Monday, February 28, 2011

அதிரையிலிருந்து முஸ்லிம் எம்.எல்.ஏ சாத்தியமா?


"பட்டுக்கோட்டை தொகுதி வரலாறு" பதிவிலிருந்து கிடைத்த தகவல் மூலம் அதிராம்பட்டினம் தொகுதியை பிரித்து பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னணியில் நீண்டகால சதித்திட்டம் அல்லது நமது அரசியல் விழிப்புணர்வின்மை இருந்துள்ளது தெரியவருகிறது.

முந்தைய அதிராம்பட்டினம் தொகுதியில் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மதுக்கூர், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் முதலான ஊர்களும் இருந்துள்ளன. இவ்வூர்களிலுள்ள வாக்காளர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பது கவனிக்கத்தக்கது.

1967 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் முத்துப்பேட்டையை திருத்துறைப்பூண்டி தொகுதியுடனும்,புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களை பேராவூரணி தொகுதியுடனும் சேர்த்துவிட்டு அதிரை, மதுக்கூர் ஆகியவற்றை மட்டும் இணைத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் நிறைந்துள்ள தொகுதியில் எதிர் காலத்தில் முஸ்லிம்களே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற அரசியல் கட்சிகளின் நீண்டகால சூழ்ச்சி இதில் இருக்கக் கூடும்.

சட்டமன்ற தொகுதியாகும் பட்சத்தில் அதிரைக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். நகராட்சியானால் முனிசிபல் வரிகள் அதிகம் செலுத்த வேண்டும் என்பதோடு அதிரையின் கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் அதிரை தொகுதியை பட்டுக்கோட்டைக்கு விட்டுக் கொடுத்ததில் நமது முன்னோர்கள் கோட்டை விட்டுள்ளனர்.

சாதிய அடிப்படையில் கள்ளர், கோணார், செட்டியார், தேவர், தலித்துகள் நிறைந்த அதிராம்பட்டினம். தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்படும் வரை பிராமனர் அல்லது தேவர் இனத்தவரே நமது சட்டமன்ற பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். அதிரை முஸ்லிம்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இவ்விரு சாதிகளும் சிறுபான்மை எண்ணிக்கையிலேயே இருந்துள்ளனர்.

மேலும், 1952-62 தேர்தல்களில் அதிரை வாக்காளர்களே வெற்றியாளர்களைத் தீர்மானித்துள்ளனர் என்பதை கீழ்க்காணும் புள்ளிவிபரத்திலிருந்து அறியலாம்.

YEAR  WINNER   RUNNER   DIFF  DIFF %
1952     21,461       15,072     6,389  30%
1957     26,785       16,995     9,790  37%
1962     31,503       26,104     5,399  17%

அதாவது, சுமார் 5000 முதல் 10,000 வாக்காளர்களின் கூடுதல் ஆதரவைப் பெற்றவரே 1952-62 வரையிலான தேர்தல்களில் வென்றுள்ளார். இது நமதூர் வாக்காளர்களில் 50% க்கும் குறைவு. அதிரை முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத எந்தக் கட்சி வேட்பாளரும் அதிராம்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க முடியாத நிலையே இருந்து வந்துள்ளது.

எனினும், காங்கிரஸ், திமுக பிறகு அதிமுக ஆகிய கட்சிகளின் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களையே இதுவரை தேர்த்தெடுத்துள்ளோம்! முந்தைய அதிரை தொகுதியில்தான் இந்நிலை என்றாலும், பட்டுக்கோட்டை தொகுதி உருவான பின்னரும்கூட, சட்டமன்ற உறுப்பினரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்துள்ளனர். இதை கீழ்காணும் புள்ளிவிபரத்திலிருந்து அறிய முடிகிறது.

YEAR  WINNER   RUNNER   DIFF  DIFF %
1967     35,198       28,056     7,142  20%
1971     44,565       26,229   18,336  41%
1977     25,993       25,082        911  4%
1980     52,900       42,302   10,598  20%
1984     50,493       35,376   15,117  30%
1989     41,224       26,543   14,681  36%
1991     67,764       39,028   28,736  42%
1996     69,880       36,259   33,621  48%
2001     55,474       48,524     6,950  13%
2006     58,776       43,442   15,334  26%

காங்கிரஸ் பெருந்தலைவர்களில் ஒருவரான காமராஜருக்கும் சீனியரான  மர்ஹூம் அப்துல் அஜீஸ் காக்கா, மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக  இருந்த மர்ஹூம் M.M.S.அபுல்ஹசன் போன்ற அரசியல் பின்புலம் கொண்ட  பலர் இருந்தும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து கடந்த 60 ஆண்டுகளில் ஒரேயொரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கிடைக்காது இப்பகுதி மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற நிலையையே காட்டுகிறது.

ஆக்கம்: இப்னு நூர்

தொடர்புடைய சுட்டிகள்

2) http://adiraixpress.blogspot.com/2011/02/blog-post_20.html

19 ஆவது வார்டு மக்களின் கோரிக்கை

19 ஆவது வார்டு சிமன்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. அதற்க்கு முன்னால் இந்த கோரிக்கையை வழியுரித்தி இந்த மனு பேருராட்சி நிர்வாகத்திடம் கூடுக்கப்பட்டு இருக்கிறது இதை கவனதில் கொண்று நிரைவேற்றுவார்களா?
தகவல்
சகே.தஃபிக்
ஆலடித்தெரு

Sunday, February 27, 2011

காத்து கிடக்குது கம்பியூட்டர்...

சாயங்கால நேரம் காலாற நடந்தால் உடலுக்கு நல்லது என ஏதோ பத்திரிகையில் படித்ததுண்டு அதுபோல் விடுமுறையில் ஊர் வந்த நான் கடல் காத்து வாங்க காலாற நடந்து நமதூர் ரயில் நிலையம் சென்றோம் .

அப்படியே நைசா அங்க உள்ள அதிகாரிகள் கிட்ட செய்தியை போட்டுவாங்க எண்ணி என்ன சார் நம்ம ஊருக்கு எப்ப வரும் அகல ரயில் பாதை ன்னு கேட்டேன் அகல பாதையான்னு ஒரு மௌன சிரிப்புக்குபின் ஏதோ யோசித்த வாறு என்ன தம்ம்பி கேட்டிய ன்னு திருப்பி என்னிடம் கேட்டார் அதான் நம்மூருக்கு அகல ரயில் பாதை எப்போ வரும்ன்னு .... அட போங்கப்பா முன்பதிவுக்கு கம்பியூ ட்டர் வந்து கிட்ட தட்ட ஒரு வருஷமாகுது இத பத்தி யாருமே கண்டுக்களே அகல பாதைய பத்தி கேக்குறிய...

என்னது கம்பியூட்டர்ரா .....? ன்னு கேட்ட உடனே எனக்கு கடல் காத்திலும் குபுகுபு வென வேர்க்க தொடங்கிடுச்சி . மேலும் கூறிய அவர் உங்க ஊருக்கு அப்புறம் தான் முத்துபேட்டைக்கே கம்பியூட்டர் வந்துச்சி அந்த ஊர் காரங்க முறையா அணுகி உடனடியா அமல் படுத்திட்டாங்க ஆனா உங்க ஊரு மக்கள் இதை பத்தி ஒரு ஆளுகூட இதுவரைக்கும் முயற்சி பண்ணலை என உதட்டை பிதுக்கினார்..

ஆமாம் அந்த அதிகாரி சொல்லுவது போல நெய் சோத்த சாப்ட்டுட்டு சாயங்காலம் கடலைய மென்னுகிட்டு ஊர் கத பேசி ஊட்டுக்கு வரவே ராத்திரி 11 மணியாகுது இதுவேற....

சவூதி அரேபியா-விசாவுடன் கூடிய வேலைவாய்புகள்


REQUIRED PHOTOSHOP DESIGNER Visa Available in India.

From: 
salimperfectexport@yahoo.com Job Posted Date: Saturday, February 19, 2011
Work Location : Riyadh

Job Description: Required a person who can work in Adobe Photoshop Design. Only Indian’s needed.

Salary: 2500 Saudi Riyal.
Other Benefits: Accommodation Free.

Anyone interested send your updated cv. Urgent.
For further information call (00966) 0542973869

________________________________________
COMPUTER PROGRAMMERS/SYSTEM ANALYSTSVisa available in India

From: 
maazahmad02@gmail.com
Date: Saturday, February 19, 2011
Work Location : Jeddah

Job Description:
We are looking for 2 Nos. of programmers/ System Analysts who can maintain In-house developed systems (the system is developed in Oracle 10g suite& VB) and can take a lead role in upcoming ERP project. The ideal candidates should have experience in functional design, technical design, data conversion, testing, and end-user training. The Candidate should have knowledge of any ERP application containing Finance, Supply Chain management and Human Resources, Develop forms/reports using Oracle Developer, VB and crystal report. Preferred Experience with core business processes such as distribution, construction, and service industry Experience / Knowledge with other ERP systems is a plus.


Essential Job Functions: 
• Responsible for maintaining the legacy system and contributing in the implementation of ERP system and to ensure that all business requirements are addressed in accordance with the user’s needs.
• Perform business requirements analysis and design.
• Perform gap analysis between ERP system and user’s requirements
• To manage the ERP system for the assigned BU and provide all technical support to the users.
• In-depth knowledge of application design & development and relational databases.
• Installing & Working knowledge of Oracle database & utilities.
• Operational know how on processes & procedures.
• Clear understanding of financial/Payroll processes and controls. 


Desired Candidate's Profile 
- 1-2 yrs of experience in ERP implementation.
- Minimum 3 year of experience in programming, business processes modeling, problem solving & conflict resolution & conduct workshop training.
- Excellent communication skills, both written and spoken english.
- Master/Bachelor's Degree in, Computer Science, or Equivalent.
- Oracle Certified Professional - Developer track with DBA experience
Experience 3 - 6 years

Suitable candidates can send their resume to 
maazahmad02@gmail.com  within couple of days.

-------------------------------------------------
FINANCIAL COORDINATORVisa available for Indian Candidate who is currently in India.
From: samijunu@yahoo.com
Date: Saturday, February 19, 2011
Category: Jobs Offered
Work Location : Riyadh

Job Description:

One of the Leading Group of company offering job for the position of FINANCIAL Coordinator and Financial Assistant Coordination.
SALARY NEGOTIABLE. WITH OTHER BENEFITS...
SEND CV TO 
samijunu@yahoo.com 


மேலும் விபரங்களுக்கு மேலே குறிப்படப்பட்டுள்ள தகுந்த மின்னஞ்சல் மூலமாகவோ, அலைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

With Regards,
Jailani, Secretary
AYDA (Adirai Youth Development Association)
Jeddah, Saudi Arabia.

பயண அனுபவம் - 4

பெருநா சாப்பாடு இங்கு நியூ யார்க்கிலே டோஸ்ட் பிரட்டும் - ஜாமும்தான் நமக்கு பொசுப்பு என்று நினைத்த எமக்கு,சொந்த பந்தங்கள் இடியாப்பம் , வட்லப்பம் /கடப்பசியோட பசியாறவும் மற்றும் பிரியாணி பகல் சாப்பாடும் அதிரை மணத்துடன் உபசரித்தனர். பயணம் முழுவதும் பேச்சிலர்ஸ் , ஃ பேமிலீஸ் சந்தித்த அனைவரும் மணிமேகலையாயினர். சிஞ்சிற்றும் குறைவின்றி உணவளித்த வல்ல நாயனுக்கு எல்லாப் புகழும்.

பெருநா வேட்டியிலே கொஞ்சமாவது ஆனம் ஊத்தியிருக்கனுமில்லையா? இருந்தது! அன்பைப் பரி மாறிக் கொள்வதற்காக இங்கிருந்து கைலி மற்றும் அரிதான சின்ன சின்ன கிஃப்ட் வாங்கிச்சென்று கொடுப்பது வழக்கம்.பெற்றுக்கொண்ட நண்பன் காதில் கேட்டான்," மாப்ளே தச்சி இருக்குலே?!" ஆமாம்- ஏன்கேக்கிறா..? இல்லே...இங்கே தைய்யக் கூலி ஜாஸ்த்தி.- 10 டாலர்டா" ன்னார். ஓஹோ! வெளிநாட்டில் உழைப்பவனுக்கு மதிப்பு இருக்குதோ இல்லையோ 'உழைப்பிற்கு ' மதிப்பு எப்போதும்
இருக்கிறது!

நியூ யார்க் ஒவ்வொரு நாளும் நியூ-யா(வ)ருக்கும்! . நகரத்தை சுற்றி வரும் போது அடிக்கடி அந்த ஹட்ஸ்கின் ரிவர் கிராஸ் ஆவது போல் தோன்றுகிறது.ஹட்ஸ்கின் பாரதத்தின் கங்கை-ஃப்ரான்சின்
ரெயின் -எகிப்தின் நைல் போலாகும் போலிருக்கிறது. இந்நதி, நகரத்தின் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்கிறதாம்.நீர் வழியே கனரக சாதனங்கள், கண்டைனர்கள் இடம் பெயர்கிறதாம்.

fotoflexer<br/><a href="http://oi54.tinypic.com/2b1quu.jpg" target="_blank">View Raw Image</a>

இரவு வேளைகளில் இருளில் அந்த நதிக்கரையோரம் ஓங்கி நிற்கும் கட்டிடங்களின் முன் விளக்குகளின் கருப்பு புர்கா (அபயா) ஓரத்தில் ஜொலிக்கும் வெண் கற்களை வைத்துத் தைத்தது போல் மின்னும். பகல் வேளைகளிலோ பச்சை பெட்ஷீட்டில் அறுந்து உதிர்ந்த ரேடியம் முத்துக்கள் போல் பூவும்- பசுமையும் கொழிக்கும்.

fotoflexer<br/><a href="http://oi53.tinypic.com/15fha9e.jpg" target="_blank">View Raw Image</a>
சமீபத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் ,இயந்திரங்கள் பழுதடையவே பைலட் மிகச்சாதுர்யமாக விமானத்தை ஆற்றில் 'தவக்கல்தல்லாண்டு' வந்து அனாயசமாக
இறக்கிவிட்டாராம்.முன்னரே தரைக்கு தகவல் தெரிவிக்கப் படவே ,தீயணைப்பு வீரர்கள் மற்றும் 'டைவர்ஸ்'(தமிழாக்கம்...பிளீஸ்) வீரர்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுவிட்டனர்.இந்த வித உயிர்சேதமுமில்லையாம்-ஒரு ஆறு மாதக் கைக்குழந்தை உட்பட. விமானி அரசால் பெரிதும் பாரட்டப்பட்டாரம்.இந்நதியில் குறுக்கே ஸ்டீல் கர்டரில் தூணில்லா பாலங்கள் நிறைய கட்டப்பட்டிருந்தன. நண்பா! காலையிலும் இவ்வழியே கடந்த்தோம். மதியம் வேறு வழியாகச் சென்றோமே? என ஒரு சிறுவன் போல ஆர்வமாகக் கேட்டேன். "ஓ! அதுவா... அவசரமாகப் பகும் போது இவ்வழி ஆர அமரப் போகும் போது சற்று சுற்றி வேறு வழியிலும் செல்லலாம்" என்றார். மேலும் இது பே ப்ரிட்ஜ்! (அதென்ன 'பே' பிரிட்ஜ்... பைத்தி யார பிரிட்ஜ்...?) இதில் நாம் எத்தனை முறை கடந்தாலும், அத்தனை முறை நம் அக்கவுன்ட்டில்/ கார்டில் காசு கட்பண்ணிடும். என்று நண்பர் விளக்கினார். பிறகுதான் எமக்கு விளங்கியது. "இது ஒரு ஹை டெக் டோல்கேட் என்று!"

வீடிற்கு வந்தப்புறம் நாளை எங்கு செல்லலாம்.. என்று சிறு மஷூரா நடந்தது.வாஷிங்டன் DC செல்ல சிலர் பரிந்துரைத்தனர்.பெருநாள் முடிந்து ரெண்டுநாளைக்கி 'பூனக்கொல்லைக்கி' போற மாதிரி.... வாஷிங்டன்.. .உலகை தன் முஷ்டிக் குள் கொணரத்துடிப்பதால் ' பூவுலகக் கொள்ளை' என்பதுதான் சரியோ?!.

பயணங்கள் முடியவில்லை!
-வாழ்க வளமுடன்.

ராஃபியா

Saturday, February 26, 2011

நமது தெருவின் சுகாதரக்கேடும், அதனால் உண்டாகும் பல வியாதி

அன்புடையீர், நமது அரசாங்கத்துக்கு அதிக வருமாநத்தை அள்ளித்தரக்கூடிய 19ம் வார்டின் , 25 ந்து நாள்க்களாக சுத்தம் செய்யப்பாடாமல், அருகில் உள்ளவர்களுக்கு மட்டும்மல்லாது இந்த 19 வார்டுக்கே நோய்யை உண்டாக்கிக் கொண்டுருக்கும் , கேட்பாறற்று கிடக்கும் நமது 19 வது வார்டின் அவளநிலை, தேர்தலுக்கு மட்டும் தான் தேடிவந்து சுத்தம் செய்வார்கலோ.


நமது தெருவின் சுகாதரக்கேடும், அதனால் உண்டாகும் பல வியாதிக்கு யார் பொருப்பு, நாம் சாம்பாதிக்கும் சம்பாதியம் இந்த வியாதிகளுக்காகவா...இதை நம் போரூராச்சி கண்டுக்கொள்ளதது ஏன்? ஓட்டு வங்கவா, அதிரை சகோதர சகோதிரிகலே சிந்தியுங்கள், சுகாதரத்தை பேனுவோம், சுத்தமாஹ இருப்போம்...

இப்படிக்கு பொதுநலம் விரும்பும்
A.அஹமது மொய்தீன்
புதுமனைத் தெரு
அதிரை

அதிரை வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

கடந்த ஜனவரி மாதம்  ஆப்பிரிக்க அரபு நாடான துனீசியாவில் அரசின் மெத்தனப்போக்கு மற்றும் பாராமுகம் காரணமாக,வாழ்வுரிமை இழந்து நம்பிக்கை இழந்த ஒரு இளைஞரின் தற்கொலை காரணமாக எழுந்த உணர்ச்சிப் பிழம்பு அந்நாட்டு அதிபர் நாட்டைவிட்டு தப்பியோடி வேறு நாட்டில் தஞ்சம் புகும் நிலைக்குத் தள்ளியது.

அதனைத் தொடர்ந்து 18 நாள்கள் எகிப்து தலைநகர் கெய்ரோ மற்றும் பிற நகரங்களில் அந்நாட்டில் அதிபராக இருந்து ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து இறுதியில் அவர் பதவியை விட்டு விலகினார்.

துனீசிய மக்களின் புரட்சிக்குப் பின்னால் ஓர் இளைஞன் இருந்துள்ளான் என்றால் அதைத் தொடர்ந்த எகிப்து மக்களின் புரட்சிக்குப் பின்னால் ஒரு குடும்பத்தலைவி இருந்துள்ளார். இராணுவ அடக்குமுறை ஆட்சியாளரைக் கொண்டுள்ள நாட்டில், மக்கள் புரட்சிக்குக் காரணமாக இருந்ததில் அவரின் வலைப்பூ முக்கிய பங்காற்றியுள்ளதை நாம் அறிவோம்.

போர் வீரனின் கத்தி முனையைவிட எழுத்தாளனுடைய பேனா முனையின் சக்தி வலிமையானது என்பதற்கு நிகழ்கால சான்றாய் துனீசியாவும் எகிப்தும் திகழ்கின்றன.

பொதுநலனுடன் கூடிய எழுத்தாளர்களே இன்றைய புரட்சியாளர்கள். ஆணவக்கார அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்மீது தன் காலணிகளை கழட்டி எறிந்த முன்தாசர் அல் ஜைதியின் ஷூக்களைப் போல் இல்லாவிட்டாலும் உறங்கிக் கொண்டிருந்த மக்களைத் தட்டி எழுப்பிய மஹ்பூஸின் வலைப்பூவைப் போல் நமது வலைப்பூவும் இருக்கலாமே என்ற பீடிகையுடன் சில விசயங்களை உங்களுடன் மனம்விட்டுப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

24-04-2007 அன்று அதிரை எக்ஸ்ப்ரஸ் தொடங்கப்பட்டபோது அதிரையின் நடப்புகளைத் தருவதற்கென இணைய தளமோ வலைப்பூவோ இருக்கவில்லை. அதிரையைச் சார்ந்த சிலர் வலைப்பூக்களை வைத்திருந்த போதும், அவற்றில் அதிரை சார்ந்த செய்திகளோ/பதிவுகளோ இன்றி செயல்பட்டு வந்தன.

இந்நிலையில்,நமதூர் சகோதரர்கள் சிலர்மீது பொய் வழக்குகள் புணையப்பட்டு பட்டுக்கோட்டை-திருச்சி என நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டும் மேலும் சிலரை குத்துமதிப்பாகச் சேர்த்து தேடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இதே காலக் கட்டத்தில் மெயின்ரோட்டிலுள்ள அல்அமீன் பள்ளிவாசலுக்கு அதிரை பேரூராட்சி இடையூறு செய்ததோடு, அல்அமீன் பள்ளி நிர்வாகிகள் உட்பட மேலும் சில இளைஞர்களையும் பொய் வழக்குகளில் இணைத்து மீண்டும் கோர்ட்-கேஸ் என அலைய விட்டனர்.

அதிரை இந்து முன்னணியினர் பழஞ்செட்டித் தெரு பள்ளிவாசல் சுவரை உடைத்து மதக்கலவரத்தை உண்டாக்க முனைந்ததும் அதனைத் தொடர்ந்து RSS பிரமுகர்கள் அதிரையில் முகாமிட்டதைத் தொடர்ந்து மேலும் பதட்டம் ஏற்பட்டதும், பின்னர் காவல்துறை உதவியுடன் அவர்களின் சதித் திட்டத்தை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்ததையும் நாம் அறிவோம்.

இதுபோன்ற சூழல்களில் நமதூரைப்பற்றிய தகவல்களை அறிய இணைய தளமோ வலைப்பூவோ இல்லாதபோது தன்னார்வலச் சகோதரர்கள் சிலர் அதிரையின் நிகழ்வுகளை உள்ளூரிலிருந்தும் தொலைபேசி மற்றும் அதிரைவாசிகளிடம் இருந்து பெற்ற வாய்வழி, மடல்வழி தகவல்களைப் பெற்று வெளியூர் / வெளிநாடுகளில் இருந்தும் அதிரை எக்ஸ்ப்ரஸில் உடனுக்குடன் பதிவேற்றி அதிரைவாசிகள் மட்டுமின்றி நமதூரிலிருக்கும் வணிகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி, மதரஸாக்களில் தங்கிப் படிக்கும் வெளியூர் மாணவர்களின் பெற்றோரும் உண்மை நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு அதிரை எக்ஸ்ப்ரஸ் தகவல் பாலமாகச் செயல்பட்டதையும் நாம் அறிவோம்.

பொதுவாகவே செய்தி ஊடகங்கள் முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றன. ஊடகங்களில் வெளியாகும் ஓரிரு செய்திகளும் பிறமதத்தைச் சார்ந்த அதிரைச் செய்தியாளர்கள் கொடுத்த செய்தியாகவோ அல்லது காவல்துறை கொடுத்த செய்திகளாகவோ இருந்து வருகின்றன. அதிரை போன்ற முஸ்லிம்கள் நிறைந்துள்ள சிற்றூர்களை, தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி பிறபகுதியிலிருக்கும் இந்துக்களிடம் நம்மைப் பற்றிய வெறுப்புணர்வை விதைக்கும் தினமலம், விஜயவாஹினி நிருபர் புதுகை சரவணன் போன்ற விஷமிகளும் அதிரை மற்றும் சுற்றுவட்டார முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி இணையத்தில் செய்தி வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில்தான் அதிரை எக்ஸ்ப்ரஸ் கூட்டாகச் செயல்பட்டு நம்பகமான செய்திகளை வெளியிட்டு, நமதூர் மக்களையும் நம்மைச் சார்ந்துள்ள வெளியூர்வாசிகளை உண்மையான தகவல்களால் நிம்மதிப் பெருமூச்சிட வைத்திருந்தது.

அதிரை மக்களுக்காக நடத்தப்படும் பொதுத்தளம் என்பதால், உள்ளூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நமதூர் செய்திகளைப் பதியும் வகையில் பல தனனர்வலர்களுக்கு நேரடியாகப் பதிவெழுதும் வாய்ப்பையும் வழங்கினோம். இவையன்றி, பொதுப்பிரச்சினை சார்ந்த விசயங்களில் தனி நபர்களின் குரல் எடுபடாத நிலையில் அதை அதிரை எக்ஸ்ப்ரஸுக்கு அனுப்பி உலகெங்கும் உள்ள அதிரைவாசிகளிடம் கொண்டு செல்லும்படியான கோரிக்கைகளையும் பதிவுகளாக வெளியிட்டோம்.

தெருப்பாகுபாடு, இயக்கவெறி, அரசியல் சார்புநிலை, அதிகார அடக்குமுறை என நமதூர்வாசிகளிடம் தெரிந்தோ தெரியாமலோ புரையோடிப்போயுள்ள பல்வேறு விசயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தவிர தனிநபரையோ, அமைப்பையோ, நிறுவனங்களையோ குறை கூறித் தரம் தாழ்த்துவதல்ல எங்கள் நோக்கம் என்பதைப் பல்வேறு பதிவுகளில் நிரூபித்துள்ளதாக நம்புகிறோம்.

மாணவர்கள், தொழில் முனைவோர், இல்லத்தரசிகள், பெயர்கூற விரும்பாத ஊர் நல விரும்பிகள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலதரப்பு தன்னார்வலர்களாலும் இயங்கிவரும் அதிரை எக்ஸ்ப்ரஸ் குறித்து சிலர் அவ்வப்போது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும், தேவைப்படின் விரிவான பதிவுகளாக அல்லது பின்னூட்டங்களாக விளக்கியும் வந்துள்ளோம்.

ஒரு தளமென்று இருந்தால் அதை ஒருவரோ அல்லது சிலரோ நிச்சயம் இயக்கவும் பராமரிக்கவும் வேண்டும். அதிரை எக்ஸ்பிரஸின் இயக்கத்திலும் இயக்குபவர்கள் உண்டு. சில சகோதரர்கள் நுட்ப பங்களிப்பை மட்டும் செய்தனர். சிலர் நேரடியாக களத்தில் இருந்து பங்களிப்பு செய்து வருகின்றனர்.

தன்னார்வலர்களால் நடத்தப்பட்டதால் எல்லா வேளையும் தளத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நாங்கள் இருக்கவில்லை. எனவே, நாங்கள் அறியாத சந்தர்ப்பங்களில் சில போது தவறுகள் நிகழந்திருக்கலாம். சாட்டிங்கிலும் பின்னூட்டங்களிலும் சிலர் வரம்பு மீறியிருக்கலாம். அதற்காகப் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்.

இந்நிலையில் அதிரை எக்ஸ்பிரஸை தனிநபர்கள் சிலருடன் தொடர்புபடுத்தி, சிலருக்கு தொடர் மடல்கள் இட்டதும் சகோதரத் தளங்களில் பின்னூட்டங்கள் இட்டதும் அதிரை எக்ஸ்பிரசுக்கு உதவிய சிலரைச் சோர்வடையச் செய்தது.

அரசியல் மற்றும் சட்டம் சார்ந்த செய்திகளை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஊடகத்துறையின் முன் அனுபவமோ, அரசியல் பின்புலமோ, பொருளாதார வசதியோ இல்லாத சகோதரர்கள் தாங்கள் யார் என வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல், அதே வேளை ஊர் நலனைக் கருத்தில் கொண்டு அதிரை எக்ஸ்பிரஸுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். தங்களுடைய பெயரை வெளியிடாமல் புணைப் பெயரில் எழுதுவது ஊடகத்துறையில் வழக்கமாக இருந்து வரும் ஒன்றே. அவ்வாறு எழுதுவதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பு.

பங்களிப்பாளர்களின் ஆர்வக்குறைவு காரணமாக பின்னூட்ட மட்டுறுத்தல், பதிவுகளை உடனுக்குடன் வெளியிடுதல் மற்றும் அதிக அளவிலான உள்ளூர் செய்திகள் வெளியாதல் போன்றவற்றில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

அதிரையிலுள்ள இயக்கங்கள் மற்றும் தனிநபர்களின் பெயரால் கிட்டத்தட்ட முப்பதுக்கும் அதிகமான வலைப்பூக்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே எழுத்தார்வத்தை ஊக்குவித்தும், தனி ஆக்கங்களையும் நமது அதிரை எக்ஸ்ப்ரஸில் பதித்து அவர்களையும் இணைந்து எழுதும்படி ஊக்கமளித்து, தேவையானபோது ஆலோசனை வழங்கியும் வருவதையும் அறிவீர்கள்.

இவற்றில், நமது சகோதரர்கள் கவிதைகள், பொதுவான அரசியல் கட்டுரைகள், கல்வி விழிப்புணர்வுக் கட்டுரைகள் மற்றும் மார்க்கம் தொடர்பான கட்டுரைகள் போன்றவை இடம் பெறுகின்றன.

அதிரை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதிரையின் நடப்புகளை வெளிநாடுகளில் உள்ளவர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் அதிரைச் செய்திகளை தருதல், அதிரையின் பிரச்சனைகளை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுதல் ஆகியவையே அதிரை எக்ஸ்பிரஸின் நோக்கம்.

இதில் சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமலும் செயல்பட வேண்டியுள்ளது. சிலர் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

தேர்தல் நெருங்கி வருகிறது. ஆட்சியாளர்களிடமிருந்து அதிரை பெற வேண்டிய உரிமைகளைப் பேரம் பேச வேண்டிய நேரம் இது. எங்களுக்கு இன்னின்ன கோரிக்கைகளை நிறைவேற்றும் அல்லது நிறைவேற்றுவதாக வாக்களிக்கும் கட்சிக்குத்தான் எங்கள் வாக்கு என்பதுதான் அந்தப் பேரம் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, இது தொடர்பாக உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். உங்கள் அடையாளத்துடனோ அல்லது அடையாளத்தை மறைத்தோ வெளியிடலாம்.

மேலும் பின்னூட்ட மட்டுறுத்தல், பதித்தல், நீக்கல் ஆகிய பணிகளைப் பகிர்ந்துகொண்டு செயல்படவும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அதிரைப் பதிவர்களை அழைக்கிறோம். இதனால் பின்னூட்ட மட்டுறுத்தல் மற்றும் பதிவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கலாம்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக பதிவு எழுதுவது வரவேற்கத்தக்கது. அவ்வாறு எழுதும்போது அவர்களின் எழுத்தாற்றல் மற்றும் ஆர்வம் அதிகரிக்கும். என்றாலும் அதிரையின் பொதுநலன் சார்ந்த விசயங்களில் ஒருமித்த குரலில் ஒலிக்க அன்புடன் அழைக்கிறோம்.

ஆக்கபூர்வ ஆலோசனைகளும் சகபதிவர்களின் ஒத்துழைப்பும் வரவேற்கப் படுகின்றன.

கஞ்சி கொடுத்தும் கெடக்கலே... கெஞ்சி கேட்டும் கெடக்கலே ...

டந்த 25.02.2011 அன்று மத்திய ரயில் பட்ஜெட்டை நாடாளும் மன்றத்தில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தாக்கல் செய்தார்.

அதில் தமிழகம் மற்றும் பிர மாநிலங்களுக்கு பல்வேறு விதமமான சலுகைகள் (?) புதிய ரயில் சேவைகள் மூத்த குடிமக்களுக்கான சலுகை பயண வயது வரம்பு குறைப்பு போன்ற சலுகைகள் அறிவித்த போதிலும் நமது நீண்ட நாள் கோரிக்கையான அகல அகல ரயில் பாதைக்கு இன்று வரை நிதி ஒதுக்காமல் 2011-12 க்கான பட்ஜெட்டை தாக்கல்செய்து நம் பகுதி மக்களுக்கு மேற்குவங்க ஹல்வாவை அளித்துள்ளார் செல்வி மம்தா.


இதற்க்கு என்னதான் முடிவு ? விடைக்கான வேண்டிய தருணமிது


ஆம் ...இன்னும் சிலநாட்களில் கூலைகும்பிடுடன் நம்மை நோக்கி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகளை வாங்க ஓட்டு பொறுக்க அரசியல் வாதிகள் நம்மிடம் வர இருக்கிறார்கள் அவர்களுக்கு நமது எதிர்ப்பை இந்த தருணத்தில் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் .


தங்களுக்கெல்லாம் பாப்பாபட்டி கீரிப்பட்டி ஆகிய இரு சிறு கிராமங்களை நினைவிருக்கிறதா?கடந்த தேர்தலின் போது அவ்விரு கிராமங்களும் அடிப்படை வசதிகள் செய்துதராத காரணத்தினால் கடந்த தேர்தலை புறக்கணிப்பதாக அவ்விரு கிராம மக்கள் அறிவித்தனர் இதனால் ஒட்டு மொத்த இந்தியாவின் பார்வையே இக்கிராமங்கள் மீது இருத்ததை ஊடகங்கள் வாயிலாக நம் கண்டோம் .


இதற்க்கு பல அரசியல்தலைவர்கள் தேர்தல் அதிகாரிகள் வரை அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அயராது பாடுபட்டனர் என்பது குறிப்பிட தக்கது .


அனால் நாமோ இன்று வரை ஒற்றுமையாக எந்த ஒரு முயற்ச்சிக்கும் தோள்கொடுக்க முன்வரவில்லை என்பது கசப்பான உண்மையாகும்... சரி போனவை போகட்டும்


இனிமேலாவது நமது அத்யாவாசிய தேவையான அகல ரயில்பாதை விஷயத்தில் மேற்கண்ட இருகிராமங்கள் சாதித்த விதத்தை முன்மாதிரியாக கையாண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது எதிர்ப்பினை கண்டன போஸ்டர்கள் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தி சாதித்து கொள்ள வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.


இதற்க்கு கட்சிகள் ,இயக்கங்கள் ,பொதுமக்கள் ,வணிகர்கள் ,மாணவர்கள் என அனைத்து தரப்பும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் இணைத்து செயல் பட வேண்டும் சிந்திப்பார்களா? வாக்காளர்கள்....

CMP லேனில் ஜும்ஆ தொழுகை தொடக்கம்

அதிரை ஜூம்ஆ கமிட்டியின் ஏற்பாட்டில் CMP லைன் பகுதியில் அமைந்துள்ள AL மெட்ரிக்குலேசன் (EPS) பள்ளி வளாகத்தில் நடந்த இந்த முதல் ஜூம்ஆவில் மவ்லவி. கோவை மீரான் முகைதீன் ஸலாஹி MA அவர்கள் கலந்து கொண்டு முதல் அமர்வில், அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட 16 பேர் என்ற தலைப்பின் கீழ் அச்சமூட்டி எச்சரிக்கும் ஒர் சிறந்த உரையை நிகழ்த்தினார்கள்.(இதுவரை 6 பேர் குறித்து மட்டுமே விளக்கமளிக்கப்பட்டுள்ளது அடுத்த சந்தர்ப்பங்களில் உரை விளக்கம் தொடரும் இன்ஷா அல்லாஹ்)

இரண்டாவது அமர்வில், இன்றைய அரபுலகில் நடந்துவரும் அரசியல் மாற்றங்களின் பின்னனியை கருத்திற் கொண்டு இஸ்லாம் கூறும் அரசியல் குறித்து காலத்திற்கேற்ற உரை நிகழ்த்தப்பட்டது

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அதிரையில் நடந்த முதல் ஜூம்ஆவில் ஏகத்துவவாதிகளுடன் ஏராளமான பொதுமக்களும்அழைக்காமலேயே பெண்களும் கலந்து கொண்ட நிகழ்வு நாம் முறையாக குர்ஆனையும் ஹதீஸையும் எத்திவைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தயார் என்பதையும் நாம் இணைந்து செய்ய வேண்டிய இன்னும் பல கடமைகளையும் நினைவு படுத்தி சென்றுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி:சகோ.ஜுமா

Thursday, February 24, 2011

வேண்டாம் வேற்றுமை

ஆம் நமது சக பதிவர்களுக்கு தான் இந்த தலைப்பு .நமது அதிரை எக்ஸ்பிரசில் மூலம் நமது அதிரை மற்றும் வட்டார ஊர் அன்றாட செய்திகளை நம் பகுதி மக்கள் அதிரை எக்ஸ்பிரஸ் மூலம் கண்டு வந்தனர் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும் ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை நம் வலைப்பூவில் சக பதிவர்கள் செய்திகளை பதிவதில்லை .

இதனால் நான் ஒரு சிலரை தொடர்புகொண்டு சரியான பதில் கிடைகாததே இக்கடிதத்துக்கு காரணம் .

மல்லிப்பட்டினத்தை சார்ந்த எனது நண்பர் ஒருவர் ஜித்தாவில் இருந்து தொலை பேசி மூலம் அதிரை எக்ஸ்பிரசில் செய்திகள் வருவதில்லையே என்ன காரணம் என என்னிடம் கேட்ட கேள்வியையே நானும் இங்கே பதிகிறேன் .

மேலும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் மூலம் அதிரை மட்டுமல்லாது பிற ஊர் செய்திகளை உடனிக்குடன் படம்பிடித்து பதிவேற்றி ஏராளமான வாசகர் வட்டத்தினை கொண்டுள்ளது.

அதன் படி மரண அறிவிப்புகள் ,மருத்துவ உதவிகள் ,சமுதாய பிரச்சனைகள் ,சுகாதாரம்,போன்ற அத்யாவாசிய தகவல்கள் ஆகியவைகளை உடனுக்குடன் பதிந்து அனைவரின் விருப்ப வலைபூவாக உருமாறி இன்றளவும் அநேகர்களால் பார்க்க படுகிறது. ஆனால் சில காலமாக வருகையாளர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே !

இதை சக பதிவர்களும் நிர்வாகமும் புரிந்துணர்வுடனும் சேவை மனப்பான்மையுடனும் ஒற்றுமையுடனும் செயல் பாட்டால் மாத்திரமே நமது வாசகர் வட்டத்தை நிலை பெற வைத்திருக்க முடியும் .

பின்வரும் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கிடைக்கும் .இன்று அதிரையில் ஏராளமான வலைபூக்கள் மலர்ந்து வருவதற்கு மூல காரணம் அதிரை எக்ஸ்பிரஸ்தான் இவர்களை எழுத்தாளர்களாக வார்த்தடுத்துள்ளது என்பது அதிரை எக்ஸ்பிரஸ்க்கு கிடைத்த அங்கீகாரம் .

எனவே அதிரையின் அன்பு பதிவர்களே .. நாம் ஒற்றுமையுடன் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் மற்றும் அத்தியாவாசிய செய்திகளை நிகழ்வுகளையும் உழைப்பால் ஊனப்பட்ட அயல்நாடுகில் வசிக்கும் நம் சகோதர சொந்தகளுக்கு இணைப்பு பாலமாக மீண்டும் அதிரை எக்ஸ்பிரஸ் புது பொலிவுடனும் விறுவிறுப்புடனும் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் .

வாருங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து அதிரை எக்ஸ்பிரஸ் சில் மீண்டும் பயணிப்போம்...

Tuesday, February 22, 2011

சவூதியில் பொது மன்னிப்பு

சவுதி அரேபியாவின் பொது மன்னிப்பு அறிவிப்பு கீழ்கண்டவைகளுக்கு மட்டும்தான் பொருந்தும் என அறிவிக்கப்படுகின்றது :

உம்ரா / ஹஜ் / விசிட்விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கிஇருப்பவர்கள்.

இந்த பொது மன்னிப்பு,வேலை சம்பந்தப்பட்ட விசாவில் வந்தவர்களுக்கு இல்லை. அதுபோல் HURBOOB - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கலுக்குமல்ல - அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.

இந்த பொது மன்னிப்பு 23 மார்ச் 2011 ல் முடிவடைகின்றது.உம்ரா / ஹஜ் / விசிட் விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கிஇருப்பவர்கள் உடனடியாக இந்த சந்தர்பத்தை மார்ச் 23 க்கு முன்பாகவே பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுருத்தப்படுகின்றர்கள்.

யாரெல்லாம் இந்த குறுப்பிட்ட காலத்திற்குள் நாடு செல்ல வில்லையோ, அவர்கள் அபராத தொகை கட்ட நேரிடும், மேலும் அவர்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

யாரிடத்தில் ஒரிஜினல் பாஸ்போர்ட் அட்டை இல்லையோ,அவர்கள் அவுட்பாஸ்(out pass) பேப்பரும், ஜவாஜாத் அலுவலகத்திலிருந்து உம்ராஹ் / ஹஜ் விசாவிர்காண அத்தாச்சி பேப்பரையும் கொண்டு வரவேண்டும்.

அவசர சான்றிதல் - அவுட்பாஸ் பெறுவது எப்படி?

சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்களின் பாஸ்போர்ட் காப்பியும்,அத்துடன் ரேஷன்கார்டு அல்லது கார் வாகனவோட்டு சான்றிதல், அல்லது எலக்ரிகல் கார்டு அல்லது ஏதாவது இந்தியன் அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கத்தின் போட்டோ அடையாள அட்டை ஆகிய ஏதாவது ஓன்றை வைத்து அவுட்பாஸ் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்த அவுட்பாஸ் 3 மாதத்திற்கு செல்லுபடியாகும்.

HUROOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள்

ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களின் கபீலிடத்திலிருந்து NOC certificate - பிரச்சனை இல்லை என்ற சான்றிதல் வைத்திருக்கவேண்டும்.

ஜவாஜாத் - jawazat போலீஸ் பாது காவலில் வைக்கப்பட்டு, தர்ஹீல் என்ற போலீஸ் நிலையதிலிருந்து அனுப்பப்படுவார்கள்.

இந்த பொது மன்னிப்பு, HURBOOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள் - அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.

தாயகத்திற்கு திரும்ப அவசர சான்றிதல் -அவுட்பாஸ் மட்டும் போதுமானதல்ல.

ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், இந்நாட்டு சட்டப்படி, அவர்களின் கபீலிடம் சென்று அவர்கள் பிரச்னைகளை முடித்து கொள்ள வேண்டும் .

தகவல்: B.ASHRAF KHAN

Sunday, February 20, 2011

அதிமுக கூட்டனியில் மமகவுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் சனிக்கிழமையன்று சந்திப்பு நடத்திவிட்டு வெளியில் வந்த மமகவின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா அதிமுகவுடன் தொகுதிப் பங்கிடு முடிவடைந்துவிட்டது. ஞாயிற்றுக் கிழமயன்று ஜெயலலிதாவின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து கூட்டணியில் இருந்து விலகி, 4 தொகுதிகளில் போட்டியிட்ட மமகவிற்கு அதிமுக 2 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியானது மமக தொண்டர்களிடம் சோர்வை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மமகவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


காணொளி: தமுமுக இணையதளம்
செய்தி : இந்நேரம்.காம்

இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்!.எத்தனை சீட் முஸ்லிம்களுக்கு?.
அரசியல் வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக இன்றைய முஸ்லிம்கள் முற்றிலும் வலு விழந்தவர்களாக ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். இது போதாதென்று முஸ்லிம்களின் இயக்கங்களும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று தங்களின் பங்கிற்கு பிளவுபட்ட முஸ்லிம்களை, மேலும் சிறு சிறு குழுக்களாக பிரித்தாண்டு இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நம்மை முடமாக்க எத்தனிக்கின்றனர். முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், ஜமாத்களும் நம்மை வழி நடத்திய காலம் போய், இன்று நாம் அவைகளை வழிநடத்த அல்லது ஒற்றுமையுடன் இருக்க ஆலோசனை கூறும் நிலைக்கு தமிழக முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

எந்த ஒரு கட்சியும் முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கிட எந்த முயற்சியையும் மேற்கொண்டதில்லை, வழங்கப் போவதுமில்லை என்பதே உண்மை!. ஏனெனில் இருக்கும் சீட்டுக்களையும், பதவிகளையும் அக்கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கு ஒதுக்கினாலே தமிழகத்திற்கு இன்னும் 234 தொகுதிக்குமேல் தேவைப்படும். எப்படி முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கான ஜக்காத்தினை சரியாக கணக்கிட்டு ஏழைகளுக்கு வழங்காமல், 5,10 ரூபாய்கள் என்று தர்மத்தினை, ஜக்காத் என்று வழாங்குகின்றார்களோ, அதே பார்முலாவைத்தான் இந்த அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் இடம் அளிக்காமல், பிச்சை போடுவதுபோல் ஒன்று இரண்டு என்று வழங்குகின்றார்கள்!. இவைகள் அத்தனையும் நன்கு அறிந்திருந்தும் இந்த ஜமாஅத்களும், இயக்கங்களும் இன்னும் இந்த அரசியல் கட்சிகளின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதுதான் வினோதம்!.


காரைக்குடியில் செட்டியார்கள் தொகுதியில் தேவரை நிறுத்த முடியவில்லை!. மயிலாப்பூரில், அய்யர்களின் தொகுதியில் வன்னியரை நிறுத்த முடியவில்லை!. தேவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவரை நிறுத்தினால் கலவரம் வெடிக்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வன்னியர், தேவர், செட்டியார், தாழ்த்தப்பட்டோர், பிராமணர் என்று யார் வேண்டுமானாலும் நிற்கலாம்!. எந்த அரசியல் கட்சியாவது அக்ரஹாரத்தில் அப்துல்காதரை நிறுத்தி ஜெயித்து காட்ட முடியுமா?. ஆனால் அதிரையில், மேலப்பாளையத்தில், கீழக்கரையில், சேப்பாக்கத்தில் அய்யரை, அந்தோணியை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்க முடியும்!. தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் கூட ரிசர்வ் தொகுதிகளாக்கி அங்கும் வஞ்சிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை, பெண்களுக்கான தொகுதியாக்கப்பட்டு அங்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்க முடியாமல் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.

இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலையில் குல்லாவை போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என்ற வார்த்தைகளை கூறி ஒட்டுக் கேட்டுவிட்டால் போதும்!. அல்லது நான் அம்மணமாக இருந்தாலும் பிறைகொடியுடன் ஊர் ஊராய் திறிந்தேன்!. காயிதேமில்லத் என் அரசியல் வழிகாட்டி!. மீலாதுநபிக்கு விடுமுறை விட்டோம்! என்ற டயலாக் வந்தாலும் போதும்!. உடனே அத்தணை முஸ்லிம்களுக்கும் உச்சி குளிர்ந்து, (கட்டிய வேட்டி அவிழ்ந்து விழுந்தாலும் தெரியாது!) மறக்காமல் இந்த வேட்பாளருக்கு, கட்சிக்கு ஓட்டு போட்டுவிடுவோம்!. யார் கேட்டார்கள் மீலாது நபிக்கு விடுமுறை?. வேண்டுமென்றால் மீலாது நபி விடுமுறையை ரத்துசெய்துவிட்டு 20 தொகுதியை இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்குங்கள். அரசியல் வாழ்வில் மீலாது இருக்கும் இவர்கள் இதன்மூலம் மீண்டு விடுவார்கள்!.

முஸ்லிம்லீக் கட்சிக்கு ஒன்று இரண்டு தொகுதிகள் வழங்கப்படுகின்றது. அது இரண்டாக பிளவு பட்டால் ஆளுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ வழங்கப்படுகின்றது. தற்போது ம.ம.க என்ற கட்சி உருவாகி அதற்கும் இரண்டு என்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அயோக்கிய அரசியல் கட்சிகள், நீங்கள் சிதறுண்டு வாருங்கள் ஆளுக்கு இரண்டு என்று உங்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிக்கின்றோம் என்று சொல்ல வருகின்றார்கள்.அதுமட்டுமில்லை!. இவ்வாறு வழங்கப்படும் தொகுதிகளில் கூட வேண்டுமென்றே, இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒரே தொகுதிகளை ஒதுக்கி இவர்களை மோதவிடுவார்கள்!.

இதன் மூலம் இருவரில் ஒருவரை சட்டமன்றத்தில் நுழையவிடாமல் செய்துவிடவும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது. எனவே இந்த தேர்தலில் அவ்வாறு ஒதுக்கப்பட்டால் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் போட்டியிடாமல் வேறு வேறு தொகுதிகளை கேட்டு பெறவேண்டும். ஒரே தொகுதியில் போட்டியிட சம்மதித்தால் அதைவிட துரோகம் வேறு இல்லை!. இந்த முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மொத்தமாக ஓரு கட்சியிடம் பேரம்பேசி 20 முதல் 30 தொகுதிகள் என்று வாங்கி ஏன் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது?.

தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புகள், பிற அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. இதை அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதே தவிர, வேறு காரணம் இல்லை. இங்கு முஸ்லிம்களை தவிர வேறு இனத்தவரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்ற நிலையில் உள்ள தொகுதிகளேயாகும். இதே நிலையைத்தான் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மற்ற எல்லா தொகுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் நிலையைதான் முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். 

முஸ்லிமை நிறுத்தினால் ஓட்டு!. இல்லை என்றால் சுயேட்சையாக ஒரு முஸ்லிமை நிறுத்தி, மொத்த ஜமாத்தும் இயக்கங்களும் அவருக்கு ஆதரவளித்து முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நிருபித்து, அடுத்த தேர்தலில் இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு நம் பலத்தை புரியவைக்க வேண்டும், இனி இந்த தொகுதியில் முஸ்லிமை நிறுத்தினால் மட்டுமே இங்கு வெற்றி பெறமுடியும் என்று பாடம் கற்பிக்க வேண்டும். இதை தவிர இனி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்யவே முடியாது!.

ஏனெனில் எல்லா அரசியல் கட்சியும் இரண்டு சீட் என்ற கோட்பாட்டில் இருந்து வெளிவர மாட்டார்கள். எனவே இனி அவர்கள் கட்சியில் முஸ்லிம்களின் சட்டமன்ற உறுப்பினரை அதிகரித்து அதன் மூலம் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமே தவிர, நீங்கள் சிதறுண்டு கிடப்பதால், இனி இன்னும் பத்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் முஸ்லிம் இயக்கங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகளை கேட்டுப்பெரும் வலிமை வர வாய்ப்பேயில்லை!.

முஸ்லிம் விரோத கட்சியை தவிர்த்து, மாற்று அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கின்ற காரணத்தால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை உள்ளதையும் நாம் மறுக்க முடியாது!. சமுதாய பிரச்சனைகளை அவைகளில் பேசாத, பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே என்றும் நாம் வாதிடலாம். இப்படியே வாதிட்டு வாதிட்டு இருந்ததை நாம் இழந்தோமே தவிர எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முயற்சியையும் நாம் செய்யவில்லை!.

சமீபத்தில் கூட த.த.ஜ இட ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரசின் ஹாரூன் எம்.பி யை பிரதமர், மற்றும் சோனியா வரை சந்திக்க பயன்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இதுபோல் மற்ற உறுப்பினர்களையும் இதுபோன்று பயன்படுத்திக் கொண்டோமேயானால் ஓரளவிற்கு நம் பிரச்சனைகளை உயர்மட்ட அளவில் கொண்டு செல்லமுடியும். சமுதாய நலனை எடுத்து செல்லும் உறுப்பினர்களை மட்டும், தாங்கள் சார்ந்த கட்சியில் சீட்டு மறுக்கப்படும் போது அவரை தனியாகவே நிறுத்தி முஸ்லிம்கள் அவரை வெற்றிபெற செய்ய வைக்கவேண்டும். கட்சி கைவிட்டாலும் சமுதாயம் கைவிடாது என்ற எண்ணத்தினை அவர்கள் பெற வேண்டும்.

முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நிச்சயம் வெற்றிபெற முடியும்  போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது? கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகதான் இருக்கும். அல்லது ஓரளவிற்கே அது பலனை தரும். ஆனால் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்து அவர்கள் மூலம் நம் கோரிக்கையை இந்த மன்றங்கள் மூலம் தீர்மானமாக கொண்டுவரும்போது மட்டுமே வலிமை மிக அதிகம் என்பதையும் நாம் மறக்ககூடாது. 

இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழி காட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

பழைய மக்கள்தொகை கணக்கின்படி, தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகையானது, மொத்த தமிழக மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது. அதாவது 6.5 கோடி மக்கள் தொகையில் 6% முஸ்லிம்களின் எண்ணிக்கை 39 இலட்சம். இதில் ஓட்டுரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டுமே 40% சட்டசபை இடங்களை வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமெனில், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.

1965ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை அதிரை மீண்டும் தனி சட்டமன்ற தொகுதியாக்கபடவில்லை. 1967ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை தொகுதியிலேயே 60 ஆயிரம்பேர்களை முஸ்லிம்களாக கொண்ட அதிராம்பட்டினம் இருந்து வருகிறது. ஆனால் இன்றுவரை ஒரு முஸ்லிம் இங்கே சட்டமன்ற உறுப்பினராகவில்லை.

1967,1971 வெற்றி பெற்றவர்: ஏ.ஆர்.மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி சார்பில்) 1977 ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ் சார்பில்)
1980 எஸ்.டி.சோமசுந்தரம் (அ.தி.மு.க) 1984 பி.என்.இராமச்சந்திரன் (அ.தி.மு.க)
1989 கா.அண்ணாதுரை (தி.மு.க.) 1991 கே.பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க)
1996 பி.பாலசுப்ரமணியன் (தி.மு.க)
2001 என்.ஆர்.ரெங்கராஜன் (த.மா.க சார்பில்) 2006 என்.ஆர்ரெங்கராஜன் (காங்கிரஸ் சார்பில்)

அதிரையில் இருந்து இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட. ஒரு முஸ்லிமிற்கு கூட சீட் கிடைக்காதது ஏன்?. இதே நிலைதான் தமிழகமெங்கும் உள்ளது.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி முஸ்லிம்கள், முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் என்ற நிலையை தற்போது ஏற்படுத்தினால் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க முடியும். பின் இந்த முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சமுதாய இயக்கங்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்வது மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலைக்கு தீர்வாகலாம்.

Saturday, February 19, 2011

மரண அறிவிப்பு


புதுமனைதெருவை சேர்ந்த ஹாஜிமு.செ.மு.A.M.அப்துல் காதர் அவர்களின் மகனும் ஹாஜி A.அப்துல் முனாப்(
வக்கீல்
), A.
Fபௌஜுல்அவர்களின் சகோதரர்மான A.அப்துல் வாஹித் அவர்கள் இன்று (19-02-2011) மதியம் 3.௦௦ மணியளவில் மரண அடைந்துவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா நாளை காலை 8.௦௦ மணியளவில் மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

சவூதி அரேபியாவில் வேலை வாய்ப்பு - விமான நிலைய விரிவாக்கம்

சவுதி அரேபியாவில் விமான நிலைய விரிவுபடுத்தும் பணிக்காக ஆட்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுவருகிறது. விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தகவலை படித்து  பயனடைந்துக்கொள்ளுங்கள்.       

Saudi Binladin Group (Airport Projects) 
 

Mechanical - Operation & Maintenance 
·         Mechanical Engineer 08 Nos. (SR - 3200-4500) 
·         Chillers Technician 20 Nos. (SR -1500-1800) 
·         HVAC Foreman 08 Nos. (SR -1800-2400) 
·         HVAC Technician (Air-Conditioning) 16 Nos. (SR -1300-1500) 
·         AC Automotive Technician 06 Nos. (SR -1300-1500) 
·         Water & Sewage Plant Technician 12 Nos. (SR - 1300-1500) 
·         Sewage Plant Operator 12 Nos. (SR -1300-1500) 
·         Passenger Boarding Bridge Mechanic 06 Nos. (SR -1500-1800) 
·         Passenger Boarding Bridge Operator 06 Nos. (SR -1300-1500) 
·         Conveyor Operator 06 Nos. (SR -1300-1500) 
·         Power Plant Supervisor 04 Nos. (SR - 2800-3200) 
·         Power Plant Shift in Charge 06 Nos. (SR 2400-2800) 
·         Pump Technician 18 Nos. (SR - 1300-1500) 
·         Power Plant Technician 22 Nos. (SR -1300-1500) 
·         Gen. Mechanical Technician 12 Nos. (SR -1200-1400) 
·         Power Plant Operator 10 Nos. (SR -1300-1500) 
·         Motor Pool Foreman 04 Nos. (SR -1600 -2000) 
·         Crush Fire Rescue Technician 10 Nos. (SR -1300-1500) 
·         Blacksmith & Welding Technician 06 Nos. (SR 1200-1400) 
·         Plumbing Technician 12 Nos. (SR -1200-1400) 

Civil & Other - Operation & Maintenance 
·         Civil Engineer 10 Nos. (SR -3200-4500) 
·         Civil Foreman 06 Nos. (SR -1800-2400) 
·         Terminal Operations Specialist 04 Nos. (SR -2200-2500) 
·         Air Side Operation Specialist 04 Nos. (SR -2000-2500) 
·         Chief House Keeper 04 Nos. (SR -2000-2500) 
·         House Keeping Foreman 10 Nos. (SR -2000-2500) 
·         Janitorial Supervisor 28 Nos. (SR -1400-1600) 
·         Landscaping Supervisor 14 Nos. (SR -1600-2000) 
·         Laundry Supervisor 04 Nos. (SR -1600-2000 
·         Data Entry Operator 06 Nos. (SR - 1200-1200) 

Electrical - Operation & Maintenance 
·         Electrical Engineer 08 Nos. (SR -3200-4500) 
·         Medium & High Voltage Technician 20 Nos. (SR -1300-1500) 
·         Low Voltage Technician 20 Nos. (Sr-1200-1400) 
·         Air Field Lighting (AFL) Supervisor 04 Nos. (SR -2800-3200) 
·         Air Field Lighting (AFL) Technician 08 Nos. (SR -1300-1500) 
·         Power Plant Technician 24 Nos. (SR 1300-1500) 
·         CFR Vehicle Electrical 06 Nos. (SR 1300-1600) 
·         Automotive Electrician 06 Nos. (SR 1200-1500) 
·         Power Plant Relay Technician 20 Nos. (SR -1300-1600) 
Electronics & Computer - Operation & Maintenance 
·         Communication Engineer 04 Nos. (SR -3200-4500) 
·         Communication Foreman 02 Nos. (SR -1800-2400) 
·         Work Control Center Engineer 02 Nos. (SR 3000-4000) 
·         Computer Engineer 04 Nos. (SR - 3000-4000) 
·         Engineer Data Base/ Administrator 04 Nos. (SR -3000-4000) 
·         Electronics Archive Systems Engineer 04 Nos. (SR 3000-4000) 
·         Network & Security Info. Engineer 04 Nos. (SR 3000-4000) 
·         Electronics Serviceman 30 Nos. (SR -1000-1100) 
·         Audio Visual Technician 08 Nos. (SR 1300-1600) 
·         Network & Computer Technician 18 Nos. (SR -1300-1600) 
·         Electronics Alarm Technician 14 Nos. (SR -1300-1600) 
·         Radio Technician 12 Nos. (SR -1300-1600) 
·         Controls Technician 08 Nos. (SR -1300-1600) 
·         Office Equipment Technician 08 Nos. (SR 1500 -1800) 
·         CFR Electronic Technician 10 Nos. (SR 1500-1800) 
·         Flight Info & Display System Technician 04 Nos. (SR -1300-1600) 

Applicants must have above 5-yrs. relevant work experience in India and abroad. Suitable candidates will be called for client interview at Delhi on 13th & 14th Feb. 2011, Patna on 15th & 16th Feb. 2011 and Hyderabad on 23rd & 24th Feb. 2011. Email/ Courier CV mentioning Specific Position, Experience and contact number, copies of testimonials & passport & recent photographs immediately to:  

M/s R.K. International 
Contact Person : Mr. Raj Khosla / Mr. Kamal Khosla
Address : 605, Hemkunt Tower, 6 Rajendra Place,
New Delhi-110008 

Telephone: 011-45335533/25735533 & Fax : 011-25755333
E-Mail : rki@ndb.vsnl.net.in
 
இப்படிக்கு,
அய்டா நிர்வாகம்    

சவூதி அரேபியாவில் வேலை வாய்ப்பு - சூப்பர் மார்க்கெட்


சவூதி அரேபியாவில் வேலை வாய்ப்பு. 
(ONLY MUSLIMS)
BIN DAWOOD / DANOUB SUPERMARKETS,
JEDDAH/MAKKAH, SAUDI ARABIA
CATEGORY
SALARY IN SR
REQ
    01
WARE HOUSE SUPERVISORS
2500.TO.3000
10.
02
STORES SUPERVISORS
2000.TO.2500
10.
03
ACCOUNTANT (B,com.4.YEARS EXP)
1500.TO.2000
10.
04
SALES MAN (RETAIL SHOW ROOM EXP)
1400.TO.1500
30.
05
DATA ENTRY (ANY SUPERMARKET EXP)
1400.TO.1500
20.
06
A/C.MECHANIC (I.T.I.OR DIP.3.YRS EXP)
1400.TO.1500
08.
07
ELECTRICIAN (I.T.I.OR.DIP.4.YRS EXP)
1400.TO.1500
08.
08
HELPERS  (W/H.STORE.&.CLEANERS)
1000.TO.1200
60.
09
HELPERS (PASTRY MAKING HELPERS)
1000.TO.1200
40.

SL.NO.1.TO.7.MUST BE EXPERIENCE IN ANY SUPERMARKET OR RETAIL SHOWROOM

SL.NO.8.EXPERIENCE NOT REQUIRED BUT HEALTHY AND GOOD CONDITION.

SL.NL.9.EXP IN ANY BAKERY OR RESTAURANT.

CLIENT INTERVIEW IN CHENNAI.ON.22/23.FEB.2011.

CONTACT:

Arul.G                                   Ph: 98407 75480

Faiz Ahmed .A.S               Ph: 94447 51757


Emree Consultants
23/1, Second Floor
Mahalakshmi Street,
Opp. Siva Vishnu Temple,
T.Nagar Bus stand,
T.nagar, Chennai -17
Ph:   044- 2431 2665
Mob: 98407 75480, 9444751757
தகவல் : மீரஷாஹ் ரஃபியா