Tuesday, January 31, 2012

தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம்!


அதிரையில்  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா 'மகாத்மா காந்தி' அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று தீவிரவாத எதிர்ப்பு  நாள் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளி அருகில்  ஷஹித் பழனிபாபா அரங்கத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது . 


நகர தலைவர் சகோ.ப.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில்  நகர செயலாளர் சகோ.A.T. அப்துல்லாஹ் B.com ,D.C.P அவர்களின் வரவேற்ப்பு உரையுடன் விழா துவங்கியது.

சிறப்பு பேச்சாளர்களாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின்   மாநில செயற்குழு உறுப்பினர் சகோ.A .பக்ருதீன் அவர்களும் ,ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயலாளர் சகோ.முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்களும் SDPI  யின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்களும் இந்தியாவில் தீவிரவாதம் யாரால் உருவாகிறது என்பதை பற்றி மிக சிறப்பான  முறையில் உரை நிகழ்த்தினர்  

இதில் நூற்றுக்கணக்கான  ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

புதிய ரேஷன் கடைக்கு பிலால் நகர் முஹல்லா சார்பாக நிலம் ஒதுக்கீடு !

அதிரையில் உள்ள ஒன்பது முஹல்லாக்களில் “ஹஜரத் பிலால் நகர்” முஹல்லாவும் ஓன்று. ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு மக்கள்கள் வசிக்கக்கூடிய இப்பகுதியில் பெரும்பாலும் ஏழை எளியோர்கள்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.இப்பகுதியில் ரேஷன்கடை இல்லாத காரணத்தால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலை தூரத்தில் இருக்கக்கூடிய அங்காடியில் அனைவரும் பொருள்கள் வாங்கிச் செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதால், மிகவும் சிரமத்துக்குள்ளாகின்ற இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு “ஹஜரத் பிலால் ( ரலி ) நகர் ஜமாத்” நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ரேஷன்கடை அமைப்பதற்கு அரசுக்கு வழங்குவது என தீர்மானம் செய்து, சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோர்களிடம் “ஹஜரத் பிலால் ( ரலி ) நகர் ஜமாத்” சார்பாக கோரிக்கை மனு ஒன்றை வழங்கி, இது சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மாவட்ட மற்றும் வட்ட உணவு வழங்கல் அதிகாரிகளுக்கு ( DSO மற்றும் TSO ) அனுப்பி ஆவணம் செய்ய அவர்களை கேட்டுக்கொண்டார்கள்.

சுகாதார முன்னேற்றத்திற்கு மாணவர்களே அடித்தளம் (காணொளி)

சுகாதார முன்னேற்றத்திற்கு மாணவர்களே அடித்தளமிடவேண்டும், குப்பை மற்றும் ப்ளாஸ்டிக் பைகளை ஒழிக்க மாணவர்கள் வித்திடவேண்டும் என கா.மு.மேல்நிலை பள்ளியில் பேரூராட்சி தலைவர்.சகோ. எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் ஆற்றிய உரை (காணொளி)

Monday, January 30, 2012

ஹிஜாப்

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித் தனம்ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும்
கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதேசுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.
'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பு இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் பார்ப்போம்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால்அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை. அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர். ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி
பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன. இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர்ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.
முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் என்னும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
 
பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம். எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
 
நமதூரில் பெண்களைப்போல ஆண் புர்கா அணிந்து வந்து கேவலப்பட்டு விட்டான். நம் மார்க்கம் என்ன சொல்லுகிறது என்றல்லாம் தெரியாமல் இருக்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் தான் புர்கா  என்பது இருந்து வந்தது இப்போ அந்த நிலைமை மாறி ஆணும் புர்காவை போட ஆரம்பித்து விட்டார். புர்காவை அணிந்து நம் இஸ்லாம் மார்க்கத்தை ஆணும்,பெண்ணும் கேவலப்படுத்துகிறார்கள்,கேவலம்படுகிறார்கள்.         
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும்பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.


ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.


கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நல்ல தமிழ் எழுதுவோம்! - அறிமுகம்


[எழுத்தாளர்களின் தரமும் திறனும் உயர்த்தும் தொடர் இது.  இத்தொடர், முன்பு ‘மனாருல் ஹுதா’ என்ற பத்திரிகையில் வெளிவந்து, என் மீது காழ்ப்புணர்வு கொண்ட நமதூர் அதிமேதாவித் ‘தப்லீக்’ தொண்டர்களால், ‘தமிழ்’ பேச எழுதத் தெரியாத அப்பத்திரிகையின் ‘ஸ்தாபகர்’ (பெரிய ஹஜரத்) அவர்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகும்.  மார்க்க அறிஞர்களின் எழுத்துத் திறனை வளர்க்க வேண்டும் என்ற தூய நோக்கில் தொடங்கப்பட்ட இத்தொடரில், மார்க்கத்திற்கு எதிரான ஏதாவது கருத்துகள் அடங்கியுள்ளனவா என்பதை வாசகர்கள் படித்துப் பார்த்து, நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.  இனித் தொடர்வோம்.....]

*
உயர்வான இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிய கருத்துகள் சிறப்பான – பிழையில்லாத தமிழ் நடையில் எழுதப்பட்டு வந்தால், நல்ல இலக்கியங்கள் உருவாகும். (இதற்கோர் எடுத்துக்காட்டு, அண்மையில் வெளிவந்த ‘தோழர்கள்’ எனும் நூல்.) அவற்றைக் கொண்டு ‘த அவா’ செய்தால் நிறைந்த பலனைக் காணலாம் என்பது எனது கருத்து.  இதன் விளைவாக உருவானதே இக்கட்டுரைத் தொடர்.

எழுத்தாளர்களுக்குச் சுட்டிக் காட்டித் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிழைகள் ஏராளம் உள்ளன.  அவற்றுள், என் பார்வையில் பட்ட சிலவற்றை மட்டும் தொகுத்துரைக்க முயல்கின்றேன்.  இத்தொடரில் சுட்டிக் காட்டப்பெறும் எழுத்து, சொல், கருத்துப் பிழைகள் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், தமிழ்ப் புலமையாளர்கள் சிலரின் எழுத்தோவியங்களிலும் இடம்பெற்றிருக்கக் கூடும்!  தக்க சான்றுகளுடன் அவற்றையும் சுட்டிக் காட்டுவேன்.  திருத்திக்கொள்வது நன்று.  வாசகர்களின் கருத்துகள் வரவேற்கத் தக்கவை. 

அல்லாஹ் அவர்களை (!):  ‘அல்லாஹ்’வை அவன் என்று ஒருமையில்தான் அழைக்க வேண்டும்.  அல்லாஹ்வுக்குப் பிறகு பன்மைச் சொல் வந்தால் பொருள் மயக்கம் வர வாய்ப்புண்டு.  எ.கா: ‘அல்லாஹ் அவர்களை மன்னிக்க வேண்டும்’ என்ற சொற்றொடரில் பொருள் மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதை முறையாக எப்படி மாற்றி எழுத வேண்டும்?  ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும்’ என்று மாற்றி எழுதினால் பொருள் மயக்கம் தவிர்க்கப்படும்.  அல்லது, அல்லாஹ் என்ற சொல்லுக்குப் பின்னால் ஒரு காற்புள்ளியை (கமாவை) இட்டுவிட்டாலும் பொருள் மயக்கம் தவிர்க்கப்படும். 

நபிகளார்:   ‘நபிகள் நாயகம்’ என்பது, நபிகள் அனைவருக்கும் நாயகம் (தலைவர்) அல்லது நபிகளின் நாயகம் ஆனவர் என்ற பொருளில் ஆளப்படும் சொற்றொடர் ஆகும்.  இதில் உள்ள ‘கள்’ பன்மை விகுதியை இன்று பலர் (நபிகளார் என்று) ஒருமையிலேயே பயன்படுத்துகின்றனர்!  ‘நபியார்’ என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.  அதை விடுத்து, ‘நபிகளார்’ என்று எழுதுவது  தவறு.  அதற்குப் பகரமாக, ‘நபியவர்கள்’ என்று எழுதலாம்.                                            

(திருத்தங்கள் தொடரும்....)

- அதிரை அஹ்மது

Sunday, January 29, 2012

“ V.A.O “ வின் பணிகள் என்ன ?


கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

என்னதான் பணிகள் ?

1. பட்டா பெயர் மாற்றுதல்.

2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

11. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.

இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
"கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும்.


கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) போன்றோர்கள், பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறும் பட்சத்தில் அவர்களின் மேல் துறைச் சார்ந்த நடவடிக்கை எடுக்கக் கீழ்க்கண்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்ளலாம்.

திரு. பாஸ்கரன் IAS
மாவட்ட கலெக்டர் - தஞ்சாவூர்
கச்சேரி ரோடு, தஞ்சாவூர் – 613 001
தொலைப்பேசி எண் : 04362 – 230102
மின்னஞ்சல் முகவரி :
collrtnj@nic.in

மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ( DRO )
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தொலைப்பேசி எண் : 04362 230150 மின்னஞ்சல் முகவரி : dro.tnj@tn.gov.in மற்றும்
dro.tntnj@nic.in


இறைவன் நாடினால் ! தொடரும்......................

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் அதிரை பிரமுகர்கள் சந்திப்பு


காரைக்குடி -திருவாரூர் அகல ரயில் பாதை சம்பந்தமாக நமதூரின் முக்கியஸ்தர்கள் இன்று (29.1.2012)காரைக்குடியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் இல்லத்தில் சந்தித்தனர்.

இமாம் ஷாஃபி பள்ளியின் தாளாளர் M.S.T.தாஜுதீன் , M.K.N டிரஸ்ட் தாளாளர் அஸ்லம் , அதிரை சேர்மன் S.H.அஸ்லம் , CHASECOM அப்துல் ரஜாக் , காதிர் முகைதின் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் ஆகியோர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நமது பகுதி புறக்கணிக்கப்படுவதை நமதூர் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் ARDA சார்பாகவும், அதிரை பேரூராட்சி தலைவர் அவர்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது மத்திய ரயில்வே அமைச்சரிடம் இது தொடர்பாக தாம் எடுத்து சொல்வதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்
.


நன்றி: அதிரைபிபிசி

கடையநல்லூர் பெண்களின் மெளனப் புரட்சி

பெண்கள் மாநாட்டுத் துளிகள்
கடையநல்லூரிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை(ITW)


பெண்களுக்கான வாராந்திர வகுப்புகள், நூலகம், நூல் விற்பனை நிலையம்,கம்ப்யூட்டர் சேவைக்கல்வி, தையல் பயிற்சிப் பள்ளி, சிறுசேமிப்புக் கடனுதவி,தாவா நெட், ஹைர உம்மத் காலாண்டிதழ்,எனப் பல தளங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
சமீப காலமாக பெருகி வரும் கள்ளக் காதல், ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக இந்த அறக்கட்டளை ‘ஆதலினால் காதல் செய்யாதீர்’ என்ற தலைப்பில் ஹைர உம்மத் சிறப்பிதழை வெளியிட்டது.தமிழகம் முழுவதும் மிகப்பெரும் விழிப்புணர்வு அலைகளை ஏற்படுத்திய இவ்விதழ் தற்போது IFT யின் வெளியீடாக புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

மாநாடு K.A.ஃபாத்திமாவின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் தொடங்கியது. மாநாட்டு அமைப்பாளர் V.I.ஆபிதா பர்வீன் தொடக்க உரையாற்றினார். ‘பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கான சான்றுதான் இந்த மாநாடு.இது இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை.இந்தத் தீமை முற்றிலும் ஒழியும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு மாதங்களில் ‘ஒழுக்கத்தை நோக்கி..’ என்ற கேம்பைன் நடத்த உள்ளோம்’ என்று கூறினார்.

‘சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் ஃபாத்திமா ஜலால், பெண்களின் பங்களிப்பைப் பட்டியலிட்டதுடன் பெண்களால்தான் சமூக மாற்றங்கள் நிகழும் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.

மாநாட்டின் மையக்கருத்தான ‘ நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?’ என்ற தலைப்பில் மெளலவி நூஹ் மஹ்ழரி உணர்வுப் பூர்வமான உரையை நிகழ்த்தினார்.சத்திய சஹாபா பெண்மணிகளின் பயணம் எங்கே சென்றது?’ நாம் இன்று எங்கே செல்கிறோம்? இனி நாம் எங்கே செல்ல வேண்டும்? என்று வரலாற்று உதாரணங்களுடன் தமக்கே உரிய தனிப்பாணியில் எடுத்தியம்பினார்.இந்த உரையைக்கேட்டு பலர் கண்கலங்கினர்.

’கலாச்சார சீரழிவுகளுக்கிடையே கண்ணியமாக வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் தமது உரையில் கலாச்சார சீரழிவுகளையும், அதனை எதிர்த்துக் கொண்டு எவ்வாறு கண்ணியமாய் வாழவேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்தும் விதத்தில் பட்டியலிட்டார்.

K.A.மெஹரின் ஹதீஸ் விளக்கத்துடன் இரண்டாம் அமர்வு தொடங்கியது.மதிய அமர்வில் ‘தீமைகள் புயலாய் வீசும்போது..’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.தீமைகளுக்கெதிரான ஆண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் ITW தலைவர் நஜ்மா கருத்துரை வழங்கினார்.பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உம்மு ரோஜானும்,சமுதாய இயக்கங்களின் பங்களிப்பு குறித்து ஆயிஷா பானுவும் கருத்துரை வழங்கினர்.டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் அவர்கள் கருத்தரங்கை வழி நடத்தி நிறைவுரையாற்றினார்.காலை உரையின் இரண்டாம் பகுதியாக இவ்வுரை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவுப் பேருரையாற்றிய மெளலவி ஹனீஃபா மன்பஈ உணர்வுப்பூர்வமான ஆழமான உரையை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை நிஸ்மியா தொகுத்து வழங்கினார்.

மாநாட்டுத் துளிகள்

* சற்றேறக் குறைய இரண்டாயிரம் பெண்கள் ஒன்று திரண்டனர்.
* 35 பெண் தொண்டர்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தனர்.
* 10மணி நிகழ்ச்சிக்கு 9:30 மணிக்கே அரங்கு நிரம்பிய காட்சி பெண்களின் விழிப்புணர்வை பறைசாற்றியது.
* காலையிலும்,மாலையிலும் தேனீரும்,மதியம் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது.
* டோக்கன் முறையில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று உணவைப் பெற்றுக்கொண்டனர்.
* மாநாட்டை அனைவரும் காணும் வகையில் வெளிஅரங்குகளிலும், கீழ்த்தளத்திலும் 6 LCD திரைகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
* நாகர்கோவில்,காயல்பட்டினம்,உத்தமபாளையம், திருநெல்வேலி,தென்காசி,வீரசிகாமணி,புளியங்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.
* வெளியூரிலிருந்து வந்த ஆண்களுக்கும்,சிறப்பு விருந்தினர்களுக்கும் சிறப்புத் திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
* புத்தகக் காட்சி,சமரசம்,இளம்பிறை,ஹைர உம்மத்,சந்தா,விற்பனைப் பிரிவும் இடம் பெற்றது.
* இடையிலேயே யாரும் செல்லாமல் நிகழ்ச்சி முடியும் வரை பெண்கள் அமர்ந்து உரையைக் கேட்டது சிறப்பான முன்னுதாரணம்.தகவல்:-      ஐடியல் விஷன்

அதிரை SDPI யின் பழனிபாபா நினைவு தெருமுனை பிரச்சாரம்!


அதிராம்பட்டினத்தில் SDPI யின் சார்பாக ஷஹீத் பழனிபாபா அவர்களின் நினைவாக ஜனவரி 28 ஆம் நாள் மாபெரும் தெருமுனை பிரச்சாரம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் நடைபெற்றது.


இதில் SDPI யின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்களும் ,திருவாரூர் மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.


நிகழ்ச்சியில் .தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சகோ.Z .முஹம்மத் இலியாஸ் மற்றும் ,அதிரை நகர செயலாளர் சகோ. முஹம்மத் உட்பட மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

Saturday, January 28, 2012

உடைந்த கப்பலும் உடையாத நம்பிக்கையும்!

நமதூர் இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோரின் படைப்புகள் கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட ஆக்கங்களாக இருந்தது குறித்து சிலர் ஆதங்கப்பட்டிருந்ததில் நியாயம் உள்ளதாகவே கருதுகிறேன்.

சில சகோதரர்களும் ஆசிரியர்களும் சொன்னதுபோல் அதிரையின் ஓரிரு தலைமுறையினரின் வாழ்நாள் சாதனையாக வீடு கட்டுவதும், அதற்காக பள்ளி / கல்லூரி படிப்புகளை பாதியில் விட்டு வெளிநாடுகளில் வாழ்வைத் தொலைப்பதுமாகவே கழிந்து விட்டது. மாணாக்கரிடமும் இந்த மோகம் வந்திருப்பது சற்று கவலைப்படக்கூடிய விசயம்தான்.

அதிரைக்கு இத்தகைய மாணவர்களின் அறிவியல் படைப்புகளை கண்காட்சியாக வைப்பதும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் முதல் தடவை. எனினும், சில முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால் குறைகளற்ற நிகழ்சியாக பேசப்பட்டிருக்கும் என்ற ஆதங்கமும் இல்லாமலில்லை.

இயல்பிலேயே அறிவியல் ஆய்வுகளை வியப்பாகக் கேட்டும், ஆர்வமாகப் பேசியும் வரும் என் மகன் இமாம் ஷாஃபியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். இந்த அறிவியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாகவும், மின்மோட்டார் மற்றும் விளக்குகள் பொருத்தப்பட்ட கப்பல் ஒன்றை சுயமாகவே வடிவமைத்து, இதற்கான பொருட்களை அவனது பழைய விளையாட்டுச் சாதங்களின் உதிரி பாகங்களைக் கொண்டு வடிவமைத்துள்ளதாகவும் சொன்னான்.

ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இந்த முயற்சி சற்று அதிகம் என்றாலும் தானறிந்த செயல் முறைகளைப் பின்பற்றி இரண்டு சிறிய மோட்டார் பொருத்தப்பட்ட பாடரியில் இயங்கும் கப்பல் செய்திருந்ததை வகுப்பு ஆசிரியையும் பாராட்டியுள்ளார்.

எனினும், தேர்வுக் குழுவினர் பார்வையிட வந்தபோது அவனில்லாத சமயத்தில் வெளியிலிருந்துவந்த சிறுவர்கள் சிலர் அதிலிருந்த சிறு மின்மோட்டாரைக் கழட்டி எடுத்திருந்ததால் அவனால் செய்முறை செய்து காட்ட முடியவில்லை. அவனது ஆர்வத்துக்கு தீனிபோடும் இத்தகைய நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 4-5 நாட்கள் செலவளித்துள்ளதாக வருத்தத்துடன் சொன்னான்.

சாதாரண விசயம்தானே! இதிலென்ன இருக்கிறது என்று பலர் கருதக்கூடும். இதேபோல், மேலும் சில பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் படைப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

இரண்டுநாள் நடந்த இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு இணையம் வாயிலாக வெளிநாட்டிலுள்ள எம்போன்றோரும் கண்டு களித்து, நம் மாணவச் செல்வங்களின் திறமைகளைப் பாராட்டியபோதிலும், தன்மகனுடைய படைப்பு கண்டு கொள்ளப்படவில்லையே என்ற ஆதங்கத்தை தவிர்க்கமுடியவில்லை.

நிச்சயமாக சுயநல நோக்கிலானதல்ல என் ஆதங்கம். இதுபோல் ஆதங்கப்பட்ட பல பெற்றோர்களின் சார்பில் இதை பதிவு செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இத்தகைய குறைகள் தவிர்க்கப்பட்டு துறைசார்ந்த அறிவியல் மாதிரிகளை உருவாக்கிய மாணாக்கர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்ற அக்கரையின்பால் இதை பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் படிக்கும் காலத்தில் கிடைக்காத இத்தகைய வாய்ப்புகளை எமது பிள்ளைகளுக்கு வழங்கிய பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களைப் மனமாரப் பாராட்டுகிறேன்.


துபாய் கிரஸன்ட் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தானே உருவாக்கி சுயமாக யூடூபில் வலையேறிய சித்திர காணொளிகளுள் ஒன்று:

நாம் பயன்படுத்தும் தண்ணீரை பற்றி தெரிந்து கொள்வோம்

முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலகாதிய சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது அழகாக காட்சியளிக்கும்.
இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.
ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன. 
 
நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது. குடிக்கும் நீரில் கேல்சியம், சால்ட், அயன் இவைகை எல்லாம் கண்டிப்பாக  ஒரு மனிதனுக்கு தேவை. நாம் குடிக்கும் தண்ணீரை எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்று யாரும் பார்ப்பதில்லை. எதோ காலையில் 6 மணிக்கு  குழாயில் தண்ணீர் வருகிறதா என்று காத்துயிருந்து அந்த தண்ணீர் சுத்தமா வருதா அல்லது அசுத்தமா வருதா என்றல்லாம் பார்ப்பதில்லை.
 
அந்த தண்ணீரை தூக்கத்திலும்,இருட்டிலும் பிடிக்கிறோம் அதில் என்ன வந்து விழுந்தாலும் தெரிவதில்லை அதற்கு பிறகு தான் தெறுகிறது குழாயில் வந்த தண்ணீர் கலங்களாகவும், அசிங்கமாகவும் வந்தது என்று. தண்ணீரில் சுத்தம் இல்லாதலால் தான் எல்லா விதமான நோய்கள்  பரவுகிறது எல்லாவற்றிக்கும் அடிப்படை காரணமே தண்ணீர் தான் தண்ணீர் சுத்தமாக இருந்தால் எந்த வித நோய்களும் வராது.                   
 
புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
 
குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.
பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீல மேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம்
குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீல நிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.
 
வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.
 
சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே
நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது. தண்ணீரில் கல்சியம்,சால்ட்,அயன் போன்றவைகள் அதிகமாக இருப்பதால் சோறு மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. சுத்தம் செய்த தண்ணீரில் சோறு ஆக்கி பாருங்கள் மிக வெண்மையாகவும்,பளிச்சின்று இருக்கும்.     
நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது.
இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.
 
போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?
தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.
கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு
சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
 
நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். 

அகல ரயில் பாதை விவகாரம் :ப . சியை பார்க்க பறந்தது அதிரை குழு !!

நமதூர் வழியாக அகல ரயில் பாதையை நிறைவேற்ற கோறி அதிரையின் அனைத்து அமைப்புகளும் சமிப காலமாக தீவிர களப்பணியில் இறங்கி உள்ளதின் காரணமாக கடந்த சில மாதங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர்கள் போன்றவர்களை சந்தித்து இந்த கோரிக்கைக்கு குரல் கொடுக்க வேண்டுமென கேட்டு கொண்டும் மனுக்கள் அளித்தும் கடிதங்கள் வாயிலாகவும் போராடி வருகின்றனர் .

இதன் அடிப்படையில் கடந்த மாதம் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் GK வாசன் அவர்களை சந்தித்து மனு அளித்தனர் பின்னர் இது விஷயமாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்திக்க ஆவன செய்து தருமாறு கேட்டு கொண்டதன் பேரில் நாளை பசியின் சொந்த ஊரான காரைக்குடிக்கு வருகைதரும் மத்திய அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக நமது சட்டமன்ற உறுப்பினர் ரங்கராஜன் அவர்கள் மூலம் தகவல் தரப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து சீபோல் நிறுவனர் எம் எஸ் தாஜுதீன் அவர்களும் கா மு கல்லூரி தாளாளர் அஸ்லம் அவர்களும் இன்று காரைக்குடி புறப்பட்டு செல்கின்றனர் .அதிரையில் இருந்து நல்வாழ்வு பேரவையின் சார்பில் அக்பர் ஹாஜியார் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று புறப்பட்டு ஒன்றாக நாளை மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தினை சந்தித்து நம் பகுதி அகல ரயில் பாதை விவகாரத்தை துரிதபடுத்த வேண்டும் எனவும் இது தொடர்பாக உங்களின் ஒத்துழைப்பை இந்த பகுதி மக்களுக்கு வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாக இக்குழுவினர் கூறினர்.

அதிரை மக்களுக்கு பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பு!


அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தங்களால் செலுத்த வேண்டிய சொத்து வரி,தொழில் வரி, உரிமக்கட்டணம் மற்றும் குடி நீர் கட்டணங்களை 31 -03 -2012 க்குள் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு பிரதி வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் பேரூராட்சி வசூல் பணியாளர்கள் தங்கள் கீழ் கண்ட ஜும்மா பள்ளிவாசல்களுக்கு அருகாமையில் வருகை தர உள்ளனர். இப்பேரூராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து வரி இனங்களையும் நிலுவையின்றி செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

     1) கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசல்
     2) தரகர் தெரு ஜும்மா பள்ளிவாசல்
     3) பெரிய ஜும்மா பள்ளிவாசல்
     4) முகைதீன் ஜும்மா பள்ளிவாசல்-ஆலடித்தெரு
     5) ஈ.சி.ஆர்.தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசல்

     இப்படிக்கு
    செயலர் அலுவலர்,
    அதிராம்பட்டினம் பேரூராட்சி.

நன்றி   :-    அதிரை.இன்


அறிவியல் கண்காட்சி சாதனை மாணாக்கர்களின் கைவண்ணம் (படங்கள்)


இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியில் நடந்த மாணாக்கர்களின் அறிவியல் படைப்புகளின் அணிவகுப்பு.

எந்தெந்த படைப்புகள் யார் யார் வீட்டுப் பிள்ளைகள் செய்த கைவண்ணம் என்று அறிந்தவர்கள் பின்னூட்டம் போட்டால் பெற்றோர்களையும் மாணவர்களையும் வாழ்த்தலாமே!நன்றி: அதிரை.இன்

பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் ஒரு மரணம்: ஊட்டியில் சோகம் (காணொளி)

எச்சரிக்கை: இளகிய மனம் கொண்டவர்கள் இதிலுள்ள காணொளியைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.

ஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், சாகசம் செய்த காவலர் ஒருவர் பரிதாபகரமாக உயிர் இழந்தார். இந்த சோக நிகழ்வை நேரில் கண்டதால் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஊட்டி விளையாட்டு அரங்கில், குடியரசு தின நிகழ்ச்சிகள் நேற்று காலை நடந்தன. ஆயுதப்படை காவலர் பாண்டியன், பைக்கில் பறந்து சாகசங்களை செய்து, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். ஓடுகளை காலால் உதைத்து தூள் தூளாக்கினார். பின்னர், ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். தொடர்ச்சியாக காவலர் பாண்டியன் பல சாகசங்களை நிகழ்த்தவே பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தி வந்தனர்.

மாணவர்களை வரிசையாக தரையில் படுக்க வைத்து சாகசம் செய்த போது, தான் தாண்ட வேண்டிய இடைவெளியை சரியான முறையில் கடக்க முடியாமலோ அல்லது தவறான கணிப்பின் காரணமாகவோ, தரை விரிப்பின் முன்புறமாக விழுந்து பல்டி அடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது தலை, உயரமான தரை விரிப்பின் மீது நேரடியாக மோதி தலை குத்திய நிலையில் விழுந்தார்; அவரால் எழ முடியவில்லை. ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதென உஷாரடைந்து பலரும் ஓடி வந்து அவரை மீட்டனர்.

எழுந்து நிற்க முடியாத அளவுக்கு, நிலை குலைந்து, கண்கள் மேல் நோக்கிய நிலையில் மயக்கமடைந்திருந்தார். அருகிலிருந்தவர்கள், அவரை உடனடியாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.தொடர்ந்து கரவொலி எழுப்பிய பார்வையாளர்கள், கடைசியாக அவர் மாணவர்களை தாண்ட முயற்சித்த போதும், கரவொலி எழுப்பினர். ஆனால் பலத்த கைதட்டலுக்கு இடையே அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது, பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது காவலர் பாண்டியன் தலைகவசம் அணிந்திருந்தால் இச்சோக நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு குறைவு எனலாம்

Friday, January 27, 2012

சல்மான் ருஷ்டிக்கு இலக்கிய விழாவா? விளம்பர விழாவா?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய விழாவில் பெண் பித்தனும்> சர்வதேச எழுத்து விபச்சாரனுமாகிய சல்மான் ருஷ்டி வந்து கலந்து கொள்ள முடியாததற்கு கொலை மிரட்டல் என்ற கரடியை அவிழ்த்து விட்டதை நம்பிய அவரைப் போன்ற ஹரி குன்ஸூரு> அமிதவ் குமார் என்ற எழுத்து வியாபாரிகள் சாத்தான் ருஷ்டி ஏற்கனவே உளறிய சாத்தானின் கவிதைகளில் சில வரிகளை அவருக்கு பதிலாக விழா ஒருங்கிணைப்பாளர் தடுத்தும் தடையை மீறி விழாமேடையில் வாசித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட சிமி போன்ற அமைப்புகள் அல்லது மும்பை நிழல் உலக தாதாக்கள் தன்னை கொலை செய்;யக்கூடும் என்று உளவுத் துறை முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்தக் காரணத்தால் தான் தன்னால் வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்று விழாவைப் புறக்கனித்தற்கான காரணத்தை சாத்தான் ருஷ்டி கூறி உள்ளார். 

ஆனால் இவரை விட இஸ்லாத்தை கீழ்தரமான நடையில் எழுதியதுடன் பெண்ணினத்தை அழிவிற்கு இழுத்துச் செல்லும் நச்சுக் கருத்துக்களை இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் பரப்பிய இஸ்லாமியப் பெயர் தாங்;கிய தஸ்லீமா நஸ்ரீன் 1994ல் வங்க தேசத்திலிருந்து விரட்டப்பட்டப் பின் உலகின் பல நாடுகளில் தங்கிவிட்டு இறுதியாக இந்தியாவுக்கு குடியேறுவதாக அறிவித்ததும் இப்பொழுது பத்திரிகைகள் இவருக்கு கிளப்பி விட்ட பீதியை விட அப்பொழுது அவருக்கும் பீதியைக் கிளப்பி விட்டன. ஆனால் அந்த அச்சுருத்தலை பொருட்படுத்தாமல் அவர் இந்தியாவுக்குள் வந்தார்.

ஒருப் பெண்ணுக்கு இருந்த துணிச்சல் கூட இந்த ஆண் தொடை நடுங்கிக்கு இருக்கவில்லை என்பது எழுத்து வியாபாரிகளுக்கு மத்தியில் மிகப் பெரிய ஒரு இழுக்காகும். இந்த பேடித் தனத்தைத் தான் மேல்படி விழாவில் அவர்கள் பேசி இருக்க வேண்டும்.

உயிரை துச்சமெனக் கருதி சர்வதேச இலக்கிய விழாவிற்கு வருகை தர மறுத்த இவரது பேடித் தனத்தை பேசுவதை விட்டு பொய்களைப் புணைந்து சாத்தானின் கவிதைகள் எனும் பெயரில் அவர் ஏற்கனவே எடுத்த வாந்தியை ஹரி குன்ஸூரு> அமிதவ் குமார் விழுங்கி விழா மேடையில் உமிழ்ந்துள்ளனர்;. 

விளம்பரமே பிரதான நோக்கம்.
சாத்தான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகளுக்குப் பிறகு அவர் எழுதிய பிற நூல்கள் அவ்வளவாக உலகச் சந்தையில் விலை போக வில்லை அதனால் மீண்டும் தன்னுடையப் புத்தகங்கள் விலை போக வேண்டும் என்பதற்காக ஜெய்ப்பூர் இலக்கிய விழா மேடையை ஹரி குன்ஸூரு> அமிதவ் குமாரைக் கொண்டு விளம்பர மேடையாக மாற்றி உள்ளார்.

விழா முடிந்தப் பின் எனக்கு எந்த கொலை மிரட்டலும் இல்லை உளவுத்துறை கூறியதாக வேண்டுமென்றே என்னை ராஜஸ்தான் அரசு பொய் சொல்லித் தடுத்து விட்டது என்று விளம்பரத்துக்காக அடுத்த அந்தர் பல்டி  அடித்தார். 

விளம்பரத்துக்காக இவர் அடித்த அந்தர் பல்டி ஆகாச பல்டியைப் பார்த்த ராஜஸ்தான் அரசு இறதியாக இவருக்கு வீடியோ கான்ஃபரன்சிங்கில் பேசக் கொடுத்த சான்ஸையும் ரத்துப் பண்ணி விட்டது.  

அவரது அடுத்தப் புத்தகம் யூத, கிறுத்தவ சந்தையில் விற்பனை சூடு பிடிக்க வேண்டும் என்பதற்காக அவரது ட்விட்டரில் மேல்படி அவரது இரு விளம்பர தாரரையும் ஆஹா! ஓஹோ! என்றுப் புகழ்ந்துத் தள்ளியதுடன் நில்லாமல் என்னை எதிர்த்து மதப் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம்களுக்குத் துணிவிருந்தால் இஸ்ரேலில் சென்று மதப் பிரச்சாரம் செய்து பார்க்கட்டும் என்றும் விதண்டாவாதம் எழுதி உள்;ளார்.

இதையே திருப்பி நாம் அவரை கேட்கின்றோம் துணிவிருந்தால் பிரிட்டனில் இருந்து கொண்டே கிருஸ்தவ மதத்தை எதிர்த்து எழுதி புத்தகத்தை விற்பனை செய்து பார்க்கட்டும். புத்தகம் விற்பனை ஆவது அடுத்ததாக இருக்கட்டும் இவர் அங்கு இருக்க முடியுமா ? என்பதை முதலாவதாக சிந்திக்கட்டும்.

கிறுத்தவ மதத்தை எதிர்த்து எழுத ஒன்றுமில்லை என்று இவரால் மனசாட்சிக்கு திரையிட்டுக் கூற முடியுமா ? அவ்வாறெனில் புரட்டட்டும் உன்னதப்பாட்டு அத்தியாயத்தை ! துணிவிருந்தால் எழுதட்டும் பைபிள் பவுலின் கவிதைகள் என்று. 

முடியாது பணத்துக்காகவும், படா டோப வாழ்க்கைக்காகவும் தான் பெண் பித்தனாகிய சாத்தான் ருஷ்டி பிரிட்டனில் தஞ்சம் புகுந்து மேற்காணும் ஈனச் செயலில் ஈடுபட்டு வருகிறார் என்பதை மொத்த உலகும் அறியும்.

நியாய> அநியாயம் பாராத அர்த்தமற்றப் போராட்டங்கள்.

ஒரு மருத்துவர் தாக்கப்பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த மருத்துவர்களும் கூடிக் குரலெழுப்புவது> ஒரு காவலர் தாக்கப்பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த காவலர்களும் கூடிக் குரலெழுப்புவது> ஒரு எழுத்தர் விமர்சிக்கப்;பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த எழுத்தர்களும் கூடிக் குரலெழுப்பும் போக்கு படித்தவர்கள் மத்தியிலும்  ஊடுருவி வருவது மிகப் பெரும் ஆபத்தானதாகும்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


அச்சுருத்தல் இல்லாத குடியரசு தினம்! தினமலர் திருந்தி விட்டதா?

சுதந்திர தினம்,குடியரசுதினம் மட்டுமின்றி தீபாவளி,கிறிஸ்துமஸ் போன்ற மத பண்டிகை தினங்களிலும் "தீவிரவாத அச்சுருத்தல்", குடியரசு/சுதந்திர தின கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க பாகிஸ்தான்/லஷ்கர் தீவிரவாதிகள் சதி/ ஊடுறுவல்" என்றெல்லாம் பீதிகிளப்புவதோடு, ஓரிரு  மாதங்கள் முன்னதாவே சந்தேகத்தின் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக முஸ்லிம்களை அதிலும் தாடி வைத்திருந்தால் கூடுதல் அடைமொழியுடன் பரபரப்பு செய்தி வெளியிட்டு கைது செய்து, மேற்கண்ட தேசிய கொண்டாட்ட தினங்களில் முஸ்லிம்களை தனிமைபடுத்தி சுகம்கண்ட ஊடகங்களில் 'தினமலம்' மற்றவர்களைவிட சற்று கூடுதலாகவே சுகம் கண்டது.


நேற்று 26-01-2012 இந்தியாவில் 56 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த செய்தியில் இடம்பெற்றிருந்த தினமலர் செய்தியின் வாசகங்களை வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்காக அப்படியே பதிகிறோம்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக, தீவிரவாத குழுக்களிடமிருந்து, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட மிரட்டல் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத்துறையினரும், மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் பொதுவான பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும், தலைநகர் டெல்லியிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்றவற்றின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு திட்டமிடுவதாக உளவுப் பிரிவு தகவல் குறித்து எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.

நமது கேள்வி என்னவென்றால்,

  • "இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? நாட்டில் இதுவரை குழப்பம் செய்த தீவிரவாதிகள் எல்லோரும் திருந்தி விட்டார்களா? 
  •  
  • நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராடி வருபவர்களின் கோரிக்கைகளை எல்லாம் அரசு ஏற்று நிறைவேற்றி வைத்து விட்டதா? 
  •  
  • லஷ்கர் தீவிரவாதிகள், எல்லை தாண்டுவதை நிறுத்திக் கொண்டார்களா?
  •  
  • இதுவரை இத்தகைய பீதியைக் கிளப்பி,பரபரப்பு ஏற்படுத்தியது நம்நாட்டு உளவுத்துறையிலுள்ள சில மதவெறியர்களா?
  •  
  • அல்லது தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் திருந்தி விட்டனவா?
ஒரு சேஞ்சுக்கு குடியரசு தினத்தன்று மதக்கலவரம் ஏற்படுத்த  தீவிரவாதிகள் சதி என்று கோவை பள்ளிவாசலில் நேற்று நடந்த தாக்குதலைச் செய்தியாக போட்டிருக்கலாம். பரவாயில்லை! சட்டம் தன் கடமையைச்செய்து நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் உண்மையான தீவிரவாதிகளை அடையாளம் காட்டும் என்று குடியரசு இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

அமைதியாக நேற்றைய 63 ஆவது குடியரசு கொண்டாட்டங்களில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை குடியரசு தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! 

இதேநிலை நாட்டின் அனைத்து கொண்டாட்டங்களிலும் நீடிக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.வாருங்கள் வளமான இந்தியாவை உருவாக்க உறுதி கொள்வோம்!

Thursday, January 26, 2012

இமாம் ஷாஃபி பள்ளி - அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணாக்கர்கள் - Updated


அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்..)மெட்ரிகுலேசன் பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் மற்றும் கல்வியார்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் செயல்முறை கண்காட்சிக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அவ்வகையில்,மாணாக்கர்கள் தங்கள் கைவண்ணத்தையும் கற்பனையையும் கலந்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளையும், மாணாக்கர்களின் பெற்றோர்களையும் வியக்க வைத்துள்ளனர். இதுகுறித்த காணொளி தொகுப்பை நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
தாளாளர் ஹாஜி.M.S.தாஜூதீன் மற்றும் பேரா.பரகத் மற்றும் ஆசிரியர்களது தொடர் ஊக்குவிப்பு காரணமாக, மாணாக்கர்களால் இத்தகைய படைப்புகளை உருவாக்கி, அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரைவாசிகளின் கனவான 2014-15 ஆம் கல்வி ஆண்டுக்குள் மாநிலளவிலான கல்வி சாதனையாளர்கள் உருவாகும் சூழல் உள்ளதாகவே தெரிகிறது.


மாணாக்கர்களின் அறிவியல் ஆர்வத்தை வெளிக்காட்ட வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகம், ஊக்குவித்த பெற்றோர்கள், கலந்து கொண்ட மாணவ-மாணவிகளை அதிரை எக்ஸ்பிரஸ் மனமாற பாராட்டுகிறது.

ஏனைய பள்ளிகளும் இத்தகைய அறிவியல் கைவினைக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தால் வருங்கால சாதனையாளர்கள் பலர் உருவாகும் வாய்ப்புள்ளது.காணொளி & புகைப்படம்: அதிரைபிபிசி வலைத்தளம்.

கேரள கவர்னர் எம் ஓ ஹெச் ஃபாரூக் மறைக்காயர் மரணம்


கேரள கவர்னரும் முன்னால் புதுச்சேரி முதல்வரும், முன்னால் சவுதி தூதருமான எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மறைக்காயர் வியாழன் அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

சவுதி அரேபியாவில் இந்திய தூதுவராக இருந்தபோது அதிரை அய்டா நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், மேலும் அகல ரயில் பாதை அமைக்க வேண்டி இவரிடம் ஜித்தாவில் அய்டாவின் சார்பில் (அதிரை வாழ் வெளிநாட்டினர் சார்பில்) மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.


தகவல்  : ரஃபியா

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!*மெக்டொனால்ட் நிறுவனம், மாதத்திற்கு சராசரியாக 110,000 ஐஸ்கிரீம் கோன்களை விற்பனை செய்கிறது.

*திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருமானம் 530 கோடி ரூபாய்கள். இதுவே இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட டிரஸ்ட் ஆகும்.

*இரண்டு நாளைக்கு ஒருமுறை மீன் இறைச்சியை சாப்பிட்டால் மாரடைப்பு வருவது 30சதவீதம் குறையும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*காற்று வீசும் திசைக்கு எதிராகத் தனது மூக்கு இருக்கும்படியாகவே நாய் எப்போதும் படுக்கும். எதிரி வருவதை மோப்பத்தால் சுலபமாக உணரவே இவ்வாறு செய்கிறது.
*ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வகை சிலந்திகள், மீன் பிடித்து உண்ணுகின்றன. நீர் நிலைகளின் அருகே இரண்டு கால்களில் நின்றபடி மற்ற ஆறு கால்களையும் மீனைப் பிடிக்கத் தயாராக வைத்திருக்கும். சிறு மீன்கள் கரை ஓரமாக வரும் போது பாய்ந்து பிடித்துக் கொள்ளும்.

*விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.

*மனிதனது மூளையில் ஏராளமான நுண்மடிப்புகள் உள்ளன. கட்டளை அல்லது செய்திகளைக் கிரகிக்கும் பகுதி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சிலரது மூளை மடிப்புகள் மிகவும் அபாரமானவை. இவை கம்ப்யூட்டர்களைப் போல பணிபுரிவதுடன் அதி அற்புதமான கிரகிக்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் கொண்டது. சிலர் இளமையிலேயே அதிபுத்திசாலிகளாக விளங்குவது இதனால்தான். சீரான ஒரு மூளையில் பல ஆயிரம் நுண்மடிப்புகள் உள்ளன என்கின்றனர் நரம்பியல் அறிஞர்கள்.

*நமது நாட்டில் 5 வயது சிறுவனாக இருந்தபோதே "ரவிகிரண்' என்பவன் 60க்கும் மேற்பட்ட ராகங்களைப் பிரித்து அறியவும், பின்னர் பாட்டு இசைக்கவும் அறிந்திருந்தான். அதிகமாகப் பாடங்களை கிரகித்து அறிந்து, பின் தேர்வில் மிகச் சிறப்பாக எழுதிவிடும் அற்புத மூளை படைத்த சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களது மேதா விலாசத்தைக் கட்டிப்போட முடியாது.

இந்நிலையில்தான் பிரிட்டனில் உள்ள "கிளாஸ்கோ' பல்கலைக் கழகத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த "வில்லியம் தாம்ஸன்' என்ற சிறுவன் பேராச்சரியப் படத்தக்க அறிவாற்றலுடன் விளங்கி, தேர்வுகளில் முதல் தர மதிப் பெண்களைப் பெற்றமையால் அவனுக்கு 10 வயதிலேயே பல்கலைக் கழக பட்டம் வழங்கப்பட்டது. இச்சிறப்பினை வேறு எவரும் பெற்றதே இல்லை. இவனே பிற்காலத்தில் "லார்ட் கெல்வின்' என்று அழைக்கப்பட்டு பிரிட்டனின் சிறந்த பேரறிஞனாக விளங்கி வந்தான். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது எத்தனை உண்மை பாருங்கள்!

*தேள் முட்டையிடுவதில்லை. குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் தாங்களாகவே நடமாடும் பருவமடையும் வரை, தாய்த்தேள் தன் மார்பிலேயே அவைகளை வைத்துக் கொண்டிருக்கும்.

*சிங்கத்தின் வாலிலே இருக்கும் மயிர்க் கற்றையை விலக்கிப் பார்த்தால், முனையில் ஆணி போல் கடினமான ஒரு நகம் இருக்கும்.

*சுண்டெலிகள் பாடுகின்றன! மிகவும் உச்சஸ்தாயியில் பாடுவதாலேயே நாம் அதைக் கேட்க முடிவதில்லை. சில சமயங்களில் பாட்டின் ஒரு பகுதி கீழ்ஸ்தாயிக்கு இறங்கும் போது கேட்க முடிகிறது. ஆராய்ச்சியில் கண்ட உண்மை இது.

*ஆமைக்கு பல் கிடையாது. கனத்த ஈறு போன்ற அமைப்பாலேயே அது உணவுகளைச் சுவைத்து விழுங்குகிறது.

*முதலைக்கு மூக்கிலும் பல் உண்டு. முட்டைக்குள் உள்ள முதலைக்குட்டி மூக்கில் உள்ள பல்லால் உடைத்துக் கொண்டுதான் வெளியே வரும்.

*பிறக்கும்போது 1 பவுண்டு எடையுள்ள கரடிக்குட்டி ஒரு வயதை அடையும் போது அதன் எடை 100 பவுண்டாகி விடுகிறது.

*உணவு, நீர் எதுவும் இன்றி 15 நாட்கள் தாக்குப்பிடிக்கும் சக்தி குதிரைக்கு உண்டு.ஒரு வருடத்தில் தன் எடையைப் போல் பத்து மடங்கு உணவை குதிரை உட்கொள்கிறது.

*பெருங்குடல் புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் 2003ல் 57,000பேர் இறந்தனர். இதே காலத்தில் இந்த நோயினால் 150,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்த இடத்தை இந்த நோய் பெறுகிறது.

*முன்னைய பிரிட்டீஷ் பிரதமர் சர்ச்சில் வளர்த்த கிளி ஒன்று இன்றும் உயிரோடு உள்ளது. சார்லி என்ற பெயருடைய அதற்கு 104 வயதாகிறது.

*பிரிட்டனைச் சேர்ந்த சோதனைச்சாலை தொழில்நுட்ப நிபுணரான ஜூலிவார்ட் என்ற 40வயது பெண்மணிக்கு முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு குழந்தைகளும் மூன்றாவது பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் பிறந்தன.

*மனோரஞ்சிதப் பூவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படும் பெயர் "யாங்- யாலாங்". அதாவது 'பூக்களில் இதுவே பூ' என்று பெயர்.

*குவைத் என்றால் அரபி மொழியில் "சின்னக் கோட்டை".

*நமது நகம் சராசரியாக நாளொன்றுக்கு 1/250அங்குலம் வளர்கிறது.

*பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றில் எடை பார்க்கும் எந்திரம் ஒன்று இருக்கிறது. ரொம்பவும் குண்டான பெண்கள் ஏறிநின்றால், "மன்னிக்கவும், தங்கள் எடை......" என்ற சீட்டு வருகிறது.

*அமெரிக்காவில் வெஸ்ட் ரஞ்சு நகரில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நினைவுக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே அவர் விஞ்ஞானக் குறிப்புகள் எழுதிய நோட்டுப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். மொத்தம் 25,000 நோட்டுப் புத்தகங்கள்.

*மேற்கிந்தியத் தீவுகளில் முன்பெல்லாம் கீரிப்பிள்ளை கிடையாது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வளர்த்தார்கள். எதற்குத் தெரியுமா? பாம்புகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அவற்றை ஒழிக்க

*தொடரும்...

நன்றி . Engr.சுல்தான்

சம்சுதீன் A காதர்.
ஜித்தா, சவுதி அரேபியா

அதிரையில் நகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளை..

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளை..

60 சவரன் நகை, 20 கிலோ வெள்ளி கொள்ளை - போலீசார் விசாரணை...


ச‌மீப‌மாய் அதிரையில் அதிக‌மாய் திருட்டு ந‌ட‌ப்ப‌தாக‌ தெரிகிற‌து..எப்பொழுதுமே வீட்டில் த‌னியாக‌ உள்ள‌ பெண்க‌ள் குறிப்பாக‌ குழ‌ந்தைக‌ள்,முதியோர் மிக‌க் க‌வ‌ன‌மாய் இருக்க‌ வேண்டிய‌ நேர‌மிது..ப‌ல்வேறு கார‌ண‌ங்க‌ளை அல‌சினாலும் இப்போதைக்கு ந‌ம் தேவை க‌வ‌னம்,விழிப்புண‌ர்வு..

Photo Source: Puthiya Thalaimurai [FB]

அதிரையில் குடியரசு தின விழா ! ( படங்கள் இணைப்பு )


அதிரை பேரூராட்சியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின் படங்கள் :
மேலத்தெரு ஊ. ஓ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின் படங்கள் :நடுத்தெரு ஊ. ஓ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின் படங்கள் :

குடியரசு தினம்; கோபத்தில் மனம்


குடியரசுக் கொண்டாட்டம் வருடந் தோறும்
                குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும்

விடியாத இரவினிலே பிறந்த நாட்டில்
               விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில்


முடியாத நிலைமைக்கு வந்த தாலே
                முதலில்லா வியாபாரம் ஊழல் தானே

படியாத அரசியலார் போடும் வேசம்
               பகற்கொள்ளை நடக்குமெங்கள் பார(த) தேசம்புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம்
               பொய்யுலகி னாசையிலே மூழ்கிப் போனோம்

மனிதமானம் என்னவென்றுத் தெரியாக் காயம்
                 மலையேறிப் போனதிங்கு மனித நேயம்

இனிதானச் சொற்களுக்கிங் கிடமே யில்லை

             இந்தியாவில் கொலைவெறிக்குப் புகழின் எல்லை

கனிவானக் கவிதையிலும் கலந்து போச்சு
             கலப்படம்தான் கலைப்படமாய் விளைந்து போச்சு

ஆக்கம்: அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர் )