Wednesday, March 31, 2010

வேகமாக வளரும் அதிரையின் இணைய ஊடகத்தில் பங்கெடுப்பீர்

அன்பிற்கினிய அதிரை வாசகர்களே அஸ்ஸலாமு அலைக்கும்...

அதிரை எக்ஸ்பிரஸ் தன்னார்வலர்களால் தொடங்கப்பெற்று கடந்த மூன்றாண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிவீர்கள். தங்களது பணிநேரம் போக எஞ்சிய நேரங்களில் தங்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் நாங்கள் கேள்வியுறும் அதிரை தொடர்பான செய்திகளையும் எழுத்துக்களாக சமூக நலன் ஒன்றையே குறிக்கோளாக கருதி பங்களித்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

அதேசமயம் பங்களிப்பாளர்களாக உள்ளவர்கள் அதிகமாக அதிரையில் வசிப்பவர்களாக இல்லை. வேலையின் நிமித்தம் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதனால் உள்ளூரில் நடைபெறும் நிகழ்வுகளை உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ கூட எழுதமுடியாமல் போய் விடுகிறது.

அதிரைச் செய்திகளை பகிர்ந்து கொள்ளும் இடமாக அதிரைஎக்ஸ்பிரஸ் இருப்பதால், வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர்காரர்கள், அதிரையில் நிகழ்ந்த ஏதோ ஓரு சம்பவங்களை கேள்வியுற்று, இவ்வலைப்பதிவிலே வந்த செய்தி தொடர்பான மேலதிக தகவல்கள் அறிய மேலும் தகவல் வந்திருக்கிறதா என்று பார்த்த வண்ணம் உள்ளனர்.

(சமீபத்தில் சகோதரர் ராஜிக் காக்கா அவர்களும் அபுல் ஹசன் காக்கா அவர்களிருவரும் விபத்தொன்றில் இறந்த செய்தி கேள்வியுற்ற வாசகர்கள் நமது வலைப்பதிவிற்கு அதிகமாக வந்து மேலும் தகவல்கள் உள்ளதா என்று பார்த்துச் சென்றனர். இதுபோன்ற சமயங்களில் விபத்து தொடர்பான முழுமையான செய்திகளை, தகவல்களை, குடும்பத்தினரின் தொலைபேசி எண்கள், இறந்தவர்களது புகைப்படம் போன்ற சிறிய தகவல்களை உள்ளூரில் வசிக்கும் பங்களிப்பாளர்களால் மட்டுமே முழுமையாக விசாரித்து வழங்க முடியும்.)

அதிரை எக்ஸ்பிரஸ் செய்திக்களமாக மட்டுமல்லாமல் கருத்துக்களமாகவும் திகழ்ந்து வருகிறது. அதிரை எக்ஸ்பிரஸில் பங்களிப்போர் தங்களுக்கென்று தனி வலைப்பதிவகளும் தொடங்கி தங்களுக்கென்றே தனி வாசகர் வட்டங்களை உருவாக்கி தங்களது எழுத்துத்திறமையை, ஊடகப்பற்றை வளர்த்துக் கொள்கின்றனர்.

இனியேனும் பிற ஊடகங்களின் மீது திட்டிக்கொண்டிராமல் கிடைக்கப்பெற்றுள்ள கட்டற்ற ஊடக சுதந்திரமான வலைப்பதிவு ஊடகத்தை நம்மவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் ஓரு பகுதியாக அதிரை எக்ஸ்பிரஸை பயிற்சிக்களமாக உபயோகித்துக்கொள்ள முன்வரவேண்டும். உங்களது திறமையை எழுத்துக்களில் மட்டுமில்லாமல் யூடியூப் கோப்புகளாக கூட பதிப்பிக்கலாம். ஏஜே பள்ளி கானொளி ஓரு எடுத்துக்காட்டு.

அதிரை எக்ஸ்பிரஸில் நேரிடையாக பங்குபெற முடியாத பட்சத்தில், உள்ளூர் நிகழ்வுகளை (எ.கா. இன்னாருக்கு பிள்ளை பிறந்தது போன்ற சந்தோஷ செய்திகளை கூட) ட்விட்டரில் கணக்கு தொடங்கி குறுஞ்செய்திகளாக (adiraix என்று சேர்த்துக்கொள்ளவேண்டும்) அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இன்னும் சில மாதங்களில் ஏமாளிகளாக்கப்பட்ட பொதுமக்களை நோக்கி ஜனநாயக கூத்தான தேர்தல் வர இருக்கிறது. ஆளுங்கட்சி எதிர் கட்சி என்று வருபவர்களை அவர்களது சாதனைகளை, (பொய்) வாக்குறுதிகளை பேட்டி எடுத்து அதிரை எக்ஸ்பிரஸில் பதிப்பித்து தங்களது ஊடகப்பற்றை வளர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்.

அதிரை எக்ஸ்பிரஸில் பங்களிப்பாளராக ஆவதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர்காரர்களின் அபரிதமான அன்பையும், ஆதரவையும், (கொஞ்சம் எதிர்ப்பையும்) நிச்சயம் பெறலாம். முன்வாருங்களேன்.

உங்களைப்பற்றிய அறிமுக குறிப்புடன் புகைப்படத்தோடு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம்
அதிரை எக்ஸ்பிரஸ் டீம்
ஜிமெயில் முகவரி: adiraixpress

அதிராம்பட்டினத்தில் ஒத்திகையா? - விடுதலை எச்சரிக்கை தலையங்கம்

கடந்த இருவாரங்களுக்குமுன் நமதூர் A.J.பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து  மதக்கலவரத்தை உண்டாக்க முயன்ற பழஞ்செட்டித்தெரு சன்முக தேவர் பேரன்கள் பாலா @ குலூ தலைமையிலான RSS பயங்கரவாதிகளின் சதி குறித்த செய்தி. விடுதலை நாளிதழ் தலையங்கமாக வெளியிட்டுள்ளதை நன்றியுடன் அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்கு மீள்பதிவு செய்கிறோம்.

-தகவல்: இல்யாஸ்-

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவாரங்கள்,பாரதீயஜனதா கட்சி இவற்றின் அன்றாட திருப்பணியே ஆங்காங்கே மதக் கலவரங்களை உருவாக்கி, அதன்மூலம் இந்து வெறியை ஊட்டிக் குளிர்காய்வதுதான்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை வட்டாரங்களில் அடிக்கடி இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதைத் தங்களின் வழமையான பணியாகவே கொண்டுள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் உள்ள ஏ.ஜே. பள்ளிவாசல் சுற்றுச்சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது. கோட்டாட்சியரிடம் முறைப்படி புகார் கொடுக்கப்பட்டது. கோட்டாட்சியரும் விசா-ரணை நடத்தி அந்தச் சுவர் பள்ளிவாசலுக்குச் சொந்தமானதுதான் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

பொறுக்குமா விஷமிகளுக்கு? மீண்டும் அந்தப் பள்ளிவாசல் சுவரினை மதவாதக் கும்பல் இடித்-தது. இதனை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முசுலிம் அமைப்புகள் அறிவித்தன.

ஆர்ப்பாட்டத்தில் 4000 முசுலிம்கள் பங்-கேற்றனர். இந்து முன்னணியின் கலவரங்களுக்குத் துணைபோக விரும்பாத இந்துக்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கடைகளும் அடைக்கப்பட்டன.

முஸ்லிம்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்யக்கூடாது என்று திட்டமிட்ட சங் பரிவார்க் கும்பல் போட்டி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

இரண்டு மீனவத் தெருக்களுக்கு இடையே நிலவி வந்த வாய்க்கால் தாவாவைப் பயன்படுத்தி கலவரத்திற்குக் கத்தியைத் தீட்டினர்.

வேண்டுமென்றே ஒரு கலவரத்தை உருவாக்குவதற்காகத் தீட்டப்பட்ட இந்தச் சதித் திட்டத்திற்கு, எதிர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கக் கூடாது என்று காவல்துறையிடம் எழுத்து மூலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட தகவல் அளிக்கப்பட்டது.

பா.ஜ.க. வகையறாக்களின் உள்நோக்கத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இந்துக்களும் ஆதரவு தராத நிலையில், பா.ஜ.க.-வினரின் முயற்சி படுதோல்வியை அடைந்தது.

தொடக்கத்தில் சங்பரிவார் நடவடிக்கைகளுக்கு ஓரளவு ஆதரவு காட்டி வந்தவர்களும், இந்துக்களும் நாளடைவில் அவர்கள் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு, ஆதரவினை விலக்கிக் கொண்டனர். இதன்மூலம் இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு விட்டனர்.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதியில் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டங்களில்கூட ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் கலவரம் விளைவித்ததுண்டு.முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையையும் கூட அவமதித்தனர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைமைகளே பின்பலமாக இருந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் பிரச்சினைகளை உருவாக்கத் தீனிப் போட்டும் வருகின்றன.

உளவுத் துறையும் இதன் விஷ ஊற்றைக் கண்டுபிடித்து, தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடு செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

 முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வட்டாரங்களில் கணிசமான அளவு முஸ்லிம்கள் இருக்கும் நிலையில், அதனைக் குறிவைத்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதுதான் பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் நோக்கமாகும்.

குறிப்பிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் வியாபாரம் உள்ளிட்டவைகளில் செல்வாக்குப் பெற்றிருப்பது இயல்பானதே! அதனை ஏதோ இந்துக்களுக்கு எதிரான ஒன்று என்று திசை திருப்பி அப்பாவிகளைத் தூண்டிவிடும் விஷமத்தனத்திற்கு முஸ்லிம்கள் அல்லாதார் இரையாகக் கூடாது.

காவல்துறையும் கவனமாக இருந்து ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அத்துமீறல்களை சட்டரீதியாக ஒடுக்க வேண்டும் என்பதே நல்லிணக்கத்தை விரும்பும் பொதுவான மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இஸ்லாமியக் கல்வி விழிப்புணர்வு ஆலோசனை

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நமதூர் போன்ற ஊர்களில் குறிப்பாகவும், முஸ்லிம் சமுதாயத்தில் பொதுவாகவும் இஸ்லாமியப் பின்னணியில் கல்வியை ஒழுங்கு படுத்துவதற்கான முயற்சியில் தமிழகத்தின் குறிப்பிட்ட உலமாக்கள் சிலர் தம் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.                                              

இதன் முன் முயற்சியாக, அண்மையில் சென்ற 24-03-2010 அன்று, வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் கல்லூரியின் பேராசிரியரும் கல்விச் சிந்தனையாளருமான மவ்லானா முஹம்மத் இக்பால் காசிமீ ஹஸ்ரத் அவர்கள் நமதூருக்கு வருகை தந்திருந்தார்கள்.         உள்ளூர் உலமாக்கள் சிலரின் ஒத்துழைப்புடன், காலை பத்தரை மணி முதல் பன்னிரண்டரை வரையில் செக்கடிப் பள்ளியில் +2 மாணவர்களுக்கான முதல் சொற்பொழிவும் கலந்துரையாடலும் நடந்தது.  அதில் 50க்கும் மேற்பட்ட +2 எழுதிய மாணவர்கள் கலந்துகொண்டு, கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டலைப் பெற்றனர்.                                                                                                                   இதனையடுத்து, மாலை 4 மணியளவில் முஹைதீன் ஜுமுஆப் பள்ளியில், கல்வி நிறுவனப் பொறுப்பாளர்கள், கல்வியில் அக்கறை கொண்டவர்கள், ஆசிரியர்களுக்கான கருத்துப் பரிமாற்ற அமர்வு, ஹஸ்ரத் அவர்களின் தலைமையில் நடந்தது.  இக்கூட்டத்தில் மவ்லானா அவர்களின் முன்னுரைக்குப் பின்னர், வருகை தந்தவர்களிடம் கருத்துக் கணிப்பு வேண்டப்பட்டது.  பல விதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.  அத்துடன், இஸ்லாமிய அடிப்படையில் முற்றிலுமாகக் கல்வி போதிப்பதில் உள்ள Practical difficulties பற்றியும் கலந்துரையாடல் நிகழ்ந்தது.                                                                இறுதியாக, காதிர் முகைதீன் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் மஹ்பூப் அலி அவர்களையும், மவ்லவீ யூசுஃப் பாக்கவி அவர்களையும் தொடக்கப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டது.  அவ்விருவரும் கூடிக் கலந்து, எதிர்காலக் கருத்துப் பரிமாற்றத்துக்கும், இஸ்லாமிய அடிப்படையில் கல்வியை ஒழுங்கு படுத்துவதற்கும் ஆவன செய்யும் குழுவை அமைப்பதில் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனப் பணிக்கப்பட்டனர்.                           

இச்செய்தியைப் படிக்கும் வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பின்னூட்டமாகப் பதிவு செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.                           

செய்தி: அதிரை அஹ்மது

Tuesday, March 30, 2010

நாடியம்மன் கேஸ் ஏஜன்சியின் அடாவடித்தனம்

நாடியம்மன் காஸ் ஏஜன்சியில் சிலிண்டர் வாங்கிய பின் 25 நாட்களுக்குப் பின்னரே மறுசிலிண்டர் கோரி பதிவு செய்யவேண்டும் என்றும், அதன்பிறகு 20 நாட்கள் கழித்தே மறுசிலிண்டர் வழங்கப்படும் என கூறுகின்றனர். ஒரு சிலிண்டருக்கும் மறு சிலிண்டருக்கும் இடையில் குறைந்த பட்சம் 45 நாட்கள் ஆகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் இணைப்புகள் வைத்து கொண்டு இவர்கள் கொள்ளை லாபம் பார்ப்பதற்காக பொதுமக்களை சிரமப்படுத்தும் நாடியம்மன் கேஸ் ஏஜென்ஸிமீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஊனமுற்றோர் கோட்டாவில் கேஸ் உரிமம் பெற்றுள்ள நாடியம்மன் கேஸ் ஏஜென்ஸி உரிமையாளர் வாடிக்கையாளர்களிடம் அடாவடியாக நடந்து கொள்வதும், குறிப்பாக அதிரை முஸ்லிம்களிடம் கடுப்படிப்பதும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதுகுறித்து சக வலைப்பதிவான அதிரை போஸ்டில் சமீபத்தில் செய்தி
வெளியானது குறிப்பிடத்தக்கது.

நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்!!!துப்புறவு பணியை சரியாக மேற்கொள்ளாத அதிரை பேருராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் நமதூர் தெருக்கள் எல்லாம் குப்பை மேடுகளாகவும், துர்நாற்றம் வீசும் இடமாகவும் மாறிகிடந்தன, அதனால் சிக்கன் குனியா போன்ற பல கொடிய நோய்கள பரவிவந்தன, மேலும் நிலைமை மோசமடையாமல் இருக்க சிறப்பு கலந்தாய்வு கூட்டம் ஒன்றை ஆய்சா மகளிர் அரங்கம் சில மாதங்களுக்கு முன் ஏற்பாடு செய்தது, இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேருராட்சி நிர்வாக அதிகாரி, அதிரை பேருராட்சி மன்ற தலைவர், அதிரையின் அனைத்து மருத்துவர்கள் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். சுகாதார விழிப்புணர்வு பற்றிய சிறப்பு சொற்பொழுவு ஒன்றும் ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்களால் அனைவருக்கும் மத்தியிலே அங்கு நிகழ்த்தப்பட்டது. சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அதில் ஒன்று அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டிகளை உடனடியாக அமைத்து அதில் குப்பைகளை போடுவது. அல்ஹம்துலில்லாஹ் குப்பை தொட்டிகளை அமைக்கும் பொருட்செலவை ஆய்சா மகளிர் அரங்கம் ஏற்று அவ்வாறு குப்பை தொட்டிகளையும் அமைத்தது. பொதுமக்களும் குப்பைகளை அத்தொட்டியில் போட்டு வருகிறார்கள். ஆனால குப்பை தொட்டிகள் சுத்தம் செய்யபடாமல் நிரம்பி வழிகின்றன்.

அன்றும் இன்றும் ஒரு சின்ன வித்தியாசம்தான்...
அன்று ரோட்டில் குப்பைகள்!
இன்று தொட்டியில் குப்பைகள்!!

"வருமுன் காப்பதே சிறந்த மருந்து"

பல நோய்கள் பரவுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய, சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடிய குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்பது அதிரை பொதுமக்களின் கோரிக்கை.

குப்பைத்தொட்டிகளில் உள்ள குப்பைகளை அவ்வப்பொழுது அகற்றிட பேருராட்சி நிர்வாகம் முன்வருமா?

படம் மற்றும் செய்தி: அப்துல் பரக்கத்.

Monday, March 29, 2010

Media Scholarship for Muslim students at IMII

By TCN Staff Reporter,
New Delhi: Here is good news for the students belonging to Muslim communities and who aspire to become journalist. The International Media Institute of India (IMII), in its noble initiative to support the interests of these groups, is offering full scholarship assistance for limited number of students. IMII, located in Noida near Delhi, offers an 11-month post-graduate diploma in multimedia journalism. The classes will start on 5th July 2010.

The amount of scholarship is up to Rs 50,000.

Eligibility criteria:

Candidate should be Muslim. The annual income of his/her parent should be less than Rs 10 lakh and minimum marks in Graduation must be 45% or up. However, preference will be given to the students coming from small towns and rural areas. Last date for application to avail the scholarship is 15 April 2010. The scholarship fund has been instituted by Dr. Najma Sultana, who was born near Hyderabad and practices medicine in the United States.

According to the institute’s website, students will learn to produce professional news stories for print, audio, video, web and mobile phone platforms. The faculty at IMII is drawn from top Indian and International journalists and the school is affiliated with the City University of New York’s path-breaking Graduate School of Journalism.

IMII is also offering Jane Louis scholarship for those bright and deserving Dalit, Tribal and Backward Class students who lack resources to undertake professional media education.

For full details of the course, scholarship and admissions procedures Jody McPhillips can be contacted at jodymcp@yahoo.com or mobile +91-9958485433.

Institute’s Address:
International Media Institute of India,
D 59, Sector 2, Noida – 201301 (UP)

Phone: 01204228464, 9717966557

http://www.imii.co.in/
 தகவல் முதுவை ஹிதாயத்

Sunday, March 28, 2010

எங்கிருந்து வந்தோம்? அதிரையின் வரலாற்றைத் தோண்டும் முயற்சி

அதிரை-அதிராம்பட்டினம்-அதிவீர ராமபாண்டியன் பட்டணம்-செல்லி நகர் மற்றும் அராபிய வணிகர்களால் அதிரமி என்றெல்லாம் வரலாற்றில் அறியப்படும் நமதூர் குறித்த அரிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையதளங்களில் காணக்கிடைக்கின்றன.

சோழத் தலைநகர் தஞ்சாவூரின் காவிரிக் கடைமடை பகுதியிலிருக்கும் நம் அதிரையை, அதிவீரராம பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அதிவீரராம பாண்டியன் ஆட்சிசெய்த அதிரையின் எல்லைகள் எது? அதன் தலைநகர் எது? மன்னன் தவிர ஏனைய அமைச்சர்கள் யாவர்? அவர்கள் எப்பகுதியைச் சாந்தவர்கள்? என்ற குறிப்புகள் இன்றி வாய்வழிக் குறிப்புகளாகவே நமதூர் வரலாறு அறியப்படுகிறது.

சைவசமயத்தைச் சார்ந்த சோழமன்னர்களின் தலைநகரின் ஒரு கடைகோடி கடற்கரைப் பகுதியை நேரெதிரியான பாண்டிய மன்னன் ஆண்டதாகச் சொல்லப்பட்டாலும் அதிரையின் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாக இருப்பது தொடர்பின்றியும் ஒன்றுக்கொண்டு முரண்பாடாகவும் உள்ளது.

நமதூரின் வரலாறு அதிவீர ராம பாண்டியனிலிருந்து தொடங்குகிறதா? அல்லது அதற்கும் முன்பு யாரேனும் ஆண்டுள்ளார்களா? மொகலாயர்களின் எல்லைக்குள் வராத தஞ்சைப் பகுதியில் முஸ்லிம்கள் எப்படி தோன்றினார்கள்?

அதிரை வரலாற்றைத் தேடும் அதேவேளையில் அதிரை முஸ்லிம்களின் பூர்வீகத்தையும் தேட வேண்டிய அவசியம் எழுகிறது. நமதூர் வரலாற்றை நானறிந்து வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு அறிஞர்கள் தொகுக்க முனைந்துள்ளார்கள். அவர்களில் ஆஸ்பத்திரித் தெரு லக்கி ஹாஜியார் மர்ஹும். அப்துல் ரஹ்மான் ஹாஜியார் (ஸலாமத் பதிப்பகம்) மற்றும் முஸ்லிம் லீக் பிரமுகர் K.A.S.அப்துல் ரஹ்மான் (முழு விபரம் நினைவில் வரவில்லை)ஆகியோர் ஓரளவு தகவல்களைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நமதூர் முஸ்லிம்கள் எகிப்திலிருந்து காயல்பட்டணம் வழியாக அதிரையில் தங்கிச்சென்ற பரம்பரையைச் சார்ந்தவர்களாக மட்டும் இருக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்குமென நினைக்கிறேன். அதேபோல் ஆதிஅதிரையின் தொடக்கம் நமதூரின் கடற்கரைத் தெரு,பிறகு மரைக்காயர் பள்ளி, துலுக்கா பள்ளி தற்போதைய தக்வா பள்ளி அமைந்துள்ள நடுத்தெரு பிறகு காலியார் தெரு (ஹாலியார் தெரு?)மற்றும் மேலத்தெருவரையிலான பகுதியே அதிரை முஸ்லிம்களின் பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்பது என் துணிபு.

அதிரை குறித்த ஆவணப்படமொன்றை அதிரைடாட்காமில் முன்பு காணும் வாய்ப்புகிடைத்தது. அதில் அதிரையின் ஆதிகுடிகள் எந்தத்தெருவைச் சார்ந்தவர்கள் என்பது குறித்து மாறுபட்ட தகவல்களை M.S.T.தாஜூதீன் காக்கா மற்றும் M..M.S.அப்துல் வஹ்ஹாப் (சாச்சா) சொல்லக்கேட்டேன். (மூத்தோர்களின் வாய்வழித் தகவல்களையும் திரட்டி ஆவணப்படுத்த வேண்டியதும் நம் வரலாற்றைத் தொகுக்கவும் அதுகுறித்த இணைய தேடல்களுக்கும் உதவும். உள்ளூரிலுள்ள அதிரை எக்ஸ்ப்ரஸ் பங்களிப்பாளர்கள் நமதூர் மூத்தகுடி மக்களைப் பேட்டிகண்டு யூடூபில் போட்டு வைக்கலாமே.)

இலங்கையுடன் நெருங்கிய வர்த்தத் தொடர்பு கொண்டிருந்த நமதூர் வணிக பிரமுகர்கள் (மரைக்காயர் அல்லது மரக்கல ராயர்) இலங்கை சம்மாங்கோடு பகுதியில் இறையில்லம் (சம்மாங்கோடு பள்ளிவாசல்) கட்டி நிர்வகித்தும் வந்துள்ளனர். இவையன்றி மலேசியாவில் (பினாங்கு, மலாக்கா) போன்ற பகுதிகளிலும் முக்கியப் பிரமுகர்களாக இருந்துள்ளதாகச் சொல்லக்கேட்டு இருக்கிறேன். இவர்களின் சந்ததியினரிடம் இதுகுறித்த புகைப்படங்கள், சுவடிகள் மற்றும் ஆவணங்கள் கைவசமிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படியாக வாய்வழிச் செய்தியாக அறிந்துள்ளவற்றை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதன்மூலம் நமதூரின் வரலாறை ஓரளவு உறுதி படுத்த்திக்கொள்ளலாம் என்று நம்புகிறேன். இடையிடையே இணைய தளங்களில் நமதூர் பிரமுகர்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளத் திட்டமுள்ளது.

தனிநபராகச் செய்வதைவிட கூட்டாகச் செய்தால் மேலும் சிறப்பாகத் தொகுத்தளித்து நம்இளைய சந்ததியினரின் வசதிக்காக ஆவணப் படுத்தலாம் என்பதால் ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் இணைந்து செய்ய அழைக்கிறேன்.

எதிர்கால வரலாற்றைத் தீர்மானிக்கும் இணைய ஆவணமாக விக்கிபீடியா போன்ற கலைக் களஞ்சிய இணையதளங்களில் நம்மைப்பற்றி யாரும் எதை வேண்டுமானாலும் பதிவுசெய்து வைக்க முடியும்.நமதூர் குறித்த வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்து ஆவணப்படுத்தும் திட்டமிருப்பதால் தயவு செய்து மேலதிக விபரம் அறிந்தோர் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளவும்.

அபூஅஸீலா-துபாய்
hiaseelaஅட்gmailடாட்com

Saturday, March 27, 2010

கணினியும் அதனை கண்டுபிடித்தவர்களும்

கணினியை கண்டுபிடித்தவர் யார்? என்ற கேள்விக்கு விடையளிப்பது அவ்வளவு எளிதல்ல. பல்வேறு காலக்கட்டங்களில் கணக்கியல் சிக்கல்களுக்கு பல வடிவில் மனிதனுக்கு உதவி வந்திருக்கிறது, கணினி.

பழமையான கணினி என்று சிலரால் சொல்லப்படும் மின்னனுக் கணினி மெடிடெரனியன் கடலில்(Mediterranean Sea) மூழ்கிய கப்பலில் இருந்து
கண்டுபிடிக்கப்பட்டது. அதனை "Antikythera Machine" என அழைக்கின்றனர்.
வானத்தில் ஏற்படும் இட மாறுதல்களை நாம் கொடுக்கும் உள்ளீடான "நாள்"(Input Date) கொண்டு கணக்கீடு செய்யும். அது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எக்காலமாக இருந்தாலும் சரியே! அதனை வடிவமைத்தவர், உருவாக்கியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதன் வடிவமைப்பு Archimedes உருவாக்கிய மற்ற மின்னனு இயந்திரங்களின் வடிவமைப்புடன் ஒத்துபோகின்றது.

இன்னும் சிலர், சீனர்களால் உருவாக்கப்பட்ட "Abacus" தான் முதல் கணினி என சொல்கின்றனர். இதன் காலம் 260 BC மற்றும் 300 BC ஆகும். Abacus-ஐ தெரு வியாபாரிகளும், எழுதுவினைஞர்களும் உபயோகிக்கின்றனர்.

பெருபான்மையோர் J.H.Smith எண்ணிய (உருவாக்கப்படவில்லை) "Difference
Engine" தான் முதல் கணினி என எண்ணுகின்றனர். இவர் ஒரு கணித மேதை ஆவார். இவர் எழுப்பிய ஒரு கேள்விதான் இன்று கணினித்துறையை இவ்வளவு வளர்ச்சியடைய செய்திருக்கிறது. அது என்ன கேள்வி? "கணக்கியல் சிக்கல்களை ஒரு இயந்திரம் மூலம் விடைகாண முடியுமா?" என்பதுதான் அந்தக் கேள்வியாகும். பிற்காலத்தில் Alan Turing இக்கேள்வியால் உந்தப்பட்டு கணினித் துறையை தோற்றுவித்தார்.

நவீன கணினியை கண்டுபிடித்தவர் Konrad Zuse ஆவார். அவர் கண்டுபிடிப்பில்
Z1, Z2, Z3, Z4 மற்றும் ஒன்று. Z3 தான் முதல் முறையாக முழுமையாக
செயல்பட்டது. நிகழ்ச்சி குறிப்பு (Program) மற்றும் மின்னனு இயந்திரத்தை
கட்டுபடுத்தும் திறன் கொண்டது. இது 1941 ஆம் ஆண்டு செய்துமுடிக்கப்பட்டது. Charles Babbage முழுமையாக செய்துமுடிக்கும்
விடயத்தில் தோல்வியடைந்தார்.

Charles Babbage கண்டுபிடித்த கணினியை Differential And Analytical
Engine என்று அழைக்கபடுகிறது. அந்த கணினிக்கு நிகழ்ச்சி
குறிப்புக்காக(Programmer) இருந்தவர் Ada Lovelace (The First Programmer in the world).
Charles Babbage-யை "கணினியின் முன்னோடி" எனவும் Alan Turing-யை "நவீன
கணினித்துறையின் தந்தை" எனவும் போற்றப்படுகின்றனர்.

கணினியை கண்டுபிடித்தது யார்? என்ற கேள்விக்கு சுறுக்கமான பதில் சொல்வதெனில் - அக்கேள்வியே தவறாகும். மாறாக ஒவ்வொரு காலத்திற்கேற்ப கணக்கியல் சிக்கல்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும், இன்னும் பல தேவைகளுக்காக தீர்வுகாணும் இயந்திரமாக இருந்து வருகிறது. இதுபோன்ற அனைத்து தேவைகளுக்கு அடிப்படையாக விளங்குவது கணிதத் துறைதான்.

கணிதத் துறையின்மேல் ஆர்வம் குன்றிய எமது சகோதரச் சகோதரிகளே, நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் ‘கணிதம்’ இன்று இல்லையெனில் இயந்திரமில்லை அதன் இயக்கம் இல்லை.

நமது வாழ்வியல் நெறிகளை ஒழுங்குபடுத்தி சிறந்த சமுதாயமாக வாழ்ந்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக, ஆமீன்...
அல்லாஹ் நாடினால் இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகளுடன் தொடர்வோம். இன்ஷா அல்லாஹ்...

-நம்ம ஊர்

அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்பான கேள்வி பதில்கள் - சும்மாவாச்சுக்கும் மீள்பதிவு

அதிரை எக்ஸ்பிரஸில் ஊர் சம்பந்தமான செய்திகள் குறைந்துவிட்டனவே?
நாய் மனிதனை கடித்தால் அது செய்தியல்ல. நாயை மனிதன் கடித்தால் தான் செய்தி.


சமீபத்தில் வெளியான நோட்டீஸில் அதிரை எக்ஸ்பிரஸின் பங்குண்டா?
அபாண்டம். ஆனால் 'கை' ஓங்கியிருந்துச்சாமே?

விரும்பி சாப்பிடும் மீன் பன்னாவா? கெழுத்தியா?
எந்த மீனாலும் நல்லா கழுவி சமைத்தால் ஒரு கை பார்க்க வேண்டியதுதானே. (அப்ப அடுத்த கந்தூரிலே எல்லா மீனுக்கும் ஒரு கூடு வைக்க இந்த வருசமே நல்லா சம்பாதிக்கனுமா?)

இது என்ன அதிரை எக்ஸ்பிரஸா நடுத்தெரு எக்ஸ்பிரஸா?
'உண்மை'க்கு நேர்மாறான கருத்து. அதுதொடர்பான எமது முந்தைய அறிவிப்பை வாசகர்களுக்கு நினைவுறுத்துகிறோம். இந்த அறிவிப்பு இப்பொழுதும் பொருந்தும்.


கருணாநிதியை போட்டுத் தாக்குகிறீர்களே?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே। கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகத்தைச்சார்ந்த தாமரங்கோட்டை ஏழை மாணவி மாவட்டத்தில் முதலும் மாநிலத்தில் மூன்றாவது இடம் பிடித்ததற்கு முதலமைச்சர் வெறும் 5000 ரூ கொடுத்தாரே?


அதிரை எக்ஸ்பிரஸை நடத்துவது யார்?
பொதுவான தளங்களை நேர்மையுடனும், துணிச்சலுடனும், பாஸிடிவாக அனுகுவதில் உள்ள சிரமங்களை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், இதுபோன்ற அநாவசிய கேள்விகளை தவிர்க்கவும்.

உங்கள் பலம் - பலவீனம்?
பலம்:அதிரையை தாண்டிய வாசகர் வட்டம் (கூட்டம் வரலேன்னு ஒன்னால சொல்ல முடியுமா? http://www.youtube.com/watch?v=dy4AzEp6YuY)

பலவீனம்: அதிரை செய்திகளை அதிரையிலிருந்து அப்டேட் செய்பவர்கள், பங்களிப்பாளர்கள் குறைவு அல்லது இல்லாமை।

அரட்டை அரங்கத்தில் பரிமாற்றங்கள் குறைந்துவிட்டனவே?
வரவேற்கத்தக்க மாற்றம்பின்னூட்டங்களில் மக்கள் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்கள்.

'தியாகி' என்கிற வாசகம் பற்றி அதிரை எக்ஸ்பிரஸ் ஒன்றும் எழுதவில்லையே?
அணைந்த நெருப்பை தீயிட்டு பற்ற வைக்கும் அபாயம். வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. மீண்டும் பிரிவினையை ஏற்படுத்தும். தெருப்பெயரில் கூட அந்த பெரியவரின் பெயரை தக்கவைக்க முடியாமையின் வெளிப்பாடு என்றுதான் சொல்லவேண்டும்.

முந்தைய கேள்வி பதில்:

அதிரை எக்ஸ்பிரஸ் மீது அதன் வாசகர்களால் தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்
பிற்சேர்க்கை:
மேலே உள்ளவை பழைய இடுகை தேதி 24-8-08. இற்றைப்படுத்தப்படவில்லை.

கேள்வியும் நானே பதிலும் நானே என்று பின்னூட்டத்தில் இட்டு ரொப்ப வாசகர்கள் அழைக்கப்படுகிறார்கள். உங்கள் திறமைகளை காண்பியுங்களேன்...

Friday, March 26, 2010

மரண அறிவிப்பு - புலியங்கொட்டை ராஜிக்,நைஸ் அபுல் ஹஸன் விபத்தில் மரணம்.

புலியங்கொட்டை ராஜிக்,நைஸ் அபுல் ஹஸன் விபத்தில் மரணம்.

அதிரையை சேர்ந்த நைஸ் அபுல் ஹஸன் காக்கா,புலியங்கொட்டை ராஜிக் காக்கா(நைஸ் அபுல் ஹஸன் அவர்களின் மகள் மாப்பிள்ளை)ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்னையிலிருந்து திருத்திரைப்பூண்டி வழியாக அதிரைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது கார் லாரிமீது மோதி அபுல் ஹஸன் அவர்களும் ராஜிக் காக்கா அவர்களும் சம்பவ இட‌த்திலேயே மரணமடைந்தாக முதல் கட்ட மூலம் செய்திகள் அறியமுடிகிறது.
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்,அவர்களது எல்லா பாவங்களையும் மன்னித்து-ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க துவா செய்வோமாக.

முழு செய்திகள் எதிர்பார்க்கப்ப‌டுகிறது.

Thursday, March 25, 2010

கல்வியில் பெருமை சேர்த்த பெண்

அதிரைக்குப் பெருமை சேர்த்த சித்தீகா (எ) மவ்ஜூதா சென்ற 22-03-2010 ஞாயிறன்று திருச்சி ஐமான் கலை அறிவியல் பெண்கள் கல்லூரியின் ஏழாமாண்டு பட்டமளிப்பு விழா சிறப்புற நடைபெற்றது. தம் அருமைப் பெண் செல்வங்களின் கல்வி முன்னேற்றத்தை விழாக் கோலத்தில் கண்டு மகிழ ஏராளமான பெற்றொர் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து ஐமான் கல்லூரி வளாகத்தில் குழுமியிருந்தனர்.

மாலை சுமார் நான்கு மணியளவில் பட்டமளிப்பு விழா, முஸ்லிம் லீக் தலைவர் பேரா. கே. எம். காதர் முகைதீன் அவர்களின் முன்னிலையில் தொடங்கிற்று. வழக்கமான தொடக்க நிகழ்வுகளுக்குப் பின்னர், பட்டமளிப்பு நிகழ்ச்சி தொடங்கிற்று.

அதில் முதலாவதாகப் பட்டத்தைப் பெற்று மகிழ்ந்தவர், ஜித்தாவில் ஐ.பி.எம். நிறுவனத்தில் பணியாற்றும் ஹாஜி அ.மு.க. அஹ்மது அமீன் அவர்களின் செல்வப் புதல்வியான சித்தீகா என்ற மவ்ஜூதா ஆவார். இச்செல்வப் புதல்வியின் தெரிவுப் பாடம், Nutrition & Dietetics என்பதாகும். இப்பாடப் பிரிவில், செல்வி மவ்ஜூதா மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக (Bharathidasan University Gold Medalist) ஏற்றம் பெற்றிருந்தார். அதைக் கண்ட அதிரைவாசிகளின் அகமகிழ்வுக்கு அளவேயில்லை. அடுத்த நாள் நிகழ்ந்த பாராட்டு விழாவில் நம் சித்தீகாவுக்குச் சிறப்புப் பரிசில்களும் கணிசமான பணப்பரிசும் வழங்கப்பட்டன.

கல்வி உயர்நிலையும் பாராட்டும் பரிசில்களும் பெற்றுத் தன் பெற்றோர்களையும் உற்றார் உறவினர்களையும் ஊர்வாசிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய அன்புச் செல்வி சித்தீகா, நம் அனைவரின் மனமார்ந்த பாராட்டிற்குரியவர் ஆகின்றார். எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்புகளைப் பெற்று, இம்மை-மறுமை வாழ்வில் வெற்றியடைய, செல்வி சித்தீகாவை மனமார வாழ்த்துகின்றோம்!

தகவல்: அதிரை அஹ்மது

Wednesday, March 24, 2010

A.J.பள்ளி சம்பந்தமாக வேண்டுகோள்

நமதூரில் மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைக்கும் வகையில் பழஞ்செட்டித் தெரு A.J.பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்த இந்து முன்னணி பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த பாலா மற்றும் அவனின் சகோதரனைக் கைது செய்யக் கோரியும், சுற்றுச்சுவரை முழுமையாகப் பூர்த்தி செய்ய நிதியுதவி கோரியும் A.J.பள்ளி நிர்வாகத்தின் சார்பாக ஹிமாயத்துல் இஸ்லாம் அமைப்பிடமிருந்து வந்திருக்கும் கோரிக்கை.

--------------

அதிரை எக்ஸ்ப்ரஸின் முந்தைய கோரிக்கைகளை ஏற்று அல்-அமீன் பள்ளி வழக்குகளுக்கும் மராமத்துப் பணிகளுக்கும் வாரி வழங்கிய அதிரைவாசிகள் இவ்விவகாரத்திலும் தங்கள் தாராள நிதியுதவிக்ளைச் செலுத்தி இறையில்லம் பாதுகாப்பாக இருக்க உதவிடுங்கள்.

-அதிரை எக்ஸ்ப்ரஸ்

தஞ்சாவூர் கலெக்டர் மற்றும் போலிஸ் SP க்கு அதிரை முஸ்லிம்கள் தந்தி அனுப்பும் போராட்டம்

அதிரை A.J. பள்ளிவாசல் சுவர் இடிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அதிரை முஸ்லிம்கள் கடந்த வாரம் கடையடைப்பும மற்றும் போராட்டம் நடத்தியதை அனைவரும் அறிவோம். அப்போராட்டத்தின் போது பள்ளிச் சுவரை இடித்த பாலா மற்றும் அவரது தம்பியை கைது செய்ய போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கடந்த 21ம் தேதிவரை கெடுவிதித்திருந்தனர். ஆனால் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காமல் காவல்துறை மெத்தனம் காட்டி இன்றுவரை கைதுசெய்யவில்லை. இதனை கண்டித்து அதிரை முஸ்லிம்கள், மற்றும் பொதுமக்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.

அதில் ஓரு பகுதியாக, மத ஓற்றுமையை சீர்குழைக்க துடிக்கும் பாலாவை கைதுசெய்ய வழியுறுத்தி தந்தி அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தஞ்சாவூர் கலெக்டர், மற்றும் தஞ்சாவூர் உயர் போலிஸ் அதிகாரிகளுக்கு (Superintend of Police) தந்தி அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் வசிப்போர் சென்னை டிஜிபிக்கும் ஓரு நகல் அனுப்பலாம்.

Update - பிற்சேர்க்கை:
பட்டுக்கோட்டை தந்தி அலுவலகத்திலிருந்து ஏராளமான அதிரை முஸ்லிம்கள் கலெக்டர், தஞ்சாவூர் மற்றும் Superintend of police, தஞ்சாவூர் என்கிற முகவரிக்கு தந்திகள் அனுப்பி வருகின்றனர். அதன் விவரம்

PLEASE ARREST THE CULPRIT BALA AND HIS BROTHER WHO DEMOLISHED THE AJ MOSQUE WALL IN ADIRAMPATTINAM. IF NOT ARRESTED MAY CHANCES OF COMMUNAL RIOT BY HIM.

மற்றும்

PLEASE NOT TO GRANT BAIL TO THE CULPRITS BALA AND HIS BROTHER WHO DEMOLISHED AJ MOSQUE WALL IN ADIRAMPATTINAM. IF BAIL IS GRANTED MAY CHANCES OF COMMUNAL RIOT BY HIM.


நானும் வந்துட்டேன்,அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே,சகோதரர்களே இது பாத்திமா ஜொஹ்ரா, அதிரை எக்ஸ்பிரசுக்கு இது முதல் கட்டுரை.எனவே  குர்ஆன்,மற்றும் ஹதீசிலிருந்து தொடங்கலாம் என்று ஆவல்கொண்டேன்.என் இணைய தள முகவரி இது             http://anboduungalai.blogspot.com/
 இங்கு சென்றும் உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.  (1:1)

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.  (1:2)

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).  (1:3)

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.  (1:4)
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!  (1:5)

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.  (1:6)

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.  (1:7)நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரு நண்பர்களில் ஒருவரின் தவறு, அவ்விருவருக்குமிடையே பிரிவினையை எற்படுத்தி விட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்க்கத்திற்காகநேசித்தவராக மாட்டார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

 "ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாங்கும் நோக்கமில்லாமல் பிறரைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே விலையை அதிகப்படுத்தாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவரது வியாபாரத்தில் மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்யாதீர்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக, சகோதரர்களாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். மோசடி செய்யமாட்டார். அவரை அற்பமாகக் கருதமாட்டார். இறையச்சம் என்பது இந்த இடத்தில் என்று தனது நெஞ்சின் பக்கம் மூன்று முறை சைக்கினை செய்தார்கள் ஒருவர் தமது சகோதரரை இழிவாகக் கருதுவது அவரது கெடுதிக்குப் போதுமானதாயிருக்கும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம், அவரது சொத்து, அவரது கெªரவம் ஹராமாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

  

Monday, March 22, 2010

சங்குழும பத்திரிக்கையில் முகம்மது நபி சித்திரம் - முஸ்லிம்கள் கொந்தளிப்பு

சன்குழுமம் ஊடக விபச்சாரம் செய்து தனது ரேட்டிங்கை உயர்த்திவருவதை நடுநிலையாளர்கள் அனைவரும் அறிவர். அதன் மற்றொரு பகுதியாக தனது வக்கிர புத்தியை கோடிக்கனக்கான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முகம்மது நபி அவர்கள் மீது காண்பித்துள்ளது. முகம்மது நபி என்று பெயரிட்டு சித்திரம் ஓன்றை தனது வார ஏடான முத்தாரத்தில் இன்று (22-03-2010) வரைந்துள்ளது. அப்பத்திரிக்கையில் வரும் மிஸ்டர் மனிதன் எனும் தொடரிலே இந்த கார்டூன் வரையப்பட்டுள்ளது.

செய்தியறிந்த முஸ்லிம் இயக்கங்களான தமுமுக, ததஜ வன்மையாக கண்டித்ததுடன், மமக போலிஸ் கமிஷனரிடம் ஆசிரியரை கைது செய்யக்கோரி புகார் அளித்தது. ததஜ போராட்டத்தை அறிவித்தது. முஸ்லிம்களின் மனதை புண்படுத்திய பத்திரிக்கை தனது மன்னிப்புக்கடிதத்தை இவ்விரு இயக்கங்களுக்கும் அனுப்பி வைத்தது.

முன்னதாக, அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் முத்தாரம் அலுவலகத்தை தொடர்புகொண்டபொழுது திரு ராஜா என்பவர் பேசினார். தவறுதலாக இந்த கார்ட்டூன் வந்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டு இந்தவார பத்திரிக்கையிலே மறுப்பு வெளியிட இருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார். சென்னையல்லாத வேறு மாவட்டங்களுக்கு பத்திரிக்கை செல்வதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் ஏற்கெனவே விநியோகிப்பட்டிருந்தாலும் அவையும் திரும்பப்பெறும் என்றும் கூறினார்.

சரக்கு ஓன்றும் இல்லாத தனது மூத்திரம் பத்திரிக்கை தொழிலுக்கு விளம்பரம் தேடும் குயுக்தியாகவே கருதமுடிகிறது. இதுபோன்ற இஸ்லாமியர்களின் மனத்தை துன்புறுத்தும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதை சங்குழுமம் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

ஹாஜி முஹம்மத் சாரும்,அவரின் கரிசனையும்!

ஹாஜி முஹம்மத் சாரிடம் அன்று அடி வாங்கும்போது வலித்தது,ஆனால் அதை இன்று நினைக்கும்போது இனிக்கிறது.மாஷா அல்லாஹ்,உண்மையாக,அக்கறையாக உழைக்கும் மனுஷன்.

அவரைப் பற்றிய ஒரு செய்தி...........

பதினொன்று படிக்க சென்னை வந்துவிட்டேன்.பாஸ்டன் மெட்ரிக் பள்ளியில் படிப்பு.தமிழ் மீடியம் படித்துவிட்டு,ஆங்கில மீடியம் முதலில் கஷ்டமாக இருந்தாலும்,போக போக சரியாகிவிட்டது.

அப்போது ஆங்கிலத்தில் அவருக்கு-பள்ளி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
நான் எழுதிய சுருக்கம்,"ஆங்கிலம் படிக்க சொல்லி,நீங்கள் என் போன்றோர்களை (என்னையும்)அடித்திருக்கிறீர்கள்.அப்போது உங்கள் மேல் மிக கோபப்பட்டேன்.ஆனால் இன்று ஆங்கில மீடியம் படித்துக்கொண்டிருக்கிறேன்.இப்போது உங்களை நினைத்து பார்க்கிறேன்.நாங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற அக்கறையினால்தான் எங்களை அடித்தீர்கள்.அப்போது விழுந்த அந்த அடிக்கு இப்போது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.உங்கள் அக்கறையை புரிந்துகொண்டேன்."இதுதான் அந்த சுருக்கம்.

பள்ளி விடுமுறையில் ஊர் சென்ற போது,அவரைப் பார்த்தவுடன் நம் மதிப்பு மிக்க ஆசிரியர் என்ற முறையில் அழுகை வந்துவிட்டது,

மறுபுறம் நான் கேள்விப்பட்டது என்ன வென்றால்,என் கடிதம் பார்த்த அவர் மிக சந்தோஷ மடைந்திருக்கிறார்,அதுமட்டுமல்ல்,என் கடிதத்தைக் காட்டி,காட்டியே மற்ற மாணவர்களை அடித்திருக்கிறார்,"பார்றா,என்னோட மாணவனை,அப்போ அடி வாங்கி ஒழுங்கா படிச்சவன்,இப்போ ஆங்கிலத்துல கடிதம் எழுதுற அளவுக்கு வந்திருக்கான்,இப்போ புரியுதா?ஏன் அடிக்கிறேன் என்று" .நான் சந்தோஷப்பட்டேன்,ஆனால் பாவம் அடிவாங்கிய அந்த மாணவர்கள் என்னை திட்டி இருப்பார்கள்.

சரி அதோட ஒரு கொசுறு
அபூ ஆசிலாவோட காக்கா நம்ம கிளாஸ் மேட்டு ஊர்ல ,ரூம் மேட்டு சென்னையில.

Sunday, March 21, 2010

ஏ. எல். மெட்ரிகுலேஷன் பள்ளி - மாணவர்-பெற்றோர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

இன்று நமதூர் ஏ. எல். மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மாணவர்-பெற்றோர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சிறப்புப் பேச்சாளராக சென்னை 'மானுட வசந்தம்' தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியின் இயக்குநர் ஜனாப் எஸ். என். சிக்கந்தர் சாஹிப் எம். ஏ. அவர்கள் கலந்துகொண்டு,'இன்றைய முஸ்லிம்களின் பொறுப்புகள்' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

முன்னதாக, தூத்துக்குடி துறைமுகத்தில் பொறியாளராகப் பணியாற்றும் சகோதரர் முஹம்மத் பிலால் அவர்கள் +2 மாணவ மாணவியருக்கான மேல்படிப்பு வழிகாட்டல் மற்றும் பயிற்சியை நடத்தினார். குறுகிய கால அறிவிப்பே செய்திருந்ததால், குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். இனி வரும் நாட்களில் முன்னதாக அறிவிப்புக் கொடுத்து, மாணவர்களுக்கான Career Guidance பயிற்சி வகுப்புகளை நடத்தலாம் என, இதன் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இது பற்றிய ஆக்க பூர்வமான ஆலோசனைகள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

----
இன்று என்ன பள்ளிகள் தினமா... பள்ளிகள் கட்டுரைகள் குவிகின்றனவே...
நமதூர் அதிராம்ப‌ட்டின‌த்தில் இஸ்லாமிய‌த் த‌மிழ் இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் சார்பில் ஏப்ர‌ல் 2,3 ஆகிய‌ இரு தின‌ங்க‌ள் இஸ்லாமிய‌த் த‌மிழ் இல‌க்கிய‌ப் பெருவிழா ந‌டைபெற‌ இருக்கிற‌து.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு அழைப்பித‌ழ் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இமாம் ஷாஃபி பள்ளி ஆண்டுவிழா நேரடி ஒளிப்பரப்பு

இமாம் ஷாஃபி பள்ளியின் 36 ஆவது ஆண்டு விழா நேரடி காணொளியைக் காண கீழ்கண்ட சுட்டியை சொடுக்கவும்:

http://www.ustream.tv/channel/imamshafi

தகவல் உதவி
sis computer
Adirampattinam.

துள்ளித் திரிந்த காலம் (மலரும் நினைவுகள் -1)

இமாம் ஷாஃபி [ரஹ்] பள்ளியின் 36 ஆம் ஆண்டுவிழா அழைப்பிதல் குறித்த பதிவில் நண்பன் CROWN தஸ்தகீர், பள்ளிப்பருவ இறுதி நாட்களின் மலரும் நினைவுகளைக் கொளுத்திப் போட்டு குளிர்காய முனைந்துள்ளார்(ன்).

வாய்க்கால்தெரு ஊ.ஒ.தொ (ஓட்டப்) பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சைக்கிள் கேரியரில் பெரிய நோட்டுக்களுடன் காதிர் முஹைதீன் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் சீனியர் மாணவர்களைப் பார்த்து நாமும் எப்போது இதுபோன்று பெரியசைஸ் நோட்டுக்களைக் கொண்டு செல்வோம் என்ற ஏக்கம் ஐந்து வருடங்கள் கழித்து 11 ஆம் வகுப்பில் நிறைவேறியது.

வாய்க்கால்தெரு பள்ளியில் 1- 5 ஆம் வகுப்புகள்வரை படித்தபோது படிப்பில் புதுத்தெரு நிஜாமுத்தீன் (நட்புடன் 'நஜாத்' நிஜாமுதீன் என்போம்!) முதல் ரேங்கும், சின்னநெசவு தெரு அபூபக்கர் இரண்டாம் ரேங்கும் அடியேன் மூன்றாம் ரேங்கும் எடுப்போம்.அதன்பிறகு நிஜாமுதீனும் அபூபக்கரும் 6-A பிரிவிலும் நான் 6-B பிரிவிலும் பிரித்துக்கட்டப்பட்டோம்.

வெவ்வேறு பள்ளி மற்றும் அக்கம்பக்க ஊர்களிலிருந்தும் வந்துசேர்ந்த மாணவர்களால் ரேங்க் எடுக்கும் போட்டியில் பின்னுக்குத் தள்ளப்பட்டேன். அதன்பிறகு ரேங்க்கும் எனக்கும் தொடர்பு இல்லாமல் போனது.


காதிர் முஹைதீன் பள்ளியில் காலடிபதித்த நாட்களில் நடந்த ஆண்டு விழாவில் (வருடம் நினைவில்லை) எங்கள்தெரு முஹம்மது ஷாஃபி காக்கா அவர்கள் 10ஆம் வகுப்பில் சிறந்த மாணவராக தொடர்ச்சியாக 5 பரிசுகளைப் பெற மேடைக்கு அழைக்கப்பட்டபோது கிடைத்த கரவொலிகள் நமக்கும் கிடைக்காதா என்ற கனவு மட்டுமே இருந்தது. (நம் ஜனாதிபதி அப்துல்கலாம் காணச்சொன்ன கனவை நான் அன்றே கண்டேன்?!)

பத்தாம் வகுப்பில் அரையாண்டு தேர்வு அறிவியல் பாடத்தில் "இரயில் எஞ்சின் படம்வரைந்து பாகங்களைக் குறி" என்ற பத்து மார்க் கேள்விக்குக் கிடைத்த 7 மார்க்குகள் கூட்டப்படாமல் வெறும் 29 மார்க் மட்டுமே பெற்று வாழ்க்கையிலேயே முதல்முறையகா 35க்குக் கீழாக மதிப்பெண் பெற்று வழக்கமாகக் கிடைக்கும் 27 அல்லது 28 வது ரேங்கும் கைநழுவிப் போனது!

பேப்பரை திருத்திய திருமதி.மேகலா டீச்சரிடம் இரயில் எஞ்சின் பாகங்களுக்காகப் பெற்ற "7" மார்க் கூட்டப்படாமல் ரேங்க் போய் விட்டது என்று கவலையுடன் சொன்னபோது, பேப்பரைக் கொண்டுவாடா மறுகூட்டல் செய்யலாம் என்றார்கள்.ஆர்வத்துடன் விடைத்தாளுடன் சென்ற எனக்கு மறுகூட்டலுக்குப் பதில் தலையில் 'குட்டல்' (குட்டு)தான் கிடைத்தது!

ரயில் எஞ்சின் குறித்த பாடத்தைப் படிக்காமலேயே கம்பன் எக்ஸ்ப்ரஸின் முகப்புப் பெட்டியை கள்ளம்கபடம் இல்லாமல் வரைந்தால் எந்த டீச்சர்தான் மதிப்பெண் போடுவார்? அப்படி என்றால் எப்படி 7 மார்க் கிடைத்தது அதை ஏன் சேர்த்துக் கூட்டவில்லை? விசயம் ஒன்றுமில்லை பெரிதாக "?" என்று போட்டிருந்ததை நான் "7" என்று நினைத்துக் கொண்டே, 29+?=36 என்று தப்புக் கணக்கு போட்டிருந்தேன் (அப்ப அறிவியலோடு கணக்கிலும் வீக்கா? :-)

இப்படியாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்த என் வாழ்வில் மதிப்பிற்குறிய ஆசான்கள் சீனிவாசன் சார், ஹாஜி முஹம்மது சார்,அஹமது தம்பி சார் & ப்ரான்சிஸ் சார் மற்றும் ராமதாஸ் ஐயா (தமிழாசிரியர்!) ரூபத்தில் மீண்டும் கல்விக்கண் திறக்கப் பெற்றேன்.(தற்போதும் இவர்கள் அதே பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.)

வாழ்விலேயே முதல்முறையாக +1 காலாண்டுத் தேர்வில் பெரும்பாலான பாடங்களில் முதல் நிலை பெற்று 1989 இல் +2 முடித்து வெளியாகும்போது காதிர் முஹைதீன் பள்ளியிலேயே (பட்டுக்கோட்டை அளவிலும் என்று நினைக்கிறேன்)முதல் மாணவனாக (அல்ஹம்துலில்லாஹ்) வென்று

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்ற குறள் சொன்ன மகிழ்ச்சியை என் பெற்றோருக்கு பரிசளித்தேன்! (அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்)

நிற்க, இந்தப்பதிவில் பெரும்பாலும் சுயதம்பட்டமாகப் போய்விட்டாலும், மிக மிக முக்கிய தகவல்களை வேண்டுமென்றே விட்டுச்சென்றுள்ளேன். எவன் இந்த அபூஅஸீலா என்ற கேள்விக்கான குறிப்பை காதர் முஹைதீன் பள்ளி பழைய ரெக்கார்டுகளைக் கிளறினால் கிடைக்கும்.(இரண்டு வருடங்களுக்கு முன்புவரை +2 முதல்நிலை மாணவர்களின் பெயர்களை காதிர்முஹைதீன் பள்ளி நுழைவாயிலிலுள்ள தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் சுவற்றில் பெயிண்டால் எழுதி வைத்திருந்தார்கள்.தற்போதும் உள்ளதா என ஊரில் இருப்பவர்கள் உறுதி செய்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்)

இப்பதிவை பால்ய நண்பர்கள் குறிப்பாக 'நஜாத்' நிஜாமுதீன் - பள்ளியில் படிக்கும்போதே அன்றைய நஜாத்தில் (இன்றைய தஹ்வீது ஜமாத்!) ஈடுபாடு ஏற்பட்டபின் நிஜாமுதீன் என்பதை நிழாமுத்தீன் என்று எழுதுவான்),அப்துல் ஹாதி (சிறையிலிருந்த ஹாதிக்கு எதிராக ஜிந்தா என்ற வேடத்தில் நடித்த 'சுண்டு" சாவன்னா @ ஷாகுல் ஹமீதுக்கு ஆதரவாக பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் எனக்கெதிராக வக்கீலாக வாதாடிய K.S. நஜ்முதீன்) மற்றும் பல பள்ளித் தோழர்களும் வாசித்தால் மகிழ்வடைவேன்.

இப்பதிவு சுவாரஸ்யமாக இருந்தால் பின்னூட்டுங்கள். பின்னூட்டங்களை வைத்தே "தலை கேட்டான் தம்பி"யை வென்று திரு.சண்முகம் ஆசிரியரின் ஊக்கத்தால் மேடையேறிய எங்கள் நாடகம் குறித்த சுவாரஸ்யத் தகவல், துக்கப் பரிச்சை மற்றும்பல சுவாரஸ்யமான பள்ளி நாட்களைப் பகிர்ந்து கொள்வேன் இன்ஷா அல்லாஹ்!

துள்ளித் திரிந்த பள்ளிப்பருவ நாட்களை மலரும் நினைவுகளாக கிளறிவிட வழியமைத்த அதிரை எக்ஸ்ப்ரஸ் மற்றும் நண்பன் பாதாங்கீருக்கு (CROWN தஸ்தகீரை இப்படித்தான் அழைப்பேன்:) எங்கிருந்தாலும் வாழ்க!

நன்றி: கா.மு.ஆ.மே.பள்ளி வலைப்பூ (புகைப்படம்)

Saturday, March 20, 2010

இமாம் ஷாஃபி பள்ளி ஆண்டுவிழா அழைப்பிதல்

நமதூர் இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளியின் 36 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்ஷா அல்லாஹ் நாளை 21-03-2010 மாலை 4:15 மணிக்கு இமாம் ஷாஃபி புதிய பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.தகவல்: சகோ.அன்சாரி - ஐக்கிய அரபு அமீரகம்

***********
36 ஆண்டுகளைக் கடந்து பல அறிவு ஜீவிகளையும் கல்வியாளர்களையும் வார்த்தெடுத்த நமதூர் இமாம் ஷாஃபி பள்ளியை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாழ்த்துகிறது.
-அதிரை எக்ஸ்ப்ரஸ்-
***********

மார்க்ககேள்வி


சமீபத்தில் இலங்கையில் நடந்த விபத்தில் ஒரு முஸ்லிம் சகோதரர் இறந்து விட்டார். அவரின் மையத்தை உறவினர்களை தவிர்த்து யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

இதில் அவர் உயிருடன் இருக்கும் போது பாசமாக இருந்த இஸ்லாம் அல்லாதவரும், தூரத்து சொந்தமான சகோதரியும் அனுமதிக்கவில்லை.

சொல்லப்படும் காரணம்

"இஸ்லாத்தில் நெருங்கிய உறவினர்களை தவிர்த்து யாரும் மையத்தை பார்க்க அனுமதி இல்லை"

இப்படி ஒரு சட்டம் உண்மையில் இருக்கிறதா?. யாராவது ஆதாரத்துடன் விளக்கம் தந்தால் நல்லது.

குறிப்பு: அந்த மையத்தை போஸ்ட் மார்ட்டம் செய்தது ஒரு புத்த மதத்தை சார்ந்த சிங்கள பெண் டாக்டர்

ZAKIR HUSSAINFriday, March 19, 2010

அமைதிக்கு ஒரு யோசனை

அதிரையின் அமைதிக்கும்,சகோதரத்துவத்துக்கும் வேட்டு வைக்கும் வண்ணம் சில சமயங்களில் சில புல்லுருவிகளால் குந்தகம் ஏற்படுத்தப்பட்டு-அமைதி குலைய வைக்கப்படுகிறது.சாதாரண இருவர் சம்பந்தப்பட்ட பிரச்சனை கூட,மத மோதலாக ஆக்க காவிகள் தவறுவதில்லை,இதற்கு பல உதாரணங்களை அடுக்க முடியும்.

இப்படி சாதாரண செயல்கள் மற்றும் எந்த ஒரு சிறு அல்லது பெரிய சச்சரவுகள் கூட சண்டை வரை சென்று,அண்ணன் -தம்பிகளாய் பழகும் மக்கள் அடித்துக்கொண்டு சாவது இனி இன்ஷா அல்லாஹ் நடக்கக் கூடாது.

இதற்கு நாம் எல்லாரும் ஒற்றுமையாக நின்று-சில விஷயங்களில் சேர்ந்து - ஒன்றாக இசைந்து நடந்தால்,நமக்கிடையே நடக்கும் மோதல்களை தவிர்க்க முடியும்.

அதற்கு,ஒரு தெருவுக்கு இருவராக,முஸ்லிம்,இந்து,கிறிஸ்தவ சகோதரர்கள் ஒன்றிணைந்து ஒரு குழு அமைத்து,எந்த ஒரு வித பிரச்சனையோ-சலசலப்போ ஏற்படும்போது,பேசி தீர்க்கும் வண்ணம் கலந்து பேசி அப்பிரச்சனையை தீர்க்க முயலவேண்டும்.

இதற்கு எல்லா மக்களும் இணைந்து செயல்பட்டால்,ஒற்றுமையாக வாழமுடியும்.காவிகளின் சதியை முறியடித்து-மத நல்லிணக்கம் பேணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே!

கருத்தும்-ஆக்கமும்
உ.மு.அப்துல் ஜப்பார்
நியூயார்க்

Thursday, March 18, 2010

அதிரைக்கு போலிஸ் பாதுகாப்பு கோரி அய்டாவின் கடிதம்

அய்டா அமைப்பினர் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகல் அதிரை எக்ஸ்பிரஸின் பார்வைக்கு.
----------------------------

Date : 17th March 2010

From The President AYDA – Jeddah Contact No. +966 505329499

Sub : Requesting to provide protection to our families back home

Respected Sir,

We, expatriate community belong to Adirampttinam (PIN 614 701) of Tanjore District, Tamil Nadu presently residing in Jeddah, Saudi Arabia. A day before yesterday we learned that some of the evil doers demolished a compound wall belongs to A.J. Masjid located in Old Chetty Street of Adirampattinam.

Accordingly, there was a peace protest (organized by local Muslim Jamaath) happened yesterday demanding the local police to arrest and bring the culprit in front of law which was ended peacefully with the assurance by the local authorities that necessary steps will be taken to bring the culprit in front of justice.

Sir, today we learned from our families back home that there will be another protest organized by rival group tomorrow on Thursday the 18th March 2010 @ 10 a.m. As we are thousands of miles away from our family members living here with distress and dilemma about the prevailing situation in back home and we are afraid that this protest will lead to communal clash between the two brotherly communities (Hindus & Muslims) living presently with communal harmony.

Therefore, we humbly request your Excellency to look in to this matter seriously and order concerned authorities to give protection to our families back home and solve the issue instantaneously.

Thanking you sir,

Yours sincerely,
Rafia
President - AYDA Jeddah - KSA
cc : Hon'ble Chief Minister of Tamil Nadu
Consulate General of India – Jeddah KSA

Wednesday, March 17, 2010

அயோத்திய‌ல்ல‌ "அதிரை"

ந‌ம‌தூர் அதிரையில் ப‌ல‌ நெடுங்கால‌மாக‌ இந்து, முஸ்லிம், கிருஸ்டின். என‌ பாகு பாடு இல்லாம‌ல் அன்னியோன்ய‌மாக‌ அண்னன் த‌ம்பிக‌ளாக‌ ப‌ழ‌கி வ‌ரும் ஒரு ஒப்ப‌ற்ற‌ பேரூர் ! என்ப‌தில் மாற்றுக்க‌ருத்து கிடையாது.

ஆனால் ச‌மிப‌ கால‌மாக‌ அதிரையில் சில‌ புள்ளூரிவிக‌ள் அதிரை ம‌க்க‌ளின் ஒற்றுமையை குழைக்கும் செய‌ல்க‌ளில் ஈடுப்ப‌ட்டு த‌ன‌து ஈன‌த்த‌ன‌த்தை அர‌ங்கேற்ற‌ ப‌ல‌ வ‌ழீக‌ளில் முய‌ற்சித்து தோல்வியை த‌ழூவிவ‌ருகின்ற‌ன‌ர்.. அல்லாகஹ் அக்ப‌ர். அந்த‌ வ‌கையில் ந‌ம‌தூர் AJ ப‌ள்ளியின் சுற்றுசுவ‌ரை இடித்து வ‌ம்பிழூக்க‌ முய‌ற்ச்சித்துள்ளான் காவியுடை க‌ய‌வ‌ன் பாலா.

ஆனால் ந‌ம் ச‌கோத‌ர‌ர்க‌ள் க‌ச்சித‌மாக‌ சிந்தித்து அனைத்து இஸ்லாமிய‌ அமைப்புக‌ளும்(த‌த‌ஜ‌வை தவிர‌)ஓர‌னியில் திர‌ண்டு த‌ம‌து எதிர்ப்பை க‌டைய‌டைப்பு ம‌ற்றும்போராட்ட‌ங்க‌ளின் வாயிலாக‌ அணிவ‌குத்த‌ன‌ அல்ஹ‌ம்துலில்லாஹ்.

இதில் மாற்று ம‌த‌ ச‌கோத‌ர்க‌ளும் பெரும‌ள‌வில் க‌ல‌ந்து கொண்டு த‌ங்க‌ள‌து ந‌டு நிலையை உல‌குக்கு உண‌ர்த்தியுள்ள‌ன‌ர் ந‌ம‌து அதிரை வாசிக‌ள் . நாம் ஒர‌ணியில் திர‌ண்டால் வெற்றி என்ப‌து ந‌ம‌க்கு எட்டாக‌னிய‌ள்ள‌ என‌ப‌தை உண‌ர்த்திய‌து 16.3.2010அன்றைய‌ அதிரை ம‌க்க‌ளின் போராட்ட‌ம்.

ச‌ரியாக‌ காலை 10 ம‌ணிக்கு சாரை சாரையாக‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம் பேருந்து நிலைய‌ வ‌ளாக‌த்துக்குள் நுழைய‌ போராட்ட‌ க‌ள‌ம் சூடுபிடிக்க தொட‌ங்கின‌ நிலைமைய‌ ச‌மாளிக்க‌ காவ‌ல்த்துறை ச‌கோத‌ர‌க‌ள் மிக‌வும் க‌வ‌ன‌த்தோடு போராட்ட‌ குமுற‌ல்க‌ளை த‌ன‌து இலாக்காவிற்க்கு தெரிவித்த‌வ‌ண்ன‌ம் இருந்த‌ன‌ர்.

இப்போர‌ட்ட‌த்தின் ஒரு ப‌குதியாக‌ இஸ்லாத்த்தின் எதிர்கால‌ தூண்க‌ள் காவியுடை க‌ய‌வ‌னை கைது செய் ... கைது செய் என‌ முழ‌க்க‌மிட‌ கூட்ட‌த்தின‌ர் அல்லாஹ் அக்ப‌ர்.. என‌ முழ‌ங்க‌ வின்னை தொட்ட‌து ம‌ண்னின் மைந்த‌ர்க‌ளின் உல்ல‌ குமுற‌ல்.

பின்ன‌ர் போராட்ட‌ குழூவின‌ர்க‌ள் ஒருவ‌ர் பின் ஒருவ‌ராக‌ க‌ண்ட‌ன‌ உறை நிக‌ழ்த்தின‌ர் இதில் ஹாரூன் மொள‌லாவின் உரை ந‌ம்மை சிந்திக்க‌ வைத்துள்ள‌து (காண்க‌ காணோளி).போராட்ட‌த்திலன் முடிவில் ப‌ள்ளியின் மீது கைவ‌த்த‌ க‌ய‌வ‌னை உட‌ன‌டியாக‌ கைது செய்ய‌வும். இது போல் இனி வேர‌ங்கிலும் நிகாழாம‌ல் வ‌ழீபாட்டு த‌ள‌ங்க‌ளை பாதுக்காத்து ந‌ல்லிண‌க்க‌ம் பேன‌வும் காவ‌ல் துறையின‌ர் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ தீர்மான‌ம் நிரைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.

இந்த‌ போராட்ட‌த்தின் வாயிலாக‌ நாம் ப‌டித்துகொள்ள‌ வேண்டிய‌ பாட‌ம் என்ன‌வேன்றால் நாம் ஒற்றுமையுட‌ன் செயலாற்றினால் நாம் இல‌க்கை அடைய‌ வெகுதூர‌ம் இல்லை உரிய‌வ‌ர்க‌ள் சிந்தித்து செய‌ல்ப‌ட‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌ன் அருள்பாளிப்பானாக‌....

அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்கள் தொடர்பாக

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஓன்றான பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தின் நவீன கருவிகளில் வலைப்பதிவுகளும் ஓன்று. அவ்வாறான வலைப்பதிவுகள் வாயிலாக அதிரை பொதுமக்களுக்கு நல்ல பல செய்திகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளும் சிறந்த கருவியாக அதிரை எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டு தனது எழுத்து பணியை மிகச்சிறப்பாக செய்துவருவதை எல்லோரும் அறிவர். உள்ளூர் வலைப்பதிவுகளிலே தொடர்ந்து நிலைத்து நின்று பல்வேறுபட்ட தமிழறிந்த வாசகர்கள் பலர் பல்வேறு நாட்டிலிருந்தும் தொடர்ந்து வருகைதந்து நமக்கு அளித்து வரும் ஆதரவே இதற்கு மிகச் சரியான சான்று.

அதிரையில் நிகழும் பல்வேறு செய்திகளை பங்களிப்பாளர்களாக செயல்பட்டு அதிரை, சென்னை என்றல்லாது துபை, அமெரிக்கா என பரந்து கிடக்கும் உலகப்பந்திலிருந்து நமதூர் சகோதரர்கள் தங்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அவர்களது எண்ணங்களின் வடிகாலாகவும், கருத்துக்கருவூலமாகவும் அதிரை எக்ஸ்பிரஸ் திகழ்ந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.


அதிரை எக்ஸ்பிரஸில் இயக்க,கட்சி சார்பற்ற நடுநிலையான செய்திகளையே இதுவரை நாம் வெளியிட்டு வருகிறோம். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நமதூர் சேதுரோட்டில் அமையப்பெற்றிருக்கும் தவ்ஹீது ஜமாத்திற்கு சொந்தமான பள்ளி ஓன்றின் வசூல் தொடர்பாக சகோதரர் அபுஅஸீலா, துபை பதிவு ஒன்றை பதிந்திருந்தார்.

அவரது கருத்துக்கு கருத்து என்கிற ரீதியில் பதிலளிக்காமல் சென்னையில் வசிக்கும் நமது பங்களிப்பாளர்களுக்கு தவ்ஹீது ஜமாத்தின் தஞ்சைமாவட்ட தலைவர் அன்வர் அலி அவர்கள் தொலைபேசி வாயிலாக அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தினரின் தொலைபேசி எண் கேட்டு பங்களிப்பாளர்களை மிரட்டி வருகிறார். தவ்ஹீது ஜமாத்தின் நற்பெயரை கெடுக்கும் விதமாகவே அவர் செயல்பட்டு வருவதாக வெளிநாடுகளில் வசிக்கும் அதன் அனுதாபிகள் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இன்றும் பங்களிப்பாளர் ஓருவருக்கு தொலைபேசி மூலம் மீண்டும் மிரட்டும் விதமாக பேசியிருக்கிறார். அதிரை A.J பள்ளி விசயத்தில் கடையடைப்பிற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை என்று தனது மனுவை திரும்பப்பெற்ற அதே அன்வர் அலி அவர்களுக்கு ஓரு முஸ்லிம் சகோதரனை அடிப்பேன் உதைப்பேன் என்று சொல்வதற்கு மட்டும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று எந்த கிதாபில் ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை.

அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்கள் அதிரை தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்களால் தொடர்ந்து மிரட்டப்படுவது இது இரண்டாவது முறையாகும். அதனால் இது தொடர்பாக ஆலோசனை பெறுவதற்கு சென்னை எம்.எல்.ஏ விடுதியில் இயங்கிவரும் 'தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில்' அதன் தலைவரையும், நிர்வாகிகளையும் இன்று (17-03-2010) நேரில் சந்தித்து மிரட்டல் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பின் அடிப்படையில் இதற்கு மேலும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்களை தொடர்ந்து மிரட்டப்படு வார்களேயானால் அவர்கள் மீது தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் உதவியோடு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நம்மிடம் தெரவித்திருக்கிறார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நாம் முஸ்லிம் சகோதரர்கள் என்கிற அடிப்படையில் அனைவரோடும் இணக்கமாகவும் ஓற்றுமையாகம் இருக்கவே அதிரை எக்ஸ்பிரஸ் விரும்புகிறது. அதிரை எக்ஸ்பிரஸில் வெளிவரும் பதிவுகளில் ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் அதை எமக்கு எழுதி அனுப்பினால் அதையும் வெளியிட தயாராகவே இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் அனைவரது கருத்துக்களையும் பின்னூட்டம் வாயிலாக தெரிவிப்பதை எந்த வித மட்டுறுத்தலில்லாமல் அனுமதித்தே வருகிறோம். இப்படி இருக்க தங்களது கருத்துக்களையோ அல்லது மறுப்புக்களையோ பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் எழுத்துவாயிலாக தெரிவிக்காமல் மிரட்டும் தொனியில் தொலைபேசி வாயிலாக பங்களிப்பாளர்களிடம் பேசுவது ஓரு முஸ்லிம் சகோதரர்களுக்கு உகந்ததல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதற்குமேலும் தங்களது மறுப்புக்களை எழுதி அனுப்பினால் அதையும் வெளியிட தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்து சகோதரர்களின் இணக்கத்தையும் ஓற்றுமையையும் விரும்பும்...

- உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ்.

குறிப்பு: இன்று நமது தலையாய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் A.J பள்ளி தொடர்பான விசயங்களில் கவனம் செலுத்துவோம். இன்ஷா அல்லாஹ்.

Tuesday, March 16, 2010

Demonstration Rally Againt wall demolition of AJ Masjid in Adirampattinam

மற்ற வீடுயோக்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ்

பள்ளி சுற்றுச்சுவரை இடித்த அயோக்கியனை கைது செய்ய வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்


அதிரையில் A.J பள்ளி சுற்றுச்சுவரை இடித்த இந்து தீவிரவாதியை கைது செய்ய வலியுறுத்தி இன்று காலை 10 மணியளவில் கடையடைப்பு, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டித்திற்கு ஹனீப் காக்கா அவர்கள் தலைமையேற்க, தமுமுக ஜியாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார், ஷாகுல் ஹமீது (தமுமு), நியாஸ் அகமது (பிஎப்ஜ), மற்றும் ஆலிம் ஹாரூன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிஜாம் (பிஎப்ஜ) நன்றியுறை நவிழ்ந்தார்கள்.கடையடைப்பை கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதை மேலே உள்ள படம் காட்டுகிறது.அதிரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும்

இந்துமுன்னனி பிரமுகர் ஒருவனால் ஏ ஜே பள்ளியின் வெளிச்சுவர் இரவோடு இரவாக இிடிக்கப்பட்டதை கண்டித்து இன்று ஊர் முழுதும் பொதுமக்கள் கடையடைப்பு நடைபெற்றது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் மத ஓற்றுமையை விரும்புவோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் பேரூந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

ஜனாப் ஆலிம் ஹாரூன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். விரிவான செய்திகள் மற்றும் போட்டோக்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ்Monday, March 15, 2010

தவ்ஹீது பள்ளியும் கட்டப்படாத பள்ளிகளும்

வ அலைக்கும் அலைக்கும்..

கடந்த சில நாட்களாக நமதூர் தவ்ஹீது ஜமாத் சகோதரர்களிடமிருந்து காலேஜ் ரோட்டிலுள்ள அதிரை தவ்ஹீத் பள்ளியை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது குறித்து நிதியுதவி கோரும் மடல்கள் கிடைக்கப்பெற்றன. அதுகுறித்த சில கருத்துக்களை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நமதூர் அதிராம்பட்டினத்தில் சுமார் நானூறு ஆண்டுகால பழமைவாய்ந்த மேலத்தெரு ஜும்ஆ பள்ளிமுதல் புதிதாகக்கட்டப்பட்ட பள்ளிகள்வரை தோரயமாக 25 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. அதில் சில பள்ளிகள் மராமத்து வேலைகள் செய்யப்படாமலும் ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளி போன்றவை கட்டிமுடிக்கப்பட வேண்டிய நிலையிலும் உள்ளன. நாமெல்லோரும் நன்கறிந்த மெயின்ரோட்டிலிருக்கும் அல்-அமீன் பள்ளியும் இன்னும் கட்டிமுடிக்கப்படாமல் இருந்து வருகிறது.

சென்ற வருடம் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நமதூருக்கு வந்த தஞ்சை தொகுதி மக்களவை உறுப்பினர் திரு.பழனிமாணிக்கம் எம்.பி அவர்கள் அல்-அமீன் பிரச்சினையை தேர்தலுக்குப் பிறகு உடனடியாகத் தீர்த்து வைப்பதாகவும் வாக்களித்தார். பேரூராட்சி துணைத்தலைவரும் நகர திமுக தலைவருமான திரு.இராம.குணசேகரன் அவர்களும் இவ்விசயத்தில் ஒத்துழைப்பதாக எழுத்துப் பூர்வமாக ஒப்புக்கொண்டிருந்ததையும் அதிரை எக்ஸ்ப்ரஸில் வெளியிட்டிருந்தார்கள்.

இவையெல்லாம் அன்று திமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்னிலையில்தான் நடந்தது. எனினும் அல்-அமீன் பள்ளி பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை.

சட்டப்பிரச்சினை மற்றும் நிதிப்பிரச்சினையில் கட்டப்படாமல் இருக்கும் அல்-அமீன் பள்ளி மற்றும் ஆஸ்பத்திரித் தெரு புதுப்பள்ளி ஆகியவை நிலுவையில் இருக்கும் போது அதே கிழக்குக் கடற்கரை சாலையில் அருகே காதிர் முஹைதீன் ஸ்கூல் மற்றும் கல்லூரிகளிலும் தொழக்கூடிய பள்ளிகள் இருக்கும்போது, வெகு சமீபத்தில் அதிரை தவ்ஹீது பள்ளி என்ற பெயரில் ததஜவினரால் இன்னொரு பள்ளியை விரிவாக்கத்திற்கு நிதியுதவி கோருவது முறையா?

அல்லாஹ்வையும் ரஸூலையும் ஏற்றுக்கொண்ட எவரும் நமதூரிலோ அல்லது உலகின் எங்குமோ அல்லாஹ்வைத் தொழுவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தராவிஹ் மற்றும் சில மார்க்கம் சம்பந்தமான விசயங்களில் உலமாக்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் முன்பு நமதூர் பள்ளிகளில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால் தற்போது அல்ஹம்துலில்லாஹ் தவ்ஹீது பிரச்சாரம் பரவலாக்கப்பட்டு இளந்தலைமுறையினர் தெளிவடைந்துள்ள நிலையில் மேற்படி பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை.

எனது அன்பான கோரிக்கை என்னவெனில்,பட்டுக்கோட்டை ரோட்டிலுள்ள லாரல் ஸ்கூல் அருகே மாணவர்கள் தொழுவதற்கு நிரந்தரமான பள்ளி இல்லாத நிலையில் நமதூர் பைத்துல்மால் முயற்சியால் அருகிலுள்ள தோப்பில் ஒரு பள்ளிவாசல் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல் அல்-அமீன் பள்ளிவாசலும், ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளியும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன.

இந்த சூழலில் அதிரை தவ்ஹீது பள்ளி விரிவாக்கத்திற்காக கோருவது மேற்சொன்ன மூன்று பள்ளிகளும் கட்டிமுடிக்கப்படுவதை மென்மேலும் தாமதப்படுத்தவே செய்யும் என்பதை நமதூர் சகோதரர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அல்லாஹ்வை வணங்கும் அனைத்து பள்ளிகளுமே தஹ்வீது பள்ளிகளே எனும்போது அதிரை தவ்ஹீது பள்ளி என்பது மற்ற பள்ளிகளை தவ்ஹீது (அல்லாஹ் ஒருவனே என்ற தவ்ஹீது கொள்கையை ஏற்காத) பள்ளிகள் என்பதாக மாற்றார் கருத்நேரிடும் என்பதையும் சம்பந்தப்பட்ட ஜமாத் சகோதரர்களின் கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன்.

அன்புடன்,

அபூஅஸீலா-துபாய்
email: hiaseela@gmail.com

====================================
---------- Forwarded message ----------
From: SARFU DEEN <sarfudin@hotmail.com>
Date: Mar 15, 2010 12:03 AM
Subject: அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல்
To: sarfudin2002@yahoo.com
ஏகஇறைவனின் திருப்பெரால்...

அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தஞ்சை (தெற்கு) மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் தொடங்;கப்பட்ட காலத்திலிருந்து நீண்டகாலமாக பள்ளிவாசல் கட்டப்படாமலேயே ஏனைய பள்ளிவாசல்களில் தவ்ஹீது சகோதரர்கள் தொழுது வந்தனர். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிட்டது எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் சகித்துக் கொள்வோம் என்ற சிந்தனையில் தனிப் பள்ளிவாசல் அமைக்கப்படாமல் தொழுது வந்தனர்.

ஆனாலும் அதிகபமட்சமான மக்களின் உள்ளங்களில் தனிப் பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என்ற சிந்தனை நாளுக்கு நாள் மேலோங்கியதால் அதனடிப்படையில் நிலம் வாங்கப்பட்டு அதில் கீற்றுக் கொட்டகை அமைத்து தொழுகை நடந்து வருகிறது.

பள்ளிவாசல் அமையப்பெற்ற இடம் ஈ.ஸி.ஆர். ரோடு என்பதால் பலமானக் காற்றுக்கு அதன் கீற்றுகள் தாக்குப்பிடிக்க முடியாததால் அடிக்கடி கீற்று மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது இதில் கனிசமானத் தொகை செலவாகின்றது. கடந்த வருடம் கீற்று மாற்றும் முழு செலவையும் இப்போதைய மாவட்டத் தலைவர் சகோ: ஒய்.அன்வர் அலி அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இந்த வருடத்து நிலை என்ன வென்றுத் தெரியவில்லை.

இதற்கடுத்து பள்ளிவாசலில் ஜூம்ஆத்தொழுகைக்காக மக்கள் கூட்டம் வாரத்திற்கு வாரம் கூடிக்கொண்டே செல்வதால் கடும் வெயிளில் பள்ளிவாசலுக்கு வெளியில் மக்கள் நின்றுத் தொழுவதால் பள்ளிவாசலை கட்டிடமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களையும் கீழ்காணும் லிங்கை சொடுக்கிப்பார்வையிடவும்.


அல்லாஹ்வின் பள்ளிவாசலை அமைப்பதற்கு இறையச்சமுடையவர்கள் தாராளமாகப் பொருளாதார உதவி செய்வதற்கு முன்வருவதன் மூலம் இறையருளுக்கு நெருக்கமானவர்களாகவும், சுவனத்தில் தங்;கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும் பாக்கியம் பொருந்தியவர்களாகவும் ஆவார்கள்.

யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் அது போன்ற (கட்டிடத்) தை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி)

திர்மிதி 292

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


Sunday, March 14, 2010

அதிரையில் PFI யின் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டிற்கான மிஸ்ரா கமிஸனின் பரிந்துரையை நிறைவேற்றக்கோரி, கடந்த (12.03.2010) மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே "பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா" (PFI) அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு PFI ன் அதிரை நகரத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமையேற்றார். PFI ன் மதுக்கூர் நகரத் தலைவர் அவுரங்கசீப் வரவேற்றார். PFI ன் அதிரை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கையை விளக்கிப் பேசிய PFI ன் தஞ்சை மாவட்டப் பேச்சாளர் அப்துல் சமது அவர்கள் குஜராத்தில் முஸ்ஸீம்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலைகளை சுட்டிக்காட்டி இந்தியாவில் இஸ்லாமியரின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். சந்தேகத்தின் அடிப்படையில் முஸ்ஸீம்களை கைது செய்வது இந்திய காவல் துறையினரின் வாடிக்கையாகிவிட்டது என்று குறிப்பிட்ட அவர், தமிழக காவல் துறையினர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள் என்றார். கோவையில் தனது பதவி உயர்வுக்காக சில முஸ்லீம் இளைஞர்களைத் தீவிரவாதி என்று பழி சுமத்தி கைது செய்த ஒரு காவல்துறை அதிகாரியைப் பற்றி குறிப்பிட்ட அவர், அந்த வழக்குக்கு CPCID க்கு மாற்றப்பட்டு விசாரணைக்குப்பின் உண்மை நிலை உணரப்பட்டு, சமீபத்தில் அந்த இளைஞர்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார். இந்திய விடுதலைக்காக மிகப்பெரும் பங்களிப்பை ஆற்றிய முஸ்லீம்கள் இன்று இரானுவத்திலும், காவல் துறையிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார். அரசுத் துறைகளில் முஸ்லீம்களின் பங்கு மிகவும் பின்தங்கியுள்ளதாகவும், இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை தாழ்த்தப்பட்டவர்களை விட மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் சொன்ன சச்சார் கமிட்டியின் அதிர்ச்சித் தகவல்களை குறிப்பிட்ட அவர், முஸ்லீம்களின் இட ஒதுக்கீட்டிற்கான மிஸ்ரா கமிசனின் பரிந்துறைகளையும் விளக்கினார். நம் தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சேக்குக்கூட ஆதரவாக வழக்காட அப்போது வழக்கறிஞர்கள் இருந்தார்கள் ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லீம்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் இன்று முன்வருவதில்லை என்று வேதனையோடு குறிப்பிட்ட அவர், மாலேகான், புனேயில் குண்டு வைத்தவர்கள் முஸ்லீம்களா? என கேள்வி எழுப்பினார். சச்சார் கமிசனின் அறிக்கையை விவரித்த அவர், முஸ்லீம்களின் இட ஒதுக்கீட்டிற்கான மிஸ்ரா கமிசனின் பரிந்துறையை நிறைவேற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி தற்போதைய அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோசங்கள் எழுப்பப்பட்டன. இறுதியில் நன்றியுறையாற்றிய PFI உறுப்பினர் அப்துல்லா அவர்கள், "புதிய பாதையில் புதிய இந்தியாவை அமைப்போம்" என்று கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் "உள்ளுர் நிகழ்வுகள்" பகுதிக்காக அதிரை எம்.ஆர்.(முஜிபுர் ரகுமான்)

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார்.

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

ரியாதில் எமது சிறப்பு செய்தியாளருக்கு டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அளித்த பேட்டியை இன்ஷா அல்லாஹ் விரைவில் எமது இணைத்தளத்தில் பார்க்கலாம்.

courtesy tmmk.in

Friday, March 12, 2010

மனித நேயம் எங்கே?..............

கடந்த 17.01.2010 அன்று நமதூர் இமாம் ஷாபி பள்ளியில் பயிலும் M.I(அதிரை) அன்வர் காக்கா அவர்களின் பேரர் பள்ளியில் பணியாற்றும் ஆயாவின் அலட்சிய போக்கால் விபத்து ஏற்பட்டது. 4 1/2 வயதே ஆன அச்சிறுவன் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 50 நாட்கள் ஆகியுள்ளது. பள்ளியின் அருகில் ஏற்பட்ட விபத்து ஆனாலும் பள்ளி நிர்வாகம் சார்பில் இதுநாள்வரை யாரும் தொடர்பு கொண்டு யாரும் விசாரிக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை. ஆனால் மனிதயேத்தை தூக்கி சாப்பிடும் விதமாக கடந்த 5 நாட்களுக்கு முன் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த வேன்டும் என்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.M.I(அதிரை) அன்வர் காக்கா அவர்கள் பள்ளிக்கு எழுதிய கடிதம்.
Thursday, March 11, 2010

கான்கிரீட் கால்வாய்.

நமக்குநாமே திட்டத்தின் கீழ் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடுத்தெருவில் நடந்துவருகின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து மாற்றுபாதையில் சென்றுக்கொண்டிருக்கின்றன. செக்கடிமேட்டிலிருந்து நடுத்தெரு, ஜாவியா ரோடு வழியாக காலேஜ் வரைக்கும் கிழக்கு கடற்கரை சாலையை(ECR-ஐ) இணைக்கும் மிகப்பெரிய தார் சாலை ஒன்றும் இத்திட்டத்தின்கீழ் நிறைவேற்றப்பட உள்ளது.

-Abdul Barakath.(For Xpress News)

ஏழை குமர் திருமண உதவி - வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரையைச்சார்ந்த மிகவும் குறைந்த வருமானத்தில் சென்னையில் வேலையில் இருக்கும் நபர் ஒருவரின் மூன்றாவது மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இம்மாதம் அதிரையில் திருமணம் நடைபெற இருக்கிறது. சொற்ப சம்பளத்தில் இருப்பதால் தனது மகளின் திருமணத்தை நல்லமுறையில் செய்து முடிக்க தனவந்தர்களின் உதவியை நாடியுள்ளார். அவருக்கு உதவிடுமாறு அதிரை எக்ஸ்ப்ரஸ் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.


தொடர்பு கொள்ள
சாலிகு
9042786843

உதவிட விரும்புவோர் அதிரை எக்ஸ்பிரஸிற்கு மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவும்.


அதிரை எக்ஸ்பிரஸ்

Wednesday, March 10, 2010

அதிரையில் ம.ம.க வின் மதுக்கடை மறியல் போர்.

"குடியும் போதையும் குடும்பத்திற்கு இழுக்கு
டாஸ்மார்க் கடைகள் தமிழ்நாட்டிற்கு அழுக்கு"என்ற முழக்கத்தோடு கடந்த 07-03-2010 அன்று மாலை சுமார் 4:30 மணியளவில் அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் முக்கத்திலிருந்து துவங்கிய மனித நேய மக்கள் கட்சியின் மதுக்கடை மறியல் போரை ம.ம.க வின் மாவட்டப் பொருளாளர் U.செய்யது அவர்கள் தலைமையேற்று நடத்தினார். அதிரை நகர தொண்டரணி பொருப்பாளர் முக்தார் வரவேற்றார், நகர த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

துவக்கவுரையாற்றிய நகர பிரமுகர் அதிரை அன்வர் அவர்கள் எல்லா தீமைகளுக்கும் அடிப்படையானது மது அருந்துதலே என்றும் மதுவிலக்கை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள் என்றும் நபிகளாரின் பொன்மொழிகளை நினைவுப்படுத்தினார். குரளோவியம் எழுதி திருவள்ளுவர் பெயரால் விருதுகளை பெறும் கலைஞருக்கு, திருக்குறளிள் "கள் உண்ணாமை" என்ற அதிகாரம் மறந்து விட்டதா? என கேள்வி எழுப்பினர்ர். கொலை, கற்பழிப்பு மற்றும் சமூக தீமைகளுக்கு அடிப்படையானது மது அருந்துதலே என்பதை விளக்கிய அவர், இந்த சமூக தீமைகளுக்கு எதிராக போராடுவது நம் அனைவரின் மீதும் கடமை என்று கூறி தனது துவக்கவுரையை நிறைவு செய்தார்.அதைத்தொடர்ந்து மதுக்கடைக்களுக்கு எதிரான கோசங்களுடன் ம.ம.க. வினர் பேரணியாக சென்றனர். பேருந்து நிலையம் அருகே மமக வின் செயற்குழு உறுப்பினர் P.L.M. யாசின் அவர்கள் கண்டன் உரையாற்றினார். முன்பெல்லாம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை அரசு ஏற்று நடத்தியது, ஆனால் இப்போது கல்வி நிறுவங்கள், மருத்துவமனைகள் தனியார் மயமாகிக்கொண்டிருக்கின்றன. சாராயக்கடைகளை அரசு ஏற்று நடத்திக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ள இடங்களில் டாஸ்மார்க் கடைகளை திறந்து மக்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். டாஸ்மார்க் கடைகளை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் செல்வி. ஜெயலலிதா என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா ஆட்சியின்போது, டாஸ்மார்க் கடைகளுக்கு எதிராக திமுக வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களையும், சட்டமன்றத்தில் பேசியதையும் நினைவுபடுத்தி திமுக வின் முரண்பட்ட நிலைப்பாட்டை சுட்டிக்காட்டினார். ம.ம.க வின் சார்பில் முதல்வர் கலைஞர் அவர்களிடம் மனு கொடுத்தபோது அரசின் வருமானங்களில் (1/4) நான்கில் ஒரு பங்கு டாஸ்மார்க்கிலிருந்துதான் வருகின்றது என்று சொன்ன கலைஞரின் அக்கரையற்ற பதிலை குறிப்பிட்டார். தமிழகத்தின் 64. மையங்களில் நடைபெறும் இந்த மறியல் போர், முதல்
கட்ட அறப்போராட்டமே, பூரண மதுவிலக்கு அமலாகும் வரை ம.ம.க வின் தொடர் போராட்டம் ஓயாது என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ம.ம.க வினர் அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரையில் குப்பைகளை அகற்றாமல் பன்றிகள், கொசுக்களை கட்டுப்படுத்தாமல் அவற்றின் மூலம் பரவும் நோய்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் மக்களை பாதுக்காக்கத்தவறிய அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு தொடராமல், சுகாதார பணிகளை விரைவுப்படுத்தக்கோரி எச்சரிக்கும் வண்ணம் நடந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக ஓரளவேனும் சுகாதார பணிகள் துரிதமாக நடைப்பெற்றன(இதனால் ம.ம.க விற்கு மக்கள் மத்தியில் பாரட்டுக்கள் கிடைத்தன) என்றாலும் கூட இப்போது நிகழ்ந்த மதுக்கடை மறியல் போரால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் நம்மை ஆளுகின்ற திமுகவானது முன்பு மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவானது, மதுவிலக்குக்காக அரும்பெரும் தியாகங்கள் செய்த தந்தை பெரியார் வழிவந்து, பூரண மதுவிலக்கை விரும்பிய
அறிஞர் அண்ணா அவர்களை தலைவராக பெற்றிருந்த கட்சிதான். என்றாலும் அன்று கொள்கை நம்மை ஆள முற்பட்டன ஆனால் இன்று குடும்பம் நம்மை ஆள முற்படுகிறது என்கின்றனர் மக்களில் சிலர். இன்னும் சிலரோ, திமுக அல்லி வீசும் கவர்ச்சித்திட்டங்களுக்கு காசு பார்க்கத்தான் மதுவிலக்கு கொள்கைக்கு முரணாக மதுக்கடைகளை நடத்துகிறார்கள் என்கின்றனர்.

எது எப்படியாயினும் தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்கான வருவாயை நல்ல வழியில் பெருக்குவதற்கு அரசு முனைப்பு காட்ட வேண்டும். பல பேர் தாலியை அறுத்து, சில பேர்
பகட்டாக வாழ்வது நம் தமிழ் பண்பாட்டிற்கு இழுக்கானது இதை உணர்ந்து நம் அரசு தம் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வராதவரை ம.ம.க வின் மதுவிலக்கு போராட்டமெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குகளாய்த்தான் ஒலித்துக்கொண்டிருக்கும்.

அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் "உள்ளூர் நிகழ்வுகள்" பகுதிக்காக
போராட்டக்களத்திலிருந்து....
அதிரை எம்.ஆர் (முஜிபுர் ரகுமான்)

Tuesday, March 9, 2010

காவிகளுடன் கைகோர்க்கும் நக்கீரன்

அமைதிக்கும் காவிகளுக்கும்தான் ஒத்துவராது. நக்கீரனுக்கு என்ன நேர்ந்தது? சமீபகாலமாக நக்கீரன் வாரமிருமுறை பத்திரிக்கை முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு காவிமயமாகி வருகிறது.

செய்தியாளர் என்ற போர்வையில் இந்துத்துவா காவி வெறியர்கள் நக்கீரனிலும் ஊடுறுவி உள்ளனரோ என்று சந்தேகிக்கும் வகையில் நக்கீரனின் நடுநிலையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ள இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடாமல் இருப்பதே நக்கீரனுக்கு அழகு.

இத்தகைய பாரபட்சமுள்ள செய்தி வெளியிட்ட செய்தியாளரை நக்கீரன் ஆசிரியர் திரு.ராஜகோபால் அவர்கள் களை எடுக்க வேண்டும்.

செய்வாரா ஆசிரியர்? பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, March 8, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

புதுமனைத்தெருவை சார்ந்த‌ மர்ஹூம் மீ.மு. அப்துல் கரீம் (புழுங்கரிசி) அவ‌ர்க‌ளின் மகனும், மீ.மு. அப்துல் மஜீது, அவர்களின் சகோதரரும், மீ.மு. ஷரபுதீன் அவர்களின் மைத்துனருமான உபைதுல்லாஹ் அவர்கள் இன்று இரவு (07/03/2010) கால‌மாகிவிட்டார்க‌ள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இற‌ந்த‌ அன்னாரின் மஃபிர‌த்து ந‌ல் வாழ்விற்க்கு எல்லாம் வ‌ல்ல‌ அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக ஆமீன்.

தகவல் உதவி
A.J Tajudeen,
Jeddah

இவர்கள் ஊரில் ஓரிரு நாட்களுக்கு முன் வாகன விபத்து ஓன்றில் சிக்கி தஞ்சாவூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Saturday, March 6, 2010

போலி மனநலகாப்பகம் (AWISO) மூடப்பட்டது - நிர்வாகி தலைமறைவு

அதிராம்பட்டிணம் MSM நகர் ஆதம் லைனில் அரசின் அனுமதியின்றியும், பள்ளி நடத்தப்பட்ட வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றியும் நடத்தப்பட்டு வந்த "மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சிறப்புப் பள்ளி" அரசு அதிகாரிகளால் இன்று மூடப்பட்டது. அவிஸோ (AWISO) என்ற அறக்கட்டளை சார்பில் இந்த பள்ளி கடந்த நான்கு மாதமாக நடத்தப்பட்டு வந்தது.

இவர்கள் நடத்தும் இந்த பள்ளியை அரசின் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் சோதனை செய்தனர். இன்று RDO உள்பட அரசின் முக்கிய நிர்வாகிகள் நேரில் வந்து இந்த பள்ளியை மூடினர்.


அவிஸோ அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான மௌலானா ஷேக் அப்துல்லாஹ் மற்றும் ஷேகு அப்துல்லாஹ் ஆகியோர் தப்பி ஒடிவிட்டனர்.

அரசின் அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட இந்த பள்ளியை மூடிய அதிகாரிகள், இந்த பள்ளியை நடத்தியவர்களை கைது செய்யாமல் போனது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.


அவிஸோ அறக்கட்டளை நடத்திய பள்ளியை அரசு அதிகாரிகள் மூடியபோது எடுத்த படங்கள்:

சமுதாய மக்களுக்கு ஒர் வேண்டுகோள்:

நாங்கள் சமுதாய சேவை செய்கிறோம் என்று கிளம்பும் முகவரி இல்லாத பேர்வழிகளுக்கு உதவும் முன் அவர்களை பற்றி நன்றாக விசாரித்துவிட்டு அவர்களுக்கு உதவுங்கள். இந்த அறக்கட்டளை வசூல் செய்த பணத்தை என்ன செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை.

நன்றி: ததஜ- அதிரை

Friday, March 5, 2010

ம‌ர‌ண‌ அறிவிப்பு

புதுத்தெருவை சார்ந்த‌ சி ந‌ மூ. அப்துல் காதர். மு அ. அப்து ம‌ஜித் இவ்ர்க‌லின் பேரனும் இக்பால் அவ‌ர்க‌ளின் ம‌க‌னும் ஹாரிஸ், ஷ‌ஃபி. ராஜிக். இவ‌ர்க‌ளின் த‌ம்பியுமான‌ அப்துல் காத‌ர் (24) இன்று அதிகாலை சென்னையில் கால‌மாகிவிட்டார்க‌ள் இன்னா... அன்ன‌ரின் ஜ‌னாசா இன்று இஷா தொழுகைக்குப்பின் த‌க்வாபள்ளி மைய‌வாடியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டுகிற‌து.இற‌ந்த‌ அன்னாரின் ம்ஃபிர‌த்து ந‌ல் வாழ்விற்க்கு எல்லாம் வ‌ல்ல‌ ஏக‌னிட‌ம் கையேந்துவோமாக‌ ஆமீன்.

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 2:28)