Monday, May 31, 2010

திருக்குர்ஆன் மாநாட்டின் இறுதி நிமிடங்கள்

அதிரை பைத்துல்மாலின் 12 ஆவது திருக்குர்ஆன் மாநாட்டு நிகழ்வுகள் உலகம் முழுவதும் உள்ள அதிரைவாசிகள் பலருக்கு நேரலையாகக் காணக்கிடைத்தது.ஒருமாத விடுப்பில் ஊர் வந்த எனக்கும் இம்மாநாட்டை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

மாநாட்டின் மாலை அமர்வுகளில் தலைசிறந்த பேச்சாளர்கள் ஓரிருவரின் பேச்சைக் கேட்டதோடு மூன்றாம்நாள் நிகழ்வின் இறுதி நிமிடங்கள்வரை முதல்வரிசை பார்வையாளனாக அமர்திருந்து நெடுநாட்களுக்குப் பிறகு இஸ்லாமியச் சூழலில் இத்தகைய மாநாட்டு அமர்வுகளில் பங்கேற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி.

துபாயிலிருந்து ஊர்வந்திருந்தபோது முனைவர் அப்துல்லாஹ் அவர்களின் பேச்சை துபையில் கேட்கும் வாய்ப்பில்லையே என்றிருந்தபோது,அதிரை பைத்துல்மால் குர்ஆன் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக வந்ததால் எதிர்பார்ப்பு நிறைவேறியது.

மார்க்கத்தில் புதிதாக நுழைந்திருக்கும் தன்னிடம் மார்க்கம்சம்பந்தமாகக் கேட்காமல்,மனநலம் உளவியல் குறித்தும் தனது மனமாற்றம் குறித்தும் கேட்டால் தன்னால் பதிலளிக்க முடியும் என்று தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் வயிறு குழுங்க சிரிக்க வைத்ததோடு அறிவியல் ரீதியான ஒப்பீடுகளைச் சொல்லி ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் தன்வயப்படுத்தினார்.

மாநாட்டின் இறுதிப்பேச்சாளராகப் பேசிய முனைவர் அப்துல்லாஹ் அவர்களுக்கு முன்னதாகப் மவ்லவி முஹம்மது மன்ஸூர் காஷிஃபி அவர்களை மாநாட்டுக் குழுவின் சார்பில் மாலை 6:00 - 7:30 க்குப் பேசும்படி கேட்டதாகவும் தன்னால் மாலையில் சரியாகப் பேசமுடியாது !! என்றும் "சற்று பொறுங்கள்" நேரம் கடத்தியதாகவும் மாநாட்டு குழு அமைப்பாளர்கள் மூலம் அறிந்தேன்.

இங்கு பின்னூட்டம் மற்றும் கருத்துக்கணிப்புகளில் மவ்லவி முஹம்மது மன்ஸூர் காஷிஃபி அவர்கள் அவமதிக்கப்பட்டதாகச் சிலர் சொல்லியிருப்பதில் எவ்வித உண்மையும் இல்லை. இரவு 11:00 மணியளவில் பேச நேரம் ஒதுக்கியது தன்னை அவமதித்ததாக கருதி, விழா மேடையில் கிடைத்த அரை மணிநேரத்தில் ரத்தினச் சுருக்கமாக தன் உரையைச்சொல்லி முடித்திருக்கலாம்.

ஆனாலும், தலைப்புக்கும் தனது பேச்சுக்கும் சம்பந்தமில்லாமல் அதிரை பைத்துல்மால் தனி அரசியல் நடத்துவதாகவும், மாநாட்டுத் தொகுப்பாளர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் பற்றியும்,இமாம் ஷாஃபி பள்ளியில் சென்றஆண்டு ஒரு பாடத்தில் நடந்துவிட்ட குறையையும் பேசியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியதோடு, யாரேனும் மவ்லவியின் ஏமாற்றத்தையும் மனவிரக்தியையும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்களோ என்றும் சிலர் பேசிக்கொண்டனர். அல்லாஹ் நன்கறிந்தவன்.

நானறிந்து மவ்லவி முஹம்மது மன்ஸூர் காஷிஃபி அவர்கள் அதிரைக்கு வந்ததுமுதல் A/C ரூமில் தங்கவைக்கப்பட்டு ஏனைய பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்டதுப்போல் கவுரவமாகவே நடத்தப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

அதேபோல், அதிரையில் நடக்கும் மாநாட்டில் அதிரையிலிருந்து ஒருசில ஆலிம்களுக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கலாமே என்று சிலர் குறைபட்டிருந்தனர். இதுகுறித்தும் மாநாட்டு குழுவில் ஒருவரான நண்பரும் வழக்கறிருமான முனாஃப் அவர்களிடம் கேட்டபோது, மரியாதைக்குறிய ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் பேசும்படி அழைத்தபோது உம்ராவுக்குச் செல்வதாகச் சொல்லி விட்டதாகச் சொன்னார்.அதேபோல் மவ்லவி முஹம்மது குட்டி ஆலிம் அவர்களுக்கும் வேறு காரணம் இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஆகவே உள்ளூர் ஆலிம்களும் புறக்கணிக்கப்படவ்வில்லை என்ற உண்மை சம்பந்தப்பட்டவர்கள் அறியட்டும்.

மிக முக்கியமாக அதிரை பைத்துல்மாலில் சேவைகளில் திருப்தியடைந்த நமதூரைச் சார்ந்த ஒரு செல்வச்சீமாட்டி தனது 10இலட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அதிரை பைத்துல் மாலுக்கு மனமுவந்து வழங்கியதை பேரா. அப்துல் காதர் மஃரிப் தொழுகைக்குப் பிறகு மேடையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இஷாத் தொழுகைக்குப் பிறகு மேலும் இரு தனவந்தர்கள் தங்களின் 6 இலட்சம் மற்றும் 4 இலட்சம் மதிப்பிலான சொத்துக்களை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கியதாக சகோ.முனாஃப் அறிவித்ததைக் கேட்டதும் நூறு ரூபாய்கூட பைத்துல்மாலின் சேவைகளுக்காக வழங்காமல் 17 ஆண்டுகளைக் கடந்த பிறகும் குறைசொல்லும் சிலர் ஏனோ நினைவில் வந்தார்கள்.

மொத்தத்தில் இவ்வருட விடுமுறையை அதிரையில் கோடை வெயிலுடன் கழித்தாலும் இறுதிதினங்கள் பயனுள்ள நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.அல்ஹம்துலில்லாஹ்!

பொதுக் கருத்து, நல்ல எண்ணத்தில்

அன்புச் சகோதரர்களே! அதிரைவாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த சில மாதங்களாகத்தான் 'அதிரை எக்ஸ்பிரஸில்' எனது ஈடுபாடு. இத்தளத்தில் நமதூர்ச் சகோதரர்கள் தம் எழுத்துத் திறமையை வெளிப்படுத்தும் அளவைக் கண்டு மகிழ்கின்றேன். அதே வேளை, ஆர்வமுள்ள பலருக்குப் பிழையின்றி எழுதும் கலை இன்னும் கைவரப் பெறவில்லை என்பதைக் கண்டு வருந்தவும் செய்கின்றேன்.

உயர்நிலைப் பள்ளியில், கல்லூரியில் அவர்கள் தாய்மொழியைப் பிழையற எழுதும் பயிற்சியைப் பெறவில்லையோ என்று ஐயுறத் தோன்றுகின்றது! குற்றமில்லை. இன்னும் நேரமும் காலமும் இல்லாமலில்லை. எழுத்தார்வமுள்ள சகோதரர்கள், தமிழைப் பிழையின்றி எழுதப் பழகவேண்டுமாயின், அதற்கான நூல்களை வாங்கிப் படித்துப் பயன் பெறலாம். அவற்றுள் ஒன்றுதான், பேரா. அ.கி.பரந்தாமனார் எழுதிய "நல்ல தமிழ் எழுதவேண்டுமா?" என்ற நூல். இது சென்னைப் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. இதுவன்றி, புலவர் மா. நன்னன் அவர்கள் எழுதிய "நல்ல உரைநடை எழுதவேண்டுமா?" எனும் நூலும் எழுத்தார்வலர்களுக்கு உதவும் எனலாம்.

'அதிரை எக்ஸ்பிரஸ்'காரர்கள் தமது Post a comment பகுதியில், "உங்கள் மேலானக் கருத்துக்களை..." என்று தவறாகப் பதித்துள்ளார்கள்! 'மேலான' என்ற சொல்லின் பின் 'க்' வரக்கூடாது. 'கருத்துக்களை' என்பது, 'கருத்துகளை' என்று மாற்றப்பட வேண்டும். காரணம், மேலான' என்ற தன்மைக்கும் 'கருத்து' என்ற பொருளுக்கும் இடையில் ( ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலான ) எந்த வேற்றுமை உருபும் மறைந்திருக்கவில்லை; அல்லது, அவ்வுருபுகள் வெளிப்படையாக இருக்கவில்லை. அப்போதுதான், ஒற்று எனும் புள்ளி எழுத்து மிகும்.

தனிப்பட்ட கட்டுரையாளர்கள், பின்னூட்டமிடுபவர்கள் செய்யும் சாதாரணமான பிழைகளைத் தொகுக்க முயன்றால், பட்டியல் நீளும். எனது நோக்கம், பிழைகள் நீக்கப்பட வேண்டும் என்பதே. உரிமையுடன், "சுட்டிக்காட்டுங்கள்" என்று வாசகர்களும் எழுத்தாளர்களும் வேண்டினால், சுட்டிக்காட்டுவேன்.

நமதூர்ப் பள்ளிகளிலும் கல்லூரியிலும் தமிழையும் ஆங்கிலத்தையும் உங்களுக்குக் கற்றுத் தந்த திறமை மிக்க ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்; இன்னும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நன்றியுடன் நினைவுகூர்ந்து பாராட்டும் நீங்கள், அவர்கள் கற்றுத் தந்த மொழிகளைப் பிழையுடன் எழுதலாமா? அண்மையில் பேராசிரியர் பரகத் சார் அவர்களைப் பாராட்டினீர்கள். அப்படிப் பாராட்டியவர்களின் அவ்வப்போதைய ஆங்கிலப் பின்னூட்டங்கள் எவ்வளவு Grammar mistake களுடன் காணப்படுகின்றன தெரியுமா? எனவே, திருந்துவோம்! திருத்தச் சொன்னால், திருத்துவோம்!

அன்புச் சகோதரன்,

அதிரை அஹ்மது

 

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!

அஸ்ஸலாமு அழைக்கும் அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கும் தெரியபடுத்தவும்.


(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)

அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவானாக !

அப்துல் ரஹ்மான் M.P., அவர்களிடம் அளித்த மணுநகல்

அதிரை பைத்துல்மால் நடத்திய 12 ஆவது திருக்குர்ஆன் மாநாட்டின் இறுதி நிகழ்வில் சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்ட வேலூர் மக்களவைத்தொகுதி எம்.பி. சகோ.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் நமதூர் உமர்தம்பி அவர்களுக்கு தமிழ் செம்மொழி மாநாட்டில் அரசு அங்கீகாரம் கிடைக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்க அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் சார்பில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட கோரிக்கை மணுவின் நகல்.அதிரை மக்கள் மற்றும் தமிழ்கணிமை ஆர்வலர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு சகோ.அப்துல் ரஹ்மான் M.P அவர்கள் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறோம்.

அதிரை எக்ஸ்ப்ரஸ் குறித்த புள்ளிவிபரங்கள்

அதிரை மக்களின் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் பொதுவான ஊடக வாசலாக அதிரை எக்ஸ்ப்ரஸ் கடந்த 4-5 ஆண்டுகளாக்ச் செயல்பட்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

நாடுகள் வாரியாகப் பார்வையிட்டவர்கள்


மாணவர்கள் மற்றும் பொதுநல விரும்பிகளின் தன்னார்வத்தால் தொடங்கப்பட்ட இத்தளத்தில் பெண்கள் உட்பட சுமார் 20 பேர் பங்களித்து வருகின்றனர். அதிரை மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் இணையம் வழியாக பொதுக்கருத்தை உருவாக்கவுமாகச் செயல்பட்டுவரும் அதிரை எக்ஸ்ப்ரஸ் இதுவரை தனது நோக்கத்திலிருந்து விலகாமல் முன்னேறி வருவதை அறிகிறோம்.

அதிரை எக்ஸ்ப்ரஸில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள்?தனித்தனி வலைப்பதிவர்களை ஊக்குவித்து அவர்களின் எழுத்தாற்றலையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் என்றும் இன்ஷா அல்லாஹ் நிலைத்து இருப்போம் என்பதை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்கும் ஊர்நலன் விரும்பும் நடுநிலையாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஒருவாரத்தில் அதிரை எக்ஸ்ப்ரஸைப் பார்வையிட்டவர்கள்கடந்த சில நாட்களாக அதிரை பைத்துல்மால் குர்ஆன் மாநாட்டு நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புச் செய்த அதிரைமீடியா.காம் உடன் இணைந்து செயல்பட்டோம். கீழ்காணும் புள்ளிவிபரங்கள் மூலம் அதிரை எக்ஸ்ப்ரஸ்மீதான எதிர்பார்ப்புகள் குறித்த வாசகர்களின் எண்ணங்களை ஓரளவு அறியமுடிகிறது. இதை உங்கள் பார்வைக்கு வைப்பதோடு மேலும் சிறப்பாகச் செயல்பட ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கும்படி அன்புகலந்த உரிமையுடன் வேண்டுகிறோம்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

பைத்துல்மால் குர் ஆன் மாநாட்டுத் துளிகள் (மூன்றாம் நாள்)


 • காலை 9:30 மணி முதல் மாநாட்டு மேடையில் சிறார் சிறுமிகளுக்கான விநாடி-வினா மற்றும் போட்டிகள் நடைபெற்றன.

 • பகல் 12:00 - அஸர் தொழுகை முடியும்வரை மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

 • அஸர் தொழுகைக்குப் பிறகு சிறுமிகளின் இனிய குரலில் கிராஅத் மற்றும் இஸ்லாமியப் பாடல்களை மேடையில் நடந்தன.

 • மாலை 4:30 மணிமுதல் மாநாட்டு நிகழ்வுகளை அதிரை எக்ஸ்ப்ரஸ் மற்றும் அதிரைமீடியா.காம் இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்பு தொடங்கியது.

 • அதிரை வரலாற்றிலேயே இதுபோன்ற மாநாட்டுக்காட்சிகளை உலகெங்கும் பரவியுள்ள அதிரைவாசிகள் இணையம் வாயிலாக தெள்ளத்தெளிவாக நேரடியாக ஒலி/ஒளிபரப்பியது இதுவே முதல்முறை என்று மாநாட்டுக்கு வந்திருந்தவர்களும், நேரலையாகக் கண்டு ரசித்தவர்களும் தெரிவித்தார்கள்.

 • மாலை 5:00 மணிக்கு வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் நமது அண்மையூர் முத்துப்பேட்டையைச் சார்ந்த சகோதரர்.ஜனாப். அப்துல் ரஹ்மான் M.P., அவர்கள் மேடைக்கு வந்தார்கள்.

 • பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், காதர் முஹைதீன் கல்விக்குழுமங்களின் சொத்துக்களை மூன்றாண்டுகளாக நிர்வகிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாண்புமிகு முன்னாள் நீதிபதி ஜனாப். அப்துல் ஹாதி அவர்களை மாநாட்டுக்குழுவினர் மேடைக்கு அழைத்து கவுரத்தார்கள்.

 • மூன்று திசைகளிலும் மாநாட்டு பந்தலில் ஆண்-பெண் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தன.அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினரின் கணிப்பின்படி 5000+ பேர் மாநாட்டுப்பந்தலில் அமர்ந்திருந்தனர்.

 • ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கைகள் போதாத காரணத்தால் மேலும் 300 ப்ளாஸ்டிக் இருக்கைகள் வரவழைக்கப்பட்டன.

 • பெண்கள் பகுதியில் இருக்கைகளுடன் கூடுதலாக தரைவிரிப்பு (பாய்) விரிக்கப்பட்டிருந்தது. மாநாட்டு மேடையிலிருந்து பெண்கள் மதரஸா வரையிலும், கிழக்குப்பக்கம் ஆலடித்தெரு இடைப்பகுதி வரையிலும் மேடை முன்பாக செக்கடிமேடு வரையிலும் பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. (அல்ஹம்துலில்லாஹ்).

 • மஃரிப் தொழுகைக்கு முன்னதாக மூன்றாம்நாள் மாலை நிகழ்வின் தொடக்கமாக பேராசிரியர். அப்துல்காதர் அவர்கள் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் தேனீ ஒருங்குறி எழுத்து மற்றும் ஆக்கங்களின் சிறப்பை மாநாட்டு மேடையில் எடுத்து இயம்பினார். அதிரைவாசிகள் பலருக்கும் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் சாதனையை மீண்டும் நினைவுறுத்தியும், ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் கணிமையில் சாதனை படைத்தவர்களுக்கு 'உமர்தம்பி' பெயரில் விருதுகள் வழங்கி கவுரவிக்கும்படி தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 • சிங்கை வானொளி தொகுப்பாளர் சகோ.சதக்கத்துல்லாஹ் அவர்களின் உமர்தம்பி அவர்களைப் பற்றிய புகழாஞ்சலி ஒலிப்பதிவும் மேடையில் ஒலிபரப்பப்பட்டது.

 • மாநாட்டு அரங்கில் 3 மடிக்கணினிகளில் (லேப்டாப்) மாநாட்டு நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு, நேரடி ஒலி/ஒளிபரப்பு குறித்த கருத்துக்கள் உடனுக்குடன் பெறப்பட்டு ஒளிபரப்பு தவறுககள் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டன. (அல்ஹம்துலில்லாஹ்)

 • மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பிறகு ஜனாப்.அப்துல் ரஹ்மான் M.P., அவர்கள் மார்க்கமும் அரசியலும் கலந்த எழுச்சிமிகு உரையாற்றி மாநாட்டு பேச்சாளர்களையே அசத்தினார். குர்ஆன் வசனங்களை தேர்ச்சிபெற்ற மவ்லவியைப்போல் மேற்கோள் காட்டிப் பேசியது பார்வையாளர்களுக்கு அவர்மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது என்றால் மிகையில்லை.

 • ஜனாப்.அப்துல் ரஹ்மான் M.P அவர்களிடம் நமதூர் வழியாக சென்னைக்குச் சென்று வந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் மீண்டும் இயக்கப்பட சம்பந்தப்பட்ட அரசு இயந்திரங்களுக்கு உரியமுறையில் தெரிவிக்கக் கோரியதை பேரா.அப்துல் காதர் மிகச்சரியான நேரத்தில் எடுத்துரைத்ததை ஏற்றுக்கொண்டதோடு, இன்ஷா அல்லாஹ் விரைவில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என்றதோடு, முத்துப்பேட்டை மற்றும் அதிரை மக்களை நான் தனித்தனியாக பார்க்கவில்லை இருவரின் சார்பில் ஏற்கனவே அதற்கான அமைச்சக அதிகாரிகளை முடுக்கிவிடுவதற்கான நடவடிக்கைகள் செய்துள்ளதாகச் சொன்னார்கள். (ஜஸாகல்லாஹ்)

 • பேசி முடிந்ததும் மேடையில் அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் சார்பில் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் உரிய அங்கீகாரம் வழங்கக்கோரி தமிழக முதலவ்ருக்குத் தெரிவிக்கும்படி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை மணு கொடுக்கப்பட்டது. அதையும் இன்ஷா அல்லாஹ் விரைவில் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.

 • நமதூர் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் SSLC தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்று அதிரை பள்ளிகளிலேயே முதலிடம் பெற்ற கரையூர் தெருவைச் சேர்ந்த மாணவி R. இந்துமதி மாணவிக்கு நமதூர் மாஜ்தா ஜுவல்லரி சார்பில் பைத்துல்மால் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப்.O.K.M.சிப்ஹதுல்லாஹ் அவர்கள் தங்க மோதிரம் ஒன்றை மாநாடு மேடையில் வழங்கி சிறப்பித்தார்கள்.

 • இஷாத் தொழுகைக்கான இடைவேளைக்குப் பிறகு அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் முனைவர் அப்துல்லாஹ் (முன்னாள் பெரியார்தாசன்) அவர்களிடம் ஈமெயில் மற்றும் பின்னூட்டங்கள் மூலம் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் மேடையில் சொல்லப்பட்டது. நேரம் பற்றாத காரணத்தால் 6-7 கேள்விகளுக்கே பதில் பெறப்பட்டது. எஞ்சியவை மாநாட்டு சிறப்புரையில் இணைத்துக்கொள்ளப்படும் என்றதோடு, முனைவர் அப்துல்லாஹ் அவற்றையும் மறக்காது சுமார் 1:30 மணிநேரம் தனது நகைச்சுவை கலந்த இஸ்லாமியச் சொற்பொழிவாற்றினார்.

 • இறுதியாக உரையாற்ற அழைக்கப்பட்ட மெளலவி M.முஹம்மத் மன்சூர் காஷிஃபி (இமாம், மஸ்ஜித் ஆயிஷா, புரசைவாக்கம் - சென்னை) "திருமறை கூறும் அறிவியல் உண்மைகள்" என்ற தலைப்பிலிருந்து விலகி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பேரா.அப்துல் காதர் மற்றும் நமதூர் கல்விநிறுவனம் குறித்து குறைக்கூறிப் பேசியது மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கும் மாநாட்டுக் குழுவினருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

 • மெளலவி M.முஹம்மத் மன்சூர்காஷிஃபி அவர்களின் மேடை நாகரிகமற்றப் பேச்சு வந்திருந்த மாற்றுமதப் பார்வையாளர்கள், உளவுத்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் முகம் சுழிக்கும்படி இருந்தது, நன்கு படித்த மார்க்கமறிந்த மெளலவியின் முதிர்சியின்மையைக் காட்டியதாக பார்வையாளர்கள் தரப்பிலிருந்து அறியப்பட்டது.

 • இறுதியாகக் கிடைத்த சொற்ப நேரத்தில் மாநாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற சிறார்களை நள்ளிரவுவரை காத்திருக்க வைத்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று சில பெற்றோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், இடம் பொருள் ஏவல் அறிந்து நிலைமையை உணர்ந்து மேடையில் பரிசு பெறுவதற்குத் தவறியவர்களுக்கு இன்று பைத்துல்மால் அலுவலகத்தில் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

 • பலநிறைகளும், சில குறைகளும் இருந்தாலும் வழக்கம்போல் திருக்குர்ஆன் மாநாடு அதிரைவாசிகளுக்குப் பயனுள்ளதாக அமைந்ததோடு, நமது முக்கிய கோரிக்கைகளான சென்னைக்கு அகல இருப்புப்பாதை மற்றும் உமர்தம்பி அவர்களுக்கு தமிழக அரசின் அங்கீகாரம் ஆகியவற்றை உரியவர்களிடம் கொண்டுசெல்ல அதிரை பைத்துல்மால் மற்றும் அதிரை எக்ஸ்ப்ரஸ் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

 • மறக்காமல் மாநாட்டு நிகழ்வுகள், நேரலை ஒளிபரப்பு மற்றும் பொதுவான கருத்துக்களை பின்னூட்டங்களாக இப்பதிவில் தெரிவித்தால் மேலதிக தகவல்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்ளப்படும்.

 • நன்றி..வஸ்ஸலாம்
 • இப்படிக்கு,
 • அதிரை எக்ஸ்ப்ரஸ் டீம்

அதிரைமணம் - புதிய அதிரை வலைப்பூ திரட்டி அறிமுகம்.

அன்பான அதிரை இணைய சகோதரர்களே,

உங்களின் வேண்டுகோளை ஏற்று இப்போது புதுப்பொலிவுடன் இங்கு


http://adiraimanam.blogspot.com/ எனற புதிய அதிரை வலைப்பூ திரட்டியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.  உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் பயனுல்லதாக இருக்கும் மற்றும் உங்கள் பின்னோட்டக் கருத்துக்கள் இந்த அதிரை வலைப்பூ திரட்டியின் தரத்தை உயர்த்த உதவும்.

வலைப்பூக்கள் வைத்திருக்கும் அதிரைவாசிகள் இங்கு தங்கள் வலைப்பூவை இலவசமாக சேர்த்துக் கொள்ளலாம், இங்கு சேர்கப்பட்டிருக்கும் வலைப்பூக்கள் பற்றி யாருக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். தொடர்புக்கு tjdn77@gmail.com

அதிரை தாஜூதீன்

Saturday, May 29, 2010

பைத்துல்மால் குர் ஆன் மாநாட்டுத் துளிகள் (இரண்டாம் நாள்)

அதிரை பைத்துல்மால் 12 ஆவது குர்ஆன் மாநாடு இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள். சிறார்களுக்கான பேச்சுப்போட்டி!

பகுதி: 1 / சுட்டி : http://www.youtube.com/watch?v=OI9OiueAdIgபகுதி: 2 / சுட்டி : http://www.youtube.com/watch?v=HYAbF6kpplcபகுதி: 3 / சுட்டி : http://www.youtube.com/watch?v=HXXxfkuVJNk


வீடியோ பதிவு: சகோ.அப்துல் ஜலீல் (அதிரை பைத்துல்மால்)

அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்கு முனைவர்.அப்துல்லாஹ் பதில்கள்


அதிரை பைத்துல்மால் சார்பில் நடைபெற்று வரும் 12 ஆவது திருக்குர்ஆன் மாநாட்டில் நாடறிந்த பேச்சாளரும் உளவியல் வல்லுனருமான முனைவர். அப்துல்லாஹ் (முன்னாள் பெரியார்தாசன்) அவர்கள் மூன்றாம் நாள் அமர்வின் சிறப்பு விருந்தினராக உரையாற்ற உள்ளார்கள்.

அதிரை எக்ஸ்ப்ரஸில் மாநாட்டு நிகழ்ச்சிகளை அதிரைமீடியா.காம் உதவியுடன் நேரடி ஒளிபரப்புச் செய்து வருகிறோம். மேலும் உலகமுழுவதிலும் பரவியுள்ள அதிரைவாசிகள் பேரா.அப்துல்லாஹ் அவர்களிடம் கல்வி, உளவியல், குடும்பவியல் மற்றும் பயனுள்ள பொதுவான கேள்விகளைக் கேட்கவும், அதற்கு முனைவர் அப்துல்லாஹ் அவர்களின் பதிலைப் பெற்றுத்தரவும் மாநாட்டுக் குழுவினருடன் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

குறுகிய கால அவகாசமே இருப்பதால் இத்தகவலை தமிழ் முஸ்லிம்கள் குழுமங்களிலும் அதிரைவாசிகளின் வலைப்பூக்களிலும் பரவச் செய்து நமதூர் வாசிகள் மிகச்சிறந்த உளவியல் வல்லுனரும் தர்க்கவாதியுமான முனைவர் அப்துல்லாஹ் அவர்களிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பைப் பெறுமாறு அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கேள்விகளை தங்கள் முகவரியுடன் adiraixpress@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது பின்னூட்டமாகவோ கேட்கலாம். இந்த அரிய வாய்ப்பை நமதூர்வாசிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

அதிரை பைத்துல்மால் நடத்தும் திருக்குர்ஆன் மாநாடு நேரடி ஒளிபரப்பு - அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் கடைசி நாளான நாளை ஞாயிறு காலை 10.30 மணிமுதல் இரவு வரை ஒளிபரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளைய நிகழ்ச்சி நிரல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாளைய சிறப்பு விருந்தினராக முனைவர் ஜனாப் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) "இறைவனின் அருட்கொடை இனிய இஸ்லாம்" என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.

உங்களது உள்ளூர் வெளியூர் நண்பர்களுக்கும் இந்த நேரடி ஒளிபரப்புக் குறித்து அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு:அகன்ட வரிசையில்(Broadband) ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக இடைஇடையே தடங்கல் ஏற்படலாம்.

உங்களது கருத்துகளைப் பின்னூட்டமிடுங்கள்.

பைத்தூல் மால் திருக்குர் ஆன் மாநாடு நேரடி ஒளிபரப்பு

•நமதூர் அதிரை பைத்துல்மால் நடத்தும் 12 ஆவது திருக்குர்ஆன் மாநாடு நேரடி ஒளிபரப்பு

இங்கு கானலாம்

http://www.adiraimedia.com

அதிரை பைத்துல்மால் நேரடிக் காணொளி

அதிரை பைத்துல்மால் நடத்தும் 12வது ஆண்டு திருக்குர்ஆன் மாநாடு நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பை அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்காக. இணைய வசதியை சமுதாய ஆர்வலர் ஜனாப் சகோதரர் தீன் நிறுவனத்தார் சிகாபுதீன் அவர்களின் முயற்சியால் செய்யப்பட்டுள்ளது.


நன்றி அதிரை மீடியா.காம்
பைத்துல்மால் இணையத்தளம்

இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வை பிறகு அப்லோட் செய்கிறேன்.

முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்!

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.

என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் 'ட்ராலி'யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.

இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக அயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!

அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில், எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:

நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?

இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!

என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.

நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.

"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!

அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!


'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.

தகவல்: அதிரை அஹ்மது

அதிரை வலைப்பூக்கள் - சிறிய முயற்சி

அன்பான அதிரை இணைய சகோதரர்களே,

என்னுடைய பழைய வலைப்பூவை http://tajtv.blogspot.com/  இப்போது புதுப்பொலிவுடன் இங்கு உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் பயனுல்லதாக இருக்கும் மற்றும் உங்கள் பின்னோட்டக் கருத்துக்கள் இந்த வலைப்பூவின் தரத்தை உயர்த்த உதவும்.

வலைப்பூக்கள் வைத்திருக்கும் அதிரைவாசிகள் இங்கு தங்கள் வலைப்பூவை இலவசமாக சேர்த்துக் கொள்ளலாம், இங்கு சேர்கப்பட்டிருக்கும் வலைப்பூக்கள் பற்றி யாருக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். தொடர்புக்கு tjdn77@gmail.com.

Friday, May 28, 2010

பைத்துல்மால் குர் ஆன் மாநாட்டுத் துளிகள் (முதல்நாள்)

 • நமதூர் அதிரை பைத்துல்மால் நடத்தும் 12 ஆவது திருக்குர்ஆன் மாநாடு இன்று காலை 10:00 மணிமுதல் தொடங்கியது. மிகச்சிறுவர், மிகச்சிறுமியர்களின் கிராஅத் மற்றும் பேச்சுப்போட்டிகள் மேடையில் நடந்தன.
 • மாலையில் "அருட்கவி" ஹாஜி. ஜனாப். M.M.முஹம்மத் தாஹா M.A.,B.Ed., அவர்கள் "திருக்குர்ஆன் வலியுறுத்தும் சமுதாய ஒற்றுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 • இஷாத்தொழுகை இடைவெளிக்குப் பிறகு பேராசிரியர் ஹாஜி M.A.முஹம்மத் அப்துல் காதர் M.A.,Mphil.,C.J.M.C அவர்கள் நிகழ்சிகளைத் தொகுத்து வழங்க, மெளலவி ஹாஜி.ஜனாப் M.M.சாகுல் ஹமீது ஃபைஜி,
  இமாம், மஸ்ஜித் தக்வா - ராஜகிரி அவர்கள் "திருமறை போற்றும் கல்வி" என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் சிறப்புரை ஆற்றினார்கள்.
 • இறுதியாக அதிரை பைத்துல்மாலின் 18 ஆண்டுகாலச் சேவைகளை ஜனாப். H.முஹம்மத் இபுராஹிம் M.B.A., ரத்தினச் சுருக்கமாக தொகுத்தளிக்க முதல் நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.
======================================
 • வழக்கம்போல் இவ்வருடமும் ஆண்களைவிட பெண்களின் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. தொலைதூரங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்திருந்த காரணத்தால் பெரும்பாலான பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்தும் மொட்டை மாடிகளிலிருந்தும் பேச்சுக்களைக் கேட்க முடிந்த போதிலும், மாலையில் வீசிய இதமான தென்றல்காற்றுடன் மார்க்கச் சொற்பொழிவையும் கேட்க நேரில் வந்திருந்தது பைத்துல்மாலின் நோக்கங்களில் ஒன்றான பெண்களை குர்ஆனின் பக்கம் ஈர்ப்பது என்பது ஓரளவு நிறைவேறி இருந்ததைக் காண முடிந்தது.
 • மாலை -7 மணிமுதல் இரவு 10:00 மணிவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பீக் அவர் என்ற போதிலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காணவந்ததிருந்தது கவனிக்கத்தக்கது!
 • ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டிற்குப் பெண்களை அழைத்து வர வாகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வாண்டு அத்தகைய வசதிகள் எதுவும் இல்லை என்றாலும் பெண்கள் கூட்டம் அலைமோதியதோடு கூச்சல் மற்றும் குழந்தைகளில் அழுகுரலின்றி அமைதியாக நிகழ்வுகளைக் கேட்க வந்திருந்தனர் என்பது மாநாட்டுப் பார்வையாளர்களின் கருத்து.
 • நிகழ்வுகளை சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் வீடியோவில் பதிவு செய்து வருகிறார். மூன்றுநாள் நிகழ்வுகளும் முழுதாகத் தொகுக்கப்பட்டு டிவிடியாக வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. அதிரை எக்ஸ்ப்ரஸில் சிறுசிறு குறும்படங்களாக விரைவில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இன்ஷா அல்லாஹ் இரண்டாம்நாள் நிகழ்வுகள் நாளை காலை 10:00 மணி முதல் தொடங்கும் .

தன்னிலை சுகாதாரம்


தன்னிலை சுகாதாரம் [Personal Hygiene]...

இதை எழுத காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் சூழ்நிழைதான்,

' உலகத்தில் இருக்கும் மதம் / மார்க்கங்களில் அதிகம் சுத்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், துரதிஸ்ட்டவசமாக் அதன் விழிப்புணர்வுகள் முஸ்லீம்களிடம் சரியாக போய்சேரவில்லையோ என நினைக்க தோனுகிறது....இது ஒரு முறை டாக்டர் K.V.S ஹபீப் முகமது சொன்னார் [ இவர் இஸ்லாமிய அறிஞரும் ஆவார்.]
அது முன்பு இருக்கலாம் இப்போது மாறிவிட்டது என நினைப்பவர்களுக்கு....

# எப்படி பப்ளிக் டாய்லெட்களில் அடிக்கும் ஒருவிதமான அமோனியா வாடை மூச்சுதினறவைக்கிறது

# தன் பல்லை சுற்றி கேரளாவில் உள்ள அரண்மணை சுவர்கள் மாதிரி பாசிபடிய விட்டு எப்படி சிலபேரால் பொதுவில் நடமாட முடிகிறது.
இதற்க்கும் மக்கள் தொகைதான் காரணமா????....எப்படி இதே மக்கள் தொகை [ஆட்கள்] பயன்படுத்தும் டாய்லெட் வெளிநாடுகளில் சுத்தமாக இருக்கிறது.

அவர்களுக்கு எல்லாம் மற்றவர்களை பற்றி கவலை இருக்கிறது. நம்மிடம் அது இல்லை
,

இருந்தால் வீட்டுவாசலில் ஏன் ஒவ்வொறு நாளும் ஒடும் சாக்கடையில் லாங் ஜம்ப் தாண்டுகிறோம்.
காலையிலும் இரவிலும் பல் தேய்க்க சொல்வது பள்ளிக்கூட படிப்பு. இது என்னவோ எக்ஸாமுக்கு உள்ள விசயம் மாதிரி நிரைய பேர் அந்த வருசத்து புத்தகத்தை பாதி விலைக்கு போட்ட அதே மூட்டையில் கட்டி அனுப்பி விட்டார்கள்./ வாங்கியவனும் பயன்படுத்த வில்லை என்று சகோ; சாகுல் ஹமீது தமாமிலிருந்து பின்னூட்டமிடலாம்.

இதற்கெல்லாம் அரைமணித்தியாலத்தில் பாலிசிங் ட்ரில்லர்/வாக்யும் வைத்து சுத்தபடுத்த பல்டாகடர்கள் வந்துவிட்டார்கள் கேட்டால்..."நேரமில்லை' நு SMS மாதிரி சொல்லிடுவானுக. இன்னும் செளசால்யம் [Toilet] இல்லாத வீடுகள் நமது ஊரில் இருக்கிரது என நினைக்கிறேன் , .காரணம் = வசதியில்லை..அதெ வீட்டில் உள்ள்வர்கள் எப்படி லட்சகணக்கில் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப பணம் புரட்டிகிறார்கள் என்ப்து 'பிடிவாதக்கொடுமை'
பக்கத்தில் ஆட்கள் இருக்கும்போது வாயில் கர்சீப் / அல்லது முடிந்தால் தூரம் போய் தும்மும் பணிவன்பு நிறைய பேரிடம் இல்லை. இது போன்ற கற்கால பழக்க வழக்கங்களால் Epidamic Disease பரவுகிறது என மருத்துவ துறையினர் தொடர்ந்து வழியுருத்திவருகிறார்கள்.இந்த லட்சனத்தில் 'பன்றிக்காய்ச்சல் பாய்மாருஙகளுக்கு வ்ராது' என ஒருவர் [ "பாய்"தான்] இனையயத்தில் எழுதியிருந்தார்...[ உன் அறிவியல் அறிவில் கொள்ளி வைக்க!!]

இன்னும் சிலர் ஜுரம் / தடுமலுக்கு டாக்டரிடம் போகும் போது ஏதோ எல்லாம் இழந்து விட்ட மாதிரி போவது [ அப்பதான் நல்ல ஊசி/மாத்திரை தருவார்!!] கொஞ்சம் பல் தேய்த்து , வாய் கொப்பளித்து , முகம் கழுவி போனால்தான் என்ன .

இவர்கள் வாய்திறந்து பேசி அந்த மயக்கத்தில் டாக்டருக்கு ஆம்புலன்ஸ் தேவைப்படும் அளவுக்கு
போய்விடலாம் அல்லவா?
சிகரட் / வெத்திலை / சுருட்டு உபயோகிப்பவர்களை திருமணம் செய்த பெண்களுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு' கொடுக்கலாமா என அதிரை எக்ஸ்பிரஸ் ஒரு இன்டெர்னெட் தேர்தல் தாராளமாக நடத்தலாம்.மலேசியாவின் இஸ்லாமியத்துறை சிகரட் ஒரு ஹ்ராமான வஸ்த்து என அறிவித்து சில வருடங்கள் ஆகிவிட்டது.

காரில் போகும்போது தும்மும்போது கவனமாக இருங்கள், உங்களிடமிருந்து வெளியாகும் பாக்டிரியா 30 நிமிடத்துக்கு உயிர்வாழமுடியும். [ கார் கண்ணாடி திறந்திருப்பது நல்லது.] அப்படி யாரும் தும்மிவிட்டால் உடனே கண்டித்து விடாதீர்கள்..சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.
Personal Hygiene பற்றி எழுத நிறையவிசயம் இருக்கிறது.

ZAKIR HUSSAIN

Thursday, May 27, 2010

இஸ்லாமிய மாணவியர் விடுதிகளில் சேர அரசு உதவி

சென்னை, மே 26: தமிழகத்தில் இஸ்லாமிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்காக நடத்தப்படும் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் காலை 10 முதல்

5.45 மணி வரை விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளின் காப்பாளர்களிடமிருந்தும் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட பள்ளி விடுதிகளுக்கான விண்ணப்பங்களை 10-6-2010 மாலை 5.45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கான விண்ணப்பங்களை 24-6-2010 மாலை 5.45 மணிக்குள்ளும் சம்பந்தப்பட்ட, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் அல்லது சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வாணியம்பாடி (வேலூர்), வைகுண்டகோஷ்புரம் (திருச்சி), பேகம்பூர் (திண்டுக்கல்), சிட்கோ மற்றும் சுந்தராபுரம் (கோவை), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் அரசினர் இஸ்லாமிய பள்ளி-கல்லூரி மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. 4-ம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர்கள் இவ்விடுதிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

இங்கு உணவு, உறைவிடம், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்று தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

நன்றி தினமனி

தமிழக அரசின் இந்த அறிவிப்பு பயனுள்ளது. அதேசமயம் பள்ளி விடுதிகளில் சமர்ப்பிக்க கால அவகாசம் பற்றாது (10-6-2010). உதாரணமாக 1லட்சம் வருமான சர்டிபிகேட் பெற கால அவகாசம் வேண்டும். எந்த விஏவோ உடனடியாக சர்டிபிகேட் கொடுப்பான்?

சற்றே யோசிப்போம்...

1. சமீபத்தில் தனது ஊரில் (பட்கல்) 6 மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு கோர விபத்தில் தனது மனைவியையும் மூன்று உறவினர்களையும் இழந்தார், துபையில் வேலை பார்க்கும் ஒருவர்.

இதனால் பாதிப்படைந்த தனது மூன்று சிறு குழந்தைகளையும் (வயது 7, 9, 11) துபைக்கு அழைத்திருந்தார். இங்கு வந்து இட மாறுதலாலும். மற்ற உறவினர்களைப் பார்த்ததாலும் அக் குழந்தைகலின் முகத்தில் புன்னகை மலர ஆரம்பித்திருந்தது.

கோடைகால விடுமுறையை துபையில் கழித்து விட்டு தந்தையுடன் ஊருக்குத் திரும்பும் போதுதான் இந்த விபத்து. நான்கு பேரும் இறந்துவிட்டனர். இவர்களின் குடும்பத்தில் தற்போது உயிருடன் இருப்பது 3 வயது குழந்தை மட்டுமே..

2. தனது கணவர் வருகிறார் என்று ஆசை ஆசையாக காத்திருக்கும் போது தரையில் விமானம் இறங்குகிறது ஆனாலும் கணவரை வீட்டிற்கு அழைத்துப் போக முடியவில்லை. அவரது உடலைப் பார்த்தாவது கதறி அழாலாம் என்றால் உடலை அடையாளம் கண்டு எடுத்துச் செல்ல முற்படும் போது வேறு இருவர் அது அவர்களது உறவினரின் உடல் என்று சொந்தக் கொண்டாடும் நிலை. இந்த மனைவியின் நிலை என்ன?

இது போன்று நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் பல…

சற்றே யோசிப்போம். நம்மில் எத்தனை பேர் எத்தனைத் தடவை சுகமாக பயணம் செய்து பாதுகாப்பாக சென்று வந்திருக்கிறோம். ஒருமுறையேனும் இறைவனுக்கு நன்றி செலுத்தியது உண்டா?

முப்பதாயிரம் அடி உயரத்தில், எந்தவித பிடிப்புமின்றி அந்தரத்தில் பறந்துகொண்டிருக்க நாமோ உள்ளே சினிமா பார்த்துக் கொண்டு, சிரித்துக் கொண்டு, இன்னும் சிலரோ தண்ணியடித்துக் கொண்டு……

சகோதர்களை இது போன்று விபத்துகளில் நொடியில் மரணம் நேரும். விமான பயணத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இறைச் சிந்தனையில் இருக்க வேண்டும். கேலிக் கூத்துகளை. சினிமாக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏறும்போதும் இறங்கும் போதும் துஆக்களை ஓதிக் கொள்ளுங்கள்.

விமான விபத்தில் இறந்தவர்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னிப்பானாக, அவர்களாது கப்ர்களை சுவனத்தின் பூங்காக்களாக ஆக்கி அருள்வானாக (ஆமீன்)

அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்.

Source : மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றவை.

UAE -ல் வேலை வாய்ப்பு

Subject:-UAE -ல் வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு(1)
துபை Based கம்பெனி, ஷார்ஜாவில் உள்ள Branch-க்கு Off Administrative தேவை
தகுதி: கார் டிரைவிங் லைசென்ஸ் தேவை..
கூடுதல் தகுதி :-மோட்டார் சைக்கிள் லைசென்சும் இருந்தால் உடனடி அப்பாயின்ட்மென்ட்
சம்பளம்: AED 4000
தொடர்புக்கு: 050-3821697
(தயவு செய்து 05:00 மணிக்கு மேல் போன் செய்யவும்)
jah.usain@gmail.com ஈ மெயிலுக்கு Resume-ஐ அனுப்பிவிட்டு தொடர்பு கொண்டால் நலம்
வேலை வாய்ப்பு(2)
நர்ஸிங் பாய்:-ஸ்டோரோக்கினால் கால் நடக்க முடியாத ஆனால் அல்லாஹ்வின் நாட்டத்தால் தற்பொழுது இலேசாக நடக்க முயற்சிக்கும் (பாம்பே வாழ்) முஸ்லிம்க்கு நர்ஸிங் பாய் தேவை.ஹிந்தி பேசும் நபர்க்கு முக்கியத்துவம்.
(Temproray போஸ்ட் ) தொடர்புக்கு: 050 8447268
NB:-
ஏற்கனவே இதே தலைப்பில் பதியப்பட்ட வேலைக்கு நம்முடைய ஆட்கள் சேர்ந்து விட்டார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.
இது புதிய ஆனால் தற்காலிக வேலையாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்களை தயவு செய்து தவறாக பயன்படுத்த வேண்டாம். மேலும் அவர்கள் பதில் கொடுக்கவில்லையென்றால் மட்டும் இந்த நம்பருக்கு 050-4950191 இன்ஷாஅல்லாஹ் தொடர்பு கொள்ளவும்

With Regards

M. Ayub Khan

'பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கருத்து' இதற்கு யார் காரணம்?

அஸ்ஸலாமு அலைக்கும்,

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதோ அதிரை மாணவர்களின் நலனுக்காக அபூ ஹம்னா எழுதிய


          'பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கருத்து' இதற்கு யார் காரணம்?

என்ற தலைப்பில் கட்டுரையை உங்களுக்கு அளிக்கின்றேன்
குறிப்பு: படங்கள் தெரியவில்லை என்றால் save செய்து பார்க்குமாறு கேட்டுகொள்கின்றோம்.

இந்த கட்டுரையை படித்து விட்டு பின்னோட்டம் இடவும். இந்த கட்டுரையை தந்த அபூ ஹம்னா மேலும் பல கட்டுரைகளை தரவும் அவருடைய இம்மை மறுமைக்காக துஆ செய்யும்படி கேட்டுகொள்கின்றோம்.

இதே போல் உங்களிடம் ஏதேனும் கட்டுரைகள் இருந்தால் வரவேற்கபடுகிறது. உங்களது கட்டுரைகளை muslimmalar@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு அனுப்புங்கள்.

அல்லாஹ் நாடினால் மீண்டும் சிந்திப்போம் வஸ்ஸலாம்.

எங்கே செல்லும் இந்த பாதை? பகுதி 2


வாழ்க்கையிலும், கல்வியிலும் எந்த குறிக்கோளும் இல்லாமல் நாட்களை கடத்திவரும் நம் பலருக்காக இந்த தொடர் கட்டுரைகளில் ஏதாவது நல்ல விசையங்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்ற முயற்சி. இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதி 1


இந்த ஆண்டு 10 வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இச்சகோதரிக்கு ஊக்கம் அளித்த பெற்றோருக்கும், பள்ளி ஆசிரியர்களும் நம்முடைய பாராட்டுக்கள். சகோதரி ஜாஸ்மினுடைய சாதனை நம்மை மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது, நம் பிள்ளைகளாலும் எந்த சாதனையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளார் சகோதரி ஜாஸ்மின். ஹிஜாபுடன் அச்சகோதரியின் புகைப்படத்தை பார்க்கும் போது உண்மையில் எல்லையற்ற மகிழ்ச்சி. என்னால் நம்ப முடியவில்லை இது நிஜம் தானா என்று. ஹிஜாபையும், பர்தாவை கேவலப்படுத்தி வரும் மேல் நாட்டு கலாச்சாரவதிகளின் முகத்தில் கரி பூசி இருக்கிறார் சகோதரி ஜாஸ்மின். எல்லாம் அல்லாஹ்வின் செயல், அவன் நாடினால் எந்த வெற்றியை நம் சமுதாயத்தால் படைக்க முடியும். அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ….

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சகோதரி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான். மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். எவ்வளவு எழிமையான குடும்பம்.

சகோதரி ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார். மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த சகோதரி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார். சகோதரி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார்.

பணம் இருந்தால்தான் படிக்க முடியும், தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது. அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி சகோதரி ஜாஸ்மின். படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று சகோதரி ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.

இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் சகோதரி ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு சகோதரி ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது மகளின் சாதனைப் பற்றி சகோதரி ஜாஸ்மினின் தகப்பனார் ஜனாப் ஷேக்தாவூத் கூறியதாவது: எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.

தனது வெற்றி பற்றி சகோதரி ஜாஸ்மின் கூறியதாவது:- மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை. பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை அல்லாஹ்வின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.

10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.

இப்போது வருகிறேன் என் தலைப்புக்கு வருகிறேன்.

எங்கே செல்கிறது நம் பாதை? என்று பல வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் மாணவர்களும் பெற்றோர்களும் சுயபரிசோதனை செய்து சிந்திக்க வேண்டாமா?

ஊர் ஊராக ஜவுளி வியாபரம் செய்து வரும் சேக் தாவுத் அவர்கள் தன் பிள்ளைக்கள் சமுதாயத்தில் நல்ல நிலையில் வரவேண்டும் என்று பல கஷ்டங்களையும் தாங்கி படிக்க வைத்து தன் பெண்ணை சாதனை படைக்க வைத்திருக்கிறாறே ஏன் நம்மாலும் நம் பிள்ளைகளை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?

பணம் இருந்தால் தான் நல்ல தனியார் பள்ளியில் படிக்க முடியும், அதிக மதிப்பெண்கள் முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என்ற எட்டாக்கனியை மாநகராட்சி பள்ளியில் படித்து சகோதரி ஜாஸ்மின் எட்டிப்பிடித்துள்ளார். எல்லாவசதிகளும் இருக்கும் நம் பிள்ளைகளால் அக்கனியை ஏன் எட்டிப்பிடிக்க முடியாதா என்ன?

வசதி வாய்ப்புகளும் தொழில்நுட்பங்களும் குறைவாக உள்ள அரசு மாநகராட்சிப் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை படைக்க வைத்திருக்கிறது, இப்பள்ளியை விட சில வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் பள்ளிகளால் ஏன் நம் மாணவர்களை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?

10 ம் வகுப்பு படிக்க ஆரம்பித்திலுருந்து தொலைகாட்சி பார்பதில்லை, IAS படித்து இச்சமுதாயத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்று லட்சியக் கணவுடன் கூறியிருக்கிறார் சகோதரி ஜாஸ்மின், சிறு வயதிலிருந்து குறிக்கோள் மற்றும் லட்சியத்தையும் மனதில் நிறுத்தி நம் பிள்ளைகளை இவ்வுலகில் பல சாதனைகள் செய்ய வைக்க முடியாதா என்ன?

சகோதரி ஜாஸ்மின் பத்திரிக்கைகளுக்கு அளித்து வரும் செய்திகளை (குறிப்பாக அதிகம் டிவீ பார்ப்பதில்லை என்ற செய்தியை) நம் பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டுங்கள், வீட்டில் உள்ள தாய்மார்களுக்கும் எடுத்துக்காட்டுங்கள், பிள்ளைகளை நல்ல மேல் படிப்பு படிக்க வையுங்கள் குறிப்பாக நம் பெண் மக்களை.

நம் சமுதாயப் பிள்ளைகள் படிப்பில் சாதனைப்படைக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதை இவ்வாண்டு 12 ம் & 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இவ்வுலக்கு எடுத்துக்காட்டுகிறது. சகோதரி ஜாஸ்மினை ஒரு ரோல் மடலாக வைத்து நம் பிள்ளைகளை கடின முயற்சி செய்து சமுதாயத்தில் நல்ல நிலைக்கு அவர்களை வரவைத்து, நம் சமுதாயத்திற்கும், நம் நாட்டிற்கும் சேவை செய்து சாதனைப் படைக்க ஒரு நல்ல பாதை அமைக்க நாம் அனைவரும் சபதம் எடுப்போம்.

10 வகுப்பில் வெற்றி பெற்ற அனைத்து சகோதரி, சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் துஆக்களும்.

மீண்டும் ஒரு நல்ல தலைப்பில் சந்திக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை தாஜூதீன்


நன்றி: http://www.tmmk.in/ & http://www.maalaimalar.com/

Wednesday, May 26, 2010

iPhone னிலும் அதிரை எக்ஸ்ப்ரஸைக் காணலாம்

இணையமும் தொழில்நுட்பமும் கைகோர்த்து நடக்கும் இக்கால கட்டத்தில் கல் தோன்றி மண்தோன்றாக காலத்து முன்தோன்றிய மூத்த மொழியாம் தமிழும் இணைந்து நடைபோட பல்வேறு காலகட்டத்தில் பலரும் பங்களித்துள்ளனர்.

அவ்வகையில் இணையத்தில் தமிழை தங்கு தடையின்றி வாசிக்கவும், எழுதவும் உதவும் செயலி/நிரழிகளை உருவாக்கிய நமதூர் மர்ஹும் உமர்தம்பி அவர்களின் தேனீ வகை எழுத்துறுக்கள் பெரிதும் உதவுகின்றன.


அதனைத் தொடர்ந்து இன்று செல்போன் உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் iphone ல் தமிழை தடையின்றி வாசிக்க இதுவரை சிறந்த மென்பொருள் இல்லாது இருந்த குறையை "செல்லியம்" என்ற மென்பொருள் நீக்கியுள்ளது.

இதுகுறித்த தகவலை நமதூர் சகோதரர் படங்களுடன் மடலிட்டிருந்தார். அதை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம். பயன்படுத்தும் மற்ற சகோதரர்களும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே!

மேற்கண்ட மென்பொருளை பதிவிறக்க கீழ்கண்ட சுட்டியை ஐபோனிலிருந்து கிளிக்கவும். எந்த தமிழ் தளத்தின் RSS முகவரியையும் உள்ளிட்டு தமிழை தடையின்றி வாசிக்கலாம்! மேலதிகத் தகவலுக்கு இந்தச் சுட்டியை கிளிக்கவும்.

வாழ்க செம்மொழி தமிழ்!

இமாம்ஷாபி பள்ளியில்முதல் முன்று இடம் பிடித்த மாணவ., மாணவிகள்

இமாம்ஷாபி பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவ,மாணவிகள் :S.பாத்திமா 416 மதிப்பெண் பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்:

2வது இடம் பிடித்த மாணவி A.ஷபீகா 402 மதிப்பெண் பெற்றுஉள்ளார்:

3வதுஇடம் பிடித்தமாணவன் A.முகமதுசலீம் 395 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.
இவர்கள் மேலும் பல வெற்றிகளை பெறுவதற்கு அல்லாஹுத்தலாவிடம்'துஆ' செய்கிறோம்.

வாகைச்சூடிய சகோதரி


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர்.
இரவு ஒரு மணி வரை படித்தேன் மாணவி ஜாஸ்மின் பேட்டி : முதலிடம் பெற்ற ஜவுளி வியாபாரி மகள் பேட்டி: தான் இரவு ஒரு மணி வரை கண்விழித்து படித்தேன் என மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறினார். டவுண் அருகே உள்ள கல்லணையில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உ<ழைத்துள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இரவு 1 மணி வரை படித்தேன் . காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத்துவங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எனது வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உறு துணையாக இருந்தனர். நான் 498 மார்க்குள் வரும் என எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படிப்பதே எனது இலட்சியம். இவ்வாறு ஜாஸ்மின் கூறினார்.

எங்கயோ கேட்ட குரல்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

அன்பிற்கினிய என் அருமை நண்பர் பெருமக்களே,

ஞாபகம் இருக்கா??? என்றோ நம்மூரில் கேட்டது... இன்றும் காதுகளில் ரீங்காரமிடும் அந்த ஒலி பெருக்கியின் சப்தம்....

"இன்றைய தினம் ஆட இருக்கின்ற ஆட்டத்தில் சீறும் சிங்கங்களும், பாயும் புலிகளும் ஆட இருக்கின்றன. அவ்விரு அ‌ணிகள் எங் சேலஞ்சர்ஸ் சீர்காழி அணியினரும், காலிக்கட் செவன்ஸ் காலிகட் கேரளா அணியினரும் ஆட இருக்கின்றனர்".

"பத்து ரூபாய் கொடுத்து இரண்டு பார் அருணா சோப் வாங்குபவர்களுக்கு அழகிய (தமிழ் மகனல்ல) பூப்போட்ட கண்ணாடி கிளாஸ் இலவசம்".

"இன்றைய‌ தின‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியாக‌ ம‌துரை ந‌ட‌ன‌க்க‌ல்லூரி அபிந‌யா நீக்ரோ பாய்ஸ் வ‌ழ‌ங்கும் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெறும் எனவே மக்கள் அலைகடலென திரண்டு காட்டுப்பள்ளியை நோக்கி வாரீர், வாரீர் என அன்புடன் அழைக்கிறோம்..."பெண்கள் பக்கம் ஆண்கள் செல்லாமலும், ஆண்கள் பக்கம் பெண்கள் செல்லாமலும் இருக்கும்படி கமிட்டியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்ப‌டுகிறார்கள்.(மார்கத்திற்கு முற்றிலும் முரணான விசயம் என்பதை நம்மில் பலர் இன்று அறிந்து கொண்டோம் அல்ஹம்துலில்லாஹ்)

"வ‌ரும் ஞாயிறு மாலை 4 ம‌ணிக்கு பிரபல தஞ்சை காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் டாக்டர் கருப்பசாமி அவர்கள் ந‌ம‌தூர் ஷிஃபா ம‌ருத்துவ‌ம‌னைக்கு வ‌ருகை த‌ர‌ உள்ளார்க‌ள். டாக்ட‌ரிட‌ம் சிகிச்சை பெற‌ விரும்புவோர் முன் ப‌திவு செய்து கொள்ளுமாறு அன்புட‌ன் கேட்டுக் கொள்கிறோம்".

இடையிடையே நாம் இறுதியில் செல்ல‌ இருக்கும் இல‌க்கை ஞாப‌க‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ "அஸ்ஸ‌லாமு அலைக்கும் ம‌ர‌ண‌ அறிவிப்பு....இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....ப‌ள்ளியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும்".
"அல்ஹ‌ம்துலில்லாஹ் நாளை பிறை ஒன்ப‌தை முன்னிட்டு ந‌ம‌தூர் புஹாரி ஷ‌ரீஃப் ம‌ஜ்லிஸ் ந‌டைபெறாது. பிறை ப‌த்து புனித‌ ஹ‌ஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு அஷ‌ர் தொழுகைக்குப்பின் வ‌ழ‌க்க‌ம் போல் ந‌டைபெறும் அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் நல்லருளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இடையிடையே அதிரை கெள‌தியா பைத்து ச‌பா குழுவின‌ரின் சினிமா பாட‌லை ட‌ப்பிங் செய்து இஸ்லாமிய‌ப்பாட‌லாக‌ "ஃபாத்திமா குள‌த்தில் வ‌ந்த‌..." வ‌ழியில் கொஞ்ச‌ம் பெண்க‌ள் கூட்ட‌த்தைக்கண்டால் அங்கு சிறிது நேர‌ம் முட்டி போட்டு எல்லாம் த‌ப்ஸ் அடித்துப்பாடுவார்க‌ள்...என்னா டெக்னிக்கு?

"எல‌ந்த‌ப்ப‌ழ‌ம், நாக‌ப்ப‌ழ‌ம், ப‌னங்கிழ‌ங்கு, ம‌ர‌வ‌ல்லிக்கிழ‌ங்கு, மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய், வாடா, ச‌ம்சா போன்ற திண்பண்டங்களெல்லாம் மைக் வ‌ச்சி கூறி விக்க‌ முடியாதுங்கோய்"

....இன்னும் தொட‌ரும் இறைவ‌ன் நாடினால்....

என்றும் அன்புட‌ன்..
M.I. Naina Mohamed

கலக்கும் காதிர் முஹைதீன் பெண்கள் பள்ளி மாணவிகள்

இவ்வாண்டு SSLC தேர்வில் அதிரை காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சிவிகிதம் பெற்றுள்ளது. 400 க்கு மேல் 43 மாணவிகள் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

பள்ளி நோட்டீஸ் போர்டில் காணப்படும் தகவலின்படி நமது உள்ளூர் செய்தியாளர் தந்த தகவல்:

முதலிடம்
R. இந்துமதி = 482 மதிப்பெண்கள்


இரண்டாமிடம்
A.சுமையா = 473 மதிப்பெண்கள்


மூன்றாமிடம்
M.ஆஃரின் பானு = 466 மதிப்பெண்கள்

வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியைகளுக்கும் அதிரை எக்ஸ்ப்ரஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிரை SSLC (இங்கிலீஸ் மீடியம்) தேர்வு முடிவுகள்

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை கீழ்கண்ட தளங்களில் காணலாம்.

http://tnresults.nic.in/sslc/sslc.htm
www.pallikalvi.in
www.dg1.tn.nic.in
www.chennaionline.com

நமதூர் காதர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 25 மாணவர்கள் ஆங்கில வழிப்பாடத்தில் தேர்வு எழுதினர். அவர்களின் தேர்வு முடிவுகளை 565261 முதல் 565286 வரையிலான எண்களில் காணலாம்.

குறிப்பு: சகோ.மு.அ.ஹாலித், நூர், சாலிஹ்,தாஜ் ஆகியோரின் கருத்திற்கு மதிப்பளித்து முன்பு வெளியான தேர்வு முடிவு விபரங்களை நீக்கியுள்ளோம்.

Tuesday, May 25, 2010

எங்கே செல்லும் இந்த பாதை? பகுதி 1

வாழ்க்கையிலும், கல்வியிலும் எந்த குறிக்கோளும் இல்லாமல் நாட்களை கடத்திவரும் நம் பலருக்காக இந்த தொடர் கட்டுரைகளில் ஏதாவது நல்ல விசையங்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்ற  முயற்சி, அதிரை எக்ஸ்பிரஸ் பதிவாளர்கள் தாங்கள் இத்தொடர் கட்டுரையில்  வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் வேண்டும் என்ற கருத்தோட்டத்தில் உள்ள கட்டுரைகளை இங்கே  "எங்கே செல்லும் இந்த பாதை?" பகுதி 1, பகுதி 2 ….. என்று தொடராக பதியலாம், மற்றவர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் பதிவாளர்களுக்கும் ஈமொயில் மூலம் அனுப்பி பதிய செய்யலாம். சரி என்னுடைய முதல் பதிவுக்கு வருகிறேன். இது ஒரு சிறிய முயற்சி தான்.

ஆசிரியர் பணி:

ஒவ்வொரு சமுதாயம் நல்ல சமுதாயமாக வருவதற்கு கல்வி அவசியம், அக்கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஒரு மனிதன் நல்லவனாவதும், தீயவனாவதும் ஆசிரியரிடம் தான் உள்ளது. நல்ல சமுதாயத்தை உருவாக்குவது தான் ஒவ்வொரு நல்ல ஆசிரியரின் குறிக்கோள் மற்றும் லட்சியமாக இருக்கும்.

இங்கு முக்கிய விசையத்தை பற்றி அலசி ஆராய்வோம். நம்மூரில் முன்பு போல் இப்போது ஆசிரியர் பணிக்கு நம்மூர்வாசிகள் ஆர்வத்துடன் சேருவதில்லை என்பது மிக வருத்தமான விசையம். இதில் எந்த தெருவாசிகளும் விதிவிலக்கல்ல. இதற்கு ஆர்வமின்மையா? திறமையின்மையா? இதில் அதிக வருமானம் இல்லாத்தா? ஆசிரியர் பணி செய்வது கேவலமா? அப்படி என்னதான் காரணம்? என் பார்வையில் கொஞ்சம் யோசித்து பார்த்தேன், சில விசையங்கள் என் எண்ணத்தில் தோன்றியது அவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். மேலும் கருத்துக்கள் இருந்தால் பின்னோட்டமிடுங்கள்.

அதிரையை பொருத்தவரையில் நம்மக்களிடம் கல்வி கற்கும் ஆர்வம் அதிகரித்து வரும் அதே வேலையில் வெளிநாட்டு மோகம் இன்னும் அறவே குறைந்த பாடில்லை.

தான் பிள்ளை படிக்க வேண்டும், பிறகு சம்பாதிக்க வேண்டும் என்று மட்டும் தான் இன்னும் பல பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. தன் பிள்ளைகளை என்னவாக உருவாக்க வேண்டும் என்ற நீண்ட காலத்திட்டமிடல்கள் எதுவும் பல பெற்றோர்களிடம் உண்மையில் அட்லீஸ்ட் இருக்கிறதா என்பது சந்தேகமாகத் தான் உள்ளது. தன் பிள்ளையை அப்படியாக்க வேண்டும் இப்படியாக்க வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக வீடு வீடாக பெருமையடிக்கும் சில பெற்றோரை வேண்டுமானால் பார்க்கமுடியும். வேடிக்கை!

அதிரைவாசிகள் பலரிடம் சீக்கிரம் பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறதே தவிர தொலைநோக்குப் பார்வையுடன் எந்த ஒரு முறையான செயல்திட்டங்கள் எதுவும் இல்லை, ஆனால் மகள்களுக்கும், சகோதரிக்கும் வீடு கட்ட வேண்டும் என்ற ஒரே கட்டாய தலைவிதி குறிக்கோள் ஒன்றை மட்டும் தவிர. இது நம்மிடம் தொடர்ந்து வரும் வேதனையான விசையம். வரதட்சனை கொடுமைகள் முன்பு போல் இப்போது மோசமாக இல்லாவிட்டாலும், தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் இல்லாதா மற்றும் இஸ்லாத்தில் இல்லாத இந்த “பெண்ணுக்கு வீடு” என்ற சம்பிரதாயம் இன்னும் ஒழியவில்லை. இவைகள் மாற வேண்டும். மாறும் என்பது அறிவு வளர்ச்சியடைந்த இக்காலத்தில் நம்முடைய நம்பிக்கை. இன்ஷாஅல்லாஹ்.

தன் உண்மை உழைப்பால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்திக்கொள்வது நம் அனைவரின் எண்ணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன், மாறாக வாழ்க்கையில் எந்த லட்சியமில்லாமல் விரைவில் அதிக பொருளாதாரம் சம்பாத்திக்கும் கட்டாயத்தை நம் இளைய சமுதாயத்திடம் திணிக்கும் போக்கு மாறவேண்டும், இப்போக்கை மாற்றினால் தான் நாமும், நம்மூரும் நிறைய சாதித்து நல்ல முன்னேற்றங்களை நம் சமுதாயத்திற்காக சமர்பிக்க முடியும்.

பல வருடங்களுக்கு முன்பே நம் சுற்று வட்டாரத்திற்கு கல்வி கண் திறந்து கல்லூரியை தந்துல்லது நம் அதிரை. சரியான திட்டங்கள், குறிக்கோள்கள், லட்சியங்கள் அன்றைய காலாகட்டத்தில் நம்மூர் வாசிகளிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் இருந்திருந்தால், இன்றைக்கு அதிரை பள்ளி, கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் சமூக சேவையுள்ள ஆசிரியர்களாக அதிரைவாசிகள் இருந்திருப்பார்கள், எத்தனையோ பேராசிரியர். பரகத் சார் போன்றவர்களை அதிரை கண்டிருக்கும். நல்ல அதிரை ஆசிரியர்களினால் என்றோ அதிரையில் நிறைய சீர்த்திருத்தங்கள் வந்திருக்கும், தெருப்பிரிவினை என்றோ தூக்கி ஏறிப்பட்டிருக்கும், ஒரே தலைமையின் கீழ் ஒற்றுமை அதிரையில் என்றோ வந்திருக்கும். நடந்தவைகள் நடந்துவிட்டது, நடப்பவைகள் பற்றி யோசிப்போம்.

இங்கு மற்ற ஊர் ஆசிரியர்களை நான் குறை சொல்வது நியாயமில்லை, அவர்கள் தங்களின் வேலைகளை செய்கிறார்கள், இது பற்றி விரிவாக மற்ற கட்டுரைகளில் மிகத் தெளிவாக அலசலாம்.

TEACHING IS THE NOBLE PROFESSION என்பது இன்றும் அதற்கான புணிதத் தன்மையுடன்தான் உள்ளது இந்த ஆசிரியர் பணி. ஒரு  சில விசமிகள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்.


நடந்தவைகளை பற்றி பேசிக்கொண்டிருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை, இனி நடக்கப் போவதை பற்றி கொஞ்சம் யோசிப்பது அதிரையை பொருத்தவரையில் காலத்தின் கட்டாயம். ஏன் இந்த புனிதமான பணியை நம்மில் சிலர் நம்மூர் எதிர்கால சந்த்தியினருக்காக தேர்ந்தேடுக்க கூடாது? எத்தனைப் பேர் இந்த கேள்வியை நம்மிடம் கேட்டிருக்கிறோம். மனசாட்சியுடன் சிந்தித்துப் பாருங்கள். இது ஒருபுறமிருக்க நம் வீடுகளில் நம் பிள்ளைகளை ஆசிரியராக ஆக்கப்போகிறேன் என்று ஒரு பேச்சை போட்டுப் பாருங்கள், “இந்த வேலைல என்னத்த நம்ம புள்ள சம்பாதிக்கப்போறான், இதெல்லாம் ஒரு சம்பாத்தியமா?” என்ற பதில் ரொம்ப குயிக்கா வரும். வேதனையான விசையம். இந்த எண்ணம் மாற வேண்டும், நிறந்தர வேலை நியமான சம்பாத்தியம் ஆசிரியர் பணியில் மட்டும் தான் என்பதை நம் மக்கள் உணரவேண்டும்.

இப்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் பட்சத்தில் தங்கள் பிள்ளைகளையும் இளம் வயதில் ஒரு நல்ல வழிகாட்டியாக, ஆசிரியராக உருவாகுவதற்கு முயற்சி எடுக்கலாமே.

நம்மூர்வாசிகள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாக இருந்து வந்தால் நம் ஊருக்கும், நம் சமுதாயத்துக்கும் நல்ல பயனுள்ளதாக இருக்குமே.

நல்ல வழிகாட்டுதலுடன் நல்ல சமூக ஒற்றுமையுள்ள சமுதாயத்தை நாம் காணலாமே.

அதிரை பெரியோர்களும், பள்ளி, கல்லூரி நிர்வாகமும் நம் அதிரைவாசிகளை ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஊக்கமளிப்பார்களா? அட்லீஸ்ட் சில பெற்றோர்களாவது முயற்சி செய்வார்களா? செய்வார்கள் என்பது நம்முடைய நம்பிக்கை.

என்னுடைய லட்சியமும்  கல்லூரி விரிவுரையாளராக ஆகவேண்டும் என்பது தான். முதுகலை முடித்துவிட்டு முயற்சி செய்தேன், UGC மற்றும் SLET தேர்வுகள் 3 முறை எழுதினேன், வெற்றிபெற முடியவில்லை. பொருளாதாரத் தேடலின் கட்டாயத்தால் அம்முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இன்ஷாஅல்லாஹ் சில காலம் கழித்து குறைந்தபட்சம் சில காலமாவது கவுரவ விரிவுரையாளராகவாவது பணியாற்ற வேண்டும் என்பது என் நீண்ட கால லட்சியம் கணவு. துஆ செய்யுங்கள்.

மீண்டும் ஒரு நல்ல தலைப்பில், எங்கே செல்லும் இந்த பாதை? என்ற தொடரில் சந்திப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.


Monday, May 24, 2010

கல்விக்கு உதவிடும் நல்லவர்களின் கவனத்திற்கு - CMN சலீம்

'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.' (அல் குர்ஆன் : 13:11)

தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் கல்விக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள மார்க்கப் பிடிப்பையும் சமூகப் பற்றையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் ஒரு சில அறக்கட்டளைகள் மட்டுமே இந்த அறப்பணியைச் செய்து வந்தன ஆனால் இன்று தனிப்பட்ட முறையிலும் கூட தங்களால் இயன்ற அளவு படிக்கின்ற மாணவர்களின் நிலையை அறிந்து மனமுவந்து பலர் உதவி வருகின்றனர். இதன்மூலம் படித்து பட்டம் பெறும் முஸ்லிம் மாணவ மாணவியரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பெறுகி வருகிறது என்பதில் மாற்றமில்லை.

'கல்வி கற்றவராக இருங்கள்; கற்றுக் கொடுப்பவராக இருங்கள் கற்பவர்களுக்கும் கற்றுக கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவராக இருங்கள் என்று பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் வசதி வாய்ப்பைப் பெற்றவர்கள் செய்கின்ற இந்த அர்ப்பணிப்பு நிச்சயமாக சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதில் ஐயமில்லை.

இந்த அறப்பணியை மேலும் ஊக்கப்படுத்திடவும் உதவி செய்திடும் நல்ல உள்ளங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் யாரெல்லாம் கல்வி நிதியுதவி அளித்து முஸ்லிம் சமுதாயத்தின் வறுமையை ஒழித்திட சேவை செய்து வருகின்றனரோ அந்த முஃமீன்களோடு சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

பொதுவாக கல்வி நிதியுதவி கோரி வரும் விண்ணப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஓரளவிற்கு தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை தாங்களே பூர்த்தி செய்திட முடியும் என்ற நிலையில் உள்ளவர்களும் கூட உதவி கோரி அறக்கட்டளைகளுக்கு விண்ணப்பிப்பது சற்று கவலை அளிக்கிறது.

மேலும் அனைத்து நிறுவனங்களுக்கும் விண்ணப்பித்து அதன்மூலம் கிடைக்கின்றவரை லாபம் என்ற எண்ணம் உடையவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

எங்கே முஸ்லிம் சமூகத்தின் ஒரு சிலர் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து வசதியுடையவர்களின் அர்ப்பணிப்பு எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் சிலரின் அறியாமையால் பெருகி வரும் இதுபோன்ற சிறிய சிறிய இடையூறுகளைத் தவிர்த்து இந்தக் கல்விச சேவை வெற்றியடைந்திடவும் அதன் மூலம் முஸ்லிம் சமூகம் முழுமையான பலனைப் பெறவும் கல்வி உதவி செய்யக்கூடியவர்கள் தயவு கூர்ந்து கீழ்வரும் வழிமுறைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அறப்பணிகளை மேலும் மேலும் தொடர்ந்திடவேண்டுகிறோம்.

1. அறக்கட்டளைகள் மற்றும் தனவந்தர்கள் தாங்கள் அளிக்கின்ற கல்வி நிதியுதவி மூலம் பயன்பெறும் மாணவ, மாணவியர்களும் பிற்காலத்தில் இந்தச் சமூகப் பணியில் இணைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கான வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் உதவியவர்களின் நோக்கமும் சமுதாயத்தின் தேவையும் தொடர்ந்து பூர்த்தியாகும்.

2. இன்றைய இந்தியச் சமூகத்தில் முஸ்லிம் சமுதாயம் பெரிதும் சிக்கலைச் சந்திக்கும் துறைகளுக்கான படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவ, மாணவியர்கே நிதியுதவியில் முன்னுரிமை கொடுப்பது நல்லது. இது சமூகத்தின் பாதுகாப்பு நிலையை பெரிதும் உயர்த்தும். அந்த வகையில் அரசுப் பணியை நோக்கிய கல்விப் பயணத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். அதிலும் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், உளவுத்துறை, காவல்துறை மற்றும் இதழியல்(ஜர்னலிசம்), சட்டம் ஆகிய துறை சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி உதவி செய்திட வேண்டும். இவற்றிற்கு முழு முன்னுரிமை கொடுப்பது அடுத்த தலைமுறையின் சமூகப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.

3. உதவி செய்துவரும் பெருமக்கள் மிகக் குறிப்பாகச் செய்ய வேண்டியது ஒரு மாணவனின் அல்லது மாணவியின் கல்வித் தொகை முழுவதற்கும் பொறுப்பேற்று படிப்பு முழுமை பெறும் வரை நிதியுதவி செலுத்திட வேண்டுகிறோம். இருக்கின்ற பணத்தை குறுகிய தொகையாகப் பிரித்துப் பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தேவை முழுமையாக பூரத்தியாகாமல் இன்னும் யாரெல்லாம் உதவி செய்திகிறார்கள் அவர்களிடமும் பெற வேண்டும் என்கிற மோசமான பழக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும், ஏற்படுத்தி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

4. பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவ, மாணவியற்க்குத்தான உதவிகள் அதிகம் தேவைப்படுகிறது. இயற்பியலில், வேதியியலில், கணிதத்தில், வேளாண்மையில், மருத்துவம், விண்வெளி போன்ற படிப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு ஆய்வுகள் முடிவுபெறும் வரை உதவிட வேண்டுகிறோம். அத்தகைய ஆய்வுகள் மனிதகுலத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும். பல புதிய விஞ்ஞானிகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

5. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கல்வியின் அவசியத்தையும் ஆர்வத்தையும் எடுத்துச் சொல்லும் பிரச்சாரத்திற்கு (propogation)நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். துண்டுப்பிரசுரங்கள், கருத்தரங்கஙகள், பொதுக்கூட்டங்கள் என்று கல்விப் பணிகள் முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

ஆக சமுதாயத்தின் தேவையை பூர்த்தி செய்யும் துறைகளுக்கு முழு முன்னுரிமை கொடுப்பது படிக்கின்ற காலம் முழுமைக்கும் கொடுப்பது; ஆய்வுகளை ஊக்கப்படுத்துவது; தொடர் பிரச்சாரம் செய்வது. இதன்படி நமது அறப்பணிகளை அமைத்துக் கொண்டு கைகோர்த்துச் செயல்படுவோம் என்றால இன்ஷா அல்லாஹ் ஒரு மாபெரும் சமூகப்புரட்சி நமது சமூகத்தில் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. அவை முஸ்லிம் சமூகத்தை முன்னேறிய சமூகமாக வெகு விரைவில் மாற்றிவிடும் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம் நன்றி: CMN சலீம், சமூகநீதி முரசு, மே 2010

கல்விதொடர்பான ஆலோசனைகளுக்கு, குறிப்பாக என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் போன்ற ஆலோசனைப் பெற சகோதரர் CMN சலீம் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

அதிரை எக்ஸ்ப்ரஸில் நேரடி ஒளிபரப்பு சாத்தியமா?

நமதூர் குறித்த செய்திகளையும் அதிரைவாசிகளின் எழுத்தாற்றலையும் இணைய ஆவணமாக்கும் நோக்கில் பலரும் தங்கள் சுய கருத்துக்களைப் பதியும் வகையில் பதிவராகவும் கருத்திடவும் வழி செய்துள்ளோம். அதிரையின் பொதுவான செய்தி ஊடகமாக அதிரை எக்ஸ்ப்ரஸ் பெரும்பாலான அதிரைவாசிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு மென்மேலும் ஊக்கமளிப்பதோடு, புதிய புதிய வசதிகளையும் இணைய யுக்திகளையும் அறிமுகப்படுத்தி சிறப்பான முன்மாதிரி செய்தி தளமாக விளங்க மென்மேலும் முயற்சிக்கிறோம.

அவ்வகையில், அதிரை பைத்துல்மால் மற்றும் உள்ளூர் நிகழ்வுகளை குறிப்பாக பள்ளி ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் மற்றும் அதிரை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்யும் திட்டம் நெடுநாட்களாக இருந்து வந்தபோதும் தொழில்நுட்பத் தடைகளால் செம்மையாகச் செய்யும் சாத்தியம் குறைவு என்ற தகவலை தெரிவித்துக் கொள்கிறோம்.

BLOGTV, JUSTIN TV போன்ற தளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு சாத்தியமெனினும் குறைந்த நேரமே ஒளிபரப்ப முடியும். அவையும் ஒரேநேரத்தில் பலரும் சுட்டியை அணுகும்போது YOUTUBE ஐவிட மெதுவாகவே இயங்கியதை சோதனை முயற்சிகளில் பரீட்சித்து அறிந்தோம்.

எனினும், அதிரை பைத்துல்மாலின் திருக்குர்ஆன் மாநாட்டு நிகழ்வுகளை முடிந்த வரையில் புகைப்படங்களாகவும், குறும்படங்களாகவும் பதிவு செய்து அன்றைய ஹைலட்ஸுடன் உடனுக்குடன் பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம் என்பதை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நேரடி ஒளிபரப்புக்குத் தேவையான தொழில்நுட்ப பங்களிப்புகளும் வசதிகளும் சாத்தியப்படும் பட்சத்தில் ஏற்கனவே இம்முயற்சி மேற்கண்ட நமதூர் சகோதரர்களுடன் கலந்துபேசி, அதற்கான சாத்தியம் இருப்பின் அதையும் இன்ஷா அல்லாஹ் செய்வோம்.

அதிரை எக்ஸ்ப்ரஸின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கும் சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

12 ஆவது திருக்குர்ஆன் மாநாடு நிகழ்ச்சி நிரல் (மூன்றாம் நாள்)


30-05-2010 (ஞாயிற்றுக் கிழமை)

காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணிவரை இஸ்லாமிய அறிவுப் போட்டிகள் மாநாட்டுப்பந்தலில் நடைபெறும்.

அஸர் தொழுகைக்குப் பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகள்

தலைமை:
ஜனாப். J.M.இக்பால் ஹாஜியார்

முன்னிலை:
மெளலவி A.நெய்னா ஆலிம்
இமாம், முகைதீன் ஜும்ஆ பள்ளி, ஆலடித்தெரு-அதிரை

ஹாஜி ஜனாப். M.S.தாஜுதீன்
தீன் எஸ்டேட், சென்னை

ஹாஜி ஜனாப் S.M.முஹைதீன்
துணைத் தலைவர், அதிரை பைத்துல்மால்

ஹாஜி ஜனாப் S.அப்துல் ஹமீது
இணைப் பொருளர், அதிரை பைத்துல்மால்

ஹாஜி.ஜனாப் S.M. முஹம்மத் அலி
அல்நூர் ஹஜ் சர்வீஸ் - அதிராம்பட்டினம்

கிராஅத்:
மெளலவி ஹாபிழ் P. அப்துல் காதர் காஷிஃபி
இமாம், மரைக்கா பள்ளிவாசல் - அதிரை

வரவேற்புரை:
ஜனாப். வழக்கறிஞர் A.முனாப் B.A.B.L.,
செயலர், அதிரை பைத்துல்மால்

சிறப்புரை:
மெளலவி ஹாபிழ் ஹாஜி ஜனாப் M.சதீதுத்தீன் M.A.,M.Phil.,பாஜில் பாகவி
தலைமை இமாம், அடையார் பள்ளிவாசல் - சென்னை

"திருமறை கூறும் பொருளாதாரம்"

மெளலவி M.முஹம்மத் மன்சூர் காஷிஃபி
இமாம், மஸ்ஜித் ஆயிஷா, புரசைவாக்கம் - சென்னை
"திருமறை கூறும் அறிவியல் உண்மைகள்"

சிறப்பு விருந்தினர்
முனைவர் ஜனாப் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

"இறைவனின் அருட்கொடை இனிய இஸ்லாம்"

நன்றியுரை:
ஹாஜி ஜனாப். S.பரக்கத் M.A.,M.Phil.,M.Ed.,PGDTE
தலைவர், அதிரை பைத்துல்மால்

நன்றி: (புகைப்படம் : சகோ.முனாஸ்கான்)

வின்ன‌ர்ஸ் அவார்ட்!!!


அருமை அதிரை எக்ஸ்பிர‌ஸ் வாச‌க‌ர்க‌ளே.. ந‌ம‌தூரில் இவ்வ‌ருட‌ம் +2 ம‌ற்றும் ப‌த்தாம் வ‌குப்பு தேரிய‌ மாண‌வ‌ மாண‌விய‌ர்க‌ளுக்கு வெளி நாடு வாழ் அதிரைவாசிக‌ள் மூல‌ம் நிதி திர‌ட்டி தேர்வில் வென்ற‌வ‌ர்க‌ளுக்கு ஊக்க‌ம‌ளிக்கும் வ‌கையில் "அதிரைஎக்ஸ்பிர‌ஸ் வின்ன‌ர்ஸ் அவார்ட்" என்ற‌ பெய‌ரில் விருதுக‌ளை வ‌ழ‌ங்கி வெற்றியாள‌ர்க‌ளை கெள‌ர‌வித்து அவ்ர்க‌ள் ப‌டிப்பை தொட‌ர‌ ஆர்வ‌ம்மூட்ட‌ வேண்டும் என்ப‌து என்னுடைய‌ வேண்டுகோள்.

இத‌னால்ப‌டிப்பில் பிந்த‌ங்கிய‌ மாணவ‌ மாண‌விய‌ர்க‌ள் தாங்க‌ளும் இது போன்று விருது வாழ்த்துக்க‌ளை வாங்க‌ முனைப்புட‌ன் செய‌ல்ப‌டுவார்க‌ள்.

இத‌னால் ந‌ம் பிள்ளைக‌ளின் க‌ல்வி அறிவு மேம்ப‌ட‌ அதிரை எக்ஸ்பிர‌ஸ் துணைப்புறிய‌ காத்திருக்கிற‌து.

வாச‌க‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து க‌ருத்துக்ளை பின்னூட்ட‌ம் மூல‌ம் ப‌திய‌ வேண்டுகிறேன்.

Sunday, May 23, 2010

12 ஆவது திருக்குர்ஆன் மாநாடு நிகழ்ச்சி நிரல் (இரண்டாம் நாள்)


29-05-2010 (சனிக்கிழமை)

காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணிவரை இஸ்லாமிய அறிவுப் போட்டிகள் மாநாட்டுப்பந்தலில் நடைபெறும்.

அஸர் தொழுகைக்குப் பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகள்

தலைமை:
ஹாஜி ஜனாப். A.J.ப்துல் ரஜாக் B.A.B.L.,
வழக்கறிஞர், உயர்நீதி மன்றம், சென்னை

முன்னிலை:
ஜனாப் S.M. அக்பர் ஹாஜியார்
கெளரவப் புரவலர், அதிரை பைத்துல்மால்

ஜனாப். S.முஹம்மத் அஸ்லம்
செயலர், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள்

ஹாஜி.ஜனாப்.M.S.ஷிஹாபுத்தீன்
தீன் எஸ்டேட், சென்னை

ஜனாப் M.முஹம்மத் அலி
தலைவர், தரகர்தெரு ஜமாஅத்

ஜனாப் A.L.கமருல் ஜமான்
துணைத் தலைவர், கடற்கரைத் தெரு ஜமாஅத்

கிராஅத்:
ஜனாப். M. கமருதீன்
இமாம், மஸ்ஜிதுன் நூர், வண்டிப்பேட்டை

வரவேற்புரை:
ஹாஜி.ஜனாப். C. முஹம்மது இபுறாகிம்
இணைச் செயலர், அதிரை பைத்துல்மால்

சிறப்புரை:
சிறப்பு விருந்தினர் திரு. அரிய அரச பூபதி M.A.B.L.,M.Phil.,M.Ed.,

"திருக்குர்ஆனின் சிறப்புகள்"

மெளலவி ஹாஜி.ஜனாப் M.முஹம்மத் அபுதாஹிர், பாகவி
பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி, சூரமங்கலம், சேலம்
"திருக்குர்ஆன் கூறும் வரலாறுகளும், படிப்பினைகளும்"

மெளலவி ஹாஜி.ஜனாப் ஹாபிழ் K.அஹமத் அலி
தலைமை இமாம், ஜும்ஆ மஸ்ஜித் - தாம்பரம் - சென்னை
"திருமறை வழங்கும் பெண்ணுரிமை"

மெளலவி ஹாஜி.ஜனாப் ஹாபிழ் M.M.முஹம்மத் ஹுசைன் மன்பஈ
முதல்வர், J.A.M. கல்லூரி வைகை அணை, தேனி மாவட்டம்
"திருமறை கூறும் சமய நல்லிணக்கம்"

அதிரை பைத்துல்மாலின் சேவை உரை:
ஹாஜி ஜனாப். A.பகுருதீன் B.Sc.,
இணைச் செயலர், அதிரை பைத்துல்மால்

(...இன்ஷா அல்லாஹ் தொடரும்...)

நன்றி: (புகைப்படம் : சகோ.முனாஸ்கான்)