இனியவை நாற்பது (கவிதை)

1. ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை

பாழின்றி வைத்துப் பழகு. .2. அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு

கடுத்தலின்றிப் பேசுதல் நன்று.


3.உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ

உதவிகள் செய்து விடல்.


4. எறும்பினை போலவே என்றுமுன் வாழ்வில்

சுறுசுறுப்பை காணல் சிறப்பு.


5. உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்

நிற்காம லோடட்டும் நாள்.6. மகிழ்ச்சியை காட்டி மகிழ்ச்சியை யூட்டி

மகிழ்ச்சியை கண்ணாலே காண்.


7. நல்ல எதிர்பார்ப்பு நம்மில் வளர்ப்பதுவே

வல்லவனாய் மாற்றும் வழி.8. நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;

நம்பி யிறங்கு களம்.9. வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்

யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.


10. வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்

நோய்விட் டகலச் சிரிப்பு.


11. உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகை

கள்ளமின்றிக் காட்டு மிதழ்.12. உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்

உன்னையே மாற்றும் மனம்.13. உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்

உன்வாழ்வே நீயே உணர்.14. அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்

விடாதுழைப்பு செய்து விடல்.


15. எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்

எவருடனும் நட்புடனே பேசு.16. மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி

பற்றியே பற்றுடன் கேள்


17. குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்

பற்று வளர்த்திடும் பண்பு18. சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல

கரவோசை காணும் இசை.19. மனச்சுமை போக்க மனம்விட்டு பேச

தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.20. உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்

திரையில்லா அன்பே தெரிவு21. எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்

வண்ணம் செயலும் நிகழ்வு.22. சிரித்த முகமே சிறந்த முகமாம்

விரிந்த மலரின் மணம்.


23. ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று

கோபத்தை விலக்கி விடல்.24. தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்

ஆர்வமுடன் செய்யப் பழகு.25. மனமும் செயலும் மொழியும் கலந்த

தினப்பயிற்சி என்றும் சிறப்பு.26. ”உன்னால் முடியும்” உளமதில் சொல்லிவை

பின்னால் தெரியும் விளைவு.27. உன்னை விடவும் உலகில் நலிந்தவரை

தன்னுயிராய்க் காத்தல் நலம்.28. எல்லா உலகும் இயக்கும் இறையிடம்

எல்லாமும் விட்டு விடு.


29. வெற்றி கனியினை வெல்லும் வரையிலே

பற்றிய பாதையில் செல்.


30. எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி

நல்லெண்ண உள்ளமே கொள்.31. இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்

ம்றந்து நினைக்கவே இன்று.32. இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி

அன்பினைப் பற்றியே வாழ்.33. கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே

விட்டு விடாது ஒழுகு.


34. தேடலொன்றே வாழ்வினை தேடிடும் காரணம்

ஓடவோடத் தேடி உழை.


35. வாழ்க்கை புயலை வரவேற்றுக் கொண்டால்

வாழ்க்கைப் பழகிடும் பார்.36. சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை

அடுத்தடுத் தென்றும் அழிவு37. ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்

ஓசை விளையும் உளம்.38. நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே

என்றும் வருமாம் உதவி.39. பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்

தூரமாய் நிற்கு முலகு.


40. எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்

திண்ணம் உளவியல் சொல்ஆக்கம்:-

அபுல் கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்)
Share:

ஆங்கில புத்தாண்டு கொண்டாடலாமா?


கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள்.

கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இஸ்லாமியர்கள் மத்தியில் இந்த கொண்டாட்டம் மிகுந்த உற்ச்சாகத்துடன் கொண்டாடபடுவது வேதனையான விஷயம் .

சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கடற்கரை மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கும் சென்று வருகின்றனர் இது முற்றிலும் இஸ்லாத்திற்கு மாரமான செயல் என்பதை துளியும் சிந்திப்பது இல்லை .

புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.

3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)

மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது?

புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.
இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு “முஹர்ரம் பிறை 1 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது”

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ”இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று சொல்வதும், அதை கொண்டாடுவதும் தவறாகும்.
Share:

நம்பிக்கைப் பூக்கள் - (சிறுகதை)லக்கி ஷாஜஹான்

கதாசிரியர் பற்றிய குறிப்பு:   ஒரு ஜீவநதியின் சங்கீதம் போன்று சொற்களை இசைத்துச் செல்லும் (இ)லக்கி(ய) ஷாஜஹானின் எழுத்துகள் - சோகத்தையும் கூட அப்படி எழுத முடியுமா என்ற ஆச்சரியத்தை அளித்தபடி வாசிப்பனுபவத்திற்கு வித்திடுகின்றன இச்சிறுகதையில்)பதினோரு மணிக்குச் சில நொடிகள் இருந்த தருணத்தில் எல்லாவற்றையும் மூடி கம்ப்யூட்டரை அணைத்து விட்டு மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு எழுந்து போய் கார்டை பஞ்ச்சிட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தேன்.. சிலீரென பனி முகத்தில் அறைந்தது.. மனம் மட்டும் கனத்து போய் இருந்தது..சே.. என்னடா வாழ்க்கை! இது ஒரேடியாக அடிமனதிலிருந்து எழுந்த வெறுப்பு பெருமூச்சாக மாறி அனலாக சுவாசப்பட்டு வெளியேறியது..

சாலையில் சாரை சாரையாய் வாகனங்கள் சீறிக் கொண்டிருந்தன.. சௌதியில் இரவும் பகல் போல் தான்.. எங்குதான் போகிறார்கள் இந்த மக்கள்.. அல்லது எங்கிருந்துதான் வருகிறார்கள்.. கொஞ்சம் ஒதுங்கி நடக்கையில் மோதுவது போல் வந்துவிட்டு தன் கேம்ரியை ஒடித்து வளைத்து பறந்து போனான் ஒரு சௌதி குடிமகன்.. என் வாய் என்னையறியுமால் மோசமான வசவு வார்த்தை ஒன்றை வாரி இறைத்தது.. இவ்வளவு வேகமாய் போய் கடைசியில் ஒரு கறுப்பு தேநீர் அருந்திக் கொண்டு கொட்ட கொட்ட முழித்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருக்கப் போகிறான்..இதற்கு என்ன வேகம் என்ன பாய்ச்சல்..? ஒரு வேளை இவன் வளர்ந்த முறை தப்போ...?

தபாப் சாலையின் சிக்னலை மதித்து வாகனங்கள் நின்றுகொண்டிருக்க, நான் ஊடாலே நடந்து பஸ் ஏறும் வழக்கமான இடத்துக்கு வந்தேன்.. ஏழு மணி நேரம் தொடர்ச்சியாய் கம்ப்யூட்டர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு வந்தது அசதியாய் இருந்தது.. அருகில் உரசியபடி வந்து நின்றது ஒரு டாக்ஸி... பாகிஸ்தானி ட்ரைவர் முகமன் சொல்லி "பத்தா ...?" என்றான்..

எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே என்ற பிரபலமான வாசகம் போல் நான் நின்றிருந்த சாலையில் போகும் அனைத்து வாகனங்களும் பெருவாரியாக பத்தா நோக்கியே போகும்.. நான் பத்தாவில்தான் தங்கியிருந்தேன்.. நான் தயக்கமாய் "பத்தா... ரியாலின் ???" என்றேன்..பொதுவாக அந்த இடத்திலிருந்து பத்தாவுக்கு டாக்ஸிகளில் பெறப்படும் கட்டணம் பத்து ரியால். நானோ இரண்டு ரியால் பயணி.. அரைமணிக்கு ஒரு கோஸ்டர் வீதம் பத்தாவிலிருந்து தல்லா வரை சௌதிகள் அழைத்துப் போகும் மினி பஸ் ( கோயில்மாடு என்று நம்மவர்கள் அதற்கு பெயரிட்டிருக்கிறார்கள்.. எந்த சிக்னலையும் மதிக்க மாட்டார்கள்.. எந்த சாலை விதிகள் படியும் பயணிக்க மாட்டார்கள் ) மற்றும் மெகா பஸ் வசதி உண்டு. சமயங்களில் ஓரிடத்திலிருந்து ரெண்டு மூன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு இது போன்ற டாக்ஸிகள் இரண்டு ரியாலுக்குக் கிடைக்கும்..முன்னே ஒருவரும் ( சமயங்களில் இருவராக ) பின்னே நால்வராக பொதிக்கப்பட்டு கெட்டியாய் அழுத்தப்பட்டு பயணிக்க வேண்டும். இரண்டு ரூபாய்க்கு பத்தாவுக்குப் பிரயாணிக்கும் பயணிகளுக்கு டாக்ஸி ட்ரைவர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும்.. ஏனெனில் இரண்டு ரூபாய்க்கு பஸ் ஓட்டும் பஸ் ட்ரைவர்களுக்கு இது போல் டிக்கெட் ஏற்றுபவர்களை கண்டால் அறவே பிடிக்காது.. இறங்கி வந்து சில நேரங்களில் அப்படி பயணிகளை ஏற்றும் ட்ரைவர்களை அடித்த சம்பவமும் உண்டு..தவிர போக்குவரத்து விதிகள் அல்லது சௌதி சட்டப்படி இப்படி டாக்ஸி பயணிகள் ஏற்றுவது குற்றம். இருப்பினும் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.. சட்ட மீறல்கள் என்பது எல்லா தேசத்திலும் இருக்கிறது.. அதில் த்ரில்லும் இருக்கிறது என்று ஒருமுறை ஒரு ட்ரைவர் சொல்ல கேட்டிருக்கிறேன்..மாட்டினால் முன்னூறு ரியால் அபராதமும் ஒரு நாள் சிறைவாசமும் என்பதும் தெரியும்.

டாக்ஸி ட்ரைவர் சம்மதித்து அவசரப்படுத்த நான் முன்னால் ஏறிக் கொண்டேன்.. மெதுவாய் காரை நகர்த்திய ட்ரைவர் கேட்டான்...

ஹிந்தி...?

'ம்' என ஒற்றை சொல்லோடு முடித்துக் கொண்டேன்..

நான் இருந்த மன நிலையில் தொடர்ந்து பேச விரும்பவில்லை.. ஆனால் ட்ரைவர் வளவளத்த கேஸ் போலும், ஏதேதோ கேட்டுக் கொண்டே வர நான் பட்டும் படாமலும் வலுக்கட்டாயத்தாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டு வந்தேன்... மனம் வேறொரு சிந்தனையில் வேறொரு நிகழ்வை திருப்பி திருப்பி திரையிட்டுக் கொண்டிருந்தது..

'ஊருக்கு வர்ரதுன்னா வேற வழியில்லையா..?' ஆயிரத்தி நூற்றி பதினேழாவது முறையாக கேட்கிறாள்.

'ம்ஹும். ஒண்ணு பதினஞ்சு நாள் லீவுல வரணும்..இல்லைன்னா முடிச்சிட்டுதான் வரணும்..'

'அப்ப நான் செத்ததுக்கப்புறம் தான் ஊருக்கு வருவீங்க அப்படித்தானே? திடீரென குரல் உச்சஸ்தாயில் உயர்ந்தது...'

'இல்லைடாம்மா.. நான் என்ன சொல்றேன்னா..'

'நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.. நான் போனை வச்சிடறேன் ' படீரென ரிசீவர் அறைந்து சாத்தப்பட்டது.

என்ன சகோதரா சோர்ந்து காணப்படுகிறாய்.. இன்றைய பணி மிக கஷ்டமா டாக்ஸி ட்ரைவரின் குரல் திடீரென நினைவலையை அறுத்துவிட கார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சிக்னலில் பச்சைக்காக நின்றது..

"ஆமாம்.. " ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமே...

"நினைத்தேன் சகோதரா.. உன்னைப்போல எத்தனையோ லட்சம் பேர் இப்படி கஷ்டப்படுகிறார்கள் இங்கே... என்ன வேலை பார்க்கிறாய் நல்ல வேலைதானே...?"

"ஆனா நிறைய பேர் நல்ல வேலைல இருக்காங்களே..ஒண்ணுமே தெரியாம" மனம் சட்டென இன்னொரு உரையாடலை ஆரம்பித்து வைத்தது..

"அவங்க இருக்காங்க.. உனக்குதான் ஆங்கிலமே பேச வரலையே.. உன்னோட சின்னவன் அவன் எப்படி பேசறான்.. " சித்தப்பா இன்னொரு பையனை குறிப்பிட்டு பேசினார்..

"அவன் எல்.கே.ஜிலேர்ந்து இங்கிலீஷ் மீடியத்திலே படிச்சான்.. நான் பன்னெண்டாவது வரைக்கும் தமிழ் மீடியம்தானே படிச்சேன்.."

புத்திசாலிதனமாய் பேசுவதாய் சொல்ல அதே வேகத்தில் கேள்வி வந்து அறைந்தது காதில் சித்தப்பாவிடமிருந்து..

"நான் என்ன படிச்சேன்.. நான் பேசலை...?"

"உங்களுக்கு இருபத்தைந்து வருட சௌதி அனுபவம்" சொல்ல வார்த்தை தொண்டை வரை வந்து நின்று கொண்டது.. உரையாடல் தொடர்ந்தால் அடுத்து வேற பதிலால் அவமானப்பட நேரிடும்.

"உன்னால என்ன வேலைதான் பார்க்க முடியும்னு நினைக்கிறே.. ?" சித்தப்பா கூர்மையாக பார்த்தார்.

உன்னைத்தான் சகோதரா.. என்ன வேலை பார்க்கிறாய்..? கேட்டுக்கொண்டே காரை நகர்த்தினான் ட்ரைவர்.

என்ன வேலையாய் இருந்தாலும் செய்ய ரெடியா இருந்துக்கோ. அதான் சௌதியில் நல்லது. ஊரிலேயே அனுபவஸ்தர்களால் பாடம் அறிவுறுத்தப்பட்டது..

ஆனால் நினைத்த அளவுக்கு சௌதி இல்லை. நேர்முகத் தேர்வில் அனுபவம் பற்றி அதிகம் கேட்கப்பட்டது. அல்லது அரபு மொழி பரிச்சயம் பற்றி கேட்கப்பட்டது.. இரண்டிலும் நான் சொன்ன பதில்கள் எந்த நிர்வாகத்துக்கும் திருப்தி தராது என்பது உடனேயே தெரிந்து போனது.

தற்காலிகமாக ஒரு இடத்தில் வேலை கிடைக்க அந்த அரேபிய முதலாளி இரண்டு மாதம் சம்பளம் தராமல் கிடப்பில் போட்டான்..சம்பந்தமே இல்லாத வேலைகளை ஏவினான்.. பணி நேரத்தை அதிகப்படுத்தினான்.. மூன்று மாதத்திற்குப் பின்னால் மொத்த சம்பளப்பணத்தில் நான்கின் ஒரு பகுதி தரப்பட அன்றே அங்கிருந்து விலகியாகி விட்டது..

திங்கறதுக்கு சோறும் படுக்கறதுக்கு இடமும் கிடைச்சா சௌதில வேலைக்கு போவ மனசே வராது தம்பி..இன்னொரு தூரத்து உறவினர் எல்லோரும் முன்பாக வைத்து ஏளனப்படுத்த மனம் உடைந்து போனது.

முன்னிலும் வேலை தேடும் படலம் இன்னும் வெறியோடு தொடங்கியது.. இந்த வேலை கிடைக்க நிறைய கொள்கைகளை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும்படி ஆயிற்று.. பதினோரு மணி நேர வேலை என்பது கொஞ்சம் அவஸ்தையாயிருந்தாலும் இதுதான் நிதர்சனம் என்ற உண்மை விளங்கி கொள்ள மனம் அமைதியாக ஏற்றுக் கொண்டு விட்டது. இதோ மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.. கம்ப்யூட்டரைப் போலவே இயந்திர கதியில்...

"ஹலோ என்ன தூக்கமா..?" டாக்ஸி ட்ரைவர் கிளவுஸ் அணிந்த கையால் தொடை தட்டி கேட்டான்.. சே என்ன குளிர்..? இது போல் ஒரு கிளவுஸ் அணிந்து கொண்டால் கொஞ்சம் தேவலாம் போலிருக்கும். வெளியே பார்த்தேன்.. சவூதி அமெரிக்க வங்கியின் தலைமையகத்தை டாக்ஸி கடந்து கொண்டிருந்தது..இதில் கூட ஒரு தமிழர் தாம் தொழில்நுட்ப தலைவராம்..அணுகி பார்த்திருக்கலாமோ..?

"இல்லை தோழரே.. என்ன கேட்டீர்கள் என்ன வேலை பார்க்கிறேன் என்றா... உங்களை போல் இவ்வளவு சந்தோஷமான பணி அல்ல.. கொஞ்சம் கஷ்டமானது.." நான் பார்க்கும் வேலை பற்றி சொன்னேன்..

சிரித்தான் டாக்ஸி ட்ரைவர். அதில் 'என் வேலை பற்றி உனக்கென்ன தெரியும்..?' என்ற அலட்சியம் இருந்தது.. "நண்பனே.. ரியாத்தின் தற்போதைய டாக்ஸி ட்ரைவர்கள் நிலமை பற்றி எதாவது உனக்கு தெரியுமா..? ஒரு நாள் நான் வண்டி எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் தினமும் நூற்றி அறுபது ரியால் என் முதலாளிக்குத் தர வேண்டும்.. சவூதி அரசு எடுக்கும் முடிவுகள் வேறு கலவரத்தைத் தருகிறது..இந்தப் பணி மொத்தமும் இந்த நாட்டு குடிமகன்கள் மட்டுமே இனி செய்யக்கூடும் என அடிக்கடி சொல்லி வயிற்றில் புளி கரைக்கிறார்கள்.. தவிர இப்போது இங்கு டாக்ஸிகளின் வரத்தும் அதிகமாகி விட்டது.. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு உள்ள தூரத்தின் அளவை விட அதற்கிடையே ஓடும் டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகம்.. இருந்தும் நான் ஏன் இதை செய்கிறேன் தெரியுமா..?

அவனுக்கும் துக்கங்கள் இருந்தன.. ஊரில் திருமணமாகாத நான்கு சகோதரிகள்.. அப்பா வைத்து விட்டு செத்து போன நான்கு லட்சத்துக்கு மேலான கடன் என்று ஒரு சின்ன பட்டியல் ஒப்பித்தான்.. சமீபத்தில் இங்கொரு விபத்தில் சிக்கி வெகு அதிகமாய் செலவாகி அதில் கொஞ்சம் கடன் சுமை ஏறி இருப்பதை எல்லாம் விலாவரியாகவே சொன்னான்.

ஆனாலும் நண்பனே.. இந்தச் சோகங்களை எல்லாம் நான் பழக்கி கொண்டு விட்டேன்.. காரணம் எனக்கு இருக்கும் பிரச்னைகளைப் பற்றி நான் நினைத்து கொண்டே இருந்தால் என்னால் உற்சாகமாக செயல்பட முடியாது.. உற்சாகமின்றி செயல்பட்டால் அது என் தொழிலுக்குச் சரியானதல்ல... எப்போதும் நான் என்னுடைய கஷ்டங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் இதோ இப்போது கூட கவனம் தடுமாறி நீயும் நானும் போக இருக்கும் இடத்திற்குப் போகமுடியாமல் போய்விடும்..

சிரித்தபடியே சொன்ன அந்த பாகிஸ்தானி ட்ரைவர்க்கு என் வயதுக்கு பத்து வயது அதிகமிருக்கலாம்.. இன்னும் பல மனதுக்குக் கனமான விஷயங்கள் சொன்னான்.. இவ்வளவு இருந்தும் உன் குடும்பமும் என் குடும்பமும் நம் நாட்டில் சந்தோஷமாக வயிறாற உண்டு நமக்காக நம் பொருட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அதற்காகவது இந்தப் பூமிக்கு நன்றி சொல் நண்பா.. புகழ் அனைத்தும் இறைவனுக்கே என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டே வேலையைப் பார்.. அவன் சொல்ல சொல்ல மனம் லேசாகிக் கொண்டே போனது..இப்போதெல்லாம் இந்த மாதிரி யாராவது பேசினால் மிக ஆறுதலாக இருக்கிறது.

இறங்கப்போகும் இடம் வந்தவுடன் காசு எடுத்து கொடுத்து விட்டு இறங்க முற்பட்டேன்..

உன்னோடு பேசிக் கொண்டிருந்தது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.. நன்றி தோழனே நான் முகமன் கூறி அவனுடன் விடைப்பெற்றுக் கொள்ளும் பொருட்டு கை நீட்டினேன்..

பதிலுக்கு முகமன் கூறி நிதானமாய் இடக்கையால் கிளவுஸ் கழட்டி என்னிடம் வலது கையை நீட்டினான்..விரல்கள் இருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் கால் இஞ்சுக்குச் சின்ன சதை குப்பிகள் மட்டுமே நீட்டிக் கொண்டிருக்க கடைத்தெரு வெளிச்சத்தில் அவன் கை மொண்ணையாய் ஒழுங்கற்ற வடிவத்தில் என் உறுதியான விரல்களைத் தொட்டு கையைப் பற்றிக் குலுக்கியது.

- கதாசிரியர்: லக்கி ஷாஜஹான்.

நன்றி:-  இந்நேரம் . காம்
Share:

அரசுப் பள்ளிகளில் புதிய நிர்வாகக் குழு : தமிழக அரசு உத்தரவு !


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக் குழு 6 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.


குழுவில் 75 சதவீதம் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் இடம்பெற வேண்டும். பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கும் குழுவில் வாய்ப்பளிக்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீத உறுப்பினர்கள் பின்வரும் விகிதத்தில் இடம்பெற வேண்டும்.

மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தும், மற்றொரு பங்கு உறுப்பினர்கள் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்தும், இன்னொரு பங்கு உறுப்பினர்கள் உள்ளூர் கல்வியாளர்களிலிருந்தும் நியமிக்கப்பட வேண்டும்.

பெற்றோர் உறுப்பினர்களில் இருந்து குழுவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், அவர் இல்லாத பள்ளிகளில் பள்ளியின் மூத்த ஆசிரியர் இந்தக் குழுவின் பதவி வழி உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் செயல்படுவார்.

இந்தக் குழு மாதத்துக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்க வேண்டும். குழுவில் மொத்தமாக 50 சதவீத பெண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பள்ளி நிர்வாகக் குழுவில் 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

குழுவின் பணிகள் :
ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும். அருகில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்வதையும், அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் உரிமை மீறப்படும்போதோ, அவர்கள் துன்புறுத்தப்படும்போதோ, பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படும்போதோ உள்ளூர் கல்வி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.


குழந்தைகள் கல்வி பயில்வதற்குத் தடையாக கல்விக் கட்டணம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சத்துணவு வழங்கும் திட்டத்தை மேற்பார்வையிட வேண்டும். பள்ளிகளில் கற்பித்தலைத் தவிர ஆசிரியர்கள் தனிப் பயிற்சி எடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் :
ஒவ்வொரு பள்ளி நிர்வாகக் குழுவும் ஒவ்வொரு ஆண்டுக்கும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். நிதியாண்டு முடிவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முன்னதாக இந்தத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் அல்லது துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்பிடம் வழங்க வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணிகள் தவிர வேறு பணிச் சுமைகள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் பணிகள் தவிர பிற பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பள்ளிச் செலவுக் கணக்குகளையும், உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து பெறப்படும் நிதி குறித்த கணக்குகளையும் தனியாகப் பராமரிக்க வேண்டும்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக் குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை திட்ட இயக்குநர் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் உத்தரவில் குறிபிடப்பட்டுள்ளது.

Source : காலை நாளிதழ்
Share:

அதிரை நல்வாழ்வு பேரவையின் கோரிக்கை மனு !


அதிரை நகரத்து மக்கள் தொடர் வண்டியில் சென்று கிட்ட தட்ட 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அதிரைக்கு அகல ரயில் பாதை வேண்டி பொது மக்கள் பேரணி நடத்தினர்.அதிரை பேரூராட்சி தலைவர் சகோ.S.H.அஸ்லம் ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார்.


இதில் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.பல ஊர்களில் அகல ரயில் பாதை பணி தாமதமாக துவங்கினாலும் விரைவாகவே நிறைவு செய்யப்பட்டு உள்ளது. அதிரைக்கு அகல ரயில் பாதையின் பணியினை துரிதப்படுத்த கோரி அதிரை நல்வாழ்வு பேரவை செயலாளர் A.ஷாகுல் ஹமீது (நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணி) அவர்கள்,


மாண்புமிகு அன்புள்ள ஜனாப் M.A.அப்துல் ரஹ்மான் சாகிப் 
(MP) அவர்களுக்கு வேண்டுகோள் மனுவை எழுதியுள்ளார்.

 அதிரை மக்கள் தொடர் வண்டியில் பயணம் செய்ய ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகல ரயில் பாதை பணியினை விரைவாக சரி செய்து அதிரை மக்களின் ஏக்கத்தை தனிப்பார்களா? 
Share:

அதிரையின் மழையளவு!

தானே புயலின் தாக்கத்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று காலை புயல் கரையை கடந்த போதும் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

கடந்த 24மணிநேரத்தில் அதிரையில் பெய்த மழை அளவு 09.03 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என மத்திய வானிலை மைய தானியங்கி கணினி குரல் தெரிவிக்கிறது.

நன்றி: சிவில்அபு
Share:

தானே புயல் : அதிரை அருகே 25 மீனவர்களைக் காணவில்லை!


மல்லிபட்டினம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேர் மாயமானார்கள். அவர்கள் புயலில் சிக்கியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ‘தானே’ புயல் காரணமாக தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் படகுகளும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற தஞ்சை மீனவர்கள் 25 பேர் மாயமான சோக சம்பவம் நடந்து உள்ளது.

மல்லியப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திகேயன், ரங்கராஜன், பழனியாண்டி, நாகராஜன், முருகன் ஆகியோர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகுகளில் 25 மீனவர்கள் கடந்த 27-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மறுநாள் (28-ந்தேதி) கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இன்றுவரை கரை திரும்பவில்லை. அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அந்த 25 மீனவர்களின் குடும்பத்தினர் பதட்டம் அடைந்து உள்ளனர்.

இதுபற்றி கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.   புயலால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் சிக்கிக் கொண்டார்களா? என்று தெரியவில்லை. பலத்த காற்று வீசுவதால் மீட்பு பணியில் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் மீனவர்கலால் ஈடுபட முடியவில்லை

நன்றி: மாலை நாளிதழ்
Share:

மரண அறிவிப்பு (ஹாஜரா அம்மாள், நடுத்தெரு)


காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் யூசூப் ஆலிம் அவர்களுடைய மனைவியும், பரக்கத் ஆலிம், தாஜுதீன் ஆலிம், நூர் முஹம்மது ஆலிம் இவர்களுடைய தாயாருமாகிய ஹாஜரா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணி அளவில் மேலத்தெரு ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்  அன்னனாரது மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.

தகவல்: அபூபக்கர் (அமேஜான்)
Share:

முத்துப்பேட்டை ஜும்ஆ பள்ளி திறப்புவிழா, நேரலை மற்றும் வாழ்த்துவோம் வாருங்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும்

30.12.2011 வெள்ளிக்கிழமை திறப்புவிழா காணும் முத்துப்பேட்டை பெரிய ஜும்ஆ பள்ளி,  இபாஃதத்துகள் மூலம் நிரம்பி வழிய பிரார்த்தனையையும், வாழ்த்துக்களையும் உலகெங்கிலும் உள்ள நம் சகோதரர்கள் வழங்கும் வகையில், நேரடி உரையாடல் வழங்க, லைவ் சாட்டிங் முறையை அதிரை எக்ஸ்பிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவின் நேரலையை காணுவதோடு மேலும் வாழ்த்துக்களையும் வழங்க வாசகர்களை வெள்ளிக்கிழமை காலை முதல் இத்தளத்தில் இணைந்திருக்குமாறு அழைக்கிறோம்.
Share:

துகளுக்குரிய கடவுள் பெயரால்..!

"கடவுள் ஒருவனே (பெறப்படவுமில்லை-பெற்றவனுமில்லை); அவனுக்கு மனிதர்கள் விளங்கிக்கொள்ளும்படியான உருவமில்லை. படைப்புகளின் அதிபதி, பிரபஞ்சம் உள்ளிட்ட அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன்; அவன் ஒப்பாரும் மிக்காரும் அற்றவன்" என்றெல்லாம் மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கடவுளின் தன்மையையும் இருப்பையும் இஸ்லாம் வரையறை செய்கிறது. கடவுளைப்பற்றிய வரையறைகளைக் கடவுளே சொல்வதுதான் அறிவுப்பூர்வமானது. அவ்வகையில் கடவுள்பற்றிய குறிப்புகள் அடங்கிய வழிகாட்டல்களின் தொகுப்பே குர்ஆன்.

கடவுள் நம்பிக்கையற்றவர்கள் தங்களை, "பகுத்தறிவாளர்கள்" என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்கள் கடவுள் பற்றிய அனைத்துக் கோட்பாடுகளையும் பகுத்து அறியாதவர்களே! பகுத்து-அறிவது என்றால் இம்மூன்று கோட்பாடுகளிலும் ஏதேனும் ஒன்றைப் பகுத்தறிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். இவர்களது நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை ஆகிய இரண்டும் இவர்களின் பகுத்தறியும் திறனுக்கு எட்டவில்லை என்பது மட்டுமே காரணமாக உள்ளது.

இவர்களன்றி இன்னொரு வகையினரும் உள்ளனர். விஞ்ஞானிகள்! அறிவியல் ஆய்வுகள் மூலம் நிருபணம் செய்து நம்புபவர்கள். விஞ்ஞானிகளில் சிலர் கடவுள் நம்பிக்கையாளர்களாகவும் சிலர் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் அல்லது அதுகுறித்த சிந்தனையோ /ஆர்வமோ இல்லாதவர்களாகவுமே உள்ளனர். அறிவியலின் பலகூறுகளிலும் ஆய்வுகளைச் செய்து, அதன் பின்னணியில் 'ஏதோவொரு அமானுட சக்தி' இருப்பதாக நம்பி, கடவுள் கோட்பாடு குறித்த கொள்கைகளை ஆராய்ந்து இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களும் பலர் உள்ளனர். இன்னும் சிலர் இன்ஷா அல்லாஹ் நம்பிக்கை கொள்வர்!

கடவுளைக் கண்டுபிடிக்கும் ஆய்வின் முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி, நிச்சயமாக இவர்களது புறக்கண்களால் கடவுளையோ அல்லது கடவுளின் துகளையோ காணமுடியாது. உண்மையில் விஞ்ஞானிகள் தற்போது பெயரிட்டு அழைக்கும் "கடவுளின் துகள்" என்பதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை. ஓர் உருவத்தை மனிதனால் தீர்மானிக்க முடிந்தால், அது கடவுளேயில்லை என்பதுதான் இஸ்லாத்தின் தீர்வு! ஆகவே, "கடவுளைக் கண்டுபிடிக்கப் பிரயத்தனப்படும்" இந்த விஞ்ஞானிகள் செலவு செய்யும் கோடிக்கணக்கான பொருளாதாரத்தை மனித முன்னேற்றத்துக்குச் செலவிட்டால் பிரயோசமாக இருக்கும்.

இதுவரையிலும் இவர்கள் கண்டுபிடித்திருப்பது (?!) என்னவெனில் புரோட்டானின் உபரி நிறைக்கு 'ஏதோ ஒன்று' மறைமுகக் காரணமாக இருக்கிறது. முடிவற்ற இவர்களின் முடிவு சொல்வது என்னவெனில் அந்த ஏதோ 'ஒன்றை'த் தொடர் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பார்களாம்!

"கடவுளின் துகளை!?" மேலும் பலகோடி டாலர் செலவழித்து நுணுக்கமாகக் கண்டுபிடித்தாலும்கூட, ப்ரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் துகள்களைக் கண்டுபிடித்தப்போது விஞ்ஞானம் ஒருபடி முன்னேறியதுபோல் அதுவும் ஓர் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இருக்குமேயன்றி, மரணத்துக்கு முன்னதாக கடவுளின் இருப்பை மனிதர்களால் காணமுடியாது என்பதே எதார்த்தம்! இதைப்புரிந்து கொள்வதற்கு "விஞ்ஞான அறிவாளி"களாக இருக்கவேண்டிய அவசியமில்லை; இஸ்லாத்தைப் புரிந்துகொண்ட சாதாரண முஸ்லிமாக இருந்தாலே போதும்!


காணொளி விளக்கங்களுடன் முழுமையாக வாசிக்க துகளுக்குரிய கடவுள் பெயரால்..! சுட்டியை அழுத்தவும்.

நன்றி:www.satyamargam.com
Share:

அதிரையில் புயல் எச்சரிக்கை(ஒலிச் செய்தி)!

அதிராம்பட்டினம் : - நேற்று இரவு காவல் துறை நமதூர் மக்களுக்கு புயல் சின்னம் அறிவிப்பு விடுத்துள்ளது.

அதன் தொடர்பாக எல்லோருக்கும் அறிமுகமான  K.K. ஹாஜா அவர்களிடமும் V.O. அலுவலகத்தில் பணியாற்றும் திரு.ஆறுமுகம்  விசாரித்தபோது தானே புயல் நாகப்பட்டினத்தில் வந்து கரை சேரும். அதன் அடிப்படையில் நமது ஊரிலும் வாய்ப்பு உள்ளதால் கடலோர மக்களுக்கும் அறிவிக்கை விடுத்தார்கள். 

நாளை தானே புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிரையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

8-ம் எண் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்தே மந்தமாக இருகிறது. மாலையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் மக்களின் நலன் கருதி  தானே புயல் காரணமாக தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பு மையங்கலுக்கு கொண்டு வரவேண்டும்.

நமதூர் சேர்மன் அவர்களுக்கு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் யாரும் கவலைப்படாதீர்கள். அல்லாஹ் பதுகப்பானாக (ஆமின்)


சகோதரர்கள் அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Share:

"சார், நாங்க படிச்சா, ஆபீஸரா ஆகுவோமா சார்?"


நம்ம அப்பா செத்துட்டாராண்ணா?’’
‘‘ஆமாண்டா!’’
‘‘நம்ம அம்மா வரமாட்டாங்களா?’’
‘‘ஆமாண்டா தம்பி!’’
கால் சட்டை பட்டன்கள்கூட சரிவர போடத் தெரியாத இந்தப் பிஞ்சு உள்ளங்கள் பேசுவதை இதற்கு மேல் கேட்டால் யாரும் அழாமல் இருக்க முடியாது.

அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கி நிற்கும் அந்த மூன்று சிறுவர்களைப் பார்த்தால் கல் மனதும் கரைந்துவிடும். ஆனால், 80 வயதில் வரக்கூடிய மன வலிமையும் உறுதியும் இந்த மூன்று சிறுவர்களுக்கும் வந்துள்ளதைக் கண்டு ஊரே வியந்து பார்க்கிறது.

இதயம் நொறுங்கும் சோகங்களை எளிதாகச் சுமந்து கொண்டு, ‘எதையும் தாங்கும் இதயம்Õ எங்களுக்கும் இருக்கிறது என்பதைப்போல் வாழ்ந்து காட்டும் அண்ணன் தம்பிகளான இந்த மூன்று பேரை சந்திக்க கரூர் அருகேயுள்ள சூரப்பநாயக்கனூருக்கு அதிகாலை சென்றோம்.

குடிசை வீடு. வீட்டின் வாசலில் எட்டு வயதே நிரம்பிய திருக்கண்ணன், அவனது தம்பிகளான முனியப்பன், ஹரீஷ் குமாருக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். நம்மைக் கண்டதும் யாரோ என்னவோ ஏதோவென்று மூவரும் விழித்தனர்.

நாம் யார் என்பதை விளக்கிச் சொன்னதும் பேச ஆரம்பித்தனர்.

‘‘எங்கப்பா நீலமேகம், அம்மா முத்தழகு. அப்பா கூலி வேலைக்கு போய்க்கிட்டு இருந்தாரு. ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்திடுச்சு. நாங்க பள்ளிக்கூடத்துக்கு போயிட்டோம். அப்பா வேலைக்கு போயிட்டாரு. அந்த நேரம் எங்கம்மா உடம்புல தீ வைச்சுட்டாங்க. உடம்பெல்லாம் வெந்து ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. பிழைச்சுக்கிட்டாங்க. ஆனா பேச முடியாம படுத்த படுக்கையா இருந்ததால திண்டுக்கல் நத்தம் பக்கத்துல எங்க தாத்தா வீட்டுக்கே கொண்டு போயிட்டாங்க. எங்க மூணு பேத்தையும் எங்கப்பா இங்க கூட்டிட்டு வந்து வேலைக்கு போயி படிக்க வெச்சிக்கிட்டிருந்தாரு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எங்கப்பா, எந்த வண்டி அடிச்சதுனு தெரியல ரோட்டுல செத்துக்கிடந்தாரு. அப்புறம் ஊர்க்காரங்க எல்லாம் எங்கப்பாவை வீட்டுல கொண்டு வந்து போட்டாங்க. போலீஸ் எல்லாம் கூட வந்தாங்க. ‘நம்ம அப்பா செத்துட்டாரா’னு என் தம்பிக கேட்டானுக. ‘ஆமாடா’னு சொல்லிட்டு எல்லாரும் அழுதாங்க.

நாங்களும் அழுதோம். எங்கப்பா செத்ததுக்கு எங்கம்மாவால வர முடியல. காதுல சொன்னாங்களாம், அப்பவும் நெனப்பே இல்லாம படுத்திருஞ்சுதாம்.
எங்கம்மா வீட்டு சொந்தக்காரங்க, என்னைய கட்டிப்புடிச்சு அழுதாங்க. அப்புறம் அவங்க அவங்க ஊருக்குப் போயிட்டாங்க.

எங்கப்பா இருக்கிற வரைக்கும் கூலி வேலைக்குப் போய் பணம் கொண்டு வரும். அவரே சோறாக்கி எங்களுக்கும் குடுப்பாரு. இனிமேல் அவரும் இல்லையேனு அழுகாச்சா வந்துச்சு. என் தம்பிகளும் தேம்பித் தேம்பி அழுதாங்க. பக்கத்து ஊருல இருக்கிற எங்க பாட்டி வந்து, ‘என்னால முடிஞ்ச அளவுக்கு நான் காப்பத்றேன்’னு சொன்னாங்க. எனக்கு படிக்கலாம்னு ரொம்ப ஆசை. என் தம்பிகளுக்கும்தான். எங்கப்பா செத்து நாலு நாளுக்கப்புறம் ஸ்கூலுக்கு போனோம். ஸ்கூல், பக்கத்து ஊரான வேலஞ்செட்டியூரில் இருக்குது. பசங்கெல்லாம் கேட்டாங்க. சாரும் கேட்டாங்க.

‘பள்ளிக்கூடத்த விட்டு நின்னுடாதேÕனு சாரு சொன்னாரு. ‘நாங்க நிக்கமாட்டோம் சார். ஒரு உதவிங்க சார். மத்தியானம் தர்ற சத்துணவ கொஞ்சம் அதிகமா குடுங்க சார்’னு கேட்டோம். ‘தர்றேன்Õனு கொடுக்க ஆரம்பிச்சார். அதிகமா வாங்குற சத்துணவு சாப்பாட்டை நைட் வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிட்டுக்குவோம். ஒரு நாள் ராத்திரிக்கு எங்க பாட்டியும் கூட வந்து படுத்துக்கும். காலைல இருந்துச்சுன்னா சோறாக்கி, தலை சீவி விடும். இல்லீனா, சொந்தக்காரங்க யாராவது சாப்பாடு குடுத்தா வாங்கி சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்கு வந்திருவோம்.

‘படிக்கலீனா கூலி வேலைக்குத்தான் போகணும்; படிச்சாத்தான் ஆபீஸராக முடியும்’னு எங்கப்பா சொல்லுவாரு. நாங்க ஆபீஸராகணும். அதுக்குத்தான் படிக்கிறோம்’’ என்று சொல்லிக்கொண்டே துணிக்கடைப் பையில் புத்தகத்தை போட்டுக்கொண்டு காலில் செருப்பு கூட இல்லாமல் 2 கி.மீ. தூரமுள்ள பள்ளிக்கு நடந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

அப்போது நம்மைப் பார்த்த திருக்கண்ணன், ‘‘சார், நாங்க படிச்சா, ஆபீஸரா ஆகுவோமா சார்?’’ என்றபோது,நம்மையறியாமல் கண்கள் கலங்க, ‘‘நிச்சயம் நீங்க ஆபீஸராவீங்க’’ என்றோம்.

நன்றி: குமுதம்
Share:

தானே புயல் அபாயம் !


நாளைய தினம் நாகைக்கும் சென்னைக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து நேற்று நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் அதிரை நகர் முழுதும் காவல்துறை வாகனம் மூலம் ஒலிபெருக்கியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .
Share:

இரு வேறு திருமணம். பல்வேறு படிப்பினை சொற்பொழிவு..

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் (25,26 Dec 2011) நடந்த இரு வேறு திருமணத்தில் மௌலானா அப்துல் ஹாதி அவர்கள் ஆற்றிய உரை இங்கே ஒலி வடிவில் பதியப்பட்டுள்ளது.

இந்த இரு உரையின் முக்கிய சாரம்சமே, நமதூரில் நம்மை அறியாமலேயே சில சிருசுகள் பெருசா சாதனை (மணமகன், மணமகள் வீட்டாருக்கு இது சோதனை) செய்ததாய் கருதும் சீரியசான சில விசயங்களை தெளிவுபட எடுத்துரைத்திருக்கின்றார் சகோ.அப்துல் ஹாதி மௌலானா அவர்கள்..

முழுசையும் நீயே சொல்லிபுட்டா இங்கு ஒலி பதிவு எதற்கு!! ன்னு தளம் நிர்வாகி என் காதுல ஒலிக்கிரதுக்கு முன்னாடி, நான் கொள்ளைபக்கமா Windows'அ மூடிபுட்டு போறேன், நீங்க கவனமா கேளுங்க..நன்கு கவனித்த உங்களுக்கு பல விஷயம் புரிந்திறுக்கும். இரண்டு நாளும் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப எடுத்துரைத்தார்கள்.. அந்த விஷயம் வேறொன்றும் இல்லை.

நமதூரில் குறிப்பாக கல்யாணம் ஆன முதல் நாள் இரவு மாப்பிளையை கடத்துவது, இரவு உணவு போன்றவற்றை முடித்தபிறகு நண்பர்கள்/உறவினர்கள்  மணமகன் மணமகள் இருவரையும் பார்க்கவிடாமல் வேண்டுமென்றே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பது (மாப்பிளை தோழன் சாப்பாடுன்னு ஒரு வாரம் விட்டா அவ்ளோதான், ஒரு மாசம் விடுப்புல வந்தவரு ஒரு வாரம் பசங்க/பெருசுங்க  அன்புத்தொல்லைலயே போச்சேன்னு முனுமுனுப்பாறு)

இது போன்றவை அல்லாஹ்வின் கோபத்தையும், பிறரின் சாபத்தையும் சம்பாதித்து தருகிறது என்று மிக உருக்கமாக எடுத்துரைத்தார்கள்.. இது நம்மை அறியாமலயே தீனிற்கு மாற்றமான வீண் விளையாட்டை கடைபிடித்து வருகின்றோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.. முக்கியமாக நம் இளைய சமுதாயத்தை இத்தகைய தீய செயல்களை விட்டும் பாதுகாப்போமாக..வசலாம்,
மீரஷாஹ் ரஃபியா
www.meerashah.in
Share:

புன்னகை


இதயக் கண்களைக்
கூச வைக்கும்
மின்னல்

உள்ளத்தின் வார்த்தைகள்
உள்ளடக்கிய உதட்டின்
மொழி

உணர்வின் சூரியக் கதிர்கள்
உதடுச் சந்திரனில் பிம்பம்
இதழ்களின் ஓரம்
இளம்பிறையின்
வடிவம்


சீறும் பாம்பு மனிதர்களை
ஆறும்படி ஆட்டுவிக்கும்
மகுடி

காந்தமாய் ஈர்க்கும்
சாந்த சக்தி

அரசனையும் அடக்கும்
அறிஞர்களின்
ஆயுதம்

விலைமதிப்பில்லா
வைரம்

வையகத்தை
வசப்படுத்தும்
வசீகரம்

செலவில்லா
தர்மம்

அசையும் ஈரிதழ்கள்
இசையாய் ஊடுருவி
அசைக்க வைக்கும்
விசையில்லாக்
கருவி

வன்பகை விரட்டும் சக்தி
புன்னகை என்னும்
யுக்தி

கல்லான இதயத்தையும்
மெல்லத் திறக்கும்
கதவு

-
ஆக்கம் :-

அபுல் கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்)
Share:

முஸ்லிம் மாணவர்களுக்கு – அரசின் கல்வி உதவித்தொகை !


மத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்ட தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சிறுபான்மையினர்களாக கருதப்படும் முஸ்லிம்களுக்கு பொறியியல், மருத்துவம், வேளாண்மை பொறியியல், கால்நடை மருத்துவம், சட்டம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலை/முதுகலை நடப்பாண்டில் பயில்வராக இருத்தல் வேண்டும்.

புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை ( Renewal Scholarship )

கடந்த 2008-09, 2009-10, 2010-11 ஆம் ஆண்டில் புதிய கல்வி உதவித்தொகை ( Fresh ) பெற்றவர்கள் நடப்பாண்டில் ( 2011-12 ) புதுப்பித்தல் ( Renewal ) கல்வி உதவித்தொகை பெருவதருக்கு முந்தைய ஆண்டு இறுதித் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் ( மற்றும் ) பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ 2.50 இலட்சத்திற்கு மிகாமல் பெற்றிருக்கும்பட்சத்தில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகையை பெற தகுதியுடையவர்கள் ஆவார்.

கல்வி உதவித்தொகை

படிப்புக் கட்டணம் அதிகபட்சம் ரூ 20,000/- மற்றும் பராமரிப்பு கட்டணம் விடுதியில் தங்கிப் பயில்வோருக்கு ரூ 1,000 /- வீதம் 10 மாதங்களுக்கு ரூ 10,000 / -ம், விடுதியில் தங்காமல் பயில்வோருக்கு ரூ 500/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ 5,000/- மும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் கால அவகாசம்


மாணவ / மாணவியர்கள் இணையதளத்தின் வழியே ( http://www.momascholarship.gov.in/ ) புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை ( Renewal ) விண்ணப்பத்தினை 31-12-2011 க்குள் விண்ணபிக்க வேண்டும். அதனை மாணவ-மாணவியர்கள் தங்கள் பயிலும் கல்வி நிலையத்திற்கு ஆன்லைன் மூலமாக அனுப்புதல் வேண்டும். தவிர ஆன்லைன் மூலம் பதிவுச் செய்யப்பட்ட விண்ணப்படிவம் ( மற்றும் ) தேவையான சான்றிதழ்களுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்கப்பட வேண்டும்.

மேற்படி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் இதுநாள் வரை விண்ணபிக்காமல் இருந்தால் மேற்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 31-12-2011 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணபித்து பயனடையுமாறு சிறுபான்மையின நலத்துறை ஆணையர் அவர்கள் கேட்டுகொண்டுள்ளார்.
Share:

இறைஇல்லம் திறப்பு விழா இரையாகும் பொருளாதாரம்!
உலகில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். மார்க்கம் அனுமதிக்கும் பணிகளை செய்து சம்பாதித்து பொருளாதாரம் சேமித்து சிலவு செய்வதே சாலச் சிறந்தது. இஸ்லாம் அனுமதிக்காத குர்ஆன், ஹதீஸ் கட்டளைக்கு மாற்றமாக பணத்தை செலவு செய்து வீண்விரயம் செய்யும் முஸ்லிம்கள் உலகில் அதிகமாக உள்ளனர்.

வீண் விரயம் செய்வதை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். செல்வத்தை அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்; ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தான் இறைவனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவன். (அல்குர்ஆன் 17:26,27)

உம்முடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது உம்முடைய கையை கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்; அன்றி உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர். அல்குர்ஆன் (17:29)

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்கள் மற்றும் சுவரொட்டிகள் விழா மலர்கள் உள்ளிட்ட ஏராளமானவைகளை இரு தரப்பினர்கள் தனித்தனியே செய்து வருகின்றனர்.

ஊரெங்கும் தோரணங்கள் மற்றும் மின் விளக்குகள் உள்ளிட்டவைகளை அதிகமானமுறையில் பணம் வீண் விரயம் செய்யப்படுவதை நம்மால் காணமுடிகிறது. அவரவர்களைச் சார்ந்தவர்களால் திரட்டப்படும் பொருளாதாரமும் பல ஊர் பள்ளிவாசல் ஜமாஅத் மூலமாக திரட்டப்படும் பொருளாதாரமும் இஸ்லாம் காட்டித்தராத முறையில் செலவு செய்யப்படுகிறது.

பணத்தை கொடுக்கும் நல் உள்ளம் கொண்ட சகோதரர்களும் வசதி மிக்க கொடை வள்ளல்களும் நாம் கொடுக்கும் பணம் இஸ்லாம் அனுமதிக்கும் வழியில் செலவு செய்யப்படுகிறதா? அல்லது வீண் விரயத்திற்காக செலவு செய்யப்படுகிறதா? என்பதை அறிய தவறிவிடுகிறார்கள்.

பள்ளிவாசல் புதிதாக கட்டுகிறோம் என்று வசூல் செய்யும் பணமும் வீண்விரயம் செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு செய்யும் செலவும், பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு செய்யும் செலவும் ஒரு பள்ளி கட்டிவிடலாம். நம் சகோதரர்கள் வீடு குடிபோகும்போது விருந்து கொடுப்பது மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொண்டு நாம் பணத்தை வீண் விரயம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே சகோதரர்களே! நாம் சம்பாதிக்கும் பணம் இஸ்லாம் காட்டும் வழியில் செலவிடவும், வீண் விரயம் செய்யாமலிருக்கவும் அல்லாஹ் அருள் புரிவனாக! ஆமீன்.

Share:

ஒரு புதிய (AAMF) தலைமுறையின் செயல் பாடு எப்படி இருக்க வேண்டும் !!!அஸ்ஸலாமு அலைக்கும் ... 

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.  (3:110)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:"அல்லாஹ்வின் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றைமீறி நடப்பவனுக்கும் உவமை–ஒரு கூட்டத்தாரைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டு குலுக்கிப் போட்டார்கள்.(அதன்படி) அவர்களில் சிலருக்கு கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்தளத்திலும் இடம் கிடைத்தது.

கீழ்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். (நூல்: ஸஹீஹுல் புகாரி)

பொதுவாகவே முஸ்லிம்களாகிய நாம் நமது சொந்தப்பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.ஆனால் அது மட்டும் போதாது. மக்கள் அனைவரையும் பாதிக்கும் பொதுப்பிரச்னைகள் அனைத்திற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்.

லஞ்சம், ஊழல், விலைவாசி, வறுமை, மது, போதைப் பொருட்கள்,ஆபாசம்,விபச்சாரம்,வன்முறை,பெண்களுக்கு எதிரான கொடுமைகள்,இலங்கர்களை வழிகேடான,குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், இன்னும் இதுபோன்ற எல்லாவிதமான மக்கள் பிரச்னைகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்; மக்களின் அவலங்களைக் களைந்திட நம்மால் இயன்றவரை களமிறங்கிப் பணியாற்றிட வேண்டும்.

இவை மட்டும் அல்ல. மன அழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணம், முதியோர் பிரச்னைகள், விவாகரத்து, குழந்தைகளைப் பாதிக்கும் மன நலப் பிரச்னைகள், குடும்ப வன்முறை, மாணவர்களைப் பாதிக்கின்ற பிரச்னைகள் போன்ற அனைத்து விதமான பிரச்னைகள் குறித்தும் பொது அரங்குகளில் நாம் விவாதித்திட வேண்டும்.

பிரச்னைகளுக்கான சரியான தீர்வு குறித்து மற்றவர்களுடன் விவாதிக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சினைகள் அனைத்துக்கும் இஸ்லாம் தருகின்ற நடைமுறைத் தீர்வு குறித்து மக்களுக்குப் புரிய வைத்திட வேண்டும்.  இதில் நமது சமூக அக்கரை வெளிப்பட வேண்டும். கிஞ்சிற்றும் (உள்நோக்கம்) இருந்திடக் கூடாது.இதில் நாம் சுயநலம் இன்றி நேர்மையாகவும், மனத் தூய்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் திருப்திக்காகவே நமது ஒவ்வொரு செயலும் அமைந்திட வேண்டும்.

மேற்கண்ட நபிமொழியின் கருத்து நமக்குச் சொல்லும் செய்தியை சற்று ஆழமாக சிந்தியுங்கள்: பொதுப் பிரச்னைக்காக நாம் குரல் கொடுக்காவிட்டால் – அதே பிரச்னைகளில் நாமும் சிக்கிக் கொண்டு விடுவோம். மதுவும் போதைப் பொருட்களும் நம் சமூகத்தையும் பாதிக்கும். விபச்சாரம் நம்மை மட்டும் விட்டு வைக்காது. விலைவாசி நம்மையும் சேர்ந்துத் தான் வாட்டும். எல்லாப் பிரச்னைகளின் நிலையும் அப்படித் தான்.

எனவே தேவைதான் – ஒரு புதிய தலைமுறை (aamf )

*இளைய தலைமுறையே  அதிரைக்கு ஒரு முன்மாதிரியான இளைஞர்களை உருவாக்க வேண்டும் .

*நடுநிலையான,மற்ற நிர்வாகத்தை,பிறரை தாக்காமல் நன்கு ஆராய்ந்து தெளிவாக சிந்திக்கின்ற தலைமுறையாக (aamf) இருக்கவேண்டும்.

*தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்கின்ற ஒரு தலைமுறையாக இருக்கவேண்டும். (aamf)

*எதிலும் உணர்ச்சி வசப்படாத ஒரு தலைமுறையாக இருக்கவேண்டும். (aamf)

*பின்தங்காமல் தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஒரு  தலைமுறையாக இருக்கவேண்டும். (aamf) 

*இஸ்லாத்தைப் புரிந்து மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி  தலைமுறையாக இருக்கவேண்டும். (aamf) 

*யாருடைய மனமும் கோணாமல் புரிந்து நடக்க ௬டிய தலைவராக இருக்க வேண்டும். (aamf)

*மக்களைப்பற்றி கவலைப் படக்கூடிய ஒரு தன்னம்பிக்கை கொண்ட தலைமுறையாக இருக்க வேண்டும்.(aamf)

(அதிரைமக்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரு மனதுடன் இருக்க வேண்டும்)
  
என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)
Share:

மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் மருத்துவமனையில் அனுமதி!


இரு நாள் சுற்றுப் பயணமாக சென்னை வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்கச் சென்ற மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

திடீர் நெஞ்சு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பழனி மாணிக்கம் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மருத்துவர்கள் அறிவுரைப் படி ஆஞ்சியோகிராம் சோதனை நடத்தப் பட்டதில் அவருக்கு இருதயக் கோளாறுகள் எதுவுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்


நமதூர் அல்-அமீன் பள்ளி பிரச்சினை மற்றும் பல ஊர் மேம்பாட்டு திட்டங்களுக்கு வாக்களித்திருந்த நமது தஞ்சாவூர் தொகுதி எம்.பி பூரண நலம்பெற்று, விரைவில் அவற்றையெல்லாம் நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு குணமளிக்கட்டும். 


Share:

அதிரையில் அகல ரயில் பாதை – கோரிக்கை மனு !
அதிரையில் அகல ரயில் பாதையின் பணியை துரிதப்படுத்த கோரி இன்று மாலை 4 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடைபயண பேரணிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் தலைமையில், பேரூராட்சி துணைத் தலைவர் திரு. பிச்சை முன்னிலையிலும் நடைபெற்றது.இதில் நமதூரைச்சேர்ந்த பெரும்பாலான சமுக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.


இப்பேரணியில் மனித உரிமைக்கழகம் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தை சார்ந்த நபர்களும் கலந்துகொண்டார்கள்.


பேரணி முடிவில் ரயில்வே அதிகாரி அவர்களிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்து துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்கள்.
பேரணி முடிவில் ரயில்வே அதிகாரி அவர்களிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்து துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்கள்.
Share:

முத்துப்பேட்டை குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா !

நேரலை அறிவிப்பு !

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்:


முத்துப்பேட்டை, டிசம்பர் 25 : அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனானமும் என்றென்றும் நிலவட்டுமாக! வருகிற 30 .12 .2011 அன்று நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு நமதூர் வாசிகள், வெளிஊரு வாசிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் கண்டு மகிழும் பொருட்டு அந்நிகழ்வை நேரடி ஒலிபரப்பு செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நேரடி ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு:
திறப்பு விழா சிறப்பு நிகழ்சிகள் காலை 8 .30 மணியளவில் இருந்தே ஒளிபரப்பப்படும்...
காண்க: www.muthupettaiexpress.blogspot.com,
இந்த இணையதளத்திலும் காணலாம்: adiraixpress.blogspot.com
Thanks: http://muthupettaiexpress.blogspot.com/2011/12/blog-post_25.html
Share:

TEEN AGE – பருவம் !


நமது வாழ்க்கையில் நான்கு பருவங்களாக பிரித்து அதில் குழந்தை பருவம், வாலிபப் பருவம், குடும்பப்பருவம், முதுமைப்பருவம் என கணக்கீடு செய்தால் இதில் ரொம்ப முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வாலிபப் பருவமே.

நல்ல ஒரு ஈமான் தாரியாகவும், தொலுகையாளியாகவும், சமூகம் போற்றக்கூடிய பொறுப்பான மாணவன் / மாணவி என்றும், பெற்றோர்கள் மகிழக்கூடிய நல்ல பிள்ளை என்றும், ஆசிரியர்கள் பெருமைபடக்கூடிய நல்ல மாணவன் / மாணவி என்று இப்பருவத்தில்தான் உருவாகின்றன...........

அதேபோல் பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாவதும், குற்ற செயல்களில் ஈடுபடுவதும், கல்வியில் பின்தங்குவதும், என எல்லாமும் இந்த வாலிப பருவத்தில்தான் உருவாகின்றன..............

இன்றைய வாலிப பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை உணர வேண்டும். மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் பணி நிமித்தமாக வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.. இந்த நேரத்தில் வாலிப பருவத்து மாணவ / மாணவிகளை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேல் நிலைப் பள்ளிகளில் இந்த வாலிப பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடமை என்று மட்டும் இருந்துவிடாமல்......மாணவர்களின் ஒழுக்கங்கள், அவர்களின் கடமைப் பொருப்புனர்வுகள், மார்க்க பற்றுதல்கள், கல்வி அறிவு, ஆரோக்கியம் என அவர்களை கண்காணித்து நல்வழிப்படுத்தும் இடமாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும்.

குறிப்பு : ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இத்திட்டம் நிறைவேறினால் இதன் மூலம் மாணவர்களை ‘ COUNSELLING ‘ செய்து அவர்களின் வழிகேட்டிலிருந்து தடுக்கலாம்.

இறைவன் நாடினால் ! தொடரும்............
Share:

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

--
Warm Regards

Mohamed Aboobacker

Share:

பிரதமர் வருகையால் வழிபாட்டு உரிமைக்கு தடை !

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!!!


இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ளார் .

முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி அவர்கள் பணியின் பொழுது அங்குள்ள இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வேண்டி அமைக்க பட்ட பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி மக்களை பள்ளியில் தொழ அனுமதிக்க வில்லை என்ற தகவலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து INTJ துணை பொது செயலாளர் தமிழக காவல்துறை உயரதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்ட பொழுது .

பிரதமர் வருகையால் தற்பொழுது அது தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லை. என கூறிவிட்டனர் இதனால் இ த ஜ சார்பில் கண்டன போஸ்ட்டர்களை சென்னை நகர் முழுதும் ஒட்டியுள்ளனர்
Share:

அதிரை கல்விச் சேவையகம் AEM - அறிவிப்பு!


அன்பிற்குரிய அதிரைச் சகோதரர்களுக்கு:  அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற ஜனவரி 2011 - 14,15 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய விவரங்களையும் அதன் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.  முதல் மாநாடாக இருந்ததால், அதனைக் குறுகிய வட்டத்திற்குள்தான் சகோதரர்களை ஈடுபடுத்தி, அல்லாஹ் உதவியால், வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.  அல்ஹம்து லில்லாஹ்!

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் புத்தாண்டில் இரண்டாவது மாநாட்டைச் சற்று விரிவாகவும், அதிகமான சகோதரர்களின் பங்களிப்பிலும், பயனுள்ள பல நிகழ்ச்சிகளுடனும் நடத்தத் தீர்மானித்துள்ளோம்.  அது பற்றிய ‘மஷ்வரா’ விரைவில் தொடங்கவுள்ளது.  எனவே, பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ள அதிரையின் அன்புச் சகோதரர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை ‘அதிரை எஜுகேஷனல் மிஷன்’ என்ற மின்னஞ்சல் குழுமத்தில் இணைத்துக்கொண்டு உங்களின் அரிய / உரிய பங்களிப்புகளை வழங்குமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இணைப்பு கூகுள் குழுமம் இதோ :    adirai-edu-mission@googlegroups.com

           

    உங்கள் புரிந்துணர்வுக்கும் அன்பாதரவுக்கும் மிக்க நன்றி.  வஸ்ஸலாம்.

     

    அன்புடன்,

    அதிரை அஹ்மது

    0091 98 94 98 92 30

    adiraiahmad@gmail.com


Share:

பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் விகடன்!

'புலானாய்வு' என்ற பெயரில் புடலங்காய் ஆய்வு செய்து குப்பை கொட்டிவரும் வாரப்பத்திரிக்கைகளுள் ஜூனியர் விகடனும் ஒன்று. கடந்த டிசம்பர்-7 ஆம் தேதியிட்ட இதழில் "'இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?'' என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.

என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் வாசித்தபோது ஜூனியர் விகடன் மதவெறி வெளிப்பட்டது. முழு கட்டுரையையும் வாசிப்போம்:
******************************
"இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?''கண்மாய்க்குள் தூக்கிப் போட்ட மாணவர்கள்!

போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலி, சதிச் செயல்களுக்காக வெடிகுண்டுகளை முதன் முதலில் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்த இடம், மதுரை மாவட்டம், ஓவா மலை. இப்போது, அதற்கு அருகிலேயே பஸ்ஸுக்குள் வெடிகுண்டு சிக்கியிருப்பது மதுரை மக்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்திருக்கிறது.

டிசம்பர் 6-ம் தேதி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கடந்துவிட்ட சூழ்நிலையில், அதற்கு மறுநாள் காலையில்தான் இந்தச் சம்பவம்.  குண்டு வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்ஸில் பயணம் செய்த பாலிடெக்னிக் மாணவர்கள் சயாரத்னம், அர்ஜூன் ஆகியோரிடம் நாம் பேசினோம். 'மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வர்ற பஸ் அது. 7-ம் தேதி காலையில் 7.10 மணிக்கு திருவாதவூர் வந்த அந்த பஸ், 7.25 மணிக்கு அகதிகள் முகாம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தது. அப்போ ஸீட்டுக்கு  அடியில், பாலிதீன் பை ஒண்ணு கிடந்தது. எங்களோடு பஸ்ல வந்த இலங்கை அகதியான நிஷாந்த் என்பவர் அதை எடுத்து, கண்டக்டர் விருமாண்டியிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்த கண்டக்டர், 'இது வெடிகுண்டு மாதிரில்ல இருக்கு. உடனே வெளியே தூக்கிப் போடுப்பா’னு சொன்னார். உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்த, சில மாணவர்கள் கீழே இறங்கி அந்த பார்சலை முத்தம்பட்டி கண்மாய்க்குள் போட்டார்கள்.

ஆனாலும், பயத்தில் பஸ்ஸுக்குள் வேறு எதுவும் இருக்கிறதா என்று தேடினோம். பயந்துபோன கண்டக்டர் மேலூர் டெப்போவுக்குப் போன் போட்டு விஷயத்தைச் சொன்னார். பஸ்ஸை நேராக ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகச் சொல்லிட்டு, வெடிகுண்டு பற்றி போலீஸுக்குத் தகவல் கொடுத்து விட்டார்கள். பஸ் ஒத்தக்கடைக்கு போகும்போதே, எதிரே வெடிகுண்டு நிபுணர்கள் குழு திருவாதவூர் நோக்கிப் போனது...' என்றனர் திகிலுடன்!

அதற்குள்,வெடிகுண்டு நிபுணர்கள் கண்மாயில்கிடந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்து,ஒத்தக்கடைபோலீஸ் நிலையத்துக்குக் கொண்டுவந்தார்கள். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆஸ்ரா கர்க், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. மகேஸ்வரி மற்றும் கியூ பிராஞ்ச் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

பரபரப்புக்காக குண்டு வைத்த ஜூனியர் விகடன்

பரபரப்புக்காக குண்டு வைத்த ஜூனியர் விகடன்
க்யூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டோம். 'வெடிகுண்டை முழுமையாக சோதித்துப் பார்த்தோம். பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் ஒன்பது வாட்ஸ் திறன்கொண்ட நான்கு நிப்பான் பேட்டரிகள், கடிகாரத்தின் இயந்திரப் பகுதி, சில மின் வயர்களைப் பொருத்தி ஒரு சுவிட்ச்சோடு இணைப்புக் கொடுத்திருந்தார்கள். பகல் 12 மணிக்கு வெடிக்குமாறு கடிகாரத்தில் செட் செய்யப்பட்டு இருந்தது. சிறிதளவு மட்டுமே வெடிமருந்தை ஒரு காகிதத்தில் சுற்றி லட்சுமி வெடியில் இருப்பதுபோல உருளையாகச் செய்து இருந்தார்கள். அதற்கு இரண்டு வயர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த குண்டு வெடித்து இருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் குண்டு வைக்கப்பட்டு இருக்கலாம்...'' என்றார்கள்.

சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னத் தகவல் அதிர்ச்சி ரகம். 'வெடிகுண்டு சிக்கிய திருவாதவூர் அருகில் உள்ள உலவுபிச்சான்பட்டிதான் இமாம் அலியின் சொந்த ஊர். பழனி பாபா குரூப்புடன் தொடர்பு வைத்து இருந்த இமாம் அலியும் ஹைதர் அலியும் சேர்ந்து, கடந்த 1990-ம் ஆண்டு ஓவா மலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தபோது, அந்தச் சத்தம் ஊருக்குள் கேட்டது. இப்போது இருப்பதுபோல அப்போது அங்கு கிரானைட் குவாரிகள் எல்லாம் அந்த நாளில் கிடையாது. பீதி அடைந்த மக்கள் மலைக்குத் திரண்டு சென்றபோது, இமாம் அலி, ஹைதர் அலி மற்றும் அவர்களது கூட்டாளிகள் தப்பி ஓடினார்கள்.

பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டபோது, இமாம் அலி மட்டும் துணிச்சலாக, 'ஆமாம், வெடிகுண்டு சோதனைதான் நடத்தினோம். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்று பதில் சொன்னார். பின்பு, அண்ணா பஸ் நிலையம் அருகே போலீஸ் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடியவர், பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று பங்களாதேஷில் தங்கியிருந்தார். சி.பி.ஐ. போலீஸ், ஒரு கடிதம் மூலம் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக் கைது செய்தது. அப்போதும் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து, போலீஸாரோடு துப்பாக்கிச் சண்டை போட்டு இமாம் அலியை மீட்டனர் அவரது கூட்டாளிகள். கடைசியில், இமாம் அலியை பெங்களூரில் கண்டுபிடித்துக் கதையை முடித்தது போலீஸ்.

அப்போதே, 'இமாம் அலி புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார்’ என்று மதுரை வீதிகளில் மர்ம நபர்கள் போஸ்டர் ஒட்டினார்கள். அது உண்மைதான் என்பது போல, அடுத்தடுத்து மதுரையில் வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தகவல்களை எல்லாம் அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம்.'' என்றார்.

மக்கள் நிம்மதிக்கு அரசுதான் வழி காட்ட வேண்டும்!
- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து

******************************

மேற்கண்ட கட்டுரையை நன்கு வாசித்தால் அதில் சொல்லப்பட்டுள்ள விசயம் மதுரை அகதிகள் முகாம் அருகே வெடிகுண்டு ஒன்றை பேருந்தில் வைத்திருந்ததை மாணவர்கள் கண்டு ,தகவல் தெரிவித்துள்ளார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்ததோடு, பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் நோக்கில் விஷமிகளின் செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியில் முஸ்லிம் எவருமே இல்லாதபோதும், அதை போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இமாம் அலியுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது அப்பட்டமான விஷமத்தனம். மட்டுமின்றி இமாம் அலி முன்பு ஒருமுறை வெடிகுண்டை வெடிக்கச் செய்தாராம். அது பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குத்தான் என்று சொன்னாராம்! பாபர் மசூதி இடிக்கப்பட்டது 1992 டிசம்பர்-6. ஆனால் இமாம் அலி அதற்கு "இரண்டு ஆண்டுகள்முன்பே" அதாவது 1990 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வெடிகுண்டு சோதனை நடத்தினாராம்! என்ன ஒரு மொள்ளைமாறித்தனம் பாருங்கள்!

எங்காவது வெடிகுண்டு வெடித்தாலோ அல்லது சோதனை நடத்தப்பட்டாலோ அதற்கு முஸ்லிம்களே காரணம் என்ற கருத்துருவாக்கம் செய்வதில் சங்பரிவார பிண்ணனி கொண்ட ஊடகங்கள் செய்துவருவதை அறிவோம். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக ஜூனியர் விகடனும் செயல்படுவது நடுநிலை வாசகர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதை ஜூ.வி உணரவேண்டும்.

கட்டுரையின் கயமைத்தனத்தை வாசகர்கள் கருத்து பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தபோதிலும் கொஞ்சம்கூட வெட்கமின்றி சிறுவருத்தமோ திருத்தமோ செய்யாது விட்டுவைத்துள்ளதைப் பார்த்தால் டிசம்பர் முதல்வாரத்தில் பரபரப்புக்காக செய்தி வெளியிடவேண்டும் என்ற துர்நோக்கத்தில் ஜூனியர் விகடனேகூட அந்த வெடிகுண்டை பேருந்தில் வைத்திருக்குமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

- கலீல், மதுரை.

நன்றி: இந்நேரம்.காம்
Share: