Wednesday, August 31, 2011

அதிரையில் பெருநாள் தொழுகை


நமதூர் சானா வயல்திடலில் சரியாக காலை  8 மணியளவில் நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரளாமான அதிரையர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

பெருநாள் குத்பா உரையை திருச்சி முகமது நிகழ்த்தினார் , ரமலானுக்குப் பின் நம்முடைய அமல்கள் குறித்தும், பாவமன்னிப்பு தேடுதல் குறித்தும் எடுத்துரைக் கப்பட்டன மேலும் குத்பாவின் அவசியத்தை பற்றியும் விளக்கம் அளித்தார் இதில் ஆண்களும் பெண்களும் திராளாக கலந்துகொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர் இதற்க்கான ஏற்பாடுகளை அதிரை ஈத் கமிட்டி சிறப்பாக செய்து இருந்தார் .

படம் :AIM

Tuesday, August 30, 2011

அதிரையில் பெருநாள் குதூகலம்

தமிழகத்தின் பல பகுதிகளில் பெருநாள் பிறை தென் பட்டதால் அதிரையில் பெருநாள் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது நகரின் பல பள்ளிவாயில்களில் தக்பீர் முழக்கமும் திக்ரு மஜ்லீஸ் சப்தமும் கேட்டவண்ணம் உள்ளன.

கடை வீதிகளில் மக்கள் வெள்ளத்தினை காணமுடிகிறது கசாப்கடைகளில்மக்கள் முண்டியடித்து கறி வாங்குகிறார்கள் . வழக்கம்போல் அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன .

அதிரை ஈத்கமிட்டின் சார்பில் நாளை காலை மேலத்தெரு சான வயலில் திடல் தொழுகைக்கு ஏற்பாடு செய்துள்ளனர் தொழுகை சரியாக காலை 7:45 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது .

மரண அறிவிப்பு (சல்மா அம்மாள்-புதுமனைத்தெரு)

புதுமனைத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் அ.வா.மு. அபூஹனிபா அவர்களின் மகளும், மர்ஹும் மு.வா.மு.சேக் அப்துல் காதர் அவர்களுடைய மனைவியும், ஹாஜி அ.வா.மு.முகைதீன் சாஹிப், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது மைதீன், ஹாஜி. அ.வா.மு. முகம்மது இப்றாஹிம் அவர்களுடைய சகோதரியுமாகிய ஹாஜிமா. சல்மா அம்மாள் அவர்கள் இன்று (30-08-2011) செவ்வாய் கிழமை மாலை வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்றிரவு 11:30 மணிக்கு தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

துபை பெருநாள் சந்திப்பு குழுவினரின் நன்றி அறிவிப்பு

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம், அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இக்கடிதம் தங்கள் அனைவரையும் பூரண நலங்களுடனும், தூய இஸ்லாமிய உணர்வுகளுடனும் சந்திக்க பிரார்த்திக்கின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் எதிர் பார்த்ததை விட நமதூர் சகோதரர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்வு இனிய முறையில் மனநிறைவான வகையில் நடந்து முடிந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

இச்சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மனமகழ்சியை தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வினால் 30 வருடங்களுக்கு முன்பு சந்தித்த சகோதரர்கள் மீண்டும் சந்திக்க வைத்துள்ளது என்பதும், ஒருசேர ஒரு இடத்தில் நமதூர் அனைத்து முஹல்லா சகோதரர்கள் சந்தித்துக் கொண்டதும் அமீரக வரலாற்றில்  இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடதக்கது. 

இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களில் பெரும்பான்மையினர், இதோடு இந்த நிகழ்வு நின்றுவிடாமல் இன்ஷாஅல்லாஹ் மென்மேலும் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்படுத்த வேண்டுகோள் வைத்தனர்.

இந்த இனிய சந்திப்பிற்கு அழைத்த எங்களின் அழைப்பை ஏற்று ஒருமனதாக தங்கள் வருகையை பதிவு செய்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இனிய நிகழ்ச்சி இவ்வளவு சிறப்புடன் நடைபெற பெரிதும் உதவிய அனைத்து நமதூர் இணையதளத்தார்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
 ……  இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம். (3:145)
குறிப்பு: இப்பெருநாள் சந்திப்பு நிகழ்வு பற்றி தங்களுடைய கருத்துக்களையும், இதில் கலந்துக் கொள்ளாத தங்களுக்கு தெரிந்த சகோதரர்களின் பெயர், மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி மற்றும் முஹல்லா விபரங்ககளை adiraiallmuhallah@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,

 பெருநாள் சந்திப்பு ஏற்பாட்டாளர்கள்.
 adiraiallmuhallah@gmail.com

நன்றி: அதிரை நிருபர் (காணொளி)

வெளிவந்து விட்டது வெள்ளிநிலா!

வெள்ளிநிலாவின் ஆகஸ்டு மாத இதழ் தற்பொழுது வெளிவந்து விட்டது .


அதில் காயல் நகரம் எது?அதிரை ஹிதாயத்தின் ஆய்வுக்கட்டுரையும் , பண்டிகையும் சுற்றுலாவும் ,கோடியில் ஒருவர் அதிரை எக்ஸ்பிரசில் வெளியான என்னங்க அநியாயம் இது ,மத சின்னங்களும் அரசு அலுவலகங்களும் என ஏராளமான கட்டுரைகளை தாங்கி வெளி வந்து விட்டது .
உங்கள் வெள்ளிநிலா . அதிரையில் தங்கள் பிரதிக்கு கீழ் காணும் நபர்களை தொடர்புகொண்டு இலவச பிரதியை பெற்று கொள்ளுங்கள்.அதிரை ஹிதாயத் :8148480807
சாகுல் ஹமீத் :        9894555982

ஜித்தாவில் அதிரை சகோதரர்கள் கலந்து கொண்ட பெருநாள் தொழுகை!சவுதியின் துறைமுக நகரமாக ஜித்தாவில் இன்று (30.08.2011) செவ்வாய்க் கிழமை, நோன்புப் பெருநாள் தொழுகை காலை மணி,6:20 க்கு ஜித்தா துறைமுக GCT கேம்ப் மைதானத்தில் நடைபெற்றது. அதுசமயம் ஜித்தா வாழ் தமிழ் முஸ்லிம்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

உஸ்தாத் அப்துல்லாஹ் இப்ராஹீம் அல் மாஸ் (இமாம். துறைமுகம் பெரிய பள்ளிவாசல்) அவர்களால் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டு குத்பா பேருரை நிகழ்த்தப்பட்டது, இதை மவ்லவி.M. சித்திக் மதனி அவர்கள் தமிழாக்கம் செய்தார்.


மேலும் அதிக அளவில் அதிரை சகோதரர்களும் இப்பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டதோடு ஆரத்தழுவி முஸாபஹா செய்து பரஸ்பரம் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர், ஊரில் குடும்பத்துடன் பெருநாள் கொண்டாடவில்லையே என்ற கவலை முகத்தில் தேய்ந்தபோதும் அதனை மறந்து தன் நண்பர்களோடு அளவளாவி பெருநாள் கொண்டாட்டங்களை கொண்டாடியது பார்பதற்கு சந்தோஷத்தை தந்தது.

தமிழ் மக்கள் அல்லாது பல மாநிலத்தவர்களும் மற்றும் பல நாட்டினரும் இத்தொழுகையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஜித்தா துறைமுக இஸ்லாமிய அழைப்பகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் புகைப்படங்கள் இன்ஷா அல்லாஹ் பதியப்படும்.

துபையில் அதிரைவாசிகளின் பெருநாள் சந்திப்பு


ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் அதிரைவாசிகளை ஒவ்வொரு பெருநாளின்போதும் ஓரிடத்தில் ஒன்றுதிரட்டி பரஸ்பரம் வாழ்த்துக்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளச்செய்ய வேண்டும் என்ற முயற்சியின் முதற்கட்டமாக சுமார் 300 அதிரைவாசிகள் இன்று (30-08-2011) அன்று துபை-டேரா ஈத்கா மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

எந்த அமைப்பையும், குழுவையும் முன்னிறுத்தாமல் அதிரைவாசிகள் அனைவரும் ஒன்றுகூடி நட்புறவை வளர்க்க வேண்டும் என்ற முயற்சி அல்லாஹ்வின் உதவியால் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ள
தாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் இனிவரும் பெருநாட்களிலிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தன்னார்வலர்கள் தொடர்ந்து நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கலந்துகொண்டு சகோதர்களுக்கு அதிரை எக்ஸ்ப்ரஸ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.


தகவல்: அப்துல் காதர்

பெருநாள் (திடல்) தொழுகை

இன்ஷா அல்லாஹ் பெருநாள் அன்று திடல் தொழுகைக்கு TNTJ அதிரை கிளையின் சார்பாக சேது சாலையில் உள்ள ஜகபர் அலி அவர்களின் இடத்தில் காலை7:30 மணிக்கு நடைபெற உள்ளது .
பெருநாள் குத்பா பேருரையை அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஷி நடத்துகிறார் இதற்க்கான ஏற்பாடுகளை நகர TNTJ சிறப்பாக செய்து வருகிறது .

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது .
தகவல் :ஜப்பார்

ரமலான் கடைசி பத்தில் கலைகட்டும் அதிரைவழக்கமாக ஒவ்வொரு நோன்பிலும் அதிரை தெருக்கள் வாடா மற்றும் கபாப் கடைகளால் கலைகட்டும். முச்சந்திகளில் நள்ளிரவுக் கடைகளில் கல்கண்டு பால், ஆட்டுக்கால் சூப் வியாபாரம் சக்கைபோடு போடும். மீரா மெடிக்கல் அருகேயுள்ள ஓட்டலில் சிக்கன் கறி வகைகளை (டிக்கா, தந்தூரி) ருசிக்க 10 - 60 வயதினர் க்யூவில் நிற்கின்றனர்! இதுபோக டெய்லர் கடைகளுக்குப் போட்டியாக ஆயத்த ஆடை கடைகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊரே ஜகஜோதியாக இருக்கிறது.

கடைசி பத்து என்பதால் பெருநாளை ஊரில் கொண்டாடிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வெளிநாட்டில் பணியாற்றும் அதிரைவாசிகள் மானாவாரியாக தாயகம் திரும்பியுள்ளனர். பள்ளிகளில் தராவிஹ் தொழுகை மற்றும் இதர தொழுகைகளுக்கு நியாயமான கூட்டம் உள்ளது. நள்ளிரவில் வித்ரு தொழுகையும் சில பள்ளிகள் நடக்கிறது. தெருவுக்குத் தெரு பெண்களுக்கும் தராவிஹ் தொழுகைகள் நடந்து வருவதால் பர்தாவுடன் பெண்மணிகளும் சென்று வருகின்றனர். வழக்கம்போல் சிறார்கள் தாரவிஹ் வீடுகளுக்கு வெளியே விளையாடிக் கொண்டுள்ளனர். தராவிஹ் முடிந்து வகைவகையான நார்சாவும் கிடைப்பதால் பால்குடி பிள்ளைகள் தவிர அனைத்து குழந்தைகளையும் காணமுடிகிறது!

வாலிபர்கள் 3-4 பேர் ஒரே பைக்கில் தெருத்தெருவாக சுற்றுகின்றனர். எங்கு செல்கின்றனர்? ஏன் செல்கின்றனர் ?? தெரியவில்லை. ஆங்காங்காங்கே கிளித்தட்டு விளையாட்டும் நடைபெறுகிறது.

சித்தீக் பள்ளியில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் நடைபெறுகிறது. செக்கடிப்பள்ளி மற்றும் ஹனீப்ஃ பள்ளிவரை ஸ்பீக்கர் கட்டி ஒலிபரப்ப படுவதால் வீட்டு வாசல்களில் தாய்மார்கள் பயானைக் கேட்டு வருகிறார்கள். மாலை நேரங்களில் அதிரையில் உலவும் கார்கள் நமதூரின் செல்வச் செழிப்பை பறை சாற்றுகின்றன. பிறை 27 வரை வெளியூரிலிருந்து ஜகாத் வேண்டி வந்தவர்களில் கூட்டமும் ஆங்காங்கே தென்பட்டது.

மொத்தத்தில் இந்தமுறை நோன்பு வழக்கமான ஒன்றாகவே இருந்தாலும் பழக்கப்பட்ட முகங்களை நெடுநாட்களுக்குப் பிறகு பார்த்த திருப்தி! அனைவருக்கும் (நாளை) ஈத் முபாரக்!

அதிரை மஸ்ஜித்களில் தமாம் (ஆண்டறிக்கை) நிகழ்ச்சிஒவ்வொரு ரமலானிலும் நமதூர் அதிரை மஸ்ஜித்களில் ஆண்டறிக்கை (தமாம்) ஒப்படைவு நிகழ்ச்சி பிறை 25 க்குப்பிறகு சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று (29-08-2011) ஷாதுலியா புதுப்பள்ளி மற்றும் செக்கடிப் பள்ளியில் தமாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உலமாக்கள் மற்றும் முஹல்லாவாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதுப்பள்ளி நிர்வாகச் செலவுகளுக்ககவும் கட்டிட நிதிக்காகவும் தனித்தனியாக நிதியுதவி கோரப்பட்டது. வழக்கம்போல் நல்லுள்ளம் படைத்த தனவந்தர்கள் தங்கலால் முடிந்த நிதியுதவிகளை வழங்கினர்.

கட்டிட நிதிக்காக சுமார் 75,000 ரூபாய்க்கும் அதிகமாக வசூலானது. மேலும் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

கலந்து கொண்டவர்களிடம் மஞ்சல் அட்டை வழங்கப்பட்டு நிதியுதவி குறித்த விபரங்களை எழுதி வாங்கப்பட்டது. பலரும் பூர்த்தி செய்து கொடுத்தனர்.

பள்ளிமாணவர்கள் சிலர் தங்களது சேமிப்பிலிருந்து ரூபாய் 1500 ஐ முதலில் வழங்கியது வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு பெரியவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியில் மு.அ.ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் பயான் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் துஆவுக்குப் பிறகு நார்சா (பிரியாணி பொட்டலம்) வழங்கப்பட்டது.

முஹல்லா மற்றும் அக்கம்பக்க தெருவாசிகள் 150- 200 பேர் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல் மற்றும் புகைப்படங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியிடப்படும்.

அதிரை பைத்துல்மால் அலுவலகம் அருகே சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

இந்திய சுதந்திர தினத்தை ஆண்டுதோறும் அதிரை பைத்துல்மால் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.அவ்வகையில் இவ்வாண்டு ஆகஸ்ட் 15,2011 அன்று நடுத்தெருவிலிருக்கும் பைத்துல்மால் அலுவலகம் அருகே கொடியேற்றி இனிப்பு வழங்கி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
Monday, August 29, 2011

சவுதி, அமீரகத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டது!

அஸ்ஸலாமு அலைக்கும்

சவூதி,மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நோன்புப் பெருநாள் (ஷவ்வால்) பிறை, 29.08.2011 திங்கள் பின்னேரம் தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி30.08.2011 செவ்வாய்க்கிழமை அன்று ,சவூதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரை பைத்துல்மாலின் நன்றிக் கடிதம்அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).அதிரை பைத்துல்மாலின் சிறப்புமிகு திட்டங்களில் ஒன்றான ஃபித்ரா அரிசி விநியோகத் திட்டத்திற்கு நிதியை வசூல் செய்து அனுப்பியுள்ளீர்கள். ஒவ்வொரு ஆண்டும் தேவையும், எதிர்பார்ப்பும் கூடுகின்ற நிலையில், ஃபித்ரா நிதியை வசூலிப்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாக உருவாகியுள்ளது. பல்வேறு பிரச்சனைகளையும், அதிகமான போட்டியையும் சந்திக்க வேண்டியுள்ளது.

இருப்பினும், திட்டத்தை ஒரேயடியாக கைவிட்டு விடாமல் முடிந்த நிதியைச் சேகரித்து அனுப்பியுள்ளீர்கள். இதற்கு எங்களது மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறோம்.தங்கள் எல்லோரது உழைப்பிற்கும், ஈடுபாட்டிற்கும் பன்மடங்கு நன்மையை வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நிறைவாக வழங்குவானாக என உளமாரத் துஆ செய்கிறோம்.

வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள்.

இஃப்தார் நிகழ்ச்சி!

நமதூர் ரஹ்மானியா பள்ளியில் நேற்று(28.08.2011) இஃப்த்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு முஹல்லா இளை​​​ஞர்கள் சிறப்பு ஏற்ப்பாடு செய்தனர் .

இதில் முஹல்லாவாசிகள் உள்பட எராளமானோர் கலந்துகொண்டனர். இதற்க்காண ஏற்ப்பாடுகளை இப்பகுதி இளைஞர்கள் சிறப்பு ஏற்பாடு செய்து இருந்தனர்.


இது போல் லாவண்யா திருமண மண்டபத்தில் அதன் நிர்வாகத்தின் சார்பில் இஃப்த்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் ஏராளமானோர்கலந்து கொண்டனர் இது போல் நகரில் பல அரசியல் கட்சிகளும் , பல்வேறு இயக்கங்க்களும், ஜமாஅத்தினரும் இஃப்த்தார் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
படம்:அபூ

நல்லிணக்கத்திற்கான நற்சேவை.


"படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும்"
எனும் நபிமொழிக்கிணங்க. சாதி, மதம், இனம், குலம் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், பாதிப்பிற்குள்ளானவர் யாராயிருந்தாலும், அவசர உதவி தேவைப்படுவோர் எவராயிருந்தாலும், அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைக்க வேண்டும் என்பது சமூக நலம் விரும்புவோரின் எதிர்பார்ப்பாகும்; நம் இந்திய அரசுச் சாசனமும் அதைத்"படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும்" தான் கூறுகின்றது. எனவே, ஜனநாயக அடிப்படையிலும் இச்சேவையானது பாராட்டத் தக்கதும் வரவேற்கத் தக்கதுமாகும்.

அதிரையின் மக்கள் தொகை, வசதி வாய்ப்புகள், தேவைகள் ஆகியவற்றைக் கருத்துள் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய அமைப்புகளுள் ஒன்றான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிரைக் கிளை நமதூருக்கு ஓர் மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு அவசர வாகனத்தின் தேவையை உணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளில் முனைந்து பாடுபட்டு வந்தது.

இவ்வாகனத்தின் தேவை உணரப்பட்டபோது, இதன் விலை ஆறு லட்சமாக இருந்தது. ஆனால், அது கைக்கு வந்து கிடைத்து வாங்கியபோது, சுமார் ஒன்பது லட்சமாக உயர்ந்துவிட்டது. எனினும், நம் சமூக ஆர்வம் மிக்க (குறிப்பாக வெளிநாடுவாழ்) சகோதரர்களின் ஒத்துழைப்பினால், அத்தொகையைக் கொடுத்து இவ்வாகனம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்!

அதன் சமுதாய அர்ப்பணிப்பு விழா, எதிர்வரும் 11 – 09 – 2011 ஞாயிற்றுக் கிழமை, மாலை ஐந்து மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெற இருக்கின்றது. அவ்வமயம், த. மு. மு. க. மற்றும் ம. ம. க. மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைகளும் பாராட்டுரைகளும் சமூக விழிப்புணர்வு உரைகளும் நிகழ்த்துவார்கள்.

கலந்துகொள்வோர்:

பேராசிரியர் டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ், MBA, MLA
S. ஹைதர் அலி (த.மு.மு.க. பொதுச் செயலாளர்)
M. தமீமுன் அன்சாரி M.A. (ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர்)
பேராசிரியர் J. ஹாஜா கனி M.A. (த.மு.மு.க. மாநிலச் செயலாளர்)

அதிரை த.மு.மு.க. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

தகவல். அபூ பிலால்

Sunday, August 28, 2011

ரயில் பாதை அமைவது எப்போது?


நாளாந்தம் எத்தனையோ செய்திகள் நம் கவனத்தில் வந்து சென்றாலும், சிலர் மட்டுமே அவற்றை அவதானித்து அதனை சம்பந்தப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதுகுறித்த கருத்துருவாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் 'சேஸ்காம்' அப்துல் ரஜ்ஜாக் காக்கா மற்றும் ஜாஃபர் காக்கா போன்றோர் நமதூருக்கு எவ்வகையிலேனும் ரயில் வழித்தடம் மீண்டும் செயல்பட வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்து வருகிறார்கள்.

சென்னை-காரைக்குடிக்கு மாற்றாக பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் ரயில் வழித்தடமும் நெருநாளைய கனவாக இருந்துவரும் நிலையில், அதுகுறித்த நாளிதல் செய்தியை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுப்பித் தந்துள்ளார்கள்.

இதுபோன்ற ஊடகச் செய்திகளை தேடும்போது எளிதில் கிடைப்பதற்காக நமது தளத்தில் ஆவணப் படுத்தி வருகிறோம். ஆகவே, அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் இத்தகைய செய்திகளை அறியத்தந்தால் நன்றியுடன் மீள்பதிவு செய்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாய்ப்புள்ளவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியின் கருத்துக்கள் பகுதியில் தமது கருத்துக்களைப் பதிந்து வைப்பது எதிர்காலத்தில் இது குறித்த கருத்துருவாக்கத்திற்கு உதவியாக இருக்கும்.
===========================
ஒரத்தநாடு: தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக்க நில அளவை மேற்கொண்டு 30 ஆண்டுகளாகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத் திறனாளி மறுவாழ்வு அலுவலகம் போன்றவற்றுக்காகவும், கல்வி, மருத்துவத் தேவைக்காகவும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தஞ்சைக்கு சென்று வருகின்றனர்.

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு செல்லும் பொதுமக்கள், வயதானவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து நெரிசலில் நாள்தோறும் பயணிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தொடர்ந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், 1980-ம் ஆண்டு இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1986-ல் இந்த வழித் தடத்தில் ரயில் பாதை அமைக்கத் தேவையான இடத்தைக் கையகப்படுத்த பல இடங்களில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, வரைபடங்களும் தயார் செய்யப்பட்டன. ஆனால், தொடர்ந்து ரயில் பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி, இந்தப் பகுதியில் உள்ள பல ஊராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ரயில்வே அமைச்சருக்கும் மனு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து ஒரத்தநாடு வட்டம், உறந்தரையன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த புலவர் மாணிக்கம் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வரை புதிய ரயில் பாதை அமைப்பதற்கு ஒரத்தநாடு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் என்னுடைய நிலங்களும் அடங்கும்.

ரயில்வே துறை சார்பாக நிலம் அளக்கப்பட்டு, அதற்கு அடையாளமாக ஊன்றப்பட்ட கல் இன்றும் அப்படியே உள்ளது. பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் இடையே ரயில் போக்குவரத்து ஏற்பட்டால்தான் இந்தப் பகுதி மக்கள் நெரிசல் இன்றி பயணம் செய்ய இயலும். இதுதொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக ரயில்வே துறைக்கும், மத்திய, மாநில அமைச்சர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார் அவர்.

தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டால், தஞ்சாவூர்- அரியலூர் இடையே ரயில் இயக்கப்படும் பட்சத்தில் ராமேசுவரத்திலிருந்து பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் வழியாக குறைந்த பயண நேரத்தில் சென்னைக்கு செல்ல முடியும்.

சிறப்புமிக்க இந்தத் திட்டம் இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. எனவே, தஞ்சை - பட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் விருப்பமாகும்.

நன்றி: தினமணி நாளிதழ்
வெ.பழனிவேல் / First Published : 27 Aug 2011 04:09:53 AM IST

தகவல்: 'சேஸ்காம்' அப்துல் ரஜ்ஜாக் காக்கா

Saturday, August 27, 2011

முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!!

நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி(27:08:2011) நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு என் ஆர் ரங்க ராஜன் அவர்களும் முஸ்லிம் லீகின் மாவட்ட தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் , பேரூர் மன்ற துணைத்தலைவர் இராம குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

இதற்க்கான ஏற்பாட்டினை நகர முஸ்லிம் லீக் தலைவர் கேகே ஹாஜ நஜ்முதீன் , மாவட்ட இளைஞர் அணிஅமைப்பாளர்அட்வகேட் முனாஃப் .மாவட்ட பிரதிநிதி எம் ஆர் ஜமால் முகமத் ,நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம் எ. சாகுல் ஹமீத் ,SBIஷேக் அப்துல்லாஹ் உள்ளிட்ட நகர நிர்வாகிகள்சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

மரண அறிவிப்பு

நடுத்தெரு கீழ்புறம் மர்ஹும் மு.மு.செ.முகமது ஸாலிஹ் அவர்களுடைய மகனும் மர்ஹும் மு.மு.செ.சேக்அப்துல்லாஹ் அவர்களுடைய சகோதரரும் என்.யு சாகுல் ஹமீத் அவர்களுடைய மச்சானும் முகமது இக்பால் ,தமீம் அன்சாரி இவர்களுடைய தகப்பனாரும் பஷீர் நெய்னா முகம்மது ,ஹாஜா ஷரிப் இவர்களின் மாமனாருமான தக்வா பள்ளியின் முன்னாள் கணக்காளர் மு.மு.செ முகமது பாருக் அவர்கள் இன்று மாலை அன்னாரின் இல்லத்தில் காலமாகி விட்டார்கள் (இன்னா......)

அன்னாரின் ஜனாஸா இன்றுநள்ளிரவு 12மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரின் மறுமை நல்வாழ்விற்கு துஆ செய்ய வேண்டுகிறோம்.

மக்காவில், உலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) துவக்கம், (காணொளி)!                                  
ساعة مكة المكرمة
உலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) மக்காவில் முறையாக துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இக்கடிகார கோபுரம் செயல்பட்டு வந்தாலும் முறையாக நான்கு புறமும் செயல்படும் வகையில்  இந்த வருடம் ரமளான் மாதத்தில்  துவங்கப்பட்டது.

லண்டனின் பிரபல பிக் பென் கடிகார கோபுரத்தை விட இது ஆறு மடங்கு பெரியது, பலவிதமான ஒளி விளக்குகளால் ஒளிரும் இந்த கடிகாரத்தில் உள்ள நேரத்தை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்து  துல்லியமாக  பார்க்க முடியும்.

புனித மக்காவில் லைலதுல் கத்ர் இரவு:இரண்டு மில்லியன் மக்கள் பிரார்த்தனை!


புனித ரமலானின் க்ளைமாக்ஸ் இரவான லைலதுல் கத்ர் (27 ஆம் இரவை)சிறப்பிக்கும் வண்ணம் சுமார் இரண்டு மில்லியனுக்கு மேல் புனித மக்காவில் உலகெங்குமிருந்து வந்த யாத்ரீகர்கள் ஒன்று கூடினர். சென்ற வருடத்தை விட இவ்வருடம் தலை பிறையிலிருந்தே புனித மக்காவில் உம்ரா யாத்ரீகர்களின் கூட்டம் அலை மோத துவங்கிவிட்டது.

அதன் அடிப்படையில் நேற்று (26.08.2011) வெள்ளிக்கிழமை பின்னேரம் (சவூதி கணக்குப்படி ரமளான் பிறை 27 ஆம் இரவில்) தராவிஹ் மற்றும் க்யாமுள் லைல் தொழுகையை கணக்கில் கொண்டு, வெள்ளிக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் புனித கஃபாவை சுற்றி தஞ்சம் அடைய துவங்கிவிட்டன.


வெளிநாட்டு யாத்ரீகர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு, சவூதி அரசு பல பாதுகாப்பு ஏற்பாடுகளை புனித மக்காவை சுற்றி செய்திருந்தது. அதன் வகையில் வாகனங்களுக்கு வழக்கமான எல்லையிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அனுமதியில்லை, கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மக்கா மற்றும் ஜித்தாவை சுற்றியுள்ள உள்ளூர் வாசிகளுக்கு, மக்காவிற்கு வருவதை தற்போதைக்கு தவிர்க்குமாறு எஸ்.எம்.எஸ் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டன.

நமதூரை சார்ந்தவர்கள் சிலர், புனித உம்ராவை நிறைவேற்ற ஊரிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்து, இப்புனித இரவை சிறப்பித்ததோடு, இஃதிகாஃப் இருந்து வருகின்றனர்.

ஹாஜிகளின் எண்ணிக்கை கூடுகிறது !

இந்தியாவுக்கான ஹஜ் பங்கு ஒதுக்கீட்டை சவூதி அரேபியா அதிகரித்துள்ளது. 10 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஹஜ்ஜுக்கான இந்தியாவுக்குரிய ஒதுக்கீடு 1,70,491 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,60,491 இடங்களே ஒதுக்கப்பட்டிருந்தன.

புதிதாக கிடைத்துள்ள ஒதுக்கீட்டு இடங்களை மத்திய ஹஜ் கமிட்டி மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு பங்கீடுச்செய்யும்.இதனால் நமதூரில் இருந்து விடுபட்ட மனுதாரர்கள் சில பேர் பயனடைய வாய்ப்பு உருவாக்கி உள்ளது. இதுவரை கிடைத்துள்ள மனுதாரர்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கான ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும்என மத்திய ஹஜ் கமிட்டியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது .

40 ஆயிரம் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சவூதி அரேபியா நாட்டு ஹஜ் துறை அமைச்சர் புஆத் ஃபர்ஸியுடன் ஜித்தாவில் வைத்து நடத்திய சந்திப்பில் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Friday, August 26, 2011

சுகாதார சீர்கேட்டில் தக்வா பள்ளி

நமதூர்  தக்வா பள்ளியின் பின்புறம் உள்ள தாழ்வான பகுதியை நிரப்புவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து டிராக்டர் மூலம் மண் அடித்தனர். இந்த மண் சாக்கடை கலந்த மண்ணாகவும் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுகள் நிறைந்ததாகவும் உள்ளது. மேலும் தற்பொழுது ரமளான் காலம் என்பதால் பள்ளியில் காய்ச்சப்படும் கஞ்சியின் கழிவு மற்றும் குடிநீர் பாக்கெட் உள்ளிட்டவைகளை பள்ளியின் வளாகத்திலேயே கொட்டுவதால் பள்ளியில் கொசுத்தொல்லை, துர்நாற்றம் அதிகரித்துள்ளது .
இதனால் பள்ளியில் தொழுகைக்கு வருபவர்கள் மற்றும் இஃதிகாஃப் இருப்பவர்கள் மிகவும் பாதிக்க படுகின்றனர் 

மேலும் பள்ளியின் கழிவு பொருட்களில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பியுள்ளதால் பள்ளிக்கு அதிகளவு வருமானம் ஈட்டி தரும் தென்னை மரங்களின் வேர்களுக்கு நீர் செல்வதை தடுக்கிறது. இதானால் தென்னை மரங்கள் பட்டுப் போகும் சூழல் உருவாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது சம்பந்தமாக முஹல்லாவாசிகள் பல முறை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பள்ளியின் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்பது வேதனையான விஷயம் என்கிறார்கள். இறைவனின் இல்லத்தை தன்னுடைய வீட்டை விட சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டியது நிர்வாகிகளின் முக்கிய பொறுப்பாகும். உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை களைந்து விட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து இறைப் பொருத்தத்தை பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம். 

"சுத்தம் தொழுகையின் திறவுகோலாகும்" (நூல்: அஹ்மத், திர்மிதி, அபூ தாவூத், இப்னு மாஜா)
''அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்'' (அல்குர்ஆன் 5:6)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "சுத்தம் ஈமானில் பாதியாகும்"(அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
இந்த தகவல் யாரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டுவதற்கு  இடப்பட்டது அல்ல !
தகவல் -அபூ

அதிரை மீனவர்கள் மகிழ்ச்சி !

நமதூர் கடல் பகுதிகளில் கனவாய் மீன்கள் சீசன் தொடங்கியுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிராம்பட்டினம் பகுதிகளில் மீனவர்களின் வலையில் கனவாய் மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன. கனவாய் மீன்களில் ஆக்டோபஸ்,பேபி சுருட்டி, சி எப் ஆகிய வகைகள் உள்ளன.

இந்த 4 வகை கனவாய் மீன்களும் அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை கடற் பகுதிகளில் அதிகம் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனவாய் மீன்கள் வரத்து அதிகம் உள்ளதால் ஏற்றுமதியும் தீவிரமடைந்துள்ளது.

இது பற்றி அதிராம்பட்டினம் மீனவர்கள் கூறுகையில்:
இந்த வகை கனவாய் மீன்கள் சாப்பிடுவதற்கு ஆட்டுக்கறி போன்று இருக்கும் மேலும் இது மருத்துவ குணமுடைய மீன்கள். இது குறுப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்க கூடியது. இதனால் இவை ஜப்பான், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இப்போது அக்டோபஸ் ஒரு கிலோ ரூ 60க்கும், பேபி கனவாய் ரூ 40க்கும், சுருட்டி ரூ 150க்கும், சி எப் ரூ 200க்கும் விற்கப்படுகிறது. என்னதான் சீசனா இருந்தாலும் நம்மூரு மார்க்கெட்டில் விலை தாறுமாறாகத்தான் இருக்கும்... என்பதை நாம் அனைவரும் அறிவோம் !

Thursday, August 25, 2011

மரண அறிவிப்பு .

அஸ்ஸலாமு அலைக்கும்
சால்ட் லைனை சேர்ந்த, மர்ஹூம் அஹமது ஹாஜியார் அவர்களின் பேரனும், சென்னை (NAINA &CO) பஷீர் அஹ்மத் அவர்களின் மகனும்
நைனா.மற்றும் முஹம்மது, ஆகியோரின் சகோதரரும் ,அர்ஷத் அவர்களின் தந்தையும் மற்றும் ஏரோ வேர்ல்ட் ட்ராவல்ஸ் யூசுப் அவர்களின் மைதூனருமாகிய முஹம்மது மீராஷா அவர்கள் இன்று நள்ளிரவு 1.௦௦00 மணியளவில் சென்னையில் வஃபாதாகிவிட்டர்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 12.00 மணியளவில் ராயபேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, August 24, 2011

தனித்திரு விழித்திரு பசித்திரு!

தனித்திரு விழித்திரு பசித்திரு

நம் உடலையும் மனத்தையும் பக்குவப்படுத்துவதற்கு

இம் மூன்றும் அவசியம். இறைவன் முஸ்லிம்களுக்கு
மிகக் கிருபை செய்திருக்கிறான் ரமலான் என்னும்
மாதத்தைத் தந்து.

இம்மாதத்தில் முஸ்லிம்களுக்கு இம்மூன்றின் பயிற்சி
கிடைக்கிறது. அது மட்டுமல்ல பொறுமை,இறையச்சம்,
பசியுணர்தல்,ஏழ்மை நிலை உணர்தல் இன்ன பிற
பண்புகள் கிடைக்கப் பெறுகின்றன.

If you lost your money : nothing is lost
If you lost your health : something is lost
If you lost your characteristic : everything is lost

என்று சொல்லப்படுவதுண்டு. ஆக ஒவ்வொருவருக்கும்
பணம் காசை விட கேரக்டர்தான் முக்கியம்.
பணம் சம்பாதிக்க படாத பாடுபடும் நாம் என்றாவது
பண்பு' பெற பாடு பட்டதுண்டா ?


நோன்பு வைத்திருக்கும் ஒருவர் தனித்து இருக்கிறார்.
நோன்பு திறப்பதற்கான உணவு பதார்த்தங்கள்
தயாரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
பசிக்கவும் செய்கிறது. ஆனால் சாப்பிடுவதில்லை.
யாரும்தான் பார்க்க வில்லையே சிறிது சாப்பிட்டால்
என்னவாகி விடும் என்று கூட யோசிப்பதில்லை
காரணம் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற
உணர்வுதான் அவரை அப்படி கட்டிப் போட்டிருக்கிறது.

இதற்குத்தான் 'இறையச்சம்' என்பார்கள். இந்த
இறையச்சம் ஒருவருக்கு வாய்த்து விட்டால் அவர்
எல்லாப் பாவங்களையும் விட்டுத் தப்பித்து விடுவார்.

நோன்பு வைத்தவருக்கு இரண்டு சந்தோஷங்கள்
என்பதாக இஸ்லாம் கூறுகிறது.ஒன்று நோன்பு திறக்கும்
போது மற்றொன்று இறைவனைச் சந்திக்கும் போது.

நோன்பு பிடிக்காமல் நோன்பு திறப்பவர்களோடு சேர்ந்து
உண்டு பாருங்கள் அவ்வளவு சந்தோஷம் கிடைக்காது
(அது குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிக்கும் அரசியல்
வியாதிகளுக்கு ஓட்டு வேண்டுமென்றால் கிடைக்கலாம்
ஆனால் நோன்பு திறக்கும் சந்தோஷம் மட்டும் கிடைக்காது)

நோன்பு திறக்கும் போது சந்தோஷம் உண்மையில்
நோன்பு பிடித்தவர்களுக்கே

அனைத்து சகோதர நோன்பாளிகளுக்கும் எமது
அட்வான்ஸ் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஆக்கம்

இப்னு ஜூபைர்

Tuesday, August 23, 2011

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அதிரையில் ஆர்ப்பாட்டம்!


ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ராம் லீலா மைதானத்தில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக அதிரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


நகர தமுமுக வின் வேண்டுகோள் !

அன்பார்ந்த அதிரை வாசிகளுக்கு நகர தமுமுக வின் வேண்டுகோள்.
நமதூரின் முக்கிய தேவையான அவசர ஊர்தி(ஆம்புலன்ஸ்) அர்பணிப்பு விழா வருகின்ற 11-09-2011,ஞாயிறு அன்று, அதிரை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தலைசிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கிறார்கள், அதற்க்கான அழைப்பிதழை இங்கு பதிந்திருக்கிறோம் இதையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் கலந்துகொள்ள அழைக்கபடுகிறார்கள் .

நினைவலைகள்: மறக்க இயலாத சம்பவங்கள்!


"ஆஹா… நோன்பாம்… நமக்கு இனி ஜாலி... ஸ்கூல் பகுதி நேரம் தான்" என முழங்க ஒரு மாதம் ‘சட்டி கஞ்சிதான்’ எனத் துள்ள, நம்ம நண்பர்கள். நோன்பு திறக்கும் நேரம் பார்த்து பள்ளிவாசலுக்கு சென்றால் எங்களைவிட மூத்த செட்கள் பள்ளியினுள் விடாமல் தடுக்க, சின்ன பசங்க அனுமதி இல்லை என கூற, அல்லது பெரியவர்கள் பள்ளியில் இருக்கும் நகரா கம்பை எடுத்து துரத்த, அந்த கஞ்சிக்காக "இல்ல நாங்க நோம்புதான்" என முகபாவணைகள் செய்ய, உதடுகளைக் காய வைத்து நடிக்க, கடைசியில் அந்த குளிர்ந்த மண் சட்டியில் ஊற்றி வைத்த கஞ்சியைச் சுவைக்க.... இரவில் சஹர் நேரம் வரை விளையாட்டுதான்.

கிளித் தட்டு எனச் சொல்லக்கூடிய அருமையான பொழுது போக்கு விளையாட்டு. இந்திய கிராமிய விளையாட்டான ‘கபடி, கோ-கோ’ என சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய விளையாட்டுகள் இப்படியாக நேரங்கள், நாள்கள் செல்லும். நாளைக்குப் பெருநாள்... நமக்கு ஜாலிதான் என்று துள்ள, அஸர் நேரம் நெருங்க கட்டெறும்புகள் போல சாரை, சாரையாக செம்மறியாடுகள் வருகை, புளிய மரத்தடியில் கசாப் கடைகள் விழா, அக்காலங்களில் சொந்தம் பந்தங்களுக்கு வாங்கி கொடுப்பது என விற்பனை இரவு முழுவதும் இருக்கும். மறுபுறம் பெரியாப்பா, பெரியம்மா, மாமி, மாமா, வீடு என வசூல் வேட்டைகள் (25,50 காசுகள் கிடைக்கும்)

வசூல் வேட்டையை முடித்து விட்டு முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கல்கோனாவை வாங்கி சாப்பிட்டு விட்டு, பூணைக் கொள்ளைக்கும் போய் வருவோம். சிலர் தியேட்டருக்கும் சென்று வருவர்.

பாவம்! இன்றைய இளைய தலைமுறை! எதைப்பற்றி கூற உங்களுக்கு?

நம்ம ஊரில் பழமை வாய்ந்த புளிய மரம் கடற்கரைத் தெருவில் உள்ளவைதான். இவற்றில் ஏறி விளையாடுவதில் குரங்கு கூட எங்களிடம் தோற்று போகும். அந்த அளவுக்கு மரம் தாவுவோம். சில நேரங்களில் தவறி விழுவதும் உண்டு…

நாகூர் செல்ல பல முயற்சிகளுக்கு பிறகு எங்களுக்கு அனுமதி கிடைக்க.... கூடும் எங்கள் பட்டாளம். அதிரை நுழைவாயில் ரயில்வே நிலையத்தில் கரும் புகையைக் கக்கிக் கொண்டு வந்து சேரும் புகைவண்டியில் மக்கள் கூட்டங்கள் மொய்க்க நாங்களும் அந்த கூட்டத்தில் முண்டியடித்து இருக்கையைப் பிடிப்போம். ரயில் கிளம்பியவுடன் குரங்கு சேட்டைகள் ஆரம்பம். அதாவது ஓடும் ரயிலிலேயே பெட்டி விட்டு பெட்டி தாவுவது! அந்த இனிமையான பசுமையான புகை வண்டியின் சப்தங்கள் என்னால் மறக்க முடியவில்லை. முடிந்த அந்த இரயில் பயணங்களையும்தான்!

இனிமையான காலம் எங்களுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு மறைந்த காலங்கள் சற்று எங்களை மேலே உயர்த்தியது. எங்கள் படை படிப்பில் கவனம் செலுத்தியது. தொழுகை, மதரஸா, ஒழுக்கம், மரியாதை, இயற்கை உணவு மற்றும் ஒழுக்க முறைகள், சுத்தமாக இருத்தல், உடைகளில் கவனம், கால்பந்து, கிரிக்கெட், முறையான உடற்பயிற்சிகள் மற்றும் பெற்றோர் புத்திமதிகள், மரியாதைக்குரிய ஆசிரியர்கள், மேற்கூறிய அனைத்து பக்கமும் கவனம் செதுத்தப்பட்டது.

எங்கள் கூட்டணி மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கி அல்லாஹ்வின் உதவியால் ஒரு பட்டதாரியாக உருவாகி வெளி உலகை எட்டிப் பார்க்க நேர்ந்தது. அல்லாஹ்வின் உதவியால் வேலை வாய்ப்புகள் கிடைத்து வாழ்வில் உயர்வு கிடைக்கவும் குடும்ப வாழ்க்கையிலும் உயர முடிந்தது. 

அன்று சிறு வயதில், வாலிப வயதில் விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், ஆரோக்கிய உணவு, ஒழுக்கம், இபாதத், பெரியவர்களுக்கு மரியாதை மற்றும் சொல் கேட்பது போன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டதால் அல்லாஹ் உதவியால் இன்றும் அதை கடைபிடிக்க முடிகின்றது.

இப்படியாக நமது வாரிசுகளும்……………….! ………?.................!!!...???

தொடரும்...


3. நினைவலைகள் : பரபரப்பும் ஆபத்தும் நிறைந்த விளையாட்டுகள்

4. நினைவலைகள்: கடல் பயணமும் மழைக்காலமும்!


ஆக்கம் :  எம். அக்பர் அலி (அபுதாபி)

கற்றாரே கண்ணுடையார்!


பதிமூன்று வருட (பாலை) வன வாசத்துக்குப் பின்.... 

அரபுநாட்டு வேலை என்னும் மாயைக்குப் பதிமூன்று வருடங்களைப் பலி கொடுத்த அப்பாவியின் (உண்மைக்) கதை.

தமிழர் தான் அவர். சுப்ரமணியம் என்று பெயர். 38 வயதில் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி விசாவுக்குப் பணமும் கட்டினார். அது ஃப்ரீ விசா எனப்படும் திறந்த வேலைவாய்ப்பை வழங்கும் விசா. அரபுநாட்டில் இறங்கியதும், அரசாங்க சம்பிரதாயங்களை மட்டும் விசா கொடுத்தவர் முடித்துக் கொடுப்பார்.  எங்கும், எவ்வித வேலையும் தேடிக்கொள்ளலாம் என்பது இதன் வசதி. ஆனால், மாதந்தோறும் ஒரு தொகை கப்பம் கட்டியாக வேண்டும் - விசா கொடுத்த அரபியருக்கு.

முதலிரு வருடங்கள் சுப்ரமணியனுக்கு எவ்விதப் பிரச்னையும் இருக்கவில்லை. கஃபீல் எனப்படும் அந்தப் பொறுப்பாளர் எல்லா சம்பிரதாயங்களையும் ஒழுங்குறவே செய்திருந்தார்.  அதன் பிறகு தான் சிரமங்கள் அவரைச் சூழத் தொடங்கின. அந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அந்தப்  பொறுப்பாளரை காணவில்லை. எங்கு போனாரோ தெரியவில்லை. தேடி அடையவும், விவரம் பெறவும்   இயலாமல் போனது. சுப்ரமணியம் படித்தவரல்லர். மேலும், சவூதி  சட்டதிட்டங்கள் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தை வயிறு உணர்த்த, அந்த  உந்துதலில் கிடைத்த சிறு சிறு வேலைகளில் ஈட்டிய சிறுதொகை வேளைதோறும் வயிற்றுக்கே போதும் போதாது என்று போய்க்கொண்டிருந்த நிலையில்,   மெல்ல மெல்ல குடும்பத் தொடர்பும் அறுந்துப் போனது.

முடியாத நிலையில் சுப்ரமணியம் கிடந்தபோது,  சில வருடங்களாகத் தொடர்பு இல்லாததால் இவர் கதை முடிந்திருக்கும்; இறந்துவிட்டார் என்றே முடிவு கட்டிவிட்டார்கள் குடும்பத்தார். மனைவி, இரு பிள்ளைகள் என்ற சிறு குடும்பம். கைக்குழந்தையாய் விட்டுவந்த மகளுக்கு இப்போது 13 வயது.  வறுமை துரத்தியதால் மகனும் பள்ளிப்படிப்பை கைவிட்டு பண்ணைக் கூலியாளாகப் போய் விட்டான்.

முடக்கு வாதம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் நலிவுற்று நோயுற்ற சுப்ரமணியம் பற்றி தபூக் இந்தியன் கம்யூனிட்டி என்னும் நற்பணி அமைப்பினர்க்குத் தெரிய வந்தது.  அதன் பிரதான உறுப்பினரான அலீ மாஸ்டர் உடனடியாக ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரகத்தின் கதவுகளைத் தட்டினார்.  துணை தூதரக மூத்த அதிகாரி எஸ்.டி. மூர்த்தி உடனடியாகச் செயலில் இறங்கினார்.  ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் சிராஜ் போன்ற நல்லுள்ளங்கள் நிதிஉதவி திரட்டித் தர, மருத்துவமனையில் உடல் தேறிவந்தார் சுப்ரமணியம்.  

உடனடியாக அவரை ஊருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை ஏற்று, சம்பந்தப்பட்ட சவூதி குடிபுகல்துறை, தடுப்புக்காவல் துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பைப் பெற்று செயற்பட்ட தூதரக மூத்த அதிகாரி மூர்த்தி பாராட்டுக்குரியவர்.

ஒருவழியாக சுப்ரமணியம் ஊருக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் இப்படி எத்தனை எத்தனையோ சுப்ரமணியங்கள் வெளிநாட்டு மோகம் கொண்டு,  வந்து கொண்டும் (கஷ்டப்பட்டுப்) போய்க்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

கடன் கடக்கவே கடல்  கடக்கும் சுப்ரமணியங்களுக்கிடையே வாழ்வில் நல்லதொரு இடம் கிடைப்பின்  மட்டுமே கடல் கடக்கும் கொள்கையுடைய மணியானவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். என்ன வேறுபாடு என்றால் கல்வியறிவு.

ஆம். கற்றாரே கண்ணுடையார்.

ஆக்கம் : இப்னு ஹம்துன்

ஆபத்தான மின் கம்பம்,அலட்சியத்தில் அதிரை மின் வாரியம்..!


அதிராம்பட்டினத்தில் உள்ள புதுமனைத்தெரு -செக்கடிக்குளம் வடக்கு கரை பக்கம் உள்ளது நீங்கள் காணும் மின் கம்பம்.அது மிகவும் பழுதடைந்து எந்த நேரமும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.இதை மின்வாரியமோ இதுவரை கண்டு கொள்ளவில்லை.இந்த ஆபத்தான மின் கம்பத்தை உடன் அகற்றவேண்டும்,இல்லையெனில் பொது மக்கள் திரண்டு அரசுக்கும்,மின் வாரியத்துக்கும் எதிரான போராட்டங்களில்  குதிக்க நேரிடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.எனவே,பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று அதை உடனே மாற்றித்தர வேண்டுகிறோம்.

இதை பொதுமக்கள் மட்டுமின்றி,ஊரில் உள்ள எல்லா இயக்கங்களும்,ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் அரசு மற்றும் மின் வாரிய கவனத்துக்கு கொண்டு சென்று -ஆவன செய்ய வேண்டும்.

நன்றி: Peace Train

Monday, August 22, 2011

தொலைப்பேசி பில் தகவல் !

நம் அதிரையில் பல்வேறு செல்பேசிகளுக்கு மத்தியிலும், பி.எஸ்.என்.எல்.லண்ட்லைன் தொலைபேசி வசதி அதிக அளவுபயன்படுத்தப்படுகிறது.

இதற்க்கு காரணம் அதிக அளவு இன்டர்நெட் பயன்பாடு நமதூரில் அதிகளவு உள்ளது தான்

கடந்த சில வருடமாக புதிய முறையில் ,தொலைபேசி பில் வந்து கொண்டு இருக்கிறது.


இதனால் நம் மக்கள் கட்டண தொகை எவ்வளவு என கணக்கிட போதுபோதும் என்றாகி விடுகிறது .

அந்த அடிப்படையில் புதிதாக நமக்கு அனுப்ப படுகின்ற பில்லின் மாதிரியை இங்கு பதிந்துள்ளோம் இந்த படத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டு இருக்கும் இடத்தில் உள்ள "Amount payable"(செலுத்த வேண்டிய தொகை) -ல் என்ன தொகைபோடப்பட்டுள்ளதோ,அந்த தொகை தான் நாம் பி.எஸ்.என்.எல்-லுக்கு கட்ட வேண்டிய தொகை ஆகும்.

ஆனால் சிலர் அறியாமல்,கீழே "Total charges"(மொத்தக் கட்டணம்)-ல் போடப்பட்டுள்ள தொகையை பில் தொகைஎன தவறுதலாக நினைத்துக் கொள்கின்றனர்.

,

எனவே,இதைப் படிக்கும் சகோதர,சகோதரிகள் தங்கள் டெலிபோன் பில்லில் "Amount payable"(செலுத்த வேண்டிய தொகை) -ல் என்னதொகை போடப்பட்டுள்ளது என்று கவனித்துப் பார்த்து பில் தொகையை செலுத்தலாம்.

தகவல்: அமீரகத்திலிருந்து... ஹாஜா.

Sunday, August 21, 2011

லைலத்துல் கதர் இரவின் சிறப்புகள்!

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

“இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத
தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்'. (அல்குர்ஆன் 97:1-3)
1. சிறப்புகள்:

அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு
ரமதான் மாதத்தில் ஒரு இரவு
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு

2. அது எந்த இரவு?:

ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)

'நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)

மேற்கண்ட ஹதீஸ்கள் ரமதானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

'லைலத்துல் கத்ர் இரவை ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இந்த ஹதீஸில் ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.

3. லைலத்துல் கத்ரை தேடுவது:

'நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)

4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:

'ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்' இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)

5. (இஃதிகாஃப்) பள்ளியில் தங்குதல்:

'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்'. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)

6. இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)

7. லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'

லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!