Saturday, January 31, 2009

சரபுதீன், சுப்பு, சர்மா

சுபுஹூ தொழுகையை முடித்துவிட்டு சேர்மன் வாடி அருகே தேதனீ குடித்து விட்டு மெதுவாக வீடு திரும்பிக் கொண்டிருந்த சாவண்ணா காக்காவுக்கு தன் ஒரே மகனான சரபுதீனை நன்றாக படிக்க வைத்து பெரியாள ஆக்க வேண்டும் என்று நினைத்த படி வீட்டை வந்தடைதார்.

அப்போது மதராஸிலிருந்து காரைக்குடி நோக்கி செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ்(?) சத்தம் போட்டுக்கொண்டே கடந்து சென்று கொண்டுருக்க சல்மா ராத்தாக்கு அப்போது தான் மூத்த மருமகன் சென்னையிலிருந்து வருவதாக மகள் சொன்னது நினைவுக்கு வர, மகன் சரபுதீனை தூக்கத்திலிருந்து எழுப்பி மச்சான் வாராக செக்கடி மோட்டுக்கு போய் கால் கிலோ ஈரலும், மைதா மாவு அரைக்கிலோவும் வாங்கி வரச்சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

அவன் சென்று கொண்டிருக்கும் போது தான் நேத்து கணக்கு டீச்சர் வீட்டு பாடம் சொன்னது நினைவுக்கு வர சரி திரும்பி வந்து சந்தேகம் ஏதும் இருந்தால் மச்சானிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளலாம் சென்றுவிட்டு (மச்சான் தான் மதரஸ்ல நமதூர் பெரிய கம்பெனியிலே கணக்குபிள்ளையாச்சே! அவங்களுக்கு எல்லாம் தெறியும் என்று இவன் நினைப்பு) வந்தவுடன் இவன் மச்சானிடம் கேட்கா நினைக்க ஏட்டு கணக்கு நமக்கு சரிவராது என்று அவர் ஒதுங்கிகொண்டார்

அதே காலை வேலை அன்றைய தொழிலுக்கு தயாராகிகொண்டுருந்தர் சுந்தரம் ஆசாரி. வீட்டு வாசலில் பால்காரான் சத்தம் கேட்டவுடன் தான் நாளை முதல் தேதி என்று அப்பொழுதுதான் நினைவு வந்தவராக மகன் சுப்புவை தூக்கத்திலிருந்து எழுந்திருக்க வைத்து அவனை சொரைக்க கொல்லையில் இருக்கும் மரைக்கா வீட்டுக்கு போய் இளைப்பு பட்டரையில் இருந்து மரம் வந்து விட்டதாக பார்த்து விட்டு இல்லையென்றால் பட்டறைக்கு போய் மரங்களை அனுப்பிவிட்டு வரவும் என்று சொல்ல அவன் பள்ளி கூடத்தில் கொடுத்த வீட்டு பாடம் செய்ய வேண்டும் என்று போக மறுக்க அம்மா வந்து சமாதானம் செய்தால் நீ இப்போ போனால்தான் நாளை பணம் கிடைக்கும் அது வந்தால்தான் வீட்டு வாடகை கொடுக்கனும் உனக்கு பரீட்சைக்கு பணம் கட்டனும் என்றவுடன் உடனே கிளம்பி சென்றான்

சேது ரேட்டில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த சந்தான்ம் அய்யருக்கு நேற்றைய தினம் மகன் சர்மாவுக்கு கணக்கு பாடத்தில் குழப்பம் ஏற்பட்டதை காலையில் சரி செய்து தருவதாக் சொன்னது நினைவுக்கு வர அன்றை தூரத்தை குறைத்துக்கொண்டு சீக்கிரமாக வீடு திரும்பினார், காலை டிபன் செய்யும் முன்பே மாமா வீடு திரும்பியது மாமிக்கு ஆச்சரியதை கொடுத்தது இன்றாவது கும்பாகோணத்தில் உள்ள சொந்தா வீட்டை விற்று விட்டு மெட்ராஸ்ல பிளாட்டு வாங்க சொல்ல வேண்டும் அப்போது மகனின் மேற்படிப்பை அங்கு தொடர சவுகரியமாக இருக்கும் என்று எண்னிக்கொன்டிருக்கும் வேலையில் தூக்கத்தில் இருந்த மகனை எழுப்பி பல் விளக்க பேஸ்ட் பிரஸ் எடுத்துக் கொடுத்தார், மாமி பில்டர் காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். அன்றைய தினம் படிக்க வேண்டிய அனைத்தையும் மகனுக்கு சொல்லி கொடுத்து விட்டு பக்கத்து கிராமத்தில் இருக்கும் பேங்கிற்கு 8.30 மணி பஸ்ஸை பிடிக்க ம்திய சாப்பாட்டிற்கான தயிர் சாதத்துடன் வேகமாக கிளம்பினார்

சரபுதீன், சுப்பு, சர்மா மூவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்ஜில் படிக்கும் மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் ஒன்றாக பழகிவருகின்றனர், வட்டாரச் செய்தி முதல் வண்ணத்திரை செய்தி வரை இவர்கள் அலசாத நட்களே இல்லை என்றே சொல்லலாம்.

இவர்களுக்கு என்னா நடந்து....................................?

விரைவில்

சின்னகாக்கா

அதிரை எக்ஸ்ப்ரஸை (மாற்றுவழியில்) அமீரகத்தில் காணலாம்!

அதிரை எக்ஸ்ப்ரஸ் தளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இணைய வழங்கி நிறுவனத்தால் தடுக்கப்பட்டுள்ள காரணத்தால் அமீரகவாழ் அதிரைவாசிகள் நமது தளத்தை அணுக முடியவில்லை என்பது அறிந்ததே. தடுக்கப்பட்டுள்ள நமது வலைப்பூவை அமீரகக் கணினிகளில் காண்பதற்கு முறையான மடல் மூலம் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொண்டும் பயனில்லை.

http://tinyurl.com/adirai

மாற்றுவழியாக,அதிரை எக்ஸ்ப்ரஸ் தளத்தை ப்ளாக்கரிலிருந்து வேர்ட்ப்ரஸ் தளத்திற்கு மாற்றுவது குறித்தும் பரிசீலித்து, அதற்கான முயற்சிகளையும் செய்தோம். ஒருசில தொழில் நுட்பக் குறைபாடுகள் மற்றும் பதிவர்களின் வசதிக்காக மீண்டும் ப்ளாக்கரிலேயே இருப்பதென்றும், அதிரை எக்ஸ்ப்ரஸ் முகவரியை சற்று மாற்றி http://adiaixxpress.blogspot.com என்ற முகவரிக்கு பழைய பதிவுகளுடன் தொடர்வதென்றும் அறிவித்திருந்தோம்.

http://tinyurl.com/adirai

மேலும்,அதிரை எக்ஸ்ப்ரஸையொத்த வலைப்பூமுகவரிகளை சிலபதிவர்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதால் அவற்றையும் எங்களால் அணுக முடியவில்லை. முகவரிக் குழப்பத்தைத் தவிர்க்க அதிரை எக்ஸ்ப்ரஸின் பெயரைப் பிரதிபலிக்கும் http://adiraiexpress.blogspot.com & http://adiraixpress.wordpress.com முகவரிகளை அதிரை எக்ஸ்ப்ரஸுக்கு தந்துதவும்படியும் கேட்டிருந்தோம். அதில் http://adiraiexpress.blogspot.com முகவரியை தனது சொந்தப் பெயரில் பதிவு செய்துவைத்திருப்பதால் தொடர்புடைய மின்மடல்களையும் இழக்க நேரும் என்று சம்பந்தப்பட்ட தளமுகவரியின் உரிமையாளர் தயங்கினார்.அதற்கும் மாற்றுவழியை அவருக்கு மின்மடலில் தெரிவித்திருந்தோம். அதன்பிறகு அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

http://tinyurl.com/adirai

இப்படியாக, அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினர் அமீரகத்தில் அதிரை எக்ஸ்ப்ரஸ் தெரிவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் சரி, இறுதியாக என்னதான் சொல்ல வருகிறீர்கள்? அமீரகத்தில் அதிரை எக்ஸ்ப்ரஸைக் காணமுடியுமா முடியாதா? என்று அமீரகவாசகர்கள் சார்பாகக் கேட்பவர்களுக்கும் அமீரகவாழ் அதிரைவாசிகளுக்கும் நற்செய்தி! http://nakis.tv/browse/ என்ற முகவரியை உங்களின் இணைய உலாவியில் (WEB BROWSER) முகவரிப் பக்கத்தில் கொடுத்து, அதன்பிறகு வரும் மற்றொரு சாளரத்தில் http://adiraixpress.blogspot.com என்று கொடுத்தால் ப்ராக்ஸி வழியாக அதிரை எக்ஸ்ப்ரஸைக் காணலாம். இந்நற்செய்தியை அமீரகவாழ் அதிரை வாசிகளுக்கு மின்மடல் மற்றும் SMS வழியாகத் தெரியப்படுத்தி, நமதூரின் ஒட்டுமொத்த இணைய குரலாக அதிரை எக்ஸ்ப்ரஸை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

அதிரை எக்ஸ்ப்ரஸ் டீம்
****************************

http://tinyurl.com/adirai

இனிய இல்லறம்

'நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.
அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்!

அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்' (அல்குர்ஆன் 4:19) பெண்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளன? என்பதை இவ்வசனம் அழுத்தமாகச் சொல்வதைக் கடந்த தொடர்களில் அறிந்தோம்.

இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.

திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும்.

பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள். திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.

இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் - மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன? அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். 'நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும். எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.

இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.

பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

நாம் வாகனத்தில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது குறுக்கே மனிதனோ ஏனைய உயிரினங்களோ வந்தால் பெரும்பாலும் அதில் நமது வாகனம் மோதிவிடும். அந்த உயிரினத்துக்கோ நமக்கோ ஆபத்து ஏற்பட்டு விடும். ஆனால் எருமை மாடுகள் குறுக்கே வந்தால் விபத்துகள் நடப்பதில்லை. அது நிதானமாகத் தான் வரும். நாம் வேகமாக வந்தால் அது மிரண்டு போய் நம் வண்டியில் வந்து மோதாது என்று அறிந்து வைத்திருக்கிறோம். எனவே எருமையின் அந்த நிதானத்தைப் புரிந்து கொண்டு வேகமாகச் சென்று விடுகிறோம்.

பெண்களை எருமை மாட்டுடன் ஒப்பிடுவதற்காக இதைக் கூறவில்லை.
எருமையின் சுபாவம் இதுதான் என்று ஏற்றுக் கொள்ளும் போது அதற்கேற்ப நடந்து கொள்கிறோம் அல்லவா! அந்தப் பக்குவம் ஆண்களுக்கு வேண்டும்.

நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது - அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.
இதுபோல் தான் பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.

இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை. அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. அதை மற்றொரு வசனத்தை விளக்கும் போது குறிப்பிடுவோம். இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான். மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!


Chinnakaka

Thursday, January 29, 2009

காதிர் முகைதீன் பள்ளி அறிவிப்பு

அன்புடையீர். அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் நம்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரா? உடன் நமது முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராகுங்கள். நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்புகொண்டு உறுப்பினராகுங்கள்.நம்பள்ளி சென்ற ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 85% சதவீதம் தேர்ச்சியும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

எல்லா திறனும் உள்ள நமது மாணவர்களை சிறந்த சாதனையாளராக உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால் முழுக்க முழுக்க பள்ளியின் நலன் கருதியே இந்த முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடன் 04373-242229 என்ற நம் பள்ளியின் தொலைபேசியிலோ அல்லது kmboysoldstudentassociation@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்தோ அல்லது உங்களின் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளைத் தூண்டிய உங்கள் ஆசிரியர்களைத் தொடர் கொண்டோ இச்சங்கத்தில் இணையுங்கள்.

உங்களுக்கென்று விரைவில் ஒரு விழா தொடங்க இருக்கிறது. பழமையின் நினைவுகளும் இளமையின் கனவுகளும் சுமந்துள்ள நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

திருமதி பி.ரோசம்மாள்தலைவர்தலைமையாசிரியர்(செல் : 9442267365)
ஜனாப் எம்.ஹாஜி முகமது துணைத் தலைவர்
ஜனாப் ஏ.மஹ்பூப் அலி செயலாளர் (செல் : 9442767380)
திரு.ஏ.சீனிவாசன் பொருளாளர் (செல் : 9443863697)
டாக்டர் ஆ.அஜ்முதீன் துணை செயளாளர் (செல் : 9894666791)

உங்கள் நண்பர்களின் இமெயில் முகவரியைத் தெரிவிக்கவும் அவர்களிடம் இத்தகவலையும் தெரிவிக்கவும்.

Tuesday, January 27, 2009

AWARD

Forwarded by
Dr. A. AJMUDEEN, M.A., B.Ed., S.L.E.T., Ph.D., D.M.T., D.C.A., C.T., C.M., C.G.T,


Monday, January 26, 2009

பேரூராட்சி தலைவர் பதக்கம் வாங்குவதால் நமக்குப் பெருமையா? -1

நேற்றைய தினம் அதிரை எக்ஸ்பிரஸில் பேரூராட்சி தலைவர் பதக்கம் வாங்குவதால் நமக்குப் பெருமையா? என்ற கட்டுரையையும் அந்த கட்டுரை தொடர்பாக அரட்டை அரங்கத்தில் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து வந்த வாசகர் ஒருவரின் மடல் இது. வாசகரின் கருத்துகளுக்கு எக்ஸ்பிரஸ் குழுமம் பொறுப்பல்ல.
------------

அதிரை எக்ஸ்பிரஸ் குழுமத்தாருக்கும் அதிரைச் சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் பேரூராட்சித் தலைவருக்கு தமிழக அரசு விருது வழங்கியிருக்கிறது என்ற செய்தியை அதிரை எக்ஸ்பிரசில் பார்த்து மகிழ்ந்தேன். அதனைத் தொடர்ந்து விருது பெறுவதால் நமக்குப் பெருமையா? என்று கேள்வியெழுப்பி மற்றொரு பதிவையும் பார்த்தேன்.முதலில் கோட்டை அமீர் விருது குறித்து:

கோட்டை அமீர் செய்தது சரியா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால் இந்த விருதைக் கொடுப்பது கோட்டை அமீர் அல்ல. மாறாக தமிழக அரசு இந்த விருதை அளிக்கிறது. மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட ஒருவருக்கு இது ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படுகிறது.

நமது பேரூராட்சித் தலைவருக்கு கிடைத்தது குறித்து:

மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்ட ஒருவர் என்று தமிழக அரசு நமதூரைச் சார்ந்த பேரூராட்சித் தலைவருக்கு விருது வழங்கி கவுரவத்திருப்பதால், அந்த விருது எனக்கும் கிடைத்ததாக எண்ணி நான் பெருமையடைகிறேன்.

நமது பேரூராட்சித் தலைவர் குறித்து:

நமது பேரூராட்சித் தலைவர் குறித்து எனக்கும் விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக அல் அமீன் பள்ளி விசயங்களை நேரில் பார்க்கவில்லை எனினும், அதிரை எக்ஸ்பிரஸ் மூலம் அறிந்து அவர் மீது கோபம் ஏற்பட்டது, அந்தக் கோபம் இன்னும் இருக்கிறது என்பதெல்லாம் உண்மையே. நம்முடைய சகோதரன் மீதுதானே நாம் உரிமையுடன் கோபப்பட முடியும். ஆனால் அந்தக் கோபம் நமக்கும் நம் சகோதரனுக்கும் மத்தியில்தானே தவிர, நம் சகோதரன் வேறொருவரால் மதிக்கப்படும் போது அதில் நாமும் மகிழ்ச்சியடைவே வேண்டும். ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை மனதில் கொள்ளவும்.

அன்றைய தின அரட்டை அரங்கம் குறித்து:

பேரூராட்சித் தலைவருக்கு விருது கொடுத்தது ஒரு பக்கம் மகிழ்வைக் கொடுத்தாலும், அவர் மீதான முந்தைய கோபத்தை மனதில் கொண்டு அன்றைய தினம் அரட்டை அரங்கத்தில் சகோதரர்கள் வார்ததைகளால் சன்டையிட்டுக் கொண்டனர். ஒருவர் பேரூராட்சித் தலைவர் அதிரை கிடையாது. ஒரத்த நாட்டைச் சார்ந்தவர் என்று கூறினார். மற்றொருவரோ மேலத்தெருவே அதிரை கிடையாது. அது ஏரிப்புரக்கரை என்று ஒதுக்கினார்.

பல்லாயிரம் மைல் தூரம் தாண்டி பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்த போது பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக கண்ணீர் விட்ட / கவலைப்பட்ட நாம், நமது அடுத்த வீட்டுச் சகோதரனை சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

மேலத்தெரு அதிரையல்ல என்ற வாதிட்ட சகோதரருக்கு, அதிரையின் ஆரம்பம் கடற்கரைத் தெருவும் மேலத்தெருவும்தான் என்பதை நினைவூட்டுகிறேன்.

அதிரைவாசிகள் மட்டுமல்லாது பல்வேறு தமிழர்களும் வந்து செல்லும் இடத்தில் நாகரீகமான வார்ததைகளைக் கொண்டு உரையாடுங்கள். தமிழை பிழையின்றி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.

டிஸ்கி : நான் நடுத்தெரு பகுதி என்றறியப்படும் ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த முஹம்மது அலிய் ஆலிம் அவர்களின் மகன்.


Sunday, January 25, 2009

வெளிநாட்டில் சாதா(ரண) வாழ்க்கை - 1

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார்.

பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவர் வண்ணான் மடிப்புடன் துணிகளை அடுக்கிவைப்பதை வழமையாக்கியிருக்கிறார். அடுத்த படுக்கைக்காரர் ஊருக்குப் போவதற்காக வாங்கி வந்த பெரிய பெட்டியை வைக்க இடமின்றி அந்த இடைப்பட்ட இடத்தில் வைத்துவிட்டு இவரது துணிகளை இவருடைய கட்டிலின் மேல் வைத்திருக்கிறார். நான்கு நபர்கள் பங்குபோட்டுக்கொள்ளும் அறையில் இது எனது இடம் என்ற உரிமை கொண்டாட முடியாத நிலையில் நண்பர் இருந்தபோதும், தன்னிடம் ஒரு வார்த்தை அனுமதி கேட்காமல் தான் புழங்கிய இடத்தைப் பெட்டியால் மற்றவர் நிறைத்ததை இவரால் அப்போதைக்கு தாங்கிக்கொள்ள இயலவில்லை. வேறு வழியில்லாமல் அமைதியாக தனது பெட்டியில் கிடைத்த இடத்தில் துணிகளை அடைத்துவிட்டு வந்திருக்கிறார்.

அறைப்பங்கீடு தொடர்பான இப்படி ஏதாவது நிகழ்வை வாரத்தில் இரண்டு மூன்று முறைகள் கேட்கவேண்டியதாகி இந்த உரையாடல்களும் துபாயின் வாழ்க்கை முறைகளுள் ஒன்றாகிப்போனது. இப்படிப்பட்ட சகிப்புத் தன்மையை மனதில் ஏற்கச் செய்யும் அற்புதமான அந்த அறை வாழ்க்கையை துபாயில் 'பெட் ஸ்பேஸ்' என்பார்கள்.

எழுபதுகளின் இறுதியிலிருந்தே இந்த 'பெட் ஸ்பேஸ்' என்னும் படுக்குமிடவாழ்க்கை முறை துபாயில் இருந்தது, ஆனால், அது நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் தங்குமிடங்களிலும், தொழிலாளர் முகாம்களில் மட்டும் இருந்தது. வெளியிலென்றால் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுப்பார்கள், அதற்கான கால அவகாசம் கிடைத்தது. இப்பொழுது அப்படியல்ல; அறிந்தோர், தெரிந்தோர், நண்பர்கள், ஒரே நிறுவனத்தில் பணிபுரிவோர் இவர்களிடையே மட்டும் புழங்கியிருந்த வழமை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அறிமுகமில்லாத புதிய மனிதர்களுடனும் அறையைப் பங்குபோட்டுக்கொள்ளும் அளவிற்கு மக்களை கட்டாயப்படுத்துகிறது.

போதிய வருமானம் இருந்தும் தனது வசதிகளைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு வாழ்ந்து அதிகமான பணத்தைச் சேமிக்கலாம் என்னும் எண்ணத்தில் இப்படி படுக்குமிடங்களைத் தேடுபவர்களின் சதவீதம் குறைவானது. வேறு வழியில்லாமல் இந்த கட்டாய வாழ்க்கைமுறையை ஏற்றிருப்போரே அதிகமான சதவீதம் உள்ளனர்.

பிரம்மச்சாரியாக துபாய்க்கு வருகின்ற நடுத்தர வர்க்கத்தினர் முதலில் தேடுவது அறைப்பங்கீட்டைத்தான். செய்தித்தாள் விளம்பரங்களில் படுக்குமிடத்திற்கான விளம்பரம் வந்திருந்தால் அது உயர்நடுத்தரவர்க்கத்திபரிடம் இருந்துதான் வந்திருக்கிறது என திட்டவட்டமாகச் சொல்லலாம். செய்தித்தாள் விளம்பரங்களில் பெரும்பாலும் ஒரு அறையை இருவர் அல்லது அதிகபட்சமாக மூவர் பங்குபோட்டுக்கொள்வதான விளம்பரங்கள் வெளிவரும். இது ஒருவகையான படுக்குமிடம். இந்த வகையில் சிரமங்கள் அத்தனை இருக்காது. ஒரு அறையை இரண்டு பேர் பங்கிட்டுக்கொள்வதென்பது துபாய் பிரம்மச்சாரிய வாழ்க்கையில் ஆடம்பரமென்றால் அது பொய் கிடையாது. இருவரே அறையில் இருப்பதால் வாடகைக்கான தொகையும் அதிகமாகவே இருக்கும். அத்தனை தொகையைக் கொடுத்து வாடகைக்கு எடுக்கும் அளவிற்கு வசதியிருக்கும் உயர்நடுத்தரவர்க்கத்திடம் வாகன வசதி இருக்கும், கணினி, அகலப்பாட்டை, அறைத்திரையரங்கம் (ஹோம் தியேட்டர்), ஒலிஒளி அமைப்பு, தொலைக்காட்சி என சகல வசதிகளுடன் எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைமுறை உயர்நடுத்தரவர்க்கத்து அறைப்பங்கீடு.

இதற்கு சற்றே மாறுபட்டது நடுத்தரவர்க்கத்தினரின் அறைப்பங்கீடு. மேற்சொன்ன பங்கீடுகள் புதிய அடுக்குமாடிக்குடியிருப்புகளில் இருக்குமென்றால், நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கை பழைய கட்டடங்களில் ஒருபடுக்கையறைக் குடியிருப்பின் கூடத்தை இன்னொரு அறையாகப் பாவித்து அதை இரண்டுபேருக்கு வாடகைக்குவிட்டு, முறையான அறையில் இரண்டு பேர் தங்கிக்கொள்ள நான்கு பேராக மொத்தக் குடியிருப்பையும் பகிர்ந்துகொள்ளும் வழமை. இந்த வகையில் இருக்கும் ஒரே சிக்கல் குளியலறைப் பிரச்சனைதான். தங்கியிருக்கும் நால்வருக்கும் அலுவலக நேரம் ஒரே சமயத்தில் இருக்குமானால், அவர்களுக்குள்ளாகவே குளியலறை நேரத்தைப் பங்குபோட்டுக்கொண்டு அவரவர் நேரத்தில் அவரவர் சென்று காலைக்கடன்களை முடிக்கவேண்டியிருக்கும். இந்த வகைப் பங்கீட்டிற்கு புதியவரை அனுமதிக்கும் முன் கேட்கப்படும் கேள்விகளுள் முதல் கேள்வி, 'வேலை நேரம் எப்போது துவங்குகிறது?' என்பதுதான். அதன் பிறகே புதியவருடன் அரையைப் பங்கிட்டுக்கொள்வதா வேண்டாமா என்பதை மற்றவர் முடிவு செய்வர்.


அபுல் கலாம் ஆசாத்

பேரூராட்சி தலைவர் பதக்கம் வாங்குவதால் நமக்குப் பெருமையா?

நமதூர் பேரூராட்சி தலைவர் பற்றியும் அவர் அதிரை முஸ்லிம்களுக்கு செய்துவரும் துரோகங்கள் பற்றியும் அதிரை அல் அமீன் பள்ளிவாசல் தொடர்பாக தன்னுடைய உலக ஆதாயத்திற்காக அதிரை திமுக தலைவருடன் இந்து-முஸ்லிம்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருப்பது பற்றியும் அதிரை எக்ஸ்பிரஸ் விலாவாரியாக பிரித்து மேய்ந்திருப்பதை வாசகர்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறிருக்க, வருகிற ஜனவரி 26 அன்று குடியரசு தினவிழாவில் கோட்டை அமீர் என்பவர் பெயரில் கொடுக்கப்படும் விருது ஒன்றை பெற இருப்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பகுத்தறிவு தலைவர் கருணாநிதி ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் அல்வா போதாதென்று அதை பங்குபோட ஊரிலிருந்து ப்ளஷரில் பயணம் செய்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

நம் அப்பாவி தமிழீழ சொந்தங்களுக்கு கருணாநிதி கொடுத்துக்கொண்டிருக்கும் அல்வா புளித்து போயுள்ள நிலையில் ஏனங்கோ நீங்களும் பிளஷர் பிடித்து சென்னை போறீங்க? இவர் பற்றிய கருத்துக்கணிப்பு ஏற்கெனவே வலப்புற பட்டையில் பல்லிலித்துக்கொண்டிருக்கிறது.

அல் அமீன் பள்ளிவாசல் விசயத்தில் திமுகவிற்கு முஸ்லிம் இளைஞர்களின் ஓட்டுவங்கியும் இல்லாமல் போயிருக்கும் நிலையில் பேரூராட்சி தலைவருக்கு விருது கொடுப்பதால் அந்த சரிவை சமாளிக்கலாம் என்று திமுக நினைத்திருக்கக்கூடும். அதிரை முஸ்லிம்களின் வணக்கஸ்தலத்திற்கு வில்லங்கம் செய்து வந்ததற்கு பாராட்டும் விதமாகவே இந்த விருதை அதிரை முஸ்லிம்கள் பார்க்கிறார்கள். பள்ளிவாசல் விசயத்தில் திமுகவிற்கு அதிரை முஸ்லிம்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்...இன்ஷா அல்லாஹ்...

முஸ்லிம் பெயர் தாங்கி கோட்டை அமீர் என்று பெயர் சூட்டி விருது வழங்குவதால், முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி அடைவதில்லை அவர்களுக்கான உரிமையை சரிவர கொடுப்பது தான் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று மக்கு ஆட்சியாளர்களுக்கு நினைவுறுத்துகிறோம.

உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.....

கோட்டை அமீர் பற்றின பழைய செய்தி

Saturday, January 24, 2009

தள மேம்பாடு குறித்து

அதிரைச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த ஆண்டின் இறுதியில் வாக்களித்தது போன்று தளத்தில் சில மாறுதல்கள் செய்திருக்கிறோம். எக்ஸ்பிரஸ் வாசகர்கள் அதிகம் பயன்படுத்தும் அரட்டை அரங்கத்தைப் பெரிது படுத்தியிருக்கிறோம். கண்ணுக்கு இதமான வண்ணத்தில் பேக்ரவுண்ட் அமைத்துள்ளோம். வாசர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து அவ்வப்போது எக்ஸ்பிரஸ் தளத்தில் மாற்றங்கள் தொடரும்.

அதிரை செய்திகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் உலகெங்கும் உள்ள அதிரைவாசிகள் அதிரை எக்ஸ்பிரஸை எட்டிப் பார்க்கின்றனர். எக்ஸ்பிரஸ் குழும நிர்வாகிகள் பலரும் வெளிநாடுகளில் இருப்பதால், உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன் தருவதில் தாமதங்கள் ஏற்படுகிறது.ஏற்கனவே நாம் கேட்டுக் கொண்டபடி அதிரையிலிருக்கும் நமது சகோதரர்கள் பங்களிக்க முன் வர வேண்டும். தங்களைப் பற்றிய சுய அறிமுகத்தை adiraixpress@gmail.com எனும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி, தங்களையும் பங்களிப்பாளர்களாக இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பங்களிப்பாளர்களாக இணைந்து கொண்டால் செய்திகளை நீங்களே நேரடியாகப் பதியலாம். இதன் மூலம் உங்களின் எழுத்துத் திறமை அதிகரிப்பதுடன் வெளிநாடுகளில் உள்ள உங்கள் சகோதரர்கள் நமதூர் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறீர்கள்.

பிழையின்றி தமிழ் எழுத இயலுமா என்ற தயக்கம் வேண்டாம். பயிற்சியின் மூலம் இது சாத்தியமே. இணைவோம் வாருங்கள். புதிய வரலாறு படைப்போம்.

எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பங்களிப்பாளர்களாக உள்ள சகோதரர்கள் கவனத்திற்கு: தாங்கள் எழுதும் கட்டுரைகள் நீளமாக இருந்தால் வாசகர்களுக்கு அயர்ச்சியைத் தரும். எனவே தங்கள் கட்டுரைகள் நீளமாக இருந்தால் பகுதி-1, பகுதி-2 என்று ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாக பதியுங்கள்.

மேலும் உங்கள் பதிவின் முதல் பத்தியை "மேலும் வாசிக்க..." என்பதற்கு முன்பும், மற்ற பகுதிகளை "மேலும் வாசிக்க..." என்பதற்கும் கீழும் இடுங்கள். இதன் மூலம் பதிவுகள் அழகாகக் காட்சியளிக்கும்.


வாசகர்களின் தொடர் ஒத்துழைப்புக்கு நன்றி. மஅஸ்ஸலாம்.

எக்ஸ்பிரஸ் டீம்

Friday, January 23, 2009

பேருராட்சி தலைவருக்கு முதல்வர் விருது !

அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் MMS. அப்துல் வஹாப் அவர்களுக்கு வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் "கோட்டை அமீர்" என்ற சிறப்புமிக்க விருது வழங்கப்படுகிறது.தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இச்சிறப்புமிக்க விருதினை குடியரசு தின விழா மேடையில் இவ்விருதினை வழங்குகிறார்கள்.மேலும் இதனை காண்பதற்க்காக அதிரையில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் சென்னை சென்று உள்ளனர்.

இவ்வாரங்களில் எம்.கே.என்.டிரஸ்ட் தாளாளர் முஹம்மது அஸ்லம் அவர்களுக்கு தாய்லாந்தின் சிறப்புமிக்க விருது வழங்கி கெளரவபடுத்தப்பட்டது.

Wednesday, January 21, 2009

மாலேகான்: முக்கிய சதியாளர் லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாலேகான் சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியது ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையை நேற்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் நோக்குடன் இந்த செயலில் அனைவரும் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த வழக்கை ஹேமந்த் கர்கரே தலைமையிலான மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கிய நிலையில் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கர்கரே உயிரிழந்தார். இருப்பினும் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தொய்வின்றி விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.இந்த நிலையி்ல் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.குண்டுகளை சப்ளை செய்த புரோஹித்...
மாலேகான் சதிச் செயலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக லெப்டினன்ட் கர்னல் புரோஹித் குறிப்பிடப்பட்டுள்ளார்.இவர்தான் வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஆட்களை ஏற்பாடு செய்த பிரக்யா...அதேபோல பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், வெடிகுண்டுகளை வைக்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மொத்தம் 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், மகாராஷ்டிர ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.குற்றப் பத்திரிக்கையின் முக்கிய அம்சங்கள்...கடந்த 2007ம் ஆண்டு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பை தொடங்கினார் புரோஹித். இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவது, இந்துக்களுக்கான சட்டத்தை உருவாக்குவது, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது ஆகியவைதான் இந்த அமைப்பின் நோக்கம்.தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டினார் புரோஹித். ரூ. 21 லட்சம் வரை இவ்வாறு அவர் திரட்டினார். இந்தப் பணத்தை அமைப்பின் பொருளாளர் அஜய் ரஹீர்கர், குற்றம் சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படி கேட்டுக் கொண்டார்.மாலேகான் குண்டுவெடிப்புக்கான சதித் திட்டம் தொடர்பான கூட்டங்கள் 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கின. பரீதாபாத், போபால், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், நாசிக் ஆகிய இடங்களில் கூட்டம் போட்டு ஆலோசித்துள்ளனர்.காஷ்மீரில் பணியில் இருந்த புரோஹித் அங்கிருந்து திரும்பியபோது ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை கொண்டு வந்துள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் ராம்ஜி கலஸங்கரா, சந்தீப் டாங்கே, பிரவீன் முத்தலீக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெடிகுண்டுகளை இவர்கள்தான் வைத்துள்ளனர் என்று குறப்பிடப்பட்டுள்ளது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர கூடுதல் டிஜிபி ரகுவன்ஷி கூறுகையில், புரோஹித்தான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸை கொடுத்தார் என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அதற்கான ஆதாரம் இல்லை.மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும்போது விசாரிக்கப்பட்ட ஒரு சாட்சி, புரோஹித்தான் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸைக் கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. புரோஹித் மீதான இந்த குற்றச்சாட்டை ஒரே ஒரு சாட்சிதான் கூறியிருந்தார்.இதுகுறித்து ஹரியானா போலீஸாரும் விசாரித்தனர். நாங்களும் விசாரித்தோம். எங்களது விசாரணையில், புரோஹித் மீதான இந்தப் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிய வந்தது.அதேபோல புரோஹித் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் தவிர வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை என்றார் ரகுவன்ஷி.சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக புரோஹித்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என அந்த நாடு கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸாரின் இந்த கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.
நன்றி:தட்ஸ்தமிழ்

அதிரையில் உயர்கல்வி விழிப்புணர்வு விழா!!

அதிரை A.L. மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் "உயர்கல்வி விழிப்புணர்வு விழா" கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் CMN சலீம் உள்ளிட்ட பல அறிஞர்கள் பங்குபெற்று சிறப்புரை நிகழ்த்தினர். இஸ்லாமிய சமுதாயம் உயர்கல்வியில் பழங்குடியினரை விடவும் பின் தங்கி இருப்பதையும், இத்தகைய நிலை நீங்க நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதிரை மக்களிடையே,குறிப்பாக அதிரை பெண்களிடையே,கல்வி குறித்த விழிப்புணர்வை இவ்விழா கொண்டுவந்திருக்கும் என்பது திண்ணம்!!

உங்களுக்காக,
அதிரையிலுருந்து அருட்புதல்வன்

Thursday, January 15, 2009

இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூறுவோம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவனை ஏமாற்றுபவர்கள், தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீஙக வேண்டும் தனக்கு ஏதேனும் காரிங்கள் நிறைவேற வேண்டும் என்றே கையேந்தி கேட்கிறார்கள் அல்லஹ் அவர்களின் காரியங்களை நிறைவேற்றி கொடுத்த பிறகு, அதை விட்டும் அல்லஹ்வை நினைப்பதை, கேட்பதை நிறுத்தி விடுகிறார்கள்

அல்லஹ் குர்ஆனிலே சொல்லி இருக்கிரான் (விசுவாசம் கொண்டவர்களே, பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள்)நம் உயிர் இருக்கும் காலமெல்லாம் அல்லஹ் இடத்தில் இரு உலக வெற்றிக்கும் கேட்டவன்னமாக இருக்க வேண்டும் நாம் செய்யும் அனைதையும் அல்லஹ் பார்த்து கொண்டுதானிருகிரான் என்பதை நினைவில் கொண்டு அல்லஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்" பாகம் 11 வசனம் 12.

"மனிதனை துன்பம் தீண்டுமானால்(அதனை நீக்குமாறு) அவன் சாய்ந்து படுத்தவனாக அல்லது உட்கார்ந்தவனாக அல்லது நின்றவனாக நம்மை அவன் பிரத்தித்து அழைக்கிறான், பின்னர் அவனுடயதுன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்தனை செய்தவனை போல்(புறக்கனித்து சென்று விடுகிறான், வரம்பு மீருவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த (தீயது இவ்வாறு அலங்காரமாக ஆக்கப்பட்டு விட்டது) அல்லஹ் படைக்கப்பட்ட அனைத்திற்கும் பறவை, பட்சிகள். ஊர்வனங்களுக்கு இரணம் அளிக்கிறான், அவைகளும் அல்லஹ்வை திக்ரு செய்கின்றன. பாகம் 12(வசனம் 6)

"பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு அல்லஹ்வின் மீது பொறுப்பாக இருந்தே தவிர இல்லை. அவை தங்குமிடதையும் அவை ஒப்படைக்கப்பட்டு சேருமிடத்தையும் அவன்( நன்கு) அறிகிறவன் இவையாவும்(லவ்ஹுல் மஹ்Fபூல் என்னும் புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன). பாகம் 12 - வசணம் 15"

எவர்கள் இவ்வுலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் செயல்களுக்குறிய பலன்களை இவ்வுலகத்திலேயே நாம் பூரனமாக அவர்களுக்கு நிறைவு செய்வோம், அவர்களோ அதில் குறைவு செய்யபட மாட்டார்கள்) இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே நாம் அனைவரும் நம் தேவைகளை கேட்டு நம் காரியங்களை அவனிடமே ஒப்படைத்து வல்ல இறைவனிடம் மட்டுமே கேட்கக் கூடியவர்களாக நாம் ஆகுவோமாக, அவனே நேர்வழி காட்ட போதுமானவனாக இருககிறான்

உம்மு பஜ்லுர் ரஹ்மான்ஜித்தா, K.S.A

Sunday, January 11, 2009

அதிரை x எக்ஸ்ப்ரஸ் (அதிரை டபுள் எக்ஸ்ப்ரஸ்)

"Zakir Hussain: why there is 2 web site for Adirai express? is it done by 2 different team? - [11 Jan 09 02:33:27]"

அதிரை x எக்ஸ்ப்ரஸின் தற்போதைய முகவரியாகிய http://adiraixpress.blogspot.com ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் முகவரியை சற்று மாற்றி http://adiraixxpress.blogspot.com என்று பதிவு செய்து வைத்துள்ளோம். உபரியாக http://adirail.blogspot.com என்ற முகவரியும் தெரிவில் உள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருக்கும் அதிரைவாசிகள் நம் தளத்திற்கு வழக்கம் போல் வரமுடியும்.

ஏற்கனவே பங்களிப்பாளர்களாக இருப்பவர்களுடன் முந்தைய பதிவில் சொன்னபடி தெருவாரியான பதிவர்களையும் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ள காரணத்தால் மேலும் புதிய பதிவர்களை வரவேற்கிறோம். பதிவராகச் சேர www.gmail.com இல் ஒரு மின்மடல் முகவரியும், www.blogger.com இல் ஒரு பளாக்கர் அக்கவுண்டும் பதிவு செய்து adiraixpress@gmail.com என்ற முகவரிக்கு தங்களைப் பற்றிய விபரங்களுடன் அறியத்தந்தால் நமது புதிய தளத்தில் நேரடியாகப் பதியும் வசதியை வழங்க முடியும். இதன்மூலம் பதிவுகள் வெளியிடுவதிலுள்ள தாமதமும் மட்டுறுத்தப்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களும் தவிர்க்கப்படும்.

பள்ளிக்கூட,மதரஸா மாணாக்கர்களும் நம் தளத்தில் பங்களிப்பாளராகச் சேர்ந்து தங்கள் எழுத்தார்வத்திற்கு வடிகாலாக அதிரை எக்ஸ்ப்ரஸைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், இல்லத்தரசிகளும் தங்களுக்குத் தெரிந்த சமயல் குறிப்பு,பாட்டிவைத்தியம் மற்றும் பயனுள்ள கருத்துக்களை நம் தளத்தில் எழுதி தனக்கென வாசக/வாசகியர் வட்டத்தைப் பெறலாம்.

இவ்வாறாக, அதிரை எக்ஸ்ப்ரஸ் நமதூர்வாசிகளின் ஒருமித்தக் குரலாக விளங்குவதற்கு அதிரைவாசிகளின் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

பின்குறிப்பு: புதியதள கட்டமைப்புகள் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இறுதிப்படுத்தப்படும். புதிய முகவரியை ஐக்கிய அரபு அமீரகவாழ் அதிரைவாசிகளுக்கு முடிந்த வரை தெரியப்படுத்துங்கள்.

இப்படிக்கு,

எக்ஸ்ப்ரஸ் குழு

Saturday, January 10, 2009

AYDA-Jeddah வின் மாதாந்திர கூட்டம்

Adirai Youth development Association - AYDA-Jeddah வின் மாதாந்திர கூட்டம் 09- 01- 2009 அன்று வெள்ளி மாலை 5 மணியளவில் சகோதரர் தமீம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

அது சமயம் ஊர் நடப்புகள், சென்னையில் நடைப்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு, காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைகள் மற்றும் இலங்கை பிரச்சினை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் அய்டாவின் புதிய பொறுப்புதாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. அது சமயம் தலைவர் ரஃபி அகமது கேட்டுகொண்டதின் படி மூத்த உறுப்பினர் பசீர் காக்கா அவர்கள் தலைமையில் தேர்தல் நடைப்பெற்றது. அதிகப்படியான வாக்குகள் பெற்று பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தலைவர்: M. ரஃபியா
துணைத்தலைவர்: ஹாஜி M. முகைதீன்
செயலாளர்: A. J. தாஜீத்தீன்
துணைச்செயளாளர்: S. அப்துல் காதர் - ஜெய்லானி
பொருளாளர்: H. அப்துல் அஜீஸ்
துணைப்பொருளாளர்: A. ஜஃபருல்லா

பணி மூப்பு பெற்று தயாகம் திரும்ப இருக்கின்ற பசீர் காக்கா அவர்களை மூன்று மாதங்களுக்கு தலைமை ஏற்று கொள்ளுமாறு தலைவர் ரஃபி அகமது கேட்டு சம்மதம் பெற்றது அங்கத்தினர் அனைவரையும் நெக்குறச்செய்தது. பின்னர் அய்டாவின் சேவை மேன்மேலும் தொடர அனைவரின் துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Thursday, January 8, 2009

அஃமால்நாமாவும் ஹார்ட் டிஸ்க்கும்! (கற்றதும் பெற்றதும்)

""ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப் படுகின்றதோ (084-007) அவன் சுலபமான விசாரனையாக விசாரிக்கப் படுவான் (084-008) இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான் (084-009). ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகிறதோ (084-010) அவன் தனக்குக் கேடுதான் என்று கூவியவனாக (084-011) நரகத்தில் புகுவான் (084-012)

சுமார் இருபது வருடங்களுக்கு முந்தையக் கணினிகளில் வன்தகடு (HARD DISK) அளவு 30-40 மெகாபைட்ஸ். இதில் இயங்குதளம் எனப்படும் OPERATING SYSTEM த்திற்குத் தேவையான கோப்புகளை வைத்திருப்பதால் கணினியில் செய்யப்படும் வேலைகள் ஐந்து அங்குலம் அளவுள்ள ஃப்ளாப்பி டிஸ்க்கில் சேமித்து வைப்பார்கள். பின்னர் ஃப்ளாப்பி அளவு மூன்றரை அங்குலமாகச் சுருங்கியதுடன் சேமிக்கப்படும் தகவல்களும் சற்று பாதுகாப்பாக இருந்தன.

குத்துமதிப்பாக இத்தகைய ப்ளாப்பித் தகடுகளில் A4 அளவுள்ள காகிதத்தில் பிரிண்ட் எடுக்கும் வகையில் 100-200 பக்கங்களுள்ள ஆவணங்கள் அல்லது டேட்டாபேஸ் எனப்படும் "தரவுத்தகவல்" சில ஆயிரங்களையோ சேமித்து வைக்கலாம்.

1990 களில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்டியின் விளைவாக ஃப்ளாப்பிகள் குறுந்தகடுகளாக உயர்வுபெற்று சுமார் 700 ப்ளாப்பிகளில் அடக்க முடிந்தத் தகவல்களை ஒரு குறுந்தகட்டில் சேமிக்கலாம். இதன் அளவு சுமார் ஆறு அங்குலம் மட்டுமே! பின்னர் ஹார்ட் டிஸ்க் அளவுகளில் புரட்சி ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குறுந்தகடுகளில் சேமிக்கக்கூடிய தகவல்களை 1 GB கொள்ளளவுள்ள ஹார்ட் டிஸ்க்கில் சேமிக்க முடியும். தற்போது 1TB (1024 GB) அதாவது 1,0485,576 ப்ளாப்பிகளில் சேமிக்க முடிந்த கோப்புகளை ஒரு டெராபைட் ஹார்ட் டிஸ்க்கில் சேமிக்கலாம்.

கணினி கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் மேலே சொன்னவற்றை யாரும் யூகித்திருக்க முடியாது. அவர்கள் அறிந்ததெல்லாம் மனிதனால் செய்ய முடிந்த கணக்கீடுகளை கணினியால் செய்யமுடியும் என்பது மனிதனின் செயல்வேகம் மற்றும் நினைவாற்றலைவிடச் சற்று அதிகமாகவும் கணினி உதவியால் செய்யமுடியும் என்பது மட்டுமே.கணினி உபயோகம் பரவலாகத் துவங்கிய காலத்தில், ஃப்ளாப்பிகள் இப்படி அசுர வளர்ச்சி அடைந்து டெரா பைட்ஸ் அளவுகளில் தகவல்களைச் சேமிக்க முடியும் என்று யாரேனும் அனுமானமாகச் சொல்லியிருந்தால் நகைப்புக்கு ஆளாகி இருப்பார்!

விஞ்ஞான ஆய்வுகளைச் சொன்ன எத்தனையோ அறிஞர்களின் கூற்றுகள் பைபிளில் சொல்லப்படாத ஒன்றென்று ஃபத்வா கொடுக்கப்பட்டு கழுவில் ஏற்றியும், விசக் கொடுத்தும் கொல்லப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் உண்டு. ஒலிபெருக்கியை சைத்தானின் குரலென்று தடுத்த உலமாக்களும் உண்டு! இப்படித்தான் பெரும்பாலான ஆய்வுகள் முதலில் எதிர்க்கப்பட்டும், பின்னர் நகைக்கப்பட்டும் இறுதியில் தவிர்க்கமுடியாது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்களுக்கும் கணினிக்கும் என்ன சம்பந்தம் என்று உங்கள் பகுத்தறிவு கேள்வி கேட்கலாம். அதில் சொல்லப்பட்டுள்ள 'பட்டோலை' குறித்து எவரும் கேள்வி கேட்கவில்லை. நம்பிக்கையாளர் என்று சொல்லப்பட்ட முஹம்மது நபியை நன்கு அறிந்து அவர் போதித்த இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர் சொன்ன அனைத்தையும் நம்பிக்கைக் கொண்டார்கள். மனிதனின் வாழ்நாளில் செய்த அனைத்துச் செயல்களும் பதிவு செய்யப்பட்டு, மறுமையில் பட்டோலையாக கரத்தில் வழங்கப்படும் என்பதை அக்கால மக்கள் சந்தேகித்திருந்தால் ஓரளவுக்கு நியாயமுண்டு. எனினும் அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டதைச் சொன்னபோது நம்பிக்கை கொண்டவர்கள் ஐயமின்றி ஏற்றார்கள்.

சந்தையில் கிடைக்கும் FLASH DRIVE வையும் கையடக்க EXTERNAL HARDDISK ஐயும் கண்டபிறகு,அவற்றில் கோடிக்கணக்கில் ஆவணங்களாக,தரவுகளாக, ஒலி/ஒளிக் கோப்புகளாகப் பதிவுசெய்து பாதுகாத்து வைக்க முடியும்போது அஃமால்நாமா எனும் செயலேடு குறித்துச் சொல்லப்பட்டதை நம்பமறுப்பது நியாயமா? அளவற்ற உரையாடல்களை அழிக்காமல் சேமித்து வைக்கலாம் என்று கூகில் (GOOGLE) சொல்லும்போது, அதையே அளவற்ற அருளாலன் அல்லாஹ் சொன்னாலும் நம்பலாம்தானே!

கையடக்க FLASH DRIVE வை அறிந்தபின்னரும் கையடக்க அஃமால்நாமா பட்டோலையை நம்ப மறுப்பது பகுத்தறிவின் பாரபட்சம்தானே!

பகுத்தறிவே
இது நியாயமா?

<<<அபூஅஸீலா-துபாய்>>>

Monday, January 5, 2009

மனிதன் மனிதனாக????

இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.

அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான்.

ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம்.

பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது.

ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா?

இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை.

ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின.

மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.

இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை.

இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான்.

மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம்.

அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்?

அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள்.

இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும்.

மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் - நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்.
Thanks for abuzulaiha.

Sunday, January 4, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே ..........

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் உங்கள் உள்ளத்தில் ஒரு பெரும் எரிமலையை வெட்டிக்கச் செய்யும்...
 
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கல்நெஞ்சம் கொண்ட இஸ்ரேல் அரக்க அரசை நினைத்து விட்டால்......
 
அரக்கத்தனமான இத்தாக்குதலில் ஊனமானது பாலஸ்தீனம் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த உலகமும் தான்...
 
"அற்ப உலகமே நீ என்னத்தெ சொல்ல நா என்னத்தெ கேட்க" என்று அடம் பிடிக்கும் இஸ்ரேல் அரசே உன் கொட்டம் இன்றில்லா விட்டாலும் ஒரு நாள் ஒழியும்... அத்தினமே உலகம் அமைதி பெறும்.
 
வானத்திலிருந்து வரும் இறை வேதனையை எந்த சக்தி கொண்டு தடுக்க முடியும்? எந்த ரேடாரில் கணிக்க முடியும்? இறைவா இத்துடன் வரும் படத்தைக் கூட பார்க்க சக்தி அற்றவர்களாக நாம் இருக்கிறோம்....
 
தீவிரவாதம், தீவிரவாதம் என்று சொல்லி உலகில் தீவிரவாதத்தை பிரபல்யப்படுத்தியது யார்? அதற்காக அணு,ஆயுத விற்பனையை அகிலமெங்கும் அமோகப்படுத்தியது யார்? சொல் மனமே......
 
பெற்றவள் மடியில் விளையாட வேண்டியச் சிறுவன். பெற்றவளை மடியில் இட்டு மரணப் படுக்கையில் இட்ட கோரம்...அந்தோ பாவம்...
 
ஈரமற்ற இதயம்...பாவிகளின் கொடூரம்....இதையெல்லாம் கண்டும் காணாத உலகம்...
 
இதனால் ஊமையாகிப் போன .நா. சபை.. ஊனமாகிப்போன போர்க்கால நியதி..குருடாகிப் போன உலக நாடுகள்...செவிடாகிப் போன உலக வல்லரசுகள்..உலக தீவிரவாத தாக்குதலுக்குப் பொங்கியெழும் உலகம் இதில் மட்டும் மங்கிப்போனது ஏனோ?
 
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று யார் சொன்னது? ஒரு கன்னத்தில் அரைந்தால் நாம் ஒட்டு மொத்த குலத்தையல்லவா அழிப்போம்... அட சண்டாலப்பாவிகளா..சனியன் பிடித்த பைத்தியங்களா...
 
உன் அடக்குமுறையால் நீ ஒன்றும் பல நூறு ஆண்டுகள் ஆளப்போவதில்லை இவ்வுலகில். மரணத்தை ஒவ்வொரு உயிரும் புசித்தே தீர வேண்டியுள்ளதடா மடையா.....
 
உனக்கு சாவு மணி அடிக்க அந்த இறைவனேப் பொறுப்பேற்றாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை...சுறாக்களை வேட்டையாடுகிறோம் என்று சொல்லி பச்சிளம் குஞ்சுக்களையும் வேட்டையாடி விட்டாயே....பாவி....
 
இவ்வேசக்கார உலகின் முன் நீ ஒரு செல்லப்பிள்ளை தான். ஆனால் அகிலத்தை படைத்த அந்த இறைவன் முன் நீ ஒரு செல்லாக்காசு தானடா....அபகரிக்கப்பட்ட உன் நாடு ஒரு நாள் அல்லோலப்படும் பாரு....
 
பாரபட்ச உலகமே உனக்கு ஒரு நாள் பாடை கட்டப்படும் அதுவே இறுதிநாள்..அதுபற்றி உனக்கு நன்றாகவேத் தெரியும்...தெரிந்தும் நீ சும்மா இருக்கிறாயே இது நியாயமா? தர்மமா? இது தான் உன் வேசமா?
 
உன் போலி வேசங்கள் களையப்பட்டு, சாயங்கள் வெளுக்கப்பட்டு நிராயுதபாணியாக ஏக இறைவன் முன் நிற்க வேண்டியதை மறந்து விட்டாயடா....
தன் தாயின் கடைசி மூச்சை தன் மடியில் வைத்து பார்க்கும் இப்பாலகன். நாளை மன்னாதி மன்னனாகுவானா? இல்லை உன்னைக் கொல்ல புறப்படும் கொலைவெறியன் ஆவானா? யார் அறிவார் அந்த இறைவனைத் தவிர....
 
பெற்ற அம்மா இல்லாத உலகில் அவன் முன் நீ கோடான கோடியைக் கொண்டு கொட்டினாலும் அவன் அதை ஒரு குப்பையாகத் தானடா மதிப்பான்...காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு  என்பது உனக்கு மட்டும் தானா?
 
இறைவா....உலகில் நீயே எல்லா அட்டூழியங்களையும், அனாச்சார களியாட்டங்களையும், அடக்கு முறைகளையும், அத்துமீறல்களையும், உரிமைக்குரல்வளைகள் நெறிக்கப்படுவதையும் அசராது பார்த்துக் கொண்டிருப்பவன்...
 
உன் தீர்ப்பை எவன் மாற்ற முடியும்? நீ பொறுமையாளர்களுடன் இருக்கிறாய்...பொறுத்திருக்கிறோம் உன் தீர்ப்பிற்காக...அழுகிறோம் உன் அரவணைப்பிற்காக...எங்கள் ஒட்டு மொத்த உள்ளக்குமுறலுக்கு இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் உன் விடை இருக்கிறது.
 
நீயே உலக அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து அமைதி நிலவச் செய்வாய்...வேசக்கார போலி வல்லரசுகளை மண்ணைக்கவ்வச் செய்ய உனக்கு ஒரு சில மணித்துளிகளே மிகுதியானது...
 
உலகில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை நீயே தீர்ப்பு வழங்குவாயாக.. அகிலத்தின் அதிபதியாய்... நீதிக்கெல்லாம் நீதி அரசனாய்....உன்னிடமே விட்டு விடுகிறோம்..விடியல் என்ற நம்பிக்கையில்.. நீயேக் காத்தருள்வாயாக உலகின் அப்பாவி மக்களை....
 
நீர்க்குமிழி போன்று நிலையற்ற இவ்வுலகில் பல்லாண்டு வாழ்வோம் என எண்ணிக் கொண்டிருக்கும் கொடியவர்களின் கொட்டம் அடங்கி, வல்லவர்கள், நல்லவர்கள் பல பெருகி உலகெங்கும் அமைதி நிலவிட நீயே உதவிடுவாய் இறைவா....
 
இறுதியில் முடிக்க வார்த்தைகள் இன்றி உள்ளக்குமுறலுடன்...
 
அபுஹசன்...