Tuesday, June 30, 2009

Liberhan Commission submits Babri report to PM.

Seventeen years after it was set up, the Liberhan Commission probing the 1992 demolition of Babri Masjid in Ayodhya on Tuesday (June 30) submitted its report to Prime Minister Manmohan Singh.

The Commission, which had got 48 extensions, submitted the report to the Prime Minister by Retd Justice M S Liberhan in presence of Home Minister P Chidambaram.

The contents of the report were not immediately known. Set up within ten days of the demolition of the historic mosque on December six, 1992, which triggered widespread communal violence leading to heavy loss of lives, the panel has become the country's longest serving Commission of Enquiry.

The Commission, mandated to inquire into the circumstances leading to the demolition of the Babri mosque was to submit its report by March 16, 1993 but sought repeated extensions to complete its probe.

The last three month extension was given in March this year.

The probe panel was one of the costliest Commissions having spent nearly Rs eight crore. The bulk of the amount was spent on the salaries and perks of the supporting staff.

During the extended proceedings spread over 400 sittings, the Commission recorded the statements of senior BJP leaders L K Advani, Murli Manohar Joshi and then chief minister of Uttar Pradesh Kalyan Singh.

The panel had completed hearing the last witness in 2005.

Source : Times Now News Channel.

சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டார்கள், அவர்களை விட நாம் பெட்டர் - பி.ஜே

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

கடந்த ஞாயிறு (21.06.09) அன்று இமயம் டி.வியில் சகோ. பி.ஜே அவர்கள் இலண்டன் நேயர்கள் ஆன்லைன் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கருத்து வேறுபாடுகள் பற்றிய கேள்விக்கு:



“கருத்து வேறுபாடுகள் இன்று மட்டுமல்ல, ஸஹாபாக்கள் காலத்திலேயே இருந்தது. அபூபக்கர், உமருக்கு பின் எல்லா குழப்பங்களும் இருந்தன என்றவர் உமருக்கு எதிராக அவர் மகன் கொடுத்த பத்வாக்களே நூற்றுக்கணக்கில் உள்ளன. அபூபக்கர் ஆட்சி மட்டும் தான் சரியாக இருந்தது என்றவர் அதையும் தேடி பார்த்தால் குறை தெரியும் என்றார். மேலும் நாம் அடித்து கொள்வதில்லை. ஸஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டார்கள், வெட்டி கொண்டார்கள், அந்த சமுதாயத்தை விட நம் சமுதாயத்தை அல்லாஹ் பெட்டராக வைத்திருக்கிறான்”


என்று போடு போட்டார். அது போல் அமீர் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பத்து பேர் உள்ள ஜமாத்தே இஸ்லாமி எல்லாம் அதற்கு ஒரு அமீர் வைத்திருப்பான். எல்லா அமைப்புகளும் அமீரின் பேச்சை முழுமையாக பின்பற்றுகின்றன. த.த.ஜ மட்டும் தான் குரான் - ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எனும் தொனியில் பேசினார்.

த.த.ஜ சொந்தங்களே, குரான் ஹதீஸூக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் ஓரே உலகளாவிய இயக்கம் எனும் அண்ணனின் வார்த்தை படி சில கேள்விகள். அதற்கு முன் நினைவூட்டலுக்கு ஒர் வாரம் முன் கேட்ட இரு கேள்விகளை மீண்டும் வைக்கிறேன் (அபஸ வதவல்லா சம்பந்தமாக)

1. குறைஷிகள் அவ்வாறு சகோதரத்துவம் ஒன்றை தவிர இஸ்லாத்தில் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்களா ? அதற்கான ஆதாரம்?

2. நபி (ஸல்) குறைஷிகள், அடிமைகள் இருவரையும் ஒன்றாக நடத்த கூடாது என்று எண்ணிணார்களா ? அதற்கான ஆதாரம்?

புதிய கேள்விகள்

3. ஸஹாபாக்களை விட நாம் பெட்டர் ஏனென்றால் நாம் அடித்து கொள்ளவில்லை என்கிறாரே அப்போது தமுமுக - ததஜ, கடையநல்லூர் த.த.ஜ - ஜாக் விவகாரம் எல்லாம் என்ன? வெட்டி கொல்ல வில்லை என்றார் அதிகாரம் கொடுக்க பெற்ற இதர நாடுகள் பாகிஸ்தான், ஆப்கன், ஈராக்கில் வெட்டி கொள்ளவில்லையா?

4.ஸஹாபாக்களிடத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இருந்தார்களே? இப்னு உமரும் உமரின் ஆட்சியை ஏற்று தானே இருந்தார்? நாம் ஒரு தலைமையின் கீழ் இருக்கிறோமோ

5.அலீ (ரலி) யும் ஆயிஷா (ரலி) யும் சண்டை போட்டு கொண்டாலும் போரில் தோற்று போன பிறகு முஃமின்களின் அன்னையை அலீ (ரலி) கண்ணியத்தோடு அனுப்பினார்களே? அவர்களும் இற்க்கும் வரை அதை நினைத்து வருந்தினார்களே? அந்த பண்பு நம்மிடம் உள்ளதா ?

6. ஸஹாபாக்களை எப்படியாவது கீழாக பேசி எதையும் சாதிக்க போவதில்லை. என் தோழர்களை ஏசாதீர்கள். உஹது அளவு தர்மம் செய்தாலும் அவர்களுக்கு ஈடாக மாட்டீர்கள் எனும் நபிமொழி மறந்து விட்டோமா?

7. அல்லாஹ்வையும் அவன் தூதரின் திருப்தியையும் தவிர அனைத்தையும் அர்ப்பணித்த அபூபக்கர் (ரலி), சுவன நற்செய்தி பெற்ற பிறகும் தன் அமலில் நம்பிக்கை இல்லாமல் முனாபிக் பட்டியலில் தன் பெய்ர் உள்ளதா என கேட்ட உமர்(ரலி), தான் கொடுத்த தர்மத்தின் காரணத்தால் செய்த பாவம் மட்டுமல்ல, செய்யும் பாவத்தையும் அல்லாஹ் மன்னித்து விட்டான் என சொல்லப்பட்ட உஸ்மான் (ரலி), ஹிஜ்ரத்தின் போது உயிரே போய் விடும் அபாயம் இருந்தும் நபிக்கு பதிலாக படுத்த அலீ (ரலி), 100% சொத்தை நபியோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), சொத்து சுகங்களை இழந்து கபனிட கூட துணியின்றி ஷஹீதான முஸைப் (ரலி) இது போன்ற ஸஹாபாக்களை வரலாற்று ஓட்டத்தில் நாம் எங்குமே பார்க்க இயலாது. அப்படியிருக்க அவர்களோடு ஒப்பிடுவோதோ, அல்லது ஒரு சில தவறுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக குறை சொல்வதோ எப்படி சரியாகும்?

த.த.ஜ சொந்தங்களே பதில் சொல்லுங்கள்

அன்பு சகோதரன்
ஃபெரோஸ்கான் (fiverose@gmail.com)

மேலே உள்ள மின்னஞ்சலுக்கு சகோதரர் அபூசுமையா அவர்கள் தான் கேட்ட கேள்விகளுக்கே இன்னும் பதில் அளிக்கவில்லை இதற்கா பதில் சொல்ல போகிறார்கள் என்று அனுப்பிய ஆதங்க பதில் மின்னஞ்சல்.

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...
அன்புச் சகோதரர் 'ஃபெரோஸ்கான்,

உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்!
ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை!

1. கடலூர் முபாஹலா விஷயமாக குர்'ஆனிலிருந்து கேட்ட ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.

2. கடையநல்லூர் பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகைக்கு இழைத்த இடையூறு தொடர்பாக ஆதாரம் கேட்டதற்குப் பதிலில்லை.

3. திருவிதாங்கோட்டில் தௌஹீது பள்ளிவாசல் எங்குள்ளது என்பதற்கு இதுவரை பதிலில்லை.

4. உண்டியல் பணம் தொடர்பாக ஜாக்கின் மீது இட்டுக்கட்டி, காட்டிக்கொடுத்ததற்கு இதுவரை பதிலில்லை.

5. தொழுகையில் தொடை தெரியும் படியான ஆடை உடுத்து தொழுவதற்கான ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.

6. கேரள தௌஹீது ஜமாஅத்தினர்களான முஜாஹிதீன்கள் குறித்து அவதூறு பேசியதற்கு இதுவரை பதிலில்லை.

7. "தடம் புரண்டவர்கள் பட்டியல்" வைத்ததற்கு இதுவரை விளக்கம் இல்லை.

8. குர்'ஆன் மொழிபெயர்ப்பில் நபி(ஸல்) அவர்கள் கூறாத விஷயத்தை நபிகளின் மீது இட்டுக்கட்டி எழுதியதற்கு இதுவரை பதிலில்லை.

9. கத்தரில் சைபுல்லா ஹாஜாவிற்கு தாயி விசா அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்திற்கு இதுவரை பதிலில்லை.

10. சுனாமி கணக்கில் ததஜ சீருடை வாங்கியதை இணைத்தற்கு இதுவரை பதிலில்லை.

11. அன்னிய பெண்ணுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வது தொடர்பாக இதுவரை பதிலில்லை.

இப்படி எண்ணற்றவை அடுக்கிக் கொண்டே போகலாம்.

விவாத மன்னர்களாக பெயர் எடுத்துள்ள ததஜ இயக்கத்திற்குத் தங்களின் செயல்பாடுகள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்து கேட்கப்படுவதற்குப் பதில் இல்லாமல் போவது ஆச்சரியமான விஷயம்.

சகோதரர் அதிரை ஃபாரூக், சகோதரர் அபூ நூறா, சகோதரர் சாதிக், சகோதரர் அமீன், சகோதரர் குமரி முஸ்லிம் என எண்ணற்ற சகோதரர்கள் இணையத்தில் ததஜவுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டும் இருக்கும் நிலையில், தங்கள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட போது அமைதி காப்பதன் அர்த்தம் ஏனோ?

இதே சம்பவம் ததஜ சகோதரர்கள் மற்றவர்கள் மீது கேள்வி கேட்டு, அவர்கள் அமைதியாக இருந்து விட்டால், "பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்ற சொல்லை எத்தனை முறை நாம் இவர்களிடமிருந்து கேட்கவேண்டி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

"பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்பது பூமராங்காக ததஜ சகோதரர்களுக்கே திரும்ப வந்திருப்பது இறைவன் அவர்களின் தலைக்கனம், அகங்காரத்திற்குக் கொடுத்த மிகப் பெரிய அடியாக எடுத்துக் கொள்ளலாம்.

"தூய ஏகத்துவத்துக்குச் சொந்தக்காரர்கள்" என சுயமாக பட்டம் சூட்டிக் கொண்டு பெருமை அடித்துக் கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப தங்களின் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இனிமேலாவது ததஜ சகோதரர்கள் உணர்வார்கள் என்று நம்புவோம்.

என் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அமைதியாகி ஒதுங்கி விடுவதன் மூலம், இவர்கள் அல்லாஹ்வுக்கு அல்ல, ததஜவுக்கே தக்லீது செய்கின்றனர் என்பது அப்பட்டமாக தெளிவாகிறது. அவ்வாறு அல்ல, ததஜவினர் அல்லாஹ்வுக்கு மட்டுமே தக்லீது செய்வோம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை இப்போது ததஜ சகோதரர்களுக்கு இருக்கிறது.

எனவே, சகோதரர் 'ஃபெரோஸ்கானின் கேள்விகளுக்காவது விளக்கத்தோடு வருவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மூலம் : http://tmpolitics.blogspot.com/2009/06/blog-post_24.html

Sunday, June 28, 2009

அவசியம் தேவை புதிய பேருந்து நிலையம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..) அன்புள்ளம் கொண்ட அதிரை எக்ஸ்பிரஸ்க்கு அதிரை வாசகர் எழுதியது. நலம் - அவிடம் உங்கள் நலம் தேவை.இன்ஷா அல்லாஹ் 'புதிய பஸ் நிலையம்" மற்றும் 'புதிய தொழுகை பள்ளியின்;" வெற்றி அதிரை மக்கள் ஒற்றுமையாக குரல் கொடுத்து (அரசுக்கு) செயல் பட்டால் அடைவது உறுதியான வெற்றி என்ற நல்ல சிந்தனையோடு சில கருத்துக்களை சமர்ப்பிக்கிறேன், அல்லாஹ் போதுமானவன்.


தமிழகத்தின் - தஞ்சை மாவட்டத்தின் - பட்டுக்கோட்டை தாலுக்காவின் - அதிராம்பட்டிணம் என்னும் ஊர் தமிழக அரசுக்கு வரியை வாரி வழங்கும் இந்த ஊர் மக்கள் செய்த பாவம் தான் என்ன? என்ற கேள்வியோடு உள்ளே சற்று செல்வோம்.

தமிழகத்திலேயே இந்த வளர்ச்சியடைந்த (Village) அதிராம்பட்டிணம் என்ற ஊரில்தான் பேரூராட்சிக்கு மற்றும் அரசுக்கும் அதிக அளவில் வரி வருவதை யாராலும் மறுக்க முடியாத உண்மை! அரசுக்கும் தெரிந்த உண்மைக்கூட. விளக்கம் :-

I. Savings Bank (so many) :-

அதிராம்பட்டிணத்தில் இயங்கும் வங்கிகளை எடுத்துக் கொள்வோம், நமது ஊரில் பல தரப்பட்ட வங்கிகள் இயங்கிக் கொண்டு உள்ளது. ஒவ்வொரு வங்கிலேயும் நமது ஊர் மக்களின் வைப்பு தொகையை (சேமிப்பை) நம்மால் கணக்கிட முடியுமா? தலை 100-மஅ வேகத்துக்கு சுற்றிவிடும், நம்முடைய பணத்தை வைத்து அரசு சார்ந்த துறைகள் எந்த அளவில் பயன்படுத்தி முன்னேறி செல்கிறது தெரியுமா? நாம் சிந்தனை செய்தது உண்டா? நம்முடைய பணம் மூலம் வங்கிகளுக்கு கிடைக்கும் வருட லாபம் பல 100 கோடிகள், நம் பணத்தின் மூலமாக வளர்ச்சி அடைவது ஏதோ ஒரு கிராமம்.

நாம் அதிரை பேரூராட்சியால் வஞ்சிக்கப்பட்டவர்கள். ஏன் குரல் கொடுக்கக்கூடாது அரசுக்கு, எங்களது ஊர் வங்கியினால் அரசு அடையும் லாபத்தை ஏன் சுட்டிக் காட்டக்கூடாது? தமிழகம் வளர்ச்சி பெற இவ்வளவு வரியை செலுத்தும் எங்கள் ஊருக்கு தேவை பஸ் நிலையம். நாங்கள் செய்த பாவம் என்ன, துரோகம் என்ன, ஏன் எங்களது ஊரில் புதிய பஸ் நிலையம் அவல நிலையாகவே உள்ளது. அதிரை மக்களுக்கு அரசு மற்றும் பேரூராட்சி செய்யும் உதவி இதுதானா?

II.Taxation (Business) :-

தஞ்சை மாவட்டம் - பட்டுக்கோட்டை தாலுக்காவிலேயே அதிகமாக வீட்டு வரி (நிலவரி) செலுத்தும் ஊரில் ஒன்று அதிராம்பட்டிணம் பேரூராட்சி என்று சொன்னால் அது மிகையாகாது! அதுமட்டுமில்லாமல் அதிரையை நான்கு திசையையும் சுற்றி இருக்கும் பசுமை நிறைந்த கிராமங்களில் விளையும் விவசாயத்திற்க்காக நாங்கள் அரசு இடம் இருந்து பெறும் நீர்ப் பாசனத்திற்க்கும் வரி செலுத்துகிறோம். அதிரையில் அதிகமாக இயங்கி வரும் எண்ணற்ற வர்த்தக வியாபாரம், சிறுத்தொழில், சிறப்பு அங்காடிகள், கல்லூரி , எண்ணற்ற பள்ளிகள், தங்க நகை மாளிகைகள், கட்டிட கனரக பொருட்கள், தொழிற்க்கூடங்கள், டாக்டர்கள், வக்கீல்கள், கட்டிட கலை நிபுணர்கள் இவர்கள் மூலமாக அரசுக்கு வரி கனிசமாக கிடைக்கிறது, அரசே ஃ பேரூராட்சி மன்றக்குழுவை சற்று கண் விழித்து எங்கள் (நமது) ஊரின் புதிய பஸ் நிலையம் இல்லாத நிலையை கவனத்தில் கொள்ளவும்.

இப்படி எத்திசையிலும் வளர்ச்சி அடைந்த அதிரை பேரூராட்சிக்கு (அரசுக்கு) வரியை (வருமானத்தை) முறையாக செலுத்தும் அதிரைக்கு தமிழக அரசு உடைய உதவியும் இல்லை இதற்க்காக அதிரை மக்கள் நம்பிக்கையோடு தேர்ந்து எடுத்த அதிரை பேரூராட்சி மன்றக்குழும், வார்டு உறுப்பினர்களும் அரசு இடம் போராட வேண்டும் தேவை அதிரைக்கு பேருந்து நிலையம் என..,


III. Electricity :-

தஞ்சை மாவட்டத்திலேயே மக்கள் நெருக்கடியாக வசித்துவரும் ஊர் அதிராம்பட்டிணம். அதிரையில் 100% அனைத்து வீடுகளிலும் மின்சாரம் இணைப்பு உள்ளது. சொல்லப்போனால் அதிரை என்ற ஊரில் குடிசை முதல் மாளிகை வரை மின்சாரம் இணைப்பு இல்லாத வீடே கிடையாது, இவற்றில் இருந்து அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா?; நமது ஊர் மூலமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளை வளர்ச்சி அடைய எங்கள் வரி பணத்தை எடுத்து செல்லும் அரசே! சற்று எங்கள் ஊரின் புதிய பஸ் நிலையம் உருவாக்க நிதி ஒதுக்கக்கூடாதா? எங்கள் ஊரின் மீது பார்வை படக்கூடாதா? அல்லது இவ்வளவு மின் தொகை செலுத்தும் எங்களுக்கு தொடர்ச்சியாக தடையில்லாமல் மின்சாரம் கொடுக்கப்படுகிறதா? அல்லது பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் மாற்றபடுகிறதா? அல்லது அதிரை மின்சார வாரியம் கூடுதல் ருnவை-ஜ பெற முயற்சி செய்கிறதா?

தமிழக அரசே! நாங்கள் கதறும் ஓசை கேட்கிறதா? இதற்க்காக அரசுமீது அதிரை பேரூராட்சி; தலைவர்களும் மற்றும் அதிரை பேரூராட்சி; வார்டு உறுப்பினர்களும் நமது ஊர்;க்காக போராடக் கூடாதா? நாங்கள் அரசால் ஃ அதிரை பேரூராட்சி; தலைவர்களாலும் ஏமாற்றம் அடைந்தவர்கள். எங்களின் ஆசை கனவாகிய புதிய பஸ் நிலையம் திட்டம் நிறைவேறுமா?

IV. Water :-

தமிழகத்தில் எத்தனை இடங்களில் குடிநீர் பிரச்சனைகள், கஷ்ட்ங்கள், பற்றாக்குறைகள், அல்லாஹ் உதவியால் நமது ஊருக்கு கிடைத்த பாக்கியம் குடிநீர் வசதி வாய்ப்புகள், அல்ஹம்துலில்லாஹ். குடிநீர் இணைப்பும் இல்லாத வீடு உண்டா இந்த அதிரையில் இதன் மூலமாக அதிரை பேரூராட்சிக்கு கிடைக்கும் வரியை சொல்லவேண்டுமா? நாங்கள் எந்த வகையிலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை தவறாமல் முறையாக, சரியாக செலுத்தி வருகிறோம் ஆனால் எங்கள் ஊரின் மேல் அரசுக்கும் பேரூராட்சி மன்றக்குழுக்கும் கருணை இருக்கா? அப்படியென்றால் 'புதிய பஸ் நிலையம் கட்டுமானப்பணிக் குழுவை" நியமிங்கள் இந்த அரசுக்கு (அதிரை பேரூராட்சிக்கு) முறையாக வரி தொகை செலுத்தும் எங்கள் ஊருக்கு.

V. Transportation :-

தமிழக அரசுக்கு வருமான வரியை வாரி வழங்கும் அதிரையில்,சென்னைக்கு நாள் ஒன்றுக்கு இயங்கிய புகைவண்டியின் எண்ணிக்கை மூன்று வருமானம் இல்லாமலேயா இயக்கியது அரசு. நாள் ஒன்றுக்கு எங்கள் ஊருக்கு பல 100 அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து இயங்கி கொண்டு உள்ளது இவைகளின் மூலமாக அரசுக்கு கிடைக்கும் வருவாய் நாங்கள் சொல்லவேண்டுமா? 24-hசள-ம் பஸ் மூலமாக அதிரைக்கு வருகை தரும் பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிலாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இவர்களின் எண்ணிக்கையோ பல ஆயிரம் மக்கள் அலைமோதும் எங்கள் ஊரில் முறையான பஸ் நிலையம் இல்லை, பயணிகள் சற்று ஓய்வு எடுக்கக்கூட நிழற்க்குடை உண்டா என்றாலும் இல்லை.

இத்தனை பேருந்துகள் இயங்கி கொண்டு இருக்கும் அதிராம்பட்டிணம் பேரூராட்சியில் பஸ் நிலையம் இல்லாதலால் சாலை விபத்தை தடுக்க முடியவில்லை. தமிழகத்தின் நீண்ட கனவுகளில் ஒன்று 'சேது சமுத்திரத் திட்டம்" தஞ்சை மாவட்டத்தின் நீண்ட் கடற்க்கரை சாலைகளை கடந்து செல்லும் எங்கள் ஊரின் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தின் அகன்ற போக்கு வரத்து சாலை செல்கிறது, அதுமட்டுமில்லாமல் பல 100 ஆட்டோக்கள், இரு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் இவற்றின் மூலமாக சாலை வரி மற்றும் ஆர்.டி.ஓ வருவாய் என அதிரை மக்கள் செலுத்தும் தொகை? இவ்வகை வாகனங்களின் போக்குவரத்தால் நாள் ஒன்றுக்கு பல 1000 லிட்டர் எரிப்பொருள் விற்பனைகள் இவற்றின் மூலமாக அரசுக்கு கிடைக்கும் வருவாய்? இவ்வளவு (வருவாயை தரும்) சிறப்பை அடைந்து இருக்கும் அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்கு அரசின் பார்வை எப்பொழுதுப்படும்? அதிராம்பட்டிணம் பேரூராட்சியின் நிலையை அரசுக்கு எடுத்து செல்வது யார்? தேவை எங்கள் ஊர் அதிராம்பட்டிணம் பேரூராட்சியக்கு மாற்றம்!!!

VI. Telephone & Mobile :-

அதிராம்பட்டிணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் முதல் தொலைபேசி இல்லாத வீடு உண்டா? எந்த வளர்ச்சியடைந்த ஊரிலும் (ஊவைல) இல்லாத அளவிற்க்கு எங்களது ஊரில் அமோக வளர்ச்சி இதனால் அரசுக்கு கிடைக்கும் (வரி பணம்) வருமானம் எவ்வளவு நம்மால் கணக்கிட முடியுமா? இப்படி அரசுக்கு வரியை வாரி வழங்கும் எங்களது ஊருக்கு அரசு செய்யும் நன்றி கடன் பஸ் நிலையம் தேவையில்லை.

VII. Gas Cylinder :-

புகை மூட்டத்தால் கண்ணீரையும், மூச்சு காற்றையும் தொலைத்தவர்கள் ஏராளமானவர்கள் அவர்களுக்கு கிடைத்தது இவ்வரிய சாதனம் மூலம் விடுதலை. சமையல் அறையே கதி என வாழ்ந்த தாய்மார்களுக்கு ளுஉநைnஉந கொடுத்த பரிசு கேஸ் சிலிண்டர் என்ற அரிய சாதனம். இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வாழ்ந்து வரும் மக்களின் மத்தியில் பிரசித்தி பெற்றது 'சமையல் கேஸ் இணைப்பு". அதிராம்பட்டிணத்தில் சமையல் கேஸ் இணைப்பு இல்லாத வீடுகள் என பார்த்தால் விரல் விட்டு சுலபமாக எண்ணிவிடலாம். இதன் மூலமாக அரசுக்கு கிடைக்கும் வருமானம் (வரி) எவ்வளவு தெரியுமா சுவாச காற்று நின்றுவிடும் நம்மால் கணக்கிட முடியாது. எங்களிடம் (அதிரை மக்களிடம்) இருந்து பல வழிகளிலும் கனிசமான வருமான வரியை ஈட்டிக் கொள்ளும் அரசே ஃ பேரூராட்சியை நிச்சியம் தேவை எங்கள் ஊருக்கு புதிய பஸ் நிலையம்.



அதிராம்பட்டிணம் (மக்கள்) பேரூராட்சியினால் பல கோடி வரி வருவாயை அடையும் தமிழக அரசுக்கு, அதிராம்பட்டிணம் பேரூராட்சி எடுத்துச் செல்லுமா அதிரைக்கு இன்றியமையாதது போக்குவரத்து பேருந்து நிலையம் அவசியம் என்பதை அல்லது முயற்சி செய்யுமா?!

இப்படிக்கு

அதிராம்பட்டிணம் முன்னேற்றம் அடைய விருப்பும் வாசகர் அக்பர் அலி.

(குறிப்பு : கல்விக் கூடங்களில் கட்டாய வசூல் வேட்டை பார்த்து இருக்கலாம்.)

புகைப்படங்கள் :http://adiraiguidance.blogspot.com

Thursday, June 25, 2009

அதிரையில் கந்தூரி எனும் தேர் திருவிழா

அதிரையில் நேற்று மர்ஹூம் ஷெய்கு நஸ்ருதீன் அவுலியா அவர்களின் பெயரில் வருடாவருடம் நடைபெறும் கந்தூரி எனும் தேர் திருவிழா படு விமரிசையாக தொடங்கியது.

இவ்வருடம் கீழ்புறத்து வாசிகள் திருவிழாவை நடத்துகின்றனர். நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதில் குறிப்பாக இருநூறுக்கும் மேல் 15 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் குத்துப்பாட்டுகளுக்கு டான்ஸ் ஆடியவர்களாக கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர்களில் அநேகர் under-age ஆகையால் சென்ற ஆண்டுகளின் போது நடைபெற்றதுபோல், குத்துப்பாட்டுகளின் போது தண்ணி போட்டு, பெண்கள் முன்னிலையில் 'வேட்டியை வளிச்சிக்காட்டுதல்' போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் இல்லை.

வாழை மரத்தினாலான பள்ளக்கில் பச்சை துணிபோர்த்தப்பட்ட நிலையில் அவுலியா (?) வீதி உலா வந்தார்.

இவ்வருட உற்சவத்திற்கு முத்துப்பேட்டை தர்கா வெறியர் ஒருவர் இரண்டு லட்ச ரூபாயும், நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் ஆளுங்கட்சியை சார்ந்த இருவர் தலா ஐம்பாயிரம் நன்கொடை கொடுத்திருப்பதாக தகவல்.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் சினிமா மற்றும் குத்து நடனங்கள் நடைபெற இருக்கின்றன. கடைசி நாளின் போது சந்தனகூடு எனும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்த பத்துநாட்களின்போதும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பெண்கள் திருவிழாவிற்கு சென்று வழிபட்டு வருவர்.

நமது கேள்வி,
* வசூலுக்கு வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருப்பதால் உள்ளூரில் ஷிர்க் பற்றிய ஏகத்துவ பிரச்சாரங்கள் வேண்டியதில்லை என்று 'தவ்கீது' வாதிகள் நினைக்கிறார்களோ என்னவோ.

* பச்சிளம் குழந்தைகள் அநேகர் குத்துப்பாட்டுடன் நடனமாடுவதை காணும்போது, நமதூர் முஸ்லிம் பள்ளிகளின் இதற்கான பங்களிப்பு என்ன? இளம் பிஞ்சு உள்ளங்களில், ஷிர்க் என்றால் என்ன என்பது பற்றி இங்குள்ள பள்ளிகளின் தீனியாத் வகுப்புகளில் போதிக்கப்படுகின்றனவா? போன்ற கேள்விகள் நம்முன் வந்து செல்கிறது.

Wednesday, June 24, 2009

6-ம் வகுப்பில் சேரும் மாணவர் விவரத்தை கவனத்துடன் சேர்க்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழில் தவறுகள் ஏற்படாதிருக்க பள்ளிக் கல்வித் துறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக துவக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்துவிட்டு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களின் விவரங்களை கவனத்துடன் பதிவு செய்யும்படி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து செல்லும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, சாதி ஆகிய விவரங்கள் தவறாகப் பதியப்பட்டுள்ளதாகப் பல்வேறு புகார்கள் வந்தன.

இந்தப் புகார்களை பரிசீலிக்கும்போது, துவக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் பதிவுத்தாள்களில் உள்ள விவரங்களுக்கு மாறாக, 6-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கைப் பதிவேடுகளில் தவறு இருப்பது தெரியவந்தது.

இதில் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் மற்றும் இனிஷியல், சாதி- இனம் ஆகிய விவரங்கள் தவறாக இருப்பது தெரியவந்தது.

இந்த விவரங்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு தவறாக மதிப்பெண் பட்டியலில் பதிவாகி இருப்பதும், 10-ம் வகுப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலிலும் தவறாகப் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.

இந்த தவறுகளைக் களைய சில மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர்.

சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது:

இடைநிலைக் கல்வி விதி எண் 5-ன்படி இடைநிலைக் கல்வியைப் பயின்று பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு பள்ளி மற்றும் மதிப்பெண் சான்றிதழில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை:

மேலும், 6-ம் வகுப்பில் தவறாக விவரங்களைப் பதிவு செய்வதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது தெரியவந்தது.

இத்துடன் மாணவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தும், அரசால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது, மாணவர்களின் விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்ய அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பெற்றோர் கவனிக்க...

பள்ளிச் சான்றிதழ்களில் தவறு நேராமல் இருக்க துவக்கப் பள்ளி முடித்து 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களின் விவரங்களை கவனத்துடன் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இடைநிலைக் கல்வி விதி எண் 5-ன் படி பள்ளிச் சான்றிதழில் எவ்வித மாறுதல் செய்ய முடியாது என்று அரசாணை உள்ளது.

எனவே, தங்களின் குழந்தைகளை 6-ம் வகுப்பில் சேர்க்கும் பெற்றோர் கவனத்துடன் விவரங்களைத் தர வேண்டும்.

இல்லையெனில் சான்றிதழில் ஏற்படும் தவறுகளை மாற்ற முடியாது.

 
 
 
--
என்றும் மாறா அன்புடன்...

குவைத்திலிருந்து...

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Monday, June 22, 2009

அதிரையின் வசூல் ராஜாக்கள்!!!

நமதூர் கல்விக்கூடங்களின் வசூல்வேட்டை குறித்து அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர் அக்பர் அலி எழுதி அனுப்பிய ஆக்கம்.




வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும்

- ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை

திண்டுக்கல்: வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும், என ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை தெரிவித்தார். வட்டியில்லா இஸ்லாமிய வங்கி ஒருங்கிணைப்பு குழுவின் 2வது மண்டல மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.

கண்காட்சியை திறந்து வைத்து நீதிபதி அக்பர் அலி பேசியதாவது: வட்டியில்லாமல் கடன் கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட்டேன். சில வெளிநாடுகளில் இத்திட்டம் நல்லமுறையில் செயல்படுகிறது.விரைவில் இந்தியாவிலும் செயல்பாட்டிற்கு வரும். வட்டி வசூலிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஒரு நீதிபதியாக இருப்பதால் சாதாரண மக்களை விட அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. வரும் வழக்குகளை விசாரிக்கும் போது கடன்பட்டவர்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டேன். ஒரு காசுகூட வட்டியை குறைக்க மாட்டேன் என கல் நெஞ்சத்துடன் பேசுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதிக வட்டி வாங்க கூடாது என்ற நடைமுறை சட்டத்தில் உள்ளது.

நீதிபதியாக எங்களுக்கு சில அதிகாரங்களை அரசு கொடுத்துள்ளது. அதில், நாங்கள் நியாயத்தின் அடிப்படையில் வட்டியை குறைத்து நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்க முடியும். கந்துவட்டி ஒழிப்பு தண்டனை சட்டமும் நடைமுறையில் உள்ளது. நிதி நிறுவனங்கள் தரும் அதிக வட்டியை நம்பி பெரும் பணத்தை இழந்தவர்களும் உள்ளனர். இப்படி பணத்தை இழந்தவர்களுக்கு வசூலித்து கொடுக்க தனி கோர்ட் உள்ளது.

இது தவிர, வட்டி தொல்லையில் இருந்து மக்களை காக்க நிறைய குற்றவியல் நடைமுறை சட்டங்களும் உள்ளன. இவ்வளவு சட்டங்களை தாண்டியும் வட்டி கொடுமைகள் செய்கிறது. சில மனிதர்களுக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இறைவன் கொடுத்தாலும், மனிதர்கள் தங்களுக்கு கிடைத்ததை சமமாக பங்கிட வேண்டும். தன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கணக்கு பார்ப்பதை விட,இருப்பதை மற்றவர்களுடன் பங்கிடும் நல்ல எண்ணம் வேண்டும். செலவினங்களை கூட தர்மமாக செய்ய வேண்டும். வட்டி வாங்க வேண்டாம் என்ற இஸ்லாம் சமூகத்தின் உயர்ந்த அறிவுரையை எல்லோரும் வரவேற்கின்றனர். "கடன் வாங்கியவர்கள் திரும்ப கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை, விட்டு விடு' என்ற இஸ்லாம் உபதேசம் எனக்கு மிகவும் பிடித்தது. இவ்வாறு பேசினார்.

நன்றி: தினமலர்

Thursday, June 18, 2009

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க!

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க!
இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகத்தில் கேட்கச் செய்ய ஆவன செய்து தருமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தொடர்புகொண்டு கோரிக்கை முன்வைக்குமாறு பொதுமக்களுக்கு அதிரை எக்ஸ்ப்ரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து,

அறிக்கை பின்வருமாறு:-

அன்பார்ந்த பொதுமக்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! இன்று நம் வீடுகளையும், நம் சிந்தனையையும் விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியின் படையெடுப்பு நடப்பதற்கு முந்தைய காலகட்டமது.
அதாவது 1980களின் தொடக்க வருடங்கள் வரை நம் இல்லங்களையும், இதயங்களையும் நிறைத்திருந்தது. இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை.
இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் முஸ்லிம் நிகழ்ச்சியில் அல்குர்ஆன் முரத்தல், மணிமொழிகள், குத்பா உரைகள், அஸ்மாஉல் ஹுஸ்னா, இஸ்லாமிய கீதங்கள், அறிவுக்களஞ்சியம், வரலாற்றில் ஓர் குறிப்பேடு, நாடகம், மாதர் மஜ்லிஸ்... என இன்னபிற சீரிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி நம் சிந்தையை சீர்படுத்தியது இலங்கை வானொலி.

அத்துடன் நில்லாது, நோன்பு தொடக்கம், இரு பெருநாட்கள் பற்றிய பிறை அறிவிப்புகளுக்கு நாம் முற்றிலும் இலங்கை வானொலியைச் சார்ந்திருந்ததை யாராலும் மறக்கவியலாது. ரமழானில் ஸஹர் நேரங்களில் நள்ளிரவு 3 மணி முதல் ஸுப்ஹு பாங்கு சொல்லும் வரை சீரிய மார்க்கக் கருத்துக்களை ஸஹர் உணவோடு சேர்த்து நமக்கு ஊட்டிய இலங்கை வானொலிக்கு நாம் பல வகைகளில் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து - குறிப்பாக அதிராம்பட்டினம், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளின் மார்க்கப் பெருந்தகைகள் இலங்கை தீவிற்கு வருகை புரியும்போதெல்லாம் அவர்களை தமது ஒலிப்பதிவுக் கூடத்திற்கு அழைத்து, அந்த உலமாப் பெருமக்களின் மார்க்க அறவுரைகளை இந்திய - இலங்கையின் வான்பரப்புகளில் தவழ விட்ட இலங்கை வானொலியின் தஃவா பரப்புரை பாரியது.

இனக்கலவரமும், தொலைக்காட்சி வருகையும்
1983ஆம் ஆண்டு, இலங்கை தீவில் வெடித்துக் கிளம்பிய இனக்கலவரம்ளூ இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை தமிழகத்திற்குக் கிட்டி வந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. இலங்கை வானொலியின் தமிழகத்திற்கான ஒலிபரப்புக் கோபுரங்கள் அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தகர்க்கப்பட்டுவிட்டது. இலங்கை வானொலி இல்லாமற்போன வெற்றிடத்தை இங்குள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள் வேக
வேகமாக வந்து நிரப்பிவிட்டன.

தகவல் தொழில்நுட்பப் பாய்ச்சலில், தொலைக்காட்சியின் இருப்பைத் தவிர்க்க முடியாதெனினும், அதனால் நம் சமூக, கூட்டு, மார்க்க வாழ்வில் ஏற்பட்ட உடைவுகளையும், சிதறல்களையும் மறுக்கவியலாது. அன்று மஃரிபைத் தொழுது, அதே முஸல்லாவில் இஷாவையும் நிறைவு செய்த நம் பெண்மணிகள், இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை துவங்கும் வரையிலும் முஸல்லாவிலேயே இபாதத்துகளைத்
தொடர்ந்திருந்தனர்.

ஆனால் இன்றோ தொலைக்காட்சியின் குறு - நெடுந்தொடர்கள் தங்களின் தொழுகைகளையும், நேரத்தையும், சிந்தனையையும், சிரத்தையையும் தொலைத்தவர்களாக நாம் மாறிவிட்டோம். ஒருதலைக்காதல், பொருந்தாக் காதல், கூடாநட்பு, சதிபதி துரோகம், நுகர்வியம் என தாறுமாறாகத் தாக்குதல்களைத் தொடுத்து, ஒழுக்கமான வாழ்வியல் ஒழுங்குகளை இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் குலைத்துப் போட்டுவிட்டன.
அத்துடன், வீடு வரை தேடி வந்த மார்க்க வழிகாட்டுதல்களுக்கும் இன்று பெரும் வறட்சி ஏற்பட்டு விட்டது.

இன்று நாம் காணும் - கேள்வியுறும் - அனுபவிக்கும் தலாக், ஓடிப்போதல்... என்பன போன்ற ஒழுக்கக் கேடுகளுக்கான வித்துக்களைத் தூவியதில் தொலைக்காட்சிக்கு பெரும்பங்குண்டு.
இலங்கையின் போர் ஓய்வும், வானொலியின் மீள்வருகையும்
இன்று இலங்கையில் இனப்போர் ஓய்ந்து அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், இலங்கை வானொலி கடந்த ஒரு வருட காலமாக ஷஷகொழும்பு சர்வதேச ஒலிபரப்பைஷஷ காலை 7 மணி முதல் நண்பகல் வரை தமிழகத்திற்கென ஒலிபரப்பி வருகிறது. அந்தத் தமிழ்ச்சேவையில் திரைப்படப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பாகின்றன.. ஆனால் இந்த ஒலிபரப்பிற்கும் தமிழகத்தில் நிறைய முஸ்லிமல்லாத வானொலி நேயர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இலங்கை வானொலிக்கு நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும். காலை 8 முதல் 10.30 மணிளூ இரவு 7:30 முதல் 9 மணி வரை ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை தமிழக மக்களும் கேட்கும்படியாக இலங்கை வானொலி தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென நாம் கோர வேண்டும்.

இறையருளால் இவ்வொலிபரப்புச் சேவை நம் பகுதிக்கு விரைவில் கிடைக்கும்பட்சத்தில், ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கொண்ட தொடர்புகளுக்காக இலங்கை முகவரிக்குப் பகரமாக இந்தியாவில், சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரக முகவரிக்கு தரைவழி அஞ்சல் அனுப்ப வசதி செய்து தருமாரும் நாம் கோர வேண்டும்.

இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவைகளினால் நமக்குக் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த பயனை நாம் பார்ப்போம். அப்பயன்களுடன் கூடவே இன்னும் சில பயன்கள் உண்டு. அவை என்னவெனில்,
(1) இலங்கை வானொலியின் தமிழ் தேசிய ஒலிபரப்பை நிறைய முஸ்லிமல்லாத அன்பர்கள் கேட்கின்றனர். அதே நேயர்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகளையும் கேட்பதினூடாக தஃவா எனப்படும் மார்க்கப் பரப்புரைப் பணி மிக எளிதாக நடந்தேறி விடும்.

(2) தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு நாம் தனியே நேரம் ஒதுக்கி, வேலையை ஒதுக்கி, அப்பெட்டி முன்னே முடங்கிக் கிடக்க வேண்டும். ஆனால் வானொலிக்கோ அத்தகைய சிரமம் ஒன்றுமில்லை. நமது அன்றாடப் பணிகளைச் செய்துகொண்டே மார்க்க நெறி உரைகளை நம் வீட்டிலுள்ள அனைவருமே கேட்க முடியும்.

இதற்காக நாம் செய்ய வேண்டியது...
இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை மூலம் நாம் பெற்ற பலன்களை விவரித்து, நன்றி தெரிவித்து, அந்த ஒலிபரப்பின் தற்காலத் தேவை குறித்து சுருக்கமாகவோ, விரிவாகவோ கீழ்க்கண்ட முகவரிகளுக்கு மின்னஞ்சல், தரைவழி அஞ்சல் (ளரசகயஉந அயடை) மூலம் கோரிக்கைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் அனுப்பலாம். கோரிக்கைகளை அனுப்பியவர்களும், அதற்கான மறுமொழி கிடைக்கப் பெற்றவர்களும் மறவாமல் நமது
காயல் இணையதளத்திற்கு அதன் படியை (நகலை) மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

முகவரிகள்:
(1) Deputy High Commissioner,
Deputy High Commission of Srilanka,
196, T.T.K. Road,
Alwarpet,
Chennai – 600 018
Phone: 00-91-44-24987896, 24987612
Email:
sldehico@md3.vsnl.net.in
sldehico@hathway.com

(2)
The Director,
Muslim Services,
SLBC, Torrindton Square,
Post Box No.: 574,
Colombo – 07,

Srilanka.
Mobile : 00-94-777304033

Office Phone Numbers:
00-94-11-2692529, 2675976

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 16, 2009

மறுப்பு !!!

அஸ்ஸலாமு அலைக்கும்... வாசர்களுக்கு அதிரைபுதியவனின் மடல்... இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஆடியோ பதிவை அதிரைஎக்ஸ்பிரசில் வெளியிட்டேன் காரணம் நம் சமுதாய பெண்பிள்ளைமார்கள் வழிகேட்டில் இருப்பதாக சொல்லி ஒரு அதிரை நபர் என்ன்னிடம் தம்முடைய செல்லிடபெசியில் பதிவு செய்து வைத்துள்ளதை போட்டு காண்பித்து இதை கண்டிப்பாக அதிரைஎக்ஸ்பிரசில் பதிவேற்ற வேண்டும் என கூறியதின் காரணமாகத்தான் இதை பதிவேற்றினேன் அப்படியிருக்க இதை நான் தான் பேசினேன் என்று புலம்பும் சில அப்பாவிகளுக்கு விறைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

அதிரை எக்ஸ்ப்ரஸின் மீதான தொடர் தாக்குதல்கள்

வழக்கம்போல் மீண்டும் அதிரை எக்ஸ்ப்ரஸைக் குற்றஞ்சாட்டி கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே பலமுறை சொன்னதுபோல் தன்னார்வலர் சிலரால் நடத்தப்படும் இலவச தளம். குக்கிராமங்களுக்கெல்லாம் இணைய தளபக்கங்கள் இருக்கும்போது பல நகரங்களுக்கு முன்னோடியாக இருந்த அதிரை.காம் செயல்படாமலிந்தபோது வெற்றிடத்தை நிரப்பத் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர் மற்றும் பங்களிப்பாளர்களின் கூட்டுமுயற்சியால் இதுநாள்வரை தொடர்ந்து செயல் பட்டு வருகிறது.

நமதூரின் அவலங்கள், உள்ளூர் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் எழுத்து ஆர்வலர்களை ஊக்குவிக்கவும் எளியமுறையில் அனைவரும் பங்களிக்கும் விதமாக அதிரை எக்ஸ்ப்ரஸ் செயல்பட்டு வருகிறது என்று நம்புகிறோம். இதில் வெளியான பலகட்டுரைகளும் செய்திகளும் நமதூர் மக்களிடம் பரவலான அதிர்வுகளை ஏற்படுத்தி பொதுக்கருத்தாக்கம் உண்டாக்கியது.

மருத்துவ உதவி, கல்வி உதவி மற்றும் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், பஞ்சாயத்து போர்டின் அராஜகங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி நமதூரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறாக பொதுநல ஆர்வலர்களால் உண்டாக்கி, ஆர்வமுள்ளவர்களால் கட்டுரைகள், செய்திகள் பதியப்பட்டு அதிரை மக்களின் இணைய குரலாகச் செயல்படும் அதிரை எக்ஸ்ப்ரஸ் முன்பு சில விசமிகளால் முடக்கப்பட்டது. இதில் வெளியான கருத்துக்கள் அவர்களின் நலன்களுக்கு அல்லது சொந்த விருப்பு/வெருப்புகளுக்கு எதிரானதாக இருப்பதாக கருதப்பட்டதே காரணம். அதிரை எக்ஸ்ப்ரஸ் முடிந்தவரை தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய பிறகு இயக்கச் சார்புடையது, சிலருக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் தளம் போன்ற அவதூறுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

சமீபத்திய மக்களவைத் தேர்தலின்போது, அதிரை எக்ஸ்ப்ரஸ் பதிவுகளுக்கு வந்தப் பின்னூட்டங்களும், அரட்டை அரங்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களும் நாகரிக எல்லையைவிட்டு விலகி இருந்தன. பதிவுகளுக்கு அந்தந்த பதிவரும், பின்னூட்டங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களும் பொறுப்பாக இருக்கும்போது அதிரை எக்ஸ்ப்ரஸைக் குற்றஞ்சொல்வது நியாயமில்லை.

பின்னூட்டங்களை மட்டுறுத்தி நேர்/எதிர் கருத்துக்களைத் தடுப்பது ஒன்றும் பெரியவிசயமில்லை என்றாலும், இதனால் அவசியமான கருத்துக்களும் சேர்ந்து தடுக்கப்படும் வாய்[ப்புள்ளதாலும், கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலும் கருத்திடுவர்களின் பொறுப்பாக்கி எல்லாக் கருத்துக்களும் அனுமதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பதிவிற்கும் வரும் கருத்துக்களை ஆய்ந்து,தெரிவு செய்து அனுமதிக்குமளவு அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவது சாத்தியமற்றது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் செல்லிடபேசியில் நமதூர் பெண்ணின் உரையாடலை சகபதிவர் வலையேற்றி இருந்தார். சொல்லவந்த விசயம் அவசியமானது என்றாலும் அதற்கான ஆடியோ ஆதாரம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துவத்ற்குப் பதில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும் என்பதால் பதிவரின் அனுமதி இல்லாமல் நீக்கினோம்.

பதிவர்கள் அருமையான ஆக்கங்களைக் கொடுத்து வந்தாலும் இதுபோன்ற சிலபதிவுகள் தேவையற்ற சர்ச்சை உண்டாக்கும் என்பதை சம்பந்தப்பட்டப் பதிவர்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டுகிறோம். பதிவுகள் இல்லாத நேரத்தில் அரட்டை அரங்கம் ஒருவரிச் செய்திகளால், கருத்துக்களால் தளம் உயிரோட்டமாக இருக்க உதவுகிறது. இதையும்கூட சிலவிசமிகள் முடக்க முயன்றனர் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

இத்தகைய தொடர் தாக்குதல்கள் மற்றும் முடக்கும் முயற்சிகளால் அதிரை எக்ஸ்ப்ரஸ் பங்களிப்பாளர்களுக்கு அனாவசிய மனஉளைச்சல் ஏற்படுகிறது எனினும் இததகைய மறைமுகத் தாக்குதல்களை தொடர்ந்து கண்காணித்து, விசமிகளை அம்பலப்படுத்த கவனத்தை செலுத்த நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றபடி, அல்அமீன் பள்ளி விவகாரம், இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள், கல்விக் கூடங்களின் கட்டாய வசூல்கள், இயக்கவாதிகள் ஆகியவை குறித்த உள்ளூர் பிரச்சினைகளை அன்பர்கள் அனுப்பித் தந்தால் பிரசுரிக்கலாம்.

அன்புடன்,

அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுமம்

Thursday, June 11, 2009

மரண அறிவிப்பு

நடுத்தெருவை சார்ந்த மரியம்மா சாகுல் ஹமீத் அவர்களின் மனைவியும். சாதிக் தவ்பிக் இவர்களின் தாயரும் அஹமது ஹாஜா அவர்களின் மாமியாருமான சல்மாஅம்மாள் அவர்கள் இன்று மதியம் 2௨மணியளவில் காலமாகிவிட்டார்கள் இன்னா... அன்னாரின் ஜனாசா அவர்களது நடுத்தெரு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.( ஜனஷாவின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் ) இவர் சமிப காலமாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதியுற்றார். இவர் நல்ல பல சமுதாயக்காரியங்களில் ஈடுபட்டும் ஏழைகுமர் திருமணத்திற்க்கும் உதவி செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அல்லாஹ் இவருக்கு ஆகிரத்து நல் வாழ்க்கைக்கு துஆசெய்ய வேண்டுகிறோம் .

Monday, June 8, 2009

அல்-அமீன் பள்ளிப்பிரச்சினைக்கு எப்போது தீர்வு?

நமதூர் மெயின் ரோட்டில் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்க மேற்பார்வையில் அல்அமீன் பள்ளிவாசலுக்கு நிலம் வாங்கப்பட்டு, தொழுவதற்காகக் கீற்றுக் கூரையுடன் அல்-அமீன் பள்ளி செயல்பட்டு வருகிறது.

பேரூந்து நிலையத்தைச் சுற்றியிருக்கும் கடைகளிலிருந்து பஞ்சாயத்துப் போர்டுக்குக் கிடைக்கும் வருமானங்கள், அல்-அமீன் பள்ளியின்  நுழைவு வாயிலால் தடைபடக்கூடும் என்ற காழ்ப்புணர்வில், பஞ்சாயத்துப் போர்டு துணைச் சேர்மனும், திமுக நகரத்தலைவருமான இராம.குணசேகரனின் தூண்டுதல்பேரில் அல்-அமீன் பள்ளியின் கட்டுமானப் பணிகள் தடைபட்டதுடன், பேருந்து நிலையம் வழியாக பள்ளிவாசலுக்காக ஒதுக்கப்பட்ட மெயின் கேட்டும் பட்டுக்கோட்டை தாசில்தாரால் பூட்டிச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் அருகே கழிப்பிடத்தைக் கட்டி, எதிர்காலத்தில் நுழைவுவாயில் திறப்பதை மேலும் சிக்கலாக்கியதுடன், பள்ளியருகே நிரந்தரக் காவல் நிலையக் கொட்டகையையும் ஏற்படுத்தி தொழுகையாளிகளுக்கு தேவையற்ற அசவ்கரியம் ஏற்படக்காரணமாக இருந்தவர்கள், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஓட்டுக்கேட்டு வந்தபோது, இப்பிரச்சினை தேர்தல் முடிந்தபிறகு தீர்த்து வைக்கப்படும் என்று உறுதிமொழிக் கடிதம் வழங்கப்பட்டது. தற்போது வெற்றிபெற்றுள்ள திரு.பழனி மாணிக்கம் MP யும் இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக உறுதிமொழியளித்திருந்தார்.

திமுகவிற்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தின்படி செயல்பட்ட அதிரை ததஜ அமைப்பினர், தற்போது தனியாக தவ்ஹீதுபள்ளி என்ற புதிய தனிப்பள்ளியை கட்டமைப்பதில் ஆர்வமாக இருப்பதால், அல்-அமீன் பள்ளிவாசல் பிரச்சினையில் முன்னைப்போல் ஆர்வமாகச் செயல்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.அல்-அமீன் பள்ளிப்பிரச்சினைக்குத் தேர்தல் முடிந்து பேசித்தீர்வு காணலாம் என்று உறுதிமொழிக் கடிதம் வழங்கிய திமுக நகரத்தலைவர், இராம.குணசேகரன் கொலை வழக்கு சம்பந்தபமாகத் போலீசாரால் தேடப்பட்டு வருவதாக சிலநாட்கள் முன்பு செய்திகள் வெளியாகின.

இச்சூழலில் அல்-அமீன் பள்ளிவாசலின் மேற்கூரை பழுதடைந்துள்ளதால் அதைச் சீர்செய்ய நிதி மற்றும் தென்னைமட்டையாக பொருளுதவிகோரிய கோரிக்கை வெளியானது. இத்தகைய மராமத்துப் பணிகளை கோடையில் செய்வதே புத்திசாலித்தனம் என்பதால் உடனடியாக இதுகுறித்து ஊர்மக்கள் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

இன்னும் ஓரிரு மாதத்தில் ரமலான் நோன்பு நெருங்கி வருவதால் அதற்குள்ளாக அல்-அமீன் பள்ளிவாசல் சம்பதப்பட்டப் பிரச்சினைகளுக்கு ஊர்மக்களிடம் வாக்களித்தபடி திமுக மற்றும் ததஜவினர் உடனடித் தீர்வுக்கு சம்பந்தப்பட்டவர்களை அணுகி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Wednesday, June 3, 2009

பிறருடைய குறைகளை ஆராயாதீர்கள்

அளவற்ற அருளாலன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"எவருடைய எடை நன்மையைக் கொன்டு கனத்ததோ அவர் சொர்க்கம் புகுவார்.மேலும், எவருடைய எடை தீமையைக் கொன்டு கனத்ததோ அவர் புகும் இடம் ஹாவியா(நரகம்) தான்"

அன்புச் சகோதரர்களே, தயவு செய்து ஒருவரை ஒருவர் சாடுவதையும், குற்றம் சுமத்துவதையும் நிருத்திவிட்டு ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்துக் கொன்டால், அது நமக்கும்,நாம் சார்ந்து இருக்கிற சமுதாயத்துக்கும் இன்னும் மனித இனத்துக்குமே நன்மை பயக்கும், இன்ஷா அல்லாஹ்.

எதையும் நடு நிலையோடு அனுக பழகிக்கொள்ளுங்கள். யார் குற்றம் செய்யவில்லை இவ்உலகில்? நாம் அனைவரும் குற்றமற்றவர்களா? இல்லையெனில், அல்லாஹ்வும், நாமும் மட்டுமே அறிந்த நம்முடைய, நம் மனைவி, மக்கள், குடும்பத்தினர், நன்பர்கள் ஆகியோருடைய குறை, குற்றஙளை அல்லாஹ்வை சாட்சியாக்கி ஒழிவு மறைவின்றி வெளியிட தயாராக இருக்கிரோமா? அல்லது, பிறர் அதை வெளியிட்டால் நாம் தான் விரும்புவோமா? யாரும் வெளியிட தயாராகவும் மாட்டோம்! விரும்பவும் மாட்டோம்!.

"ஒரு முஸ்லிம் மற்ற ஒரு முஸ்லிமுக்கு சகோதரன்" "ஒரு முஸ்லிம் தான் விரும்பாததை தன் சகோதரனுக்கும் விரும்ப மாட்டான்" என்பன போன்ற இஸ்லாத்தின் அமுத மொழிகளை மறந்ததன் காரனமாக "பிறருடைய குறைகளை ஆராயாதீர்கள்" என்று இஸ்லாம் தடுத்திருந்தும் துருவித் துருவி ஆராய்ந்தோம், அதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி மனம் மகிழ்ந்ததன் விளைவாக பகை வளர்த்தோம்! ஒருங்கினைந்து ஒரு பெரும் சமுதாயமாக வாழ வேண்டிய நாம் கூறு போடப்பட்டு பல குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பெயரை வைத்துக்கொன்டு, ஏதோ சாதிது வங்கிய பட்டம் போல!? நான் அந்தக் குழுவைச் சார்ந்தவன், இந்தக் குழுவைச் சார்ந்தவன் என்று சந்தோசப் பட்டுக்கொள்கிறோம்!

அந்தோ பரிதாபம்! ஷைத்தானுடைய வலையில் சிக்கி சீரழிந்துகொன்டு இருக்கிறோம் என்றுகூட நமக்குத் தெரியவில்லை!. ஷைத்தான் நமக்குள் பகையை ஏற்படுத்தி, நம்மை வழிகெடுத்த்க் கொன்டிருக்கிறான் என்பதையும் நாம் உண்ரவில்லை!. எத்தனை விமர்சனம்! கோள், புறம், அவதூறு..., அத்தனையும் பாவம்.

சிந்தித்துப் பார்த்தால் ஷைத்தானுடைய சூழ்ச்சி எந்த அளவுக்கு நம்மை சூழ்ந்திருக்கிறது என்பதை நாம் உணர முடியும். நரகத்தை நோக்கி பயனித்துக் கொன்டிருக்கிறோம் என்பதும் புரியும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

மேலும், எப்படி ஒரு தீமையும் செய்யாத மனிதன் இவ்வுலகில் இருக்க வாப்பில்லையோ அதே போல ஒரு நன்மை கூட செய்யாத மனிதனும் இருக்க வாப்பில்லை.

இங்கே விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் பி ஜெ, ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, பாக்கர் ஆகியோரை ஒரு ஆய்விற்காக எடுத்துக் கொள்வோம். இவர்கள் குற்றவாளியா? இல்லையா? எனும் ஆய்வை சற்றே தள்ளி வைப்போம். இவர்களால் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் ஏற்பட்டதில்லையா?

ஏகத்துவத்தை எளிமையாக, ஆணித்தனமாக, அறிவுப்பூர்வமாக நமக்கு முன் எடுத்து வைத்து ஏகத்துவ சிந்தனையை நமக்குள் ஏற்படுத்தியதிலும், எதிரிகளின் சூழ்ச்சியால் மறைக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்ட நம் சமுதாயத்தின் வரலாற்றுத் தியாகங்களை நம் முன் எடுத்து வைத்து நம் முகவரியை நமக்கு உணர்த்தியதிலும், நம் சமுதயம் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட போது உறத்த குரல் கொன்டு உறங்கிக் கிடந்த நம் மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி, நம்மை ஒருங்கிணைத்து நீதி கேட்டுப் போராடியதிலும் இவர்களுக்கு பங்கு இல்லையா? இவர்கள் நம் சமுதாயத்திற்காக ஒரு சிறு தியாகம் கூட செய்ததில்லையா?

ஒருவர் செய்த நன்மைகளை எல்லாம் மறந்து, மறைத்து பின் குற்றம் செய்துவிட்டார், குற்றம் செய்துவிட்டார் என்று கொடி கட்டி பறக்க விடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்!?.

"தொடர்ந்து வரும் வரிகள் விமர்சிப்பதற்காகவோ, அல்லது குறை கூறுவதற்காகவோ அல்ல. புறிந்துகொள்ள வேண்டும் இன்பதற்காக மட்டுமே. தயவு செய்து ஆரோக்கிய மற்ற எதிர் விமர்சனங்களைத் தவிர்க்கவும்"
ஊழல்! ஊழல்!! என்று பிறர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது சகோ. பி ஜெ அவர்களின் வாடிக்கையாகிவிட்டது. ஜாக் தலைவர் கமாலுதீன் மதனி-யில் துவங்கி, ஃபத்(ள்)லுல் இலாஹி, த மு மு க தலைவர் மற்றும் நிர்வாகிகள், பாக்கர் என்று தொடர்ந்து கொன்டிருக்கும் இப் பட்டியலில் இன்னும் எத்தனை பேர் சேர்க்கப்படுவார்கள்? இந்த ஊழல் புயலில் இன்னும் எத்தனை பேர் பழியாவார்கள்? இப் புயல் எப்போது கரை கடக்கும்? அல்லாஹ்வே அறிந்தவன்.

உதாரனத்திற்காக, சுமத்தப்ப்ட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், இன்ன பிற குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மை என்று கொன்டால், என்ன செய்திருக்க வேண்டும்? குற்றவாளியிடம் நேரடியாகப் பேசி இஸ்லாத்தின் அடிப்படையில் அச்சமூட்டி, எச்சரிக்கை செயது அவர்களை திருத்த முயற்சித்திருக்க வேண்டும். பிறகும் குற்றம் தொடர்ந்தால் சம்மந்த்தப் பட்டவர்களை அமைப்பை விட்டு வெளியேற்றியிருக்க வேண்டும். இது போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் ஜாக், தௌஹீத் ஜமாஅத், த த ஜ, இ த ஜ (இப்பட்டியல் எதுவரை நீளும்? அல்லாஹ் அறிந்தவன்) என்று வளரும் பிரிவுகளும், சிதறும் சமூக ஒற்றுமையும் தடுக்கப் பட்டிருக்கலாம்.

ஆனால், நடப்பது என்ன? ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் வெளியாகி சகோ. பி ஜெ அவர்கள் புதிய, புதிய அமைப்புகளை ஏற்படுத்திக் கொன்டிருப்பதை பார்க்கும் போது, நம் சமுதாயம் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்று ஏதோ ஒரு சூழ்ச்சி அரங்கேற்றப்பட்டுக் கொன்டிருக்கிறது என்பதை மட்டும் நம்மால் உணர முடிகிறது.

சகோ. பி ஜெ அவர்களின் கடந்த கால தியாகங்களை வைத்துப் பார்க்கும் போது இது போன்ற முஸ்லிம் சமுதாயத்தை சிதறடிக்கும் செயலை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும், இப் பிரிவினைகள் அனைத்தும் சகோ. பி ஜெ அவர்களை முன்னிலைப் படுத்தியே அறங்கேற்றப்பட்டுக் கொன்டிருப்பதால், ஏதோ ஒரு வலுவான சதியில் அவர் சிக்கவைக்கப் பட்டிருக்கலாம் என்றும், அதன் மூலம் சூழ்ச்சிகள் அறங்கேற்றப்பட்டுக் கொன்டிருக்கின்றன என்றுமே, என்னத் தோன்றுகிறது.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்,அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன், சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப் பெரிய சூழ்ச்சியாளன். மறைவானவற்றின் மீதான அறிவு அவனுக்கே உரியது.
இப்போது நமது தேவையெல்லாம் "விழிப்புணர்வு". விளக்கில் வீழ்ந்து மாய்ந்துபோகும் விட்டில் பூச்சிகளாய், எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கி நம்மை நாமே மாய்த்துக்கொள்ள வேண்டாம்.

தேவையற்ற விமர்சனம், குறை, வசை, பிறரை இழித்துரைப்பது போன்ற எல்லா செயல்களும் நம் பாவக் கணக்குகளை கூட்டிக் கொன்டிருக்கிறது என்பதை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது.

அனைவரிடத்திலும் நன்மையும், தீமையும் உண்டு. தொடக்கத்தில் கூறப்பட்ட குர்-ஆனுடைய வசனம் "ஒருவருடைய நன்மை அவருடைய தீமையை மிகைத்தால் அவருக்கு சொர்க்கம் என்றும், ஒருவருடைய தீமை அவருடைய நன்மைய மிகைத்தால் அவருக்கு நரகம்" என்றும் கூறுகிறது.

எனவே, நம்முடைய பாவக் கணக்குகளை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். நாம் அறியாத புறத்திலிருந்து கூட எத்தனையோ பாவங்கள் நம்மை வந்து சேர வாய்ப்பிருக்க, அறிந்தே ஏன் நம் பாவக் கணக்குகளைக் கூட்டிக்கொள்ள வேண்டும்?

ஒருவரை நீங்கள் வழி தவறி விட்டார் என்று என்னினால், அவருடைய நேர் வழிக்காக துஆ செய்யுங்கள். அதே போல், ஒருவர் நேர் வழியில் இருப்பதாக நீஙகள் கருதினால் அவர் வழி தவறி விடாமல் இருப்பதற்காவும் பிராத்தனை செய்யுஙள். அதோடு உங்களுடைய நேர் வழிக்காகவும், வழி தவறி விடாமல் இருக்கவும் அல்லாஹ் விடத்தில் பிராத்தனை செய்யுங்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக, நம் பாவங்களை மன்னித்து நம்மை பொருந்திக்கொள்வானாக, நன்மை தீமைகளை விளங்கிப் பேனி வாழக்கூடிய நல்லடியார்கள் கூட்டத்திலே நம்மை ஆக்கி அருள்வானாக, அறியாத புறத்திலிருந்து ஏற்படும் தீங்குகளை விட்டும் எதிரிகளுடைய சூழ்ச்சிகளைவிட்டும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக, அவனுடைய தீனிலே நம் உள்ளங்களை உறுதியாக்கி இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடக்கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக...

ம அஸ்ஸலாம்
அபு ஈசா

Monday, June 1, 2009

'மின்னணு வாக்குப்பதிவு சரியா?'


''உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தலை சிறப்பாக நிறைவேற்றிய திருப்தி யோடு இருக்கிறேன்!'' குடியரசுத் தலைவரிடம் 15-வது மக்களவை பற்றிய விவரணப் பட்டியலை ஒப்படைத்த கையோடு, வெளியே வந்த தலைமை தேர்தல் கமிஷ-னர் நவீன் சாவ்லா கூறிய வாசகங்கள்தான் மேற் கண்டவை.

ஆனால்.... இந்தத் தேர்தலில் நவீன் சாவ்லாவுக்கு ஏற்பட்ட மன நிறைவு பல அரசியல் கட்சிகளுக்கோ, பல தரப்பட்ட வாக்காளர்களுக்கோ ஏற்பட வில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை!

தலைமை தேர்தல் ஆணையாளர் நவீன் சாவ்லாவின் பணி நியமனத்தின்போதே, அவர் காங்கிரஸ் கட்சியின் அனுதாபி என பி.ஜே.பி. வரிந்து கட்டி எதிர்த்தது.

ஆனால், அதையும் தாண்டி அவர்... இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஆனார். இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் எந்தளவுக்கு சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டதாக நடந்தது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதிலிருந்து தேர்தலன்று ஓட்டுப் போடும் எலெக்ட்ரானிக் ஓட்டு மெஷின், வாக்கு எண்ணிக்கை வரை இந்த முறை தேர்தல் ஆணையம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்துவருகிறது. தேர்தல் பணிக்கு தமிழ்நாட்டில் பணிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதிலும், அவர்களின் கடமை குறித்து விளக்குவதிலும் ஏற்பட்ட குளறுபடிகளையும் தொலைக்காட்சி மீடியாக்களில் ஆவேச முகங்களாக நாம் பார்த்தோம்.

இதில் அதிக அளவிலான குற்றச்சாட்டுகள் எலெக்ட் ரானிக் ஓட்டிங் மெஷின் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்து எழுப்பப்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் வைகோ தோல்வி, ப.சிதம்பரம் வெற்றி போன்ற முடிவுகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பற்றிய கேள்வி எழுப்பப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாதேர்த லுக்கு முன்னரும், பின்னரும்... மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத் தன்மை இல்லாதவை என்றே குற்றம் சாட்டி வருகிறார். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இந்த இயந்திரம் மூலம் ஓட்டுகளில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒன்றினை வைத்து செயல் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

''வாக்குப் பதிவு இயந்திரங்களை வடிவமைத்த நிபுணர்கள் எந்தக் கட்சிக்கும் சார்பில்லாதவர்கள். ஜன நாயகத்தின் மாண்பைக் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்தத் தில்லுமுல்லு செய்வதும் இயலாது என்று அவர்கள் ஏற்கெனவே அடித்துக் கூறியிருக்கிறார்கள். எனவே, தங்கள் தோல்வியை ஜீரணிக்க முடியாமல்தான் எதிர்க்கட்சியினர் இப்படி பழிபோடுகிறார்கள்!'' என்ற குரல்களையும் கேட்க முடிகிறது. அதற்காக அவர் களுடைய கூற்றை புறம் தள்ளிவிடவும் முடியாது. ஜனநாயகத்தில் சில சந்தேகங்கள் களையப்படுவது, எதிர்க்கட்சிகள் உரக்கக் குரல் கொடுக்கும்போதுதான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை, பெங்களூருவைச் சேர்ந்த பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், ஹைதரா பாத்தை தலைமையிடமாகக் கொண்ட எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனும் இரண்டு பொதுத் துறை நிறுவனங்கள்தான் தயாரிக்கின்றன.

''இந்த இயந்திரத்தில் உள்ள மென்பொருள், பிணைக்கப்பட்டுள்ள சர்க்யூட்களில் சில குறைகள் தெரிகின்றன. இதனால் உண்மையான ஓட்டு எண்ணிக்கை கணக்கீட்டின் நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த உறுதியாக முடியும்!'' என ஆய்வாளர் ரவி விஸ்வராய பிரசாத் என்பவர் தற்போது கட்டுரைகள் வாயிலாகக் கூறத் தொடங்கியிருக்கிறார். டாக்டர் சவுத்திரி என்பவரோ, ''Producing doctored EVM is Child Play!'' என்கிறார்.

கணினி தொழில்நுட்பத்தில், சமுதாய விளைவுகளை பற்றி ஆராயும் ஆஷர் பார்கன் என்பவரோ, ''மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் Source Code, Algorithm மற்றும் ஹார்டுவேர் - ஆகியவையெல்லாம் எவரும் பார்க்கக்கூடிய இடத்தில் வெளிப்படையாக இருந்தால் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாகப் பயன்படுகிறதா எனக் கூற முடியும்!'' என்று ஒரு கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதில் என்னென்ன சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது போன்ற முக்கிய விஷயங்களை வெளிப்படையாக விவாதத்துக்கு உள்ளாக்க மறுக்கிறது தேர்தல் ஆணையம். இதுதான் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு தூபம் போடும் வகையில் அமைந்துவிடுகின்றது.

''மின்னணு இயந்திர வாக்குப்பதிவின் புரொக்ராமரும், சூத்திரம் தெரிந்த அரசியல்வாதிகளும் நினைத்தால்... ஒரு குறிப்பிட்ட வேட் பாளருக்கு ஓட்டுகளை மாற்றும் மந்திரம் சாத்தியமாகும். சூத்திரத்தின் தன்மை தெரிந்தவர், மின்னணு இயந்திர வாக்குப் பதிவில் உள்ள பொத்தான்களைக் கலவையாக... குறிப்பிட்ட முறையில் அழுத்தும்போது அது வரையில் பதிவான ஓட்டுகளின் பெரும்பான்மையை, ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கே விழுமாறு மாற்ற முடியும்!'' என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து தேர்தல் கமிஷன் ஒரு மறுஆய்வுக்குக்கூடத் தயாராகாமல் இருப்பதுதான் கவலையளிக்கிறது.

ஒருவர் பி.ஹெச்டி பட்டத்துக்கு முயல்கிறார் என்றால், தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டு ரையை தன்னுடைய மேற்பார்வை யாளரிடம் விளக்க வேண்டும். பின்னர் கேட்கப்படும் ஆராய்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும். இத்தனைக்கும் பின்னரே பல்கலைக் கழகங்கள் அவருக்கு பட்டம் வழங்குகின்றன.

ஆனால், ஒரு அரசியல்வாதிக்கு ஆட்சி யாளன் என்ற அதிமுக்கியமான அந்தஸ்தை அளிக்கும் இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு... இன்று வரை அப்படி எந்த ஒரு பலப்பரீட்சையும் வைக்கப்படவில்லை. இது ஏன்?

தேர்தல் ஆணையம் தன்னுடைய பக்க சாட்சியமாக... பேரா சிரியர்கள் எஸ்.சம்பத், பி.வி.இந்திரேசன் மற்றும் டாக்டர் சி.ராவ் கசர்படா ஆகிய மூவர் தயாரித்து வழங்கிய சுமார் 43 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த கமிட்டி இது வரை பத்திரிகையாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில் ஒரே ஒரு முறை கூட செயல் முறை விளக்கம் கொடுக்கவில்லை.

மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மென்பொருள் அறிவு அதிகம் கொண்ட அமெரிக்க மாகாணங்களில் கூட, 'பேப்பர் பேலட்' எனப்படும் வாக்குச்சீட்டு முறையே தற்போதும் நடை முறையில் இருக்கிறது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக்கொள்ளும் இந்தியாவில், தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி மக்களிடம் கருத்துக் கேட்காமலே இந்த மாற்றத்தைக்கொண்டு வந்திருக்கிறார்கள்!

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்க சுமார் 8,000 ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது. கடந்த தேர்தலில் 13 லட்சம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன - மக்களிடம் கருத்துக் கேட்காமலே!

'வாக்குப் பதிவு, எண்ணிக்கை போன்ற தேர்தல் நடவடிக்கைகளை விரைவாக முடிப்பதற்கு ஏதுவாகத்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது' என தேர்தல் ஆணையம் கூறுகிறது. மக்கள்தொகை அதிகம் உள்ள இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகத் தேவைகள் உள்ளன. வாக்காளர் கணக்கெடுத்தல், இறப்பு சார்பான விவரங்களை சரிபார்த்தல், முகவரி மாற்றம் சரி செய்தல், ஓட்டளிக்கும்வயதான 18 வயது கடந்தவர்களை உடனுக்குடன் அணுகி, வாக்காளர் அடையாள அட்டைகளைத் தவறின்றி அனைவருக்கும் அளித்தல், தேர்தல் காலத்து புகார்கள் மற்றும் முறையீடுகள் பற்றி படிப் படியாக நடவடிக்கைகள் எடுத்தல் என்று ஏராளமான வேலைகள் தேர்தல் கமிஷனுக்கு இருக்கின்றன. நிச்சயமில்லாத பல திட்டங்களில் கோடி கோடியாகக் கொட்டும்போது, மக்களின் உண்மையான மனசாட்சியே ஆட்சி பீடத்தை அலங்கரிக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக தேர்தல் கமிஷனில் புதிய நியமனங்கள் செய்தால் என்ன தவறு? அப்படிச் செய்யும்போது, வாக்குச் சீட்டு பதிவு முறையே கூட விரைந்தும் தவறின்றியும் நடந்துவிடுமே!

தற்போது ஆசிரியர்கள், வருவாய்துறையினர் மற்றும் பிற அரசு ஊழியர்கள், தேர்தல் பணிக்கும், தேர்தல் காலங்களிலும் பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால் தேர்தல் காலங்களில் ஏராளமான வகை களில் மக்கள் பணி பாதிக்கப்படுகிறது. இதனால் காலத்தே செய்யும் பணிகள் நிறைவடையாமல், பெரும் கால விரயம் ஏற்படுகிறது. நடுநிலையான, யாரையும் சார்ந்து இல்லாத தேர்தல் ஆணையத்தின் பணியாளர்கள் நாடு முழுவதற்கும் தேவை. அப்படி செய்யும் பட்சத்தில், தேர்தல் கமிஷன், தேர்தல் தொடர்பான ஒவ்வொன்றுக்கும் மாநில அரசுகளை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போய்விடும். ஊழியர்கள் ஒரு சார்பாக செயல் படுகிறார்கள் என்ற குறைபாடுகளும் நீக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றி தேர்தல் ஆணையம் கொடுக்கும் இன்னொரு விளக்கம், ''மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலர் எனப்படும் 'One - time Programme read only memory [OTPROM]' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் புரொக்ராம் நிரந்தரமாக OPTROM ப்யூஸ் செய்யப்படுவதால் மாற்றம் செய் யவோ, குறுக்கீடு செய்யவோ முடியாது!'' என்பது. ஆனால் பல்லாயிரம் கோடி செலவில், பல ஆண்டு ஆராய்ச்சியில், தலை சிறந்த விஞ்ஞானிகள் தயாரிக்கும் ராக்கெட் தொழில்நுட்பமே சில சமயங்களில் காலை வாரி விடு வதைப்பார்க்கிறோம். எனவே, எப்படிப்பட்ட தொழில் நுட்பத்திலும் குறைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த இயந்திரத்தால் நேர்ந்த அடுத்த குழப்பம், தமிழகத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்குப்பதிவு சதவிகிதம் பற்றியது. தேர்தல் ஆணையத்தின்படி சுமார் 68% பேர் வாக்களித்தார்கள் என்றால், வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் எத்தனை சதவிகிதம்? வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளிக்காதவர்கள் எத்தனை சதவிகிதம்? வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் அடை யாள அட்டையும் இல்லாதவர்கள் எத்தனை சதவிகிதம்? இதையெல்லாம் கூட்டினால் கண்டிப்பாக ஒட்டுமொத்த வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகத்தானே இருக்கும்! இது பற்றியும் உரிய ஆய்வுகள் நடந்த தாகத் தெரியவில்லை. ஏனெனில், தேர்தல் முடிந்த பின்னர், தேர்தல் நேரத்துக் குறைபாடுகள் குறித்து பேச அரசியல் கட்சிகளேகூட அதிகம் விருப்பப் படுவதில்லை.

நடிகர் கமல்ஹாசன் போன்ற பிரபலமான வர்களுக்குக் கூட ஓட்டு இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். பிரபலங்கள் பெயர்கள் என்பதால் வெளியே தெரிகிறது. சாமானியர்கள் எத்தனை பேர் திரும்பிப் போனார்கள் என்று யார் சொல்வது?

யாருக்கும் ஓட்டளிக்கும் எண்ணமில்லாதவர் கள் 49 ஓ-வைப் போடலாம் எனும் வசதி இருந் தும், சில வாக்களிக்கும் மையங்களில், அதற்கான படிவங்கள் இல்லை. 49 ஓ-வில் வாக்களிக்க வந்த வர்கள், அங்கிருக்கும் தேர்தல் அதிகாரிகளின் வெறுப்பான பதில் பேச்சுகளால் லோக்கல் கட்சிக்காரர்கள் மற்றும் பூத் ஏஜென்ட்களின் முன்பு அடையாளம் காட்டப்பட்டதுதான்மிச்சம்.

அப்படி ஒரு வாக்குப்பதிவு முறைக்கே இடம் கொடுக்காமல் வடிவமைக்கப்பட்டதிலேயே வாக்குப்பதிவு இயந்திரத்தின் தொலைநோக்குப் பயன்பாடு கேள்விக்குரியதாகிவிடுகிறது அல்லவா? ''நான் ஒருவர் ஓட்டளிக்காவிட்டால் பாதிப்பு வந்துவிடாது?'' என்று பத்திரிகையாளர்களிடம் தர்க்கம் செய்யும் நரேஷ் குப்தாவை தமிழக தேர்தல் ஆணையாளராக கொண்டிருக்கும் புண்ணியம் பெற்றது நம்முடைய தமிழகம். உடனடியாக அறிஞர் பெருமக்கள், தனியார் தொழில்நுட்ப வல்லுநர்கள், தன்னார்வ அமைப்புகள், பொது மக்கள் முன்னிலையில்... மின்னணு வாக்கு இயந்திரம் பற்றிய சந்தேகம் தீர்க்கும் செயல்முறை விளக்க முகாம்கள் நடத்த வேண்டும். இல்லை எனில், மறுபடியும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கே மாறி விடுவது குறித்த சிந்தனை வலுப்பதைத் தவிர்க்க முடியாது.

புதுமைகளை முழுப் பாதுகாப்புடன் செயல்படுத்த முடியாதபோது, சில சமயங்களில் பழைமை நோக்கிப் போவதிலும் தவறில்லை!

நன்றி : ஜூனியர் விகடன்