Friday, April 30, 2010

வேலை வாய்ப்பு : நர்ஸிங் பாய் (UAE -ல் உள்ளவர்களுக்கு மட்டும் )

அன்பான சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

வேலை வாய்ப்பு : நர்ஸிங் பாய் (UAE -ல் உள்ளவர்களுக்கு மட்டும் )

துபையில் உள்ள வசதி படைத்த வயதான இந்தியருக்கு ( ஸ்டோரக்கினால் நடக்க இயலாது ) நர்ஸிங் பாய் தேவை. சம்பளம் AED 1500-2000 விருப்பமுள்ளவர்கள் மட்டும் ...இன்ஷாஅல்லாஹ் தொடர்புகொள்ளவும் 050-4950191.
--
With Regards

M. Ayub Khan

Wednesday, April 28, 2010

செம்மொழி மாநாட்டில் தேனீ உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் - தமிழ் கணிமையாளர்கள் வலியுறுத்தல்


செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் தமிழ் இணைய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கவேண்டும் என்று பல்வேறு தமிழ் குழுமங்களிலும், வலைப்பதிவுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதுபோன்ற கோரிக்கை வலைப்பதிவு ஓன்றை உமர் தம்பி அவர்களது மருமகனார் சகோதரர் தாஜூதின் உருவாக்கியிருக்கிறார். அந்த வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுத்து அன்னாரது புகைப்படத்துடன் தமிழ் மணம் முதல் பக்கத்தில் காண்பித்து தமிழ் கணிமையாளர்களின் முயற்சிக்கு கைகொடுத்துள்ளது.

தமிழ் வலைப்பதிவுகள் திரட்டிகளில் பிரபலமானது தமிழ்மணம். தமிழ்மணத்தின் ஆரம்பகாலத்தில் இருந்த ஓருங்குறி குறைகளைக் களைய உமர் தம்பி அவர்கள் தேனீ இயங்கு எழுத்துருவை உருவாக்கி வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமதூரைச்சார்ந்த தமிழ் கணிமையாளர், உத்தமம் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர், சகோதரர் மாஹிர் அவர்கள் தாஜூதீனுடைய வலைப்பதிவில் பதிந்த பின்னூட்டம் -

"கொலோனில் நடைபெற்ற உத்தமம் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற யான் அங்கு சென்றிருந்தேன். தமிழ்மண நிர்வாகிகளில் ஓருவரான திரு நா. கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் வலைவாசல், திரட்டிகள், மற்றும் விக்கிபீடியா அரங்கிற்கு உமர் தம்பி அவர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள்.

ஐரோப்பாவில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில், நமக்கு அறிமுகமானவர், பழகியவர், தமிழ் தட்டச்சு, தமிழ் இணைய நுட்பங்களை கற்றுத்தந்தவரது பெயரை அரங்கிற்கு சூட்டியதை கண்டு அளவிலாத மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ் இணைய வளர்ச்சியில் தமிழ்மணத்தின் அர்ப்பணிப்பு (தமிழூற்று என்ற திரட்டி உருவாக்கி, நிர்வகித்த அடிப்படையில் அனுபவபூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் உணர்ந்தது) போன்று அன்றைய தமிழ் இணைய வலைப்பக்கங்களில் இருந்த யுனிகோடு பிரச்சினைக்கு தேனீ என்னும் ஓருங்குறி எழுத்துரு உருவாக்கி தந்தார். தமிழ் வலைப்பதிவுகள் ஒருங்குறி பிரச்சினையின்றி சரிவர தெரிய தமிழ் சமூகத்திற்கு உதவியவர். அன்றைய கட்டத்தில் தேனீ இயங்கு எழுத்துரு (thenee.eot) 90 சதவீத வலைப்பதிவுகளில், தமிழ் இணையதளங்களில் பங்காற்றியதாக பிரபல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். (உமர் தம்பி, thenee.eot என்று தேடுபொறிகளில் தேடுக)

தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.

உமர்தம்பி அவர்களுடன் நெருங்கிப் பழகிய தமிழ் கணிமையாளர்கள், உத்தமம் குழுவினர் இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

சகோதரர் தாஜூதீன் வலைப்பதிவிற்கு சென்று அதிக பின்னூட்டங்கள் இட்டு தமிழ்மணத்தில் முதன்மைப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

- அதிரை எக்ஸ்பிரஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

365 நாளும் நடக்கட்டும்
மண்ணில், விண்ணில், பேச்சில், எழுத்தில்
அதுவே பேசப்படட்டும்.
ஆட்டங்களில் சூடு பறக்கட்டும்
ஆரவாரங்களில் போதை ஏறட்டும்
விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும்
விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்"


சென்னை அணியும், மும்பை அணியும் மோதும் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தமிழ் என்பதால் சென்னை அணியின் வீரர்கள் அடிக்கும் போது நான்கும், ஆறும் பறக்காதா என்று உங்கள் வயிற்றில் மெல்லிய பதட்டம். சென்னை அணி வென்ற பிறகும் உங்கள் சிந்தனை அந்தக் காட்சியினைப் பின்தொடர்கிறது. கோப்பை வழங்குதல் முடிந்தாலும் மனதில் வழியும் கேளிக்கை உணர்ச்சி நிற்கவில்லை. என்னமோ, ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. இத்தகைய உணர்ச்சி உண்மையெனில் நீங்கள் கிரிக்கெட்டால் வீழ்த்தப்பட்ட ஒரு விரும்பிப் பறிபோன இந்தியக் குடிமகன்.

இந்தியாவை ஆட்சி செய்து களைத்துப்போன வெள்ளையர்கள் பொழுது போக்கிற்காக ஆபத்தில்லாத விளையாட்டாக கிரிக்கெட்டை விளையாடிதோடு, தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மெக்காலே கல்வி கற்ற இந்தியக் குமாஸ்தாக்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள். பார்ப்பன மேல் சாதியினரைக் கொண்டிருந்த இந்த அதிகார வர்க்கமும், சமஸ்தானத்து மன்னர்களும், பண்ணையார், மிட்டா மிராசுகளும் கிரிக்கெட்டிற்கு இந்திய அஸ்திவாரம் போட்டார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டும், இந்தியத் துணைக் கண்டத்தின் சந்தை மதிப்பும், கிரிக்கெட்டை இந்திய முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் தவிர்க்க முடியாத வண்ணம் கொண்டு சேர்த்தன. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த 2007 உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இந்திய அணி குறைந்த பட்சம் அரையிறுதிக்காவது தகுதி பெறும் என்று பெரும் மூலதனத்தை முதலீடு செய்திருந்த முதலாளிகள் பின்னர் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் கையை சுட்டுக் கொண்டனர்.

இந்திய அணி எப்போதும் வெற்றிபெறுவது சாத்தியமில்லாதது. வெற்றி பெறும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய முதலாளிகள் ஸ்பான்சர் செய்வதும் இயலாது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் முறையில்தான் கிரிக்கெட்டின் எதிர்கால வர்த்தகம் உண்டு என்பதை உணர்ந்து கொண்ட முதலாளிகளின் ஒரு பிரிவு உருவாக்கியதுதான் ஐ.பி.எல் கோப்பை போட்டி.

இப்போது வெளிவந்த மோசடிகளின் படி இந்தப் பகல் கொள்ளையில் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகமுதலாளிகள் எல்லோரும் சேர்ந்தே கூட்டணி வைத்து நடத்தியிருக்கின்றனர். மொரிஷியஸ் நாட்டிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்தால் வரி இல்லை என்பதை வைத்து எல்லா ஐ.பி.எல் அணிகளின் பினாதி முதலீடும் அந்த தீவிலிருந்துதான் வந்திருக்கின்றன. அந்தத்தீவுக்கு வந்த பணம் ஸ்விஸ் வங்கியிலிருந்து வந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து கருப்பு பணம் ஸ்விஸ் நாட்டுக்கு போயிருக்கிறது. இதன் அளவு ஐந்து இலட்சம் கோடிகள் என்பது ஏற்கனவே வெளிவந்த விசயம்.

மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களை ஒழிக்க மாவோயிஸ்ட்டுகளின் மீதான போர் தொடுத்திருக்கும் இந்திய அரசின் அமைச்சர்கள் இந்தப் பிரச்சினைக்கு அடுத்தபடியாக இப்போதைக்கு கவலைப்படும் விசயம் ஐ.பி.எல் மோசடிகள். அதுவும் எப்படியோ கசிந்துவிட்ட இந்த ஊழலை இதற்கு மேல் முட்டு கொடுத்து நிறுத்தவதற்கு பிரதமர், ப.சிதம்ரம், பிரணாப் முகர்ஜி, சோனியா எல்லோரும் அல்லும் பகலும் தனியாகவும், சந்தித்தும் வேலை செய்கிறார்கள். மக்களை தற்காலிகமாக ஏமாற்றுவதற்காக வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் ஐ.பி.எல் முதலாளிகளின் அலுவலகங்களை சோதிப்பதாக சீன் போடுகிறார்கள்.

முதலாளித்துவ புரட்சி நிலைநிற்பதற்கு முந்தைய சமூகங்களில் விளையாட்டு என்பது சமூகம் தழுவியதாக இருந்தது. இன்றிருப்பது போல தனித்திறமைகளை வெளிப்படுத்தும் சூப்பர்மேன் வீரர்கள் அன்றில்லை. போட்டிகளும் மக்கள் எல்லாரும் கலந்து கொள்ளுமளவு அனைவரின் வாழ்விலும் விளையாட்டு என்பது இரண்டறக் கலந்திருந்தது. முக்கியமாக அவர்களது வாழ்க்கைத் தேவைகளுக்கான உழைப்பில்தான் அந்த விளையாட்டுகள் தோன்றி வளர்ந்தன.

இன்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சியின் காலத்தில் தனது உடலின் அதீத திறமைகளை காட்டும் சூப்பர் வீரர்கள் தோன்றி விட்டார்கள். நூறு மீட்டரை ஒன்பதே முக்கால் விநாடிகளில் கடந்து விட்ட சாதனை எதிர்காலத்தில் ஒன்பது, எட்டு, ஏழு என்று கூட வரலாம். ஆனால் உலகின் எந்த மூலையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காணும் வசதியைக் கண்டிருக்கும் இக்காலத்தில், அந்த அளவுக்கு விளையாட்டு என்பது சமூகமயமாவதற்குப் பதில் மக்களின் வாழ்விலிருந்து அன்னியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போட்டிகளை உட்கார்ந்தபடி பார்த்து இரசிக்கும் அளவுக்கு பொருத்தமாக நடை, உடலுழைப்பு எல்லாம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. இப்படி தமது வாழ்வில் இல்லாத உடல் அசைவுகளின் நேர்த்தியான ஆட்டத்தை பார்க்கும் இரசனையை என்னவென்று சொல்வது?

இந்த உலகிலேயே சிக்கலான ஆட்ட விதிகள், நுணுக்கம் ஏதுமில்லாமல் இரசிக்கப்படும் விளையாட்டும் கிரிக்கெட்தான். ஸ்டெம்பு விழுந்தால் அவுட், பந்து பிடித்தால் கேட்ச், எல்லைக் கோட்டை உருண்டு தாண்டினால் நான்கு, பறந்து தாண்டினால் ஆறு என்பதை அறிந்து கொண்டாலே கிரிக்கெட் தெரிந்தமாதிரிதான் .

ஐந்து நாட்கள் போட்டியினை பொறுமையாக அசைபோடும் பெரிசுகள் ஒருநாள் போட்டி வந்தபோது மிரண்டு போனார்கள். இருபது ஓவர் போட்டி வந்தபோது புலம்பத் துவங்கினார்கள். ஆனாலும் கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் முன்பை விட பெரிதாகிக் கொண்டே வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அறிவியல்-தொழில்நுட்ப புரட்சியும், வர்த்தக நோக்கமும் இணைந்து உருவாக்கிய பெரும் சந்தையே. கிரிக்கெட் ஒரு அமுதசுரபி என்று முதலாளிகள் புரிந்து கொண்ட பிறகு அது வெறும் விளையாட்டு என்பதை என்றோ இழந்துவிட்டது.

இன்றைக்கு மைதானத்தில் பார்க்கும் ஆட்டத்தை விட சின்னத்திரையில் பார்ப்பது என்பது விளையாட்டின் இந்திய தேசிய உணர்ச்சியாகி விட்டது. கிரிக்கெட் ஒளிபரப்பும் ஹாலிவுட் படங்களின் நேர்த்தியை விஞ்சும் வண்ணம் வளர்ந்து வருகிறது. கோக்கைக் குடித்தவாறும், லேயிஸ் சிப்ஸை கொறித்தவாறும் பார்ப்பதற்கு பொருத்தமான விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே என்பது இரசிகர்களின் அங்கீகாரத்தைப் பெற்று நாளாகி விட்டது. இவ்வளவு நாள் இந்திய அணியின் வெற்றிக்காக பதட்டப்பட்ட இரசிகர்கள் ஒரு மாறுதலுக்காக மாநில அணிகளுக்காக டென்ஷனாகிறார்கள்.

ஐந்து நாள், ஒரு நாள் போட்டிகளை அசைபோட்ட நேரத்தை விட இந்த குறுகிய காலப்போட்டிகள் அசைபோடப்பட்ட நேரம் அதிகம்தான். இந்த ஒன்றரை மாதமாக நாட்டின் பேசுபொருளாக ஐ.பி.எல் மட்டுமே நிகழ்ச்சி நிரலை தயாரித்திருந்தது. விளையாட்டிலிருந்து ஆட்டம், பாட்டம், இசை, ஆடை அணிவகுப்பு, குடி விருந்து, என்று எல்லா வகையிலும் அவை தொடர்ந்தது. பதிவுலகிலும் ஐ.பி.எல்லுக்காக வரையப்பட்ட இடுகைகள் எத்தனை எத்தனை?

ஏற்கனவே மதமாச்சரியங்களுக்குள் ஆழ்த்தப்ப்ட்ட இந்திய சமூகத்தின் நவீன மதமாக கிரிக்கெட் நிலை பெற்றுவிட்டது. கிரிக்கெட்டின் சமூக பொழுது போக்கு நேரங்களில் ஆழ்ந்திருக்கும் ஒரு இரசிகன் பலவற்றையும் இழக்கிறான் என்பதை அறியமாட்டான். முதலாளிகள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்படி தான் உசுப்பிவிடப்படும் ஒரு உணர்ச்சிகரமான விலங்கு என்பது அவனுக்குத் தெரியாது.

பெப்சி, கோக் போன்ற முதலாளிகள் நினைத்தால் அவன் இந்திய வெறியையும், பால்தாக்கரே போன்ற இனவெறியர்கள் நினைத்தால் அவன் பாக் எதிர்ப்பு வெறியனாகவும், ஐ.பி.எல் முதலாளிகள் நினைத்தால் அவன் தேசிய இனவெறியனாகவும் மாறிவிடுவான். இந்திய அணிக்காக அவனால் பாரட்டப்பட்ட வீரர்கள் இன்று எதிர் ஐ.பி.எல் அணியில் இருந்தால் வெறுக்கப்படுவார்கள். வெளிநாட்டு வீரர்களை இந்திய அணியின் எதிரிகளாக நினைத்துப் பழக்கப்பட்டவன் இன்று அவர்களை வேட்டி கட்டிய தமிழனாகக்கூட அங்கீகரிக்கத் தயங்குவதில்லை.

முதல் ஆண்டு போட்டியில் பாக் வீரர்களை ஆரவாரத்துடன் ஏற்றவன் பின்பு லலித்மோடியின் சதியால் பாக் வீர்ர்கள் சேர்க்கப்படவில்லை என்பதையும் ஏற்றிருக்கிறான். இப்படி விற்பனைக்கேற்ற உணர்ச்சியை மாற்றி மாற்றி தரித்துக் கொள்வதில் அவனுக்கு வெட்கம் ஏதுமில்லை. அவனுக்குத் தேவை நான்கும், ஆறும்தான்.

வாடகைக்கு வீடு கிடைக்காமல் புறநகருக்கும் புறத்தே மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை நகரில் மூட்டை சிமிண்டை நானூறு ரூபாய்க்கு கொள்ளை விலையில் விற்பனை செய்யும் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் சென்னை அணியின் உரிமையாளராக இருப்பதால் அவன் அவர்களை மன்னிக்கவும் செய்கிறான். பேருந்து நிலையத்தில் கருப்பு வெள்ளை போர்டு பேருந்து வந்தால் ஓரிரு ரூபாய்களை மிச்சப்படுத்தலாம் என்று பொறுமையாக காத்திருக்கும் அவன், சென்னை அணியின் இன்றைய மதிப்பு மூவாயிரம் கோடி என்பதை அறியமாட்டான்.

விதர்பாவில் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொத்துக் கொத்தாய் தற்கொலை செய்திருக்கும் விவசாயிகளின் மண்ணில் புனே அணி 1500 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது என்பதும், ஒரிரு ஆண்டுகளில் அந்த அணியின் முதலாளி அதைப் போல பலமடங்கு சுருட்டப்போகிறார் என்பதையும் அவன் அறிய மாட்டான். உலகப் பணக்காரர்களின் வரிசையில் அணிவகுக்கும் முகேஷ் அம்பானி, மும்பை இந்தியன் அணிக்குச் சொந்தக்காரர்தான், தொழில் மோசடியில் நம்பர் ஒன் முதலாளி என்பது அவனுக்குத் தெரியாது.

ரப்பர் இறக்குமதியால் பால்வெட்டும் தொழிலாளிகள் பட்டினி கிடக்க, பாமாயில் இறக்குமதியால் தென்னை விவசாயிகள் காய்ந்து கிடக்க, தொழிலாளிகள் வரத்து இல்லாத்தால் கிராமப் புற டூரிங் தியேட்டர்கள் மூடப்படும் கேரள மண்ணில்தான் 1500 கோடிக்கு கொச்சி அணி வாங்கப்பட்டிருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு கேரள அணி இடம்பெற்றிருப்பதே அவனுக்கு கிடைத்திருக்கும் ஜன்மசாபல்யம்.

ஐ.பி.எல்லின் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பு என்பது அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து அவனுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பணம்தான் என்பது அவனுக்குத் தெரியாது.

ஃபோரும் சிக்ஸரும் மட்டுமே எண்களில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 32 கோடி மக்களும், ஊட்டச்சத்து இல்லாமல் சாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் இந்தியாவும், ஒரு ரூபாய் அரிசிக்காக ரேஷன் கடை செல்லும் ஒரு கோடி தமிழகக் குடும்பங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காக துரத்தப்படும் மத்திய இந்தியாவின் பல்லாயிரம் பழங்குடி மக்களும், அவர்களுக்காக தங்களது உயிர்களை அன்றாடம் பலிகொடுக்கும் மாவோயிஸ்ட்டுகளும் கூட எண்களாகத்தான் செய்திகளில் பதிக்கப்படுகிறார்கள்.

ஆயினும் இந்த அழுக்கான இந்திய எண்களை விட ஐ.பி.எல்லின் அலங்காரமான ஃபோரும். சிக்ஸரும் உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது என்றால், ஐ.பி.எல் மோசடிகளின் ஊற்று மூலம் உங்கள் பலத்தில்தான்.

இப்போது ஐ.பி.எல் முடிந்துவிட்டது. அடுத்து உலகக்கோப்பை ட்வெண்டி 20 போட்டி, சாம்பியன்ஸ் லீக், ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி என்று அடுத்த திருவிழாக்கள் வரப்போகின்றன. இரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Thanks and Source From: வினவு வளைத்தளம் (http://www.vinavu.com/2010/04/27/ipl-scandal/
With Regards

M. Ayub Khan

Tuesday, April 27, 2010

அதிரை கடற்கரை ஜும்மா பள்ளி திறப்பு விழா

அதிரை கடற்கரை ஜும்மா பள்ளி திறப்பு விழா தொடர்பான தகவல் மடல்.


தகவல்: அதிரை யாசிர்

6 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட கம்பன், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்

சென்னை: விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில் பாதைப் பணியில் போக்குவரத்து தொடங்கியுள்ளதையடுத்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சோழன், கம்பன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மீண்டும் ஓடத் தொடங்கியஉள்ளன.

விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே அகலப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனால் அந்த மார்க்கத்தில் ஓடிய அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. 6 ஆண்டுகளாக நடைபெற்ற பணி முடிந்து அகலப்பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து கடந்த 23ம் தேதி முதல் தொடங்கியது.

விழுப்புரம்- மயிலாடுதுறை- விழுப்புரம் தினசரி பாசஞ்சர் ரயில் முதலில் ஓடத்தொடங்கியது இந்த ரயில் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். விழுப்புரத்தில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 10.10 மணிக்கு சென்றடைகிறது.

இதே போல் மற்றொரு பாசஞ்சர் ரயில் விழுப்புரம்- மயிலாடுதுறை- விழுப்புரம் தினசரி (எண் 813, 814) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விழுப்புரத்தில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 9.50 மணிக்கு செல்கிறது. இந்த ரயில் அதிகாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு விழுப்புரத்திற்கு காலை 9.15 மணிக்கு வந்து சேருகிறது.

சென்னை எழும்பூர்- நாகூர்- எழும்பூர் (எண் 6175, 6176) கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு நாகூருக்கு காலை 9.15 மணிக்கு சென்றடைகிறது. நாகூரில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது. இந்த ரயில் தாம்பரம் - விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் வழியாக செல்கிறது.

சென்னை எழும்பூர் - மதுரை- எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண் 2993, 2994) வாரம் இரு முறை விடப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மறுநாள் காலை 8.50 மணிக்கு செல்கிறது.

மதுரையில் இருந்து வியாழன், சனிக்கிழமையில் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 7.55 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயில் விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்கிறது.

இதே போல் சென்னையில் இருந்து திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் (எண் 6853, 6854) இன்று முதல் ஓடியது. எழும்பூர் - திருச்சி - எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8.20 மணிக்கு புறப்பட்டு சென்றது இந்த ரயில் திருச்சிக்கு மாலை 4.35 மணிக்கு சென்றடைகிறது. திருச்சியில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மாலை 5.45 மணிக்கு வந்து சேரும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப் புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர்- வாரணாசி இடையே (4259-4260) வாரம் ஒரு முறை ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமை தோறும் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை- எழும்பூருக்கு வியாழக்கிழமை பகல் 12.55 மணிக்கு வந்து பின்னர் 1.05 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5 மணிக்கு வாரணாசி செல்கிறது. இந்த ரயில் கடலூர், சிதம் பரம், மயிலாடுதுறை, கும்ப கோணம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை நிலையங்களில் நின்று செல்லும். இந்த சேவை அடுத்த மாதம் 2ம் தேதி முதல் தொடங்குகிறது.

எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே ஓடும் (6101, 6102) ரயில் மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக மாற்றி விடப்படுகிறது.

சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது விருத்தாச்சலம் வழியாக செல்கிறது. இனி மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக செல்லும் 29.7.2010 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

விழுப்புரம்- தாம்பரம் பாசஞ்சர் ரயில் விழுப்புரத்தில் காலை 5.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும்.

நன்றி தட்ஸ்தமிழ்

Sunday, April 25, 2010

க‌வ‌லை ப‌டாதே ச‌கோத‌ரா...

க‌றிம் :என்ன‌ப்ப‌ அன்வ‌ர் உன்ன‌ பாத்து ரொம்ப‌ நாளாச்சு என்ன‌ப்பா நல்லா ஈக்கிரியா? என்னா சோக‌மா ஈக்கிரா ஒட‌ம்பு எதுவும் ச‌ரியில்லையா?

அன்வர் : அதுலாம் ஒன்னும் இல்ல‌ காக்கா.... என் மொவ‌ நேத்து வ‌ய‌சுக்கு வ‌ந்துரிச்சி. நேத்து என் பொன்டாட்டிக்கு போன் ப‌ன்னும்போது சொன்னா... என் மொவ‌ன் வேற‌ ப‌ரிச்சை எழுதி ஈக்கிறான் அவ‌னும் பாஸாயிட்டா காலேஜ் ஃபீஸ் அது இதுன்டு ஏக‌ப்ப‌ட்ட‌ செல‌வு வ‌ருது என் புள்ள‌க்கி வேற‌ ஊடு ந‌கை ந‌ட்டுன்னு ஏக‌ப்ப‌ட்ட‌து தேவைப்ப‌டுது என்ன‌ ப‌ன்ன‌ற‌துன்னு தெரிய‌ல‌ க‌ரிம்...

ரிம் : அட‌ அன்வ‌ரு இதுக்கு யான்டா க‌வ‌லை ப‌டுறா... ந‌ம‌க்கு அல்லா ஈக்கிறான் . நீ இப்போ க‌ஷ்ட‌த்த‌ இன்னும் சில‌ கொஞ்ச‌ நாளைக்கு ப‌ட்டாலும் ப‌ல‌ன் ஈக்கிது ஒன் மொவ‌னே ந‌ல்லா ப‌டிக்க‌ வ‌ச்சு அவ‌ன‌ டாக்ட‌ர், இஞ்ஜினிய‌ர்ன்னு ஏதாவ‌து அவ‌னுக்கு பிடித்த லைன்ல‌ ப‌டிக்க‌ வைடா. நீப‌டிக்காம‌ல் இங்கு வ‌ந்து ப‌டுற‌ க‌ஷ்ட‌த்த‌ நென‌ச்சுபாரு... நாம‌ ப‌டுற‌ க‌ஷ்ட‌த்த‌ அவ‌னும் ப‌ட‌ கூடாதுன்னு நென‌டா... அத‌ உட்டுட்டு நான் ம‌ட்டும் தான் க‌ஷ்ட்ட‌ப‌டுறேன் அவ‌னையும் ஒரு ஒத்தாசைக்கு கூப்பிட்டு அவ‌ன் வாழ்க்கையில‌ கும்மிய‌டிச்சிடாதே... அன்வ‌ர் புரியுதா?

அனர் : அதுலாம் ச‌ரிதான் காக்கா... இப்போ என் ம‌க‌ள் வேற‌ ஆளாகி நிக்கிறா இன்னும் ரெண்டு மூனு வருஷ‌த்துல‌ க‌ல்யாண‌ம் காச்சின்னு வ‌ந்துடும் அதுக்குள்ள‌ நான் எப்ப‌டி இந்த‌ 300ரியால் ச‌ம்ப‌ள‌த்துல‌ இருந்து ஈடுக‌ட்ட‌ முடியும் காக்கா? அது நால‌த்தான் என் மொவ‌னையும் 12வ‌தோட‌ நிறுத்திட்டு என்க‌ஃபில்ட்ட‌ சொல்லி ஒரு விசா எடுத்த‌ ஒத‌வியா இருக்கும்ன்னு பாக்குறேன்...

ரிம் : அட‌ ம‌ட‌ய‌னே..இப்போல்லாம் ந‌ம்மூர் புள்ளைஓ முன்ன‌ மாதிரி இல்ல‌ ந‌கை ஊடு இருந்தாதான் க‌ல்யாண‌ம் ப‌ன்னிக்கிடுவேன்ன்னு யாரும் சொல்லுற‌து இல்ல‌ இப்போல்லாம் ஊரு ரொம்ம்ப‌ மாறிடுச்சி இப்போ வ‌ர‌த‌ட்ச‌னை அது இதுன்னு ய‌ரும் எதுவும் கேக்குற‌து இல்ல‌... இப்போ அந்த‌ மாதிரி ந‌ட‌க்குற‌ க‌ல்யாண‌த்துல‌ யாருமேக‌ல‌ந்துக்கிற‌து இல்ல..அந்த‌ அள‌வுக்கு ஊரு முன்னேரிட்டாங்க‌ ந‌ம்ம‌ புள்ளையில் ஓ இன்னும் சில‌ வ‌ருஷ‌த்துல‌ பாரு ம‌ஹ‌ரு கொடுத்துதான் க‌ல்யான‌ம் முடிப்பேன்னு ஓத்த‌ கால்ல‌ நின்னாலும் ஆச்ச‌ரிய‌மில்லை.. அந்த‌ அள‌வுக்கு ந‌ம்மூர் ஒரு எடுத்துக்காட்டா இருக்கும் பாரேன்...

அன்வர் : இன்ஷா அல்லா அப்ப‌டியே ந‌ட‌க்க‌ட்டும் காக்கா... என்னை மாதுரி பொன்புள‌புள்ளைய‌ பெத்து க‌ஷ்ட்ட‌ப‌டுர‌வ‌ங்க‌ வாழ்க்கையில‌ விமோச்ச‌ன‌ம் கிடைச்சா ச‌ரிதானகாக்கா...

ரிம் : அட நீ வேற‌ ந‌ம்ம‌ ந‌டுத்தெருவுல ஒரு ஊட்டுல‌ ஏக‌ப்ப‌ட்ட‌ பொம்புள‌ புள்ளைய‌ பெத்த‌வ‌ரு வெளி நாடு எதுவும் போவாமே அனைத்துபுள்லைக்கும் அழ‌கான‌ முர‌யில‌ க‌ல்யாண‌ம் ப‌ன்னிகொடுத்திருக்காரு... பாத்தியா எல்ல‌த்துக்கும் அல்லா ஈக்கிறான்.

அன்வர் : அட‌டே... ஆமாம் காக்கா நானும் கேள்விப‌ட்டேன்.ச‌ரிகாக்கா இரிங்க‌ எங்க‌ ரூமுக்கு வ‌ந்து ஈக்கிரிய‌ தேத்த‌ன்னி போட்டுவ‌ர்ரேன் குடிச்சிக்கிட்டே பேச‌லாம்...

ரிம் : என்ன‌ப்பா டீயில‌ பூண்டு வாடை வ‌ருது யான் கேக்குரிய...ப‌க‌லு எர‌ச்சி ஆக்க‌லாம்முனு இஞ்சி பூண்டை மிக்ஸியில‌ அரைச்சேன்... அதான் காக்கா ப‌ர‌வாயில்லை குடிங்க‌ வாயு க‌லையும்..

ச‌ரி ககாக்கா இப்போதான‌ ஊருக்குபோயிட்டு வ‌ன்திய‌ ந‌ம்மூரைப‌த்தி சொல்லுங்க‌..காக்கா.

அன்வர் : நான் எங்கேயும் போக‌ல‌ப்பா சாய‌ங்காலாம் நேர‌த்துல‌ காலேஜ் ப‌க்க‌ம் போர‌துதான்.

ரிம் : ச‌ரி ந‌ம்ம‌ காலேஜ் ப‌த்தி சொல்லுங்ககாக்கா....

அன்வர் : அது பாட்டுக்கு ஒருப‌க்க‌ம் ந‌ட‌க்குது.. ந‌மமூர் புள்ளை ஓ ப‌டிக்கிற‌து கொஞ்ச‌ம்தான் வெளியூர்புள்ளையிஓ தான் நெரைய‌ ப‌டிக்கிதுஓ ஆனா ந‌ம்மூர் புள்ளைக‌ல் திருச்சி மெட்ராஸ்ன்னு போய்தான் ப‌டிக்கிதுங்க‌.

ரிம் : அதுக்கு என்ன‌ காக்கா கார‌ண‌ம்?

அன்வர் : அட‌ போப்பா.. ந‌ம்மூர் காலேஜ்ல‌ சீட் கேட்டாக்கா ஏக‌ப்ப‌ட்ட‌ காசுகேக்குறாங்க‌ளாம்.ச‌ரி அப்ப‌டியே குடுத்தாலும் த‌ர‌மான‌ ப‌டிப்பு கெட‌க்க‌லே ரென்டாவ‌தா இங்கிலிஸ்...ம்ஹூம் உப்புக்கு கூட‌ வ‌ர‌மாடேங்கிற‌து.அதுவுமில்லாம‌ல் வ‌ளாக‌த்தேர்வு என்ப‌தேகிடையாது...இப்புடி ஈக்கிது ந‌ம்ம‌ காலேஜ் நெல‌ம‌...

ரிம் : ஆமா காக்கா அவ‌ங்க‌ சொத்து பிர‌ச்ச‌னையில‌ அடிச்சிகிட்டு இதை கோட்டை விட்டுடுறாங்க‌.
அதுனால‌ ப‌ன‌த்த‌கொடுத்து ப‌ல‌ன் இல்லைங்கிர‌த‌ ந‌ல்லாவே புரிஞ்சிகிட்டாங்க‌...

அன்வர் : இருருந்தாலும் ந‌ம்மூர்காலேஜ் அதை பால‌க்க‌ கூடாது அங்க‌ த‌ர‌மான‌ க‌ல்வி கிடைக்க‌ ந‌ம்மூர் புள்ளைங்க‌ முய‌ற்ச்சி எடுத்து உரிய‌வ‌ர்க‌ளிட‌ம் முர‌யிட்டால் ந‌ல்ல‌து தானே.. என்ன‌ சொல்லுரிய‌? அதோட‌ இங்கிலிஸ் பேச‌வும் ப‌யிற்ச்சி கொடுக்க‌ சொல்ல‌னும்...

ரிம் : ஆமா சரியா சொன்னாப்பா... நான் போன‌ ச‌புர் போயிட்டு திரும்பும்போது ஏர்போர்ட்ல‌ ஒரு பைய‌ன் என்ட்ட‌ வ‌ந்து இமிக்கிரேஷ‌ன் ஃப‌ர்ம் ஃபுல்ல் ப‌ன்ன‌ சொல்லி பேனாவையும் ஃபாமையும் நீட்டினான் ச‌ரின்டு நிர‌ப்ப த‌யார‌கியபோது அவ‌ன‌து பாஸ்போட்டு அட்ர‌ஸ் ந‌ம்மூரு அட்ர‌ஸ்... ச‌ரின்ன்டு ஏம்ப்பா நீ என்னா ப‌டிச்சிருக்கா? என கேட்ட‌போது ஆடிபோயிட்டேன்...கார‌ன‌ம் அவ‌ன் ந‌ம்ம‌ காலெஜ்ல‌ BBA‌டிச்சிருக்கான் அந்த‌ அள‌வுக்கு ஈக்கிது ந‌ம்ம‌ காலேஜ்..

அன்வர் : அதுக்கு இப்போ என்ன‌ காக்கா செய்யுர‌து?

ரிம் : ந‌ம்ம‌புள்ளைங்க‌ தான் அங்க‌ நம‌து கோரிக்கையை எடுத்து சொல்ல‌னும்.
ச‌ரி அன்வ‌ரு நாளைக்கு டூட்டி ஈக்கிது இன்ஷா அல்லா அடுத்த‌ வார‌ம் வ‌ர்ரேன்... ச‌ரியா பாத்து போ.

உளவு கேமராக்கள்!

அதிநவீன உளவு கேமராக்கள் !
இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான பேனா, சாவிகொத்து, மூக்கு கண்ணாடி, கைக்கடிகாரம், சட்டை புத்தான், சுவரில் இருக்கும் ஆணி, மின்சார பிளக், chewing gum என எதிலெல்லாமோ இன்று கேமரா வந்துவிட்டது. இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்றாலும் கூட இதனால் நிறைய பாதிப்புகளும் உண்டு. எதுக்கும் கள்ளக்காதல், லஞ்சம், ஊழல்பேர்வளிகள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. ஆக நம்மை யார், எங்கு கண்காணிக்கிறார்கள் அல்லது படம் பிடிக்கிறார்கள், என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நிலைமையுள்ளது.

கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது.

அடுத்ததாக பேனா, நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. இந்த வகை கேமரா கையில் இருந்தால் யாராவது சந்தேகப்படுவார்களா?

அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.

கீழேயுள்ளது பார்ப்பதற்கு கார் சாவிகொத்து போல தெரியும். அதனுள்ளும் அதி நவீன கேமரா இருக்கிறது. காரில் பயணம் செயும்போதும்கூட கவனம் தேவை.

இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.

இது நம் சட்டையின் புத்தானை போலவே இருக்கும். சட்டைபையில் போட்டிருக்கும் கருவிக்கும் இதற்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த கமெராதான்.

இதைப்பாருங்கள் சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும். அதனுள்ளும் கேமரா.

இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமெராக்களை கண்டு பிடிக்கும் கருவியும் உள்ளது. ஆனால், அதன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு செயல்படும் காமெராக்கள் நிறைய உண்டு. நாம் இனி எங்கேயும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை!எனவே கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இது காலத்தின் கட்டாயம்.லண்டனில் போலீஸ்காரர்கள் மற்றும் கார் பார்க் செய்வதை கண்காணிப்பவர்கள், தங்கள் தொப்பியில் நவீன சிறிய காமெராவை பொருத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த உம்முஹானி அம்மாள் அவர்கள் காலமாகிவிட்டார்கள்.அன்னார் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மனைவியும்,முஹம்மத் ஆபித்தின் (அல் குறைன் சூப்பர் மார்கெட் - குவைத்) தாயும்,செய்யது முஹம்மத் புகாரியின் மாமியாரும் ஆவார்கள்.

இன்னாளில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.

மரண அறிவிப்பு

பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் மீராசாஹிப் அவர்களின் மகனாரும் மக்கம் என்ற தமீமுல் அன்சாரி, பாஷா ஆகியோரின் தகப்பனாரும் ஹாஜி முஹம்மது, அபுல் ஹசன் ஷாதுலி ஆகியோரின் மாமனாருமாகிய த.மீ. ஹாஜா முகைதீன் அவர்கள் மௌத்தாகிவிட்டர்கள்,

இன்னாளில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
 
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.
   

தகவல் : மக்கம் என்ற தமீமுல் அன்சாரி, லண்டன் UK 

thanks  
http://adiraipost.blogspot.com/

நீங்கள் உங்கள் குழந்தைகளுடன்

இப்பொழுதெல்லாம் நகரங்களில் பெரும்பாலும் குடியிருப்புகள் அபார்ட்மென்ட்ஸ் எனப்படும் அடுக்கு மாடிகளிலேதான் அமைகின்றன. அதில் வாழும் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிப்பது இல்லை.

இதற்கு பாதுகாப்பு மற்றும் சில சூழ்நிலைகள் காரணங்களாகின்றன. அந்த குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தை இருக்கலாம். மேலும் அக்கம் பக்கத்து வீடுகளில் சரியான பழக்கம் இல்லாத காரணத்தினால் மற்றவர்களின் குழந்தைகளோடு விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.இத்தகைய சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகள் சரியான காற்றோற்றம் மற்றும் சூரிய வெளிச்சம் தங்களின் உடலில் படாமல் சிலவித உடல் கோளாறுகளினால் பாதிக்கப் படுகிறார்கள்.

போதிய சூரிய வெளிச்சம் அவர்களின் உடலில் படாததால் வைட்டமின் - டி குறைவு ஏற்படுகிறது. இதனால் அபார்ட்மென்ட்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் ஒரு வகையான நோயால் பாதிக்கப் படுகிறார்கள். இந்நோய் முடி வளர்ச்சி
, தோல் குறைபாடு மற்றும் சில பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.குழந்தைகள் மட்டுமல்ல, பெரியோர்கள் கூட நகரங்களில் அதிகாலையிலேயே அலுவலம் சென்று, உணவு, குடிநீர் மற்றும் அனைத்து தேவைகளையும் தங்கள் அலுவலகங்களிலேயே முடித்து கொண்டு இரவு வீடு திரும்புகிறார்கள்.

இதில் எங்கே அவர்களுக்கு போதிய வைட்டமின் - டி
, சூரிய ஒளியினால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது? நமது உடலுக்கு தேவையான வைட்டமின் - டி, இலவசமாகவும், பெருமளவும் கிடைக்கக் கூடிய ஒரே ஆதாரம் சூரிய ஒளி மட்டுமே.எனவே பெற்றோர்களே! தினமும் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வெளியே சென்று சூரிய ஒளியினால் கிடைக்கும் மகத்தான வைட்டமின் - டி யை பெற தவறாதீர்கள்.

எவ்வளவுக்கெவளவு நாம் இயற்கையை விட்டு விலகுகிறோமோ அவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூடிய மட்டும் இயற்கையோடு ஒத்து வாழ்ந்து நலமுடன் வாழ முயற்சிப்போம்.

லண்டன் தமிழ்சங்க மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பற்றி ஒரு கோரிக்கை சொற்பொழிவு!


சனி, 24 ஏப்ரல், 2010

1)இந்திய தமிழ் முஸ்லிம் நற்பணி சங்கம் என்னும் அமைப்பு பிரட்டனில் மிகவும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வருகிறது.
அதன் தலைவராக சகோ. Dr. M. அஹ்மது கபீர் அவர்கள் (அதிரை EPM SCHOOL முஹம்மத் அபுல் ஹசன் அவர்களின் மருமகன்) செயலாற்றி வருகிறார்கள்.

2)இலண்டன் தமிழ் சங்கத்தின் 50வது பொன்விழா 24/04/2010 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் இந்திய தமிழ் முஸ்லிம் நற்பணி சங்கம் சார்பாக அதன் தலைவர் Dr. M. அஹ்மது கபீர் அவர்கள் வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டுள்ளார்கள் என்னும் தகவல் அன்று காலை நமக்கு (அதிரை போஸ்ட்) கிடைத்தது!

3)உடனே இந்திய தமிழ் முஸ்லிம் நற்பணி சங்க தலைவர் Dr. M. அஹ்மது கபீர் அவர்களை தொடர்புக்கொண்டு "உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைவேண்டும்" என்று அதிரை சகோதரர்களும் உண்மையான தமிழ் ஆர்வளர்களும் முழுவீச்சில் வலைப்பூ,வலைத்தளம் உள்ளிட்ட பல முனைகளில் கருத்துரைப்பரப்பியும் சந்திப்பின் மூலமாகவும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில் தாங்கள் கலந்துக்கொள்ளும் மாநாட்டை பயன் படுத்திக்கொள்ள வேண்டும்" என அன்பு கோரிக்கை வைத்து "உமர்தம்பி"காக்கா அவர்களைப்பற்றிய செய்திகள், தகவல்கள் உள்ள வலைப்பூ, வலைத்தளம் சுட்டிகளை அவர்களின் பார்வைக்கு கொடுத்தோம்!

4)"உமர்தம்பி"காக்கா அவர்களைப்பற்றிய குறிப்புகளை தயார் செய்து; "உமர்தம்பி"காக்கா அவர்களைப்பற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட மாநாட்டில் மிகவும் அருமையான ஒரு சொற்​பொ​ழிவை நிகழ்த்தி "கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இலண்டன் தமிழ் சங்கம் தமிழக அரசுக்கு வைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இதனை அந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆமோதித்தனர்.அல்ஹம்துலில்லாஹ்!

5)இலண்டன் தமிழ் சங்கத்தின் விழா வழி ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடியாக சென்றடைந்த‌து மட்டுமின்றி அய்ரோப்பிய தமிழ் மக்களால் மிகவும் விரும்பி பார்க்கப்ப‌டும் "தீபம் தொலைக்காட்சி"யிலும் காட்டப்பட உள்ளது!

6)தீபம் தொலைக்காட்சியைத்தொடர்ந்து கும்பக்கோணம் பகுதி கேபிள் டிவிகளிலும் ஒளிபரப்பப்பட உள்ளது; அதன் வீடியோ பதிவை விரைவில் பெற்று உங்களின் பார்வைக்கும் தர முயன்று வருகிறேன்.இன்ஷா அல்லாஹ்!
நன்றி:அதிரைபோஸ்ட்

Saturday, April 24, 2010

அதிரையில் கலப்பட பொருட்கள் அழிப்பு

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப் பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டது.அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் டீத்தூள், மளிகைப் பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற் றில் கலப்படம் செய்யப் பட்டு விற்பதாக தகவல் கிடைத்தது.இதை ஒட்டி சுகாதார ஆய்வாளர்கள் பாம்பன், காசிநாதன், சந்திரசேகரன், கண்ணன், துப்புரவு பணியாளர் ஸ்ரீதரன் ஆகியோர் பேரூராட்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனையிட்டனர். அப்போது சந்தேகப் படும் படியாக உள்ள அனைத்து உணவுப் பொருட்களையும் கைப் பற்றி அழித்தனர்.

சுகாதாரக் கேடான உணவு விடுதி, குளிர்பானக் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அழுகிய பழங்கள் மற்றும் ஐ.எஸ். ஐ. முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகள் அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் வைத்து அழிக்கப் பட்டது. கலப்பட உணவுப் பொருள், ஈ மொய்க்கும் பண்டங்கள், திறந்த வெளியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள், தயாரிப்பு தேதி இல்லாத உணவுப் பொருட்கள், கடை லைசென்ஸ் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார துறை எச்சரித்து உள்ளது.

With Regards

M. Ayub Khan

கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன்.

இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது கல்வியே ஆகும். கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்க்குச்
சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான்.இதற்கு காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும், கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொருத்த வரை மிகவும் தாழ்வாகவும் இழிவாகவும் கருதப் படும். கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். (அதற்காக கற்றவர்கள் யாரும் போய் எந்த நாட்டிற்க்கும் சொந்தம் கொண்டாடதீர்கள்,விரட்டி அடிக்க படுவீர்கள்-சிரிப்பு )

மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான்.

ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப் படுகிறது.

கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று.ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை.

கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிற்து. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்க்காக உதவும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் கல்வியை பயன் படுத்த வேண்டும்.

ஒருவன் கல்வி கற்றால் எவ்வாறு சமூகத்தில் மதிக்கப் படுகின்றான் என்பதை உங்களுக்கு தெரிந்த உதாரணங்கள் & உங்களை சுற்றி இருப்பவர்கள் அடைந்த பலன்களில் இருந்து விளங்க முடியும், இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்ததோரக வாழ கல்வி உதவுகின்றது.

கற்க கசடறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக

சிந்தனை & தொகுப்பு: முகமது யாசிர்-துபை

மரண அறிவிப்பு,

மர்ஹூம் மரியம்மா குடும்ப மூத்த வாரிசு,தமிழ் வித்வான்,திருமறை திருக்குரானை அரபு மொழியிலேயே கையெழுத்துப் பிரதியாக எழுதிய,மர்ஹும் கட்டபிள்ளையார் முஹம்மத் தம்பி அவர்களின் காக்காவுமான -  முஹம்மத் ஸாலிஹ் மரைக்காயர் அவர்களின் மனைவி ஆமினா அம்மா அவர்கள் தங்கள் தொண்ணூறு வயதைக் கடந்த நிலையில் சி எம் பி லைன் வீட்டில் காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

அன்னார் அவர்கள் .மர்ஹும் முஹம்மத் இப்ராஹீம்,மர்ஹும் அப்துல் சலாம் ஆகியோர்களின் மாமியாருமாவார்கள்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கவும்,எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து - ஜன்னத்துல் பிர்தௌஸ் நல்கவும் துவா செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு
மரியம்மா,
கட்டபிள்ளையார்,
சுண்டைக்காய்
குடும்ப அனைத்து உறுப்பினர்கள்.

Friday, April 23, 2010

கல்வி! தேவை வெளிநாட்டு மோகம்

வெளிநாட்டு படிப்பும், வெளிநாட்டு வேலையும் தற்போது மிக அவசியமாகி விட்டது. அதிக ஊதியம் பெறவும், திறனை வளர்க்கவும், அங்கீகாரம் பெறவும் இது பயன் தருகிறது.

நம்மை விட பத்து மடங்கு குறைவான மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில், 4,000 பல்கலை உள்ளன.நம் நாட்டில் 350 பல்கலைக் கழகங்களே உள்ளன. தற்போது அரசு வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் துவங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இது நல்லதொரு வளர்ச்சியை கொடுக்கும்.

இந்தியாவில் இயங்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் வெளிநாட்டு பல்கலையில் பயின்றவர்களே. நமது பிரதமர் கூட வெளிநாட்டு பல்கலையில் படித்தவர் தான்.என்ன படிப்பு படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்பதை முதலிலேயே திட்டமிட வேண்டும். சரியாக திட்டமிடாமல், மேற்படிப்புக்கு வெளிநாடுகளுக்கு செல்பவர்களால் வெற்றியடைய முடிவதில்லை.

அமெரிக்காவில் படிக்க வேண்டுமானால் அதிகம் செலவாகும், அதிக காலம் பிடிக்கும்.மற்ற நாடுகளில் மருத்துவ படிப்புக்கும் மற்ற படிப்புகளுக்கும் ஒரே அளவு தொகையே பெறப்படுகிறது. நாம் செல்லும் நாடுகளின் பழக்க வழக்கம், கலாசாரம், பருவநிலை, உணவு ஆகியவற்றிற்கு ஏற்ப நாம்
தெரிந்துகொள்வது நல்லது.

இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே மாணவர்களே 

முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !

குடும்பத்தில் முதல் பட்டதாரியானமாணவர்கள்தொழிற்கல்வி பயிலும்போது , கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்' என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.


தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'

குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப் படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


40 சதவீதம் பேர் பயனடைவர்


சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப் பங்களில், மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியா என்ற விவரமும் கேட்கப்பட்டது.


அதன்படி, 40 சதவீத மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலிலும் 40 சதவீத மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. இதர தொழிற்கல்வி படிப்புகளிலும் இதே நிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேருபவர்களில் 40 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பர் என்றும், தமிழக அரசின் இச்சலுகை மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விவரம் ஆவணங்களுடன் கேட்கப்படுவதால், இந்த எண்ணிக்கை சற்று குறையவும் வாய்ப்புள்ளது.


Thursday, April 22, 2010

பட்டுக்கோட்டையில் ஐகோர்ட் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காசிநாதன்,வழக்கு சம்பந்தமாக இன்று பட்டுக்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் வந்த வேலையை முடித்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள தலையாரி தெருவில் சந்திரா மெஸ்சில் சாப்பிடச்சென்றார்.


சாப்பிட்டு வெளியே வந்த அவரை 30 பேர் கும்பல் சூழ்ந்துகொண்டு தாக்கியது. உருட்டுக் கட்டையால் அடித்ததோடு அல்லாமல் அரிவாள் கொண்டு அவரை தலையில் வெட்டி விட்டு ஓடிவிட்டது கும்பல்.

தலையில் பலத்த வெட்டுப்பட்ட காசிநாதன் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


நேற்று விசைப்படகு உரிமையாளர் மனைவியை கொன்று கொள்ளையடித்து சென்ற பரபரப்பு அடங்குவதற்குள் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளதால் பட்டுக்கோட்டையில் பதட்டம் நிலவுகிறது.

நன்றி: நக்கீரன்

இன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்

கல்வி
கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது.

கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன.

இதுபோன்ற செயல்களில் கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது.

இது கல்வியின் மேலுள்ள குற்றமா? கல்வி கற்றவர்கள் மேலுள்ள குற்றமா?

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை – வருங்கால சமுதாயத்தை வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்.

தீர்வு என்ன?
தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகவும் அமைந்து விடலாம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை – டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வியை மட்டுமே கருத்தில் கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்.

நெறிசார்ந்த கல்வி
எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர் களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அரிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர் களாக நாட்டின் நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர் களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்.

இஸ்லாமிய மாதிரிப் பள்ளி
மேற்சொன்ன கருத்துகள் வெறும் பேச்சுகள் அல்லது ஆலோசனைகள் மட்டும் அல்ல. செயல்வடிவங்கள். இது போன்ற எண்ணங்கள் ஏக்கங்களுடன் 1993 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் – திருவிதாங்கோடு எனும் ஊரில் இஸ்லாமிய மாதிரிப் பள்ளி (Islamic Model School) எனும் மெட்ரிக்குலேஷன் பள்ளியை ஒரு சோதனைக்காக ஆரம்பித்தோம். இன்று இறைவன் அருளால் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ – மாணவியருடன் சுமார் 60 ஆசிரியை களையும் கொண்ட ஒரு சிறந்த பள்ளியாக அது திகழ்கிறது. மாணவ – மாணவிகளுக்கு சிறப்பானதொரு அடித்தளத்தினை பாலர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை அமைத்துக் கொடுத்ததால் கல்வித் தரத்தில் சிறந்தவர்களாக கல்வி மாவட்டத்தின் 1வது 2வது மற்றும் 3வது இடங்களையும் அரசு மெட்ரிக் தேர்வில் ஒருங்கே பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தனர். வெறும் மதிப்பெண்களுடன் மட்டும் நின்று விடாது கலை, விளையாட்டுப்போட்டிகள், பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி – வினா போன்ற திறனாய்வுப் போட்டிகளிலும் மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளையும் மாநில அளவில் பரிசுகளையும் பெற்றனர். இவற்றைப் பெருமையாக பறைசாற்றவில்லை. ஏன் என்றால் இன்னும் பல பள்ளிகளும் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்தி யிருக்கலாம். ஆனால் இங்கு 10 ஆம் வகுப்பு படித்து விட்டு வெளியே சென்ற மாணவர்களில் சிலர் பட்டங்கள் பெற்று பதவிகளில் உள்ளார்கள். இன்னும் பலர் பல்வேறு கல்லூரி களில் உயர்கல்வி கற்று வருகிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் நல்ல மாணவர்கள் என்று பலராலும் பாராட்டப்படுகிறார்கள். அதற்குக் காரணம் இந்தப் பள்ளியில் அவர்கள் நல்ல மாணவர்களாக வளர்க்கப்பட்டதுதான். மாணவ – மாணவிகள் அனைவருமே மது – போதை, வட்டி – வரதட்சணை, லஞ்சம், ஏமாற்று, திருட்டு போன்ற எந்த தீமைகளின் பக்கமும் செல்லாதவர்களாகவும், வன்முறை, பொதுச் சொத்துக்களுக்குத் தீங்கிழைத்தல் போன்றவற்றில் ஈடுபடாத பண்பாளர்களாகவும் விளங்கு கிறார்கள்.

இவர்களைப் போன்ற மாணவர்களை எல்லா பள்ளிக் கூடங்களுமே உருவாக்கி விட்டால் நிச்சயமாக இன்னும் குறுகிய காலத்தில் மகத்தானதொரு மறுமலர்ச்சியை எதிர் பார்க்கலாம்.

அவர்களை நன்மக்களாக வளர்க்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை நினைவில் கொண்டு நல்ல கல்வி நிலையத்தில் அவர்களை சேர்ப்பதைக் கடமையாகக் கொள்ளுங்க

ஆக்கம் : வழக்கறிஞர் உதுமான் மைதீன் –முதுகுளத்துர்.காம்

சுருக்கம் : முகமது யாசிர்

பள்ளி செல்லும் குழந்தைகளில் கற்றலில் உள்ள இயலாமையை கண்டறிய...

1.கண்காணிக்கப்படாத நிலையில், கொடுக்கப்பட்ட வேலையில் அக்குழந்தைக்கு தொடர்ந்து கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளதா?

2. கண்காணிக்கப்படாத நிலையில் கொடுக்கப்பட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பதில் அக்குழந்தைக்கு சிரமம் உள்ளதா?

3.புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்கும்போது சில வார்த்தைகள் மற்றும் எழுத்துக்களை அக்குழந்தை படிக்காமல் விட்டுவிடுகிறதா?


4.வரிசையில் உள்ள வார்த்தைகளை தொடர்வதில் குழந்தைக்கு சிரமம் உள்ளதா?

5. வடிவம், வண்ணம் அல்லது அளவை வைத்து பொருட்களை பிரிப்பது, பள்ளிக்கு எடுத்துச்செல்லும் பையில் புத்தகங்களை அடுக்குவது, ஆடைகளை அலமாரிகளில் அடுக்குவது போன்ற ஒருங்கமைப்பு செயல்களை செய்வதில் குழந்தைக்கு சிரமம் உள்ளதா?

6.கரும்பலகையில் எழுதப்பட்டவைகளை ஒரு எழுத்தோ அல்லது வார்தையோ விடாமல் நோட்டுப்புத்தகத்தில் எழுதுவதில் சிரமம் உள்ளதா?

7.எண்களுக்கு இடையேயான உறவுகளை/ தொடர்புகளை புரிந்துகொள்வதிலும் மற்றும் கணிதத்தில் பயன் படுத்தப்படும் அடையாளக்குறிகளை பயன்படுத்துவதிலும் குழந்தைக்கு சிரமம் உள்ளதா?

8.”b” மற்றும் “d”, “p” மற்றும் “q”, “u” மற்றும் “n” போன்ற எழுத்துகள் மற்றும் “9” மற்றும் “6” போன்ற எண்களுக்கு உள்ள வித்தியாசத்தினை புரிந்து கொள்வதில் குழந்தைக்கு சிரமம் உள்ளதா?

9. குழந்தைக்கு நேர்க்கோடு வரைவது அல்லது வார்த்தை மற்றும் கோடுகளுக்கு இடையே சரியான இடைவெளி விடுவதில் சிரமம் உள்ளதா?

10. குழந்தைக்கு படிக்கும்போதோ அல்லது எழுதும்போதோ நிறுத்தக்குறியீடுகளை பயன்படித்துவதை புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளதா?

11. குழந்தைக்கு வார்ததை, எண்கள் மற்றும் வார்த்தை தொடர்கள் போன்றவற்றின் அர்த்தம் மற்றும் அவைகளுக்கிடையேயான உறவுகளை புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளதா?

12. குழந்தைக்கு ஒரு கதையிலிருந்தோ அல்லது ஒரு நிகழ்விலிருந்தோ கேள்விகள் கேட்கும்பொழுது குறிப்பிட்ட விளக்கத்தை தேர்வு செய்வதிலோ அல்லது விலக்குவதிலோ சிரமம் உள்ளதா?

13. குழந்தைக்கு ஒரு பொருளை கண்டறிய வழிகளை சொல்லும் போது, அப்பொருள் எங்கு உள்ளது என்பதை கண்டறிவதில் சிரமம் உள்ளதா? உ-ம் மேசையின் மேல் வலது பக்கத்தில் உள்ள மஞ்சள் நிற பையினை பார்க்கவும்.

14. குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணையோ அல்லது எழுத்தையோ கண்டறிவதில் சிரமம் உள்ளதா?

15. குழந்தைக்கு வீட்டிலோ/பள்ளியிலோ செய்யும் வேலையிலிருந்து அல்லது அக்கம்பக்கத்து வீட்டு குழந்தைகளோடு விளையாடும்போது மிக அதிகமான கவனச்சிதறல் உள்ளனவா?

16. குழந்தைக்கு தன் வயதினருடன் விளையாடும் விளையாட்டின் சட்டதிட்டங்களை கைகொள்வதில் சிரமம் உள்ளதா?
குறிப்பு : மேற்குறிய பிரச்சனைகள் உள்ள குழந்தைகளை உரிய நிபுனர்களிகளிடம் அழைத்து பயிர்ச்சியளிப்பது பெற்றோராகிய நமது கடமையாகும்..

படித்தால் மட்டும் போதுமா?

நமதூரில் ஆங்கிலவழி பள்ளிக்கூடங்கள் இருந்தபோதும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் அருகிலுள்ள லாரல் ஸ்கூலில் நம் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். கிறிஸ்தவ மேலாண்மையால் நடத்தப்படும் இப்பள்ளியில் நமதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாணாக்கர்கள் குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் கனிசமாகப் படிக்கிறார்கள்.

இதில் தரமான ஆங்கிலவழிப் படிப்பு என்பதைத்தவிர சொல்லிக்கொள்ளும் படியாக ஏனைய துறைகளில் மாணவர்கள் மிளிர்வதாகத் தெரியவில்லை. எனினும் நல்ல கல்வி வழங்கும் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் நம் மக்கள் லாரல் பள்ளியை நாடுகின்றனர்.

இங்கு படிக்கும் மாணாக்கர்களின் ஆங்கிலப் படிப்பை மட்டுமே கவனத்தில் கொள்கிறோமே தவிர வயதுவந்த ஆண்-பெண் இருபாலருக்கும் கடமையான தொழுகைகளைப் பற்றியும்,அதற்கான இடவசதியும் சூழலும் இப்பள்ளியில் உள்ளதா என்றெல்லாம் கவனித்தோமா? தங்கள் பிள்ளைகள் படிப்பில் ரேங்க் எடுக்கிறார்களா? என்று கண்ணில் எண்ணைவிட்டு கவனிக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் அந்தந்த வக்தில் தொழுகிறார்களா என்று கவனித்தோமா?

வெள்ளிக்கிழமையும் வகுப்பு நடக்கும் இப்பள்ளியில் படிக்கும் மாணாக்கர்கள் ஜும்ஆ தொழுகை தொழவேண்டும் என்ற கவலையில் நமதூர் பைத்துல்மால் முயற்சியால் தனவந்தர்களின் உதவியுடன் தோப்பில் தற்காலிகமாக தொழும் பள்ளி உண்டாக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் தோப்பின் உரிமையாளர் தற்போது பள்ளிக்கு இடம் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டதால் இதுவரை தொழுது வந்த மாணவர்கள் தற்போது தொழுமிடமின்றி முறையான தொழுகைகளைத் தொழமுடியவில்லை என்று தெரிகிறது.

அதிரைபைத்துல்மால் (தமாம் கிளை) சகோதரர்கள் இதுகுறித்து கவலையுடன் இவ்விசயத்தை அதிரை எக்ஸ்ப்ரஸிற்கு அனுப்பி, லாரலில் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தை தொழுகைக்கு இடம் ஒதுக்கவும் அதற்கான நேரம்ஒதுக்கவும் கோரிக்கைவைக்க வேண்டியுள்ளனர். அவ்வகையில் தங்கள் பிள்ளைகளின் ஈருலக வாழ்க்கையும் வெற்றியடைய பெற்றோர்களும் குழுவாக பள்ளி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்தால், அவர்களும் நிச்சயம் இதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று நம்புகிறோம்.

பள்ளி நிர்வாகத்திடமிருந்து எதிர்மறையான கருத்து அல்லது சாதகமற்ற பதில் தரப்படும் பட்சத்தில் அதிரை எக்ஸ்ப்ரஸில் கருத்துக்களாகப் பகிர்ந்து கொள்வதன்மூலம் மாற்றுவழிகள் குறித்தும் ஆலோசிக்கலாம். எனவே, தங்கள் பிள்ளைகளின் நன்மையைக் கருதி பெற்றோர்கள் இதற்கான நடவடிக்கையை உடனடியாகச் செய்வதோடு, இதுகுறித்த முன்னெடுப்பு நடவடிக்கைகளை நமது தளத்தில் அப்டேட் செய்யவும் உதவுங்கள்.

இளம்பெண்ணைக் கொன்று 60 பவுன் நகை கொள்ளை

பட்டுக்கோட்டை ரயில்வேகேட் அருகே விசைப்படகு உரிமையாளர் ஆறுமுகத்தின் வீடு உள்ளது. நேற்று பகல் 12.30 மணிக்கு ஆறுமுகத்தின் மனைவி அகல்யா(25) மட்டும் வீட்டில் இருந்தார்.

அப்போது பைக்கில்வந்த மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் நுழைந்து அகல்யாவை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 60பவுன் நகைகள் மற்றும் பல லட்ச ரூபாய்களை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டனர்.

மதியம் 3மணிக்குத்தான் அகல்யா கொலை செய்யப்பட்டிருப்பதும், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பட்டுக்கோட்டை போலீசார் கொலையாளிகளைத்தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையால் பட்டுக்கோட்டை முழுவதும் பரபரப்பு நிலவுகிறது

நன்றி: நக்கீரன்
***********
கோடைக்காலம் வந்துவிட்டது. கர்நாடகம் காவிரித் தண்ணிர் கொடுக்காததால் விவசாயம் வேலைவாய்ப்புகள் குறையும். வறுமை சாமான்ய மனிதரையும் சமூகவிரோதியாக மாற்றும். இதனால் திருட்டு வழிப்பறி அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு வசதியாக மின்வெட்டும் இருப்பதால் பொதுமக்கள் சமூகவிரோதிகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அதிரை எக்ஸ்ப்ரஸ்-

Wednesday, April 21, 2010

ச்சீயா?...போப்பா எங்களுத்தான் சூடு சொரனை இல்லையே, அடுத்த நிதியமைச்சரும் அவர்தான்

எங்கட வீட்டுலயே வந்து பே*டாலும் நாங்க அவருத்தான் குத்துவோம். பள்ளிக்கூட வாசலில் இருந்தால் என்ன? பள்ளிவாசல் அருகில் இருந்தால் என்ன?

கஞ்சி குடித்து குள்ளா போடும் அற்புதக் காட்சி. கஞ்சி குடித்த கடனுக்காவேனும் குறை தீர்ப்பாரா நிதியமைச்சர் அன்பழகன்?

மரண அறிவிப்பு

புதுமனைத் தெருவைச்சேர்ந்த மரைக்காயர் வீட்டு   செய்யது அஹமத் அவர்கள் காலமாகிவிட்டார்கள்.அன்னார் மர்ஹும்  அஹமத் ஜுபைர் அவர்களின் மனைவியும்,தாஹிர், அப்துல் அஹத்,முஹம்மத் ஷபீக் ஆகியோரின் தாயும்,அப்துல் ஜலீல் அவர்களின் மாமியாருமாவர்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி  ராஜிவூன்


"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.அன்னாரின் மறு உலக நற் பேறுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக.ஆமீன்.
Tuesday, April 20, 2010

370 வயதாகும் சென்னை- மதராஸ்-மதரசா பட்டண‌ம். வரலாறு


மதரசா பட்டண‌ம் – மதராஸ் - சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்கள் - ஆற்காடு நவாப்.. சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி. புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.
சென்னை: மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி.
13வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனராம். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.அதில், 13வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார். போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.மதரசா பட்டனம் என்பதுதான் உருமாறி மதராஸ் என்று வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. சைதாப்பேட்டை ஆன சைதாபாத்...அதேபோல இன்று அழைக்கப்படும் சைதாப்பேட்டை முன்பு சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்கு கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவ பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர்.உதாரணத்திற்கு, முஸ்லீம் மன்னர்கள் இந்துக்களை உயர் அதிகாரிகளாக வைத்திருந்தனர். விஜய நகர மன்னர்கள், முஸ்லீம்களை உயர் பதவிகளில் வைத்திருந்தனர்.இந்தியாவின் ஆத்மாவாக அப்போதே மதச்சார்பின்மை இருந்து வந்துள்ளது. அப்போது அனைத்து மதத்தினரும் சம உரிமைகளுடன், சம அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.ஆற்காடு நவாப் வம்சத்தினர் ஏராளமான கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் பெருமளவில் நிலங்களை, நிதியை தானமாக அளித்துள்ளதே நல்லிணக்கத்திற்கு நல்ல சான்றாகும்.இவையெல்லாம் நமது நாட்டின் அருமையான மத நல்லிணக்கத்திற்கு சான்றுகள் ஆகும் என்றனர்.THANKS TO: http://srivaimakkal.blogspot.com/2009/08/blog-
நன்றி: இளையான்குடி
அதிரை M. அல்மாஸ்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா? என்ற ஏக்கம் கொண்ட கேள்வியுடன் அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி ஒன்று கடந்த ஏப்ரல் 5ம் தேதி சகோதரர் அதிரைகாரன் அவர்கள் வலைப்பூவில் http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html வெளிவந்தது, என் பார்வையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தான் பட்டது, அவருடைய அனுமதியுடன் என் வலைப்பூவில் http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html
பிறகு நம் சகோதரர் இர்ஷாத்தின் வலைத்தளத்தில் http://bluehillstree.blogspot.com/2010/04/blog-post_17.html  பதியப்பட்டது. இன்று சகோதரர் இர்ஷாத்தின் வலைப்பூ செய்தி யூத் விகடன் இணையத்தளத்தில் http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp முதல் பக்கத்தில் குட் பிளாக்ஸ் பகுதியில் 4ம் இடத்தை பிடித்து ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மற்ற தமிழ் சகோதரர்களின் வலைப்பூக்களிலும் இந்த செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. சகோதரர் அதிரைகாரன் அவர்களின் கட்டுரை பின்னோட்டத்தில் கூறிய “சிறு துளி பெருவெள்ளம்” போல் இன்று இணையத் தமிழர்களிடம் இந்த கட்டுரை நல்ல வரவேற்பை பெற்று அதிரை உமர்தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்கும் முயற்சிகள் முழுவீச்சில் வெற்றி நடைப்போட்டு வருகிறது. நானும் என்னால் முடிந்த வரை நிறைய வலைப்பூக்களில் பின்னோட்டமிட்டு, ஈமெயில்கள் மூலமும் இந்த செய்தியை தமிழ் இணைய மக்களிடம் தெரியப்படுத்தி வருகிறேன், நல்ல பதில்களும் வந்த வண்ணம் உள்ளது. அதிரைவாசிகளின் செய்தி உடகம் அதிரைஎக்ஸ்பிரஸின் வாசகர்களும் இதில் அக்கரை எடுத்து, தாங்கள் ஒவ்வொருவரும் தங்களின் வலைப்பூக்களில் அதிரை புதல்வர் உமர்தம்பி அவர்களுக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்க ஆதரவு கட்டுரைகள் எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன். சகோதரர் இர்ஷாத்தின் வலைப்பூ அதிக தமிழ்மக்களிடம் சென்றடைவதை போல் உங்கள் வலைத்தளங்களும், உங்கள் நண்பர்கள் வலைதளங்களும் சென்றடையும் என்ற நம்பிக்கையில் தான் இந்த தூண்டுதல் கட்டுரை. முடிந்தவரை தமிழார்வமுள்ள தமிழ் நேஞ்சங்களுக்கு ஈமெயில் மூலம் தெரியப்படுத்தலாம்.


யூனிகோட் உமர், தேனீ உமர் என்று இணையத் தமிழ் ஆர்வளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த அதிரை உமர்தம்பி அவர்களை பற்றிய செய்தி நம் சகோதரர்கள் வலைப்பூக்களிலும், சில தமிழ் ஆர்வளர்களின் வலைப்பூக்களிலும் வெளிவந்து தற்சமையம் தமிழ் இணைய மக்களிடம் மீண்டும் ஞாபப்படுத்திவருகிறது.

இந்த முயற்சிக்கு முக்கிய காரணமாக இருந்த சகோதரர் அதிரைக்காரன் அவர்களுக்கும், இந்த முயற்சியை அதிக வாசகர்களிடன் சென்றடைய செய்துவரும் சகோதரர் இர்ஷாத் அவர்களுக்கும் மற்ற முயற்சிகள் செய்துவரும் அனைத்து சகோதரர்களுக்கும், உமர்தம்பி அவர்களின் குடும்பத்தில் ஒருவன் என்ற முறையில் எங்களுடை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கணினித்துறையில் தமிழுக்காக பல சேவை செய்த ஒரு இஸ்லாமிய தமிழருக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறிய அங்கீகார கிடைப்பதற்காகத்தான் இந்த ஒரு முயற்சி (campaign).

நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம், கண்டிப்பாக அதிரை உமர்தம்பி அவர்களுக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறிய அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நாலுக்கு நாள் வரும் நல்ல செய்திகளில் அறிய முடிகிறது.

இம்முயற்சி வெற்றியடைய படைத்த இறைவனிடம் பிராத்தனை செய்தவனாக விடைபெறுகிறேன்.

அதிரை தாஜூதீன்.

படத்தைப் பார்! பாடம் படி!!

நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சல்! மலைக்க வைத்த புகைப்படங்கள்! "யாம் பெற்ற மலைப்பு பெறுக இவ்வையகம்". படத்துக்கேற்ற 'நச்' அல்லது 'பஞ்ச்' டயலாக்கை பின்னூட்டத்தில் போடலாமே!சிறந்த பின்னூட்டத்திற்கு "யானை சவாரி" பரிசு! (இந்த யானை மட்டுமே! :-)))

மரண அறிவிப்பு


சி எம் பி லைனை சேர்ந்த காதர் மரியம் அவர்கள் இன்று காலை(இந்திய் நேரம்)  இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி  ராஜிவூன்.மறைந்த மர்ஹுமா அவர்கள் மர்ஹூம் அப்துல் ஹமீத் அவர்களின் மனைவியும்,சம்சுதீன்,ஜாபர்,அன்வர் ஆகியோரின் தாயாரும் ஆவார்கள்.


"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.அன்னாரின் மறு உலக நற் பேறுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக.ஆமீன்.

மரண அறிவிப்பு

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மகனாரும் அப்துல் மஜீத், ஜைனுல் ஆபிதீன், ஷேக் ஆகியோரின் தகப்பனாருமாகிய பஷீர் அஹ்மத் அவர்கள் வெள்ளிகிழமை (16/04/2010) மௌத்தாகிவிட்டர்கள், இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.

thanks 
http://adiraipost.blogspot.com/

Monday, April 19, 2010

என்ன ஆச்சு நம் இளைய சமுதாயத்துக்கு?

தமிழர்களாகிய நாம் எதில் குறைந்துவிட்டோம்? ஏன் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறோம்? ஏன் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது நமக்கு வேப்பங்காயாக இருக்கிறது? ஏன் நமது குழந்தைகளை ஒரு என்ஜினீயராகவோ, ஒரு டாக்டராகவோ ஆக்கவேண்டும் என்று மட்டுமே நினைக்கிறோம்? ஏன் ஒரு தொழிலதிபராக ஆக்க நினைப்பதில்லை? ஆழமாக யோசித்துப் பார்த்ததில் பல விஷயங்கள் புரிந்தது.

பெரும்பாலான தமிழர்கள் அலுவலக வேலைக்குச் செல்வதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும் தனியார் துறை வேலை வேண்டாம், அரசாங்க வேலைதான் வேண்டும் என்கிறவர்கள் பலர். கொஞ்சநஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொழில் தொடங்கப் போகிறார் என்றால், ஏதேதோ சொல்லி அவரைப் பயமுறுத்தி பின்வாங்கச் செய்துவிடுவது நம் இயல்பாக மாறிவிட்டது.

'தமிழகத்திலிருந்து எந்தத் தொழிலதிபரும் உருவாகவில்லை. யாருமே 'ரிஸ்க்' எடுக்கத் தயாராக இல்லை' என்று நான் சொல்லவில்லை. ஆனால் சொந்தமாகத் தொழில் தொடங்கி பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற சிந்தனை நம்மை விட்டுச் சென்று பல காலமாகிவிட்டது. நம் தாத்தாக்கள் டி.வி.எஸ்., சிம்சன் போன்ற பல மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கினார்கள். காரணம், பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற வெறி அவர்களிடம் இருந்தது. சிறிய அளவில்தான் அவர்கள் தொழிலைத் தொடங்கினாலும் 'Think Big'' என்கிற மந்திர வார்த்தையை மட்டும் அவர்கள் மறக்கவேயில்லை. ஆனால் இன்று...?
தொழில் செய்வது என்பது வடநாட்டினருக்கே உரித்தான ஒன்று என்றாகிவிட்டது. இன்றைய தேதியில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு தொழிலதிபர் போகிறார் என்றால், அவர் வடஇந்தியாவில் பிறந்து வளர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். காரணம், அமெரிக்காவில் உள்ள மோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல்கள். அந்தத் தொழிலில் மட்டுமல்ல, உலக வைர வியாபாரத்திலும் குஜராத்காரர்களே கொடிகட்டிப் பறக்கிறார்கள். வைர வியாபாரத்தில் ஆம்ஸ்டர்டேமில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருந்த யூதர்களையே வேலைக்கு அமர்த்தி தொழில் செய்கின்றனர் குஜராத்காரர்கள். அவ்வளவு ஏன்? நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்கூட சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் வெறியோடு செயல்படுகிறார்கள். அதனால்தான் இன்று ஐ.டி. துறையில் நம்மையும் விஞ்சி நிற்க ஆந்திராவினால் முடிகிறது. ஆனால் உலகம் முழுக்க ஐ.டி. துறையின் மூளையாக இருப்பது தமிழனின் மூளைதான். அந்த மூளை சம்பளத்துக்குத்தான் வேலை செய்வேன் என்கிறதே ஒழிய, சுயமாகத் தொழில் தொடங்க மறுக்கிறது.

என்ன காரணம்? நல்ல கல்வியறிவு, வளம், கலாசாரம் என அவர்களிடம் இல்லாத பல விஷயங்கள் நம்மிடம் இருந்தும், அவர்களிடம் இருக்கும் முக்கியமான விஷயமொன்று நம்மிடம் இல்லை - அதுதான் துணிச்சல். அதாவது, 'ரிஸ்க்' எடுக்கும் திறன்தான் நம்மிடம் குறைவாக உள்ளது. நம்மில் பலர் 'ரிஸ்க்' என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் பின்வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏன் இந்தத் தயக்கம்? எதில்தான் இல்லை 'ரிஸ்க்'? வாகனம் ஓட்டும்போது, பயணம் செய்யும்போது... எல்லாவற்றிலும் 'ரிஸ்க்' இல்லாமல் இல்லை. இதற்காக நாம் வண்டி ஓட்டாமல் இருக்கிறோமா, இல்லை விமானத்தில்தான் பறக்காமல் இருக்கிறோமா? நல்ல வாகனத்தை, நல்ல சாலையைத் தேர்வு செய்து ஜாக்கிரதையாக பயணம் செய்கிற மாதிரி, தொழிலைத் தொடங்கி நடத்தும்போதும் ஒரு பாதுகாப்பான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளலாமே!
இப்படி ஒரு அணுகுமுறை நமக்குள் ஏற்படாததற்கு என்ன காரணம்? நம் பெற்றோர்கள்தான். ஒரு தமிழ்த்தாய் தன் குழந்தையை கீழே விழ அனுமதிக்கமாட்டாள். தப்பித் தவறி குழந்தை விழுந்தால் போதும், அலறி அடித்துக்கொண்டு ஓடிப் போய் குழந்தையைத் தூக்குவாள். அவள் ஓடி வருவதைப் பார்த்து அழ நினைக்காத குழந்தைகூட அழ ஆரம்பித்துவிடும். அந்தச் சிறுவயது முதலே 'ரிஸ்க்' எடுக்கும் திறனை நாம் குறைத்துவிடுகிறோம். நம்மில் பாதிப் பேருக்கு மேல் நீச்சல் தெரியாது. தண்ணீர் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆனால் ஜப்பானில் மூன்றே மாதக் குழந்தையை தண்ணீரில் மிதக்கவிடுகிறார்கள். அந்தக் குழந்தை தவழ்வதற்கு முன்பே மிதக்கக் கற்றுக் கொள்கிறது. நடப்பதற்கு முன்பு நீந்தக் கற்றுக் கொள்கிறது. டன் கணக்கில் எடை கொண்ட யானையே நீச்சல் அடிக்கும்போது மனிதன் நினைத்தால் முடியாதா என்ன? ஆனால், நம்மால் நீந்தமுடியாது என்கிற எண்ணம் நம் மனதில் ஆழமாக விழுந்துவிட்டது. எனவேதான் நம் குழந்தைகளை தண்ணீர் பக்கமே நாம் அனுமதிப்பதில்லை.

குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகாவது அவர்களை ஒரு முடிவெடுக்க அனுமதிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. 17 வயதான மகன் அல்லது மகள் என்ன படிக்கவேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல வழிகாட்டியாக, நல்ல முன்னோடியாக, நல்ல நண்பர்களாக இருந்தாலே போதும்; அவர்களுக்காக நீங்கள் முடிவு செய்யத் தேவையில்லை. அவன் குழந்தை, அவனுக்கு என்ன தெரியும் என்று அவர்களுக்காக நீங்கள் முடிவெடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் பின்நாட்களில் அவர்களால் எந்தப் பிரச்னையிலும் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாது.

கோபி பிரயன்ட் (Kobe Bryant) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப் பந்து வீரர். அவருக்கு 17 வயது ஆனபோது கல்லூரிக்குச் செல்வதா தேசிய கூடைப்பந்து சங்கத்தின் குழுவில் சேர்ந்து விளையாடுவதா என்கிற குழப்பம் வந்தது. என்ன முடிவெடுப்பது என்று தன் அப்பாவிடம் கேட்டார் கோபி. 'நீயே முடிவெடு' என்றுதான் அவர் சொன்னாரே ஒழிய, கோபிக்காக அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கல்லூரிப் படிப்பு வேண்டாம்; கூடைப்பந்துதான் வேண்டும் என்று கோபி சுயமாக யோசித்து முடிவெடுத்ததால் முழுமையாக தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது. இன்று உலகில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுக்கு அந்த விளையாட்டில் முன்னணி வீரராக இருக்கும் அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ 100 கோடிக்கு மேல்!
'ரிஸ்க்'கைக் கண்டு நாம் தொடை நடுங்க என்ன காரணம்? நாம் தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற பயம்தான். எல்லா விஷயத்திலும் எப்போதும் நாம் வெற்றியை மட்டுமே விரும்புகிறோம். தோல்வி வந்தால் அதை ஏற்றுக் கொண்டு கடந்து செல்லும் மனப்பக்குவம் நம் மக்களிடம் இல்லை. தோல்விக்காக குலுங்கிக் குலுங்கி அழுகிறவர்கள் உலகத்திலேயே நம்மவர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தும்போது தோல்வி வந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என்கிற முன்யோசனை இருந்தாலே போதும், எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து வெளியே வந்துவிடலாம்.
''நாங்கள் மிடில் கிளாஸ். என் அப்பா பெரிசா சம்பாதிக்கலை. நான் எப்படித் தொழில் தொடங்க முடியும்?'' என்று என்னிடம் கேட்ட இளைஞர்கள் பலர். தங்களின் தயக்கத்தில் பெரிய நியாயம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியும் அவரின் நண்பர்களும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்கிற உண்மை அவர்களுக்குத் தெரியாது! தவிர, இந்தியாவிலும் சரி, உலகளவிலும் சரி, இன்று முன்னணியில் நிற்கும் பல தொழிலதிபர்கள் முதல் தலைமுறையினரே! அவர்களின் அப்பாக்கள் நம் அப்பாக்கள் மாதிரி மிடில் கிளாஸ்தான்! அவர்களால் மட்டும் எப்படி ஒரு தொழிலதிபராக மாற முடிந்தது? தொழில் தொடங்க பணம் தேவை! ஆனால், அது மட்டுமே தேவை என்று நீங்கள் நினைத்தால் தவறு. பணமிருந்தால் பெரிய தொழிலதிபராக ஆகிவிடலாம் என்பது உண்மையாக இருந்தால் இன்று பணக்காரர்கள் எல்லோருமே உலக அளவில் பெரும் தொழிலதிபர்களாக இருப்பார்கள். ஆனால், சாதாரண குடும்பத்தில் பிறந்த அம்பானியால்தான் மிகப் பெரிய பிஸினஸ் சாம்ராஜ்யத்தைக் கட்ட முடிந்தது. காரணம், அவரிடம் இருந்த துணிச்சல். அதாவது, ரிஸ்க் எடுக்கும் திறன்.

நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கப் போகிறீர்கள் எனில் உங்கள் பெற்றோர்களிடம் இருந்து பணத்தைப் பெறாதீர்கள். அவர்கள் உங்களை 'ரிஸ்க்' எடுக்கவிடாமல் தடுத்துவிடுவார்கள். அதற்கு பதில், உங்கள் மீதும் உங்கள் ஐடியாவின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அதை ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்திடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கான்செப்டை விற்பனை செய்யுங்கள். அவர்களை பங்குதாரர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் 'ரிஸ்க்'கை பரவலாக்கிக் கொள்ளுங்கள்; எதிர்காலத்தில் வெற்றிகரமான தொழிலதிபராக வருவீர்கள்.

''ரிஸ்க்' எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி' - வடிவேலுவின் ஜோக்கை கேட்டுவிட்டு நாம் சிரித்து விட்டுப் போவதைவிட, உண்மையிலேயே 'ரிஸ்க்'கை காதலிக்க ஆரம்பிப்போம். புதிய தொழில்முனைவர்களை உருவாக்குவோம். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை தொழில் மாநிலமாக ஆக்கிக் காட்டுவோம்!

''எந்த வயதிலும் எடுக்கலாம் ரிஸ்க்!''
இது பற்றி கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டைச் சேர்ந்த பேராசிரியர் வீரவல்லியிடம் பேசினோம்.

''முன்பு, கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்காது. ஆனால், இப்போது கிடைக்கிறது. இன்றைய சூழ்நிலையில் ஓர் இளைஞன் முன் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, நல்ல வேலை. அடுத்து தொழில் முனைவோராகும் வாய்ப்பு. இதில் அவன் வேலையைத் தேர்வு செய்யும் சூழல்தான் இங்கு அதிகம். பத்துக்கு ஒருவர் என்கிற விகிதத்தில்தான் தொழில்முனைவோர் இங்கே உருவாகின்றனர். இதைத் தவறு என்று சொல்லமாட்டேன். குடும்பத்தைக் காப்பாற்ற உடனடியாக வேலைக்குச் செல்வதில் தவறு இல்லை. ஆனால் வேலைக்குப் போய் அந்த சேரே கதியென கிடப்பதுதான் தவறு. ஒருவர் எப்போது வேண்டுமானலும் எந்த வயதில் வேண்டுமானாலும் தொழில் முனைவோராகலாம். எந்தத் தொழிலை நீங்கள் சொந்தமாக நடத்த விரும்புகிறீர்களோ, அதில் ஒரு 5 ஆண்டு காலம் வேலை செய்யுங்கள். அதற்குப் பிறகு நீங்களே சுயமாகத் தொடங்கி நடத்தலாம்.
எனக்குத் திருமணம் ஆகிவிட்டது; குழந்தை குட்டிகள் கிடைச்சாச்சு. இனிமேல் நான் எப்படி சொந்தமாக தொழில் தொடங்கி நடத்துவது என்று சிலர் நினைக்கிறார்கள். இவையெல்லாம் நமக்கு நாமே கற்பித்துக் கொள்ளும் காரணங்களே. சொல்லப் போனால் திருமணத்துக்குப் பிறகு சொந்தத் தொழில் தொடங்குவது இன்னும் நல்லது. இப்போதிருக்கும் பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்கின்றனர். பிஸினஸில் நீங்கள் வளரும் வரைக்கும் அவர்களின் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தமுடியும்.

ரிஸ்க் எடுக்க வயதோ மற்ற எந்த விஷயங்களோ தடையில்லை. நம் எண்ணம்தான் நமக்கு மிகப் பெரிய தடை. அதை மாற்ற, தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் நம் மனதில் விதைப்போம்!''
- வா.கார்த்திகேயன்
66-ல் ரிஸ்க் எடுத்தவர்!

ஜகதீஷ் கட்டார். மாருதி நிறுவனத்தின் முன்னாள் எம்.டி. சில ஆண்டுகளுக்கு முன்பு மாருதி நிறுவனத்திலிருந்து இவர் ரிட்டயராக, அடுத்து என்ன என்கிற கேள்வி பிறந்தது. 66 வயதில் சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவெடுத்தார். 'தாத்தா வயதில் உங்களுக்கு இந்த ரிஸ்க் தேவையா?' என்று சிலர் கேட்டனர். 'ஏன் முடியாது?' என்பதே ஜகதீஷின் கேள்வி. 30 கோடி ரூபாயில் தனக்கு நன்றாகத் தெரிந்த வாகனத் துறையிலேயே எல்லா பிராண்ட் கார்களையும் சர்வீஸ் செய்ய தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மையங்களைத் தொடங்கினார். ஏறக்குறைய 300 கோடி ரூபாய் டர்ன்-ஓவரை எட்டிவிட்ட இந்த நிறுவனத்தில் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் பணத்தைக் கொண்டுவந்து கொட்டத் தயாராக இருக்கின்றன. அடுத்த நான்காண்டுகளில் இந்த நிறுவனத்தில் 1,000 கோடி ரூபாய் முதலீடாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஸ்க் எடுக்க வயது ஒரு பொருட்டே அல்ல என்பதை நெத்தியடியாக சொல்லிவிட்டார் ஜகதீஷ்.

http://nazer5758.blogspot.com/2010/04/kobe-bryant.html

அதிரை M. அல்மாஸ் அபுதாபி
ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோர் ஏப். 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!


ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோர் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ஆண்டில் 25 ஆயிரம் பேருக்கு கூடுதலாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஹஜ் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கப்படமாட்டாது.

ஹஜ் பயணக் குழுவில் வரும் யாத்திரீகர்கள் இனி அரசு மருத்துவர்களின் மருத்துவ பரிசோதனைச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு மாநிலத்தின் ஹஜ் பயணம் தொடர்பாக பயிற்சி முகாம் நடத்தப்படும்.

இதில் குடிநீர் தட்டுப்பாடு, இட சிக்கனம், மெக்காவின் பயண வழித்தெளிவு, ஹஜ் கடமைகள், உடைமைப் பாதுகாப்பு, பயணிகளின் உடல் நலக்குறைபாடு, யாத்திரீகர்களுக்கு வழிகாட்டுதல் குறித்து பயணிகளுக்கு விளக்கி கூறப்படும் என்றார் அவர்.

நன்றி. தட்ஸ்தமிழ்.