Sunday, January 31, 2010

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிக்கு படித்த முஸ்லிம்கள் ஆர்வம் கொள்ளவேண்டும்

என் இனிய முஸ்லிம் பட்டதாரிகளே! உங்களால் நாட்டின் உயர் பதவியினை எட்டமுடியாதா? உயர் பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதினை புள்ளி விபரம் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். 325 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 10 பேர்கள் தான் உள்ளனர். அதேபோல் 236 ஐ.பி.எஸ் பதவிகளில் வெறும் ஏழு பேர்கள் தான் உள்ளனர். 30க்கும் மேற்பட்ட முஸ்;லிம் கல்லூரிகள(;கலை மற்;றும் இன்ஜினீரயங்) தமிழ் நாட்டில் இருந்தாலும் முஸ்லிம் பட்டதாரி இளைஞர்கள் ஏன் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் பிரதிநித்துவம் பெற முடியவில்லை? நம்முடைய இளைஞர்களிடம் திறமையில்லையா? இருக்கிறது. ஆனால் சரியான வழிகாட்டல் இல்லாததால் திக்குத் தெரியாக் காட்டில் விடப்பட்டவர்கள் போல குறைந்த சம்பளத்தில் இந்தியாவிலோ அல்லது வளைகுடா நாடுகளிலோ வேலைக்குச் செல்கின்றனர். நமது முஸ்லிம் பெரியோர்கள், செல்வந்தர்கள் முஸ்லிம் இளைஞர்கள் பட்டம் பெற்றால் போதும் என்று கல்லூரிகள் ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அவர்களின் வேலை வாய்ப்பிற்கு என்ன வழிகள் என ஆராய தவறி விடுகின்றனர். வேலை தேடிக்கொள்வது அவரவர் கடமை என எண்ணுகின்றனர். ஆகவே தான் நாட்டில் பட்டம் பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் 15 சதவீதம் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்கள் என்று என.எஸ்.எஸ்.ஓ ஆய்வு சொல்கிறது.

பாரத பிரதமர் நீதிபதி சச்சார் கமிட்டி பரிந்துரைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சொல்கிறார். அந்த சச்சார் கமிட்டியில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் ஓ.பி.சி என்ற மற்ற பிற்பட்ட சமூகத்தில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ஏனென்றால் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் தலித்தினை விட பின்தங்கியுள்ளார்கள் என்று சொல்லியுள்ளது. தலித் பட்டதாரி இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால் இன்று ஐ.ஏ.எஸ, ஐ.பி.எஸ்ஸில் அதிக இடங்கள் பிடித்து சமூதாயத்தில் தங்கெளுக்கென்று மதிப்பான இடத்தினை பிடித்துள்ளார்கள். சமீபத்தில் நீதிபதி ரங்கனாத் மிஸரா அறிக்கையில் கூட முஸ்;லிம்களுக்கு 10 சதவீதம் வேலை வாய்ப்பினை கொடுக்க சிபாரிசு செய்துள்ளது. ஆகவே படித்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களை நாட்டின் உயர்பதவிக்கு தயார் செய்யவேண்டும். எப்போதுமே நமது குறிக்கோள் உயர் உடையதாக இருக்க வேண்டும். சென்ற ஜனவரி 26 ந்தேதி உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி ஐ.பி.எஸ்ஸில் நிறைய இடங்கள் காலியாக இருப்பதால் வருடத்திற்கு 70 பதவிகள் வீதம் 10 வருடத்திற்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்தெடுக்கப் போவதாக அறிவித்திருப்பது நமக்கு ஒரு வாய்ப்பாகக் கருதவேண்டும்.

--டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)

தொடர்ந்து படிக்க கீழே உள்ள தொடுப்பை அழுத்தவும்

நாங்களெல்லாம் கல்லூரியில் படித்தபோது அரசு சார்பில் ஐ.ஏ.எஸ் கோச்சிங் மையங்களில்லை. வயது வரம்பும் 24 ஆக இருந்தது. நான் சென்னை புதுக்கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தபோது ராயப்பேட்டை ஸ்வாக்கத் ஹோட்டல் அருகில் இருந்த ஐயர் ஐ.ஏ.எஸ் அகாடாமியில் சென்று விசாரித்தபோது எம்.ஏ படித்து விட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார். ஆனால் எம்.ஏ படித்து விட்டு சென்ற போது வயது உச்சவரம்பை தாண்டி விட்டது. ஆகவே தமிழ்நாடு அரசு நடத்திய தேர்வில் டி.எஸ்.பியாகி பின்பு ஐ.பி.எஸ் அடைய முடிந்தது. ஆனால் இன்று வயது உச்ச வரம்பு ஆகஸ்ட் முதல் தேதியன்று 21 வயதைக் கடந்து 30 வயதிற்கு மேல் தாண்டாது இருந்தால் போதும். வெறும் பட்டம் பெற்றிருந்தாலே ஐ.ஏ.எஸ்ஸ_க்கு உங்களுக்கு தகுதியுண்டு. ஆனால் பரீட்சைக்கான பாடங்கள் முதுகலை பட்டப்படிப்பளவிற்கு இருக்கும். அதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களை நீங்கள் பயிற்சி ழூலம் தயார் படுத்திக் கொள்ளலாம். அந்த பயிற்சியினை அரசே அண்னாநகரிலும், மனிதநேய மையம் சைதாப்பேட்டையிலும், தந்தை பெரியார் அறக்கட்டளை சார்பில் சென்னை வெப்பேரியிலும், சென்னை வண்டலூரிலுள்ள பி.எஸ்ஏ இன்ஜினீரியங் கல்லூரியிலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும் நடத்தப்படுகிறது. இன்னும் நமது இஸ்லாமிய அமைப்புகள் அதிகமாக பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும.; அப்படி அமைத்தால் டெல்லி சென்று தான் பயிற்சி எடுக்க வேண்டுமென்ற நிலை இருக்காது.

ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தேர்வு ழூன்று விதமாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படும். அவை:

1) முதல்நிலைத் தேர்வு: அதற்கான அழைப்பு ஒவ்வொரு வருடமும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் அனைத்து லீடிங் ஆங்கில-தமிழ் பத்திரிக்கைகளில் வெளியாகும.;. பரீட்சை இரண்டு தாள்கள் இருக்கும்.

முதல் தாள்: பொதுப் பாடங்கள் சம்பந்தப் பட்டது. அதற்கான மதிப்பெண் 150 ஆகும்.

இரண்டாவது தாள் விருப்பப்பாடங்கள் அடங்கும். அதற்கு 300 மதிப்பெண் தரப்படும். பெரும்பாலும் விருப்பப்பாடங்கள் எடுக்கும் போது அது பிரதான பரீட்சைக்கு உதவும் வகையில் எடுக்க வேண்டும். விருப்பப்பாட பட்டியல்கள் கீழ் வருமாறு:
 • விவசாயம்
 • அனிமல் ஹஸ்பன்ட்ரி மட்டும் வெட்னெரரி சயின்ஸ்
 • தாவரவியல்
 • வேதியல்
 • சிவில் இன்ஜினீரியங்
 • காமர்ஸ்
 • பொருளாதாரம்
 • எலக்ட்ரிகல் இன்ஜினீரியங்
 • புவியியல்
 • ஜியாலஜி
 • இந்திய வரலாறு
 • சட்டம்
 • கணிதம்
 • மெக்கானிகல் இன்ஜினீரியங்
 • மருத்துவம்
 • தத்துவம்
 • பௌதீகம்
 • பொது நிர்வாகம்
 • சோசியாலஜி
 • புள்ளிவிரபங்கள்
 • விலங்கியல்
மேற்கூறியவைகளில் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்தால் பிரதான பரீட்சைக்கு உதவும்.
ஆரம்ப கட்ட பரீட்சையில் தேர்வு பெற்ற மாணவர்கள் பிரதான பரீட்சைக்கு அழைக்கப் படுவார்கள். அந்தப் பரீட்சைகள் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் நடக்கும். அதில் ஒன்பது தாள்கள் இருபது நாட்களுக்குள் இருக்கும். அவை பின் வருமாறு:

(கட்டாயம); முதல்தாள்: அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகள் ஒன்றில் ஒரு மொழி தேர்வு செய்ய வேண்டும். அதற்கு 300 மதிப்பெண்கள்
(கட்டாயம்) இரண்டாவது தாள்: ஆங்கிலம். அதன் மதிப்பெண் 300
மூன்றாவது தாள்: கட்டுரை. அதன் மதிப்பெண் 200
நானகாவது தாள் மற்றும் ஐந்தாவது தாள்: பொதுப்பாடங்கள். அவைகளுக்கு மதிப்பெண் ஒவ்பொன்றிற்கும் 300
ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது தாள்கள்: விருப்பப்பாடங்கள் இரண்டில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு தாள்கள் இருக்கும். அவைகளுக்கு தலா 300 மதிப்பெண்கள்.

பிரதான பரீட்சையின் நோக்கமே மாணவர்களின் கல்வித் தகுதியை அறிவதிற்காக நடத்தப் படுவது மட்டுமல்ல. மாறாக அவர் பரீட்சையில் தான் படித்த பாடங்களை எவ்வாறு கோர்வையாக எழுதுகிறார் என்பதினையும் ஆய்வு செய்யப்படும். கட்டாயப் பாடத்தில் 35 சதவீத மதிப்பெண்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். கட்டாயப் பாடங்களில் கட்டுரை, மொழி பெயர்ப்பு, சுருக்கி எழுதல், வாக்கியம் அமைத்தல், மொழி மரபுச் சொற்தொடர்கள், பழமொழிகள், பொருள் அர்த்தங்கள் ஆகியவை குறிக்கும். பரீட்சைக்கு ஆயத்தமாவதிற்கு எழுதிப் பழகுவது அவசியம்.
அடுத்த படியாக கட்டுரைத் தேர்வில் சரியான தலைப்பினை எடுத்து உண்மையான-தெளிவான கருத்துக்களுடன் எழுத வேண்டும்.. முதல் 5 நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இரண்டு தலைப்பினை தேர்ந்தெடுத்து அதில் நன்றாக தெரிந்த ஒரு தலைப்பினை நிலை நிறுத்தி எழுதத் துவங்கவேண்டும். ஆரம்பம்-கரு-முடிவுரை என்று பிரித்துக் கொள்ளவது நல்;லது. எழுதிய கட்டுரையினை திரும்பப் படிக்க நேரத்தினை வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுப் பாடங்கள் இரண்டில் பாடம் ஒன்றில் இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு, நடப்பு சம்பவங்கள், சமூக செய்திகள் சம்பந்தப்பட்டது. இரண்டாவது பாடம் இந்தியா மற்றும் உலகம் சம்பந்தப்பட்டது, இந்திய பொருளாதாரம், சர்வதேச சம்பந்தமான செயல்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிழ் நுட்ப வளர்ச்சி, தொலைத் தொடர்பு, புள்ளி விபர ஆய்வு ஆகியவைகள் அடங்கும்.

பிரதான பரீட்சையில் தேர்வு பெற்றவர்கள் நேர்முக தேர்விற்கு டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள்.

பரீட்சைக்கு ஆயத்தமாகும் முன்பு அது சம்பந்தமான புத்தகங்கள், பீரியாடிகல்ஸ் ஆகியவைகளை தேடி சேகரிக்க வேண்டும். அல்லது அவை கிடைக்கும் நூலகங்கள்-பழைய புத்தகக் கடைகள் ஆகியவைகளை அணுகி புத்தகங்களை சேகரித்து குறிப்பு எடுக்க வேண்டும.;. பொது அறிவிற்கான புத்தகங்களான காம்படிசன் மாஸ்டர், காம்படிசன் ரிவ்யூ, காம்படிசன் சக்சஸ், கேரியர் டைஜஸ்ட் வாராந்திர, மாத ஆங்கில இதழ்களை வாங்கி படிக்க வேண்டும். ஆங்கில தினப் பத்திரிக்கையான ஹிந்து படித்தால் பொது அறிவிற்கான தகவல்கள், கட்டுரைக்கான தகவல்கள் கிடைக்கும். ஆங்கில செய்திகளை ரேடியோ-டி.வியில் கேட்க வேண்டும.; .மலயாள மனோரமா ஆண்டு புத்தகம் பொதுக் தகவல்களை வழங்குகிறது. சென்னையில் கன்னிமாரா-அண்ணாசாலையிலுள்ள பாவாணர் நூலகம்-மாவட்டங்களில் உள்ள நூலகங்கள் ஆகியவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேர் முகத் தேர்விற்கு செல்லும் போது தூய ஆடைகளை அணிய வேண்டும். ஒரு முறை வி.ஜி.பன்னீர்தாஸ் தான் சாதாரண கூலித் தொழிலாளியாக சென்னை வந்து இன்று பெரிய கோடீஸ்வரராகி பிரபலமானதிற்குக் காரணம் அவர் எப்போதும் மற்றவர்கள் கவரக்கூடிய ஆடை, அதாவது கோட்-சூட் அணிவதை விடுவதில்லையாம். ஆகவே தான் பலங்காலத்தில் ஆடைபாதி ஆள்பாதி என்பார்கள். தேர்வுக்குழுவினர் கேட்கும் கேள்விக்கு நேரான தெரிந்த பதிலைச அவர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டும். தெரியவில்லையென்றால் அதனை ஒப்புக் கொள்ள வேண்டும். பதட்டப்படாமல் நீங்கள் படித்தவர்கள்-மிக உயர்ந்த வேலைக்குப் தேர்வு செய்யப்பட போகிறீர்கள் என்று எண்ண வேண்டும். எந்த சமயத்திலும் உங்கள் பணத்திலோ படிப்பிலோ சமூக அந்தஸ்திலோ தாழ்வு மனப்பான்மையினை உங்களை ஆட்கொள்ளக்கூடாது. தைரியம் புருஷ லட்சணம் என்பார்கள். ஆகவே எந்த நேரத்திலும் தைரியத்தினை கை விடக்கூடாது.

உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும், அமெரிக்கா, இந்தியாவில் அவுட் சோர்ஸிங்கினை கட்டுப்பாடு விதித்து இந்திய இன்ஜினீரியங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இழக்கும் பயம் இருப்பதாலும், நமது முஸ்லிம்கள் பல் வேறு முஸ்லிம்கள் நடத்தும் இன்ஜினீரியங் கல்லூரிகள், மற்றும் பல்வேறு இன்ஜினீரியங் கல்லூரிகளில் முஸ்லிம்கள் படித்து வருவதாலம் அவர்கள் மிக குறைந்த சம்பளத்தில் இந்தியக் கம்பெனிகளில், அல்லது வளைகுடா நாடுகளில் வேலை தேடுவதினை விட, சம்பளம் அதிகமுள்ள, சமூகத்தில் மரியாதையுள்ள, வேலை உத்திரவாதமுள்ள, சலுகைகள், ஓய்வூதியம் ஆகிய உத்திரவாதத்துடன் கூடிய உயர் பதவியான ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் பரீட்சை எழுதி அந்தப் பதவிகளை அடையும் குறிக்கோளே மேல்.

தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் மூன்றரை சதவீதம் ஒதுக்கீடு அளித்துள்ளார்கள். மத்தியில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தேர்வில்;; தேர்வு பெறாதவர்கள் மனந்தளராது அதற்கு இணையாக தமிழகத்தில் டிப்டி கலெக்டர்-டி.எஸ.பி நேரடி தேர்விற்கான தமிழ்நாடு தேர்வாணையும் நடத்தும் குரூப் ஒன்று பரீட்சை எழுதி தேர்வு பெறலாம்.

மனிதன் ஒரு லட்சியத்தினை அடைய வேண்டுமென்றால் முதலில் அது சாத்தியமாகும் என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த லட்சியத்திற்கு எப்படி பிறந்த குழந்தைக்கு அது வளர சத்துணவு கொடுக்கிறோமோ அதேபோன்று கடின உழைப்பு மூலம் உங்கள் லட்சியத்தினை அடைய முயல வேண்டும். ஒரு முறை தேர்வில் தோல்வியடைந்தால் மனந்தளரக்கூடாது. நான் மூன்று முறை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் வெற்றி மூன்றாவுது முறையாகத்தான் தேர்வு பெற்றேன். மூன்றாவது படிக்கட்டில் ஏறிய குழந்தை தோல்வியடைந்தலும், இரண்டாவது படிக்கட்டில் விழுவதில்லை. நான்காவது படிக்கட்டில் ஏற முடியாது அவ்வளவு தானே. மீண்டும் மூன்றாவது படிக்கட்டிலிருந்து குழந்தை நான்காவது படிக்கட்டுக்குப் போக கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும்-பயிற்சியும் வேண்டும். அதேபோன்று தான் பரீட்சையில் ஒரு முறை தோல்வி ஏற்பட்டால் கஜினி முகம்மது போரில் வெற்றிபெற எத்தனை தடவை முயற்சி எடுத்தான் என்று எண்ணத்தில் கொண்டு அத்தனை தடவை முயற்சி எடுத்தாலும் தான் கொண்ட குறிக்கோளை அடைய பாடுபட வேண்டும். ஆகவே தான் வெற்றி முரசான விடா முயற்சிகளை எடுங்கள,; வெற்றிவாகை சூடி சமூதாயத்தில் வீறு நடை போடுங்கள் என்ற கோசங்கள் எழுப்பினேன் அது சரிதானே என் இனிய இஸ்லாமிய பட்டதாரிகளே!

மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜியின் கவனத்தை ஈர்ப்போம்!

"
2010-11ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் பிப்ரவரி 23 அல்லது 24ம் தேதி தாக்கல் செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்" - செய்தி

நமதூர் வழியாக வந்து சென்றுகொண்டிருந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ், அகல ரயில் பாதை பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதும், இதுகுறித்த நமது ஆதங்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெவ்வேறு பதிவுகளில் எழுதி இருந்தோம்.

நமது தேவைகளை மக்களவையில் எடுத்துச் சொல்லவும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் நமது உணர்வுகளைத் தெரியப்படுத்தவும் வேண்டிய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.பழனிமாணிக்கம், தஞ்சை-அரியலூர் கூடுதல் ரயில் பாதையை துரிதப்படுத்துவதாக வாக்களித்துள்ளதால், நமதூர் கோரிக்கைகளை ரயில்வே அமைச்சரிடமும் பிரதமரிமுடம் தெரியப்படுத்த வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

அறந்தாங்கி-பேராவூரனி-பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம்-முத்துப்பேட்டை ஆகிய கம்பன் எக்ஸ்ப்ரஸ் வழித்தடத்திலுள்ள ஊர்கள் 2-3 தொகுதிகளில் பிரிந்துள்ளதால் ஒரே தொகுதி எம்பியால் நம் ஒட்டுமொத்த கோரிக்கையை எடுத்துச் சொல்லவும் வாய்ப்பில்லை.

அதிரை மற்றும் முத்துப்பேட்டை ஊர்மக்கள் சார்பில் ரயில்வே இணை அமைச்சர் E.அஹமது அவர்களைச் சந்தித்தும் முந்தைய பட்ஜெட்டில் நம் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.

மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு ரயில் மறியல் சிறந்த போராட்ட யுக்திகளுல் ஒன்று. மேற்சொன்ன வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து இல்லை என்பதால் அதற்கும் வழியில்லை.

பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதையும், தடங்கல் ஏற்படுத்துவதையும் இஸ்லாம் கண்டிக்கிறது என்பதால் முஸ்லிம்களால் மேற்கண்ட போராட்ட முறையைச் செய்யவும் வாய்ப்பில்லை.

ஜனநாயக ரீதியில் சாத்தியமான அனைத்து கவன ஈர்ப்பு முறைகளும் அடைக்கப்பட்டுள்ள சூழலில் முதற்கட்டமாக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தலா 1000 தந்திகளை மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பினால் ஓரளவு பலன் கிடைக்க வாய்ப்புண்டு.

யார் முன்வந்து இதைச்செய்யப்போகிறோம் என்பதே தற்போதுள்ள கேள்வி!

Saturday, January 30, 2010

சமூக எழுத்துப் பங்களிப்பில் கைகோர்ப்பீர்...

அதிரை எக்ஸ்பிரஸ் தொடங்கிய நாட்களிலிருந்து இன்றுவரை அதன் எழுத்துப்பணிகளை சமூக கண்ணோட்டத்துடன் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு பிரச்சினைகளை ஆய்ந்து எழுதிவருகிறோம். அதிரை எக்ஸ்பிரஸ் நோக்கம் சமூகம் சார்ந்தது. அதில் எழுதுபவர்கள், நிர்வகிப்பவர்கள் பொதுநலன் என்கிற ஒன்றையே குறிக்கோளாக ஏற்றிருப்பதால் தான் நிர்வகிப்பவர்கள் பற்றி வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்.

பொதுமக்களுக்கு நல்ல கருத்தாளம் மிக்க செய்திகளை கொண்டு சேர்க்கும் பொறுப்பை கூட்டு முயற்சியாக செய்துவருகிறோம். அதிரைஎக்ஸ்பிரஸ் உள்ளூர் அரசியல்வாதிகள் மட்டுமின்றி பல்வேறு பட்ட தலைவர்களின் நிறை குறைகளை எழுதிவருவதால் பங்களிப்பாளர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள், பாதகங்கள் பற்றி உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை.

அதேபோல், அதிரை மக்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் ஓன்று மட்டுமே போதும் என்று நாம் சொல்லவில்லை. அதிரை போஸ்ட் என்கிற செய்தித் வலைப்பதிவை முன்னிலைப்படுத்தியதும், ஊக்குவிப்பதையும் இன்னும் இது போன்ற பல தன்னார்வ தகவல் தளங்கள் வரவேண்டும் என்றும் விரும்புகிறோம்.

அதிரை எக்ஸ்பிரஸில் வரும் கருத்துக்களுக்கு மாற்று கருத்து இருக்கும்பட்சத்தில் அவற்றிற்கு மறுப்பு கொடுக்க அதிரை எக்ஸ்பிரஸை தான் அனுக வேண்டுமென்பதில்லை. அவர்களே தாங்கள் வலை அமைத்து தங்கள் கருத்துக்களை பதியலாம் என்கிற யோசனையையும் அவர்களுக்கு வைப்பதில் மகிழ்ச்சியே.

அதுபோல் அதிரை எக்ஸ்பிரஸில் இருந்த அரங்கம் அதன் நோக்கத்தின் புனிதத்தை கெடுக்கும்விதமாக சிலர் குடும்பவிசயங்களை எழுதி தங்களின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு வடிகாலாக்கிக்கொண்டனர், இன்னும் சிலர் அதிரை எக்ஸ்பிரஸ் மீதே அப்பழியை போட்டு அதன் நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் எழுதினர். அரட்டையின் நோக்கம் வீணாவதை கண்டு அதனை தற்போது நீக்கியுள்ளோம்.

அதேசமயம் உள்ளூர் செய்திகளையும் நல்ல கருத்துக்களையும், தொடுப்புகளையும் அதிரை மக்களுக்கு பகிர்ந்துகொள்ள மிகவும் பிரபலமான ட்விட்டர் கருவியை உபயோகிக்க முடிவு செய்து பயன்படுத்திவருகிறோம்.
அதன் முகவரி http://www.twitter.com/adiraix

இதன் மூலம் அநாமதேய கருத்துக்களை ஓரளவிற்கு தவிற்கலாம். ட்விட்டரில் list வசதி பீட்டா வடிவிலேயே இருக்கிறது. அது புழக்கத்திற்கு வந்தவுடன் குழுவாக அதிரை குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். அதுவரை அதிரை எக்ஸ்பிரஸ் உங்கள் கருத்துக்கள் தெரிய உங்கள் ட்வீட்டில் adiraix என்கிற வார்த்தையை சேர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

மர்மக்காய்ச்சலும் மண்ணாங்கட்டியும்

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பரவிவரும் மர்மக்காய்ச்சல் பற்றி எல்லோரும் அறிந்திருப்பர். எந்த வகையான நோய் என்று அறிய மத்திய அரசு குழுவை அனுப்பி வைத்தது. திறந்த நிலையில் உள்ள தண்ணீரில் இருக்கும் கொசுக்களிலிருந்து பரவும் சிக்குன்குனியா தான் இதுவென்று சுகாதார அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

அதிரையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்நோயின் தாக்கம் இருக்கிறது. அதிரையில் உள்ள சுகாதாரகேடே இந்நோய்க்கான காரணம் என்று சொல்லத்தான் வேண்டுமா? பேரூராட்சியின் அலட்சியப்போக்கும் கவுன்சிலர்களின் பொருப்பின்மையும் இந்நோய் பரவுவதற்கான காரணங்கள். இந்நோய் கட்டுப்படுத்த பேரூராட்சி உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் முதல் குடும்பத்தில் இருவர் மூவர் என்று பலரை சிரமத்திலால்த்தியிருக்கும் இந்நோயின் கொடுமை ஏராளம்.

இக்கொடிய நோயிலிருந்து பாதுகாப்பு வேண்டி அதிரையில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகைகளில் குனூத்து எனும் துஆ ஓதுகிறார்கள். அதே ஜமாத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவரும் தொழுகிறார்கள். ஆனால் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதற்கு முன் ஓட்டகத்தை கட்டிவிட்டு தொழு என்ற ஹதீஸிற்கு மாற்றமாக, ஊரில் ஏற்பட்டுள்ள இந்த சுகாதார கேட்டை தடுக்க பேரூராட்சி நிர்வாகமும் தேர்ந்ததெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தவறிவிட்டதாகவே மக்கள் கருதுகிறார்கள்.

தாங்கள் மக்களிடம் இழந்துவிட்ட நம்பிக்கையைத் திரும்பப்பெற நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் நடத்த அரசியல்வாதிகளால் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மார்க்கப் பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் அரசியல்வாதிகளை நுழைப்பது அரசியல் தெரிந்த மார்க்க விற்பன்னர்கள் செய்யும் யுக்தி. இதில் ஆயிஷா நிர்வாகம் பலியானது வருத்தத்திற்குரியது. அத்துடன் அரசியல்வாதிகள் கூட்டு களவானிகள் என்பது இந்திய மக்கள் அறிந்த ஒன்றை நிறுபிப்பதுபோல் செயலிலந்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக அனைத்து கட்சியைச்சார்ந்தவர்களும் இதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த அரசியல்வாதிகள் உருப்படியாய் செய்ய நினைத்தால்,

1. திறந்திருக்கும் கழிவுநீர் வடிகால்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக குழந்தைகள் அதிகம் புழங்கும் இடங்கள் (உதா. ஓன்றாம் நம்பர் பள்ளி நுழைவாயில், பேரூராட்சிக்கு சுற்றியுள்ள தெருக்கள்)

2. ஓவ்வொரு வீடாக கொசு மருந்து அடிக்கவேண்டும்.

3. பேரூராட்சி சார்பில் இலவச சிறப்பு மருத்துவமுகாம் நடத்தவேண்டும்.

4. அரசு நிலத்தில் மூன்று ஆண்டுகளுக்குமேல் குடியிருந்தால் பட்டா என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வீடில்லா அதிரை ஏழைகள் எத்தனை பேரூக்கு பட்டா கிடைக்க உதவியிருக்கிறீர்கள்? குறிப்பாக வெளிநாட்டில் இளமையை தொலைத்து சேர்த்த பணத்தில் பல லட்சங்களுக்கு (பத்து லட்சங்களுக்கு) மேல் கொடுத்து வாங்கிய நிலங்களுக்கு எதிரில் வெளியூர்காரர்களுக்கு ஒரு காலனியையே உருவாக்கி கொடுத்திருக்கிறது திமுக. இதில் திமுக தலைவர் முனைப்பாக செயல்பட்டிருக்கிறார். (சதாம் நகர்) இது உள்ளூர் மக்களுக்கும் குறிப்பாக திமுக காரர்களுக்கே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. லட்சங்களை கொட்டியவர்களின் நிலங்களுக்கு பாதுகாப்பின்மை. குறிப்பிட்ட சமூகத்தவர்களையே குடியமர்த்தப்பட்டுள்ளதுதான் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

5. பன்றியை ஒழிக்க பத்துவருடங்களுக்கு மேலாக அதிரைவாசிகள் கோரிவருகின்றனர். நீண்டநாள் கோரிக்கையையே நிறைவேற்ற வக்கில்லை.

சுகாதாரத்தையும் சுத்தமான வாழ்க்கையையும் அரசியல்வாதிகளும், அரசாங்க நிர்வாகமும் தான் தொடங்கவும் கடைபிடிக்கவும் வேண்டும். நிர்வாகமும் அரசியல்வாதிகளும் பின்பற்றும் போது சட்டம் போட்டு மக்களை கட்டுப்படுத்தவும் சுகாதாரம் பற்றி பயிற்றுவிக்கவும் முடியும். அதைவிடுத்து இஸ்லாமிய போதனைகள் நடைபெறும் இடத்தை கலங்கப்படுத்திவிடாதீர்கள்.

ப்ளீஸ்...

Thursday, January 28, 2010

அதிரையில் தமுமுக-ம.ம.க சார்பில் குடியரசு தினவிழா!

புகைப்படம் மற்றும் செய்தி : ஜுமா அப்துல் காதர்

Wednesday, January 27, 2010

சவூதியில் அதிரை வாலிபர் தாக்கப்பட்டார்

சில தினங்களுக்கு முன் இஷாத் தொழுகைக்காக ஜித்தா எஸ்கான் பில்டிங் ஷரபியா வழியாகச்சென்று கொண்டிருந்த முஸ்தபா மீராஷா -அதிரை-காழியார் தெரு -சகோதரரை இரண்டு ஆப்ரிக்க மொபைல் திருடர்கள் அடித்து பணத்தை பறித்துள்ளனர், இகாமா மற்றும் உடைமைகளை சூரையாட முயற்சிக்கையில் போராடியவரை இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

கூடயிருந்த ஷம்சுத்தீன் என்ற மலையாளச் சகோதரரை நெஞ்சு அடிவயிறு போன்ற ஆறு இடங்களில் குத்திக் கீறியுள்ளனர்.இந்தத் துயரச் சம்பவம் நடந்து சில மணிநேரங்களில் மலையாளச் சகோதரனைக் காண அந்த இரவிலும் இருநூறுக்கும் மேற்பட்ட மலையாளிகள் மருத்துவமனையில் ஆஜர் ?!

நம் தமிழனைக் காண எத்தனைபேர் .... (....தமிழா......தமிழா! ?) மேலும் கைரளி , ஏசியாநெட் மற்றும் மீடியாக்கள் கேமரா சகிதம் அல்லாண்டு வந்து இறங்கியாச்சு. "சாராயிட்டு ஈ பில்லையறு பரிச்சயம் உண்டில்லே?- வளர நன்னியானு" என்று எம்மை குசலம் வேறு விசாரிப்பு.


மருத்துவமனை டைரக்டரிடம் சிறப்பு கவனத்திற்கு வேண்டியதல்லாமல்
நேற்று நம் அய்டா அமைப்பின் சகோதரர்கள் நலம் விசாரித்து வந்தனர்.
அவர்கள் விரைந்து நலம்பெற்று வீடு திரும்ப அனைவரும் துஆ செய்வோமாக.

புகைப்படம் மற்றும் செய்தி: சகோ.ராஃபியா-ஜித்தா

Monday, January 25, 2010

ரயிலுக்கு நேரமாச்சு

பல ஆண்டுகளாக இயங்கி வந்த காரைக்குடி-சென்னையை இணைக்கும் கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயில் போக்குவரத்து கிடப்பிலிருக்கும் நிலையில் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் திரு.பழனிமாணிக்கம் அவர்கள் தஞ்சை- அரியலூர் இடையே மேலும் ஒரு வழித்தடம் அடுத்தாண்டுக்குள் இயக்கப்பட விரைவு நடவடிக்க எடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பது தஞ்சை தொகுதியுடன் இணைக்கப்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்றதிற்கு உட்பட்ட அதிராம்பட்டினம் மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

1பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி,முந்தைய புதுக்கோட்டை மக்களவை தொகுதியுடன் இருந்தபோதும், தற்போதைய தஞ்சையுடன் இணைக்கப்பட்ட பிறகும் அதன் மக்களவை உறுப்பினர் எந்தக்கட்சியைச் சார்ந்தவராகயினும் மத்திய அமைச்சராக இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. முந்தைய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர், ரகுபதி மற்றும் தற்போது பழனிமாணிக்கம் ஆகியோர் மத்திய அமைச்சராக இருந்து வருகின்றனர்.

காரைக்குடி - சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்ப்ரஸ் வழித்தடத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் தொகுதி, மத்திய அமைச்சர்கள் ரகுபதி,பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ ஆர்.ரெங்கராஜன், தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூர்/திருக்குவளை ஆகியவை உள்ளன.

கூடுதலாக கம்பன் எக்ஸ்ப்ரஸ் வழித்தடத்திலுள்ள நமது அண்டையூரான முத்துப்பேட்டையைச் சார்ந்த அப்துல் ரஹ்மான் அவர்கள் வேலூர் M.P ஆகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழக முதல்வருடன் தொடர்புடைய கம்பன் எக்ஸ்ப்ரஸ் வழித்தடம் முடிவு பெறாமல் இருப்பதற்கு யார் காரணம்?

சமீபத்தில் நமதூர் நலவிரும்பிகள் மற்றும் பிரமுகர்கள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் E. அஹமது அவர்களைச் சந்தித்து, மனு கொடுத்தும் பயனற்று, அனைத்துதரப்பு அரசியல்வாதிகளாலும் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.

அதிரையிலிருந்து உப்பு, மீன், கருவாடு,இறால், தேங்காய் மற்றும் தென்னை சார்ந்த விவசாய உற்பத்திப்பொருட்கள் ஆகியவை சென்னைக்கும் நாட்டின் பிறபகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல ரயில்போக்குவரத்து பெரிதும் உதவியாக இருந்தது.கடந்த நான்காண்டுகளாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மேற்சொன்ன தொழில்கள் நலிவடைந்துள்ளதோடு,விவசாயப் பொருட்களை நாட்டின் பிறபகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் செலவும் அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் மருத்துவம், படிப்பு மற்றும் தொழில் நிமிர்த்தமாக அதிரையிலிருந்து சென்னைக்குச் சென்றுவர கம்பன் எக்ஸ்ப்ரஸ் வழித்தடம் மாணவர்கள்,நோயாளிகள்,பெண்கள்,முதியோர் மற்றும் தொழிலதிபர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் கார் மற்றும் பேரூந்து போக்குவரத்து அதிகரித்து சாலைகளில் வாகன நெரிசலுடன் போக்குவரத்துச் செலவும் கனிசமாக அதிகரித்துள்ளது.

அதிரையின் பெரும்பாலான துடிப்பான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணி நிமிர்த்தமாக இருப்பதாலும், உள்ளூரிலிருப்பவர்களுக்கு உந்துதலாக மக்கள் கூட்டம் பின்புலத்தில் இல்லாத காரணத்தாலும் நமது மற்றும் அக்கம்பக்க ஊர்களின் அவசியத் தேவையான கம்பன் எக்ஸ்ப்ரஸ் விசயத்தில் அரசு மற்றும் அதிகார வர்க்கம் பாராமுகமாக இருக்கிறார்கள்.முந்தைய ரயில்வே இணை அமைச்சர்கள் வேலு மற்றும் இந்நாள் இணையமைச்சர் E.அஹமது ஆகியோரிடம் முறையாக கோரிக்கை வைத்தும் பலனில்லை என்பதால் இனியும் இவர்களை நம்பிப் பிரயோஜனமில்லை.

அதிரையை மையமாக வைத்து அறந்தாங்கி, பேராவூரணி,முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய ஊர்களின் மக்கள் பிரதிநிதிகளைத் திரட்டி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும்படியான அஹிம்சை வழியிலான ஆர்ப்பாட்டம்,கறுப்புகொடி,உண்ணாவிரதம் என தொடர்ச்சியான போராட்டங்களைச் செய்ய வேண்டும்.

அதிரை - திருத்துறைப்பூண்டியில் கனிசமானளவில் கம்யூனிஸத் தோழர்கள் இருப்பதால் அவர்களையும் இணைத்து மத்திய,மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்ட யுக்திகளை வகுக்களாம்.

தொகுதி எம்.எல்.ஏ ரெங்கராஜன், பழனி மாணிக்கம், திருநாவுக்கரசர் மற்றும் பக்கத்து ஊரான முத்துப்பேட்டை சார்பாக வேலூர் M.P அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் கருணநிதி மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நமது தேவையை தெரியப்படுத்தும் வகையில் குழு அமைத்து திட்டமிட்டு கம்பன் எக்ஸ்ப்ரஸ் அதிரை வழியாக சென்றுவருவதை துரிதப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!

<<<அபூஅஸீலா-துபாய்>>>

Saturday, January 23, 2010

பழனிமாணிக்கம் M.P. போட்ட பட்டை நாமம்

காரைக்குடியிலிருந்து திருவாரூர்-மயிலாடுதுறை-விழுப்புரம் மார்க்கமாக சென்னை சென்று வந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் கடந்த நான்காண்டுகளாக அகல ரயில் பாதை காரணமாக துண்டிக்கப்பட்டது.முன்னாள் ரயில்வே இணை அமைச்சர்கள் வேலு மற்றும் E.அகமது ஆகியோரிடம் மணுக்கள் கொடுத்தும் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் நேரில்சென்று சந்தித்து இப்பகுதி மக்களின் தேவைகளை எடுத்துச் சொல்லியும் ஒரு பயனுமில்லை.

காங்கிரஸ் கூட்டணி அரசில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவும் சரி தற்போது அமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜியும் நமது கோரிக்கைகளை அறிந்ததாதத் தெரியவில்லை. பிரிக்கப்படாமல் இருந்த புதுக்கோட்டை தொகுதியில் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு மத்திய அமைச்சர் கிடைத்தும் புதுக்கோட்டைத் தொகுதியிலிருந்த அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்களின் அவசியத் தேவையான ரயில்வே போக்குவரத்துத் திட்டம் வாக்களித்தப்படி நிறைவேற்றப்படவில்லை.

கிழக்குக் கடற்கரைச் சாலைத்திட்டம் செயல்படத் தொடங்கியபிறகு அதற்கு இணையாகச் செல்லும் ரயில்வே வழித்தடம் புத்துயிரூட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் தஞ்சை தொகுதியுடன் இணைக்கப்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்றத்திலுள்ள நமதூருக்கும் சேர்த்து மக்களவை உறுப்பினர் திரு.பழனிமாணிக்கம் தஞ்சை- அரியலூர் இடையே புதிய அகலரயில்பாதை அடுத்தாண்டிற்குள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் அறந்தாங்கி, பேராவூரனி, அதிரை முத்துப்பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து திருவாரூர் ரயில்பாதையை இணைக்கும் அகலரயில்பாதை திட்டம் மேலும் தாமதமடையக்கூடும் அல்லது கைவிடப்படும் அபாயம் உள்ளது.


ஒவ்வொருமுறையும் ஜும்ஆ பள்ளிகளில் தொப்பியைப் போட்டுக்கொண்டு நின்று கூழைக்கும்பிடு போட்டுவிட்டு ஓட்டுக்களை அள்ளிச்சென்று அடுத்த தேர்தலுக்கோ அல்லது முக்கிய பிரமுகர் வீட்டு திருமணத்துக்கோ வந்து தலைகாட்டும் M.P., MLA க்கள் இதுகுறித்து உரிய அதிகாரமட்டங்களுக்கு நம் கோரிக்கையை எடுத்துச் சொல்வார்களா?

வடமாநிலங்களில் முன்பதிவு செய்திருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தாது ஓசியில் ரயில் பயணம் செய்யும் பயணிகளை எந்த சட்டமும் கட்டுப்படுத்துவதில்லை. மேலும் தேசவிரோத சக்திகள் அரசிற்கு எதிர்ப்பைக் காட்ட ரயில் கடத்தல்,வெடிவைத்து தகர்த்தல் என்று அரசுக்கும் ரயில்வேக்கும் நஷ்டத்தைக் கொடுக்கிறார்கள்.

சட்டப்படி பணம்கட்டி முன்பதிவு செய்து பயணம் செய்வதற்கான வசதியை முறையாகக் கேட்கும் இப்பகுதி மக்களின் கோரிக்கையை அரசும் ஆளும் தரப்பினரும் உணரும் வகையில் மிகப்பெருமளவில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினால் தான் கண்டுகொள்வார்களோ என்னவோ?

இப்படியும் சில அதிரைவாசிகள்!

அதிரை எக்ஸ்ப்ரஸ் என்பது நமதூர் மக்களிடம் நமதூர் சம்பந்தப்பட்ட பொதுவான, பயனுள்ள செய்திகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வகைசெய்யும் ஓர் திறந்தவெளி இணைய தளம் என்பதை தொடக்கம் முதலே சொல்லி வருகிறோம். எனினும், இதில் நடக்கும் கருத்துப்பரிமாற்றங்கள், பின்னூட்டங்கள் பலநேரம் பயனுள்ளதாக, குறுந்தகவல்தளமாக இருந்தாலும் சிலநேரம் பலிபீடமாகவும் பாவிக்கப்படுகிறது.இதுகுறித்து மேலுமொரு மடல் வளைகுடாவிலிருக்கும் அதிரைவாசிகளில் ஒருவர் மனம்விட்டு எழுதியது.

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம்ம ஊர்க்காரர்கள் எல்லோரும் நலமா, என்னடா இவன் "கோழி
குனியா"(தமிழ் பற்று ஜாஸ்தி) எல்லோர் உடம்பிலேயும் விளையாடுற நேரத்தில இப்படி கேட்கிறானே என்று யாரும் தப்பா நினைக்கவேண்டாம்.இப்படித்தான் ஆரம்பிக்கனும் என்ன பன்றது. சரி விஷயத்துக்கு வருவோம்.

கடந்த சில நாட்களாக ஒரு குறிப்பிட்ட கவுன்சிலர் மீது புகார்களும், ஆதரவான சில கருத்துகளும் அதிரை எக்ஸ்ப்ரஸில் இடம் பெற்றது. இம்மாதிரியான கருத்து பகிர்வுகள் அடுத்தவர் மனது புன்படாமல்
பார்த்துக்கொள்வது அவசியம்.அதே நேரத்தில் ஒருவர் மீது புகாரோ, குற்றச்சாட்டோ, சொல்லும் முன், சம்பந்தபட்டவரின் கவனத்திற்கு நேரடியாகவோ அல்லது தெரிந்தவர் யார் மூலமாகவோ அவரின் கருத்தையும் அறிந்தால் நலம்.

அவர் தரும் விளக்கம் புகார் கூறுபவர்க்கு திருப்தி இல்லையெனில் பொது மேடைக்கு கொண்டு வரலாம். இந்த இடத்தில் ஒன்றை கவனிக்கவும் முன்விரோதம்,தனிபட்ட பகை, இந்த இருவருக்கும் இடையில் இல்லாமல் ஊர் நலனே முதன்மையானதாகவே இருத்தல் அவசியம். அதுவே ஆரோக்கியமான வழி.தனிப்பட்ட
விருப்பு, வெருப்பகளை, பொதுவில் வந்து சொல்வது சொல்பவருக்கே அது அசிங்கம்.

நம்ம ஊரில் முடிந்தவரை யாரும் ஊர் நலன் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வரமாட்டார்கள். இந்த நிலையை எப்படியாவது போக்கிட வேண்டும். ஒரு செய்தியை நாலுபேரிடம் பகிர்ந்தால்தான் தெளிவு கிடைக்கும். ஒன்னு சொன்னால் ஒரு பக்கம் ஆதரவு, இன்னொரு பக்கம் எதிர்ப்பு.இப்படியாக இருவேறுபட்ட நிலை எல்லா விஷயத்திலும் உள்ளது.

ஒளிவுமறைவின்றி உண்மையான,தகுந்த ஆதாரங்களுடன் உள்ள கருத்துகளுக்கு என்றைக்குமே வலிமை உண்டு. உதாரணத்துக்கு பெண்களைப் பற்றி இங்கே கலந்துரையாடல் பகுதியில் ஏக
வசனத்தில் எழுதுகின்றனர்.எந்த நோக்கத்திற்காக இப்படியெல்லாம் எழுதுகின்றனர் என்று தெரியவில்லை.

தைரியம் இருக்கும்பட்சத்தில் நேரடியாக கேட்கவேண்டியது தானே, அப்படி இல்லாமல் இங்கே எழுதிட்டா பெரிய ....... என்று நினைப்பா?. அதுவும் பெயரில்லாமல். சொல்றதையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக "அல்லாஹுவிற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்" என்கிற வரி தவறாம இடம் பெறுது.

ஆர்வமாக நம்ம ஊர் செய்திகள் என்ன வந்திருக்கிறது என்று
அதிரை எக்ஸ்பிரஸுக்கு வந்தால் "புறம் பேசுதல், அவன் இந்த நாட்டுல "பேங்குக்கு குல்லா" போட்டுட்டு வந்தான்" இப்படியான செய்திகள் (நல்ல வேளை கஃல்ப் நாடுகளில் உள்ளவர்கள் இந்த அவதூறுவிலிருந்து தப்பித்தார்கள்,ஏனென்றால் அடியேனும்
அங்கேதான்)பார்க்கும்போது "கொடுமை கொடுமை என்று இங்கு வந்தால் அதைவிட கொடுமை தலைவிரிச்சு ஆடுங்கிறமாதிரி இருக்குது.

நான் இங்கே நம்ம ஊர்க்காரர் ஒருவரிடம் உங்கள் வீட்டில் யாருக்கேனும் வாக்காளர் அட்டை விடுபட்டு இருந்தால், அதை அப்ளை பன்ன, நம்ம ஊர் வெப்சைட்டுல அதற்கான தகவலும், லிங்கும் இருக்கும் போய்ப் பாருங்க என்றேன். சரி என்று அவர் பார்த்துவிட்டு, அதில் குறிப்பிட்ட "வெப்லிங்க்"கை க்ளிக் பன்னால் அது “CANNOT FIND SERVER” என்று காட்டுவதாக சொல்லிவிட்டு,
இன்னொன்றும் சொன்னார்.அதாவது தேவையில்லாத விஷயங்கள்(கோள்,அநாகரிக பேச்சு,etc, ) அதிரை எக்ஸ்ப்ரசில் அதிகம் இடம் பெறுவதாக குறைப்பட்டுக் கொண்டார்.அதை வரும் காலங்களில் தவிர்க்கும்படி சொல்லுங்கள் என்பதாக கேட்டுக்கொண்டார்.

இன்ஷா அல்லாஹ் அதிரை எக்ஸ்ப்ரஸ் டீம் இதை பரிசலிப்பீர்கள் என்று நம்புகிறேன். குறிப்பு:இந்த கட்டுரை மூலம் யாரேனும் மனம் புண்பட்டு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். (அதிரைவாசி)

பலமுறை சொன்னதுபோல்,இத்தளம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்லநோக்கத்தில் மட்டுமே தொடங்கப்பட்டது. தனிநபர்பகைமை வளர்க்கவோ துதிபாடவோ வேண்டுமெனில் அவரவர் பெயரில் விருப்பப்படி வலைப்பூ அல்லது இணையதளம் தொடங்கி செயல்படுத்திக் கொள்ளலாம். எனினும் சபை நாகரிகம், ஆரோக்கியமான விவாதம், விமர்சனங்களை எதிர்கொள்ளும் பண்பு இவையெல்லாம் கிலோ என்ன விலை? என்று கேட்கும் ஒருசிலரால் நமது நல்ல நோக்கத்தை சரிவரச் செயல்படுத்த முடிவதில்லை. அந்தந்த பதிவுகளுக்கான பின்னூட்டங்களை மட்டுறுத்தலாம். அதேபோல், அரட்டையில் தொடர்ந்து வரம்பு மீறுபவர்களின் ஐபி முகவரியிலிருந்து தளத்திற்கு வருவதை தடுக்கலாம். அவ்வாறே தேவையானபோது மட்டுறுத்துகிறோம்.

அரட்டை அரங்கில் அழகிய குர்ஆன், ஹதீஸ் விளக்கங்கள், ஊர் நடப்புகளை நேரலையாக அலசுவதற்கும் நல்ல வாய்ப்பு இருப்பதால் அதை தொடர்ந்து அனுமதிக்கிறோம். அங்கிருந்து கிடைக்கும் சிறுதுளி செய்தியிலிருந்தும்கூட (உம்.மரண அறிவிப்பு) பயன் கிடைக்கிறது. இத்தகையவர்கள் மத்தியில்தான் அடுத்தவர் அந்தரங்கங்களையும், கோள், புறம் போன்றவற்றையும் எழுதும் யோக்கியவான்களும் வந்து செல்கின்றனர்.

இத்தகைய நயவஞ்சகர்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது மட்டுமே சரியான தண்டனையாகும். உண்மையை பகிரங்கமாகச் சொல்லத் தயங்கும் கோழைகள் அவர்கள். சொந்தமுகத்தைக் காட்டத் தயங்கும் அத்தகைய முகமுடிப் பேர்வழிகள் எல்லா சமூகத்திலும் இருக்கவே செய்றார்கள்.

நாகரிகத்தின் உச்சியில் இருந்து கொண்டு உயர் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இக்காலத்திலும் தங்கள் துர்க்குணங்களைத் திருந்தவிரும்பாதவர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. நாகரிக கருத்துப் பரிமாற்ற களமாக செயல்படவே அதிரை எக்ஸ்ப்ரஸ் விரும்புகிறது என்பதை மீண்டும்ஒருமுறை நினைவுறுத்துகிறோம்.

Friday, January 22, 2010

கதவை சாத்து! கந்தூரியை நிறுத்து! !


தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணம் கடற்கரை தெருவில் உள்ள தர்காவில் நடைபெற்றுவரும் கந்தூரி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் முகமாக நடுத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 15.01.2009 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y.அன்வர் அலி மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் இணைவைப்பின் விளைவுகளை விளக்கி பேசினார்கள்.

மேலும், கந்தூரி திருவிழா ஊர்வலம் உங்கள் பகுதியில் வரும் போது அதை நீங்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த பிரச்சாரத்தில் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கக்கூடியவர்களும் கலந்துகொண்டு, தவ்ஹீத் ஜமாத்தின் இந்த பணியை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது..

Thursday, January 21, 2010

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பதிவு செய்வதற்கும், ஏற்கனவே உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.). அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனது அடையாள அட்டையுடன் வர உள்ளார்.

வாக்காளர்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் புகைப்படத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் ஆகியவற்றை குறிப்பெடுப்பார். 01-01-2009 அன்று 18 வயது நிரம்பியவர்கள் படிவம் 'பி'-யில் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி கொண்டு வரும் படிவத்தில் கையொப்பமிட்டுக் கொடுக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வயது மற்றும் இருப்பிடச் சான்றிதழை அவரிடம் அளிக்க வேண்டும். அலுவலர் வீடுகளுக்கு வருகை தந்ததற்கு அடையாளமாக அந்த வீட்டின் முகப்புக் கதவில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரி 22-1-2010க்குள் வராமல் இருப்பின் அது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர், சென்னை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம்.

இதுபற்றிய முழு விவரமும் www.ceotamilnadu.nic.in - என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Wednesday, January 20, 2010

இன்று பிறந்த குழந்தைகள் ஆன மாவீரர்கள்.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் தங்களது சாதனைகளின் மூலம் மக்களின் இதயங்களை கவர்வது வாடிக்கை.

ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை இஸ்லாமிய நெறி கவர்ந்து ஈர்த்ததால் இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட நிகழ்வு கடந்தவாரம் அரங்கேறியது.

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டிக்காக வருகை தந்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் இஸ்லாத்தை இதய பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தானிய குத்துச்சண்டைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வந்த 6 பேரும் காமரூன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரும் முஃப்தி முஹம்மது நயீம் கலீமா சொல்லிக் கொடுக்க 9 வீரர்களும் முஸ்லிம்களாக மாறினர். அனைத்து விளையாட்டு வீரர்களும் பாரம்பரிய இஸ்லாமிய உடைகளை அணிந்து இருந்தது நெகிழ்ச்சியடைய செய்த நிகழ்ச்சியாக நடைபெற்றதாகவும் பாகிஸ்தானிய குத்துச்சண்டை கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் 9 பேருக்கும் இஸ்லாமிய பெயர் சூட்டப்பட்டது.

அலி அக்பர், முஹம்மது அலி, தைமூர் ஹுஸைன், ஃபசுர் ரஹ்மான், இக்பால் ஹுஸைன், முஹம்மது அக்ரம், முஹம்மது சமி, முஹம்மது யாசிர், முஹம்மது அர்ஷக் என இனி இவர்கள் அழைக்கப்படுவார்கள்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் குத்துசண்டைக் கழக சேர்மன் முஸ்லிம் உம்மாவில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் குத்துச்சண்டைக் கழக துணைத் தலைவர் இக்பால் ஹுஸைன் தெரிவிக்கி றார்.

பிற நாடுகளை விட முஸ்லிம் நாடுகளில் தங்களுக்கு கிடைத்த கண்ணியமும் விருந்தோம்பலும் முஸ்லிம்களின் அன்றாட வழிபாட்டு முறைகளும் தங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்ததாக குத்துச்சண்டை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி:உண்மை .

Tuesday, January 19, 2010

21 ஆம் வார்டுக்குச் செய்த நலத்திட்டங்கள்

நமதூர் 21 ஆம் வார்டு மெம்பர் இப்ராஹிம் தான் வார்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். இதுபோன்று ஒவ்வொரு வார்டு உறுப்பினரும் தத்தம் சாதனைகளைப் பட்டியலிட்டால் அதன் நிறைகுறைகளை ஆய்வுக்குட்படுத்தி ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகுக்கும் என்ற நல்ல நோக்கத்துடன் விருப்பு வெருப்பின்றி அவற்றை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.அதிரை போஸ்ட் பதிவை பொதுநல நோக்குடன் சமர்ப்பிக்கப்பட்ட, தன் செயல்பாடுகளுக்கான விமர்சனமாகக் கருதி, மென்மேலும் தன் சேவைகளால் சாதனைகள் படைக்க சகோ.இப்ராஹீம் அவர்களை உரிமையுடன் கோருகிறோம்.

அதேபோல், நம் செயல்பாடுகள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம்நாடி தன்னலமற்று செயல்படும் பொதுநல சேவகர்களின் ஆர்வத்தைக் குறைக்காத வகையில் விமர்சனங்களை முன்வைக்கும்படி அதிரை போஸ்ட் பதிவர்களை சற்று அதிக உரிமையுடனும் நட்புடனும் கேட்டுக் கொள்கிறோம்.

முஃமீன்கள் அனைவரும் சகோதரர்கள். அல்லாஹ்வின் அருளைநாடி நன்மைகளில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள் என்ற அருள்மறை திருமொழியைக் கருத்தில் கொண்டு செயல்படுவோமாக. ஆமின்.

-அதிரை எக்ஸ்ப்ரஸ்-

அதிராம்பட்டினம் பேரூராட்சியைக் கண்டித்து ம.ம.கவினர் ஆர்ப்பாட்டம்

அதிரை பேரூராட்சியைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இருசக்கர வாகன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ம.ம.க நகரச் செயலாளர் S.S.சேக்காதி அவர்கள் தலைமையில் கஃப்பார் (ஒன்றிய செயலர்), A.J.ஜியாவுதீன் (ம.வ.செயலர்) மற்றும் P.உமர்தம்பி (நகர தலைவர்) முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையைச் சார்ந்த ம.ம. தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருவை தந்தவர்களை M.H.சாகுல் ஹமீது வரவேற்றார். தஞ்சை மாவட்டப் பொருளாளர் S.செய்யது அவர்கள் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். கண்டன உரையை ம.ம.க கொள்கை விளக்கப் பேச்சாளர் P.செல்லசாமி நிகழ்த்தினார்.

நகர இளைஞர் அணி செயலாளர் நிஜாம் நன்றிகூற ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது.

செய்தி & புகைப்படம்: ஜும்மா அப்துல் காதர்

Monday, January 18, 2010

மெம்பர் இப்ராஹிம் அவர்களின் மறுப்பறிக்கை

நம் சகோதர வலைப்பூ அதிரை போஸ்டில் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நமதூர் CMP லேன் வார்டு மெம்பர் சகோ.இப்ராஹீம் அவர்கள் மறுப்பறிக்கை அனுப்பியுள்ளார்.உள்ளது உள்ளதுபடியே அதை வெளியிடுகிறோம்.
Sunday, January 17, 2010

இலவச தொழிற்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு

சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் இலவச தொழிற்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட முகவரியை அணுகவும்.

சான்றிதழ்களுடன் 18-01-2010 (திங்கள் கிழமை) இறுதிநாள் என்பதால் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவியருக்கு வாய்ப்பு உள்ளவர்கள் தெரிவிக்கவும்.


பிரிண்ட் செய்து பள்ளிவாசல் நோட்டிஸ் போர்டிலும் வைக்கலாம்.

தகவல்: ஈமான்-டைம்ஸ் - துபாய்

ஏழை குடிசையில் எளிய‌ சூரிய கிரகணம்

அபூர்வ சூரிய கிரகணம் பிர்லா கோளரங்கத்தில் பல ஆயிரம் செலவு, மக்கள் வரிசையில் மணிக்கணக்காக நின்று அறிவியல் கருவிகள் வழியாக கங்கண சூரிய கிரகணத்தைக் கண்ட​னர்.

இத்த​கைய செலவுகள் இல்லாமலும் நீண்ட​ காத்திருப்பு இல்லாமலும் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம் என்பது எத்த​னைப் பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.

நண்பர் ஒருவரைக் காண அவரது இல்லத்திற்குச் சென்றேன். என்ன ஆச்சரிய‌ம் அவரது இல்லத்தில் கீற்றுகளில் உள்ள ஓட்டைகள் வழியே சூரிய‌ ஒளிக‌ள் த‌ரையிலும் சுவ‌ற்றிலும் விழுந்தன. அவ்வொளிகள் வழியே அபூர்வ சூரிய கிரகணம் தெரிந்தது. அந்த‌ ஒளிக‌ள் உட‌னே ப‌ட‌ம் பிடிக்க‌ப்ப‌ட்ட‌து. எவ்வித‌ அறிவிய‌ல் க‌ருவிக‌ளும் இல்லாத‌ கால‌த்தில் ந‌ம் முன்னோர்கள் இப்ப‌டித்தான் நிழ‌லைக்கண்டு ஆய்வு ந‌ட‌த்தின‌ர் போலும். 2019 இல் வ‌ரும் கங்கண சூரிய கிரகணத்தை ஓலைக் குடிசையில் காண‌லாமே. அப்பட​ங்கள் பதிவு செய்யப்படுகிறது. 15.01.2010


ஆக்கம் & புகைப்படங்க: அதிரை த​மிழாசிரியர் டாக்ட​ர் ஆ. அஜ்முதீன்

Saturday, January 16, 2010

அதிரை பேருந்து நிலையம் தொடர்பாக துணைமுதல்வருக்குக் கோரிக்கை

துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இணையதளத்தில் நம்ம ஊர் சம்பந்தமாக நான் அனுப்பிய கோரிக்கை மனு. இதை நான் ஏன் வெளியிடுகிறேன், பெருமைக்காக என்று யாரும் நினைக்க வேண்டாம்.

இம் மாதிரியான கோரிக்கை மனுக்களை, அதிரை எக்ஸ்ப்ரஸ் தளத்திற்கு வரும் நம் ஊரைச் சார்ந்தவர்கள் அனைவரும்(Each and Everyone) ஊர் நலனில் அக்கறை கொண்டு இம் மாதிரியான மனுக்களை mkstalin.net என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் கண்டிப்பாக நல்லது நடக்கும்.


நான் அனுப்பிய மனு:
சார், எங்கள் ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம். சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இங்கு வாழ்கின்றனர். கடல் சார்ந்த வாணிபம் இங்கு நடைபெறுவதால் பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வருகின்றனர்.ஒரு நல்ல பேருந்து நிலையம் இங்கு இல்லை. பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புது பேருந்து நிலையம் கட்டுவது என்று முடிவெடுத்து, நிதி ஒதுக்கி நான்கைந்து வருடங்கள் கடந்து விட்டது.இதில் யார் தடுக்கிறார்கள் என்று தெரியவில்லை, பூர்வாங்க பணி எதுவுமே நடைபெறவில்லை. இதனால் பொது மக்கள் ரொம்பவும் அவதி படுகிறார்கள். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், உட்கார இடமில்லாமல் வெயில்,மழை காலங்களில் ரோட்டோர கடைகளில் ஒதுங்கி படும் இன்னல் சொல்லி மாளாது. மக்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் முழுகவனத்துடன் செயல்படும் நீங்கள் எங்கள் ஊரின் முக்கிய தேவையான இப்பிரச்சினையை தங்கள் இணையதளத்தின் மூலம், இச்செய்தி உங்கள் பார்வைக்கு வரும் என்ற நம்பிக்கையுடன், எங்கள் ஊர் புது பேருந்து பணிகள் உங்கள் ஆணைப்படி விரைவில் தொடுங்கும் என்ற அத்தியாவசியமான, முக்கியமான எதிர்பார்ப்புடன். ஊர் மக்களின் சார்பாக, அ.அஹமது இர்ஷாத், அதிராம்பட்டினம். தஞ்சாவூர் மாவட்டம்.
வழிமுறை:

இத்தளத்திற்கு போய் ஆங்கிலத் பிரிவில் “PEOPLE FORUM” என்ற” OPTION” யை க்ளிக் செய்து,”POST YOUR COMMENT” என்பதை தேர்வு செய்து அதில் கேட்கும் பெயர், இ-மெயில்,மொபைல், ஊர் விவரங்களை கொடுத்து “ COMMENT” என்ற பாக்ஸில் கோரிக்கைகளை பதிவு செய்தால் விரைவில் உங்கள் கோரிக்கை பதியப்படும் என்ற பதில் வரும். சிறுதுளி பெருவெள்ளம்.

(அதிரைவாசி)

Thursday, January 14, 2010

சென்னை விமான நிலையத்தில் அதிரை நபர் கைது


சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இந்தாலி நாட்டிற்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. இதில் செல்ல இருந்தவர்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை போட்டனர்.

அப்போது தஞ்சாவூர் அதிராபட்டினத்தை சேர்ந்த நபர் இத்தாலி செல்ல வந்தார். அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை போட்டனர்.

அப்போது வேறு நபரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி வந்ததை கண்டுபிடித்தனர். உடனே பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு மேல் விசாரணைக்காக புறகர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.செய்தி : நக்கீரன்

Monday, January 11, 2010

எச்சரிக்கை : அதிரையில் மனநல காப்பகமா பணநல காப்பகமா?

நமதூர் M.S.M. நகரில் மனநல காப்பகம் தொடங்க இருப்பதாகவும், அதனைத் தொடங்கியவர் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான நபர் என்றும், தற்போது வாடகை கட்டிடத்தில் மோசடியாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தக் காப்பகம்,முறையற்ற வகையில் பதிவு செய்யப்பட்டதோடு,வாடகைக்குவீடு கொடுத்தவர்களிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் அதிரை எக்ஸ்ப்ரஸ் புலணாய்வு குழுவினருக்குத் தகவல் கிடைத்துள்ளன.

இதற்காக வெளிநாடுவாழ் அதிரைவாசிகளைக் குறிவைத்து வசூல்வேட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் , இவரின் மோசடிகளை அதிரை மக்களிடம் தெரியப்படுத்தி எச்சரிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால் மேலதிக தகவல்களை adiraixpress@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மனநலம் குன்றியவர்களுக்கான சேவையகம் என்ற பெயரில் மோசடிக்குத் திட்டமிட்டுள்ளது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விசயம் என்பதுடன் அதிரை மக்களின் நன்கொடைகள் தவறாகப்பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதால் வெளிநாடுவாழ் அதிரைவாதிகள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுநலன் கருதி அதிரை எக்ஸ்ப்ரஸ் கேட்டுக் கொள்கிறது.

-புலணாய்வு-

Friday, January 8, 2010

ஷைத்தானின் அடிச்சுவடுகள்ஷைத்தானின் அடிச்சுவடுகள்!

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)


என் இனிய தர்காஹ்வாதிகளே மேற்கண்ட நபிமொழிக்கு ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?

•சந்தனக்கூடு
•கொடிமரம்
•சமாதி வழிபாடு
•அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
•கப்ரை உயர்த்திக் கட்டுதல்
•தஸ்பீஹ் மணி உருட்டுதல்
•மவ்லூது பாடல்கள்
•கவ்வாலி இசைக்கச்சேரிகள்
•உரூஸ் உண்டியல்
•யானை குதிரை ஊர்வலங்கள்
•பிறந்த நாள் விழா எடுப்பது
•இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
•வட்டி வாங்குதல்
•வரதட்சணை பிடுங்குதல்
•ஜோதிட நம்பிக்கை
•கருமணி தாலி கட்டுதல்
•வாழைமரம் நடுதல்
•ஆண்கள் தங்கம் அணிவது
•மஞ்சள் நீராட்டுவிழா
•சுன்னத் கத்னா திருவிழா
ஒருமுறை மறுபடியும் கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

இணைவைத்தால் மன்னிப்பு கிடையாது

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)தாயத்தை கட்டாதீர்கள்

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)


அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)


இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ் கூறுகிறான்: -

“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )


இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது

‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)


இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)


இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)


இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

சகோ ஆசுபத்திரி தெரு சம்சுதீன்,(நியூயார்க்)அவர்கள் தமக்கு வந்த ஈமெயிலை பார்வேட் பண்ணி இருந்தார்கள்.எல்லாருக்கும் பயன்படவேண்டும் எனும் கருத்திலும்,அச்சமூட்டி-எச்சரிக்கை, நன்மையை ஏவி தீமையை தடுப்பது நம் அனைவர் மீது கடமை எனும் அடிப்படையிலும்,இது பதியப்பட்டுள்ளது.அவர்களுக்கு எம் நன்றி.

Thursday, January 7, 2010

ஆட்டுமூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும்.ஆட்டுமூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும்.
சமீபத்தில் ஒரு சகோதரியின் வெப்தளத்தில் "ஆட்டு மூளை வறுவல்" செய்யும் முறைபற்றி கொஞசம் தலைவாரியாக எழுதியிருந்தார். [இதற்க்கு விலாவாரியாக என்று எழுதுவது சரியில்லை என நினைக்கிறேன்...விலாவாரி "கிட்னி வறுவல்' சார்ந்தது.]
இதற்க்கு சிலபேர் பின்னூட்டமாக 'நல்லாஇருந்துச்சி:" என்ற ரேஞ்சில் எழுதியிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டது சமயல் குறிப்பா? அல்லது வறுவலா எனத்தெரியவில்லை. எனக்கு உள்ளுர பயம் தான்.நாமும் வெள்ளைக்காரன் மாதிரி. "Good!!! taste nice!!'என்று எழுத மனசு வராமல் நானும் எழுதினென் இப்படி:
இதை சாப்பிட்டால் [கொலெஸ்ட்ரால் அதிகம்
உள்ளவர்கள்] ' ஹிந்து வாக இருந்தால்
"சங்கு" நிச்சயம். முஸ்லீமாக
இருந்தால் 'தலைமாட்டில்" ஊது பத்தி நிச்ச்யம்.
ஆனால் என் ந்ண்பனிடமிருந்து [Sabeer Ahmad-Dubai] வந்த இ-மெயில்
இப்படி இருந்தது;
ஏன்டா, நீ ஜோக்கடிக்கறியா பயம் காட்டுறியா?

ஏன் கேட்கிறேன்னா, நம்ம பாய்கள் பலபேர் ரசித்து ருசித்து சாப்பிடும் அயிட்டம்டா இது. நான் துபாயில் இருக்கும்போது பெரும்பாலும் உணவகங்களில் இரவு உணவுக்காக காத்திருக்கும்போது காதில் விழுந்த அயிட்டஙளின் பெயர்களில் சிலவற்றையாவது உன் கைல சொல்லலேன்னா நான் சாப்பிடறது செரிக்காது . மூளை fry , குடல் வறுவல், பல்குத்தி fry (நாம செவரொட்டிம்போம்), கொத்துப் பரோட்டா (அதுவும் beef கொத்து, மட்டன் கொத்து, chicken கொத்துன்னாதான் கொஞ்சம் மரியாதையா பாப்பான். சாதா கொத்துன்னா கழுவாத டம்ள்ரில்தான் தண்ணீரே தறுவான்.)ஆட்டுக்கால் பாயா, ஈரல் fry, இப்டி சாப்ட்றாங்னா. அதுவும் உங்கூரு palm oilலதான் செய்வாய்ஙக(கட்ட தோசையும் சட்னியும் ஆர்டர் பண்ணிட்டு wait பன்ற என்னை ஏதோ செத்த எலிய பார்க்ற மாதிரிதான் பார்ப்பாய்ங்னா.) .
'தலைமாட்டில்" ஊது பத்தி நிச்ச்யம் பயம் காட்றியப்பா.

சமீபத்தில் ஒரு டயட்டிசியனிடம் [National Heart Institute-Kuala Lumpur] பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னது' இறைச்சி தாராளாமாக் சாப்பிடலாம், சாப்பிடும்போது இறைச்சி மட்டும் 5, 6 துண்டு அதாவது ஒரு துண்டு ஒரு தீப்பெட்டி அளவு என்றார், மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் எப்படி சொல்வது இந்த் உண்மையை இங்கு ஒவ்வோருவரும் ஒரு விருந்து என்று வந்து விட்டால் ஒரு தீப்பெட்டி தொழிற்ச்சாலையே சாப்பிடுகிறார்கள் என்று.

எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் சொன்னது: [ Dr.Bala Subramaniam.Cardiologist osler diagnostic centre;Chennai]
" பொதுவா மட்டன் சாப்பிடலாம்'
சாப்பிடும்ம்போது, "பார்ட்ஸ்" தவிர்த்து விடுங்கள்.

" பார்ட்ஸ்னா என்ன டாக்டர்?'

'ஆர்கன்...கிட்னி/ஈரல்....

"பார்ட்ஸ் சாப்பிட்டா என்னா ஆகும் டாக்டர்?'

'உங்க பார்ட்ஸ் கெட்டுடும்'
இதைவிட தெளிவான பதில் யாரும் சொல்லமுடியாது
பொதுவாக சுவர்ரொட்டி , ஈரல் இவைகளுக்கு என்ன வித மான பட்டை , கிராம்பு, நெய் சேர்க்கலாம் என யோசிக்கும்
முன் அதன் செயல்பாடுகள் [உடலில்] என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
..மற்றும் அன்றைக்கு [Physiology ]"உடல் உறுப்புகள்&பயன்பாடுகள்" க்ளாஸ் நடக்கும் போது சந்தனக்கூடு பார்த்துட்டு தூங்கிட்டேனப்பா' னு புலம்பவும் முடியாது

.எனக்கு தெரிந்து ஆட்டுமூளையில் என்ன இருக்கிறது என ஒரு பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் பார்த்தால் 'இருப்பது எல்லாம் கொலஸ்ட்ரால்...கொலஸ்ட்ராலை த்விர ஏதுமில்லை' என்று விசாரனைக்கூண்டில் சொல்வது போல் உண்மை சொல்லும்.பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் எந்த சூழ்நிலையிலும் பேத்தாது. பொதுவாக கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு செரிக்க
3 மணி நேரத்துக்கும் மேல் ஆகலாம். [சைவ]சாதாரண உணவு செரிக்க 2 மணி நேரம் ஆகலாம்.
"நான் தான் இதுவெல்லாம் சாப்பிடுவேணெ எனக்கு ஒன்னும் செய்யாதே!" என அடம்பிடித்தால் தனியாக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளவும். வயதான காலத்தில் தஞ்சாவூருக்கும் , பட்டுக்கோட்டைக்கும் ஆஸ்பத்திரி டோக்கன் வாங்க வரிசையில் நிற்க
வேண்டிவரும்.கையில் ஆளுக்கு ஆள் ஒரு பைலுடன் இன்டெர்வியுக்கு போகிற மாதிரி அலைவது காலக்கொடுமை.

உங்களுக்கு வயது 40ஐ தான்டிவிட்டதா?.. உங்கள் மனைவி ஆட்டுமூளை / பாயா என சமைத்து வைத்து விட்டு ' நீங்களே சாப்பிட்டுறுங்க..நான் காலையில் உள்ள இட்லி மிஞ்சிடுச்சு..அதை சாப்பிடுகிறேன்' என்று சொல்கிறார்களா..உங்கள் கல்யாணப்பத்திரிக்கையில் உங்கள் மனைவியின் பெயருக்கு முன்னால் 'தீன் குலச்செல்வி /திரு நிறைச்செல்வி" என்று இருக்கும் அதை 'தீத்துக்கட்டும் செல்வி ' என்று திருத்தி வாசிக்கவும்.

ZAKIR HUSSAIN

Tuesday, January 5, 2010

மரண அறிவிப்பு

நமதூர் மேட்டு தெருவை சார்ந்த மர்ஹும் அப்துல் வகாப் மரைக்காயர் அவர்களின் மகனும் ஷிபா மருத்துவமனையின் நிவாகிகளின் ஒருவருமான செய்யதலி மரைக்காயர் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் சென்னையில் காலமானார் (இன்னா....).

அன்னாரின் ஜனாசா இன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் இராயப்பேட்டை பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படுவதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர் .இவரது மக்பிரத்து நல்வாழ்விற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோமாக ...

வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். (அல்குர்ஆன்)

Monday, January 4, 2010

பைத்துல்மால் அமைப்பு கூட்டம் .

அதிராம்பட்டினத்தில், மக்கள் நல அமைப்பான பைத்துல்மால் அமைப்பின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சித் தலைவர் எம்.எம்.எஸ். அப்துல்வகாப் தலைமை வகித்தார். அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம். ஹாஜாமுகைதீன் முன்னிலை வகித்தார்.

செயலர் வக்கீல் முனாப், துணைத் தலைவர் சி. முகமது இப்ராஹிம், நயினாமுகமது, முகமது ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மயிலாடுதுறை-காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணியை துரிதமாக செயல்படுத்த வலியுறுத்தி, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை தில்லியில் நேரில் சந்தித்து மனு அளிக்கவும், இதற்காக குழு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. அப்துல் மாலிக் நன்றி கூறினார்.

நன்றி :தினமணி

Saturday, January 2, 2010

மூடுவிழாவும் மூட்-அவுட்டும்..

அதிரை எக்ஸ்ப்ரஸ் அதிரையைச் சார்ந்தவர்களால் அதிரை மக்களுக்காக நடத்தப்படுகிறது. அதில் சுமார் 10 பேர் கூட்டாகவும் தனியாகவும் பதிவெழுதி வருகிறார்கள். நமதூர் சார்ந்த பிரச்சினைகளை உலகெங்கும் பரவியிருக்கும் அதிரைவாசிகளுக்கு குறைந்தபட்சம் எத்தி வைக்கவும், அதிரைவாசிகளின் எழுத்தார்வத்திற்கு பயிற்சிக் களமாகவுமே இதுவரை இயங்கி வருகிறது.

அதிரை எக்ஸ்ப்ரஸ் என்றுமே தன்னை இஸ்லாமியச்செய்திகளை மட்டுமே வழங்கும் தளமாகச் சொன்னதில்லை.அதிரை சார்ந்த செய்திகள்போக, பிற தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு ஊடகமாகவும் அவ்வப்போது செயல் படுகிறது.இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக்கருத்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிரான சதிவலைகளையும் அவ்வப்போது சுட்டிக்காட்டி விழிப்படையச் செய்து வருகிறது.

Image and video hosting by TinyPic

நேரடியாகவும்,மின்மடல் மூலமாகவும்,அரட்டை அரங்கத்திலும் வைக்கும் செய்திகளை முடிந்தவரை தொகுத்தளிக்கும் பணியையும் செய்கிறது. நமது தளத்தில் அதிரையைச் சார்ந்த எவரும் எதுகுறித்தும் எழுதலாம் என்ற புரிந்துகொள்ளலில்தான் இதுவரை செயல்பட்டு வருகிறோம். அவ்வகையில் நமதூர் இர்ஷாத் (புனைப்பெயர்: அதிரைவாசி) அதிரை எக்ஸ்ப்ரஸுக்கு தந்து அரசியல் கட்சிகளின் கோபம் எப்படி இருக்கிறது? ('ஸ்ரேயா கட்சிகள்') என்ற ஆக்கத்தை எழுதி அனுப்பியிருந்ததை அப்படியே பதிந்தோம்.

அரசியல் கட்சிகள் மற்றும் சினிமா நடிகர்களை எள்ளி எழுதப்பட்டிருந்த அதை "JUST FOR FUN' என்று குறிப்பிட்டே அனுப்பியிருந்தார். அதிரை குறித்த செய்திகள் எதுவும் பதியப்படாமல் இருந்த இடைவெளியில் அதிரைவாசி ஒருவர் எழுதியிருந்ததை சாதாரணமாகவே பதிந்திருந்தோம். பதிவுகளைப் பதியும் முன் பிற பதிவர்களை கலந்தாலோசிக்க அவகாசமில்லாததாலும் யாருக்கு எதிரானதாக இல்லாத காரணத்தினாலும் பதிவேற்றியதில் தவறு காணமுடியவில்லை.

ஆர்வமாக தளத்திற்கு வந்து திரும்பிச் செல்வதைவிட சகஅதிரைவாசியின் ஆக்கத்தைப் படித்துச் செல்வது ஏமாற்றத்தைத் தவிர்க்கும்தானே? மேலும், கண்டிப்பாக படித்துச்செல்ல வேண்டிய அவசியம் எதுவுமின்றி தலைப்பே மேற்கொண்டு வாசிப்பதா வேண்டாமா என்று சொல்லும்போது 'மூடுவிழா' எச்சரிக்கை பதிவு அவசியமா? என்று பதிவிட்ட சகபதிவரிடம் உரிமையாகக் கேட்கிறோம்.

அப்படியே, அதிரை எக்ஸ்ப்ரஸில் இன்னின்ன விசயங்களை மட்டுமே பதிய வேண்டும். இவையெல்லாம் கூடாதென்றால் அவைகுறித்த பொதுக்கருத்தை வைப்பதே சரியான அணுகுறையாகும்.பின்னூட்டங்களிலும் அரட்டையிலும் அடுத்தவர் குடும்பப் பிரச்சினையையும் அவதூறுகளையும் அணானியாக அள்ளிவீசும் முகமிலிகளின் செயலைவிட மோசமானதாக இல்லையே!

இனி நமதூர் பிரச்சினைகளை மட்டுமே அதிரை எக்ஸ்ப்ரஸில் பேசுவோம் என்றாலும் சரியே. ஆனால் அதை முன்கூட்டியே தெரியப்படுத்தி விட்டால் ஆர்வமாக எழுதி அனுப்புபவர்களை நோகடிக்க வேண்டியதில்லையே!

-----------------------------------------------------------

மேலுள்ள புகைப்படத்தை அனுப்பியவர் அதிரைவாசி (அஹமது இர்ஷாத்-கத்தார்)

இந்த புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு கீழ்க்கண்ட வரிகளை படிக்கவும்.

கறுப்பு உருவங்கள் ஒட்டகங்களின் நிழல்தான்;அவற்றை ஒட்டிய கோடு போன்ற (வெள்ளை) வடிவங்கள்தான் நிஜ ஒட்டகங்கள். இந்தப் படம் ஒட்டகங்களுக்கு நேர்மேலாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது எடுக்கப்பட்டது.

ரசனைகள் பலவிதம்!!!

அவசரத்துக்கு வரமறுக்கும் அதிரை மருத்துவர்கள்

நமதூரில் பெருமைக்குரியவர்கள் பலர் இருப்பதில் நமக்கு பெறுமையளிகிறது ஆனால் மருத்துவ சேவையாற்றும் (?) சில மருத்துவர்கள் அவசரத்துக்கு அழைத்தால் வர மறுக்கும் அவல நிலை நமது நகரில் ஏராளம் சமிப நாட்களுக்கு முன் CMP லைனில் ஒருமுதியவர் (ஆண்பிள்ளை பெற்று கொள்ளாதவர்) மிகவும் சீரியசான நிலையில் அதிரையில் உள்ள மருத்துவர்களை அக்கம்பக்கத்து வீட்டினர் அழைத்த பொழுது வரமறுக்கும் அவலங்களை நமதூர் மருத்துவர்கள் முன்வருவது இல்லை. இதற்க்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம் நிறைய பேஷண்டுகள் இருக்கிறார்கள் என ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகின்றனர் .

இதனால் நோயாளிக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
எனவே அன்பார்ந்த மருத்துவர்களே ...
தயவு செய்து இனிமேலாவது இது போன்ற இன்னலான சந்தர்பத்தில் உதவுவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானது நாளை மறுமையில் இறைவன் முன் நிறுத்தப்படும் பொழுது தாங்கள் செய்த இதுபோன்ற உதவிகளின் அடிப்படையில் சுவர்க்கம் புக அல்லாஹ் உங்களை ஆக்க வேண்டும். அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமின்.

Friday, January 1, 2010

இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள்?

நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.

ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. இது மார்க்க ரீதியான காரணம்.

இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம் என்பதற்காக இறைவன் இதைத் தடுத்திருக்கலாம்.

பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. எனவே, இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மீன்களில் அந்த நிலைமை கிடையாது.

(அதிரைவாசி)

புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பிக்க

புதிய ரேஷன் கார்டுகளுக்கு இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசின் உணவுத்துறை.

தமிழகம் முழுக்க போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசு பல லட்சம் கார்டுகளைப் பிடித்தது. இவற்றில் சந்தேகத்துக்கிடமான கார்டுகளின் எண்களை இணையதளத்தின் மூலம் சரிபார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

போலி ரேஷன் கார்டு நீக்கும் பணி மற்றும் கார்டுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கும் பணி நடந்து வந்ததால், புதிய கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்னும் பல லட்சம் மக்கள் ரேஷன் கார்டு பெறாமல் உள்ளதால் அவர்களுக்கு புதிய கார்டுகள் வழங்கும் பணியை மீண்டும் துவங்குமாறு அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இதைத் தொடர்ந்து புதிய கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டுகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இல்லாமல் இருந்தது. புது கார்டுகள் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், இனி ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி; இர்ஷாத்

குறிப்பு; முகவரி அறிந்தவர்கள் பிண்ணூட்டமிடவும்

அனைத்து திருமணங்களுக்கும் பதிவு அவசியம்

தஞ்சாவூர் : கடந்த நவ. 24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்று தஞ்சை மாவட்டப் பதிவாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்து திருமணங்கள் சட்டம், இந்திய, கிறிஸ்துவ திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம், முகமதியர்கள் ஷரியத்திருமண சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் கடந்த நவ.24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த திருமணங்கள் திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் திருமணம் நடைபெற்ற எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திருமணப் பதிவிற்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தை எந்தவித விடுதல் அல்லது பிழை இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட முகவரி, வயது தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றுடன் ரூபாய் 100 கட்ட ணத்தை செலுத்தி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் சரியாக இருந்தால் சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் சரியான தகவல்கள் தராத அல்லது உரிய ஆவணங்கள் இணைக்கபடவில்லை என்றால் திருமணப் பதிவாளர் குறைகளை சரி செய்து மனுதாரருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு திருமணப் பதிவு விதிகளின் படி திருமணம் நடக்கவில்லை என்று திருமணப்பதிவாளரால் உணர்ந்தால் அந்த மனுவும் திருப்பி அனுப்பி வைக்கப்படும். இந்த மறுப்பு ஆணை மீது சம்பந்தப்பட்ட மனுதாரர் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்டப் பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளரால் பிறப்பிக்கப்படும் உத்தரவு திருப்தி இல்லை என்றால் உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவருக்கு மேல் முறையீடு செய்யலாம். பதிவுத்துறை தலைவரின் ஆணையே இறுதியானது ஆகும்.

எனவே கடந்த நவ.24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் எந்தவித ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யாத அல்லது வீதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும். திருமணப்பதிவு தொடர்பான விவரங்கள் அனைத்து பதிவு அலுவலகங்கள், மாவட்ட, துணைப் பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய தளம் www.tnreginert.net தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நன்றி; ராஜகிரி கஜ்ஜாலி

குறிப்பு; இது தொடர்பான கருத்துக்களை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

sorry அதிரை எக்ஸ்பிரஸ் உங்களுக்கும் மூடு விழாதான்

நம் ஊருக்கென்று பல இணைய தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு,பல்வேறு காரணங்களால் மூடு விழா நடத்தப்பட்டு-அதிரையின் செய்தியை தாங்கியும்,மார்க்க விஷயங்கள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு தளமாக அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை போஸ்ட் செயல்பட்டுவருவதை நாம் கண்டுவருகிறோம்.எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

அந்த உன்னத சேவைக்கு இடையூறு செய்யும் வண்ணம் சில கட்டுரைகள்,உதாரணமாக
ஸ்ரேயா- கட்சிகள் என்ற கட்டுரை,இந்த கட்டுரை மூலம் அதை எழுதிய சகோதரர் என்ன சொல்ல வருகிறார் என புரியவில்லை ?அது ஒரு தமாசுக்காக(just for fun) என்றால்,அப்படிப்பட்ட தமாசுக்கென பல தளங்கள் (கேடுகெட்ட)இருக்கின்றன.


நம் இனிய மார்க்கம் பற்றி குரானும்,ஹதீசும் என்ன போதிக்கின்றன,அதனால் மக்கள் பயன்பெற்று சுவர்க்கம் செல்ல வழி கிடைக்க ,அதன் விளக்கம் அறிய இந்த தளத்தைப் பயன்படுத்தலாமே,நம் மூரின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி (ரயில்வே போன்ற)இப்படி எத்தனையோ இருக்கின்றன.எனவே அதை முன்னிறுத்தி கட்டுரைகள் தந்தால்,பொதுமக்கள்,அதிகாரிகள் என எல்லா தரப்பு மக்களையும் அடையும்,அதை விடுத்து இது போன்ற கட்டுரைகள் வருமானால, sorry அதிரை எக்ஸ்பிரஸ் உங்களுக்கும் மூடு விழாதான் என்பதை உரிமையோடும்,அன்போடும்,அதோடு எச்சரிக்கையாகவும் பதிவு செய்கிறேன்.

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல)அமல்கள் செய்து: "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)

திருக்குர்ஆன்
-----------------------------------------------
சகோதரரின் நினைவூட்டலுக்கு நன்றி. அதிரை எக்ஸ்பிரஸ் கூட்டுழைப்பு. நீங்களும் அதில் பங்களிப்பாளர். கூட்டுழைப்பில் சில நேரங்களில் தவறு ஏற்படலாம். அதற்காக கூட்டையே கலைக்கலாமா?
--மற்றொரு பங்களிப்பாளர்