Thursday, September 30, 2010

நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை : சுன்னி வக்ப் போர்டு

அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் சபார்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்று பிரிவினர்களுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.


இன்று மதியம் 4.30 மணியளவில் நீதிபதிகளான எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், தரம்வீர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தேசமே உற்றுநோக்கியிருந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.


மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் ஹிந்து மகாசபைக்கும், அருகிலிலுள்ள இடம் முஸ்லிம்களுக்கும், மீதமுள்ள நிலத்தை நிம்ரோஹி அகாராவுக்கும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சுன்னி வக்ப் போர்டு தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றும் உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளது .
தீர்ப்பில் சர்ச்சைக்குரிய பகுதி ராமர் பிறந்த இடம் என்றும் மஸ்ஜிதின் மையப்பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை இந்து அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .


மொகாலாய மன்னர் பாபரின் கவர்னர் ஜெனரலான மீர்பாஹிதான் 1528 இல் பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். ஆனால், 325 வருடங்களுக்கு பிறகு 1853 ஆம் ஆண்டில் ராமர்கோயிலை இடித்துவிட்டு பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக நிம்ரோஹி என்ற ஹிந்துப் பிரிவு பாப்ரி மஸ்ஜித் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி முதன் முதலாக களமிறங்கியது.

பாபர் மசூதி தீர்ப்பு இணையத்தில் !

கடந்த 60 ஆண்டுகாலமாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த சர்ச்சைக்குரிய பாபர் மசூதியின் வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒருசில மணித்துளிகளில் வெளியாக உள்ளநிலையில் இருக்கிறது .
இந்த தீர்ப்பின் சாரம்சங்களை இணையத்தின் வாயிலக தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டியை சொடுக்கவும் http://www.allahabadhighcourt.in/ayodhyabench.html
சன்டிவியின்நேரடி செய்திக்கு:http://www.tamilkurinji.com/video/play/News/Live_Sun_News

Tuesday, September 28, 2010

ஸ்டாலின் திமுக அணி பிரமுகர் மீது காங்கிரஸ் பிரமுகர் வழக்கு

அது என்னங்க ஸ்டாலின் திமுக என்று கேக்குறீங்களா? அதாங்க இப்ப ஊர்ல அரசியல் வட்டாரத்தில் அதிகமா அடிபடுற பேச்சு. திமுக தலைமை என்னமோ சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. அதன் அடுத்த முதலமைச்சராக ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வருவதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் திமுக தலைமையின் கொள்கைக்கு மாற்றமாக (அல்லது மறைமுக கொள்கையோ என்னவோ?) உள்ளூர் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை கெடுக்கும் விதமாக அதிரை திமுக தலைமையின் கீழ் சிலர் ஈடுபட்டு வருவதும் நாமறிந்ததே. அதாங்க அல் அமீன் பள்ளி மேட்டர். 

சில மாதங்களுக்கு முன் உள்ளூர் அரசியல் பிரமுகர் துபாய் சென்று வந்ததும், சங்க மேட்டர் சூடுபிடித்ததும் அறிந்ததே. அதனைத்தொடர்ந்து இரண்டு அணியாக இருந்தவர்கள் ஒன்றாகி ஆலிம்கள் தலைமையில் சுமூகமானதும் நல்லமுறையில் நடந்தேறியது. இதனைத்தொடர்ந்து இதுவரையில் அல் அமீன் பள்ளியின் முதல் எதிரி என கருதப்பட்ட தலைவர் வழிய போய் (? அல்லது ஆலிம்கள் தரப்பிலிருந்து) பள்ளி விசயத்தில் சமரசமாகிவிடலாம் என்று சொல்லப்பட்டதாம். ஆலிம்கள் இந்த விசயத்தில் கவனம் செலுத்துவார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆரம்ப நாட்களிலிருந்து இந்த வழக்கை நடத்தி வருபவர்கள் மேற்கண்ட தலைவர் முறையாக தீர்மானமும், இன்னபிற முறையான முஸ்தீபுகளை முடித்து வந்தால் வழக்கை வாபஸ் வாங்குவதாக சொல்லப்பட்டிருக்கிறது. 

தீர்மானம் மட்டும் நிறைவேற்றினால் போதாதாம். வருவாய் ஆய்வாளர், மாவட்ட ஆட்சியர் வரைக்கும் சென்று முறையாக அனுமதி வாங்கி வரவேண்டும் என்று சொல்கிறார்கள். பின்னர் அரசின் தரப்பில் முடிவெடுக்கப்பட்டு  (அதிக) விலைக்கோ (2, 3 கோடிக்கோ, சேர்மன் வாடி அருகே உள்ள முஸ்லிம் தனியார் பள்ளி இடம் ஒன்றிற்கு விலையை ஏற்றி விட்டதுபோன்று அரசை உசுப்பேற்றி விலையை ஏற்றிவிடவும் வாய்ப்பிருக்காம்) அல்லது குத்தகைக்கோ வரலாமாம். அதனால் அதிக விலை அல்லது குத்தகை இரண்டும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் பள்ளியை நிர்மானிக்க முடியாமல் போகலாம் என்றும் தனிக்கதையாக சொல்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க கடந்த 20ம் தேதியன்று பேரூராட்சி கூட்டத்தில் புதிதாக வந்த EO முன்னிலையில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்திருக்கிறது. அதில் தலைவர் EO விடம் பள்ளிவாசல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மேற்கொண்டு தான் மேலதிகாரிகளை கலந்தாலோசிக்கவேண்டும் என்று சொன்னதாகவும் பின்னர் 13வது வார்டு திமுக உறுப்பினர் நூர் முகம்மது  தலைவரிடம் பள்ளிவாசல் விசயம் இவ்வளவு சிக்கலானதற்கு அவரே பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார். முன்னதாக மன்ற உறுப்பினர்கள் 9 பேர் கடந்த மாதம் ஆட்சித்தலைவரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக மனு அளித்திருந்தனர். அதனை குறிப்பிட்டு எனக்கெதிராகவா நம்பிக்'கை'யில்லா தீர்மானம் கொண்டு வருகிறாய் என்று ஒருமையில் திட்ட ஒரே ரகளையில் அந்த கூட்டம் முடிந்திருக்கிறது. பள்ளி விசயத்தில் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் தலைவருக்கு துணையாக இருந்து வரும் சில திமுகவினர் மெளனியாக இருந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நூர்முகம்மது வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நூர்முகம்மது வீட்டிற்கு சென்று மிரட்டியதாகவும் அவரது மனைவியின் புடவையை கிழித்ததாகவும் அதிராம்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகாரை ஏற்க மறுத்ததோடு அவர் மீது பிணையில் வெளிவரமுடியாத கைது ஆணை அதிராம்பட்டிணம் காவல்நிலையத்தில் காங்கிரஸ் பிரமுகர் பதிவு செய்துள்ளதாக நூர்முகம்மது தெரிவித்துள்ளார். (வழக்கு எண் 225/2010, 147,148,294(b), 506 ii IPC)  தற்போது தலைமறைவாக உள்ள அவர் தஞ்சாவூர் DSP க்கு அதிராம்பட்டிணம் காவல்துறை மனுபெறாததை குறிப்பிட்டும் மேற்கண்ட சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் மனு அளித்துள்ளார்.

நேற்றிரவு அவரது வீட்டின் கூறையில் விசமிகள் தீவைத்துள்ளது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

ஏற்கெனவே  4 வழக்குகள் ஜனாப் நூர்முகம்மது மீது புனையப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தஞ்சாவூர் DSPக்கு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிவாசல் விசயத்தில் காங்கிரஸ் கட்சி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் . அதேபோல் திமுகவில் அதன் தலைமைக்கு எதிராக உறுப்பினர்கள் சிலர் போர்கொடி தூக்கியுள்ளனர்.

எது எப்படியோ பள்ளிவாசல் விசயத்தில்  குறைந்தபட்சம் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயத்தை எதிர்பாராமல் அல்லாஹ்விற்கு பயந்து நடக்கவேண்டும். 60 ஆண்டுகால அயோத்தி தீர்ப்பு வர இருக்கும்  இவ்வேளையில் அதிரை முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை ஆளும் வர்க்கத்தினர் உறுதி செய்யவேண்டும்.

அயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-நாளை அல்லது மறுநாள் தீர்ப்பு வெளியாகும்

டெல்லி: அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம், அங்கு முன்பு கோவில் இருந்ததா என்பதுதான் இந்த 60 ஆண்டு கால வழக்கின் முக்கிய அம்சம். இந்த வழக்கை முடித்து விட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய லக்னெள பெஞ்ச் செப்டம்பர் 24ம் தேதி தீர்ப்பை அளிப்பதாக இருந்தது.

ஆனால், இதை எதிர்த்து திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தீர்ப்பை ஒத்தி வைக்குமாறும், பிரச்சனையை பேசித் தீர்க்க உத்தரவிடுமாறும் கோரினார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 24ம் தேதி தீர்ப்பளிக்க லக்னெள நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து தீர்ப்பு வெளியாகவில்லை.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

இன்றைய முதல் நிகழ்வாக இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அயோத்தி நில உரிமை தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நான்கிலும் தீர்ப்பு தயாராக உள்ளது. இவற்றை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தீர்ப்பை வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்பது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வாதமாகும்.

இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி மத்திய அரசு உள்பட அனைத்துத் தரப்பினரும் இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச்சிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய இந்து மகா சபா ஆகியவை தீர்ப்பை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரின. அதேபோல சன்னி மத்திய வக்பு வாரியமும் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கோரியது.

தீர்ப்பை வெளியிடுமாறு மத்திய அரசு கோரிக்கை:

இன்றைய விசாரணையின்போது தீர்ப்பைக் கூறலாமா, சிறிது அவகாசம் தரலாமா என்பது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் வாஹனாவதியிடம் உச்ச நீதிமன்றம் ஆலோசனை கேட்டது.

அப்போது 60 ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருமாறு அவர் கூறிவிட்டார். மேலும் அவர் கூறுகையில், பிரச்சனையை பேசித் தீர்த்து சுமூக உடன்பாட்டை எட்ட முடியும், அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றால் அதை மத்திய அரசு மனம் திறந்து வரவேற்கும்.

அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக நிலையற்றதன்மை நிலவுவதை அரசு விரும்பவில்லை. அதே போல நாட்டின் சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நிலையற்ற தன்மை நிலவுவது சரியல்ல. இதனால் தீர்ப்பை வெளியிட்டு இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதே சரி.

மேலும் அயோத்தி தீர்ப்பை அறிவிக்க வேண்டிய மூன்று நீதிபதிகளில் ஒருவரின் பதவிக்காலம் அக்டோபர் 1ம் தேதி முடிவடைகிறது. அவருக்கு பதவி நீடிப்பு கொடுப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை. அதை முடிவு செய்ய வேண்டியது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் என்றார் வாஹனாவதி.

இதையடுத்து பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தி்ல தனது தீ்ர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது என்று அறிவித்து திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் லக்னெள உயர் நீதிமன்ற கிளை நாளையோ அல்லது நாளை மறுநாளோ தீர்ப்பளிக்கலாம் என்று தெரிகிறது.

தீர்ப்பை அளிக்க காத்திருக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள ஒரு நீதிபதி அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். எனவே அதற்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.

எனவே அக்டோபர் 1ம் தேதிக்கு முன்னதாக நாளையோ அல்லது நாளை மறுதினமோ தீர்ப்பை லக்னொ நீதிமன்றம் வெளியிடலாம்.
நன்றி: தட்ஸ் தமிழ்  

Monday, September 27, 2010

கள்ள மார்கெட்டில் கத்தைகத்தையாக லாட்டரி!


இது வேற எங்குமில்லீங்க நம்மூரு கடத்தெருவுல தான் இந்த கள்ள லட்டரிவிற்பனை ஜருராக நடக்குதுன்னு இப்பகுதிமக்கள் சலிச்சிக்கிறாங்க.

இன்னொரு வஷயம் என்னானா இந்த லாட்டரிகள் நம்மூருக்கு வரும் தினசரி பத்திரிக்கையில் மறைத்து வைத்து கடத்தபடுவதாக சொல்லுறாங்க இவ்வவளவு பப்ளிக்கா யாவாரம் பண்ணுறாங்களே நம்மூரு காக்கிகள் கண்ணுக்கு இதுவரைக்கும் தெரியாமலா போச்சு?
படம் : ஜேப்பி

Sunday, September 26, 2010

புத்தகங்களே..!குழந்தைகளை கிழிக்காதீர்..!!
விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. உம்மா அடுத்தவீட்டுடன் குளத்துக்கு கிளம்ப வாப்பாவுடன் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு பள்ளியின் மினாரா அடியில் ஹாஜியாருடன் திக்ர் செய்து விட்டு வாப்பாவை முந்திக் கொண்டு தெருவுக்கு போய்விடுவோம். நடுரோட்டில் சில்லிட்ட மணலில் வட்டமாய் உட்கார்ந்து முந்தைய இரவில் நடந்த கள்ளன் வந்த கதை, பாம்பு வந்த கதை குளத்து மோட்டிலும் ஆஸ்பத்திரியிலும் ஆவுசம் கத்திய கதை எல்லாம் பரிமாறிக் கொண்டிருக்கும் போது உள்ளுர்புதுக்கோட்டை பால்காரர் மணியடித்து பால் ஊற்றிச் செல்வார்.

அதன் பின் அரை மணியில் உம்மாவோ ராத்தாவோ வீட்டு வாசலில் நின்றபடி 'அடேய்..வெல்லகட்டி வாங்கிட்டு வாடா...'என்று அழைக்க எல்லோருமாய் கிளம்பி முதலில் மெயின்ரோட்டில் சினிமா போஸ்டர்களை மேய்ந்துவிட்டு (ஈரம் காயாத போஸ்டர்களை கிழித்து மணல் தூவி மடித்துக் கொண்டு) அப்புறமாய் வெல்லகட்டி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போய் (எங்கடா தொலஞ்சு போனா..) கொடுத்து கொதிக்க கொதிக்க தேத்தன்னியை ஊதி ஊதி குடித்து முடித்து தொப்பி போட்டு குர்ஆனோடு பள்ளிக்கு கிளம்புவோம்.

பள்ளியில் ஓஸ்தார் வரும்வரை கொஞசம் அரட்டை அடித்து பள்ளிவாசல் தோட்டத்தில் தும்பி பிடித்து ஓனான் அடித்து ஓஸ்தாரிடம் முதுகில் அறைவாங்கி திக்கி திக்கி பழைய பாடம் ஒதி புதிய பாடம் பழகி மத்து ஸத்து, ஆகையால் எங்கள் தந்தைமாரே...பள்ளிவிட்டு போகும்போதே எந்தக்குளத்தில் குளிப்பது என்று விவாதித்து முடிவுபண்ணி..

சட்டையை கழற்றி விட்டு மாத்து வேட்டி மட்டும் எடுத்துக் கொண்டு மொய்தியப்பா கரையில் இறங்கி ஒற்றைக்கையில் வேட்டியை நனையாமல் பிடித்து மறுகையால் நீச்சலடித்து அக்கரையை அடைந்து பெரிசுகள் சலித்துக் கொள்ள பெல்டி அடித்து குளத்தை கலக்கி நீச்சல் போட்டி வைத்து கண்களில் புகையடிக்கும்வரை குளித்துக் களைத்து..

ஈரவேட்டியை தலைக்குமேல் பிடித்தபடி வீட்டுக்க ஓடிவந்து எண்ணெய் தேய்த்து தலைசீவி பவுடர் போட்டு சம்மளங்கொட்டி பசியாறி மஞ்சள் பையில் புத்தக மூட்டையை எடுத்துக் கொண்டு அஞ்சோ பத்தோ காசு வாங்கி ஜாமென்ட்ரி பாக்ஸுக்குள் போட்டுக் கொண்டு சந்து பொந்து மூலை முடுக்கில் பயணித்து நண்பர்கள் புடைசூழ பள்ளிக்கு பயணித்து..

மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு வந்து அரிசி எடுத்துப்போய் ஆச்சியிடம் தீன்வாங்கி தின்று நிழலாடும் தெருவோரம் வட்டக்கோடும் லாக்கும் ஆடி சோறாக்கி முடித்து உம்மா அழைக்கும்வரை தெருவிலேயே விளையாடி பின்.. ஆணமும் புளியாணமும் மோரும் கலந்து வயிறார சோறுண்டு மீண்டும் பள்ளி சென்று..

மாலையில் பள்ளியில் பந்தும் மட்டையும் விளையாடி முடித்து கடைசியாய் வீடு வந்து வெல்லக்கட்டி தேத்தண்ணி குடித்து குர்ஆனை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் போய் ஓஸ்தாரிடம் பாடம் ஓப்புவித்துவிட்டு வீட்டுக்கு வந்து கையில் ஒரு பனியானையோ நானாஹத்தமோ எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினால்..

கபடி, கிளித்தட்டு, கள்ளன் போலிஸ் என்று நாங்களும் கலச்சிக்காய், பட்டுரோஜா மெல்லவந்து கிள்ளிப்போ, என்று 'அவங்களும்' விளையாட, குறுக்கேபோகும் காரை தொத்திக் கொண்டு சிலரும் நாயை விரட்டிக் கொண்டு சிலரும் ஓட..

வெளக்கட்டிமரத்தில் விட்டில் பூச்சி பறக்க குளத்தாங்கரை மரத்தில் ஆந்தை அலற ஆடிக்களைத்து நடுரோட்டில் மண் குவித்து மேடைபோட்டு 'ஈயங்கனிவா' பாட்டுக் கச்சேரியும் மணலில் சுவரெழுப்பி கல்லும் செங்கமண்ணும் கொண்டு கடைவைத்து 'கூர்க்கா'வுக்கு ஸலாமடித்து உம்மாமார் அழைக்க வூட்டுக்குப் போய் பப்படமும் புளியாணமும் மாசித்தொட்டுக்கறியும் கலந்து சோறுண்டு அப்பாவிடம் கொழும்பு பர்மா பினாங்கு கதை கேட்டபடி உறங்கிப்போவோம்..

ஒருமாத விடுப்பில் ஊர்வந்திருந்த போது..சுபுஹு தொழுத கையோடு 'உம்மா' வீட்டுக்குள் நுழைந்தால் தூங்கி வழியும் மகனுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தாள் சகோதரி. அதட்டி மிரட்டி உணவைத் திணிப்பதற்க்குள் ஆட்டோ வந்து அலற அவன் திடுக்கிட்டு எழுந்து முழிக்க இவள் ஸ்கூல் பேக்கை எடுத்து முதுகில் மாட்டிவிட ஒரு சுமைதூக்கும் தொழிலாளி போல கூனிக்குறுகி தள்ளாடி நடந்து ஆட்டோவில் ஏறி அமருமுன்னே பறந்து விட்டது ஆட்டோ.

மதியம் லுஹர் தொழுது விட்டு நியூஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆட்டோ வரும் சத்தம் கேட்டு திரும்பினால் லாரியில் அடிபட்ட வெள்ளாடுபோல கசங்கிப்போய் வந்து கூடத்தில் களைத்துப் போய் புரள்கிறான் பிள்ளை.

ஃபேன் சுவிட்சை தட்டிவிட்டு கையில் தட்டுடன் அவனருகில் அமர்ந்த சகோதரி அவனை நிமிர்த்தி முழங்காலில் சாய்த்தபடி மீண்டும் உணவூட்டுகிறாள். உணவை விட அவனுக்கு ஓய்வே முக்கியமாகப்பட.. போதும்மா.... என்று ஈனக்குரலில் முனகிவிட்டு மீண்டும் மீண்டும் படுத்துப் புரல்கிறான்.

ஒருவழியாய் உணவூட்டி நேற்றைய ஹோம் வெர்க்கையும் டெஸ்ட் பேப்பரையும் சரிபார்த்து Good-களும் குட்டுக்களும் வழங்கி மீண்டும் அலறிக் கொண்டு வந்த ஆட்டோவில் ஏற்றி அனுப்புகிறாள்.

மாலையில் கசங்கிய குப்பையாய் வந்த மகனுக்கு டீ கொடுத்து 'சீக்கிரம் ஓடு..டியூஷனுக்கு..'என்று விரட்டியடிக்க..செறுப்பை உதைத்தபடி கவலையோடு செல்கிறான். நான் இருந்தவரை அவன் டியூஷனிலிருந்து திரும்பவில்லை. எப்போது திரும்பவானோ தெரியவில்லை. வந்தபின் காத்திருக்கிறது ஹோம் வொர்க். அவன் இன்னும்; எங்கெல்லாம் போகவேண்டுமோ..

இரவாகி விட்டது. 'என்' வீடு நோக்கி மெல்ல நடக்கிறேன். நான் விளையாடிய தெருவும், சுவரும், விட்டில்கள் பறந்த வெலக்கட்டி மரமும் இன்னும் இருக்கிறது. மயான அமைதியுடன்.

இஞ்சினியர்களும் டாக்டர்களும் மேதைகளும் அன்றும் இருந்தார்கள்..இன்றும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உருவாக்கத்தில் எப்படி வந்தது இப்படி ஒரு வித்தியாசம்...?

கவிக்கோ அப்துற்றஹ்மானின் கவிதைவரிகளை அசைபோட்டபடி கடந்து செல்கிறேன்.

'கற்றேன் என்பாய் உண்மையிலே –வெறும்
காகிதம் திண்பது கல்வியில்லை'

அமெரிக்காவா ? வேணாங்க...

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பொருளாதார சீர்குலைவிற்குப் பின், அங்கு தொடர்ந்து வேலைவாய்ப்பின்ம பெருகிவருகிறது. கடந்த செப்டம்பர் 18ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், வேலை இல்லாதோர் எண்ணிக்கை 4.65 லட்சமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால், அமெரிக்காவின் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது.

ஒபாமா அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றப்பின்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா ஓரளவு பொருளாதார சரிவிலிருந்து மீண்டது. இருப்பினும், அந்நாட்டு நிறுவனங்கள், புதிய பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன.

அதே சமயம், வேலைவாய்ப்பு கோருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில், வேலை இல்லாதோர் எண்ணிக்கை விகிதம் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் உயர்ந்த நிலையினை எட்டியுள்ளது.

வேலையின்மை அதிகரிப்பதால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, பொருள்கள் விற்பனை சரிவடையும். இது, பொருளாதாரத்தில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கும் என்று அஞ்சப்படுகிறது.


நன்றி : இந்நேரம் .காம்

இங்கே வருவாய் அலுவலகம் ...


நமதூரில் நீண்ட நாட்களாக செயல்படாமல் பாழடைந்து கிடந்த வருவாய் அலுவலகம் பற்றி நமது அதிரை எக்ஸ்பிரசில் எங்கே வருவாய் அலுவலகம் என்ற தலைப்பில் குறிப்பிட்டிருந்தோம்

அது தற்பொழுது புதுப்பிக்கப்பட்டு காட்சி தருகிறது ஆனால் இதில் வருவாய் அலுவலகம் செயல் படுகிறதா என தெரியவில்லை .
படம் :ஜேப்பி

நீங்கள் விரும்புவருக்கு பைத்துல்மால் மூலம் உதவலாம்!

அஸ்ஸலாமு அலைக்கும்...

அதிரை பைத்துல்மாலின் நிதியாதாரங்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு ரமலான் மாதம் மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் தேவையுடையோர் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

வட்டி இல்லாக்கடன்களுக்கு உறுப்பினர்களின் நன்கொடைகள்போக,வங்கியிருப்பு வைத்திருக்கும் பொதுநல நோக்குடைய செல்வந்தர்கள் அதிரை பைத்துல் மாலுக்கு நீண்டகாலக் கடனாகவும் கொடுத்து உதவுகின்றனர். (அல்லாஹ் அவர்களின் செல்வத்தில் பரக்கத் செய்வானாக.ஆமின்).

எனினும்,வட்டியில்லாக்கடனுதவி வேண்டுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பைத்துல்மாலின் முஹல்லா நிர்வாகிகளின் பரிந்துரையின் அடிப்படையில் வரிசைப்படியும் தேவையினடிப்படையிலும் வட்டியில்லாக் கடன்கள் நகைகளை அடமானமாகப் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன.
வட்டியில்லாக் கடன் திட்டத்தை மேலும் பரவலாக்கும் வகையில் அதிரை பைத்துல்மால், செல்வந்தர்களின் வங்கியிருப்பை கடனாகப்பெற்று அவர்கள் பரிந்துரைக்கும் தேவையுடையோருக்கு வட்டியில்லாக்கடனுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கடன்களை வசூலிக்கும் பொறுப்பையும் பைத்துல்மால் ஏற்பதோடு, கடன் பணத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

வங்கியிருப்பிலிருந்து சிறுபகுதியை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கி, சேமிப்புகள் யாருக்கும் பயனின்றி முடங்கியிருக்காமல் பிறர்தேவைக்குப் பயன்படுவதோடு வட்டிக்கொடுமைகளிலிருந்து ஏழைகளை காப்பாற்றிய நன்மையும் கிடைக்கிறது. உபரி வங்கியிருப்பு வைத்திருப்பவர்கள் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, வட்டியில்லாக் கடன் திட்டத்தில் இணைத்து அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறலாமே!

Saturday, September 25, 2010

அதிரை எக்ஸ்பிரஸின் செய்தி எதிரொளி

அல்லப்படாத கால்வாய்உடனடியாக களத்தில் துப்புரவு ஊழியர்கள்


நமது அதிரை எக்ஸ்பிரசில் 13 வது வார்டு அவலங்களை படத்துடன் வெளியிட்டு இருந்தோம்
போஸ்டரின் நகலை காப்பி டூ பேரூராட்ச்சி , மாவட்ட ஆட்சியர், அதிரை எக்ஸ்பிரஸ் . என குறித்து அனுப்பி இருந்ததாக
மனுதாரர் கூறினார் .

இதன் காரணமாக உடனடி நடவடிக்கையில் இறங்கிய பேரூர் நிர்வாகம் குப்பைகளை அகற்றியதுடன் மிதந்து கொண்டிருந்த கால்வாயையும் தூர்வாரி அசத்திவிட்டனர்.பேரூர் நிர்வாகத்தின் கனிவான பார்வைக்கு...


சின்ன தைக்கால் தெருவின் அவலம்

மற்றொரு கோரிக்கையான நமதூர் சின்ன தைக்கால் தெருவில் அருகில் உள்ள கழிவு நீர் குளத்தில் குப்பை கூளங்களால் நிறம்பி அருகில் இருக்கும் குடிசைவாசிகளை சங்கடத்தில் ஆழ்த்துகிறது.

எனவே பேரூர் நிர்வாகிகள் மற்றும் இப்பகுதி கவுன்சிலர் இந்த ஏழைகளின் சுகாதார வாழ்விற்கு வழிவகுப்பார்கள் என நம்புவோம்.
படம்: ஜேப்பி

பேரூர் நிர்வாகமே...இதனை கண்டித்து நகர்முழுதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்


இதன் நகல் பேரூர் மன்றம் , மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுபபிவைக்கப்பட்டுள்ளது.
படம்:ஜேப்பி

Thursday, September 23, 2010

பாபரி மஸ்ஜித் வழக்கு

செவி வழி கேட்டும்,சிறு கட்டுரைகளாக படித்து இருக்கும் விசயத்தை ஏட்டில் படிக்கும்போது மனதில் பதியும் என்பதால் அனைவரும் பல எதிபார்ப்புகளுடன் இருக்கும் பாபரி மஸ்ஜித் வழக்கு வரும் முன்பு மீண்டும் ஒருமுறை பாபரி மஸ்ஜித் வழக்கு உருவான விதத்தை நினைவு படுத்திக் கொள்வது நம் மீது சொல்லப்படும் அவதூர் பொய்யானது என்பதை நம் மனதில் நிலை நிறுதிக்கொள்ள உதவும் என்று விரிவஞ்ஜி வழக்கு தொடர்பான கட்டுரையை காண்பதற்கு டி . என் . டிஜெ சைட்டை சொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். http://www.tntj.net/?p=7656

ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று 1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக்கவில்லை. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல்

அதிகமான மக்கள் சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியலை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் அறிவியல் ஆனந்தம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள மிக பயனுள்ள ஒரு வீடியோ தொகுப்பு. இதை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இதை உருவாக்கிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
கீழே கிளிக் செய்யவும்.

சகோதர யுத்தங்கள் தேவையில்லை!

எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்கிற சொற்றொடர் மிகவும் பிரபலமானது. ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனம் அனைத்தும் அலஹாபாத் தீர்ப்பை நோக்கித் திரும்பியுள்ளது.


60 ஆண்டுகாலமாக இந்திய மக்களை ஆட்டி வைத்துக் கொண் டிருந்த தலையாய பிரச்சனையின் தீர்வுக்கான நேரம் நெருங்கியுள்ளது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கான தேதியை அறிவித்தவுடன் இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.


பாபர் மஸ்ஜித் நிலம் வக்ஃபு சொத்து தான் என்பதை நிரூபிக்கும்படியான ஆதாரங்கள் முஸ்லிம்கள் தரப்புக்கு வலுவைச் சேர்த்துள்ள படியால் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.


மத நம்பிக்கை என்ற சொல்லைத் தவிர வேறு ஆதாரங்கள் ஏதும் இல்லாதபடியால் இந்துத்துவாவினர் தீர்ப்பை எதிர்நோக்கும் திறனற்று திசை திருப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.


பாபர் மஸ்ஜித் இடம் குறித்து புதிய சட்டம் இயற்றி அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தீர்ப்பை தாமதப்படுத்தும் வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம் செப்டம்பர் 24 அன்று கண்டிப்பாக தீர்ப்பு வெளிவரும் என்கிற முந்தைய அறிவிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்று இந்துத்துவா அமைப்புகள் உறுதியாக அறிவிக்காத காரணத்தினால் தீர்ப்பு வெளியாகும் தினத்தில் கலவரம் நிகழ்த்தப்படுமோ? என்கிற அச்சம் மக்கள் மனத்தில் எழுந்துள்ளது.


மக்களின் அச்சத்தைத் தீர்க்கும் வகையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம். தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று அறிவிக்க வேண்டிய மத்திய அரசு அதைவிடுத்து இந்துத்துவாவினரை கெஞ்ச ஆரம்பித்துள்ளது.
வேண்டுகோள் என்ற தலைப்பில் மத்திய அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று அறிவிப்பதற்கு பதிலாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வேறு நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த விளம்பரத்தை படித்த மக்கள் இது வேண்டுகோளா? அல்லது சரணாகதியா? என்று அறிய முடியாமல் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். மத்திய அரசின் சாடையை புரிந்து கொண்ட அத்வானியும், தீர்ப்பு வந்தவுடன் ஒரு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தனது கட்சியின் நிலையை எடுத்துரைத்து விட்டார்.
தீர்ப்புக்குப் பிறகு மேல்முறையீடு என்ற பெயரில் வழக்கை மேலும் ஒரு ஐம்பதாண்டுகளுக்கு இழுத்துச் செல்வது மற்றும் பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்காமல் காலதாமதம் செய்வது என்ற புதிய திட்டத்தை சங்பரிவாரங்கள் வடிவமைத்து விட்டதையே அத்வானியின் அறிவிப்பு காட்டுகிறது.


தீர்ப்பை ஒரு சாக்காக வைத்து சங்பரிவாரத்தினர் கலவரத்தை உருவாக்கி முஸ்லிம்களின் உயிருக்கும், உடமைக்கும் சேதம் விளைவிக்கும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிற்ன.


சங்பரிவாரத்தின் சூழ்ச்சி மற்றும் சதிவலைகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் இஸ்லாமிய சமுதாயத்தி னரால் மேற்கொள்ளப்பட்டதாக எங்கேயும் காண முடியவில்லை.

இந்நிலையில், மேலும் ஒரு சோதனையாக தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்குள் நிலவும் மோதல்கள் சங்பரிவாரத்திற்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது வேதனைக்குரியது.

சில நாட்களுக்கு முன்னால் திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல், துப்பாக்கிச் சூடு வரை சென்று இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள்ளாக பெரியண்ணன் அவர்கள் தன்னை கொலை செய்ய சதி ஆலோசனை நடந்துள்ளதாக தன்னுடைய சொந்த இணையதளத்தில் தெரிவித்திருப்பது பேரதிர்ச்சி ஏற்படுத்துகிறது.


திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து பேசப்படுவது தனக்கும், தனது இயக்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதனால் - தன்னைக் கொல்ல சதி என்று கூறி அனுதாபம் தேட முயற்சிக்கிறார் என்றும், திருவிடைச்சேரி சம்பவத்திலிருந்து மக்களை மறக்கடிக்க திசை திருப்பும் செயல் இது என்றும் ஒரு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


இருந்தபோதிலும், பெரியண்ணனை கொலை செய்ய ஒரு சிலர் முடிவு எடுத்துள்ளனர் என்கிற செய்தி உண்மையாயிருக்கும் பட்சத்தில் அது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இம்மாதிரியான நிகழ்வுகள் சமுதாயத்தின் முன்னேற்றத்தை பின்னோக்கித்தான் கொண்டு செல்லும்.
முஸ்லிம்களின் உயிருக்கும் - உடமைக்கும் கேடு செய்ய சங்பரிவாரத்தினர் முஸ்தீபுகளை செய்து வரும் வேளையில், சமுதாயத்திற்குள்ளே முட்டல் மோதல்கள் நிகழ்த்துவதாக செய்திகள் வெளிவருவது வேதனையான ஒன்று.


சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழகம் முழுவதும் ஆதரவு கருத்துக்கள் பெருகி வரும் நிலையில், இது போன்ற செய்திகள் பரவலாக பரப்பப்படுமானால் அது அவர்களின் விடுதலைக்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.
சகோதரர்களிடையே நடக்கும் சண்டைகள், அதனால் ஏற்படும் இழப்புக்கள் சமுதாயத்திற்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏகத்துவ இயக்கங்கள் நடத்திய இடஒதுக்கீட்டுப் போராட்டங்களில் பெருமளவில் சுன்னத் ஜமாஅத்தினர் கலந்து கொண்டதால் கிடைத்த வெற்றியையும், அனைத்து இயக்கங்களும் போராடியதால் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு இறங்கி வந்ததையும் சிந்தனையில் செலுத்துங்கள்.


சமுதாய சகோதரர்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நம்மை இறை நிராகரிப்பில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை நெஞ்சத்தில் பதிய வையுங்கள்.
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், அவனை கொலை செய்வது இறை நிராகரிப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)


உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ! (அல்லது) அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் ஆகிவிடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


இஸ்லாமிய மக்கள் பெரும் பாவச் செயலான கொலையின் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போதனைகளை சிர மேற்கொள்ளுங்கள். சகோதர யுத்தங்கள் நரகிற்கு கொண்டு செல்லும் காரணிகளாக மாறும் என்கிற உண்மையை உணருங்கள்.


சகோதர யுத்தம் சாய்ப்போம், ஒற்றுமைப் பாலம் அமைப்போம், எதிரிகளின் செயல் அறவே ஒழிய நித்தம் உழைப்போம்.


நன்றி : ஐஎன்டிஜெ ஆன்லைன்

பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்

பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி அலஹபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே .
அனைத்து சமுதாய மக்களும் அமைதிகாத்து, நல்லிணக்கம் பேண வேண்டும் என பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது


வதந்திகள், உணர்ச்சியை தூண்டக்கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் முதலியவற்றிற்கு பதிலளிக்கவோ எதிர்வினைகளில் ஈடுபடவோ வேண்டாம். இதுபோன்ற விஷமிகளின் வன்முறையை தூண்டும் முயற்சிகளுக்கு நாம் பலியாகிவிட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்படும் எனவே இவர்களின் இம்முயற்சிகளுக்கு அடிபணிந்து விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இப்பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நாம் முயற்ச்சிகளை மேற்கொள்வோம் இன்ஷா அல்லா.

எனவே பொதுமக்கள் கீழ்காணும் வழிமுறையை கடைபிடித்து பொறுமையுடன் அமைதி காப்போம்

  1. வதந்திகளுக்கு செவிசாய்க்க, பரப்புவதற்கு உதவ வேண்டாம்
  2. மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய SMS அனுப்ப வேண்டாம் அது பிரார்தனையாகவோ செய்தியாகவோ அல்லது நீதிமன்ற தீர்ப்பாக இருந்தாலும் சரியே
  3. முஹல்லா அல்லது ஏரியா சமுதாய தலைவர்கள் காவல்துறையினரின் தொடர்பில் இருக்கவேண்டும்
  4. ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனேயே அதனை காவல்துறையினரிடம் தெரியப்படுத்திவிடவேண்டும்
  5. இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம், எனவே தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும்
  6. நீதித்துறையின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும் எனவே நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அதில் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கும் வழிவகை உள்ளது
அமைதிக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து பாடுபட வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .

எதிர்காலத்தில் உலகளாவிய தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில் உள்ளதால் முழு உலகமே இந்தியாவை உற்று நோக்கிக்கொண்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்

நன்றி:

Wednesday, September 22, 2010

எச்சரிக்கை ! எச்சரிக்கை !! எச்சரிக்கை - பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - "24 .09 .2010"


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு
அன்பு சகோதரர்களே....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !

வருகின்ற 24 .09 .2010 வெள்ளி கிழமையன்று பாபர் மசூதி வழக்கின் முக்கிய தீர்ப்பு வருகிறது இதில் யாருக்கு சாதக பாதகமாக இருந்தாலும் பாதிப்பு என்பது இஸ்லாமியராக இருக்கும் நமக்குத்தான் என்பதை கடந்த கால சம்பவங்களில் நாம் கண் கூடாக கண்ட மறுக்க/மறைக்க முடியாத உண்மையாகும் .

ஆனால் இந்த தீர்ப்பு நமக்குசாதகமா பாதகமா என்பது இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம் (இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டியது முக்கியம்) ஆனாலும் இந்த தீர்ப்புக்கு பின் ஒருக்கால் பிரச்சனை என்று வருமேயானால் வரக்ககுடிய விளைவுகளை எதிர் கொள்ள நாம் தயாராக இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் .

இந்த தருணத்தில் நமக்கு நாமே பிரச்சனைகளை வளர்த்தும் இயக்கம் பார்த்துக்கொண்டும் அவன்தானே இவன் தானே என்று பாராமல் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாம் இது போன்ற சமுக பிரச்சனைகளில் வெற்றிகாண இயலும் .

மேலும் இந்த தீர்ப்பானது வெள்ளிக்கிழமையன்று வழங்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த தருணத்தில் நமக்கு எச்சரிக்கை தேவை . இந்த தினத்தன்று நமது பெண்களை குறைந்தது சில நாட்களுக்கு வெளியிடங்களுக்கு செல்லாமலும் பள்ளி செல்லும் பெண்பிள்ளைகளை இஸ்லாமியர் அல்லாத தனது தோழியர் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி நம்மை நாமே தற்காத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்

என்பதையும் கவனத்தில் கொண்டு நாம் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நிச்சயம் இறைவைனின் உதவி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை !

ஜிஹாதிலேயே உயர்ந்தது அநியாயக்காரனின் முன்னிலையில் நியாயத்தை எடுத்துக் கூறுவதாகும்" -நபி மொழி..

Tuesday, September 21, 2010

2 சிம் கார்டு செல் போன் அறிமுகம்

2 p• LÖŸ TVÁT†‰• YN‡ ÙLÖண்P ÙN¥ÚTÖÛ] ÚSÖefVÖ Œ¿Y]• A½˜Lப்T†‡ E·[‰.

C‰ h½†‰ ÚSÖefVÖ Œ¿Y] (C‹‡VÖ) «¼TÛ] CVeh]Ÿ «“¥ NTŸYÖ¥ ÚS¼¿ ÙNÁÛ]›¥ Œ£TŸL¸P• i½VRÖY‰:-

2 p• LÖŸPÁ ÙN¥ÚTÖÁ

2 p• LÖŸLÛ[ TVÁT†‰• YN‡ ÙLÖ
ண்P ÙN¥ÚTÖÁLÛ[ A½˜Lப்T†R ÚYண்• GÁ¿ YÖzeÛLVÖ[ŸL· TXŸ «£ப்T• ÙR¡«†R]Ÿ. AªYÖ¿ 2 p• LÖŸLÛ[ JÚW ÙN¥ÚTÖÂ¥ TVÁT†‰YRÖ¥ AÛR TVÁT†‰TYŸLºeh ÚSW•, ÙNX°, ‡\ÁÚU•TÖ BfV YN‡L· fÛPef\‰ GÁTÛR A½ÚYÖ•. ARÁ LÖWQUÖL ÚSÖefVÖ Œ¿Y]• 2 p• LÖŸ ÚTÖ• YN‡ ÙLÖண்P p1-00 GÁ\ ÙN¥ÚTÖÁ A½˜Lப்T†R·[‰.

PÖŸo ÛXy ÚTÖX

C‹R “‡V ÙN¥ÚTÖÁ AÛ]Y£eh• LyTzVÖh• «ÛXeh «¼L
ப்TP E·[‰. ARÁ «ÛX ¤.1999 UyÚU. J£ gÛV Aµ†‰YRÁ ™X• 2 p• LÖŸz¨• UÖ½ UÖ½ ÚTNXÖ•. G‹R AÛZப்ÛTயு• RY\«PÖU¥ ÚTNXÖ•. AÛZப்“ UÖ¼\• YN‡ ™X• AÛ]Y£• TVÁ AÛPf\ÖŸL·.

SÖyz¥ –Á YN‡ C¥XÖR fWÖUjL¸¥ A¥X‰ –ÁNÖW RÛP H¼T•ÚTÖ‰ C‹R ÙN¥ÚTÖÂ¥ E·[ ‘[ÖÐ ÛXy PÖŸo ÛXy ÚTÖX TVÁT•. ÚU¨• C‹R ÙN¥ÚTÖÂ¥ Y
ண்Q†‡ÛW E·[‰. ÚU¨• G•.G•.ÚWzÚVÖ ÚLyLXÖ•. ÙayÚTÖÁ ^Öe E·[‰. C†RÛ] YN‡ ÙLÖண்P ÙN¥ÚTÖ]ÖL C‰ A½˜Lப்T†R·[‰.

C‰ UÖŸeÙLyz¥ G¥XÖ CPjL¸¨• A†R UÖR ÙRÖPeL†‡¥ fÛPeh•.

CªYÖ¿ «“¥ NTŸYÖ¥ ÙR¡«†RÖŸ.

˜Á]RÖL p1-00 GÁ\ C‹R “‡V ÙN¥ÚTÖÁLÛ[ LÖ
ண்‘†‰ A½˜Lப்T†‡]ÖŸ.

நன்றி தினத்தந்தி நாளிதழ்

அதிரை நண்பன்

எங்கே செல்லும் இந்த பாதை?


ஆம்.... திருவாரூர் வரை வந்த அகல ரயில் பாதை நமூரையும் கடந்து செல்லாதா என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது .

இதற்க்கென்று பலபோராட்டங்கள் கடிதங்கள் முலமாக சம்பத்தப்பட்ட இலாக்காவிற்கு நம்மவர்கள் அனுப்பிய தகவல்கள் என ஏகப்பட்ட முயற்ச்சிகள் அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்குமுன் முன் ரயில் மறியல் போராட்டம் அறிவித்து 17 பேர் மட்டுமே கைதானார்கள் .

இது இப்படி இருக்க கடந்த மாதம் அதிரையில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொது கூட்ட மேடையில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் முத்துப்பேட்டையை சார்ந்த சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்த குறுகிய ரயில் பாதையை அடுத்த மாதத்திலிருந்து அகற்றிவிட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணியை உடனடியாக ஆரம்பிக்க ரயில்வே மந்திரியை நான் கட்டாயமாக வலியுறுத்துவேன் என ஆணித்தரமாக அடித்து சொன்னார் அவர் கூறி இன்றுடன் மாதம் இரண்டாகி விட்டது ஆனால் இன்று வரை ஒரு சிறு துரும்மபை கூட அகற்றவில்லை.

அவரின் இந்த மேடை பேச்சு மற்ற அரசியல் வாக்குறுதியை போல் நமக்கு புலப்படுகிறது .

எனவே கீழ் காணும் மின்னஜ்சல் முகவரிக்கோ அல்லது தொலைபேசியிலோ தொடர்புகொண்டு நமதூர் அகல ரயிலபாதை வாக்குறுதி விஷயத்தை நினைவூட்டி கோரிக்கை வெற்றியடைய வேண்டியது நமது கடமை .

Contact Number of Abdul Rahman

Present Address of Abdul Rahman: 189, North Avenue, New Delhi-110 001,Tels. (011) 23093029
Permanent Address of Abdul Rahman: No. 6, Scheme Road, Silver Scheme Building,Mahalingapuram, Chennai - 600 034 Tamil Nadu ,Tels. (0431) 2483708, (0442) 8171786 (R)
E Mail ID of Abdul Rahman: rahmanexec@yahoo.com
Telephone Number of Abdul Rahman: (011) 23093029, (0431) 2483708, (0442) 8171786 (R)
Mobile Number of Abdul Rahman: 9013180160, 09944302398

படம் :ஜேப்பி

Monday, September 20, 2010

ரமழானுக்குப் பின் நாம்..

ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க வழிபாடுகளை தொடர்வோம். அவனை சந்திக்கின்ற வரை இம்மார்க்கத்தில் உறுதியோடு இருக்க அவனிடம் பிரார்த்தனை செய்வோம். வணக்க வழிபாடுகளும்,அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் பெருநாளோடு முடிந்து விடாது. அல்லாஹ் கூறுகிறான்:
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99)
ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:ஒரு உண்மையான முஸ்லிமின் அமல்களை மரணம் தான் முடிவுக்கு கொண்டு வரும்.
உமர்(ரலி)அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு உரையாற்றும் போது நிச்சயமாக எவர்கள்; “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ”நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (41:30).
இவ்வசனத்தை ஓதிக்காட்டி விட்டு கூறினார்கள் அல்லாஹ்விற்க்கு கட்டுபடுவதில் தொடர்ந்து உறுதியாக இருங்கள். எனவே ரமழான் மாதம் சென்று விட்டால் வணக்க வழிபாடுகளை விட்டும் ஓர் இறை நம்பிக்கையாளன் தொடர்பற்று போக மாட்டான்.
உபரியான நோன்புகளின் சிறப்பும் அதன் நன்மைகளும்
‘ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி), நூல்: முஸ்லிம்
இந்நபி மொழிக்கு மார்க்க அறிஞர்கள் மூன்று விதமான விளக்கங்களை கொடுத்துள்ளனர்.
1. பெருநாளை அடுத்து வருகின்ற தொடர்ச்சியான ஆறு நாட்கள்.
2. ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியான ஏதாவது ஆறு நாட்கள்
3. ஷவ்வால் மாதத்தில் ஏதாவது ஆறு நாட்கள் இம்மூன்று கருத்தில் எதனடிப்படையிலும் நாம் அமல் செய்யலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமழானோடு ரமழான் நோன்பு நோற்று வருவதும் காலெமெல்லாம் நோன்பிருப்பதாகும். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி) நூல்:அஹ்மத், முஸ்லிம்
என் நண்பர் முஹம்மது(ஸல்)அவர்கள் மூன்று காரியங்களை எனக்கு உபதேசம் செய்தார்கள்
1. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது,
2. லுஹா நேரத்தில் இரண்டு ரக்க அத் தொழுவது,
3. நான் உறங்கும் முன் வித்ரு தொழுவது.
அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்
‘மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால், 13,14,15 ஆம் நாட்களில் நோன்பு வைப்பீராக’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூதர் (ரழி), நூல்: திர்மிதீ, அஹ்மத், நஸாயி
அரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூ கதாதா(ரழி). நூல்:முஸ்லிம்.
முஹர்ரம் மாதத்தில் 10 ஆம் நாளின் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அது சென்ற ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிறது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) நூல்: முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: ரமழான் மாதத்திற்குப் பிறகு எது சிறந்த நோன்பு? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், ரமழான் மாதத்திற்கு பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பு. அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
திங்கள் கிழமையில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குச் சொன்னார்கள், அது எத்தகைய நாளெனில் அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் என் மீது வஹி எனும் இறையருட் செய்தி இறக்கப்பட்டது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) நூல்:முஸ்லிம்.
நபி (ஸல்)கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னால்) அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டுமென நான் விரும்புகின்றேன். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி), நூல்:திர்மிதீ
ஐவேளை தொழுகையை ஜமாஅத்தோடு பள்ளி வாசலில் நிறை வேற்றறுவதோடு உபரியான தொழுகையிலும் கவனம் செலுத்த வேண்டும்
ரமழான் மாதத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஜமாஅத் தொழுகையில் பங்கெடுத்தனர். ரமழானுக்குப்பின் பள்ளி வாசல்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.
‘கூட்டுத் தொழுகை என்பது, தனித்து தொழுவதை விட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும்’. என நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி),நூல்: புகாரி,முஸ்லிம்
ரமழான் மாத இரவின் சிறப்புத் தொழுகை முடிந்து விட்டாலும் திண்ணமாக இரவுத் தொழுகை என்பது ஆண்டு முழுவதும் ஒவ்வொரு இரவிலும் கடை பிடிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பு மிக்க தொழுகை இரவுத் தொழுகையாகும்’. அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.
இரவுத் தொழுகையின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் வந்துள்ளன. விரிவஞ்சி நாம் இங்கே குறிப்பிடவில்லை.
‘கடமை அல்லாத உபரியான பனிரெண்டு ரக்க அத்களை ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வுக்காகத் தொழும் ஒரு முஸ்லிமான அடியானுக்கு,சொர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுகின்றான்.அறிவிப்பாளர்:உம்மு ஹபீபா (ரழி),நூல்:முஸ்லிம்
(ஃபஜ்ருக்கு முன் 2, லுஹருக்கு முன் 4, பின் 2, மஃரிபிற்கு பின் 2, இஷா விற்கு பின் 2)
குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள குறைந்தது தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதும் ஓதி முடிக்க முயற்ச்சி செய்ய வேண்டும். குர்ஆன் ஓதுவதின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வந்துள்ளன.
சகோதரர்களே!
நன்மையான அனைத்து காரியங்களிலும் பேரார்வம் கொள்ளுங்கள், வழிபாடுகளை நிறை வேற்றுவதில் நன்முயற்ச்சி செய்யுங்கள், தவறுகளையும் தீமைகளையும் தவிர்த்து விடுங்கள். அப்படிச் செய்தால் இவ்வுலகில் தூய வாழ்வையும் மரணத்திற்குப் பிறகு அதிகமான கூலியையும் நீங்கள் வென்றெடுப்பீர்கள்!
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.(16:97)
”எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த அமல்களை) எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”(2:127)
யா அல்லாஹ்! எங்களையும், எங்கள் பெற்றோர்களையும்,அனைத்து முஸ்லீம்களின் பாவங்களையும் மன்னிப்பாயாக! ஈமான் நம்பிக்கையிலும் நற்செயல் புரிவதிலும் எங்களை உறுதியோடு இருக்கச் செய்வாயாக! தூய வாழ்வு கொண்டு எங்களை வாழச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களைச் சேர்த்து வைப்பாயாக!