Monday, January 31, 2011

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது.இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது

1 - 10 வகுப்பு வரை

தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல் நகல் (xerox)
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26


கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)


தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26


கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

தொழிற்படிப்புகள் ( Engineering )


தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்

* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்

* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்


மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm

Sunday, January 30, 2011

அய்டா தேர்தல் - நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

இறைவனின் திருப்பெயரால்…
சவுதி அரேபியா ஜித்தா நகரில் கடந்த 19 ஆண்டுகளாக அதிரை மக்களின் நலனுக்காக இயங்கி பல சேவைகளையும் அரிய பல பணிகளையும் செவ்வனே செய்து வருகின்ற யுலுனுயு (யுனுஐசுயுஐ லுழுருவுர் னுநுஏநுடுநுPஆநுNவு யுளுளுழுஊஐயுவுஐழுN) அமைப்பின் நடப்பு ஆண்டுக்கான தலைவர் மற்றும் பொறுப்புதாரிகளுக்கான தேர்தல் கடந்த ஜனவரி 14ம் தேதி 2011 வருடம் தேர்தல் முறைப்படி நடத்தப்பட்டது.
தேர்தல் ஆணையராக ஜனாப். ஹபீப் ரஹ்மான் அவர்கள், ஜனாப். பஷீர் அஹ்மது அவர்கள் மற்றும் ஜனாப். அஜ்வா நெய்னா ஆகிய மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு அக்குழுவின் தலைமையின் கீழ் முறைப்படி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
01    ஜனாப். யு.மு. சம்சுதீன்    தலைவர்
02    ஜனாப். க.மு. ஹபீப் ரஹ்மான்    துணை தலைவர்
03    ஜனாப். அப்துல் காதர் ஜெய்லானி    செயலாளர்
04    ஜனாப். அஹமது அஸ்லம்    துணை செயலாளர்
05    ஜனாப். ர். அப்துல் அஜீஸ்    பொருளாலர்
06    ஜனாப். யு. அஹமது அலி    இணை பொருளாலர்

மற்றும் யுலுனுயுவின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க மேற்கண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயற்க்குழு உறுப்பிணர்கள் :       
01    யு.து.தாஜிதீன்    10    அ.ர. பயாஸ் அகமது
02    நெய்னா அஜ்வா    11    அ. அப்துல்பரக்கத்
03    ஜபருல்லாஹ்    12    ஆ. முகம்மதுயூசுப்
04    ஆ.யு. மீராசா    13    ர. பத்ருத்தீன்
05    ஆ. தமீம்அன்சரி    14    லு. சுஹைப்
06    கு. நிஜாம்    15    அ. அஹமது இப்ராஹிம்
07    தமீம்    16    ர. மீராசா
08    அமீன்    17    ர். சிஹாப்த்தீன் 
09    மு. அப்துர்சக்கூர்       

கவுரவ ஆலோசகர்கள் :
ஜனாப். பஷீர் அஹ்மது அவர்கள்  மற்றும் ஜனாப். ரஃபீயா அவர்கள்.


இங்ஙணம் அய்டா நிர்வாகம

Wednesday, January 26, 2011

ரியல் எஸ்டேட் - வரமா? சாபமா?


அண்மைக்காலமாக அதிரையில் கொடி கட்டிப் பறக்கும் தொழில் ரியல் எஸ்டேட்.. பெருநகரங்களில் மட்டுமே இருந்து வந்த ரியல் எஸ்டேட் இப்போது அதிரையிலும். இப்போதெல்லாம் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் சேமிப்பை நிலங்களில்தான் முதலீடு செய்கின்றனர்.

அதிரை எல்லையையும் தாண்டி சேது சாலையில் ராஜாமடம் எரிக்கு எதிர் புறமாகவும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ளூர் புதுக்கோட்டையைத் தாண்டியும் மனைகள் போடப்பட்டுள்ளன.

குடியிருப்பதற்கான ஒரு இடம் தான் வீடு என்பதைத் தாண்டி ஒரு விதமான முதலீடு என்ற வகையிலேயே தற்போது அணுகப்படுகிறது. மனையின் விலை ஏறுமே ஒழிய ஒருகாலும் இறங்காது என்ற நம்பிக்கையில் பரும் மனைகளில் முதலீடு செய்கின்றனர்.

புதிய இடத்தில் மனை போடும் போது அங்கு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் வாங்குவார்கள். சில காலம் அதன் மதிப்பு அப்படியே இருக்கும். முக்கியமாக சரிவு இருக்காது. மேலும் சிலர் முதலீடு நோக்கில் வாங்குவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வாங்க ஆரம்பிக்கும் போது இருக்கும் மனையைவிட தேவை வேகமாக அதிகரிக்கும். அப்போது விலைகள் கூடும். தேவைக்காக மட்டுமே வாங்கியவர்களோடு சேர்த்து விலைகள் கூடுகிறதே நாமும் வாங்கலாம் என்ற பிரிவினரும் வருவார்கள். இதனால் தேவை மேலும் அதிகரிக்கும். கூடவே விலையும். இனிமேல் விலை குறையவே குறையாது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும். அந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கூட்டம் காசு பார்க்கும்.

வணிகத்தில் முதலீடு செய்வதைவிட மனையில் முதலீடு செய்வதே சிறந்தது என எனக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் மனையின் மதிப்பு குறையவே குறையாதாம். ஒரு பொருளின் மதிப்பு அதிகரிப்பதற்கு சாத்தியம் என்றால் குறைவதற்கு ஏன் சாத்தியமில்லை? எந்த வகையான முதலீட்டிற்கும் ஏற்ற இறக்கம் உண்டு. அது ஒரு சுழற்சி. அப்படி இருக்க மனையில் மட்டும் இறக்கம் சாத்தியம் இல்லை என்று எவ்வாறு நம்புகின்றனர்?

1989ஆம் ஆண்டில் ஜப்பானியத் தலைநகர் டோக்கியாவில் ஒரு சதுர அடியின் விலை 93 ஆயிரம் டலர்கள். அதாவது தற்போதைய இந்திய மதிப்பில் சுமார் 46,50,000 ரூபாய்கள். 2004ஆம் ஆண்டு இதே இடத்தின் மதிப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாக அதாவது சுமார் 46,500 ரூபாய்க்கும் குறைவாக ஆனது. (இது குறித்து விக்கியில் காணலாம்... http://en.wikipedia.org/wiki/Japanese_asset_price_bubble)

ஜப்பானில் மட்டுமே இந்த நிலை என்றில்லை. ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் ஐயர்லாந்து ஆகிய நாடுகளிலும் இதுபோன்று நிகழ்ந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் வீடுகளின் விலை மிகவும் மலிவாக ஆனதை செய்திகளில் வாசித்திருப்போம்.

எனில், அதிரையில் இந்நிலை ஏற்படாதா? அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் மனைகளில் முதலீடு செய்திருப்பவர்களின் நம்பிக்கை. காரணம் நமதூரில் சமுதாயக் கடமையாக்கப்பட்டு விட்ட பெண்ணுக்கு வீடு என்பதுதான்.

மகளுக்கு அல்லது சகோதரிக்கு வீடு கட்டிக் கொடுத்தால்தான் அவளுக்குத் திருமணம் செய்விக்க முடியும் என்ற சமூக நிர்பந்தமே அதிரையில் மனையில் முதலீடு செய்பவர்களுக்கு உத்தரவாதம்.

ஆக, என்ன விலை விற்றாலும் மனை வாங்கித்தான் ஆக வேண்டும்.

இந்த விவரங்களைக் கேட்ட சென்னையைச் சேர்ந்த என் ஆடிட்டர் நண்பன் கேட்டான்: "என்னப்பா இது? பதுக்கல் வியாபாரம் போன்று தோன்றுகிறதே!"

எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. என்றாலும் நான் சொன்னேன்..... ரியல் எஸ்டேட் பணம் உள்ளவர்களுக்கு வரம்! பெண்ணைப் பெற்றவர்களுக்குச் சாபம்!

ஆக்கம்: அபூ சுஹைமா, குவைத்

1000 வெடிகுண்டு லாரிகளைக் காணவில்லை

2011 ஆங்கிலப் புத்தாண்டுக்கு முன்தினம் தினத்தந்தி மற்றும் தட்ஸ்தமிழில் வெளியான ஒரு செய்தியை வாசித்ததும் நெஞ்சம் "பக்..பக்" என்றோ "திக் திக்.."என்றோ அடிக்கவில்லை என்பதால் யாரும் என்னைக் கல்நெஞ்சன் என்று சொல்லிவிடாதீர்கள்.

காந்திஜீ தலைமையில் பெற்ற சுதந்திரத்தின் மகிமையை "2G" அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் மூலம் அறிந்தோம். அதற்கு முன்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கீடு செய்த நமது "COMMON WEALTH" ஐ போட்டி போட்டுக் கொண்டு ஆளுங்கட்சியினர் சிலர் விளையாடியதாலும் மத்திய-மாநில அரசுகள் மீதான நம்பிக்கை அதல பாதாளத்திற்கு சென்றது.

இந்த சூழலில் "நாடுமுழுவதும் 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்" என்ற செய்தி வெளியானதால் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதுபோல் உணர்ந்ததால்தான் கீழ்கண்ட செய்தி வெளியானதும் எவ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை.


இதோ இந்தியாவின் (எத்தனையாவதோ) குடியரசு தினத்தை கொடியேற்றிக் கொண்டாடுகிறோம். (அடைப்புக்குறிக்குள் உள்ளதுக்கும் என் தேசபக்திக்கும் சம்பந்தமில்லை என்பது வேறுவிசயம்:). அதற்கு ஓரிரு வாரம் முன்னதாக வெளியான இன்னொரு செய்தியை வாசித்தபிறகு குபுக் என சிரிப்பு வந்தது. அது என்னவென்றால் நமது பிரதமர், சோனியா காந்தி (","வை கவனிக்கவும்) மற்றும் உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரைக் கொல்வதற்காக தமிழக கடற்கரையோரங்களில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படை ஊடுறுவியிருப்பதாகச் சொல்லப்படும் செய்தி!

மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பதவி விலகி, பின்னர் 2G முறைகேடு மீதான விசாரணை தொடங்கிய நிலையில் இப்படி செய்தி வெளியானால் "குபுக்" என்று சிரிக்காமல் "குபீர்" என்றா சிரிக்க முடியும்? இதற்குமேலும் இப்பதிவை இழுக்க விரும்பவில்லை.

ஒவ்வொரு டிசம்பர்-6 லும்,இழந்த பள்ளிவாசலை மீட்பதற்காக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைக் காட்ட நாங்கள் திரளும்போதெல்லாம் ஐம்பது நாள் கழித்து நடக்கவிருக்கும் குடியரசு தினத்தை சீர்குலைக்க வரலாறு காணாத (புவியியல், அறிவியல், சமூகவியல், கணிதவியல்,தமிழ், ஆங்கில பாடங்கள் என்ன பாவம் செய்தனவோ!) மற்றும் மூன்றடுக்கு, நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு என்றெலாம் சொல்லி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் இளைஞர்களைக் கைது செய்வீர்கள். ஆனால் 1000 வெடிகுண்டு லாரிகளும், தற்கொலைப்படையும் ஊடுறுவிய பிறகும் யாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யவில்லை.

கடந்த சில வருடங்களாக மாலேகான், சம்ஜவ்தா என நாட்டின் பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கும் அரைக்கால் டவுசர் பாண்டிகளே காரணம் என்பது நிரூபனமாகிக்கொண்டிருக்கும்போதும், ஒரு CHANGE க்கு ஓரிரு அம்பிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து, மதசார்பின்மையை பல் இளிக்க வைத்திருக்கலாமே?

ஒவ்வொரு வருடமும் கண்ணாடிக் கூண்டுக்குள் சுதந்திரமாக நின்று கொடி ஏற்றும் நாட்டின் முதல்,இரண்டாவது குடிமக(ளு)னுக்கு மூன்றாம்,நாலாந்தர குடிமக்களின் கோரிக்கை என்னவெனில், நாட்டை சீர்குலைக்க ஊடுறுவிய 1000 வெடிகுண்டு லாரிகளும், தமிழகத்தில் ஊடுறுவியதாகச் சொல்லப்பட்ட தற்கொலைப்படையினரும் எங்கே? என்பது மட்டுமே!

வெடிகுண்டுகளுடன் ஊடுறுவிய 1000 லாரிகளையோ அல்லது தற்கொலைப் படையினரை யாரேனும் கண்டால் தயவுசெய்து உடனடியாக பின்னூட்டம் போடவும்.:)

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்! !!! ஜெய் அல் ஹிந்த்

Tuesday, January 25, 2011

தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் நிலை!

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க,
சென்னையைத் தாண்டாத விரக்திகள் எரிச்சலைக் கிளப்புகிறது.

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.

பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது


"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து,
வீட்டிற்கு செல்வதற்குள் "செல்லமே" கூட முடிந்து விடுகிறது.

செம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.

பொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

Monday, January 24, 2011

உயிர்காக்க உதவுங்கள் (சகோ.நிஹமதுல்லாஹ்-புதுத்தெரு)

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் புதுத்தெருவைச் சார்ந்த சகோ.நிஹமதுல்லாஹ் [வயது 20] இருசிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த 20-01-2011 அன்று அனுமதிகப்பட்டுள்ளார். தற்போது அவர் நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் மருத்துவர் ஆலோசனைப்படி உடனேயே மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பொருளுதவி வேண்டும் என்றும் மிக அவசர கோரிக்கை வந்துள்ளது.

இது குறித்த முந்தைய கோரிக்கை அதிரை எக்ஸ்பிரஸில் 16/04/2008 அன்று வெளியானதைத் தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள அதிரைவாசிகளும் நல்லுள்ளம் படைத்தவர்களும் பொருளாலும் துஆ மூலமாகவும் உதவினார்கள். (அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக. ஆமின்!)

தற்போது மிகவும் சீரியஸான நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து கடந்த ஐந்து வருடங்களாக குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் நிலையில் இருப்பதாக அவரது சகோதரர் மடலிட்டு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து மீண்டும் மருத்துவ நிதிஉதவி கோரியுள்ளார். 
 
கீழ்காணும் அவரது மடலை வாசிப்பவர்கள் தாங்களும் தங்கள் நட்பு வட்டாரங்களிலும் இந்த  கோரிக்கையை எடுத்துச் சொல்லி தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்படி அதிரை எக்ஸ்ப்ரஸ் சார்பில் மீண்டும் கோருகிறோம்.

அதிரை மற்றும் ஏனைய வலைப்பூக்களிலும், குழுமங்களிலும் இந்த கோரிக்கையை பிரசுரித்து அதிகபட்ச உதவிகள் உரியநேரத்தில் சென்றடையுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களது உதவிகளை மறக்காமல் கீழ்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கவும்.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

அல்லாஹ்வின் நல அருள் நம் அனைவர் மீது கிட்டட்டுமாக.ஆமீன்

-அதிரை எக்ஸ்ப்ரஸ் குழு மற்றும் வாசகர்கள்-

----------------------------------------
Assalamualikum

My brother Nihamathullah 20 years old, He was admitted in Ramachandra Hospital, porur,Chennai in 20 Jan 20011.

As a both kidney has affected and nerugenic bladder problem for past 15 years. also past five years he passed urine through cathetral tube, every three month its should be changed.


But Now His Blood  serum creatitine level is 20
Blood Urea is 164 . so doctor advised to immediately  start  the hemodayalasis process.
Now we do the hemodayalasis process

Also he need a dialysis process for every weekly for  two times.
per dialysis cost is min Rs.3000/-

insha allah after improve his body condition they will advised to kidney transplantation. its cost approx 6 lakhs.
Make a dua for his guys. and also if u possible pls help this guy.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

Thanking you
Best Regards
Najumudeen
---------------------------------------------
*மேற்கண்ட மடலை அதிரை எக்ஸ்ப்ரஸிற்கு உடனடியாக அனுப்பித் தந்த சகோதரருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமின்.
நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக கியாமத் நாளில் அல்லாஹ் (மனிதர்களை அழைத்து) 'ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்கவில்லை?' என கேட்பான். அப்பொழுது அடியான், 'என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு உடல் நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று பதில் அளிப்பான். அப்பொழுது அல்லாஹ் 'என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான், அவனை நீ உடல் நலம் விசாரிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா? என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவைக் கேட்டேன், நீ எனக்கு உணவளிக்க வில்லை?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அடியான் 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும், நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் 'என் இன்ன அடியான் உன்னிடம் உணவைக் கேட்டான். நீ அவனுக்கு உணவை அளிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய்! என்பதை அறிவாயா?' என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் எனக்கு தண்ணீர் புகட்டுமாறு வேண்டினேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அடியான். 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு தண்ணீர் புகட்ட முடியும்! நீ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், 'என் இன்ன அடியான் உன்னிடம் தனக்கு தண்ணீர் புகட்டும்படி வேண்டினான். நீ அவனுக்கு தண்ணீர் புகட்ட மறுத்து விட்டாய்! நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?' என்று கூறுவான். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்

Saturday, January 22, 2011

இதுக்கு மட்டும் நேரமில்லையாம்



என்னா காக்கா இங்க நிக்கிறியள்?" கனரா பேங்க் அருகே நின்று கொண்டிருந்த ஊர்சுத்தி உமர் திடுக்கிட்டு திரும்பினார் .
"அடக் காதரா. சொலக்குன்னு போட்டுச்சு. சலாம் சொல்லிட்டு கூப்புடக்கூடாதா? நீ யாண்டா இன்னேரம்பலஇங்கிட்டு வந்தா?"

"மொதல்ல நீங்க சொல்லுங்க ஹாக்கா. என்ன விசேசம் இந்தப்பக்கம்?"
"எனக்கென்னடா! நான் தனிக்கட்டை. எங்க போனா என்னா வந்தா என்னா?"ஆமா நீ யாண்டா காதரு தலைலதொப்பிகோட போடாம வந்தா?. 

விஷ பனிடா. தலைய மறைச்சுக்க.இல்லாட்டி சஹன்ல மூக்க தொடச்சிக்கிட்டுத்தான் உக்காந்திருக்கனும்."

"உங்களுக்கு எப்பவுமே சஹன் நெனப்புதான் காக்கா. நம்மூருல கல்வி மாநாடு நடத்துச்சே அதுக்குப் போனியலா?" 

"அந்தக்காலத்துலய நான் மூனாவது படிச்சவண்டா.ஆமா இனிமேலயா நான் படிக்கப்போறேன்."

"என்னா ஒமராக்கா நீங்களே இப்புடி சொல்றியலே. அன்னைக்கி நீங்கதானே படிக்க வயசு தடையில்லேன்னிய.சமீபத்துலகூட 90 வயசுல ஒருத்தர் காலேஜ் டிகிரி வாங்குன ந்யூஸ நீங்கதானே பேப்பர்ல படிச்சு சொன்னிய "

"அதுவா!சஹன்ல விரிச்ச ந்யூஸ் பேப்பர்ல போட்டிருந்தத சும்மா படிச்சேன். சஹன்வர்ரதுக்கு லேட்டானப்போ கொஞ்சம் பொது புத்தி வளரட்டுமேன்னு சொன்னேன். இப்ப அதையே திருப்பி புடிக்கிறியா? பலே ஆளுதாண்டா நீ. ஆமா நீ போனியா?"

"என்னா காக்கா நீங்க!சாப்பாடு தேத்தண்ணியெல்லாம் கொடுத்தாங்க. கண்டிப்பா நீங்களும் வந்திருப்பியன்னுல்ல நெனைச்சேன்"

"எதோ கல்யாணம் காய்ச்சின்னா 1-2 மணிநேரத்துல முடிஞ்சிடும்.கூப்ட்டவங்க மனசு சந்தோசத்துக்காக மொகத்தக் காட்டிட்டு வந்துடலாம். 1-2 நாளுன்னா எப்படியும் 2-3 வேலை விருந்து மிஸ்ஸாயிடும். எங்க அதுக்கெல்லாம் நமக்கு நேரம்?"

"யாங் காக்கா நீங்களே இப்புடி சொல்லலாமா?" இந்தக்காலத்துல இதுமாதிரி யாரு காக்கா நடத்துவாங்க?"

டேய் காதரு நான் கொறை சொல்லலைடா.இதுமாதிரி கருத்தரங்கம் மாநாடு எல்லாம் நம்மூருக்கு அவசியம்தாண்டா. ஆனா நம்ம மக்களுக்கு இதுலைலாம் இண்ட்ரெஸ்ட் இருக்காதுங்கறதுதான் எனக்கு வருத்தம். மெயின்ரோட்டுல பொதுக்கூட்டத்துக்குப்பாரு எவ்ளோ கூட்டம் வருது. வெற்றி கொண்டான் பேசுறார்னா நெலக்கடலைய திண்டுக்கிட்டே காலகடுக்க நிண்டு
கேட்குறாங்க. கொட்டும் பனியக் கூடப்பாக்காம கந்தூரிக்கு போவாங்க. ஆனாக்கா இதுமாதிரி மூளைக்குவிருந்து கொடுக்கும் கூட்டத்துக்கு மட்டும் போறதுக்கு நமக்கு நேரமில்லேயாக்கும்?"




நீங்களே வராம ஈந்திட்டு மத்தவொளே கொறை சொல்லக்கூடாது காக்கா. பன்னா,கொடுவா மீனு வாங்கனும்னா கடத்தெருவுக்கும் கரையா (கரையூர்) தெருவுக்கும் சுபுஹுலயே கெளம்பிடுவோம்.அங்கை லேட்டானா மல்லிப்பட்டனத்துக்கு ஆட்டோவ்ல போயாச்சும் வாங்கிட்டு வந்துடுவம். ஆனாக்கா இதுமாதிரி அறிவாளிங்க சபைக்கு வர்ரதுக்கு நேரமில்ல. நம்மூரு உருப்படாமா போனதே இதுனாலதான்னு நெனெக்கிறேன் காக்கா!"



வாஸ்தவமான பேச்சு காதரு.நான் அதுல கலந்துக்கலேன்னு சும்மாத்துக்கும் ஓன் வாயக் கிளறுனேன்.சாப்பாடு உண்டுன்னு கேள்விப்பட்ட பொறவும் காதரு எங்கடா காணோம்னு யோசிச்சேன். நீயும் அங்கதான் ஈந்தியா? எங்கனடா ஈந்தா? 

"இதுல கலந்துக்கணுடுட்டு வெளியூறு மட்டுமில்லாம வெளிநாட்டுலேர்ந்தும் நம்மூர் ஆட்கள் வந்தாங்க. உடுங்க காக்கா,நம்மமக்க இந்தக்காலத்துலயும் கொடிமரம்,ஆறாம்பாத்தியா,கந்தூரி கூட்டுராவுன்னு இரிக்கிறத நெனச்சா கோவம்தான் வருது. எப்பதான் திருந்துவாங்களோ காக்கா?"

 எல்லாரையும் ஒரேயடியா குத்தம் சொல்ல முடியாது காதரு. நான் கேள்விப்பட்ட வகையிலே பசங்கல்லாம் கிரிக்கெட் விளையாடவும், பொங்க ரிலீஸ் படம்பார்க்க பட்டுக்கோட்டைக்கும் போயிட்டாங்களாம்.சீ(ரியல்) தேவிகள் தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்துட்டாங்களாம். இதையும் மீறி அதிகமான மாணவியர்கள் வந்திருந்ததுதான் நம்பிக்கைய கொடுக்குது. அடுத்தடுத்த கூட்டத்துக்காச்சும் நம்ம மக்களுவோ வர்ராங்களான்னு பார்ப்போம்.

நான் என்னா நெனைக்கிறேன்னா காக்கா,இதுமாதிரி மாநாடுகளில் படிப்பை பாதியில் உட்டுட்டு வெளிநாடுபோயி கஷ்டப்படும் நம்ம மக்கள் சிலரின் அனுபவத்தப் பேசச்செய்யலாம்  இப்போ உள்ள வசதியைப் பயன்படுத்தி இதை நேரலையாவேகூடச் செய்யலாம்.

இன்னொன்னு காதரு. YOUTUBE ல அதிரை,அதிராம்பட்டினம்னு தேடிப்பாரேன். யூரோப்-அமெரிக்காவுல ஈக்கிற நம்ம புள்ளையலுவோ பெருநாள்,பிக்னிக் வீடியோக்கள போட்டிருக்காங்க. பால்வடியும் பாலகன்கள்லாம் ஈக்கிறதப் பார்த்தா,ஊருல படிச்சிக்கிட்டு ஈக்கிற புள்ளையலுவொளுக்கும் அதுமாதிரி நாம்ளும் போகலாமேன்னு ஆசை வந்தா படிப்பு ஏறுமா காதரு?

ஆமா காக்கா, என் ப்ரண்டு நெய்னாம்ஷாகூட அங்கைலாம் பலபேரு கஷ்டமான வேலை செஞ்சிகிட்டு ஈக்கிறாகன்னு சொன்னான். இது எத்தன பேருக்குத் தெரியும்? இதைலாம் பொது மேடல விவாதிச்சாத்தானே உண்மை நிலவரம் நம்ம புள்ளையலுவொளுக்குத் தெரியும். 

"சரியாச் சொன்னிய காக்கா. வாங்க அப்புடியே ஆளுக்கு ரெண்டு வாடாவத் திண்ணுக்கிட்டே பேசலாம்"

ஆமாண்டா. கல்யாணக்கார ஊட்டுல வெள்ளலமே சாப்புட்டுப்புட்டதால பசி ஒவுத்த கிள்ளுது. சம்பையார் கடைல ரொட்டி முடிஞ்சிருக்கும். சாவண்ணா கடைல லைட்டா ஆளுக்கு ரெண்டு முர்தபா சாப்புட்டுட்டு பொடிநடையா நடக்கலாம் வா. 

சரி காக்கா, நாளக்கி குடிபோற வீட்டுல காலைப்பசியார கெளம்பும்போது மறக்காம மிஸ்டுகால் பண்ணிடுங்க. அங்க நெறைய விசயம் பேசலாம். 



இப்படிக்கு,
www.ஊர்சுத்தி.உமர்
----------------------------------------------
மேற்கண்ட உரையாடலில் குறிப்பிடப்படும் பெயர்கள் (அதிரை) ஊர்நடப்பை மனம்விட்டுப் பேசும் கற்பனைப் பெயர்களே. யாரையும் புண்படுத்தவோ அல்லது வருத்தமடையச் செய்வதோ நோக்கமல்ல - அதிரை எக்ஸ்ப்ரஸ்

தலாக்! தலாக்! தலாக்!


"திருமணம் என்பது சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்" என்றான் மேலை நாட்டு அறிஞன் ஒருவன்.

அந்தக் கட்டுக்கோப்பு சிதைந்து வருவது குறித்து நாம் கவலைப் படுகிறோம். சிதைந்து வரும் கட்டுக் கோப்பு மேலும் சிதையாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்து உரிய மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

அண்மைக் காலமாக அதிரையில் அதிகரித்து வரும் மணவிலக்குகள், பிரிந்து சென்ற முன்னாள் தம்பதியர் உள்பட யாருக்குமே மகிழ்ச்சியைத் தந்திருக்காது.

"அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியது தலாக்கை விட வேறு எதுவும் இல்லை" என்ற கருத்துடைய நபிமொழியை நாம் அறிந்திருப்போம்.

20,25 ஆண்டுகளுக்கு முன்னர் தலாக் என்ற சொல்லே அருவருப்பான சொல்லாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்காலமாக "சங்கத்துல 10 கேஸ் பெண்டிங்ல இருக்கு" என்று நாம் கேள்விப்படும் அளவு தலாக் அதிகரித்துள்ளது.

இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? இதனைக் களைய என்ன செய்ய வேண்டும்? சற்றே அலசுவோம் வாருங்கள்.

பெண்ணுக்கு வீடு கொடுத்தல்

நமது அன்பிற்குரிய மனைவியை, நமது ஈரக்குலைகளைப் பெற்றெடுத்துத் தந்தவளை நமக்கு ஏற்படும் பயங்கர வெறுப்பின் காரணமாக தலாக் சொன்னால், அந்த வெறுப்பான சூழ்நிலையிலும் அவள் இத்தா இருக்கும் காலம் வரை அவளுக்கு இருப்பிடத்தை ஏற்பாடு செய்ய வேண்டியது நம் மீது கடமை என அல்லாஹ் கூறியிருக்க, நாமோ அன்பாக, பாசமாக இருக்கும் போதும் அவளுடைய வீட்டில்.... இல்லையில்லை அவளுடைய தகப்பனின் (இதுவும் தவறோ?) வீட்டில் ஒண்டிக் கொண்டுள்ளோம்.(இது பற்றி நீண்ட கட்டுரை எழுத வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக நினைத்துக் கொண்டே உள்ளேன். நேரம்தான் கிடைக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் இதுபற்றி பின்னர்.)

பெண் தன்னுடைய தாய் வீ்ட்டில் அல்லது தகப்பன் தந்த வீட்டில் அல்லது சகோதரன் தந்த வீட்டில் இருப்பது, அவளுக்குப் பொருளாதார ரீதியிலான பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருகிறது. இது நல்லதுதானே என்று எண்ணலாம். ஆனால் இதன் தொடர்ச்சியாய் நடைபெறும் நிகழ்வுகள் தலாக்கிற்கு வழி வகுக்கின்றன. மாமியார் தரும் ஆலோசனைகளை மருமகள் ஏற்றுக் கொள்ளத் தயாரானாலும் அவளது உடன் பிறந்தோர் அல்லது அவளது பெற்றோர் உசுப்பேற்றி விடுதல் நாம் அறிந்த ஒன்றே. இது பகையாய் மாறி இறுதியில் தலாக்கில் சென்று முடிகிறது.

பெண்ணுக்கு வீடு கொடுத்தல் என்ற வழக்கத்தால் மாமியார் - மருமகள், கணவன் - மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படுவது தாமதித்து அது தலாக் ஏற்பட வழி வகுக்கிறது என்பது ஒரு புறம். மற்றொரு புறம் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நாளுக்குள் மாமனார் அல்லது மைத்துனர் வீடு கட்டித் தரவில்லை போன்ற காரணங்களாலும் தலாக் நடைபெறுகிறது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் இணையம்

இன்றைய சமுதாயத்தின், குறிப்பாக இளைய சமுதாயத்தின் எண்ணச் சுழற்சியால் அவர்களது எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் இன்றைய மக்களின் வாழ்க்கை முறையைப் பாதிக்கும் முக்கியக் கூறுகளாக உள்ளன. அவற்றில் காட்டப்படும் நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத வேற்று கலாச்சாரக் காட்சிகளை தொடர்ந்து பார்ப்பதன் மூலம், அக்காட்சிகளுக்குப் பழகத் தொடங்கி, இறுதியில் அக்காட்சிகள் தன்னுடைய வாழ்வில் நடைபெறவில்லையே என்று எண்ணத் தொடங்குகின்றனர்.

திரைப்படங்களில் அழகுமிக்க நங்கையாகக் காண்பிக்கப்படும் நடிகைகளை ஆதர்ச நாயகிகளாக எண்ணிக் கொள்கின்றனர். இயற்கைக்கு மாற்றமாய் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காதல் காட்சிகளை உண்மை என நம்பி, தம்முடைய வாழ்க்கையில் அத்தகைய அனுபவங்கள் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. மனதில் ஏற்பட்ட இந்த ஏமாற்றத்தின் விளைவாய் சின்னஞ்சிறு ஊடல்கள் கூட பெரிதாக உருவெடுத்து தலாக்கிற்கு வழி வகுக்கிறது.

தொலைத் தொடர்பு

20, 25 ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் வெளிநாடு என்றில்லாமல் சென்னையில் இருப்பவர்கள் கூட தங்கள் குடும்பத்தாருடன், மனைவியுடன் கடிதங்கள் மூலமே தொடர்பு கொள்வர். கோபமோ, மகிழ்ச்சியோ.... அதனை வெளிப்படுத்துவது நம்முடைய கடிதங்கள்தான். மனைவிக்கு / நண்பனுக்கு / பெற்றோருக்கு கடிதம் எழுதுவதற்காகவே வேலைக்கு விடுப்பு எடுத்தவர்கள் பற்றியும் நகைச்சுவையாக நான் கேள்விப்பட்டதுண்டு.

உலகமயமாக்கலின் பக்க விளைவுகள் அதிரை வரை எட்டியிருப்பதால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு மொபைல் போன்கள் என்ற நிலை. (எனக்குத் தெரிந்து ஒரு நபரைத் தவிர) கடிதம் எழுதுவது முழுமையாக மறைந்துவிட்டது. மகிழ்ச்சியோ... கோபமோ... உடனே எண்களைச் சுழற்றி, மனைவியைப் பாராட்டி அல்லது திட்டிவிட்டால்தான் நம் மனம் ஆறுதல் அடைகிறது. இது மணமுறிவை ஏற்படுத்தும் கருவியாக இன்று மாறியுள்ளது வேதனைப்பட வேண்டிய ஒன்று.

கடிதம் எழுதுபவர்கள் இரண்டு பத்தி எழுதிவிட்டு மூன்றாவது பத்தியை எழுதும் முன் இதற்கு முன் என்ன எழுதியிருக்கிறோம் என்று மீண்டும் வாசித்துவிட்டு மூன்றாவது பத்தியை எழுதுவார்கள். எழுதியவற்றை அடித்துவிட்டு, புதிததாக எழுதி.... பின்னர் அதனையும் திருத்தி ஒருவாறாக போஸ்ட் செய்யலாம் என்று நினைக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை அல்லது அதற்கும் மேல் வாசித்துவிட்டு அனுப்புவார்கள். சிலபோது கோபம் தணிந்திருக்கும். எனவே, எழுதிய கடிதத்தைக் கிழித்துவிட்டு, புதிதாக எழுதி அனுப்புவார்கள்.

ஆனால் இன்றோ நிலைமை அவ்வாறில்லை. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்றொரு பழமொழி நாம் அறிந்திருப்போம். அப்படி நம் புத்தி மட்டாக இருக்கும் நிலையில் தொலைபேசி மூலம் பேசி, எதிர் முனையில் உள்ள மனைவியின் புத்தியையும் மட்டுப்படுத்தி, இறுதியில் தலாக் வரை சென்றுவிடுகிறது.

என்னதான் தீர்வு?

1. பெண்ணுக்கு வீடு கொடுத்தல் என்ற இறைக்கட்டளைக்கு மாற்றமான வழக்கத்தை மாற்ற முயல வேண்டும்.

2. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் காண்பவை நிஜம் அல்ல என்று நம் இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும். அவ்வாறு உணரும் வயது அவர்களுக்கு வரும் வரை தொலைக்காட்சி மற்றும் இணையத் தொடர்பை அவர்கள் கையாள அனுமதிக்கக் கூடாது.

3. கோபமான நேரங்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.


இதனைவிட மிக முக்கியமான ஒன்று உள்ளது. கவுன்சிலிங்!

ஆம். புதிததாகத் திருமணம் ஆன தம்பதிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்வது. திருமணமான புதிதில் ஏற்படும் பிணக்குகள், இல்லறத்தில் ஏற்படும் தொய்வுகள் போன்றவை குறித்து வயதானவர்கள் இளைஞர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். "இப்படி பலருக்கும் ஏற்படுவதுண்டு. உனக்கும் ஏற்படக் கூடும்" என்று அவனை மனதளவில் தயார்படுத்திவிட்டால், பின்னர் தொய்வுகள், பிணக்குகள் அவர்களை ஒன்றும் செய்துவிடாது.

என்னுடைய தந்தை முஹம்மது அலிய் ஆலிம் மற்றும் அப்துல் காதிர் ஆலிம் போன்றோர் இவ்வாறு செய்வார்கள் என்று என் நண்பர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

இத்தகைய கவுன்சிலிங் அண்மைக்காலமாக நடைபெறுவதாக எனக்குத் தெரியவில்லை. நடைபெறவில்லை எனில், இதற்கான கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். சிறு கூட்டமாகவோ அல்லது தனித்தனியாகவோ. மஹல்லா சங்கங்களின் சார்பிலும் இத்தகைய கவுன்சிலிங்குகள் நடத்தப்படலாம்.

ஆண்களைப் போன்றே, பெண்களுக்கும் இத்தகைய கவுன்சிலிங்குகள் நடத்தப்பட வேண்டும்.

சகோதரர்கள் தங்கள் கருத்துகளை அறியத் தாருங்கள். ஊரில் இருக்கும் பெரியவர்கள் குறிப்பாக அஹ்மது மாமா போன்றவர்கள் இதற்காக முயல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஆக்கம்:அபூசுஹைமா-குவைத்

Sunday, January 16, 2011

அதிரையில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு

  • அதிரையில் கடந்த சில நாட்களாக மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்கள் நமதூர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். நேற்று மாலை இரண்டாம் நாள் நிகழ்ச்சி தொடங்கின.   
  • அதில் தலைமை உரை ஆற்றிய தமிழ் மாமணி அல்ஹாஜ் புலவர் அஹ்மத் பஷீர் அவர்கள் நமதூரின் முன்னோர்களின் கல்வி அறிவும் அவர்களின் வாழ்கை வரலாற்றையும் நம் கண் முன் நிறுத்தினார்.  
  • அடுத்து  இமாம் ஷாபியின் முதல்வர் பரகத் சார் அவர்கள் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்கள். அவர்கள் கல்வியின் அவசியத்தையும் மாணவர்களின் அலட்சிய போக்கையும் விரிவாக விளக்கினார்கள். பெண் கல்வியின் அவசியத்தையும் கூறினார்கள். அதன் பிறகு மக்ரிப் தொழுகைக்கு பிறகு இரண்டாம் அமர்வு தொடங்கியது. 
  • அதன் பிறகு பேராசிரியர் அன்வர் அவர்கள் மாணவர்கள் எத்தகைய   சவால்களையும் எதிர்த்து சமுதாயத்திற்கு பயனுள்ள கல்வியாளர்களாக உருவாக வேண்டும் என கூறினார்.
  • அதன் பிறகு சுவாமி மலையிலிருந்து வந்த சகோதரி உமர்கனி   அவர்கள் தனக்கு உடல் குறை இருந்தாலும் சாதிக்க முடியும் என்ற கொள்கையுடன் தந்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.பெண்களுக்கும் கல்வி அவசியம் என தனது உரில் கூறினார். 
  • அதன் பிறகு எழுச்சி உரை ஆற்ற வந்த சகோரர் சி.எம்.என்.சலீம்   150 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்களின் நிலையும் இப்போதொதுள்ள நிலையையும் விரிவாக விளக்கினார்.மாணவர்களுக்கு வழங்க படும் உணவு முறைகளில் மாற்றம் தேவை என பெற்றோர்களிடம் கேட்டுகொண்டார். அதிரை கல்வி நிறுவங்களில் இஸ்லாமிய முறையில் கல்வி கற்பித்தல் பணி நடைபெறு வதில்லை என வருந்தினார். விரைவில் நமதூரில் இஸ்லாமிய அடிப்படையுடன் கல்வி வழங்க வேண்டும் என நமதூர் கல்வி நிறுவனங்களை வலியுறித்தினார். நமதூரில் பெண்களுக்கு காலையில் உலக கல்வியும் மாலையில் மார்க்க கல்வியுடன் கூடிய கல்லூரி தொடங்க பட வேண்டும் என கேட்டுகொண்டார். இறுதியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில்களை வழங்கினார்.       

இறுதியில்  தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன
  • விரைவில் அதிரை இஸ்லாமிக் மிசன் மூலம் மாணவர்களுக்கான இயக்கம்.
  • பொது தேர்வுகளில் தவறிய மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி. 
  • ஊருக்கு வெளியே உள்ள நூலகத்தை ஊருக்குள் அமைக்க வேண்டும் 
  •  மாநாட்டில் கொடுத்த விண்ணப்பதை பூர்த்தி செய்து தந்தவர்களின் பட்டியலை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய படும்.  
  • இந்த விழிப்புணர்வு மாநாடு போல் தொடர்ந்து விழிப்புணர்வு செய்ய படும்.          

விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு நிகழ்வில் நமதூர் சகோதரர்

உலகின் முதல் பத்து இணையதளங்களில் ஒன்றாய் திகழும் விக்கிப்பீடியா தொடங்கப்பெற்று 10 ஆண்டுகள் ஆனதையொட்டி உலகம் முழுவதும் நேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியா முழுதும் மும்பாய், பெங்களூர், தில்லி, சென்னை எனப் பல்வேறு நகரங்களிலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சென்னையில் நிகழ்ச்சிக்கு இந்தியாவின் முன்னணி கல்வி நிலையங்களில் ஓன்றாகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் படித்த கல்லூரியுமான சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (Madras Institute of Technology) விக்கிப்பீடியர்கள் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் நமதூரைச் சேர்ந்த விக்கிப்பீடியர் மாகிரும் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். சுமார் 100 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சு ஸ்கைப் வழியாக மாகிருடனும் மற்ற விக்கியர்களுடனும் உரையாடினார். அதில் தமிழ் விக்கிப்பீடியா புத்தகத்தை ஜிம்மிவேல்சுக்கு மாகிர் அறிமுகம் செய்துவைத்தார்.

இந்நிகழ்விற்கு ஜிம்மிவேல்சு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

முன்னதாக கிழக்குப் பதிப்பக உரிமையாளர் திரு பத்ரி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா புத்தகத்தை பிரதியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.


நமதூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற்ற அதேவேளையில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனத்தில் அறிவுசார்ந்த கலைக்களஞ்சிய நிகழ்ச்சியில் நமதூர் சகோதரர் பங்கு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவலுக்கு

வாருங்கள் கரம் கோர்ப்போம்...

அன்பிற்கினிய அதிரையின் சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த இரண்டு நாட்களாக கல்வி விழிப்புணர்வு மாநாடு மிக சீரும் சிறப்போடும் நடந்தேரியது...அல்ஹம்துலில்லாஹ் . இமாநாட்டின் வாயிலாக சொல்லப்பட்ட விளக்கங்கள் அறிவுரைகளை ஏற்று நாமும் நமது எதிர்க்கால சந்ததியினர் சிகரம் தொடுவோம் என நம்பிக்கை எழுகிறது.

இது போன்று இம்மாநாட்டின் வாயிலாக வைக்கப்பட்ட தீர்மானங்களை செயல்வடிவம் கொடுத்து செயாலார்றினால் இனிவரும் மாணவ செல்வங்களுக்கு வாய்ப்பாக அமையும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை இன்ஷா அல்லாஹ் .

இம்மாநாட்டில் எழுச்சி பேருறையாற்றிய சகோ சி எம் என் சலீம் அவர்களின் உரையில் நமதூரின் முக்கிய நபர்களின் வளர்ச்சியையும் அவர்கள் கண்டு வரும் வெற்றியையும் சொல்லிய வண்ணம் அந்த வெற்றியை அடைய அவர்கள் மேற்கொண்ட வழிகளையும் மிகவும் எளிமையாக சாமானியருக்கும் புரியும் வண்ணம் எடுத்துவைத்த விதம், உணவு முறை , கல்வி ,மார்க்கம் என அடுக்கடுக்காக நாமே சிந்திக்காத விஷயங்களையும் சீரிய முறையில் நமது சிந்தைக்கு முடுக்கியுள்ளார் .அவர்களுக்கு அல்லாஹ் ஆயுளை நீடித்து வைப்பானாக .

அடுத்து இம்மாநாட்டை முதல் அடி எடுத்துவைத்த நமது அதிரை கல்வி அறக்கட்டளையை இன்னும் நல்ல முறையில் இது போன்று மாநாடுகள் மற்றும் கல்விக்கு அடித்தளமிடும் நிகழ்ச்சிகளுக்கு தங்களை முழு முயற்சியுடன் ஈ டு படுத்தி கொள்வீர்கள் இதற்க்கான நற்கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்கிட ஏகனிடம் பிராத்திக்கிறோம் .

இம்மாநாட்டை நேரடி ஒளிப்பரப்பின் மூலம் அயல்நாடுகளில் வசிக்கும் அதிரைவாசிகளும் அவர்களுடன் சேர்ந்து பிற ஊர் சகோதரர்களும் இம்மாநாட்டினை காண ஏற்பாடுகளை மிக அழகான முறையில் துல்லிய படபிடிப்புடன் நேரலை செய்த அதிரைநிருபர்க்கும் இதை மற்ற வலைபூக்கள் மூலம் பாரெங்கும் பார்த்திட வைத்த பெருமை அதிரை நிருபரையே சாரும்...

நமதூரில் இன்றுவரை எத்தனையோ வலைபூக்கள் அன்றாடம் மலர்ந்து வருவதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி காரணம் நமதூரில் இவ்வளவு திறமையானவர்கள் இருந்து கரம் கோர்க்காமல் ஆளுக்கு ஒருவழியில் நின்று கோஷம் போடுவது போன்றதாகும் இது யாருடையகாதுக்கும் எட்டாமல் போயி விடுகிறது என்பது கசப்பான உண்மை.

உதாரணமாக இன்று நிஜ சாட்சியாக நிற்கும் சன் குழுமம் எத்தனை மீடியா உள்ளதோ அத்தனையையும் தனது கட்டுபாட்டில் வைத்து வெற்றி மீது வெற்றிவாகை சூடி ஒரு உருப்படாத விஷயத்தை கூட உலகறிய செய்து வருகின்றனர் .காரணம் சன் குழுமத்தில் அத்தனை மீடியாவும் ஒரே குடையின் கீழ் .
எனவே அன்பு சகோதரர்களே வலைபூ நிர்வாகிகளே..நமக்குள் முதலில் ஒற்றுமையை உருவாக்குவோம் இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் சமூதாய சிந்தையை தூண்டும் நிகழ்ச்சிகளுக்கு கரம் கோர்த்து செயல் படுவோம் ஊரறிந்த நம்மை உலகரியச்செய்வோம்...

US யாத்ரா


அமெரிக்க விசா பெறுவது மட்டும்மல்லாது புறப்படும்போது பாபுல் ஜன்னா-வில் நுழைய அனுமதிப்பு போலத்தான் வந்திறகும் போதும் சிராதல் முஸ்தகீம் மாதிரித்தான் கேள்விக்கான பதிலைக் கூறிவிட்டு விறு விருயென்று வெளியேரிவிடனும்.என் நன்பன் கூரியிறிந்த அட்வைஸ் எனக்கு ஞாபகம் வந்தது உண்மைவில் அமெரிக்கனுக்கு அதிகம் பேசக்கூடாது .கேட்ட கேள்விக்கு மாத்திரம் பதில் UK  காரனுக்கு அப்படி இல்லை. அவர்கள் பேச்ச கொடுத்து கோண்டேயிறிப்பார் பேசும் சுதந்திரம் நமக்கு நல்ல முறையில் தந்து செய்தியை வெளிக் கொணர்வர். இவர்கள் body language - ஐ கவனிக்கின்றனர். ஆஃபீஸரிடம் பாஸ்போர்ட் டிக்கட் யாவும் கொடுத்தாகிவிட்டது .போட்டோ,கை ரேகை எல்லாம் எடுத்தாகி விட்டதும் கேள்வி கணக்கு (முன்கர்/நக்கிர்) ! இதற்கு முன் இங்கு வந்திருகிறிரா? எம் பதில் : ஆம்!   அடுத்த கேள்வி :இம்முறை இங்கு நெடுநால் தங்கு(விடு)வீரா...?பதில் : வரும் 17ந் திகதி எனக்கு துபையில் கருத்தரங்கு உள்ளது.! நீங்கள் இஸ்லாமியர் மேலும் சவூதியாவில் வசிப்பவர் என நம்புகிறேன் ?  பதில்:ஒரு புன்னகை (A.R.ரஹ்மான் ஸ்டைளில் )  பெருமையுடன்!   தன் இருக்கை விட்டு எழுந்து அவரை பின் தொடரச் சொல்லிவிட்டு எமது கடவுச் சீட்டு மற்றும் அனைத்தையும் பிரத்யேக அறையில் விசாரணை கவுன்டரில் பெரிய அதிகரிவிடம் கொடுத்துவிட்டு காத்திருக்க உத்தரவிட்டுச் சென்றார் . எனக்கு முன்னரே சில பங்களதேஷ்,அல்ஜிரியா குடும்பங்கள் மண்ட காஞ்சி உட்கார்ந்திருந்திருதனர். நாளை மறுநாள் செப் 11 தேதி வேற ? நான் பேயனாட்டம் 'தேமே 'என்று அமர்ந்த்திருந்தேன். அறையைச்சுற்றி கண்கள் கண்காணித்துக் கொண்டிருந்தன.
<br/><a href="http://oi53.tinypic.com/358dh00.jpg" target="_blank">View Raw Image</a>
ஐந்தே நிமிடத்தில் அறே அடி உயரத்தில் காவலர் சீறுடை அணிந்த ஒரு அமிதாப் பச்சினி 'Mr. ஆ ஹ்...மாட் 'என கூவினாள், "எஸ் மேம்", எனவும் Welcome to us எனக் கூறி FI LE ஐதந்தது LI FE ஐ பெற்றது போலாகியது, ஒரு வழியாக விமானத்தளத்திளிருந்த்து பல யோசனையோடு வெளி வர வாவ்.... மாப்ளே!" என வாஞ்சையோடு கபில்தேவ் கெட்டப்பில் சற்று எடுப்பா மாட்டுப்பல் மகராசனா எமது அன்பு நண்பனே நஜூம் 'சிங்கம்' மாதிரி எதிரில் நின்றார் . அந்த சந்தோஷ நிமிடம் அலாதி இன்பம் .லக்கேஜிகளை உருட்டிக் கொண்டே குசலம் விசாரித்தலோடு காரில் ஏறி விமானத்தளத்தை விட்டு வெளியே வந்தோம். அந்த குறிகிய நேரப் பார்க்கிங்குக்கு 15 டாலராம்.?! அடேயப்பா.அநியாயம் என முழங்கினோம்.

<br/><a href="http://oi52.tinypic.com/2po9vt0.jpg" target="_blank">View Raw Image</a>
பிரதான நகரத்துக்கு சற்று முன்னர் இங்கேயே ஏதாவது ஒரு சிறிய ஹோட்டலில் ரூம் பார்த்துகொடேன்.. என நன்பனை வினவ இல்லையில்லை உன்னை சந்திக்க ஆவலுடன் நண்பர்கள் காத்திருக்கின்றனர் .' தாம் தூர இருந்தால் நீ இருக்கும் ஒரு சில நாட்களுக்கு தினம் வந்து-போக எங்களுக்கு சிரமப்படும்"என்றும் ரூம் விசயத்தை எங்களிடம் விட்டுவிடு.வெளியூர் சென்றுள்ளதாக கவலை கொண்டாயே அந்தஉறவினன் அவன் குடியிருப்புசாவியை உனக்காக தந்துசென்றுள்ளான்.என விளக்கினர்..நம் மக்கள் அருகருகே அநேகர் தங்கியுள்ள அச்ட்டோரியா பகுதி இல்லத்திற்கு சேரும் வரை ஜாம்பவான் ஜலால்பாயை,இன்முகம் இக்பால் ,மைத்துனன் ரஃபீக்,MU,யாகூப் ,சிராஜ்.புகாரி ,மாலிக் ,செய்யது போன்ற பால்ய சிநேகிதர்களை சந்தித்து இன்புறப்போகிறோம் என்று சத்தியமாகத்  தெரியாது .அன்று மாலை மஷூராவில் அமர்ந்தபோது விடிந்தால் பெருநாள். ஈதுத்தொழுகை இதுகாவில் ஹட்சன் ரிவர் பார்க்கில் ஏற்பாடு செய்துள்ளார்களாம்,தொழுகைக்கு அங்கேயே போய்விடுவோம் ,என முடிவு எடுக்கப்பட்டது.அடா..அடா.. அந்த அழகிய வைபவம் - அற்புத சுற்றுச்சூழல் -அருமை நண்பர்கள் ---வடிக்க வார்த்தைகள் தேட வேண்டும்.அதற்கு சற்று அவகாசம் வேண்டும்.!
   
பயணங்கள்  முடியவில்லை.
வாழ்க வளமுடன்.
--
ராஃபியா .

Thursday, January 13, 2011

இலவசமாய் எம்.பி.பி.எஸ். படிக்க, இறுதி வாய்ப்பு !

அகில இந்திய அளவில் மருத்துவக்கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு வருடம்தோறும் ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இது, இப்பொழுது பிரச்சினையாக உள்ள பொது நுழைவுத்தேர்வல்ல. அது வேறு, இது வேறு.


இந்தத் தேர்வை தடுக்கவோ, இதில் தமிழகம் இழக்கும் இடங்களை மீட்கவோ ஒருவருமில்லை. இந்தத் தேர்வின் மூலம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், பதினைந்து சதவிகித இடங்கள் நிரப்பபடுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் சுமாராக 280 இடங்கள், இந்தத் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்படுகிறது.

இதற்கான விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்துவிட்டது. இருந்த போதிலும் தாமதக் கட்டணத்துடன் வரும் 10/01/2011 முதல் 17/01/2011 வரை கூடுதாலாக ரூ. 500/- செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைப்பு இங்கே


"இதற்கெல்லாம் ஒரு செய்தியா?" என்று சிலருக்கு கேள்வி எழுவது இயற்கையே!

அவசியம்தான் என்பதற்கு என்னைச் சுற்றி நடந்த சில நிகழ்வுகள் ஆதாரமாய் உள்ளன. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2005-2006-ல் 'அமைதி விரும்பி' +2 படித்தபோது, எனக்கு இதைப் பற்றிய விபரம் தெரியவில்லை. அப்பொழுது, எனது நண்பர் சொன்னார் "அரசுக்கலூரியில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு வழியாக நிரப்படுகிறது. குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் கூட இந்தத் தேர்வை எழுதி இடம் பிடித்துவிடுகிறார்கள். அதைப்பற்றிய விபரமும், எந்தத் தேதியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்றவை எதுவும் தெரிய மாட்டேங்குது" என்றார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் அந்த நண்பரின் இரண்டு மகள்கள் அரசுக்கலூரியில் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தார்கள். அவரின் மூன்றாவது மகளை எம்.பி.பி.எஸ். சேர்க்கவேண்டும் என்று நினைப்பில்தான் என்னிடம் மேற்கண்டவாறு கூறினார். அவரும் விண்ணப்பிக்கவில்லை.

மற்றொரு செய்தி,மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் மூன்றாம் இடம் பிடித்த, எனது உறவினர் பெண் இந்தவருடம் +2 எழுதுகிறார்.அந்தப் பெண்ணுக்கோ, பெண்ணின் பெற்றோருக்கோ, இப்படி ஒரு நுழைவுத்தேர்வு நடப்பது தெரியவில்லை. ஆசிரியர்களும் வழிக்காட்டவில்லை. இந்த நுழைவுத்தேர்வு குறித்த விளம்பரங்கள் தமிழக பத்திரிக்கைகளில் வருவதில்லை.

இன்னும் கொடுமை என்னவென்றால் லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் தனியார்ப் பள்ளிகள், மாவட்ட 'பெயர் பெற்றப்பள்ளிகள்' இம்மாதிரி நுழைவுத் தேர்வு குறித்துக் கண்டுக்கொள்வதில்லை.மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமில்லை. மேலும், இந்தத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதும் கிடையாது.

தமிழகத்தில் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்தத் தேர்வை எழுதி பதினைந்து சதவிகித தமிழக ஒதுக்கீட்டில் சேர்ந்தால், எழுத முடியாதவர்களுக்கு (தேர்வு ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் எழுதுவது கடினம்) தமிழகத்தில் எண்பத்தைந்து சதவிகித இடத்தில் வழி விடலாமே!!

ஐ. ஏ. எஸ். தேர்வில் சாதனைப்புரியும் நாம், சரியான வழிக்காட்டுதல் இருந்தால், இந்தத் தேர்விலும் சாதனைப்புரிய முடியும்.இன்றே துவங்குவோம்!

உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வுக் குறித்து தெரிவிப்போம்!

நன்றி: பயனுள்ள தகவல்

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

அதிரையில் இன்ஷா அல்லாஹ் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களுக்கு நடைபெற உள்ளது. இதில் முற்றிலும் மாணவர்களுக்கு பயனுள்ள பல கருத்தரங்கங்கள், கண்காட்சி, சிறப்புரை, கலந்துரையாடல் போன்ற பல்வேறு நிகழ்சிகள் நடைபெற உள்ளது. இது நமதூர் மக்களுக்கு மட்டுமில்லாமல் உலகிலுள்ள அனைவரும் பயன் பெரும் நோக்கில் இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யபடுகிறது. முஸ்லிம்மலர்  இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பை காணலாம்.


இதில் நமதூர் மாணவர்களை கலந்துகொள்ள செய்தும் நாமும் கலந்து கொள்ள வேண்டும். .

இதன் நிகழ்ச்சி நிரல்களை காண click here

நேரடி ஒளிப்பரப்பை காண click here

கழிவறையை விட அசுத்தம்; நோய்களை பரப்பும் ஏ.டி.எம்.எந்திரங்கள்!!!


இங்கிலாந்து நாட்டில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் சுத்தமாக இருக்கிறதா? என சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினார்கள். அதில் ஏ.டி.எம். எந்திரங்கள் கழிவறையை விட அசுத்தமாக இருப்பது தெரிய வந்தது.

கழிவறைகளில் இருக்கும் அதே பேக்டீரியாக்கள் ஏ.டி.எம். எந்திரங்களின் பட்டன்களிலும் இருந்தது தெரிய வந்தது. அங்கு ஒவ்வொரு எந்திரத்தையும் தினமும் ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பலர் சுத்தமில்லாத கைகளால் ஏ.டி.எம். பட்டன்களை அழுத்துகின்றனர்.

இதனால் பேக்டீரியாக்கள் பட்டன்களில் தேங்கி அவை பெருகி இருந்தன. எனவே ஏ.டி.எம். எந்திரங்களில் நோய் பரவுவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரத்துக்கு செல்லும் போது கையுரை போன்றவற்றை அணிந்து செல்லும்படி அறிவுறுத்தி உள்ளது. இதே போல பொது தொலைபேசிகளும் நோய் பரப்பும் கூடங்களாக இருப்பதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

நன்றி. மாலை மலர்.

Wednesday, January 12, 2011

வேண்டாம் அரைகுறை ஆடை!

சுவிஸ் வங்கி அதிரடி!!!
மீபத்தில் சுவிஸ் வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு Dress Code என்று சொல்லப்படும் ஆடை ஒழுங்குமுறைகள் குறித்த 43 பக்க விதிகளை வெளியிட்டுள்ளது. இதன் படி தான் தங்களது ஆடைகளை ஆண் பெண் உழியர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதில் பெண்கள் எடுப்பாக காட்டும் வண்ணம் இருக்கமான ஆடைகளை அணியக்கூடாது ,

உள்ளாடைகள் வெளியே தெரியும் வண்ணம் ஆடைகள் இருக்கக் கூடாது, பெண்கள் லூஸான ஆடைகள் தான் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மொத்தத்தில் இருபாலார் ஒருவர் மற்றவரை ஈர்க்கும் வண்ணம் அங்க அவயங்கள் வெளியே தெரியும் அளவிற்கு ஆடைகள் அணியக் கூடாது என்பது தான் அந்த உத்தரவின் சாராம்சம்.

அறைகுறை ஆடை கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் சர்வசாதாரணமாகிவிட்ட இந்த நிலையில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்போது உணர்ந்து கொண்ட நிறுவனங்களுக்கு இப்போழுது தான் புத்தி வந்துள்ளது.

இதை தான் இஸ்லாம் அன்றிலிருந்து இன்று வரை போதிக்கின்றது.

“தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். எவ்வளவோ ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 4316)

இஸ்லாம் இதை கூறினால் பெண் அடிமைத் தனம் என்று கூறி மேற்கத்திய நாடுகளை உதாரணம் காட்டியவர்கள் இப்போழுது என்ன சொல்லப் போகின்றார்கள் ?

சுவிஸ் வங்கி செய்தது பெண் அடிமைத்தனமா ? அல்லது இருபாலாரையும் பாலுணர்வு ரீதியான தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையா ? அறிவும் சமூக அக்கரையும் உள்ள யாரும் பெண் அடிமைத்தனம் என்று கூறமாட்டார்கள்.!
நன்றி Muthupet Force

Tuesday, January 11, 2011

கோ(கு)டிக்கு அடிமையான தமிழகம்

வாக்குகளை வளைத்துப்போட வண்ணத் தொலைக்காட்சிப்  பெட்டி இலவசம், 'ஆட்சியாளர்களின் இருப்பை' கண்டுகொள்ளாமல் இருக்க இரண்டு ஏக்கர் நிலம் இலவசம், மின்சாரமின்றி எரியும் மக்களை கட்டுப்படுத்த எரிவாயு அடுப்பு இலவசம், இவ்வாறாக பல்வேறு பெயர்களில் தொடரும் இலவசங்கள் வழங்க அரசின் கஜானாவை நிரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பது 'டாஸ்மாக்' எனப்படும் அரசின் மது விற்பனை நிலையங்கள் தான் என்றால் அது மிகையல்ல.


'டாஸ்மாக்' என்ற பெயரில் அரசே என்றைக்கு மது விற்பனையை தொடங்கியதோ அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையின் இலக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2010  ம் ஆண்டு அரசு நிர்ணயித்த மது விற்பனை இலக்கான  15 ஆயிரத்து 981  கோடியையும் தாண்டி, டிச.,25 வரை 359 நாட்களுக்கு தமிழக "டாஸ்மாக்' கில்16 ஆயிரத்து 445 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது சராசரியாக தினசரி 45. 80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இரண்டாயிரத்து 464 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 31ம் தேதி வரை மேலும் ஆறு நாட்களுக்கு கணக்கிட்டால் 274.80 கோடி விற்பனையாகும். மொத்தம் 16 ஆயிரத்து 719.80 கோடிக்கு விற்பனையாகும் என டாஸ்மாக் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. இவ்வாறு இலக்கு வைத்து மக்களை குடிகாரர்களாக ஆக்கும் அரசு ஒருபுறம் என்றால், பண்டிகை காலங்களில் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்று துணிகள்- அழகு சாதனப் பொருட்கள்- வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்குவார்களே அது போன்று, திருப்பூரில் உள்ள பார் ஒன்றில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த,  "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என நோட்டீஸ் விநியோகித்துள்ளார்கள்.

வெங்காய விலை விண்ணை முட்டிக்கொண்டிருக்கையில், மக்களைக்  கெடுக்கும் மதுபானம் இனாமாக கிடைப்பதில் 'குடிமக்கள்' வேண்டுமானால் மகிழலாம். ஆனால் சாமான்யர்கள் அரசின் மீது சரி கோபத்தில் உள்ளதை உணர்ந்து விரைவில் பூரண மதுவிலக்கை கொண்டுவர கருணாநிதி முயற்சிக்க வேண்டும். இல்லையேல் ஆறாவது முறை முதல்வராகும் எண்ணம்  ஆற்றில் கரைத்த உப்பாக ஆகிவிடும் என்பதை உணர்ந்துகொண்டால் சரி!
'பகரா' அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள். - நூல்: ஸஹீஹ் புகாரி - 459; அறிவிப்பாளர் ஆயிஷா(ரலி).
வேதனையான செய்தி என்னவென்றால் நம் ஊர் (அதிரை) இளைஞர்களும் இப்போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்பதுதான், மஹ்ரிப் - இஷா இடைப்பட்ட நேரத்தில்  திடலில் அருந்துவதாக காதில் விழுந்த செய்தி, இது மெய்யா, பொய்யா என்று அறியவில்லை, நம் ஊர் மற்ற நண்பர்கள் இதை கவனத்தில் கொண்டு அதை தடுக்க முன்வர வேண்டும் 

நம் சாமான்யர்கள் வாழ்வை டாஸ் போல் சூழலச்செய்யும் டாஸ்மாக்கை ஒழிக்க முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ்.   

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.


இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம். 


ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ....

1.சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?

நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.


2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?


குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.

3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?

குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.

4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?

காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.

5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?

நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது. 

6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?

இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.

7. போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?

தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?
சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்
நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)
தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.

கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.

உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,
தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,
தரமணி, சென்னை-600113
போன்:044-22541373 

Sunday, January 9, 2011

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்

IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.


இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா? என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது. இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும். காவல் துறையாலும், அரசு அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் சமூக அக்கரை உள்ள பட்டதாரி முஸ்லீம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்

இந்த தேர்வை பற்றிய முழு விபரம்.

யார் விண்ணப்பிக்க முடியும்?

1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். தொலை தூர கல்வியில் படித்துஇருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
2. 21-வயதிற்க்கு மேல் இருக்க வேண்டும். 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
3. காவல் துறை பணிகளில் சேர உடல் தகுதி Physical fitness இருக்க வேண்டும்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : ஜனவரி 28


விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் : அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள், சென்னையில் உள்ள TNPSC அலுவலகம். இந்த www.tnpsc.gov.in இணைய தளத்திற்க்கு சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்க்லாம். விண்ணப்பத்தின் விலை ரூ.30.


தேர்வு கட்டணம் : முதல் கட்ட தேர்வு ரூ.75. இரண்டாம் கட்ட தேர்வு ரூ.125


தேர்வு நடக்கும் இடங்கள் : அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகள் நடத்தபடுகின்றன


சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்:

1. 10 - ஆம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்ட படிப்பிற்கான சான்றிதழ். ஒரிஜினல் சர்டிபிகேட்டை சமர்பிக்க வேண்டாம், நகலை அட்டஸ்டேஷன் செய்து அனுப்பினால் போதும்.
2. உடல் தகுதி Physical fitness சான்றிதழ்
3. சாதி சான்றிதழ்


பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Tamil Nadu Public Service Commission, Commercial Taxes Annexe Building, No.1 Greams Road, Chennai – 600 006


தேர்வை பற்றி

இந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடக்கும். முதல் கட்ட தேர்வு மற்றும் இரண்டாம் கட்ட தேர்வு எழுத்து தேர்வாகும். இதில் தேரியவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


இந்த தேர்வு சம்மந்தமான முழு தகவலும் www.tnpsc.gov.in இந்த இணைய தளத்தில் உள்ளது.

Saturday, January 8, 2011

அறிவாதார மந்தநிலை



1970 - 1979
= சிலோன் (இலங்கை) பர்மா, மலேசியா, மாலத்தீவுகள்


1980 - 1989 = வளைகுடா நாடுகள், சிங்கப்பூர்

1990 - 1999 = அமெரிக்கா

2000 - 2007 = இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான்...

2008 - 2010 = ???

ஏறத்தாழ 30 வருடங்களாகத் தொடர்ந்த திரை கடல் ஓடி திரவியம் தேடும் பயணங்கள் கடந்த இரு வருடங்களில் வெகுவாகக் குறைந்ததற்கு சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமென்று சொல்லப்பட்டாலும், உண்மையில் நம்மவர்களின் 'அறிவாதார' மந்தநிலையும் ஒரு காரணம்.

ஆங்கிலேயரை விரட்டும் உத்தியாக அவர்களின் மொழியைப் புறக்கணிப்பபதும் தேசபக்தி என்று நம்பியதால், சர்வதேச மனிதச் சந்தையில் பின்தங்கியவர்களின் சந்ததியினர், ஹிந்தி எதிர்ப்பு என்ற திராவிட மாயையில் சிக்குண்டு தேசிய மனித வளத்திலும் பின் தங்கினோம்.

***********
பயனுள்ள படிப்புகள் குறித்து நம்மவர்களிடம் தெளிவான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பி.காம் படித்தவர்களிடம், பேங்கில் வட்டிக் கணக்கு எழுதனும் என்ற எண்ணத்தை விதைத்தனர். அதேபோல் வக்கீல் படித்தால் பொய் சொல்ல வேண்டும் என்றும் சொல்வர். B.Com படித்தவர் எல்லாம் பேங்கில் வட்டிக்கணக்கு எழுதவும் இல்லை;வக்கீல் படித்தவர்கள் எல்லாம் பொய் சொல்லிப் பிழைக்கவுமில்லை என்பதற்கு மாண்புமிகு வக்கீல் அப்துல் ரஜாக் காக்கா (முன்னாள் வக்ஃப் வாரிய தலைவர்) முதல் சகோ.அப்துல் முனாப் (அதிரை பைத்துல்மால் செயலர்) வரை நம் கண்முன் எத்தனையோ நிகழ்கால சாட்சிகள் உள்ளனர்.

பள்ளிப்படிப்பில் SSLC என்பது வாழ்க்கையின் முக்கிய கட்டம்.குறைந்த பட்சம் SSLC தேரியவர்களே வாழ்க்கையிலும் தேரியுள்ளனர் என்பது என் கணிப்பு. (சில விதிவிலக்குகள் தவிர) SSLC தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே +1 இல் எந்த குரூப் எடுப்பது என்ற வாழ்க்கையின் அதிமுக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் காலகட்டம் அது.

+2 இல் நல்ல மதிப்பெண் பெற்றவர்வர்கள் வசதிக்கேற்ப டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆகலாம். சுமாரான மதிப்பெண்கள் பெற்று செல்வ வசதியிலும் பிந்தங்கியவர்களின் நிலைதான் கொஞ்சம் பரிதாபத்திற்குறியது. தெளிவான குறிக்கோளின்றி B.Sc., M.Sc., என்று படித்துவிட்டு மெடிக்கல்ஸ் ஷாப்பில் உட்கார்ந்திருக்கும் பலரைப் பார்க்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும். ஏனெனில் தற்போதைய காலகட்டத்தில் மருந்தாளுனர் (Pharmacist) ஆவதற்கு 10+2 வருடங்கள் படித்தாலே போதும்.

சில வருடங்களுக்கு முன்பு அபூதாபியிலிருந்து துபை வந்துகொண்டிருந்தபோது அருகிலிருந்த நுன்னுயிரியல் (மைக்ரோபயாலஜி) படித்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். வேலை நிமித்தம் நேர்முக அழைப்பிற்குச் சென்று வருவதாகச் சொன்னார்.வேலை, சம்பளம் இன்னபிற குறித்து விசாரித்தபோது மாதம் 1500 திர்ஹம் சம்பளம் என்றார்.(அப்போது கம்பெனி டிரைவர் வேலைக்கு சுமார் 2500 திர்ஹம் கிடைத்துக் கொண்டிருந்தது).

அவர் பேச்சிலிருந்து பூமிக்கடியில் உயிர்வாழும் மண்புழு, பூமியின் எந்த சீதோசன நிலையிலும் தாக்குப்பிடித்து வாழ்கிறது என்பதால், அதிலிருந்து நோய் எதிர்ப்புச் சக்திக்கான எதிர் உயிரியல் மருந்து குறித்த ஆராய்ச்சியை கல்லூரி ப்ராஜெக்ட்டில் தனிநபராகச் செய்திருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைதேன்.

படிப்பு முடிந்து தன்னுடைய எதிர் உயிரியல் மருந்து ஆய்வை சுயமாகவோ அல்லது ஸ்பான்சர்ஷிப் மூலமாகவோ மேம்படுத்தியிருந்தால் மருந்து நிறுவனங்கள் குறைந்தது அவருடையை ஆய்வை நல்ல விலைக்கு வாங்க முன்வந்திருக்கும்.(துபாய்க்கு விசிட்டிங்கில் வருவதற்கு ரூ.50,000-70,000 செலவு செய்திருந்தார்.)

இதையெல்லாம் தற்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் நம்மவர்களில் பலர் எவ்வித குறிக்கோளும் இல்லாமல் ஏதாவதொரு டிகிரி படித்துவிட்டால் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம்.இலட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோருக்கும் தம் பிள்ளைகள் படித்து முடித்துவிட்டு என்ன செய்வார் என்று யோசிப்பதில்லை என்பது கசப்பான உண்மை.

*******
எல்லாம் சரி, வாழ்க்கையில் முன்னேற குறிக்கோளுடனான கல்வி மட்டும் அவசியமில்லை
என்பதற்கும் நம்மிடையே பலர் உதாரணமாக இருக்கிறார்களே என்றும்கூட சிலர் கேட்கலாம். நான் அறிந்த பலர், என்னதான் லட்சம் கோடி என்று சம்பாதித்திருந்தாலும் அதற்காக இழந்தவைமுன் இவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்!

இன்று பொருளாதார ரீதியில் தன்னிறைவடைந்தவர்களிடம் அவர்களின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எதுவென்று கேட்டால் நிச்சயம் கல்வியின் அருமை பற்றியும் படிக்கச்சொல்லி குட்டிய, திட்டிய ஆசிரியர்களின் பெருமைபற்றியும் மணிக்கணக்கில் பேசுவர்.

***********
சரி, இப்படி ஆளாளுக்கு லெக்சர் எடுத்தால் மட்டும்போதுமா? முந்தைய தலைமுறையினர் இழந்த இழப்புகளை அடுத்த தலைமுறையும் இழக்க வேண்டுமா? என்னதான் தீர்வு என்றும் கேட்கலாம்.

வாழ்க்கையின் முக்கிய கட்டங்களான SSLC, +2 வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னரே என்ன படித்தால் எத்தகைய பயன்கள் என்ற நிகழ்கால கல்வி நிலவரங்களை சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் பிரபலங்களை சிறப்பு போதகராக (GUEST LECTURE) அழைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் இதுகுறித்த திட்டங்களையும் சான்றோர்கள் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பு: எந்தக் கல்வியுமே வீணல்ல என்று நம்புபவன் நான். மேற்சொன்ன உதாரணங்களில் யாரையும் குறைத்து மதிப்பிடும் நோக்கமில்லை.நமதூரில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டு வாரம் என்பதால் வாசகர்களின் கருத்துப்பரிமாற்றத்திற்காக எழுதியது.

Friday, January 7, 2011

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி அழைப்பிதழ்




இடம்: சாரா மண்டபம் (சேதுச் சாலை)
நாட்கள்: 2011 ஜனவரி 14 & 15 (வெள்ளி – சனி)
பயன் பெறுவோர்: 9th, 10th, 11th, 12th மற்றும் கல்லூரி மாணவர்கள்


பயிலரங்குகள் * கருத்தாய்வுகள் * கூட்டுக் காணொளி
இவற்றில் முனைப்புடன் பங்குபற்றும் மாணவர்களுக்குப் பரிசில்களும் அன்பளிப்புகளும் காத்திருக்கின்றன!. விரைந்து முன்பதிவு செய்யுங்கள் !!.
தொடர்புக்கு:
  • அப்துர்ரஹ்மான் – செல்: 9790485011
  • அப்துல்காதிர் – செல்: 9894667215
  • ஹஸ்ஸான் – செல்: 9840352822
முதல் நாள்:

14 – 01 – 2011 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள்:காலை ஒன்பது மணி: கல்விக் கண்காட்சி/ காலை பத்து மணி முதல் பன்னிரண்டு வரை பயிலரங்குகள்
டாக்டர் பேராசிரியர் ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"உனக்குள் உன்னைத் தேடு!"
(மாணவர்களுக்கான கல்வி ஊக்கப் பயிற்சி)

ஜுமுஆ தொழுகைக்கான இடைநிறுத்தம். (பகல் உணவு (முன்பதிவு செய்துகொண்ட மாணவர்களுக்கு மட்டும்)
மாலை நான்கு மணி முதல்

டாக்டர் பேராசிரியர் ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"அறிமுகமில்லாத அரிய படிப்புகள்"


(மஃரிப் தொழுகைக்கான இடைவேளை.)



"செய்தித்துறை (மீடியா) பற்றிய காணொளிப் பயிற்சி"
(வீடியோ கான்ஃபரன்ஸ்)
வழங்குபவர்: "யூனிட்டி மீடியா நியூஸ்.காம்" செய்தி ஆசிரியர்
தவ்லத்கான்

இஷாத் தொழுகையுடன், முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவு.....




இரண்டாம் நாள்
15 – 01 – 2011 சனிக்கிழமை நிகழ்ச்சிகள்:

மாலை நான்கு மணி.


தலைமை:
அதிரை அறிஞர், 'தமிழ்மாமணி', புலவர்,
அல்ஹாஜ் அஹ்மத் பஷீர் M.A., M.Ed.

கருத்துரை வழங்குவோர்:
பேராசிரியர் பரகத் M.A., M.Phil., PGDCA., PGDTE.
பேராசிரியர் அ.மு. அன்வர் M.A., M.Phil., B.Ed.

மஃரிபுத் தொழுகை இடைவேளை

சிறப்புச் சொற்பொழிவு:

C.M.N. சலீம் M.A.(Political Science)
சமூக நீதி அறக்கட்டளை நிறுவனர், சமூகமுரசு ஆசிரியர், கல்வி ஆலோசகர்.
தலைப்பு:
"இன்றைய கல்வி – ஓர் இஸ்லாமியப் பார்வை"


* மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமான மறுமொழிகள் வழங்கப்படும்.
* சிறந்தவை எனத் தேர்ந்தெடுக்கப்படுபவை நல்ல பரிசில்களைப் பெறும்.
இஷாத் தொழுகை / இரவுச் சிற்றுண்டி: (பதிவு பெற்ற மாணவர்களுக்கு மட்டும்.)


நன்றி.அதிரை போஸ்ட்