விவாகரத்து அறிவுரைகள்

விவாகரத்துகள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் விவாகரத்து கோரி தம்பதிகள் நாடி வரும் சென்னை  குடும்ப நலகோர்ட்டில், இனிமையான இல்லறத்திற்கு என்று தலைப்பில் 10 அறிவுரகளை பெரிய போர்டில் எழுதி வைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
சென்னை குடும்ப நல கோர்ட்டின் முதன்மை குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள்:

1.
ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

2.
வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3.
விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4.
கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5.
உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6.
விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

7.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8.
செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9.
இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

-
சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்
-
அனுசரித்துப் போகுதல்
-
மற்றவர்களை மதித்து நடத்தல்.
மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள 10வது அறிவுரை.
விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், 'டைவர்ஸ்' கேட்டு வரும் ஜோடிகள் 'டைவர்ட்' ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

நன்றி:அ.ஜ. தாஜுதீன்
Share:

Readers concern - வாசகர் குரல் - பேரூ. அதிகாரிகளின் கள்ளத்தனம்

இச்செய்தி உள்ளூர் பேரூராட்சி நிர்வாகத்தினரின்  அலட்சிய போக்கையும் அஎ எடுத்துள்ள குறைந்தபட்ச முயற்சியும்.

மேலதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, உள்ளூர் தன்னார்வலர்கள் மேலும் உதவ விரும்பினால் மின்னஞ்சலில் தொடர்புகொள்க.

அஎ

---------- Forwarded message ----------
From: ****
Date: 2010/10/21
Subject: complaint
To: அதிரை எக்ஸ்பிரஸ் <adiraixpress@gmail.com>


assalamu alaikkum,
                               Dear Team I am **** from dubai. I heard that u can solve public problems. I regularly watch all news from adiraixpress so i have written my problem. i trust that u can find solution for this.
we have house in ***, *** we r living there for 2 years from jan. 2008.
            
On that time we registered for water connection. and paid Rs. 7,000/- to Kann*n (Adirai Panchayat Staff).
and till now he dint give any receipt for connection. and we r using water.
3 months before i came to adirai for vacation. ththen went to panchayat office,I explained about my housewater connection. they said he suspended for some reasons. and we dont know about your connection. but anyway u should pay whatever the amount.
then i said we paid for connection charge more than government charges to kann*n as per he asked.
then they told usto pay only water tax. for 2 years and then i agreed. and then my father went and pay Rs. 1600/- now Aug 2010 as they said. while they  said kaakka you can go now and we will get signature from VEO then we will call you. then my father came out without any proof for payment of Rs. 1600/-
but, now they are again making trouble. our VEO not yet come to office. if he comes we will ask him to sign for your bills. my father whenever goes there they are saying no VEO. and they are saying your money go anywhere so wait until he comes.
my father affraid now like if i force them means. they may disconnect the lines.
So i request you please interfere in our problems. and help to my father's situations.
Share:

நல்ல பேரை வாங்க வேண்டும்!

சிக்கனம் என்பதைப் பற்றி எழுதத் துவங்கிய நேரமோ என்னவோ தெரியவில்லை தொடர்ந்து எழுத இயலாமல் போனது, சிக்கனத்திற்க்கும் சேமிப்பிற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு, சில கருமிகள் எச்சில் கையினால் காகத்தை கூட துரத்த பயப்படும் நபர்களுக்கு பணம் சேருவதும் உண்டும், ஒரு பழைய மொழி உண்டு 'இறைக்கின்ற கிணறுதான் சுரக்கும்' என்பார்கள், ஆனால் இறைத்துக்கொண்டே இருந்தால் காய்ந்து போகும் நிலைதான் தற்காலத்தில் காணப்படும் நிலையாக உள்ளது, சிலர் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று முயற்சிகளை மிகவும் கஷ்டப்பட்டு செய்து பார்க்கும் போதுதான் என்றைக்கும் இல்லாத அதிக செலவினங்கள் ஏற்பட்டு கையில் ஒரு பைசா கூட இல்லாமல் போவதும் உண்டு, இதற்க்கெல்லாம் நாம் காரணமில்லை,

சிக்கனக்காரர்களிடம் பணம் தங்குவதை நம்மால் காண முடிகிறது, சிக்கனத்திற்க்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம், ஒன்றையும் சாப்பிடாமல் எங்கேயாவது ஓசி சாப்பாடு கிடைக்குமா என்று அலைந்து கொண்டு தன் கையிலிருக்கும் பணத்தை தனது பசிக்காக செலவழிக்க தயங்குபவன் கருமி, சிக்கனம் என்பது, கையிலிருக்கும் இருப்பிற்க்கேர்ப்ப செலவு செய்து அன்றைய பசியை ஆற்றி அடுத்த நாளைக்கும் மீதம் எடுத்து வைப்பவர் சிக்கனக்காரர். இதில் ஒரு விஷயம் என்னை மிகவும் சிந்திக்க செய்வதுண்டு, தன் வயிற்றிக்கு கூட கை காசை செலவழித்து வயிற்று பசியை தீர்க்காத தனது பணம் வேறு எதற்கு என்பதும், அவ்வாறு கருமித்தனம் செய்தே கோடிகளை சேமித்து வைக்கும் பணக்காரர்களும் நிறையவே உண்டு என்பதும் உண்மை.

பணமும் காசும் சிக்கனக்காரர்களிடமும் கருமிகளிடமும் மட்டுமே தங்கும் இயல்பை கொண்டதாக காணப்படுவதும் நிஜம், சில பணக்கார வீடுகளில் வேலைக்காரர்களுக்கு குடிப்பதற்கு காப்பி அல்லது தேநீர் கொடுப்பதாக வாக்குக்கொடுத்திருந்தால் வெல்லம் போட்ட தேநீரையே பருக கொடுப்பது, நியாய விலைக்கடையில் வாங்கிய அரிசியில் உண்டாக்கிய சோற்றையே உண்ண கொடுக்கும் கொடூரங்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களை கருமியில் சேர்த்துக்கொள்ளலாம், இவர்களிடம் பணம், பொருள், நகை, நிலம், வீடு என்று ஐஸ்வரியங்கள் எல்லாமே வந்து குவிந்து கிடப்பதைக் காணுகின்ற போது eந கற்பனையில் தோன்றுவது, கையெல்லாம் குஷ்டரோகத்தினால் பழுத்துக் துர்நாற்றம் வீசுகின்ற ஒருவர் மிகவும் சுவையான பிரியாணி அல்லது வேறு சுவையான உணவை பரிமாறுவது போலத்தான்,

காசும் பணமும் கருமியிடம் சேர்வதின் பொருளென்ன, நீர் பள்ளத்தில் சேரும் ஆனால் அந்த நீர் பூமியையும் அதன் அருகில் உள்ள தாவரங்களுக்கும் மிருகங்களுக்கும் ஏன் மனிதர்களுக்கும் கூட பெரும் உதவியாக இருப்பதுண்டு, ஆனால் கருமியின் பொருள் வேறு ஒரு சோம்பேறியிடம் சென்றடைவதும் உண்டு, இந்த சோம்பேறிகள் யார் என்பதை கவனித்தால், அந்த கருமிகளால் உருவாக்கப்பட்ட அவர்களது வாரிசுகள், அல்லது வாரிசுகளே இல்லாத பொது சொத்தாக மாறுகின்ற வாய்ப்பை பெறுகின்ற ஐஸ்வரியங்கள், ஐஸ்வரியத்தை அடைவதற்காகவே காத்திருந்த உறவினர்கள் என்று கருமி அடைகாத்த பொருள் அத்தனையும் சென்றடையும் இடம் மிகவும் மோசமானதாகவே காணப்படுகிறது.

சிக்கனம் செய்து சேமித்த பணம் பொருள் நகை வீடு நிலம் எதுவாக இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் சேமித்தவரின் உடல் நலன் மற்றும் பலவித தேவைகளுக்கு பயன்படுவதை யாராலும் மறுக்க இயலாது. சிக்கனம் கருமித்தனம் இவற்றைத்தவிர வேறு ஒன்று உண்டு அது இவற்றிக்கு முற்றும் எதிரான ஆடம்பரம், சிலர் வரும்படிக்கு அதிகமாக செலவழித்து தங்களது அந்தஸ்த்தை உயர்த்தி காண்பிக்க பெரும்பாடுபடுவார்கள், சிலர் அடுத்தவருக்கு காண்பிப்பதற்காக இல்லையென்றாலும் வரவை விட அதிகம் செலவழித்தே கடன்காரனாகி அவதியுறும் நபர்களும் உண்டு, இவர்களை திருத்துவது இயலாத காரியம், இவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தின் கதி அதோ கதிதான், இந்த கெட்ட பழக்கம் வாலிபபருவத்திலேயே இவர்களிடம் தேடிவந்து ஒட்டிக்கொள்வது, இன்னும் சிலர் சிறு வயது முதலே திருடி வீட்டில் அக்கம்பக்கத்தில் கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்று விற்று ஆடம்பரத்தை அல்லது தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு தீய பழக்கத்திற்கு அடிமைகளாகி விடுகின்றனர்.

குழந்தைப் பருவம் முதலே இத்தகை செயல்களை கண்டு பிடித்து பெற்றோர்கள் திருத்தாவிடில் இவர்களது நிலைமை சமூக விரோதிகளை உருவாக்கும். சிக்கனம் சேமிப்பு, ஆடம்பரம், தேவைக்கு ஏற்ப செலவழித்தல், கருமித்தனம் இவை எல்லாமே பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் அடிப்படை காரணம் தனிப்பட்ட நபரின் சிறு வயது முதலே கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய நல் ஒழுக்கங்களில் இவைகளும் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவை என்பதை பெற்றோர் நன்கு உணர வேண்டும், பிறவியிலேயே கருமியாகவும் ஆடம்பரமாகவும் பிறக்கும் நபர்களும் உண்டு எவ்வாறிருந்தாலும் ஒருவரின் வளர்ப்பு முறை என்பது எந்த பழக்க வழக்கத்திற்கும் மிகவும் அடிப்படையான சிறந்த காலம் என்பது உறுதி.

சிறந்த மனிதர்களை உருவாக்குகின்ற முக்கிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றினால் சிறந்த எதிர்கால தலை முறைகள் உருவாகும் வாய்ப்பு உண்டு
Share:

நமதூரில் இவ்வருடம் குர்பானி கொடுப்பவர்களின் கவனத்திற்கு

இவ்வருடம் குர்பானி கொடுப்பவர்கள் அதன் தோள்களை எந்த ஒரு இயக்கங்களுக்கும கொடுக்காமல் எந்த வித பொருளாதார பின்னணியும் இல்லமால் இன்றுவரை பொருளாதார சிக்கலில் நடந்து வரும் நமதூர் எத்தீம் கானா மதரசாவிற்கு தங்கள் வீடுகளில் அறுக்கும் ஆடு மாடு ஒட்டகையின் தோள்களை தந்து இங்கு பயிலும் ஆதரவற்ற பிள்ளைகளின் மார்க்க/உலக கல்விக்கு உதவிடுவது தான் சரியான வழியாகும் .

அதை விடுத்து மற்ற இயக்கங்களுக்கும், கழக , ஜமாத்துகளுக்கும் ,லீகுகளுக்கும், கொடுப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை.

மாறாக இவர்கள் பண்ணும் போஸ்டர் யூத்தங்களுக்கும் இன்னபிற தேவையற்ற செயல்களுக்கும் தான் நாம் கொடுக்கும் உதவிகளை பயன்படுதுகிரார்களே தவிர எந்த ஒரு நன்மையான கரியங்களுக்குகாக பயன்படுவதாய் எமக்கு புலப்படுவது இல்லை .

எனவே தங்கள் வீடுகளில் அறுக்கும் குர்பானி தோள்களை நமதூர் எத்தீம் கானா மதரசாவிற்கு கொடுத்து ஆதவற்ற பிள்ளைகளின் மார்க்க/உலக கல்விக்கு உங்களது பங்கை அளித்து நீங்கள் கொடுக்கும் குர்பானியை இறைவனிடத்தில் ஏற்ற மிக்கதாக்கி கொள்ளுங்கள்.

மேலும் அதிரை பைத்துல்மால் எண்ணிலடங்கா பல நல்ல உதவிகளை செவ்வனே செய்தது வருவதை யாராலும் மறுக்க/மறக்க இயலாது பைத்துல் மால் நிர்வாகிகள் இந்த எத்திம்கானவிற்கு இவ்வருடம் தாங்கள் அறுத்து குர்பானிகொடுக்கும் தோள்களை மேற்கண்ட மதரசாவிற்கு வழங்கிட ஆவன செய்ய வேண்டுகிறேன் . அல்லாஹ் உங்களது ஹலாலான தேவைகளை பூர்த்தி செய்வானாக ஆமீன் .
Share:

உத்தி…!

”ஹலோ …. யாரு?”
“அஸ்ஸலாமு அலைக்கும் ரபீக்தானே? சுல்தானோட மகன் ரபீக்?
‘’ஆமா …. நீங்க?’’
‘’நான் தான் கம்பம்ல் இருந்து காதர் மாமா பேசறேன். சின்னப் புள்ளைல பார்த்தது. சொகமா இருக்கீயா?
  ‘’ஐயோ காதர் மாமா… ! எங்கப்பாவோட பெஸ்ட் பிரண்ட். சொல்லுங்க மாமா. எப்படியிருக்கீங்க? என்ன விசேஷம்?’’
  ‘’நல்லார்க்கேன் …. அப்புறம் நஜீபுன்னு ஒரு பையன் இருக்கானாமே, தேனிக்காரப் பையன். உங்கூடப் படிச்சவண்டு சொன்னாங்க. அவன் எப்படி நல்ல பையனா? சும்மா ஒரு காரியமாத்தேன் கேக்கறேன்.’’
  ‘’சூப்பர் பையன் மாமா. முன்பெல்லாம் அழகா இருப்பான்…’’
  ’’ஏன் இப்ப அழகா இல்லயா?’’
  ‘’இப்பக் கொஞ்சம் குடிக்கப் பழகி ஆளு நோஞ்சானாகிப் போனான். இருந்தாலும் விவரமான பையன் மாமா. ரொம்பக் கெட்டிக்காரன்.’’
  ‘’அப்படியா என்ன தொழில் செய்யறான்?’’
  ‘’தற்சமயம் ஒண்ணுமில்லை மாமா. அவுங்கப்பா அவன நம்பமாட்டேங்கிறார். ஒரு தரம் ரெண்டு லட்சத்தை தொலைச்சுட்டான்றதுக்காக பெத்த புள்ளைய வாழ்க்கை பூரா நம்பாட்டி எப்படி மாமா… அது சரி எதுக்கு அவனப் பத்திக் கேக்குறீங்க மாமா?’’
  ‘’சும்மா ஒரு கல்யாண ஆலோசனை. என்னுடைய ஒரு நண்பர் விசாரிக்கச் சொன்னார்.”
  ‘’தைரியமா பெண் கொடுக்கச் சொல்லுங்க மாமா. கடை வச்சுக் கொடுத்தா எப்படியும் பொழச்சுக்கிறுவான்.’’
  ‘’ப்ச்… அவன விடு… வேறே ஒரு பையன் இருக்கானாமே நாசர் –ன்னு சின்னமனூர்க்காரன். அவனத் தெரியுமா?’’
 ‘’நல்லாத் தெரியும். நஜீப விட தங்கமான பையன் மாமா.’’
 ‘’அவன் என்ன செய்யறானாம்?’’
 ‘’ஸ்டேசனரிக் கடை வைத்திருந்தான்.’’
 ’’வைத்திருந்தானா? இப்ப இல்லையா?’’
‘’ஆமா மாமா. ஃபிரண்டுங்க கூட சேர்ந்து சீட்டு விளையாண்டு ஒரே ராத்திரில எழுபத்தைந்தாயிரம் ரூபாய் தோத்துட்டான். அந்த விரக்தில குடி கொஞ்சம் ஓவராயிடுச்சு. மத்தபடி எந்தக் கம்பளைண்டுமில்லங்க மாமா. பொண்ணுக் கொடுக்கிறதாயிருந்தா ரெண்டு பையன்கள்ல யாருக்கு வேணும்னாலும் தைரியமா கொடுக்கச் சொல்லுங்க மாமா. நான் கூட ராத்திரி பூரா அவனுங்க கூடத்தான் இருந்தேன். சுபுஹுக்கு முன்னாடிதான் வந்து படுத்தேன். லுஹர் நேரம் போன் பண்ணி எழுப்பிட்டீங்க. அவனுங்க ரெண்டு பேருமே என்னோட உயிர் நண்பனுங்க. யாரையுமே நான் குறைச்சு சொல்ல மாட்டேன். சரிதானே மாமா?’’
  ‘’ரொம்ப சரிங்க மருமகனே. உன்னச் சின்னப் பிள்ளைல பார்த்தது. உங்கப்பாவை நல்லாத் தெரியும். நீ உங்கப்பனுக்கு அப்பனா இருக்கிறீயே. நான் அவனுங்களைப் பற்றி விசாரிக்குறதுக்காக போன் பண்ணலை. உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறத்தான் கூப்பிட்டேன். அல்லாஹ் காப்பாத்தினான். வச்சிரட்டா.’’  
நன்றி : சமரசம் : ஆகஸ்ட் 1-15,2010 இதழிலிருந்து
Share:

ஷம்சுல் இஸ்லாம் சங்க பெயரில் போலி வலைப்பூ


திரைப்பட்டினத்தில் ப‌ல வலைப்பூக்கள் உள்ளன. .அதிரையோடு தொடர்புடைய பெயர்ப் பஞ்சம் ஏற்படும் அளவு ஒவ்வொன்றும் பெயர்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

அதனால்தான் இப்போது
எண்களிலும் கூட வலைப்பூ பதிவு செய்யப்படுகின்றது! அந்த வலைப்பூக்காரர்கள் (வலைஞர்கள்) அவரவரிடம் உள்ள தகவலுக்கேற்பச் செய்திகளை வெளியிடுகிறார்கள். தனி நபர்கள் தமக்குப் பிடித்தமான பெயரில் இயங்குகிறார்கள்; சில இயக்கங்கள் அவர்களின் தலைமை, கிளை அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடம் அனுமதி பெற்று இயக்கப் பெயர்களில் நடாத்துகிறார்கள். இவை எல்லாவற்றையும் நாம் வர‌வேற்கிறோம்.

ஆனால், சில தினங்களாக 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்'
http://www.samsulislamsangam.blogspot.com/ என்ற பெயரில் ஒரு வலைப்பூ உலா வருகிறது. அது லண்டன் கொரைடன் பகுதியிலிருந்து இயக்கப்படுவதாகவும், அதன் 'சுயவிபரக் குறிப்பு' சொல்கிறது. 'இந்த வலைத்தளம் சம்சுல் இஸ்லாம் சங்கதிற்குட்பட்ட முஹல்லாவாசிகளின் கூட்டு முயற்சி'என்றும் பதிவிட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் சங்கத்தில் ஏற்பட்ட பரபரப்பு ஒரு வழியாக அறிஞர் பெருமக்களால் தீர்த்து வைக்கப்பட்டு, இப்போதுதான் பெருமூச்சு விட்டுள்ளது. இந்த நிலையில் வலைப்பூ வழியில் மீண்டும் சோதனை வந்துள்ளது. வலைப்பூ மட்டுமின்றி, மின்னஞ்சல் முகரியும் துவக்கியுள்ளார்கள்.

எனவே, ஷ‌ம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் இந்த வலைப்பூவிற்கும் அறவே சம்மந்தமில்லை என்பதை அதிரைப்பட்டின வாசிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வதாக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசி ஒருவர் தெரிவித்தார். தேவையானால் இந்த வலைப்பூ இயக்குனர்கள் வேறு பெயரைத் தேர்வு செய்துக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.
இந்த வலைப்பூவிற்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் தொடர்பில்லை என்பதை சங்கம் அதிகாரப்பூர்வமாகத் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், சங்கம் முறையாகப் பதிவு செய்யப்பட அமைப்பாகும். சங்கம் மறுப்புத் தெரிவிக்காவிடில், அந்த வலைப்பூவில் வரும் செய்திகள் சங்கத்திற்கெதிராகவே திரும்ப வாய்ப்புள்ளது.

நன்றி:அதிரை போஸ்ட்
Share:

அதிரை பைத்துல்மால் சார்பில் நடைபெறும் ஆட்டுக் குர்பானி மற்றும் கூட்டு குர்பானித் திட்டம்

அன்பிற்குரிய சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் சார்பில் நடைபெறும் ஆட்டுக் குர்பானி மற்றும் கூட்டு குர்பானித் திட்டத்திற்கு அபரிமிதமான ஆதரவை அளிக்கும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

கூட்டுக் குர்பானித் திட்டத்தில் 1 பங்கு ரூ.850/- மட்டும்.

ஆட்டுக் குர்பானித் திட்டத்தில் உயிருள்ள ஆடு எடை போடப்பட்டு கிலோ கணக்கில் விற்கப்படும். சரியான விலை பின்னர் அறிவிக்கப்படும், விலை நியாயமாக குறைவாக இருக்கும். எனவே ஆதரவு தாருங்கள். தங்களது பெயர்களை உடனே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

1. 9942520199
2. 9443448115
3. 9865096199
4. 9842468009
5. 9976610786
6. 9443617330

Email : adiraibaithulmal@yahoo.com

வஸ்ஸலாம்
தங்கள் நலம் நாடும்,

S.பர்கத், MA.,M.Phil.,M.Ed.,PGDTE., A.முனாப் BA.BL.,
தலைவர் செயலர்
அதிரை பைத்துல்மால் அதிரை பைத்துல்மால்
Share:

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் உறவினர் இஸ்லாத்தை ஏற்றார்.


அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

நீண்ட நெடுங்காலமாக கிருஸ்துவ பாரம்பரியத்தை கொண்ட இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனியான லாரன் பூத் சமீபத்தில் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இதை அவரே அறிவித்துள்ளார்.

பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இவர். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த அவர் அங்கு இஸ்லாமிய மார்க்கத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமாக தன்னை அறிவித்துக் கொண்டார்.

உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.

சமீபத்தில், இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொகண்ட உலக அமைதி மற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில், பூத்தும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் மதம் மாறியிருக்கலாமோ என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் பூத்.

ஈரானில் வைத்து தான் இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன் என கூறும் 43 வயதாகும் பூத், இப்போது தான் தினசரி ஐந்து வேளை தொழுவதாகும், சில சமயம் மசூதிக்கும் போவதாகும் கடந்த 45 நாட்களாக ஆல்கஹால் கலந்த பானம் எதையும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது வெளியில் செல்லும்போது முஸ்லீம் பெண்களைப் போல தனது தலையைச் சுற்றிலும் துணி கட்டிக் கொள்கிறார் பூத். எதிர்காலத்தில் புர்க்கா அணியவும் முடிவு செய்துள்ளாராம். குரானை தினசரி படிக்கிறாராம்.

தனது இந்த மதமாற்றம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பது தனக்குத் தெரியும் என்று கூறும் பூத், ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையுண்டு என்பதை நான் அறிவேன் என்கிறார்.

பூத்தின் மதமாற்றம் குறித்து செரி பிளேரும், டோனி பிளேரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

டோனி பிளேரே 2007ம் ஆண்டு வரை சர்ச் ஆப் இங்கிலாந்தில் உறுப்பினராக இருந்தவர்தான். அதன் பின்னர்தான் அவர் ரோமன் கத்தோலிக்கராக மாறினார். செர்ரி பிளேர் ஆரம்பத்திலிருந்தே ரோமன் கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பூத், மார்னிங் ஸ்டார் என்ற கம்யூனிஸ்ட் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர் என்று காட்டமாக கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷியா கொள்கையினை கொண்ட ஈரானின் தொடர்புகள் மூலம் இஸ்லாத்தை ஏற்ற லாரன்ஸ் பூத், மிக விரைவில் இஸ்லாத்தின் உண்மையான விஷயங்களை அறிந்து மார்க்க பிரச்சாராக மாறுவார் என பிரார்த்திப்போம்.

Share:

ஆம்னி பஸ்கள்- அதிக கட்டணம் கேட்டால் 'பெர்மிட்' ரத்து--அரசு எச்சரிக்கை

பண்டிகை நாட்களை முன்னிட்டு பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, பலரும் பயண முன்பதிவு செய்துவிடுன்கின்றனர். எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு ரயில் முன்பதிவுகளும், அரசுப் பேருந்து முன்பதிவுகளும் ஏற்கனவே முடுவடைந்துவிட்ட நிலையில், கடைசியாக மக்கள் நாடிச் செல்லும் இடமாக தனியார் பேருந்துகள் (ஆம்னி பஸ்கள்) விளங்குகின்றன. இத்தகைய மக்களின் தேவையை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ளும் பல (அனைத்து) ஆம்னி பஸ் நிறுவனத்தினரும் தங்கள் இஷ்டத்திற்கு பயணக் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்கின்றன. இந்த முறைக்கு நமதூர் செல்லும் 8 பேருந்துகளிம் விதிவிலக்கல்ல. மற்ற நாட்களில் 300 ரூபாய்க்கு விற்கப்படும் பயணச் சீட்டு, 400 ரூபாயாக பண்டிகைக் காலங்களில் விற்கப்பட்டு வந்தன. ஆனால், இதையும் தாண்டி இந்த முறை ஒரு டிக்கட்டின் விலை 450/500 ரூபாய் என ஏற்றப்பட்டு இருக்கின்றது எனக் கேள்வி படுகின்றோம்.

ஆனால் இந்த முறை, பயணிகளின் ஏக்கத்திற்கு தீர்வாக வந்திருக்கின்றது, போக்குவரத்து அமைச்சரின் நேற்றைய அறிவிப்பு. மற்ற நாட்களைப் போலன்றி, பண்டிகைக்காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் (ஆம்னி பஸ்களின்) உரிமம் ரத்து செய்யப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது (பார்க்க தினகரன் நாளிதழ் 25 - அக்- 2010 ).

Share: