அதிரைவாசிகளின் எழுத்தார்வம்

ஒருகாலத்தில் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள், ஜோக்குகள், கேள்வி-பதில் சிறுகதை என எதையாவது ஒரு 15 காசு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிவிட்டு பிரசுரமாகி இருக்கிறதா என்று பக்கம்விடாமல் தேடும் ஆர்வம் நம்மில் சிலருக்கு இருந்திருக்கலாம். இன்றும்கூட இத்தகைய பொழுதுபோக்கு சிலரிடம் இருந்து வரலாம். MP கடையிலும் அப்பியான் கடையிலும் தொங்கும் பத்திரிக்கைகளை ‘காசு கொடுத்து’ வாங்கிப் படிப்பதுமுதல் சலூன், டீக்கடைகளில் ஓசியில் படிப்பதுவரை ‘வாசிக்கும்’ பழக்கம் ஒவ்வொருவரிடமும் எதேனும் ஒருவகையில் இருந்தே வருகிறது.

நேரவிழுங்கிகளான இணையமும் ஈமெயிலும் ஜோடிசேர்ந்து இளசுகள்முதல் கிளசுகள்வரை (இளையோரை இளசு என்றால் முதியோரை கிளசு என்று தானே மரியாதையாக விளிக்கணும்?!) மனங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிய கடந்த 10-15 ஆண்டுகளில் மெனக்கெட்டு போஸ்ட் கார்டில் பத்திரிக்கைகளுக்கு எழுதிவிட்டு இழவு (இலுவை) காத்த கிளியாக காத்திருக்கும் பொறுமை மலையேறி, இணைய தளங்களில் எழுதி உடனடியாக பாராட்டோ அல்லது அர்ச்சனையோ பின்னூட்டமாகப் பெறும் வசதி வந்துவிட்டது.

அதிரை டாட் காமில் நமதூரைச் சார்ந்த சிலர் சிறப்பாக எழுதிய கட்டுரைகள் பலரையும் சென்றடைந்து ‘அட இவனு(ளு)க்கு இப்படி எல்லாம்கூட எழுதத் தெரியுமா?” என்று வியப்புடன் அடையாளம் காணப்பட்டவர்களில் நானறிந்து மர்ஹூம் உமர் தம்பி காக்கா, தமீம் அன்ஸாரி, மாஹிர்,நெய்னா தம்பி மற்றும் அபூஆதிப் என்ற புணைப்பெயரில் அடியேனும்! அதன்பிறகு அதிரை எக்ஸ்ப்ரஸில் பலறும் எழுதிவருகிறோம் (அபூஅஸீலா என்ற புணைப்பெயரில் அடியேன்). மேற்குறிப்பிட்டவர்கள் அல்லாமல் வேறுசிலரும் இருக்கலாம். பெயர் குறிப்பிட மறந்தவர்கள் பின்ஸ் (பின்னூட்டம்) போடுங்கள்.

அதிரை எக்ஸ்ப்ரஸ் தளநடத்துனர்களின் தொடர்ந்த ஆர்வமூட்டலுக்குப் பிறகு நம்மில் பலர் சொந்தமாக வலைப்பூ நடத்துமளவுக்கு முன்னேறி விட்டோம். தற்போதைய அதிரை எக்ஸ்ப்ரஸின் முகப்பில் அலங்காரமாகத் தொங்கும் வலைப்பூக்களின் பட்டியல் சொற்பமே என்று நினைக்கிறேன். ஆண்களுக்கு சளைத்தவர்களல்லர் என்பதற்கேற்ப பெண்களும்கூட வலைப்பூ மற்றும் பின்னூட்டங்கள்மூலம் அசத்தி வருகிறார்கள்.

எதற்கு இந்த பில்டப்? அதுக்கு என்னா இப்போ? என்று இப்பதிவை வாசித்துக் கொண்டிருப்பவர்கள் கேட்கலாம். பிரமாதமான திட்டங்கள் எதுவும் இல்லை. இப்படி கஷ்டப்பட்டு/நஷ்டப்பட்டு சின்னப்பட்டு சேறு குழைந்து நொந்து நூலாகி, தேய்ந்து துரும்பாகி, பசித்தாவடி மறந்து பொழுதா பொழுதன்னைக்கும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து எழுதும் எழுத்துக்கள் ஓரிரு மணிகள் முதல் ஓரிரு நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் மறக்கப்பட்டு விடாமல் நமதூர் மக்களின் சிந்தனைகளின் தொகுப்பாக ஏதேனும் பொதுநல அமைப்புகள் தொகுத்து நூலாக வெளியிட்டால் பலரையும் சென்றடைவதோடு வருங்கால தலைமுறைக்கு ஆவணமாகச் சான்றளிக்குமே என்ற ஆர்வக்கோளாறு இப்பதிவை எழுதத் தூண்டியது.

கல்விக்கூடங்களும் மாணவர்களை ஆர்வப்படுத்தி இத்தகைய எழுத்தார்வத்தைத் தூண்டலாம். ஆர்வமுள்ள தனவந்தர்கள் பரிசும்கூட கொடுத்து ஊக்கப்படுத்தலாமே! இன்னதுதான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாத இணைய உலகில் இதுபோன்ற ஆர்வமூட்டலால் இளசுகளின் எழுத்தார்வத்திற்கு வடிகாலாக அமைவதோடு கவனம் வெவ்வேறு திசைகளில் தடம்புரளாமல் ஒருமுகப்படுத்த இத்தகைய முயற்சிகள் உதவும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு பின்ஸ் (பின்னூட்டம்) போட்டு வைத்தால் மேற்கொண்டு இதுமாதிரியான ‘உருப்(படாத?)படியான பதிவுகளை எழுதலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வசதியாக இருக்கும்.

அன்புடன்
அபூஅஸீலா-துபை
Share:

நாளை நமதா?

27.10.09 அன்று எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த செய்தி அதிர்ச்சி தரும்படி இருந்தது. அது என்ன? தனது பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கச் செல்லும் போது 90 சதவீத முஸ்லிம்கள் வியாபாரியாகவே உள்ளனர். சுமார் பத்து சதவீதம் தான் உற்பத்தியாளர்களாகவும், தொழிழ் முனைவர்களாகவும் உள்ளனர் என்றார்.

அவர் சொன்ன தகவலை வைத்து எண்ண அலைகளை ஓட விட்டபின்பு-நம்மவர் சம்பாதிக்கச் சொல்லும் பழமொழி, “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பது தான். ஆனால் அயல் மன்னில் சென்றவர்கள் படகு போன்ற கார்களில் பவனி வந்து-பங்களாக்களில் குடியிருப்பவர் சிலரே. நரம்பில் ஓடும் குருதியினை வேர்வையாக்கி வீடுகளில் கார் ஓட்டுதலும், கிளீனிங் வேலையிலும், கட்டிட வேலை, லிப்ட் ஆப்பரேட்டர், எலக்ட்ரிஷன், ஹோட்டல் சர்வர் போன்ற அடிமட்ட வேலை செய்யும் படிக்காத இளைஞர்கள் தான் அதிகம் என்றால் மிகையாகாது? நான் 1979 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றபோது எனக்குத் தெரிந்தவர் ஒரு ஹோட்டலில் மீன் கழுவிக் கொண்டிருந்தார். பின்பு மலேசியா சென்றபோது இன்னொரு தெரிந்தவர் தனது தலைக்கு ஒரு தலையணை கூட இல்லாது உட்காரும் மரக்கட்டையினை வைத்து படுத்திருந்தார். இனனொரு நிகழ்ச்சி என்னை உண்மையிலே ஒரு கணம் உலுக்கி விட்டது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் மலேசியா சபுர்ஆளி என்று பெருமையோடு வலம் வந்தவர்-அவர் சொந்த பந்தங்கள் எல்லாம் வசதியோடு வாழ்பவர்கள்;. அவருக்கு சுகர் வந்து ஒரு காலை முனங்காலுக்குக் கீழே எடுக்கப்பட்டதால் ஊருக்கு வருவதிற்கு கூச்சப்பட்டு வாழ்வதிற்காக ஒரு சாப்பிங் காம்ளக்ஸ் அருகில் கையேந்திக் கொண்டிருந்தார்.

அதே போன்று நான் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது பிரிமாண்ட்டில் நான் கல்லூரி ஆசிரியனாக இருந்த அதிராம்பட்;;டணத்தினைச்சார்ந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் பி.எஸ்.ஸி படித்தவர், மனைவியும் வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் அங்குள்ள உடுப்பி ஹோட்டலில் சர்வராக இருப்பதாகவும் ஆயிரம் டாலர் கொடுப்பதாவும் கூறினார். முனைவி வுற்புறுத்தலால் இந்த வேலை பார்ப்பதாகச் சொன்னார். இவைகளை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மனிதனுக்கு மானத்தோடு வாழும் நம்பிக்கைக் குறையும் போது இது போன்ற பரிதாபமான நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தியாவில் கூட எத்தனையோ நபர்கள் ஊனமுற்றாலும் படித்து டாக்டர்-என்ஜினியர்-முதுகலை பட்டம் பெற்றுமு;-இன்னும் கூடை-சேர் பின்னும் தொழில் முனைவர்களாகவும் இருக்கும் போது நாம் நம்பிக்கை இழக்கலாமா? ஆகவே நம்பிக்கை பழமொழிகளான தன் கையே தனக்குதவி-உன்னால் முடியும் தம்பி-வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல் அதில் நீந்தி வந்தவன் தான் வாழ்வான் போன்றவைகளை வருங்கால இளைஞர்களுக்குப் போதிக்க வேண்டும்.

படித்த இளைஞர்களுக்கு உலகில் வேலை வாய்ப்பு வருங்காலங்களில் மிகவும் பிரகாசமாக இருப்பது கடிணம். இப்போது கூட துபாய்-சிங்கப்பூர் போன்ற இடங்களில் வேலை பார்த்த நமது இளைஞர்கள் வேலையின்றி ஊருக்கு வந்து வேலை தேடும் படலத்தினைத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்க நான் சொல்லுவதெல்லாம் ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலைப்படாமல் வாழ்ந்து கொள்’ என்பது தான. எங்கள் ஊர் இளையாங்குடியில் தோலில் மணிபர்ஸ், பைகள், கேன்வாஸ் சூட் கேஸ்கள் செய்யும் தொழில் குடிசைத்தொழில் போல இருந்தது. ஆனால் அவைகளையெல்லாம் எப்படி வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்கிடையே ஏற்றுமதி செய்வது என்ற வழிவகை தெரியாததால் அவைகளெல்லாம் நலிந்து விட்டன. ஆனால் அதே தொழிலை இன்று சென்னையில் செய்து வெளிநாட்டு ஏற்றுமதியினைப் பெற்றவர்கள் லாபகரமாக நடத்தி வருகிறார்கள் என்றால் மறுக்க முடியாது. திண்டுக்கல்லில் தோல்வியாபாரம் கொடிகட்டி பறப்பதினை அனைவரும் அறிவர். ஆனால் அதே தேலை பதப்படுத்தி செருப்புகளாகவும், ஸ_க்களாகவும், கைப்பைகளாகவும், சூட் கேஸ்களாகவும், பெல்ட்களாக செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் யுக்தி வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விசாரம், பேரணாம்பேட், ராணிப்பேட்டை போன்ற ஊரில் உள்ளவர்கள் அறிந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுப்பதோடுமட்டுமல்லாமல்-ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச்செலவாணியை அள்ளிக் குவிக்கின்றனர். ஏன் அதே தொழிலை திண்டுக்கலில் இருக்கும் தோல் வியாபாரிகள் சிந்திக்கக் கூடாது.

ஊதாரணததிற்கு நாடார் ஜன மக்களை எடுத்துக் கொள்ளுங்கள. பழைய பேப்பர்கள்-இரும்புகள் வாங்க இரு சக்கர-மூன்று சக்கர வண்டிகளிலும் தெருத் தெருவாக அளைவதினைப் பார்க்கிறேம். ஆனால் அவர்கள் பழைய பொருட்களை வாங்குவதோடு நின்று விடுவதில்லை. அதனை தரம் பிரித்து பழைய பேப்பர்களை அட்டை செய்யும் இயந்திரத்தில் கொடுத்து அட்டைகளாக்கி விடுகின்றனர். பழைய இரும்புகளை உருக்கி-ஸ்டீல் பட்டறையில் கொடுத்து பாத்திரம் செய்யும் தொழிலும் ஈடுபட்டு தொழில் செய்கின்றனர். ஏன் அரேபியாவிற்கு நாம் பல்வேறு வேலைக்காகவும்-புனித கடமை நிறைவேற்றுவதற்காகவும் சென்று விதவிதமான பேரீத்தம் பலங்களை வாங்கி வந்து உற்றார்-உறவினருக்குக் கொடுத்து மகிழ்கிறோம். ஆனால் அதே பேரீத்தம் பழத்தினை இறக்குமதி செய்து தரம் பிரித்து பாக்கட்டிலும்-ஜூசாகவும் விற்பனை செய்யும் தொழிலையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

நான் அதிராம்பட்டிணக் கல்லூரியில் வேலையில் இருக்கும் போது எங்கு திரும்பினாலும் தென்னைத் தோப்புகளைக் காண்பேன். அதில் விளையும் தேங்காயை லாரிலாரியாக பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவர். ஆனால் தென்னை மரம் அதிகல்லாத தூத்துக்குடியில் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் வி.வி.டி.தொழிற்சாலைகள் அதிகம். அதே தென்னை நாறுகளை கயிறுகளாகத் திரித்தும்-விரிப்புகளாவும்;-கால் மிதிகளாகவும் செய்யும் தொழில் ஈரோடில் அதிகம். அவைகளையே ஏன் அதிராம்பட்டிணத்தில் தென்னந்தோப்பு அதிபர்கள செய்து அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடாது? கடற்கரை ஊர்களில் மீன்-கருவாடு விற்கும் வியாபாரிகளாகத்தான் உள்ளனர். அந்த மீன்களை வெளிய+ர்களுக்கும்-கேரளா மாநிலம் போன்று அனுப்பாமல் அந்தந்த ஊர்களிலே ஏன் மீன் பதனிடும் ஆலை ஏற்படுத்தி அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக்கூடாது. சீனாவில் ஒரு பழமொழி உண்டு. ‘பசித்தவனுக்கு வறுத்த மீனைக் கொடுக்காதே-மாறாக அவன் மீன் பிடித்து அதன் மூலம் வாழ்வு நடத்த ஒரு தூண்டில் முள் கொடுத்து மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடு’ என்று. ஆகவே பண்டிகை காலங்களில் தானம், தர்மம் செய்வதினை விட இது போன்ற தொழில்களில் அவர்களுக்கு வேலை கொடுத்து ஏழைகளுக்கு நிரந்தர வருமானத்தினைத் தரலாம்.

கோவை தொழில் அதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சாதாரண விவசாயி. அவர் எப்படி கார் மெக்கானிக் வேலை பார்த்து பலவேறு கார்-மோட்டார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் அதிபரானார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு மருந்துக் கம்பெனி அதிபரானது பெரும்பாலானோருக்குத் தெரிந்திராது. ஒரு தடவை அவர் வயலில் உழுது கொண்டு இருந்தபோது லேபிலோடு கூடிய ஒரு மருந்து காலி பாட்டிலினைக் கண்டார். நாமாக இருந்தால் அதனை தூர எறிந்து விடுவோம். ஆனால் அவர் அதை எடுத்து அந்த மருந்துக் கம்பெனி விலாசத்திற்கு கடிதம் எழுதி அதனை தயாரிக்கும் உரிமமும் பெற்றார். ஏன் ஜப்பானியர் பொம்மை வியாபாரத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்றால்-தூக்கி வீசப்பட்ட காலி டப்பாவைக் கூட விடாமல் அதில் தங்கள் கை வண்ணங்களால் அவைகளை அனைவரும் ரசிக்கும் பொம்மைகளாக ஆக்கி விற்று விடுகின்றனர்.

எங்கள் ஊரைச்சுற்றி ஏராளமான அரிசி ஆலைகள் அதிகம். ஆனால் நெல்லிலிருந்து பிரிக்கப்படும் தவிடு-உமியினைக் கொண்டு ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் மாட்டுத் தீவணம், கோழித் தீவணம், ஆயில், சோப், வனஸ்பதி தயாரிக்கிறார்கள் என்பதினை சில காலங்களுக்கு முன்னர் தானே அறிவர். இருந்தாலும் இன்னும் தாங்களே அந்தத் தொழிலைத் தொடங்காது அவர்களுக்கு தவிடு, உமிகளை விற்கும் வியாபாரியாகவே உள்ளனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?


முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் எழைகள். வுpதவைத் தாய்மார்கள் இட்லி, இடியாப்பம் சுட்டு விற்பதினையும், தோசை, இட்லி மாவாட்டி அதனை விற்வதினையும் அறிவோம்.அதேபோன்று நமது தாய்மார்கள் மீன் மசாலா, கரி மசாலா, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சக்தி மசாலா போன்ற நிறுவனம் ரெடிமிக்ஸ் உணவு பண்டங்களைத் தொடங்கி ஏன் நமது பெண்களுக்கு வேலையினைக் கொடுக்கக் கூடாது. சுய தொழில் தொடங்கக்கூட அரசு மானியம் அளிக்கப் படுகிறதே.

நம்மில் சிலர் பம்பாய், குஜராத், டெல்லி போன்ற நகரங்களில் ரெடிமேட் துணிகளை வாங்கி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்களே துணிகளாக வாங்கி தையல் இயந்திரங்களால் பெண்கள் உதவியால் தைத்து வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது. அதுபோன்று உற்பத்தியில் ஈடுபட்ட திருப்ப+ர் இன்று செல்வும் கொழிக்கும் நகரமாகத் திகழ்கிறதே. மும்பையில் ஆயல் தொழிலில் ஈடுபட்ட தன் தந்தையினை விட பல படிக்கு மேல் சென்று மின்பொருள் தயாரிக்கும் விப்ரோ நிறுவனத்தினை ஆஸிம் பிரேம்ஜி நிறுவி 2008-2009 ஆம் ஆண்டு 19 சதவீத லாபத்தினை ஈட்டி ரூபாய்1162 கோடி சம்பாதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.. என் கல்லூரி நண்பர் அமீர் அப்துல் காதர் கடந்த வாரம் தன் சொந்த ஊரான கீழக்கரை சென்று வந்தார் அவரை நலம் விசாரிக்கும் போது, அவர் சொன்னார.; தனதூரில் அறிவித்த மின்வெட்டு இரண்டு மணிநேரம்-அறிவிக்காத மின்வெட்டு பல தடவை என்றார். கடற்கரை நகரங்கள் காற்றும் வெயிலும் அதிகமாக இருக்கும். ஆகவே மின் பற்றாக் குறையினைப் போக்க ஏன் சோலார் கருவிகளை உற்பத்தி செய்து மின் விசிறி. வுpளக்கு, ஏன் மோட்டாரில் தண்ணீர் இறைக்கக் கூட வழிவகுக்கக் கூடாது. அரசே மானியம் வழங்குகிறதே. கடலூர் மாவட்டத்தில் காரியமங்கலம் என்ற ஊர் பஞ்சாயத்தின் மின் தேவைகளை சோலார் எனர்ஜி ழூலம் கிடைக்கப் பெற்ற இந்தியாவில் முதல் கிராம பஞ்சாயத்தாகத் திகழ்ந்து ஜனாதிபதியின் பரிசையும் தட்டிச்சென்றதே. பணம் படைத்தவர்கள் தான் மட்டும் இன்வெர்ட்டர், ஜென்ஜெட் போட்டுக் கொண்டு வாழ்வதினை விட்டு ஏழைகளுக்கும் உதவுமாறு செய்யலாமே1

நமதூரில் மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டுகளிலும் சுத்திகரிக்காத தண்ணீர் சப்ளை செய்வதைப் பார்க்கலாம். அதனால் பயோரியா போன்ற தண்ணீர் சம்பந்தமான நோய்கள் பரவ வழிகள் ஏற்படும். ஆகவே வாட்டர் சுத்திகரித்து பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் ஆலைகளை நிறுவலாம். நம்மில் சிமிண்ட் தொழில் அதிபர்கள் மானாமதுரை யாசின் சிமிண்ட்ஸ் போன்ற ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் அந்தத் தொழிலைத் தொடங்கிய ராம்கோ, இந்தியன் சிமிண்ட்ஸ், சங்கர் சிமிண்ட்ஸ் போன்றவர்களெல்லாம் சாப்ட்வேர் தொழில் இறங்கியள்ளனர். ஏன் அரசியல் வாதியாக இருந்து கல்வியாளராக மாறிய ஜேப்பியார் ரெடி கிராவல் மிக்ஸ் தொழில் செய்கிறார். நான் அதிராம்பட்டிணம் கல்லூரியில் வேலை பார்த்தபோது இருந்த தமிழ் பேராசிரியர் நாகர்கோவிலைச்சார்ந்தவர் அசன் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கன்யாகுமரி பகுதியில் மீன் பிடிப்பதிற்கான வலைகள் சென்னையிலிருந்து தான வாங்கினார்கள். ஏன் நாமும் அதேபோன்ற மீன் பிடி வலையினை தயாரிக்கக் கூடாது என்று யோசித்து மீன் வலை தயாரிககும் தொழில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தொடங்கியுள்ளேன்-அதில் அந்தப் பகுதியினைச் சார்ந்த 20 நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன்-அங்கிருந்து சென்னைக்கு விற்பனையும் செய்கிறேன் என்றார்.

அதேபோன்று சென்னை மின்ட் அரசு பிரஸ் எதிர்புறம் நர்சரி செடிகள் உள்ளதாக அறிந்து அங்கு செனறேன். அதனை நடத்தி வருபவர் முபீன் ராஜா என்ற 30வயது இளைஞர். அவரிடம் எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்றேன். தான் தேனியைச் சார்ந்தவன் என்றும், நர்சரிச் செடிகள் வாங்கி விற்று வருந்ததாகவும், அதன் பின்பு அவை பெங்களுரிலிருந்து வரகிறது என்று அங்கே சென்றதாகவும். அங்கே சென்றால் நரசரி செடிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஒசூரிலிருந்து வருகிறது என்றும் அறிந்தேன். ஆககே ஒசூருக்கு சென்றதாகவும் அங்கே தளி என்ற இடத்தில் நர்சரி செடிகள் பயிடப்பட்டதினை அறிந்து அங்கேயே இரண்டு ஏக்கரை லீஸ் எடுத்து தானே நர்சரிச் செடிகள் பயிருட்டு இன்று மதுரை, தேனி, பெங்களுர், சென்னை போன்ற இடங்களில் நர்சரி கார்டன்கள் நடத்துவதாகச்சொன்னார்.(தளியினை லிட்டில் இங்கிலாந்து என்று ஆங்கிலேயர் அழைத்தார்கள் என்று நான் அங்கு எஸ்.பியாக இருந்தபோது அறிவேன்). இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் எந்தத்தொழிலும் கேவலமில்லை-அது சொந்தத்தொழிலாக அமைய வேண்டும். கருவாடு விற்ற காசு நாறாது என்பதினை அனைவரும் அறிவர். அதேபோன்று மாந்தோப்புகளை வைத்திருப்பவர்கள் மாம்பழங்களை விற்கும் வெறும் வியாபாரிகளாக அல்லாது-மாம்பழ ஜூஸ்-மாங்காய் ஊறுகாய் போன்றவைகள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தயாரிப்பது போல தயாரிப்பில் ஈடுபடலாம். ஏன் வெறும் கார்ட்வேர் வியாபாரத்தினை காலங்காலமாக செய்யாது அந்தக் கார்டுவேர்-பெயின்ட் போன்றவைகளைத் தயாரிக்கும் தொழிலும் ஈடுபடவேண்டும்.

ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே. மதுரையினைச்சார்ந்த ஓருவர் தெர்மல் எனர்ஜி சொலுசன் டிரங்க் பெட்டி போன்ற கரி அடுப்பினை கண்டு பிடித்துள்ளார். அதில் புகையே வராது என்ற தகவலும் உள்ளது. ஏன் அந்தப் பகுதியினைச்சார்ந்த நம்மவர் அதேபோன்ற தொழில்களில் ஈடுபடக்கூடாது? சிறிய தொழில் தொடங்குவதிற் டிக்(தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்) சிட்பி(சிறு தொழில் முன்னேற்ற வங்கி) போன்ற நிறுவனங்கள் பொருள் உதவி செய்கின்றனர். சில தொழில்களில் சப்சைடி என்ற அரசு சலுகைகளும்-ஏற்றுமதி பொருள்களுக்கு டிராபேக் என்ற சலுகைகளும் உள்ளன. உலகிலேயே சீனா நாடு 12 சதவீத ஏற்றுமதியினை எட்டி முதல் இடத்திலும் அதற்கு அடுத்த படியாக இந்தியா 10.8 சதவீத ஏற்றுமதியினையும் தொட்டு விட்டது.

இறைவன் நமக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுக்கவில்லை-மாறாக அந்தக் கைகளில் பத்து விரல்களையும் கொடுத்தது போல-மனிதன் முன்னேற்றம் அடைவதிற்கு பல வழிகள் உள்ளன. அவைகளில் பலருக்கு உதவக்கூடிய தொழில்களை அந்தந்த பகுதிற்கேற்ப ஆரம்பித்தால் நிச்சயமாக நாளை நமதாகாதா?

எழுத்தாக்கம் : மாண்புமிகு.ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
நன்றி:
Share:

பிறந்த மண்ணில் எப்போது ஜெயிக்கப்போகிறோம் ?


பிறந்த மண்ணில் எப்போது ஜெயிக்கப்போகிறோம் ?

நம் ஊரில் உள்ளவர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பெரிய முன்னேற்றம் அடைய ஆசைஇருந்தும் முடியாமல் போனதற்க்கு கீழ்க்கண்ட விதிமுறைகளும் / வசனங்களும்தான் முட்டுக்கட்டை என்று எங்கு வந்து சத்தியம் செய்ய சொன்னாலும் நான் செய்வேன்.
 • ஒருவன் உழைத்து 10 பேர் சாப்பிடுவது/ சில குடும்பங்களில் 10 க்கு அதிகமானோர்.
 • நீதானே வாப்பா வீட்டுக்கு மூத்தவன்!!! நீதானே காப்பாத்தனும்!!! என்ற உயர்ந்த தத்துவத்தில் மயங்கி சொந்தஙகளில் உள்ள பல சோம்பேறிகளுக்கு படியளப்பது..
 • வரதட்சணை என்ற கொடுமையும்/ கொசுறாக வலமை என்ற பாரம்பரியமும்.[ வலமை சாப்பாடு எல்லாம் ஊரில் உள்ள வெட்டிஆபிசர்கள் அரம்பித்தது என்பது தெரியாமலே கடைபிடிக்க ஆரம்பித்து அரை நூற்றான்டு ஆகிவிட்டது [உதாரணம்: மாப்பிள்ளைத்தோழன் சாப்பாடு]20 வயது மாப்பிள்ளைக்கு 60 வயதை தாண்டிய பெரியவர்களும் தோழன் மாதிரி வந்து சாப்பிட்டு விட்டு போகும் கணக்குதான் இன்று வரை எனக்கு "வெளங்கலெ'
 • வெளிநாட்டில் மட்டும் தான் வாழ முடியும் / சம்பாதிக்க முடியும் என்ற தவறான நம்பிக்கை.
 • நிறைய வருமானம் தரும் தொழில்கள்/ Financial Products [ Compliance with Islamic principles] பல இருந்தும் "தோப்பு / தொரவுகளில் வைத்து இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை.இதில் "தென்னயப்பெத்தா இளநீர் / பிள்ளயைப்பெத்தால் கண்ணீர்' என்ற தோப்பு விற்க்கும் ஏஜண்ட் கண்டுபிடித்த பழமொழி வேறு துணையாக
 • நம் கண் முன்னால் பல வெளியூர்காரர்கள் ந்ம் ஊரிலேயே முன்னேறியும் நம் மீது நம்பிக்கையின்மை.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் நண்பர்கள் பெரும்பாலும் சொல்லும் வசனம் ' இந்த தடவையோட 'முடிச்சிட்டு' போயிடலாம்னு"[EXIT] இருக்கேன்.

இனிமேலாவது ஊருக்கு போனவுடன் வீட்டுப்பெண்களின் சண்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுதல்,பட்டுக்கோட்டைக்கும் / அதிராம்பட்டினத்துக்கும் பேயாக அலைதல். [ யாருடைய கார்/பைக் போனாலும் ' வா போயிட்டு 1 மனி நேரத்தில் வந்திடலாம் என்பதுதான் பெரும்பாலும் அந்த நாளின் முக்கிய நேரத்தை தின்றுவிடும்.

மற்றும் இன்னபிற தேவைகளில்[காது குத்து / சுன்னத் / கல்யாணம் போன்ற தேவைகளில் தனக்கு முக்கியத்துவம் தருவது ஏதோ தனக்கு ஆக்ஸ்போர்டில் பட்டம் கிடைத்துவிட்டதாக மயங்காமல், நீஙகள் அங்கு இல்லாவிட்டாலும் காது குத்தப்படும் என்ற உண்மை அறிக!

மற்றும் தோப்பு / கடற்க்கரை / ராஜாமடம் பாலம் / புளியமரம் /மெயின் ரோடு/ செக்கடிமேடு விசிட்டிங் , பள்ளிவாசலில் தொழுகை முடிந்தவுடன் 2 மணி நேரம் பேசியும் நேரம் போனது தெரியாமல் இருப்பது இவைகளை தவிற்க்கலாம்.

சரி இப்படி எழுதுவதால் ஒய்வாக இருக்கும் நேரம்தானே இதுவெல்லாம் தவறா? "பொழுதுபோக்குதானே" என நினைக்கலாம். " பொழுது உங்களை போக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றுதான் சொல்கிறேன்."ஊரில் செட்டிலகானும்பா'என்றால் ஏதாவது அதற்க்காக செய்ய வேண்டும் இல்லையா?. அதற்க்கு சம்பந்தம் இல்லாத செயல்களை செய்தால் எப்படி வாழ்க்கையில் ஜெயிப்பது?

இப்போதைய இந்தியாவை நோக்கி நிறைய நாடுகள் தொழில் தொடங்கவும் முதலீடுகள் செய்யவும் ஆரம்பித்து விட்டன. விசுவின் அரட்டை அரங்கத்தில் சொல்லப்படும் இந்தியபெருமைகளில் மயங்கிவிடாமல் உங்களை சார்ந்தவர்களுக்கும் / உங்களுக்காகவும் முன்னேர இன்றே முடிவெடுத்துவிடுங்கள்.

இந்த பிரபஞ்சத்தை ஆளும் வல்ல இறைவன் உங்கள் நேர்மையான தேவைகளை நிச்சயம் நிறைவேற்றுவான் [இன்ஷா அல்லாஹ்]

ZAKIR HUSSAIN
Share:

சிந்தனை செய் மனமே

அக்டோபர் 10ந்தேதி உலக மனநிலை மருத்துவ தினமாகக் கொண்டாப்பட்டது . உலகில் 6.5 கோடி மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் மிதமாக 5 கோடி மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நமது சமுதாயத்தில் மனநிலை பாதிப்பு ஏற்பட்டால் இஸ்லாத்திற்கு ஒவ்வாத பேய், பிசாசு பிடித்து விட்டது என்று ஒதிக்கித் தள்ளும் நிலை இந்த விஞ்ஞான காலத்திலும் உள்ளது என்றால் மறுக்க முடியாது. ஒரு மனிதனுக்கு மனநிலை பாதிக்கக் காரணங்கள் யாவை என பார்ப்போமேயானால்:

குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடு மணமுறிவில் ஏற்படும் குழப்ப சூழ்நிலை வேலையில் எற்படும் பின்தங்கிய நிலை உடல் சுகாதாரத்தில் ஏற்படும் பின்னடைவு குடிப்பழக்கம், போதைக்கு அடிமையாதல் பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சி நட்பில் ஏற்படும் துரோகம் ஆகியவைகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மனக்குழப்பத்தில் இருப்பவரை தக்க தருணத்தில் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லாவிட்டால் வீட்டாரால் புறக்கனிக்கப் பட்டு பராரியாக அழையும் பரிதாப நிலையினைக் காணலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் புகுந்த வீட்டில் கணவனே அவனது வீட்டார் நடத்தும் மாறுபட்ட நடத்தைகளால் மனம் புழுங்கி இருக்கும் அபலைப் பெண்களையும் கிருக்குப் பட்டம் கூட்டி வீட்டுக்கு அனுப்பி விடுவதோ அல்லது தர்காக்களில் சேர்த்து ஒதுக்கித் தள்ளுவதோ தான் நம் சமூதாயத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

கண் நிறைந்த கனவனைக் கைப்பிடித்து மகிழ்ச்சி பொங்க வாழவேண்டும் என்று எண்ணி மண வாழ்வினை மைனர் வயதில் பெற்றோர்-உடன் பிறந்தோர்-உற்றார் சொல்கிறார்கள் என்று ஏற்றுக் கொண்ட பெண்ணுக்கு மணமகன் வீட்டார் கைகளுக்கு தங்கக் காப்பு-கால்களுக்கு தங்கக் கொலுசு வழங்சுவதிற்குப் பதிலாக இரும்பு சங்கிலியால் பிணைத்து சேது படத்தில் வருவது போல அனாதையாக தர்காக்களில் விடப் படும் காட்சியினை ஏர்வாடி, நாகூர், முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் .

அதேபோல் சிறுவர்கள், பெரியவர்கள் என ஏனையோரையும் அங்கே காணலாம். அதேபோன்று ஏர்வாடியில் அடைக்கப் பட்ட 20க்கு மேற்பட்டோர் தீ விபத்தின் தனலில் கருகி மாண்டதை அனைவரின் உள்ளத்திலும் இன்னும் பசுமையாக உள்ளது.

சகோதர் ராஜகிரி கஸ்ஸாலி,’துபாய் கணவனே வா’ என்று எழுதிய கருத்துத் தொகுப்பு போன்ற சம்பவங்களில் கூட இளம் கணவனை இரண்டு வருடம் பிரிந்து ஏங்கி மன அழுத்தத்தில் உந்தப் பட்ட பெண்கள் கூட பைத்தியம் என்று புறக்கனிக்கப் படும்... சம்பவங்கள் ஏராளம், ஏராளம். சமுதாய நோய்களான எய்ட்ஸ், புற்றுநோய், காசநோய், புற்றுநோய் போன்றவைகளுக்கு உடனே வைத்தியம் பார்க்கிறோம், ஆனால் மனநோய் வந்தால் அதனை மூடி மறைத்து அவர்களை பெற்றோர்கள் கூட ஒதுக்கும் பரிதாப நிலை வேதனை அளிக்க வில்லையா? சாதாரண காய்ச்சலுக்கும்-சளிக்கும் டாக்டர்களை தேடி ஓடும் நாம் நெர்வெஸ் மாற்றத்தினால் ஏற்படும் நோய்களுக்கு டாக்டரை அனுக ஏன் கூச்சப் படவேண்டும்? ஒரு இளைஞருக்கு மனநிலை பாதித்திருந்தால் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்று அப்பாவி பெண்களை அவர்களிடம் பலியாக்கும் பரிதாப நிலையும் நம் சமூதாயத்தில் உள்ளது. எனென்றால் பையன் மனநிலை பாதித்தவன் என்பதினை மணமகன் வீட்டார் ஒரு போதும் ஒத்துக் கொள்வதேயில்லை.

போதிய அளவு மனநல மருத்துவர்களோ அல்லது மருத்துவ மனைகளோ கிராமத்தில், நகர பஞ்சாயத்தில், ஏன் நகரசபைகளில் கூட கிடையாது. ஆகவே தான் அதற்கான விழிப்புணர்வினை நாம் ஏற்படுத்த முடியவில்லை. மற்ற நோய்களுக்கு தனியார் மருத்துவ மனைகள் ஏராளம். ஆனால் மனநோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவ மனைகள் குறைவே.

மனநலம் குன்றியவர்களை அடைக்கப்பட்டுள்ள ஊர்களான ஏர்வாடி அருகில் கீழக்கரை,காயல்பட்டினம் என்ற செல்வந்தர் ஊர்களும், நாகூர், முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் கூத்தாநல்லூர், நம்மூர் போன்ற செல்வந்தர் ஊரும், இன்னும் தர்காவில் அடைக்கப்பட்ட ஊர்களின் அருகில் உள்ள செல்வந்தர்கள் தங்கள் வருடா வருடம் கொடுக்கும் ஜக்காத், சதக்கா, பித்ரா ஆகியவைகளை இஸ்லாத்தினை துண்டாக்கும் அமைப்புகளுக்குக் கொடுக்காது மனநல மருத்துவமனைகளை கூட்டாக சேர்ந்து ஆரம்பித்து மக்கள் சேவைகளைச் செய்யலாம். சமுதாய சேவைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் கூட இதுபோன்ற மருத்துவமனைகளை நிறுவ பாடுபடலாம். நமதூர் அதிரையில் கடந்த காலங்களில் சிறப்பாக செயல் பட்டு வந்த அதிரை இஸ்லாமிய சேவையகம் இத்தனை கருத்தில் கொண்டு பல முயற்சிகளின் பலனாக ஒரு இடத்தை வாங்க முயற்சிகளை மேற்கொண் டுள்ளது என்பதினை நாம் கவனத்தில் கொண்டு இது போன்ற அமைப்பிற்கு உதவிக்கரம் நிட்டுவது நமது கடமை. செய்வோமா?
மேலும் விபரங்களுக்கு ... 9842466529

-JP-

Share:

முத்துப்பேட்டை சகோதரர்கள் சாலைவிபத்தில் மரணம்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே சரக்கு ஆட்டோ -மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

முத்துப்பேட்டை, குண்டாங்குளம் தெருவைச் சேர்ந்தவர் என். பெரோஸ்கான் (30), பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ப. மரைக்கான் (25). இவர்கள் இருவரும், திங்கள்கிழமை மாலை முத்துப்பேட்டையில் இருந்து அதிராம்பட்டினத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

கருங்குளம் கிழக்கு கடற்கரை சாலையில், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும், அதிராம்பட்டினத்தில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில், பெரோஸ்கான் சம்பவ இடத்திலும், மரைக்கான் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் இறந்தனர். இனாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.சகோதரர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தை அல்லாஹ் அருள்வானாக.அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையாய் தருவானாக.

சரக்கு ஆட்டோ ஓட்டுநர் முத்துப்பேட்டை எம். வினோத் (22) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
Share:

அதிரை டைரக்டரியில் பதிவு செய்து விட்டீர்களா?

Dear Brothers, Assalamu Alaikkum.
 
 
Insha Allah !  We proposed to release a "Directory of Adirampattinam" Living in Chennai / Adirampattinam &  Abroad.
 
The directory will carry very useful information such as Doctors/ Hospital  List, Education Guidance ( Foreign Education)   , Airlines /  Bus / Railway Timings, Government Body Contacts /  Emergency Contact Details etc.
 
It is possible only by your support by enrolling and forward the filled form via e mail / Fax / Mail. Hence, Kindly spare few miniutes to fill and forward to the following contact detail
 
E Mail      ; chasecomthehindu@gmail.com
FAX         ; 00 91 44 42358118 / 00 91 44 42166991
Address  : CHASECOM
                   20, Second Line Beach Line Road,
                   1st Floor,
                   Chennai 600001
 
We request you to forward this e mail to your contact list, enable to include all contacts , to avoid omissions.
 
 
Your suggestion are welcome.
 
Estimated release of Directory 1st Jan 2010
 
Hence, Deadline to submit the contact form by 15th Nov 2009
 
Thank you for your  effort & support .
 
Please take print out the form and issue to all. 
 
Brothers Living in abroad may fill the form of Chennai & Adirampattinam Address & Contact details
 
Warm Regards
Abdul Razak
9841044165

Share:

பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகாத பன்றிகள்!

H1N1.!கேட்பதற்கு ஏதோஒரு அமெரிக்கன் விஸா பிரிவு மாதிரித் தெரியும் இந்த வைரஸ்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக உலகையெ கலக்கி வருகிறது. பன்றியிலிருந்து பரவியதாகச் சொல்லப்படும் இந்த வைரஸுக்கு அஞ்சி எந்தப்பன்றியும் முகமூடி அணியவில்லை!கைகளில் சானிடைஸர் தடவிக் கொள்ளவில்லை!

பொருளாதார மந்தநிலையால் உலக முதலாளிகள் எல்லோரும் முக்காடு போட்டிருக்கும் போது,ஏழைகள் மட்டும் சும்மா இருப்பதா? என்று மேற்கத்திய முதலாளிகளின் தயவால் முகமூடி கிடைக்கக் காரணமான இக்காய்ச்சல் அமெரிக்க முதலாளியின் திட்டமிட்டச் சதி என்ற தகவல்கள் மெல்லமெல்ல வெளியாகத் தொடங்கியுள்ளது.

மனிதர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள்: • காய்ச்சல்

 • தலைவலி

 • இருமல்

 • தொண்டை கரகரப்பு

 • ஜலதோஷம்

 • சோர்வு/அயர்ச்சி/களைப்பு

 • உடல்வலி

 • வாந்தி,குமட்டல், வயிற்றுப்போக்கு

மேற்கண்ட உபாதைகளும் உடற்கோளாறுகளும் மிகவும் பொதுவானவை. குழந்தைகளுக்கும் முதியோருக்கும் மிகமிக சாதாரணம் என்பதால் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் நம்மில் யாருக்கும் இருக்கலாம்!

இதுவரை உலகெங்கும் பன்றிக்காய்சலுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 1200க்கும் குறைவு. (இந்தியாவில் சமீபத்தில் 100 ஐத் தொட்டது!) உலகெங்கும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 160 நாடுகளில் பலியானவர்களின் சராசரி எண்ணிக்கை 6-7 பேர்! ஐரோப்பாவில் பதிவான 16,556 பேரில் 34 பேர் பலியாகியுள்ளனர். எண்ணிக்கை குறைத்துச் சொல்லப்பட்டுள்ளதாகவும் இனி தனிசோதனைகள் வேண்டியதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

உலகெங்கும் பன்றிக்காய்ச்சலுக்குப் பலியானவர்களில் எண்ணிக்கை 1154.....! அதாவது, (8,000,000/1) உலகமக்கள் தொகையில் 80 இலட்சத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்! கக்கூஸில் வழுக்கி விழுந்து இறப்பவர்களின் வீதத்தை விடவும் மிகக்குறைவு!!!

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகுபவர்களின் எண்ணிக்கை சுமார் 35,000. ஜூன்-1, 2009 வரை பறவைக் காய்ச்சலுக்குப் பலியானவர்களாக உலக சுகாதாரமையத்தின் (WHO) படி 262. ஜூலை-2007 கணக்குப்படி இதுவரை எயிட்ஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 மில்லியன் பேர். 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி டிபியினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 16 இலட்சம்!

பறவைக்காய்ச்சல் - பன்றிக்காய்ச்சலால் நேரடியாகப் பயனடைந்தவர்களாக மருந்துக் கம்பெனிகள், மருத்துவர்கள், மருத்துவ ஆராய்ச்சி மையங்கள்போக பக்கங்களை நிரப்பியும் பரபரப்புச் செய்திகளாலும் ஊடகங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள்.

பன்றிக்காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரே மருத்து TAMIFLU. பறவைக் காய்ச்சலுக்கும் இது மட்டுமே மருந்தாகச் சொல்லப்பட்டது! TAMILFLU (OSELTAMIVIR) மருந்து தயாரிக்கும் ஒரே நிறுவனம் GILEAD SCIENCES INC' இடமிருந்து ROCHE நிறுவனம் 2016 ஆம் ஆண்டுவரை ஏகபோகக் காப்புரிமை பெற்றுள்ளது!

பன்றிக்காய்ச்சலையொட்டி அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன் TAMIFLU ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.மொத்த மதிப்பு 2 பில்லியன் டாலர். அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள ஆர்டர் 200 மில்லியன் டாலர்கள்.

1997 - 2001 வரை GILEAD SCIENCES INC' நிறுவனத்தின் சேர்மனாக இருந்ததோடு அதிகப் பங்குகளையும் வாங்கியவர் திருவாளர் டொனால்ட் ரம்ஸ்பில்ட் (DONALD RUMSFELD) ஜார்ஜ புஷ் அரசில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்துள்ளார்!

புஷ் அரசாங்கம் பறவைக்காய்ச்சலுக்காக ஒதுக்கிய 1.7 பில்லியன் டாலரில் 14% GILEAD SCIENCES INC' கொடுக்கப்பட்டது! 2005 ல் உலகப் பங்குவர்த்தகம் 40% குறைந்திருந்தபோது GILEAD SCIENCES INC' பங்குகளின் மதிப்பு 700% ஆக உயர்ந்தது! 2008 ஐவிட 2009 இன் இரண்டாவது காலாண்டில் GILEAD SCIENCES INC' ன் விற்பனை 29% உயர்ந்துள்ளது! 2009 இன் இரண்டாவது காலாண்டில் GILEAD SCIENCES INC' பெற்றுள்ள நிகரலாபம் 571.1 மில்லியன் டாலர்கள்! ROCHE நிறுவனத்திடமிருந்து பெற்ற உரிமைப்பங்கு (ROYALTY) 78.8 மில்லியன் டாலர்கள்! ஒவ்வொரு TAMIFLU விற்பனையிலிருந்து ரம்ஸ்பில்ட்டுக்கு 10% ...!

ஒவ்வொரு ஆண்டும் 50,000 ஆப்பிரிக்கர்கள் எயிட்ஸினால் பலியாகிறார்கள். உலகெங்கும் சராசரியாக தினமும் 1600 பேர் எயிட்ஸால் பலியாகிறார்கள். சுமார் 18,000 பேர் சாலைவிபத்துக்களில் பலியாகிறார்கள்,25,000 பேர் கொலை செய்யப்பட்டு சாகிறார்கள். காசநோயால் (TB) உயிரிழப்பவர்கள் சுமார் 80,000..! எனினும், உலகமே இன்று பரபரப்பாக அஞ்சும் நோயாக பன்றிக்காய்ச்சல் முன்மொழியப்பட்டு கிட்டத்தட்ட உயிர்க்கொல்லி நோயாகப் பேசப்படுகிறது.

எயிட்ஸ், காசநோய், அம்மைநோய், ஊட்டச்சத்துக்குறைவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மருந்து கண்டுபிடிப்பதைவிட பன்றிக்காய்ச்சல் மூலம் லாபமடைந்துள்ளனர்! இதுதான் முதலாளியத்துவம் கற்றுத்தந்த பாடம்!

பி.கு: அனேக புள்ளிவிபரங்கள் www.nidokidos.org தளத்திலிருந்து பெறப்பட்டன.

அன்புடன்

<<<அபூஅஸீலா-துபை>>>

Share:

எச்சரிக்கை!!!

சமீபகாலமாக தமிழகத்தில் முஸ்லிம் பெண்கள் காதல் என்ற மாய வலையில் சிக்கிபணம், நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிபோகும் துயரமான நிகழ்வுகள் அதிகரித்துவருகிறது. இச் சம்பவங்களின் பின்னனிப் பற்றி ஆய்வு செய்த போது நமதுஉள்ளம் தாங்க பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.முஸ்லிம் பெண்களை காதல் வலையில் சிக்க வைக்க இந்து மத இளைஞர்களுக்குதிட்டமிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்விளைஞர்ளுக்கு முஸ்லிம் பெண்களை மயக்குவதற்க்காக பணம் வழங்கப்படுகிறது.

முஸ்லிம் பெண்களை காதலித்துகடத்தி வரும் இளைஞர்களுக்கு சில இலட்சங்கள் என்ற பெரும் தொகை பரிசாகவும்வழங்கப்படுகிறது.மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களையும்,வேலைக்குச் செல்லும் முஸ்லிம் பெண்களையும் குறி வைத்து இந்து இளைஞர்கள்ஏவி விடப்படுகிறார்கள். சுய முடிவு எடுக்க முடியாத, அறிவு முதிர்ச்சிஅடையாத இந்த மாணவ பருவத்து இளம் முஸ்லிம் பெண்கள் இவர்களின் கொடும் சதிஅறியாது எளிதில் பழியாகி விடுகிறார்கள். சில இடங்களில் திருமணமான இளம்முஸ்லிம் பெண்களும் இவர்களின் இலக்கில் பழியாகி சீழிந்து சிறுமைப்பட்டுபோன வருத்தமான நிகழ்வுகளும் உண்டு.ஒரு இளம் முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையில் நடந்து முடிந்துவிட்ட நமதுஉள்ளம் தாங்காத, கவலை தரும் வருத்தமான நிகழ்வுகளை கவனமாக படியுங்கள்பெரும் இஸ்லாமிய பாராம்பரியமிக்க அவ்வூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவாழ்கிறார்கள்.

அவ்வூரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் தனது பெற்றோர், மனைவி,பிள்ளைகள், சகோதரிகள் சிறப்புடன் வாழ வேண்டும், எவ்வித பண கஷ்டங்களும்அவர்களுக்கு இருந்து விடக் கூடாது என்பதற்க்காக கடல் கடந்து சென்றுஅரும்பாடுபட்டு, கடின உழைப்பு செய்து தனது குடும்பங்களை அல்லாஹ்வின்துணைக் கொண்டு சிறப்புடன் வாழ வைத்து வருகிறார்கள்.அந்த ஊரில் ஒரு சிறந்த குடும்பத்தில் மார்க்க பிடிப்புள்ள பெற்றோர்க்குஇரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. அக் குழந்தைகள்சிறப்புடன் போற்றி வளர்க்கப்பட்டார்கள்.

அப்பிள்ளைகள் பருவ வயதை அடைந்துவரும் சூழலில், அழகிய அந்த குடும்பத்தில் யாரும் எதிர்பாராத கடும்அதிர்ச்சி தரும் சோக சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறியது.பெற்றோரால் பெரும் பாசம் காட்டி வளர்க்கப்பட்ட மூத்த பெண் ஒரு இந்துஇளைஞனால் காதல் என்ற வஞ்சக வலையில் வீழ்த்தப்பட்டு… பெரும் பணம் மற்றும்;நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். இச் செய்தி வெளிநாட்டில்பணிபுரியும் தகப்பனாருக்கு தெரிவிக்கப்பட்டது. பாசம் காட்டி வளர்த்த மகள்படி தாண்டி விட்ட செய்தியை இத் தகப்பனாரின் உள்ளத்தால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவரின் இதயம் வலித்தது, வேதனையின் உச்சத்திற்கு சென்றார்மாரடைப்பு ஏற்ப்ப்ட்டது மருத்துவ மனையில் அவசர சிக்கிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு இருந்த அவர்; மௌத்தாகிவிட்டார். (இன்னாயிலாகி
வஇன்னஇலைகி ராஜியூன்)அன்பு மகள் படி தாண்டி அவமானப்படுத்திவிட்டால், அருமை கணவர் இறந்துவிட்டார் இரண்டு துயரத்தையும் தாங்க முடியாத கண்ணியமான தாய்செய்வதாறியாது தவித்தார் அவள் மனநிலை இவைகளை தாங்கிக் கொள்ளும் சூழலில்இல்லை.

பெரும் கவலை அடைந்த அடைந்த அந்த தாய் இறுதியில் புத்தி பேதலித்துபைத்தியமாகிவிட்டார். மற்ற ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும்,சகோதரியால் ஏற்ப்பட்ட தீராத அவமானம், பாசமிகு தந்தையின் திடீர் மரணம்,அன்புக்காட்டி வளர்த்த தாய் உயிருடன் இருந்தும் நடை பிணமாக வாழும்துரதிஷ்டநிலை இதை நினைத்து இந்த குழந்தைகள் கண்ணீர் வடிப்பதைபார்பவர்களும் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இவ்வளவு வேதனையும், பாதிப்பையும் ஏற்படுத்திய இந்த படி தாண்டிய பெண்ணாவதுசிறப்புடன் வாழ்கிறாளா? என்றால் அவள் படும் வேதனைகள் சொல்லி அடங்காதாகஇருக்கிறது. காதல் என்ற வஞ்சக வார்த்தையால் அழைத்து(கடத்தி) செல்லப்பட்டஇவளை யாரும் எளிதில் காண முடியாத ஊருக்கு கொண்டு சென்றான். இவள் கொண்டுசென்ற பணத்தையும், நகைகளை விற்று செலவு செய்தான். இப்பெண்ணுக்கு தன் தாய்வீட்டில் இருந்தபோது விசேஷ நாட்களில் சந்தனத்தை கரைத்த பழக்கம் உண்டுஆனால் இவனுடன் வந்த பின்பு சானிக் கரைத்து தண்ணீர் தெலிக்கவும்,கோலமிடவும் கட்டாயப்படுத்தப்பட்டால், தனது தந்தை அனுப்பிய வாசனைத்திரவியத்தின் வாசனையை நுகர்ந்து பழக்கப்பட்ட இப்பெண்ணுக்கு இவளுடைய கணவன்தினமும் குடித்து விட்டு வந்து இவள் மீதே வாந்தி எடுத்தான்.. இவளுக்குஇந்த கணவனின் மது வாசனை பெரும் வேதனை தந்தது. அவன் மது குடித்துவிட்டுவந்து தினமும் கக்கி வைக்கும் வாந்தியை சுத்தம் செய்வதே இவளின் அன்றாடவேலையாகியது.நாட்கள் நகர தனது நண்பர்களுடன் வீட்டிலே குடிக்கவும், சூதாடவும்செய்தான். இவளின் காதல் கணவனை இவளால் தடுக்க முடியவில்லை. இதன் தொடர்ச்சிதான் அதிர்ச்சிகரமானது தனது நண்பர்களுக்கும் இப்பெண்ணை இறையாக்க இவன்முற்ப்பட்டான், இவள் அதிர்ச்சி அடைந்து தான் செய்துவிட்ட தவறை உணரத்தொடங்கினால் பலன் ஒன்றும் இல்லை.

அவர்களிடம் இருந்து தப்பிக்கமுற்பட்டால் ஆனால் அவர்களின் பிடியிலிருந்து இவளால் தப்பிக்கமுடியவில்லை. இவளது கணவரின் நண்பர்களும் இவளை இஷ்டம்போல் சீரழித்தனர்.தங்களின் தி;ட்டத்தை 8 மாதத்தில் நிறைவேற்றிக் கொண்ட இந்த இந்து இளைஞன்
இப்பெண்ணை ஒரு பெரும் விபச்சார கும்பலிடம் விலைபேசி விற்று விட்டான்.தனது அடுத்த இலக்கில் சிக்க போகும் முஸ்லிம் பெண் யார் என்ற தேடலில்களமிறங்கிவிட்டான்.விபச்சார கூட்டத்தில் இவள் சிக்கிக் கொண்டு இவள் சந்தித்த கொடுமைகளைஎழுதினால் நாகரிகமாக இருக்காது என்பதால் தவிர்க்கின்றோம். இப்பெண்ணுக்குஇறுதியாக நிற்காத உதிரபோக்கு ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்து மரணத்தைதொட்டுவிடும் சூழல் ஏற்ப்பட்டது. அந்த விபச்சார கும்பல் இவளை ஒரு தனியார்மருத்துவ மனையில் சேர்த்தது. உடல்நிலை சிறிது முன்னேறியது. அங்குபணியாற்றிய இஸ்லாமிய மருத்துவரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை எடுத்துச்சொல்லி பாதுகாப்பான உதவி தேடினால், அந்த மருத்துவர் ஒரு இஸ்லாமியஅமைப்பிடம் இப் பெண்ணுக்கு உதவி செய்ய கேட்டுக் கொண்டார். அவர்கள்விபச்சார கும்பலிடம் கடும் சண்டையிட்டு இப்பெண்ணை மீட்டு தற்சமயம்இஸ்லாமிய கல்வியையும், ஓழுக்க மாண்புகளையும் போதிக்க கூடிய ஒர் இடத்தில்வைத்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.தான் செய்த தவறால் தனது குடும்பம் பட்ட அவமானம், தனது தந்தை மௌத்தானது,தனது தாய் பைத்தியம் ஆகிவிட்டநிலை இப்போது தான் இப்பெண்ணுக்கு தெரியும்,ஆனால் இதுவரை படி தாண்டிய இப்பெண்ணுக்கு நேர்ந்த எந்த நிலையும் அந்தகுடும்பத்திற்க்கும் தெரியாது அவ்வூர் மக்களுக்கும் தெரியாது.வளமிக்க சிறப்புக்குரிய வாழ்க்கையை அமைத்து தரவிருந்த பெற்றோர்களைஅவமானப்படுத்தி, ஏமாற்றிய இந்த பெண். உண்மையாக அவள் தான் ஏமாந்துநஷ்டமடைந்துள்ளால் பல அசௌகரிக உடல் உபாதையுடன் தான் ஏன் வாழ வேண்டும்என்ற எண்ணத்தில் நிம்மதியில்லாமல் வாழ்ந்து வருகிறாள்.இந்த முஸ்லிம் பெண்ணிற்கு நடந்த சம்பவம் படி தாண்டும் பத்தினிகளுக்கு பெரும் பாடம்.(படி தாண்டிய முஸ்லிம் பெண்கள் ஏரத்தாழ ஒரே மாதிரியான சீரழிவுக்குஉள்ளாக்கப்பட்டுள்ளார்கள். என்பதும் விசாரணையில் தெரியவருகிறது.)இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்கதவறுவது
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல்போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்னஎஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள்இ எப்போது வருகின்றார்கள் என்பதை
கவணிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி.வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனிஅறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதிசெய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம்வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழஅனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களைதனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நியஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்தஉதவுகின்றது.
Share:

அதிரை பிரமுகருக்கு அபஹாவில் பாராட்டு

சவுதி அரேபியாவின் மலைப்பிரதேசமான அபஹா- கமீஸ் முஷைத் ஹில்ஸ் டேஷன் தமிழ் நலவாழ்வு மன்றத்தின் ஆண்டு விழாவில் (2/10/2009) அய்டா திரு. ரபியா அவர்களுக்கு பொது நல சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.டாக்டர் வேலு அவர்கள் பிரசிடென்ட், மற்றும் திரு. பிச்சை மணி அவர்கள் செயலாளராகவும் கொண்டு இயங்கும் இச்சங்கம் அப்பகுதி தமிழ் மக்களுக்கு கடனுதவி மற்றும் அல்லல்படுவோருக்கு ஆலோசனை மற்றும் உபகாரங்கள் செய்து வருகின்றன.
Share:

அல் உலா--(02) பயணக்கட்டுரை

பெருநாளின் மறுநாள் காக்கி தமிழ் கம்யூனிட்டி சென்டரிலிருந்து ஆடவர்,பெண்டிர், மற்றும் குழந்தைகள் சுமார் 60 நபருடன் எங்கள் பேருந்து ஜித்தாவிலிருந்து புறப்பட்டது. மஷுராவில் அமீர் (தாம்) உணவு மற்றும்உபசரிப்பு, வாகனம், நிதி போன்ற பொருப்புகள் அய்டா பொருப்புதாரிகளுக்கும் விடுதி, வழிகாட்டி போன்ற பொருப்புகள் திருச்சி அப்துல் அஜீஸ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

ரசூலுல்லாஹ் அவர்கள் சந்தித்த பத்ருயுத்தம் நடந்த மைதானத்தை முதலில் வந்தடைந்தோம். பல தடவை மக்கா,மதீனா சென்றுள்ளபோதும் "முதன்முறையாக பத்ரு காண வாய்ப்பு" என்று அநேகருக்கு ஆனந்தம். யுத்தத்தில் ஸஹிதான ஸஹாபாக்கள் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. (அதிலே ஒரு ஸஹாபிக்கு தன் பெயரென்று நம்மவர் ஒருவருக்கு அற்ப சந்தோஷம்!) லுஹர் & அஸர்ஜம்மு தொழுதுவிட்டு மதீனாவிற்கு "பதுரின்" படையைக்கிளப்பினோம்.

மதீனாவில் மதியச்சாப்பாட்டை அவசரகதியில் முடித்து (அஸர் தொழுகைக்காக உணவகத்தை மூடவேண்டும் என்று உணர்த்தினார்கடை உரிமையாளர் யமனி.) மஸ்ஜித்நபவிக்கு அருகிலே தங்கும்விடுதி கிடைத்து வங்க தேசத்து சகோதரர் எகிப்து நாட்டு வரவேற்பாளருடன் ஒருங்கிணைந்து வகைப்படுத்தி தந்தார்.

சற்றே இளைப்பாறி விட்டு,பேருந்தின் குளிர்சாதனத்தை பழுது பார்க்க ஓட்டுனர்கள் (சவுதி)மண்ணின் மைந்தர்கள் பணிமணை செல்லநம்மவர்கள் ரவுளா ஷரிப்புக்கு சென்று மனிதருள் மாணிக்கம்- உம்மி நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் மற்றும் அபூபக்கர்சித்தீக்,உமர்கத்தாப் ஆகியோருக்கு ஸலாம் கூறி துஆ செய்து விட்டு மற்றும் ஜன்னத்துல் பக்கியில் அடங்கியிருக்கும் அனைவருக்கும் ஸலாம்கூறிய வணணம் வெளியில் வந்தோம்.சிலர் உடனேயும் சிலர் மறுநாளும் இஸ்லாத்திற்காக கட்டப்பட்ட மஸ்ஜித் கூபா, மஸ்ஜித் கிப்லதைன் ஆகிய பள்ளி போன்ற அனைத்து ஜியாராவையும்முடித்துக்கொண்டு வந்தனர். அன்சாரிகள் என்று அழைகப்பட்ட மதீனா மண்வாசனை உணர்ந்தோம். இரவு மற்றும் காலை சிற்றுண்டி பாக்கிஸ்தானி சகோதரிடம் அருந்திவிட்டு புறப்பட்டோம்.

நம்குழுவில் ஒருவர் புறப்பட்டதிலிருந்து தற்போதுவரை சந்தித்த அனைத்து நாட்டினரிடமும் ஒரே (தமிழ்) மொழியில் மட்டுமே பேசி வந்தார். யோவ் அவங்களுக்கு தமிழ் எப்படி விளங்கும் எனவிசாரித்ததில் நமக்கு ஒரே பேச்சுதான்! "பேச்சு மாற மாட்டேன் என்றார்!!!

மதீனா முனவ்வராவிலிருந்து கைபர் வழியாக அல் உலா பயணித்தோம். கைபரும் ரசூலுல்லாஹ் சந்தித்த ஒரு பிரசித்தி யுத்தம். யூதர்களை போரிட்டு வென்றார்கள். இன்னமும் காண வேண்டிய கோட்டைகள் நிறைய அங்கு இருப்பதாக கேள்வி? இந்த கைபர் யுத்தம் எப்போது...ஏன்.நேர்ந்தது...பயணக்கைதிகளுக்கு ரசூலுல்லாஹ் தண்டனையை இஸ்லாமிய சட்டப்படி வழங்கினார்களா? இல்லை யூதச்சட்டப்படி வழங்கினார்களா? என்ற விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டம் அனுப்பினால் நன்றியுடையோராயிருப்போம். கைபர் நகரத்திலேயே மதியச்சாப்பாடு மஞ்சள்சோறு, சுட்டக்கோழியை புரட்டிவிட்டு மஞ்சள் வெயில் தகதகக்க அல் உலா வந்தடைந்தோம்.

அடா அடா! என்ன அழகு! மணற்குவியல் போன்ற மலை ஒரு புறம்.திட்டுதிட்டாக அளவெடுத்து

யாருக்கோ காண்ட்ராக்ட் கொடுத்துச் செதுக்கியது போன்ற கல்மலை மருபுறம். இரண்டிற்கும்

இடையே அதிக உயரமில்லாமல் நச்சென்று ஒரு நட்சத்திர ஹோட்டல். ஏணியிலிருந்து

பச்சை பெயிண்ட்டப்பாவை தவற விட்டுச்சிதரியதுபோல பசேல் என்று புல்வெளி! அதனருகே அமைந்திருந்த நீச்சல் குழாமைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.

ஊரிலும் ஆறு- குளத்தில் குளிக்க வாய்பில்லை, இந்நாட்டிலும் குழாய்க்குளியலாகவே இருப்பதால் சுவிம்மிங்பூல் கன்டவுடன் இளைஞர்கள் அனைவரும் தொபுகடீர் என பாய, நீச்சலுக்கு உகந்த உடுப்பில்லா மலிருந்தவரை நம்மூர் வட்டாரத் மொழியிலே அழைக்க... வேட்டியோட உளுவுப்பா, தப்படிங்க, முட்டகட்டுடா... "தாப்பத்துக்கு" போவாதப்பா... என்று உற்சாக வசனம்பேசி மகிழ்ந்தனர். சற்றே பருமனான சில டிக்கட்(?)கள் இறங்கியுதும் ஆர்க்மெடீஸ் விதிப்படிதண்ணீர் வெளியில் வழிந்தோடியது. இறுதியில் ஜுனியர்- சீனியர் என இருபிரிவினருக்கு நீச்சல் போட்டி வைத்து எல்லோரையும் வெளியாக்கினோம்.

இரவு 8 மணி சுமாருக்கு ஹோட்டலில் வரவேற்பறை அருகே லாபி/LOBBY (யாருக்கேனும் தமிழ் பதம் தெரிந்தால் சொல்லுங்களேன்...?!)அருகே அனைவரும் கூடினோம். மறு நாள் காலை நம் இலக்கு- Final Destination எப்படி எத்தனை மணிக்கு புறப்படுவது...

திரும்புவதுற்கு தாமதமானால் சிறு குழந்தைகள் உணவுக்கு மாற்று ஏற்பாடு அங்கு இறைவனின்

அதாபு இறங்கிய இடத்தில் கடைகளோ- காபேடேரியாக்களோ இருக்கது. நாமும் எதுவும்

அருந்தப்போவதில்லை. என்றவை பற்றி தெரிவிக்கப்பட்டது. பிறகு ஒரு ஹதீஷ் நஷிஹத்துடன். அருமையான ஒரு வினாடி- வினா போட்டி நடத்தி உடனுத்துடன் Instant பரிசுகள் வழங்கப்பட்டது. கேள்விகள் குர் ஆன்- ஹதீஷ்- அரசியல்- விளையாட்டு என்று கதம்பமாககோர்க்கப்ப்ட்டிருந்து. பசியிண் உக்கிரம் உனரப்பட்டு தாமத்திர்க்கு வருத்தம் தெருவிக்கப்பட்டு உணவு அளித்து உறங்கச்செய்தோம்.

எஙளுக்கு வழிகாட்டியாக்க கிடைத்த மண்ணின் மைந்தர் பதுர் அவாதைப்பற்றியும்

அவரது அரபி & ஆங்கில புலமை பற்றியும் கூறியே ஆகவேண்டும். அல்ஹம்துலில்லா. ஹொட்டலின் ரிசப்சனிஷட் அறிமுகம் செய்யஇரண்டு சவுதி இளம் ஆபிசர்கள் எங்களை அணுகி, "எங்கிருந்து வருகிறீர்கள்?

எந்த நாட்டினர்? எங்கே போகிறீர்? என வினவ அவர்கள் உளவுத் துறையினர் என்று உணராமலே பதில் அளித்தோம். மறு நாள் Madain Saleh யில் முழுவதும் எங்களுக்கு பாதுகாப்பு வளையமாக நாங்கள் அறியாமலே வந்ததும் அவர்களே!.

இப்போது எஙள் வாகனம் Madain Saleh Security Gate Meccanse Goldநெனைவு படுத்தும் இருமருங்கும்

மலைகளின் ஊடே நுழைந்தது.

விபரங்கள் விரைவில்!!!
(பயனங்கல் முடிவதில்லை) -தொடரும்

Share: