Friday, December 31, 2010

புத்தாண்டு கொண்டாடலாமா?

  • நாளை ஆங்கில வருட கணக்கு படி 2011 ஆம் ஆண்டு துவங்க உள்ளது. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  • இது கிருத்துவர்களின் வருடபிறப்பாகும். இதை முஸ்லிம்களில் சிலர் கொண்டாடுகின்றனர்.
  • இது முற்றிலும் தவறாகும்.
  • வாழ்த்து செய்தியும் புத்தாடை அணிவதும் கூடாது. 
  • சென்னை வாழ்முஸ்லிம்களே புத்தாண்டு கொண்டாட்டம்என்ற பெயரில் அனாசாரத்தை அரேங்கேற்றாதீர்கள்.
  • புத்தாண்டு வாழ்த்துஎன்ற பெயரில் வாழ்த்துசெய்தி அனுப்பாதீர்கள்.     
       நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல.
நூல்:அபு தாவூத்
எண்:3512,4203

Thursday, December 30, 2010

இஸ்லாமிய பங்கு வர்த்தகம்!!!


மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற கூடியவையாக இருக்கும். இதில் தற்போது டாடா கன்ஷல்டன்ஸி சர்வீஸஸ், பாரதி டெல், ரிலையன்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் இனணைந்துள்ளன. இஸ்லாமிய பங்கு வர்த்தகத்தில் இணையும் நிறுவனங்கள், தக்வா அட்வைசரி நிறுவனத்தின் கடுமையான பரிசீலனைக்கு பிறகே வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதில் இனைய விரும்பும் நிறுவனங்கள், மது, சூதாட்டம், வட்டி போன்ற வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

இந்த பங்கு வர்த்தகத்தில் மத ரீதியான எந்த வித தடங்கலும் இல்லை. யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். ஆரம்பித்த நாள் முதல் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து இருப்பதாக மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு, இந்தியாவில் முஸ்லிம்களி நிலை குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்கள் முதலீட்டு விவகாரங்களில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று கூறியிருந்தது குறிப்பிட தக்கது .

Wednesday, December 29, 2010

நிரம்பிய குளங்களும், நிரப்பமான திருமணங்களும்.


அல்ஹம்துலில்லாஹ் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக நமதூரில் உள்ள அனைத்துக்குளங்களும் நிரம்பி வழிகின்றன.

அரையாணடு தேர்வுகள முடிவுற்ற நிலையில் நிரப்பமாக திருமணங்களும் அதிகளவிலே நமதூரிலே நடைபெற்றுவருகின்றது. வழக்கமாக முழு ஆண்டு தேர்வுக்குப்பின் தான் அதிக திருமணங்கள் நடைபெறும், சென்னையில் தொழில்புரிபவர்களும் ஏப்ரல் மே மாதங்களில் தங்கள் பிள்ளைகளின் முழு ஆண்டு தேர்வு கோடை விடுமுறையில் ஊருக்கு வருவது வழக்கம். மாறாக இவ்வாண்டு இறுதியில் (டிசம்பர்) சென்னை வாழ் அதிரை பெருமக்கள் அதிகளவில் இத்திருமணங்களில் பங்குப்பெற்றதையும் காண முடிந்தது. செக்கடிப்பள்ளி கிட்டத்தட்ட திருமண மண்டபம் போல எந்நேரமும் படு பிஸியாக இருந்தது. ஒரு நிக்காஹ் நடைப்பெற்றுக்கொண்டிருக்குப்போதே அடுத்த மாப்பிள்ளை வந்த வண்ணம் இருந்தது. வக வகையான கார்களும் நம்மூரில் உலா வருகின்றன. கிட்டத்தட்ட கோடை விடுமுறை மற்றும் பெருநாட்களில் காணப்படும் பரபரப்பும் பிஸியுமான சூழ்நிலை தற்பொழுது நிலவி வருகிறது. கடும் குளிரும், பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது.

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர் வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து நடத்தும்

கல்வி விழிப்புணர்வு மாநாடு


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2011 ஜனவரி 14,15 தேதிகளில் நம் எதிர்காலச் சந்ததிகளான மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் முன்னேற்றத்தையும் வளவாழ்வையும் கருத்தில் கொண்டு, கல்வி விழிப்புணர்வு மாநாடு நமதூரில் நடைபெற இருக்கின்றது.

அவ்வமயம், நம் சமுதாயத்தின் கல்விச் சிந்தனையாளர்களும் பயிலரங்கு விற்பன்னர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்புச்சொற்பொழிவுகளும் பயிற்சிகளும் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

கல்வி நிலையங்களின் நிர்வாகிகளே! பெற்றோர்களே! பெரியோர்களே! உங்கள் பராமரிப்பில் இருக்கும் மாணவச் செல்வங்களை இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் வந்து கலந்து பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம். நீங்களும் வந்து கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பயன் பெறலாம்.


இவண்,


இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை,
அதிரைநிருபர்,
அதிரை இஸ்லாமிக் மிஷன்.


கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி விரிவான அறிவிப்பும் நிகழ்ச்சி விவரங்களும் பின்னர் வெளியிடப்பெறும், இன்ஷா அல்லாஹ்.


நாளைய நம் சமுதாயத்தை தலைநிமிர்ந்த சமுதாயமாக உருவாக்குவோம். நமக்குரிய உரிமைகளை நம் பக்கம் மீட்டெடுப்போம். ஆட்சி அதிகாரத்திலும், சட்டத்துறையிலும், நீதித்துறையிலும் நம் இஸ்லாமிய ஆளுமையை நிலைநிறுத்துவோம். உலக மக்களுக்கு ஓர் உதாரணமாக நம் வருங்கால சந்ததியினரை உருவாக்க அனைவரும் வாருங்கள், மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியை வழியுறுத்தி வலிமைமிக்க சமுதாயமாக நம் முஸ்லீம் சமுதாயம் உருவாக ஒற்றுமை கரம் நீட்டுகிறோம்.

வாருங்கள் ஒன்றுபடுவோம். வெற்றி பெற்ற சமுதாயமாக உருவெடுப்போம். இன்ஷா அல்லாஹ்.


கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற படைத்தவனிடம் துஆ செய்கிறோம். நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்.


கல்வி விழிப்புணர்ச்சி சபதத்துடன்....
-- அதிரைநிருபர் குழு ---

தகவல்: சகோ.தாஜுதீன்

Monday, December 27, 2010

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 16 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கீழ்க்கரே அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.

தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.


தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர்கிராப்ட் படகும் ஈடுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)

"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.
தகவல்:
அதிரை ஹாபில்.நெய்னா முஹம்மத் @ ரியாத்.

ஊருல கல்யாண சீசனாமே...?

ஸ்ஸலாமு அழைக்கும்.என்ன சேதி காக்கா ரொம்ப நாளா ஆள காணோம் ஆமா சாதிக்கு எனக்கு உடம்பு சரியில்லை இன்னைக்கு நம்ம தெரிஞ்சவங்க ஊட்டுல கல்யாணம் அதான் வந்து கைய நனைச்சுட்டு போவலாம்முனு வந்தேன் நானும் தொழுதுட்டு சட்டுபுட்டுன்னு துவாகூட கேக்காம ஒரு சஹன்னுக்கு ஆளு கெடைக்குமான்னு பாத்துக்கிட்டு ஈக்கிறேன் நல்ல வேல வந்துட்டா நீ வர்ரியல்ல?

அடபோங்க காக்கா எனக்கு போனமாசம் எல்லாம் உடம்பு சரியில்லாம போயி பட்டுகோட்டை ஆஸ்பத்திரியில படுத்த படுக்கையா கடந்தேன் டாக்டரு கண்டிசனா நீங்க கொழுப்பு வகைகளே சாப்பிட கூடாதுன்னு எச்சரிக்கை செஞ்சிட்டாரு நா வரேலப்பா ..

அட மட சாதிக்கு இது போன்ற சான்சைஎல்லாம் நாமே விட்டுட நாளைக்கு தேடும் போது கெடக்காது பரவா இல்லை இன்னைக்கி என்னோட வா ஒரு பெறட்டு பெரட்டிட்டு டாக்க்டரு தந்த மாத்தரைய போட்டுக்கலாம் என்னது? போட்டுக்கலாம? ஆமா சாதிக்கு நானும் கொஞ்ச நாளைக்கி முன்னாடி தஞ்சாவூருல ஆஸ்பத்திரில கட்டுறதுக்காக போனேன் அப்போ அந்த பாலபோன டாக்க்டரு நீங்க கண்டிப்பா கொழுப்பு சாப்பாட எட்டிகூட பாக்க கூடதுண்டு சொல்லிட்டான் இது போதும்ம்னு என் பொண்டாட்டியும் ஒரே காய்கறியும் சோறும் போட்டே என்னை காய வச்சுட்டா.

இதனால அவகூட நான் சண்டை வளத்துட்டேன் .ஏன்னா இந்த கல்யாண சீசன்ல்ல வர்ற சான்சை விட்டுட்டா அடுத்த வருஷம் இருப்போமா போயிடுவோம்மா நமக்கே தெரியாது பாரு அதனாலத்தான் சொல்லுறேன் வா போயி சாப்புட்டுட்டு வரலாம் . என்ன காக்கா இதுக்கு போயி உங்க பொண்டாட்டியோட சண்டை வளத்துட்டு ஊரு சாபடுக்கு அலையிறிங்க .

உங்கள டாக்டரு கண்டிசனா இருக்க சொன்னாருளே அப்புடியிருந்து ஏன் காக்கா? சாதிக்கு இப்போ நீ வர்றியா இல்லையா...? ஜப்பாரு ... எங்க அவ்வூட்டு விருந்துக்கா ? ஆமா இரி நானும் அங்கத்தான் வர்றேன் ... சரி சாதிக்கு நாம பேசிக்கிட்டு இருந்தத ஒ பொன்டாடிட்ட சொல்லாதே அப்புடியே எங்கூட்டுக்கு போயிடும் நாவர்றேன் ....
இத நீங்களாவது படிங்க பாதுகாப்பா இருங்க .
தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச் செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான் இன்று நம்மூரில் அதிகாமா பயன்படுத்து கின்றனர் .

இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும். நம் நாட்டில் இதன் விலை குறைவாக இருப்பதால்கலரி சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் மேற்படி வகையான என்னை வஸ்த்துக்களை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் மாரடைப்பு போன்ற அபாய கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என எத்தனை மருத்துவர்கள் கூறினாலும் நமக்கு வேண்டியது விருந்து...

Sunday, December 26, 2010

இயேசு அழைக்கிறார்

இன்று கிருத்துவர்களால் ஆரவாரமாக கொண்டாடப்படும் கிறுஸ்துமஸ் நாள் என்பது உண்மையில் ஏசு கிறுஸ்து பிறந்த நாள் தானா என்பதை பைபிள் துணையோடும் வரலாற்று பிண்ணனிகளோடும் அறிந்து கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு கிறுஸ்துவனுக்கும் உள்ளது.

படிச்சு பாருங்க 


Thursday, December 23, 2010

சாலை விதிகளைப்பேணி உயிரையும் பர்ஸையும் காப்போம்!

மற்ற அமீரகங்களைவிட துபாயில் போக்குவரத்து விபத்துகள் சற்று அதிகம். இதை கருத்தில் கொண்டு துபை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றாலும் சிலநேரங்களில் அவர்களின் அணுகுமுறை அடாவடியானது.

சமீபத்தில் துபை-அபுதாபி இடையேயுள்ள ஷேக் ஜியாத் சாலையில் வேகக் கட்டுப்பாட்டை மீறியதால் சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் படம் பிடிக்கப்பட்டு உறவினர் ஒருவர் தண்டம் கட்டியதைச் சொன்னபோது,சாலை விதிகளை மீறாமல் வாகனம் ஓட்டுவதே பாதுகாப்பானதும்,விவேகமானதும் என்ற தரப்பைச் சார்ந்தவன் என்பதால் துபை போலீஸாரின் நடவடிக்கை தவறாகப்படவில்லை என்று சொல்ல நினைத்தேன்.

எனினும்,அடுத்தடுத்து ஓரிரு நிமிட இடைவெளியில் இருவெறு கேமராவில் படம்பிடித்து இரட்டை அபராதங்கள் விதித்திருந்தது வழிப்பறிக்கு ஒப்பானது என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். வேகமாக வாகனத்தில் வருபவர் கேமராவில் சிக்கிய அதிர்ச்சியிலிருந்து சுதாகரித்து தன்தவறை உணர்ந்து சரி செய்வதற்குள் அடுத்தடுத்து படம் பிடிப்பதும், இரட்டை அபராதமும்கூட கொஞ்சம் ஓவர் ஸ்பீட்தான்!

வேகக்கட்டுப்பாட்டை மீறியதால் சாலையிலுள்ள கேமராவில் படம்பிடிக்கப் பட்டதை கட்டணம் செலுத்தி வாங்கலாம். (பாஸ்போட் போட்டோவைவிடத் தெளிவாக, நேரம், கார் நம்பருடன் போட்டோ எடுக்கப்பட்டிருக்கும் என்பது கசப்பான / கவலைதரும் உண்மை.சாலை விதிகளைப் பேணி ஒழுங்காக வாகனம் ஓட்டுபவர்களைத் தேடிப்பிடித்து சிறப்பு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதும் துபையில் நடக்கும் நிகழ்வுகள்.தற்போது 20 வருடங்களாக எந்த கருப்பு புள்ளியும் பெறாது,அபராதமும் பெற்றிராத வாகன ஓட்டிகளை கவுரவிக்கிறார்கள்!

வேகக்கட்டுப்பாட்டை வலியுறுத்தவும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் மேற்படி அபராதம் 'வாகன ஓட்டிகளுக்கு' சற்று அதிகமாக இருந்தாலும் இவ்விதி பெரும்பாலும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே என்பது பரவலான குற்றச்சாட்டு.

வேகக் கட்டுப்பாட்டைமீறி அல்லது சிக்னலுக்குக் காத்திராமல் தடுப்பில்ஏறி சாலை விதிகளை மீறியவர்கள்,போலீஸாரின் 'மூக்கோடு மூக்கை' உரசும் தகுதியுள்ள உள்ளூர் அரபிகளிடம் இவ்விதிகள் செல்லுபடியாகாது. கார் விலையைவிட அதிகமான அபராதம் நிலுவையில் வைத்திருப்பவர்கள் அத்தகையோரே என்பதும் பலர் அறிந்ததே.

(சிவத்ததோல் வெளிநாட்டுக்காரர்களுக்கு சல்யூட் அடித்து போக்குவரத்தை நிறுத்தி கடந்து செல்ல வழியேற்படுத்திக்கொடுக்கும் சிங்காரச்சென்னையின் போக்குவரத்துக் காவலர்களை நினைத்து எனக்கு 'தேசபக்தி' பொங்கியது!)

வாகன ஓட்டிகளுக்கே இந்தத்தண்டனைகள்,அபராதங்கள் என்றால் என்னைப் போன்ற 'கால் டாக்டியில் செல்லாமல் 'காலே டாக்சி'யாகக் கருதி மாநகரப் பேருந்தில் செல்லும் நடராசர்களும்கூட இந்தவழிப்பறியிலிருந்து தப்பவில்லை. (அந்தக் கடுப்பில்தான் இப்பதிவை எழுதினேன் என்பது நான் மட்டுமே அறிந்த ரகசியம்:)

அதிகாலை 6:30 மணிக்கு பக்கத்திலுள்ள பேரூந்து நிறுத்தத்தில் பஸ்ஸைப் பிடிப்பதற்காக அவசர அவசரமாகச் சென்றாலும், தூக்கக் கலக்கத்திலும் சாலைவிதியைப் பேணும் நானும் இன்று காலை வசமாக பிடிபட்டேன். கொடுமை என்னவென்றால் சாலையைக் கடக்க பச்சைவிளக்கு எரிந்த பிறகே கடந்தேன்.எனினும் ZEBRA CROSSING (கருப்பு-வெள்ளைக் கோடுகள்) வரிக்குதிரைப் பாதையை உபயோகிக்காமல், அதனையொட்டி நின்ற காரின் பின்னால் சென்று சாலையைக் கடந்ததற்காக காலங்காத்தாலே 'சம்மன்' கொடுத்தார் அந்த கடமைவீரர் அல்-கந்தசாமி!

பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் ஒருசில அரசு அலுவலர்களுக்கு சம்பளம் கொடுக்க மாதக்கடைசியில் மட்டும் இதுபோன்ற 'சட்டத்தின்முன் அனைவரும் சமம்' பாலிசி கடைபிடிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ உலகப் பொருளாதார மந்தநிலை என்னையும் மறைமுகமாகப் பாதித்துள்ளது அல்லது துபையின் கடனை அடைக்க நானும் மறைமுகமாக உதவியுள்ளேன்.

ஆகவே,இதனால் சகலருக்கும் சொல்லவருவது என்னவென்றால் சாலை விதிகளைப் பேணி நடந்து / ஓட்டி உயிரையும் பர்ஸையும் காப்போமாக! :) இதையும்மீறி விதிகளை மீறுபவர்கள் இந்த லிஸ்டை கொஞ்சம் வாசிக்கவும்

முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை !

http://www.markgroup.infomdali.html அமெரிக்க தூதர் டிமேட்டி ரோமரிடம் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போது, இந்தியாவில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள்பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை எனவும், அவர்கள் தேசியத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள், ‘லஸ்கர் தொய்பாஎன்றதீவிர வாதிகளை விட இந்து தீவிரவாதிகளால்தான் மிகவும் இந்திய தேசிய மக்களுக்கு அச்சுறுத்தல்இருப்பதாகவும் கூறினார் என்று அமெரிக்க தூதர் தனது நாட்டு அரசுக்குசெய்தி அனுப்பியதாகவிக்கிலீக்நிறுவனம் வெளியிட்ட செய்தியில் வெளியாகி உள்ளது.


பிரிவினைவாதமும், மதத்தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களுக்கு பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில்பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும், சமூகத்தில் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம் விரும்புகிறார்கள் எனவும் டேவிட் முல்போர்டு கூறியிருக்கிறார்என்றும் விக்கிலீக் செய்தி வெளியிட்டுள்ளது. http://www.mark-group.info/mdali.html


ராகுல் காந்தி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முஸ்லிம் ஆற்றிய தொண்டினை தெரிந்திருப்பதாலும், இந்கிய சுதந்திரத்திற்கு பின்பு எப்படி முஸ்லிம்கள்ஜனநாயகத்தின் பேரில் நம்பிக்கை கொண்டிருக்கிறாரகள் என்பதினை கண்ணிய மிகு காயிதே மில்லத் முஸ்லிம் மக்களிடையே உரையாற்றியதினை தெரிந்துவைத்திருப்பதாலும், தனது முன்னோர்களான கொள்ளு பாட்டனார் ஜவகர்லால் நேரு, பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜிவ் ஆகியோர்களுடன் பணியாற்றிய முஸ்லிம்பிரமுகர்கள் வரலாறு தெரிந்திருப்பதாலும், தற்போது தன் தாயான சோனியா காந்திக்கு எப்படி முஸ்லிம் தலைவர்களான அஹமது படேல், குலாம் நபி ஆசாத்போன்றவர்கள் பெரும் உறுதுணையாக இருக்கிறார் என்று அறிந்திருப்பதாலும், தற்போது மேற்கு வங்காளம், சட்டிகார், ஜார்கண்ட், பிகார், மத்திய பிரதேசம் போன்றமாநிலங்களில் தீவிர வாத செயல் போன்ற எந்த முஸ்லிம் அமைப்பும் ஈடுபட வில்லை என்று தெரிந்திருப்பதாலம் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.http://www.mark-group.info/mdali.html


பிரபல நடிகர் அமிதாப் பட்சன் நடத்தும் குரோர்பதி என்ற பிரபலமான டி.வி பொது அறிவு கேள்வி அறிவுப்போட்டியில் தஸ்லிம் என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயானமுஸ்லிம் பெண்மணி கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் ஜெயித்து புகழடைந்தார். அவரை எப்படியாவது கிரிக்கட் பிரபலம் சச்சின் டெண்டுல்கரை எப்படி விளம்பரடி.வி.படங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து நடிக்க வைத்தார்களோ அதே போல திட்டமிட்டு தஸ்லிமையும் விளம்பர நிறுவனங்கள் பலகோடிக்கள் தருகிறோம்என்று ஆசைகாட்டு போட்டிபோட்டு அனுகின. ஆனால் அதனையெல்லாம் மறுத்ததோடு மட்டுமல்லாது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் ஏன் மறுத்தேன் என்றுசொல்லும்போது, ‘ தன் இரண்டு குழந்தைகள் படிப்பினையும மற்றும் வசதியில்லாத குழந்தைகள் படிப்பிற்கு அந்த ரூபாய் ஒரு கோடியையும் செலவழிக்கவேவிரும்புகிறேனென்றுசொன்னதின் மூலம் சாதாரண முஸ்லிம் தான் உண்டு, தன் குடும்பமுண்டு என்று இல்லாமல் வாழ்வாதாரமற்ற மற்றவர்களையும் முன்னேறவேவிரும்புகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லவில்லையா? ஆகவே தான் அமெரிக்கா முன்னாள் தூதர் முல்போர்டு முஸ்லிம்கள் சமூகத்துடன் இணைந்தே வாழவிரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார். more details are in www.mark-group.info/mdali.html


Tuesday, December 21, 2010

மாயமான 20 லட்சம் கோடி!

ஊழல் செய்த பணம்வரி கட்டாமல் ஏமாற்றிய பணம்கமிஷனாக வாங்கிய பணம் என பல வழிகளில் வெள்ளைக் காலர் வில்லன்கள் சம்பாதிக்கும் பணமெல்லாம் கறுப்புப் பணமாகி கடைசியில் வெளிநாட்டு வங்கிகளின் லாக்கர்களை தஞ்சமடைந்து விடுகிறது. இப்படி வெளிநாட்டு வங்கிகளின் லாக்கர்களை நிரப்பிக் கொண்டிருக்கும் கறுப்புப் பணம் எவ்வளவு என்பது இன்னும்கூட தெளிவில்லாமல் இருக்கிறது. சிலர், 4 லட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் சிலர் லட்சம் கோடி என்கிறார்கள். ''இதெல்லாம் உண்மையில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 2008 வரைஇங்கிருந்து வெளிநாட்டுக்குப் போன மொத்த கறுப்புப் பணம் http://new.vikatan.com/images/rupee_symbol.png20 லட்சம் கோடி ரூபாய்'' என்று ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு எல்லோரையும் அதிரவைத்திருக்கிறார் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான தேவ் கர்.
இவர் ஐ.எம்.எஃப்-ல் மூத்த அதிகாரியாக வேலை பார்த்தவர். உலகப் பொருளாதாரம் பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர். அமெரிக்காவில் 'குளோபல் ஃபைனான்ஸியல் இன்டக்ரிட்டி’ என்கிற அமைப்பை இவர் நடத்தி வருகிறார். லாப நோக்கம் இல்லாமல் செயல்படும் இந்த நிறுவனம்கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து 462 பில்லியன் டாலர் கறுப்புப் பணம் வெளியே போயிருப்பதாகச் சொல்லி இருக்கிறது. பல மாதங்கள் ஆராய்ந்த பிறகே இப்படி ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறதாம் அந்த நிறுவனம்.
அதுமட்டுமல்லஇந்த இருபது லட்சம் கோடியில் 70 சதவிகித பணம் 2000 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியே போயிருப்பதாகவும் அந்த ஆய்வு சொல்லி இருக்கிறது. இந்த கறுப்புப் பணத்தில் பாதி வேண்டாம்கால்வாசிப் பணம் இந்தியாவுக்குத் திரும்ப வந்தாலே போதும்நமது வெளிநாட்டுக் கடனை ஒரே மூச்சில் கட்டிகடனே இல்லாத நாடு என்கிற பேரை
பெற்றுவிட முடியும். இந்தியாவில் அத்தனை கிராமங்களுக்கும் மின்சார வசதியை யும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். நல்ல பள்ளிக்கூடம்சாலைவசதி என மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க முடியும்.  
ஆனால்,சுவிஸ் வங்கிகளில் கிடக்கும்  பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் வேலையைமுடிந்த அளவுக்கு மெதுவாக செய்கின்றனர் அரசியல்வாதிகள்.

வரும் தேர்தலிலாவது மக்கள் இதை ஒரு கோரிக்கையாக வைத் தால்தான் அந்த பணம் நமக்குக் கிடைக்கும்.- (Source- Vikatan)

இந்த ஊழல் எங்கிருந்து தொடங்குகிறது? அரசு அதிகாரிகளிடமிருந்தா? பொதுமக்களிடமிருந்தா?

இந்தக் கேள்விக்கான பதில், வருத்தம் தரக் கூடியதுதான். ஆனாலும் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டியது.

இருவரிடமும் தொடங்குகிறது. அதாவது, ஓர் ஆரசாங்க அலுவலகத்தில் நமக்கு வேலை நடக்க வேண்டுமானால், நாம் பணம் கொடுத்தாவது  முடித்துக்கொள்கிறோம்.
அதாவது, அரசு அலுவலகம் என்றாலே அங்கு பணம் கொடுக்காமல், எந்த பணியும் நடக்காது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். அதனால், அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்பே நாம் பணம் கொடுத்துவிடுகிறோம். இதுதான் நிஜம்.


இந்த ஊழலின் மற்றொரு விதம், மக்களின் நலத்திற்க்காக போடப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்வது. பாலம் கட்டுவது, குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டித் தருவது, ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களைத் தூர்வாருவது போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, மீதம் பணம் இருந்தால் மட்டுமே, திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.

அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கோ, அல்லது பணம் கொடுப்பவர்களுக்கோ, அந்த வேலையை கொடுத்துவிடுகின்றனர்.ஆட்சித் தலைவர் பதவி முதல், அங்கன்வாடி பணியாளர் நியமனம் வரை, இந்த பரவியிருக்கும் இந்த நடைமுறை, ஊழலின் மற்றுமொரு பரிமாணம்.

இப்படி அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவியிருக்கும் ஊழலின் ஆரோக்யமான முன்னேற்றமாக, இன்று, ஜனநாயகக் கடமையான வோட்டுப் போடுவதற்குப் பணம் வாங்குவது வரை வந்துவிட்டது. கட்சியின் பாரம்பரியத்தையும், வேட்பாளரின் தரத்தையும் பார்த்து வாக்களித்த காலம் போய், அதிகப் பணம் கொடுப்பவனுக்கே வோட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. இப்படிக் கொடுத்த பணத்தைதான், ஆட்சிக்கு வந்தபிறகு ஊழல் செய்து மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுகொள்வது நியாயம்தானே.

நம்மை நெறிப்படுத்தி நியாயமான முறையில் ஆட்சி செய்பவர்களைநாமே தேர்ந்தேடுத்துக்கொள்ளத்தான் ஜனநாயக முறை தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அந்த முறையிலேயே, நமக்குப் பணம் கொடுப்பவர்களை நாம் தேர்ந்தெடுத்தால், அந்த ஜனநாயகம் என்ற அமைப்புக்கு என்ன பயனிருக்க முடியும்?

மக்களுக்காக, மக்களால் ஏற்படுத்தப்படும் ஆட்சிமுறை, ஜனன்னாயகம் என்பதுபோல, மக்களுக்காக, மக்களின் ஒத்துழைப்போடு நடப்பது ஊழல் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கு முதலில் மக்கள், தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தங்களின் காரியம் நிறைவேற வேண்டுமென்பதற்க்காக, லஞ்சம் கொடுக்காமல், அரசு அதிகாரிகளை நேர்மையாக பணிசெய்ய நிர்பந்திக்க வேண்டும். குறுக்கு வழிகளில் பயணம் செய்யாமல், நேரடியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம், பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதையாவது நிறுத்த வேண்டும். இது மக்கள் செய்ய வேண்டியது.

அரசுத் தரப்பிலிருந்து, அரசாங்க அலுவலகங்களில் நிலவும் நடைமுறையை மாற்ற வேண்டும். R . T . O அலுவலகத்திலும், பத்திரப் பதிவு அலுவலகம் போன்ற இடங்களில் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, எளிமைப் படுத்த வேண்டும். இங்கு இருக்கும் விதிமுறைகள் புரியாமலே, பணம் கொடுத்து காரியம் முடிப்பவர்கள் அநேகம் பேர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தல், காஷ்மீர் போல தேசம் முழுவதும், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு, காஷ்மீர் போல ஆர்பாட்டங்களும், வன்முறையும் நடக்க வழிவகுத்துவிடும். இந்தியா அரசாங்கம், இந்த அவசர நிலையை உணர்ந்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இர்fபான்

Monday, December 20, 2010

முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்


பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.

ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும்.

முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.

முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார, பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக் காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினிமாக்களும், தொடர்நாடகங்களும் வானொலிகளில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மை பெறுகின்றன.

ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குகளுக்கு செல்வது மிக அரிதாகேவ காணப்பட்டது. ஆனால், இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்கின்ற பெண்களை காண்கின்றோம். கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சி வகித்து வருகின்றது.

மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்கைளயும் ஆபாச பாடல்கைளயும், நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாக காண முடிகின்றது.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர். வானொலியை செவிவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதே நிலைதான்.

இஸ்லாமிய நூல்கைளயும், சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிகவேகமாக குறைந்து வருகின்றது. பாடசாளைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்கைள விடவும் காதல் கதைகைளக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும்தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.

முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்தநாள் பாடசாலை வகுப்புகளில் நடைபற்று வருகின்றது. சில பெண்கள் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக, நடிகைகளின் புகைப்படங்கைள வைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேய கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வேடிக்கைத்தனமாக வகுப்பைறகளில் சிகையலங்காரம், முக அலங்காரம் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

எமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்கவீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும். இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்நிய பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் அவர்கைள ஒத்தவர்களாக எமது முஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதாரணமாக டீ-சேர்ட், காற்சட்டை, போன்றவற்றை அணிகின்றனர்.

இன்னும் சிலர் தாம் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்றபெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இறுக்கமாக அணிந்துவருவதோடு அதன் நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.

முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னொரு காரணமாக மேலதிக வகுப்புக்கைளயும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ்நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்துகொள்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளிலும் இத்தகைய வகுப்புகளுக்கு தனியாக சென்றுவருகின்றனர். இது பாரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதை அனைவரும் அறிவர்.

எனேவ, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கின்றது. றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல அவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்களும் இவ் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள்.

எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’
என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.

இதை அளித்தவர்:
Adirai Hafil.J.M.Naina Mohamed @ Riyadh

ஒரு நாள் வரும்...அன்று

ஒரு நாள் வரும்

அன்று...

நீ குளிக்க மாட்டாய் !
உன்னை குளிப்பாட்டுவார்கள்.


நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.


நீ பள்ளிவாசல் போக மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.


நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.


நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.


அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.

அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்.

அது தான்
மௌவுத் (மரணம் )

Sunday, December 19, 2010

ஹிட்லர் யூதர்களை பகைவர்களாக நினைத்தது போல் பா.ஜனதா இஸ்லாமியர்களை நினைக்கிறது: காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங்

புதுடெல்லி, டிச.19-

யூதர்களிடம் ஹிட்லர் தீராத பகைக் கொண்டது போல் இஸ்லாமியர்களை பா.ஜனதா பகைவர்களாக பார்க்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திக்விஜய் சிங் கூறியதாவது:-

1930-ம் ஆண்டுகளில் நாசி கட்சியை கொண்டு ஹிட்லர் யூதர்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார். அதேபோல் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமியர்களை அடியோடு முடக்குவதை தனது சித்தாந்தமாக கொண்டுள்ளது என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்:-

பா.ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி 1992-ம் ஆண்டு மேற்கொண்ட ''ரத யாத்திரை'' இந்து- முஸ்லீம்களிடையே பெரிய அளவில் முரண்பாட்டினை தூண்டியது.

இந்த ''ரத யாத்திரை'' இந்தியாவின் தீவிரவாதத்திற்கு ஆணிவேராக அமைந்தது. இந்திய வரலாற்றில் கறுப்பு சம்பவமாக பாபர் மசூதி இடிப்பு அமைந்தது.

எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகளாக இல்லை. எல்லா தீவிரவாதிகளும் முஸ்லீம்களாக உள்ளனர் என்று பா.ஜனதா குற்றம்சாட்டுகிறது. எல்லா இந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல. இந்து தீவிரவாதிகள் அனைவரும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாக ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறலாம் என பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்.யையும் கடுமையாக தாக்கி பேசினார்.

''சிஷூ மந்திர்'' பள்ளிகளின் மாணவர்களிடம் அவர்களின் மனதில் முஸ்லீம்கள் பகைவர்கள் என்ற தவறான கருத்தினை ஆர்.எஸ்.எஸ். விதைக்கிறது. மேலும், இந்தியா ராணுவம், காவல்துறைகளிடையே ஆர்.எஸ்.எஸ். தனது ஆதரவாளர்களை பெருக்கிவருகிறது.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா மற்றும் சில மாநில கட்சிகள், கம்யூனிஸ்ட்களால் நாட்டின் ஒற்றுமைக்கு மிகவும் சவாலாக உள்ளது என்றும் கூறினார்.

இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள் என்ற கருத்தை காங்கிரஸ் எப்போதும் வலியுறுத்தும்.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

THANKS
MMNEWS.IN

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்... ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த மர்ஹூம் அஹமது தம்பி அவர்களின் மகனும், 'மாப்பிள்ளை' ஷம்சுதீன் காக்கா, பாரூக் காக்கா ஆகியோரது சகோதரரும், J.ஷேக் முஹம்மது அவர்களின் தகப்பனாருமாகிய ஜமாலுதீன் அவர்கள் நேற்றிரவு (18-12-2010) சனிக்கிழமை  வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பிழைகளை மன்னித்து மறுமை வாழ்வை அல்லாஹ் சிறக்கச் செய்வானாக. ஆமீன்

Friday, December 17, 2010

மரண அறிவிப்பு (மெளலவி கீரனூரி கலீல் அஹ்மத்)

பிரபலபேச்சாளரும், தப்லீக் ஜமாத் பிரச்சாரகருமான திண்டுக்கல் கலீல் அஹ்மத் கீரனூரி அவர்கள் 16.12.2010 வியாழக்கிழமை வஃபாதாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30  மணிக்கு கீரனூரில் நல்லடக்கம் நடைபெற்றது.தகவல் உதவி :  மௌலவி சதீதுத்தீன் பாகவி  
நன்றி: http://mudukulathur.com/

Thursday, December 16, 2010

வாசகர்களுக்கு அறிய வாய்ப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏற்கனவே அதிரை xpress போன்ற இணையதளங்களில் செய்திகள் மற்றும் தகவல்களை பகிர்ந்து வரும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
முஸ்லிம் மலர் இணையத்தளத்தில் உங்களது செய்திகள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பினால். உங்களது பெயர்,முகவரி,போன் நம்பர் மற்றும் மின் அஞ்சல் ஆகியவற்றை muslimmalar@gmail.com  என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.

Wednesday, December 15, 2010

மரண அறிவிப்பு

கடற்கரைத்தெரு மர்ஹூம் சிவத்த மரைக்காயர் அவர்களின் பேத்தியும்,துலுக்கா பள்ளி தெரு (நடுத்தெரு)மர்ஹூம் நெ.கா.மி.நெய்னா முஹம்மது சாஹிப் அவர்களின் மகளும்,மர்ஹூம் முஹம்மது மீரான் மரைக்காயர் அவர்களின் மனைவியும்,அப்துல் ரஜாக்,நெய்னா முஹம்மத்,தையுப்,முஹம்மது இப்ராஹீம் ஆகியோர்களின் தாயுமான ஹவ்வா அம்மா அவர்கள் அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் உள்ள அவர்களின் வீட்டில் (செக்கடிக்குளம் வடக்கு)இன்று காலை மரணித்துவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா,இன்ஷா அல்லாஹ் இன்று மாலை தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மக்பிரத்துக்காகவும்,ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்கவும் துவா செய்யும் படி வேண்டுகிறோம்.

4:78.“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!.

6:61.அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.

மரண சிந்தனை 

Monday, December 13, 2010

பயண அனுபவம் பகுதி - 3


U.S.பயண அனுபவம் - இதுவரை  யாரும்  அவ்வளவாக கருத்துரையிடாததால் மூன்றாம் இதழுக்கு சற்று தாமதித்தோம் .ஆனால் சென்ற  இதழுக்கு ரசனையுடன் கூடிய விமர்சனங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு அழைப்புக்கள் மூலம் கிட்டவே ஒரு உந்துதல் கிடைத்தது.

கண்ணயர்வை ஒரு கனிவான குரல் இடரு செய்தது. விழித்துப் பார்த்தால் இரு தங்க (கர) ப்பாலம்- ஒரு தாம் பாலத்தை ஏந்தி நின்றது. "அந் நாவ்ம் கைரும் மினல் அக்ல்= சாப்பாட்டை விட தூக்கமே மேலானது" (தற்போதைக்கு) "என்ற பாணியில் சவடாலாக ஒரு அலட்சியப் புன்னகை விசி விட்டு திரும்பிக் கொண்டேன். பதிலுக்கு அந்த விமான பனிப் பெண்ணும் எதோ முணு முணுத்தவாறு ஸீட் தோள் பட்டை இடத்தில் ஒரு ஸ்டிக்கரை சாப்பாடு வேண்டாம்/ Dont  Disturb என்று ஒட்டி விட்டுச் சென்றது.

 மீண்டும் ஒரு குட்டி த்தூக்கம் போட்டு விட்டு விழித்துப் பார்த்தால்... மிகுதமானோர் உறக்கத்தில் சிலர் TV- கேம்ஸ் என்ற பிசியாகத் தென் பட்டனர். எமக்கு தூரத்து இடி முழக்க மாக பசி வயிற்றைப் பிசைந்து கொண்டுவர "தல நோன்பு புடுச்ச புள்ளை யாட்டம்" சிறு வயதில் செக்கடிப் பள்ளி அஜ்வாத் லொடுத்தம்பியிடம் நோன்பு கஞ்சி முழுச்சட்டி பெறுவதற்காக நோன்பு பிடித்தவன் போல முகபாவத்தை (செவாலியர் ரேஞ்சுக்கு) மாற்றி  காண்பித்தது போல் அப்பாவியாய் அம் மணிகளை    பார்க்க...
ஊஹும்!யாரும் கண்டுக்கலே!  ஒரு அரபிப் (பணிப் பெண்) பரிதாபப்பட்டு விமானத்தின் உயர் வகுப்புப் பகுதியில் அழைத்துச் சென்று பஃபே ஸ்டைலில் வைக்கப் பட்டிருந்த உணவுகளைக் காட்டி  தேவைப்படும் போது தாங்களே வந்து உணவருந்தி 

கொள்ளுங்கள் என்றது. சந்தோஷம்!
நல்லதொரு கம்பெனி like PPT group-jeddah கிடைத்திருந்தால் ஒரு ரௌண்டு கட்டி 
இருக்கலாம். வயிற்றை நிறைத்ததும் சுற்றும் முற்றும் பார்க்க..என்ன அய்யா சோறு கண்ட இடம் சொர்க்கம்னு  இங்கேயே கால் நீட்டில்லாம்டு பாக்றியா.. ங்குற மாதிரி அந்த ஏற்ஹோச்டஸ் பார்த்திச்சு . இல்லே..

இங்கே கொஞ்சம் விசாலமாக இருப்பதாலே "மும்கின் சல்லி...?" என வினவ ,உடனே அந்தப் பெண்மணி புதிய போர்வை பாக்கட்டை உடைத்து முசல்லாவாக விரித்து ஏற்பாடு செய்தது .தொழுது கொண்டிருந்தபோது ஒரு யாரோ இணைந்து கொண்டது போல் ஒரு ஸ்பரிசம்.சலாம் கொடுத்துப் பார்த்தால் ,எமக்குப் பின்னால்  எழுவர் -ஒரு ஜமாத்தே ...பின்னின்றது ..சுபஹானல்லாஹ்!
இத்தனைபேர் ஏன் ?எங்கே ஒதுங்கி இருந்தனர் ? நல்ல காரியம் செய்ய யாராவது 
initiate செய்ய மாட்டார்களா.. என்ற எதிர் பார்ப்பு நம்மிடம் மிக அதிகம்.
ஒரு  வழியாக நியூ யார்க் ஜே.எஃப்.கே விமானத்தளம் வந்திறங்கினோம்.


JFK என்றால் விரிவாக்கம் ஜான் .எஃப்.கென்னடி! நம் இந்தியத் திரு நாட்டில் பாலம் இந்திரா காந்தி அந்த ராஷ்ற்றிய்ய விமானத்தளம்-சத்ரபதி சிவாஜி /மும்பை.
சென்னை அண்ணா பன்னாட்டு வருகை..போல .
தற்போது USஇமிகிரேஷனில் என்ன கேட்ப்பார்கள் - நாம் எப்படி பதிலளிக்கப் போகிறோம் என்ற மண்டக்கொடச்சளிலோடே வரிசையை வகுத்தோம்! df<br/><a href="http://oi53.tinypic.com/2nu3ngw.jpg" target="_blank">View Raw Image</a>


பயணங்கள் முடியவில்லை!


வாழ்க வளமுடன்!                                                                  
அடுத்த இதழில்: JFK    ஏர்போர்ட் அனுபவம்
மன்ஹாட்டன்- நியூ யார்க் - குறிஞ்சிப்பூ ,  பெருநாள் தொழுகை.

ராஃ பியா 

ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்


ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை (Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் தொடங்கி உள்ளது. இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான ‌வீடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.

மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.


ஊழல், லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த இணையதளத்தை மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் நே‌ற்று தொடங்கி வைத்துப் பேசினார்.

கண்காணிப்பு அமைப்பை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காணிப்பு ஆணையம் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊழலை மக்கள் சகித்துக் கொள்ளாமல் அது குறித்து புகார் செய்ய முன்வருவது அதிகரிக்கும்'' என்றார் தாம‌ஸ்.

மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல் 'விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.