Wednesday, April 29, 2009

முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்!

நாம் இன்று மிகவும் வலிமையிழந்தவர்களாக இருப்பதற்கும், அவமானப்படுத்தப் படுவதற்கும், நம் சகோதர, சகோதரிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவதற்கும், நம் கண்கள் முன்னே படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் படுவதற்கும், நம்முடைய முஸ்லிம் நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, இறை நிராகரிப்பாளர்களின் (முஷ்ரிக்குகளின்) விருப்பத்திற்கேற்ப கைப்பற்றப்படுவதற்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் ஒன்றும் கூற முடியாமல் சக்தியற்றவர்களாக இருப்பதற்கும் காரணம் என்ன வெனில்:-

நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களை கைவிட்டு விட்டு முஷ்ரிக்குகளை அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் பின்பற்ற முயற்சிப்பதுதான். நம்முடைய வலிமையை நாமே முறித்து நிறம், மொழி, குலம், கோத்திரங்கள், பிரிவுகள், நாடுகள் ஆகியவைகளின் அடிப்படைகளில் பிரிந்து சின்னா பின்னமாகி இருக்கிறோம். மேலும் ஒரு உம்மத்தாக இருந்து ஒரே இறைவனை வணங்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி அதிகாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மற்றும் பதவி சுகத்திற்காகவும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றோம். நாம் நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தின் கவர்ச்சியிலும், ஆடம்பரத்திலும் மயங்கி இதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸில் வருகிறது: -

“முஃமின்கள் இந்த உலக வாழ்வை நேசித்து மரணத்தை வெறுக்கும் போது, அல்லாஹ் எதிரிகளுக்கு முஸ்லிம்களின் மீதுள்ள பயத்தை போக்கிவிட்டு, முஸ்லிம்களின் உள்ளத்தில் எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போட்டுவிடுவான்”

நிச்சயமாக இது தான் நடந்திருக்கிறது.

ஆனால்,

முஸ்லிம்கள் ஒன்றுபடும் நாளில்,

நிரந்தரமற்ற இந்த உலகத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட மறுமையை அதிகமாக நேசிக்கும் போது,

தற்போதைய அவமானத்தை விட மரணத்தை விரும்பும் போது,

மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவைகளை பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும் போது,

ஒரே இறைவணை மட்டும் வணங்கக் கூடிய உண்மையான முஸ்லிம்களாக மாறும் போது,

அல்லாஹ்வின் கட்டளைகளை, சட்டங்களை இந்த உலகத்தில் மேலோங்கச் செய்ய முயற்சிக்கும் போது …

அப்போது அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்கள் இழந்த தங்களின் கவுரவத்தை மீட்க உதவி செய்வான்.

ஆகையால், இன்று ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவெனில்,

- மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பது.

- தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்து பிரிந்து பல்வேறு கூறுகளாக போன இந்த சமுதாயத்தை ஒன்று சேர்க்க முயற்சிப்பது

இது தான் இந்த உலகில் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் மேலோங்கச் செய்யப்பட நாம் அளிக்கும் நம்முடைய பங்களிப்பாகும்.

முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: -

“நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” (அல்-குர்ஆன் 49:10)

உங்களுக்குள் கேலி, கிண்டல் செய்து கொள்ளாதீர்கள்!

“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்” (அல்-குர்ஆன் 49:11)

முஃமின்களே!பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராயாதீர்கள்!

“முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்” (அல்-குர்ஆன் 49:12)

முஃமின்களே! தீயவனின் செய்தியை அப்படியே நம்பிவிடாதீர்கள்!

“முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (அல்-குர்ஆன் 49:6)

முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்வர் சாபத்திற்குரியவர் ஆவார்!

‘ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள்’ அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி.

சகோதர முஸ்லிமை கேவலமாகக் கருதுவது கெட்ட செயலாகும்!

ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.

உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: - ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.

உண்மையான வீரன் யார்?

“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.

முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது!

முஃமின்கள் மூன்று இரவு மூன்று பகல்களுக்கு மேல் பகைமைக் கொண்டு பேசாதிருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருப்பதாக வரும் பல நபிமொழிகள் புகாரி போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள்!

“அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.

பினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: -

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.

பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா?

“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)

நன்றி: சுவனத்தென்றல்

மருத்துவ உதவி வேண்டுகோள்

Dear Brothers and sisters! Assalaamu Alaikum Warahma...

 

Please help him and forward the message to all.

 

Thanks

Bismillah-i-Rahman-i-Raheem

 

Request for financial help for Medical Treatment

From

M. Jahabar Sadiq,

564 / 393, Main Road,

Nagoor - 611002, Nagapattinam Dist, Tamilnadu.

Contact tel. # (+91) 9791775642 - Mr.Ansari (my cousin)

My contact tel. # in Kuwait (+965) 99180678 - Civil ID # 263041505886

 

Beloved Brothers and Sisters…! Asalaamu Alaikkum (var..)

 

I, Jahabar Sadiq residing at the above said address, working as Driver in Kuwait.

IBRAHIM, my son - THREE year old baby, since two year is suffering and being treated for CANCER at Tirchirappalli GVN Hospital. For further treatment, they recommended Chennai Adyar Cancer Hospital.

As per their direction, I went there and after several scans and tests, the doctor assured that the baby can be cured and shall be recovered from the cruel disease. They instructed to admit the baby immediately in the hospital for treatment.

But, the amount for treatment cannot be afford by me, since I am being paid very little here in Kuwait. Since, my child is important, I have already sold my one and only property - my house for the two year treatment expenses. I could not find any source or further help.

The treatment is highly critical, essential and should be instantaneous.

In this adverse - handicapped situation, bashfully with hesitation, I am approaching your good heart for your kind financial help in this regard.

I have enclosed copies of the treatment documents and medial report from Chennai Adyar Cancer Hospital for your perusal. Kindly donate as good as possible to get the baby cured.

May Allah bless you for the kind timely support and aid. Wasalam,

 

Yours sincere brother-in-Islam,

M. Jahabar Sadiq

Kuwait.


 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மருத்துவ உதவி வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்:

எம். ஜெஹபர் சாதிக்,

564 / 393, மெயின் ரோடு,

நாகூர் - 611002, நாகப்பட்டிணம் மாவட்டம்.

அலைபேசி எண்: (+91) 9791775642 (எனது மைத்துனர் அன்சாரியின் நம்பர்)

முகாம்: குவைத் -  ID எண்: 263041505886 - அலைபேசி எண்: (+965) 99180678

 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

 மேற்குறிப்பிட்ட தாயக முகவரியில் வசித்து வரும் எம். ஜெஹபர் சாதிக் ஆகிய நான் தற்போது குவைத்தில் டிரைவராக பணியாற்றி வருகின்றேன்.

இப்ராஹீம் என்ற எனது மூன்று வயது மகனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக புற்று நோய் ஏற்பட்டு திருச்சி GVN மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றேன். இந்நிலையில் GVN மருத்துவமனையினர் மேற் சிகிச்சைக்காக சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறிவிட்டார்கள்.

அவர்களின் அறிவரைப்படி நானும் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு என் பிள்ளையை அழைத்து சென்று காட்டினேன். அவர்கள் பல மருத்துவ சோதனைகள் செய்த பின், இறைவனின் கிருபையால் இந்நோயை குணப்படுத்தி விட முடியும் என்றும், உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

ஆனால், அவர்கள் கேட்கும் மருத்துவ தொகை என் சக்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இங்கு எனக்கு கிடைக்கும் சம்பளமும் மிகக் குறைவுதான். அப்படியிருந்தும் ஏற்கனவே என் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக இலட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளேன். பிள்ளையை விட பணம் பெரிதல்ல என்பதால் எனக்கிருந்த ஒரே சொத்தான சொந்த வீட்டையும் விற்று விட்டேன்.

இப்படிப்பட்ட சூம்நிலையில் என்னால் இவ்வளவு அதிகமான தொகையை செலுத்தி மருத்துவம் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேன்.

என் பிள்ளை பூரண குணம் அடைய வேண்டும் என்றால் உடனடியாக அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். என்னால் இயலாத இந்த நிலையால்தான் தங்கள் அமைப்பிடம் உதவி செய்யுமாறு அன்பு கோரிக்கை வைக்கின்றேன்.

இந்த கோரிக்கை அல்லாஹ், ரசூலுக்காக தாங்கள் ஏற்று, என் பிள்ளையின் மருத்துவ செலவிற்கு தங்களால் இயன்ற உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எல்லா வல்ல அல்லாஹ் நற்காரியங்கள் பல செய்யும் தங்கள் அனைவருக்கும் இம்மை மறுமை இரண்டிலும் நற்பாக்கியங்களை வழங்க வேண்டும் எனவும் துஆ செய்கின்றேன்.

இத்துடன் எனது மகன் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ விபரங்களையும், திருச்சி மருத்துவமனை மற்றும் அடையாறு மருத்துவமனை மருத்துவ அறிக்கைகளையும் இணைத்துள்ளேன.

நன்றி. வஸ்ஸலாம்

இப்படிக்கு,

தங்களின் உதவியை அன்புடன் எதிர்பார்க்கும் இஸ்லாமிய சகோதரன்...

எம். ஜெஹபர் சாதிக்

 
 
--
என்றும் மாறா அன்புடன்...

குவைத்திலிருந்து...

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

சொர்க்கம் செல்ல இலகுவான வழி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாத்துஹூ,,, சொர்க்கம் செல்ல இலகுவான வழிகளில் ஒன்று எப்போது ஒலுச் செய்தாலும் இரண்டு ரகாத்துகள் தொழுவ‌தாகும். இந்த பழக்கத்தை கடைபிடித்தால் சொர்க்கம் செல்லும் வ‌ழி நம‌க்கு இலகுவாகும் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

ஒரு முஸ்லீம் அழ‌கிய‌ முறையில் உளுச் செய்து அக‌த்தையும் முக‌த்தையும் ஒருமுக‌ப்ப‌டுத்தித் தொழுதால் அவ‌ருக்குச் சொர்க்க‌ம் க‌ட்டாய‌மாகாம‌ல் இருப்ப‌தில்லை. என்று ந‌பிக‌ள் (ஸ‌ல்)அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள். ‍ அறிவிப்பாளர் - உக்பா பின் ஆமிர் (ர‌‌லி) நூல் (முஸ்லீம் )

இதே பழகத்தை இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து கடைபிடித்து வந்த பிலால் (ரலி) அவர்கள் சொர்கத்துக்குறியவர் என்று இவ்வுல‌கத்துலேயே நபிகளார் சுபச் செய்தி கூறியுள்ளார்கள். ஒரு ப‌ஜ்ருத் தொழுகையின் போது பிலால் ( ர‌லி) யிட‌ம், பிலாலே! இஸ்லாத்தில் இனைந்த‌பின் நீர் செய்த‌ சிற‌ந்த‌ அம‌ல் ப‌ற்றிக் கூறுவிராக‌. ஏனெனில் உம‌து செருப்போசையை சொர்க‌த்தில் நான் கேட்டேன் என்று ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கேட்டார்க‌ள்.அத‌ற்கு பிலால் (ர‌லி), இர‌விலோ ப‌க‌லிலோ நான் உளுச்செய்தால் அவ்வுளுவின் மூல‌ம் நான் தொழ‌ வேண்டும்மென்று நாடிய‌தைத் தொழாம‌ல் இருப்ப‌தில்லை. இதுதான் என‌து செய‌ல்க‌ளில் சிற‌ந்த‌ செய‌ல். என்று விடைய‌ளித்தார்க‌ள். அறிவிப்பாளர் அபுஹுரைரா (ர‌‌லி) நூல் (புஹாரி 1149)

மேலும் இறைவ‌னை வ‌ண‌ங்குவ‌த‌ற்காக‌ ஒருவ‌ர் ஒளுச் செய்யும் போது அவ‌ர் உறுப்புக‌ள் செய்த‌ பாவ‌ங்க‌ளும் ம‌ன்னிக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌. ஒரு முஸ்லீமான‌ அல்ல‌து முஃமினான‌ அடியார் உளுச் செய்யும் போது முக‌த்தைக் க‌ழுவினால், க‌ண்க‌லால் பார்த்துச் செய்த‌ பாவ‌ங்க‌ள் அனைத்தும் ( முக‌த்தைக் க‌ழுவிய‌ ) நீருட‌ன் அல்ல‌து நீரின் க‌டைசித்துளியுட‌ன் முக‌த்திலிருந்து வெளியேறுகின்ற‌ன‌. அவ‌ர் கைக‌ளைக் க‌ழுவும்போது கைக‌ளால் ப‌ற்றிச் செய்த‌ பாவ‌ங்க‌ள் அனைத்தும் ( கைக‌ளைக் க‌ழுவிய‌) த‌ண்ணீருட‌ன் அல்ல‌து த‌ண்ணீரின் க‌டைசித்துளியுட‌ன் வெளியேருகின்ற‌ன‌.அவ‌ர் கால்க‌ளைக் க‌ழுவும்போது கால்க‌ளால் ந‌ட‌ந்து செய்த‌ பாவ‌ங்க‌ள் அனைத்தும் (கால்க‌ளைக் க‌ழுவிய‌ ) நீறோடு அல்ல‌து நீரின் க‌டைசித்துளியோடு வெளியேறுகின்ற‌ன‌.இறுதியில் அவ‌ர் பாவ‌ங்க‌ளில்லிருந்து தூய்மை அடைந்த‌வ‌ராக‌ (அந்த‌ இட‌த்திலிருந்து) செல்கிறார் என்று ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.
அறிவிப்பாள‌ர் அபுஹூரைரா (ர‌‌லி) நூல்(முஸ்லீம் 412)

ஒரு மனிதன் ஒவ்வொரு உளுவின் போதும் தொழுகையைக் கடைபிடித்து வந்தால் அவரிடம நற்செயல்கள் குடிகொள்வதுடன் தீய செயல்களும் அவறைவிட்டு அகன்றுவிடும். இது தொழுகையைப் பின்பற்றுவதால் ஏற்படும் கிடைக்கும் நன்மை என்று அல்லாஹ் கூறியுள்ளான். தொழுகையை நிலைநாட்டுவிராக !. தொழுகை வெட்கக் கேடான காரியங்களைவிட்டும் தீமையைவிட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29.45)

Tuesday, April 28, 2009

தமிழகத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் (சுயேட்சைகள் தவிர்த்து)

மத்திய சென்னை
எஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா (அ.தி.மு.க.)
யூனிஸ்கான் (பகுஜன்சமாஜ்)
ஹைதர் அலி (மனிதநேய மக்கள் கட்சி)

வேலூர்
அப்துல் ரகுமான் (தி.மு.க.)
சவுகத்ஷெரீப் (தே.மு.தி.க.)
மன்சூர் அகமத் (பகுஜன் சமாஜ் கட்சி)
தாகிர் அகமத் (லோக் ஜன சக்தி)

திருவண்ணாமலை
அப்ரோஸ் உஸ்னா (லோக்ஜனசக்தி)

பொள்ளாச்சி
இ.உம்மர் (மனிதநேய மக்கள் கட்சி)
எஸ்.டி.ரமீஜா பேகம் (சமதா கட்சி)

திருச்சி
மன்சூர் அலிகான் (லட்சிய தி.மு.க.)

மயிலாடுதுறை
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)

தேனி
ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்)

ராமநாதபுரம்
சிங்கை ஜின்னா (தே.மு.தி.க.)
சலிமுல்லாகான் (மனிதநேய மக்கள் கட்சி)

திருநெல்வேலி
எஸ்.செய்யது இமாம் (சமாஜ்வாடி)

புதுச்சேரி
அசனா (தே.மு.தி.க.)

Sunday, April 26, 2009

அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களே! நமதூர் பைத்துல்மாலுக்கு உதவுங்கள்!!

அன்புடையிர்! அஸ்ஸலாமு அலைக்கும்..நமதூர் அதிரை பைத்துல்மால் கடந்த பதினைந்து வருடங்களாக அரியபலச் சேவைகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருவதை அறிவீர்கள். அதன் சேவைகளில் ஒன்றான குறைந்த வாடகையில் அவசரஊர்தி (AMBULANCE) சேவைக்குப் பயன்பட்டுவந்த வாகனம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் பராமரிப்புச் செலவும் அதிகமாகிவிட்டதால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனடிப்படையில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் ஆலோசனையின்பேரி புதிய வாகனம் அவசியமான வசதிகளுடன் வாங்குவது என்று முடிவுசெய்து அதுகுறித்து நமதூர்வாசிகளிடம் நிதியுதவி செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.



நமதூர் பைத்துல்மாலின் சேவைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட வெளியூர் (பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரர் ஒருவர் அவசர ஊர்திக்கான செலவில் பெரும்பகுதியை ஏற்றுக் கொண்டு ஒரே தவணையில் அதற்கான ரூபாய் 1,50,000 நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.மேலும்,சவூதி-ஜித்தாவில் செயல்பட்டுவரும் அதிரை இளைஞர்கள் முன்னேற்ற அமைப்பு (AYDA) சார்பில் ரூ.50,000 வழங்க முன்வந்துள்ளனர்.மேலும் அமெரிக்கவாழ் அதிரைவாசிகள் குளிர்பதன சவப்பெட்டிக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!

இணைப்பிலுள்ள கொட்டேசன்படி இன்னும் சொற்பத்தொகையே பாக்கியுள்ளது. இதனை அதிரை பைத்துல்மாலுக்கு நேரடியாகவோ அல்லது வங்கிக் கணக்கிற்கோ அனுப்பிவைத்தால் இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் ஆம்புலண்ஸ் வாங்கப்பட்டு நமதூர் மக்களுக்குச் சேவையாற்ற முடியும்.

ஏற்கனவே நமதூர் சகோதரர்களின் மருத்துவ உதவிகோரிய விளம்பரங்களைப் பார்த்து மனமுவந்து நேரடியாகவும் வசூலித்தும் அனுப்பிய நல்லுள்ளம் கொண்டவாசகர்களை அதிரை எக்ஸ்ப்ரஸ் கொண்டுள்ளது.மாஷா அல்லாஹ்! இந்த ஆம்புலன்ஸ் திட்டத்தையும் வெற்றியாகச் செயல்படுத்த அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் தங்களால் இயற்ற வகையில் உதவும்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அதிரை பைத்துல்மாலின் சர்வதேச தன்னார்வலர்களின் முகவரிகள் அதிரை பைத்துல்மால் இணையதளத்தில் உள்ளன. அந்தந்தப் பகுதியைச் சார்ந்த நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கவும்.


குறிப்பு: அதிரை பைத்துல்மாலுக்கு நிதியுதவிக்காக அதிரை எக்ஸ்ப்ரஸ் முகவர்கள் யாரையும் நியமிக்கவில்லை என்பதால் தயவுசெய்து உங்கள் நன்கொடைகளை உரியவர்கள் மூலம் மட்டுமே கொடுக்கவும்.

நன்றி,
அதிரை எக்ஸ்ப்ரஸ் டீம்

வாக்காளர்-வேட்பாளர் கலந்துரையாடல் சாத்தியமா?

சமீபத்தில் வடசென்னையில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒரேமேடையில் பேசச்செய்த செய்தியைப் படித்ததும் மனதில் தோன்றியது. நமது தொகுதியிலும் இது சாத்தியமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சற்று முயற்சித்தால் சாத்தியப்படும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இதனால் வாக்காளர்களுக்கும் நன்மை. வேட்பாளர்களுக்கும் நன்மை என்பதுதான் இதன் சிறப்பு. இது குறித்த சாத்தியகூறுகளை அலசுவோம்.

சாதாரணமாக தேர்தல் காலங்களில் ஒரேஊரில்/வார்டில்/தெருக்களில் எதிரெதிர் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கேட்பதைப் பார்த்திருக்கிறோம். லவுட் ஸ்பீக்கரைக் கட்டிக்கொண்டு அடித்தொண்டையில் "இதோ உங்கள் வீட்டுப்பிள்ளை வாக்குக் கேட்டு வருகிறார்" என்ற காதைக்கிழிக்கும் பிரச்சாரங்களால் வேட்பாளர்களும் கடமை முடிந்தது என்று ஓட்டுகேட்டுச் செல்வார்கள். அப்பாடா! சப்தம் ஓய்ந்தது என்று வாக்காளர்களும் நிம்மதியடைவார்கள்.

பெரிய கட்சிகள் பேச்சாளர்களையும் நடிக/நடிகையரையும் பிரச்சாரத்திற்கு சூறாவளி சுற்றுப்பயணம் அனுப்பி வாக்கு சேகரிப்பர்! சுயேட்சைகளோ கலர்கலராக பிட்நோட்டிஸூடன் வீடுவீடாகவந்து வாக்குக்கேட்டு தங்கள் இருப்பை நினைவூட்டிச் செல்வர்.இப்படியாக அவரவர் வசதிக்கேற்ப தேர்தல் முடியும்வரை வாக்காளர்களைச் சுற்றி சுற்றிவருவார்கள்.



வழக்கமான இம்முறையை மாற்றி, ஒரே மேடையில் குறிப்பிட்ட தினத்தில் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து தொகுதிப் பிரச்சினைகளைப்பேசி, அவற்றைத் தீர்ப்பதற்கான தங்களின் திட்டங்களைக் கேட்டறியலாமே! இதனால் பிரச்சாரச் செலவுகள் குறைவதுடன் வாக்காளர்களுக்கும் வேட்பாளரின் வாக்குறுதிகள்மீது நம்பிக்கை ஏற்படும்.அந்தந்த வேட்பாளார்கள் தங்கள் வாக்குறுதிகளை மேடையில் முழங்குவதோடு நில்லாமல், எழுத்துப் பூர்வமாக கையொப்பம் இட்டு, தான் வெற்றிபெற்றால் நிறைவேற்றுவேன் என்ற உறுதிமொழியையும் வாங்கலாம். தவறும் பட்சத்தில் அதை அடுத்தடுத்த தேர்தல்களில் பகிரங்கப்படுத்தி வாக்குறுதி தவறிய வேட்பாளரை மக்களிடம் அடையாளம் காட்டலாம்.

கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது! இதை யார் முன்னின்றுச் செய்வது?அரசியல் கட்சியா? ஊர்ஜமாத்தா? அல்லது பொது அமைப்பா?

பல்வேறு அரசியல் சார்புள்ள சார்பற்ற வேட்பாளர்களும் ஒன்றுகூடுவதால் இதை ஒரு கட்சியின் தலைமையில் செய்ய முடியாது. ஊர் ஜமாத்துக்கள்/பஞ்சாயத்துக்கள் இதை செய்யலாம்.(பெரும்பாலானக் கிராம பஞ்சாயத்துக்கள் தங்கள் தேவைகளை ஏதேனும் பணபலமிக்க வேட்பாளரிடம் சொல்லி,இவற்றைச் செய்து கொடுத்தால் பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து ஓட்டுகளும் அந்த வேட்பாளருக்கே என்று ஊர்முடிவு எடுக்கிறார்கள். சட்டப்படி வாக்களர்களுக்குப் பணம் கொடுப்பது தண்டனைக்குறியது என்பதால் வெளிப்படையாகச் செய்யாமல் காதும்காதும் வைத்தாற்போல் காரியத்தைச் செய்கிறார்கள்.)

லஞ்சமும் ஊழலும் மார்க்க ரீதியில் தடுக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் வாக்காளர்களால் இதைச் செய்ய முடியாது. சட்டவிரோதம் என்பதால் கண்டிப்பாகச் செய்யவே கூடாது.ஆனால் நாம் செய்யப்போவது வேட்பாளரிடம் பணமோ அல்லது பொருளோ பெற்று ஓட்டுப்போடும் வழக்கமான அரசியல் இல்லை. நமதூரின் தேவைகளை கோரிக்கைகளாக முன்வைத்து அவற்றை நிறைவேற்ற வேட்பாளரிடம் வாக்குறுதி வாங்குவதே!வேட்பாளர் கொடுத்த வாக்குறுதிகள்தான் மறந்துபோகும். ஆனால் இம்முறையில் வாக்குறுதிகள் வாங்கப்படுவதால் அவ்வளவு சீக்கிரம் மறக்க வாய்ப்பில்லை! (மறந்தால் அடுத்த தேர்தலில் தொகுதியையும் ஓட்டையும் மறந்துவிட வேண்டியதுதான்!)

நமதூரைப் பொருத்தவரை ஒட்டுமொத்த அதிரைக்குமான பஞ்சாயத்து இல்லை! தெருவாரியாக மொஹல்லாவாரியாகப் பிரிந்து இருப்பதால் இதைச் செய்ய ஒருங்கிணைந்த அமைப்பு தேவை. கீழ்கண்ட அமைப்புகள் சேர்ந்தோ அல்லது தனித்தோ இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம். நமதூரிலுள்ள அமைப்புகளில் நானறிந்தவற்றை இங்கிடுகிறேன்.

1) அதிரை பைத்துல்மால் (ABM)
2) லயன்ஸ் கிளப் (LIONS CLUB)
3) அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேசன் (ARDA)

நமதூரின் முக்கியத் தேவைகளாகக் கருதுபவை:

1) அதிரை-பட்டுகோட்டை வழியாக தஞ்சாவூர்ருக்கு இரயில்பாதை
2) அல்-அமீன் பள்ளிவாசல்
3) பெண்கள் மார்க்கெட்
4) சில தெருக்களுக்குக் குடிநீர் பிரச்சினை

இதுபோன்ற முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து மேற்கண்ட ஏதேனும் பொதுநல அமைப்பு(கள்) முன்னின்றுச் செய்யலாம். பூனைக்கு மணி கட்டபோவது யார்?

Saturday, April 25, 2009

அதிரையில் மாலைநேர பெண்கள் கல்லூரி

நமதூர் ஆலிம்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் பெண்களுக்கு மாலைநேர வகுப்புகள் வரும் 2009-2010 கல்வியாண்டிலிருந்து தொடங்கப்படுவதாக அறிவிக்கை/செய்தி வெளியிடப்பட்டுள்ளது.



மெயின்ரோடு வழியாக கல்லூரிக்கு வந்துசெல்லும் பெண்களை சகமாணவர்கள் பின்தொடர்ந்து வருவதால் தேவையற்றப் பிரச்சினைகளும் மாணவிகளுக்கு அசவுகரியங்களும் ஏற்படுவதாகப் பெற்றோர்கள் கருதியதால் பலர்தங்கள் வீட்டுப் பெண்களை கல்லூரிக்கு அனுப்பத் தயங்கினர். மேலத்தெரு வழியாக அல்லது ஜாவியா ரோட்டில் கல்லூரிக்கு நுழையும் வகையில் பின்பக்க வாசல் அமைத்தால் இப்பிரச்சினையை ஓரளவு மட்டுப்படுத்தலாம்.

அதேபோல், கல்லூரிப் பேருந்து வசதி செய்து கொடுத்தால் மேலும் பாதுகாப்பாக மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இவற்றையும் கல்லூரி நிர்வாகம் கவனத்தில் கொண்டால் மாணவியர் சேர்க்கை அதிகரிக்கும்.

சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

அல்அமீன் பள்ளிவாசல் பிரச்சினைக்குத் தீர்வு! - S.S.பழனிமாணிக்கம் வாக்குறுதி

தஞ்சை தொகுதி வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் அதிராம்பட்டினத்தில் வார்டுகள் மற்றும் தெருவாரியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். 22/04/09 அன்று மாலை 6.30 மணி அளவில் அனைத்து தெருக்களுக்கும், வார்டுகளுக்கும் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு அளிக்கும்படி வாக்கு சேகரித்தார்.



இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். செக்கடிமேடு அருகே வந்த போது அங்கு வேட்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.அப்பொழுது ஒரு நபர் பழனிமாணிக்கம் அவர்களின் அருகே வந்து மைக்கினை பிடித்து அல்‍அமீன் பள்ளி விவாகரத்தினை பற்றி குறிப்பிட்டு பேசினார்,அந்நபர் பேசியது



"திமுகவின் கோட்டை நகரம் அதிராம்பட்டினம் ஒரு சில திமுக‌ கயவர்களால் அல்அமீன் பள்ளிக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்,அதற்குல் நகர திமுக செயலாளர் குணசேகரன் அவர்கள் அந்நபரின் மைக்கினை பிடிக்க முற்பட்டார்.அதற்கும் பழனிமாணிக்கம் அவர்கள் குணசேகரனை கண்டித்ததுடன் அந்நபரை பேச தொடங்க சொன்னார்கள், திமுக கயவர்கள் என்ற வார்த்தையில் கயவர்கள் என்று கூறவேண்டாம் என்று சொன்னார்.






அந்நபர் பேசி முடிந்தவுடன் அதிராம்பட்டினத்தில் ஒருமுக்கிய பிரச்சனையாக உள்ளது.நான் வெற்றி பெற்றால் இதனை முதலில் தீர்த்து வைப்பதகாவும், பள்ளிவாசல் சம்பந்தமாக அதிரையில் இருந்து ஏற்கனவே ஒரு அமைப்பினர் என்னை சந்தித்தினர். இதனை தீர்த்து வைப்பது என்னுடைய கடமை என்றார் பழனிமாணிக்கம்.






இதனால் அங்கு திரளாக கலந்து கொண்ட பொது அமைப்பினர்,இளைஞர்கள் வெற்றி உங்கள் பக்கம் என்றனர்"மேலும் தனது வெற்றிக்கான வேட்பாளாராக ஆக்கும்படியும் கேட்டுகொண்டு பின்பு புறப்பட்டு சென்றார்.


செய்தி & புகைப்படம் : சகோ.முனாஸ்கான்

Friday, April 24, 2009

தவிக்கும் முஸ்லிம் வாக்காளர்கள்...


ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் ஓட்டுகள் யாருக்கு என்பது முக்கியமான கேள்வி. இந்தத் தேர்தலில் சில முஸ்லிம் அமைப்புகள் தி.மு.க., அ.தி.மு.க- வுக்கு ஆதரவாகவும்,வேறு சில தனியாகவும் களம் காண்பதால், ஒருவிதக் குழப்பத்தில் இருக்கிறார்கள் தமிழக முஸ்லிம்கள்!

தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனத் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீனிடம் இது பற்றிக் கேட்டபோது, ''முஸ்லிம்கள்இடஒதுக் கீட்டுக்காக கமிஷன் அமைத்ததால், கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்தோம்.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அப்போது இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் சிறை நிரப்பும் போராட்டம் உட்பட பல போராட்டங்களை நடத்தி வந்தோம். தனி இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு வழங்கியதும் நன்றி என்ற வார்த்தையோடு நின்றுவிடாமல்... இரண்டு வருடங்களுக்கு முன்பே '2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வை ஆதரிப்போம்' என்று கலைஞரிடம் கடிதம் கொடுத்தோம். அதன்படி, இந்தத் தேர்தலில் அதற்கு தார்மீக ஆதரவு தெரிவித்திருக்கிறோம்.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை தி.மு.க. கொண்டு வந்தும்கூட, அதன்படி எங்களுக்கு இடஒதுக்கீடு ஒழுங்காகக் கிடைக்கவில்லை. இதை முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்றதும் சரி செய்துவிட்டார். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் அரசு பணியிடங்களில் ஆயிரம் முஸ்லிம்கள் வரை சேர்க்கப்படவில்லை. அவர்களை சேர்ப்பது தொடர்பாக தி.மு.க. எழுத்து மூலம் உறுதிமொழி கொடுத்தால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். இல்லையென்றால், தார்மீக ஆதரவு மட்டுமே கொடுப்போம்.

அதே நேரம், தி.மு.க. அணியில் உள்ள காங்கிரஸை நாங்கள் ஆதரிக்கவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாகத் தேர்தல் அறிக்கையில் சொன்னது காங்கிரஸ். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் ஏமாற்றிவிட்டது. இப்போதும் காங்கிரஸ் உத்தரவாதம் கொடுத்தால், ஆதரிக்கத் தயார். இல்லையென்றால் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் யாருக்கும் எங்கள் ஆதரவு இல்லை. அமைதியாக இருந்துவிடுவோம். சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களால் முஸ்லிம்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. அதிரடியாக அவர்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இது போல நிறையப் பிரச்னைகள் இருப்பதால் அவர்களுக்கும் எங்கள் ஆதரவு கிடையாது!'' என ஒரே கூட்டணிக்கு ஆதரவும், எதிர்ப்புமாக தங்களுடைய கலவை முடிவைத்தெரிவித்தார்.

சமீபத்தில் மனிதநேய மக்கள் கட்சியாக உருவாகி தேர்தல் அரசியலில் புதிதாக நுழைந்திருக்கிறது த.மு.மு.க. அந்த அமைப்பும், தவ்ஹீத் ஜமாத்தும் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வருகிற நிலையில் ம.ம.க. நிற்கும் இடங்களில் அவர்களைத் தோற்கடிப்போம் என்று கச்சை கட்டிக்கொண்டு நிற்கிறது தவ்ஹீத் ஜமாத்.

த.மு.மு.க-வின் பொதுச்செயலாளரும் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளருமான ஹைதர் அலியிடம் பேசினோம்.

''ஒரு காலம் வரையில் முஸ்லிம்கள் தி.மு.க.-வுக்கு மட்டுமே வாக்களித்து வந்தார்கள். அந்த நிலை இப்போது மாறிவிட்டது. த.மு.மு.க-வின் எழுச்சிக்குப் பிறகு, அது நடத்திய போராட்டங்களுக்கு பிறகு, முஸ்லிம்களிடம் அரசியல் விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இப்போதுகூட முஸ்லிம் லீக்குக்கு ஒரு ஸீட் தந்துவிட்டு, அவர்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்லி தங்கள் வரவில் வைத்திருக்கிறது தி.மு.க. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக மனித நேய மக்கள் கட்சிக்குக் கேட்ட தொகுதிகளைத் தராமல் புறக்கணித்தார்கள். எங்கே எங்கள் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடுமோ என பயந்து மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.சந்திரனை மாற்றிவிட்டு, முஸ்லிம் வேட்பாளரை நியமித்திருக்கிறார் ஜெயலலிதா. கடந்த சட்டசபைத் தேர்தலில் 'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம்' என்று வாக்குறுதி கொடுத்துதான் தேர்தலை சந்தித்தது தி.மு.க. அதற்காக நாங்களும் அவர்களை ஆதரித்தோம். முஸ்லிம்களும் ஓட்டுப்போட்டார்கள். அதோடு முடிந்து விட்டது!'' என்றார் ஹைதர் அலி.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. நம்மிடம்,

''ராஜேந்தர் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள், சிறுபான்மையினருக்காக பட்ஜெட்டில் 15 சதவிகிதம் ஒதுக்கீடு, சிறுபான்மை கல்வி நிலையங்களின் பாதுகாப்புக்காக சட்ட திருத்தம், கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்க மிஸ்ரா கமிஷன் பரிந்துரை என மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பல நன்மைகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதே போல, தமிழகத்திலும் தி.மு.க. அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு போன்ற எத்தனையோ சலுகைகளை வழங்கியிருக்கிறது. அதனால், அவர்களுக்குத்தான் முஸ்லிம்கள் ஓட்டுப்போடுவார்கள். பி.ஜே.பி-யை எப்படி முஸ்லிம்கள் ஆதரிக்க மாட்டார்களோ, அதே கொள்கையைக்கொண்ட அ.தி.மு.க-வையும் ஆதரிக்க மாட்டார்கள்!'' என்றார்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் குத்புதீன் ஐபக், ''முஸ்லிம் மக்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லிக்கொண்டு இன்று வரையில் அரசியல்வாதிகளும் அவர்களைவிட பத்து மடங்கு முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் ஏமாற்றி வருகிறார்கள். அவர்களைப் பற்றி கடந்த ஓராண்டாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறேன். தேர்தலில் அந்த கோபம் நிச்சயம் எதிரொலிக்கும். நேற்று வரையில் தேர்தல் பாதை எங்களுக்கு சரிப்பட்டு வராது, சமுதாய முன்னேற்றத்தை அரசியல் அங்கீகாரம் இல்லாமலேயே செய்து முடிப்போம் என்று முழங்கி வந்தவர்களெல்லாம், திடுமென கட்சி ஆரம்பித்து திராவிட இயக்கங்களிடம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் அலைந்ததை மறக்கமாட்டோம். இனியரு முறை யாரும் எங்கள் மக்களை ஏமாற்ற முடியாது!'' என்றார்.

இந்தப் பிரச்னையில் பத்திரிகையாளர் புதுமடம் ஜாஃபர் அலியின் பார்வை மாறுபடுகிறது.

''மார்க்கம்தான் முக்கியம் என்று பேசி வந்த முஸ்லிம் இயக்கங்களை, திராவிட இயக்கங்கள் தேர்தலுக்குத் தேர்தல் பயன்படுத்தினார்கள். வாரியம், கழகம் என்று ஆசைகாட்டி பதவி சுகத்துக்கும் பணத்தாசைக்கும் ஆட்படுத்தினார்கள். இதனாலேயே முஸ்லிம் மக்களின் ஒற்றுமை கேள்விக்குறியானது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில், மதரீதியிலான ஒற்றுமை இருக்கிறது. ஆனால், அரசியல்ரீதியிலான ஒற்றுமை அவர்களிடம் இல்லை. காயிதே மில்லத்துக்குப் பிறகு உருவான தலைவர்கள் சுயநலம், பணம், பதவி போன்றவற்றுக்கு அடிமையாகி விட்டதால், முஸ்லிகள் இவர்களையெல்லாம் நம்புவது கிடையாது. அதனால், அந்தந்தப் பகுதியில் யார் நல்லவர் என்று பார்த்துதான் ஓட்டளிப்பார்கள். இதனால், எங்கள் இன ஓட்டுகள் ஒட்டுமொத்தமாக இன்னாருக்குக் கிடைக்கும் என்று யாராவது சொன்னால், அது காதில் பூ சுற்றும் வேலை...'' என்றார்.

குட்டை எவ்வளவுதான் குழம்பினாலும், வாக்குச் சாவடியில் தெளிவாக முத்திரை பதிப்பதுதான் இதுவரை நம் வாக்காளர்களின் வழக்கம். இம்முறையும் பார்ப்போமே..!

- வி.அர்ஜுன், எம்.பரக்கத் அலி
படங்கள்: எம்.உசேன், 'ப்ரீத்தி'

நன்றி: ஜூனியர் விகடன்

Thursday, April 23, 2009

தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு-1 (மனிதநேய மக்கள் கட்சி)

நம்நாட்டின் மொத்த மக்களவைத் தொகுதிகள் 540. அவற்றில் தமிழகத்தில் 39 தொகுதிகள் உள்ளன. முஸ்லிம்களின் சதவீதம் அரசாங்கக் கணக்குப்படி தமிழகத்தில் 6.5% உள்ளனர். 39 தொகுதிகளிலிருந்து தமிழக முஸ்லிம்களுக்கு 2-3 MPகள் இருக்க வேண்டும்.

சென்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து இருவர். J.M.ஹாரூன் (காங்) மற்றும் பேராசிரியர் காதர் முஹைதீன் (திமுக). ஆக, தமிழகளவில் அரசுக் கணக்குப்படி இரண்டு MP தொகுதிகள் முஸ்லிம்களுக்குக் கிடைத்து விட்டன! அவற்றுடன் திமுக கூட்டணியில் நீடித்தால்,மமகவுக்கு மேலும் ஒரு MP சீட் தருவதாக திமுக சொன்னதை ஏற்காமல், திமுக கூட்டணியை விட்டு மமக வெளியேறியது தவறான முடிவு என்று சொல்லப்பட்டுகிறது.

ஒப்பீட்டளவில் முஸ்லிம்களுக்கு 3 MP சீட்டுகள்=18 சட்டமன்றத் தொகுதிகள்! அதாவது 6.5% தமிழக முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் சார்பில் ஒன்று, திமுக ஆதரவுடன் முஸ்லிம் லீக்கிற்கு ஒன்றும், மமகவுக்கு ஒன்றுமாக மொத்தம் மூன்று தொகுதிகள், தமிழக மக்களவைத் தொகுதிகள் விகிதாச்சாரப்படி 3 MP சீட்டுக்கள் 13% (3/39) ஆகின்றன!




மேலும்,காங்கிரஸின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குலாம்நபி ஆஸாத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு சீட்டுக்கு ஒப்புக் கொண்டால் யூனியன் பிரதேசத்திற்கான கவர்னர் பதவியும், ஏதேனும் அரபு நாட்டிற்கு தூதரகப் பதவிக்கும் காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி பெற்றுத் தருவதாகவும் சொல்லப்பட்டது!

எப்படிப் பார்த்தாலும் கட்சி தொடங்கி அறுபது நாட்களேயான மமகவுக்கு ஒரு MP சீட்+கவர்னர் பதவி+தூதரகப் பதவியுடன் ஏற்கனவே கிடைத்திருந்த வக்ப் வாரியச் சேர்மன் பதவியும் மமகவுக்குக் கிடைத்திருக்கும், அவற்றை ஏற்காது தனித்துப்போட்டியிடுவது சரியான அரசியல் முடிவல்ல என்று சொல்லப்படுகிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, தமுமுக/மகவின் முடிவு அவசரகதியில் எடுக்கப்பட்ட தவறான முடிவாகத் தெரிந்தாலும், எதார்த்த நிலையில் மமக எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டில் மேற்சொன்ன கணக்கீடுகளைமீறிய நீண்டகாலக் கண்ணோட்டம் இருப்பதாகத் தெரிகிறது.

திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு எம்பி என்றாலும் அவை முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டில் வராது! கட்சிக் கொரடா உத்தரவைமீறி நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் சார்பாகத் தனித்து குரலெழுப்ப முடியாது. தேசியளவில் கட்சியின் நிலை என்னவோ, அதைச் சார்ந்தே பேசமுடியும்.

தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைத்துக் கட்சி தொடங்கிய மமகவும் ஒருசீட்டை ஏற்றுக் கொண்டிருந்தால் உள்ளடிவேலைக்காகக் காத்திருக்கும் ததஜ, இதைப்பிடித்துக் கொண்டு தமுமுக குறித்து தமிழக முஸ்லிம்களிடம் தவறான பிம்பத்தை ஏற்படுத்தக்கூடும். எதிரியுடன் கூட்டணி வைத்தாதவது மமகவை வீழ்த்தத் துடிக்கும் ததஜ, இவ்வாய்ப்பையும் தவறவிடமாட்டார்கள் ஆக, மமக ஒருசீட்டை ஏற்கமறுத்ததற்கு ததஜவின் வெளிப்படையான பகை உணர்வும் காரணம்.

தமிழகத்தில் 4 தொகுதிகளில்போட்டியிடும் மமகவிற்கு மத்திய சென்னை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் ஓரளவு வெற்றி வாய்ப்பு உள்ளன. மத்திய சென்னையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட சட்ட மன்றத் தொகுதிகளுடன் சேர்த்து தற்போதைக்கு சுமார் மூன்று இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். முஸ்லிம்களின் ஓட்டு முஸ்லிம் வேட்பாளருக்கே என்ற ஒருமித்தநிலை ஏற்பட்டால் ஹைதர் அலியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

இதைக்கருத்தில் கொண்டே தயாநிதி மாறனை (திமுக) எதிர்த்து அதிமுக சார்பில் S.S.சந்திரனுக்குப் பதில் முஹம்மது அலி ஜின்னாவை அதிமுக களமிறக்கியுள்ளது. இதனால் முஸ்லிம்களுக்கு இடமளிக்காத பழியிலிருந்து அதிமுக தப்பித்தாலும் மறைமுகமாக திமுக வேட்பாளர் வெற்றிபெறவே உதவியுள்ளது. முஸ்லிம் ஓட்டுக்கள் இருமுஸ்லிம் வேட்பாளார்களுக்கும் பிரிந்தாலும் குறைந்தவாக்கு வித்தியாசத்தில் தயாநிதி மாறன் வெல்லும் வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறையில் 25%-30% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.தேர்தலில் வெற்றிக்கு 20-30% வாக்காளர்களின் ஆதரவவிருந்தாலே போதுமென்றாலும் 25-30% வாக்களர்களும் ஜவாஹிருல்லாஹ்வுக்கு வாக்களித்தால், எதிரணி வாக்குகள் மணிசங்கர் ஐயர்,ஓ.எஸ்.மணியன் எனப்பிரியும் பட்சத்தில் பேரா. ஜவாஹிருல்லாஹ்வின் வெற்றிவாய்ப்பும் சாத்த்யப்படக்கூடியதே!

நான்கில் இரண்டு தொகுதிகளில் முஸ்லிம்கள் ஆதரவால் வெற்றிவாய்ப்பு வெகுதூரமில்லை. இத்தேர்தலில் தனித்துநின்று இரண்டு தொகுதிகளில் வென்றாலோ அல்லது கணிசமான வாக்குகள் பெற்றாலோ அடுத்தடுத்தத் தேர்தல்களில் கூட்டணியமைத்து மேலும் ஓரிரு தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்புண்டு என்பதுடன் முஸ்லிம்களை ஓட்டுவங்கியாக மட்டுமே பயன்படுத்திவந்த கட்சிகளின் அணுகுமுறையும் மாறக்கூடும் என்பதால் மமகவின் அரசியல் நிலைப்பாடு சரியான முடிவாகவே படுகிறது!

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

அன்புடன்,
அபூஅஸீலா

Wednesday, April 22, 2009

சிந்தனைக்கு!

'சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடுவோம்!' என்ற முந்தைய பதிவை மிக அழகாக சமுதாய அக்கரையுடன் எழுதிய ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள். இதுபோன்ற கட்டுரைகள் வந்தவண்ணம் உள்ளன, ஆனால் பிரிந்துக்கிடக்கும் நம் சமுதாய இயக்கங்களை ஒன்று சேர்ப்பது யார்?

முன்வாருங்கள்!
குழு அமையுங்கள்!
பேச்சுவார்த்தை நடத்துங்கள்!
மனமிட்டு பேசுங்கள் நமது சமுதாய நலனுக்காக!
வேற்றுமைகளை கலையுங்கள்!
ஒன்றுபடுங்கள் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக!

நமது ஒற்றுமையின்மையை சரியாக புரிந்துக்கொண்ட திராவிடக்கட்சிகள் நமக்கு நாமே நம்மை எதிரிகளாக்கி கடைசி வரையிலும் இந்த சமுதாயம் (சமுதாய இயக்கங்கள்) ஒன்றுபட்டுவிடக்கூடாது என்று ஒவ்வோரு தேர்தலிலும் மிக நுட்பமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள். பிரிந்துக்கிடக்கும் சம் சமுதாய இயக்கங்கள் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்க் கொண்டால் இன்ஷா அல்லாஹ், இறைவனின் நாட்டப்படி நாம் கைக்காட்டும் நபர்தான் எம்.பி யாகவோ எம்.எல்.ஏ.வாகவோ வரமுடியும் என்பதற்கு பல(வரலாறுகள்) சான்றுகள் உண்டு.

எனக்கு தெரிந்த நம் சமுதாய இயக்கங்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்திய தேசிய லீக்.
தேசிய லீக்.
மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.
ஜனநாயக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
சுன்னத்துவல் ஜமாஅத்.

நிச்சயமாக இதுப்போன்ற இயக்கங்கள் நம் சமுதாய நலன் கருதியே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமுதாய நலனில், சமுதாயம் முன்னேற ஒத்த நிலைப்பாட்டை கொண்ட நாம் ஏன் ஒன்று சேர முடியாது, ஏன் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்க்கொள்ள முடியாது? இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முடியும்.

ஒன்று சேர்ந்துப்பாருங்கள், பத்திரிக்கையாளர்களைக்கூட்டி பிரகடனம் செய்யுங்கள், அரசியல் கட்சிகளை தேடி நாம் செல்ல வேண்டியதிருக்காது மாறாக அவர்கள் நம்மை தேடி வருவார்கள் இன்ஷா அல்லாஹ்!.

பல்வேறு பிரச்சனைகளில் நாம் வேறுப்பட்டு இருக்கலாம்! நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, சமுதாய முன்னெற்றத்திற்காக தயவுசெய்து அதை மறந்து ஒன்றுபடுவோம்!

நம் ஒற்றுமையை நிலைநாட்ட இதுவே சரியான தருணம்.
மாறி மாறி கொடி பிடித்து அவர்களை வெற்றியடைய செய்ததும் போதும்!
வாக்குறுதிகள் கொடுத்து அவர்கள் நம்மை ஏமாற்றியதும் போதும்!

சமுதாய நலனில் அக்கறைக் கொண்டவர்களே!
நியாவான்களே!

வாருங்கள்!
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிப்போம்!
சமுதாய நலனுக்காக ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்போம்!
ஜெயம் கொள்வோம்! இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு : இதை எப்படி செயல்படுத்துவது, எப்படியெல்லாம் நம் சமுதாய இயக்கங்களை ஒன்றுசேர்ப்பது என்று உங்களுடைய ஆலோசனைகளை 'கருத்துகள்' பகுதியில் பதியுங்கள்.

ஆக்கம்,
-அப்துல் பரக்கத்.

Tuesday, April 21, 2009

சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடுவோம்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் களம் (2009) சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ள மக்களின் செல்வாக்கை கோடிகளில் பேரம் பேசி அரசியல் சூதாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால் காலம் காலமாக அரசியல் சூதாடிகளால் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். “முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் தலைவர்” என்று கூறிக்கொள்ளும் சிலரோ சமுதாயத்தின் மீது கொஞ்சம் கூட அக்கரையில்லாமல் மாற்று மத ஆன்மீக குருக்களின் காலடியில் வீழ்ந்து தமது ஈமானை வீணாக்குவததோடு அல்லாமல் தாம் தலைமை பொறுப்பேற்றிருக்கும் சமுதயத்தின் மக்களையும் மற்றவர்களால் கீழ்தரமாக நினைக்க வைக்கின்றனர்.

முஸ்லிம்களின் நெஞ்சிலே நேரடியாகக் குத்தும் தலைவரையுடைய ஒரு இயக்கம்; ‘முஸ்லிம்களை எங்களின் நெஞ்சிலே சுமந்திருக்கிறோம்’ என்று கூறிவிட்டு பிறகு நமது சமுதாய மக்களின் முதுகில் குத்தும் தலைவரையுடைய மற்றொரு இயக்கம்.

அனைத்து சமுதாய மக்களை விடவும் கீழ் நிலையிலுள்ள இந்த முஸ்லிம் சமுதாயத்தை இவர்களில் எவராவது தூக்கி விடமாட்டார்களா என்ற நப்பாசையில் இந்த இயக்கங்களை மாறி மாறி ஆதரித்துவந்த நமது சமுதாய மக்கள் இம்முறை இவ்விரு இயக்களினாலுமே மிக கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு காரணம், அற்பக் காரணங்களுக்காகவும், சில கொள்கை வேறுபாடுகளுக்காகவும், சமுதாயத்தின் மீதுள்ள அக்ரையைவிட தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மீதுள்ள அதீத பற்றின் காரணமாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அரசியல் அநாதைகளான இந்த முஸ்லிம் சமுதாய மக்களின் ஒரு பிரிவினர் வேறு வழியில்லாமல்
தம்மை ஆதரித்து விடுவார்கள் என்ற அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். இதை நமது சமுதாயமும் முன்சென்ற தேர்தல்களில் நிரூபித்திருக்கின்றது. இந்த தேர்தலிலும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

- முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையின்மையே அவர்களுக்கு இந்த நம்பிக்கையைத் தந்து முஸ்லிம்களை கேவலமாக நினைத்து அவர்களை ஒதுக்கித்தள்ள துணிய வைத்தது!

- முஸ்லிம்களின் இந்தப் பிரிவினையே காலங்காலமாக நம்மை அரசியல் அநாதைகளாக்கியது!

- அற்ப சில காரணங்களுக்காக கேவலமாக அடித்துக் கொள்ளும் இந்த தன்மையே பிற சாதியியக்கங்களை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும் நாம் அந்த சாதி இயக்கங்களை விட கேவலமான நிலைக்குத் தள்ளப்பட காரணமாக அமைந்தது!

- நம்மவர் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பொறாமை மற்றும் காழ்ப்புணர்வுகளே, ‘வேண்டுமானால் ஒரு சீட் தருகிறோம்! அதுவும் எங்கள் சின்னத்தில் நிற்க வேண்டும்’ என்று கூறும் துணிவைத் அவர்களுக்குத் தந்தது.

சுயநலமும், பதவி வெறியும், அற்ப உலகாசைகளையும் கொண்ட தலைவர்கள் திருந்தினார்களோ இல்லையோ, ‘குனிய குனியத் தான் குட்டுப்படுவோம்’ என்பதை உணர்ந்துக் கொண்ட இஸ்லாமிய சமுதாய மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இதைப் பார்க்கும் போது சந்தோஷமாகயிருப்பினும் இன்றளவும் சுயநலம், காழ்புணர்வு, சமுதாய நலனை விட சொந்த நலனில் அக்கரையுள்ள சிலர் சமுதாயத்தைக் கூறு போட நினைப்பதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இந்த சமுதாயம் ஒன்றுபட வாய்ப்பே இல்லையா என்று ஏங்குகிறது மனம்.

என தருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான்களாக வாழ்ந்த நம்மடையே பிரிவுகள் பல ஏற்பட்டிருப்பினும், நாம் அனைவரும் நம்முடைய இறைவனாக அல்லாஹ்வையும், இறுதி தூதராக முஹம்மது (ஸல்) அவர்களையும், புனித வேதமாக திருக்குர்ஆனையும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் அல்லவா?

நாம் ஒன்றுபட இதுவே சரியான தருணம்! நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருப்பது என்பது உண்மை தான்! ஆனால் இவைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் பொதுவான மற்றும் நாம் அனைவரும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை புரிந்துக் கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற தடுமாற்றங்களினால் வந்த சகோதர கருத்து வேறுபாடுகளேயன்றி வேறில்லை என்பதை நாம் உணர வேண்டும். இவைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்குள் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய உள் விவகாரங்களாகும். நாம் எக்காரணத்தை முன்னிட்டும் இந்த புரிந்துக் கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாக நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதன் மூலம் “முஸ்லிம்கள்” என்று சொல்லப்படக் கூடிய நம் அனைவர்களையும் ஒட்டுமொத்தமாக வேரறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாசிச சக்திகளுக்கு உதவும் வகையில் பிரிந்து விடக்கூடாது.

நம் சகோதர முஸ்லிம்களும் அல்-குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றி உண்மையான முஸ்லிம்களாக வாழவேண்டும் என்று நாம் ஆசைப்படுவதில் தவறில்லை தான். மேலும் இது உண்மையான ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கவேண்டிய பண்பும் கூட என்பதை நாம் அறிவோம். அவர்கள் நமது கருத்துக்கு ஒத்துவரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஏக இறைவனையும், இறுதி தூதரையும், இறுதி வேதத்தையும் நிரகாரிப்பவர்களோடு சேர்ந்துக் கொண்டு நமது இஸ்லாமிய சகோதரர்களையே எதிர்ப்பது என்பது எவ்வகையில் நியாயம் என்பதை சற்று நடுநிலையுடன் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம் சகோதரர்கள் ‘நம் இயக்கத்தை எதிர்க்கிறார்கள்’ என்ற ஒரே காரணத்திற்காக இறை நிராகரிப்பாளர்களுக்கு ஆதரவாக நம் சகோதரர்களுக்கு எதிராக செயல்படுவது என்பது எவ்வகையில் நியாயம்?

வேதக்காரர்களிடம் கூட ‘வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்’ (அல்-குர்ஆன் 3:64)’ என்ற அடிப்படையில் ஒற்றுமைக்கு வலியுறுத்தும் மார்க்கத்தையுடைய நாம் நமக்குள் பிரிந்துக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வது எவ்வகையில் நியாயம் என்பதை சற்று நிதானமாக சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.

எனவே என தருமை சகோதர, சகோதரிகளே! இத்தனை நாள் அரசியல் அநாதைகளாய் நாம் வாழ்ந்தது போதும்! இரக்கப்பட்டு பிச்சை போடுவது போன்று அவர்கள் தருகின்ற ஒரு சில இடங்களுக்காக அருகதையற்ற அரசியல்வாதிகளின் காலைக் கழுவும் பழக்கத்தை கைவிட்டுவிட்டு சமுதாயத்தின் நலன்கருதி வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிறுத்துவதற்காக நாம் ஓரணியில் திரளவேண்டிய அவசியமான காலக்கட்டம் இது.

இந்திய மண்ணிலே முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிய விரும்பி பற்பல சதிவேலைகளைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பாசிச சக்திகளுக்கிடையிலும் பல பிரிவுகள் இருந்தாலும் அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஒன்றுள்ளது. ஆம் அது தான் தேர்தல் நேரத்தின் போது அந்த பாசிச சக்திகள் ஒன்று பட்டு அவர்களின் அரசியல் பிரிவுக்கு ஆதரவளிப்பது ஆகும்.

அது போல் நாமும் நம்முடைய கருத்து வேற்றுமைகளை எல்லாம் நமக்குள் பேசி தீர்த்துக் கொள்வோம்! பிறரிடம் நமது சமுதாயத்தை அடகு வைக்கமாட்டோம்! என்ற எண்ணத்தில் ஒன்றுபட்டு நமது பொது எதிரிகளை எதிர்கொள்ள முன்வரவேண்டும். இன்ஷா அல்லாஹ் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நமக்குள் இருக்கும் இந்த கருத்து வேறுபாடுகள் இறைவனருளால் சுமூகமாக தீர்கப்பட்டு விடும் என்று இறைவனின் மேல் ஆதரவு வைத்து உறுதியாக நம்புவோம்.

தற்போது நமது ஒற்றுமையின் வலிமையை நிரூபிப்பதற்காக இன்று நம்மடையே வந்திருக்கும் தேர்தல் என்னும் இந்த வாய்ப்பை இன்ஷா அல்லாஹ் நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வோம்.முஸ்லிம்களாகிய நம் அனைவரையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பொது எதிரிகளைத் தாக்குப்பிடிப்பதற்காகவும், நம் நெஞ்சில் மற்றும் முதுகுகளில் குத்தும் இயக்கங்களுக்கு சரியான பாடம் புகட்டுவதற்காகவும், ஒரு சீட்டுக்காக அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த காலம் போய் அவர்கள் நம் ஆதரவை வேண்டி நம் கதவை தட்டுவதற்காகவும் நாம் அவசியம் ஒன்றுபட்டே ஆக வேண்டும்.

சமுதாயத்தில் அக்கரையுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நம்முடைய முஸ்லிம்களுக்குள் பிரிவுகள் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். சில தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களினால் பிரிந்து செல்லும் சகோதரர்களை வன்மையாக கண்டிக்காமல் அவர்களுக்கு நல்ல முறையில் சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களையும் ஓரணியில் திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். அவர்கள் நம்மை வசைபாடும் போது நாமும் அவர்களை வசைபாடுவோமேயானால் நமக்குள் சன்டைகள் பெரிதாகுமேயல்லாது அது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. சமுதாய அக்கரையுள்ள, சேவை மனப்பாண்மையுள்ள தலைவர்கள் இதற்காகப் பாடுபட்டு உழைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் நமது சமுதாயம் மிகப் பெரிய எழுச்சியைப் பெறும்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும்.


நன்றி: சுவனத்தென்றல்

முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கிய வருண்.

நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்.....'' என்றொரு பழமொழி சொல்வார்களே, அதற்கு முற்றிலும் பொருத்தமானது பாரதீய ஜனதா கட்சி. அந்தக் கட்சி எவ்வளவுதான் தன்னை நவீனமாகக் காட்டிக் கொண்டாலும், அந்தக் கட்சியின் தலைவர்கள் எவ்வளவுதான் மேன்மக்களாக இருந்தாலும், அக்கட்சியாலும் அதன் தலைவர்களாலும் முஸ்லீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்காமல் அரசியல் வாழ்வில் ஒரு நொடிப்பொழுதைக்கூடக் கழிக்க முடியாது.


உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பிலிபிட் மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வருண் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் அத்தொகுதியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ""இது (காங்கிரசின் சின்னமான) கையல்ல இது (பா.ஜ.க.வின் சின்னமான) தாமரையின் சக்தி; இது தேர்தலுக்குப் பிறகு முஸ்லீம்களின் தொண்டையை அறுத்து விடும்'' (ஆதாரம்: தி ஹிந்து, 24.03.2009, பக்.10) எனப் பேசியதோடு, ""சுன்னத்'' செய்வது போன்ற செய்கையையும் காட்டி முஸ்லீம்களை இழிவுபடுத்தியிருக்கிறான். மேலும், ""யாராவது ஒருவர் இந்துக்களை நோக்கி ஒரு விரலை நீட்டினாலும், அந்தக் கையை வெட்டுவேன் என கீதையின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்'' என்றும் (ஆதாரம்: தி ஹிந்து, 18.03.2009, பக்.1) வருண் காந்தி ஊளையிட்டுள்ளான்.


நேரு குடும்பத்தின் வாரிசான வருண் காந்தி, பார்ப்பதற்கு வெள்ளையும் சொள்ளையுமாகத் தெரிந்தாலும், அவன் வாயைத் திறந்தாலே முஸ்லீம்களுக்கு எதிரான வக்கிரமும், இந்து மதவெறிக் கொழுப்பும்தான் பொங்கி வழியும் எனப் பல பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவனது இந்து மதவெறி பிடித்த பேச்சைப் பத்திரிகையாளர்கள் ஒளி ஒலிப்பதிவு செய்ய முயன்றபோதெல்லாம் இந்து மதவெறிக் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். எனினும், இத்தாக்குதல்களுக்கு அஞ்சாமல் தனியார் தொலைக்காட்சியைச் Nசுர்ந்த நிருபர் ஒருவர், மிகவும் இரகசியமான முறையில் வருண் காந்தியின் பொதுக்கூட்ட பேச்சை ஒளிப்பதிவு செய்து, கவிஞன் என்ற போர்வையில் உலவி வரும் அம்மிருகத்தை இந்திய மக்களின் முன் அம்பலப்படுத்திவிட்டார்.


இந்தியத் தேர்தல் ஆணையம் வருண் காந்தியின் பொதுக்கூட்ட உரை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக் குற்றஞ்சுமத்தி, இதற்கு விளக்கம் அளிக்குமாறு வருண் காந்திக்கும் பா.ஜ.க.விற்கும் தாக்கீது அனுப்பியது. ""தனது பொதுக்கூட்ட உரையை யாரோ திருத்தி வெளியிட்டு உள்ளதாகவும், இது தனது எதிரிகளால் பின்னப்பட்ட சதி'' என்றும் விளக்கம் கொடுத்து, வருண் காந்தி தப்பித்துக் கொள்ள முயன்றான். இந்தியத் தேர்தல் ஆணையம் வருண் காந்தியின் பித்தலாட்ட விளக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதோடு, அவன் மீது மூன்று குற்ற வழக்குகளைத் தொடுத்திருக்கிறது. இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உ.பி. உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டதோடு, இந்தக் குற்ற வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.



"வருண் காந்தியை பிலிபிட் தொகுதியின் வேட்பாளராக நிறுத்த வேண்டாம்'' எனத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதை, பா.ஜ.க. ஒதுக்கித் தள்ளிவிட்டதன் மூலம் அக்கட்சி வருண் காந்திக்குக் கொம்பு சீவிவிட்டுள்ளது. அத்வானி இப்பிரச்சினை பற்றி மௌனம் சாதிப்பதன் மூலம் வருண் காந்திக்கு ஆதரவு காட்டி வருகிறார். ராஜ்நாத் சிங் போன்ற அக்கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையம் எங்களுக்கு எப்படி ஆலோசனை வழங்கலாம் எனக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவசேனை, விஸ்வ இந்து பரிசத் போன்ற வானரக் கூட்டங்களோ வருண் காந்தி பேசியதில் ஒரு தவறும் இல்லை என வம்படி செய்து வருகின்றன.


"வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம்'' எனத் தேர்தல் ஆணையம் வழங்கிய ஆலோசனையை, ஏதோ வருண் காந்தியின் குடியுரிமையையே பறித்து விட்டது போல ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஊதிப் பெருக்கி வருகிறது. இப்பிரச்சினையில் இந்து மதவெறி அமைப்புகள், அவற்றின் ஆதரவாளர்கள் ஆகியோரின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை தினமணி தலையங்கமாக (25.03.2009) வடித்துக் கொடுத்துள்ளது.


"வருண் காந்தியின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்படும் முன்பே, அவரை வேட்பாளராக நிறுத்தாதீர்கள் எனத் தேர்தல் ஆணையம் ஆலோசனை கூறுவது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. ......ஜகதீஷ் டைட்லர் போன்ற சீக்கியர் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சர்களாகும்போது, வருண் காந்திக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்குகின்றன ஊடகங்கள்.....'' என தினமணி புலம்பித் தீர்த்துள்ளது.


கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சில முசுலீம்கள் நிரபராதிகள் எனத் தெரிந்திருந்தும், அவர்களுக்குப் பிணை கூட வழங்காமல், விசாரணை என்ற பெயரில் 910 ஆண்டு காலம் அவர்கள் சட்டவிரோதமாகத் தண்டிக்கப்பட்ட பொழுது அக்குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட பல முசுலீம்கள், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை காலத்தைவிட அதிகமான ஆண்டுகளைச் சிறையில் கழிக்க நேரிட்ட பொழுதெல்லாம், தினமணிக்கு இப்படிப்பட்ட "நியாய' உணர்ச்சி பொங்கி வழிந்ததில்லை.


"தேர்தலுக்குப் பிறகு முசுலீம்களின் தொண்டைக் குழியை தாமரை அறுக்கும் எனப் பேசிய வருண் காந்திக்கு வேட்பாளராக நிற்கும் தகுதியுண்டா?'' என அறத்தின் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்க முடியாத அளவிற்கு தினமணியின் கண்களை இந்துமதவெறி மூடி மறைக்கிறது.


சீக்கிய இனப்படுகொலையில் ஈடுபட்ட காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஜகதீஷ் டைட்லர் மட்டுமல்ல் பல முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களுக்கும், படுகொலைகளுக்கும் தளகர்த்தாக்களாகச் செயல்பட்ட அத்வானி, நரேந்திர மோடி, கல்யாண் சிங், பால் தாக்கரே உள்ளிட்ட பல இந்து மதவெறிக் கிரிமினல்களும் கூடத்தான் சட்டத்தால் தண்டிக்கப்படாததோடு, அரசின் பாதுகாப்போடு சுற்றி வருகிறார்கள். "அவர்களையும் தேர்தலில் போட்டியிடத் தடை செய்; வருண் காந்தியையும் தடை செய்'' என தினமணி கூறியிருந்தால், அதனின் நடுநிலைமையை மெச்சியிருக்கலாம். ஆனால், தினமணியோ ""நீ மட்டும் யோக்கியமா?'' என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம், இந்து மதவெறிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு நியாயம் கற்பிக்க முயலுகிறது.


பா.ஜ.க., "வருண் காந்தியின் பேச்சு கட்சியின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை'' எனத் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறதாம். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது என்பதற்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறெதுவும் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பலின் பிறப்பும் சரி, அவ்வமைப்புகளின் இயக்கமும் சரி, ஆதிக்க சாதிவெறி முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியலைத் தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. அத்வானி, நரேந்திர மோடி போன்ற அக்கட்சியின் ""தீவிரவாத''த் தலைவர்கள் மட்டுமல்ல, தவறான கட்சியில் இருக்கும் சரியான நபராக திராவிடக் கட்சிகளால் முன்நிறுத்தப்பட்ட ""மிதவாதி'' வாஜ்பாயியும், முசுலீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்குவதில் சளைத்தவரல்ல.


வருண் காந்தியாவது தனது பேச்சை யாரோ திருத்தி வெளியிட்டிருப்பதாகத் தான் கூறி வருகிறார். ஆனால், வாஜ்பாயியோ புளுகுவதில் எல்லோரையும் மிஞ்சியவர். வாஜ்பாயி பிரதமராக இருந்த பொழுது, குஜராத் கலவரத்தையடுத்து நடந்த பா.ஜ.கட்சியின் கோவா மாநாட்டில் முசுலீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்கினார். அவரது பேச்சு நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குள்ளானபொழுது, ""தான் அப்படி பேசவில்லை'' எனப் புளுகியதோடு, தனது பேச்சை தானே திருத்தி ஒரு ஒலித்தகட்டை வெளியிட்டு, நாடாளுமன்றத்தையே ஏமாற்றினார். இப்படிப்பட்ட யோக்கியசிகாமணிகள் நிறைந்த அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.


நியாயமாகப் பார்த்தால், சுதந்திரத்துக்கு முன்னும், பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் தலைமை தாங்கி நடத்திய முசுலீம் எதிர்ப்பு கலவரங்கள், படுகொலைகளுக்காக, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்டு அதன் சகோதர அமைப்புகள் அனைத்தையும் அரசியல் அரங்கிலோ, பண்பாட்டு அரங்கிலோ செயல்பட முடியாதவாறு தடை செய்திருக்க வேண்டும். அக்கட்சியின் "தேசிய'த் தலைவர்கள் தொடங்கி உள்ளூர் ராம.கோபாலன் வரை, இந்து மதவெறி பாசிசக் கும்பலின் தளபதிகள் பலரின் குடியுரிமைகள் அனைத்தையும் பறித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனையோ வழங்கியிருக்க வேண்டும்.


ஆனால், இந்து மதவெறிக் கும்பலை எதிர்கொள்வதில், "மதச்சார்பற்ற' இந்திய அரசின் சட்டங்களோ மொன்னையாக இருக்கின்றன. அச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் பெற்ற போலீசு நீதிமன்றங்கள் இரண்டும் இந்து மதவெறிக் கும்பலின் இளைய பங்காளிகளாக நடந்து வருகின்றன.


தேர்தல் ஆணையம் தொடுத்துள்ள வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி தில்லி உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார், வருண்காந்தி. இவ்வழக்கில் அவருக்குப் பிணை வழங்கத் தனக்கு அதிகாரம் உள்ளதா என்பதைக் கூட ஆராயாத தில்லி உயர்நீதி மன்றம், மார்ச் 27 முடிய வருண் காந்திக்குத் தற்காலிகப் பிணை வழங்கி, சுர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.


இதே போன்று ஒரு வழக்கு சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவுக்கு எதிராக நடந்த பொழுது, அவருக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய சிறை தண்டனையைக் கூட அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாறாக, ""பால் தாக்கரே ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும், ஓட்டுப் போடவும் கூடாது'' எனத் தடை விதித்து, எறும்புக் கடியைப் போல ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.


இந்திய அரசின் மதச்சார்பின்மை கிழிந்து கந்தலாகி விட்டது என்பதை குஜராத் முசுலீம் படுகொலையின் பின் உலகமே தெரிந்து கொண்டு விட்டது. இப்படிப்பட்ட நிலையில், வருண் காந்திக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் தொடுத்துள்ள வழக்கு, இந்திய அரசின் நிர்வாணத்தை மறைக்கும் சல்லாத் துணியாகத்தான் பயன்படுமேயொழிய, அதற்கு மேல் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது.


"நேரு குடும்பத்தில் பிறந்த வருண் காந்தி இப்படிப் பேசலாமா?'' என்பது சில அப்பாவிகளின் அங்கலாய்ப்பு. வருண்காந்தியின் "தோப்பனார்'' சஞ்சய் காந்தி, அவசர நிலை காலத்தில் முசுலீம்களுக்கு எதிராகப் போட்ட ஆட்டமெல்லாம், ஆர்.எஸ்.எஸ். கும்பலையே கொஞ்சம் அசர வைத்திருக்கும். தலைநகர் தில்லியின் துருக்மான் கேட் பகுதியிலுள்ள முசுலீம் குடியிருப்புகளைச் சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியதில் தொடங்கி முசுலீம் ஆண்களுக்கு வலுக்கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தது உள்ளிட்டு, சஞ்சய் காந்தி மீது சுமத்தப்பட்ட பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டன. அப்படிப்பட்ட கிரிமினலின் தப்பாத வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறான், வருண் காந்தி.

-குப்பன்
Source:tamilcircle.net

Saturday, April 18, 2009

அரசியல்ல இதெல்லாம் சகஜம் தம்பி! - ஊர்சுத்தி உமர்

"ஒண்ணுமே புரியலே ஒலகத்துல...."

"என்னா ஒமராக்கா! பாட்டெல்லாம் பாடுறீங்க?எதாச்சும் விசேசமா? யாரு வூட்லயாச்சும் விருந்து கிருந்து நடக்குதா?"

"அடப்போப்பா காதரு. தேர்தல் வந்தாலும் வந்துச்சு. ஆளாளுக்கு மாறிமாறி கொழப்புறாங்க"

"என்னா காக்கா உங்களையே கொழப்புறாங்களா?"

"ஆமாந்தம்பி..மனசு உட்டுப் பேசணும். நீங்க நஜாத் குரூப்பா தவ்ஹீது ஜமாத்தா?"

"ஹெஹ்ஹே...என்னா ஒமராக்கா நஜாத் குரூப்புன்னாலும் தவ்ஹீது ஜமாத்துன்னாலும் ஒன்னுதானே. தவ்ஹீது ஜமாத்தா வேறெ குரூப்பான்னு கேளுங்க!"

"இல்லையே தம்பி. நஜாத் குரூப்பு மார்க்க விசயத்தை மட்டும்தானே சொல்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்?"

"காக்கா அது ஒருகாலம். இப்ப தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்துன்னு பேரமாத்திக்கிட்டு மார்க்கம் மட்டுமில்லாம எல்லா விசயத்துலயும் மூக்கை நுழைக்கிறாங்க."

"அடடே! ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடச்சொல்லி மூனுவருசத்துக்கு முந்தி பயான் செஞ்சாங்களே! அதானா சங்கதி?"

"அதேதான் காக்கா! ஆனா இப்ப கருணாநிதிக்கு ஓட்டுப்போடச் சொல்றாங்க!"

"காதரு. தெரியாமத்தான் கேட்குறேன்.ஜெயலலிதாவும் கருணாநிதியும் நஜாத் குரூப்பா? எதுக்குத் தம்பி நஜாத்காரங்க மார்க்க பயான் செய்யிறதவிட்டுட்டு தேர்தல் பயான் செய்யிறாங்க?

"இதே கொழப்பம்தான்காக்கா எனக்கும்!அவங்க விஜயகாந்த் படம்கூட பார்ப்பாங்கன்னும் பேசிக்கிறாங்க தெரியுமா?"

"என்னா தம்பி இப்புடி சொல்லிப்புட்டே? வல்லாநாலைல அப்புடியெல்லாம் இருக்காதுமா.ஆதாரம் இல்லாம எதையும் பேசக்கூடாது."

"காக்கா! போனவாரம் கோயம்புத்தூர்ல செயற்குழு மீட்டிங்ல விஜயகாந்த் சினிமாக்களில் முஸ்லிம்களை தீவிரவாதியா காட்டுறதுனால அவருக்கு ஆதரவில்லைன்னு சொல்லியிருக்காங்க. விஜயகாந்த் படம் பார்க்காம எப்படி இதெல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்?"

"கிடிக்கிப்பிடி கேள்விதான்!ஆனா இதஎன்னட்டக் கேட்டு என்னமா ப்ரயோஜனம்?.மனசு உட்டுப்பேசலாம்னு வந்தேன். அரசியல் பேச வச்சிட்டா. ஆமா மத்தமத்த முஸ்லிம் கட்சியெல்லாம்கூட தேர்தல்ல நிக்கிறாங்களாமே? வழக்கமா திமுகவுடந்தானே நிப்போம். மன்றத்துல கருப்பு, செவப்புக் கொடியோட பச்சைக் கலரும் தொங்கும். நாகூர் ஹனீபா பாட்டுக்கூட போடுவாங்க?"

"இப்ப ரெண்டு பச்சைக் கொடி தொங்கும்னு நெனைக்கிறேன்.ஒன்னு முஸ்லிம்லீக் கொடி இன்னொன்னு ததஜக்கொடி!"

"நல்ல முன்னேத்தம்தான். கருப்பு வெள்ளையா ஒரு கொடி தெரிஞ்சுச்சே அது எந்தக்கட்சியோடது?

"மமக"

"என்னா மருமக்களா?

"கடிக்காதிய காக்கா. மனிதநேய மக்கள் கட்சி! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நேரடியா தேர்தல்ல போட்டி போடமுடியாதுன்னு மமகன்னு அரசியல் கட்சி தொடங்கியிருக்காங்க.நீங்க சொன்னதும்தான் கொடிவிசயம் யாஹுவம் வந்துச்சு. தமுமுக கொடியை மமக பயன்படுத்தலாமான்னு தெரியலே. கட்சி ஆபிஸ்போனா கேட்டுச் சொல்றேன்"

"அத்வானிமேல செருப்பை உட்டு எறிஞ்சாங்களாமே? அதப்பத்தி எதாச்சும் தெரியுமா?

"ஆமா காக்கா! இப்பவ்லாம் பிடிக்காதவங்கமேல செருப்பு வீசுறது பேஷனாப்போச்சு! பிரதம வேட்பாளர் அத்வானி, பா.ஜ.க கட்சி ஆளும் மாநிலமான மத்தியபிரதேசத்தில், கந்தி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பர்வேஷ் அகர்வால் என்பவர், தன்காலனியை கழட்டி அத்வானி மேல வீசினாராம்.பர்வேஷ் அகர்வால்- மாவட்ட அளவில் பா.ஜ.கவில் கட்சி பொறுப்பு வகித்து வந்தாராம், சமீபத்தில் அவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால் ஆத்திரமடைந்து - அத்வானிமீது காலனி வீசியதாகச் சொல்றாங்க!"

"அடடே! ஒரு செருப்பை வீசுனாரா? ரெண்டையும் வீசுனாரா? பாவம் அவர் பிரதமராகத் தேர்த்தெடுக்கப்பட்டால் சுவிஸ்பேங்ல இருக்குற இந்தியர்களின் கள்ளப்பணத்தைக் நம்ம நாட்டுக்கு 100 நாள்ல கொண்டுவருவேண்ணுல்லாம் சொன்னாரே?"

"காக்கா! உங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் நாட்டு நடப்பெல்லாம் தெரிஞ்சிருக்குதே! சுவிச்சர்லாந்து பேங்குல நம்ம நாட்டு அரசியல்வாதிங்க ஊழல், கமிஷன் மற்றும் லஞ்சம் மூலம்- கொள்ளையடித்து, கணக்கு காட்டாமல் டெபாசிட் செய்திருக்கும் கறுப்பு பணம் மட்டும் ரூ.64 லட்சம் கோடி. இதை சுவிட்சர்லாந்து வங்கிகளின் கூட்டமைப்பு ஆண்டு அறிக்கையில வெளியிட்டுள்ளார்கள்."

"அடேங்கொப்பா! இதவச்சு என்னென்னமோ செய்யலாமே தம்பி! தெரியாமத்தான் கேட்கிறேன். இந்த லிஸ்டுல பாஜக அரசியல்வாதிங்க பேரெல்லாம் இல்லையா? இல்லாட்டி அவங்கல்லா யோகிய சிகமணிகளா? இந்த விசயம் பாஜக ஆட்சியைக் காங்கிரஸ்கிட்ட பரிகொடுத்த பின்னாடிதான் இவ்ளோ பணம் சுவிஸ் பேங்குல இருக்கிறது தெரியுமா? அதுக்கு முன்னாடி யாருக்குமே தெரியாதா தம்பீ?"

"காக்கா! சமயம் பார்த்துக் காலை வார்ரீங்க! ஊழல் விசயத்துல மட்டும் கட்சி பாகுபாடே கெடையாது. பாஜகவுக்கு இதுலைலாம் அக்கரையில்லே. சும்மா சொல்வாங்க.சீரியசா எடுத்துக்கூடாது. தேவைப்பட்டால் ராமர் கோவில், ராமர் பாலம்னுபேசி மதக்கலவரத்தை உண்டாக்கி மக்களின் கவனத்தை சிதறடிப்பாங்க.ஆட்சிக்கு வந்ததும் மறந்துடுவாங்க. அத்வானிக்கு செலக்டிவ் அம்னீசியா வியாதிவேற இருக்கிறதாலே கண்டிப்பா மறந்துடுவார். நீங்க எதுக்கு காக்கா பயப்படுறிய? உங்களுக்கும் ஸ்விஸ் பேங்க கணக்கு கிணக்கு இருக்குதா?"

"நமக்கு கூடுறவு பேங்குலகூட கணக்கு இல்லே தம்பி.இந்த லட்சனத்துல ஸ்வீஸ்பேங்குல கணக்காவது அறிவியலாவது"

"மன்மோகன்சிங் சோனியா காந்தியின் அடிமைன்னு அத்வானி சொன்னதுக்கு சோனியா காந்தியம்மா அத்வானி RSS அடிமைன்னு 'நச்' பதிலடி கொடுத்திருக்காங்க!

"இந்தம்மாவும் நல்லா அரசியல் பண்றாங்க இப்ப.அத்வானி RSS அடிமைங்கறது இப்பதான் தெரிசுச்சாம்மா? சும்மா போங்க தம்பீ...!"

காக்கா! வருண்காந்தியை கோர்ட்டு விடுதலை செஞ்சிடுச்சாம்! இனிமேல் அதுமாதிரி நடந்துக்கமாட்டேன்னுட்டு மன்னிப்புக் கடுதாசி எழுதிக் கொடுக்கணுன்கற கண்டிசனோட பெயில்ல வந்து வேட்புமணு தாக்கல் செய்யப்போறார்!

"என்னா கொடுமைதம்பி இது. மன்னிப்புக் கடுதாசி எழுதிட்டா செஞ்சதெல்லாம் சரியாயிடுமா? எனக்கு ஒன்னுமே புரியலே வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்ததா சர்ச்சுல நடந்துதான்னு தெரியலே. சர்ச்சுலதான் பாவமன்னிப்பு வழங்குவாங்க. இப்ப கோர்ட்டுலயும் வழங்குறாலோ என்னமோ?. இதே மாதிரி பிரேமானந்தா, சங்கராச்சாரியார், அஜ்மல் கஸாப் மாதியானவங்களும் மன்னிப்புக் கடுதாசி எழுதிக் கொடுத்துட்டு வெளியே வந்துட வேண்டியதுதான்!"

"ஈழத்தமிழர்கள் மீதானத் தாக்குதலைச் சகிக்க முடியாதுன்னு" பிரனாப் முகர்ஜி சொல்லியிருக்காரு. இலங்கையோட தூதரக உறவை இந்தியா முறித்துக் கொள்ளணும்னு கருணாநிதி சொல்லியிருக்காரு. இதப்பத்தி என்னா காக்கா நினைக்கிறீங்க?"

"தம்பி மஜ்பா லாஜ்ல ஸ்லோன்காரவங்க தங்கியிருப்பாங்கங்கறது மட்டும்தான் எனக்குத் தெரியும்! அரசியல்வாதிங்க தேவைப்படும்போது எப்படியும் பேசுவாங்க. போனமாசம் வரைக்கும் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட முடியாதுன்னு சொன்னாங்க. இப்ப உளவுத்துறை சர்வேயில் ஈழப்பிரச்சினையில் திமுக-காங்கிரஸ் அணுகுமுறையால் ஓட்டு கிடைக்காதுன்னு தெரிஞ்ச பின்னாடி பெல்டி அடிக்கிறாங்க. ஒலகம்பூர தமிழன் இளிச்சவாயன் தம்பி"

"ரொம்பநொந்து போயிருக்கீங்க காக்கா! வாங்க மெயின்ரோடு MP கடைல ரோஸ்மில்க் குடிச்சிட்டு கட்சிமன்றத்துக்கு போயிட்டு வரலாம்"

"நேத்து ராத்திரி கல்யாணக்கார வூட்லயும் ரோஸ்மில்க் நாலு கிளாஸ் குடிச்சேன்.சரி..சரி..ரொம்பக் கம்பல் பண்றிய வாங்க போவலாம்"

-www.ஊர்சுத்தி.உமர்-

தென்சென்னை வேட்பாளர் சரத்பாபு, புதிய நம்பிக்கை!

'அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு. பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக் கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சரத்பாபு.

நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு.

ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு. பட்டங்கள் மட்டுமா?

இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.

இத்தனை தகுதிகள் இருந்தாலும், இதோ சாந்தமாக தென்சென்னை தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் சரத். பிரசாரம் முடித்த ஒரு மாலைப் பொழுதில், அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.

ஒரு டிபிக்கல் அரசியல் கட்சி அலுவலகம் போல் இல்லாமல், ஒரு காலேஜ் காம்பஸ் மாதிரி இருந்தது அலுவலகம். கம்ப்யூட்டரில் வாக்காளர் பெயர் பட்டியலை பார்த்து விவாதித்தபடி, தென்சென்னை வரைபடத்தை டேபிளில் விரித்து வைத்து, நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அந்த வேலைகளுக்கிடையே நம்மிடம் பேசினார் சரத்பாபு.

''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.

பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..? அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க. அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும். அதுதான் என்னோட ஒரே திட்டம்!'' என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு.

(ஜூனியர் விகடனுக்கு நன்றி)

Friday, April 17, 2009

AFFA நடத்தும் 6-ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி.

AFFA நடத்தும் 6-ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி இன்று துவங்கியது.
இன்றைய முதல் நாள் ஆட்டமாக கோட்டையூர் மற்றும் பட்டுக்கோடை அணிகள் மோதின.
இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடிது சம நிலையில் ஆடி முடித்தனர்.
டை ப்ரேக்கர் மூலம் பட்டுக்கோட்டை அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
நாளைய 2-ஆம் நாள் ஆட்டமாக கொடைகானல் அணியுடன் திருச்சி அணி மோத இருக்கின்றனர்.



Affa



Thursday, April 16, 2009

ம.ம.க : சில கேள்விகளும், பதில்களும்

ம.ம.க. தேர்தல் நிலைபாடு குறித்து மக்கள் எழுப்பும் ஐயங்கள்
கேள்வி-பதில்களாக இங்கே தெளிவுபடுத்தப்படுகிறது


கேள்வி: ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு பிற்காலத்தில் இரண்டு தொகுதி களை பேரம் பேசியிருக்கலாமே?

பதில்: வடமாவட்டங்களில் மட்டும் இருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஒரு தொகுதியை மட்டும் கொடுத்திருந் தால் உங்கள் கருத்தை பரிசீலித் திருக்கலாம். அவர்களுக்கு இரண்டு கொடுத்தது நமக்கு மகிழ்ச்சிதான். அதே அளவு பங் கீட்டை தமிழகமெங்கும் 14 ஆண்டு கால மாய் வேரூன்றி, இன்று ம.ம.க.வாக மலர்ந் திருக்கும் நமக்கும் தந்திருக்கலாம். உபரியாக 14 தொகுதிகள் திமுகவிடம் இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற் காகத்தான் ம.ம.க.வே தொடங்கப்பட் டுள்ளது. முந்தைய சமுதாயக் கட்சிகள் செய்த அதே தவறை நாமும் செய்யக் கூடாது. இன்று ஒரு தொகுதியை ஏற்றிருந் தால் இனி காலம் முழுக்க அதே அளவு டனேயே நமது அரசியல் முடிந்திருக்கும்.
இப்போது துணிச்சலாக நாம் எடுத்த முடிவு காரணமாக இப்போது நமக்கு சிறு இழப்பு என்றாலும், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய இழப்புகள்தான் நாளைய வெற்றிகள், இழக்கமால் எதையும் பெறமுடியாது என்பதை ஊசலாட்ட முன்னவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்


கேள்வி: பல்லாவரத்தில் நடந்த ம.ம.க. கூட்டத்தில் கலைஞரையும், திமுகவையும் தாக்கிப் பேசியதால் தாங்கள் கூட்டணியிலிருந்து கழற்றி விடப்பட்டதாக திமுகவினர் கூறுகிறார்களே...?

பதில்: முற்றிலும் தவறான செய்தி. நமது தலைமை நிர்வாகிகள் பேசும் பொதுக்கூட்டங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. அதை யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக் காண்பிக்கிறோம். அப்படி பேசியதாக கூறுபவர்கள் அதனை நிறுபிக்கட்டும். இதுபோன்ற பொய்யான செய்திகளைக் கூறி, நம்மை வெளியே அனுப்பியதற்கு திமுக தரப்பு காரணங்களை கற்பிக்க முயல்கிறது. அவ்வளவுதான்.


கேள்வி: திமுக தரப்பு உங்களைக் கழற்றிவிட வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

பதில்: மதுரை வக்ப் வாரிய கல்லூரியில் 9 பேராசிரியர்களின் இடத் தையும் முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும் என அழகிரி தரப்பு கோரியது. அதை வக்ஃப் வாரிய தலைவராக இருந்த ஹைதர் அலி அவர் கள் அனுமதிக்கவில்லை. பல முக்கிய திமுக புள்ளிகளின் வக்ஃப் சொத்தை ஆக்கிரமித்திருந்தனர். அவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக மீட்கப்பட்டன. மேலும் பல சொத்துக்கள் மீட்கப்படும் முயற்சிகளிலும் இருந்தன. இவைகள் முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என யூகிக்கிறோம். அடுத்து அடங்கி, ஒடுங்கிப் போகும் அரசியலில் சமுதாய நிலைப்பாட்டுக்காக நிமிர்ந்து நின்றது மற்றொரு காரணமாக இருக்கலாம்.


கேள்வி: திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய ஹைதர் அலி அவர்கள் வக்ப் வாரிய தலைவர் பதவியிலிருந்து விலகாமல் நீடித்திருக்கலாமே?

பதில்: யாரும் செய்யாத பல நல்ல விஷயங்களை வாரியத்தில் தொடங்கி வைத்துவிட்டு பாதியில் வெளியேறு கிறோமே என்ற கவலை நமக்கு இல்லை. இறைவன் எதை நாடுகிறானோ அதுதான் நடக்கும்.

பதவியில் நீடிக்க வாய்ப்புகள் இருந்தும் நமது நெறிமுறைகளின் அடிப்படையில் அவர் ராஜினாமா செய்தார். சமுதாய நலனுக்காகத்தான் வக்ப் வாரியத்தைப் பெற்றோம். சமுதாய மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித் துவத்திற்கு பங்கம் ஏற்படும் நிலையில் அதற்காகவே அதிலிருந்து வெளியேறினோம்.

தமுமுகவினருக்கு பதவி என்பது சேவை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு. அதுவே நமது லட்சியம் அல்ல. சமுதாய நலனை முன்னிறுத்தியே நமது அசைவு கள் இருக்கும் என்பதை சகோ. ஹைதர் அலி அவர்கள் மூலம் நிரூபித்திருக் கிறோம்.


கேள்வி: திமுக-அதிமுக அணி களின் பண பலத்திற்கு முன்னாள் உங்களால் வெற்றிபெற முடியுமா?

பதில்: இறைவன் மீது நம்பிக்கை வைத்து களமிறங்குகிறோம். நம்பிக்கை இல்லாவிடில் வாழ்க்கை இல்லை. வெற்றிகளை மட்டுமே கணக்கில் கொள் பவர்களுக்குத்தான் இதுபோன்ற பயம் வரும். நாமோ வெற்றிலிதோல்விகள் இரண்டையும் துணிச்சலோடு எதிர்பார்த்து இறங்குகிறோம். வெற்றி பெற்றால் பணி செய்வோம். தோல்வியடைந்தால் கிடைத்த வாக்குகளை பலப்படுத்தி அதை அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு எப்படி பயன்படுத்துவது என சிந்திப்போம். திமுக பல தோல்விகளுக்குப் பிறகு தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஒரு தேர்தலிலேயே ஜெயித்துவிட வேண்டும் என நினைப்பது அரசியலில் ஒருவகை மூடநம்பிக்கையாகும்.


கேள்வி: அதிமுகவோடு அதிகாரப் பூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தி னீர்களா?

பதில்: அதிகாரப்பூர்வ பேச்சுவார்த் தைகள் நடக்கவில்லை.


கேள்வி: வேலூரில் முஸ்லிம் லீக்கை எதிர்ப்பீர்களா?

பதில்: எல்லா கட்சிகளிலிருந்தும் பரவலாக முஸ்லிம்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நமது விருப்பம். வேலூரில் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எதிராக நாம் வேட்பாளரை நிறுத்த மாட்டோம்.


கேள்வி: மத்திய சென்னை தொகுதியை ம.ம.க. கேட்டதற்கு கலைஞர் கடும் கோபம் அடைந் தாராமே? ம.ம.க.வை கூட்டணியில் இருந்து கை விட்டதற்கு இதுவும் ஒரு காரணமா?

பதில்: யாருக்கு எந்தத் தொகுதி என்று யாரும் யாருக்கும் பட்டா போட்டுக் கொடுத்துவிடவில்லை. முஸ்லிம்கள் நிறைந்த நாடாளுமன்றத் தொகுதி யாக மத்திய சென்னை அடை யாளம் காட்டப்பட்டுள்ளது. தொகுதி சீரமைப்புக் குப் பின்பு முன்பைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை அங்கு கூடுதலாக உள்ளது. துறைமுகம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், சேப்பாக்கம்லி திருவல்லிக்கேணி போன்ற முஸ்லிம்கள் வெற்றி பெறும் சட்டமன்றத் தொகுதிகள் மத்திய சென்னையில் வருகிறது. நமது மக்களும், நமது கட்சி யின் பலமும் எங்கு இருக்கிறதோ அங்கு தான் நாம் போட்டி யிட முடியும்.

இசை வேளாளர்கள் நிறைந்த தொகுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியுமா? தலித்துகள் நிறைந்த சிதம்பரம் தொகுதி யில் பிராமணர்கள் வெற்றிபெற முடியுமா? வன்னியர்கள் நிறைந்த தர்மபுரியில் தேவர்கள் வெற்றிபெற முடியுமா? தேவர் கள் நிறைந்த மதுரை யில் நாடார்கள் வெற்றிபெற முடியுமா?

ஆனால், முஸ்லிம்கள் நிறைந்த மயிலாடுதுறையில் அய்யர் ஒருவர் வெற்றி பெற முடிகிறது. ராமநாதபுரத்தில் தேவர் ஒருவர் வெற்றிபெற முடிகிறது. மத்திய சென்னையில் பிராமணர் வெற்றிபெற முடிகிறது. இதை தவறென்று சொல்ல வில்லை. ஜனநாயகத்தில் இதுபோன்ற ஆரோக்கி யம் வளர வேண்டும். ஆனால், முஸ்லிம் களால் பிற இன மக்கள் நிறைந்த தொகுதி களில் வெற்றிபெற முடியுமா? என்பது ஒரு கேள்வி. போட்டியிட முடியுமா? என்பது மிகமுக்கிய கேள்வி.

இந்நிலையில்தான் சமுதாய மக்கள் நிறைந்த மத்திய சென்னையைக் கேட் டோம். ஏற்கனவே திமுகவின் முரசொலி மாறனை பலமுறையும், அவரது மகன் தயாநிதி மாறனை ஒருமுறையும் முஸ்லிம் கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக் கிறார்கள். இம்முறை இத்தொகுதியை ம.ம.க.வுக்கு கேட்டது எப்படித் தவறாகும்?

ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, துறைமுகம் என முஸ்லிம்கள் நிறைந்த (சென்னை சட்ட மன்ற) தொகுதிகளில் கலைஞர், ஸ்டாலின் என அவரது குடும்பத்தினரும், பேரா. அன்பழகனும் மாறி மாறி வெற்றி பெற்றதை அவர்கள் மனசாட்சியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் மத்திய சென்னை யைக் கேட்டதே குற்றமாகக் கருதினால், முஸ்லிம்களின் தொகுதிகளை மட்டுமே குறிவைத்து போட்டியிட்டு அரசிய­ல் அனைத்தையும் பெற்றவர்கள் மீது நாம் எத்தனையோ விமர்சனங்களை வைக்க முடியும். பேரனின் தொகுதியைக் கேட்ட தற்காக தாத்தா கோபப்படுவதைப் பற்றி முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்பு களும் நுட்பமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.


நன்றி: தமுமுக இனையத்தளம்

அரசியல்வாதிகளுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால்....

சென்ற தேர்தலில் செக்கடிமேட்டில் உடற்பயிற்சி சாதனங்களைக் கொடுத்து அதிரை வாக்காளர்களின் வாக்குக்களை வாரிச்சென்றீர்கள்.இந்தத் தேர்தலுக்கு திமுகவின் திட்டமான இலவச தொலைக்காட்சிப் பெட்டியை அதிரை பகுதி மக்களுக்கு வழங்குவதாகச் சொல்லி ஆசை காட்டுகிறீர்கள்.

ஐயா,அதிராம்பட்டின மக்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிவிட்டார்கள்.வெளிநாடு சென்று வெகேசனில் நாடுதிரும்புவர்களின் பெட்டியை நிறைப்பது 18"/21" வண்ணத் தொலைக்காட்சி.மின்விளக்குக் கேபிள்களைவிட எங்களூரில் சாட்டிலைட் கேபிள் கம்பிகளே அதிகம் தென்படுமளவுக்கு வீட்டுக்கொரு? தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது.



மைனாரிட்டித் திமுக அரசுக்கு மக்களவைத் தேர்தல் முடிந்த மூன்றுமாதங்களுக்குள் முடிவுரை எழுதப்படுமென்று பா.ம.க தலைவர் நாள்குறித்துள்ள நிலையில், திமுக அரசு கேவலம் அதிராமபட்டினம் மக்களுக்கு எப்பாடுபட்டும் தொலைக்காட்சி வழங்கும் என்று எங்களை நம்பச்சொல்கிறீர்களா?

திமுகவுக்கு வாக்களிப்பதைத் தங்களின் ஆறாம் கடமையாகக் கருதி இதுவரை திமுகவுக்கு அல்லது திமுக கூட்டணி வேட்பாளருக்கே வாக்களித்த அதிரை மக்களுக்கு,திமுகவும் அதன் கூட்டணியான காங்கிரஸும் செய்தவை என்ன? வணிகர்களும், வழிப்போக்கர்களும் பயணிகளும் புழங்கும் இடத்தில் தங்கள் சொந்தநிலத்தில் பள்ளிவாசல் கட்டி தொழுவதைத் தடுத்தவர்கள் உங்கள் கட்சி மற்றும் கூட்டணிக்கட்சியான ஆளும் மைனாரிட்டி திமுகவினர் என்பதை அறிவீர்களா?



அதிரைமக்கள் இலவசமாகக் கொடுத்த நிலத்தில்தான் அரசு பொதுமருத்துவமனை, காவல் நிலையம்,பேரூந்து நிலையம்,மின்நிலையம் ஆகிய அரசு அலுவங்களும் செயல்பட்டு வருகின்றன.ஆனால்,நாங்கள் கிரயம் செய்து வாங்கிய நிலத்தில் தொழுவதற்காகக் பள்ளி கட்டுவதற்குத் தடையாகவும் இவர்களே தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பது தொகுதி எம்.எல்.ஏ ஆக இருக்கும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆகவே விரைவில் கவிழப்போகும் மைனாரிட்டி அரசு தருவதாச் சொல்லும் தொலைக்காட்சிப் பெட்டியைவிட இறைவனைத் தொழுவதற்கு பள்ளிவாசலே எங்களின் உடனடித்தேவை என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

பட்டுக்கோட்டைத் தொகுதி வாக்காளர்களைப் புதிதாகப் பெற்றுள்ள மத்திய இணை அமைச்சர் திரு.பழனி மாணிக்கம் ஐயா! நியாயமாக உங்களை வாழ்த்தி வரவேற்க வேண்டும். துரதிஷ்டவசமாக உங்கள் கட்சித்தலைமையின் கூட்டணித் துரோகத்தால் தமிழக முஸ்லிம்கள் புண்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை வருத்ததுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நான்குமுறை தஞ்சை மக்களவைத் தொகுதியில் வென்ற நீங்கள் தொகுதிக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது. மத்திய இணை நிதிஅமைச்சராக இருந்தபோது நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யச்செல்லும்போது கூடவே சூட்கேசுடன் நீங்களும் வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இனியும் உருப்படியாக எங்களுக்குச் ஏதேனும் செய்வீர்கள் என்று எந்த அடிப்படையில் நம்புவது?

தஞ்சை மாவட்டத்தில் உங்களுக்கெதிராக உள்ளடி அரசியல் நடத்தும் திரு.கோ.சி.மணி அவர்களின் விசுவாசியான ராம.குணசேகரன் எங்களூர் அல்அமீன் பள்ளிவாசலுக்கு முட்டுக்கட்டையாக இருந்து திமுக கோட்டையாக விளங்கிய அதிரையின் வாக்காளர்களை வஞ்சித்தார் என்பதால், எம்மக்களின் எதிர்ப்பு இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கும்.ஆகவே வாக்குக்கேட்டு வரும்போது அவரைத் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது!

அல்-அமீன் பள்ளிவாசலுக்குத் தடையாக இருக்கும் திமுக+காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அதிரை பேரூராட்சிமன்ற நிர்வாகிகளிடம் சொல்லி,பள்ளிவாசலுக்கெதிராக உள்ள அனைத்துத் தடைகளையும் விலக்கி அல்-அமீன் பள்ளிவாசல் உடனடியாகக் கட்டப்படவும், நெடுநாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள காரைக்குடி-திருவாரூர் வழியாக சென்னை சென்றுவந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் தொடர்வண்டி மீண்டும் இயங்கவும்,நீண்டகால நலனைக் கருத்தில் கொண்டு அதிரை -பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் இருப்புப்பாதைகளை இணைக்கவும் முயற்சி எடுப்பேன் என்று உறுதிமொழிதந்தால், தமிழகளவில் வஞ்சிக்கப்பட்டிருந்த போதிலும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்றவர் என்ற நன்றிக்காக தஞ்சை தொகுதியில் இணைந்துள்ள அதிரை வாக்காளர்களைக் கவர முடியும் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

தொகுதி MLA & MP அவர்களே! தேர்தல் முடியும்வரை வாக்காளர்களே எஜமானர்கள் என்று சொல்லப்படுவதால் இவ்வரியவாய்ப்பைப் பயன்படுத்தி மனக்குமுறலை இறக்கி வைத்து விட்டோம்.

இனி,ஜும்ஆப் பள்ளியில் கைகூப்பி நின்று வாக்குக் கேட்டாலே போதும் வெற்றி பெறலாம் என்ற அணுகுமுறையெல்லாம் பலிக்காது என்பதால் கவனமாகக் கோரிக்கைகளைப் பரிசீலித்தால் எதிர்கால அரசியலுக்கும் கட்சிக்கும் நல்லது!

-திருத்தொண்டன்-

அதிரை வாக்காளர்களுக்குத் தொலைக்காட்சிப் பெட்டி - எம்.எல்.ஏ அறிவிப்பு

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேர்தலுக்கு பிறகு இலவச டி.வி. வழங்கப்படும் என ரங்கராஜன் எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்துள்ளார்.அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் எதிரில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

இவ்விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல்வகாப் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமகுணசேகரன் முன்னிலை வகித்தார்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீரப்பன், சிங்காரவேலு, பொன்னம்பலம், ஜெயபாரதி, சாகுல்அமீது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. ரங்கராஜன் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:-

தஞ்சை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளராக பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்று மத்திய மந்திரியாகவும் இருந்து வருகிறார்.

அதேபோல இந்த பாராளுமன்ற தேர்தலிலும் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும் தேர்தலுக்கு பிறகு மதுக்கூர்,அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு இலவச டி.வி. வழங்கப்படும்.

Wednesday, April 15, 2009

சிந்திபீர் வாக்களிப்பீர் !!!

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சகோதரிகளே, சிந்திபீர்!!!

நாடளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்று முடிவு செயதுவிட்டன. தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஓர் அணியாகவும், அ.தி.மு.க, ம.தி.மு.க, ப.மா.க, ஆகியவை ஓர் அணியாகவும், அடுத்ததாக மனிதநேய மக்கள் கட்சி, தேசிய லீக், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி மற்றொரு அணியாகவும் இந்த தேர்தலில் களம் காணுகின்றன.

முஸ்லீம்களாகிய நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும். முதலாவதாக தி.மு.க, அ.தி.மு.க, கூட்டணிகள் ஒரு முஸ்லீம் வேட்பாளரை கூட அவர்கள் நிறுத்தவில்லை, தி.மு.க, கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஒரு சீட்டுக்காக தங்களை அடகுவைத்தவர்கள் ஆக இவர்களால் நமக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை எனென்றால் தனி சின்னத்தில் போட்டியிட்டால் தான் தங்கள் கருத்துகளை சுயமாக நாடளுமன்றத்தில் நம்முடைய கோரிக்கையை தெரிவிக்க முடியும், இவர்களோ தனி சின்னத்தில் போட்டியிட்டால் நாம் எப்படி வெற்றி பெறமுடியும் என நினைத்து தி.மு.க விடம் சரணடைந்து விட்டார்கள். இந்த தேர்தலில் நாம் நம்முடைய வாக்கு வங்கியை ஒற்றுமையாக பயன்படுத்தி தி.மு.க, அ.தி.மு.க, கூட்டணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்.

நம்முடைய சகோதர இயக்கம் ஒன்றின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில், மனிதநேய மக்கள் கட்சி எங்கு போட்டியிட்டாலும் நாம் அவர்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் இதை கேள்விப்பட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தாகள் காரணம் அவர்களால் நமது வாக்கு வங்கி குறையும் என்றல்ல, நாங்கள்தான் இந்த சமுதாயத்திற்காக போராடுகிறோம், இந்த சமுதாயத்திற்கு ஒன்று என்றால் நாங்கள் ஒடிவருவோம் என்று கூறியவர்கள், இந்த சமுதாயத்திற்கு எதிராக களமிறங்கி இருக்கிறார்கள். குறைகள் தெரிந்தாலும் அன்போடும் அக்கரையோடும் நளினமான முறையில் எடுத்துக்கூறும் பண்பு ஏன் இல்லாமல் போயிற்று? எங்கே இந்த சமுதாயம் அழிந்துவிடதா? என நப்பாசை கொண்டு திரிபவனுக்கு மத்தியில் நமது குறைகளை மேடைபோட்டு அரங்கேற்றுவதில் சகோதரர்களே! நீங்கள் உடன்படுகிறீர்களா? .. சிந்திபீர்!!!

பதவிக்காக மனிதநேய மக்கள் கட்சி பேரம் பேசுகிறார்கள் என்று நம்முடைய சகோதர இயக்கத்தினர் கூறிகிறார்கள். பதவிக்காக என்றால் தி.மு.க தருவதாக இருந்த ஒரு எம்பி சீட்டை ஏற்று கொண்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாதிரி சரனடைந்திருக்கலாமே..

படைக்கப்பட்டவனுடைய உள்ளத்தை படைத்தவன் அறிவான். படைத்தவனின் உரிமைகளை தனதாக்கிக்கொள்ள எவருக்கு தகுதியிருக்கிறது?

நாம் நம்முடைய வாக்குகளை வீணாக்காமல் நம்முடைய ஒட்டு மொத்த சமுதாயத்தின் சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளருக்கு உங்களுடைய வாக்குகளை அளியுங்கள்.

இதற் கெல்லாம் தீர்வு ....

* முஸ்லிம்கள் ஒற்றுமையை கையாள வேண்டும். மார்க்க முரண்பாடுகள் ஒருபுறம் இருக்கட்டும். தவறுகளை சுட்டி காட்டுங்கள் தவறில்லை!! திருநதினால் மறுமையில் தப்பித்து கொல்லலாம்!! மறுத்தால் விட்டுவிடுங்கள் அல்லாஹ் பார்த்து கொள்வான்..

இவன்

ஜித்தா வாழ் அதிரைவாசி