ME : திமுக அதிருப்தி வேட்பாளர் சகோ.முஹம்மது ஜாஃபர் வேட்புமனு தாக்கல்

திமுக கட்சி உருவானதிலிருந்து அதிரையில் திமுக நகரத் தலைவராக இருந்தN.K.S.ஜெக்கரியா அவர்களின் பேரன்  சகோ.முஹம்மது ஜாஃபர்  திமுக அதிருப்தி வேட்பாளராக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான நேற்று 29-09-2011அதிரை பேரூராட்சியில் பெரும் கட்சிகளான காங்கிரஸ்,அதிமுக,பிஜேபி மற்றும்

முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதால் ஏராளமான கூட்டம் திரண்டிருந்தது. இந்த களேபரத்தில் சகோ.முஹம்மது ஜாஃபர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தது பலரது கவனத்தை ஈர்க்கவில்லை.


சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதிகளில் மும்முனைப்
போட்டி நிலவுதால் வாக்குகள் சிதரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்
திமுக அதிருப்தி வேட்பாளராக சுயேட்சை சின்னத்தில் களமிறங்கியுள்ள சகோ. முஹம்மது ஜாஃபரின் போட்டி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிரையிலிருந்து - முஸ்தாக் ஹுசேன்
Share:

டிஎன்டிஜே கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுபட்டினம் பள்ளியை காவி பயங்கரவாதிகள் அடித்து நொறுக்கி அருகில் உள்ளவீடுகளையும் தாக்கிய கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று மாலை சேதுபாவா சத்திரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு கண்டன குரல் எழுப்பினர் இதில் மாநில மேலான்மைகுழு உறுப்பினர் பக்கிர்முகம்து அல்தா ஃ பி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் .


 நமது செய்தியாளர் : அஷ்ரஃப் 
Share:

ME : 19-வது வார்டில் மனைவிக்காக வாக்கு சேகரிக்கும் கணவர்

சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினரின் ஆதரவுடன் 19 ஆவது வார்டு மெம்பர் பதவிக்குப் போட்டியிடும் சகோ.சவ்தா அவர்களுக்காக அவரது கணவர் சகோ.அஹமது ஹாஜா இன்று 30-09-2011 அவரது வார்டிலுள்ள வீடுகளில் இன்று வாக்கு சேகரித்தார்.

சகோ.சவ்தாவை எதிர்த்து திமுக சார்பில் சகோதரி ஹாஜரா அம்மாள் மற்றும் SDPI சார்பில் சகோதரி கவுசர் நிஷா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

நேற்று முந்தினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகத்தின்போது சகோ.சவ்தாவுக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த சகோதரி ஹாஜரா அம்மாள் மறுநாள் திமுக சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

அதிரையிலிருந்து: முஸ்தாக் ஹுசேன்
Share:

ME : உளத்தூய்மையுடன் அல்லாஹ்விற்காக களம் இறங்கி உள்ளேன் சகோ.அட்வகேட் முனாப் அறிக்கை!

முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் சகோ.அட்வகேட் முனாஃப் அவர்கள் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை (30-09-2011) அதிரையின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் விநியோகிக்கப்பட்ட அறிவிக்கை. அதன் விபரம் வருமாறு:

பேரன்புமிக்க அதிரை நகரப் பெரியோர்களே, வாக்காளப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ், நடைபெறவுள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு உங்கள் நல்வாழ்த்துக்களுடன் போட்டியிட எண்ணியுள்ளேன். அதன் வெற்றியை முறியடிக்கும் கெட்ட நோக்கத்தில் சில குழப்பவாதிகள் நான் M.M.S குடும்பத்தினரால் நிறுத்தப் பட்டுள்ளேன் என்றும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை அவர்களின் பினாமி என்றும் அவதூறு பரப்பி வருகின்றார்கள்.

இது முழுமையான பொய் என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் இட்டு என்னால் நிரூபிக்க முடியும். எனவே, பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நமது ஊர் மக்களின் நன்மையைக் கருதி எந்த குறைபாடுகளும் இல்லாமல் எல்லோரும் வியக்கும் வண்ணம் நம் ஊரின் வளர்ச்சியை செம்மை படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உளத்தூய்மையுடன் அல்லாஹ்விற்காக களம் இறங்கி உள்ளேன்.

உங்களின் மேலான ஒத்துழைப்பை நல்கி வெற்றி பெற உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
A.அப்துல் முனாஃப் B.A.B.L
அட்வகேட் & நோட்டரி பப்ளிக்
புதுமனைத்தெரு, அதிராம்பட்டினம்

--
அதிரை எக்ஸ்பிரஸ் குழு

Share:

துபை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு பொதுக்குழு நேரலை


உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி அதிரையின் அனைத்து நிகழ்வுகளிலும் ஒருங்கிணைப்பின் அவசியம் கருதி ஐக்கிய அரபு அமீரகம் வாழ் அதிரைவாசிகள் "அனைத்து முஹல்லா கூட்டமைப்பை நிறுவியுள்ளனர்.
இன்று 30-09-2011 வெள்ளிக்கிழமை துபை கிஸஸ் லூலூ ஹைப்பர் மார்க்கெட் அருகிலுள்ள கிரசன்ட் இங்கிலீஸ் ஸ்கூல் வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அதிரைவாசிகள் 700 - 800 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரையிலிருந்து பேரா.அப்துல்காதர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக அதன் நிர்வாகிகளில் ஒருவரான சகோ.இப்ராஹிம் தெரிவித்தார்.

அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பொதுக்குழு பல்வேறு அதிரை இணையங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப் படுகிறது. அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்காக நன்றியுடன் இங்கு மீள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Share:

ME : எஸ் டி பி ஐ வேட்புமனு தாக்கல்

சிறுபான்மை கூட்டமைப்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருத்துவ அமைப்புகளின் சார்பில் சென்னை மற்றும் ஈரோடு மாநகர  மேயர் பதவிக்கு போட்டியிட எஸ்டிபிஐ வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் .


Share:

ME : திமுக வேட்பாளர் சகோ.அஸ்லம் வீடுவீடாக வாக்கு சேகரிப்பு


நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூராட்சி சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சகோ. S.H.அஸ்லம் நேற்று 29-09-2011 முதல் வீடுவீடாகச் சென்று வாக்கு சேர்கரிக்கிறார்.


ஆதரவாளர்கள் புடைசூழ அந்தந்த முஹல்லா பள்ளியில் ஜமாத் தொழுகையை நிறைவேற்றி விட்டு முஹல்லாவில் உள்ள வீடுகளில் திமுக சின்னமான உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை தேர்ந்தெடுக்கும்படி கோரி வருகிறார்.

புதுப்பள்ளி முஹல்லாவில் நேற்றிரவு வாக்கு சேகரிக்கச் சென்றபோது அவருடன் திமுக சார்பில் வார்டு மெம்பராகப் போட்டியிடும் சகோ.நூர் லாட்ஜ் செய்யது அவர்களும் வாக்கு சேகரித்தார். 

வேட்புமனு தாக்கலில் முந்திக்கொண்ட திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பிலும் முந்திக்கொண்டுள்ளதன் மூலம் அதிரையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
Share:

புதுபட்டினம் காவிகளால் தாக்கப்பட்ட பள்ளி !

நமதூரில் இருந்து இரண்டு கிலோ மீடர் தொலைவில் உள்ள புதுபட்டினம் கிராமத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்து மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வந்த இந்த கிராம இந்துத்துவா சக்திகளின் சதியின் காரணமாக கலவர பூமியாக மாறியுள்ளது .

காவி கயவர்களால் கபளீகரம் செய்யப்பட்ட இறை இல்லம் மற்றும் அருகில் வீடுகளின் போட்டோ .
படம் :நெய்னா  
Share:

அமீரகத்தில் இன்று!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அமீரக அதிரைவாசிகள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக் கொள்கிறது.
Share:

ME : பட்டாசு சத்தத்துடன் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

அதிரை பேரூராட்சி மன்ற வரலாற்றில் முதன்முறையாக அதிமுக சார்பில் சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் சகோ.அப்துல் அஜீஸ் (கொய்யப்பா) இன்று 29-09-2011 வியாழக்கிழமை காலை 11:00 மணியளவில் சி.எம்.பி லேனிலுள்ள தனது கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு புதுமனைத் தெரு, செக்கடிமேடு வழியாக மெயின் ரோட்டிலுள்ள அதிரை பேரூராட்சி மன்றத்தில் அவரது கட்சிப் பிரமுகர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


ஊர்வலத்தில் அதிரையில் பல்வேறு தெருவாசிகளும் அதிமுக கொடியுடன் ஊர்வலம் முக்கிய வீதிகளில் செல்லும்போது அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகச் சென்றனர்.


ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டதால் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
--
அதிரை எக்ஸ்பிரஸ் குழு

Share:

ME : அதிரை காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர், மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அதிரை நகர காங்கிரஸ் தலைவர், அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளில் கோலோச்சிய ஐம்பதாண்டுகள் அரசியல் பின்னணி கொண்ட அதிரை ம.மீ.செ. குடும்பத்திலிருந்து அதிரை நகர பேரூராட்சி சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் சகோ.எம்.எம்.எஸ் பஷீர் அவர்கள் இன்று 2909௨011 வியாழக்கிழமை அதிரை பேரூராட்சி மன்றத்தில் ஊர்வலமாக வந்து  வேட்புமனு தாக்கல் செய்தார்.அவருடன் முஹல்லாவாசிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
மேலத்தெரு,கீழத்தெரு முஹல்லாக்களில் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதிரையின் ஏனைய முஹல்லாக்களிலும் ஆதரவு கோரி நேற்று பல்வேறு முஹல்லா பிரமுகர்களையும் நேரில் சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

--
அதிரை எக்ஸ்பிரஸ் குழு

Share:

ME : சீனியர்கள் புடைசூழ சகோ.அட்வகேட் முனாஃப் வேட்புமனு தாக்கல்

அதிரை நகர பேரூராட்சி சேர்மன் பதவிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் சகோ.அப்துல் முனாப் அவர்கள் இன்று வியாழக்கிழமை (29-09-2011) தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின்போது முஸ்லிம் லீக் பிரமுகர் சகோ.எஸ்.எஸ்.பி.சேக் நஸ்ருதீன் மற்றும் முதுபெரும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

அதிரை எக்ஸ்பிரஸ் குழு

Share:

ME : அதிரையில் மனிதநேய மக்கள் கட்சி வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலில் அதிரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று 28 - 09 - 2011 புதன்கிழமை காலை 11:45 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.--
அதிரை எக்ஸ்பிரஸ் குழு

Share:

ME : வேட்பு மனுதாக்கல் நிறைவு !

நமதூர் பேரூர் மன்ற தேர்தலில் போட்டியிட கடைசி நாளான இன்று 53 நபர்கள்
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர் சேர்மன் பதவிக்கு போட்டியிட 16 நபர்கள் இன்று மட்டும் மனுதாக்கல் செய்துள்ளனர் .

நமதூரில் மொத்தம் 21 வார்டுகளில் போட்டியிடும் போட்டியாளர்கள் எண்ணிக்கையில் ...

சேர்மன் பதவிக்கு :19 நபர்கள்
கவுன்சிலர் பதவிக்கு :93 நபர்கள்

அதிரை தேர்தல் களத்தில் உள்ளனர்.
Share:

ME:சகோ.முனாஃப் வேட்பு மனு தாக்கல் !

அதிரை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சையாகப் போட்டியிடும் சகோ. வழக்கறிஞர் முனாஃப் இன்று காலை 11:30 மணிக்கு வேட்ப்புமனு தாக்கல் செய்தார் .

இதில் அவரது ஆதரவாளர்கள் திரளாக கலந்துகொண்டனர் .

Share:

சத்திரம் காவல்நிலையம் முன் முற்றுகைப் போராட்டம்!


புதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக தஞ்சை தெற்கு மாவட்ட ததஜ அறிவித்துள்ளது.

30-09-2011 அன்று வெள்ளிக் கிழமை மாலை 4 மணி அளவில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுபட்டினம் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், தாக்குதலுக்குஉடந்தையாகசெயல்பட்ட சேதுபாவாசத்திரம் காவல்துறை  ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கோரியும், இனிவரும் காலங்களில் பள்ளிவாசல்கள் மீது அத்துமீறல்கள் ஏற்படாமல் தடுக்கவும் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ததஜ கூறியுள்ளது.

30.09.2011 வெள்ளி கிழமை அன்று அதிரை தக்வா பள்ளியிலிருந்து மாலை 03 மணிக்கு வேன் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: நெய்னா முஹம்மது
Share:

ரோஸ்மில்கா? ஃப்ரூட் மிக்சரா? - ஊர்சுத்தி காக்காவின் ஓட்டு யாருக்கு?

என்னா காக்கா இந்த வேவா வெயில்ல எங்க போறிய?

அட காதரு! வந்துட்டியா! ஒன்னத்தான்டா நெனெச்சேன். வாவேன் சும்மா மெயின்ரோட்டுக்குப் போயிட்டு ரோஸ்மில்க் அடிச்சுட்டு வரலாம்.

யாங்காக்கா! இப்பதான் கடத்தெருவுல மோரு குடிச்சிட்டு வர்ரேன். சரி. கம்பல் பண்ணுறிய வானான்னு சொன்னா வருத்தப் படுவிய. வாங்க போயிட்டு வரலாம்.

சைக்கிள் பின்னாடி உட்காரவா? முன்னாடி உட்காரவா?

பின்வீலுல காத்து இல்லே. தொப்பிய கெளட்டிட்டு முன்னாடி உட்காருங்க.

யான்டா தொப்பியக் கலட்டச் சொல்றா? நீயும் அங்க சேர்ந்திட்டியா?

அட நீங்கவேற காக்கா! தொப்பியக் கெலட்டிட்டு முன்னால உட்கார்ந்தா ரோடு மறைக்காது. ஒடனே எதாச்சும் சொல்லிடுவியலே!

யாங் காதரு நீ யாருக்கு ஓட்டு போடுவா?

ஓப்பனா சொல்றேன் காக்கா! எனக்கு யாருக்குமே ஓட்டுபோட மனசில்லே. பேசாம 3 நாளு தப்லீக்குல போயிடலாமான்னு நினைக்கிறேன்.

யான் இவ்ளோ கோவம்?

தப்பா நெனச்சிகிடாதிய காக்கா. நான் மனசுல உள்ளத இப்ப சொல்லமாட்டேன். தேர்தல் முடிவு வந்தபிறகு நான் என்ன சொல்ல நினைச்சனோ அதத்தான் நீங்களும் சொல்லுவிய.

ரொம்பத்தான் தேறிட்டடா காதரு. பேசாம நீகூட எலக்சன்ல நிக்கலாம்னு நினைக்கிறேன். சரி. எதுக்கு இந்த தேர்தல அநியாயத்துக்கு இத்தனைபேரூ போட்டியிடுறாங்க?

எப்புடியாச்சும் என் வாயைக்கிளறனும்னு நினைக்கிறிய. நான் ஒன்னு சொல்லப்போயி. ஏடாகூடமா ஆகிடப்போவுது. ஏதோ எதாச்சும் ஊருக்கு நல்லது பண்ணலாம்னு நினைக்கிறாங்க.அதான் தேர்தல்ல நிக்கிறாங்க.

காதரு கொஞ்சம் பிரேக் புடி. நீ சொல்றதக்கேட்டுட்டு எனக்கு புல்லரிக்கிது. கொஞ்சம் சொரிஞ்சிக்கிறேன்.

என்னா நக்கலா காக்கா? தேர்தல நிக்கிற எல்லாரும் இதத்தானே சொல்றாங்க! இது நான் புதுசா சொல்றதுக்கு என்னா ஈக்கிது?

சரி பொதுவாவே பேசுவோம். பஞ்சாயத்து சேர்மனாயிட்டா நம்ம ஊரு பிரச்சினையெல்லாம் தீர்ந்துடுமா? போன தடவ ஓட்டு கேட்டு வந்தபோது அதச்செய்வோம் இதச்செய்வோம்னு சொன்னாங்களே.எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டாங்களா?

உடமாட்டியபோல காக்கா. அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்னு எம்.பி.பழனி மாணிக்கம் ஐயா இதே செக்கடிமோட்டுலதான் சொன்னாரு. அவரும் எம்.பியாகி போனவருதான். அதுக்கப்பறம் கண்மாசியாக் காணோம்.

யான்! நம்ம எம்.எல்.ஏ ரெங்கராஜன் தம்பியும்தான் இந்த விசயத்துல சுமூகமாகத் தீர்வு காண்போம்னு சொன்னதா யாஹுவம்.

காக்கா இது ஒண்ணும் பாபர் மசூதி மாதிரி பெரியளவுல பிரச்சினை இல்லே. பஞ்சாயத்து போர்டுக்கும் பள்ளிவாசல் கமிட்டிக்குமுள்ள பிரச்சினைதான். பஞ்சாயத்து போர்டு யாரு? அதுலயும் நம்ம ஆளுங்கதான் மெம்பரு. இவங்களெல்லாம் சேர்ந்து ஒருமுடிவுக்கு வந்திருந்தா போனமாசம் எல்லா கட்சிக்காரங்களும் ஒண்ணா உட்காந்து நோன்புக் கஞ்சி குடிச்சிருக்கலாம். இதுல புல்லுருவி யாருன்னு அடையாளம் கண்டாலே போதும். அதுக்கு இந்த தேர்தல் நல்ல வாய்ப்பு.

ஆமான்டா காதரு நீ எதுவும் பேசமாட்டா. பேசுனா இப்படித்தான் அனல் தெரிக்கும். ஊர் காசுல கட்டுன சமுதாயக்கூடத்த கமுக்கமா சுருட்டிக்கிட்டாங்க. நம்ம காசுல கிரயம் செய்து வாங்குன நிலத்துல நம்ம காசைப்போட்டு ஒரு பள்ளிவாசல் கட்ட உடமாட்டேங்கிறாங்க. சஹன்ல மட்டும்தான் நம்மாளுங்க ஒத்துமையா ஈப்பாங்கடா!

கக்கா சம்சுல் இஸ்லாம் சங்கம் அரசியல்ல ஏன் இறங்கனும்னு லேசுமாசா செலபேரு பேசிக்கிறாங்களே அதப்பத்தி என்னா நெனைக்கிறிய?
காதரு.சங்கம்ங்கறது தனி நபரல்ல. இது மக்களின் கூட்டமைப்பு. ஆலிம்களின் ஆலோசனையில் ஊர் பெரியவங்களும் சேர்ந்து நல்லது கெட்டதுக்கு உண்டாக்கின அமைப்பு. ஊரு ஒத்துமையா ஈக்கனும்னுங்கறத்துக்காக இவங்க இந்தவாட்டி முயற்சி செஞ்சிருக்காங்க. இதை நல்ல விசயமாத்தான் பாக்கனும். யாருக்குத்தான் ஊரு ஒத்துமையா ஈக்கனும்னு எண்ணம் இல்லே? அதுதான் சங்கத்துக்கும் ஈக்கிது. இதுல தப்பில்லேன்னு நினைக்கிறேன்.

வாஸ்தவம்தான் காக்கா. வேட்பு மனு தாக்கல் செய்யப்போவும்பொது அவங்க வாங்குன உறுதி மொழியக் கவனிச்சியலா?

யான்டா நீயும் அங்கதான் ஈந்தியா? எப்புடிடா நீ வேற மொஹல்லாவுல? எப்புடி உள்ளக்க வந்தா? நான்கூட அங்க பவுந்த சம்சாவுல ரென்டை மடிச்சு வச்சிக்கிட்டு ஒன்னைத் தேடுனேன். அங்கனாதான் ஈந்தியா?

ஒடனே பொரளியக் கெளப்பிடாதிய காக்கா. நான் ஒருவேலையா செக்கடிப்பள்ளிக்கு வந்தேன். அங்கன பேசிக்கிட்டது காதுல உளுந்துச்சு. நீங்க விவரமா சொல்லுவியன்னுதான்...

ஆமாடா காதரு. சங்கத்து ஆதரவு பெற்ற வேட்பாளர்களிடம் ஐந்து வருசத்துக்கு மட்டுமே தேர்தலில் நிப்பேன்; அடுத்த தடவை சங்கத்துக்கு உட்பட்ட மத்தவங்களுக்காக அல்லது அவங்களுக்காக உட்டுக்கொடுத்தவங்களுக்கு வாய்ப்பு அளிப்போம்னு உறுதி எடுத்தாக. அப்புறம், அல்லாஹ்வை சாட்சியாக்கி ஊழலோ முறைகேடோ செய்யமாட்டேன்னும் சொன்னாங்க. இதெல்லாம் ஆலிம்கள் தலைமையில் செயல்படுறதுனாலதானேடா சாத்தியமாச்சு.

பாக்கலாம். இந்த தடவை உங்க மொஹல்லா சங்கத்து ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இன்ஷா அல்லாஹ் ஜெயிசுட்டா. அடுத்தடுத்த எலக்சன்ல எல்லா மொகல்லா சங்கமும் இதையே ஃபாலோ பண்ணுவாங்க. அப்புடியே சேர்மன் பதவிக்கும் ஒரே வேட்பாளரை நிறுத்தி நம் தேவைகளை நமக்குநாமே நிறைவேற்றிக்கலாம்.

இதுக்குத்தாண்டா காதரு ஒன்னோட நான் வந்தேன்.நாம ரென்டுபேரும் மனசு உட்டு தெருப்பாகுபாடு இல்லாம பேசுறோம். சிந்திக்கிறோம். ஒன்னா சஹன்ல உட்காருறோம். அதமாதிரி எல்லாரும் ஒன்னா ஒத்துமையா ஈந்துட்டா சஹனுக்கு அஞ்சுபேருகூட உட்காரலாம்டா.

காக்கா நானும் சமாளிச்சிக்கிட்டு பல்லை கடிச்சிகிட்டு இருக்கலாம்னு நினைச்சேன். வாயைக் கிளறிட்டிய. ரோஸ் மில்கா ப்ரூட் மிக்சரா?

ரெண்டையும் சேர்த்தே குடிச்சிட்டு சீக்கிரம் போகலாம் வா நடுத்தெருவுல ஒரு கலரிக்கார வூட்டுக்குப் போகனும். போவாட்டி கோவுச்சிக்கிடுவாங்க. தாய புள்ளையலுவோ.

ஆமா காக்கா எலக்சன் எப்பவாச்சும்தான் வரும். அதுல கவனத்தைச் செலுத்தி வழக்கமா வர்ர விருந்த கோட்டை உட்டுடக்கூடாது.

இப்படிக்கு,
www.ஊர்சுத்தி.com

தொடரும்...
Share:

ME : என் வாக்கு யாருக்கு?


அன்பான‌ என் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ளே!

இறைவ‌னின் சாந்தியும், ச‌மாதான‌மும் ந‌ம் அனைவ‌ரின் மீதும் உண்டாக‌ட்டுமாக‌...

வர இருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நாம் கண்டிப்பாக கட்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. காரணம் பிரதான கட்சிகளே தன் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்‍டு மக்கள் பிரச்சனைகள் மட்டுமே பிரதான குறிக்கோள், அதற்காக மட்டுமே பாடுபடப் போகிறோம் என்று சொல்லி வரும் தேர்தல் மூலம் தனக்கு வேண்டியதை சாதிக்க நினைக்கின்றன. அத‌ற்கான‌ காய்க‌ளை ஒவ்வொரு கட்சிகளும் க‌ச்சித‌மாக‌ ந‌க‌ர்த்தி வ‌ருகின்ற‌ன‌.

அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில், நாம் ஊர் பாரம்பரியம், வாரிசு அரசியல், தெருப்பாகுபாடு, கட்சிகள் என்று வர இருக்கும் தேர்தலுக்காக‌ பிளவுபட்டு நிற்காமல் ஊருக்கு சேர்மன் ஒருவரே வர முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இவர் வந்தால்,

 • நிச்சயம் சுயநலமின்றி ஊருக்காக நல்லது செய்வார்.
 • ஊரின் பிரதான பிரச்சினைகளுக்கு வழி காண்பார்.
 • நமது ஊரின் அனைத்து மக்களும் எளிதாக அணுகக் கூடியவராக இருப்பார்.
 • அரசு மூலம் நம் ஊருக்காக ஒதுக்கப்பட்ட நிதி மூலம் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பார்.
 • ஊர் அமைதிக்கு அவ்வப்பொழுது பங்கம் விளைவிக்கும் மதச்சாயம் பூசப்பட்ட கலவரங்கள் வராமல் துரித நடவடிக்கை மூலம் (ஆரோக்கியமான அமைதி பேச்சு வார்த்தை மூலம்) ஏற்பட இருந்த‌ உயிர், பொருள் சேத‌ங்க‌ளை த‌டுக்க‌ முய‌ல்வார்.
 • எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள் செய்ய‌ உள்ள‌ துணிச்ச‌ல் அதிக‌ம் கொண்ட‌வ‌ராக‌ இருப்பார்.
 • நீதி, நேர்மை தவறாது பாரபட்சம் இன்றி இறையச்சத்துடன் செயல்படுவார்.


என்று ஊரே கை காட்டும் ஒருவ‌ரை எல்லோரும் சேர்ந்து விருப்பு, வெறுப்புகளை புறம் தள்ளி தாராள‌மாக‌ தேர்ந்தெடுத்து அழ‌கு பார்த்து ந‌ல்ல‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ளை ஊரே அனுப‌விக்க‌ முயற்சிக்கலாம். 

மேற்க‌ண்ட‌ த‌குதிக‌ளும் திற‌மைக‌ளும் ஊரில் ஒருவ‌ருக்கும் இல்லை என்று வாதிடுப‌வ‌ராக‌ நீங்க‌ள் இருந்தால் அந்தப் பதவிக்கு நீங்க‌ளே வேட்பு ம‌னு தாக்க‌ல் செய்து உங்க‌ளை வெளியுல‌குக்கு வெளிக்காட்டிக் கொண்டு உங்க‌ள் சீரிய‌ ப‌ணியை தொட‌ர‌ முய‌ற்சி செய்யலாம்.

எதையும் துணிந்து செய்ய‌ மாட்டேன். க‌ருத்துக‌ளை ம‌ட்டும் க‌ச்சித‌மாக‌ சொல்லி வ‌ருவேன் என்ப‌வ‌ராக‌ நீங்கள் இருந்தால் உங்க‌ளுக்குப் பிடித்த‌ ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்தெடுக்க‌ ஓட்டு போட‌வும், அவ‌ருக்கு ஓட்டு போட‌ச்சொல்லி உங்க‌ள் குடும்ப‌த்தின‌ரை தூண்டுப‌வ‌ராக‌வாவ‌து இருந்து விட்டு போங்க‌ள். எப்ப‌டி இருந்தாலும் நாம் வாழ்வ‌து இவ்வுல‌கில் ஒரு முறை தான். 

எது எப்ப‌டியோ த‌ய‌வு செய்து வார்டு மெம்பராக இருந்தாலும் சரி, அல்லது ஊர் சேர்மனாக இருந்தாலும் சரி, ந‌ல்ல‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் தேர்ந்தெடுக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள். இதற்கு மாறாக மோசமானவர்களை வரும் தேர்தலில் நாம் தவறாக தேர்ந்தெடுத்து விட்டால்... "ந‌ல்ல‌ குண‌ம் இல்லாத, மார்க்க‌ ப‌ற்ற‌ற்ற, வரதட்சிணை கொடுமை செய்யும், மது / மாதுக்கு அடிமையான, உழைத்து ச‌ம்பாதித்து அத‌ன் மூல‌ம் குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ லாய‌க்கு இல்லாத‌ ஒரு போக்கிரியை த‌ன் வீட்டிற்கு ம‌ரும‌க‌னாக‌ எடுத்து கால‌மெல்லாம் அந்த வீடு க‌ஷ்ட‌ப்ப‌டும் அவ‌ல‌த்திற்கு ஆளாவது போல் நம் ஊரின் நிலை ஆகிவிடும்" (அல்லாஹ் பாதுகாப்பானாக‌....)

எச்ச‌ரிக்கை.......எச்ச‌ரிக்கை.....எச்ச‌ரிக்கை.....

இதுவே என் ஆணித்த‌ர‌மான மற்றும் உங்களின் கவன‍ ஈர்ப்பு க‌ருத்தும் ஆகும்.

உங்க‌ளுக்கும் இது போல் க‌ருத்துக்க‌ள் உத‌ய‌மானால் நீங்க‌ளும் தாராள‌மாக‌ இங்கு பின்னூட்ட‌மிடுங்க‌ள். ந‌ம் ம‌க்க‌ள் ப‌டித்து தெரிந்து கொள்ள‌ட்டும்.

என் க‌ருத்தை த‌னிப்ப‌திவாக‌ வெளியிட்ட‌ அதிரை எக்ஸ்பிர‌ஸ் குழும‌த்தின‌ர்க‌ளுக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

குறிப்பு: அதிரைச் சகோதரர்கள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தனிப்பட்ட நபர்களைச் சாடாமல் இதுபோன்ற கட்டுரைகளை அனுப்பித் தந்தால் பதியப்படும்.
Share:

ME : ஷம்சுல் இஸ்லாம் சங்க அதரவு பெற்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட ஆறு வார்டுகளின் வேட்பாளர்கள் இன்று (28-09-2011) புதன் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்படுவதென அறிவிக்கப்பட்டு காலை 11:30 மணியளவில் செக்கடிமேட்டிலிருந்து புறப்பட்டனர்.

வேட்பாளர்களுடன் ஷம்சுல் இஸ்லாம் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் முஹல்லாவாசிகள் உட்பட சுமார் 150 பேர் கொடும் வெயிலையையும் பொருட்படுத்தாமல் பைக், ஆட்டோ மற்றும் கார்கள் அணிவகுக்க நடுத்தெரு - தக்வா பள்ளி சந்திப்பு - கடைத்தெரு - பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு - மெயின்ரோடு வழியாகப் புறப்பட்டு நண்பகல் 12:00 மணியளவில் அதிரை பேரூராட்சி அலுவலகத்தைச் சென்றடைந்தனர்.

வேட்பாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பிணைத் தொகை (டெபாசிட் ரூ.500) செலுத்தப்பட்ட பிறகு சங்கத் தலைவர் சகோ. உமர் காக்கா மற்றும் துணைத் தலைவர் சகோ.சகாபுதீன் முன்னிலையில் ஒவ்வொருவராக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திமுக சார்பில் சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் சகோ.அஸ்லம் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் சகோ.அப்துல் அஜீஸ் (கொய்யப்பா), மனிதநேய மக்கள் சாட்சியின் நகரப் பொருளாளர் சகோ.செய்யது (ஆதம் டெக்ஸ்டைல்) மற்றும் ம.ம.க. தஞ்சை மாவட்ட செயலர் சகோ.ஜியாவுதீன் ஆகியோரும் முஹல்லாவாசிகள் என்ற முறையில் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதவரவாக பேரூராட்சி அலுவலகம் வரை வந்து வேட்புமனு தக்கல் செய்யப்படும்வரை உடனிருந்தனர்.


ஊர்மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதற்கட்டமாக உள்ளாட்சித் தேர்தலில், முஹல்லாவுக்கு உட்பட்ட வார்டு மெம்பர்களை ஒருங்கிணைத்த ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முயற்சி போற்றுதலுக்குரியது.

வீடியோ நன்றி : அதிரை பிபிசி
Share:

மன்னைக்கு காட்டிய அக்கறையை காட்ட வேண்டும்நேற்று மாலை மன்னார்குடியில் நடைபெற்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழாவில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம், A.R. D. A மற்றும் AYDA சார்பாக திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதை அமைப்பது சமபந்தமாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதற்கு திரு T.R. BALU M.P அவர்கள் நமது கோரிக்கை சம்பந்தமாக சம்பந்தபட்ட அமைச்சருடன் பேசி ஆவன செய்வதாக சொன்னார். மேலும் 900/- கோடி வரை செலவாகும் என்பதால் எதிர் பார்ப்பதைவிட தாமதமாகும் என்றும் கூறினார். வரும் டிசம்பர் மாதத்திலிருந்து தற்போது ஓடிகொண்டிருக்கும் மீட்டர் கேஜ் சேவை நிறுத்தப்பட்டு வேலைகள் தொடங்கும் என்றார் .

இருப்பினும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை வேலைகள் மிக விரைவில் தொடங்கும் என்ற வார்த்தை ஆதரவு அளிப்பதாக உள்ளது. நமது முயற்சிகள் தொடர்ந்து வந்தாலே அன்றி நாம் நம் இலக்கை அடைய முடியாது.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் அப்துல் காதர் M.A அவர்கள் ARDA சார்பாக M.P அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மனு அளித்தார்கள்.

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக M.S ஷஹாபுதீன் கோரிக்கை மனு அளித்ததோடு, AYDA சார்பாக B. ஹபிப் ரஹ்மான் JEDDAH அவர்களும் NRI சார்பாக கோரிக்கை வைத்தார் . இந்த சந்திர்பிற்கு A. அப்துல் ரசாக் அவர்கள் ஏற்பாடு செய்ததோடு அவரும் கலந்து கொண்டார்.

மன்னைக்கு காட்டிய அக்கறையை இந்த தடத்திற்கும் காட்ட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது .


நன்றி : அப்துல் ரசாக்
படம் நன்றி : அதிரை பிபிசி
Share:

செட்டியா குளம் சீரடையுமா?


நமதூரில் கொசுக்களின் சரணாலயம் செட்டியா குளம் என்றால் அது மிகையில்லை.

மேட்டுத்தெரு, ஆஸ்பத்திரி தெரு, புதுத்தெரு, கடைத்தெரு, ஆஸ்பத்திரி ரோடு, நடுத்தெரு இன்னும் இதைச் சுற்றி உள்ள பகுதி மக்களின் மிக நீண்டநாள் கோரிக்கை செட்டியா குளத்தை சீர்படுத்த வேண்டும் என்பதே.

புதுமனைத் தெருவில் தொடங்கி பல பகுதிகளிலிருந்தும் வரும் கழிவு நீர், குப்பைகள் எல்லாமே இந்த செட்டியா குளத்தில்தான் தஞ்சம் அடைகின்றன.

முன்பு இங்கு வரும் நீர் புதுப்பள்ளி குளம் அருகே உள்ள கால்வாய் வழியாகச் சென்று அங்கிருந்து சாயக்காரத்தெரு வழியாக சேதுசாலையை அடையும். காலப்போக்கில் கால்வாய்கள் குறுகி இந்தக் குளத்திலிருந்து நீர் வெளியே செல்ல வழியின்றி ஆகிவிட்டது. மற்ற பிரச்சனைகளைப் போலவே பேரூராட்சி இதுவரை சீர்கெட்ட  இக்குளத்தை கண்டுகொள்ளவே இல்லை.

சுற்றிலும் மக்கள் வசிக்கின்றனர். முன்புறத்தில் அரசு நடுநிலைப் பள்ளியும் இருக்கிறது. இங்கே பயிலும் மாணவச் செல்வங்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த மாணவர்களோடு கொசுக்களும் ஈக்களும் படையெடுத்து பாடம் பயிலுகின்றன போலும். 

மலேரியா, மஞ்சள் காமாலை, சிக்குன் குன்யா, யானைக்கால் நோய், டெங்கு காய்ச்சல் இன்னும் பல நோய்களுக்கும் மிக முக்கிய காரணம் கொசுக்களும் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலும்தான் என்பதை நாம் அறிவோம். 

இத்தகைய கேடு விளைவிக்கும் இந்தக் குளத்தை சீர்படுத்த வேண்டும் என பலமுறை வேண்டுகோள்கள் வைக்கப்பட்டும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

இதுவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் இப்பகுதி வார்டு உறுப்பினர்கள் பிரச்சனையின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு இப்பொழுதாவது, இக்குளத்தைச் சீர்படுத்த முன்வரவேண்டும்.

இந்தக் குளத்தை என்ன செய்யலாம்?

காவிரியிலிருந்து நமதூருக்கு நீர் வருவது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னரே நின்று போய்விட்டதால், மழைக்காலங்களில் செக்கடிக் குளம் நிறைந்தால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மட்டுமே இந்தக் குளத்தின் நீர் ஆதாரம் என்று ஆகிவிட்டதால், குளத்தின் கரையை ஒட்டி வாய்க்காலை அமைத்துவிட்டு குளத்தை தூற்றுவிட வேண்டும்.

அங்கு பெண்கள் மார்கெட் அமைக்க வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தற்போதெல்லாம் நமது பெண்கள் மார்கெட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி வீடுகளுக்கே பொருள்கள் வந்து விடுவதால்,  மேலத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் பூங்கா போன்று இங்கும் மகளிர் பூங்கா அமைப்பதே சிறந்ததாக இருக்கும்.

நோய் தொழிற்சாலைக்கு மூடுவிழா காண இந்த தேர்தல் நல்ல சந்தர்ப்பம். நடைபெற இருக்கும் பேரூராட்சித் தேர்தலுக்கு ஒட்டு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம், இதை ஒரு கட்டாய வேண்டுகோளாக வைக்க வேண்டி இப்பகுதி மக்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பு:- இதுபோன்று உங்கள் பகுதியில் உள்ள சீர்கேடுகளை அதிரை எக்ஸ்பிரசுக்கு எழுதி அனுப்பினால் இன்ஷா அல்லாஹ் பதியப்படும்.
Share:

ME : நேற்றைய நிலவரப்படி ....

நேற்றைய நிலவரப்படி உள்ளாட்சி மன்ற தேர்தலில்  அதிரை பேரூர் மன்ற கவுன்சிலர் பதவிக்கு23 நபர்களும் சேர்மன்3 பதவிக்கு நபர்களும் போட்டியிட மனு அளித்துள்ளதாக அதிரை தேர்தல் அதிகாரி தெரிவித்தார் .மனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால்  இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அதிரையின் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Share:

ME :சங்க ஆதரவு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இன்று
12 மணியளவில் வேட்ப்புமனு தாக்கல் செய்கின்றனர்
 • 1வது வார்டில் ஜகபர் சாதிக்
 • 12வது வார்டில் ஹனிபா
 • 13வது வார்டில் சம்சுதீன் (கொய்யா பழம்)
 • 14வது வார்டில் சேக் அப்துல்லா
 • 19வது வார்டில் திருமதி சவ்தா
 • 21வது வார்டில் இபுராஹீம் (ஆப்பிள்)
ஆகிய வேட்பாளர்கள் சங்கத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இன்று மனுதாக்கல் செய்கின்றனர் .

இது தவிர12 வது வார்டு உள்பட தனிப்பட்ட முறையில் வேட்பாளர்கள் போட்டியிட மனுதாக்கல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது .
Share:

ME:சகோ. MMS பஷீர் 29ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்!


அதிராம்பட்டினம் பேரூராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் சகோ. MMS. பஷீர் அகமது அவர்கள் வரும் வியாழக் கிழமை 29-09-2011 அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அஸ்ஸலாமு அலைக்கும்....

வருகிற 29-09-2011 அன்று காலை 10:30 மணியளவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமிகு N.R.ரெங்கராஜன் B.Com.,அவர்களின் தலைமையிலும் அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் அவர்களின் முன்னிலைலும் MMS. பசீர் அகமது அவர்கள் அதிராம்பட்டினம் பேரூராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதனை பொது அழைப்பாக ஏற்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், முஹல்லா தலைவர்கள், முஹல்லா பெரியோர்கள் மற்றும் அதிரை நகர் வாழ் பொதுமக்கள்அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும்மாறு மிக அன்புடனும், தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
MMS. குடும்பத்தார்கள்

நன்றி: அதிரை.இன்
Share:

ME : சகோ.அஸ்லம் வேட்புமனு தாக்கல் செய்தார்

அதிரை நகர பேரூராட்சி சேர்மன் பதவிக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் சகோ.அஸ்லம் அவர்கள் இன்று காலை 10:00 மணியளவில் ஊர்வலமாகச்சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

உடன் அதிரை நகர திமுக பிரமுகர்கள் இராம.குணசேகரன், சகோ.அப்துல் காதர் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிரையைச் சார்ந்த அவரது நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் புடைசூழ திமுக கொள்கை விளக்கப் பாடல்களுடன் வேட்புமனு தாக்கல் செய்யச்சென்றனர்.

குறிப்பு: புகைப்படம் தகவலுக்காக மட்டுமே. அதிரை எக்ஸ்ப்ரஸ் எந்தவொரு வேட்பாளரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதரிக்காது. அந்தந்த வேட்பாளர்கள் சார்ந்த செய்திகளை பதிவு செய்யும் நோக்கில் மட்டுமே புகைப்படங்கள் கையாளப்படுகின்றன.
Share:

ஆற்றில் மூழ்கி மரணம்(MSMநகர் நிஜாம்)


அந்த வாலிபர் குளித்த ஆறு இதுதான் 


அதிரை MSM  நகரை சேர்ந்த 5  வாலிபர்கள் ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றில் நேற்று மாலை 3 மணியவில் குளித்து கொண்டிருக்கும் பொழுது SHABNAM COMBLEX நிஜாம் (25) என்ற வாலிபர் மட்டும் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்டார்.அவரை சக நண்பர்கள் தேடியும் கிடைக்க வில்லை .


தற்போது அன்னாரது சடலம் ஒரத்தநாட்டில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக காவலர் ஒருவர் தெரிவித்தார்.


இதானால் எம் எஸ் எம் நகர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தகவல் : நெய்னா முகமது  
Share: