Sunday, May 31, 2009

எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.


கேரள எழுத்துலகில் தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆங்கில எழுத்துலகிலும் பிரகாசித்த 75 வயது நிரம்பிய பிரபல மலையாள எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா அவர்கள் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு மரணமடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நாலப்பாட்டு என்ற பெயர் கொண்ட குடும்பத்தில் பிறந்த சகோதரி கமலா சுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா ஆவார். தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் அனுபவித்து விட்ட சகோதரி சுரய்யா, மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பிரபலமாக அறியப்பட்டிருந்தவர். அவரது பல்வேறு நாவல்களும் ஆங்கிலக் கவிதைகளும் கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களைத் திரட்டித் தந்துள்ளது.

பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக்கால நினைவுகள்), பூதகாலம் (இறந்தகாலம்), பக்ஷியுடைய மரணம் (பறவையின் மரணம், யா அல்லாஹ் போன்றவை சகோதரி சுரய்யாவின் பிரசித்திப்பெற்ற நாவல்களில் சில! கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற பல்வேறு எழுத்தாளர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

அன்பைத் தேடி பயணப்பட்ட அவரின் வாழ்வில், அவர் இறுதியாக தேடிய மழை போன்ற அன்பு இருக்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டு கொண்டார். 1999 ஆம் ஆண்டு தன் 65 ஆவது வயதில் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அன்றோடு மாதவிக்குட்டி என்ற தன் இயற்பெயருக்கு விடைகொடுத்து, கமலா சுரய்யா என்றப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆனார்.

தேடியலைந்த நிரந்தர அன்பு பொங்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டுகொண்ட நேரத்திலேயே, பிரபலமான நாயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சமூகத்தில் தான் மிகப் பெரிய அந்தஸ்திலும் பெயரிலும் அறியப்பட்டிருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவை ஏதும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. அறிந்துக் கொண்ட உண்மையை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கமும் காட்டாத அவரது வெளிப்படையான கள்ளம் கபடமற்ற அந்தப் பண்பே பிந்தைய அவரின் வாழ்வில் மிகப் பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வைத்தது.

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அதுவரை மிகப் பெரிய அந்தஸ்தில் வைத்துப் போற்றிய சமூகத்திலிருந்து, சங்பரிவார வல்லூறுகள் அவர் மீது பாய்ந்து பிராண்டியன. கூடவே கொலை மிரட்டல்களும் தூற்றல்களும் அவரைத் தொடர்ந்தன!

உடல் தளர்ந்திருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தான் தேடியதைப் பெற்றுக் கொண்ட அவரின் உறுதியான மனம் தளரவில்லை. பிற்காலத்தில் சகோதரி கமலா சுரய்யா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் திகட்டிப்போய் அதிலிருந்து வெளியேறி விட்டார் என, அவர் சஞ்சரித்திருந்த பத்திரிக்கை உலகினரே எவ்வித வெட்கமும் இன்றி பொய் கதைகளை அவருக்கு எதிராக எழுதி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் மீதான தங்களின் வெறுப்பைக் கொட்டித் தீர்த்தன.

தொடர்ந்து வந்த வல்லூறுகளின் தூற்றல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரின் இறுதி காலத்தில் அவர், தான் மிகவும் நேசித்திருந்த பிறந்த மண்ணை விட்டு மும்பை சென்று வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டார். அவரை மிகவும் நேசித்திருந்த அவரின் இளைய மகன் ஜெயசூர்யாவுடன் தன் கடைசி காலத்தை புனாவில் நிம்மதியுடன் கழித்தார்.

கடந்த ஒன்றரை மாதக்காலமாக சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு, ஜஹாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றப்பின்னரான அவரின் கடந்த 10 ஆண்டு கால வாழ்வில் அவர் வெளிப்படுத்திய அவரின் மகத்தான எண்ணங்கள், இவ்வுலகை விட்டு நீங்காது!

அவரின் எண்ணங்களில் சில:

"அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!"

"நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை."

"எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது."

"நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், ‘நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!’ என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்தியமான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்த கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்."

"பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, 'கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்' என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது. தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன் முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்."

"நான் மதத்தை நம்புவதில்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை."

கண்டுகொண்ட உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கும் அதன்படி வாழ்வதற்கு எந்த மிரட்டல், உருட்டல்களுக்கும் அஞ்சாமல் அவர் காட்டிய உறுதியும் எவ்வித அச்சமும் இன்றி அசத்தியங்களுக்கு எதிராக அவர் தைரியமாக வெளியிட்ட எண்ணங்களும் என்றும் நம்மிடையில் அவரை நினைவுகூற வைக்கும்.

சகோதரியின் பிழைகளைப் பொறுத்து, அவர் தேடி அலைந்துப் பெற்ற நிரந்தர அன்பை நிரந்த வாழ்விலும் வழங்க இறைவன் கருணை புரியட்டுமாக! ஆமீன்.

நன்றி: சத்திய மார்க்கம்

Friday, May 29, 2009

நாடாளுமன்றத்தில் தேவ்பந்த் அறிஞர்கள்

-சர்ஜுன்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மவ்லவி ஹிஃப்சுர் ரஹ்மான் மற்றும் மவ்லானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மார்க்க அறிஞர்கள் அரும்பாடு பட்டார்கள். பின்னர் அவர்களது தியாகத்திற்கு பரிசாக சட்டமன்ற உறுப்பினர் பதவியும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் அவர்களைத் தேடிவந்தன. மத்திய அமைச்சரானார் ஆசாத் அது ஆயிற்று அறுபதாண்டு காலம். மார்க்க அறிஞர்கள் அரசியலில் சிறப்பிடம் பெறுவது என்பது இனி நடக்கவே நடக்காதோ என ஏங்கி தவித்த நிலையில் புகழ்பெற்ற தேவ் பந்த் மார்க்க கல்வி சாலையிலிருந்து உருவான இரண்டு மார்க்க அறிஞர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

அஸ்ஸாமில் மவ்லவி பத்ருதீன் அஜ்மலில் வெற்றி பெற்றார். மவ்லவி அஸ்ராருல் ஹக் காசிமி பிகார் மாநிலம் கிஸன் கஞ்ச் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார். மவ்லவி பத்ருதீன் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் அன்வர் ஹுஸைனை வென்றார். மவ்லவி அஸ்ரருல் ஹக் காசிமி லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய தலை வரான முன்னாள் மத்திய அமைச்சர் முஹம்மது தஸ்லீமுதீனை தோற்கடித்தார்.

81 ஆயிரம் வோட்டு வித்தியாசத்தில் வென்ற அஸ்ராருல் ஹக் காசிமி டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் அகில இந்திய தலிமி வ மில்லி பவுண் டேஷனின் நிறுவனத் தலைவராவார். கிசன் கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த காசிமி தனது பகுதி குறித்து மிகுந்து கவலை கொண்டவராக விளங்கினார். கடந்த ஏழு ஆண் டுக்கு முன்பு மில்லி பெண்கள் பள்ளி கூடத்தை நிறுவினார். தனது வெற்றி கிசன் கஞ்ச் தொகுதி மக்களின் வெற்றி என்றார் மவ்லவி அஸ்ராருல் ஹக். மவ்லவி பத்ருதீன் அஜ்மல் அவர்களோ இந்திய அரசியலில் சில வருடங்களாக ஒளி வீசும் அரசியல் தலைவராக விளங்கி வருகிறார். தேவ் பந்த் மார்க்க அறிஞர்கள் மக்களவையில் தூள் கிளப்ப போகிறார்கள்.

நன்றி: தமுமுக இணையத்தளம்

Saturday, May 23, 2009

தமிழக தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை தேவை

-தமிமுன் அன்சாரி

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த முடிவை எதிர்பார்த்துதான் நாம் போட்டியிட்டோம். இருபெரும் கூட்டணி களையும், அவர்களது பணபலத்தையும் எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்கு தெரியும்.
ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் 75 ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை வாக்குகளைப் பெறுவோம் என எதிர் பார்த்தோம். ஆனால் நம்மை அதிர்ச்சி யில் ஆழ்த்தும் விதமாக குறைவான வாக்குகளை நாம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை நம்மால் நம்ப முடியவில்லை, ஏற்க முடியவில்லை.

உதாரணத்திற்கு, மத்திய சென்னை தொகுதியில் துறைமுகம் பகுதியிலும், பொள்ளாச்சி தொகுதியில் குனியமுத்தூர் பகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியில் மண்டபத்திலும், மயிலாடுதுறை தொகுதி யில் கும்பகோணத்திலும் ஒரு வாக்குச் சாவடியில் குறைந்தது ஆயிரம் வாக் காளர்கள் ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் மிகமிகக் குறைவான வாக்குகளே கணக்கில் வருகிறது.

'வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது' என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானது தான் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. (இதுகுறித்து தினமணி நாளிதழில் மே 14 அன்று வந்த செய்தி தனியாக உள்ளது).

மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட நாச்சியார்கோவிலில் பூத் ஒன்றில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது கை சின்னத்தில் ஒலி எழுப்பியது. உடனே ஜே.எஸ்.ரிஃபாயி தலைமையிலான குழு ஒரு புகார் கொடுத்த பிறகே அது சரி செய்யப்பட்டது. அதுபோல் பாபநாசம் அருகே ஒரு கிராமத்தில் இதே குற்றச் சாட்டை மக்கள் கூறிய பிறகே அது சரிசெய்யப்பட்டது.

நமது கவனத்திற்கு வராமல் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்த சதி நடத்தப்பட்டிருந்தது என்று தெரிய வில்லை.

ஆளும் கட்சியினர், அரசு ஊழியர் களின் உதவியுடன் பல தில்லுமுல்லு களை செய்ததாக சில பத்திரிகையாளர் கள் நம்மிடம் தெரிவித்தனர்.

ம.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் நமது வாக்குகளை பத்தில் ஒரு பங்காக குறைத்து காண்பிக்க திட்டமிட்டு சதி செய்திருக்கிறது ஆளும் கட்சி.

எதிர்காலத்தில் முஸ்லிம்கள் வலுவான அரசியல் பேரம் செய்யக் கூடாது என்பதற்காக இச்சதி அரங்கேற்றப் பட்டுள்ளது.

நாம் பல பூத்துகளில் நமது சகோதரர் களை ஏஜென்டுகளாக போட்டிருந்தோம். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தி னரும் போட்ட வாக்குகள் கூட காணா மல் போய், அங்கே பூஜ்யம் வாக்குகள் என உள்ளது. இது நமது குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

அதுபோல் பா.ம.க.வை ஏழு தொகுதிகளிலும் தோற்கடிக்க திட்டமிட்டு தில்லுமுல்லுகள் நடத்தப்பட்டிருக்கிறது.

மதுரையில் அழகிரிக்கு கடும் போட்டி யைக் கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சியைப் பழிவாங்கும் விதத்தில் கன்னியாகுமரி தொகுதியில் அக்கட்சி 'டெபாசிட்' இழந்த தாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னியா குமரி மார்க்சிஸ்டுகளின் கோட்டை மட்டுமல்ல, அதிமுகவின் வலுவான பகுதியுமாகும்.

திமுகவை கடுமையாக எதிர்க்கும் வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் அநியாயமாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர். வைகோ தொகுதியில் பதிவான வாக்கு களை விட கூடுதலான 22 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட்டு வைகோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப் பட்டிருக்கிறார். தா.பாண்டியன் தொகுதி யில் தலைக்கு 1000 ரூபாய் பணம் வினி யோகிக்கப்பட்டு கட்சி சாராத வாக்காளர் கள் தா.பாண்டியனுக்கு எதிராக கடைசி நேரத்தில் திசை திருப்பப்பட்டனர்.

முதலில் 330 வாக்குகள் வித்தியாசத் தில் தோற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரம், பிறகு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாயாஜாலமும் நடந் துள்ளது. திடீரென எங்கிருந்தோ வந்த தொலைபேசியினால் சிதம்பரம் வெற்றி பெற்றுவிட்டதாக கொஞ்சமும் மனசாட்சி யின்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமுமுக நிர்வாகிகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் கூட ரயில் எஞ்சினுக்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்று கூறு வதை நம்ப முடியாமல் வாக்களித்தவர் கள் குமுறுகிறார்கள்.

முஸ்லிம்களின் எழுச்சியை அச்சுறுத் தும் வகையில் மத்திய சென்னை தொகுதியில் திமுகவினரால் நடத்தப்பட்ட கலவரம் பலரையும் வாக்குச்சாவடி பக்கம் போகவிடாமல் தடுத்துவிட்டது.

மத்திய சென்னையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப் பதிவு அனுமதி கேட்டும் மறுக்கப் பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட முடியாத பலகீனமான நிலை யில் உள்ளது.

நமது இக்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் நடைபெற்ற தில்லுமுல்லுகள் அனைத்தும் அம்பலமாகும்.

Thursday, May 21, 2009

ஜித்தா தமிழ் சங்கத்தின் இனிய மாலை பொழுது

வாழ்கையில் வளம் வேண்டும் என்பதன் பொருட்டு எம்மில் பலர் தம் சொந்த மண்ணை விட்டு ஊரை விட்டு உறவுகளை விட்டு எங்கெங்கொ வேற்று ஊர்களில் எம்மை தொலைத்து... வாழ வேண்டிய கட்டாயத்திலும், காலகட்டதிலும் இருந்தாலும், கலைஞர்கள் தாம் வாழும் அந்தந்த நாடுகளில் அவ்வப்போது தங்கள் கலையார்வத்தால் ஏதாவது ஒரு ஒன்று கூடல், அல்லது கலை நிகழ்ச்சிகள் அல்லது விழாக்கள் நடத்துவது வழக்கம் ......

இந்த வகையில் சவுதி அரேபியா நாட்டின் புராதான நகரங்களின் ஒன்றும் பண்டைய தலைநகருமான ஜித்தாவில் உள்ள தமிழர்கள் ஒன்றினைந்து நடத்தி வரும் " ஜித்தா தமிழ் சங்கத்தின் இனிய மாலை பொழுது கடந்த வாரம் இந்திய துனை தூதரகத்தில் ஏற்பாடாகி இருந்தது. விழாவிற்கு சவதியரேபியாவிற்கான இந்திய தூதுவர் ஃபரூக் மரைக்காயர் வந்து வாழ்த்தி சிறப்பித்ததும், விழாவிற்கு சற்றே காம்பீரத்தை சேர்த்து விட்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.

சவுதி தமிழ் சங்க தலைவர் மாலிக் அவர்கள் தலைமயில் நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது. சவுதி தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர் சகோதரர் ரஃபியா அவர்கள் தொகுத்து வழங்க சிறப்பு பேச்சாளர் தமிழ் அறிஞர் பெரியார்தாசன் அவர்களுடைய பேச்சு பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளவகையில் அமைந்தது.


பின்னர் பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்கள் தலைமையில் இன்றைய வாழ்வில் மகிழ்ச்சியை தருவது கடந்த காலமா, நிகழ்காலமா, எதிர்காலமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. அதில் ஏராளமான பேச்சாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

Monday, May 18, 2009

அதிரையில் திமுகவினர் கொலைவெறியாட்டம்

தேர்தல் வெற்றி தொடர்பாக பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க.வினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்.
பட்டாசு வெடித்ததில் தகராறுஅதிரை பழஞ்செட்டித்தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன்கள் ராமராஜ் என்ற கனகராஜ் (வயது46), ஜெயசுந்தர் (43), சிவக்குமார் (வயது40). ராமராஜின் மகன் கமல்ராஜ் (வயது25). சிவக்குமார் அதிரை நகர எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளராக உள்ளார். மற்றவர்கள் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அதிரையில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிரையில் நேற்று முன்தினம் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சிவக்குமாரின் கடை அருகேயும் வெடி வெடித்தனர். இதனை சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் தட்டிக்கேட்டனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று காலை ராமராஜ், ஜெயசுந்தர், சிவக்குமார், கமல்ராஜ் ஆகிய 4 பேரும் கடையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், கடையில் இருந்த 4 பேரையும் உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரிமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஜெயசுந்தரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைகள் அடைப்பு

ஜெயசுந்தர் இறந்த தகவலை அறிந்ததும் அதிரையில் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் பஸ்கள் ஓடவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் தி.மு.க.வை சேர்ந்த இராம குணசேகரன், சோமு, மாரிமுத்து, பாலாஜி மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் மீது கடந்த சில நாட்களுக்குமுன் மத்திய சென்னை தேர்தல் வண்முறையை கண்டித்து அதிரை மமகவினர் சுவரொட்டி ஒட்டியதை கிழித்தது தொடர்பாக அதிரைகாவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.Saturday, May 16, 2009

இனி குர்ஆன் ஓதாமல் இருக்கவே முடியாது!


அன்புள்ள‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு,அஸ்ஸ‌லாமு அலைக்கும்

முத‌ல் முறையாக‌ த‌மிழ் குரானை அத‌ன் உண்மையான‌ புத்த‌க‌ வ‌டிவில் வ‌லை உல‌கில் அறிமுக‌ப்ப‌டுத்துகிறோம். குரானின் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்டுவ‌து போல் நீங்க‌ள் புர‌ட்டி உங்க‌ளுக்கு தேவைப்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளையோ, திருகுரானின் அத்தியாய‌ங்க‌ளையோ புர‌ட்டி பார்த்துக் கொள்ள‌லாம்.

நாங்க‌ள் எடுத்துக் கொண்ட‌ முய‌ற்சிக்கு உங்க‌ள் முழுமையான‌ ஆத‌ர‌வே கார‌ண‌ம்.
திருக்குர்ஆனை இந்த‌ப் புதிய‌ வ‌டிவில் காண‌ கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் அழுத்த‌வும்.

http://tamilquranmp3.com/

த‌ய‌வு செய்து இந்த‌ ம‌ட‌லை உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கும் அனுப்பித் த‌ந்து அனைவ‌ரும் ப‌ய‌ன் பெற‌ச் செய்ய‌வும்.

என்றும் உங்க‌ள‌ ஆத‌ர‌வை நாடும்
k@der
Adminstrator
Ali A Kader

என்ன கொடுமை சார் இது?

நமதூர் சகோதரர் ஒருவர் இந்தப் புகைப்பாங்களை மட்டும் அனுப்பியுள்ளார். விபரங்களுக்கு தொர்பு கொள்ளச் சொல்லி அவருடைய கைப்பேசி எண்ணைக் கொடுத்துள்ளார்!

மத்திய சென்னையில் கள்ள ஒட்டுப்போட முயன்ற திமுகவினரைத் தடுத்த ம.ம.கட்சியினரை திமுக குண்டர்கள் தாக்கியதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாடமாக இருக்கலாம்.

என்ன கொடுமை சார் இது?

செய்தியையும் அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! மேலதிக விபரமறிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.

Tuesday, May 12, 2009

சிந்திக்கும் மனிதர்களுக்கு மட்டும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும், DMK க்கு ஏன் ஓட்டுபோட வேண்டும், MDMK க்கு ஏன் ஓட்டு போடக்கூடாது என சகோ. PJ அவர்கள் 09-05-09 அன்று கூறினார் (அல்லாஹ் அவருக்கு அருள் செய்யட்டும்) அது பற்றி சிந்திக்க சில தகவல்கள்..
TNTJ யின் பொதுக்குழு தீர்மானம்:
05-04-09 அன்று கோவையில் நடைபெற்ற TNTJ யின் பொதுக்குழு தீர்மானப்படி தி.மு,க விற்கு ஆதரவாகவும் பிஜேபி தவிர்த்து அனைத்து கட்சிகளையும் (காங்கிரஸ் உட்பட) எதிர்பதாகவும் கூறுகின்றார்கள்
மதிமுக விற்கு ஏன் ஓட்டுபோடக்கூடாது என்பதற்கு பிஜே யால் கூற முடிந்தது இரண்டு காரணங்கள்
முதலாவது காரணம் மதிமுக விற்கு போடும் ஓட்டு அத்வானிக்கு போடும் ஓட்டாக கற்பனை பண்ணுகிறார், அத்வானியால் நமது சமுதாயத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளை கூறிவிட்டு, எனவே பம்பரத்திற்கு ஓட்டுபோடாதீர்கள் என்கிறார்.
பள்ளிக்காலங்களில் படிப்பரிவில்லா பையனிடம் தென்னை மரம் பற்றி கட்டுரை எழுது என சொன்னால் தான் மேய்க்கும் மாடைப்பற்றி விளக்கமாக எழுதிவிட்டு அந்த மாட்டை இந்த தென்னமரத்தில் தான் கட்டுவேன் என கட்டுரை எழுதியதாக கூறுவார்கள். அதுபோல் தான் பிஜே கூறுகிறார். அத்வானியின் ஆபத்தை கூறிவிட்டு பம்பரத்திற்கு ஓட்டுபோடாதே என்கிறார், ஆனால் பிஜேபி க்கு ஓட்டு போடாதே என ஒரு தீர்மானமும் TNTJ போடவில்லை.
அத்வானி பிரதமராக வரக்கூடாது என்பதுதான் உண்மையான நோக்கமாக இருந்தால் எந்த கட்சிக்காரன் ஒரு போதும் பிஜேபிற்கு ஆதரவு தரமாட்டான் என்றால் அவன் காங்கிரஸ் கட்சிக்காரன் மட்டும் தான் எனவே காங்கிரஸை ஆதரிக்க வேண்டியதுதானே, ஆனால் காங்கிரஸை எதிர்க்கிறார்கள்.
மயிலாடுதுறையில் மூன்று முக்கிய கட்சிகள் எதுவெனில் ம.ம.க, காங்கிரஸ், பிஜேபி. ம.ம.க வையும் காங்கிரஸையும் எதிர்ப்பதாக கூறும் இவர்கள் யாருக்கு ஓட்டுபோட சொல்கிறார்கள்.! சிந்தியுங்கள்
இரண்டாவது காரணம், விடுதலைபுலிகளை வைகோ ஆதரிக்கிறார் ( விடுதலை புலிகளின் ஆபத்துகளை கூறிவிட்டு, அதே தென்னை மரக்கட்டுரை கதைதான் ) எனவே ம.தி.மு.க விற்கு ஓட்டு போடாதீர்கள் என்கிறார்.
இதுதான் உண்மையான காரணம் என்றால் காங்கிரஸ் ஒரு கட்சிதான் விடுதலைபுலிகளை எதிர்கிறார்கள். எனவே காங்கிரஸிற்கு ஓட்டு போடு என்றல்லவா கூறவேண்டும்.ஆனால் காங்கிரஸிற்கு ஓட்டுபோடாதே என்கிறார். கருணாநிதியோ பிரபாகரனை என் நண்பர் என்கிறார், விடுதலைபபுலிகளின் கோரிக்கைகளை ஆதரிக்கிறார், எனவே திமுக விற்கு ஓட்டு போடாதே என்றல்லவா கூறவேண்டும், ஆனால் திமுக விற்கு ஓட்டு போடு என்கிறார். இதற்கு பெயர்தான் மூளைச்சலவை. இதுதான் தடுமாறிய இரட்டை நிலை.! சிந்தியுங்கள்
அடுத்து நமதூர் அல்அமீன் பள்ளிவாசல் :
பள்ளிவாசல் கமிட்டியை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும், விவேகம் அற்ற, நல்ல அணுகுமுறை இல்லாத பள்ளிக்கு இடையூறாக இருப்பதற்கு முக்கிய காரணமே இக்கமிட்டிதான். உதாரணத்திற்கு ஒன்று ஊரு(று)ம் அறிவும் நோட்டிஸ். இதில் நியாயமற்ற பல கோரிக்கைகளும் MMS.அப்துல் வஹாப் அவர்கள சொல்லாததை சொல்லியதாக இட்டுக்கட்டப்பட்ட பொய்களும் பள்ளிவாசல் உருவாவதற்கு கிடைத்த வாய்ப்பை சிதைப்பதாவும் இருந்தது. மேலும் பள்ளிவாசலை அரசியலாக்குகிறார்கள். இப்போதும் சரி கடந்த கவுன்சிலர் இடைத்தேர்தலின்போதும் சரி பள்ளிவாசல் அரசியல் பகடைகாயானது.இது தவறான செயல்பாடு. பள்ளிவாசல் கமிட்டியை பற்றி பிறகு ஒரு சமயத்தில் விவாதிப்போம்.
நமது அண்ணனின்(பிஜே) கருத்துக்கு வருவோம்:
பள்ளிவாசல் விசயம் ஒரு சின்ன விசயமாம். சுவரா சித்திரமா என்றால் சுவர்தான் முக்கியமாம். அல்லாஹ்வின் இல்லத்தை சித்திரமாகவும், திமுக வை சுவராகவும் மதிக்கிறார்.அல்லாஹ்வின் இல்லமா? கருணாநிதியின் கடிதமா? என்றால் கருணாநிதியின் கடிதம்தான் முக்கியமாம்.அப்படி என்றால் அல்லாஹ்வா? கருணாநிதியா? என்றால்.... ! சிந்தியுங்கள்.
நீங்கள் அல்லாஹ்வை மதிக்கும் லட்சணைத்தைதான் கடையநல்லுVர் பள்ளியில் பார்கிறோமே. இமாம் ஜமாத் நடக்கும்போது இமாமுக்கு முன் அமர்ந்துக்கொண்டு தொழுகை நடத்த விடாமல் இடையூறு செய்வதை வீடியோ பதிவாக பார்கிறோமே. உங்களுக்கு எது முக்கியம் என்பதை பல முறை விளக்கியிருக்கிறீர்கள். அல்லாஹ்வா? TNTJ யின் வெறியா என்றால் TNTJ-யைத்தான் முன்னிலைப் படுத்துகின்றீர்கள். எங்கள் ஊரிலும் அதே கோரிக்கையை தான் வைத்தீர்கள்.
அல்லாஹ்வின் இல்லத்தை TNTJ யின் சொத்தாக மாற்றினால் வேற யாரோ இரண்டு நபர்களின் உயிர்களை பலிக்கொடுத்தாவது TNTJ யின் சொத்தை காப்பாற்றுவோம் என்கிறீர்கள், அல்லாஹ்வின் இல்லம்தான் முக்கியம் TNTJ யின் சொத்து அல்ல என எங்களை ஏமாற்ற நினைத்தால் பள்ளிவாசல் பிரச்சனையின் போதும், கேட் மூடபட்டபோதும் அதிரையில் TNTJ இல்லையா? எங்கே போய் ஒளிந்தார்கள் உங்களது சஹீதுகள்? சிந்திக்கும் மனிதனே சிந்தி.
திமுக விற்கு ஏன் ஓட்டுபோட வேண்டும் :
இதற்கு ஒரே காரணம், இரண்டு விளக்கம்.
1.தார்மீக ஆதரவிற்கு காரணம் 3.5% இட ஒதுக்கீடு
2.தீவிர ஆதரவிற்கு காரணம் கருணாநிதியிடம் எழுதி வாங்கிய கடிதமாம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு குறித்து தனது தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டது, நாமும் அதை நம்பி திமுக விற்கு வாக்களித்தோம் வெற்றிபெற செய்தோம், அந்த நன்றிக்கடனுக்காகவும், தனது தேர்தல் அறிக்கையின் படியும் முஸ்லீம்களுக்கு 3.5%மும், கிருத்துவர்களுக்கு 3.5%மும் திமுக இட ஒதுக்கீடு தந்தது. ஆனால் தற்போது யாரோ பெற்ற குழுந்தைக்கு நான் தான் தகப்பன் என்பது போல் கடந்த சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதாவிற்கு வாக்களித்துவிட்டு எங்களால்தான் கருணாநிதி இட ஒதுக்கீடு தந்தார் என்று மார்த்தட்டிக்கொள்கிறீர்கள். பாவம் உங்கள் கையாளாகாத தனத்தை நினைத்து.
தீவிர ஆதரவிற்கு காரணம் கருணாநிதியிடம் எழுதி வாங்கிய கடிதமாம். அதே போல் புதுவையில் மட்டும் காங்கிரஸ் ஆதரவிற்கு காரணம் புதுவை முதல்வரிடம் எழுதிவாங்கிய கடிதமாம். உங்களது இந்த அணுகுமுறையை வரவேற்கிறோம்.
எங்களூர் பள்ளிவாசல் கமிட்டியும் திமுக விற்கு தீவிர ஆதரவு தருவதற்கு உங்களை போன்றுதானே வேட்பாளர் பழநிமாணிக்கத்திடம் எழுதி கேட்டனர் இது எந்த வகையில் தவறு. பழநிமாணிக்கம் அதை நிராகரித்தால் பழநிமாணிக்கத்தை ஏன் நிராகரிக்க கூடாது? உங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா? ஏன் இந்த இரட்டை நிலை? சமுதாய அக்கறை உள்ளவனே சிந்தி.!
ம.ம.க வை பொறுத்தவரை மதிமுக வை எதிர்பதாக எங்கேயும் கூறவில்லை. தஞ்சையில் ஆதரவு தந்தவுடன் கிண்டல் செய்கின்றீர்கள். ஆனால் நீங்களோ காங்கிரஸை எதிர்பதாக அறிவித்துக்கொண்டே மயிலாடுதுறையில் உங்கள் எதிரி ம.ம.க என்பதால் காங்கிரஸை ஆதரிப்பதாக அறிகிறோம். இது உண்மையனில் நகைப்பிற்குரியவர்கள் யார்? உங்களது எதிரி ம.ம.க விற்கு எதிராக காங்கிரஸை ஆதரிக்கலாம், ம.ம.க மட்டும் திமுக விற்கு எதிராக மதிமுக வை ஆதரிக்க கூடாதா? என்னையா நிலைபாடு இது? அறிவுள்ளவனே சிந்தி.!
இறுதியாய் ஓர் எச்சரிக்கை வேறு. திமுக விற்கு ஓட்டு போடவில்லையயன்றால் முஸ்லிம்கள் நன்றி கெட்டவர்கள் அவர்களுக்கு எதுவும் செய்யக்கூடாது என்று திமுக முடிவெடுத்துவிடுமாம். அது பேராபத்து என பயமூட்டுகிறார். பாவம் , இதே பிஜே தான் சென்ற காலங்களில், திமுக மட்டும் தான் முஸ்லிம்களுக்கு நண்பர்களாய் விளங்கும் ஆட்சி, வேறு ஆட்சி வந்தால் முஸ்லிம்களுக்கு பேராபத்து வந்துவிடும் என்று வாதிட்ட முன்னால் சமுதாய தலைவர்களை கிழி கிழி என கிழித்தார். முஸ்லிம்களை அடங்கி ஒடுங்கி நடக்காமல் வீரியத்துடன் நமது உரிமையை பெற்றிட போராட வேண்டும் என்ற போராட்ட குணத்தை உருவாக்கியதில் பிஜே க்கும் பங்கு உண்டு. ஆனால் தற்போது இவரும் திமுக வுடன் தொடர்புடைய முன்னால் சமுதாய தலைவர்களை போல் பயம்காட்டுகிறார். பயப்படுகிறார் பரிதாபநிலை.!
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நீங்கள் திமுக வை பொறுத்தவரை நன்றிகெட்டவர்கள். கருணாநிதி கொடுத்த இட ஒதுக்கீடு நன்றிகெட்ட TNTJ யால் கிடைத்தது அல்ல என அறிவீப்பீர்களா? ஆனால் நான் தான் அப்பன் என குதித்தீர்கள். இப்போது மீண்டும் பயந்து ஒடுங்குகிறீர்கள். உங்களுடைய பயத்தை எல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தை நோக்கி திணிக்க வேண்டாம். எங்களுக்கு அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.
திமுக வை பொருத்தவரை தார்மீக ஆதரவிலிருந்து தீவிர ஆதரவுக்கு நீங்கள் முடிவெடுத்து இருக்கிறீர்கள். ஆனால் எங்கள் ஊரை பொருத்தவரை பள்ளிவாசல் சம்மந்தமாக திமுக மீது கோபம் இருந்தாலும் எங்களது மனம் (வாக்கு வங்கி) திமுக வின் பக்கமே சார்ந்திருந்தது. அதனால் ஏற்பட போகும் பயன் TNTJ யால் தான் உருவானது என்று மிகைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் திமுக வை புறக்கணிக்க தோன்றுகிறது.
மேலும் நிதானமாக தெளிவாக முடிவெடுக்க வேண்டியது என்னவெனில், நாம் விரும்பியோ, விரும்பாமலோ பள்ளிவாசல் விசயம் தேர்தல் விசயமாகி விட்டது. அதாவது நமதுVரில் திமுக விற்கு அதிக ஓட்டுவிழுந்தால் , பள்ளிவாசல் சம்மந்தமாக அக்கரை உள்ளவர்கள் குறைவு என்ற எண்ணத்தை அனைத்து கட்சிகளுக்கும் பதிவு செய்கிறோம். திமுக விற்கு குறைவான ஓட்டே நமதுVரில் பதிவானால் பள்ளிவாசலின் தாக்கம் பெரும்பான்மையினோரின் மனதை பாதித்துள்ளது என்பதை நாம் அனைத்து கட்சியினருக்கு பதிவு செய்கிறோம். இது நாம் விரும்பாமல் நம் மீது திணிக்கப்பட்ட ஓர் முடிவு. இதில் தான் நாம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.சிந்திக்க பகுத்தறிவுடன் படைக்கப்பட்ட மனிதனே சிந்தித்து முடிவெடு.
நமதூரில் வாய்ஜாலத்தில் மதிமயங்கும் மடையர்கள் அதிகமா? அல்லது சிந்தித்து செயல்படும் புத்திசாலிகள் அதிகமா? என்பதை தேர்தல் முடிவிற்கு பிறகு அறிந்துக்கொள்வோம். (இன்ஷா அல்லாஹ்).

தொடர்புக்கு :
Aboo_fawaz@rediffmail.com

Monday, May 11, 2009

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும். மரண அறிவிப்பு
அதிராம்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்த
அகமது அலி, முகமது ரபீக் ஆகியோரின்
தந்தையுமாகிய U. அப்துல் குத்தூஸ் காக்கா அவர்கள்
இன்று (11-4-2009) மாலை 4 மணியளவில் அதிராம்பட்டிணத்தில்
காலமாகி விட்டார்கள். அன்னாரது மஹ்ஃபிரத்து நல்
வாழ்விற்க்கு துஆ செய்ய வேண்டுமாய் அன்புடன்
கேட்டுகொள்ள படுகிறார்கள்.

மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்!

2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக் கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தவறாது கலந்து தங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை முறையாகப் பதிவு செய்வதே கடமையாகும். இந்த மண்ணின் மைந்தர்கள்- வந்தேறிகள் அல்ல என்பதை நிலை நாட்டுவதாகும்.

ஆயினும் வாக்களிக்கும் அனைத்து முஸ்லிம் களும், வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று செயல்பட்டு 3:110-ல் அல்லாஹ் கூறுவதுபோல் மாற்றாருக்கு நேர்வழிகாட்ட வேண்டும். வாக்களிக்கும் முஸ்லிம் கள் தங்களின் பொன்னான விலை மதிப்பற்ற வாக்குகளை 1000ஃ-க்கும் 5000ஃ-க்கும் விற்க ஒரு போதும் துணியக் கூடாது. அப்படி மக்களுக்குப் பணம் கொடுத்து அதன் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள், தாங்கள் செலவழித்ததைப் பன் மடங்காக பெருக்கி கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கத் துணிவார்களே அல்லாமல், மக்களுக்குத் தொண்டு செய்யவோ, சேவை செய்யவோ, முன்வரமாட்டார்கள் என்பதை முஸ்லிம் ஆண்களும், பெண்களும் மனதில் இருத் திக் கொள்ள வேண்டும். எனவே தங்கள் வாக்கு களை ஒருபோதும் பணத்திற்கு விற்கக் கூடாது.

அடுத்து வெற்றி பெறுபவருக்கே நமது வாக்கையும் அளிக்க வேண்டும் என்ற மூட எண்ணமும் கூடாது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல், தொண்டு செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களுக்கே முஸ்லிம்கள் தங்கள் வாக்கை அளிக்க வேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் தோற்றாலும் பரவாயில்லை ; அதனால் மக்களுக்குத் தொண்டு செய்வதை விட்டு விட மாட்டார் என்ற அடிப்படையில் நல்லவர்களுக்கே, தொண்டு செய்பவர்களுக்கே நமது வாக்குகளை அளிக்க வேண்டும். தோற்பவர்களுக்கு வாக்களிக்க லாம். ஆனால் தொண்டைத் தொழிலாக்கிக் கோடிகோடியாக சுருட்டுகிறவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்க கூடாது.

நாம் வாக்களித்து அதன் மூலம் வெற்றி பெற்றுப் போகிறவர்கள் செய்யும் அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்திற்கும் நாமும் துணை போன குற்றத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது என சிலர் வாதிடலாம். இந்த எண்ணத்தில் நாம் வாக்களிக் கத் தவறினால், நமது வாக்கு கள்ள வாக்காக மாறி நிற்பவர்களில் ஆகக் கொடியவர்கள் தேர்வு பெறக்காரணமாகலாம். அதனால் வாக்களிக்காமல் இருந்து எந்தப் பாவத்தைத் தவிர்க்க எண்ணினோமோ அதை விடப் பெரும் பாவத்தை இரட்டிப் பாக அடைய நேரிடும் என்பதை இப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் உணர வேண்டும்.

எனவே நிற்பவர்களில் குறைந்த தவறுடைய வர்களைப் பார்த்து நமது வாக்கைப் பதிவு செய்யலாம். அப்படிப்பட்டவர்களும் வேட்பாளர் களில் தென்படாவிட்டால், தேர்தல் அதிகாரியிடம் கூறி அதற்குரிய படிவத்தைப் பெற்று, வேட்பாளர் களில் யாரும் தகுதியானவர்கள் இல்லை. எனவே எனது வாக்கை யாருக்கும் அளிக்கவில்லை என பூர்த்தி செய்து கொடுத்து, முஸ்லிம்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக மாறுவதைத் தடுக்கலாம். ஆக முஸ்லிம்கள் 100மூ தவறாது ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்துள்ளார் கள் என்ற சாதனையின் மூலம் ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் கவனத்தை முஸ்லிம் சமுதாயத் தின் பக்கம் திருப்ப முடியும். இது முஸ்லிம் ஆண், பெண் வாக்காளர்களின் கடமையாகும்.

அடுத்து முஸ்லிம் வேட்பாளர்கள், ஜாதி, மதம், இனம் என வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தொண்டு, சேவை செய்யும் எண்ணத்துடனும், முஸ்லிம்களின் உரிமைகளை கட்டிக்காக்கும் குறிக்கோளுடனும், வேட்பாளர்களாக நிற்க வேண்டும். இன்று அரசியலைவிட ஆதாயம் தரும் வியாபாரம் வேறு ஒன்றுமில்லை; முதல் இல்லாமலேயே கோடி கோடியாகப் பொருள் ஈட்ட முடியும் என்ற தீய நோக்குடன் வேட்பாளர்களாக ஒரு போதும் நிற்கக் கூடாது. அற்ப உலக ஆதாயம் கருதி தொண்டைத் தொழிலாக்கி மக்கள் பணத்தை லஞ்சம் போன்ற தவறான வழிகளில் சுருட்ட முற்படுகிறவர்கள், தூய மார்க்கத்தை மதமாக்கி தொண்டைத் தொழிலாகக் கொண்ட புரோகித மவ்லவிகள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பை நிரப்பிக் கொள்வது போல், இவர்களும் நரக நெருப்பையே தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள் (பார்க்க 2:174).

அது வட்டி, பன்றிக் கறி சாப்பிடுவதை விட மிகக் கொடிய ஹராம் என்பதை நினைத்து சதா அஞ்சிக் கொள்வார்களாக. ஆயினும் அன்று ஆட்சி செய்த கலீஃபாக்கள், கவர்னர்கள் அரசிடமிருந்து ஊதியம் பெற்றது போல், இவர் கள் அரசு கொடுக்கும் ஊதியத்தை அடைவதில் தவறில்லை. சேவை செய்யும் தூய நோக்குடன் மட்டுமே வேட்பாளர்களாக நிற்க வேண்டும்.

மக்களுக்கு உண்மையிலேயே சேவை மனப்பான்மையுடன் தொண்டு செய்தவர்கள் பிரபல கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய வரலாறெல் லாம் தமிழகத்தில் உண்டு. இதை முஸ்லிம் வேட்பாளர்கள் முன்மாதியாகக் கொள்ள வேண்டும்.

மற்ற வேட்பாளர்கள் கடைபிடிக்கும் சிலை களுக்கெல்லாம் மாலையிடுதல், கோவில், சர்ச், தர்கா, பள்ளி என ஏறி இறங்குவது, கண்டவர் களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடுதல், வணக்கம் செலுத்துவது, ஆரத்தி எடுக்க அனுமதிப்பது, பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது, இல்லாத சிறப்புகள் இருப்பதாக மற்றவர்கள் தங்களை புகழ்ந்து பேச வைப்பது, தேர்தல் வேலை செய்பவர்களுக்கு ஹராமான மது, சாராயம், கள்ளசாராயம் என வாங்கிக் கொடுத்து வேலை வாங்குவது, வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்பது இத்தியாதி, இத்தி யாதி செயல்களை ஒருபோதும் செய்ய முற்படக் கூடாது. மற்ற வேட்பாளர்களுக்கு 3:110 இறைக் கட்டளைப்படி ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழ வேண்டும். மற்ற வேட்பாளர்கள் இவர்களைப் பார்த்து வெட்கித் தலை குனிய வேண்டும். இவர்களே உண்மையிலேயே தொண்டு செய்யும் உள்ளம் படைத்தவர்கள் என அவர்களின் உள் மனம் அவர்களை எச்சரிக்கும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்கள் செயல்பட வேண்டும்.

தொண்டு செய்வது கொண்டு மட்டுமே, தொகுதி மக்களின் ஆகுமான தேவைகளை எவ்வித சுயலாபத்தையும் எதிர்பாராமல் செய்து கொடுப்பது கொண்டு மட்டுமே அந்த தொகுதி மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பியே இவரை முனைந்து வேட்பாளராக நிற்க வைக்கவும், வேலை செய்து வெற்றி பெறச் செய்யவும் கூடிய நிலையில் இவர்களின் சேவைகள் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறி முறைகளை முறிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இப்படிப் பட்ட தூய எண்ணத்தோடு முஸ்லிம் வேட்பாளர் கள் செயல்பட்டால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாத தொகுதி மக்களும், தங்கள் இன வேட்பாளரை விட இவரை விரும்பி தேர்ந் தெடுக்கும் நிலை கண்டிப்பாக உண்டாகவே செய்யும்.

முஸ்லிம் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளில் இணைந்து அந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவதின் மூலம் முஸ்லிம்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது அப்பட்டமான பொய்யே ஆகும். சுதந்திரம் கிடைத்த 1947-லிலிருந்து கடந்த 62 ஆண்டுகளாக முஸ்லிம்கள் பிற கட்சிகளால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் ஏமாந்த சோனகிரிகளாக இருக்கிறார்கள் என்பதுமே உண்மையாகும். அதற்காக அக்கட்சிகளை குறை சொல்லவும் முடியாது. நமது நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறை இருப்பதால் சிறுபான்மையினருக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் ஆளாகி, அதன் மூலம் அவர்களின் வாக்குகளை இழப்பதற்கு எந்தக் கட்சியும் முன் வருமா? ஒரு போதும் முன் வராது. வாய் இனிக்கப் பேசி முஸ்லிம்களை ஏமாற்றவும், அவர்களின் ஒற்றுமையை குலைக் கவும் சதி செய்வார்களே அல்லாமல், ஒரு போதும் முஸ்லிம்களுக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கத் துணிய மாட்டார்கள். அதுவும் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்புணர்வு நாட்டு மக்களிடையே இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என தொடர்ந்து அவதூறுகள் பரப்பி வளர்க்கப் பட்டு வருவதால், எந்தக் கட்சியும் முஸ்லிம் களுக்கு நல்லது செய்ய ஒருபோதும் துணியாது. எனவே “தன் கையே தனக்குதவி” என்ற அடிப் படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தனித்து நின்று தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுவே முஸ்லிம்களின் நலனுக்கு நல்லது.

யாரெல்லாமோ, எந்த உருப்படியான கொள்கையோ, இலட்சியமோ இல்லாமல், வெறும் சீட்டுகளுக்காக மட்டும் கூட்டணி அமைக்கும் போது, ஒரே இறைவனையும், ஒரே தூதரையும், ஒரே குர்ஆனையும், தௌ;ளத் தெளிவான ஓரிறைக் கொள்கையையும், தௌ;ளத் தெளிவான வழிகாட்டலையும் பெற்றுள்ள, முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவதில் தயக்கம் ஏன்? அற்ப உலக ஆதாயமும், சுயநலமும் மட்டுமே ஒன்று சேரத் தடையாக இருக்கிறது. தங்களுடைய அற்ப உலக ஆதாயங்களையும், சுய நலப்; போக்கை யும் தலைவர்கள் தியாகம் செய்ய முன் வந்தால் முஸ்லிம் சமுதாய ஒற்றுமை எளிதாக ஏற்பட்டு விடும். மார்க்க விஷயத்தில், கொள்கைகளில் வேறுபட்டாலும் அவற்றின் உண்மை நிலையை நாளை மறுமையில் அவரவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவற்றை காரணம் காட்டி சமுதாயத்தை இவ்வுலகில் பிளவு படுத்துவது கூடாது. அல்லாஹ்வே தனது தீர்ப்பளிக்கும் அதி காரத்தை மறுமைக்கென்று ஒத்தி வைத்;திருக்கும் நிலையில், அதைத் தங்கள் கையில் இவ்வுலகி லேயே எடுத்துக் கொள்வதைவிட கொடிய ஷிர்க், இணை வைக்கும் பாவச் செயல் பிறிதொன்று இல்லை என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம் அறி ஞர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். 21:92, 23:52 இறைக் கட்டளைகள்படி சமுதாய ஒற்றுமை காக்க முன் வந்தால் சமுதாய ஒற்றுமைக்கு வழி பிறக்கும்.

அந்த அடிப்படையில் பிரிந்து கிடக்கும் முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அனைத்தும் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டால், குறைந்தது 5 அல்லது 4 தொகுதிகளை பிற கட்சிகளிடம் பேரம் பேசி பெற முடியும் என சென்ற இதழில் எழுதி இருந் தோம். முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அப்படி யொரு தேர்தல் கூட்டணி அமைக்க முன் வர வில்லை. அதனால் 4,5 சீட்டுகள் கிடைப்பதற்குப் பதிலாக ஒரேயொரு சீடடு அதுவும் அவர்களின் சின்னத்திலேயே அவர்களின் கட்சியில் ஒருவராக போட்டியிட மட்டுமே வாய்ப்புக் கிட்டியது.

வெற்றி பெற்றாலும் அவரால் முஸ்லிம் சமுதாயத்திற்கு குறிப்பிடும் அளவுக்கு பலன் கிடைக்கப் போவதில்லை. சமுதாயப் பிரச்சினை களை துணிந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் வாய்ப்பு இல்லை. அடக்கி மட்டுமே வாசிக்க முடியும். பிற கட்சிகள் மூலம் போட்டி யிட்டு தேர்ந்தெடுக்கப்படும் எந்த முஸ்லிமின் நிலையும் இதுதான். எனவே அவர்களுக்காக பெரும் பாடுபட்டு முஸ்லிம்கள் அவர்களை வெற்றி பெறச் செய்தாலும், முஸ்லிம் சமுதாயம் அத னால் பெரும் பலன் அடையப் போவதில்லை.

அதனால், பிற கட்சிகள் பின்னால் செல்லும் அவல நிலை மாற வேண்டும். “தன் கையே தனக்குதவி” என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி பாடுபட்டு அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அனைத்தும் அப்படிப்பட்ட வேட்பாளர் களுக்கு விழுமானால் சில தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற முடியும். எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறக் கூடாது. ஒட்டுமொத்தமாக அந்த வேட்பாளர்களுக்கே விழ வேண்டும்.

ஆயினும் பிற கட்சிகள் முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையைக் குலைத்து சிதறச் செய்யவே பெரும்பாடு படுவார்கள். இதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களின் சமூக, கட்சி ஆதாயத்திற்காக அப்படிச் செயல்படு கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் ஆசை வார்த் தைகளில் மயங்கி, கொடுக்கும் அற்பப் பதவி களுக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தைப் பிளவு படுத்த முற்படும் முஸ்லிம் பெயர் தாங்கிகளே குற்றவாளிகள். அவர்களுக்கு சமுதாய நலனை விட, அவர்களின் அற்ப உலக ஆதாயமே பெரிதாகத் தெரிகிறது. அப்படிப்பட்டவர்களாலேயே முஸ்லிம் சமுதாயம் அன்றிலிருந்து இன்று வரை சீரழிந்து வருகிறது. அவர்கள் சமுதாய தலைவர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். அப்படிப்பட்ட சுயநலப் பேர்வழிகளை தலைவர்களாக ஏற்று அவர்களுக்கு வெண் சாமரம் வீசும் போக்கை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அவர்கள் பின்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சுயநலத்திற்கும், அற்ப உலக ஆதாயத்திற்கும் முதலிடம் கொடுக்காமல், சமுதாய ஒற்றுமையையும், சமுதாய நலனையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களை மட்டுமே வழிகாட்டிகளாக முஸ்லிம் சமுதாயம் ஏற்க வேண்டும்.

அப்போதே சமுதாயம் உருப்படும், மேம்படும். இவ்வுலக இன்னல்கள் மட்டுமாவது நீங்கும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் பிளவு படாமல் ஒன்றுபட்டு, பிற கட்சிகளில் நிற்பவர்களை ஓரங் கட்டி, முஸ்லிம் சமுதாயத்திற்கென்றே நிற்கும் முஸ்லிம்களுக்கே வாக்களிக்க வேண்டும். அவர்கள் சில சமயம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், முஸ்லிம்கள் அனைவருடைய வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் 100மூ விழுவதால், தேர்தல் கமிஷனிடம் கட்சி அங்கீகார மும், குறிப்பிட்ட சின்னமும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலில் தவறாது தங்கள் வாக்குகளைச் செலுத்துவதோடு, நடக்க முடியாதவர்களையும் தூக்கிச் சென்று வாக்க ளிக்க உதவுமாறு கோரிக்கை வைக்கிறோம். முஸ்லிம்களின் 100% வாக்கும் பதிவாக வேண்டும். அதற்குரிய தீவிர முயற்சிகளில் முஸ்லிம்கள் முனைந்து ஈடுபட வேண்டும்.

கடந்த தேர்தலில் உயிரைக் கொடுத்துப் பாடுபட்டு, அம்மாவை ஆட்சியில் அமர்த்தப் போவதாக சூளுரைத்த ததஜ தலைமைப் புரோகிதர் இத்தேர்தலில் உயிரைக் கொடுத்து பாடுபட்டு முஸ்லிம்களுக்காக நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களை டிபாஸிட் இழக்கச்செய்யப் போவதாக சூளுரைத்துள்ளார். சமுதாய நலனில் அக்கறை யுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இப்படி சூளுரைக்க முடியாது. அதற்காகக் கூறும் காரணமோ அதை விட நகைப்புக்குரியது. சுனாமி பணத்தை சுருட்டி விட்டார்களாம். இன்னும் பல மோசடிகளைச் செய்தார்களாம். கூறுவது யார்? உலக மகா பொய்யர் வாயிலிருந்து வெளி வருவது அனைத் தும் பொய்களே என்பதை 29.3.2009 தொண்டி விவாதத்திற்குப் பின்னர் அவர் பரப்பிவிட்ட பொய் களே போதிய சான்று. அது மட்டுமா? தமுமுக கழகத்திற்கென்று நன்கொடை கொடுப்பவர்கள் அதற்காகவே கொடுங்கள் என்று இவர் கைப்பட எழுதிய கடிதமே ஆதாரமாகவே இருக்கும் போது, அப்படிக் கூறி வசூலித்த நிதியிலிருந்து வாங்கிய கட்டிடங்களையும், உணர்வு வார இதழையும் சுருட்டிக் கொண்ட மகா யோக்கியர் இப்படிக் கூறுகிறார். ததஜ அமைப்புக்காக ஒருவர் கொடுத்த பெரும் மதிப் புள்ள சொத்தை, தனது பெயரிலேயே பதிவு செய்து கொண்ட இவர், நாளை ததஜவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், ததஜவுக்குரிய அந்தச் சொத்தை சுருட்ட மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அப்படிப்பட்ட யோக்கியர் இப்படிக் கூறுகிறார். இதே நபர் உணர்வு உரிமை 05 குரல் 06, அக். 20-26,2000 இதழின் 12-ம் பக் கம் கூறியுள்ளதைப் பாருங்கள்.

தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களை விட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழகம் சிதறுண்டுவிட்டால் மீண்டும் இந்தச் சமுதாயத்தை ஒன்று திரட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் இக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுவதாக இல்லை.

தமுமுகவின் இன்றைய தலைமை நிர்வாகிகள் மீது நான் அதிருப்தியடைந்து ஒதுங்குவதாகவும் யாரும் நினைத்து விட வேண்டாம். இன்று இருக்கின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உறுப்பினராக நான் இருப்பதே இதற்குச் சான்று.

மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத் தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக் கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.

ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.

தமுமுகவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை.

கூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை.

எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் தியாக மனப் பான்மை.

எந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராத தன்மை.

எத்தகைய மிரட்டலுக்கும் அடக்கு முறை களுக்கும் அஞ்சாத துணிவு.

கலவரத்தீ மூண்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப்பணியாற்றும் பாங்கு.

தங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம்.

எந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல்.

சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பொறுப்புணர்வு.

உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளுதல்.

இப்படிச் சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநில தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.

இதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை நாளில் அவர் களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையி டுவேன். உணர்வு அக்.20-262000 பக்கம் 12.

இப்போது, அன்று பீ.ஜை. சொன்னதை ஏற்பதா? அல்லது இன்று அவர் சொல்வதை ஏற்பதா? அதுவும் தமுமுகவின் மாநில அமைப் பாளர் மற்றும் அனைத்துப் பொறுப்புளிலிருந்தும் விலகும்போது, “மனம் திறந்த மடல்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கத்திலுள்ள வரிகள் இவை. தமுமுக தலைவர்களைப் பற்றி யாரும் குறை கூறினால் நாளை மறுமையில் அல்லாஹ் விடம் முறையிடுவதாகவும் கூறியுள்ளார். அப்படியானால் நாளை மறுமையில் இவரைப் பற்றி இவரே அல்லாஹ்விடம் முறையிடப் போகிறாரா?

ஆம்! பீ.ஜை. கூறும் அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டால், அளவுக்கு மீறிய மிதமிஞ்சிய தங்களிடமில்லாத சிறப்புகள் நிறைந்த வஞ்சகப் புகழுரைகள் எல்லாம் கிடைக்கும். அவரது வழிகெட்ட கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்தால், மறுப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக அவர் களிடமில்லாத இழிகுணங்ளும், ஒழுக்கக் கேடுகளும் இருப்பதாக ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்களும், அவதூறுகளும் அரங்கேறும். இதுவே பீ.ஜையின் இரண்டு கோர முகங்கள்.

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல் பீ.ஜையின் பேச்சுக்களையும் கணக்கில் கொள்ளவே முடியாது; கூடாது. “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உலகம் முழுவதும்; உலா வரும் ஊனுயைப் பார்ப்பவர் கள், இவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களையும், மரத்துக்கு மரம் தாவும் குரங்குப் புத்தியையும், இதுவரை அடித்துள்ள அந்தர் பல்டிகளையும் தெரிந்து கொள்ள முடியும். இவரைவிட மானங்கெட்ட ஒருவர் இருக்க முடியாது என்பதும் தெரிய வரும். அவரது அறிவுரைகளை இறைவாக்காக எடுத்து நடப்பவர்கள் இவ்வுலகிலும் கேட்டை அனுபவிப் பார்கள். நாளை மறுமையிலும் நரகையே சென்ற டைவார்கள் என்பதை 7:3, 33:21,36,66,67,68 இறை வக்குகளை சுயமாக நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மறுக்க முடியாது.

இதுவரை நூற்றுக் கணக்கானவர் மீது அப்பட் டமான பொய்களையும், அவதூறுகளையும், அவரும், அவரது கைத்தடிகள், பக்தர்கள் மூலமும் உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறாரே, அவற்றில் ஒன்றையாவது உரிய ஆதாரங்களை எடுத்துக் காட்டி முறைப்படி நிரூபித்திருக்கிறாரா? இல்லையே! அவர் ஜமுக்காளத்தில் வடித் தெடுத்த பொய்யர், அயோக்கியர் எனும் போது முஸ்லிம் வேட்பாளர்களைப் பற்றி அவர் சொல்லுவதை எப்படி ஏற்பது?

ஒரு வாதத்திற்கு அவரது இந்தப் பொய்க் கூற்றை ஏற்பதாக இருந்தாலும், அவரது நடத்தை எப்படி இருக்க வேண்டும்? போட்டியிடும் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் செய்யக் கூடாது. இவர் பிரசாரம் செய்ய களம் இறங்கும் வேட்பாளர்கள் அனைவரும், இவர் முஸ்லிம் வேட்பாளர்கள் பற்றி கூறும் குறைகளை விட்டும் தூய்மையாளர்களா? குறைகளைப் பட்டியலிட்டால் அனைத்திலும் முஸ்லிம் வேட்பாளர்களைவிட பல படிகள் மேலே அல்லவா அவர்கள் இருப்பார்கள். அவர் களில் ஒருவரையாவது முஸ்லிம் வேட்பாளர் களைவிட நல்லவர்கள் என பீ.ஜை.யால் நிலை நாட்ட முடியுமா? பின்னர் எந்த முகத்தோடு தேர் தல் பிரசார களத்தில் இறங்கி முஸ்லிம் சமுதாய முஸ்லிம் வேட்பாளர்களைத் தோற்கடிக்கப் போகிறார்? விளக்க முடியுமா? ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையும், மறுமையையும், கேள்வி கணக்கையும் நம்புகிறவர்கள். அவர்கள் வாக்ளித்தபடி அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யாமல், மக்கள் பணத்தை சுருட்டினால், இங்கு தப்பினாலும் அங்கு தப்ப முடியுமா? அவர் களை அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தி குற்றப்படுத்தி நட்ட ஈடாக அவர்களின் தொழுகை, நோன்பு, ஜகாத், நற்செயல்களில் ஈடு வாங்கிக் கொள்ள முடியுமே. அதற்கு மாறாக பீ.ஜை. முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க களத்தில் இறங்கி பிரசாரம் செய்து மாற்றாரை வெற்றி பெறச் செய்தால், அவர்கள் பதவியில் செய்யும் அட்டூழியங்களுக்கு நாளை மறுமையில் நட்ட ஈடு பெற முடியுமா? வழி இருக்கிறதா? இல்லையே! அவர்களது சுமையின் ஒரு பங்கை இவரல்லவா சுமக்க வேண்டும்.

பின் எப்படி முஸ்லிம் சமுதாயத்திற்காக வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களை கடும் பிரசாரம் செய்து தோற்கடிப்பதாக பொதுக் குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். பீ.ஜை.யின் அற்ப உலக ஆதாய, சுயநல கோர முகம் தெரிகிறதா? இல்லையா?

ஆக, ததஜ தலைமைப் புரோகிதர் பீ.ஜை. யின் இப்படிப்பட்ட உளறல்களை குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்ற அடிப்படையில் தூக்கி குப்பைத் தொட்டிகளில் எறிந்துவிட்டு, பீ.ஜை.யின் கைத்தடிகளும், பக்தர்களும் முஸ்லிம் சமுதாயத்தின் நலனையே குறிக் கோளாகக் கொண்டு (பீ,ஜையின் நலனை அல்ல) 62 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத் தில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத் திற்கென்றே வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம் களை முழுமையாக ஆதரித்து தங்களின் பொன்னான வாக்குகளைச் செலுத்துவதோடு, முஸ்லிம்கள் அனைவரும் ஒருவர் கூட விடுபடா மல் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க முழு மூச்சாகப் பாடுபடுவதே அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும். முஸ்லிம் சமுதாயத்திற்கு நலன் ஏற்பட்டு இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும் வழி ஏற்படும் என்பதை உணர்வில் கொள்வார்களாக. பீ.ஜை.யின் சொந்த நலனை விட முஸ்லிம் சமுதாய நலன் கோடி கோடி மடங்கு மேலானது என்பதை அவரது ஆதர வாளர்கள் உணர்வார்களாக.

எனவே முஸ்லிம் சமுதாய மக்களே உங்களது மார்க்கக் கொள்கை கோட்பாடுகளை அல்லாஹ்வின் மறுமைத் தீர்;ப்புக்கென்று ஒத்தி வைத்துவிட்டு, இவ்வுலகில் மட்டிலுமாவது ஏற்றம் பெற, முஸ்லிம்களின் உரிமைகள் காக்கப்பட சிந்தாமல் சிதறாமல் முஸ்லிம் வாக்குகள் அனைத் தும் முஸ்லிம் சமுதாயத்திற் கென்றே நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே கிடைக்க முழு மூச்சாகப் பாடுபடுங்கள். முஸ்லிம்கள் ஒன்று பட்டால் அல்லாஹ் வெற்றியைத் தருவான்.

- அபூ அப்தில்லாஹ்

- அந்நஜாத் இதழிலிருந்து வாசகர்: இக்பால்

Sunday, May 10, 2009

இமயம் தொலைக்காட்சியில் வராத நேர்காணல்!

கேள்வி: முஸ்லிம்களுக்கு ஒரு இடம்கூட ஒதுக்காத திமுகவுக்கு தவ்ஹீது ஜமாத் வலியச்சென்று ஆதரவு கொடுக்கக் காரணம் என்ன?

பதில் : எங்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகஅரசு 3.5% இட ஒதுக்கீடு கொடுத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ததஜ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதை தற்போது நிறைவேற்றுகிறோம்.

கேள்வி: 3.5% இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்குச் சரியானபடி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சொன்னீர்களே?

பதில்: உண்மைதான்! அதைதேர்தலுக்குப் பிறகு சரிசெய்வதாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றபிறகே எங்கள் ஆதரவை வழங்குகிறோம்!

கேள்வி: ஆட்சியிலிருக்கும்போதே அதைச் சரிசெய்ய ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரலாமே! ஏன் நீங்கள் வலியுறுத்தவில்லை?

பதில்: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு அரசாங்கம் எவ்விதச் சலுகையோ அல்லது அதற்கான உத்தரவோ போடமுடியாது.

*****

கேள்வி: சென்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தீர்கள். இந்தத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கிறீர்கள்?

பதில் : சென்ற தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வ்ய் செய்வதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டியின் ஆயுளை நீட்டித்து உத்தரவிட்டதால் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக எங்கள் ஆதரவை அதிமுகவுக்கு வழங்கினோம்!

கேள்வி: தேர்தல்விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு அரசாங்கம் எவ்விதச்சலுகையோ அல்லது அதற்கான உத்தரவோ போடமுடியாது என்று சொன்னீர்களே?

பதில்: தேர்தல்தேதி அறிவித்தாலும் முன்தேதியிட்டு உத்தரவிட்டதால் அது தேர்தல் விதிமுறையை மீறியதாகாது!

கேள்வி: தற்போதும் முன்தேதியிட்டு உத்தரவிட்டிருக்கலாமே?

பதில் : ஹி...ஹி....

*******

கேள்வி: நீங்கள் எதற்காக தமுமுகவிலிருந்து பிரிந்தீர்கள்?

பதில் : ஜெனீவாவில் ஜவாஹிருல்லாஹ் என்பவரை பேசஅழைக்கப்பட்ட பிறகும், எங்களுடனிருக்கும் பத்துலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களின் கூட்டத்தைப் பார்த்தபிறகும் தமுமுகவிலுள்ள சிலருக்கு பதவியாசை வந்து தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்ற அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகி அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்யத் தொடங்கினார்கள். இதனால் தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்யமுடியவில்லை என்பதால்தான் விலகினோம்!

கேள்வி: ஜெனீவாவிற்குத் தமுமுகவின் பிரதிநிதியாகத்தானே சென்றார்?

பதில் : ஆமாம்!

கேள்வி: பேராசிரியர், பேச்சாளர் மற்றும் தமுமுகவின் முக்கியத்தலைவர் என்பதால் தமுமுக சார்பில் சென்றுள்ளார். இதில் பதவியாசை இல்லையே?

பதில்: ஹி..ஹி...(மனதிற்குள் "ஏன் என்னை அனுப்பியிருக்கலாம்ல?")

கேள்வி: 10 லட்சத்திற்கும் அதிமான முஸ்லிம்கள் உங்களுடன் உள்ளதாகச் சொல்கிறீகள்.முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது ஒருலட்சம் என்று சொன்னீர்களாமே?

பதில்: முதல்வரிடம் உண்மையத்தானே சொல்ல முடியும். உளவுத்துறையும் எத்தனைபேர் எங்கள் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் என்று தகவல் கொடுத்து விட்டதாக எங்களுக்கும் ரகசியத் தகவல் கிடைத்ததால் பத்து லட்சம் என்று சொல்ல முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கேள்வி: அப்படியென்றால், கூட்டத்தைப் பார்த்து தேர்தலில் போட்டியிட்டுப் பதவி பெறும் ஆசை வந்ததாகச் சொல்வது தவறுதானே?

பதில் : ஹி...ஹி....

கேள்வி: தேர்தலில் போட்டியிட்டு அரசியல்வாதிகளிடம் கொள்கையை அடகு வைக்க மாட்டோம் என்று சொல்லியே தமுமுகவிலிருந்து பிரிந்து வந்ததாகச் சொன்னீர்கள். நீங்களும்கூட தற்போது அரசியல்வாதிகளிடம் தஞ்சமடைந்துள்ளீர்களே?

பதில் : ததஜ பைலாவில் கொள்கைகளில் நான்காவதாக "சூழ்நிலைக்கேற்ப எந்தக்கட்சிக்கு ஆதரவளிப்பது என்று கருத்து சொல்வோம்" என்று உள்ளது!

கேள்வி: தவ்ஹீது பிரச்சாரம் செய்யபோவதாகச் சொல்லிவிட்டு அரசியல் பிரச்சாரம் செய்வது நியாயமா?

பதில் : ஹி....ஹி....

கேள்வி:சென்றதேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவகாக கருத்து சொன்னீர்கள், அதிமுக தோற்றது! தற்போது திமுகவுக்கு ஆதரவாகக் கருத்து சொல்லி இருக்கிறீர்கள்! திமுக தோற்குமா?

பதில் : வெற்றி/தோல்வியைக் கொடுப்பவன் அல்லாஹ்வே என்பதில் தவ்ஹீதுவாதிகள் உறுதியாக உள்ளோம்.

கேள்வி: மமகவை தோற்கடித்தே தீருவோம் என்று சபதம் எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறதே?

பதில் :ஆமாம்! மமக ஏன் தோற்கடிக்கப்படவேண்டும் என்று சென்னை மண்ணாடியில் விளக்கமாகப் பேசியுள்ளேன்.சிடி எங்கள் தலைமையகத்தில் கிடைக்கும். ப்ராட்பேண்ட் இருந்தால் www.onlinepj.com இலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்!எங்கள் உயிரைக் கொடுத்தாவது மமகவை தோற்கடித்தே தீருவோம்!

கேள்வி : வெற்றி/தோல்வியைக் கொடுப்பவன் அல்லாஹ்வே என்பதில் தவ்ஹீதுவாதிகள் உறுதியாக இல்லையோ?

பதில் : ஹி..ஹி....

*******

நேயர்களே! நமது நிகழ்ச்சிக்கு வந்து அதிகமாக "ஹி...ஹி..." என்று பதில் கொடுத்ததால் பேட்டியை மேற்கொண்டு தொடர முடியாது. நமது சிறப்புச் செய்தியாளர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், பேட்டியாளரின் எண்ணஓட்டத்தின்படியும் கீழ்கண்ட முடிவுக்கு வந்துள்ளோம்.

* பேரா.ஜவாஹிருல்லாஹ் ஜெனீவாவில் பேசுவற்கு அழைக்கப்பட்டதால் ததஜ தலைவர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

* பத்து லட்சம் பேர் கூடினார்கள் என்பது உண்மையல்ல.

* ததஜவின் பேச்சை தமிழக முஸ்லிம்கள் கேட்டிருந்தால் சென்றதேர்தலில் அதிமுக வென்றிருக்கும்!

* இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் தோற்றால் அதற்கு ஈழப்பிரச்சினையில் அதன் நிலைப்பாடே காரணம். நிச்சயமாக ததஜ அல்ல!

* மமக தோற்றால் அதற்கு 100% ததஜவின் பேச்சை தமிழக முஸ்லிம்கள் கேட்டதே காரணமாகும். ஆகவே! இனி தமிழக முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தே என்பதால் வக்ப்வாரிய சேர்மன் பதவியையும், சவூதிக்கான இந்தியத் தூதர் பதவியையும்.....................

(நேயர்களே! எமது அடுத்த நிகழ்ச்சி "போங்கடா நீங்களும் உங்க அரசியலும்" என்ற திரைப்படம் என்ற அறிவிப்பு குறுக்கிட்டதால் இறுதிவரியைச்சொல்ல முடியவில்லை ;-)

நன்றி: அதிரை அபூசாலிஹா

நச் கேள்விகள் தொடரும்...