளிவரப் போவதில்லை. ஆனால், நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்படி அறிவதற்கான உரிமை நமக்கு உண்டு. மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்குடன் ப்ரவீண் தொகாடியா, சோட்டா ராஜன் போன்றவர்களின் பெயர்கள் வெளியான வேளையிலேயே கார்கரே தொலைத்துக் கட்டப் பட்டுள்ளார்.பாகிஸ்தானையும் சீனாவையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க, இந்தியாவைத் தங்களின் கூட்டணியினுள் கொண்டு வருவதே அமெரிக்க-இஸ்ரேல் முயற்சிகளாகும். அதற்காகவே அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் மும்பையில் குறி வைக்கப்பட்டனர். நரிமன் ஹவுஸில், சந்தேகத்திற்கிடமான வகையில் அதிகமான இஸ்ரேலிகள் வந்து சென்று கொண்டிருந்ததாக அண்டைவாசிகளின் சாட்சியங்களை வைத்து அதிகமான செய்திகள் வெளியாகியிருந்தன. கொலையாளிகள் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு, தங்களைச் சார்ந்தோரைக் கொலை செய்திருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.அபாயகரமானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமான இஸ்ரேல்-அமெரிக்க அணியில் இந்தியாவை இணைப்பதற்காக முயலும் இந்திய அரசாங்கத்தில் உள்ள ஒரு கூட்டத்திற்கும் பாகிஸ்தான், சீனா, இரான் போன்ற நாடுகளுடன் நல்ல தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு செல்லும் சுதந்திர நாடாக இந்தியா தொடர வேண்டும் என விரும்புகின்ற எதிர்க் கூட்டத்திற்கும் இடையிலான சண்டைதான் மும்பையில் அரங்கேறியிருக்கின்றது.
எனவே, இது இந்திய தேசியம் புனர் நிர்மாணிக்கப்பட வேண்டிய தேவையான காலகட்டமாகும். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் ஹிந்துத்துவத்திற்கும் அனுகூலமான நாட்டின் செயல்பாடுகளே இதுபோன்ற அக்கிரமங்களுக்கான அடிப்படைக் காரணம். 1857இல் நிலைபெற்றிருந்த, ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் உறுதியானதுமான தேசியத்திற்கு நாடு திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் இது.
அமரேஷ் மிஸ்ரா
நன்றி :சத்தியமார்க்கம்.காம்

Saturday, December 6, 2008

அரஃபா தினத்தன்றைய நோன்பு

اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكةُ

ஏகஇறைவன் தனது அடியார்கள் பாவம் செய்தவர்களாக மறுமையில் தன்னை சந்திக்கவிருப்பதை விரும்பவில்லை அதனால் அவர்கள் உலகில் வாழும் காலத்திலேயே தங்களது பாவங்களை கழுவி தூய்மையாக்கிக் கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களை தனது திருத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் அறிவித்துக் கொடுத்தான். அதில் ஒன்று தான் அரஃபா தினத்தன்றைய நோன்பு.

ஹஜ்ஜூடைய நாட்களில் ஒன்பதாம் நாள் அன்று ஹஜ் யாத்ரீகர்கள் அரஃபாவில் குழுமுகின்ற தினத்தன்ற வெளியில் இருக்கக் கூடிய மக்களை பெருமானார் (ஸல்) அவர்ளக் நோன்பு நோற்க உத்தரவுப் பிறப்பித்ததுடன் அவர்களும் அன்றைய தினம் (ஹஜ் செய்;யாத வருடங்களில்) நோன்பு நோற்றார்கள். நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி) நூல்கள்: அபூதா¥த், நஸயீ, அஹ்மத்பிரதி

பலன்

இதன் மூலமாக நோன்பு நோற்றவர்களுடைய கடந்த வருடத்துப் பாவங்களையும் இந்த வருடத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பதாக பெருமானார்(ஸல்) அவரகள் அறிவிக்கின்றார்கள். அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ''அது கடந்தவருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதா¥த்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

ஆறாதே மனம் டிசம்பர் ஆறுவந்தால்

நரசிம்மன் என்ற நரி கண்மூடி தூங்கியதுபோல் நாடகமாடிய பொழுதினில்..
ஓ நாய்கள் சேர்ந்து நம் தன்மானதில் சிறு நீர் கழித்ததுவே!
ஹிட்லர் கூட்டங்கள் இடித்தது இறை இல்லத்தை மட்டுமா?
மன சாட்சியுள்ள மனிதன் சொல்வர்- இறையாண்மையும்,இந்தியப்பெருமையும் சேர்த்துதான்!
குற்றம் செய்தவன் நாளை நாட்டின் பிரதமர்,சனாதிபதி,சட்டம் இயற்றுபவன்
ஆனால் நிரபராதி கைதியாய்....சட்டத்தின் கால் அவனின் குரல் வலையை அழுத்தி கொண்டும் இருப்பதில் இந்தியன் என்று சொல்வதில் பெருமையா? இழிவா?
இதில் வேற்றுமையில் ஒற்றுமை என வெற்று பிரச்சாரம்!
மசூதி இடித்ததை காலம் மறக்கலாம்....
ஆனாலும்,அந்த புண் புனுக்குக்குள் இன்னும் ஆறாமல் இன்னும் மறைந்தே இருக்கிறது!
தினம் அந்த ரணம் ,வேதனை!
ஒரு நாள் காயம் ஆரும் அன்று மசூதி அங்கே மருபடியும் எழும்!
அதுவரை இந்திய முஸ்லிம் என்று சொல்லாமல்...
இந்தியாவில் வாழும் முஸ்லிம் என கொள்வோமா?
-----தபால் காரன்(முகமதுதஸ்தகீர்)
www.adiraipost.blogspot.com