Monday, August 31, 2009

இரண்டாவது பத்தில், ரமலான்!

இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.


ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)


இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும்,சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.


"எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது.

இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:

"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர்.


இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)


THANKS
JALAL RAHMAN,
SHEIK DAWOOD ABDUL MAJEED

Saturday, August 29, 2009

அய்டா(AYDA) - ஜித்தா இப்தார் நிகழ்ச்சி

உரூஸ் அல் பஹர் என்று வர்ணிக்கப் படும் செங்கடல் ஜித்தாவில் AYDA (ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION) சார்பில் கடந்த புதன்கிழமை இனிய இப்தார் நிகழ்ச்சி நடை பெற்றது.அதிரையைச் சேர்ந்த ஜித்தா வாசிகள் அனேகர் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்தற்போது உம்ரா வந்திருக்கும் அதிரை பைத்துல்மால் செயலாளர் வழக்குரைஞர் முனாப் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள், மற்றும் பலர் மக்காவிலிருந்து வருகை தந்து அமர்வினை அலங்கரித்தனர்.


அய்டாவின் சேவை, ABM க்கு - அதன் உறுதுணை, ஆம்புலன்ஸ்- ஒரு கோடி திட்டம், மற்றும் பித்ரா வசூல் பற்றி சிலாகிக்கப்பட்டது. இரவு பசியாறி இனிதே கூட்டம் நிறைவுற்றது.தலைமை: சகோ. முகைதீன்வரவேற்புரை: ஷம்சுத்தீன்ஏற்புரை: ரபியாசிறப்புரை: முனாப்நன்றியுரை: அப்துல் அஜிஸ்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தாஜுதீன், ஜெயிலானி, ஜபருல்லா

நிகழ்ச்சி ஏற்பாடு: அய்டா (AYDA) - ஜித்தா

Friday, August 28, 2009

வசந்த காலத்தின் வாயிற்படி!

-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)

வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.

நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.

இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.

குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.

பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.

நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.

எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :

நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.

வயிற்று உபாதைகள்:

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்) இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல்:

இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.

மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.

(கட்டுரையாளருடன் தொடர்புக்கு:
ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA
CHINESE TRADITIONAL MEDICINE
MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA
போன்: 0505258645
தமிழ்நாடு போன்: 9442871075.
Thanks for thats tamil.

Thursday, August 27, 2009

தியாகமே யாகாமாய்...

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
"(நபிமொழிகளை) அதிகமாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறாரே" என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்து வந்தேன். புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; கோடுபோட்ட அழகிய (உயர்ந்த) துணியை அணிவதுமில்லை. இன்னவனோ, இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. பசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தேன். என்னை ஒருவர் (தன் இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு அவர் உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக (' எனக்கு விருந்தளியுங்கள்' என்ற பொருள் கொண்ட 'அக்ரினீ' என்னும் சொல்லை சற்று மாற்றி)' அக்ரிஃனீ' எனக்கு ஓர் இறை வசனத்தை ஓதிக்காட்டுங்கள் - என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும் . ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) ஏழைகளுக்கு மிகவும் உதவுபவராயிருந்தார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத (காலியான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டு வந்து அதைப் பிளந்து விடுவார். நாங்கள் அதில் (ஒட்டிக் கொண்டு) இருப்பதை நக்கி உண்போம்.

ஆதாரம்;புஹாரி எண் 3708

நபிமொழிகளில் பெரும்பான்மையான செய்திகளை மனனம் செய்து அதை வருங்கால சமூகத்திற்கு தந்த சிறப்பிற்குரிய அபூஹுரைரா[ரலி] அவர்களின் வறுமைநிலையை நினைத்தாலே கல்நெஞ்சமும் கண்ணீர் வடிக்கும். இந்த நிலையிலும் எனக்கு உணவளியுங்கள் என்று வாய்திறந்து கேட்காத அவர்களின் தன்மான உணர்வு மெய்சிலிர்க்கவைக்கிறது. இந்த தியாக சீலரின் அந்தஸ்தை பெற நாம் கோடிகளை கொட்டினாலும் எட்டமுடியுமோ..?

கேளுங்க,கேளுங்க கேட்டுக்கிடே இருங்க

1) நோன்பாளி, நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா)

2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரை, நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: நோன்பாளி, நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனைகளையும், இன்னும் நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே, நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளைச் செய்யுங்கள்.

இன்று முஸ்லிம்களில் பலர், நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். நமது சகல தேவைகளையும் பூர்த்தியாக்கித் தருவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

புனிதமிக்க ரமழானை பயன்படுத்துவோம்.

இம்மாதத்தின் மகத்துவத்தினைக் குறித்து நபி(ஸல்) அவர்கள்,
'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன".... - (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் 1957) என்றும்,

'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761) என்றும் அறிவித்தார்கள்

நபி[ஸல்] அவர்களால் அடுத்த வழிகாட்டியாக அடையாளம் காட்டப்பட்டவர்?

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?' என்று, - நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்" என்று பதில் கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3659

இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு பின்னால் தகுதியுடைய வழிகாட்டியாக அபூபக்கர்[ரலி] அவர்களை அடையாளம் காட்டியதன் மூலம் நபி[ஸல்] அவர்களின் சமுதாயத்தில் எட்டிப்பிடிக்க முடியாத சிறப்புக்குரியவர் அபூபக்கர்[ரலி] அவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளதை புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் விஷயத்தில் பெற்றோர் நிர்பந்தித்தால்...

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்." (அல்குர்ஆன்: 31:15)
Monday, August 24, 2009

ரமலானின் முதல் பத்து

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,
நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.
கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.
இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமலான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமலானில் மட்டுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.
இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191
இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை' என்ற அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லா விட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.
இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டு. கல்வி மற்றும் அறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டு. உடல் அழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடு படுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம். ஈமான் (இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பதுதான் உண்மையில் அருட்கொடை.

by jalal rahman

Friday, August 21, 2009

Thursday, August 20, 2009

அறிவிப்பு

தளமேம்பாடு காரணமாக அதிரை எக்ஸ்ப்ரஸின் முகப்புப் பக்கத்திலும் வழமையான பகுதிகளிலும் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வாசகர்கள் பொருத்தருள வேண்டுகிறோம்.

Wednesday, August 19, 2009

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

இந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் 160 மில்லியன் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகள் அரசு அங்கீகாரம் பெற்று வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது.

அதே நேரம் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றும் இந்தத் தடுப்பூசி பற்றி வெளியாகியுள்ளது. இந்தத் தகவலின் தீவிரம் கருதியே இதனைப் பதிவிடுகிறேன்.

இந்தத் தடுப்பூசியானது குல்லன் பாரி சிண்ட்ரோம் Guillain-Barre Syndrome (GBS), என்ற கொடிய நரம்பு நோயை ஏற்படுத்தும் என்பதுதான் அது.

இந்த நோயானது நரம்புகளின் உறையைத் தாக்கி தசைகளை செயலிழக்கச்செய்து பின் நோயாளி மூச்சுவிடச் சிரமப்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்நோய் தாக்கியவர்களுக்கு முதலில் காலும், கையும் பாதிக்கப்படும்.பின்னர் மூச்சடைப்பு வந்து வெண்டிலேட்டரில் செயற்கை மூச்சு அளிக்கப்படும்.

இதே போன்ற தடுப்பூசி 1976 ல் உபயோகப்படுத்தப்பட்டபோது

1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.

2.500 பேருக்கு GBS தாக்கியது.

3. GBS உருவாகுவது 8 மடங்கு அதிகரித்தது.

தற்போது இந்ததடுப்பூசியானது தேவையான அளவு சோதிக்கப்படவில்லை என்று தெரிகிறது, குறிப்பாகக் குழந்தைகளில்.

அதே நேரம் 13 மில்லியன் மக்களுக்கு இந்த அக்டோபரில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது.The British Neurological Surveillance Unit (BNSU) என்ற நரம்பியல் குழு நரம்புநோய் வருகிறதா என்று கண்காணிக்கும்.

மேலும் தற்போது இந்தத்தடுப்புமருந்தில் ஸ்குவாலின் என்ற நொதி சேர்க்கப்படுகிறது. அது என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்று ஒரு பிரபல தடுப்பூசி விஞ்ஞானி கூறியுள்ளார்.

இந்த பன்றிக்காய்ச்சல் முன்னர் வந்ததுபோல் மிக பயங்கரமானது அல்ல. இதற்கு அனாவசியமாக தடுப்பூசி வராத எல்லோருக்கும் தேவையா என்பதே இப்போதைய கேள்வி.

ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில், ஊரில் தடுப்பூசி போட வருகிறார்கள் என்றாலே மக்கள் ஓடி ஒளிவார்கள். தற்போதும் அந்த நிலைதான் வந்துள்ளதா?

Sunday, August 16, 2009

ஊர் வியாபாரி!அதிரையில் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் புதிதாக துவக்கப்பட்ட

"ரைட் மோர்" ஸ்னேக்ஸ்& பேக்கரியில் ரமழான் மாதத்தை முன்னிட்டு "ரமழான் உணவு மேலா" ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அதன் சிறப்பம்சமாக Mirch Masala மெனு வகைகளை தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்கிறார்கள்


Sizzling bbq,Kebab,Chicken Tikka,Lamb Chops& many more...
Tarka Daal,Channa,Maash Chicken Tikka Masala,Lamb Tikka Masala,King Prawn & many more... Fresh cool Drinks,Fresh Lassi,Fresh Mango Lassi,Fresh Passion,Fresh Mango,Mango Shake,many more...

இன்னும், புரூட் மிக்ஸர்,ரோஸ் மில்க்,கஸ்டர்டு,பாதாம் பால் வகைகளும்ஆவின் பால் கோவா,கேரளா நேந்ரம் சிப்ஸ், தம்ரூட் அனைத்து வித சுவையுள்ள பிஸ்கட்டுகளும் கிடைக்கும்.மற்றும்,சுத்தமான இறக்குமதி செய்யப்பட்ட மஸ்கட் பேரித்தம்பழம் குறைந்தவிலையில் கிடைக்கும்!

குறிப்பு:- வாடா, வாட் சமூசா, பஜ்ஜி வகைகள் பகல் 2:00 மணி முதல் கிடைக்கும்!

கடை பகல் 12:00 மணிமுதல் அதிகாலை 3:00மணி வரை உண்டு!

வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா? என்றும்

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் ! என்றும்
நாம் விவாதித்து கொண்டிருக்கும் போது, அல்லாஹ்வை நம்பி உள்ளூர் வியாபாரம் செய்யும் சகோதரர்களை ஊக்குவிப்பது நமது கடமை!

அவர்களுக்கு நாம் தரும் ஆதரவுதான் மற்ற சகோதரர்களை உள்ளூர் வியாபாரத்தில் ஈடுபட் ஊட்டமாக இருக்கும்!!

Friday, August 14, 2009

வாழ்த்துக்கள்அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை அதிரைஎக்ஸ்பிரஸ் அன்புடன் உரித்தாக்குகிறது.

Tuesday, August 11, 2009

பன்றிக் காய்ச்சல் - எச்சரிக்கையும்! தடுக்கும் வழிமுறைகளும்!!

பன்றிக் காய்ச்சல் பயந்து நடுங்கும் அளவுக்கு மிக மிக ஆபத்தானதல்ல. அதைக் குணப்படுத்த முடியும். பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், வந்தால் செய்ய வேண்டியவை குறித்தும் சில தகவல்கள்...

- இருமல், சளி, கடும் காய்ச்சல், தொண்டை வலி, களைப்பு, தலைவலி, வயிற்றுப் போக்கு, உடல் வலி, மூக்கு ஒழுகுதல், தும்மல், எடைக் குறைவு போன்றவையே பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும்.

- இவை தென்பட்டால், உடனடியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் பரிசோதனை நிலையத்திற்கு சென்று அங்கு முறைப்படி பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம்.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் வழிகள்...

வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது நலம்.

- தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அதிக அளவில் கூடும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.

- என்-95 என்ற வகை முகக் கவசத்தை அணிந்து கொள்வது அல்லது நல்ல கைக்குட்டையால் மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் மூடும்படியாக அணிந்து கொண்டு வெளியில் செல்வது நல்லது.

- இருமல், சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

- மது அருந்துவோருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பரவல் எளிதாக இருக்கும் என்பதால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

- இருமும்போதோ அல்லது தும்மும்போதோ கைக்குட்டையால் வாய்ப் பகுதியை மூடிக் கொண்டு செய்வது நல்லது.

- தினசரி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்பளர் தண்ணீராவது அருந்துவது அவசியம்.

- கீரை உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

- பன்றிக் காய்ச்சலுக்கான மாத்திரையான டமிஃப்ளூ அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். அதை நாமாக வாங்கி சாப்பிட முடியாது. அது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அரசு அதை கட்டுக்குள் வைத்து அரசு மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே விநியோகித்து வருகிறது.

- தமிழகத்தில் தேர்ந்தெடுத்த சில மருத்துவமனைகள் மற்றும் ஆய்வு மையங்களில் பன்றிக் காய்ச்சல் குறித்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

- சென்னையில் தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்று நோய் மையம், அரசு பொது மருத்துவமனை மற்றும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் பன்றிக் காய்ச்சலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனே அது பன்றிக் காய்ச்சல்தான் என்று பீதி அடைந்து விடாமல், உரிய டாக்டர்களை அணுகினால், பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தவிர்க்க முடியும்.


நன்றி : த'தமிழ்.

Monday, August 10, 2009

உஷார்... உஷார்... உஷார்... காற்றில் பரவும் பன்றிக் காய்ச்சல்: 33 சதவீத இந்தியர்களை பாதிக்கும் அபாயம்


காலராவை கண்டு ஒரு காலத்தில் உலகமே கதி கலங்கியது. மலேரியா, சின்னம்மை நோய்களும் மக்களை படாதபாடு படுத்தின.

கடந்த நூற்றாண்டில் இந்த நோய்களை எல்லாம் மருத்துவர்கள் புது, புது மருந்துகளை கண்டுபிடித்து குணப்படுத்தி விட்டனர். இதையடுத்து எய்ட்ஸ் அரக்கன் தலையெடுத்தான்.

புற்று நோயையும் எய்ட்சையும் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் சர்வதேச சுகாதார நிறுவனம் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீர் எமனாக பன்றிக் காய்ச்சல் நோய் என்று ஒரு புதிய நோய் தோன்றி இருப்பது தெரிய வந்தது.

அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் உலகின் முதன் முதலாக இந்த நோய் தாக்கியது. முதலில் இதை சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றே நினைத்தனர்.

இந்த காய்ச்சல் மெல்ல சான் அண்டோனியா, டெக்சாஸ் மாகாணங்களுக்கும் பரவிய பிறகே மருந்துவர்கள் உஷாரானார்கள். ரத்தப் பரிசோதனைகள் இது ஏதோ ஒரு புது வைரசின் வேலை என்பதை உணர்த்தின.

தீவிர பரிசோதனையில் பன்றிகளின் மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரலை தாக்கும் ஒரு வகை வைரஸ் இது என்று தெரிந்தது. இந்த வைரசால் பாதிக்கப்படும் பன்றியிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இந்த வகை காய்ச்சலுக்கு பன்றிக் காய்ச்சல் என்று பெயரிடப்பட்டனர். ஆங்கிலத்தில் இது ஸ்வைன் ப்ளு என்றழைக்கப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் என்பது நேரடியாக எல்லா பன்றிகளிடம் இருந்து வந்து விடுவதல்ல. பன்றிக் கறி சாப்பிட்டால் இந்த நோய் வந்து விடாது. கொடூர வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பன்றி பக்கத்தில் இருந்தாலோ, அல்லது அந்த வைரஸ் காற்று மூலம் பரவி, நம் உடம்புக்குள் புகுந்தாலோ பன்றிக் காய்ச்சல் வந்து விடும்.

இந்த வைரசின் கொடூரத் தன்மையை முழுமையாக கண்டு பிடித்தப் பிறகு இந்த வைரஸ்சுக்கு எச்.1 என்.1 என்று பெயரிட்டுள்ளனர்.

அமெரிக்க மருத்துவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் இந்த தகவல்களை எல்லாம் அறிந்து, கொடிய வைரசை கண்டுபிடிப்பதற்குள் அது கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு பரவி, மெல்ல மெல்ல உலகம் முழுக்க கால் ஊன்றி விட்டது.

வெளிநாடுகளில் எச்.1 என்.1 வைரஸ் காய்ச்சல் பரவியபோது இருமல், ஜலதோஷம், தொண்டை வறட்சி, உடல் வலி, தலை வலி போன்றவற்றை அறி குறிகளாக காட்டத் தொடங்கியது. சிலருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டது.

பன்றிக் காய்ச்சலை கண்டு கொள்ளலாம் இருந்தவர்கள் உயிரை பறிகொடுக்கத் தொடங்கியபோதுதான் அதன் விபரீதத்தை உலக சுகாதார நிறுவனம் அறிந்து உஷாரானது. மற்ற நாடுகளை எல்லாம் உஷாராக இருங்கள், உஷாராக இருங்கள் என்று அறிவிப்பு வெளியிட்டது.

அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் தொழில் விஷயமாக சென்று வந்தவர்கள் மூலம் இன்று 168 நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி ஜம் என்று உட்கார்ந்து விட்டது.

10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இன்று உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுடன் உள்ளனர். ஏற்கனவே 2 ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர்.

இந்த நிலையில் வர இருக்கும் குளிர் காலத்தில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் மிக வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் பன்றிக் காய்ச்சல் வராது என்று கடந்த ஜூன் மாதம் மார்தட்டி மத்திய அரசு சொன்னது. ஆனால் புனே பள்ளி மாணவர்கள் 11 பேர் அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்துக்கு சுற்றுலா சென்று வந்த போது கையோடு பன்றிக் காய்ச்சலையும் கொண்டு வந்துவிட்டனர்.

இன்று...இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சென்னை சிறுவன் சஞ்சய் உள்பட 6 பேர் இந்த நோய்க்கு பலியாகி விட்டனர்.

சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்களிடம் மிக, மிக எளிதாக பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றிக் கொள்ளும். காற்று மூலம் மிக எளிதாக இந்த வைரஸ் பறக்கும்.

இதனால் வெளியில் செல்லும்போது, மிக, மிக உஷாராக இருப்பது நல்லது.

அதற்காக காய்ச்சல் ஏற்பட்டதும் ஆ... பன்றிக் காய்ச்சல் என்று பீதி அடைந்து அலற வேண்டியதில்லை. காய்ச்சலுடன் சோர்வு, தலைவலி, தொண்டை வலி, இருமல், உடல் வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை இருந்தால், உஷாராகி விட வேண்டும். இதுதான் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

முதலில் நீங்கள் வழக்கமாக சிகிச்சை பெறும் குடும்ப டாக்டர்களிடம் உடம்பை காட்டி ஆலோசனை பெறுங்கள். காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் தயங்காமல் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து பார்த்து விடுங்கள்.

ஒரு பகுதியில் யாராவது ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிந்தால் உங்களை பாதுகாத்துக் கொள்ள சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். காய்ச்சல்- இருமல் இருக்கும் நோயாளிகள் அருகில் செல்லாதீர்கள்.

தும்மல் போட்டாலோ, இருமினாலோ பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் கொண்டாட்டத்துடன் பரவும். எனவே இருமல் ஆசாமிகள் பக்கத்தில் நிற்காதீர்கள்.

பன்றிக் காய்ச்சல் நோயாளிகள் பகுதிக்கு செல்ல நேரிட்டால் வாய், மூக்கை மூடும் முக கவசம் அணிய தவறாதீர்கள்.

வீட்டுக்கு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ மறக்காதீர்கள்.

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய் குறித்து பீதி ஏற்படுத்தும் தவறான தகவல்களை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் என்பது குணப்படுத்தக் கூடிய நோய் என்ற விழிப்பு ணர்வை மக்களிடம் பரப்ப முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சலை கட் டுப்படுத்த தற்போது Òதமிப்ளுÓ என்ற மாத்திரை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆயிரம் தமிப்ளு மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக மக்கள் பீதி அடைய தேவை இல்லை.

தமிழ்நாட்டில் இன்று காலை வரை 200-க்கும் மேற்பட்டவர்கள் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 110 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தண்டையார் பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 28 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவர் களில் 11 பேர் குணமாகி சென்று வீட்டுக்கு சென்று விட்டனர். 17 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பன்றிக் காய்ச்சலுடன் வந்த வண்ணம் உள்ளனர். இதை தடுக்க விமான நிலையம், ரெயில் நிலையங்களில் சோதனை நடந்து வருகிறது.

பன்றிக் காய்ச்சல் வைரஸ்களை குளிர் காலத்தில் கட்டுப்படுத்துவது கஷ்டம். எனவே இந்தியாவில் விரைவில் 33 சதவீதம் பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

எனவே சென்னையிலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ் சப்படுகிறது. இதை கருத் தில் கொண்டு, தனியார் மருத்துவமனை உதவியை அரசு நாடி உள்ளது.

சென்னையில் செயற்கை சுவாசம் அளிக்கும் வசதி 24 மருத்துவமனைகளில் உள்ளது. இந்த 24 மருத் துவ மனைகளிலும் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும்... பன்றிக் காய்ச்சலை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி விடலாம்.

அந்த வகையில் பன்றிக் காய்ச்சல் பற்றி தயவு செய்து தேவை இல்லாத புரளி கிளப்பி விடாதீர்கள். மராட்டிய மாநிலத்துக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள்.

பதற்றம் ஏற்பட்டு ரத்த பரிசோதனைக்கு செல்வதும் தேவை இல்லாதது.

நன்றி : மாலைமலர்

Friday, August 7, 2009

அரசு கல்வி உதவித்தொகை

மத்திய அரசின் சிறுபான்மையினர் நல வாரியம் கடந்தசில நாட்களுக்குமுன் நாளிதழிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது.. சிறுபான்மையினர் கல்விபயிலும் கலாசாலைகளில் சிறுபான்மையினர் கல்வி உதவிதொகைக்கான விண்னப்பங்களை செலுத்தி கல்வி உதவி தொகைகளை மத்திய அரசால் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்தமுறை மத்திய அரசால் வழங்கப்பட்ட இதுபோன்ற உதவி தொகைகளை சிறுபான்மையினர் பெற்றுகொள்ள முன்வராத காரணத்தால் அந்த தொகை திருப்பியனுப்பியுள்ளதை நாமெல்லாம் அறிந்த ஒன்று எனவே இம்முறை இதுபோன்ற அரசு சலுகைகளை பெற்றால் தான் இனிவரும் சலுகைகளை முறையாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை கீழ்கண்ட வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். இந்த உதவியை தண்ணார்வலர்கள் செய்து இறைபொருத்ததை பெற்றுக்கொள்ளவும்.

www.minorityaffairs.gov.in

குறிப்பு:இந்த விண்னப்பங்களை பெற்றுக்கொள்ள மறுக்கும் கல்வி ணிலையங்களை மாவட்ட ஆட்ச்சியாளரிடம் புகார் தெரிவிக்கலாம். எல்கெஜி முதல் அனைத்து வகுபினருக்கும் இது பொருந்தும்

-JP-

அழகிய கடன் அறகட்டளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அழகிய கடன் அறகட்டளை : அதிராம்பட்டினம்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைகும். நமதூரில் பல வழிகளில் பல நற்காரியங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் நம் சமுதாய ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன் கருதி அவர்களின் அவசிய தேவை அறிந்து நகையின் பேரில் 'வட்டியில்லா கடன்' கொடுத்து உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளம் படைத்த சிலர் 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

சென்னை மற்றும் பல ஊர்களில் 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற பெயரில் நகையின் பேரில் வட்டியில்லா கடன் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் ஆலோசனையை பெற்றும் அவர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு நமதூரிலும் ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதில் ஜகாத்-பித்ரா-மற்றும் குர்பானி பொருளை வட்டியில்லா கடனுக்கு சேர்க்கமாட்டோம். இதுவல்லாத பொருட்களை சேர்த்து சிறு தொகையாக வழங்க எண்ணியுள்ளோம். இதில் ஆர்வம் உள்ள நல்ல எண்ணம் கொண்டவர்கள் தங்களால் இயன்ற சிறு பொருளாதார உதவியை கொடுத்து செயல்படலாம். இது ஏற்கனவே நடைபெற்று வரும் நற்காரியங்களுக்கு தடையாக இருக்காது என்பதை தெரிவித்து கொள்கிறோம். தங்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் தொடர்புக்கு 9750969302 - 9994836098 - 9791438912 - 9865299919.

"வட்டியை அல்லாஹ் அழிக்கிறான், தர்மங்களை வளற்க்கிறான் (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிரிக்கும் நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்" - அல்குர்'ஆன் 2:276.

நிபந்தனைகள்:

1) நகையின்பேரில் மட்டுமே வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
2) நகை 4 மாதத்திற்கு அடமானம் வைக்கலாம். அதற்குள் நகையை திரும்ப மீட்கவேண்டும். இல்லாவிட்டால் நகையை விற்று கடனை அடைக்க வேண்டும். இதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போட்ட பிறகே இது நடைமுறைக்கு வரும்.
3) இதற்கான சர்வீஸ் பணமோ, அட்மிசன் பீஸோ கடன் பெருபவரிடம் வாங்கப்படுவதில்லை. இதற்கான செயலை நன்கொடை மூலம் பெற்றுக் கொள்வது.
4) கடன் தொகை பெற்றவர்கள் தங்களின் கடன் தொகையினை - மாத தவனைகளில் செலுத்தலாம். செலுத்தபடும் தொகை வரவு வைக்கப்பட்டு, கடன் முழுவதும் அடைக்கப்பட்டவுடன் அடமானப்பொருளை பெற்றுக்கொள்ளலாம்.

நிதி :

1) இறை வழியில் தங்களின் செல்வத்தை செலவிடக்கூடிய நல்லடியார்களிடம் நன்கொடையின் மூலம் வசூலிக்கலாம்.
2) அழகிய கடன் அறக்கட்டளைக்கு 6 மாதத்திற்கு அல்லது 1 வருடத்திற்கு கடனாகவும் தந்து உதவலாம் என்ற அடிப்படையில் நிதி வசூலிக்கப்படும்.

சகோதரர்களுக்கு வேண்டுகோள் :

நாள் ஒன்றுக்கு எத்தனையோ மணிநேரங்களை வெட்டிப்பேச்சுக்களிலும், வீண் பொழுதுபோக்குகளிலும், தூக்கத்திலும், வீனாக பொழுதை கழித்துகொண்டிருக்கிறோம். நம்மை விட்டுச்செல்கின்ற ஒவ்வொரு நொடியும் மீண்டும் நமக்கு திரும்ப கிடைக்கப்போவதில்லை.
அடுத்த நிமிடம் நாம் உயிரோடு இருப்போம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. என்ன அழகான பேர் வைத்திருந்தாலும் எப்படிச் செல்வ சீமானாக வாழ்ந்திருந்தாலும் மரணித்த மறு நிமிடமே 'மய்யித்' என்று அழைக்கப்படப்போகும் நாம் ஈன்றெடுத்த பெற்றோராயிருந்தாலும், பெற்று வளர்த்த பிள்ளைகளானாலும் 'மய்யித்தை' எப்பொழுது எடுப்பார்கள் என்று கேட்கப்படபோகும் நாம் வாழும் போது எதை சேர்த்து வைத்தாலும் போகும் போது எதை கொண்டு செல்ல முடியும். நல்ல அமல்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

சிந்திப்பீர் ! சிந்திப்பீர் !! செயல்படுவீர்.

கலம் இறங்குவீர். நம்மால் முடிந்த நற்காரியங்களை நம் சமுதாயத்திற்கு செய்து ஈருலக வெற்றிபெற அழைக்கிறோம் வாருங்கள்.

"யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தொழுகையை கடைபிடித்து ஜகாத்தும் கொடுக்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் (நற்) கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."
- அல்குர்'ஆன் 2:277


இறைவனின் உதவியும், மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் 'அழகிய கடன் அறக்கட்டளை' படிப்படியாக உயர்ந்து இன்ஷா அல்லாஹ் 'இஸ்லாமிய வங்கியாக' மாறும்.


முகவரி :
அழகிய கடன் அறக்கட்டளை,
20.B சேதுரோடு,
அதிராம்பட்டினம் - 614701.

என்றமுகவரியில் தற்செயலாக இருக்கிறது. தேவைப்பட்டால் பின்னர் முகவரி மாற்றம் செய்யப்படும்.

நன்றி
செயலாளர்.

ரைட் பிரதர்!

பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில்,

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த

ரைட் மோர்

கடை திறப்பு விழா...

இன்ஷா அல்லாஹ்

நாளை(07/08/09) மாலை நடைபெற இருக்கின்றது.அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்!

குறிப்பு:-

உங்கள் நிகழ்ச்சிகளுக்கு
கேரளா நேந்திரம் சிப்ஃஸ்,

மிச்சர்ஸ்,தம்ரூட் அல்வா,ஆவின் பால்கோவா

ஆர்டரின் பேரில் எக்ஸ்பிரஸ் டெலிவரி

செய்யப்படும்!

Sunday, August 2, 2009

முஹல்லா கூட்டத்தில் சுமூகம்!

அதிரை தக்வா பள்ளியில் இன்று அஷர் தொழுகைக்குபின் முஹல்லாவாசிகள் மற்றும் நிர்வாகம் சார்பில் எதிர்வரு ரமலான் மாத வேலைகளுக்கு தற்காலிக நிர்வாகிகளை நியமித்தனர் இதில் வழக்கம்போல் சகர் உணவு இஃப்தார் ஹிஜிபு ஆகியவை வழக்கம்போல் இடபெரும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கும் முன் நடந்த முகல்லாவாசிகள் கூட்டத்தில் மேற்கண்டவைகள் இடம்பெறாது என்று சில நிர்வாககமிட்டியினர் தெரிவித்ததால் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் நீடித்துவந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் பள்ளி நிர்வாகம் ஈகோ பார்க்காமல் பரஸ்பரம் ஒத்துழைத்து இறைஇல்லம் காக்க வேண்டுகிறது அதிரை எக்ஸ்பிரஸ்.

-JP-