Tuesday, May 31, 2011

AFFA வின் இன்றைய போட்டி(31-05-2011)

இன்று (31-05-11) முன்றாம் குவாட்டர் பைனல் ஆட்டமாக கலைவாணர் கண்டனூர் பாலையூர் அணியும் சிவகங்கை அணியும் மோதின . கலைவாணர் கண்டனூர் பாலையூர் 1-0 கோல் கணக்கில் அணி வெற்றிப் பெற்றது .

நாளை இரண்டு ஆட்டம் நடைபெறும் .

1.AFFA அதிரை vs PKT பட்டுகோட்டை

2.7STAR சென்னை VS கலநிவாசல் காரைக்குடி

ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் செவிசாய்க்குமா?

திருமதி Dr. செல்லராணி ஜேக்கப் DGO அவர்களை ஷிபா மருத்துவமனையின் புதிய மகப்பேறு மருத்துவராக நியமனம் செய்த ஷிபா மருத்துவமனையின் நிர்வாகக்குழுவிற்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுக்கு சில கோரிக்கைகளையும் யோசனைகளையும் வைக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்.

கோரிக்கைகளும்! யோசனைகளும்!!

1. இரத்த வங்கி அமைத்தல்.

2. 24 மணி நேர அவசர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துதல்.

3. நவீன அறுவை சிகிச்சை உபகரணங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்.

4. ஏழை எளியவர்களின் மகப்பேரு(செலவு)களுக்கு சலுகை காட்டுதல்.

5. பெரும்பாலும் நம் ஊர் சகோதரிகள் மகபேறுக்காக பட்டுக்கோட்டையையும் தஞ்சாவூரையும் நாடுவதற்கு மிக முக்கியமான காரணம் பிரசவ நேரத்தில் ஏற்படும் அவசர தேவைக்கு அலட்சியமான ஒரு பதிலை மிக தாமதமாக சொல்வது, உதாரணமாக பிரசவ நேரத்தின் போது ஒரு சகோதரிக்கு இரத்தபோக்கு ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம் உடனே இரத்தம் தேவைப்படும் ஆனால் ஷிபா மருத்துவமனையிலோ ரத்த வங்கி இல்லாத சூழ்நிலை, உடனே டாக்டரிடம் இருந்து வரும் முதல் பதில் உடனே கூட்டிக்கொண்டு பட்டுக்கோட்டைக்கோ தஞ்சாவூருக்கோ செல்லுங்கள் என்று மிக அலட்சியமாகவும் தாமதமாகவும் சொல்வார்கள், அப்படி செல்லும்போது வழியிலேயே உயிர் பிரியக்கூடிய நிலை வரலாம் அல்லாஹ் நாடினால். இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை நன்கு பெற்றிருந்தும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் நம் ஊர் சகோதரிகள் பிரசவத்திற்காக அண்டைய ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலை மாற சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. நல்ல மருத்துவர்களை மட்டும் நியமனம் செய்தால் மட்டும் போதாது, நல்ல மருத்துவ வசதிகளையும், பிரசவ நேரத்தில் தேவைப்படும் மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

7. இதற்கு முன் இருந்த திருமதி Dr. கோமதி அம்மா அவர்கள் நம் ஊரில் மிகவும் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவராக திகழ்ந்தவர், அவர்கள் இம்மருத்துவமனையை விட்டு விலகி செல்ல காரணம் என்ன? மருத்துவர்களுக்கு வசதிகள் குறைவா? மருத்துவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற சூழல் நம் ஊரில் இல்லையா? அல்லது வேறு பிற காரணமா? இது போன்ற விசயங்களை மருத்துவர்களிடம் கலந்து பேசி மருத்துவர்கள் மருத்துவமனையை விட்டு விலகிச்செல்லாமல் இருக்க வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

8. மருத்துவமனை நிர்வாகக்குழு மாதம் ஒரு முறையாவது கூடி மருத்துவமனையின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளில் ஈடுபட வேண்டும்.

9. இரவு நேரங்களில் அவசர தேவைக்கு உதவும் மருத்துவமனையாக ஷிஃபா மருத்துவமனை திகழ வேண்டும், அதற்கு ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் இரவு நேரங்களில் பணியமர்த்தப்பட வேண்டும்.

10. பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களை அழைத்து சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும்.

யா அல்லாஹ்! யாரெல்லாம் ஊர் நலனிலும் சமுதயா மக்கள் நலனிலும் அக்கறை கொண்டு அவர்களின் தேவையை நிறைவேற்றுகிறார்களோ அவர்களின் பணியை அங்கீகரிப்பாயாக, அவர்களுடைய தேவையை நீ பூர்த்தி செய்து வைப்பாயாக! ஆமீன்.

வஸ்ஸலாம்.
அன்புடன்.,
வளர் பிறை.

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் உரை .


அதிரை பைத்துல்மால் நடத்திய திருக்குர் ஆன் மாநாட்டில் டாக்டர் அப்துல்லாஹ் பேசிய விடியோவின் தொகுப்பு .
முதல் பாகம்

 

 

 

 

 


இரண்டாம் பாகம்

 

 

 

 

 Video streaming by Ustream

ஷிஃபா மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு .


அதிரை ஷிஃபா மருத்துவமனையின் புதிய  மகப்பேறு மருத்துவராக டாக்டர் செல்லாராணி ஜேக்கப் (DGO) நியமிக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகள் மருத்துவ அனுபவமிக்கவர்கள். சவுதி அரேபியாவில் 5 ஆண்டு அனுபவமும் 30 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளிலும் மகப்பேறு மருத்துவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள்.


வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் தங்களது மருத்துவ தேவையை உள்ளூரிலேயே பூர்த்தி செய்ய தங்களது குடும்பத்தினரிடம் வலியுறுத்த அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.

Monday, May 30, 2011

AFFA வின் இன்றைய போட்டி(30-05-2011)

இன்று (30-05-11) இரண்டாம் காலிறுதி ஆட்டமாக அதிரை AFFA அணியும் அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி அணியும் மோதின . கடைசி ஒரு நிமிடம் மிஞ்சி இருந்த நிலையில்
அதிரை AFFA அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


இன்றைய ஆட்டத்தின் சிறப்பு அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி அணியில் பத்தாம் வகுப்பில் 462 மதிப்பெண் பெற்ற சிறுவனின் ஆட்டத்திற்கு அரங்கமே அதிர்ந்தது . அவருடைய ஆட்டத்தை பாராட்டி 800 ருபாய் பரிசு வழங்கப்பட்டது .


கால்பந்து ரசிகர்கள் அந்த சிறுவனை பாராட்டும் காட்சி 
நாளை (31-05-11) முன்றாம் குவாட்டர் பைனல் ஆட்டமாக் கலைவாணர் கண்டனூர் பாலையூர் அணியும் சிவகங்கை அணியும் மோதிகினறன .

சம்சுல் இஸ்லாம் சங்கம் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்!


சம்சுல் இஸ்லாம் சங்கம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் 
   அதிரையின் 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பொதுக்குழு பற்றிய அறிவிப்புச் செய்த பின்னர் வெகுவாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இன்றைய (29 / 05 / 2011) பொதுக்குழுக் கூட்டம், சங்கத்தின் புதிய கட்டிடத்தில் ஜனாப் இக்பால் ஹாஜியாரின் தலைமையில், சங்கத் தலைவர், அட்வகேட் அப்துர்ரஜாக் ஹாஜியார், எம்.எஸ். தாஜுத்தீன் ஹாஜியார், சங்கச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகிக்க, இன்று காலை பத்து மணியளவில் கூடியது.

சங்க நிர்வாகிகளின் அன்பான வரவேற்புடன், பொதுக்குழு வருகையாளர்கள் ஆவலுடன் கூட்ட நிகழ்வுகளுக்காகக் காத்திருந்தனர்.  முன்னதாக, காரீ அப்துல் ஹாதி பாகவியவர்களின் திருமறை குர்ஆன் ஓதலுடன் கூட்டம் முறையாகத் தொடங்கிற்று.  அதனைத் தொடர்ந்து, 2010 – 2011 நிதியாண்டின் வரவு செலவுக் கணக்கு, சங்கப் பொருளாளரால் வாசிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, சங்கத் துணைச் செயலாளர், சங்கப் புதிய நிர்வாகத்தின் கடந்த காலச் செயல்பாடுகள் பற்றிய தொகுப்புரையை வழங்கினார். 


அடுத்த நிகழ்வாக, சங்கத்தின் சட்ட வரைவுகளின்  திருத்தங்கள், பரிந்துரைகள் பற்றிய அறிமுக உரையை, அக்குழுவின் தலைவர் மவ்லவி அஹ்மது இப்ராஹீம்   காஷிஃபி அவர்கள் நிகழ்த்தினார்கள்.


அதனையடுத்து, பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் சங்கப் புதிய கட்டிடத்தைப் பூர்த்தி செய்வதற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் நன்கொடைப் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்திச் சிற்றுரை நிகழ்த்தினார்.
ஜனாப் அப்துல் காதர் அவர்கள் சங்கம் நிதி சம்பந்தமாக உரை நிகழ்த்தும் கட்சி .


இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துரைகளுக்கான வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் தம் கருத்துகளை மைக் மூலம் தெரிவிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது.  கருத்துரைகள் கண்டனமாக இருந்தாலும், வரவேற்பாக இருந்தாலும் திறந்த மனத்துடன் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டன.  அவை வருமாறு:
       
  • முன்னதாக ஒருவர், சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் தேர்வு முறையாக நடக்கவில்லை என்றும், அது பொதுக்குழுவால் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.  அதனை வரவேற்ற நிர்வாகிகள், அவருடைய ஆட்சேபனையை இந்தப் பொதுக்குழுவில் முன்வைத்து, அதற்கு ஒப்புதல் பெற்றனர்.
  • அடுத்து ஒருவரின் ஆட்சேபனை.  சங்க நிர்வாகிகள் வாரத்தில் ஆறு நாட்கள் கூடி, தலாக் போன்ற பிரச்சினைகளில் ஆண்களை மட்டும் விசாரணை செய்கின்றனர்.  ஆனால், பெண்களின் கருத்தாடல் அங்கே புறக்கணிக்கப் படுகின்றது.  அதனால் இந்தத் தீர்வுகள் ஒரு பக்கச் சார்புடையவை; பெண்களையும் பெண்களைக் கொண்டே விசாரணை செய்து, அவற்றின் விவரங்களைப் பெற்றுத் தீர்ப்புச் செய்வதே நல்லது என்பதை முன்வைத்தார்.  இந்தப் பரிந்துரை பலரால் வரவேற்கப்பட்டது; எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டியது என நிர்வாகிகளால் உறுதியளிக்கப்பட்டது.
  • பேரசிரியர் தனது உரையின்போது, நமதூர் மக்கள் உள்ளூரில் இருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு, 'ஷிஃபா மருத்தவமனை, காதிர்முகைதீன் கல்வி நிலையங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார்.  இது பற்றிய கருத்துரையில், ஒருவர் தனது ஆட்சேபனையைப் பதிவு செய்தார்.  தன் மகளை நிறைமாதக் கர்ப்பிணியாக ஷிஃபாவில் சேர்த்தபோது, அங்கிருந்த மகப்பேறு மருத்துவர் நடந்து கொண்ட விதத்தைக் கடுமையாக விமரிசித்தார்.
  • சங்கத்தின் அறிவிக்கை ஒன்றில், சங்கக் கட்டிட நிதி வசூலாக ஒவ்வொரு வீட்டினரும் கட்டாயம் இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர், அந்த இருநூறு ரூபாய் என்பது மிகவும் குறைந்தது; அதனால், அந்தத் தொகையைக் கூட்டி அறிவிக்க வேண்டும் என்பதைத் தமது சொந்தக் கருத்தாக எடுத்து வைத்தார்.  பலர் அதற்கு மாற்றமான கருத்துகளை வெளியிட்டனர்.  முடிவில், தொகை குறிப்பிடாமல், கூடுதலோ குறைவானதோ, எதுவாயினும் அவர்கள் நன்கொடையாகத் தருவதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகக் கோரினர்.  அதையே பொதுக்குழுவும் ஏற்றுப் பரிந்துரைத்தது.
  • விரைவில் நடக்கவிருக்கும் பேரூராட்சித் தேர்தலில் நமது பகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சங்கத்தின் அனுமதியையும் ஆதரவையும் பெற்று எதிர்ப்பின்றித் தேர்வு பெறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு நம் சங்கம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற பரிந்துரை ஒருவரால் வைக்கப்பட்டு, அது ஒருமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • ஊரின் கட்டிடப் பணிகளுக்கு வெள்ளிக் கிழமைகளில் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதை, அதற்கான காரணங்களுடன் விரிவாக விளக்கி ஒருவர் பேசி, அதற்காக சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சம்மந்தப்பட்டவர்களிடம் அதனை அமுல் படுத்துமாறு கோரவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.   அமர்வில் கலந்துகொண்ட அனைவரும் இதனை வரவேற்றனர்.
  • சங்கத்தின் திருமணப் பதிவேட்டிற்கு மாற்றமாகச் சிலர் தனித்தனிப் பதிவேடுகள் வைத்திருப்பது பற்றியும், அப்படி வைத்திருப்பவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்னொருவர் கருத்தறிவித்தார்.  "அப்படிச் செயல்படுவோர் உங்கள் உறவினர்களாக இருந்தால், அவர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பீர்களா?" என்ற கேள்வி சங்க நிர்வாகிகளால் எழுப்பப்பட்டபோது, "நிச்சயமாகப் புறக்கணிப்போம்" என்று பலர் குரலெழுப்பினர். 

இவை போன்ற இன்னும் பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன.  கூட்டம் நிறைவடையும் தருவாயில், சங்கக் கட்டிடப் பணிக்காக யார் யார் எவ்வளவு தர முடியும் என்ற கணக்கெடுப்பு நடந்தது. 

இந்தப் பொதுக்குழுக் கூட்டம் எழுச்சியும் ஆர்வமும் பொங்க உறுப்பினர்களுள் பெரும்பாலோர் கலந்துகொண்டு, ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கி, சங்க நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துவிட்டது குறிப்பிடத் தக்கதாகும்.


நிறைவாக, அஹ்மது இப்ராஹீம் ஆலிமவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே முடிந்தது.Sunday, May 29, 2011

AFFA வின் இன்றைய போட்டி(29-05-2011)


இன்று(29-05-2011) முதல் காலிறுதி ஆட்டமாக காரைக்கால்அணியும் பட்டுக்கோட்டை அணியும் மோதின . இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் முடிந்தது . பின்னர் ட்ரை பிரேக்கர் முறையில் பட்டுக்கோட்டை அணி வெற்றிப்பெற்றது .


நாளை(3-05-11) இரண்டாம் காலிறுதி ஆட்டமாக அதிரை AFFA அணியும் அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி அணியும் மோதிகின்றன .

மூன்றாம் நாள் அமர்வு - டாக்டர் அப்துல்லா பேசுகிறார்

அதிரை பைத்துல்மால் நடத்தும் திருக்குர்ஆன் மாநாட்டின் இறுதிநாள் அமர்வு இன்று (29-05-2011) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றைய அமர்வில் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் மூவர் கலந்து கொள்கிறார்கள்.

சதீதுத்தீன் பாக்கவி, சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் சம்சுதீன் காசுமி ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.

மேலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்ட காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்களின் விசிடிங் பேராசிரியரும், அண்மையில் தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டவருமான டாக்டர் அப்துல்லா (எ) பெரியார்தாசன் அவர்கள் இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் சிறப்பு சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.

அதன் காணொளி இன்ஷா அல்லாஹ் அதிரை எக்ஸ்பிரஸில் நேரலை செய்யப்படும்.

(சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் கேள்வி பதில் நிகழ்ச்சி சாத்தியமா?)

இந்திய ஆட்சிப் பணித் (ஐஏஎஸ்) தேர்வு - திட்டமிட்டால் வெற்றி

தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரி சன்முகப்பிரியா கடந்த 2009ம் ஆண்டுக்கான இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் இந்தியாவிலேயே 36வது தரத்தில் வெற்றி பெற்றார். இவர் இந்தத் தேர்விற்கு முதன் முதலாக தயாராகி அதில் வெற்றியும் பெற்றார். தேர்வு எழுத விரும்பும் மாணாக்கர்களுக்கு அவர் தரும் ஆலோசனைகளை நாமும் கேட்போமே.


 

நமதூரில் யாராவது ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு முயற்சித்துள்ளீர்களா? அப்படியானால் உங்களது அனுபவங்களை அதிரை எக்ஸ்பிரஸில் பகிர்ந்து கொள்ள முன்வாருங்களேன்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தும் இஸ்லாத்தை அறிவோம் -பயிற்சி முகாம்:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தும் இஸ்லாத்தை அறிவோம் -பயிற்சி முகாம்:
நாள்:30.05.2011 திங்கள்கிழமை
இடம் :தரகர் தெரு,பெண்கள் மதரஸா அதிரை
நேரம் :காலை 9.00.மணி
சிறப்புரையாளர்கள் :சகோ M.ஹாரிஸ் முஹம்மது .
தலைப்பு :நம்மை நாம் புணரமைத்தல்.
சகோ:S.S.A கரீம்
தலைப்பு :குடும்பத்தை புணரமைத்தல்
சகோ:M.ஜெய்னுல் ஆபுதீன்
தலைப்பு:சமுகத்தை புணரமைத்தல்
(பெண்களுக்கு தனி இட வசதி உண்டு)
கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவேண்டிய எண்:
9944329328,9952141802

Saturday, May 28, 2011

AFFA வின் நேற்று (27-05-11) மற்றும் இன்றய(28-5-11) போட்டி முடிவு ..நேற்று AFFA அதிரை vs YMFC பொதக்குடி அணிகள் மோதின AFFA அதிரை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .இரண்டாவது ஆட்டமாக சிவகங்கை vs உதயம் கால்பந்து கழகம் புதுக்கோட்டை அணிகள மோதின சிவகங்கை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


இன்று காரைக்கால் vs மீனாட்சிபுரம் காரைக்குடி அணிகள் மோதின காரைக்கால் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


நாளை முதல் குவாட்டர் பைனல் ஆட்டமாக இன்று வெற்றி பெற்ற காரைக்கால்அணியும் ஏற்கனவே வெற்றி பெற்ற பட்டுக்கோட்டை அணியும் மோதிக்ன்றன .


வருத்தம் : கடந்த இரண்டு நாட்களாக அதிரை பைத்துல்மால் மாநாடு நேரலை மற்றும் பல்வேறு வேலை காரணமாக கால்பந்து செய்தியை பதிவதற்கு தாமதம் ஆகிவிட்டது என்பதை தெரியப்படுத்துகிறோம் .மாநாட்டுக் கமிட்டிக்கு வாசகரின் வேண்டுகோள்!

Assalamu Alaikkum,

Last year Quran conference I noticed that they were distributing the prices in very late night and it was ridiculous to see the way they distributed the prices to winners of many competitions. Quran conference committee should get matured and respect the participants and committee members should act in a way that they have to encourage people to participate more. But last year's act showed the immaturity of the committee members.

Can they please arrange the price distribution around 6-8pm and give importance to the kids who participated in those competitions and put their effort to win those prices? The purpose of Quran conference is not to bring speakers from outside and speak about islam. In addition to that they have to encourage the kids and give importance to local youngsters who is involving in these dawa activities. This is the way they have to make the quran conference most successful one.

I hope my comments will reach the committee members and I hope that other members and readers of adirai express will also raise their voice.

Thanks
Thameem

நல்லயோசனை பரிசீலிப்பார்களா?

Friday, May 27, 2011

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - மாணவிகள் சாதனை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள். முதல் மூன்று இடம் பெற்ற மாணவ/மாணவிகள் விவரம்.


இமாம் ஷாபி மெட்ரிக் பள்ளியில் பத்தாம்   வகுப்பு (English medium) பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவ-மாணவிகள்.

இமாம் ஷாஃபி பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள்மாணவர்கள்:21/26, மாணவிகள்:29/29 - 50/55
100/100 ??
தேர்ச்சி சதவீதம்91%
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம்??%


முதலிடம் : அல் ஜசீரா 
மொத்த மதிப்பெண்கள் :474 
இரண்டாமிடம் : பாஹிமா பாத்திமா
மொத்த மதிப்பெண்கள் :473
முன்றாமிடம்: வசீமா
மொத்த மதிப்பெண்கள்: 472

காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்:

Khadir Mohideen Higher Secondary School,adirampattinam

காதிர் முகைதீன் (பெண்கள்) பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள்139/144
100/100??
தேர்ச்சி சதவீதம்97%
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம்??%
முதலிடம்: சகீரா
மொத்த மதிப்பெண்கள்: 482

இரண்டாமிடம் நபீஸா
மொத்த மதிப்பெண்கள்: 481

மூன்றாமிடம்: மலர்விழி
மொத்த மதிப்பெண்கள்: 468

காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்: பள்ளியின் தேர்ச்சி விகிதம் : 93%


முதலிடம்: ரியாசுதீன்
மொத்த மதிப்பெண்கள் :
459 
முதலிடம்: வின்சன்ட் பளித் பிரீடோ
மொத்த மதிப்பெண்கள் :
444
மூன்றாமிடம் : சேக் அலாவுதீன்
மொத்த மதிப்பெண்கள் : 442

Khadir Mohideen Higher Secondary School,adirampattinam

காதிர் முகைதீன் (ஆண்கள்) பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள்174/187
100/100??
தேர்ச்சி சதவீதம்93%
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம்79%

முதல்,இரண்டாம்,மூன்றாமிடம் பெற்று சாதனைபடைத்த மாணாக்கர்களையும் தேர்வில் வென்றவர்களையும் அதிரை எக்ஸ்ப்ரஸ் பாராட்டுவதோடு, தோல்வி அடைந்தவர்கள் மனம்துவன்றுவிடாமல் அடுத்தடுத்த தேர்வுகளில் வென்று பிரகாசமான எதிர்காலத்திற்கு அடியெடுத்து வைக்கவும் வாழ்த்துகிறோம்.


2011 - +2 தேர்வு முடிவுகள்
2010 - 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

முதல் செய்தி:காலை 10:45

நேரலை பற்றிய அறிவிப்பு ....

அதிரை பைத்துல்மால் சார்பாக நடைபெறும் திருக்குர் ஆன் மாநாடு 
 நமதூர் ஆஸ்பத்திரி தெருவில் முன்று நாட்கள் நடைபெறும். இன்று(27-05-11), நாளை(28-5-11) மற்றும் நாளைமறுநாள்(28-5-11) நடைபெறும் . இன்ஷா அல்லாஹ் அதிரை எக்ஸ்பிரஸ் முலமாக நேரலை செய்யபப்டுகிறது . நாளைமறுநாள் சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர் .அப்துல்லாஹ் அவர்களும் , சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் சம்சுதீன் காசுமி அவர்களும் உரை நிகழ்த்த இருகிறார்கள் . மேலும் பல்வேறு மார்க்க அறிங்கர்களும் உரை நிகழ்த்த இரிக்கின்றன்ர் . அதனுடைய முழு நிகழ்ச்சி நோட்டிஸ் விரைவில் பதியப்படும் .
அதிரை பேரூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா!!!

இந்த புகை படத்தில் பார்க்கும் குப்பை தொட்டிகள் இருக்கும் இடங்கள் புதுமனைதெரு மற்றும் cmp லைன் தெருக்களில் அல்லபடாமல் இருக்கும் குப்பைகள்.
புதுமனைதெரு

புதுமனைதெருவில் இந்த குப்பை தொட்டி இருக்கும் இடம் மக்கள் நடந்து செல்லும் பாதையாக உள்ளது இந்த பாதையில் குப்பைகளை தினமும் அல்லாமல் இருக்கின்றது பேரூர் நிர்வாகம்.இங்கு கொசுத் தொல்லையும் அதிக துர்நாற்றம் வீசுகின்றது. இங்கு நடந்து செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
cmp லைன்

cmp லைன்ல் குப்பை தொட்டிகள் அதிகஅளவில் உள்ளது ஆனால் நீங்கள் பார்க்கும் குப்பைத்தொட்டி நிலைதான் அணைத்து குப்பைத்தொட்டிக்கும்.
குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.ஆனால் இந்த குப்பைகளை அள்ளுவதற்கு இங்கு உள்ள வார்டு உறுப்பினர் முயற்சி எடுக்கவில்லை. அதுபோல் cmp லைன் வாய்கால் மரம் செடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கின்றது.அங்கு உள்ள வீடுகளுக்கு பாம்புகள் வரும் அபாயம் உள்ளது இதற்கு உடனடியாக வாய்காலை மற்றும் குப்பைகளை சுத்தம் செய்ய பேரூர் நிர்வாகத்திடம் கேட்டுகொள்கிறோம்.

புகைப்பட உதவி :ஹசன் முராத்

Thursday, May 26, 2011

அதிரை மின்மாற்றிகளின் திறன் குறித்து மின்வாரியம் அதிரடி சோதனை

நமதூரில் வெள்ளைக்காரன் காலத்து மின்கம்பிகளும், மின்கம்பங்களும் இருப்பதை அறிவோம். ஊர் பெரிதாகிவிட்ட நிலையில் கடந்த 20 - 25 வருடத்திற்குமுன் நிறுவப்பட்ட மின்மாற்றிகளின் உதவியுடனே இதுவரை அரைகுறை மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மின்சாரப் பொருட்களான வாசிங்மெசின், கம்ப்யூட்டர், பிரிட்ஜ், ஏசி என்று ஏகத்துக்கும் மின்சாதனப் பொருட்களை வாங்கி குவித்திருக்கிறோம். மின்சார நுகர்வு அதிகளவில் அதிகரித்திருக்கிறது. மின்கட்டணமும் சொல்லவேண்டியதில்லை. 


திமுக தோற்றால் அது தனது துறையினால் தான் இருக்கும் என்று சர்டிபிகேட் கொடுத்துச் சென்றார் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வெறுஞ்சாமி. சாரி வீராச்சாமி. அந்தளவுக்கு மின்பற்றாக்குறை இருந்தது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் அதிராம்பட்டினம் கைவிடப்பட்டு கண்மூடித்தனமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. 


போதாதற்கு தலிவர் ஆந்திராவையும், மகாராஷ்டிராவையும் உதாரணம் காட்டி கடந்த 6-7 மாதங்களுக்குமுன் மின்கட்டணத்தையும் உயர்த்தினார். யாரும் இல்லாத கடையில் என்ன டீ ஆத்துர என்று சொல்வது போன்று யாரும் இல்லாத நமதூரில் சில வீடுகளுக்கு ஏகத்துக்கும் திடீர் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது.


கடந்த ஐந்தாண்டுகளில் நமதூரின் அதிக மின்தேவையை பூர்த்திசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்ற ஐந்தாண்டுகளில் மின்தேவைக்கென்று முந்தைய ஐந்தாண்டு அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக அரசு புலம்புவதிலேயே காலத்தை கடத்தியது.

பட்டுக்கோட்டை வட்ட மின் குறைதீர்ப்பு ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் திருச்சி E.O. திரு. தங்கராஜிடம் திறன் குறைந்த மின்மாற்றிகளை நீக்கி அதிகத் திறன் கொண்ட மின்மாற்றிகளை மாற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்க உத்தவிட்டதன் பேரில் அதிரை A.O. தலைமையில் மின்மாற்றிகளின் திறன் அளக்கப்பட்டது. இன்னும் 15 தினங்களில் புதிய மின்மாற்றிகளைப் பொறுத்த இடம் தருமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.  பொதுமக்களின் தேவையறிந்து முயற்சிகளை மேற்கொண்ட தமுமுக மற்றும் மமகவினரைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

தொடங்கியது கைப்பந்து போட்டி....

அதிரையில் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும்12- ம் ஆண்டு மற்றும் மர்ஹும் ஹாஜி.அப்துல் வாஹாப் (சாச்சா)நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி.இன்று இரவு மணியளவில் மேலத்தெரு,ஜும்ஆ பள்ளி பின்புறம் உள்ள கைப்பந்து மைதானத்தில் துவங்கியது .

ஆட்டத்தை M.M.S. ஷேக் அவர்கள் தலைமை ஏற்று துவைக்கிவைதார்கள். மற்றும் பலர் முன்னிலை வகித்தார்கள் .


முதல் ஆட்டமாக அதிரை அணிக்கும் கோவை பிரதர்ஸ் அணிக்கும் நடைபெற்றது .
இந்த தொடர்ப் போட்டியில் திருச்சி போலிஸ் அணி, கோவை, சென்னை,
ஈரோடு என்று தமிழகத்தில் முன்னணி அணிகள் பங்குபெருகின்றன.

வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசு :ரூ 12112,இரண்டாம் பரிசு :ரூ 10112
முன்றாம் பரிசு :ரூ 8112,நான்காம் பரிசு :ரூ 6112,ஆறுதல் பரிசு :ரூ 2000 பரிசு நிர்னைக்ப்பட்டுள்ளன .
 
அதுமட்டும் அன்றி சேவை மனப்பான்மையுடன் ஏழைகளுக்கு கிரைண்டர்  உதவியும் இந்த ஆண்டு +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசும் வழங்க படுகின்றது .


AFFA வின் இன்றைய போட்டி(26-05-2011)


 இன்று  (26-05-11)கலைவாணர் கண்டனூர் அணியும் தஞ்சை அணியும் மோதின . கலைவாணர் கண்டனூர் 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது . நாளை (27-05-11) வெள்ளிக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் 
1.AFFA அதிரை vs YMFC பொதக்குடி 
2.சிவகங்கை vs உதயம் கால்பந்து கழகம் புதுக்கோட்டை
ஆகிய அணிகள் மோதிகின்றன.

அதிரையில்ஹாஜி M.M.Sஅப்துல் வாஹாப் நினைவு சுழற்கோப்பைக்கான மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி


அதிரையில் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும்12- ம் ஆண்டு மற்றும் மர்ஹும் ஹாஜி.அப்துல் வாஹாப் (சாச்சா)நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி.இன்று மாலை 4.00 மணியளவில் மேலத்தெரு,ஜும்ஆ பள்ளி பின்புறம் உள்ள கைப்பந்து மைதானத்தில் நடைபெறும்.

முதல் பரிசு :ரூ 12112
இரண்டாம் பரிசு :ரூ 10112
முன்றாம் பரிசு :ரூ 8112
நான்காம் பரிசு :ரூ 6112
ஆறுதல் பரிசு :ரூ 2000
இவன்:
வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப்
மேலத்தெரு,
அதிரை.

Wednesday, May 25, 2011

அகல ரயில் பாதை ஏமாற்றம்...

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை சம்மந்தமாக ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கிடைக்க பெற்ற ஏமாற்றம் அளிக்கும் பதில்

உங்கள் கவனத்திற்கு !
கடந்த பல வருடங்களாக முயற்சித்து வந்த திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை சம்பந்தமாக பல முயற்சிகளை மேற்கொண்டோம். அப்போதைய ரயில்வே அமைச்சர் திரு வேலு அதன் பின் வந்த E அஹமது மற்றும் ரயில்வே ஜெனரல் மானேஜர் போன்றவர்களை சந்தித்து நமது கோரிக்கையை சமர்பித்தோம். ஏன் முத்துபேட்டை சேர்த்த அப்துல் ரஹ்மான் M.P அவர்களிடமும் பல முறை M.S. தாஜுதீன் அவர்கள் பேசி வந்தார்கள். என்ன பயன் ? ஏமாற்றமே !

நாம் ஓன்றுபட்டு தீவிரமாக முற்சி செய்தால் மட்டுமே அகல ரயில் பாதை திட்டம் நம் வட்டார மக்களுக்கு கிடைக்கும். புதிதாக அமைந்து இருக்கும் மாநில அரசின் ஒத்துழைப்போடு முயற்சிகள் மேற்கொண்டால் வரும் ஆண்டின் ரயில்வே RAILWAY BUDGET சேர்க்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி வெளி நாடு அதிரை வாசிகள் INDIAN EMBASSY மூலமாக தொடர்ந்து PRIME MINISTER OF INDIA மற்றும் RAILWAY MINISTER & தமிழ்நாடு முதலமைச்சர் இவர்களுக்கு கோரிக்கை அனுப்பிவைக்க கேட்டுகொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அகல ரயில் பாதை திட்டம் செயல் வடிவம் பெரும் , ஒன்றுபட்டு முயற்சிப்போமாக !

தகவல்

mr.Abdul rajack
Chasecom

AFFA வின் இன்றைய போட்டி(25-05-2011)இன்று (25-05-11) கறம்பக்குடி அணி வராத காரணத்தால் அதிரை ப்ரெண்ட்ஸ் புட்பால் (AFFA) அணியும் அழகப்பா பல்கலைக்கழகம் அணியும் நட்பு ஆட்டமாக மோதின 1-0 என்ற கோல்கணக்கில் AFFA வெற்றி பெற்றது . நாளை (26-05-11)கலைவாணர் கண்டனூர் அணியும் திருச்சி அணியும் மோதிகின்றன . முன்னதாக கறம்பக்குடி அணி வராத காரணத்தால் அழகப்பா பல்கலைக்கழகம் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது .


இன்றைய போட்டியில் கலக்கிய ஆசிப். இமாம் ஷாபி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன். நமது ஊர் புதுமனைத் தெருவை சேர்ந்த ஷாபி (கொய்யாபலம்) அவர்களின் புதல்வர் . இன்றைய போட்டியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Tuesday, May 24, 2011

AFFA வின் இன்றைய ஆட்டம்(24-05-2011)


இன்று (24-05-11) பட்டுக்கோட்டை மற்றும் ஆலத்தூர் அணிகள் மோதின பட்டுக்கோட்டை 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது .நாளை (25-05-11) புதுக்கோட்டை மற்றும் கறம்பக்குடி அணிகள் மோதிகின்றன .

Monday, May 23, 2011

அதிரை AFCCஅணி வெற்றி....

புதுபட்டினத்தில் இன்று நடந்த கிரிகெட் போட்டியில் நமதூர் AFCCஅணி புதுபட்டினம் அணியை வீழ்த்தி முதல் பரிசு ரூ10,000 தட்டிச்சென்றது .
AFCC அணி வீரர் சமிம்தீன் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.மேலும் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அப்துல் கபூர் தொடர் நாயகன் விருதுபெற்றார்.
சமீபத்தில் அதிரையில் அதிரை சிட்னி பாய்ஸ் நடத்திய கிரிகெட் போட்டியிலும் முதல் பரிசு ரூ5,000 தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இனிதே துவங்கிய AFFA வின் கால்பந்துப் போட்டி...

இன்று(23-05-11)நடந்த முதல் போட்டியில் நேதாஜி தஞ்சை அணியும் கோட்டையூர் அணியும்  மோதின தஞ்சைஅணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


பார்வையாளர்கள் திரண்டு இருக்கும் காட்சி.....

விளையாடும் விரர்கள்

சிறப்பு விருந்துனர்கள் அமர்ந்து இருக்கும் காட்சி.AFFA வின் அறிவிப்பு......

மரண அறிவிப்பு.

புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அமைச்சரவையின் ஒரே முஸ்லிம் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் கார் விபத்தில் மரணமடைந்தார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.


 திருச்சி பெரம்பலூர் மெயின்ரோடு, பாடாலூர் அருகே அவரது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அவரது கார் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.இந்த விபத்தில் மரியம் பிச்சை மரணம் அடைந்தார். 

Friday, May 20, 2011

ஷிஃபா மருத்துவமனையில் பயிற்சி பெற்ற குழந்தை மருத்துவர் - பொதுமக்கள் மகிழ்ச்சி

ஷிஃபா மருத்துவமனை கடந்த சில மாதங்களாக எடுத்துவரும் முயற்சிகளில் ஒன்றாக தற்போது நமதூர் மருத்துவர் மீராசாகிப் அவர்களது புதல்வர் குழந்தை மருத்துவர் சேக் அலி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுத்துள்ளார்.

கிராமப் பகுதிகளில் மருத்துவம் செய்ய தயங்கும் இக்காலகட்டத்தில் நமதூர் நிலைமையை அறிந்தும் சவாலாக ஏற்று நமதூருக்கு சேவை செய்யவேண்டும் என்கிற நோக்கில் ஷிஃபா மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.

மேலும், மகப்பேறு மருத்துவர் ஒருவரும் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார். நமதூர் மருத்துவமனை புத்துயிர் பெறுவதை பொதுமக்கள் மிகவும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மருத்துவத்திற்கு வெளியூர்களுக்கு செல்லும் சிரமங்கள் குறையும் என்று கருத்துதெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் தங்களது மருத்துவ தேவையை உள்ளூரிலேயே பூர்த்தி செய்ய தங்களது குடும்பத்தினரிடம் வலியுறுத்த அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது

உள்குத்து

விழித்துக்கொண்ட முஸ்லிம்கள் அலறும் அரசியல் கட்சிகள் என்கிற தலைப்பிட்டு தினமலத்தில் வெளியான கட்டுரையின் உள்ளே இப்படி இருக்கிறது சங்கதி...

'...அதேசமயம், அசாம் மற்றும் கேரளா தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, அதிகளவில் விளம்பரம் செய்தால், இந்த மாநிலங்கள், தவறான முன் உதாரணங்களாக மாறிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்....'

முகம்மது நபி கார்டூன் சம்பவத்திற்குப் பிறகு அடக்கி வாசித்த தினமலம் தற்போது தனது குயுக்தியை ஆங்காங்கே அரங்கேற்றி வருகிறது. அதில் ஒரு பகுதியாக அல்காயிதா தலைவராக ஜவாஹிருல்லா பதவியேற்க இருந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பார்க்க

சரி.. மலத்தை விடுங்கள். நம்மவர் ஒருவரின் பத்திரிக்கையில் உணர்வலைகள் என்கிற தலைப்பில் வெளியான இந்தவார உணர்வு பத்திரிக்கையில் எழுதிய உள்குத்து என்ன தெரியுமா?


'முஸ்லிம்களின் வாக்குகள் சதவீதம் தமிழகத்தில் சொற்பமே. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக அவை இருக்கவில்லை.'  என்று எழுதப்பட்டுள்ளது. 

இதுக்குப் பேர்தான் உள்குத்தா?

Wednesday, May 18, 2011

MEPCO SUMMER MEET - 2011

அஸ்ஸலாமு அலைக்கும் .

சென்ற 12.05.2011 வியாழன் அன்று மாலை ஜித்தா -ஷரFபியா லக்கி தர்பாரில் மெப்கோ வின் சம்மர் மீட்  கோடை கால குதூகல சந்திப்பு நடை பெற்றது . மாணவச் செல்வங்கள் குர் ஆன் மனன கிராதபோட்டி,கைவினை (clay molding),ஓவியப் போட்டி ,சொல் விளையாட்டு மற்றும் இஸ்லாமிக்  க்விஸ் போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கினர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

போட்டியில்  பங்கேற்ற  அனைவருக்கும் சான்றிதழ்களும் அழகிய ஆறுதல் பரிசுகளும் வழங்கி ஊக்கிவிக்கப் பட்டனர்.
 
ராஃபியா தொகுத்து வழங்க,சகோ.அஜீஸ் - கரோர்பதி, ஜாகிர்-கைவினை,ஓவியம் மற்றும் சொல்விளையாட்டு- ஜாவித் & மீராஷா ரஃபியா நடத்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பினைப் பெற்றது.

அவ்வமயம் உம்ரா வந்திருந்த A.J.மீராஷா ஹாஜியார் அவர்களும் வைபத்தில் கலந்து கொண்டு உவகை கொண்டார்கள்.

பங்கு பெற்ற அதிரைக் குழந்தைகள் சொச்சம்! பங்கேற்க்காத வருகை தராத அதிரையினர் (அதி)மிச்சம்!   

போட்டியில் பங்கேற்ற நமதூர் மழலை செல்வங்கள் அனைவருக்கும் பரிசு கிடைத்தது

இது போன்ற மாணவக் கண்மணிகளை நன்மணிகளாக வார்த்தெடுக்கும் முயற்ச்சி மற்ற மாநிலத்தவரிடம் அதிகம்  காண்கிறோம்.குறிப்பாக மாற்று மதத்தினருடன் அதீதமாகக் காண்கிறேன்!   உட்டோ பாய் ! உட்டோ...!

 

 


Adhil Rafie ahmed
With regards.