Wednesday, June 30, 2010

பலர் கல்விகண் திறந்த பார்வையற்றவர்.சேவை செய்ய இந்தியா வந்தேன் :
பார்வையற்ற மாணவர்களுக்காக இலவச பள்ளி நடத்தும் ஜின்னா: (நெல்லை மாவட்டம் ஏர்வாடி தான் சொந்த ஊர்).
என் 13வது வயதில் ஏற்பட்ட விபத்தில் பார்வை இழந்ததால், கல்வி தடைபட்டது. பெரும் போராட்டத்திற்குப் பின், 18வது வயதில், மீண்டும் பள்ளியில் சேர்ந்தேன். ஆனால், ஒன்றாம் வகுப்பில் இருந்து படிக்க வேண்டிய கட்டாயம். பார்வையிழந்தவர்கள் மட்டுமே படிக்கும் பிரெய்லி புத்தகத்தைப் படிக்கும் முறை தெரியாததால், அதை முதல் வகுப்பிலிருந்து படித்தேன். நம்பிக்கையுடன் படித்து பி.ஏ.,வில் தங்கப்பதக்கம், பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் பல்கலைக்கழக முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்றேன். ரோட்டரி அமைப்பின் உதவியுடன், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில், பார்வையற்றவர்களுக்கான பயிற்சி முறை என்ற தலைப்பில் நான் சமர்ப்பித்த கட்டுரைக்கு முதலிடம் கிடைத்தது.என் திறமையை பாராட்டி, பெர்கின்ஸ் பார்வையற்றோருக்கான பள்ளியில் வேலை வழங்கினர். இந்தியாவில் என்னைப் போல் பார்வையற்றவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பினேன்.மதுரை, சுநர்தரராஜன் பட்டியில், இந்தியப் பார்வையற்றோர் சங்கம் சார்பில், ஒரு மேல்நிலைப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தை தொடங்கினேன். பலரின் உதவியுடன், கடந்த 25 ஆண்டுகளாக, பார்வையற்ற மாணவர்களுக்காக இந்த சேவை செய்கிறேன்.இங்கு பணிபுரியும் ஊழியர்களில் 60 சதவீதம் பேர், பார்வைத் திறனற்றவர்கள். இங்கு, மேல் நிலைப்படிப்பு, மாணவர்களுக்கு சிறு தொழில் சார்ந்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தங்கும் விடுதியும் உள்ளது. இங்கு பிரின்ட் செய்யப்படும் பிரெய்ல் புத்தகங்களில் ஒரு பிரதி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பார்வையில்லாத பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது.இந்தப் பள்ளியை, மாணவர்களுக்கு இலவசமாகவே நடத்துகிறேன். நிதி நெருக்கடி வந்தாலும், சில நல்ல உள்ளங்களால் இந்த சேவை தொடர்கிறது.
நன்றி:தினமலர்

நம்-ஊரிலும் உலகக்கோப்பை கால்பந்து!

தற்பொழுது உலக கோப்பை கால்பந்து ஜுரம் பட்டிதொட்டியெல்லாம் பரவிக்கிடக்கின்ற சூழ்நிலையில் நம்மூர் மட்டும் என்ன விதி விலக்கா? கால்பந்துப்போட்டிக்கு எப்போதுமே நம்மூர் மக்களின் ஆர்வமும், ஆதரவும் நம் முன்னோர்களின் காலத்திலிருந்தே இருக்கிறது என்பது மறக்க முடியாத உண்மை. தற்போது நடைப்பெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்துப்போட்டியை அனைவரும் கண்டு ரசிக்க வசதியாக புரஜக்டர் மூலம் பெரிய திரையில் கானொளி நம்மூரில்(நடுத்தெருவில்) ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் அதை உற்சாகத்துடன் கண்டு ரசிப்பதையும் கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.படம் மற்றும் செய்தி : அப்துல் பரக்கத்.

அதிரையில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்.


இன்ஷா அல்லாஹ் வரும் ஜுலை 2ஆம் தேதி மாலை 6.30 மணியளவில்
மாபெரும் மாரக்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

சிறப்புரை
எஸ்.எம்.பாக்கர்
செங்கிஸ்கான்
மவ்லவி முஹம்மது ஸகீர்

அன்புடன் அழைக்கிறது! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை.

Tuesday, June 29, 2010

அதிரையில் இரயில் மறியலுக்கு முயன்ற 20 பேர் கைது

அகலப்பாதை அமைக்க வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் அதிரை சுற்றுவட்டார மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனால் இன்று இரயில் மறியல் போராட்டத்தை அதிரை போராட்டக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று சுமார் 500 பேர் இரயில் மறியல் செய்ய காலை 10 மணிக்கு இரயில் நிலையம் நோக்கி சென்றனர். அவர்களில் 20 பேரை மட்டும் கைது செய்து சாரா கல்யாண மன்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிரை வழியாக இன்று செல்லும் அனைத்து இரயில்களும் சென்ற பிறகே அவர்கள் விடுவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்றிரவே சிலரை போலிசார் கைது செய்ய இருந்ததாக அறிய முடிகிறது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்: ஜனாப் ஜாபர் காக்கா

தார் சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள்.

நடுத்தெருவில் நடைப்பெற்று வந்த கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில், அதைத்தொடர்ந்து தார் சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.சாதிக்கப்போவது யார்....?

தங்களால் மட்டுமே சாதிக்க முடியும், எங்கள் பள்ளிகளில்தான் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி கொடுக்கமுடியும் என்று பெருமை அடித்துக்கொள்ளும் தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் என்றும் சளைத்தவர்கள அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் வெளிவந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் தெரிவித்திருந்தன.
.


அரசு பள்ளி மாணவி சகோதரி ஜாஸ்மின் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து இதற்கு முன்னுதாரணமாய் திகழ்ந்தார். இதனால் மற்ற அரசுப்பளிகளும் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகலும் பெருமையாய் தங்கள் காலரை தூக்கி விட்டுகொண்டுள்ளன.


இதை பறை சாற்றும் வகையில் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள், மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளும் தங்கள் மாணவ, மாணவிகளுக்கு தந்த சரியான பயிற்றுவிக்கும் முறையால், நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சியை காண முடிந்தது, இதில் மாணவிகள், மாணவர்களைவிட திறமைசாலிகள் என்பதை மீண்டும் நிரூபித்தனர்.


கையில் கொஞ்சம் காசு இருந்தால் மட்டுமே பயில முடியும் என்ற சூழலில் உள்ள இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிலை என்ன?, ஆங்கிலத்தில் தம் பிள்ளைகள் பேசலாம், பயிற்றுவிப்பு முறையில் உயர்தரம் இருக்கும் மேலும் மேற்படிப்புக்கு இலகுவாக இருக்கும் என்பதால் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இது போன்ற தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் எதில் தவறு நடக்கிறது என்று தெரியாமலேயே இதன் தேர்ச்சி விகிதம் சமீபத்தில் குறைந்து வருவது ஏன்?


பிள்ளைகள் பயில்வதற்கு , பெற்றோருக்கு நேர்முக தேர்வு, மற்றும் பலவிதமான வகையில் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி பள்ளியில் சேர்கின்றன சில தனியார் கல்வி நிறுவனங்கள், அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் தானாகவே பள்ளியை விட்டு வெளியேறும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் பள்ளியிலிருந்து வெளியாக்கப்படுகின்றனர் .


இதற்க்கு உதாரணம் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாற்றுதிறன் கொண்ட மாணவனுக்கு சரியாக கல்வியில் நாட்டமில்லாமல் மிக குறைந்த மதிப்பெண்ணே எடுக்கும் காரணத்தால் அந்த மாணவனோடு யாரையும் அண்டவிடாமல் அவனுக்கு பைத்தியம் என்று கூறி வகுப்பிலும் தனிமை படுத்தப்பட்ட சூழலில் அந்த மாணவன் தானாகவே பள்ளியைவிட்டு விலகும் அளவுக்கு மன ரீதியாக நெருக்கடி கொடுத்திருக்கிறது. இதனால் மனம் நொந்த அந்த மாணவனின் பெற்றோர் அரசு பள்ளியை நாடியிருக்கின்றனர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அரசுப்பளியில் சேர்த்திருக்கின்றனர் இப்போது நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 60சதவீத மதிப்பெண் பெற்று தேரியிருக்கிறான் அந்த மாணவன். அப்படியானால் 5 மதிப்பெண்கூட எடுக்கமாட்டன் என்று தனியார் பள்ளி ஒதுக்கிய அந்த மாணவனுக்கு 60 சதவீத மதிப்பெண் எப்படி கிடைத்தது?. அப்படியானால் சராசரி மாணவர்களுக்குகூட பயிற்றுவிக்கும் வகையில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு திறமை இல்லையா?.


தான்தான் சரியாக படிக்கவில்லை தன் பிள்ளைகளாவது நன்றாக படிக்கவேண்டும் என்ற ஆசையில் தனக்கு தகுதி, வசதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதிற்கொண்டு எப்பாடு பாட்டாவது கல்விக்காக செலவு செய்ய தயாராக இருக்கின்றனர் நடுத்தர பெற்றோர்கள்.


இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகிகள், நமதூரின் எதிர்காலத்தையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் நிறையவே சிந்திப்பவர்கள் வெளியில் தெரியாத சேவைகளை செய்து வருபவர்கள், இதை மனதில் கொண்டுதான் பேராசிரியர் ஹாஜி. பரக்கத் அவர்களை முதல்வராக தேர்ந்தேடுத்திருக்கின்றன, இதற்காக இந்நிர்வாகம் நன்றிக்கும் பாராட்டிற்கும் உரியவர்கள்.


பேராசிரியர் ஹாஜி. பரக்கத் அவர்கள், அன்று முதலே மாணவர்களின்மீது நல்ல அக்கறையும், ஆக்கப்பூர்வமான் அறிவுரைகளும் வழங்கி வருபவர் மேலும் மிகச்சிறந்த பொது நல சேவகரும் கூட, இவர் இப்பள்ளிக்கு, எல்லோரும் மெச்சும் அளவுக்கு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றே நம்புகிறோம். இது இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின், பெற்றோர்களின் ஆசை.

இவ்வருடம் சாதிக்கப்போவது யார் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் பள்ளியா?, காதிர் முகைதீன் மேல்நிலை பள்ளியா?.

எல்லா பள்ளிகலுமே சாதிக்கவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் ஆசையும்.
வல்ல அல்லாஹ் நம் எல்லா மாணவர்களுக்கும் இவ்வுலக மறுவுலக கல்வியிலும் வாழ்விலும் வெற்றியை தருவானாக ஆமீன்.

Monday, June 28, 2010

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

கீழே நீங்கள் படிக்க இருக்கும் செய்தி உங்கள் பார்வைக்கு ஏதோ "மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல்" இருக்கலாம். இது சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல மனித இனத்திற்கும் ஒரு அதிர்ச்சி தகவல் தான்.

இன்றைய கால நவீன உலகில் பல புதிய, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளொன்றாக உலக வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதை மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்று தான் கைபேசி/மொபைல் போன்கள். உலக உருண்டை என்னும் ஒரு வீட்டை விரல் நுனி என்னும் சாவி கொண்டு திறந்து விடலாம் என்பது போல் வகைவகையான, வண்ணவண்ண கைபேசிகள் இன்று வந்து விட்டன.

அதை பட்டி தொட்டிகளில் எல்லாம் பாமரனும் பயன்படுத்தச் செய்வதற்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதன் சேவையை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன் தொலைத்தொடர்பு சேவை தங்குதடையின்றி நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கிடைக்கச்செய்ய அதன் உயர்ந்த கோபுரங்கள் மூலம் செயற்கைக்கோளிலிருந்து மின்காந்த அலைகளைப்பெற்றுத்தருவதற்காக எல்லா இடங்களிலும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் (மாதம் ஒரு கனிசமான தொகையை இடத்தின் உரிமையாளருக்கு கொடுக்கும் வகையில்)நிறுவப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள பறவைகள் பாதுகாப்பு மையம் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நீண்ட ஆய்விற்குப்பிறகு ஒரு அதிர்ச்சியான தகவலை தந்துள்ளது. அது என்னவெனில் உயரமாக நிறுவப்படும் அதிக மின்காந்த (அலை) சக்தி கொண்ட செல்போன் கோபுரங்களால் பறவையினம் மெல்ல,மெல்ல அழிந்து வருவதாகவும் குறிப்பாக சிட்டுக்குருவி இனம் விரைவில் அழிந்து விடும் என்றும் தெரிவித்துள்ளது. அம்மையம் நம் நாட்டில் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியில் இக்கோபுரங்கள் காரணமாக பறவைகள் இனம் குறிப்பிட்ட அப்பகுதியில் அழிந்து விட்டதாக தெரிவித்துள்ளது. (தகவல்: தினமணி)

இதுபோன்ற உயர்காந்த மின்னலை கொண்ட கோபுரங்களை நிறுவுவதால் வரும் வருமானங்கள் மட்டுமே நம் கண்களுக்கு தெளிவாக தெரிகிறதே தவிர அதனால் வரும் பல விபரீதங்கள் கண்களுக்குத்தெரிவதும் இல்லை. அதை தெரிந்தாலும் பெரிது படுத்த நம் உள்ளம் என்றும் விரும்புவதில்லை.

இன்று மனித இனம் புற்றுநோயின் பல வகைகள் மூலம் சொல்லாத்துயரை அடைந்து அன்றாடம் மடிந்து வரும் இவ்வேளையில் வாயில்லா ஜீவன் சிட்டுக்குருவிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? என்று நாம் கேட்கவில்லை அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகள் கேட்கலாம்.

கடைசி மூச்சு உள்ளவரை எல்லாத்தீங்குகளிலிருந்தும், விபரீதங்களிலிருந்தும், கொடிய நோய்களிலிருந்தும் நம்மையும், பெற்றோர், உற்றார், உறவினர்களையும், சிறார்களையும் நம்முடன்/நம்மைச்சார்ந்து வாழ்ந்துவரும் எத்தனையோ வாயில்லா ஜீவன்களையும் வல்ல ரப்புல் ஆலமீன் காத்தருள வேண்டும் என்று நாமெல்லாம் பிரார்த்திப்போமாக....

மு.செ.மு. நெய்னா முஹம்மது சவுதியிலிருந்து.

Sunday, June 27, 2010

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அதிரை உமர் தம்பிக்கு அங்கீகாரம் வழங்கியதற்கு நன்றி


உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் கடந்த 23 ஆம் தேதி துவங்கியது. பிரதிபா பாட்டில் தலைமையில் துவங்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கலைஞர் தலைமையில் நிறைவடைகிறது. அந்த மாநட்டில் கடந்த 24 ஆம் தேதி நடந்த முரசொலி மாறன் அரங்கம் திறப்பு விழா மற்றும் தமிழ் இனைய மாநாட்டில் இணையத்தில் தேனீ எழுத்துருக்களை வழங்கிய மர்ஹும் உமர்தம்பி காக்கா அவர்களுக்கு தமிழ் இனைய அறிஞர் விருது வழங்கி சிறப்பித்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், இதற்கு வழிவகுத்த அணைத்து அதிரை வாசிகளுக்கும். முஸ்லிம்மலர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைக்கு சிறப்பு சேர்த்த அதிரை உமர்தம்பி காக்காவின் குடும்பத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

கலிபோர்னியாவில் பெண்கள் பயான்

கலிபோர்னியாவில் பெண்கள் பயான் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிச்மாண்ட் என்ற ஊரில் உள்ள பெரிய மர்கசில் வெள்ளி,சனி,ஞாயிறு என தொடர்ந்து தப்லீக் ஜமாஅத் இஜ்திமா நடைபெற்று வருகிறது.

அதுபோது,அமெர்க்கா,கனடா மற்றும் உலகின் பல முனைகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.அதுபோல இந்தியாவின் பல மாநிலங்கள்,தமிழகம் போன்ற இடங்களிலிருந்தும் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகம் சார்பாக குறிப்பாக புரொபசர் அப்துல் ரஹ்மான்(70) அவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


புரொபசர் அப்துல் ரஹ்மான் அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர் சொன்னார்,"அட அதிராம்பட்டினமா?நம்ம அப்துல் காதர் ஆலிம்சா ஊராச்சே.தங்கமான மனிதரைக் கொண்ட ஊரல்லவா அது?"என்றார்.மேலும் கூறுகையில்,சில மாதங்கள் முன்பு ஆஸ்திரேலியா சென்றோம்.அங்கு அதிரையை சேர்ந்த சகோதரர்களை சந்தித்தோம்.அவர்கள் பெண்கள் பயானுக்கு ஏற்பாடு செய்து,அது மூலம் பலர் பயன்பெற்றனர்.இங்கும் நீங்கள் ஏற்பாடு செய்தால்,பேசுவோமே?என்றாகள்.இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் செய்வோம் என்று சொல்லி விடை பெற்றோம்.

அல்லாஹ்வின் கிருபையினால்,அதிரையை சேர்ந்த சகோதரர் ஷிப்லி அவர்கள் தங்கள் வீட்டில்( சாக்ரமண்டோ )பயானை வைத்துக்கொள்ளலாம் என மனமுவந்து ஒத்துக்கொண்டார்கள்.

எனவே இன்ஷா அல்லாஹ்,ஞாயிறு (06.27.10)அன்று சாக்ரமண்டோ மஸ்ஜித் அந்நூர் பள்ளிவாசலில் அசர் தொழுகை முடிந்தவுடன்,சகோ ஷிப்லி அவர்களின் வீட்டில் பயான் தொடங்கி,மக்ரிப் நேரம் வரை நடை பெரும்.

 எனவே அதிரையை சேர்ந்த சகோதரர்கள் மட்டுமின்றி தமிழ் மொழி பேசும் எல்லா ஆண்களும்,பெண்களும் வந்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.மேலும் உருது,ஆங்கிலம் இரண்டிலும் மொழிபெயர்ப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.


இடம் மற்றும் ரூட் போன்ற விவரங்கள் அறிய சகோ ஷிப்லி அவர்களை தொடர்பு கொள்ளவும்.

BROTHER SHIBLI 916 473 3593

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் பாவங்களையும் மன்னிப்பானாக.ஆமீன் 

நிகழ்ச்சி ஏற்பாடு மதுரை சலீம்,அதிரை ஷிப்லி

அறிவோம்,களைவோம்

ஆபாச தளங்களுக்கு தனி டொமைன்:

இணையதளங்களுக்கான டொமைன்களை முடிவு செய்யும் ஐசிஏஎன்என் அமைப்பு, .xxx என்ற டொமைனுxxxக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இதன் மூலம் செக்ஸியான, ஆபாசமான படங்கள், செய்திகள் அடங்கிய தளங்களை, இந்த டொமைன் மூலம் தனியாக இயக்கிக் கொள்ளலாம்.

2005ம் ஆண்டிலேயே இந்த xxx டொமைனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்புதல் திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் xxx டொமைனுக்கான தொடர் அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டே வந்ததைத் தொடர்ந்து தற்போது xxx டொமைனை அனுமதிப்பது என்ற முடிவை ஐசிஏஎன்என் எடுத்துள்ளது.

இதையடுத்து இனிமேல் செக்ஸியான, ஆபாசமான படங்களையும், செய்திகளையும் கொண்ட தளங்கள் xxx என்ற டொமைனில் தனியாகவே இயங்கும்.

இங்கு நாம் சொல்ல வருவது இந்த கேடுகெட்ட செய்தியை அறிமுகம் செய்ய அல்ல. சில குறிப்பிட்ட தளங்களை நமது கணினியில் தடை செய்ய மென்பொருள்கள் உள்ளது அதனை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
நன்றி :தமிழ் நிருபர்

"தமிழ் இணைய அறிஞர்" விருது புகைப்படங்கள்நன்றி: 'வலைப்பதிவர்' சஞ்சை காந்தி-கோவை

'தேனீ' உமர்தம்பிக்கு தமிழ் இணைய அறிஞர் விருது

தமிழ்கூறும் நல்லுலகுக்கு 'தேனீ', 'வைகை' ஒருங்குறி எழுத்துருக்களை ஈந்து தமிழ் இணைய வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற அதிரை மைந்தன் மர்ஹூம் உமர்தம்பி அவர்களுக்கு கோவையில் நடந்த உலகத் தமிழிணைய மாநாட்டில் "தமிழ் இணைய அறிஞர்" விருது வழங்கப்பட்டது.


சிங்கை தமிழ் உலகம் அறக்கட்டளை சார்பில்  முரசொலி மாறன் அரங்கில் நடந்த விழாவில் ஆஸ்திரேலிய தமிழறிஞர் திரு.பாலா பிள்ளை அவர்கள் உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர் ஜனாப். அப்துல் காதர் அவர்களிடம் "தமிழ் இணைய அறிஞர்" விருதை வழங்கி கவுரவித்தார்.

விழா மேடையில் உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் ஜனாப்.மொய்னுத்தீன் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக மதிய இடைவேளையின்போது துணைமுதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உமர்தம்பி அவர்களின் மகன் மொய்னுத்தீனிடம் மறைந்த உமர்தம்பி அவர்களின் தமிழ்ச் சேவைகள் தம் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

Saturday, June 26, 2010

உமர்தம்பி அவர்களுடன் நடந்த சுவையான உரையாடல்

தமிழ் ஒருங்குறிகளின் அவசியத்தையும்,அதன் எதிர்காலத் தேவையையும் அனுபவ ரீதியாகக் கணித்திருந்த 'தேனி' உமர்தம்பி அவர்களுடன் தமிழார்வலரும் சகவலைப்பதிவருமான திரு.மு.மயூரன் அவர்களுடன் 20-பிப்ரவரி-2006இல் நடந்த இணைய உரையாடலின் மீள்பதிவு.
====================================================
உமர் : யுனிகோடை எந்த உலாவியில் பார்த்தாலும் எந்த அலைன்மென்டில் பார்ததாலும் பிச்சு
உதறாம, எப்போதுமே நல்லா தெரிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்?


மு.மயூரன்: அதுக்கு, யுனிகோடில் எங்க எல்லா எழுத்துக்கும் தனியிடம் வேணும். இல்லாட்டி
முத்து நெடுமாறன் சொல்றா மாதிரி அஞ்சு வருசம் காத்திட்டிருக்க வேண்டியதுதான்.

உமர்: இத, இத, இதத்தான் எதிர்பார்த்தேன்.

பரவாயில்லையே! நடக்கவே நடக்காது என்பதுபோய் 'அஞ்சு வருஷமாவது
காத்திருக்கணும்னு' சுதி மாறியிருக்கிறதா என்ன?


மு.மயூரன் : உமர்,நீங்கள் இப்போது யாரை கிண்டலடிக்கிறீர்கள் என்று புரியவில்லை ;-)
இருந்தாலும், சில தகவல்கள்,

கடந்த வருடம் இலங்கையில் முத்து நெடுமாறன் அவர்களை நான் சந்தித்தபோது இது பற்றி
கேட்டேன். அவர், இப்போது எல்லா மென்பொருட்களும் தமிழ் யுனிகோடுக்கு ஆதரவு
வழங்கவில்லை என்பதாலேயே இந்த பிரச்சனை எழுகிறதென்றும், நாளடைவில் சரியாகிவிடும் என்றும் சொன்னார்.

கை கால்களுக்கு தனித்தனி யுனிகோட் ஒதுக்கீடுகளை வைத்துக்கொண்டு அன்றாட தமிழ்
பாவனையில் நான் படும் பாடுகள் சொல்லி மாளாதவை. அதிலும் சிறப்பாக நான்
பயன் படுத்துவது லினக்ஸ் இயங்குதளம். எல்லா லினக்ஸ் வழங்கல்களும் தமிழ்
பயன்பாடுபற்றி அலட்டிக்கொள்ளும் என்றில்லை. எனவே நிறுவிக்கொண்டபிறகு
நானாகத்தான் தமிழ் வசதிகளை பொருத்திக்கொள்ள வேண்டும். இதன்போதுதான் தற்போதைய
யுனிகோட் ஒதுக்கீட்டில் எரிச்சல் எரிச்சலாக வரும்

தமிழ் நாட்டு அரசின் புதிய தமிழ் யுனிகோட் தொடர்பான வலைத்தளத்திலிருந்துஇ சீல
கருவிகளை இறக்கி நிறுவி பயன்படுத்தி பார்த்தபோது உண்மையாகவே நன்றாக இருந்தது.

எல்லா மென்பொருட்களிலும் அது மிக சிறப்பாக வேலை செய்தது.

இது பற்றி விக்கிபீடியாவில் கட்டுரை ஒன்றையும்
ஆக்கியிருந்தேன்.

உமர், நீங்களும் ஒருங்குறி குழுவினரும் இந்த விஷயம் பற்றி எந்த நிலைப்பாட்டில்
இருக்கிறீர்கள் என தெரிந்துகொள்ள ஆசை.


உமர்:சென்ற ஐந்தாறு வருடங்களில் நம் தமிழ் குழுமங்களில் கட்டுரைகள் செயலிகள் என பல
எழுதி நம் அன்பர்களுக்கு யுனிகோடுடன் உறவு ஏற்படுத்தி வைப்பதற்குள் போதும்
போதும் என்றாகிவிட்டது. ஒருவழியாக வலைப் பதிவு வந்து பெரும்பாலோரை வலைத்துப்
போட்டுவிட்டது. இப்போது கிட்டத்தட்ட எல்லோருமே யுனிகோடைத்தொட்டுப் பார்க்கத்
தொட்ங்கிவிட்டார்கள் எனலாம். நண்பர்கள் பலரிடமிருந்து வரும் அஞ்சல்களே இதை
உறுதிப்படுத்துகின்றன. இப்போது போதாக் குறைக்கு இது என்னடா புதுப் பாட்டு(TUNE)
என்று சிலர் புருவத்தை உயர்த்துவதும் தெரிகிறது.

தொடக்கத்தில் யுனிகோடைப் பற்றிச் சொல்லும்போது "புதிதாக இருக்கிறதே,
பார்க்கலாம்" என்று ஏற்றுக் கொண்டனர் சிலர். "கையாள்வதில் சிக்கல்
இருக்கும்போலிருக்கிறதே" என்று ஒதுங்கிக் கொண்டவர்கள் சிலர். காரணமே இல்லாமல்
வேண்டாம் இந்தப் பூச்சாண்டி என்று தூர ஓடிவர்கள் பலர். சில வலுவான காரணங்களோடு
போர்க்கொடி தூக்கியவர்கள் வெகு சிலர். அந்த வரிசையில் இன்றும் முந்தியிருப்பவர்
ஐயா இராம. கி. அவர்கள்.

இந்த நிலையில் நம்மவருக்கே உரித்தான வாழ்க, ஒழிக கோஷம் இதிலும் சேர்ந்து
கொண்டது. யுனிகோடில் சிக்கல் இருக்கிறது எனவும் இல்லை எனவும் வாதிட்டுக்
கொண்டிருக்கும் வேளையில் "முன்னரே காலத்தை நாம் தொலைத்து, தும்பை விட்டு வாலைப்
பிடித்திருக்கிறோமோ" என்ற உணர்வு எழத்தொடங்கிவிட்டது. இதை அவ்வப்போது எழுதியும்
இருக்கிறேன்.

தமிழை யுனிகோடிற்கு கொண்டுவரும் பணியில் நம்மவரின் பங்கு என்ன இருந்தது என்றே
தெரியவில்லை. இதற்கு இன்னொரு தலையாய காரணம் "இந்திய மொழிகள்" என்ற கூட்டிற்குள்
தமிழை (பிறவற்றையும்தான்) அடைத்து வைத்ததுதான். இந்த வட்டத்திற்குள் தமிழ்
கணிமையைக் கொண்டுவர வேண்டிய கட்டயாத்தின் விளைவாகவும் இந்த முழுமையின்மை
இருக்கலாம்.

இதன் காரணமாக அதைத் தொடவே மாட்டேன் கையை இழுத்துக் கொள்வதும் சரியில்லை
என்பதையும் அவ்வப்போது சொல்லிருக்கிறேன். ஊரோடு ஒத்துப்போய் கருத்தைப் பதிய
வைப்பதில் பலன் ஏற்படும் என்று நம்பினேன். பலன் ஏற்பட்டிருக்கிறது என்பதும்
மெல்லத் தெரிகிறது. பிறரைப் படிக்க வைக்கவாவது இப்போதுள்ள யுனிகோடில் எழுதுவது
தேவையாகிறது.

'சரி, இப்போது இருக்கும் யுனிகோடை வைத்து எதுவும் செய்ய இயலாதா?' என்று
கேட்டால் இயலும். ஆனால் அதற்கு தரும் விலை கூடுதலாக இருக்கும். அதாவது கணினி
தன் திறனைக் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மென்பொருளும் தான் கையாள
வேண்டிய சுமைகளுனூடே இப்போதுள்ள தமிழைக் கையளவும் திறனைச் செலவழிக்க
வேண்டியிருக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? தமிழிலுள்ள எல்லா
எழுத்துக்களுக்கும் ஒவ்வொரு இடத்தைத் தந்துவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடும்.
இதை வேறு விதமாகச் சொல்லப்போனால் "அஸ்திவாரத்தை" ஒழுங்காய்ப் போட்டுவிட்டால்
பின்னர் ஓட்டை உடைசலுக்கு செலவாகாதல்லவா? இதில் போதாக்குறைக்கு இலக்கணத்தை வேறு
நுழைத்து சிலர் குழம்புகின்றனர். கணினிக்கு என்ன இலக்கணம் தெரியும்? நாம்
சொலவதுதான் அதற்கு இலக்கணம். நம் பயன்பாட்டிற்கு ஒத்தமாதிரி இயற்கையான அகர
வரிசையுடன் அமைந்துவிட்டால் ஆயிற்று - அவ்வளவுதான்.

இந்த "இட ஒதுக்கல்" (இட ஒதுக்கல் எங்குதான் வந்து முட்டவில்லை? :-) )
சிக்கல்தான் இப்போது. இதற்கு வழி கிட்டுமா? தெரியாது - கிட்டத்ததட்ட முடியாது
என்பதுதான் இன்றைய நிலை. நம்மால் இப்போது ஆசைப் படத்தான் முடியும்
போலிருக்கிறது. இனி மாற்றம் என்பதற்கு வழியில்லை என்று உறுதியாக நம்பும் சிலர்
ஏனிந்த தேவையில்லாத வேலை என்று முனுமுனுப்பதும் கேட்கிறது.

போதுமான இடங்களுடன் மாற்றம் வருமா வாராதா என்பது ஒருபுறமிருக்கட்டும். குறைந்த
பட்சம் நம்மவர்கள் தம்முள்ளே இருக்கும் மாயமாளங்களை ஒதுக்கி, சற்று அகல, ஆழப்
பார்த்தாலே போதும். நன்மை பயக்கும் விடயங்கள் கண்ணில் படும்.

அன்புடன்,
உமர்
================================================
முழு உரையாடலையும் வாசிக்க இங்கு செல்லவும்

Friday, June 25, 2010

அதிரை (இயக்கச்) செய்திகள்

1) மணமகன் தேவை2) கல்வி உதவி

நன்றி: மக்கள் உரிமை (ஜூன் 25-ஜூலை-1, 2010) வார இதழ்

கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி திறப்பு விழா

கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி திறப்பு விழா
நாள்:02-07-2010 .வெள்ளிகிழமை நேரம்:காலை 9.௦௦.மணி
தலைமை:மௌலவிஅல்ஹாஜ்.L.M.S.முகம்மது அப்துல்காதர் ஆலிம் அவர்கள், வக்பு சம்பந்தமான அறிவிப்பு/துஆ
மெளலான மௌலவி அல்ஹாஜ்:K.T.முகம்மதுகுட்டி ஹழரத்அவர்கள்.
முதல்வர்,அல்மதரஸாதுர் ரஹ்மானியாஅரபிக் கல்லூரி.
வாழ்த்துரை:
அல்ஹாஜ் K.M.காதர் முகைதீன் அவர்கள் EX.MP
தலைவர்.இந்திய யுனியன் முஸ்லிம் லிக் .
அல்ஹாஜ் M.அப்துல் ரஹ்மான்.MA.MP
வேலூர் பாராளமன்ற தொகுதி.
அல்ஹாஜ் J.M.ஆருண்.MP
தேனி பாராளமன்ற தொகுதி.
சிறப்புரை:
மெளலான மௌலவி அல்ஹாஜ்.A.முகம்மது ஷபீர் அலி ஹழரத் அவர்கள்,
நிறுவனர்/முதல்வர் ஜாமீஆ மதினத்துல் இல்மு.சென்னை.
மெளலான மௌலவி P.A.ஹாஜா முகைதீன்அவர்கள்,
முதல்வர்.உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி,மேலப்பாளையம்.
இங்ஙனம்.
கடற்கரை ஜும்ஆபள்ளி திறப்பு விழா கமிட்டியாளர்கள்.
கடற்கரை தெரு முஹல்லா வாசிகள்,அதிரை.

Thursday, June 24, 2010

உமர் தம்பி அரங்கம்

தமிழ்கணிஞர் 'தேனீ' உமர்தம்பிக்கு அங்கீகாரம் - இணைய மாநாட்டில் விருது

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் உலக இணையத் தமிழ் மாநாட்டில் அதிரையின் அருந்தவப் புதல்களில் ஒருவரான மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் தமிழ் கணிமைத் தொண்டை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அமைச்சர் திரு.ஆ.ராசா மற்றும் தமிழறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்கள் முன்னிலையில் சிங்கப்பூர் அமைச்சர் திரு.ஈஸ்வரன் அவர்கள், உமர்தம்பியின் மூத்த சகோதரர் ஜனாப் அப்துல் காதர் காக்கா அவர்களிடம் உமர்தம்பி அவர்களுக்கான அங்கீகார விருதை வழங்க உள்ளார்.

பரிசளிப்பின்போது உமர்தம்பி அவர்களின் மகன் சகோ.உ.மொய்னுத்தீன் மற்றும் சகோதரர்களும் கலந்து கொள்கின்றனர்.

இணையத் தமிழ் மாநாட்டு அரங்கில் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் பெயர் தாங்கிய பதாகைகளுடன் உமர்தம்பி அரங்கு காண்போரை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளதாக மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நமதூர் தமிழூற்று மாஹிர் தெரிவித்தார்.

மேலதிக புகைப்படங்களும்,மாநாட்டுத் துளிகளும் விரைவில் அதிரை எக்ஸ்ப்ரஸில் வெளியாகும்.

உமர்தம்பி அவர்களின் சர்வதமிழர் மற்றும் அரசு அங்கீகாரத்திற்காகக் குரலெழுப்பிய, பதிவிட்ட, துஆச் செய்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் அதிரை மக்களின் சார்பில் அதிரை எக்ஸ்ப்ரஸ் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள் - தினமலரின் இருட்டடிப்பு

தினமலர்.காமில் செம்மொழி மாநாட்டுக்காக பிரத்யேக இணையபக்கம் திறந்து, அதில் கோவை-உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த செய்திகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் தொகுத்து வழங்குகிறார்கள். நேற்று வெளியான "கம்யூட்டரும் தமிழும்" என்ற கட்டுரையில் தமிழை கணிமைப்படுத்துவதற்குப் பாடுபட்டத் தமிழர்கள் குறித்த தகவல்களில் அதிரை உமர் தம்பி பற்றிய ஒரு குறிப்புகூட இல்லை!

இதுகுறித்து தினமலர் ஆசிரியருக்கு coordinator@dinamalar.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தும் இதுவரை வெளியிடவில்லை. கட்டுரையாக வெளியிடாவிட்டாலும் சம்பந்தப்பட்ட கட்டுரையில் பின்னூட்டமாக அல்லது ஆசிரியர் பின்குறிப்பாக உமர்தம்பி குறித்த தகவலை இணைத்திருக்கலாம். தினமலரிடம் ஊடக தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. அதுவும் முஸ்லிம்கள் குறித்த விசயத்தில் தினமலரின் நேர்மை உலகறிந்தது என்பதால் இனியும் எதிர்பார்க்க முடியாது.

ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டுமே கணினியைப் பயன்படுத்தலாம் என்ற நிலைமாறி கணிப்பொறி,கணினி என தமிழாக்கப்பட்டு உலகத் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் இணையத் தமிழ் மாநாட்டு அரங்கிற்கு "உமர்தம்பி" அரங்கு என்று பெயரிட்டுள்ளனர். தமிழ் கணிமைக்குப் பங்களித்தவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பெயரால் விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாதங்களாக வலைப்பூ முதல் இணையம், சஞ்சிகை, வானொலி என அனைத்து தரப்பிலும் உலகத் தமிழர்களின் கோரிக்கைக்குரல் ஒலிப்பது தினமலரு மட்டும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

உமர்தம்பி அவர்களின் தமிழ்சேவையை இருட்டடிப்பு செய்ததோடு மட்டுமின்றி, தமிழ்கணிமை வளர்ச்சியில் தினமலர் நிறுனரையும் சந்தடிச்சாக்கில் குறிப்பிட்டு உள்ளது நகைப்பிற்குறியது. தினமலர் ஒருங்குறிக்குமாறி ஓரிரு வருடங்களே ஆகின்றன. மேலும், அது பயன் படுத்திவரும் "லதா" ஒருங்குறி எழுத்துரு சிலவருடங்களுக்கு முன்புதான் செம்மை படுத்தப்பட்டது. ஆனால் உமர்தம்பி அவர்களின் தேனீ வகை இயங்கு எழுத்துருக்கள் 2003 முதலே இணையத்தில் உலா வருகின்றன!

தமிழுக்கு தானமளித்த உமர்தம்பிக்கு தினமலரின் அங்கீகாரம் தேவையில்லை என்றாலும் உண்மையிலேயே தமிழர்கள்மீதும் தமிழ்மீதும் பற்று இருந்தால், தமிழை கணினியில் புகுத்துவதில் முன்னோட்டியாயிருந்த தமிழ் முஸ்லிம்கள் குறித்த தகவலையும் வெளியிட்டிருக்கலாம்.

தினமலர் வகையறாக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக நீசமொழியாக இருந்துவந்த தமிழை வைத்து பிழைப்பு நடக்கும் என்றால் மட்டுமே 'தமிழ்பற்று' தலைதூக்கும். தமிழ் கணிமை வரலாற்றைச் சொல்லும் கட்டுரையின் தலைப்புக்கு "கம்யூட்டரும் தமிழும்"! என்று பெயரிட்டிருப்பதிலிருந்தே தினமலரின் செம்மொழித் தமிழ்பற்று பல்லிளிக்கிறது!

(பி.கு:தினமலருக்கு அனுப்பிய மடல் இன்று மாலைக்குள் வெளியிடப்படாத பட்சத்தில் எமது வலைப்பூவில் வெளியிடப்படும்)

அன்புடன்,
அதிரைக்காரன்

Wednesday, June 23, 2010

தமுமுக தலைமைக்கு உமர்தம்பியின் குடும்பத்தினர் அனுப்பிய நன்றிக்கடிதம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் நல் அருளால் தாங்கள் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவரும் நலம் என்று நம்புகிறோம். இங்கு நாங்கள் எங்கள் குடும்பத்தவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியால் நலமாக உள்ளோம்.

எல்லாம் வல்ல இறைவனின் நாட்டப்படி, அதிரை உமர் தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அவர்கள் பெயரி ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ள செய்தி வெளிவந்ததும் எல்லையற்ற மகிழ்ச்சி, அல்ஹம்துலில்லாஹ். இன்னும் நல்ல செய்திகள் வரும் என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது.

இத்தருணத்தில், உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற எங்களுடைய முதல் வேண்டுகோளை தமுமுக தலைவரான தங்களிடம் முதல் முதலில் வைத்தோம், சிறிய காலதாமதமில்லாமல் உடனே எங்களுக்கு கணிவான, அன்பான பதில் அனுப்பியதேடு இல்லாமல் முதல்வர் அவர்களுக்கும் கடிதம் எழுதி இவ்விசையத்தை தமிழக முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்து சென்றதை எங்களால் நிச்சயமாக மறக்க முடியாது. உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக உலகத்தில் அனைத்து திசைகளில் இருந்து குரல் ஒரலித்தது, தங்களின் பங்கு மிக முக்கியமானது என்று சொன்னால் மிகையில்லை.

ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் நன்றி மடல் அனுப்பிய போது, உங்கள் பதிலில், ‘சமுதாய கடமையை தான் செய்கிறோம்’ என்று சொல்லியிருந்தீர்கள், இப்பதில் உண்மையில் எங்களை மிகவும் நேகிழ வைத்தது. உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், தமுமுக அனைத்து நிர்வாகிகளுக்காவும், தமுமுக அனைத்து உறுப்பினர்களுக்காகவும், மமக நிர்வாகிகள் உறுப்பினர்களுக்காவும், அனைத்து தமிழ் வலைப்பூ சகோதரர் சகோதரிகளுக்காவும் நாங்கள் நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

உங்களின் சமுதாயப்பணி தொடர வேண்டும், சமுதாய முன்னேற்றத்திற்காக உங்களின் அறவழி போராட்டங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும், அல்லாஹ் அதற்கு துணையிருப்பான்.

அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் வாழ்த்து மரணிக்க செய்வானாக.

மீண்டும் ஒரு மடலில் உங்களிடம் உரையாடுகிறேன்.

தங்களின் உடல் நலனை பேணிக்கொள்ளுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

-தாஜூதீன்

தகவல்: அஜ்வா நெய்னா

Monday, June 21, 2010

அதிராம்பட்டினத்தி்ல் விரைவில் SIO கிளை

இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனும் Students Islamic Organization (SIO), இஸ்லாமியப் பேரியக்கமான 'ஜமாஅத்தெ இஸ்லாமி'யின் மாணவர் அணியாகும். கடந்த 1982 அக்டோபர் 19 ஆம் நாளன்று எஸ்.ஐ.ஓ. தொடக்கம் பெற்றது. மாணவர்களின் கல்வி முன்னேற்றமும் நல்லொழுக்கப் பயிற்சியும் இதன் தலையாய நோக்கங்களாகும்.

விலை மதிக்க முடியாத சொத்துகளான இளைஞர்கள், நம் சமுதாய முத்துகளாவர். இன்றைய இளைஞர்கள் வகுத்துக்கொள்ளும் பாதையில்தான் நாளைய உலகம் நடைபோடப் போகிறது. அவ்விளைய சமுதாயத்திடம் தன்னம்பிக்கை, மன உறுதி, துணிவு போன்ற தன்மைகளை உரிய முறையில் உருவாக்கினால், சமுதாய மறுமலர்ச்சி தோன்றுவது திண்ணம் என்ற முனைப்பில், முன்னேற்ற வழியில் இளைஞர்களை முடுக்கி விடுவதே எஸ்.ஐ.ஓ-வின் பணியாகும்.

கட்டற்றுப் போகும் காளையரை, அவர்தம் கடமைகளை உணர்த்தி, கல்வி மேம்பாட்டால் அவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றும் பயிற்சிகளை அவ்வப்போது இஸ்லாமிய மாணவரணி அளித்துவருகின்றது. இன்னும் -
  • மாணவர்களிடையே தூய இஸ்லாத்தை அறிமுகம் செய்து, அவர்களை இஸ்லாமிய அச்சில் வார்த்தெடுப்பது,
  • தீமைகளுக்கு எதிராகப் போராடி, நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டச் செய்வது,
  • அவர்களிடம் ஆழ்ந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிப்படச் செய்வது,
  • நாட்டின் இதர இளைஞர் அமைப்புகளிடையே தம்மை அறிமுகம் செய்ய வைப்பது,
  போன்ற தேவைகளையும் தன்னகத்தே கொண்டு, சிறப்பான சேவைகளைச் செய்து வருகின்றது எஸ்.ஐ.ஓ.
இதுவரை எஸ்.ஐ.ஓ. புரிந்துள்ள சேவைகளுள் சில:
 • ஆபாச எதிர்ப்புகளை நாடு முழுவதிலும் நடத்தி, இளைஞர்களிடையே பெருகிவரும் வக்கிர உணர்ச்சிகளை மட்டுப் படுத்தியது.
 • இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு எதிரான சதித் திட்டங்களை முறியடிக்க, நாடு தழுவிய ஷரீஅத் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கியது.
 • 'ஒற்றுமையை நோக்கி', 'நன்மையின் பக்கம் முன்னேறுங்கள்' போன்ற குறிக்கோள்களை முன்வைத்து, இளைஞர் மாநாடுகளை நடத்தியது.
 • கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தச் சொற்பொழிவுகள், பயிற்சி வகுப்புகள், டியூஷன் செண்டர்கள் ஆகியவை நடத்தியது.
 • மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் ஏழை எளிய மாணவ மாணவியர்க்குக் கல்வி உதவித் தொகை வழங்க ஆவன செய்தது.
 • படிப்பில் முன்னிலை வகிக்கும் முஸ்லிம் மாணவ மாணவியர்க்கு விருதுகளும் பரிசுகளும் ஊக்கத் தொகைகளும் வழங்கியது.
இளைய சமுதாயத்திற்கான இத்தகைய அமைப்பின் தேவையை உணர்ந்து, இன்ஷா அல்லாஹ், அதிராம்பட்டினத்திலும் விரைவில் எஸ்.ஐ.ஓ வின் கிளை படரவிருக்கின்றது. ஆர்வமுள்ள இளைஞர்களும் மாணவச் செல்வர்களும் தம் பெயர்களைப் பதிவு செய்து, நன்மையிலும் இறையச்சத்திலும் பங்கு கொண்டு, நற்பயன் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?

FATHER OF TAMIL COMPUTING - மும்பை ஆங்கில இணைய தளம் புகழாரம்

தமிழ்கணிமைக் கொடையாளர் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் தமிழ்ச்சேவை குறித்த பிரச்சாரம் வலைப்பூக்களில் தொடங்கி தமிழ் இணையதளம்,வானொலி, நாளிதழ் என விரிந்து தமிழிணைய மாநாட்டுக் குழுவினர்வரை சென்றடைந்து உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ் வலைப்பதிவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை 'தேனீ' உமர்தம்பி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உலகெங்குமுள்ள தமிழார்வலர்கள் மட்டுமல்லாது மும்பையை தலமாகக் கொண்டு இயங்கும் ஆங்கில இணைய தளத்திலும் 'தேனீ' உமர்தம்பி அவர்களுக்கு அரசு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டுமென்று பேசிய தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பேட்டியை வெளியிட்டுள்ளனர்.

அதில் மர்ஹூம் உமர்தம்பி அவர்களை "FATHER OF TAMIL COMPUTING" என்று புகழாரம் சூட்டியுள்ளதை. (மாஷா அல்லாஹ்!) அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறோம்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுகே!

Sunday, June 20, 2010

கணினியில் "யுனிகோட்' தமிழ் எழுத்துருவை உருவாக்கியவருக்கு மதிப்பளிக்க வேண்டும் - எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்

கோவை, ஜூன் 19: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கணினியில் "யுனிகோட்' (ஒருங்குறி) தமிழ் எழுத்துகளை உருவாக்கிய தஞ்சையைச் சேர்ந்த உமர் தம்பியை கெüரவிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் கூறினார்.÷இது குறித்து கோவையில் அவர் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியது:

சில ஆண்டுகளுக்கு முன்புவரை கணினியில் ஆங்கிலம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தமிழ் மொழியை இணையத்தில் படிக்க முடியாதபடி பலவிதமான தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் அச் சமயத்தில் தமிழ் மீது தீராத பற்றுக் கொண்ட தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த உமர் தம்பி,அனைத்துக் கணினிகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற பொதுவான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினார். இதற்கு (ஒருங்குறி) எழுத்துரு என்று பெயர். இப்போது, அந்த எழுத்துகள்தான் இணையதளத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான தமிழ் இணையதளங்கள் "யுனிகோட்' எழுத்துருக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.÷இணையதளங்கள் எப்படி எல்லாம் தமிழை வளர்க்கின்றன என்பது குறித்து விவாதிப்பதற்காக உலகத் தமிழ்ச் செம்மொழி இணைய மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் கணினித் தமிழை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டுக்கும், கணினித் தமிழ் வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குவது "யுனிகோட்' தமிழ் எழுத்துருக்கள்தான்.

இந்த எழுத்துருவை உருவாக்கிய தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உமர் தம்பி நினைத்திருந்தால், தனது கண்டுபிடிப்பை வணிகரீதியாக பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால், அவர் அவ்விதம் செய்யாமல், தமிழ் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ் யுனிகோட் தொழில்நுட்பத்தை சமுதாயத்துக்கு இலவசமாக வழங்கினார். கணினி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட அவர் தற்போது உயிருடன் இல்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவருக்கு உரிய கெüரவம் செய்யப்பட வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம்.

செம்மொழி தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.


தகவல்: சகோ.அஜ்வா நெய்னா, நன்றி: தினமணி

இலண்டன் பள்ளியில் வகுப்பெடுத்த பேரா.அப்துல்லாஹ்!


மனதை இயக்கு வாழ்வை உயர்த்து:
இஸ்லாத்தை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட முனைவர், பேராசியர் பெரியார் தாசன் என்று தமிழ் கூறும் நல்லுகம் அறிந்த அப்துல்லாஹ் அவர்கள் உலகம் முழுவதும் பயணம் மேற் கொண்டு தான் இஸ்லாம் ஏற்றவிதத்தையும் உளவியல் சந்தேகங்களையும் பேசிவருகிறார்.இந்நிலையில் இலண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வந்துள்ளார்.அதன் ஒரு பகுதியாக இலண்டன் ஈஸ்ட்ஹாம் இஸ்லாமிய அழைப்பு மையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு உளவியல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.பின்னர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களின் வினாக்களுக்கு பதிளித்தார்.


ஆண்களும் பொண்களுமாக சுமார் 400பேர்களுக்கு மேல் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சிக்கு சென்னை தோசை நிர்வாக இயக்குனரும் இலண்டன் தமிழ் சங்க முன்னாள் தலைவருமான சி.அசோகன் தலைமை தாங்கி சிறப்பித்தார்.
நன்றி:அதிரைபோஸ்ட்.

Saturday, June 19, 2010

மர்ஹூம் உமர்தம்பி தெரு

தமிழ் கணிமைக் கொடையாளர் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் தானியங்கி ஒருங்குறி எழுத்துறுவால் பயனடைந்தவர்கள் தத்தம் நன்றிதனை வெவ்வேறு வகைகளில் செலுத்தி வருகின்றனர். காலத்தினால் செய்நன்றியறிவதில் பேறு பெற்ற தமிழர்களின் நன்றிக்கடன் மிகவும் போற்றத்தகுந்ததாக உள்ளது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடக்கும் தமிழ் இணைய மாநாட்டை நடத்தும் உத்தமம் குழுமம், தனது மூன்றுநாட்கள் கருத்தரங்கிற்கு 'உமர்தம்பி அரங்கு' இரண்டாம் முறையாகப் பெயரிட்டிருப்பது உலகெங்குமுள்ள தமிழார்வலர்களால் பெரிதும் சிலாகித்துப் பேசப்படுகிறது.

அதேபோல், சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய 'மணற்கேணி' கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளில் "தேனீ உமர்தம்பி விருது" என்று பெயரிட்டிருப்பதும் மற்றொரு வகையிலான சர்வதேச தமிழர்களின் அங்கீகாரம் என்றால் மிகையில்லை.

இப்படியாக, உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் சூழலில் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் தமிழ் கணிமைத் தொண்டு, அகிலம் முழுவதும் உள்ள தமிழர்களால் மத, இன மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு சகதமிழனின் சாதனை என்றளவில் ஒருமித்த குரலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், நமதூர் தமிழ் கணிமைக் கொடையாளருக்கு அதிரையிலும் ஓர் நிரந்தர அங்கீகாரம் இருப்பது அவசியமாகும். தான் பிறந்த மண்ணுக்கு தன்னால் இயன்ற நற்பேறை எவ்வித தன்னல நோக்கமுமின்றி வழங்கிச் சென்றதோடு, உலகெங்கும் வியாபித்து இருக்கும் தமிழர்களிடம் அதிரை மக்களின் பாரம்பரிய கொடைத்தன்மை அறியப்படக்காரணமாக இருந்த மர்ஹூம் உமர்தம்பிஅவர்கள் வாழ்ந்த நடுத்தெரு பகுதிக்கு "உமர்தம்பி தெரு" என்று பெயர் மாற்றம் செய்வது உள்ளூர் அளவிலான உயர்மட்ட அங்கீகாரமாக இருக்கும்.

இதைச் செய்வதற்கு நமதூர் பஞ்சாயத்து மன்றத்தில் சிறப்புத் தீர்மானம் ஒன்றை இயற்றினாலே போதும். நமக்கு நாமே திட்டத்திற்கு தங்கள் பங்கையளித்துள்ள உமர் தம்பி வாழ்ந்து ,நடமாடிய பகுதிக்கு 'உமர்தம்பி தெரு' என்று பெயரிடுவது மிகவும் பொருத்தமானது என்பதொடு,இவ்வாரம் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் சூழலில் அரசு மட்டத்தில் கவனயீர்ப்பு நடவடிக்கையாகவுமிருக்கும் என்று நம்புகிறேன்.

இதற்கான பொது கருத்துருவாக்கத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் மூலம் உருவாக்கி, உள்ளூரிலுள்ளவர்களும், முஹல்லா சங்கங்களும் கோரிகையாக வைத்து நமதூர் பஞ்சாயத்து மன்றத்திற்கு பரிந்துரைக்க அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள சார்பில் வேண்டுகிறேன்.

Friday, June 18, 2010

உமர்தம்பி அவர்கள் பெயரால் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி வழங்கிய விருது

தமிழ்கணிமைக் கொடையாளர் மர்ஹூம் உமர் தம்பி அவர்களுக்கு அன்னாரின் 'தேனீ'  ஒருங்குறி எழுத்துறுக்களைப் பயன்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களுடன் பிரபலமான தமிழ் இணைய தளங்களும் தங்கள் நன்றியைப் பல்வேறு வகையில் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் சிங்கப்பூரிலிருந்து இயங்கி வரும் தமிழ்வெளி திரட்டி மற்றும் தமிழ் வலைப்பதிவர்கள் இணைந்து "மணற்கேணி 2009" என்ற பெயரில் தமிழ் வலைப்பதிவுகளுக்கு வழங்கியுள்ளனர். அதில் தேனீ உமர்தம்பி பெயரிலும் ஓர் விருந்து வழங்கி,மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் தமிழ்தொண்டை நினைவு கூர்ந்துள்ளனர்.இந்நிகழ்ச்சி குறித்து மேலதிகமாக அறிந்துகொள்ள இங்கும். விருது பெற்ற கட்டுரையைக் காண இங்கும் செல்லவும்.

உமர்தம்பி அவர்கள் பெயரால் விருது வழங்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் விருது பெற்றவர்களை அதிரை மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இரயில் போராட்டம் - முக்கிய அறிவிப்பு

வெளியீடு எண்:2
முக்கிய அறிவிப்பு
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

நமது ஊரைத்தொடர்ந்து அறந்தாங்கி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களின் குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்க கடந்த 10,15 வருடங்களாக பல துறைகளிலும் கோரிக்கை மனுக்களை கொடுத்தும் பலன் என்னவோ........

............பனை மரத்து நிழலானதேதான் மிச்சம்........

ஆகவே அவசர - அவசியமாக ஆளுவோரையும், அதிகாரிகளையும் சந்தித்த வேளையில், நல்ல தருணம் எதிர்வருவதால் தயவு செய்துபலதரப்பட்ட பகுதி வாழ்பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் முன்னின்று ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுக்க வேண்டிய அரிய சூழ்நிலை கனிந்துள்ளது.

எனவே, வரும் 29.06.2010 அன்று அனைவரும் கலந்து கொள்ள வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிராம்பட்டினம் சமூக நலப்பேரவை
அதிராம்பட்டினம்

குறிப்பு: முஹல்லா வாரியாகப் பொறுப்பாளர்களை தெரிந்தெடுக்க வேணுமாய் குறிப்பு அனுப்பியுள்ளோம். ஆகவே, விரைவில் தெரிந்து எடுக்க வேண்டியது.

தேதி 29-06-2010 அதிராம்பட்டினம்

Thursday, June 17, 2010

மற்றவர்களை அறியும் அறிவு


உலகக்கல்விகளில் உயர்ந்தவற்றுள் நான் அதிகம் ஆச்சர்யப்படுவது "மற்றவர்களை அறியும் அறிவு" [Character Study] இது பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னே முஸ்லிம்கள் எனொக்ராம்[ENOGRAM] என்ற ஒரு சூப்பர் சமாச்சாரத்தை உலகுக்கு தந்து இருக்கிறார்கள்.

வழக்கம்போல் முஸ்லிகள் ஒற்றுமை இல்லாததால் இந்த உயர்கல்வியை மங்கோலியாவில் கோட்டைவிட்டு

[ அல்லது மற்றவர்களால் 'லவட்டப்பட்டு'] சமீபத்திய நூற்றாண்டில் க்ருட்ஜேவ் [GRUDJEVE] என்ற ரஷ்ய ஞானியால் அறிமுகம் ஆகியிருக்கிறது.

.

கயவனை அறியாமல் நடப்பதும் ஒருவித தூக்கநிலைதான்.

மனத்தின் செயல்பாடு அறிந்தவற்றிலிருந்து இயங்கும்.

சமயங்களில் நல்ல நண்பனாக பழககூடியவர்கள் கூட "ரூம் மேட்' ஆக முடியாது.

மாறிவரும் காலத்தை மனது ஏற்றுக்கொள்வதில்லை

இவர்களால் எப்படித்தான் இப்படி நடக்க / பேச முடிகிறதோ தெரியவில்லை. சிலரின் வேடிக்கையான நடத்தையை இங்கு பார்க்கலாம்;

1. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர் [மூன்றாமவர்] இடையில் பேச முற்படும்போது “Excuse Me” சொல்வதெல்லாம் ஏதோ தேசக்குற்றம் மாதிரி யாரும் செய்வதில்லை.

2. பெண்கள் இருக்கும் இடத்தில் சத்தமாக பேசுவது [ இவர் இருக்கிறார் என தெரியனுமாம் ] ஆனால் இப்போது உள்ள பெண்களால் இவன் ஒரு காமெடிபீஸா அல்லது வெவரமான பார்ட்டியா என இவன் போட்டிருக்கும் உடுப்பை வைத்தே சொல்லிவிடமுடியும் என்பது இது போன்ற பார்ட்டிகளுக்கு தெரியாது.

3. இவர்கள் நாம் பேசி முடிக்குமுன் தீர்ப்பு சொல்லிவிடுவார்கள்; செய்தியை முழுமையாக கேட்க்கும் சர்க்யுட் இவர்களிடம் "பூசனம்" பூத்திருக்களாம்.

இளைஞர்கள் யாராவது புதிதாக தொழில் ஆரம்பிக்க கீழ்க்கண்ட வசனம் பேசுபவர்கள் பக்கதில் கூட நிற்க்கவேண்டாம்:

1. "என்னதான் எண்ணையை தேச்சிகிட்டு பெரண்டாலும் ஒட்டுற மண்ணௌதான் ஒட்டும்"

2. "தொடர்ந்தாப்லெ ஒருத்தன் பணக்காரணாக இருக்க முடியாது"

3. "பணம் ஒரு பேய்"பணம் வந்தால் வாழ்க்கையில் நிம்மதி போய்விடும்:

இதுபோன்ற பழமோழியை கண்டுபிடித்தவன் தான் கையிலே சிக்கமாட்டுக்கிறான்

மற்றும் சில கேரக்டர்கள்

1. யாரையும் முகத்துக்குமுன் புகழ்வது / அவன் போன பிறகு வைவது

2. நண்பர்களிடம் பேசும்பொது பில்கேட் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து, மெயின்ரோடு/கடைதெருவில் செலவழிக்கும் போது அனியாயத்துக்கு பம்முவது.

3. தொடர்ந்தாப்லெ பல வருசம் "விசா வருது"னு வாய்கூசாமெ பொய்சொல்றது.

4. சொல்லிவைத்தமாதிரி 3, 4 பேருக்கு ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்து எதையும் சரியான நேரத்தில் செய்யாமல் தன்னை தவிர எல்லாரையும்/எல்லாவிசயங்களையும் காரணமாக சொல்வது

5. சின்னபிள்ளைகளுக்கு கொடுக்காமல் [அல்லது பார்க்கவைத்து] தீனியை நாகரிகம் இல்லாமல் [ஒலப்பி] சாப்பிடுவது.

6. சமயங்களில் நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மிடமே பணம் வாங்கியவர்கள் கொஞ்சம் நாள் பார்க்காவிட்டால் , திடீரென்று பார்க்கும் சூழ்நிலை ஏற்படும் போது போடும் டிராமா எல்லா சீரியலையும் வென்றுவிடும்.இதே வெளிநாட்டில் சம்பாதிப்பவர்கள் பணம் பெரும்பாலும் காந்திகணக்குதான்.

தெரிந்தவர்கள் இன்னும் எழுதவும் ....இதுவும் ஒரு “மற்றவர்களை அறியும் அறிவு” தானே!!

ZAKIR HUSSAIN

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியே!

ஒசாமா பின்லேடனை யாருக்காவது தெரியுமா? தாவூத் இப்ராஹீம் குறித்து எத்தனை பேர் கேள்வி பட்டிருக்கிறீர்கள்? மசூத் அஸார் தெரியுமா?

தெரியும்! என்பது பதிலாக இல்லையெனில் நீங்கள் நாட்டு நடப்புகள் எதுவும் தெரியாதவர் என்று அர்த்தம். சரி. இவர்களெல்லாம் யாரென்று தெரியுமா? தெரியும் என்றும் முந்திரிக்கொட்டையாக அவசரப்பட்டுச் சொல்லி விடாதீர்கள்! "கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று சொல்வதே ஓரளவு பாதுகாப்பானது.

இவர்களெல்லாம் உலக அமைதிக்கும் (புரியும்படி சொல்வதெனில் அமெரிக்க நலனுக்கு), நமது தேச அமைதிக்கும் எதிரானவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளால் தேடப்பட்டு வருபவர்கள்.இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொல்லாடல் மக்கள் மனங்களில் எயிட்ஸைவிட வேகமாகப் பரவுவதற்கு முகம் கொடுத்து உதவிய முஸ்லிம் பெயர் தாங்கிய மாடலிங் பர்சனாலிடிகள்.

சரி. அவர்களுக்கு என்னவாயிற்று இப்போது? 2009 ஆம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசை, அமைதி கிலோ எத்தனை டாலர்? என்று கேட்கும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் புதிதாக புகுத்தப்பட்டிருக்கும் ஒபாமாவுக்கு வழங்கியதுபோல் இவர்களில் யாருக்கேனும் வழங்கப் போகிறார்களா என்று கேட்காதீர்கள்.

உங்கள் ஞாபக சக்திக்கு ஓர் சவால்! ஒசாமா, ஒபாமா, மசூத் அசார், தாவுத் இப்ராஹிம் இவர்களை எல்லாம் தெரியும். வாரன் ஆன்டர்சனைத் தெரியுமா? தெரியும் என்பவர்கள் கை உயர்த்துங்கள்! அட! பரவாயில்லையே ஓரளவு கைகள் உயர்ந்துள்ளன!

எதற்கு இந்த பீடிகை (பில்ட்-அப்) பின்லாடனுக்கும், தாவுத் இப்ராஹிமுக்கும், மசூத் அஸாருக்கும், வாரன் ஆன்டர்சனுக்கும் என்ன தொடர்பு? என்று சிண்டை பிய்த்துக் கொள்ளாதீர்கள். இருபத்தாறு வருடங்கள் எதையும் கண்டுகொள்ளாது காத்திருந்த உங்களின் அவசரம் புரிகிறது. இதற்கு மேலும் சோதித்தால் அணு உலை போல் உங்கள் பொறுமையும் வெடித்து விடக்கூடும்!

அணு உலை? அட! எங்கோ கேள்விப்பட்டதுபோல் உள்ளதா? மத்திய பிரதேசம் போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை அணு உலையிலிருந்து வெளியான விஷவாயுவால் பாதிக்கப்பட்டு 20,000க்கும் மேற்பட்டோர் உயிரரிழந்தும், சுமார் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.கடந்த கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கின் தீர்ப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.

ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இதனால் ஒருவகையில் நெருக்கடி என்றால், அரசியல் நடத்துவதற்கு தேசியப் பிரச்சினை எதுவும் கிடைக்காமல் கட்சி அலுவலகங்களில் ஈ விரட்டிக் கொண்டிருந்த பாஜகவும், இதை வைத்து ஆளுங்கட்சியை நெருக்குகிறது.

பிரபல 'படுகொலை மன்னன்' மோடிக்கே மனிதாபிமானம் பீறிட்டுப் பொங்கி போபால் மரணங்களுக்குக் காரணமாக முன்னாள், இன்னாள் காங்கிரஸினர் இருந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் என்றால் வழக்கின் தீவிரத்தைப் பார்த்துக் கொள்ளுங்களேன்!. (எத்தனை நாளைக்கு, தான் மட்டுமே கொலைப் பழியை சுமந்து கொண்டிருப்பார்?).

யூனியன் கார்பைட் நிறுவனத் தலைவர் வாரன் ஆன்டர்சனை அன்றைய ம.பி முதல்வர் அர்ஜூன்சிங், ரசஜிவ் காந்தி மற்றும் குடியரசுத் தலைவர் எல்லாம் அரச பாதுகாப்புடன் தப்பவிட்டதாக காங்கிரஸில் எந்தக் கோஷ்டியையும் சாராத ஒரு கோஷ்டியினர் சொல்கிறார்கள். மன்மோகன் சிங் முடிந்தவரை மென்று விழுங்கி சமாளித்துக்கொண்டுள்ளார். மாவோ தீவிரவாதிகள் எங்காவது குண்டு வைத்து மக்கள் கவனத்தை திருப்ப மாட்டார்களா என எதிர்பார்க்குமளவுக்கு காங்கிரஸின் நிலை கொஞ்சம் பரிதாபமாகத்தான் உள்ளது.

போபால் விஷவாயுக்கசிவு ஓர் விபத்துதான் என்றாலும், அதைச் செய்தவன் அமெரிக்கன் என்று தெளிவாக அறிந்த பிறகும் மாறிமாறி ஆட்சி செய்த மத்திய அரசுகளில் எவருக்கும் நினைவு திரும்பவில்லை. இதே வாரன் ஆன்டர்சன் ஓர் இந்தியராக இருந்து, அமெரிக்காவில் ஏதேனும் ஓரிடத்தில் இதுபோல் விபத்து நடந்து, தப்பி வந்திருந்தால் ஆப்கனும், ஈராக்கும் அமெரிக்காவிடமிருந்து தப்பி இருந்திருக்கும். ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிரைக் குடித்துவிட்டு அமெரிக்காவில் தலைமறைவாக இருந்த வாரன் ஆண்டர்சனை ஒப்படைக்கும்படி 'மானமுள்ள' எந்த பிரதமரும் கோரினார்களா? என்று தெரியவில்லை!

மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளை ஒப்படைக்கச் சொல்லி பாகிஸ்தான் எல்லையில் ராணுவ துருப்புக்களை நிறுத்தி பூச்சாண்டி காட்டிய வாஜ்பாய் வகையறாக்களுக்கும்கூட, அமெரிக்காவையும் நிர்ப்பந்திக்க வக்கின்றியே தேசபக்தியைக் காட்டினர்

வாரன் ஆன்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா பின்லேடனை ஆப்கனிடம் ஒப்படைக்கும்படி மிரட்டவும், போர் தொடுக்கவும் உரிமையில்லை என்று எச்சரித்திருக்க வேண்டாம், வெறும் கருத்தையாவது சொல்லியிருக்கலாம்! ஆனால் வாய் தவறியும் சொல்லவில்லை. எங்கே போனது கூட்டு மனசாட்சி?

20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட வழக்கிற்கு தீர்ப்புவர 26 ஆண்டுகளாகின. வெறும் 3000 முஸ்லிம்கள் கொல்லப்படக் காரணமான டிசம்பர்-6 கறுப்பு தின வழக்குகளில் தீர்ப்புக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியாது! சட்டம் அனைவருக்கும் சமம் என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காயாக இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தைக் கையிலெடுக்கும் முன்பாக விரைது நீதி வழங்கப்பட வேண்டும்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியே!

அதிரை எக்ஸ்ப்ரஸின் பின்னூட்ட மட்டுறுத்தல் குறித்த விளக்கம்

எழுத்தார்வம் மிக்க நமதூர் சகோதர/சகோதரிகளை இனங்கண்டு அவர்களைப் பொதுவான கருத்துகளில் ஒருக்கிணைத்து, நமதூரில் நிலவும் எல்லாருக்கும் பொதுவான பிரச்சினைகளில் கலந்துரையாட வைத்து, அவற்றுக்குத் தீர்வு காணும் தலையாய நோக்கத்தில் அதிரை எக்ஸ்ப்ரஸ் உருவாக்கப்பட்டது.

எங்களின் நோக்கம் ஊர்நலன் சார்ந்தது. இதில் பங்களிப்பவர்கள் அனைவரும் நமதூரின் நலன் விரும்பி ஒன்றிணைந்தவர்கள் என்று நம்புகிறோம். இதன் பங்களிப்பாளர்களில் சிலர், அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப அதிரை எக்ஸ்ப்ரஸைப் பயன்படுத்திக் கொண்டனர். மேலும் சிலர் மனம் விட்டுக் கலந்துரையாடும் திறந்தவெளி தளமாக நம்பியும், தங்கள் எழுத்தாற்றலுக்குத் தீனி போடும் திண்ணையாகவும் அதிரை எக்ஸ்ப்ரஸைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அவ்வகையில்தான் இணையத்தில் ஆங்காங்கு எழுதப்பட்டிருக்கும் அதிரைவாசிகளின் பதிவுகளை அடையாளம் கண்டு முகப்புப் பக்கத்தில் முதல்மரியாதை செய்து பலரும் அறிந்து கொள்ளவும் வழிசெய்தோம். இப்படிச் செய்வதன்மூலம் புதிய பதிவர்களுக்கு ஆர்வமும் தொடர்ந்து எழுதுவதன் மூலம் பண்படும் எழுத்தாற்றலும் அவற்றுக்கு அதிரைவாசிகளின் ஊக்கமும் கிடைக்கும் என்ற நல்லெண்ணமே தவிர வேறில்லை என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அதிரைவாசிகளுக்கு ஒரு வரியிலேனும் செய்திகள் கிடைக்க வேண்டுமே என்ற நோக்கில்தான் அரட்டை அரங்கம் என்ற ஒரு பகுதியை நிறுவினோம். பல நல்லகருத்துகள், இணையத் தொடுப்புகள், ஒருவரிச் செய்திகள் என்று நன்மைகள் கிடைத்த போதிலும் துர்க்குணம் கொண்ட சிலர் அவதூறு பரப்பவும் தனிநபர் தாக்குதலுக்கும் அதை உபயோகித்ததால் கனத்த நெஞ்சுடன் அப்பகுதியை நீக்கினோம்.

பின்னூட்டங்களில் SPAM எனும் எரிதங்களும், ஆபாச விளம்பரங்களும் வந்ததால் சொல் சரிபார்ப்பு எனும் WORD VERIFICATION தடுப்புடன் பெயர் வெளியிட விரும்பாத அனானிகளும் கருத்துக்களைப் பதிவு செய்யவும் வழி செய்திருந்தோம். அடிக்கடி கருத்துச் சொல்பவர்களுக்கு, சொல் சரிபார்ப்பு எரிச்சலூட்டியதால் அதையும் நீக்கி, எவ்விதத் தடங்களுமின்றி எல்லாரும் கருத்துக்களைப் பதியலாம் என்ற வசதியையும் தந்திருந்தோம். அதையும் சில துர்க்குணம் கொண்டவர்கள் தவறாக உபயோகித்தனர்.

தங்கள் அடையாளத்துடன் எழுதும் பதிவர்களையும் இங்கு இடப்படும் இடுகைகளுக்குத் தொடர்பே இல்லாதவர்களையும் தரக்குறைவாக விமர்சித்தும், மாற்றுக் கருத்துகளை அநாகரிகமாகப் பதியவும் தொடங்கியதால், பின்னூட்ட மட்டுறுத்தலை ஏற்படுத்தி தளத்தின் தரத்தை வளப்படுத்தினோம். தரமற்ற, அநாகரிகப் பின்னூட்டங்களே அவற்றை மட்டுறுத்தல் செய்ய வேண்டிய நிர்ப்பந்ததை ஏற்படுத்தியது என்பதை நினைவூட்டுகிறோம்.

அதிரை எக்ஸ்ப்ரஸைப் பற்றியும் அதன் பங்களிப்பாளர்கள் குறித்தும்கூட சிலர் அநாகரிகமாகப் பின்னூட்டினர். மேலும் சிலரோ அனானியாகக் கருத்திடும் வசதியைப் பயன்படுத்திக் கொண்டு அதிரை எக்ஸ்ப்ரஸ் பெயரிலேயே பின்னூட்டி வாசகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினர்.

பின்னூட்டமிடும் வாசகர்கள் தங்கள் கருத்துகள் உடனுக்குடன் தளத்தில் தெரியவேண்டும் என்றே விரும்புவர். தற்போதுள்ள நிலவரப்படி மட்டுறுத்துனராக சிலரே செயல்படுவதால், பின்னூட்டங்கள் வெளிவரத் தாமதமாகின்றன. இன்ஷா அல்லாஹ் மேலும் சில மட்டுறுத்துனர்களை விரைவில் நியமிக்க இருக்கிறோம். நேரமும் வசதியும் இருப்பவர்கள் தங்களைப் பற்றிய சிறுஅறிமுகத்துடன் எங்களுக்கு மடலிட்டடல் பரிசீலிக்கலாம். அதுவரைக்கும் பின்னூட்டங்கள் வெளியாவதில் ஏற்படும் சுணக்கத்தை வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

பொதுவான கட்டுரைகளை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தொகுப்பதற்காக http://adiraixpress.wikia.com பக்கம் உள்ளது. இதன்மூலம் ஒரே தலைப்பில் பலரும் பங்களிக்கலாம் (உ.ம் அதிரை வரலாறு, வேலை வாய்ப்பு, ஆலோசனைகள் போன்றவை). இந்த வசதியை வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

பல்சுவையுடன் வெளியாகும் பதிவுகளை நிறையப் படிப்பதோடு பின்னூட்டங்கள் எழுதிப் பழகுவதன் மூலம் சொந்தமாக ஆக்கங்களை எழுதும் வளர்ச்சியை, முயற்சி எடுத்தால் இன்ஷா அல்லாஹ் நீங்களும் அடைந்து கொள்ளலாம்.

"ஊர் நலன்" என்ற ஒற்றைச் சார்பைத் தவிர வேறு எந்தப் பக்கச் சார்பும் இல்லாமல் ஆக்கங்கள் இருந்தால் போதுமானது. யாரையும் எந்த அமைப்பையும் தாக்காமலும் தூக்காமலும் நடுவுநிலை பேணிக் கொள்வோம்.

இதுவரையில் பதிவான இடுகைகள் சிலவற்றில் நடுவுநிலை சறுகி இருக்கக் கூடும். இன்ஷா அல்லாஹ் இனிமேல் அவ்வாறு ஏற்படாமல் இருக்க முடிந்தவரை முயலுவோம். எங்கள் கவனக் குறைவில் நாங்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினால்,இன்ஷா அல்லாஹ் நிச்சயமாகத் திருத்திக் கொள்வோம்.

சொந்தமாக வலைப்பூ இல்லாதவர்கள் தங்கள் ஆக்கங்களை adiraixpress.direct@blogger.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவற்றைப் பரிசீலித்து உங்கள் பெயரிட்டு தளத்தில் வெளியிடுவோம், இன்ஷா அல்லாஹ்.

வாசகர்களின் மேம்பட்ட எழுத்தின் புதியமுகம் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒத்துழைப்போம்; ஒன்றுபடுவோம்; உன்னதமான ஊராக அதிரையை மாற்றியமைப்போம்.அல்லாஹ் போதுமானவன்.

Wednesday, June 16, 2010

திட்டுமுட்டும் தெகரடியுமா ஈக்கிது

அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களாக எல்லோரும் சூடாக கருத்துப் பரிமாறிக் கொள்வதால், கொஞ்சம் கூலாக்க இந்தப் பதிவு. அதிரை தமிழ் தெரியாதவர்கள் மன்னிக்கவும். :-)

டாக்டர் : சொல்லுங்க என்ன பிரச்சினை?

நோயாளி: திட்டுமுட்டும் தெகரடியுமா ஈக்கிது

டாக்டர் : எப்போதிலிருந்து?

நோயாளி: முந்தாநேத்துலேர்ந்து

டாக்டர் : எத்தனை மணியளவிலிருந்து இந்தப் பிரச்சினை?

நோயாளி: நேத்து வல்லிசா மஹதியிலேர்ந்து

டாக்டர் : நேற்று ன்ன சாப்பிட்டீங்க?

நோயாளி: கலரிக்காரவூட்டுல

டாக்டர் : என்ன சாப்பிட்டீங்கன்னு சொல்லுங்க?

நோயாளி: காலைல ரொட்டிகறி, பவலு மூணுகறி

டாக்டர் : உங்களுக்கு B.P எதுவும் இருக்குதா?

நோயாளி: அப்புடீண்டாக்கா?

டாக்டர் : BLOOD PRESSURE

நோயாளி: ஒண்ணும் வெளங்களே. ப்ரசர் குக்கர் ஈக்கிதான்னு கேக்குறியலா?

டாக்டர் : ரத்தக் கொதிப்பு ஏதுவும் உங்களுக்கு இருந்திருக்கா?

நோயாளி: யாஹ்வம் இல்லே.

டாக்டர் : இதற்கு முன்னாடி டெஸ்ட் எதுவும் செய்த ரிப்போர்ட் இருக்கா?

நோயாளி: ஈக்கிது, இந்தாங்க.

டாக்டர் : சுகர் கம்ப்ளைண்ட் இருக்குது!

நோயாளி: வல்லா நாளைல. யாரு கம்ப்ளைண்ட் குடுத்தது?

டாக்டர் : லேப் டெஸ்ட் ரிப்போர்ட்ல இருக்கிறது.

நோயாளி: நாங்கல்லாம் யாருக்கும் கெடும்பு செய்யமாட்டோம்.

டாக்டர் : பரிசோதனையில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது

நோயாளி: தேத்தண்ணிக்கு சீனிதான் போடுவோம். சர்க்கரை எல்லாம் போடமாட்டோம்.

டாக்டர் : நான் அதைச் சொல்லவில்லை உங்களுக்கு இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. இனிப்பு அதிகம் சாப்பிடக்கூடாது.

நோயாளி : கலரிகாரவூட்ல பிர்ணி சாப்புடேன். மின்னேரத்துல சர்வத்து குடிச்சேன். வானாங்க வானாங்க 2 க்ளாஸ் சர்வத்தை குடுத்துத்தாங்க.நானும் பைத்தியாரிமண்டிப்புட்டேன்.

டாக்டர் : சுகர் லெவல் ஏறியதால்தான் உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டு,பிறகு இரத்த அழுத்தம் கூடி இருக்கிறது.

நோயாளி: கலரிக்கர ஊட்ல வாயக்கட்ட முடியுமா? நபுஸுதான் உடுமா?

டாக்டர்: சரி, இப்ப தரும் மாத்திரையை ஒரு வாரத்துக்குச் சாப்பிடுங்க.

நோயாளி: நாளைக்கு பெரியப்ளான ஊட்டுக்கும், மய்க்கா நாளக்கி ஒப்புச்சுப் பாக்குற ஊட்டுக்கும் போகனும்.பெரியப்ளான ஊட்டுல கை நார்சாகொடுப்பாஹ. ஒப்புச்சுப்பாக்குற ஊட்டுல பசியாரக் கூப்டாங்க. போவாட்டி பொஸ்க்குன்னு கோச்சிக்கிடுவாங்க. இப்பவ்லாம்
யாருக்கு ஏழுது?

(இருவரின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த நர்சுக்கு திட்டுமுட்டும் தெகரடியுமா இருக்குது:)

Monday, June 14, 2010

அதிரையில் அரங்கேறிய அநாச்சாரம்!

'அவ்லியாக்களைப் போற்றுகின்றோம்' என்ற பெயரில், இன்று மாலை நம்மூர் முக்கியத் தெருக்களில் வலம் வந்த 'கொடியூர்வலம்' - இதைக் 'கொடிய ஊர்வலம்' என்றுகூடச் சொல்லலாம் - கீழ-மேலத்தெருவாசிகளின் வருடாந்திரக் கூத்தாட்டம் நடந்து முடிந்துவிட்டது. கீழ-மேலத்தெரு என்று ஒட்டுமொத்தத் தெருவாசிகளையும் நான் குறிப்பிடவில்லை. மாறாக, முக்கியஸ்தர்கள் என்று இருக்கக்கூடிய சிலரைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, அந்த முக்கியஸ்தர்கள் குருமார்கள் என்ற போர்வையில் இருக்கும் சிலரைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, இத்தகைய அநாச்சார நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர், அறிவிலிகள் சிலர். கேட்டால், 'அவ்லியாக்களைப் போற்றுகின்றோம்' என்று கூறுகின்றனர். பாவம், அந்த அவ்லியாக்கள்!

இந்தக் கூத்தாட்டத்திற்கு எத்தனை முஸ்தீபுகள் தெரியுமா? நடுத்தெருவில் இப்போது ரோடு போடும் வேலைகள் கடந்த நான்கு மாதமாக மிகத் 'துரிதமாக?' நடந்துவருகின்றன. அதற்காகக் கருங்கற்கள் லாரிகளில் வந்து இறங்கின. அவை இங்குமங்கும் சிதறிக் கிடந்தன. நேற்றைக்கு முந்திய நாளன்று, அவசர அவசரமாகச் சிலர் வேலைக்கு அமர்த்தப்பட்டு, அச்செங்கற்கள் தெருவோரமாக ஒழுங்குபடுத்திக் குவித்து வைக்கப்பட்டன. இந்த முஸ்தீபைக் கண்ட ஒருவர், "நாளைக்கு வரவிருக்கும் கொடியூர்வலம் தங்கு தடையின்றிச் செல்ல, பெரியவர் இட்ட கட்டளைபோல் தெரிகிறது" என்று சொல்லிவிட்டு நடந்தார்.

நடுத்தெருவுக்குள் நுழைந்துவிட்டால், இந்தக் கொடிய ஊர்வலக்காரர்களுக்கு எங்கிருந்துதான் ஒரு விதமான வெறி வந்துவிடுகின்றதோ தெரியாது; அந்த அளவுக்கு, அக்கூட்டத்தினரின் ஆரவாரமும் சீட்டியடித்தலும் மேளதாளங்களின் காதைப் பிளக்கும் ஓசைகளும் வரம்பைக் கடந்துவிடுகின்றன. வீடுகளில் நோய்வாய்ப்பட்ட முதியவர்கள், புதிதாகப் பிறந்த பச்சிளங் குழந்தைகள் ஆகியோருக்கு இடைஞ்சல் தரும் விதத்தில் அவை தொந்தரவளித்ததை நான் உணர்ந்தேன்.

இந்தக் கொடிய ஊர்வலம் சென்று மறைந்த பின்னர் 'மங்ரிபு' தொழச் சென்ற எனக்கு, இதற்குப் பச்சைக்கொடி காட்டி வரும் முண்டாசுக்காரரிடம் இதுபற்றிப் பேசிவிடலாம் என்று காத்திருந்தபோது, அவரோ, இன்று பார்த்து நீண்ட தொழுகையில் நிலைத்துவிட்டார். பள்ளியைவிட்டு வெளியில் வந்தபோது, நற்சிந்தனை கொண்ட மவ்லவி ஒருவர் என்னிடம் அரபியில் கேட்டார்: "இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர் யார் தெரியுமா? அவர்தான்" என்று, நான் யாரை எதிர்பார்த்துக் காத்திருந்தேனோ, அவர் பெயரைச் சொன்னார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! 'அவர்' ஒரு ஜுமுஆவில் கூறியதாக இன்னொன்றும் சொன்னார்: "செய்யுங்கள்! நன்றாகச் செய்யுங்கள்! முறைப்படிச் செய்யுங்கள்!" என்றாராம், 'முறைப்படி' என்பதன் வரைவிலக்கணத்தைச் சொல்லாமல்.

வேலியே பயிரை மேய்கிறது என்று சொல்வதா? அல்லது வீணர்கள் ஆளுகை செலுத்துகின்றார்கள் எனச் சொல்வதா? "ஜாஅல் ஹக்கு, வ ஜஹக்கல் பாத்திலு. இன்னல் பாத்தில கான ஜஹூகா" என்ற மறைவசனம் 'ஓது' மொழி மட்டும்தானா? சிந்திக்க மாட்டார்களா இந்தச் சிந்தையை இழந்தவர்கள்?!

அன்புடன், அதிரை அஹ்மது (அபூ பிலால்)

மரண அறிவிப்பு

புதுமனைத்தெரு சேகனா வீட்டு அஷ்ரப் அவர்கள் அதிரையில்  காலமாகிவிட்டார்கள்.அன்னார் மர்ஹூம் ஹசன் அவர்களின் மகனாரும்,ஹசன் அவர்களின் தந்தையும்,முஹம்மத் இப்ராஹீம்,சம்சுதீன் (ஜம்,ஜம்)ஆகியோரின் சகோதரருமாகிய அவர்களின் நல் மக்பிரத்துக்கு துவா செய்யும் படி வேண்டுகிறோம்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

அன்னார் அவர்கள் யார் வந்து உதவி கேட்டாலும்,சளைக்காமல்,மறுக்காமல் ஓடி வந்து உதவும் பாங்கு கொண்டவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து - ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்குவானாக.

தகவல் உதவி
ஷிப்லி மற்றும் ஜமாலுதீன்.
கலிபோர்னியா

அன்னாரது புகைப்படம் இருந்தால் இங்கு அப்லோட் செய்யவும்

Sunday, June 13, 2010

உமர்தம்பி அவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம்

தமிழ்கணிமைக் கொடையாளர் மர்ஹூம் அதிரை உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவையை அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது உத்தமம் அமைப்பு (மாஷா அல்லாஹ்!)

 தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதற்கட்ட அங்கீகாரமாக எழுத்தாளர் சுஜாதா, நா.கோவிந்தசாமி, யாழ்ணன் சண்முக லிங்கம் ஆகிய தமிழ்க் கணிமை பங்களிப்பாளர்கள் பெயருடன் ஐந்து அரங்குகளுக்கு உமர் தம்பி எனப் பெயரிட்டுள்ளது உத்தமம் அமைப்பு .

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஒரு அங்கமாக நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டு அரங்குகளுக்கு உமர்தம்பி அவர்களின் பெயரிட்டதன் மூலம்  தமிழ் கணிமைக்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற பங்களிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் கணிமையில் சாதனை படைத்த வல்லுனர்களுக்கு 'உமர்தம்பி' அவர்கள் பெயரால் விருதுகள் வழங்கி அவரது சேவையை தமிழக அரசு அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ் செம்மொழி மாநாட்டின் மூலவரும் தமிழக முதல்வருமான திரு.மு.கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தொடுப்பு உமர் தம்பி அரங்குகள்

திருத்தப்பட்ட பதிப்பு.

Saturday, June 12, 2010

புற்று நோய்...?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகா ஆயங்குடி என்ற ஊரில் புற்றுநோயால் மக்கள் அதிகமாக பாதிகப்படுவதும் அதனால் இறப்பதும் வாடிக்கையாகிவிட்டது .

குறிப்பாக ந‌ம்மூரிலும் இந்த‌ நோயினால் இன்றுவ‌ரை வ‌ய‌து வ‌ர‌ம்பின்றி பாதிப்புக்குள்ளாகி ம‌ர‌ண‌ம் வ‌ரை சென்று பாதிப்ப‌டைந்த‌ ம‌க்க‌ள் ஏராள‌ம் என‌லாம்.
ந‌ம‌து இளைய‌ த‌லைமுறையின‌ர் இன்றும் இந்த‌ நோயின் விப‌ரித‌த்தை உண‌ராம‌ல் ந‌ம‌க்கு நெருக்காமான‌வ்ர்க‌ளின் பிள்ளைக‌ள் இன்றும் வ‌ண்டிபேட்டையிலுள்ள‌ அப்பா க‌டையில் ம‌ரைத்து சிக‌ர‌ட் அடிக்கின்ற‌ன‌ர்.
இத‌ற்க்கென‌ த‌னி வ‌ச‌தியை க‌டையின் உரிமையாள‌ர் செய்து கொடுத்துள்ளார். இது இப்ப‌டி இருக்க‌.

ந‌ம‌து ஊரில் சமீப காலமாக பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் காரணமாக இறப்பதும் அதிக அளவில் நடந்துள்ளது.

1. எதனால் பெண்கள் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்?
2. இந்நோய் வருவதற்கு என்ன காரணம் ?
3. இந்நோயின் ஆரம்ப நிலையை எப்படி அறிந்து கொள்ளுவது ?

இந்நோய் பற்றி பெண்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நோய் பற்றி விவரம் அறிந்தவர்கள் அது சம்மந்தமாக ஆலோசனையும்,
புற்றுநோய் வராமல் தடுப்பது பற்றியும், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த விளக்கங்களையும் தருமாறு இந்திய‌ ம‌ருத்துவ‌ இலாக்காவை கேட்டு கொள்ள‌வ‌தோடு.

ப‌ள்ளி ம‌ற்றும் பாட‌சாலையின் அருகில் 18வ‌ய‌துக்கு உட்ப‌ட்ட‌ மாண‌வ‌ ப‌ருவ‌த்தின‌ருக்கு பான் , சிக‌ர‌ட். குட்கா. போன்ற‌ பொருள்க‌ளை விற்ப‌னை செய்யும் க‌டைக‌ரார்க‌ள் மீது க‌டுமையான‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ முற்ப‌ட‌ வேண்டும்.

செய்யுமா த‌மிழ‌க‌, இந்திய‌ அர‌சுக‌ள்?

கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் ஓட்டம்

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, ஏனாதி ராஜப்பா கல்லூரி, பேராவூரணி வெங்கடேஸ்வரா கல்லூரி, கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரி, ஒரத்தநாடு மகளிர் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் ஓட்டப்பந்தயம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.
தொடர் ஓட்டப்பந்தயத்தை காதிர் முகைதீன் கல்லூரி தாளாளர் முஹம்மது அஸ்லம் தொடங்கி வைத்தார் . இதில் பேராசிரியர்கள் நாசர், கணபதி, சந்திரசேகரன், ஆங்கில பேராசிரியர் முஹம்மது முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

அந்த 40 பேரில் உங்கள் பெயரும் இருந்தால்...?

கடந்த ஒன்பதாண்டுகளாக பொய்வழக்குகளில் அலைக்கழிக்கப்பட்டுவரும் நமதூர் சகோதரர்களின் அவலநிலை குறித்து யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் நம் கவனத்திற்கு வந்த தகவலில் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

2001ம்ஆண்டு ஒருநாள் இரவில் CMP லேன்,புதுமனைத்தெருவில் உள்ளவர்களையும் வீடுகளையும் விஷமிகள் தாக்குவதாகப் பரவிய செய்தியைத்தொடர்ந்து தாய் வீட்டிலும் மனைவி வீட்டிலும் உறங்கி கொண்டிருந்த அத்தெருவைச் சார்ந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு தங்கள் உற்றார்-உறவினரைக்காக்க வேண்டுமே என்று விரைந்தனர்.

என்னவோ ஏதோவென்று கண்டவர்களும் கேட்டவர்களும் தாக்குதலுக்குள்ளானதாகச் சொல்லப்படும் CMP லேனுக்குச் சென்றபோது, அருகிலுள்ள செட்டித்தோப்பு காலனியிலிருந்து சிலர் கூட்டத்தினரை நோக்கி கல்வீசித் தாக்கியுள்ளனர்.

கலவரம் உண்டாக்கிய விஷமிகள் யாரென ஓரளவு கணித்த கூட்டத்தினர் கல்வீச்சு வந்த பகுதியைநோக்கி சற்று நெருங்கியதும் பயங்கர ஆயுங்களுடன் காலணியிலிருந்து மேலும் சிலருடன் கூட்டத்தினரைத் திரட்டிக வந்தவர்கள்மீது எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நள்ளிரவில் நடந்தக் கலவரத்தில் விஷமிகள் சிலர் அங்குள்ள குடிசை வீடுகளுக்குத் தீவைத்துவிட்டு பழியை தங்கள் உறவினர் வீடுகளைக் காப்பதற்காகவந்த கூட்டத்தினர்மீது போட்டுவிட்டனர். இந்தக் கலவரம் மற்றும் தீவைப்பில் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த செட்டித்தோப்பு காலணியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மனைவியும் சுப்பிரமணியம் என்பவரின் தாயாருமான மூதாட்டி ஒருவர் இறந்து விட்டார்.

தொடக்கத்தில் முஸ்லிம் வீடுகள்மீதான தாக்குதலைக் கட்டுப் படுத்தத் தவறிய அதிரை காவலர்கள், கலவரக்காரர்களிடமிருந்து உறவினர்களையும் உடமைகளையும் காப்பதற்காகக் கூடிய முஸ்லிம்கள்மேல் கொலை, கொள்ளை, தீவைப்பு, கலவரம் உண்டாக்குதல், கூட்டுச்சதி, பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் ஆகிய வழக்குகளோடு, தாழ்த்தப்பட்டவர்களை ஜாதீ ரீதியிலான கொடுமையிலிருந்து பாதுகாகப்பதற்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் சேர்த்து 10 முஸ்லிம்களை முதல் குற்றவாளியாகவும் சுமார் 40க்கும் மேற்பட்ட, பெயர் குறிப்பிடப்பதாத அப்பாவிகள்மீதும் பொய்வழக்குப் பதிவு செய்து கடந்த ஒன்பது வருடங்களாக நடந்து வருகிறது.

இச்சம்பவம் நடைபெற்றபோது மத்தியில் பாரதிய ஜனாதவும் மாநிலத்தில் திமுகவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்தன. அரசியல் அநாதைகளாக இருந்த தமிழக முஸ்லிம்களுக்கு ஆபத்பாந்த அமைப்பாக அப்போதைய ஒருங்கிணைந்த தமுமுக இருந்தது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் அதிரை தமுமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் சட்டரீதியில் வழக்குகளை எதிர்கொண்டு விடுதலையாகி விட்டனர். மேலும் சிலர் தனியாக வழக்குகளை எதிர்கொண்டு விடுவிக்கப்பட்டு விட்டனர். ஆனால் எவ்வித இயக்க பின்புலமுமில்லாத அப்பாவி இளைஞர்கள்மீதான வழக்கை தொடர்ந்து நடத்த யாருமின்றி ஒருசில நலன் விரும்பும் அதிரை பிரமுகர்களுடன் அவ்வப்போது நீதிமன்றம் சென்று வழக்கைச் சந்தித்து வருகிறார்கள்.

இவர்களில் இருகால்களும் ஊனமடைந்த மாற்றுத்திறனாளர்முதல் அப்போது 17-18 வயதாக இருந்த பள்ளி மாணவர்கள்வரை வழக்குகளிலிருந்து விடுவிக்க வழியின்றி பொய்வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இயக்க ரீதியில் வழக்கை நடத்திவந்த தமுமுக, பின்னர் ததஜ என்றும் அதிலிருந்து இதஜ என்று பிரிந்துள்ளதால் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு யாரிடம் சென்று முறையிடுவதென அறியாது, வக்கீல் மற்றம் நீதிமன்ற செலவுகளை எதிர்கொள்ள முடியாது மிகுந்த சிரமப்படுகிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

நமதூர் அதிரையில் ஊர்தலைமையோ அல்லது முஸ்லிம்களுக்கு அரசியல், சட்ட ரீதியில் உதவக்கூடியவர்களோ இல்லை என்பதை சாதகமாகப் பயன்படுத்தி, இத்தகைய பொய்வழக்குகளில் சிக்க வைக்கப் பட்டு, நம் பொருளாதாரமும் நேரமும் வீணடிக்கப்படுகிறது.

இவ்வழக்குகளில் முக்கியசாட்சியமான பிச்சை அவர்களின் மனைவி மாரடைப்பு காரணமாகவே இறந்ததாக மருத்துவ தகவல் அறிக்கை உறுதி செய்துள்ளதால் கொலை வழக்குகளில் (308,309 பிரிவுகள்) இருந்து விடுவிக்கப்படலாம்.ஆனால் பிறவழக்குகளில் குறிப்பாக வன்கொடுமை தடுப்பு வழக்கில் திட்டமிட்டே இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிரையைப் பொருத்தவரை வீட்டுப்பணி வேலை செய்பவர்களில் 90% பேர், செட்டித்தோப்பு காலணியைச் சேர்ந்தவர்களே. தங்கள் மதத்தவர்களே வீடுகளுக்குள் அனுமதிக்க மறுக்கும்போது உள் வீடுகளிலும், படுக்கையறைகளிலும் எவ்வித பேதமுமின்றி அவர்கள் புழங்க அனுமதிக்கப்படுவதை இன்றுக் காணமுடியும்.

திருமணங்கள், பண்டிகை மற்றும் விசேச வைபவங்களில் இப்பகுதி ஏழைகளுக்கு புத்தாடை மற்றும் உணவுகளை வழங்கி சந்தோசம் அடையும் முஸ்லிம் தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதையும் இப்பகுதி மக்கள் நன்கறிவர்.

எனினும் நம்மை நாட்டைவிட்டே அப்புறப்படுத்தும் நோக்கில், அண்ணன் - தம்பிகளாய் பழகிவரும் தலித் சகோதரர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாள வேண்டும் என்ற தீய எண்ணத்தில் மதவாத சக்திகளுடன் கைகோர்த்து இப்பகுதி இளைஞர்கள் சிலரே இவ்வழக்கை நடத்தி வருகிறார்கள்.

இந்த மதவாதச் சக்திகளைப் பொருத்தவரை காலணியைச் சார்ந்த இளைஞர்களை முஸ்லிம்களுக்கு எதிராக கொம்புசீவிட்டு, மேலும் பகைவளர்த்து குளிர்காய்ந்து தங்கள் திட்டங்களை நிறைவேற்ற பகடைக்காயாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நடுநிலை இந்து சகோதரர்களும் உணர்ந்துள்ளார்கள்.

இவ்வழக்கை நடத்தி வரும் காலணியைச் சேந்த M.சுப்பிரமணியம் (இறந்தவரின் மகனல்ல) மற்றும் சிலர், அதிரையில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு டைல்ஸ் மற்றும் மார்பில் கற்களைப் பதிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். நம்மவர்களின் பணத்தை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு நம்மூர் இளைஞர்கள்மீது வழக்கு நடத்தி வருவர் சுகமாக வாழ வகைசெய்துள்ள முஸ்லிம்களின் செயலை ஞாபக மறதி என்பதா அல்லது சமுதாய அக்கரையின்மை, சமூகத்தின்மீதான பாராமுகம் என்பதா சகோதரர்களே?


அல்லாஹ் காபக்கட்டும்! நீங்களோ அல்லது நம்வீட்டுப் பிள்ளையோ இவ்வழக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தாலும் இதுபோல் பாராமுகமாக இருப்பீர்களா என்று சிந்தியுங்கள். அல்லாஹ்விற்காக ஒன்றுபடாத எந்த சமுதாயமும் வெற்றியடைந்ததாக சரித்திரமில்லை. தங்களை மாற்றிக்கொள்ளாத சமூகத்தை அல்லாஹ்வும் கண்டுகொள்ள மாட்டான் என்பது நம் மார்க்கத்தின் எச்சரிக்கை.

இன்னும் எத்தனை காலம் இப்படி அப்பாவிகளையும், பெண்களையும் பாதுகாப்பற்ற நிலையில் ஊரில் விட்டுவிட்டு உலகம் சுற்றி பொருள் தேடப்போகிறோம்.? இவ்வழக்குகளில் சிக்கித்தவிக்கும் நமதூர் முஸ்லிம்களுக்கு சட்ட உதவி செய்யப் போவது யார்? அபலைகளை பொய் வழக்குகளிலிருந்து விடுவிக்க,ஏற்கனவே உதவிக் கொண்டு இருப்பவர்களுடன் நாமும் இணைந்து தேவையான நிதியுதவிகளை செய்யலாமே!

நமதுர் தேசிய வங்கிகளில் ஆண்டுகளாக அடைந்து கிடக்கும் உங்கள் சேமிப்புகளிலிருந்தும்,ஜகாத் நிதியிலிருந்தும் உதவி வழங்கினால் அவர்களும் நம்மைப்போல் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க முடியும் சகோதரர்களே!

சிந்திப்போம்! செயல்படுவோம்! ஒன்றுபட்டால் இன்ஷா அல்லாஹ் உண்டு வாழ்வு!

Friday, June 11, 2010

செல்போன் டவர் செய்யும் வேலை!

நகரெங்கும் சிவப்பு, காவி, வெள்ளை, பச்சை என கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. இந்த டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம்..." என்கிறார்.

ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர். செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30 டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார். இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழகத்தில் பல இடங்களில் வீடுகளின் கூரைகளை செல்போன் டவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர் பலர். பணத்தைக் கொடுத்து அப்பட்டமாக மரணத்தை வாங்கும் இவர்கள் விழித்துக் கொள்ளவே மாட்டார்களா?

நன்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியவருக்கு...

அதிராம்பட்டிணத்தில் கல்வி கருத்தரங்கம்

TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரம்
(இன்ஷா அல்லாஹ்)


*10 ஆம் , 12-ஆம் வகுப்புக்கு பின் என்ன படிப்பு படிக்கலாம்?
*குறைந்த செலவில் உயர் கல்வி பெறுவது எப்படி?
*முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி திட்டங்களின் முழு விபரமும், அதை பெறும் வழிகளும்
*வேலை வாய்ப்பு பெறுவதற்க்கான தகுதிகள் என்ன?
*மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க  செய்ய வேண்டியது என்ன?

*பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க  பெற்றோர்கள்  செய்ய வேண்டியது என்ன?
*மேலும் கல்வி கல்வி உதவி, வேலை வாய்ப்பு சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கபடும்.

நாள் : 13/06/10 - ஞாயிற்று கிழமை
நேரம் : மாலை 4 மணி

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech-
மாநில மாணவர் அணி செயலாளர்

இடம் :  TNTJ மர்க்கஸ், அதிராம்பட்டிணம், தஞ்சை மாவட்டம்
தொடர்பிற்க்கு : 9629115317
 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும்  கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ தஞ்சை மாவட்ட அதிராம்பட்டிணம் கிளை.
தகவல் : சகோ.சர்புதீன்

Thursday, June 10, 2010

ஒரு இலட்சம் பார்வைகள் - அதிரை எக்ஸ்பிரஸின் இன்னொரு மைல்கல்

இன்று அதிரை எக்ஸ்பிரஸ் தனது எழுத்துலகப் பயணத்தில் சிறப்பான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. ஆம் இன்றுடன் அதிரை எக்ஸ்பிரஸ் ஒரு இலட்சம் பார்வைகள் பார்க்கப்பட்டுள்ளது. சராசரியாக சுமார் 450லிருந்து 600 வாசகர்கள் வந்து செல்லும் வலைப்பதிவாக அதிரை எக்ஸ்பிரஸ் திகழ்கிறது. தினமும் 1200 லிருந்து 2500 பார்வைகளைக் கொண்டுள்ளது. இதன் எண்ணிக்கையை கவனித்து வருபவர்கள் நன்கு அறிவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தான் வாசகர் எண்ணிக்கை கணக்கெடுக்கும் நிரல் துண்டுகளை ஒட்டியிருந்தோம். அதிக பார்வைகள் கொண்டுள்ள வலைத்தளம் என்பதை பங்களிப்பாளர்களுக்கு உணர்த்தவும், தொடர்ந்து எழுத உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கும் இத்தனை பேர் படிக்கிறார்கள் என்கிற பொறுப்புணர்வை மனதளவில் புரிய வைக்கும் நோக்கில் இத்தகைய எண்ணிக்கை கணக்குகள் தேவைப்படுகிறது.

பொதுநல நோக்கில் செயல்படும் அதிரை எக்ஸ்பிரஸில் பங்களிப்பாளர்கள் உதவியின்றி இத்தகைய எல்லையை அடைந்திருக்க முடியாது. தன்னார்வத்துடனும் எதிர்பார்ப்பற்ற நிலையில் தொடர்ந்து எழுதிவரும் அவர்களின் எழுத்து சேவையை இந்த அரிய நேரத்தில் நினைத்து அதிரை எக்ஸ்பிரஸ் உவகை கொள்கிறது.

அத்துடன் இந்த பொன்னான நேரத்தில் அதிரை எக்ஸ்பிரஸின் மூலதனமான அதன் வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எப்பொழுதும் போல் உங்களது நல்ஆதரவை தொடர்ந்து நல்கி வர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


வஸ்ஸலாம்
அதிரை எக்ஸ்பிரஸ் குழு

எட்டாம் வகுப்புவரை பெயிலாக்கக் கூடாது - ஓர் இஸ்லாமியப் பார்வை

உலகிலுள்ள மதங்கள் எல்லாம் இறைவழிபாடுகுறித்து மட்டுமே போதிக்கின்றன. தம்மதக் கடவுளை எந்தெந்த முறைகளில் வழிபட வேண்டும். எத்தனைமுறை வழி படவேண்டும். எப்போது வழிபட வேண்டும் என்று முழுக்க முழுக்க வழிபாடு குறித்தே போதிக்கின்றன.

இஸ்லாத்தில் இறைவழிபாடு பிரதானமாக இருந்த போதிலும் மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிடுகிறது. பிறப்பு முதல் இறப்புவரைக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படியெல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்று அக்குவேறு ஆணிவேறாக வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் அலசுகிறது.

அவ்வகையில், கல்விக்கு இஸ்லாத்தில் பிரதான முன்னுரிமை உண்டு. போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்ட எதிரிப்படையினரை விடுவிக்க கல்வியறிவுள்ள வீரர்கள், கல்வியறிவில்லாத முஸ்லிம்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துவிட்டு விடுதலை பெற்றுக் கொள்ளலாம் என்று கல்விக்கும் கல்வியாளர்களுக்கும் சிறப்பான அந்தஸ்தை அளித்த மார்க்கம் இஸ்லாம்.

"கல்வி கற்பது ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை" என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரகடனப்படுத்தி விட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. "கற்றவரும் கல்லாதவரும் சமமாக மாட்டார்கள்" என்று திருக்குர்ஆன் பொட்டிலடித்தாற்போல் சொல்கிறது. ஆக, கல்வி இஸ்லாத்தின் ஓர் அங்கம்!

கல்வி சம்பந்தமான நேற்றைய செய்தி. பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு, மத்திய அரசு 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு (8-ம் வகுப்பு வரை) இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது.

கல்வி பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று 1993 ஆம் ஆண்டும்,அடிப்படைக் கல்வியை தடையின்றி பெறுவதற்கு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று 2002-ம் ஆண்டிலும் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பினடிப்படையில் அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இப்படித்தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், மகளிர் பாதுகாப்புச் சட்டம் என பல்வேறு அருமையான சட்டங்களையும் தற்போதைய மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. ஏட்டளவில் இந்தச் சட்டங்கள் இருந்து கொண்டிருந்தாலும் சட்டமாக்கப்பட்டதை வரவேற்க வேண்டும்

இதுபோன்ற புரட்சிகரமானச் சட்டங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இஸ்லாத்தின் சட்டங்களே காரணமாக இருக்கின்றன என்பதையும் (வெட்கத்தை விட்டுச்) சொல்லியிருக்கலாம்.(நம் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிகூட “அரபு நாடுகளைப்போல் மரண தண்டனை வழங்கினால்தான் நம்நாட்டில் கற்பழிப்புகளை குறையும்” என்றார்.)

ஆக, இஸ்லாம் வழங்கிய அடிப்படை மனித உரிமையான கல்வியை சாதாரண இந்தியக் குடிமகன் பெறுவது உரிமை என்று சட்டமியற்ற சுமார் 1500 வருட தாமதம் கொஞ்சம் தவறு ரொம்ப அதிகம்தான் :-)
இதுபோன்ற முன்னோடி மனித உரிமைகளை சட்டமாக்கியதோடு மார்க்கக் கடமையாகவும் வலியுறுத்திய இஸ்லாத்தை “பழமைவாத மார்க்கம்” என்பது அறியாமைதானே?

Wednesday, June 9, 2010

யுனிகோடும் இயங்கு எழுத்துருவும் (மீள்பதிவு)

தற்போது பிரபலமான தமிழ் இணைய தளங்களும், செய்தித்தாள், வார, மாத சஞ்சிகைகளும் தமிழில் ஒருங்குறிக்கு மாறிவிட்டன. ஒருக்குறிக்கு மாறாது தங்கள் சொந்த எழுத்துறுக்களில் இயங்கும் இணைய தளங்களுக்கு ஒருக்குறி இணைய தளங்களைவிட குறைவான வாசகர்களே என்பதை காலம் கடந்து உணர்ந்ததால் படிப்படியாக ஒருங்குறிக்கு மாறி வருகின்றன.

தமிழ்ஒருங்குறியின் அவசியத்தை வலியுருத்தி சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பே மர்ஹூம். உமர்தம்பி அவர்கள் இது குறித்து அவதானித்து எழுதிய பதிவு. தற்போதும் பொருந்துகிறது என்பதால் மீள்பதிவு செய்கிறோம். தமிழ் கணினியில் கோலோச்ச வேண்டும் என்று விரும்பிய நமதூர் தமிழ் கணிமைக் கொடையாளர் மர்ஹூம் உமர்தம்பி அவர்களை தமிழக அரசும் தமிழ் செம்மொழி, இணைய மாநாட்டுக் குழுவும் எவ்விதத்தில் கவுரவிக்கப் போகிறது என்று உலகத் தமிழர்களுடன் நாமும் ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறோம்.

நன்றி.

------------------------------------------------------------

இப்போது அனேகமாக எல்லா வலைத்தளங்களும் இயங்கு எழுத்துருக்களைப் பாவிப்பதில் நாட்டம் கொள்கின்றன. இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழ் எழுத்துரு இல்லாத கணினிகளும் தங்கள் பக்கங்களை காணச் செய்யலாம். இரண்டு, தங்கள் சொந்த எழுத்துக்களைக் கொண்டு(அது எம்மாதிரியான குறியேற்றமாக இருந்தாலும்) படிக்கச் செய்யலாம்.


தமிழில் குறியீட்டுத் தரம் இன்னும் ஒரு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் நாளுக்கொன்றாக துவக்கப் படும் இணைய சஞ்சிகைகள் இயங்கு எழுத்துருக்களை பாவிக்க வேண்டிருக்கிறது. இல்லையென்றால் பத்திரிக்கைக் கொன்றாக எழுத்துருக்களை நம் கணினியில் நிரப்ப வேண்டியிருக்கும். இயங்கு எழுத்துருக்களுக்கு வித்திட்ட நெட்ஸ்கேப் வேறு இடையில் எகிறிக்கொண்டது.

வலைத்தளங்களை அமைப்போரும் சரி, அல்லது வலைத்தள சஞ்சிகளை அளிப்போரும் சரி, இணையத்தில் தங்கள் ஆக்கங்கள் படிக்கப்பட்டால் போதும் என்று மட்டுமே எண்ணுகின்றனர். ஆனால் அவை பிறருடன் பரிமாறிக் கொள்ளுமாறு அமைவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் சில ஆக்கங்களை அச்சு எடுக்க வேண்டுமானாலும் சிக்கல்தான். இந்த நிலை மாறவேண்டுமானால் யுனிகோடே சரணம். யுனிகோடு தட்டச்சு செய்ய இயலுவதால் இப்போது பலதரப்பட்ட கணினி பாவிப்பாளரிடையே "ஒப்பன் ஆ(ஓ)பீஸ்" ஓர் எழுச்சியைக் கொடுத்திருக்கிறது

யுனிகோடு செம்மையாக அமையவேண்டும் என்ற கருத்தில் பேதமில்லை. ஆனால் மிகக் காலம் தாழ்ந்த எழுச்சியென்றே தோன்றுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சோதனையாக தமிழ் யுனிகோடை வலையில் ஏற்றியபோது ஏதோ இருக்கட்டும் என்று விட்டுவிட்டோமா அல்லது அதில் மாற்றம் வரவேண்டும் என்பதை எல்லா பயனரும் அறியும் வண்ணம் விவாதிக்கப்படவில்லையா என்று தெரியவில்லை.


இனி பெரிதாக யுனிகோடில் மாற்றம் வராது என்பது மெல்ல உறுதியாகி வருவதால் யுனிகோடிற்கு மாறுவது தவிற்க இயலாதது. அறிந்தோ அறியாமலோ எல்லோரும் யுனிகோடை பாவிக்கும் காலம் வரப்போகிறது. இப்போது புதிதாக தொடங்கும் வலைத் தளங்கள் யுனிகோடில் அமைகின்றன. இயங்கு எழுத்துருக்களுக்கு மவுசு குறையப் போகிறது. வேண்டுமானால் சில சித்திர(special charecters) எழுத்துக்களை மட்டுமே தோன்றச் செய்ய அது பயன்படலாம்.

நன்றி: மர்ஹூம்.உமர் தம்பி (தென்றல் வலைத்தளம்)