Tuesday, December 29, 2009

அரசியல் கட்சிகளின் கோபம் எப்படி இருக்கிறது?

1. பி.ஜே.பி - தேர்தலின் போது உற்சாகம் இல்லாமலும், தேர்தல் முடிவு வந்த பிறகு உற்சாகமாகவும் இருப்பார்கள், முக்கியத் தலைவர்களுக்கு கோபம் வந்தால் டிவியில் பேட்டி கொடுப்பார்கள், ரொம்ப கோபம் வந்தால் ஜின்னாவை புகழ்வார்கள்.

2. அதிமுக - அருமையான கட்சி என்று சொல்லக்கூட அம்மா பர்மிஷன் வேண்டும். அம்மா உற்சாகமாக இருந்தால் பால்கனியில் வருவார்கள். கோபம் வந்தால் சட்டசபைக்கு போவார்கள், ரொம்ப கோபம் வந்தால் கொட நாட்டுக்கு போய் மாவட்ட செயலர்களை கெடா வெட்டுவார்கள்.

3. திமுக - திமுக கட்சி ஓர் அருமையான பல்கழைக்கழகம். நல்லதோர் குடும்பம் பல்கழைக்கழகம் என்று எப்போது உற்சாகமாக பாடிக்கொண்டு இருப்பார்கள். கோபம் வந்தால் "நீயும் நானும் தீக்குளிக்கலாம், வர்றியா?" என்பார்கள். ரொம்ப கோபம் வந்தால் சீசீ நான் அதை சொல்ல மாட்டேன்.

4. பா.ம.க - தேர்தல் தோல்விக்கு "ஜாதிக்காய்" நிவாரணம் பெற்று 2011ல் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் அருமையான கட்சி. கோபம் வந்தால் "தமிழின துரோகி" என்பார்கள். ரொம்ப கோபம் வந்தால் 'அன்பு தங்கை' என்று பாசம் பொழிவார்கள்.

5. தேமுதிக - அதிமுக ஆதரவில் இரண்டாம் இடத்துக்கு வந்த அருமையான கட்சி. கோபம் வந்தால் காசு வாங்கு என்று உற்சாகமாக தொண்டர்களுக்கு டியூஷன் எடுக்கும் தலைவர். அவருக்கு கோபம் வந்தால் கட்சி தொண்டர்களை அனுப்பி வடிவேலுவுடன் சண்டை போடுவார். ரொம்ப கோபம் வந்தால் கடவுளையும் மக்களையும் கூட்டணிக்கு அழைப்பார்.

6. மதிமுக - உற்சாகத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாத அருமையான கட்சி. பாதையாத்திரை போவதால் எப்போதுமே உற்சாகமாக இருக்கும் தலைவர். பாதை மாறி மற்ற கட்சிகளுக்கு போவதால் உற்சாகமாக இருக்கும் கட்சி தலைவர்கள். கோபம் வந்தால் குலுங்கிக் குலுங்கி அழுவார். ரொம்பக் கோபம் வந்தால், ஏதாவது ஏடாகூடமா பேசிட்டு, உள்ள போயி கஞ்சி குடிச்சுண்டு ஒபாமாவுக்கு லெட்டர் எழுதுவார்.

(அதிரைவாசி)

அதிரை எக்ஸ்பிரஸின் புதிய இளம் எழுத்தாளருக்கு எமது வாழ்த்துக்கள். கட்டுரைகள் வரையும் போது மிக கவனம் தேவை. மாதத்திற்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நன்றாய் யோசித்து இஸ்லாமிய கொள்கைகளையும் ஒழுக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். ஆரம்பகட்டத்தில் சர்ச்சை வராதவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
-- அதிரை எக்ஸ்பிரஸ்Sunday, December 27, 2009

ஊரில் மழையாமே?!
வெளியில் மழை...என்ன செய்யலாம் கம்ப்யூட்டரில் என
யோசிக்கும்போது வந்தது நண்பனின் கவிதை...

ஊரில் சமீபத்திய மழையில் எடுத்த படங்கள் இன்னும் உதவியது.[ 11th- 22nd December 2009].

கூடிய சிக்கிரம் Piccasa WebAlbum ல் ஊர் போட்டோக்கள
வெளியிடுகிறேன்.

Zakir Hussainகவிதை வடிவம் B. சபீர் அகமது, போட்டோ J. நிஜாம் முஹைதீன்.


ஊரில் மழையாமே?!


மற்றொரு
மழை நாளில்...
மடித்துக் கட்டிய லுங்கியும்
மடக்குக் குடையுமாய்
தெருவில் நடந்த தினங்கள்...

கச்சலில் கட்டிய
புத்தக மூட்டையும்..
"அடை மழை காரணமாக
பள்ளி இன்று விடுமுறை"யென-
தேனாய் இனித்த
கரும்பலகையும்...

சற்றே ஓய்ந்த
மழை வரைந்த
வாணவில்லும்...

சுல்லென்ற ஈர வெயிலும்...
மோதிரக்கல் தும்பியும்...
கருவேலும்
புளிய மரமும்
சேமித்த மழையும்
கிளையை இழுக்க
சட்டென கொட்டி
நனைந்த உடையும்...
மழையில் நனைந்த
"இன்று இப்படம் கடைசி"யும்...
கன்னி வைத்து காதிருந்த உப்பளங்களும்...
பள்ளியில் போட்ட
குட்டை போல
கால்களை இழுத்து நடந்த
தற்காலிக ஓடைகளும்...

முட்டாள் சாதகத்தால்
பாம்பை அழைக்கும் நுழலும்...
மழையில் நணைந்த இரவில்
குழல் விளக்கில்
முட்டி முட்டி பால் குடிக்கும்
விட்டிலும்...

மழை நீருடன்
முயங்கிச் சிவந்த
தண்டவாளத் தடமும்...
தட்டுத் தடுமாறிய நடையும்...
சென்னை ரயிலுக்கு
வழிவிடுகையில்
கை காட்டிய குழந்தையும்...

மழையால் ஊரில்
இயல்பு வாழ்க்கை பாதிப்பாமே?
பொய்யும் புறமும்-
கடனும் பற்றாக் குறையும்-
சண்டையும் சச்சரவும்-
வெட்டிப்பேச்சும் வீண் வம்பும்
என்ற-
இயல்பு வாழ்க்கையை விட
மழையால் பாதிக்கப்பட்ட
வாழ்க்கை மேல் அல்லவா?

-sabeerமரண அறிவிப்பு

நமதூர் மையின்ரோட்டைசேர்ந்த கிஜார் முஹம்மது,சேக் நசுருதீன்,தமிமுல் அன்சாரி,இஸ்மாயில் புகாரி ஆகியோரின் தகப்பனராகிய சேக்காதியார் அவர்கள் சனிக்கிழமை மாலை வபாத்தாகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிவூன்).அன்னாரின் மறுமை நல் வாழ்விற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திக்கும்(துஆ)படி கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, December 23, 2009

பண்பால் உயர்ந்தவர்கள்

அதிரையின் பசுமை நினைவுகள் (தொடர்ச்சி...)
டாக்டர். ஏ.பீ.முகம்மது அலி, Ph.D.,I.P.S., (R)

காதிர் முஹைதீன் கல்லூரி ஆசிரியர்களில் மிகவும் கண்டிப்புடனும் இருந்தவர் பேராசிரியர் ஜெயராஜ் அவர்கள். ஆனால் அவர் வீட்டுக்குச் சென்றால் விருந்தோம்பலில் எடுத்துக்காட்டாக திகழ்வார். ஒரு நாள் புதிதாக வாங்கிய ஹெர்குலிஸ் சைக்கிளில் அவர் வீட்டுக்குச் சென்றேன்.

மழை பிடித்துக் கொண்டது. என்னைப் பார்த்ததும் அவர் ஒரு துண்டை எடுத்து வந்து கொடுத்து தலைதுடைக்கச் சொன்னாது மட்டுமில்லாது, தன் மனைவியினை அழைத்து, ‘இங்கு பாரம்மா தம்பி வந்திருக்கிறான் பாரு, அவன் வாங்கிய புது சைக்கிள் நனைந்து விட்டது அதை துணியெடுத்து வந்து துடை’என்றார் பாருங்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே நான் மறுத்தும் அவர் துடைக்கச் சொன்னார் என்றால் அது தான் மனிதநேய நடவடிக்கையாகும் என்றால் மிகையாகும?

கல்லூரியில் வகுப்பிற்காக இரண்டு கல் கட்டிடமும்-ஒரு நூலகமும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு கீற்றுக் கொட்டைகையும் இருந்தது. மழைகாலங்களில் ஒழுகிய கொட்டைகையில் பாடம் நடத்தி இருக்கிறேன். இப்போது நிலைமை மாறிவிட்டதாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழில் இரண்டு சிறந்த பேச்சாளர்கள் கல்லூரியில் இருந்தார்கள். பேராசிரியர் அப்துல் கரீம் ஒருவர்-மற்றொருவர் அதிரையினைச் சார்ந்த பேராசிரிய நண்பர் அப்துல் காதர். அவர்கள் வெளியூர்களிலும்-சிலோன் போன்ற நாடுகளிலும் தங்கள் புகழை பரப்பியவர்கள்.

கல்லூரி விளையாட்டுப் போட்டியில் மாணவர்களுக்கும்-ஆசிரியர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடக்கும். நான் அதில் கேப்டனாக இருந்து நான் அங்கு வேலைபார்த்த மூன்று வருடங்களிலும் வெற்றி கொண்டேன்.

ஒரு விளையாட்டுப் போட்டிக்கு எங்களூரச் சார்ந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி மறைந்த கேப்டன் இக்பால் தலைமை தாங்கினார். அவரை அதற்கு முன்பு பார்த்ததில்லை. நான் கயிறு இழுக்கும் போட்டியில் பரிசு வாங்கும்போது கல்லூரி முதல்வர் என்னை உங்களூர்காரர்தான் என்று அறிமுகப்படுத்தினார். பிற்காலத்தில் நானும் டி.எஸ்.பியாக வருவேன் என்று நினைக்கவில்லை.

1972 ஆம் ஆண்டு டிசம்பர் 14ந்தேதி இரவு 10 மணியளவில் நடந்த என் திருமணத்திற்கு கல்லூரியிலிருந்து ஆசிரிய நண்பர்கள் பேராசிரியர் ஜெயராஜ் தலைமையில் கல்லூரி முடித்துவிட்டு மிகவும் சிரமத்திற்கு இடையே வந்தார்கள் என்பதினை மறக்க முடியாது. என் மனைவிக்கு முதல் சாம்பு சாட்டின் புடவை அதிரை மார்க்கட்டில்தான் வாங்கி வந்தேன் என்று இன்றும்கூட அவள் சொல்லிக் கொள்கிறாள்.

அதிரை விடைபெறுதல்: கல்லூரி விட்டு என் குருப் 1 பரிட்சைக்கு மாலை நேரத்தில் கல்லூரி கூரைக்கொட்டகையில் அமைதியாக சென்று படிப்பேன். கல்லூரி நூலகத்தில் படிப்பதிற்கு வேண்டிய புத்தகங்களை நூலக- உடற்பயிற்சி ஆசிரியர் எனக்கு வழங்கியது பேருதவியாக இருந்தது.

1973 ஆம் ஆண்டு எழுதிய பரீட்சையில் நான் வெற்றி பெற்று டி.எஸ்.பியாக தேர்வு பெற்றதாக 1974 ஆம் ஆண்டு அறிப்பு வந்தது. என்னுடைய ரிலீப் ஆர்டரை வாங்க மரியாதை நிமித்தமாக தாளாளர் சேக் ஜலாலுதீன் அவர்களைப் பார்த்தபோது மிகவும் சந்தோசப்பட்டு முதல்வருக்கு போன் மூலம் தகவல் சொல்லி உடனே கொடுக்கச ;சொன்னார். இப்போது அவர் இளைய மகனார் அஸ்லம் சிறப்பாக செயலாற்றித் தந்தையின் புகழினை நிலை நாட்டுகிறார் என அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் என்போர்ஸ்மெண்ட் எஸ்.பியாக தஞ்சையில் பணியாற்றிய போதும், கோஸ்டல் செக்யூரிட்டி எஸ்.பியாக பணியாற்றிய போதும் இரு முறை கல்லூரிக்கு சென்றிருக்கிறேன். எனது கல்லூரி சக ஆசிரியர்கள் பேராசிரியர் ஹசனும், பேராசிரியர் ராஜமாணிக்கமும் இன்றும் சென்னை வந்தால் என்னை சந்தித்து விட்டு செல்வார்கள்.

என்னிடம் படித்த பல மாணவர்களில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாயின்ட் செகரிட்டரியாக இருந்த ஆறுமுகம் என்பவர் எப்போதும் கல்லூரி சம்பவத்தினை நினைவூட்டி பசுமையூட்டுவார். அந்த பசுமை நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

-முற்றும்-

Tuesday, December 22, 2009

உழைப்பால் உயர்ந்தவர்கள்

அதிரையின் பசுமை நினைவுகள் (தொடர்ச்சி...)
டாக்டர். ஏ.பீ.முகம்மது அலி, Ph.D.,I.P.S (R)

அதிரை மக்கள் உழைப்பில் உயர்ந்தவர்கள் என்பதினை ஒரு சம்பவம் மூலம் உங்களுக்குச் சொல்லலாமென நினைக்கிறேன். அதிரைக்கு எப்போதாவது மலாக்கா மஜித் என்ற தன்வந்தர் வருவார். சாலிக்காக்கா டிபன் சென்ட்டருக்கும் வருவார். அங்கு நான் அவரை பார்த்திருக்கிறேன்-ஆனால் பேசியதில்லை.

1979 ஆம் ஆண்டு நான் கோவை நகர டி.எஸ்.பியாக இருந்தபோது மலேசியாவிற்கு என் தந்தையினை காண சென்றேன். அதன் பின்பு மலாக்காவில் இருக்கும் என் உறவினர் ஜமால் எச்.பி. அவர்களைப் பார்க்க போயிருந்தேன். அவர் மகனும் என் நண்பனுமான மீரா முகைதீன் என்னை மதிய சாப்பாட்டுக்கு ஸ்பெசல் மீல்ஸ் வாங்கித் தருகிறேன் என்று ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்றார். அங்கே சாப்பிடுவதிற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. சிறிது நேரம் சென்று உள்ளே சென்று ஒரு மேஜையில் அமர்ந்தோம்.

எங்களுக்கு முன்பு சாப்பிட்டவர்கள் சாப்பிட்டதைத் துடைக்க ஆஜானு பவானான மஜீது அவர்கள் வெறும் பனியனுடன் காட்சி அளித்தது என்னை வியக்கச் செய்தது.நான் அவரிடம் என்ன சுகமாக என்றுகேட்டேன். என்னை அவருக்குத் தெரியவில்லை.பின்பு அவரிடம் அதிரைக்கல்லூரியில் வேலை பார்த்த விசயத்தையும் சாலி காக்கா கடையில் அவரை பார்த்ததினையும் சொன்னேன்.

இதற்குள் என் நண்பன் நான் டி.எஸ்.பியாக வேலை பார்ப்பதினைச் சொன்னான். உடனே அவர் கொஞ்சமும் கூச்சமில்லாது, ‘ஒரு சர்வர் வரவில்லை ஆகவே அந்த வேலையினை நான் செய்கிறேன் என்றார்’ அந்த ஹோட்டலுக்கு முதலாளியான மலாக்கா மஜீது அவர்கள். அது தான் செய்யும் தொழிலே தெய்வம் என்றனர் தமிழ் அறிஞர்கள்.

-தொடரும்-

Monday, December 21, 2009

பாசக்காரப் பசங்க

அதிரையின் பசுமை நினைவுகள் (தொடர்ச்சி...)
டாக்டர். ஏ.பீ.முகம்மது அலி, Ph.D.,I.P.S (R)

காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் பாசமிக்கவர்கள். பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, முத்துப்பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து படிக்க வந்தார்கள். நான் விடுமுறை நாட்களில் எங்களூருக்குச் சென்றுவிட்டு காரைக்குடி-மாயூரம் அதிகாலை நாலரை மணிக்கு புறப்படும் ரயிலில் ரிசர்வ் செய்யாத பெட்டியில் லக்கேஜ் வைக்கும் பலகையில் படுத்துக் கொண்டு வருவேன்.

அறந்தாங்கி, பேராவூரணியில் ஏறிய மாணவர்கள் அரட்டை அடித்துக் கொண்டு வருவதைப் பார்த்து சப்தம் கேட்டதும் கீழே இறங்கி விடுவேன். என்னைப் பார்த்து தங்கள் அன்பின் மழையில் டீ-காபி வேண்டுமா எனக் கேட்டு தொல்லை செய்து விடுவார்கள்.

அதே போன்று நாங்கள் பட்டுக்கோட்டைக்கு மாலை சினிமா பார்க்க சென்றோமென்றால் அதை அறிந்து அதிரை வரும் கடைசி பஸ்ஸில் தங்கள் கைத்துண்டினைப் போட்டு இடம் வேண்டாமெ என்றாலும் பிடித்துவைப்பார்கள்.

ஆசிரியர்களும் மாணவர்களிடம் மிகவும் பரிவுடன் நடந்து கொள்வார்கள். ஒரு தடவை கல்லூரி அரைப்பரீட்சை லீவில் பி.ஏ. முதலாமாண்டு படிக்கும் பேராவூரணி மாணவர் ஒருவர் இறந்து விட்டார் என்று கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிந்து ஒரு நாள் கல்லூரி லீவு விடப்பட்டது. ஆசிரியர்கள் சார்பாக நான் மாணவர்களுடன் அவர் வீட்டுக்கு சென்று எங்கள் அனுதாபத்தினை தெரிவித்து வந்தேன்.

ஆனால் புதுக் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன்பு ஆர்க்கிடெக்ஸர் இரண்டாமாண்டு படிக்கும் தந்தையினை இழந்த மாணவி சதக் பாத்திமா தொடர்ந்து படிக்க பணமில்லையே என்று தற்கொலை செய்தி யறிந்து ஒரு அனுதாபச்செய்திகூட தெரிவிக்காமல் வகுப்பு நடந்து கொண்டது அறிந்து அந்த டீனிடம் கேட்டு விட்டு ஜாம் பஜாரில் இருக்கும் அந்தப் பெண் வீட்டில் அனுதாபமாவது போய் தெரியுங்கள் என்றேன்.

இதுதான் கிராமப் புறத்து பாசத்திற்கும் நகர மெக்கானிக்கல் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசமாகும்.

-தொடரும்-

Sunday, December 20, 2009

வேட்டி கட்டிய வெள்ளைக்காரரோ?

அதிரையின் பசுமை நினைவுகள் (தொடர்ச்சி...) டாக்டர். ஏ.பீ.முகம்மது அலி, Ph.D.,I.P.S (R)

அதிரையில் அடியெடுத்து வைத்தல்: நாட்கள் உருண்டோடின. ஜுலை மாதம் குருப் 1 பரீட்சை முடிவு வெளிவந்தன. அதில் நான் தேர்வு பெறவில்லை. நான் ஊரில் இருக்கும் போதெல்லாம் எங்களுர் பள்ளியில் மாலை நேரத்தில் கால்பந்து விளையாடுவேன். அப்படி நான் ஒரு நாள் விளையாடிக் கொண்டு இருக்கும்போது என் நண்பனும் அதிரை கல்லூரி முன்னாள் மாணவனுமான காசிம், பேராசிரியர் அசன் அனுப்பியிருந்த தந்தியினை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காட்டி அதில் என்னை உடனே அதிரைக்கு அழைத்து வரச் சொன்ன தகவரையும் சொன்னார்.

நாங்கள் இருவரும் இரவோடு இரவாக ரயிலில் அதிரை புறப்பட்டு மறுநாள் காலை போய் சேர்ந்தோம். பேராசிரியர் அசன், காதர் முகைதீன் கல்லூரி தாளாளர் சேக் ஜலாலுதீன் வீட்டையொட்டிய குடியிருப்பு ஒன்றில் பேராசிரியர் அபுபக்கர், சிப்ளி, ஜின்னா ஆகியோருடன் தங்கி இருந்தார். அடுத்த குடியிருப்பில் ஆங்கில பேராசிரியர் இக்பால் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

அசன் அவர்கள் வரலாற்றுத் துறையில் ஒரு லெக்சரர் போஸ்ட் காலியாக இருக்கு நீங்கள் தாளாளரை போய் பாருங்கள் என்றார்.நான் கொண்டு வந்த மாற்றுத் துணிகளை அணிந்து கொண்டு அவரைப் போய் பரந்த பங்களா போன்ற வீட்டில் அவருடைய அலுவலகத்தில் போய் பார்த்தேன்.

பார்ப்பதற்கு ஒரு ஆங்கிலேயர் கைலியும் சட்டையும் தொப்பி அணிந்தால் எப்படியிருப்பார் அது போன்று மிகவும் கம்பீரமாக இருந்தார். நான் படித்த கல்லூரிகள் விபரத்தினைக் கேட்டு விட்டு என்னை மேலும் கீழும் பார்த்து தராசில் எடைபோடுவது போல போட்டுவிட்டு போய் பிரின்ஸ்ப்பால் செல்வக்கணபதியினைப் போய் பாருங்கள் என்று மட்டும் சொன்னார்.

அவரைப்போய் கல்லூரியில் பார்த்ததும் இன்று உங்களை வேளையில் சேர்க்கும்படி தாளாளர் சொல்லிவிட்டார் உடனே சேருங்கள் என்றார். நான் மாற்று டிரஸ் எதுவும் எடுத்து வரவில்லை. என்றேன்.அதற்கு அவர் வெள்ளி லீவில் போய் எடுத்து வாருங்கள் என்றார். பேராசிரியர் அசன் இரண்டு நாட்களுக்கு தனது உடுக்கையினை தந்து பேருதவி செய்தார்.

இந்தக் காலத்தில் எந்த தனியார் கல்லூரியிலும் ஆசிரியர் வேலைக்கு வெயிட்டான சிபாரிசுடம் ரூபாய் 10 லட்சம் கேட்பதாக அறிந்து வேதனைப் படுகிறேன். ஏனென்றால் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணம் கொடுத்து வேலையில் சேர முன்வர மாட்டார்கள். தாளாளருக்கு உதவியாக பாருக்-உமர் என்பவர்கள் இருந்தனர்.

அதிரையில் உலா: வங்கக் கடல் ஓரத்தில் தென்னை மரமும், பச்சை பசேல் என்ற நெல் விவசாயமும், பருத்தி விரித்து போட்டது போன்ற உப்பளமும் ஒருங்கே அமையப்பெற்ற ஊர் அதிரையாகும். அதிரையில் சில அதிசய பழக்கஙகள் கண்டேன்.

திருமணம் முடிந்ததும் மணமகன் பெண் வீட்டோடு மாப்பிள்ளையாகி விடுகிறார். காலை-மாலை தாயார் வீட்டில் விருந்து இரவு பெண்வீட்டில் சாப்பாடு-தங்கள். காலையில் கையில் கைலி-துண்டு-பேஸ்ட்டுடன் கூடிய பிரஸ்-குளிக்க சோப் ஆகியவற்றுடன் கிளம்பி நேராக சாலி காக்கா புரோட்டக் கடையிலோ அல்லது மற்ற கடையிலோ நாஸ்தா பின்பு குளியல். இதுதான் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதினைக் கண்டேன்.

நாங்கள் கல்லூரிக்கு போகுமுன் சாலிகாக்கா கடையில்தான் டிபன் சாப்பிடுவோம். ஆகவேதான் மேற்கூறிய பழக்கம் எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. மாலையில் ராஜாமடம் தேவர் மெஸ்ஸில் சாப்பாடு. அது குடிசையில் அமைந்திருக்கும். அந்த தேவர் இளைஞர் எந்த வகை மீன் சாப்பாடு, அதாவது டேங்க் ப்பிஸ் அல்லது சீ ப்பிஸ் என்பதிற்குப் பதிலாக டேங்க் பிஸ் அல்லது சீ பிஸ் வேண்டுமா என்று கேட்பார். அதே ஒரு விளையாட்பாக அமையும்.

நோன்பு நேரத்தில் எல்லா ஹோட்டல் முன்பும் சாக்கு தொங்கவிடப் பட்டிருக்கும. நோன்பு இல்லாதவர்கள் மறைந்து தான் சாப்பிடுவார்கள். வெள்ளி லீவு அன்று ராஜாமடம் ஆறு வரை நடந்து சென்று வருவோம். நாங்கள் அகமது & கோ காம்பவுண்டில் வசித்தபோது மெஸ் நடத்தினோம்.

ஒரு தடவை எங்களுக்கு சம்பளம் போட இரண்டு மாதம் ஆனது. அப்போது மெஸ் நடத்த ராமமூர்த்தி என்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஊரில் அவருக்குத் தெரிந்த நபரிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்து மெஸ் நடத்த உதவி செய்தார். வேறு என்ன வழி அன்னிய ஊரில்? அந்த ராமமூர்த்தியை இன்றும் மறப்பதில்லை.

வேலை பார்த்த 3 வருடத்தில் ஒரே தடவை கல்லூரி மேனேஜ்மென்ட்டுக்கு வேண்டியவர் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டேன். அங்கே ஒரே தட்டில் 5 அல்லது 6 நபர்கள் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தினைக் கண்டேன். இது இஸ்லாம் போதித்த சமத்துவ-சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டு என்றால் மிகையாகாது.

மேடைப்பள்ளி கட்டி முடித்து திறப்பு விழாவும் நடந்தது. அதில் இசை முரசு தனது சங்கநாதத்தால் இறைவனை புகழ்ந்தது அவருக்கு இணை அவரேதான் என்றளவிற்கு இருந்தது.

-தொடரும்-

Photo : கான் பிரதர்ஸ்

Saturday, December 19, 2009

DOWNSYNDROME


DOWNSYNDROME
தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற குழந்தைகள் நமது ஊரில் ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தராவது இருக்கிறார்கள்.நாமும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதற்க்கு காரணம் வசதிகள் இருந்தும் ஒருவகையான அறியாமைதான் என நினைக்கிறேன். நாம் நேரடியாக பாதிக்கபடாதவரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைப்பது மனித இயல்பு.
இந்த குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை வளர்ப்பவர்கள் நிறைந்த பக்குவம் அடைகிறார்கள். 9 வருடத்துக்கு முன் எனது நண்பர் ஒருவருக்கு இது போன்ற பெண் குழந்தை பிறந்தது இப்போது அந்த பெண் குழந்தை இறைவன் உதவியாலும், முறையான பயிற்ச்சிகளாலும் எல்லோரைப்போல் தனது வாழ்க்கையை எதிர் கொள்கிறாள்.

அனைத்துலக ரீதியில் இதுபோன்ற குழந்தைகளுக்கு பயிற்ச்சி பள்ளிகள் இருக்கிறது. அதற்க்காக உதவிகளும் செய்கிறார்கள். பணத்தை துரத்தும் வாழ்க்கையை கற்றுத்தரும் இப்போதைய கல்வி முறைகள தவிர்த்து, குழந்தைகளின் செயல்படும் தகுதிக்கு ஏற்ப சொல்லித்தரும் கல்வி முறைகளை கனடா நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்

இது போன்ற குழந்தைகளை சரியான முறையில் மருத்துவ சிகிச்சைக்கு உடன்படுத்தும் போது [ உதாரணம்: அக்கு ப்ரஸ்ஸர் / அக்கு பன்க்சர் / தை-ச்சி / யோகா / வர்மம் ] இந்த குழந்தைகள் மற்றவர்களைபோல் செயல் பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை வழி நடத்த பொறுமை அதிகம் தேவை.இந்த குழந்தைகளை மன நலம் குறைந்தவர்கள் என்று சிலர் சொல்வதுண்டு....என்னை பொருத்தவரை நாம் தான் மன நலம் குறைந்தவர்கள்

இவர்களிடம் பழகிப்பார்த்தால் தெரியும் நான் சொன்ன உண்மை, இவர்களிடம் புறம் பேசுதல் , பொய் , ஏமாற்றுதல் , ஈகோ , எதுவும் கிடையாது. இப்போது சொல்லுங்கள் யார் உண்மயில் மன நலம் குறைந்தவர்கள்?. நமது ஊரில் இந்த குழந்தைகளுக்கு ஒரு பள்ளி ஆரம்பித்ததாக கேள்விப்பட்டேன். இறைவன் உதவியால் முயற்ச்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

ZAKIR HUSSAIN

அதிரையின் பசுமை நினைவுகள்- டாக்டர். ஏ.பீ.முகம்மது அலி, Ph.D.,I.P.S.,

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாண்ட தஞ்சைத் தரணியின்காவிரி கடைமடைப் பகுதியாக அதிரையின் அருமை பெருமையை உள்ளூர்காரர் சொல்வதைவிட விருந்தினராக வந்து சிலகாலம் வாழ்ந்து சென்று மறக்க முடியாத நினைவுகளை அள்ளிச் சென்றவர் சிலாகித்துச் சொல்லும்போது நம்மையறியாமல் நம் பாரம்பரியத்தின்மீது நன்மதிப்பு ஏற்படுகிறது.அதிலும் இதையே பிரபலங்கள் சொல்லும்போது சற்று பெருமிதம் ஏற்படத்தானே செய்யும்!

காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாகிப் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் நாட்டின் பலபிரபலங்கள் பயின்று பயிற்றுவித்துச் சென்றுள்ளனர். அத்தகையவர்களில் ஒருவரான மாண்புமிகு முனைவர் முஹம்மது அலி IPS (முன்னாள் சென்னை மாநகர கமிஷனரும் குற்றவியல் துறையின் மூத்த அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்கள்.

அரசியல்வாதிகளின் ஆடு-புலி-ஆட்டத்தில் அநியாயமாக துர்ப்பிரயோகம் காரணமாக அரசியல் பொய்வழக்குகளிலிருந்து மீண்டு,தற்போது ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்கும் ஜனாப். முஹம்மது அலி அவர்களின் ஆக்கம் அதிரை எக்ஸ்ப்ரஸில் வெளியானததை தொடர்ந்து, அதிரை குறித்த மேலதிக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டிருந்தோம். நமது அன்புகோரிக்கையை ஏற்று,நமதூர் கல்லூரியில் பணியாற்றிய அனுபவங்களையும் கண்டு, கேட்டு,வியந்து,ரசித்து மகிழ்ந்த இனிய நினைவுகளையும் அதிரைஎக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்காக வழங்குவதன்மூலம் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

சுவாரஸ்யம் கருதி 3-4 பகுதியாக தனித்தனி பதிவாக வெளியிடப்படும். சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்படாதவர்கள் அல்லது அவர்தம் குடும்பத்தினர் மேலதிக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் அதிரை இளைய தலைமுறைக்கு நம்முன்னோர்களின் சிறப்புகளை எடுத்துச் சொல்ல நல்ல வாய்ப்பாக அமையும்.


சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ. 1966-69 ஆம் ஆண்டுகளில் படிக்கும் போது விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது காயல்பட்டிணம், கீழக்கரை, அதிரை, நாகூர், கூத்தா நல்லூர், பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம், திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற் ஊர்களிலிருந்து முஸ்லிம் மாணவர்கள் படித்தார்கள்.

நான் கல்லூரி-விடுதியில் விளையாட்டில் பல பரிசுகளை வாங்கியதா:லும்-விடுதியில் மெஸ் கமிட்டியில் இருந்ததாலும் எனக்கு நண்பர்கள் படை ஏராளம். அதிரையில் ரஜாக் என்ற சீனியரும் (பிற்காலத்தில் சென்னை ராயப்பேட்டையில் பென் சென்டர் வைத்திருந்தார்), ஜூனியர் கலாம்(மைலாப்பூர் ராதாக்கிருஷ்ணன் சாலையில் டாய் செண்டர் வைத்திருந்தார்) ஆகியோரைத் தெரியும். மேற்கூறிய ஊர்களில் முதலில் நான் காலடிஎடுத்து வைத்த ஊர் அதிரைதான்.

அதிரைக்கு முன்னோட்டம்: எனது எம்.ஏ. படிப்பினை சென்னை மாநிலக் கல்லூரியில் தொடர்ந்தேன். முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த போது எங்களூர் இளையாங்குடியில் கல்லூரி ஆரம்பிக்க 1969 ஆம் ஆண்டு முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள். அந்த முயற்சியில் நானும் என்னை இணைத்துக் கொண்டேன்.

அப்போது அதிரை பேராசிரியர் தன்னுடைய மாணவன் காசிமை பார்க்க இளையாங்குடி வரும்போதெல்லாம் கல்லூரி ஆரம்பிக்க சிலயோசனை சொன்னதால் எனக்கு அவர் அறிமுகமானார். எனது இறுதியாண்டில் டிப்டி கலெக்டர்-டி.எஸ்.பி தேர்விற்காக தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் நடத்தும் குருப் 1 பரீட்சை எழுதியிருந்தேன்.

நான் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்து நேர்முகத் தேர்விற்கு சென்னைக்கு 1971 ஆம் வருடம் மே மாதம் அழைக்கப் பட்டிருந்தேன். அந்த சமயத்தில் என் எம்.ஏ தேர்வு முடிவும் வெளிவந்து அதில் தேரியிருந்தேன். நான் நேர்முக தேர்வு முடிந்து இளையாங்குடி திரும்புவதிற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் ரயிலுக்காக காத்திருந்தேன்.

அப்போது பேராசிரியர் அசனும் சென்னையிலிருந்து அதிரை செல்வதிற்காக ராமேஸ்வரம் ரயிலுக்கு வந்தார்.அப்போது என்னிடம் நலம் விசாரித்து, பின்பு ‘உங்களுக்கு நேர்முகத் தேர்வி;ல் குருப் 1 பரீட்சையில் தேர்வாக வில்லையென்றால் என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நான் மறுபடியும் பரீட்சை எழுதி முயலுவேன் என்றேன். அதற்கு அவர், ‘ஏன் நீங்கள் ஏதாவது ஒரு கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டே முயற்சி செய்யலாமே’ என்று சொன்னார்.நான் யோசனை செய்கிறேன் என்று சொல்லி விடைபெற்றேன்.

-தொடரும்-

மரண அறிவிப்பு


மர்ஹூம் அஹமத் தம்பி அவர்களின் மனைவியும்,அஹமத் மக்தூம்,அப்துல் ஜப்பார்,சரபுதீன்,அஜ்மல் கான் ஆகியோர்களின் தாயும்,நெய்னா முஹம்மத் அவர்களின் மாமியாருமான நப்சா அம்மாள் (உ ம குடும்பம்) அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் (அதிராம்பட்டினம்) வபாத்தாகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் மக்பிரத்துக்காக,அனைத்து சகோதரர்-சகோதரிகளும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் ரலி நூல்:அபூதாவூத், திர்மிதி)நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கொடையாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாாிஸி ரலி நூல்: அபூதாவூத், திர்மிதி)

Wednesday, December 16, 2009

வஞ்சிக்கப்படும் அதிரை ?

நமதூரில் சமிபகாலமாக சமையல் எரிவாயு கிடைக்காமல் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து வருகின்றனர்.

இதனால் மண்ணெண்ணையின் விலை விண்ணை தொடுகிறது பாவம் இந்த மழை காலங்களில் சமையல் எரிவாயு கிடைக்காமல் கள்ள மார்கெட்டில் ருபாய் 750வரை விற்க்கபடுகிறது முன்னர் பதிவு செய்து 21நாட்களுக்கு ஒரு சிலிண்டர் என விநியோகித்து வந்த பட்டுகோட்டை நாடியம்மன் கேஸ் நிர்வாகம் இப்பொழுது கணக்கு வழக்கு இல்லாமல் இஷடத்திற்கு வழங்கி வருவதாக நமக்கு தகவல் தருகின்றனர் .

இதற்க்கு எந்த நபரும் முயற்சி மேற்கொண்டதாக இதுவரைக்கும் தகவல் இல்லை . காலை 11மணிக்கு மீன் வாங்கி கொடுத்ததோடு லுகர் தொழுத உடன் சாப்பாட்டுக்கு செல்லும் ஆண்களே...... சமையல் எரிவாயு கிடைக்காத கஷ்டத்தை கொஞ்சம் புரிந்து கொண்டு தங்களது சுய நலத்துக்காக வேண்டியாவது ஊரில் இருக்கும் ஆண்கள் கீழ் காணும் தொலை பேசியில் மாவட்ட ஆட்ச்சியரை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டுகிறோம்.

04362-230102

Wednesday, December 9, 2009

அதிரையில் பரவும் சிக்குன் குன்யா கண்டு கொள்ளாத பேரூர் நிர்வாகம்...

அதிரையில் சமிப காலமாக பரவும் சிக்குன் குன்யா நோயால் அதிரையில் பலபேர் பாதிகாப்பட்டுள்ளனர் இதனால டாக்டர் செல்வராஜ் மருத்துவமனையில்
தினந்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன இதை பார்க்கும் போது அதிரையில் நிர்வாகம் செயல் இழந்ததை காட்டுகிறது
மேலும் அதிரையில் இயக்கம் பேசும் இயக்கவாதிகளும் தமது இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள்
இது போன்ற சேவைகளுக்கு அதிரையில் ஆள் இல்லை எனவே வெளிநாடு வாழ் நமது சகோதரர்கள் மற்றும் அக்கறையுள்ள அதிரைவாசிகள் கீழ் கண்ட இணையத்தில் தொடர்புகொண்டு நமது குறைகளை புகாராக அனுப்ப வேண்டுகிறோம் .

Tuesday, December 8, 2009

இதுக்கு முந்தப்போவது யாரு?

அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

அன்புடையீர்,

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதி தேனி மாவட்டம். தாழ்த்தப்பட்ட சமூகத்தவராக இருந்து 20-30 ஆண்டுகளுக்குமுன் இசுலாத்தை ஏற்ற மக்கள் தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் வசித்து வருகின்றனர். அன்றாடம் உழைத்தால்தான் உணவுக்கு உத்திரவாதம் என்ற நிலையில் வாழும் மக்களில், ஆணும் பெண்ணும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஒருவர் இறந்தபின் அவருடன் வருபவை மூன்று. அதில் ஒன்று நிலையான கல்வி; மற்றொன்று நிரந்தர தர்மம். ஒரு தலைமுறையையே முன்னேற்றுவதற்குத் தேவையான கல்வியைக் கொடுத்தல் என்பது இவ்வுலகம் அழியும் வரையிலான நன்மையை நிரந்தரமாகப் பெற்றுத் தரும் நற்செயலாகும்.

நம் சமுதாயம் இன்று எல்லா நிலையிலும் அடங்கி ஒடுங்கி, அனைத்து மட்டங்களிலும் பின் தங்கியிருப்பதற்குக் கல்வியில் கவனமின்றி இருப்பது மிக முக்கிய காரணமாகும்.


"தாழ்ந்திருக்கும் கையை விட உயர்ந்திருக்கும் கை மேலானது" என்பது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாக்கு. ஒருவரது தற்காலிகத் தேவையை அவ்வப்போது தீர்த்து வைப்பது என்பது, அவரைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் நிலையில் தொடர்ந்து நீடிக்க வைப்பதற்கு மறைமுகமான ஊக்கமளிப்பதாகும். அதைவிட, அவரது தேவையை அவரே தீர்த்துக் கொள்ளும் வகையில் கவுரவமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது மிக உயர்ந்த நற்செயலாகும். மார்க்கச் சகோதரர்களைப் பொருத்தவரை ஒருவரின் கவுரவத்தைப் பாதுகாப்பதும் மற்ற முஸ்லிம்களின் மீது கடமையாகும்.

அதன் அடிப்படையில், T. மீனாட்சிபுரம் எனும் கிராமத்தின் எதிர்காலத்தையே முழுமையாக மாற்றி அமைக்கவல்ல இளம் தலைமுறையினரின் கல்விக்காகச் செலவழிக்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமையாகும். அதற்காக அக்கிராமக் குழந்தைகளின் ஆண்டுக் கல்விக்கான முழு தொழுகையினையும் ஒவ்வொரு ஆண்டும் முழுமையாகக் கொடுத்து உதவி, அவர்களின் கல்வி இறுதிவரை தடைப்பட்டு விடாமல் முழுமையடையும் வகையில் அக்கிராமத்தைத் தத்தெடுக்கவும் நம்மில் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என சத்தியமார்க்கம்.காம் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

மாணவரில் ஒருவருக்கும் மாணவியரில் ஒருவருக்கும் பள்ளிப் படிப்பின் இறுதி வரைக்குமான செலவுகளுக்கு சத்தியமார்க்கம்.காம் பொறுப்பேற்கிறது. இந்த நல்வாய்ப்பை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.


வாழ்க்கைத் தரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இக்கிராமத்து முஸ்லிம்களின் பிள்ளைகள் பஞ்சாயத்து போர்டு பள்ளிகளிலேயே பயின்று வருகின்றனர். குடும்பச் சூழல் காரணமாக இடையில் படிப்பை விடும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகம். மதிய நேர சத்துணவுக்காகவே பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் அவல நிலையும் தொடர்கிறது. மெட்ரிகுலேசன் படிப்பு என்பது அவர்களுக்குத் தூரத்துக் கனவு.

இந்நிலையில் இம்மக்களின் வறுமை மற்றும் கல்வி ஆசையை சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள சில கிருஸ்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் சமீப காலமாக முயன்று வருகின்றன. நான் இங்கு சிபாரிசு செய்துள்ள T. மீனாட்சிபுரம் கிராமத்துப் பிள்ளைகளை அருகில் தேவாரம் என்கிற ஊரில் அமைந்துள்ள குட்செப்பர்டு மெட்ரிக் பள்ளி நிர்வாகம், இலவசக்கல்வி, சீருடை என ஆசைக்காட்டி 2007-2008 கல்வியாண்டில் அழைக்க, இம்மக்களும் மெட்ரிக் படிப்பு கனவில் பிள்ளைகளைச் சேர்க்க, அப்பிள்ளைகளைப் பைபிள் வகுப்புகளுக்கும் சர்ச்களுக்கும் ஜெபக் கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.இந்த ஆபத்து நமது கவனத்திற்கு வந்தவுடன் அக்கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் மேலும் ஒரு கிராமமான திம்மிநாயக்கன் பட்டி கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் அப்பள்ளியிலிருந்து இடமாற்றம் பெற்று, உத்தமபாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளோம்.

அப்பள்ளி நிர்வாகம் கல்விக் கட்டணம் முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளனர். சீருடை மற்றும் புத்தகங்களுக்கான செலவைப் பெற்றோர் ஏற்க வேண்டும் என்றும் மீதமுள்ள போக்குவரத்து மற்றும் இதர கட்டணங்களைத் தங்களைப் போன்ற சமூகம் நலன் நாடும் அமைப்புகள் மூலம் பெற்றுத் தருவது என்றும் முயன்று, இறையருளால் ஓராண்டு (2008-2009) சமாளித்து விட்டோம். 2009-2010 கல்வி ஆண்டில் மேலும் அதிகப் பிள்ளைகள் சேர்ந்துள்ளனர்.

T. மீனாட்சிபுரம் பிள்ளைகள் 18 பேரின் கல்விக் கட்டணம் விவரங்களைத் தங்கள் உதவி வேண்டி இத்துடன் இணைத்துள்ளேன். திம்மிநாயக்கன் பட்டி கிராமத்தைச் சார்ந்த 12 பிள்ளைகளுக்கான செலவினை வேறு அமைப்பினர் - சமுதாய ஆர்வலரிடம் பெற வேண்டிய தேவையும் உள்ளது. அதற்கும் நீங்களே வழிகாட்டினால் பேருதவியாக அமையும். இசுலாத்தைப் புதிதாக ஏற்ற இந்த மக்களின் எதிர்கால வாழ்விற்கு தங்கள் மூலம் வழிகாட்ட வல்ல இறையை வேண்டி வேண்டுகோள் விடுக்கிறேன். தங்கள் பேருதவியைப் பள்ளி முகவரிக்கே அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வுதவி ஆண்டுதோறும் தொடரும் அளவிற்கு வல்ல இறைவன் தாங்கள் அனைவரது வளனும் சிறக்க அருள் புரிவானாக!

நிறைய அன்புடன்,
பேரா. மு. அப்துல் சமது
தமிழ்த்துறை விரிவுரையாளர்
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
உத்தமபாளையம் - 625 533
போன் : 04554 - 265225
தேதி : 17/08/2009
----------------------------------------------------

T. மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் வேண்டுகோள் மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

எங்கள் கிராமத்து முஸ்லிம்களின் நிலையையும் இவ்வுதவி வேண்டுவதன் காரணத்தையும் பேராசிரியர் மு. அப்துல் சமது அவர்கள் விரிவாக எழுதியுள்ளதால், இங்கு அவற்றைக் குறிப்பிடவில்லை. இஸ்லாத்தைப் புதிதாக ஏற்ற எங்கள் மக்கள் தொடர்ந்து வல்ல இறைவனின் நேர்வழியாம் தீன் வழியில் நிற்பதற்குத் தங்களது பேருதவி துணை நிற்கும்.

உத்தம பாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் பயிலும் எங்கள் ஜமாஅத்தைச் சார்ந்த 18 பிள்ளைகள்தாம் எங்கள் ஜமாஅத்தில் இருந்து மெட்ரிகுலேசன் கல்வி பெறும் முதல் தலைமுறை. அவர்களது கல்வி மேம்பாட்டிற்குத் தாங்கள் உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இத்துடன் பள்ளிக் கட்டண விபரங்களை இணைத்துள்ளோம். தாங்கள் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ எங்கள் ஜமாஅத்தினர் அனைவரும் துஆச் செய்கின்றனர். நன்றி.


வஸ்ஸலாம்.

தலைவர்
மீனாட்சி புரம் முஸ்லிம் ஜமாஅத்
T. மீனாட்சிபுரம் - 625 530
தேவாரம் வழி, உத்தமபாளையம் தாலுகா
தேனி மாவட்டம்.
ALHIKMAH MATRICULATION SCHOOL

(Regd. By Government of Tamilnadu)

P.T.R COLONY, UTHAMAPALAYAM

THENI DT. - 625 533 Ph: 04554(268202)

நன்றி http://www.satyamargam.com/1375

Tuesday, December 1, 2009

பாபர் மஸ்ஜித்; ஒன்றுபட்டு போராட இயக்கங்கள் முன்வருமா..?


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்ற தத்துவத்தை நாமெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உலகில் தோற்றுவிக்கப்பட்ட எந்த மதமும் சொல்லாத அளவுக்கு இறைவனின் மார்க்கமாம் இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தி சொல்லியுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்;

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.[3:103 ]

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்:
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்கள்: 'இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள். - ஆதாரம்: புஹாரி எண் 6026

மேற்கண்ட குர்ஆண் வசனமும்-ஹதீஸும் ஒற்றுமையை வலியுறுத்தும் ஏராளமான செய்திகளில் ஒரு உதாரணமாகும். இந்த விஷயங்கள் முஸ்லிம்கள் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் நடைமுறையில் என்ன நிலை..? ஆளுக்கு ஒரு இயக்கம், ஆளுக்கு ஒரு கழகம் என்று பிரிந்து முஸ்லிம்கள் பலவீனப்பட்டு நிற்கிறோம். அந்த பலவீனத்தை அப்படியே தொடர்கிறோம் என்று உலகறிய செய்வதில் பெரும்பங்கு வகிப்பது பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டங்கள். இடிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலை மீட்கப்போகிறோம் என்று சொல்லும் இவர்கள், ஒரு இறைவனை நம்பும் இவர்கள், ஒன்று பட்டுஓரிடத்தில் ஒரு தலைமையின் கீழ் குரல் எழுப்ப தயாராக இல்லை. ஒவ்வொரு அமைப்பு சார்பாக ஒவ்வொரு இடத்தில் போராட்டம். தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த காலங்களில் ஒன்பது இடங்களில் ஒன்பது அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது . இதை பார்த்த மாற்று மதத்தவர்கள் ஒரு பள்ளிவாசலை மீட்க ஒரு இடத்தில் ஒன்று கூட முடியாத இவர்கள் பள்ளிவாசலை மீட்கப்போகிறார்களாம் என்று எள்ளிநகையாடினர். பாபர்மஸ்ஜித் போன்ற பொதுப்பிரச்சினையில் கூட இவர்களை ஒன்று கூடவிடாமல் தடுத்தது கர்வமும்-ஈகோவும்-இயக்கவெறியும் அன்றி வேறென்ன..?

இந்துத்துவா பயங்கரவாதிகள் பள்ளிவாசலை இடித்தபோது அதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் என்று பல அமைப்புகள் ஒன்று சேர்ந்துதான் இடித்தார்கள். இந்துத்துவாக்கள் அமைப்பு ரீதியாக பிரிந்து நின்றாலும், முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளை ஒன்றிணைந்தே செய்கிறார்கள். அவ்வளவு ஏன் திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த ஜெயலலிதா, கரசேவையை ஆதரித்து தனது இன வெறியை காட்டவில்லையா..?

அல்லாஹ்வின் ஆலயத்தை இடிக்கும் பயங்கரவாதிகள் ஒன்று படும்போது, அதை மீட்கப்போகிறோம் என்று சொல்லும் இவர்கள் மட்டும் ஆளுக்கு ஒரு மூலையில் முனங்கிக்கொண்டிருப்பார்களாம்! இதில் நாங்கள் குர்ஆண்-ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம் என்றுவேறு சொல்லிக்கொள்வது. இவர்களின் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், வாருங்கள்! நாம் தனித்தனி அமைப்பாக இருந்தாலும் முஸ்லிம்களின் பொதுப்பிரச்சினையில் ஒன்றுபடுவோம் என்று அனைத்து அமைப்பினரையும் ஆலோசித்து களமிரங்காதது ஏன்..? ஒன்று பட்டால் வெற்றி உண்டு என்பதை சமீபத்தில் வாலிகண்டபுரம் மைய்யவாடி பிரச்சினை உணர்த்திக்காட்டியதே! பின்பு ஏன் ஒன்றுபட தயக்கம்..? ஒரே காரணம் ஒவ்வொருவரும் தங்கள் பலத்தை காட்டும் காரணியாக பாபர் மஸ்ஜித் போராட்டத்தை பயன்படுத்த எண்ணுவதே! இதை நாம் கற்பனையாக சொல்லவில்லை. சமீபத்தில் ஒரு அமைப்பின் துணை பொதுச்செயலாளரை தொலைபேசியில்தொடர்பு கொண்டு, பாபர் மஸ்ஜித் போராட்டத்தை ஒன்று பட்டு நடத்த முயற்ச்சிக்கலாமே என்றோம். அதற்கு அவர், நல்ல கருத்துதான்! ஆனால் யாரும் ஒத்து வரமாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் அவரவர் பலத்தை காட்டுவதில்தான் முனைப்பாக இருப்பார்கள் என்று எதார்த்தமாக சொன்னார். இதுதான் இயக்கங்களின் நிலை. இதே நிலை தொடருமேயானால், அல்லாஹ் அறியாப்புரத்தின் மூலமாக அருள் செய்து மஸ்ஜித் நமக்கு கிடைத்தாலன்றி, இவர்களின் போராட்டங்கள் மூலமாக மஸ்ஜித் நமக்கு கிடைத்துவிடாது என்பதே உண்மை.

உடனே இயக்க வெறியர்கள் சொல்லலாம் இட ஒதுக்கீடு கேட்டு தனித்தனியாகத்தான் போராடினோம் அதில் வெற்றி பெறவில்லையா என்று..? இட ஒதுக்கீடு மத சம்மந்தப்பட்டதல்ல. மேலும், குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க சட்டரீதியான அனுமதி அரசுக்கு உண்டு. அதோடு வாக்கு வங்கியும் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இட ஒதுக்கீடு கிடைத்ததேயன்றி, இவர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி அரசு இடஒதுக்கீடு தரவில்லை.[இட ஒதுக்கீடு எங்களாலதான் கிடைத்தது என்று இயக்கங்கள் குடுமியை பிடித்து கொண்டது தனி விஷயம்].

எனவே அன்பான இயக்கத் தலைவர்களே உங்களின் போராட்டத்திற்கு பயன் கிடைக்க வேண்டுமென்றால், பள்ளிவாசல் இடத்தை மீட்பது ஒன்றே உங்கள் உண்மையான நோக்கமென்றால் ஒன்று பட்டு போராட முன்வாருங்கள். அதற்கு கீழ்காணும் வழிமுறையை கையாளுங்கள்.  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் போராட்டம் நடத்துவது.

  • அந்த போராட்டத்தில் அனைத்து அமைப்பினரும் சங்கமிப்பது.

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் எல்லா அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஊர் ஊராக சென்று முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து போராட்டங்களில் அனைத்து முஸ்லிம்களும் பங்கெடுக்க வலியுறுத்துவது.

  • அவரவர் கொடியோடு, பேனரோடு வருவதில் தவறில்லை.

  • ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பிரதான தலைவர் தலைமை வகிக்க, மற்ற அமைப்பின் முன்னணி தலைவர்கள் முன்னிலை வகிக்கவேண்டும்.
    உதாரணமாக சென்னையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையிலும் , மதுரையில் அல்தாஃபி தலைமையிலும், ராமநாதபுரத்தில் பாக்கர் தலைமையிலும், திருச்சியில், விழுப்புரத்தில் இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்ற நிர்வாகிகள் தலைமையிலும் போராட்டம் நடத்தலாம்.

  • போராட்டம் முடிவுற்றபின் ஒவ்வொரு பிரதான அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடங்கிய குழு, கவர்னர், முதல்வர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து மகஜர் அளிக்கலாம்.

  • ஊடகங்களில் ஒன்றிணைந்து பேட்டியளிக்கலாம். அப்போது நாங்கள் தனி தனி இயக்கமாக இருந்தாலும் முஸ்லிம்களின் உரிமைகள்-நலன்கள் விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்போம் என்று அழுத்தமாக கூறலாம்.

இவ்வாறு ஒன்று பட்டு பொதுப்பிரச்சினையில் போராடினால், ஊடகங்களின் கவனம் நம் பக்கம் திரும்பும். அதிகார வர்க்கத்தை அசைத்து பார்க்கும். முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தால், அவர்கள் 'தேனீக்கள்'போல் ஒன்று பட்டு எதிர்ப்பை காட்டுவார்கள் என்ற எண்ணம் உருவாகும். மேலும், இவ்வாறு ஒன்று பட்டு போராடும்போது இயக்கத்திற்கு அப்பாற்பட்ட முஸ்லிம்களும் போராட்டத்தில் பங்கெடுப்பார்கள். இதன் மூலம் 'கலகலத்து' போன பாபர் மஸ்ஜித் போராட்டத்தை வலுவான போராட்டமாக மாற்றமுடியும். போராட்டத்தோடு நாம் ஒன்று பட்டு அல்லாஹ்விடம் கையேந்தினால் அல்லாஹ் நமக்கு வெற்றியை வழங்குவான் இன்ஷா அல்லாஹ்.

இதைவிடுத்து வழக்கம்போல நாங்கள் ஆளுக்கு ஒருபக்கம் நின்றுதான் கத்துவோம் என்றால், இயக்கங்களின் பிரிவினை போக்கிலிருந்து அல்லாஹ் முஸ்லிம்களை பாதுகாப்பானாக!

நன்றி : நிழல்களும் - நிஜங்களும்!

குலோபல் ரிசஸனும் கியாமத் நாளும்...

அமெரிக்காவின் லெஹ்மென் பிரதர்ஸ் என்ற நிறுவனம் நொடிப்பு நிலை அடைந்துவிட்டதாக அறிவித்ததைத்தொடர்ந்து அமெரிக்காவில் பல நிறுவனங்களும் நொடிப்புநிலை (INSOLVENCY) -திவால் பிரகடனம் செய்தன.அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் மட்டும் இதுவரை சுமார் 125வங்கிகள் நொடிப்புநிலை அடைந்து விட்டதாகச் சொல்லி தங்கள் கிளைகளை மூடின.

ஓரிரு மாதங்களில் பணப்பரிவர்த்தனை குறைந்து நுகர்வோரின் வாங்கும் சக்தி கட்டுப்படுத்தப் பட்டதால் தேவை குறைந்து உற்பத்தியும் குறைந்தது. உற்பத்திக் குறைந்ததைத் தொடர்ந்து வேலையிழப்புகளும் அதிகரித்தன. வட்டிக்குக் கடன் வாங்கியவர்களால் திடீர் வேலையிழப்பால் கடனைச் செலுத்த முடியாமல் வாங்கிய கடனுக்காக வீடு ஜப்தி செய்யப்பட்டு வீடிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. பொருளியல் வல்லுனர்கள் இத்தொடர் நிகழ்வை பொருளாதார மந்தநிலை என்றனர். புரியும்படியாகச் சொல்வதென்றால் பொருளாதாரச் சுனாமி என்று அடையாளப்படுத்தினர்.

2004 டிசம்பர்-26 ஆம்தேதிவரை சுனாமி என்ற கடல் பிரளயம்ஆழிப்பேரலை குறித்து உலகில் சிலருக்கே தெரிந்திருந்தது. பூமிப்பந்தை பிணைத்திருக்கும் டெக்டானிக் தட்டுகளின் நகர்வு காரணமாக ஆழ்கடல் கொந்தளிப்பால் கடல் சீற்றமெடுத்து கரையிலுள்ளவர்களைக் காவு வாங்கியதைப் போல், நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட பிரளயத்தால் உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வாதாரம் நிர்மூலமாகிப் போனதை பொருளாதாரச் சுனாமி என்றனர்.
சுனாமியிலும் பொருளாதார மந்தநிலையிலும் பலநாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டன. இவ்விரண்டிலும் அல்லது ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. நேற்று வரை குபேரர்களாக இருந்தவர்கள் கெட்ட கனவைப் போல் ஒரே நாளில் உயிரிழந்து, வீடிழந்து, உறவிழந்து அநாதைகளைப்போலாகி விட்டனர். எங்கள் பிரதேசத்தில் சூரிய அஸ்தமிப்பதில்லை என்று அகங்காரமாகச் சொன்ன (துபாய் வேர்ல்ட்) வர்கள் இன்று விடியலுக்காகக் காத்திருக்கிறது!

பெருங்கடல் பிரளயப் பேரழிவையும்பொருளாதார நிதிநெருக்கடியினால் எழும் இழப்புகளையும் உலகம் சுனாமி என்றும் பொருளாதார மந்தநிலை என்றும் அடையாளப்படுத்துகிறது. திடீரென ஏற்பட்ட இவ்விடர்ப்பாடுகள் குறித்து எந்த நோபல் பரிசு அறிவியல்/பொருளியல் மேதையும் கணித்து இருக்கவில்லை. அத்தகைய கணிப்புகள் இருந்திருப்பின் பலர் உயிர்தப்பி இருப்பார்கள்தானே?

இவற்றைவிடக் கொடூர பாதிப்புக்களை உண்டாக்குமென்ற முன்னறிவிப்பு 1400 வருடங்களாகச் சொல்லப்பட்டு வருகிறது என்றால் நம்புவீர்களா? ஆம்! நம்பினாலும் நம்பாவிட்டாலும் மலைகள் தரைமட்டமாக்கப்பட்டு பூமி சுருட்டப்பட்டு, சந்திரனும் சூரியனும் நட்சத்திரங்களும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் நிகழ்வு நடந்தே தீருமென்று குர்ஆனில் அறுதியிட்டுச் சொல்லப்படும் பேரழிவு (கியாமத்) நாள் குறித்து முன்னறிவிப்புச் செய்து மீட்சியடையும் வழியையும் சொல்லி விட்டது.

என்ன செய்யப் போகிறோம்?

அன்புடன்

அபூஅஸீலா-துபாய்