Saturday, April 30, 2011

நேரலை துவங்கியது,....அதிரையில் நாளை(01-05-2011) ALM பள்ளியில் நடக்கும் கல்வி கருத்தரங்கம் நேரலை Dr.K.V.S.ஹபிப் முகம்மது அவர்கள் உரையாட்டுகிறார்.


Video chat rooms at Ustream

Friday, April 29, 2011

மின்தடை! பஸ் மறியல் .................


அதிராம்பட்டிணம் நேற்று(29-04-2011) காலை 9 மணிக்கு போன மின்சாரம் இன்று (30-04-011)காலை 7.30 மணிக்கு வந்தது . இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள்  நேற்று(29-04-2011) இரவு 8 மணியில் இருந்து 12 மணிவரை வண்டிப் பேட்டை அருகில் பஸ் மறியலில் இடுபட்டனர் .

நமது ஊர் காவல்துறை ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் .பக்கத்தில் உள்ள மதுக்கூர் ,மன்னார்குடி முத்துப்பேட்டைஆகிய ஊர்களிலும் மின்தடை இருப்பதை சுட்டிக்காட்டிமறியலை கைவிட வர்புர்தினர் பின்னர் ஆர்பாட்டம் கைவிடப்பட்டது .


நிறுத்தப்பட்ட பஸ் அணிவகுத்து நிற்கும் காட்சி ............காவல்துறை ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் காட்சி ....


என்ன கொடுமைங்க இது!

தமிழகம் முழுதும் கடும் மின்பற்றாக்குறை இருப்பதை அறிவோம். தேர்தல் முடியும் வரை காத்திருந்து நுகர்வோரை கொடுமைப்படுத்தும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. சென்னையில் பல இடங்களில் அறிவிப்பு செய்யப்பட்டு 8 மணிநேரம் வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறி முழுதாக ஐந்தாண்டுகள் கழிந்த பின்பும் மின்சார பற்றாக்குறைக்கு முந்தைய அதிமுக ஆட்சி மின் உற்பத்திக்கு முறையான திட்டங்கள் வகுக்கவில்லை என்று சொல்வது என்பது இவர்கள் ஆண்ட ஆட்சியின் இலட்சனத்தை பறை சாற்றுகிறது.  ஏற்கெனவே மின்சார பற்றாக்குறை இருக்கும்போது இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு மின்சாதனங்களை இலவசமாக தருவதாக தேர்தல் வாக்குறுதி வேறு. வெளங்கிடும்.

மின்தடைக்கு அதிராம்பட்டிணம் மட்டும் விதிவிலக்கா என்ன. இன்று (29-04-2011) காலை 9 மணிக்கு போன மின்சாரம் இரவு 8.15 மணிவரை வரவில்லை. பேரூராட்சியின் அலட்சியப்போக்கினால் ஏற்கெனவே கொசுத்தொல்லையில் இருந்து வரும் அதிரை, இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகளும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.

ஒரு பேட்டி...

ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் M.A. B.Sc. B.T அவர்கள்..


இப்போது இணைய தளத்தில் அதிகம் கலக்கிக்கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டை பொருத்தவரை அதிராம்பட்டினத்தை சார்ந்தவர்களாகத்தான் இருக்கமுடியும். இருப்பினும் இவர்களின் கல்விக்கு ஆரம்ப காலத்தில் பொறுப்புடன் செயலாற்றிய பல ஆசிரியர்கள் இப்போது ஒய்வு பெற்று விட்டார்கள்.

அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என நினைவு வந்தவுடன் எனக்கு கிடைத்த டெலிபோன் நம்பரில் தொடர்பில் கிடைத்த ஆசிரியர் SKM H என்று நான் படிக்கும் காலங்களில் அன்புடன் அழைக்கப்பட்ட ஹாஜா முஹைதீன் சார். நானும் அவரின் பழைய மாணவன் ஆதலால் சில நல விசாரிப்புகளுக்கு பிறகு...

உங்கள் மாணவப்பருவம், பள்ளியில் சேர்ந்து பணியாற்றியது பற்றி...

பள்ளிப்பருவம் எல்லாம் காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளிதான் [ அப்போது உயர்நிலை மட்டும் தான்] பிறகு பி.யு. சி எல்லாம் Kadhir Mohideen college , 3 வருடம் ஆசிரியராக பணியாற்றிய பிறகு புதுக்கோட்டை அரசினர் ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரியில் B.T படிப்பு முடித்து, 8- 9 வருடம் ஹையர் செக்க ஆசிரியர் ஆகி 1986ல் தலைமை ஆசிரியர் பொறுப்பு ...பிறகு 31- 05- 1998 ல் ஓய்வு பெற்றேன்...

ஒரு மிகப்பெரிய பணியை இவ்வளவு சிம்பிளாக சொன்னது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது..இடைப்பட்ட காலங்களில் எத்தனை நிகழ்வுகள் எத்தனை ஏமாற்றம் , எத்தனை வெற்றி எதையும் ஒரே மாதிரி பார்க்கும் மனப்பக்குவம் சாரின் வார்த்தைகளில் தெரிந்தது.

இப்போது உங்களது வேலை பற்றி...

1998 செப்டம்பரிலிருந்து IMAM SHAFI METRIC HIGHER SECONDARY SCHOOL, ஏறக்குறைய 70 Teachers, 30 பேர் கொண்டNon Teaching Satff, உதவியுடன் 1600 மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது.

மறக்கமுடியாத நிகழ்வுகள், மாணவர்கள் பற்றி...

நிறைய இருக்கிறது,நிறைய மாணவர்களும் இருக்கிறார்கள். மாணவர்கள் பெயர் எல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை..என் வயதும் அதற்க்கு ஒரு காரணமாக இருக்களாம். நாடகம் விளையாட்டு என்று எனக்கு ஆர்வம் இருந்ததால் சில மாணவர்கள் எனக்கு ஞாபகம் இப்போதைக்கு வருகிறது.நாடகங்களில் பங்கேற்ற ஜாபர், அஸ்ரப், சிராஜுதின், நூர்முஹம்மது, விளையாட்டில் சிறப்பாக இருந்த அல் அமீன். உன் பெயரில் இன்னொரு மாணவன் இருந்தான் [ அவனும் ஜாஹிர் ஹுசேன் தான்.. உனக்கு ஜூனியராக இருக்க வேண்டும்.]

நினைவில் நிற்க்கும் நிகழ்வுகளில் என் ஆசிரியர் பணியையே சொல்லலாம்...நான் படித்தது நாடிமுத்து சார், ரெங்கராஜ் சார், நாகரத்தினம் சார்..இந்த மூவரிடமும். பின் அவர்களோடு சேர்ந்து ஒன்றாக பணியாற்றியது, பிறகு நான் தலைமை ஆசிரியர் ஆகும்போது அவர்களும் என்னுடன் பணியாற்றியது. இது இன்னால் வரை எனக்கு அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

இன்னும் ஒன்று ஒருமுறை பக்கத்து ஊரில் தேர்தல் தலமை அதிகாரியாக போயிருக்கும்போது [அசம்ப்ளி எலக்சன்] ஒரு P.E.T ஆசிரியர் என்னைவிட மூத்தவர் [ வேலை/வயது இரண்டிலும்] என்னைப்பார்த்து சொன்னது எப்படி சார் நீங்கள் ஒரு P.E.T , ஆனால் என்னை விட வயதிலும் , சர்வீசிலும் குறைந்தவர் எப்படி எனக்கு தேர்தல் அதிகாரியாக அரசு நியமித்து இருக்கிறது.??

உடனே நான் சொன்னேன் ' சார் முதலில் ஒரு உண்மை..நான் P.E.T அல்ல , கிராஜுவேட் முடித்து , தலைமை ஆசிரியாக இருப்பதுடன் ஒரு Mathematics Teacher. நான் விளையாட்டின் மீதான ஆர்வத்தில் மாணவர்களுடன் District/ Divisional Sports போவதை பார்த்து என்னை P.E.T ஆக நினைத்து விட்டார்.’

இல்லை சார் இன்றும் ஸ்லிம் ஆக இருக்கும் உங்கள் உடல்வாகு பார்த்து அவர் முடிவு செய்து இருக்களாம்..- இது நான்

ஒரு முறை District Education Officer ஆக இருந்த ஒருவருடன் இலக்கிய மேடையில் பேசிய பிறகு, அடுத்த நாள்அவர் நமது ஸ்கூலுக்கு வந்த போது நான் கணக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் போது 'நீங்கள் ஏன் கணக்கு பாடம் எடுக்கிறீர்கள்?...போய் கணக்கு ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றவுடன்..சார் நான் கணக்கு ஆசிரியர்தான் என விளக்கம் சொல்லவேண்டியிருந்தது.

முன்னால் / இந்நாள் மாணவர்கள் ஒரு ஒப்பீடு……..

' அப்போது இருந்த மாணவர்களிடம் இருந்த obedience இப்போது பார்ப்பது அறிதாகிவிட்டது.. அதற்க்கு காரணம் சூழ்நிலைகள், சட்டம் எல்லாம்தான். மாணவர்களை அடித்துத்தான் திருத்த வேண்டும் என்று இல்லை நாம் அவனிடம் அன்பாக ஒரு 10 நிமிடம் பேசினாலும் அவனது தவற்றை உணர வைத்து விடலாம். முன்பு ஒரு ஆசிரியரிடம் கோபமாக நடந்த மாணவனை எனது அன்பால் திருத்திய 2 நிகழ்வுகள் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

தமிழ் , இலக்கியம் மற்றும் நாடகம் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

' உண்மையிலேயே நான் தமிழ் இலக்கியம் படிக்க பச்சையப்பன் கல்லூரிக்கு அப்ளிகேசன் போட்டு இடம் எல்லாம் கிடைத்து விட்டது , அப்போது டாக்டர் மு.வரதராசன், பேராசிரியர் அன்பழகன் எல்லோரும் அங்கு பேராசிரியராக பணீயாற்றிய காலம்...அப்போது உள்ள குடும்ப பொருளாதார சூழ்நிலையில் நான் மெட்ராஸ் போய் படிக்க முடியவில்லை.

நான் ஆசிரியர் பணியில் இருக்கும் போது பள்ளி மாணவர்களை, அகில இந்திய வானொளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்தேன் அதில் நான் எழுதி மிகப் பிரபலமான இரண்டு நாடகங்கள் மாவிரன் அலெக்சாண்டர், மாவீரன் திப்பு சுல்தான், அறிவியல் நிகழ்ச்சிகள் ஆறு முறையும் மற்றும் வினாடிவினா நிகழ்ச்சி மூன்று முறையும் எழுதி இயக்கியிருக்கிறேன்.

உங்கள் குடும்பம் பற்றி..

2 மகன்கள், 1 மகள் எல்லோருக்கும் கல்யாணமாகிவிட்டது... நானும் 2002 ல் குடும்பத்துடன் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டேன். நீ எப்படிப்பா இருக்கே..உனக்கு எத்தனை பிள்ளைங்க...உன் வாப்பா சவுக்கியாமா..என் சலாத்தை அவர்களுக்கு சொல்லிவிடு...

காலங்கள் எவ்வளவு கடந்தாலும் சாரின் அன்பான விசாரிப்பில் நான் நெகிழ்ந்துதான் போனேன்.

ZAKIR HUSSAIN

நன்றி: சகோதரர்கள் மொய்னுத்தீன் உமர்தம்பி / அபு இபுறாஹிம்

Thursday, April 28, 2011

சிறப்பாக நடந்து முடிந்த(AFFC) கிரிக்கெட் தொடர்ப் போட்டி...அதிரையில் இன்று (28-04-2010 ) நடந்து முடிந்த கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் (AFFC)அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் அணியும் (KCC) கறம்பக்குடி அணியும் இறுதி ஆட்டத்தில் மோதின அதில் (AFFC)அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் அணி ரூபாய்12000 பரிசை தட்டிச்சென்றது, இரண்டாம் பரிசு 10000 த்தை கறம்பக்குடிஅணி தட்டிச்சென்றது முன்றாம் பரிசு ரூபாய் 8000 த்தை அதிரை WCC மேலத்தெரு அணி தட்டிச்சென்றது. இந்த தொடர் போட்டியில் சுமார் 46 அணிகள் பங்கு பெற்றது என்பது குறிப்பிடதக்கது.


சிறப்பு விருந்துனர்கள் ஆட்டத்தை துவைக்வைக்கும் காட்சி...விழா பந்தல் ................


ஆட்டம் நடை பெறும் காட்சி ..............
சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கும் காட்சி ...........
இதன் தொடர்ச்சி விடியோ வடிவில் விரைவில் ................

Tuesday, April 26, 2011

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள்,  ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான  துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை,  தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.   இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும்.   குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).   மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும்.  அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு :
மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).  அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு :
B.Com, CA (Charted accountant ), M.Com  படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில்  நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.

5. வரலாறு, பொருளாதாரவியல் :
எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational  குரூப் :  தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):

    இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள்  என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil  etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள்.  மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன.  டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம்.  பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள்  டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ).  12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. 

III. சான்றிதழ் படிப்பு (ITI):

   இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic  போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.


10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (
கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc...
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு , ITI, டிப்ளோமா படிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech at gmail என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

நன்றி:S.சித்தீக்.M.Tech

Monday, April 25, 2011

அதிரை வாசிகளுக்கு ஓர் நற்செய்தி !


 அதிரை ரயில்வே நிலையத்தில் கணினி மூலம் முன் பதிவு முறையை ( *Computerised Resrvation System* ) வெகு விரைவில் அறிமுகபடுத்த ரயில்வே நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துவருகிறது .. இது சம்பந்தமாக The Commercial Manager, Southern Railway , Trichy , ஒரு தபால் எழுதி இருந்தோம். அதன் அடிப்படையில் இன்று கிடைத்த தகவலின்படி , இன்னும் இரண்டொரு மாதத்தில் மேற்கண்ட சேவை அதிரை வாசிகளுக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்! அகல ரயில் பாதை கிடைக்காத இந்த  நேரத்தில் இதன் பிரயோஜனம் என்ன என்று கேட்க தோணும் ? குறிப்பாக TATKAL  முறையில் முன் பதிவு செய்ய COMPUTERISED RESERVATION SYSTEM மிக அவசியம்..

 ONLINE மூலமாக முன் பதிவு செய்தாலும் நேரிடியாக RESERAVATION செய்வதால் உடனடியாக CONFIRMATION ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தேவையற்ற பட்டுக்கோட்டை பயணத்தை தவிர்க்கலாம்.
 
 மேற்கண்ட முயற்சி, அதிரை எக்ஸ்பிரஸ் வலை தலத்தில் ஓர் நண்பர் முத்துபேட்டையில் RAILWAY BOOKING வசதி வந்துவிட்டது , ஆனால் அதிரை
 மட்டும் மக்கள் ஏன் இந்த முயற்ச்சியை மேற்கொள்ளகூடாது என்று கேட்டு இருந்தார், அதன் காரணமாக எடுத்த முயற்சி பலன்கிடைதுள்ளது . காத்து இருங்கள்.
 
 உங்கள்
 அப்துல் ரஜாக்(chasecom)

அதிரையில் மழை

கடந்த ஒரு வாரமாக அதிரையில் கோடை மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட சூடு தனிந்து தற்போது குளிர்ந்த காற்று வீசுகிறது. நேற்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
பேரூராட்சியின் அரிய செயல்.... புகைப்படம்

அன்னிய செலவானியை அள்ளித்தரும் அதிரையில் பொதுமக்களுக்கு தேவையான எந்த ஒரு பணியாயிருந்தாலும் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ்தான் செயல்படுத்தவேண்டி இருப்பதை நாம் அறிவோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி உறுப்பினர்களோ அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் உப்புச்சப்பானியாய் வாய்மூடி அமைதியாய் இருக்கின்றனர்.

சுகாதாரப்பிரச்சினைகள், தெருக்களில் கொசு மருந்து அடிப்பது, தெருக்களை சுத்தம் செய்தல், சாக்கடை கால்வாய் வசதி, ரோடு வசதி போன்றவைகள் அரசாங்கம் தானாகவே செயல்படுத்தவேண்டிய திட்டங்கள். ஆனால், இளிச்சவாயர்கள் எங்கு அதிகமாக இருக்கிறார்கள் என்று பார்த்து நமக்கு நாமே திட்டத்தை அறிமுகம் செய்கிறார்கள் அரசு அதிகாரிகள். அந்த வகையில் சமீபத்தில் கூட நமதூர் நடுத்தெருவில் அமையப்பெற்றுள்ள ரோட்டிற்கு நமக்கு நாமே திட்டம் மூலம் நமதூர் சகோதரர்கள் சுமார் மூன்று இலட்சம் வரை பண உதவி செய்தனர். இதில் கணிசமாக வெளிநாடுகளில் வசூல் செய்யப்பட்டது.

இதேப் போன்று, சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ததாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசும், நமதூரின் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க பேரூராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில் நமதூர் இளைஞர்கள் சிலர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் தெருக்களை சுத்தம் செய்வதற்கு, கொசு மருந்து அடிப்பதற்கும் பொதுமக்களிடம் வசூல் செய்து (நமக்கு நாமே)  ஆட்களை நியமித்து பராமரித்து வந்தனர். ஆனால் கடுமையான பொருட்செலவினால் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனது.

மனம் தளராத நமதூர் சகோதரர்கள் மீண்டும் பொதுமக்களிடம் வசூல் செய்து (திரும்ப திரும்ப சொல்லனும்னா அதே நமக்குநாமே திட்டம்) ஆயிஷா மகளிர் அரங்கம் பெயரில் இரும்பு கூண்டுகள் வாங்கி நகர் முழுதும் வைத்தனர்.
இந்த சிறிய வகை கூண்டுகளில் கொட்டப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்து அல்லது நாட்களை கடத்தியே சுத்தம் செய்கிறது. குப்பைகள் கூண்டுகளில் நிறைந்து வீதி முழுதும் விரவிக் கிடக்கிறது. சில தெருக்கள்ஆண்டுக்கு இருமுறை (இரண்டு பெருநாட்கள்) மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது.
ஏற்கெனவே எல்லா வீதிகளிலும் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடுகள் விளைவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த பெரிய குப்பைத் தொட்டிகள் பெரிய அளவில் இருப்பதால் குப்பைத் தொட்டிக்கு வெளியில் குப்பை வருவது குறையும். ஆனாலும், பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி மருந்து அடித்து குடிமக்கள் சுகாதாரமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Saturday, April 23, 2011

மாணவர்கட்குப் பயன் தரும் இணைய தளங்கள்


1.   http://www.textbooksonline.tn.nic.in/
      இதனை தமிழக அரசின்  கல்வி அமைச்சகம்  இதனை உருவாக்கியுள்ளது.இதிலே  12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு  என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
2. http://www.alfy.com/
   இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும்  நிறம்தீட்டுதல் வீடியோ  கிளிப்ஸ் என  விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம்.
3. http://www.coolmath4kids.com/
     இத்தளம் குழந்தைகளின்  கணித  அறிவு  ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது.
4. http://kids.yahoo.com/
    இது  குழந்தைகளுக்காக யாஹூ  நிறுவனத்தின்  படைப்பாகும்.
5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp
    இது தினமலர்  நாளிதழின் கல்விக்கானப்  படைப்பாகும் இதிலே  மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன.
6. http://www.educationatlas.com/
     படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல்  அவற்றினை  மேம்படுத்துதல் போன்றவற்றினை  இத்தளம்  சிறப்பாகக்  கூறுகின்றது.
7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
 ஆங்கில  அறிவினை  ஆரம்பத்தில்  இருந்தே  வளர்த்துக் கொள்வதற்கானத்  தளம்.
8. http://www.tamilnotes.com/
   தமிழ்  இலக்கண  அறிவை  வளர்த்துக் கொள்வதற்கான  இணையம்.

Friday, April 22, 2011

கோடைகாலப் பயிற்சி முகாம்......அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.  கடந்த ஆண்டுகளைப் போன்று, இவ்வாண்டும் மாணவ மாணவியர்க்கான பயனுள்ள கல்விப் பயிற்சிகளை வழங்கும் ஒரு மாத காலப் பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 01 – 05 – 2011 முதல் 31 – 05 - 2011 வரை துபை 'அதிரை இஸ்லாமிக் மிஷன்' மற்றும் ஏ. எல். எம். பள்ளி நிர்வாகம் சார்பில் மேற்படிப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.  ஆர்வமுள்ள பெற்றோர்கள் தம் ஏழு வயதுக்கு மேற்பட்ட மக்களைப் பயிற்சிகளில் பங்குபெற வைப்பது கொண்டும், மாணவ-மாணவியர் தாமே வந்து இணைந்து பயன்பெறுவது கொண்டும் இந்த விடுமுறை நாட்களைப் பயனுள்ள வழியில் கழித்து இம்மை-மறுமை வெற்றிக்கான முயற்சியில் ஒத்துழைப்புத் தருமாறு கோருகின்றோம்.

பாடங்கள்:  
                          ·    தீனியாத் பயிற்சிகள்
·        இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை
·        கம்ப்யூட்டர் கோர்ஸ்
·        Spoken English / Arabic
·        Personality Development
·        உயர்கல்வி வழிகாட்டுதல்கள்..  மற்றும் பல.

வகுப்புகளின் நேரம்: காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணிவரை.

தூரப் பகுதிகளிலிருந்து மாணவ-மாணவியரை அழைத்து வருவதற்கும், வகுப்புகள் முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டுவந்து விடுவதற்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையாகப் பங்கு பெற்று முடிக்கும் மாணவ-மாணவியர்க்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்படும். 

தொடர்புக்கு:  9566716216 / 9750969302 / 9894989230    
                
  அன்புடன் அழைக்கும்,
  AIM & ALM
  அதிராம்பட்டினம்  

Thursday, April 21, 2011

நமதூரின் முதல் பிசியேதெரபிஸ்ட் டாக்டர்.....


நமதூர் கீழத்தெருவைச் சேர்ந்த S.S.சேக் தாவுத் (பாட்டன் வீடு) மகன் ஜம்ஸித் முகம்மது, இவர் காதிர் முகைதீன் பள்ளியில் +2 அறிவியல் பாடம் படித்துவிட்டு கடந்த 2006 ஆம் ஆன்டு முதல் திருச்சி கமலம் விஸ்வநாதன் பிஸியோதெரபி கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்று விட்டு தற்போது கோவையில் உள்ள கங்கா மெடிக்கல் சென்டர் என்ற பிரபல மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.
மருத்துவத்துறையில் நம்மவர்கள் குறிப்பாக அதிரைக்காரர்கள் அதிகம் வரமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஜம்சித் முகம்மது என்கிற நமதூர் வாலிபர் ஒருவர் இத்துறையில் பட்டம் பெற்று பணியில் சேர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. அவருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுபோல்,  இத்துறையில் சகோதரர் ஜம்சித் மேற்படிப்புகளும், அனுபவமும் பெற்று அதிரை மக்களுக்கும் சேவை செய்யவும் முன்வரவேண்டும்.

+2 தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பிஸியோதெரபி படிப்பு தொடர்பான விவரங்களைப் பெற சகோதரர் ஜம்சித் முகம்மது அவர்களிடத்தில் கலந்துரையாடவும்.

அன்னாரின் தொலைபேசி
S.JAMSHEED MOHAMED
EMAIL: JAMSHEED_27@YAHOO.CO.IN
CELL: 9894283164

அதிரையில் பேருந்து விபத்து....

இன்று (21.04.2011) காலை 11.30 மனி அளவில் பட்டுக்கேட்டையில் இருந்து அதிரையை நோக்கி வந்து கொன்டு இருந்த பேருந்து நமதூர் வெள்ள குழம் அருகில் வந்த பெழுது பக்கத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. நமதூரில் காலை 9 முதல் 12 மனி வரை மின் தடை இருந்ததால் இறைவன் அருளால்  பெரும் சேதம் தவிர்க்கப் பட்டுள்ளது.