Monday, March 30, 2009

கூழுக்கும் ஆசை - மீசைக்கும் ஆசையா?


asalaamu அலைக்கும் [வரஹ்]


அறிமுகம்: பாம்பாட்டியாகிய நான் நடுத்தெருவைச் சார்ந்தவன். அரசியல் கூட்டம் முதல் ரஜினிபடம் ஆர்வம். வெற்றிகொண்டான் பேசினாலும் சரி பி.ஜெ பேசினாலும்சரி வெள்ளை வேட்டியுடன் ஆஜராகிவிடுவேன். இண்டர் நெட்டையும் விடவில்லை.


தமிழ்முஸ்லிம்டூப் (http://www.tamilmuslimtube.com/) இல் அனைத்து வகையான ஆடியோ வீடியோவும் கிடைப்பதால் அதையும் விட்டு வைக்கவில்லை. AWC,OMEGA,TAFRAG,TMB போன்ற ஈமெயில் குரூப்பிலிருந்தும் மார்க்கம் சம்பந்தமாகவும் பொதுவாகவும் மெயில்கள் வருகின்றன என்பதால் நான் கண்ட, கேட்ட விசயங்களை அவ்வப்போது இத்தளத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.


என்னுடைய இம்மடலில் அறிஞர் பிஜெ மற்றும் தவ்ஹீது ஜமாத் குறித்துக் கேள்விகள் கேட்டிருப்பதால் எதிர்கோஷ்டி என்று அவசரப்பட்டுத் தப்புக் கணக்கு போட்டால் பின்னாடி வருத்தப்படுவீர்கள் சொல்லிப்புட்டேன் ஆமா! - பாம்பாட்டி B.A


=========================================================


பொய்,பித்தலாட்டம்,மோசடி, வாக்குருதி மீறல், மற்றும் இன்ணும் பிற அனைத்துப் பாவங்களுக்கும் தேர்தலில் போட்டியிடுவது காரணமாக இருப்பதால், மக்களின் மறுமை வெற்றியை பாழாக்கும் தேர்தலில் போட்டி என்ற இந்தபெரும் பாவத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களின் பயன் கருதி இந்தஎச்சரிக்கை வெளியிடப்படுகிறது.


தயவு செய்து இயக்கவெறியை ஓரங்கட்டிவிட்டு நடுநிலையோடு சிந்திக்குமாறு மறுவெற்றியை விரும்பும் மக்களுக்கு வேண்டுகோளுடன் இந்த PDF இனைப்பை அனுப்புகிறேன்

அதிரை - அபூசுமையா
ஜித்தாவிலிருந்து.


==========================================================
மேற்கண்ட முன்னுரையுடன் அனுப்பப்பட்டிருந்த மின்மடலின் இணைப்பில் சொல்லப்ப்பட்ட விசயத்தின் சாராம்சம் என்னவென்றால்,


தமுமுக மற்றும் விடியல் இயக்கத்தினர் அரசியலில் போட்டியிடுவது தங்கள் சுயநலனுக்காகவே என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாக சில காரணங்களும் சொல்லப்பட்டிருந்தது. முற்றிலும் நிராகரிக்கப்படக்கூடிய வாதங்கள் அல்ல என்றபோதிலும் இறுதியாக "இன்றைக்கும் கும்பகோணம்,தஞ்சை மாநாட்டுக்குப் பின் தவ்ஹீது ஜமாத்தையும் தேர்தல் சாக்கடையில் தள்ளி ஆதாயம் அடைய சிலர் ஆசை வார்த்தைக் காட்டிக்கொண்டுதான் உள்ளனர். இதுவரை அவர்களின் வலையில் சிக்காமல் தனது தனித்தன்மையை தவ்ஹீது ஜமாஅத் காப்பாற்றி வருகிறது" என்று சொல்லப்பட்டிருந்தது நம்பும்படியாக இல்லை!


1) அண்ணன் பீஜே அவர்கள் தமுமுகவில் இருந்தபோது சென்னையில் நடந்த வாழ்வுரிமை மாநாட்டிற்கு ஜெயலலிதாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்தபோது அண்ணன் பீஜே அவர்கள் தமுமுக அமைப்பாளராக இருந்தார். மைப்பாளர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி,அரசியல்வாதியை அதுவும் மோடியின் தோழியை சிறப்பு அழைப்பாளராக அழைத்தது ஏன்?


2) தமுமுகவில் இருந்தால் தவுஹீதுப் பிரச்சாரம் செய்யமுடியாது என்று சொல்லியே அதிலிருந்து வெளியேறினார். வெளியேறிய கையோடு தமிழ்நாடு தவுஹீது ஜமாத் என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தினார்கள்.அரசியல் ஆர்வம் ஒருபோதும் இல்லயென்றால் எதற்காகக் தனிக்கொடியை உருவாக்கினார்கள்?


3) மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றே ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் என்று செயல்பட்டது ஏன்?


4) 3.5% இட ஒதுக்கீட்டிற்கு முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் நடத்திய பேச்சுவார்த்தையால்தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்றது ஏன்? உண்மையிலேயே அதுவும் ஒரு காரணமாக இருந்தால் எப்படியோ முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தால் சரி.பலன் அல்லாஹ்விடம் என்று அமைதியாக இருந்திருக்கலாமே.ஆனால் தமுமுகவை விட தங்களுக்கே இடஒதுக்கீட்டின் கிரடிட் கிடைக்க வேண்டும் என்று பத்திபத்தியாக எழுதியது ஏன்?


5) சில மார்க்க அறிஞர்களையும் சமுதாய ஆர்வலர்களையும் அழைத்துக் கொண்டு ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்றது ஏன்?


6) சந்தித்தப் பிறகு இடஒதுக்கீடு விசயத்தில் ஜெயலலிதா சொன்னதைக் கிளிப்பிள்ளை போல் ஊர்ஊராகச் சென்று முழங்கியதும் பத்திரிக்கையில் எழுதியதும் ஏன்?


7) ஜெயலலிதாவுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தது ஏன்?


8) மோடியைவிட கலைஞர் மோசமானவர் என்று ஒருபக்கச் சார்பாகப் பேசியது ஏன்? மோடியளவு கருணாநிதி முஸ்லிம்களைப் படுகொலை செய்யாவிட்டாலும் அவ்வப்போது வஞ்சித்தும் ஏமாற்றியும் வந்திருக்கிறார். (தற்போதுகூட மமகவுக்கு ஒரு சீட்டுகூட ஒதுக்காமல் கழுத்தறுத்துள்ளார்).


9) முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் நடத்தியது யாருக்காக?


ஆகவே, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களே! தவ்ஹீதுப்பிரச்சாரம் மட்டும்தான் உங்கள் குறிக்கோலென்றால் தனிக்கொடி, அரசியல் சார்பு போன்றவற்றை மூட்டை கட்டிவிட்டு அல்லது சாக்கடையைக் கிளறாது Mr.பரிசுத்தமாக இருங்கள். அவ்வப்போது அரசியலும் செய்வோம் என்றால் "தவ்ஹீது" காரணத்திற்காகவே தமுமுக இயக்கத்திலிருந்து வெளியேறினோம் என்று இனிமேல் சொல்லாமல் இருங்கள்.


பாசத்துடன்


பாம்பாட்டி B.A

Saturday, March 28, 2009

நேரடி ஒளிபரப்பு

இன்று (28- 3 - 09) 6.30 மனி அளவில் அதிரையில் மனித நேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம் அல் ஆமின் பள்ளி அருகில் நடைபெறுகிறது அத்ன் நேரடி ஒளிபரப்பு இந்த தளத்திள் கானலாம்

www.adiraimedia.comதிமுக: தஞ்சை திமுக சீட் யாருக்கு?-பழனிமாணிக்கம Vs சந்திரசேகரன்

தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக சீட்டை கைப்பற்றுவதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் தீவிர ஆதரவாளரான சந்திரசேகரன் ஆகியோர் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த 2004ல் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பழனிமாணிக்கம் மீது இப்போது தலைமை ஏதோ கோபத்தில் உள்ளது. இதனால் அவரை இம்முறை மீண்டும் சீட் கேட்டு விண்ணப்பிக்குமாறு திமுக தலைமை கூறவில்லை. அவரும் தலைமை அழைத்துச் சொல்லும் என்று கடைசி நாள் வரை காத்திருந்துவிட்டு மனு செய்தார்.

தொகுதியில் தனக்கு தனி செல்வாக்கு இருப்பதால் இந்த முறையும் தனக்கே சீட் தரப்படும் என அவர் கருதுகிறார்.

ஆனால், திமுக-தயாநிதி சிக்கல் தீர்ந்ததால் அங்கு பழனிமாணிக்கத்துக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. முரசொலி மாறன் பேரவை என்ற அமைப்பை நடத்தி வரும் தஞ்சை சந்திரசேகரன் என்பவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. அவரும் இதற்கான கோதாவில் மும்முரமாக குதித்துள்ளார்.

தாயநிதி மாறனின் ஆசி உண்டு என்பதால் இவரது ஆதராவாளர்கள் எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற உற்சாகத்தில் உள்ளனர்.

இதையடுத்து தஞ்சை திமுகவில் சீட் பழனிமாணிக்கத்திற்காக அல்லது சந்திரசேகருக்காக என பலர் 'பெட் கட்டி' வருவதாகவும் தெரிகிறது.

ஆரம்பிச்சிட்டுங்கய்யா...!

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

உங்கள் கருத்துக்களை தட்ஸ்தமிழ்.காமில் பதிவு செய்ய

Thursday, March 26, 2009

பாலைவனத்தில் பனிக்கட்டி (அபுதாபி 26-03-200)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று புதன் மாலையிலிருந்து பெய்து வந்த கடும் மழையினால் ஆங்காங்கு பனிக்கட்டிகளும் மழையுடன் கொட்டின.
 

Tuesday, March 24, 2009

காணாமல்போன தவ்ஹீதுவாதிகள்

20-25 வருடங்களுக்கு முன்பு வரதட்சினை வாங்கக்கூடாது, கொடுக்கக்கூடாது, கந்தூரிக் கடைக்குப் போகக்கூடாது, தொழும்போது தொப்பி அவசியமில்லை, அத்தஹியாத்தில் கலிமா விரலை ஆட்டனும், கூட்டு துவா கூடாது இப்படியெல்லாம் சொல்லிகொண்டு சிலர் பலே, பழைய ஆலிம்சாக்களை கேள்வி கேட்டும், ஆதாரம் கேட்டும் முஸ்லிம்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தங்களை குர்.ஆன் ஹதீஸை மட்டும் ஆதாரமாகக் கொள்ளும் "தவ்ஹீது"வாதிகள் என்றும் சொல்லி புரட்சி செய்தார்கள்.

தலைப்பா கட்டியவரையும்,தாடி வைத்தவரையும்,கோழி அறுப்பவரையும், தாயத்து முடிந்து கொடுப்பவரையுமே மார்க்கம் அறிந்தவர்களாக நம்பிக் கொண்டு, மாதம் ஒரு சிறப்பு தினம் உருவாக்கி ஆயுத பூசைக்கும் பாத்திஹா ஓதி ஜீவனம் நடத்தியவர்கள் தாழ்வு மனப்பன்மை கொள்ளும்வகையில் சமுதாயத்தில் சத்தியமார்க்கத்தை எடுத்துச் சொன்னார்கள்.

குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே முன்னிறுத்திய பாவத்திற்காக?! சமூக பகிஷ்கரிப்பு செய்யப்பட்டார்கள்.வரதட்சினை வாங்கும் 95% திருமணங்களைப் புறக்கனித்து சமபந்தி/வலீமா விருந்துகளைத் துறந்தார்கள். சுருக்கமாகச் சொல்வதெனில் நபித்துவத்திற்கு முந்தைய பத்து வருட மக்கா வாழ்க்கையைப்போல் எண்ணற்ற சோதனைகளுக்கு உள்ளானர்கள்.

ஏழெட்டு வருடங்கள் மதறஸாவில் ஓதிக்கற்று பக்தியுடன் பரனில் அடுக்கப்பட்ட கிதாபுகளை தூசிதட்டி ஆதாரங்களைத் தேடச் செய்தார்கள். தராவிஹ் எத்தனை ரக்காத்துகள் என்பதற்கு விடைதேட சமுதாயத்தைக் கிட்டத்தட்ட சஹாபாக்கள் காலத்திற்கே அழைத்துச் சென்றார்கள். எங்கு சென்றார்கள் இந்த அக்மார்க் தவ்ஹீதுவாதிகள்? என்று தேடிக்கண்டுபிடிப்பதே இப்பதிவின் நோக்கம்.

நான்கு மத்ஹபுகளால் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்று முழங்கிய இவர்கள் இன்று நான்குக்கும் மேற்பட்ட மத்ஹபுகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இமாம்களைக் கேலிபேசிய இவர்கள் இன்று கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தஹியாத்தில் விரலை ஆட்டலாமா வேண்டாமா என்று விவாதத்தை தொடங்கியவர்களால் இன்று சமுதயமே ஆடிப்போயுள்ளது!பச்சைப் பிறைக்கொடியை கிண்டலடித்தவர்களே இன்று பச்சையை தங்கள் கொடியில் வைத்துக் கொண்டு தவ்ஹீது அரசியல் செய்துவருகிறார்கள். தனது ஒரு கண்போனாலும் பரவாயில்லை-தன்னை எதிர்த்த சகோதரனுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

நம்பி வந்தவர்களை அரசியல்வாதிகளிடம் கூட்டம் காட்டி அரசியல் பேரம் பேசிப் பலனடைகிறீர்கள்! பஞ்சப்பரதேசிகளைப் போலிருந்த நீங்கள் புத்தகம் எழுதியும் டிஜிட்டல் பிரச்சாரம் செய்தும் பணம் சேர்த்து விட்டு ஆயுளில் ஒருமுறை ஜகாத் போதுமென்கிறீர்கள்!

செங்கதிரும் விண்மதியும் சேர்ந்தே கையில் தந்திடினும் எம்கொள்கை விட மாட்டோம் என்றுரைத்த நபிவழி எங்கே? வின்டிவீயில இடம்தந்தால் எங்கள் கொள்கையை கிடப்பில்போட்டு கூட்டணிப் பிரச்சாரம் செய்வோம் என்று சோரம்போன உங்கள் வழி எங்கே?

போதும் உங்கள் சமுதாயச்சேவை! இனி குடும்பத்துடன் கந்தூரிக்கும் செல்ல மாட்டோம் நீங்கள் குடும்பத்துடன் அழைக்கும் பேரணிக்கும் செல்ல மாட்டோம் என்ற மனநிலைக்கு பக்குவப்பட்டுவிட்டோம். எங்களிடம் வலியுறுத்திய தூய இஸ்லாத்தை இனிமேலாவது நீங்களும் பின்பற்றுங்கள்! உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வெளிஆதாரம் கேட்டு விவாதத்திற்கு அழைக்காமல், எஞ்சிய காலத்திலாவது அரசியல் சாக்கடையில் வீழ்ந்த தவ்ஹீதுக் கொள்கையை மீட்டெடுக்க ஒன்றுசேருங்கள்!

அன்புடன்,

அபூஅஸீலா-துபாய்

Monday, March 23, 2009

ஜப்பானில் விமான விபத்து!

FedEx நிறுவனத்தைச் சார்ந்த சரக்கு விமானம் டோக்கியோ-நாரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

சீனாவின் வரலாற்று நகரான குவாங்சோவிலுருந்து டோக்கியோவிற்க்கு வந்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில், பனிபுரிந்த 2 விமானிகளும் பலியாயினர்.

மோசமான பருவநிலை காரணமாக இவ்விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


நாரிட்டா விமான நிலைய ஓடுதளத்தில் பல முறை துள்ளிக்குதித்து விமானம் பற்றி எரிவதை கீழே உள்ள கானொலி மூலம் காணலாம்.
Sunday, March 22, 2009

ஊரு(று)ம் அறிவும்

அஸ்ஸலாமு அலைக்கும்..
கடந்த 12.03.2009 நமதூர் பேருந்து நிலைய திடலில் கோட்டை அமீர் விருது பெற்றதற்கான பாராட்டு விழா கூட்டத்தில் ஏற்புரை ஆற்றிய ஜனாப் M.M.S. அப்துல் வகாபு ஹாஜியார் அவர்கள் அல் அமின் பள்ளிவாசலை ஜனாப் J.M. இக்பால் ஹாஜியார் , ஜனாப் M.N.அப்துல் ஜப்பார் ஹாஜியார் (மெடிக்கல்) , A.செய்யது அலி ம்ரைக்காயர் மற்றும் இவர்களுடைய ஆதரவாளர்கள் துனையுடன் அரசு அனுமதி தந்தால் அல் அமின் பள்ளியை நிச்சயமாக நான் கட்டி தருவேன் என்று M.M.S.அப்துல் வகாபு ஹாஜியார் அவர்கள் அறிவித்தார்.
இது சம்மந்தமாக அல் அமின் பள்ளிவாசல் நல்ம் விரும்பிகள் சார்பாக அனைத்து ஜீம்மாவிலும் குடுக்கப்பட்ட நேட்டிஸ்..


Saturday, March 21, 2009

உதவும் (பிஞ்சுக்) கரங்கள்

அர்ப்ப காரியங்களுக்காக அநியாயமாக அப்பாவி மக்களை ஈவு, இரக்கமின்றி சுட்டுக்கொல்லும் தீவிரவாதிகளுக்கும், அடக்குமுறையே தன் தலையாய கடமை என எண்ணிக்கொண்டிருக்கும் ஆணவ, அதிகார வர்க்கங்களுக்கும், உலகின் மேளாலன் என வீராப்பு காட்டும் வல்லரசுகளுக்கும் கள்ளம் கபடமில்லா இவ்விரு பிஞ்சுகளின் உள்ளத்தில் யாருடைய குறுக்கீடும், தலையீடும் இல்லாமல் உருவான வாயில்லா ஒரு ஜீவனுக்கு காட்டும் ஈடில்லா இரக்க குணம் ஈவு, இரக்கமற்ற பாலைவனமான (தரிசு) பாரபட்சமுள்ள இவ்வுலகிற்கு ஒரு பசும் சோலைவனமானதை சொல்லாமல் தரும் ஒரு சுவையான பாடம்.

கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பாருங்கள். எந்த பள்ளிக்கூடத்திலும் அல்லது உயர் பல்கலைக்கழகத்திலும் சொல்லித்தரப்படாத பாடம். அது சொல்லும் ஆயிரம் அர்த்தங்களையும் மற்றும் படிப்பினைகளையும். இவ்விரு பிஞ்சுகளுக்கு இருக்கும் இரக்கம் கூட நம்மில் அதிகாரத்திலும், பண பலத்திலும் மூழ்கிப்போய் கிடக்கும் பலப்பெரிசுகளுக்கு இருப்பதில்லை.

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

வெறும் ஏட்டுப்பாடம் மட்டும் படிக்க அமெரிக்க, அயல் நாடுகளுக்குச் செல்லும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள், பணக்கார வர்க்கங்களின் பாசமிகு பிள்ளைகள் இலவசமாக ஓராயிரம் கருத்துச்செறிவை வழங்கிடும் இப்புகைப்பட பாடத்தையும் படித்துச்செல்லட்டும்....இவ்விரு சிறுவர்களும் சொர்க்கம் செல்ல இந்த வாயில்லாப்பிராணியே ஏன் காரணமாக இருக்கக் கூடாது? நிச்சயமாக மனித சக்திக்கு அப்பாற்பட்டதையும் தெள்ளத்தெளிவாக அறியக்கூடியவன் தான் வல்ல இறைவன்...


நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு புகைப்பட விளக்கக் கட்டுரையை இங்கு உங்களின் பார்வைக்கு வழங்கி மகிழ்கிறேன்.
அபு_ஹசன்

சவுதியிலிருந்து.

Thursday, March 19, 2009

வரும்..... ஆனா......... வராது.....!

ரொம்ப நாளாச்சே நம் நாட்டு நொறுக்குத்தீனியெல்லாம் சாப்பிட்டு என்று அருகில் இருக்கும் (சுமார் 45 மைல்கள் தான்) நம் நாட்டுப் பொருட்கள் விட்கும் அங்காடியில் முருக்கு,மிக்ஸர் எல்லாம் வாங்கி விட்டு மீதி சில்லரைக்கு பதிலாக கடைக்காரர் கொடுத்த 'உப்புக் கடலை' பாக்கெட்டை அரை மனதோடு வாங்கி வந்தேன்.

'பொட்டுகடலை,உப்புக்கடலை' போன்ற கடலை வஸ்த்துக்களை கண்டால் கொஞ்சம் பயம் தான்,(வேறொன்றுமில்லை நேரம் காலம் பார்க்காமல் 'வாயு' ரூபத்தில் வந்து மானத்தை வாங்கி விடும்).

"உப்புக்கடலை பாக்கெட்டை காசு கொடுத்து வாங்கியாச்சு, கீழே போடவும் மனமில்லை. என்ன செய்வது?",என்று யோசனை செய்து கொண்டிருக்கும் போது தான் நொறுக்குத் தீனி விரும்பி சாப்பிடும் நண்பரை பற்றி நினைவு வந்தது. சரிதான் காசு கொடுத்து வாங்கிய பொருளை யாருக்கும் பயனில்லாமல் கீழே போடுவதை விட அந்த நண்பருக்கு கொடுத்து அனுப்பினேன்.

கொடுத்தனுப்பிய அரை மணி நேரத்தில் அந்த நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு, "என்ன பாய், ஏதாவது விசேஷமா இருக்கும் என்று பார்த்தா வெறும் உப்புக் கடலை மட்டும் கொடுத்து அனுப்பியிருக்கிறீர்கள்", என்றார். அந்த நிமிடம் நண்பரை சமாளிப்பதற்காக நான் "முதல்ல அந்த உப்பு கடலையை சாப்பிடுங்க(ள்), விசேஷமெல்லாம் 'பின்னால வரும்' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது கடைக்கு கஸ்(ஷ்)டமர் வந்ததால் போனை வைத்து விட்டு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

அடுத்த நாள் அந்த நண்பரிடமிருந்து மறுபடியும் தொலைபேசி அழைப்பு வந்தது, "என்ன பாய், நீங்க வெறும் உப்புக்கடலையைக் கொடுத்துவிட்டு அதை திண்ணுங்க விசேஷம் 'பின்னால வரும்' என்று சொன்னீங்க, நான் பாட்டுக்கு திண்டுகிட்டே (தின்று கொண்டே) இருந்தேன். நல்லா 'பின்னால வந்து' என் மானத்தை பல தடவை வாங்கிடுச்சுங்க பாய்" (சத்தத்துடன் 'வாயு' களைந்ததை சொல்கிறார்).

நான் எதேச்சையாக சொன்னவை 'பின்னால வந்து' அந்த நண்பருக்கு இப்படி ஒரு தர்ம சங்கடத்தைக் கொடுக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

(மேற்கண்ட சம்பவம் கடந்த வாரம் எனக்கு நடந்த ஒரு சுவையான அனுபவம், எதேச்சையாக நடந்தவற்றை ஒரு கோர்வையாக்கியிருக்கிறேன். எப்படியிருக்கிறது?)

<அபுஹாமித்>

Wednesday, March 18, 2009

துபாயில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாயில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு
 
துபாயில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பில் 20.03.2009 வெள்ளிக்கிழமை மாலை அஷர் தொழுகைக்குப் பின்னர் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
 
ஷெய்க் கே. முஹம்மது இக்பால் மதனீ தலைமை தாங்குகிறார். ஜாக் அமைப்பின் தலைவர் ஷெய்க் கமாலுதீன் மதனீ தவ்ஹீதின் பண்புகள் எனும் தலைப்பிலும், மறுமையின் சிந்தனை எனும் தலைப்பில் கோவை அய்யூப் ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
 
மேலதிக விபரங்களுக்கு சுலைமான் 050 271 68 01 / அஹ்மது இஷாஸ் 050 306 86 32
மின்னஞ்சல் : jaqhmoderator@gmail.com /  Mohamed Uvais 4567487@gmail.com

 

 

பெட்ரோல் பங்களுக்கு வேலைக்கு ஆள்தேவை

 

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள EPPCO என்ற பெட்ரோல் பங்களுக்கு வேலைக்கு ஆள்தேவை விளம்பரம் எங்கள் பார்வைக்கு வந்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள சகோதரர்கள் தேவையான சான்றிதழ்களுடன் செல்லவும். மேலதிக விபரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொன்னால் மற்றவர்களுக்கும் பயனாக இருக்கும்.

Apply @ Dubai Metro

Dear All, Assalamu Alaikkum,
Try to apply your Career at DUBAI METRO which is going to launch by September 2009
They are appointing new candidates for all Positions.
Visit & Apply @ http://www.joindubaimetro.com/index.asp
Kindly inform all our brothers in order to get benefit.
Thanks & Regards
Nizar Ahmed
050 2550076பின்குறிப்பு: தகவலுக்காக மட்டுமே இவ்விளம்பரம் பிரசுரிக்கப்படுகிறது. மேற்கண்ட நிறுவனத்துடனோ அல்லது ஏஜென்சியுடனோ அதிரை எக்ஸ்ப்ரஸுக்கு எவ்விதத் தொடர்புமில்லை. பணம் மற்றும் இதர  நடவடிக்கைகளுக்கு அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுமம் எவ்விதத்திலும் பொருப்பாகாது. எனவே சுயவிசாரணைக்குப் பிறகு கவனமாக அணுகும்படி எச்சரிக்கிறோம்.

அன்புடன்,
எக்ஸ்ப்ரஸ் வேலைவாய்ப்புக் குழு

Tuesday, March 17, 2009

அதிரை பைத்துல்மால் செய்திகள்

"இருபது இளைஞர்களை தாருங்கள்; இந்தியாவின் தலைவிதியை மாற்றிக்காட்டுகிறேன்" என்றார் விவேகானந்தர். நமதூர் அதிரை பைத்துல்மால் கடந்த 17 வருடங்களாக நமதூரில் சிறப்பானச் சேவைகளைச் செய்துவருவதை அறிவீர்கள். மற்ற இயக்கங்களைப் போன்று ஆண்டுக்கொருமுறை அல்லது விசேச நாளில் விழாநடத்தி வாழ்நாள் சாதனையாக மேடையில் பேசிக்கலையாமல், நமதூர் மக்களின் குறிப்பாக ஆதரவற்ற, உடல்ரீதியாக உழைக்க முடியாத ஏழை மற்றும் விதவைகளை அடையாளம் கண்டு ஆண்டு முழுவதும் பயனடையும் வகையில் திட்டங்கள்தீட்டி செயல்பட்டு வருகிறார்கள்.
 
அ) வட்டியில்லாக்கடன்/சேவைகள்/உதவி முகாம்கள்

திருமண உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, இலவச சீறுடைகள் மட்டுமின்றி வட்டியில்லாக் கடனுதவித் திட்டம் மூலம் அதிகபட்சம் 20,000 ரூபாய்வரை வட்டியில்லாக் கடனாக சுமார் 25 லட்ச ரூபாய்களை சுழற்சிமுறையில் வழங்கியுள்ளார்கள். இதுபோக, மருத்துவ முகாம், சட்ட உதவி முகாம், திடீர் விபத்து மற்றும் பேரிழப்பு நிவாரணம் என வாய்ப்புள்ள அனைத்து சேவைகளையும் செய்துவருகிறார்கள்.

ஆ) அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்)

கடந்த பத்து வருடங்களாகச் செயல்பட்டு வந்த அவசரஊர்தி (ஆம்புலன்ஸ்)  மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் உடனடியாக புதிய ஆம்புலன்ஸ் வாங்க வேண்டியுள்ளது. தற்போது இயங்கி வரும் வாகனத்தில் குளிர்பதனம், ஆக்ஸிஜன் மற்றும் அவசிய முதலுதவிச் சாதனங்கள் இன்றி, வெறும் அமரர் ஊர்தியாகவே 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. அதிரை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் சேவையாற்றி வருகிறார்கள். சிலவருடங்களுக்கு  முன்பு பட்டுக்கோட்டையருகே ஆற்றுவெள்ளத்தில் பேரூந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது ABM ஆம்புலண்ஸின் துரிதசேவை மிகவும் பாராட்டப்பட்டதையும் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

இ) மார்க்கம் / தேசியம்

அதிரை மக்களுக்கு மார்க்க அறிவுக்கு புத்துயிரூட்டும் விதமாக ஆண்டுதோறும் திருக்குர்ஆன் மற்றும் சமூக ஒற்றுமை மாநாடு நடத்தி நாடறிந்த அறிஞர்களையும் பேச்சாளர்களையும் அதிரைக்கு வரவழைத்து அறிவுப்பசிக்கு தீணியூட்டப்படுகிறது. திருக்குர்ஆன் மணனம் செய்தவர்களுக்கும், திருக்குர்ஆனை மையமாக வைத்து பேச்சுப்போட்டி, கிராஅத், வினாடிவினா என குர்ஆனிய சிந்தனையை தட்டியெழுப்பும் உன்னதப் பணியை தனிநிதிவசூல் மூலம் செய்துவருகிறார்கள். முஸ்லிம்களை தேசவிரோதிகளாகவும் நாட்டுப்பற்றில்லாதவர்களாகவும் சித்தரிக்கும் நாசச்சிந்தனைகளுக்குச் சாவுமணியடிக்கும் விதமாகச் சுதந்திர தினம், குடியரசு தினங்களை கொடியேற்றிச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இப்படியாக, அதிரை மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட அதிரை பைத்துல்மாலின் சேவைகளில் வெகுசில குறைபாடுகளும் உள்ளன. உதாரணமாக வட்டியில்லாக் கடன் திட்டத்தை தேவையுள்ள அனைவருக்கும் முழுதாக நிறைவேற்ற முடியாமை, பள்ளிச்சீருடைகளை உரிய நேரத்தில் வழங்கத்தவறியது என சக்திக்கு மீறிய ம்னிதக்குறைகளே. பொதுநல அமைப்புகளில் இத்தகைய சேவைக்குறைபாடுகள் இயல்பானதே. எனினும் அவற்றைப் பிரதானப்படுத்தி பைத்துல்மாலின் இதரசேவைகளை பின்னுக்குத்தள்ளும் விதமாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

சாதாரண மனிதர்களால் நடத்தப்படும் பைத்துல்மால் முற்றிலும் குறைகளற்ற, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பல்ல. எனினும் வெறும் விமர்சனங்களால் இத்தகையக் குறைபாடுகளைக் களையமுடியாது. 24X7 நாட்களும் திறந்த புத்தகமாக இயங்கிவரும் இவ்வமைப்பை அதிரையைச் சார்ந்த எவரும் எளிதில் அணுகலாம். ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை யார் சொன்னாலும் வாரந்திர, மாதாந்திர மற்றும் சிறப்புக்கூட்டங்களில் விவாதித்து செயல்படுத்தத் தயாராகவே இவ்வமைப்பின் நிர்வாகிகள் உள்ளார்கள்.

பழுத்தமரம்தான் கல்லடிபடும் என்பதற்கு ஏற்ப விமர்சனங்களே ABM இன் சேவைகளுக்காண உந்துததாலக எடுத்துக்கொண்டு அதிரையின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் பைத்துல்மால் நமதூருக்கு வாய்த்த பொக்கிஷம் என்றால் மிகையில்லை. இக்கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் இளம்அதிரைவாசிகளுக்கு ஓர் வேண்டுகோள்! நமக்குத் தெரிந்து கடந்த இருபது வருடங்களில் அதிரை  பைத்துல்மாலைப்போன்று நீண்டகாலத் திட்டங்களை ஆர்ப்பரிப்பின்றி செய்துவரும் வேறு ஏதேனும் அமைப்புகள் நமதூரில் இருந்ததுண்டா? மூத்தோரும் இளையோரும் ஓரணியில் இணைத்து மார்க்கத்திற்கு முரண்படாமல் பணியாற்றும் வேறு பொதுநலஅமைப்பை நம்வாழ்நாளில் கண்டதுண்டா? என்று ஒருநிமிடம் மனசாட்சியைக் கேட்டுக்கொள்வோம்!

அதிரை பைத்துல்மால் என்பது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமான அல்லது குறிப்பிட்ட முஹல்லாவாசிகளுக்கு மட்டுமான அமைப்பல்ல. இதன் கடந்தகாலச் செயல்திட்டங்கள் உற்றுநோக்கினால் அதிரையின் அனைத்து பகுதிகளுக்கும் ஏதேனும் ஒருவகையில் சேவையாற்றியிருக்கிறார்கள். வெள்ளிடை மலையாகத் தெரியும் பைத்துல்மாலின் உன்னதச் சேவைகளை நீங்கள் எவ்விதம் அங்கீகரித்துள்ளீர்கள் என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இதோ இணைப்பிலுள்ள அதிரை பைத்துல்மாலின் மடல்கோரிக்கைகளிள் உங்களின் ஆதரவை நிதியாக, ஆலோசனையாக, செயல்பாடாகக் கேட்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையா? நமதூரின் அவசியத்தேவையானவையா என ஒருகனம் சிந்தித்து, நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்தால் அதிரை பைத்துல்மாலின் சேவைகளையும் தேவைகளையும் நமதூர் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். வாழ்நாளில் ஒரேயொருமுறை மட்டும் 1000 ரூபாயை அதிரை பைத்துல்மாலுக்கு நன்கொடையாகச் செலுத்தி உங்கள் சார்பாக நமதூரில் சேவைகளைத் தொடரச் செய்யுங்கள்.

இப்படிக்கு,

அதிரை பைத்துல்மால் துபைகிளை

நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்


Thursday, March 12, 2009

மத்திய அரசின் தூர்தர்ஷன் துரோகமும், தாஜ்மஹால் புறக்கணிப்பும் நாகரீகமான நம் இந்தியாவிலே!

 

 

 

இந்தியா சமய சார்பற்ற நாடு என்பது உண்மையானால் தூர்தர்ஷன் தமிழ் நிகழ்ச்சியில் சினிமா தவிர மற்ற நேரங்களில் 90% ஹிந்து கலாச்சாரத்தைத் தழுவிய நிகழ்ச்சி மட்டுமே ஒளிபரப்பப் படுகிறது! மேலும் 2 பெருநாளுக்கும் 20 நிமிஷம் இ.எம். ஹனீஃபா பாடலையோ, இஸ்லாமியப் பாடலையோ ஒளிபரப்பினால் மட்டும் நடுநிலை ஆகிவிடுமோ? ஒருதலைப் பட்சமான இந்த காழ்புண்ர்ச்சியை என்று மாற்றிக் கொள்ளப்போகிறதோ?

 

அடுத்து நமது தாஜ்மஹால் பல நாடுகளின் ஓட்டெடுப்புக்குப்பின் மீண்டும் தலையாய உலக அதிசயமாக ஜொலிக்கிறது. இது நம் நாட்டுக்கே தேசியச்சின்னமாக பெருமை சேர்க்கும்போது இதனை பல தலைமுறையாக நம் மத்திய அரசு ஏன் தபால்தலையாகவும், புழக்கத்திலிருக்கும் இந்தியப் பணத்திலும் வெளியிட்டு(அச்சிட்டு) கெளரவப்படுத்தாதது ஏன்?  இக்கேள்வி நம் நாட்டுக்கு வருகைதரும் பல வெளிநாட்டு விருந்தாளிகளும் நிச்சசயம் விடை தெரியாமல் விழிக்கிறார்கள் என்பது உண்மைதான். இதே உலகப் புகழ் (மதுரை மீனாட்சி) கோயிலுக்கு வந்திருந்தால் இன்னேரம் அனைத்து ரூபாய் நோட்டிலும், தபால் தலையிலும் வந்திருக்காதா? முஸ்லிம் மன்னர் கட்டியது என்பதால்தானே ஓரம் கட்டிவிட்டார்கள்? இது தேசியச்சின்னம் அல்லவா? பின் ஏன் இந்த ரேஷிச(Racism) பாரபட்சம் நம் மத்திய அரசுக்கு? 2வது முறை உலக அதிசயமாகத் தலை நிமிர்ந்து நிற்கும் இந்த தாஜ்மஹாலை/தேசியச்சொத்தை ஏன் வேற்றுக்கண்னுடன் பார்க்கிறது? ஒரு 10 ரூபாய் நோட்டில் கூட இதை வெளியிட்டு பிரபல படுத்தக்கூடாதா?

 

சிந்தியுங்கள்.

 

M.Ansari

புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு மாறியாச்சு! அப்புறம்?

முந்தைய தேர்தல்கள்வரை புதுக்கோட்டைத் தொகுதியுடன் இருந்துவந்த பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தற்போது தொகுதி மறுசீரமைப்பின்கீழ் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. இதை எதிர்த்து புதுக்கோட்டை மக்கள் பல்வேறுவகையில் போராடி வருகிறார்கள். தொகுதியை மீட்டெடுக்கும்வரை மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கவும் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கள்ளர்,நாடார் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை மக்களவை தொகுதி காங்கிரஸின் நிரந்தரக் கோட்டையாக இருந்தது.முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் சுமார் நான்கு இலட்சம் வாக்குகள் அதிகம்பெற்று தேசியளவில் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

காங்கிரஸின் தலைமைப் பொருப்பேற்றபின் சோனியா காந்தி, புதுகோட்டை தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் தெரிவித்தன. சென்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியமைத்ததால் புதுக்கோட்டைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு S.ரகுபதி போட்டியிட்டு வென்றார். புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டு,அதிலிருந்த சட்டமன்றத் தொகுதிகள் நான்கு மக்களவைத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பினால் 1) காங்கிரஸின் வாக்குவங்கி பிரிக்கப்பட்டது 2) சிறுபான்மையினர் வெல்லும் வாய்ப்பிருந்த தொகுதிகளில் புதுக்கோட்டை தொகுதியும் இருந்தது என்பன போன்றவை இழப்புகளாகும். புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரராகும் வாய்ப்புகளும் கிடைத்தன. (ரகுபதி மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் புதுக்கோட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்).


பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியைப் பொருத்தவரை கள்ளர்,நாடார், முஸ்லிம்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கின்றன. தஞ்சாவூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டாலும் மேற்கண்ட சமூகத்தவர் இங்கும் பரவலாகவே உள்ளனர் என்பதால் ஜாதிவாரி வாக்குகளில் இழப்பில்லை! தஞ்சை தொகுதியில் உபயதுல்லா,பழனி மாணிக்கம் மற்றும் கோசிமணி குரூப் என உட்கட்சி கோஷ்டிப்பூசல் இருந்தாலும் திமுகவே பெரும்பாலும் வென்றுவருகிறது.

முஸ்லிம் வாக்காளர்கள் கட்சிரீதியாகப் பிளவுபடாமல் ஓரணியிலிருந்தால் எதிர்காலத்தில் முஸ்லிம் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புள்ளது. சமீபத்தில் உதயமான மனிதநேய மக்கள் கட்சி கூட்டணியாக அல்லது தனியாகப் போட்டியிடும் பட்சத்தில் தஞ்சாவூர் தொகுதியையும் கவனத்தில் கொண்டு காய்நகர்த்துகிறது. மமக-திமுகவுடன் கூட்டணி அமைக்கும்பட்சத்தில் திமுக நிச்சயம் இத்தொகுதியை விட்டுக்கொடுக்காது.

தற்போதைக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. மனிதநேய மக்கள் கட்சிக்கு இத்தொகுதி கிடைக்காத பட்சத்தில் S.N.M உபயதுல்லாவை திமுக சார்பில் நிறுத்தி முஸ்லிம் எம்பிக்கு வாய்ப்பளிக்கும்படி கோரலாம்.(இதற்கு திமுகவின் உட்கட்சி கோஷ்டிகள் ஒத்து வருவார்களா என்று தெரியாது.)பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தஞ்சை மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் காரைக்குடி-அறந்தாங்கி-திருவாரூர் அகலரயில் பாதைத்திட்டம் கிடப்பில் போடப்படும் சாத்தியக்கூறு உள்ளது. ஏற்கனவே மத்திய அமைச்சர்களைக் கொண்டிருந்த புதுக்கோட்டை தொகுதியில் நமது சட்டமன்றத் தொகுதி இருந்தபோதே இத்திட்டம் கண்டுகொள்ளப்படாமல் வஞ்சிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை தொகுதி தஞ்சை தொகுதியுடன் இணைக்கப்படிருப்பதால் எதிர்வரும் காலங்களில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை-தஞ்சாவூருக்கு ரயில்பாதை அமைக்கும் கோரிக்கையை அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை அரசியல் பிரமுகர்கள் ஓரணியாக நின்று முன்வைக்கலாம். தவறும் பட்சம் அடுத்தடுத்த தேர்தல்களில் "யாருக்கும் ஒட்டில்லை"என்ற துருப்புச்சீட்டைக் கையிலெடுத்து கோரிக்கையை அரசியல் ரீதியாக வென்றெடுக்கலாம்!

பாலைவனப்புழுதிபுயல் ரியாத்திலிருந்து சில (புகைப்)படங்கள்!

நேற்று வீசிய பாலைவனப்புழுதிப்புயலில் நான் வேலை செய்யும் பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் மாறி நாம் சிறு வயதிலிருந்து பெரியோர்கள், கித்தாப்புகளில் கேட்டறிந்த அந்த கியாமத் நாளை நினைவு படுத்துவதாக இருந்தது.
(நன்றி- Abu_Hassan)


Wednesday, March 11, 2009

சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைனில் புழுதிப்புயல்!

சவூதி அரேபியா, குவைத் மற்றும் பஹ்ரைனில் நேற்று பயங்கர புழுதிக் காற்று வீசியது.

எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் புழுதிக் காற்றினால் சாலைகளில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இப்புழுதிபுயல் காரணமாக ரியாத் விமான நிலையத்திற்கு வரும் விமானங்களை வேறு விமான நிலையத்திற்க்கு திருப்பிவிடப்பட்டது. குவைத்தில் பெட்ரோல் உற்பத்தி பல மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
பஹ்ரைனில் கட்டுமானப்பனிகள் பாதிக்கப்பட்ட்து.

அரபியில் இதற்கு 'ஷுமால்' எனப்பெயர். இப்புழுதிக் காற்று அடித்தால்தான் பேரீத்தம் பழம் பழுக்கும்.

Sunday, March 8, 2009

ஆடுகளை ஓட்டி வந்த கணவன் லாரி மோதி பலி

ஆடுகளை ஓட்டி வந்த கணவன், மனைவி கண் முன்னே லாரியில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.19 ஆடுகளும் துடிதுடித்து செத்தன. அதிராம்பட்டினம் அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த பெரும்மச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர், ராமு. இவருடைய மகன் கண்ணன் (வயது 35). கண்ணனின் மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கண்ணனும், அவருடைய மனைவியும் ஊர் ஊராகச் சென்று ஆடுகளை மேய்ப்பது வழக்கம். இவர்கள் வழக்கம் போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டை விட்டு புறப்பட்டனர்.

இரவு 11.30 மணியளவில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி கண்ணன் மீதும், ஆடுகள் மீதும் மோதியது. இதில் மனைவி கண் முன்னேயே கண்ணன் பரிதாபமாக செத்தார். 19 ஆடுகளும் துடிதுடித்து செத்தன.விபத்துக்கு காரணமான லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இது குறித்து அழகம்மாள் அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தை பார்வையிட்டார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: தினத்தந்தி
படங்கள் சகோ.ஜுமா அப்துல் காதர் (ரைட் ஹைடெக் ஸ்டூடியோ)

Wednesday, March 4, 2009

புனித ஹஜ் பயண விண்ணப்பம்!

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், வரும் 5ம் தேதி முதல் தமிழக ஹஜ்குழு அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களிடம் விண்ணப்பங்களை பெறுமாறு மும்பையில் உள்ள இந்திய ஹஜ்குழு தமிழக ஹஜ்குழுவிற்கு தெரிவித்துள்ளது.

இப்பயணத்திற்கான விண்ணப்பங்கள் மூன்றாம் தளம், ரோஸிடவர், எண் 13, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் உள்ள ஹஜ்குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து வரும் 5ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயணி ஒருவருக்கு 200 ரூபாய் பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண் 30683623887ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலுடன் தமிழக ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். பரிசீலனைக் கட்டணமாக நபர் ஒருவருக்கு செலுத்தப்படும் 200 ரூபாய் திருப்பி தரப்படாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.3.09. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பின் அன்னியச் செலாவணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீதம் தொகையுடன் முழுமையாக விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் தொகையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

Monday, March 2, 2009

வேண்டும் இவையாவும் வேண்டாத பினித் தடுக்க!

நமதூரில் சுகாதாரம் எல்லாவற்றிலும் சரிவரப் பேணப்படுவதில்லை என்பது உண்மைதான். கொசு மருந்துகள் (மனித உயிருக்கு ஊறுவிழைவிக்காத) வாரம் ஒருமுறை நம்மூர் பஞ்சாயத்து போர்டால் ஒவ்வொரு தெருவிலும் அடிக்கப்படவேண்டும். இரவில் பன்றிகள் எல்லாத்தெருவுகளிலும் குடும்பத்துடன் சுதந்திரமாக சுற்றிதிரிவதை தடுக்க நமதூர் பஞ்சாயத்து உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும்.அதன் வருகையால் கொசுக்களின் உற்பத்தி அதிகரிப்பதை தடுக்க வேண்டும். குடிநீரில் நோய்க்கிருமிகளை கொல்லும் அதே சமயம் மனித உயிருக்கு எவ்வித தீங்கிழைக்காத அரசின் அங்கீகாரம் பெற்ற மருந்துகள் முறையே கலக்கப்படவேண்டும். நம் வீட்டை, தெருவை (முடுக்கை) சுத்தமாக வைத்திருப்பது பஞ்சாயத்து போர்ட்டின் வேலை நம் வேலையல்ல என யாரும் நினைத்திடல் கூடாது. அதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு அதனால் சுகாதாரம் உண்டு என எல்லோரும் உறுதியாக நினைத்திடல் வேண்டும். அதனால் நமக்கு அரசால் (கோட்டை)விருதுகள் கிடைக்காவிட்டாலும் கனிசமாக நம் வீட்டு மருத்துவ செலவுகள் கட்டுப்படுத்தப்படும் என்ற தொலைநோக்குச் சிந்தனையைநம் மக்கள் மத்தியில் பரவலாக உண்டாக்க அரசும், பொது நல, தொண்டு அமைப்பு, உறுப்பினர்கள் அடிக்கடி எல்லாத்தெருவுகளிலும் (இஸ்லாமிய, இந்து, கிருஸ்தவ பாகுபாடின்றி) பொது இடங்களிலும் நடத்தப்பட வேண்டும்.நம் வீட்டுக் குப்பைகளை ஏதோ விவசாயி வயலில் பூச்சி மருந்தை தெளிப்பதுபோல் அல்லாது அதை ஒரு தனிப்பையில் இட்டு அதை ஒரு குறிப்பிட்ட (அதற்கென ஒதுக்கப்பட்ட) இடத்தில் பஞ்சாயத்து ஊழியர்கள் எளிதில் அள்ளும் வண்ணம்போடப்பட வேண்டும். வீட்டில் உயிரினங்கள் (கோழி, உள்ளாங்குருவி,செரவி, பொட்டிமடையான், கொக்கு, காச்சல் குருவி, கானாங்கோழி, ராலு, மீனு, ஆட்டுக்கறி,வாங்கோழி, காடை, காட்டுக்கோழி) கழிவுகளைரோட்டில்/முடுக்கில் எனக்கென்னா என்று வீசி எறிவது சுகாதாரத்திற்கு நல்லதல்ல. அதனால் பல தொற்று நோய்கள் பரவுவதை மக்களுக்கு விளக்கப்பட வேண்டும்.வீட்டின் கானு தண்ணீரை (கழிவு நீரை) முறையே அதற்கென பாதாள அமைப்பைக்கட்ட யோசித்து அதை அப்படியெ குளங்களுக்கு வரும் நீர் வரத்துப்பாதையில் கலந்து விடுவது மிகவும் ஆபத்தானது, சுகாதாரத்திற்கு வேட்டு வைக்கக்கூடவைக்கக்கூடியது. பரவலாக நமக்கு எல்லா நோய்க்கிருமிகளும் நம் உடலில் எளிதில் (விசா, எமிக்ரேசன்) நுழைவது நாம் பருகும் தண்ணீரைக் கொண்டே. எனவே எக்காலத்திலும் அது குளிர்காலமாக இருந்தாலும் சரி அல்லதுகோடைகாலமாக இருந்தாலும் சரி, நாம் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி அல்லது உடல் நலக்குறைவாக இருந்தாலும் சரி, நாம் வாலிபர்களாக இருந்தாலும் சரி அல்லது வயோதிகர்களாக இருந்தாலும் சரி கடைசியில்யாராக இருந்தாலும் சரி நாம் பருகும்/உபயோகிக்கும் தண்ணீரை நன்கு காய்ச்சி/சுட வைத்து (அதன் எல்லாக் கிருமிகளும் சாகும் வரை) ஆறிய பிறகு அதை ஒரு பானையில்/பாத்திரத்தில் இட்டுப்பருகி வந்தால் நாம் முடிந்தவரை தண்ணீரைக்கொண்டு வரும் எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.இவை எல்லாவற்றையும் எழுதிய நானும் பின்பற்றி படிக்கும் நீங்களும் பின்பற்றி அரோக்கியமாக மீதி இருக்கும் காலத்தைக் கழிக்க வல்ல இறைவன் எனக்கும், உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக..... Abu_Hasan.
(சகோ. நைனாவின் வைர வரிகளைத் தொகுத்து தருவதில் மட்டற்ற மகிழ்வு கொள்ளும் சகோ.முஹம்மது தஸ்தகீர்).

Sunday, March 1, 2009

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரை எக்ஸ்ப்ரஸ்

அதிரை எக்ஸ்ப்ரஸ் மீதான தடை நீக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிசாலாத் இணையத் தொடர்பு மூலம் காணமுடிகிறது.
அமீரகத்தின் பிறபகுதியில் வாழும் சகோதரர்கள் இச்செய்தியை உறுதி செய்யவும்.

வருங்கால எம்.எல்.ஏவுக்கும் ஒரு விருது கொடுங்கப்பா...!வீட்டுவரி கட்டத் தவ|றியவர்களிடம் மேளதாளம் முழங்க அவமதித்து வரி வசூலிக்கப்படும் என்று திமிராக அறிவித்த அதிரை பேருராட்சி நிர்வாகம் குறித்து அதிரை எக்ஸ்ப்ரஸில் சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தோம்.

அவ்வாறு வசூலிக்கப்பட்ட வரிப்பணம் ஊரின் நலத்திட்டப்பணிகளுக்குச் செலவிடப்படுமென்று யாரேனும் நம்பிக்கொண்டிருந்தால் தயவு செய்து படத்தைப் பார்த்த பிறகாவது அக்கருத்தை மாற்றிக் கொள்ளவும்.

உலகமெங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடந்துவரும் நிலையில் அதிரை பேரூராட்சிமன்ற நிர்வாகத்திற்கு யார்தான் சுற்றுச்சூழல் குறித்து பாடம் எடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏதேனும் விருது இருந்தால் அதை அல்-அமீன் பள்ளிவாசலின் முகப்பில் கழிப்பிடம் கட்டிய பேரூராட்சி மன்ற துணைத் தலைவருக்கு வழங்கும்படி அதிரை எக்ஸ்ப்ரஸ் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. ;-)))