என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்… இலவசம்!

னால், ‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!என்கிறார் தன்மானத் தமிழர்களைக் காக்கப் பிறந்த தலைவர் கருணாநிதி.

இலவசங்கள் தொடரும் வரை ஏழைகள் தொடருவார்கள் என்கிற பேருண்மை அந்தப் பெரியவருக்குத் தெரியாதுபோலும். பசியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதேமீன் பிடிக்கக் கற்றுக்கொடு! » என்கிற மேலை நாட்டுப் பொன்மொழி இந்த ஏழை நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் புரியாமல்போனதோ? தொலைக்காட்சி இலவசம், உடுப்பு இலவசம், அடுப்பு இலவசம் என அனுதினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, கையேந்தும் பெரு​மக்களை பெருக்கிக்கொண்டே போ​கிறது இந்த அரசாங்கம்.
65 ஆண்டு கால சுதந்திரத்தில், 45 ஆண்டுகள் இந்தத் தாய்த் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் ஆண்டிருக்​கின்றன. இன்றைக்கு இலவ​சத்தை மகத்தான திட்டமாக வாய் வலிக்​கச் சொல்பவர்கள், இத்தனை காலங்கள் ஆண்டும் என் மக்களைக் கையேந்த​வைத்த கயமைக்குப் பொறுப்பு ஏற்பார்களா? கலைஞரின் இளைஞன்படம் தமிழ்த் திரையுலகத்தின் புரட்சியாய், புகழாரக் கூட்டத்தால் கொண்டா​டப்படுகிறது.

மாக்ஸிம் கார்க்கியின் தாய்நாவலை, தாய்க் காவியமாக வடித்த முதல்வர் பெருமகனாருக்குச் சொல்கிறேன்அய்யா, கார்க்கியின் எழுத்துகள் மேல் நீங்கள்கொண்டு இருக்கும் ஈர்ப்பும் பிரியமும் என்னை வியக்கவைக்கிறது. கார்க்கி எழுதிய சாலச் சிறந்த வாக்கியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை! கார்க்கியின் எழுத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து உரைத்திருக்கும் நீங்கள், இந்த வரிகளுக்கு என்ன அய்யா பதில் சொல்ல முடியும்?உடனே, பிச்சைக்கும் இலவசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என வழக்கம்போல் விளக்கப் புராணம் பாடாதீர்கள். தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை

தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா? எங்களின் பணத்தை எங்களுக்கே பிச்சையாக்கும் வித்தையை இத்தனை காலம் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்ததே ஆச்சர்யம்தான். இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கம் இழக்கும் தொகையை நீங்கள் எதன் மூலமாக ஈடுகட்டுகிறீர்கள்? மது விற்பதன் மூலமாகஏழைக் குடியானவன் சாராயம் காய்ச்சினால், சட்டப்படி அது குற்றம்.

அரசாங்கமே சாராயம் காய்ச்சினால், அது திட்டம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் நியாயம்? தீபாவளி தினத்தில் மட்டும் 90 கோடிக்கு சாராயம் விற்றதாக இந்த அரசாங்கம் சாதனை அறிக்கை வெளியிடுகிறது. வயிற்றுக்கு விஷம் வைத்துவிட்டு, வாய்க்கு உணவு கொடுப்பதுதான் உங்கள் சாதனையின் மகத்துவமா அய்யா? இலவசம் என்றால் என்ன பொருள் உங்கள் அகராதியில்? பல்துறைப்பட்ட வருமானத்தின் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோக, மீதம் இருக்கும் உபரி வருமானத் தொகையை வைத்து மக்களுக்கு ஏதாவது வழங்​கினால் அதற்குப் பெயர்தான் இலவசம்.

ஆனால், 80 ஆயிரம் கோடியை தமிழகத்தின் கடனாக ஏற்றிவைத்துவிட்டு, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலைமையிலும், இலவசத்தை வழங்கினால், அதற்கு உண்மையான அர்த்தம் உள்நோக்கம்என்பதுதானே! உடனே அறிவார்ந்தவரும் மூத்த அமைச்சருமான அய்யா அன்பழகனார் அறிவிக்கிறார்… ‘தமிழக அரசின் 80 ஆயிரம் கோடி கடன் தமிழக மக்களைப் பாதிக்காது!அப்படி என்றால், எங்களின் கடனை கன்னடக்​காரன் கட்டுவதாகச் சொல்லி இருக்கிறானா? இல்லை தெலுங்குக்காரன் திரட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறானா? இலவசங்கள் தொடர்ந்துகொண்டே போகட்டும்என்றைக்கோ ஒரு நாள் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, இலவசங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் நிலை என்னாகும் என்பது உங்களின் புத்திக்குப் புலனாகவில்லையா முதல்வரே? இலவசம் இல்லாமல் போனால், பிறர் சவம் என்றாலும், பிய்த்துத் தின்னும் நிலை வந்துவிடாதா? இத்தனை காலம் உண்டபடியே உறங்கியவனை, ஒரே நாளில் உழைப்புக்குப் பழக்கப்படுத்திவிட முடியுமா? கொலை, கொள்ளை, வழிப்பறி என இந்த நாடே சுடுகாடாகிவிடாதா?அப்படி ஒரு நிலை வரத்தானே இத்தனை இலவசங்களை அறிவித்து, எம்மக்களின் சொரணைக்குச் சுருக்குப் போட்டுவிட்டீர்கள்?

தேர்தல் நெருங்கநெருங்கஎப்படி எல்லாம் இலவசங்களை அறிவிக்கலாம் என மூளையைக் கசக்கி முப்பொழுதும் யோசிக்கிறீர்கள். வாரம் ஐந்து முட்டை என அறிவித்து குழந்தைகளைக் குதூகளிக்க​வைத்தீர்கள்இத்தனை காலம் ஒரு முட்டை போட்ட கோழிகள் திடீரென ஐந்து முட்டைகள் போட ஆரம்பித்துவிட்டதா அய்யா? நாலரை ஆண்டு காலம் ஏழைகள் எந்தக் குடிசையில் வாழ்ந்தாலும் சரி என நினைத்த நீங்கள்,இப்போது திடீரென வீடு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். கடகட வேகத்தில் மூன்று லட்சம் வீடுகளைக் கட்டவைக்கும் நீங்கள்,அடுத்த மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ரசீதைக் கொடுத்து இருக்கிறீர்கள். எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால், உங்களுக்கு வீடு நிச்சயம்!என்பதை ஏழைகள் மனதில் எவ்வளவு சூசகமாக ஏற்றி இருக்கிறீர்கள் பார்த்தீர்களா?

அடிக்கத் திட்டமிட்டு இருக்கும் கொள்ளையில்மக்களையும் மறைமுகப் பங்குதாரர்களாக மாற்றுவதற்குத்தானே இலவசம் என்கிற பெயரில் இந்தக் கையூட்டு? ஆனால், உங்கள் நெஞ்சத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்இலவசமாக்கப்பட்டு இருக்க​வேண்டி​யது கல்வியும், மருத்துவமும்தானேஏழைக்கு ஓர் உயிர்; பணக்காரனுக்கு ஓர் உயிர் என்கிற பாராமுக நிலைப்பாடுதானே இன்றுவரை தொடர்கிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகளை இன்று வரை இந்த அரசாங்கத்தால் களைந்து எடுக்கமுடியாமல் போனது ஏன்? ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு, ‘உழைப்பு தேவை இல்லை!என்கிற சோம்பேறித்தனத்தை விதைப்புச் செய்தீர்கள். புத்தியை மழுங்கடிக்க இலவசத்தொலைக்​காட்சி கொடுத்தீர்கள்.

எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் தன் வீட்டில், ‘மானாட மயிலாடஆடினால் சரி என்கிற சாக்கடை எண்ணத்துக்குள் ஒவ்வொரு தமிழனையும் தள்ளினீர்கள். உங்களின் இலவசம் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை காவிரிக் கரையோர விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்​கள்கூலிக்கு வேலை இல்லாமல் திண்டாடிய காலம் போய், வேலைக்கு ஆள் இல்லாமல் அல்லாடும் காலம் உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம் அல்ல அய்யாஅயோக்கிய மாற்றம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய மாவட்டங்​களில் பட்டினிச் சாவுகள் தொடர்ந்தபோது, அரசாங்கமே சோறு போடும் என அறிவித்தார் அன்​றைய முதல்வர் ஜெயலலிதா. கூட்டுப் பொறியலோடு குக்கிராமங்கள்தோறும் சாப்பாடு தயாரானது. அப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா அய்யா… »ஊருக்கே படியளந்த மக்களை சோற்றுக்குக் கையேந்த வைத்துவிட்டார் ஜெயலலிதா! அந்த அம்மையாரின் நிலைப்பாட்டை நான் நியாயப்​படுத்தவே இல்லை. ஆனால், அன்றைக்கு எம் விவசாய வர்க்கம் கையேந்தியதைக் காணச் சகிக்காத நீங்கள், இன்​றைக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறீர்களேநீங்கள் அரிசி போட்டால், அது மகத்தான திட்டம்

அந்த அம்மையார் ஆக்கிப்போட்டால் அது குற்றமா? நாவைச் சுழற்றியே நாட்டைச் சுழற்றும் உங்களின் அபூர்வ ஆட்சியை மீண்டும் தக்கவைக்க நீங்கள் தீட்டி வரும் சில திட்டங்கள்பற்றிக் கேள்விப்பட்டேன்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் அலைபேசி இலவசம்என அறிவிக்கப்போகிறீர்களாமேதொலைக்காட்சியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எங்களிடமே பணம் பறித்ததைப்போல, அலைபேசியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எந்த நிறுவனத்திடம் பேசி வைத்திருக்கிறார்களோ?

உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்​மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை.

தகவல் :அப்துர் ரஹ்மான்
Share:

இரண்டு தொகுதிகளில் SDPIன் வேட்பாளர்களின் மனு தள்ளுபடி

இராமநாதபுரம் மற்றும் துறைமுகத்தில் இரண்டு அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரத்தில் அப்துல் ஹமீத் மற்றும் துறைமுகத்தில் அமீர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு பிரச்சாரமும் செய்து வந்த நிலையில் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தொகுதிகளிலும் மாற்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் செய்திக் குழு - 2011
அதிரை எக்ஸ்பிரஸ்
Share:

அதிரை எக்ஸ்பிரஸிற்கு தமிழ்நாடு மாநில SDPI தலைவர் அதிரடி பேட்டி!


அதிரை எக்ஸ்பிரஸிற்கு SDPI (Social Democratic Party of India) வின் மாநிலத் தலைவர் KKSM தெஹ்லான் பாக்கவி அவர்கள் பேட்டியளிக்க இருப்பதாக அறிவிப்பு செய்திருந்தோம்.

அதன்படி தன்னுடைய பல்வேறு தேர்தல் பணிகளுக்கிடையில் இன்று நமக்கு நேரம் ஒதுக்கி தந்தார்கள். மிக குறுகிய அவகாசத்தில் அவர்களிடம் நேர்காணுக்கு தயாரானோம்.

நேர்காணலில் முக்கிய அம்சங்கள்:-

1. SDPI தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளிலேயே தேர்தலில் நிற்பதற்கான அவசியம் என்ன?
2. இராமநாதபுரத்தில் வேட்பாளரை நிறுத்தியது ஏன்?
3. இராமநாதபுரத்தில் SDPI வேட்பாளரை வாபஸ் வாங்குவீர்களா?
4. எட்டு தொகுதிகளிலல்லாத பிற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு?
5.  ததஜ ஆதரவைக் கோருவீர்களா?
6. பொங்கல், தீபாவளி வாழ்த்து கூறி மாற்று மத மக்களின் வாக்கு வங்கிக்கு குறியா?
7. மமக போட்டியிடும் தொகுதிகளில் உங்கள் நிலை என்ன?
8. தனித்து களம் காணும் SDPI க்கு மற்ற சமுதாய அமைப்புகளிடம் ஆதரவு கோரியுள்ளீர்களா?
9. SDPI ன் தேர்தல் வியூகம் என்ன?

இன்னும் விறுவிறுப்பான எமது கேள்விகளுக்கு SDPI மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி பதிலளிக்கிறார். விரைவில் இன்ஷா அல்லாஹ்...
Share:

திமுகவுக்கு ஜவ்ஹீத் ஜமாத் ஆதரவு

தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுல் ஹாப்தீன்,   முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம்,

’’சட்டசபை தேர்தல் அறிக்கையில், முஸ்லிம் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து எந்த கட்சி கூறுகிறதோ அதற்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தோம்.

தி.மு.க., தங்களது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை உயர்த்துவதாக கூறியிருப்பததோடு, அதற்கு முதல்வர் கருணாநிதியும் உறுதியளித்துள்ளார். எனவே, சட்டசபை தேர்தலில், தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து எதுவும் கூறப்படவில்லை. எனவே, அக்கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை’’என்றார்.

இதற்கிடையே, முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானம் இன்றி உள்ளனர் அதனால் அவர்கள் வாழ்வு மேம்பட 10 சதவீத இடஒதுக்கீடு தரப்படவேண்டும் என்கிற கோரிக்கையை சச்சார் கமிட்டி மத்திய காங்கிரஸ் அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் இதுதொடர்பாக காங்கிரஸ் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை மண்ணைக் கவ்வச் செய்வோம் என்று ஏன் ஜவ்ஹீத் ஜமாத் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று அதன் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மேலும் திமுக கூட்டணியில் இஸ்லாமிய அடையாளங்கள் இல்லாத முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரித்து தவ்ஹீத் பேசும் நாம் ஓட்டு சேகரிக்க வேண்டுமா என்றும் சில தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

நன்றி:நக்கீரன்
Share:

அல்அமீன் பள்ளிக்கு தேமுதிக ஆதரவு?

நேற்று அதிரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அல் அமீன் பள்ளி விவகாரத்தை சுமூகமாக முடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் ஆடியோ.


Share:

Flash News: தவ்ஹீத் ஜமாத் திமுக கூட்டணிக்கு ஆதரவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெற்றது. தேர்தல் தொடர்பாக நடைபெற்ற அந்த பொதுக்குழுவில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செய்திக் குழு
அதிரை எக்ஸ்பிரஸ்
Share:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பு


தற்போது நடைமுறையில் உள்ள 15 நாள் கணக்கீடு 15 நாள் வசூல் என்ற முறை மாற்றப்பட்டு வரும் 01.04.2011 முதல் மாதம் முழுவதும் கணக்கீடு மற்றும் மாதம் முழுவதும் வசூல் பணி நடைபெறும் என்று மின் நுகர்வோர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கட்டாத நபரின் மின் இணைப்பை 16 ஆம் துண்டிப்பு செய்யும் முறைக்குப் பதிலாக மின் அளவீடு எடுத்த தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாத நபரின் மின் இணைப்பு 21ஆம் நாள் துண்டிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மீட்டரின் வெள்ளை அட்டையை மின் பயன்பாட்டை குறிப்பதற்கு வசதியாக மீட்டர் அருகிலேயே வைத்துக் கொள்ளும்படி மின் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ள ப்படுகிறார்கள். வெள்ளை அட்டை தேவையனில் அருகில் உள்ள மின்சார அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளும்படி அனைத்து மின் நுகர்வோர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின் அளவீடு எடுத்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். என்றும், தவறினால் 21ஆம் நாள் மின் துண்டிப்பு செய்யப்படும்  என்றும், மீண்டும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. திருச்சி மண்டலத்தில் எந்த அலுவலகத்தில் வேண்டுமானாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் "INTERNET BANKING " மூலம்  கட்டணம் செலுத்தலாம் என்றும் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு :

அமேஜான் வாட்டர் பியூரிபியர் நிறுவனத்தாரால்" INTERNET BANKING "  மூலம் மின் கட்டணம் கட்டித்தரப்படும். உங்களுடைய மின் இணைப்பு என்னை அனுப்பினால் போதும்.மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும். +91 9994509779

இப்படிக்கு
      
அமேஜான் வாட்டர் பியூரிபியர்.
  
--
Warm Regards

Mohamed Aboobacker

Mobile:  +91-9994509779
Office :  +91-04373-240003
e-mail :  aboobacker@amazonwp.com
Web  :   www.amazonwp.com
Share:

பேரா ஜவாஹிருல்லா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்

1. சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளிலாவது நிற்போம் என்று தீர்மானமாக இருந்த நீங்கள் திமுக சார்பில் ஒரு தொகுதி தருவதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீங்கள் இப்போது வெறும் 3 தொகுதிகளை பெற்று அமைதியானதற்கான காரணம் என்ன?

2. பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி தருவதாக சொன்ன அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் அவர்களுடைய வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. மமகவிற்கு ஒரு தொகுதி தருவதாக சொன்னது என்னவாயிற்று. இது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறதா?

3. அதிமுக கூட்டணியில் தொடக்கத்திலேயே கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டதே. இது குறித்து ம்மக வின் கருத்து என்ன? இந்த செயல்பாடுகள் வெற்றியை பாதிக்காதா?

4. அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் நீங்கள் சமுதாய கோரிக்கைகள் ஏதும் வைத்திருக்கிறீர்களா? குறிப்பாக இட ஒதுக்கீடு...

5. மமக சார்பில் தேர்தல் அறிக்கை ஏதும் வெளியிடுவீர்களா? முக்கிய அம்சங்கள் என்ன?

6. திமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதே. இது அதிமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்று கருதுகிறீர்களா?

7. திமுக தேர்தல் அறிக்கையில் 3.5 சதவீதத்திலிருந்து உயர்த்துவது பற்றி பரிசீலனை செய்வோம் என்று அறிவிகப்பட்டுள்ளதே.

8. மமக போட்டியிடக்கூடிய சில தொகுதிகளில் SDPI வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றதே. பிரதான கட்சியுடன் போட்டியிடக்கூடிய மமகவின் வெற்றியை வெற்றிவாய்ப்பை இது பாதிக்காதா? இதுகுறித்து நீங்கள் SDPI யுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா?

9. தமிழகத்தின் பல்வாறு முஸ்லிம் அமைப்புகளிடம் ஆதரவு கோரியுள்ள நீங்கள் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரிடம் ஆதரவு கோரியுள்ளீர்களா?

10. பத்து தொகுதியில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட ஒரு தொகுதியில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஆனால் முஸ்லிம் பிரதிநிதுவத்தைப் பற்றி பேசும் பாமக 30 தொகுதிகளில் ஒன்றில் கூட நிறுத்தவில்லையே

11. திமுகவின் முக்கியத்தலைவர்களான கலைஞர், ஸ்டாலின் போன்றோர் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளை விட்டு வேறு தொகுதிக்கு மாறி இருக்கின்றார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன? திமுகவிற்கு முஸ்லிம்கள் வாக்குகள் குறைந்துள்ளது என்பதை திமுக உணர்ந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

12. தேர்தல் கமிசன் கெடுபிடிகளைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

13. அடுத்த ஐந்தாண்டுகளில் மமகவின் செயல்பாடு எப்படி இருக்கும்.
Share:

முஸ்லிம்கள் திமுகவை புறக்கணித்து ரொம்ப நாட்களாகிவிட்டது - பேரா. ஜவாஹிருல்லா அதிரை எக்ஸ்பிரஸிற்கு பேட்டி

தமுமுக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) ஒருங்கிணைப்பாளரும், மமகவின்  இராமநாதபுரம் வேட்பாளருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களிடம் நேர்காணல் நடத்த இருப்பதாக நேற்று மாலை அதிரை எக்ஸ்பிரஸில் அறிவிப்பு செய்திருந்தோம்.

அது தொடர்பான சுட்டி http://adiraixpress.blogspot.com/2011/03/blog-post_5236.html

மிக குறுகிய நேரத்தில் நாங்களும் தயாராகி விட, நேற்றிரவு பதினோறு மணியளவில் நமது அதிரை எக்ஸ்பிரஸ் குழுவினர் சந்தித்து பல்வேறு அரசியல் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர்.

பேரா. ஜவாஹிருல்லா அவர்கள் நமக்கு வழங்கிய பேட்டிகளின் முக்கிய விடயங்கள்.

*  சென்னை முஸ்லிம்கள் திமுகவை புறக்கணித்து ரொம்ப நாட்களாகிவிட்டது.
* இராமநாதபுரம் தொகுதி தொடர்பாக SDPI அமைப்புடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது.
* வைகோ கூட்டணியை விட்டு பிரிந்தது வருத்தமளிக்கிறது.
* தவ்ஹித் ஜமாத் தொண்டர்கள் ஆதரவு தரகோரிக்கை.
* புதுச்சேரியில் மமகவிற்கு ஒரு தொகுதியை அதிமுக வாக்களித்துள்ளது. எந்த கூட்டணியும் அங்கு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
* இடஒதுக்கீடு விசயத்தில் காங்கிரஸ் சிறுபான்மையினருக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக்கொண்டிருக்கிறது.

முழு பேட்டியின் வீடியோ விரைவில் பதிவேற்றம் செய்யப்படும், இன்ஷா அல்லாஹ்.
Share:

ஆட்சியைப் பிடிக்க வேண்டியவர்கள் கொடியை மட்டும் பிடிக்கிறோம்

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சமூக சிந்தனையாளரும் இஸ்லாமியப் பேச்சாளருமாகிய மர்ஹும் அஹமது அலி @ பழனிபாபா கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழக முஸ்லிம்களின்  தேர்தல்நிலைப்பாடு குறித்து பேசிய உணர்வுப் பூர்வமான உரை.

நாளொரு பிரிவுகளாகப்பிரிந்து முஸ்லிம்களை மென்மேலும் சிறுபான்மை சமூகமாக்கிக் கொண்டிருக்கும் தமிழக சமுதாய அமைப்புகள் மட்டுமின்றி, அழைத்தபோது எல்லாம் கொடிபிடித்து கோஷம்போடும் முஸ்லிம் வாக்காளர்களும் அவசியம் சிந்திக்க வேண்டிய கருத்து.நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.அல்லாஹ் அன்னாரின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக! ஆமின்


Share:

பேரன்பு கொண்ட வாக்காளப் பெருமக்களே!

"பேரன்பு கொண்ட அதிராம்பட்டினம் வாக்காளப் பெருமக்களே! நல்லிதயம் கொண்ட தாய்மார்களே, மீனவ நண்பர்களே, விவசாயத் தோழர்களே இதோ உங்கள் வீட்டுப் பிள்ளை, ??????????????????????????? வாக்குகேட்டு உங்கள் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறார். உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ??????? சின்னத்தில் முத்திரையிட்டு, அண்ணன் ?????????????????????????? அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேணுமாய் உங்கள் பொற்பாதங்களைத் தொட்டுக் கேட்டுக் கொள்கிறோம்"
என்ற அரைநூற்றாண்டு பரிச்சயமான ஒலிபெருக்கி கோஷங்கள் அடுத்த 20 நாட்களுக்கு உங்கள் செவிகளைக் கிழிக்க உள்ளன.திருமணம் அல்லது புது மனைபுகுவிழா கண்ட வீடுகளின் சுவர்கள்,கட்சிக்காரர்களால் வெள்ளைச் சாந்து பூசப்பட்டு துப்பட்டிவண்ணான்குறிபோல் கட்சிகளின் இனிஷியலுடன் பளிச்சிடவோ அல்லது சுவர்கிடைக்காத எதிரணியினரால் சாணி பூசப்படக் கூடும்!

வீதிகளில் திரியும் ஆடுகளும் மாடுகளும் கட்சிபேதமின்றி கூட்டணிபோட்டு தலைவர்களின் போஸ்டர்களை மென்றுதின்று மன்றங்களில் சாணியிட்டுச் செல்லும். இரவெல்லாம் கொடி கட்டி, போஸ்டர் ஒட்டிய உதவாக்'கரை'கள் மன்றத்திலேயே தூங்கி மறுநாள் வீடுதிரும்பக்கூடும்!

மதவழிபாட்டுத் தலங்களில் வாக்குகேட்கக்கூடாது என்று தேர்தல் கமிசன் தடைவிதித்திருப்பதால் இந்தத் தேர்தலில் தொப்பிபோட்ட மாரிமுத்து, பாலு அண்ணன்களைக் காணமுடியாது. (மதவழிப்பாட்டுத்தலத்தை இடித்து அங்கு இன்னொரு மதவழிபாட்டுத்தலம் கட்டுவோம் என்பதையும் தேர்தல் கமிசன் தடைசெய்யுமா?)

தெருவுக்குத் தெரு தேர்தல் அலுவலகங்கள், கட்சிக்கொடிகள்,தோரணங்கள், மெயின்ரோட்டில் பிரபலங்களின் பிரச்சாரங்கள் (இந்தமுறை நடிகை குஷ்பு அதிரையில் பிரச்சாரம் செய்வாரா?) போக,ஐந்து வருடங்கள் காணமல்போய் இருந்தவர்கள் இனிமேல் தொகுதியில் அடிக்கடி தலை காட்டுவர்.

உலக கோப்பை கிரிக்கட் போட்டிகளுக்கிடையேயும் படித்து பரிட்சை எழுதி முதல் தேர்தலைச் சந்திக்கும் அரும்புமீசை வாக்காளர்களும் இனிஅரசியல் பேசுவர். ஈ விரட்டும் டீக்கடைகளில் கூடுதல் கூட்டமிருக்கும், மசால்வடை, போண்டா மடிக்க உதவிய தினத்தந்தி,தினமலர், தினகரன் தின/வாரஇதழ்கள் இனி கட்சி அலுவலகங்களில் பிரித்து மேயப்படும்!

டிவி சீரியல் விளம்பரங்களுக்கிடையில் அரசியல் தலைவர்கள் அடிக்கடி பல்லிளிப்பார்கள். சொந்தசேனல்கள் வைத்துள்ள கட்சிகள் தேர்தல் அலசல் என்ற பெயரில் தேர்தல் கமிஷன் கண்ணில் மண்ணைத் தூவக்கூடும். SMS, ஈமெயில் மற்றும் இலவச BLOG-களையும் விட்டுவைக்கப் போவதில்லை.

சமீபத்தில் இந்நேரம்.காமில் வணங்காமுடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலையும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள். ஜெய் அல் ஹிந்த்!
Share:

பேரா ஜவாஹிருல்லாவிடம் நேர்காணல் பற்றிய அறிவிப்பு

தமுமுக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், மமகவின்  இராமநாதபுரம் வேட்பாளருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா
அவர்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நேர்காணல் நடத்த இருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.

வாசகர்கள் தேர்தல் தொடர்பான தங்களின் கேள்விகளை விரைந்து அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேர்தல் செய்திக் குழு
அதிரை எக்ஸ்பிரஸ்
Share: