Saturday, February 28, 2009

செல்வமும் வறுமையும்

செல்வமும் வறுமையும்
 
إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا 

    'அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!'. (அல்குர்ஆன் 18:07,08)    

    கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 

    பக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். 

    கடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாக காண் முடிகின்றது. 'கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?' என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம். 

    கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்?    மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டது தான் இதற்குக் காரணம். 

    இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை. சிலர் அதிகமான வசதிகளையும் பதவிகளையும் பெற்றுள்ளனர். பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்க வில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள் தான் அடிப்படைக் கோளாறு எனலாம். 

    நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கு எண்ணற்ற வசதிகள் கிடைக்கும் என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன. சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம் என்று அவனுக்கு அறிவுரை கூறுகின்றன. 

    இது போல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, கடவுள் உன் மீது அன்பாய் இருக்கிறார். நீ நல்லவனாக இருப்பதால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய் என்றும் சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது என்றும் பேசுகின்றன. 

    செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால் இவன் என்னவோ செய்திருப்பான் என்று கூறுவதும் இதனால் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான். 

    கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான். இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம். 

    இந்த நம்பிக்கை ஆழமாக பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதுமு; ஒரு நல்லவன் சொல்லொனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகிறது. மதத்தை வளர்ப்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது. இதனால் தான் கடவுள் (?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது. 

    ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை. எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது. 

    இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அது போல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை. அவர்களின் ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை. 

    அது போல் செல்வந்தர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். இவர்களின் செல்வ நிலைக்கும் பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கிறோம்.  இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! 

    இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன. வசதிகள் வந்த பின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்! அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற்செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது. 

    அது போல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை. இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது. 

    செழிப்பு வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால் தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர். கடவுளே உனக்கு கண்ணில்லையா என்று கேட்பதில்லை. 

    இரண்டு நிலையில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனைதானே தவிர நம்மை நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல. இனிமேல்தான் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அங்கே நல்ல தீர்ப்பு பெறுவதற்காக வறட்சியிலும் செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின் மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 

    அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது. இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத் தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது. பின்வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன. 

    'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்' ( அல்குர்ஆன் 2:155,156) 

    '(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்திற்குரிய செயலாகும்'. ( அல்குர்ஆன் 3:186) 

    'ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்'. ( அல்குர்ஆன் 21:35) 

    'இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியுடன் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இது தான் தெளிவான நஷ்டமாகும்'. ( அல்குர்ஆன் 22:11) 

    'இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன் 'என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தியுள்ளான்' என்று கூறுகின்றான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ அவன், 'என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்தி விட்டான்' என்று கூறுகின்றான்'. (அல்குர்ஆன் 89:15,16) 

    எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத் தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

Thursday, February 26, 2009

இ(னை)னிய! பயணங்கள் முடிவதில்லை.....

தடை பல கடந்து தட,தடவென
நித்தம் ஓடி செய்தினைச்சுமந்து ஆயிரம் மைல் அடைந்தும்
(அல்ஹம்துலிலாஹ்)! ஓடிக்கொண்டிருக்கும் நமதூர் இணைய வண்டி,
இன்னும் பல மைல் ஓடும் என நம்பும் நாளில் ,
உன்மையில் மைல்கள் கடந்த சாதனை பெருமை கொள்ளச்சொல்கிறது.
பொருமையில் ,பொறாமையில்,இன்னும், நன்மை,தீமையில்,இப்படி பல் மையில் கண்ட இணைய மெயில்!
தொடர,
ஆயிரத்து ஒன்றாய் என் வாழ்துப்பா இடம் பெரும் எனும் போதில்-
இன்பம் எனைத்தாலட்டுதே!
வாழ்த்துக்கள்.
சகோ.முஹம்மது தஸ்தகீர்.

Wednesday, February 25, 2009

''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்



81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது. இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது ('ஜெய் ஹோ') வழங்கப்பட்டது.
முதல் தமிழ் கலைஞர்!

இந்தியக் கலைஞர்கள் இருவர் மட்டுமே இதுவரை ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். கடந்த 1982-ம் ஆண்டு 'காந்தி' படத்துக்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான ஆஸ்கர் விருதை பானு அதையா வென்றார்.
கடந்த 1992-ல் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான சத்யஜித் ரே-வுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' ஆஸ்கர் வழங்கியது. சத்யஜித்ரே இருந்த மருத்துவமனைக்கே ஆஸ்கர் விருதுக் குழுவினர் தேடிவந்து இந்த விருதினை வழங்கினர்.

இந் நிலையில், ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்திய திரைப்பட இசைக் கலைஞர் என்ற பெருமையை, தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார்
விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,
நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள். எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி.

என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும். இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.
ரஃபியா - ஜித்தா

Sunday, February 22, 2009

முஸ்லீம் டிஜிபி நியமனம் - முஸ்லீம்களைக் கவர மோடி புதிய தந்திரம்

அகமதாபாத்: முஸ்லீம்களின் வெறுப்பு வளையத்திலிருந்து பாஜகவையும், தன்னையும் மீட்டு வெளியே கொண்டு வரும் புதிய தந்திரமாக, குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரியை முதல்வர் நரேந்திர மோடி நியமித்துள்ளதாக கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த சபீர் கந்தவாவாலா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உருவான 50 ஆண்டுகளில் முஸ்லீம் அதிகாரி ஒருவர் டிஜிபி பதவிக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு இருந்து வந்த டிஜிபி பி.சி.பாண்டேவுக்குப் பதில் சபீர் புதிய டிஜிபியாகியுள்ளார். 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது பெரும் சர்ச்சையில் சிக்கியவர் இந்த பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபி பதவிக்கு மோடி கொண்டு வந்திருப்பது, பாஜக மற்றும் மோடி ஆகியோருக்கு முஸ்லீம் மக்களிடையே நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் தந்திரமாகவே கருதப்படுகிறது.

அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில், மோடியின் இந்த நியமனம் ஒரு அரசியல் மற்றும் மத ஸ்டண்ட் ஆகவே கருதப்படுகிறது.
சபீர், ஷியா முஸ்லீம் சமுதாயத்தின் தாவூதி போஹ்ரா பிரிவைச் சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் பல ஆண்டுகளாகவே மோடிக்கு ஆதரவாக உள்ளவர்கள்.
1973ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான சபீர், கோத்ரா வன்முறை தொடர்பான வழக்குகளை மறு பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.
குஜராத் மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2007ம் ஆண்டே இவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதை மாநில அரசு நிராகரித்து விட்டது.கடந்த வாரம்தான் டிஜிபி அந்தஸ்துக்கு சபீர் உயர்த்ப்பட்டார். ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.ஆனால் சபீரை டிஜிபியாக்கியிருக்கும் சமயம்தான் மோடி மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.


மாயா சர்ச்சையிலிருந்து மீளும் முயற்சி ...
காரணம், மோடி அமைச்சரவையில், மகளிர், குழந்தைகள் நலம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக உள்ள மாயா கோட்னானியால் ஏற்பட்டுள்ள களங்கத்திலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவே சபீரின் நியமனத்தை எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.
2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது மாயா கோத்னானி நடந்து கொண்ட விதம் குறித்து பெரும் சர்ச்சை உள்ளது. அப்போது நடந்த கலவரத்தில் மாயா மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது நிலுவையிலும் உள்ளது.இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார் மாயா. இதையடுத்து பி்ப்ரவரி 2ம் தேதி இவரை தலைமறைவு குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்க்பட்ட சிறப்பு புலனாய்வுப் படை அறிவித்தது.
மாயா மீதான வழக்கு என்ன?
2002ம் ஆண்டு நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையின்போது நரோடா பாடியா பகுதியில் ஒரு கும்பல் அங்கிருந்த முஸ்லீம்களைத் தாக்கியது.அப்போது அங்கு நடந்த வன்முறையைத் தூண்டி அரங்கேற்றியவர் மாயா கோத்னானி என்பது சிறப்புப் புலனாய்வுப் படையின் குற்றச்சாட்டு.அது மட்டுமல்லாது கண்ணில் படுபவர்களையெல்லாம் கொல்லுமாறும், பொருட்களை சூறையாடுமாறும், பெண்களைக் கற்பழிக்குமாறும் வன்முறைக் கும்பலுக்கு மாயா உத்தரவிட்டார் என்பதுதான் மிக மிக முக்கியமான குற்றச்சாட்டு.
மாயாவுடன், வி.எச்.பி. தலைவர் ஜெயதீப் படேலும் என்பவரும் இணைந்து இந்த வன் கொடுமையை அரங்கேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நரோடா பாடியா பகுதியில் நடந்த வன்முறையில் மட்டும் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த 106 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன. இந்த கொடுமையான வன்முறையை நேரில் பார்த்த சாட்சிகளி்ல் ஒருவரான ஷெரீப் மாலிக் என்பவர் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில், மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோர்தான் அந்த வன்முறைக் கும்பலுக்கு நேரடியாக தலைமை தாங்கி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.அவர்கள்தான் அந்தக் கும்பலை கொலை செய்யவும், பொருட்களை சூறையாடவும், கற்பழிக்கவும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தனர்.வன்முறைக் கும்பலிடம் தனது வண்டியில் வைத்திருந்த மண்ணெண்ணை கேன்களை எடுத்துக் கொடுத்து தீவைத்துக் கொளுத்துமாறு உத்தரவிட்டார் மாயா என்று கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட மாயா நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல்இருந்து வந்தார். ஜனவரி 19 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையின்போதும் அவர் சம்மன் அனுப்பியும் வரவில்லை.இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.இதையடுத்து மாயா தலைமறைவாகி விட்டார். பின்னர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது.தேடப்படும் குற்றவாளியாக மாயா அறிவிக்கப்பட்டதும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என மோடிக்கு கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால் அவரோ அதை நிராகரித்து விட்டார். மாயாவும், நான் அப்பாவி, ராஜினாமா செய்ய மாட்டேன் என்று விட்டார்.கொடும் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டு, முன்ஜாமீனும் மாயாவுக்குக் கிடைத்ததால் கோத்ரா வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் பெரும் கொதிப்பும்,அதிருப்தியும் அடைந்துள்ளனர்.இந்த நிலையில்தான் முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபியாக்கியுள்ளார் மோடி. எனவே இந்த நியமனம் முற்றிலும் அரசியல் சாயம் கொண்டது. முஸ்லீம் சமுதாயத்தினரை ஐஸ் வைக்கும் செயல் என குஜராத் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முஸ்லீம் சமுதாயத்தினரை சமாதானப்படுத்த முயலும் மோடியின் இன்னொரு முகமூடிதான் இந்த டிஜிபி நியமனம் என்றும் கருதப்படுகிறது

நன்றி:தட்ஸ்தமிழ்

Friday, February 20, 2009

ஊர் கோழியை அடித்து...

கடந்த சில வாரங்களுக்கு முன் அதிரையைச் சேர்ந்த நண்பர் எனக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பில் புக் ஒன்றினை அனுப்பி, எனக்குத் தெரிந்த நபர்களிடம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கட்டிட நிதிக்காக பணம் வசூல் செய்து அனுப்பி வைக்கும்படி வேண்டிக்கொண்டார். பொதுவாக நான் கல்வி,மருத்துவம் தவிர வேறு எந்த வசூலுக்கும் செவி சாய்ப்பது அரிது. ஆனாலும் இது ஊர் காரியம் அதுவும் நம் முஹல்லாவைச் சேர்ந்த சங்கத்திற்க்கான கட்டிட நிதி தயவு செய்து உங்களால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க நானும் எனக்குத் தெரிந்த சிலரிடம் இது பற்றி எடுத்துக் கூறினேன்.

இரண்டு நாட்கள் கழித்து ஒரு நண்பன் தொலைபேசியில் அழைத்தான் "என்னடா மாப்ளே, சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பா MMS- க்கு பாராட்டு விழா எடுக்கப்போறாங்களாமே, நெசமாவா?", என்றான். அதற்கு " இருக்காதுடா மாப்ளே, நம்ம பயலுவ இப்ப ரொம்ப திரிந்திட்டாய்ங்கடா, முன்ன மாதிரி எல்லாம் இல்லைடா", என்று ஒரு சில இளைஞர்களின் பெயரைச் சொல்லி, அவர்கள் செய்து கொண்டிருக்கும் பல நல்ல காரியங்களை சுட்டிக் காட்டினேன்.அதற்கவன், "இல்லடா மாப்ளே, நெசமாதாண்டா, ஊருக்கு போன் போட்டு கேட்டுட்டுத்தாண்டா சொல்றேன்," என்றான்.

பிறகு அவனே தொடர்ந்து " இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா, நம்மூரைச் சேர்ந்த எத்தனையோ பேர் வெளிநாட்லே வேலைப் செய்து வாங்குற சம்பளம் ரொம்ப கொஞ்சமா இருந்தாலும், ஊருக்கு இல்லாட்டி நம்ம தெருவுக்கு என்னமாச்சும் செய்யனும் என்று ஊட்டுக்கு செலவுப் பனம் அனுப்புரதக்கூட தள்ளிப்போட்டுட்டு, நம்ம ஆளுவ கேக்குரதுக்காக (கேட்பதற்க்காக) பணம் அனுப்புறாங்க, ஆனா(ல்) இவனுவ (இவர்கள்) என்னாண்டா MMS-க்கு பாராட்டு விழா நடத்துறேன், பல்லாங்குழி வெளையாடுறேன்கிறாங்க. இன்னைக்கு MMS-க்கு ஒரு குரூப் பாராட்டுவிழா நடத்தனும்பாய்ங்க, நாளைக்கு இன்னொரு கோஷ்டி S.A.K-க்கு பாராட்டுவிழா நடத்தனும்பாய்ங்க (*S.A.K*,சவுன்ட் சர்வீஸ், -இவர் MMS- எந்த தேர்தலில் போட்டியிட்டாலும், அவரை துணிச்சலாக எதிர்த்து - பண பலம், ஆள் பலம், பிரியாணி பலத்தையும் மீறி மிகச்சொற்ப்ப ஓட்டுக்களில் தோற்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்).

பேரூராட்சி தலைவராக இருக்கும் MMS-அவர்கள் அல் அமீன் பள்ளிவாசல் கட்டுவதற்க்கு இடைஞ்சல் செய்யாமல், அவருக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இப்பள்ளிவாசலுக்கு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடையை நீக்க உதவினால் நாமே அவருக்கு மிகப்பிரம்மாண்டமாக பாராட்டுவிழா நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று அந்த நண்பன் வெள்ளந்தியாகச் சொன்னான்.

-அபூஹாமித்

Wednesday, February 18, 2009

கழுதையை எப்போ ஆடாக்கப்போறோம்?

ஜாவியா முடிஞ்சதுலேர்ந்து காலைப்பசியார சாப்புட மனசே வரலை. நெய்ச் சோரோ பிரியாணியோ ஒர்ரூவாய்க்கி ஒரு ஊறுகாயை தொட்டுக்கிட்டுச் சாப்பிட்டுறலாம். இப்பவெல்லாம் தலைக்கி தேய்க்கிற சாம்பு பாக்கெட்டில் (ஷாசே) ஊறுகாயை அரைச்சி அமுக்கி விக்கிறாங்க. கடைக்காரரிடம் பூண்டு ஊறுவா, மாங்காய் ஊறுவா, இல்மிச்ச ஊறுவான்னு சொல்லி வாங்கனும்.

அப்டித்தான் ஒருமுறை நம்ம கீழத்தெரு காதரு கச்சா கடைல சன்சில்க் சாம்பு பாக்கெட்ல முட்டை,பொம்பலப் படத்தைப் பார்த்துப்புட்டு புதுசா முட்டை ஊறுவா வந்திருக்குதாக்கும்ன்னு நெனெச்சிகிட்டு தன்னாலேயே ஒரு பாக்கெட்டை எடுத்துக்கிட்டு காசக் கொடுத்துட்டு,ஜாவியா சோத்துக்குத் தொட்டுக்கிட்டு சாப்பிட்டுடான். பாவம் வயித்தால்போய் தருமாஸ்பத்திரிக்கி நடையா நடந்தான்.

யாங்காக்கா இப்பவ்லாம் இண்டர்நெட்ல அதிகமா எழுதமாட்டங்றீங்கன்னு புதுத்தெரு புகாரி கேட்டார். என்னத்தத் தம்பீ எழுவுறது. இப்பவ்லாம் அதிரை பேருல நெறய புள்ளையலுவோ எழுதுதுவோ. புதுசா நாம என்னத்த எழுதப் போறோம்னுதான் அடிக்கடி எழுதறதில்லைனு சொன்னேன். அப்டியலாம் சொல்லாதீங்க காக்கா நம்ம ஊருப் புள்ளைங்களுக்கு எப்பவுமே ஆர்வம் ஜாஸ்தி.யாராச்சும் புதுசா டிராவல்ஸ் தொறந்தா எல்லாரும் டிராவல்ஸ் தொறப்பாங்க. மணி எக்சேஞ்ஜ், STD பூத் எல்லாமே இப்படித்தான். அதேமாதிரி ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா லண்டன்னு ஆட்டுமந்தை மாதிரிபோய் கடைசில ஒன்னுமே இல்லாம ஆக்குவாங்கன்னு சொன்னார். எல்லோரயும் இப்புடி சொல்லி வதுவாப்பேர வாங்கக்கூடாதுன்னு சொல்லிட்டேன்.

(இந்தக் கூட்டத்துல என் தொப்பி மட்டும்தான் தெரியுது)

ஆட்டு மந்தைன்னு சொன்ன பின்னாடிதான் நம்ம ஊரைப்பத்திச் ஆட்டைக் கழுதையாக்கிய ஊருன்னு பெருமையா சொல்வாங்க.இதப்பத்தி நாமளும் எழுதனும்னு ரொம்ப நாளா ஹாஜத்து இருந்திச்சு.புதுத்தெரு புகாரி சொன்ன பொறவு இப்பதான் யாஹ்வம் வந்து பொசுக்குன்னு அதுபத்தி எழுதிட்டேன்.

ஆடுகளைப்போல திரிஞ்சவங்களை ஆளாக்கிய ஊரென்றும் ஆட்டைக்கழுவி ஆக்கியவர்கள் மருவி, கழுதையாக்கியவர்கள் என்றானதாகவும் சொல்வர். உண்மையான காரணமாக நாலுமுனங்குகளில் நின்னுகிட்டு ஆட்டைக் கழுதை என்றதால் வெருத்துப்போய் விட்டுவிட்டுச் சென்றதாகச் சொல்வர். இவையனைத்தும் சரியல்ல இல்லாட்டி உண்மையாக இரிக்காதுன்னு நினைக்கிறேன்!

வெளியூர்களிலிருந்து வந்து நம்மூருல செட்டில் ஆனவர்களில் பலர் ஒரு திறமையும் இல்லாமல் இங்கு வரவில்லை. படித்துப் பட்டம்பெற்றவராக வந்து பள்ளிக்கூடங்களில் ஆசிரியராகச் சேர்ந்து மேற்படிப்பை அங்கிருந்து கொண்டே படிச்சுப் பேராசிரியராகவும் பதவி உயர்வடைந்தார்கள். அப்புறம் தொழில்முனைவோர் கமாலாக்கா,பாரி, தீன் ஸ்டோர்ஸ், மக்கா ஸ்டோர்ஸ் மற்றும் வாடா,சம்சா,பஜ்ஜி,சூப்பு, சுண்டல்,இட்லி,ஊறுகாய் என சிறுதொழில் முனைவோர்களும் தனிப்பட்டத் திறமையால்தான் முன்னேறினார்கள். ஆக, ஆடுகளைப்போல் ஒன்றுமறியாமல் வந்தார்கள் என்பது சரியல்லமா.

ஆட்டை மட்டுமல்ல மீன்,காய்கறி,கோழிக்கறியையும் கழுவியே ஆக்குவது நம்மூரு வழக்கம். இது நம்மூருக்கு மட்டுமுள்ளதல்ல எல்லா ஊருலயுமே இப்படித்தான் ஆணம் காய்ச்சுவாங்க என்பதால் 'கழுவி' கழுதையாகியிருக்க வாய்ப்பில்லை. லாஜிக்படி ஒத்துக்கிட்டால் கோழி,மீனையெல்லாம் கழுவி ஆக்கவில்லை என்றாகும். (உவ்வெ...)

ஆடுவியாபாரம் செஞ்சாச்சும் பொழைக்கலாம்னு வந்தவரிடம் ஆட்டைக் கழுதை என்று பொய்சொல்லி ஏமாற்றியிருக்குமளவுக்கு அதிரைக்காரர்கள் பொய்யர்களோ அல்லது மோசடிக்காரர்களோ அல்ல என்பதால் ஆட்டைக் கழுதையாக்கியப் பட்டப்பெயருக்கான உண்மைக்காரணத்தை ஓய்வுபெற்ற நீதிபதியை வச்சு ஒருவிசாரனைக் கமிசன் அமைக்கலாம். அவரும் கமிசன் வாங்காமல் உண்மையைக்கண்டுபிடித்துச் சொன்னால், ஆட்டைக் கழுவி பிரியாணி ஆக்கி விருந்து கொடுக்கலாம்.என்னா நாஞ்சொல்றது?

இதை சம்சுல் இஸ்லாம் சங்கம் சாச்சாவுக்கு நடத்தப்போறபாராட்டு விழா மேடையில தோனாக்கானா மூலம் யாராச்சும் கடுதாசி எழுதி கொடுத்துக் கேட்கலாம். வெள்ளை வேட்டி சட்டையையும் வன்னான்ட்ட வெளுக்கக் கொடுத்திருக்கிறேன். பாராட்டு விழாவுக்கு முன்னாடியே கொண்டுவந்து தந்துட்டா நானே கேட்டுடுவேன். பார்க்கலாம். இப்ப அவசரமா விருந்துக்குப் போய்க்கிட்டிருக்கேன். பின்னாடி பார்ப்போம்.

இப்படிக்கு,

WWW.ஊர்சுத்தி.உமர்

Monday, February 16, 2009

சாச்சாவுக்குப் பாராட்டுவிழா - ஏழு அம்ச கோரிக்கைகள்

கடந்த குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்கத்துக்கான தமிழக அரசின் "கோட்டை அமீர் விருது" பெற்ற நமதூர் அரசியல் பிரமுகரும் பேரூராட்சி மன்ற தலைவருமான M.M.S. அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடத்த இருப்பதாக அறிந்தோம்.

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் குறித்து: அதிரையின் பழமையான முஹல்லா சங்கங்களில் இதுவும்ஒன்று. திருமணம் மற்றும் குடும்பநல தீர்ப்யாமாகவும் செயல்பட்டு வருகிறது. நடுத்தெரு சுற்றுவட்டார முஹல்லாவாசிகளின் நிகழ்வுகளில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் செயலாற்றி வருகிறது. அனேக விவாகரத்து வழக்குகளை எடுத்து நடத்தியிருப்பதால் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை டைவர்ஸ் இஸ்லாம் என்றும் வேடிக்கையாகச் சொல்வார்கள் :-)


MMS அப்துல் வஹ்ஹாப் (சாச்சா) அவர்களைப் பொருத்தவரை பழம்பெரும் அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குள்ள, அரசியல் பாரம்பர்யம் கொண்ட குடும்பம். பேரூராட்சி சேர்மனாகவும்,மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் MMS குடும்பத்தவர் பணியாற்றி உள்ளனர்.

மேலத்தெரு பகுதியில் திடீர் முனிக்கோவிலைக் கட்டி மதக்கலவரத்தைத் தூண்ட முயன்றவர்களை MMS அப்துல் வஹ்ஹாப் சாதுர்யநடவடிக்கைகள் மேற்கொண்டு அரசு மற்றும் சட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். நெடிய அரசியல் பாரம்பர்யப் பின்னணி கொண்ட சாச்சாவிற்கு தமிழக அரசு வழங்கிய விருது காலங்கடந்த ஒன்று என்றாலும் தகுதியானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனினும், கடந்த ஓரிரு வருடங்களாக நமதூரின் முக்கியப் பிரச்சினையாகக் கருதப்படும் அல் அமீன் பள்ளிவாசல் கட்டுவதற்குத் தடையாகச் செயல்படும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் மற்றும் துணைத்தலைவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது, ஊர்மக்களின் நியாயமான உரிமைக்காகக் குரல் கொடுக்காதது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அல் அமீன் பள்ளிவாசல் பணி தடைபட்டதற்கு உணர்ச்சி வயப்பட்ட சில இளைஞர்களின் செயலும் காரணம் என்பதை நடுநிலையாளர்கள் அறிவர். எனினும் அவர்களின் கோபம் பெரும்பான்மை முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துடன், பெரும்பான்மை முஸ்லிம்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் பேரூராட்சிமன்ற ஊழியர்களின் பாரபட்ச போக்கின் எதிர்வினையே காரணமாகச் சொல்லப்படுகிறது.

இருபக்க உணர்வுகளையும் தீமூட்டி மதவாத பேரூராட்சி அலுவலர் மற்றும் துணைத்தலைவர், MMS அப்துல் வஹ்ஹாப் அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இதன் மூலம் வருங்காலத்தில் அதிரை நகர பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கச்செய்து,பேரூராட்சியை தங்களுடய பாஸிச ஆதிக்கத்திற்குக்குள் கொண்டு வரும் சூழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.

நடந்துவிட்ட கசப்பான நிகழ்வுகளைக் கிளறிக்கொண்டிருக்காமல் இனிமேல் நடக்க வேண்டியதைப்பற்றி மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வோம். இப்பதிவில் உங்கள் கருத்தை விருப்பு வெறுப்பின்றி மனம்விட்டுப் பகிர்ந்து கொள்வதன் முலம் நமதூர்க்கு நல்லது நடந்தால் அதிரை எக்ஸ்ப்ரஸின் நோக்கங்களில் ஒன்று நிறைவேறியதாகக் கொள்வோம். அல்லாஹ் எங்களின் முயற்சியைப் பொருந்திக் கொள்வானாக!

உடனடியாக நமதூர் முஹல்லா சங்கங்கள் செய்ய வேண்டியதையும்,MMS அப்துல் வஹ்ஹாப் (சாச்சா) அவர்கள் செய்ய வேண்டியதையும் இங்கு பட்டியலிடுகிறோம். இவற்றில் யார் முந்திக்கொண்டு செயல்பட்டு தங்களை மென்மேலும் சிறப்பித்துக் கொள்வார்கள் என்பதை நமதூர் நலன்விரும்பிகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

அ) சாச்சா செய்ய வேண்டியவை:

1) அல்-அமீன் பள்ளி நிர்வாகிகள் மீது பேரூராட்சி மன்றம் புணைந்த பொய் வழக்கை முறையாக வாபஸ் பெற நடவடிக்கை எடுப்பது.

2) அல்-அமீன் பள்ளிவாசலுக்கு பேரூராட்சி மன்றத்தினால் போடப்பட்ட முட்டுக்கட்டைகளை (மெயின்வாசலில் கழிப்பிடம் அமைத்தது போன்றவை) சிறப்புத் தீர்மானம் இயற்றி நீக்குவது.

3) அல்-அமீன் பள்ளியைக் கட்டியெழுப்ப, அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஊர் மக்களுடன் இணைந்து செயலாற்றுவது.

ஆ) முஹல்லா சங்கங்கள் செய்ய வேண்டியவை:

4) அதிரை முஹல்லா சங்கங்கள் ஒருங்கிணைந்து மேற்கண்டவற்றைச் செயல்படுத்த கமிட்டி அமைத்துச் செயல்படுவது.

5) அரசியல் ரீதியாக MMS குடும்பத்தினரின் அரசியல் செல்வாக்கை நமதூர் நலனுக்குப் பயன்படுத்த திட்டமிட்டு ஒத்துழைப்பது.

6) நடக்கவிருக்கும் பாராட்டு விழாவை வெறும் புகழ்ச்சி விழாவாக்காமல், அதன் பலனை நமதூர் ஒற்றுமைக்குப் பயன்படுத்த அனைத்து முஹல்லா ஜமாத்தும் இணைந்து செயலாற்றுவது.

இ) அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் செய்ய வேண்டியது:

7) விருப்பு வெருப்பின்றி தங்கள் சொந்த அடையாளத்துடன் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதிரை நிகழ்வுகளை அதிகம் இடம்பெறச் செய்யும் நோக்கில் செயல்படும் அதிரை எக்ஸ்ப்ரஸின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் தாருங்கள். நம் ஊர் குறித்த தெருப்பாகுபாடற்ற புதிய தலைமுறையை உருவாக்க உங்கள் பங்களிப்பை வழங்க முன்வாருங்கள். எங்கள் முயற்சியில் மாற்றுக்கருத்து இருப்பின் பின்னூட்டமாகவோ அல்லது பதிவாகவோ எழுதலாம்.

இப்படிக்கு,

எக்ஸ்ப்ரஸ் டீம்

தீர்ப்புதான் என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும் சிறிய இடை வெளிக்கு பிறகு உங்கள் அனைவரையும் இத்தளத்தின் மூலம் சந்திப்பதற்கு உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

நமதூர் கலாச்சார சீரழிவுக்கு யார் என்று இன்றைய சூழ்நிலையில் விவவாதம் வைத்தாள் உலக அழிவு நாள் நெருங்கினாலும் முடிவுக்கு வராது காரணம் அவ்விவாதத்தில் உள்ள நாமும் தவறு இழைத்தவர்களாகவே உள்ளோம். மேலும் விட்டுக்கொடுக்கும் மணபக்குவம் நம்மிடையே குறைந்தென்னா அறவே இல்லை என்றே
சொல்லலாம்,

இதற்கு மேல் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற அகங்காராம் நம்மை படைத்து பரிபாளிக்கும் அந்த ரப்புல் ஆலமீன் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கின்றான்
என்ற இறை நம்பிக்கை முழுவதுமாக அற்றவர்களாக இருப்பதாலும் இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் வாழ்க்கை மறுமை என்பதையே மறந்து அற்ப உலகில் கிடைக்கும் சொற்ப லாபத்திற்காக மறுமையில் கிடைகபோகும் அழிவில்லா வாழ்வை ஒரு நிமிடம் அல்லாஹ் மனிதனான உனக்கு அளித்த அருட்கொடையான் வேறு எந்த
உயிர் இனத்துக்கும் கொடுக்காத ஆறாவது அறிவை கொண்டு சிந்தித்து பார்த்தோமானால் நமக்கு இவ்வுலகிலும் வெற்றி மறுமையிலும் வெற்றி நிச்சயமாக உண்டு.

இன்ஷா அல்லாஹ் வாழ்க்கைக்குத் தேவையான் அறிவை பெறுவதற்கு இஸ்லாம் மிக அதிகமான் முக்கியத்துவம் தந்துள்ளது. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் அத்தியாயமே இதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறது யாவற்றையும் படைத்த உம்முடைய ரப்பின் திருநாமத்தைக்கொண்டு படிப்பீராக
(அல்குர் ஆன் 96:01)

உண்மையில் அல்லாஹ்வின் அடியார்களில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகின்றனர் (அல்குர் ஆன் 35:28) அல் குரானை அவகள் சிந்திக்க (ஆரய்ச்சி செய்ய) வேண்டாமா? அல்லது அவர்கள்
உள்ளங்கள் தாழிடப்பட்டுள்ளனவா(அல்குர் ஆன் 47:24)

ஒவ்வொரு பிரச்சனைகளையும் இஸ்லாமிய கண்ணோட்டத்திலேயே அனுகி, புதிய புதிய பிரச்சனைகளும், சிக்கல்களும் உருவாகும் போது அவற்றில் இஸ்லாத்தின்
அனுகுமுறை என்ன? தீர்ப்புதான் என்ன? என்பதனை அறிந்து தீர்ப்பு அளிக்ககூடிய மார்க அறிஞர்களை கொண்டு நமதூர் சங்கங்களை மாற்றி அமைத்து தலைமை ஏற்ககூடிய ஆலிம் பெருமக்களை வரவேற்க வேண்டும். அப்ப்டி வந்தால் தான் தலாக் வரதட்சணை பித்அத் போன்ற வழிகேட்டில் இருந்து நமதூரை காப்பற்ற முடியும் அதற்கு அல்லாஹ் அருள்புரிவான் இன்ஷா அல்லாஹ்..

சின்னகாக்கா

Sunday, February 15, 2009

'ORKUT'டிச்சுவர்----பெற்றோர்களே உஷார்!!!

இந்த குட்டிச்சுவரில் உங்களுக்கும் ஒரு இடம் வேண்டும் என்றால், உங்களிடம் ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதும், இச்சுவரில் இடம் கிடைத்து விடும். உங்களுக்கு விருப்பமானவரை உங்கள் சுவரிலேயே தேடி கண்டுபிடித்துகொள்ளலாம். சுவரில் இருக்கும் யார் வீட்டுக்குள்ளும் நுழைந்து, யாரை வேண்டுமானலும் உங்களுக்கு உறவாக்கிக் கொள்ளலாம். ஒரு'Hi' சொல்லி தொடங்கும் உறவு, எங்கு கொண்டு போய்விடும் என்று அன்றாடம் தினசரிகளில் வந்துகொண்டு தான் இருக்கின்றது.

இச்சுவரில் இல்லாத பாவங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா குற்றங்களுக்கும் இத்தளம்(சுவர்) தளம் அமைத்துகொடுக்கின்றது. என்ன பாவங்கள் என பட்டியலிட நான் விரும்பவில்லை, காரணம், 'தற்கொலை செய்யாதீர்கள் என்று பாடம் புகட்டினால் மட்டும் போதும், தூக்கு போட்டு/விஷம் குடித்து/கடலில் குதித்து தற்கொலை செய்யாதீர்கள் என்று சொன்னால், அதற்கான வழிகளை நாமே சொல்லிகொடுத்ததைப் போலாகும் என்பது என் எண்ணம். ஆகவே, அதன் தீமைகளை ஒவ்வொன்றாய் பட்டியலிட நான் விரும்பவில்லை.

பெற்றோரகளே!! விழிப்படையுங்கள், இணையம் உபயோகிக்கும் உங்கள் பிள்ளைகளும் இந்த 'ORKUT'டிச்சுவரிலே உட்காருகிறார்களா? என கவனியுங்கள். அப்படி அவர்களும் உட்காருகிறார்கள் எனத் தெரியவந்தால், அதிலிருந்து அவர்களை வெளிக்கொணர சிரத்தை எடுங்கள்.

மிக முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது என்னவெனில், இதில் இஸ்லாமிய வாலிபர்கள் (சில பெண்கள்) -ன் பங்களிப்பும் நிறையவே இருக்கின்றது என்பது தான் நிதர்சனம்.

பெற்றோர்களே!!! உணர்ந்து கொள்ளுங்கள், இத்தகைய தளங்களின் நோக்கம், பொக்கிஷங்களான நம் குழந்தைகைளை வழி கெடுத்து இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுவது தான். நாம் விழிப்படைவதற்கு இதுவே சரியானத் தருணம். குழந்தைகளின் கணினி பயன்பாட்டினை கண்கானியுங்கள். அவர்களை நல்லவர்களாக்கி நீங்களும் உங்கள் சமுதாயமும் பயனடைய உதவிடுங்கள்.

உங்களுக்காக,
உங்கள் நண்பன்.

Thursday, February 12, 2009

மனித நேய மக்கள் கட்சியின் துவக்கவிழா புகைப்படங்கள்.

மண்டிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சி! மாற்று அரசியலுக் கான மாபெரும் புரட்சி!! என்ற முழக்கத்தோடு சென்னையை நோக்கி படையெடுத்தனர் சமுதாய மக்கள், இல்லை... இல்லை... தமிழக மக்கள் படையெடுத்தனர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.












For More Info Visit : http://tmmk.in/news/999447.htm

Tuesday, February 10, 2009

அன்பு

திடீரென்று ஒருநாள் என் மனைவி இன்னொரு பெண்ணை போய் பார்த்துவிட்டு வர அனுமதி கொடுத்தாள். அந்தப் பெண்ணும் என் மீது மிகுந்த அன்புடையவர். வேறு
யாருமில்லை. என் அம்மாதான். வேறு இடத்தில் தனியாக வாழ்பவர். பத்தொன்பது வருடங்களாக கணவனை இழந்தவர். வேலை, குழந்தைகள், மனைவியின் அன்புக் கட்டளை
என சில காரணங்களால் எப்போதாவதுதான் அம்மாவைப் பார்க்க போக முடிகிறது. என்ன திடீர்னு என்று கேட்டேன். பாக்கணுமாம் என்றாள். சரி என்று சென்று அம்மாவை சந்தித்தேன்.

எளிமையான புடவையில் எப்போதும் கம்பீரம் அடங்கி இருக்கும் முகம். வீட்டுச் செய்திகள், சினிமா, அப்பா, முதுகுவலி, இரண்டு கப் காபி என முடியும் போது
கேட்டார். ஞாயித்துக்கிழமை போக் ரோடு ரெசிடென்சில சாப்பிடப் போகலாம்...மறக்காம வந்திடு.. சரி என்று சொல்லிவிட்டு வந்தேன். மனைவி கோபித்துக்
கொண்டாள். எதுக்கு இப்ப ரெஸ்டாரண்ட்? வீண் செலவு? ஞாயிற்றுக்கிழமை ஞாபகம் வந்தும் வராத மாதிரி இருக்க நான் பழகிக் கொண்டதில் என் மனைவிக்கு மிகுந்த
மகிழ்ச்சி.

அடுத்த இரண்டு நாளில் அம்மா மாஸிவ் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டதாக செய்தி வந்து சென்று ஈமக்கிரியைகள் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்ட
நிலையில், வீட்டிற்கு ஒரு கடிதம் வந்திருந்தது.

நீங்கள், உங்கள் மனைவி, குழந்தைகள், அம்மாவிற்காக முழு பணம் கட்டி ரிசர்வ் செய்திருந்தீர்கள். ஞாயிறு வரவில்லை. நிர்வாக விதிப்படி கட்டிய பணம் திரும்பக் கொடுக்கப்பட மாட்டாது என்பதால் மறுபடியும் நீங்கள் மற்றொரு நாளில் ரிசர்வ் செய்து குடும்பத்துடன் வந்து உணவருந்தலாம் நன்றி
போக் ரோடு ரெஸ்டாரண்ட்.

PAID BY AMMA!

Give your love to your loved one the time that they deserve!

'அன்பு' என்பது சொல்லவும், பரிமாறிக் கொள்ளக் கூடியதுமான வார்த்தை என்பதை எப்போதும் மறக்காதீர்கள்.

உம்முஅப்துற்றஹ்மான்

ஜித்தாவில் இந்திய தூதருக்கு தமிழ்சங்கம் சார்பில் பாராட்டு விழா

சவுதி அரேபியா ஜெத்தா நகரில்; சவுதி தமிழ்ச் சங்கம் சார்பில் தூதர் M.O.H.. பரூக் மரைக்கார் அவர்களின் பணி நீட்டிப்புக்காக பாராட்டு விழா நடைபெற்றது.


௮வ்வமயம் "௮யலக்த்தில் தமிழர்கள் சிறப்பதற்குக் காரணம் கல்வியே - கடமையே - கண்ணியமே"... என்ற தலைப்பில் ௮ருமையான பட்டிமன்றம் நடைபெற்றது.






மேதகு தூதர் ௮வர்களைப்பாராட்டி பலர் ௮றிஞர் பெருமக்கள் பேசினர். அவ்வமயம் ஸ்ரீலங்கா சார் தூதர் மேதகு அப்துல் லத்திப் லாஃபிர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தி விழாவினைச் சிறப்பித்தார்.
அய்டா-ஜித்தா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரு நாட்டுத் தூதர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
சகோதரர் ரஃபியா தொகுத்து வழங்க தமிழ்ச் சங்கத் தலைவர் அப்துல் மாலிக் அவர்க்ள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார்கள்.

ஹார்லிக்ஸ் பாட்டில்

டித்துக் கொண்டே சிறு சிறு வேலைகள் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அடுத்து ஐந்து நாட்கள் தேர்வு. அதற்கு முன்பாக அதிகப்படியாக வேலைகள் செய்தால்தான் தேர்வு முடியும் வரை உணவுக்கும், செலவுக்கும் சமாளிக்க முடியும். அந்த கிராமத்தில் ஒரு வீட்டைத் தட்டினான். ஒரு இளம் பெண் கதவைத் திறந்தாள். சிறுவன் விற்பனைப் பொருட்களை நீட்டினான். வேண்டாம் என்று மறுத்தவளிடம் தன் நிலையைச் சொன்னான். ஒரு நிமிடம் கூட யோசிக்காத அவள், அவன் கொண்டு வந்திருந்த எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு கூடவே ஒரு கப் ஹார்லிக்ஸையும் கொடுத்தாள். கூடவே ஒரு பாட்டில் ஹார்லிக்ஸ். சிறுவன் ஏன் என்று கேட்டான். ஹார்லிக்ஸ் தேர்வுக்கு படிக்க உதவும் என்றாள். ஹார்லிக்ஸுக்கு பணம் கொடுக்க முடியாதே என்றவனிடம் முடியும் போது கொடு என்றுவிட்டு உள்ளே போய்விட்டாள்.

பல வருடங்கள் கழிந்தது. ஒரு முதிய பெண் மிக மிக மோசமான நிலையில் வந்திருக்கிறாள் என்று பெரிய டாக்டருக்கு அழைப்பு வந்தது. சென்றவர் அந்த முதியவளை பரிசோதித்து விசாரித்த பிறகு ஒரு ஆர்வமாகி தன் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி இமைபோல காத்துக் கொண்டார். முதியவளும் பிழைத்து சிரமத்திலிருந்து மீண்ட பிறகு டிஸ்சார்ஜ் ஆகும் போது ஹாஸ்பிடல் பில் வந்தது. என்ன செய்வது? எப்படிக் கட்டுவது? பெரிய தொகை வந்திருக்கும் என்ற கவலையில் கூட இருந்தவர்கள் பதட்டத்துடன் கவரைப் பிரித்தார்கள். ஆச்சர்யம். ஹாஸ்பிடல் பில் முழுக்க கட்டப்பட்டிருந்தது. கூடவே ஒரு வரியில் ஒரு கடிதம் இருந்தது.

ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலின் விலை  கட்டப்பட்டு விட்டது. நன்றி....

"Pay big respect even for a small help"

உம்மு அப்துற்ரஹ்மான்

Saturday, February 7, 2009

தத்துவப் பேராசிரியர், மாணவர்கள்

ஒரு தத்துவப் பேராசிரியர், மாணவர்கள் முன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு காலி ஜார் எடுத்து பின் அதில் இரண்டு இஞ்ச் அளவுக்கு கற்களை நிரப்பினார். பின் மாணவர்களை நோக்கி, இந்தக் குடுவையில் ஏதும் நிறைந்திருக்கிறதா? என்று கேட்டார். மாணவர்கள் ஆம் என்றனர். பின் கொஞ்சம் கூழாங்கற்களை எடுத்து அதே குடுவையில் போட்டுக் குலுக்கினார். கூழாங்கற்கள் குடுவையில் ஏற்கனவே இருந்த சாதா கற்களுக்கு இடையில் புகுந்து நிறைந்தன. மறுபடியும் மாணவர்களைப் பார்த்து குடுவையில் ஏதும் நிறைந்திருக்கிறதா?! என்றார். மாணவர்களும் ஆம் என்றனர். பின் பேராசிரியர் கொஞ்சம் மணல் எடுத்து குடுவையில் போட்டுக் கலக்கினார். அது கற்கள், கூழாங்கற்களுக்கு இடையில் நிறைந்து மேலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் ஆக்கியது. மறுபடியும் மாணவர்களிடம் இந்தக் குடுவை நிறைந்திருக்கிறதா என்று கேட்டார். மாணவர்களும் ஆமாம் என்றனர்.

பேராசிரியர் பிறகு சொல்ல ஆரம்பித்தார்.

இந்தக் குடுவையை உங்கள் வாழ்க்கையாக நினைத்துக் கொள்ளுங்கள். திடமான கற்கள்தான் உங்கள் வாழ்வின் முக்கியமான குடும்பம், துணை, உங்கள் ஆரோக்கியம், உங்கள் குழந்தைகள். கூடவே இருக்கிற கூழாங்கற்கள் அடுத்து உங்கள் வாழ்வில் முக்கியமாக வருகிற வேலை, வீடு, உங்கள் கார் போன்றவை. உங்கள் வாழ்வில் மற்றவை எல்லாம் மணல்தான். ஸ்மால் ஸ்டஃப்!

நீங்கள் உங்கள் குடுவையை முதலில் மணலால் நிரப்பிவிட்டீர்கள் என்றால் பிறகு அதில் திடமான கற்களுக்கும், வழவழப்பான கூழாங்கற்களுக்கும் இடம் இருக்காது.

Take care of the rocks first!

Thursday, February 5, 2009

Why not we make love a part of our life?

ஒரு தீவிற்கு எல்லாவிதமான "Feelings"-மற்றும் "Emotions"-ம் சேர்ந்து ஓய்வெடுக்கச் சென்றிருந்தன. ஒவ்வொன்றும் தத்தமது இயல்புக்கு ஏற்ப ஓய்வை செலவிட்டன. திடீரென்று தீவை புயல் தாக்க ஆரம்பித்தது. ஒவ்வொன்றும் அங்கிருந்து தப்பி, கிடைத்த படகுகளில் ஏறி தத்தமது பொருட்களுடன் கிளம்பின. அன்பு Love-க்கு மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து பின் உதவி நாடியது. வேகமாக கிளம்பிய  Prosperity-செழுமையிடம் உதவி கேட்டது.
 
என்னையும் காப்பாற்றி கூட்டிச் செல்லுங்கள். செழுமை மறுத்துவிட்டது. என்னிடம் இருக்கும் விலை உயர்ந்த எல்லாவற்றையும் காப்பாற்ற வேண்டும். படகில் இடம் இல்லை. அடுத்துக் கிளம்பிக் கொண்டிருந்த Vanity-வீண் பகட்டிடம் அன்பு உதவி கேட்டது. முடியாது. உன் பாதத்தின் ஈரமணல் என் படகில் விழுந்துவிடும்... அடுத்து Happiness-சந்தோஷத்திடம் அன்பு சென்று காப்பாற்றச் சொல்லிக் கேட்டது, சந்தோஷத்திற்கு காதே கேட்கவில்லை. அடுத்து Sorrow-துயரத்திடம் சென்று அன்பு என்னையும் காப்பாற்றிச் செல்லேன் என்றது. நீ வேற... நானே துயரத்தில் இருக்கேன்... என்றது அது. அப்போது அங்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்த Knowledge-அறிவு திரும்பிப் பார்த்து, வா... வந்து என் படகில் ஏறிக் கொள்... என்று உதவியது. தப்பி வரும் போது அன்பு, அறிவிடம் கேட்டது. எனக்கு எது உதவியது?.... அறிவு சொன்னது Time-நேரம்!

அன்பு ஆச்சரியப்பட்டது. எதற்காக நேரம் என்னைக் காப்பாற்றியது. அறிவு ஒரு ஞானப்புன்னகை உதிர்த்தப்படி சொன்னது. நேரத்திற்குத்தான் உன்னுடைய உண்மையான பெருமையும், தகுதியும் தெரியும். காரணம், உன்னால்தான் இந்த உலகத்திற்கு அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுக்க முடியும்...

"Why not we make love a part of our life?"

உம்மு அப்துற்ரஹ்மான்

Wednesday, February 4, 2009

இமாம் ஷாஃபி பள்ளி தடம் மாறுகிறதா?

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இமாம் ஷாஃபி [ரஹ்] மெட்ரிகுலேசன் பள்ளி,அதிரையின் முதல் ஆங்கிலவழி பாடசாலை. மார்க்கப் பின்னணியுடன் கூடிய ஆங்கில வழிக் கல்விக்கூடம் சுற்றுவட்டார நகரங்களிலேயே அதிரையில்தான் தொடங்கப்பட்டது. இப்படியாக முப்பது வருடப்பாரம்பர்யம் கொண்ட இப்பள்ளியின் சமீப வருட அணுகுமுறைகள் பள்ளிக்கு அவப்பெயரை உண்டாக்கிவிடுமோ என நினைக்கத் தோன்றுகிறது

இரு வருடங்களுக்கு முன்பு பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் ஹாஜாநகர் மாணவனை மாணவியர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து அவமதித்த ஆசிரியரை மாணவன் திருப்பி அடித்தான். பள்ளி மாணவர்களை அடிக்கும் அரக்கத்தனம் அநாகரிகமாகக் கருதப்படுகிறது. பதின்ம வயதின் (டீனேஜ்) காரணமாக உடலளவிலும் மனதளவிலும் எழும் உடலியல்/உளவியல் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாது பலர்முன்பு அவமானப் படுத்தப்பட்டதோடு பள்ளியை விட்டும் நீக்கப்பட்டான். வெளிநாட்டில் இருந்த பெற்றோர் மன்னிப்புக் கேட்டும் பொருட்படுத்தாமல் பதினொன்றாம் வகுப்பின் இறுதிக் கட்டத்தில் இருந்த மாணவனை பள்ளியைவிட்டு நீக்கி இமாம் ஷாஃபி பள்ளி நிர்வாகம் தனது பக்குவமின்மையைக் காட்டியது.






பத்தாம் வகுப்பு மாணவியொருவர், பார்டர் மதிப்பெண்களில் தேர்ச்சியடடந்த காரணத்தால், மேற்கொண்டு பள்ளியில் படிப்பைத் தொடர முடியாதென்று சொன்னதோடு, காதிர் முஹைதீன் பெண்கள் பள்ளிக்கு மாற்றுதல் வாங்சிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார். மாணவியும் பெற்றோரும் தங்கள் மகள் கடந்த 10-12 வருடங்களாகப் படித்த இமாம் ஷாஃபி பள்ளியிலேயே தொடர அனுமதிக்க வேண்டினர். மிகுந்த கோரிக்கைக்குப் பின்னர், பள்ளி நிர்வாகம் மாணவியை அதே பள்ளியில் படிக்க அனுமதித்தனர்.

இங்கு விமர்சிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், இமாம் ஷாஃபி பள்ளியின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்றாக நமதூரில் பெண்கள் கல்லூரி தொடங்குவதும் உள்ளது. தங்கள் பள்ளியில் படித்த மாணவிக்கு மேற்படிப்பு படிக்க அனுமதிக்காவிடில் எப்படி கல்லூரிக்கு மாணவியர் கிடைப்பார்கள் என உணரவில்லை. மேலும், 10-12 வருடங்கள் பள்ளியில் படித்த மாணவியின் குறைவான மதிப்பெண்ணுக்கு குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களும்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள மறந்தார்கள்.

சமீபத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவரை தவறுதலாக வெற்று குறுஞ்செய்தி (EMPTY SMS) அனுப்பிய காரணத்திற்காக ஆயுவுக்கூடத்திற்கு அழைத்து அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட மாணவனை 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நமதூர் மாணவர்கள் அமைப்பினர் கொதித்தெழுந்தனர்.

மாணவன் பக்கம் குற்றமில்லை என்பது நிரூபனமான பின்பும்கூட, பாதிக்கப்பட்ட மாணவனை பதினைந்து நாட்கள் சஸ்பெண்ட் செய்து தண்டித்தது எந்த வகையான நீதி என்று தெரியவில்லை. ஆசிரியரின் அநாகரிகத்தைக் கண்டு கொள்ளாது தண்டிக்கப்பட்ட மாணவன், நீதிமன்றம் சென்று நியாயம் கேட்ட பிறகும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாணவனைத் தாக்கிய ஆசிரியர்களில் ஒருவர் தாமாகவே ராஜினாமா செய்துள்ளார். மற்றொருவர் உதவித் தலைமையாசிரியர் நிலையில் இருப்பதால் நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டு வழக்கு வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளது.

நல்லெண்ணம் கொண்டவர்களால் நீண்டகாலக் கண்ணோட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இமாம் ஷாஃபி பள்ளியின் சமீபகால அணுகு முறைகள் நெறி தவறுவதற்கு யார் காரணம்?

பள்ளிகளில் கட்டுப்பாட்டைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் நிதானம் இழப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதா? பாதிக்கப்பட்டவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தினால் நஷ்டத்திற்கு யார் பொறுப்பு?

தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பயின்றால் எதிர்காலத்தில் நல்ல நிலை அடைவார்கள் என்ற நம்பிக்கையில், இமாம் ஷாஃபி பள்ளியின்மீது நம்பிக்கை வைத்த பெற்றோர்களுக்குப் பள்ளி நிர்வாகம் என்ன வகையான உத்தரவாதத்தைக் கொடுக்கப்போகிறார்கள்?

இக்கால கட்டத்தில் மார்க்கக்கல்வியும் உலகக் கல்வியும் ஒருங்கே பெற்ற பள்ளிகள் சொற்பளவே உள்ளன. சிறுபான்மையினர் நிறைந்துள்ள அதிரை போன்ற சிற்றூர்களில் அரசாங்கம் அல்லது வர்த்தக ரீதியில் யாரும் இது போல் கல்விச்சேவை செய்ய முன் வரமாட்டார்கள். 30 வருடப்பாரம்பர்யம், பெற்றோரின் நன்மதிப்பு இவற்றை ஒருசில ஆசிரியர்களின் நடவடிக்கை காரணமாக இமாம் ஷாஃபி இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்திற்குப் பள்ளி நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

Tuesday, February 3, 2009

சரபுதீன், சுப்பு, சர்மா ( பாகம் - 2 )

காதலும் காமமும் தெறியாத வயதில் அந்தி மாலைப்பொழுதில் மூவரும் வண்டிப்பேட்டை வழியாக சென்றுகொண்டிருக்குபோது நாளை விடுமுறையை எப்படி கழிப்பது என்று விவாதம் திரும்பியது.

சர்மாவோ, தனியாக வீட்டில் இருக்க போவதாகவும் அப்பாவும் அம்மாவும் அவரவர் வேலைக்கு போய்விடுவத்தால் தனக்கு போர் அடிக்கும் என்று அலுத்துகொண்டான். சுப்புவுக்கோ சந்தோஷம் காரணம் விடுமுறை நாட்களில் அவன் அப்பாவுடன் வேலைக்கு போவது வழக்கம் அவனுக்கு கையாளுக்கான சம்பளம் கிடைக்கும் அதில் அவனுக்கு மூன்றில் ஒரு பகுதி கிடைக்கும் மேலும் குடும்பத்திற்கும் உதவியாகவும் இருக்கும் என்பதாலும் அவனுக்கு சந்தோஷாம் என்றான்.

சரபுதீன் எங்கு போகப்போகிறாய் என்றனர் அவனோ திருச்சிக்கு என்றான் இருவரும் ஆச்சரியபட்டனர், எதற்கு என்று வினவினர் பாஸ்போர்ட் எடுக்க என்றவுடன் மேலும் ஆச்சரியாப்பட்டனர், உனக்கு 16 வயது தானே ஆகின்றது 18 வயது ஆனால் தான் பாஸ்போர்ட் எடுக்கமுடியும் என்றான் சர்மா, அதற்கு அவன் பட்டுக்கோட்டையில் இருக்கும் டிராவல்ஸ் ஏஜென்ட் எடுக்கலாம் என்றிருக்கிறார் என்றான்.

சுப்பு கேட்டான் ஏன்டா பரீட்சை லீவில் குடும்பத்துடன் எதும் வெளிநாட்டிற்கு டூர் ஏதும் போகபோகிறீர்களா என்றான், இல்லைடா திருச்சிக்கு போவதற்கே எங்க மாமா பணம் தருகிறார் இதுல எங்க டூர் போறது என்றான், பிறகு ஏன் இவ்வளவு அவசரம் பாஸ்போர்ட் எடுக்க என்றான், போன வாரம் எங்க வாப்பா மெட்ராஸ் போய்ட்டு வந்தங்கள அப்போ அங்க வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புர நம்மூர் ஏஜெண்ட்ட பார்த்தார்களாம் அவரிடம் குடும்ப கஷ்டங்களை சொல்லிகிட்டு இருக்கும்போது சீக்கிரம் உங்க மகனுக்கு பாஸ்போர்ட் எடுங்க சவுதி நாட்டுக்கு விஷா வரத்து அதிகமாகிட்டு இருக்குது நல்ல கம்பேணி கிடைத்தால் அனுப்பி வைத்துவிடலாம் என்றாரம் அதனால் தான் இவ்வளவு அவசரம் என்றான்.

மேலும் எங்க வாப்பவுக்கும் சந்தோஷம் காரணம் வெளிநாட்டிற்கு போக எத்தனையே தடவை முயற்ச்சி செய்தும் அவர்களால் போக முடியவில்லையாம் ஆதால் தன்னால் முடியாத பாக்கியம் தன் மகனுக்காவது கிடைக்கட்டுமே என்று ஆசைப்படுகிறார்கள் என்றான். ஏன்டா படிக்கும் போது வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் நல்லா படித்துவிட்டு இங்கேயே வேலை கிடைத்து சம்பாதிக்கலாம்புல என்றான் சுப்பு, வண்டிப்பேட்டை பள்ளியில் பாங்கு சொல்லும் சத்தம் கேட்டு மூவரும் வீடு திரும்பலானார்கள் நான் தொழுது விட்டு வீட்டுக்கு போகிறேன் என்று மற்றவர்களிடம் சரபுதீன் விடைப்பெற்றுக்கொண்டான்.

மஹ்ரிப் தொழுகை முடிந்தவுடன் வாரந்தோறும் நடைப்பெறும் மார்க்க செற்பொழிவில் கலந்து கொண்டுவிட்டு வாப்பாவும் மகனும் வீடு திரும்பலானார்கள். நளை பாஸ்போர்ட் எடுக்க போகமல் இருக்க வேண்டும் இதைப்பற்றி வாப்பவிடம் பேசவேண்டும் என்ற ஆவாலில் வாப்பாவிடம் கோட்டேவிட்டான் நான் படிக்க வேண்டும் +2 பாஸ் ஆன பிறகு பாஸ்போர்ட் எடுப்பதை பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்றவுடன் சவண்ணா காக்கவுக்கு சுர்றென்று கோபம் தலைக்கு ஏறியவராக சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார், இவருடை சத்தத்தை கேட்டு அடுப்படியில் மருமகனுக்காக சின்ன வெங்காயத்தை போட்டு ரவா தோசை சுட்டுகிட்டு இருந்த சல்மா ராத்தா அவர்கள் போட்டது போட்டபடி என்னவென்று கூடத்தை நோக்கி வந்தார்கள், ஏன் என்றைக்கும் இல்லாமல் இவ்வள்வு சத்தம் உள்ள மருமவன் இருக்காக மெதுவா பேசக்கூடாத என்றார்கள்.

உன் மகன்கிட்யே கேட்டு தெறிந்து கொள் என்று ஒதுங்கி கொண்டார், மகனை நோக்கிய தாய் வாஞ்சையுடன் என்ன நடந்தது என்றார், உம்மா நான் அவசியம் பாஸ்போர்ட் எடுத்துதான் ஆக வேண்டுமா வெளிநாடு போய் தான் ஆக வேண்டுமா என்றவுடன் உம்மாவுக்கும் பகீர் என்று ஆகிவிட்ட்து, காரணம் ஏற்கனவே மூத்த மகளின் கல்யாணத்தை முன்னோர்கள் சேர்த்து வைத்தது குடும்பத்தினர் கொடுத்து உதவியதை வைத்து ஒரு வழியாக முடித்தாகிவிட்டது அடுத்த மகளுக்கோ கல்யாண வயது ஆகிவிட்டது இருந்த ஒரு வீட்டையும் மூத்தமகளுக்கே கொடுத்தவிட்டபடியால் வீடும் கொடுக்கவேண்டும் மகன் இருக்கின்றான் என்ற தைறியத்தில் இருந்தவர்களுக்கு சொலக்கென்று ஆகிவிட்டது (அல்லாஹ்வை மறந்துவிட்டார்கள்) ஒரு விதமாக குடும்பசூழ்நிலையை மகனிடம் சொல்லி அவனை சம்மதிக்க வைத்து விட்டார்கள்.

உம்மாவின் சொல்லை கேட்டு மச்சான் சாப்பிட்டுவிட்டு பாக்கி வரும் ரவா தோசைக்காக வாப்பவும் மகனும் காத்திருந்தனர்....................


தொடரும்...................................................................................

சின்னகாக்கா

புகை பழக்கம்

பத்து நபர்கள் மரணமடைவாரெனின் அதில் ஒருவர் புகையிலையின் பக்கவிளைவினால் மரணமடைகிறார். இதை ஒட்டு மொத்தமாக காண்கையில் ஒரு வருடத்திற்கு 5 கோடி இறப்புகளுக்கு சமமாகும். பெரும்பான்மையான மரணங்கள் மாரடைப்பு, புற்று நோய் மற்றும் சுவாச கோளாருகளால் எற்படுகின்றன. அமெரிக்காவில் மூச்சுக் குழாய் அடைப்பினால் மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சமீபத்தய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

புகை பிடிப்பது மரணத்தை நம் வீட்டின் அடி வாசலுக்கு அழைப்புவிடுக்கும் செயல் என்பார்கள். புகை பிடிக்கும் பழக்கமானது புகைப்பவனை மட்டுமல்லாது அவனைச் சூழ்ந்து இருப்பவரையும் பாதிக்கிறது. உறிஞ்சப்படும் புகை புகைப்பவனின் இருதயம், சுவாசப்பை மற்றும் மூளை போன்ற அங்கங்களை பாதிக்கிறது.

ஒரு வெண்சுருட்டில் அடங்கியுள்ள தார், நிக்கோடின், மற்றும் பல இரசாயன பொருட்களின் கலவை புற்று நோய், டீபி, மூளையில் இரத்தம் கசியச் செய்தல் என பல நோய்களை உண்டாக்கின்றன.

உறிஞ்சப்படும் புகையில் 4000 இரசாயனப் பொருட்களும் அவற்றுள் 200 விஷ இரசாயனங்களும் உள்ளன. மேலும் 43 வகை இரசாயனங்கள் புற்றுநோயை உண்டு பண்ணுபவை. வெளியேற்றப்பட்ட சிகரட்டு புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்க வாத நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம். பக்கவாத நோய் ஒருவரின் பார்வையிழக்கச் செய்யலாம், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்படையச் செய்யலாம், உயிரைக் கூட குடித்துவிடலாம்.

புகை பழக்கம் கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 1 முதல் 10 சிகரட்டுகள் புகைப்பாராயின் அவர்களில் 29 சதவிகிதத்தனரின் சிசுக்கள் ஊனமாய் பிறக்கிறது. இதை தவிர்த்து புகைக்கும் பழக்கம் ஒருவரின் பணத்தையும் பாழ்படுத்துகிறது என்பது நாம் அறிந்த விடயமாகும்.

கடந்த நான்கு நூற்றாண்டுகளாக புகை பழக்கத்தின் பாதிப்புகள் சரிவர அறியாமலே இருந்தது. ஆதலால் புகை பிடிப்பதின் பக்கவிளைவுகளும் கட்டுபாடின்றி வளர்ந்து கொண்டே இருந்தது. புகையிலையின் பக்க விளைவுகளை உணர்த்தும் நோக்கில் விழிப்புணர்வு பட்டரைகளும் விளம்பரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் புகைப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புகைப்பவரிடையே உண்டாகும் புற்றுநோயும், மாரடைப்பும் பிரிட்டனில் ஏற்படும் 30% மரணத்திற்கு முக்கிய காரணமாய் அமைக்கிறது.

புகை பழக்கத்தை விடுவோமேயானல் அதன் பலன்கள் ஐந்து வருடத்தில் நம்மால் உணர முடியும் என்கிறது ஒரு தகவல்.

புகைக்கும் பழக்கம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். உடலுறவில் அதிருப்தியும் சுக்கில உற்பத்தியும் குறைந்து போகும். ஒரு ஆய்வின்படி புகைபிடிக்கும் ஆண்களில் 30-40 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதத்தினருக்கு ஆண்மை வீரியம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

புகை பழக்கம் கொண்டவர்கள் விரைவாகவே முதுமைத் தன்மையோடுக் காட்சியளிப்பார்கள். இது புகை பிடிக்காதவரைக் காட்டினும் ஆண்களுக்கு 2 மடங்கும் பெண்களுக்கு 3 மடங்கும் ஒப்பானதாகும். இதற்கு என்ன காரணம்? சிகரட்டு புகை நம் உடலில் காணப்படும் A வகை விட்டமினைக் குறைக்கும். விட்டமின் A நமது தோல் பாதுகாப்பிற்குடையதாகும். இவ்விட்டமின் குறைவினால் இயல்பான வயதை விட முதுமை தோன்றமே முந்தி நின்று காட்சி அளிக்கும்.

புகையிலையில் காணப்படும்
Acetyldehdye எனப்படும் இரசாயனம் நமது உடலில் காணப்படும் C வகை விட்டமீன்களை குறைத்துவிடும் தன்மையைக் கொண்டது. ஒரு துண்டு சிகரட்டு புகைப்பவரின் உடலில் காணப்படும் 20மில்லிகிராம் C வகை வைட்டமின்களை அழிக்கிறது.

ஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது. அதாவது புகை உறுஞ்சுபவரை காட்டினும் அவரை சுற்றி இருப்பவருக்கே பாதிப்புகள் பல மடங்கு அதிகமாக உள்ளது. முக்கியமாக குழந்தைகள் பெரியவர்களை காட்டினும் விரைவாக சுவாசிப்பார்கள், அப்படி சுவாசிக்கப்படுபவர்கள் இளம் பிராயத்திலேயே பாதிப்படைகிறார்கள், நோய்க்குற்படுகிறார்கள்.

70 கோடி சிறார்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் வீடுகளில் வாழ்வதாக குறிப்பிடுகிறார்கள். சிகரட்டு புகை, சிறார்களின் உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. அமேரிக்க ஆய்வறிக்கை ஒன்று மிதமான சிகரட்டு புகையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட ஆய்வின்படி அவர்களிடையே படிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக காட்டுகிறது.

புகை பழக்கம் கொண்டவர்கள் முள்ளங்கி ரசம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் புகை பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஒரு தகவல் விளக்கம் கொடுக்கிறது. சீரிய வாழ்விற்கு புகை பிடிக்காதிருப்போம்

 
Abo Sumayya. Jeddah.

Sunday, February 1, 2009

இறைவனை ஏமாற்றுபவர்கள்

 
தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்க வேண்டும், தனக்கு ஏதேனும் காரிங்கள் நிறைவேற வேண்டும் என்றே கையேந்தி கேட்கிறார்கள். அல்லஹ் அவர்களின் காரியங்களை நிறைவேற்றி கொடுத்த பிறகு, அதை விட்டும் அல்லாஹ்வை நினைப்பதை, கேட்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

அல்லாஹ் குர்ஆனிலே சொல்லி இருக்கிறான்:
 
(விசுவாசம் கொண்டவர்களே, பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்)நம் உயிர் இருக்கும் காலமெல்லாம் அல்லஹ் இடத்தில் இரு உலக வெற்றிக்கும் கேட்டவண்ணமாக இருக்க வேண்டும் நாம் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் பார்த்து கொண்டுதானிருக்கிறான் என்பதை நினைவில் கொண்டு அல்லஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்" பாகம் 11 வசனம் 12.
 
"மனிதனை துன்பம் தீண்டுமானால்(அதனை நீக்குமாறு) அவன் சாய்ந்து படுத்தவனாக அல்லது உட்கார்ந்தவனாக அல்லது நின்றவனாக நம்மை அவன் பிரத்தித்து அழைக்கிறான், பின்னர் அவனுடயதுன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்தனை செய்யாதவனை போல்(புறக்கனித்து சென்று விடுகிறான், வரம்பு மீருவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த (தீயது இவ்வாறு அலங்காரமாக ஆக்கப்பட்டு விட்டது) அல்லஹ் படைக்கப்பட்ட அனைத்திற்கும் பறவை, பட்சிகள். ஊர்வனங்களுக்கு இரணம் அளிக்கிறான், அவைகளும் அல்லஹ்வை திக்ரு செய்கின்றன. பாகம் 12(வசனம் 6)
 
"பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது பொறுப்பாக இருந்தே தவிர இல்லை. அவை தங்குமிடத்தையும் அவை ஒப்படைக்கப்பட்டு சேருமிடத்தையும் அவன்(நன்கு) அறிகிறவன். இவையாவும்(லவ்ஹுல் மஹ்Fபூல் என்னும் புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன). பாகம் 12 - வசணம் 15"
 
எவர்கள் இவ்வுலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் செயல்களுக்குறிய பலன்களை இவ்வுலகத்திலேயே நாம் பூரனமாக அவர்களுக்கு நிறைவு செய்வோம், அவர்களோ அதில் குறைவு செய்யப் படமாட்டார்கள்) இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே நாம் அனைவரும் நம் தேவைகளை கேட்டு நம் காரியங்களை அவனிடமே ஒப்படைத்து வல்ல இறைவனிடம் மட்டுமே கேட்கக் கூடியவர்களாக நாம் ஆகுவோமாக, அவனே நேர்வழி காட்ட போதுமானவனாக இருககிறான்
 
உம்மு பஜ்லுர் ரஹ்மான்
ஜித்தா, K.S.A