Saturday, March 31, 2012

திருப்புறம்பியம் - பண்டைய தஞ்சையின் போர்க்களம் (காணொளி)

சோழ மன்னர்களின் தலைநகரான தஞ்சாவூர் அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி. பலர் அறியாத வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டுள்ளதாலும், நமது மாவட்டம் குறித்த சுவாரஸ்யமான தொகுப்பு என்பதாலும் பகிர்ந்து கொள்கிறேன்.

வரலாறு ஆர்வமுள்ளவர்களுக்கு பிடிக்கும் என்று கருதுகிறேன். மேலதிக தகவல் அறிந்தவர்கள் விரும்பினால் பகிர்ந்து கொள்ளவும் .


மரண அறிவிப்பு (நத்ரம்மாள் சி.எம்.பி.லேன்)

கடற்கரைத்தெரு (தற்போது சி.எம்.பி.லேன்) மர்ஹூம்.உ.க. உதுமான் கனி அவர்களின் மனைவியும், ஜஃபருல்லாஹ் (தமுமுக)அவர்களின் தாயாருமாகிய நத்ரம்மாள் அவர்கள், இன்று வஃபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9-மணிக்கு மரைக்காயர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப் படும்

அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக

உம்ரா உணர்த்திய உண்மைகள்.........!

உருக்கும் தங்கம் போன்றேநான்
       உணர்ந்து கொண்டேன் உம்ராவில்
நெருக்கம் இறைவன் மீதினிலே
      நினைவில் நிரம்பக் கண்டேனே

ஏழு முறைக ளோட்டத்தில்
        இரத்த ஓட்டம் சீராகிப்
பாழும் நரக விடுதலையும்
       பாவமு மழியக் கண்டேனே!

மனமு மிறுக்கம் விட்டதுவே
     மகிழ்வில் நிரம்பி வழிந்திடவே
தினமும் உம்ரா செய்ததினால்
     தேகப் பயிற்சி பெற்றேனே!

நாளை மஹ்ஷர் நினைவினிலே
     நாங்கள் நின்ற வேளையிலே
மூளை முழுதும் பயவுணர்வால்
     மூழ்கிப் போகக் கண்டேனே !

புரட்டிப் போட்ட வியப்புடனே
     புத்தம் புதிய வாழ்வெனக்கு
புரட்சி செய்த மாற்றந்தான்
     புதிதாய்க் கண்டு கொண்டேனே!


புனித உம்ரா செய்ததினால்
     புடமிடு தங்க மாகினனே
இனியும் தொடராய் இறையவனே
     இதனைச் செய்ய அருள்வாயே..!அபுல்கலாம்(த்/பெ. ஷைக் அப்துல் காதிர்)
"கவியன்பன்" கலாம்

“இல்லாத” கரண்டுக்கு ஏகப்பட்ட “ரேட்” !

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று அறிவித்தது.

இந்த மின்கட்டண உயர்வு, 37 சதவீதம் வரை இருக்கும் என்றும், இது ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதேவேளையில், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மின்கட்டண உயர்வு விவரம் :

வீடுகளுக்கு...........................

* 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்வு. அதாவது,

* 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு - ரூ.1.10 (ஒரு யூனிட்)

* 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.1.80

* 201-ல் இருந்து 250 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3

* 251-ல் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3.50

* 500 யூனிட் வரை பயன்படுத்துவோரில்  200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.3

* 201-ல் இருந்து 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 4.

* 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 5.75


தொழிற்சாலைகளுக்கு.........................

தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.5.50 ஆக அதிகரிப்பு.


வர்த்தக நிறுவனங்களுக்கு........................... 

* 1 முதல் 100 யூனிட் வரை - ரூ.4.30

* 101 யூனிட்களுக்கு மேல் ரூ.7 கட்டணம்

* அலங்கார விளக்குகள் பயன்படுத்தினால் - ரூ.10.50


குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு.............................

* 500 யூனிட் வரை - ரூ. 3.50

* 501 யூனிட்டுக்கு மேல் - ரூ.4வழிபாட்டுத் தலங்களுக்கு...................................

* 120 யூனிட் வரை ரூ.2.50

* 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5விசைத்தறி கூடங்களுக்கு................................ 

* முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை.

* 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.4


கல்வி நிறுவனங்களுக்கு.................................

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.4.50

* தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5
 


சேக்கனா M. நிஜாம்

துபாய் மம்ஸார் பூங்கா சந்திப்பு (புகைப்படங்கள்)

இன்று (30-03-2012) வெள்ளிக்கிழமை துபாய் மம்ஸார் பூங்காவில் நடந்த "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" நிகழ்ச்சியின் புகைப்படங்களின் தொகுப்பு. மேலதிக புகைப்படங்களும் காணொளியும் அதிரை நிருபர் தளத்தில் வெளியிடப்படும்.
Friday, March 30, 2012

அதி.அழகுடன் ஓர் அழகிய மாலைப்பொழுது


முதல் தமிழ் கணினி எழுத்துரு படைப்பாளர் ஜமீல் காக்கா அவர்களுடன் அதிரை மற்றும் பல ஊர்களைச் சார்ந்த நண்பர்கள்,உறவினர்கள் இணைந்து துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியிலிருந்து வருகை தந்து "துபாய் மம்ஸார் பூங்கா"வில் கலந்துரையாடல் மற்றும் பரஸ்பரம் நன்றிகூறும் இனிய நிகழ்வு மாலை 5:30 மணிக்குத் தொடங்கியது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சகோ.M.தாஜுத்தீன் (அதிரை நிருபர்) வரவேற்புரை வழங்க, அபுதாபியிலிருந்து வருகைதந்த மரபுக்கவிஞர் சகோ.'கவியன்பன்' கலாம் அவர்களின் வாழ்த்துப்பாவுடன் இனிதே தொடங்கியது.

தொடர்ந்து அதிரை அனைத்து முஹல்லா தலைவர் சகோ.A.தமீம் அவர்கள் விருந்தினர்களை வரவேற்க, அதிரை பைத்துல்மால் (துபை கிளை) கெளரவ ஆலோசகர் 'கவிக்காக்கா" சபீர் அவர்களும் தனது புதுக்கவிதையால் அறிமுக உரை மற்றும் வாழ்த்துப்பா வாசிக்க, சகோ.B.ஜமாலுதீன் அவர்கள் ஜமீல் காக்காவின் தவ்ஹீது பிரச்சார ஈடுபாட்டையும் நினைவு கூர்ந்தார்.

சிறப்புரையாக சகோ.மஹ்மூத் அல் ஹசன் (நாஞ்சிலன்) ஜமீல் காக்காவின் நட்பை நினைவுகூர்ந்தார்கள். ஏற்புரை வழங்கிய ஜமீல் காக்கா, இத்தகைய அமர்வுகளை மார்க்கப் பிரச்சார களமாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பயன்படுத்தி இருக்கும் ஸுன்னாவை நினைவூட்டி, அதேபோல் தாமும் பின்பற்றும் வாய்ப்பாகவே இத்தகைய அமர்வை பயன்படுத்திக் கொள்ள விரும்பி வந்ததாகவும் பேசினார்கள்.

இறுதியாக, சத்யமார்க்கம்.காம் வாசகர் வட்டம் சார்பில் சகோ.ஷிஹாபுத்தீன் நன்றியுரை வழங்க நிகழ்ச்சிகளை N.ஜமாலுதீன் (அதிரைக்காரன்) தொகுத்து வழங்க மாலைநேர அமர்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

  • ரம்மியமான மாலைப்பொழுதில், கடற்கரை காற்றுடன்கூடிய திறந்தவெளி புல்வெளியில் நடந்தது.
  • அதிரைவாசிகள் 35 பேரும், வெளியூர் நண்பர்கள் 15 பேரும் கலந்து கொண்டனர்.
  • வழக்கமான மேடைப்பேச்சாக இல்லாமல், கலகலப்பான கலந்துரையாடலாக இருந்தது.
  • வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பூங்காவில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
  • அதிரை நிருபர்,அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியாக இருந்தது.
  • பிரபல பின்னூட்டவாதிகள்:) சகோ.யாசிர்,சகோ.இர்ஃபான் (அதிரை தென்றல்) ஆகியோருடன் மூத்த வலைப்பதிவர் இப்றாஹிம் அன்சாரி காக்காவும் கலந்து கொண்டனர்.
  • கலந்து கொண்டவர்களுக்கு ஜமீல் காக்காவின் அன்பளிப்புகளாக புத்தகங்கள், திருக்குர்ஆன்,இஸ்லாமிய சிடி மற்றும் டிவிடி வழங்கப்பட்டது.
  • அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் சகோ.தமீம் அவர்களும் இஸ்லாமிய சிடிக்களை வழங்கினார்கள்.
  • சுவையான சிக்கன் சாண்ட்விஜ் பரிமாறப்பட்டு, மஃரிப் தொழுகையுடன் நிகழ்வு முடிவுற்றது.
  • நிகழ்ச்சியின் காணொளி மற்றும் மேலதிக புகைப்படங்கள் அதிரை நிருபர் வலைப்பூவில் வெளியாகும்.

மாணவர்களே சந்தித்தோம் ! சந்திப்போம்! (3)

நஜ்முத்தீன் (தீனியாத் ஆசிரியர் கா.மு.ஆ.மேல் பள்ளி. அதிரை)

ஹால் டிக்கட்
10.12.ம் வகுப்பு ஆண்டு தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வழங்குபவர் வகுப்பின் சரியான முறைப்படி நடந்து நண்கு படித்து ஆசிரியர்களை மதித்து பள்ளியின் விதிமுறைகளுக்குக் கட்டுபட்டு அனைத்துப்பாடங்களையும் ஆசிரியர் கற்பித்த படி பயின்று தேர்வுக்கு தயாராக உள்ள மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களின் முன்பு கவுரவித்து அந்த நுழைவுச் சீட்டு கொடுக்கப்படும்.

ஆனால் அதற்க்கு மாறாக தன் மனோஇச்சைப்படி வாழ்ந்து தேர்விற்கும் தன்னைத் தயார் செய்து கொள்ளாமல் ஆசிரியர்களுடைய அறிவுரைகளை மதிக்காது இருந்த மாணவகளுக்கு ஆசிரியர்கள் மிகுந்த மனவேதனையோடு மரியாதை இல்லாமல் கொடுக்கப்படும்.

இது போன்று தான் நம் ஒவ்வொருவருக்கும் ஸகராத் இருக்கிறது.அல்லாஹ் நபி(ஸல்)அவர்கள் கூறியபடி நம் வாழ்வு இருந்தால் நாம் கவுரமாக ஹால்டிக்கட் பெற்ற மாணவனைப் போன்று ஸகராத்தை அனுபவிப்போம்
ஆயிஷா(ரலிஅவர்கள் அறிவிப்பதாவது நபி(ஸல்)அவர்களின் வபாத் நெருங்கிய போதுஅவர்களின் அருகில் நீரால் நிரப்பப்பட்ட பாத்திரம் வைக்கப்பட்டியிருந்தது நபி(ஸல்)அவர்கள்அடிக்கடி தமது முபாராக்கான கையை நீர்ப்பாத்திரத்தில் போட்டு பிறகு தமது முகத்தில்தடவிக்கொண்டவர்களாக யா அல்லாஹ்ஸக்ராத்தின் வேதனையின் எனக்கு உதவிசெய்வாயாக!  என்று இறைஞ்சிக் கொண்டியிருந்தார்கள்.
நல்லவர்கிள் உயிர் எப்படி பிரியும்?
16:30 பயபக்தியுள்ளவர்களிடம், ''உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?'' என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது ''நன்மையையே (அருளினான்)'' என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். 

எவர் அழகான நன்மை புரிந்தார்களோஅவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டுஇன்னும்மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும்பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது!

16:3என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.

16:32 குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்; ''ஸலாமுன் அலைக்கும்' (''உங்கள் மீது சாந்தி உண்டாவதாக)நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சவனபதியில் நுழையுங்கள்'' என்று அம்மலக்குகள் சொல்வார்கள்.

கெட்ட மனிதர்களின் உயிர் எப்படி பிரியும்? என்று அல்லாஹ் கூறிப்பிடுகிறான்
16:28 அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில்மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்அப்போது அவர்கள், ''நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!'' என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; ''அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.)...... 
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

அதிரை மஸ்ஜிதுத்"தவுஹீத்" ஜும்ஆ பயான்

அதிரை மஸ்ஜிதுத்"தவுஹீத்" ஜும்ஆ பயான்

ஏ.எல்.மெட்ரிக். பள்ளி : ஆண்டு விழா பல்சுவை நிகழ்ச்சிகள் !


அதிரை ஏ.எல்.மெட்ரிக். பள்ளியில் இன்று ( 29-03-2012 ) நடைபெற்ற 11 ஆம் ஆண்டு விழா பல்சுவை நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் சகோ. ஜனாப் அப்துல் ரெஜாக், பள்ளியின் நிர்வாகி சகோ. ஜனாப் பஷிர் அஹமது, பள்ளியின் முதல்வர் லட்சுமி ப்ரியா ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது. 
சிறப்பு விருந்தினராக ஜனாப் சகோ. அன்வர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி, பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது கூடுதல் சிறப்பாகும்.
ஏராளமான பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்ச் சங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஜெத்தா தமிழ் சங்கம் மார்ச் 24ம் தேதியன்று தமிழர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ராபியா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக குவைத்திலிருந்து வருகை தந்திருந்த குவைத் தமிழ் முஸ்லிம் பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல பயனுள்ள தகவல்களை குவைத் தமிழ் முஸ்லிம் பேரவை உறுப்பினர்கள் முன்வைத்தனர். கலந்துரையாடலில் குவைத்திலிருந்து வருகை தந்திருந்த ஜாகிருத்தின், ஹிதாயதுல்லா, மஸ்தான், ஜாகிர் ஹுசைன், அன்வர் ஹுசைன், அரிப் மரைகாயர், அல்மாஸ் முஸ்தபா ஆகிய அனைவரின் உரையாடலும் மிக பயனுள்ளதாக இருந்தன. மஸ்தான் , ஜெத்தா தமிழ் சங்கத்தை போற்றி பாடிய கவிதை மிக அற்புதமாக இருந்தது. அப்துல் அஜிஸின் நன்றி நவிலலுக்குப்பின் ஜெத்தா தமிழ் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இனிய இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

நன்றி :தினமலர்


Thursday, March 29, 2012

கணினித் தமிழுக்கு அழகென்று பேர்!

முதல் தமிழ் கணினி எழுத்துருக்கள் / FIRST TAMIL FONT CHARACTER MAP
சங்ககாலம் தொட்டு இயல், இசை, நாடகம் என்ற கூறுகளாக இருந்த முத்தமிழ், கடந்த நூற்றாண்டின் இறுதியில் கணினித் தமிழ், இணையத் தமிழ் என்று உருவெடுத்தற்குப் பின்னணியில் அதிரையைச் சார்ந்தவர்கள் பெரும் பக்க பலமாக இருந்ததை தமிழ்கூறும் நல்லுலகு தனது சரித்திரத்தில் பதித்துக் கொள்ளுதல் அவசியம். கல்வெட்டு,ஓலைச்சுவடி,காகிதம் என மெதுவாகத் தவழ்ந்து கொண்டிருந்த தமிழை கணினியிலும் இணையத்திலும் கைப்பிடித்து அழைத்து வந்து அரியணை ஏற்றி அழகுபார்த்தவர்கள் அவர்கள்!

மரகதம் (Emarald), மாணிக்கம் (Ruby), பவளம் (Coral), கருங்கல்(Granite), வைரம் (Diamond), நவமணி (Topaz),நீலக்கல் (Sapphire) ஆகிய எழுத்துருக்களை ஒருவர் சிரம்பட உருவாக்கி, மெருகூட்டி பின்னர் எவ்வித வியாபார ரீதியிலான சிந்தனையும் இன்றி தமிழுலகிற்கு தானமாகக் கொடுத்தால் அவரை "பிழைக்கத் தெரியாதவர்" என்று சொல்வோம். அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை என்ற பதிவை வாசித்த பலரும் சொன்ன வார்த்தை 'இத்தகைய மெளன சாதனையார் ஒருவர் அதிரையில் இருக்கிறார்' என்ற விசயம் நேற்றுவரை தெரியாது" என்ற சிலாகிப்புடன் சொன்னார்கள்.

மர்ஹூம் உமர்தம்பி காக்கா அவர்களுடன் மின்மடல் தொடர்பிலிருந்தபோது, அவர்களால் உருவாக்கப்பட்ட 'தேனீ' வகை ஒருங்குறி எழுத்துருக்களின் பயன்பாடுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை ஓரளவுக் கணித்து, 'தேனீ' என்ற பெயருக்குப் பதிலாக "உமர்" அல்லது "அதிரை" என்று எழுத்துருக்களின் பெயர்களை மாற்றும்படிக் கோரி அவர்களின் மகனிடம் நேரிலும்,உமர்தம்பி காக்காவுக்கு மடலிட்டு சொல்லியும் தன்னை முன்னிறுத்தாமல் தம் தமிழ்பணியில் தொடர்ந்திருந்தார்கள். (அவர்களுக்கான நற்கூலியை வழங்க அல்லாஹ் போதுமானவன்)

எனினும், விடாப்பிடியாக உமர்தம்பி காக்காவுக்கு உரிமையுடன் மடலிட்டேன்: "உங்களைப்போன்ற சமூக சிந்தனையோடுகூடிய படைப்பாளர்களும் அதிரையில்தானே பிறந்துள்ளீர்கள்? ஆனால்,கேடுகெட்ட ஊடகங்கள் நம்மவர்களின் சாதனைகளைப் புறந்தள்ளி இருட்டடிப்பு செய்வதோடு,பகை வளர்க்கும் பிழைப்புவாத பிரச்சாரங்களை முஸ்லிம்களுக்கு எதிராக முடுக்கிவிடுகிறார்களே?" என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தேன்.

பின்பு அதிலுள்ள நியாயத்தை உணர்ந்த மர்ஹூம் உமர் தம்பி காக்கா, தாம் மரணிப்பதற்கு சிலகாலம் முன்னதாக உருவாக்கிய இணைய பயன்பாட்டுச் செயலிக்கு "AWC கன்வெர்ட்டர்" (Adirai Web Converter) என்று பெயரிட்டார்கள்.

கடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின்போது, தினமலர் இணைய தளத்தில் "கணினியும் தமிழர்களும்" என்ற ஓர் ஆக்கத்தை வாசித்தபோது, முஸ்லிம்கள் ஒருவரது பெயர்கூட அதில் இல்லை.
(தற்போது அதுகுறித்த அனைத்து பதிவுகளும் தினமலர் தளத்தில் இல்லை), இத்தனைக்கும் மர்ஹூம். உமர்தம்பி காக்காவின் தேனீ ஒருங்குறி எழுத்துக்கள் பரவலடைந்து, இணையவெளியில் நன்கு அறியப்பட்டிருந்த போதும்,கட்டுரையில் என்ன காரணத்தாலோ தவிர்க்கப்பட்டிருந்ததால், செய்தி தொகுப்பாளரின் அறியாமை என்று தேற்றிக் கொண்டு, தமிழ்கணிமைக்கு கொடையளித்த (அதிரை) "முஸ்லிம்களின் பங்களிப்பு" என்ற கட்டுரையை தகுந்த சான்றுகளுடன் எழுதி அனுப்பினேன். எனினும், தினமலர் அதை பிரசுரிக்கவில்லை.

என் பதிவில் கண்டனத்தை தெரிவித்து விட்டு
(தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள் - தினமலரின் இருட்டடிப்பு), பரிச்சயமான சில தமிழ் இணைய தளங்களுக்கு அதை விரக்தியுடன் அனுப்ப முயன்றபோது, "உமர்தம்பி காக்காவுக்கு அரசு அங்கீகாரம் பெறுவதே நமது முதல் குறிக்கோள். இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சூழலில் என்னைப்பற்றி பெரிதுபடுத்தாமல் ஆகவேண்டியதைப் பார்ப்போமே"! என ஜமீல் காக்கா சொன்னது காதில் இன்றும் ரீங்காரமிட்டு ஒலிக்கிறது. தம்முடைய பெயர், புகழ் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காத மனிதர் என்ற என் சிலிர்ப்பு அப்படியே இருக்கிறது.

மர்ஹும் உமர்தம்பி அவர்களின் ஒருங்குறி எழுத்துருக்கள் தமிழைப் பரவலாக இணைய பயன்பாட்டிற்கு இட்டுச் சென்றது என்றால், ஜமீல் காக்காவின் எழுத்துருக்கள் தமிழை கணினிக்குள் புகுத்தியது. அவ்வகையில் தமிழுக்கு கணினியிலும் இணையத்திலும் முதல் அங்கீகாரம் வழங்கிய முன்னோடிகள் நமது அதிரையைச் சார்ந்தவர்கள். அல்ஹம்துலில்லாஹ்!

முகஸ்துதிக்கோ அல்லது வெறுமனே அதிரையை முன்னிறுத்தவோ இவற்றை இங்கு குறிப்பிடவில்லை. இத்தகையோரின் ஆரவாரம் இல்லாத தமிழக முஸ்லிம்களின் சாதனைகள் வரலாற்றில் பதிக்கப்படவேண்டும் என்பதோடு, இவர்களைப்போன்ற பல்துறை வித்தகர்கள் மென்மேலும் நம்மிடையே உருவாக வேண்டும் என்ற நியாயமான ஆசையே இப்பதிவை எழுதத் தூண்டியது.

இஸ்லாத்தின் மீது ஏற்கனவே காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ள தமிழக ஊடகங்கள் முஸ்லிம்களின் இத்தகைய சாதனைகளை அறிந்தே புறந்தள்ளி வருவது கண்கூடு. இந்த படைப்பாளிகளின் படைப்புகள் குறிப்பிட்டக் காலத்திற்குப் பிறகு கவனமிழந்தோ அல்லது பிறர் உரிமைகோரியோ நமக்குப் பயனில்லாமல் போவதற்குள், இளைய தலைமுறையினர் இவற்றைத் திரட்டி ஒருங்கிணைத்து ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

என்ன செய்யப்போகிறோம்?

'கவியன்பன்' அபுல்கலாம் காக்காவுடன் ஓர் சந்திப்பு

எத்தனை வருடங்கள் என்று துல்லியமாக ஞாபகமில்லை.நான் சிறுவனாக இருந்தபோது சந்தித்ததாக ஞாபகம். பிறகு எங்கள் சந்திப்பு புனித ஹரம் ஷரீஃபில் நிகழ்ந்தது.உம்ராவுக்கு வந்திருந்த என்னுடைய நண்பர்கள்சிலரை சந்திக்கச் சென்றபோது கவியன்பன் கலாம் காக்காவும் அபூதாபியிலிருந்து உம்ரா பயணம் வருகிறார் என அறிந்தேன்.

பரஸ்பரம் நலம் விசாரிப்புக்குப் பிறகு, மக்காவின் வேறு பகுதிகளில் இருந்த மற்ற என் நண்பர்களை சந்திக்கச் சென்றுவிட்டேன், சில மணி நேரம் கழித்து எனக்கு கவியன்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, என் அருகில் நின்றிருந்த என் நண்பர் கேட்டார், "யாரிடமிருந்து அழைப்பு?"  நான், உடனே எங்கள் ஊரை சார்ந்தவர், அவர் ஒரு கவிஞர், கவியன்பன் கலாம் என்றால் சிலருக்கு தெரியும் என பொதுவாகச் சொன்னேன், 

உடனே என் நண்பர் என்னிடம், ஆச்சர்யத்துடன் என்னை நோக்கி, "கவியன்பன் கலாமா?" அவரை நான் காண வேண்டும். நீண்ட நாட்களாக இவரைச் சந்திக்க வேண்டும் என ஆவல் கொண்டுள்ளேன் இந்த மண்ணில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, என என்னை ஆவலாய் பார்த்தார்,

உடனே, அவர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றேன், இருவருமே ஆனந்தக்கண்ணீருடன் ஆரத்தழுவிய நெகிழ்ச்சியான தருணம் அது,  அப்போதுதான் எனக்கே தெரிந்தது நான் அழைத்துச் சென்ற நண்பரும் ஒரு கவிஞர் என்ற உண்மை. பரங்கிபேட்டை இப்னு ஹம்துன்

உண்மையில் நமதூரில் பிறந்த சிலரின் திறமைகள் பற்றி உள்ளூர்காரர்கள் நமக்குச் சரியாக தெரிவதில்லை. ஆனால் வெளியூர்காரர்களிடம் சொல்லும்போதுதான் அவர்களின் அருமை, பெருமைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த வகையில், கலாம் காக்காவின் பள்ளி காலங்களில் திருவாரூரில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் "கவியன்பன்"  என்று பாராட்டப்பட்ட,கவியன்பன் கலாம் காக்காவிடம் கேட்கப் பட்ட சில கேள்விகலுக்கு, அவர்களின் பதில்கள் காணொளி வடிவில்....
- ஜாஃபர்

Wednesday, March 28, 2012

முறையான துணையின்றி பரிதவித்த உம்ரா பெண் யாத்ரீகர்கள் நாடு திரும்பினர்

முறையான ஆண் துணையின்றி புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழக பெண் யாத்ரீகர்கள் தாயகம் திரும்ப முடியாமல் பரிதவித்தனர், இச்செய்தி ஏற்கனவே வெளியாகியுள்ளது.
இந்நிலையில், . இந்த தகவலை ஏற்கனவே தமிழ்நாடு முன்னால் வக்ப் போர்டு தலைவர் ஹைதர் அலி, சவுதியில் உள்ள ரஃபியா மற்றும் மயிலாடுதுறை முஹம்மது சிராஜுதீன் ஆகியோருக்கு தெரியப் படுத்தி, இவர்கள் மூலமாக இந்த தகவல் சவுதி இந்திய தூதரகத்துக்கு, தெரியப் படுத்தப் பட்டது.

இதனடிப்படையில் ஏற்கனவே 4 தமிழக மயிலாடுதுறை பகுதியை சார்ந்த பெண்கள் இந்திய தூதரக உதவியுடன் நாடு திரும்பினர். அதேநாள் மேலும் 12 பெண் உம்ரா யாத்ரீகர்கள் மஹ்ரம் எனப்படும் ஆண் துணையின்றி தவித்த செய்தி இந்திய தூதரகத்துக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

இவர்களுக்கு நேற்றுடன் உம்ரா விசா காலாவதியாவதால் உடன் நாடு திரும்ப முடியாமல் தவித்தவ்ர்களுக்கு சவுதியில் உள்ள தூதரக ஹஜ் அதிகாரிகள் மேதகு முபாரக்,மூர்த்தி, ஆகியோரின் முயற்சியிலும், ரஃபியா, முஹம்மது சிராஜுதீன், சவுதி த.த.ஜ மற்றும் பல தன்னார்வலர்களின் முயற்சியிலும், தக்க நேரத்தில் இவர்கள் செய்த பொருளாதார உதவியிலும் நேற்று இரவு பரிதவித்த மீதமுள்ள 12 பெண்களும் பத்திரமாக தாயகம் திரும்பினர்.

இவர்களின் உடமைகள் அனைத்தும் ஏற்கனவே விமானத்தில் ஏற்றப் பட்டதால் உடுத்த மாற்று உடையோ, நோயாளிகளான சில பெண்களுக்கு தேவைப்படும் மருந்து பொருட்களோ இல்லாமல் தவித்த வேலையில் சவுதியில் உள்ள த.த.ஜ தன்னார்வலர்கள் இவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு வகைகளை ஏற்பாடு செய்து கடைசி வரை உடனிருந்து உதவியது குறித்து, சவுதி தூதரக அதிகாரிகள் இவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.


தகவல் நன்றி: இந்நேரம் .காம்

அண்ணனும் நானும்-- சில நினைவுக் குறிப்புகள்
அதி.அழகு என்று அறியப்படும் "அதிரை ஜமீல்" காக்கா அவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரும் தவ்ஹீது பிரச்சாரகர்களில் மூத்தவர்களுள் ஒருவருமான "நாஞ்சிலன்" என்று அறியப்படும் மஹ்மூது அல் ஹசன் அவர்கள் ஜமீல் காக்காவுடனான தனது நட்பை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்த ஆக்கம்.  தமிழகத்தின் தவ்ஹீது பிரச்சாரத்தின் எழுச்சியின் தொடக்ககால வரலாற்றைத் தேடுபவர்களுக்கு இந்த ஆக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.  
அண்ணனும் நானும்-- சில நினைவுக் குறிப்புகள்


-நாஞ்சிலன்


நான் நாஞ்சில் நாட்டுக்காரன். அண்ணன் அதிரை.

நேர்கோடாகவோ வளைந்து நெளிந்தோ எங்கள் பகுதிக்குத் தொடர்பில்லாத தொலைவான ஊர்.

எங்களுக்குள் எப்படித் தொடர்பு?

எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுச் சற்றொப்ப இருபத்தேழாண்டுகள் இருக்கலாம். துவக்கத்தில் இருவரும் காணாமலே தொடர்பு இருந்தது.


****

அண்ணன் தம்மை ஒளித்துக் கொள்பவரல்லர். தாம் யாரென அடையாளம் காட்ட அஞ்சுபவருமல்லர்.

அதுதான் எங்கள் இருவரின் தொடர்புக்கு அடித்தளமிட்டது.

1976 ஆம் வருட இறுதியில் எங்கள் ஊரில் கமாலுத்தீன் மதனீயின் ,  "குர்ஆன் ஹதீஸ்க் கொள்கை"ப் பிரச்சாரம் துவங்கியது. ஊரே பரபரப்பிலும் கொந்தளிப்பிலும் இருந்த நேரம். 1976 -- 78 இல் முதுகலை பயிலும் மாணவனாக இருந்த நான் அவரது உரை நடக்கும் இடங்களுக்குச் சென்று  வினா எழுப்புபவனாக இருந்தேன். 1980 -- 81 ஆம் ஆண்டில் நான் இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வு மாணவனாகச் சேர்ந்தபோது அரபு மொழி நூற்கள் சிலவற்றைப் பற்றி அறிய , அப்போது ஊரில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த கமாலுத்தீன் மதனீயை அணுகினேன்.

நான் வேண்டியது அவரிடம் இருந்து கிடைக்கவில்லை; ஆனால் "அவன்" நாடியது அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தது.

நான் மேலே சொன்னேனே.. 'அண்ணன் தம்மை அடையாளம் காட்டத் தயங்குபவரல்ல'ரென...

"ஆமாம்! நான் வஹ்ஹாபிதான்" என எந்தச் சபையிலும் சொல்ல அஞ்சாதவர்.

கமாலுத்தீன் மதனீயின் தொடர்பால் 1981 காலக் கட்டத்தில் எனக்கும் அப்பெயர் கிடைத்தது.

அதுதான் எங்கள் உறவுக்கு அடித்தளம் இட்டது.

**********
எங்கள் பகுதியில் துவங்கிய கொள்கை முழக்கம் மெல்ல மெல்ல அடுத்த முஹல்லாவிலும் பரவியது. 1984 - 1985-- வாக்கில்  அப்படியே மாவட்டம் தழுவிய அளவில் ஓர் இயக்கமாக வளர்ந்தது.

பல ஊர்களிலும் இது போன்ற குழுக்கள் இருந்ததாக அறிந்து , அந்தக் காலகட்டத்தில் நாங்கள் வெளியிடும் கையேடுகள் , மடக்கோலைகள் போன்றவற்றைப் பல ஊர்களுக்கும் அனுப்பும் வழக்கம் இருந்தது. அதில் ஒரு முகவரி  :- ஜமீல் எம் ஸாலிஹ் ..தாருத்தவ்ஹீத். அதிராம்பட்டினம்.

கமாலுத்தீன் மதனீ சொன்னார்.:- ஜமீல் நல்ல வேகமான ஆள். அதிராம்பட்டினம் மாதிரி ஊர்லெ தனியா தாருத்   தவ்ஹீத் நடத்துறார்.

பிடித்துப் போனது அந்த வாசகம்.

**********

1987 ஆம் ஆண்டில் ஒரு நாள்


நானும் பீஜேயும் தஞ்சையிலிருந்து மதுரை போகும் பயணத்தில் ..

 பீஜே சொன்னார்: அதிராம்பட்டினம் வழி  போவோம்;  ஜமீலைப் பார்க்கனும்

யார்? தாருத்தவ்ஹீத் ..?

ஆமாம்.. அவர்தாம்.

உடனே ஒப்புக் கொண்டேன்.

அதிரையில் பேருந்து நின்றதும் இறங்கி முதலில் வினவினேன்.  "யார் "?

இதோ இவர்தாம் ஜமீல்.

இப்போது நீங்கள் பார்க்கும் தும்பைப்பூத் தலையோ தாடியோ இல்லாத ..மூக்குக்குக் கீழ் முளைத்த கருகரு கனத்த மீசையுடன் தலையில் தொப்பி தரித்த அண்ணன்

முதல் முறையாக அண்ணனனுடன் சந்திப்பு.

*****

அண்ணன் ஸவூதியில் இருந்து ஷார்ஜா வந்து விட்ட நேரம்..

நான் சென்னையில் அல்ஜன்னத் இதழில்..

எல்லோருக்கும் நண்பரான அதிரை அன்வர் ,அதிரையின் காதிர்முகைதீன் கல்லூரியில் தமிழாசிரியர் வேலைக்கு எனக்காக விண்ணப்பித்து விட்டார்.

திடீரென ஒரு நாள் ஊரிலிருந்து தகவல்.." நாளைக் காலையில் அதிராமப்பட்டினம் கல்லூரியில் நேர்முகத் தேர்வு"

சென்னையிலிருந்து புறப்பட்டு அதிகாலை அதிரை வந்து ,  ஹாஜா நகர் வீட்டில் கதவைத் தட்டினேன்.
உறக்கத்திலிருந்து எழுந்த அண்ணனுடன் வெளியே சென்று,  பள்ளியில் ஃப்ஜ்ர் தொழுகை முடித்த பின் சாலையோர  தேநீர்க்கடையில் அமர்ந்தோம்.

பலரும் என்னை "வேற்றுக்கிரகவாசி"யைப்போல் பார்த்தனர். எனக்குப் புரிந்தது.

ஒரு புதுமுகம்.. அதிகாலையில் "கடக்கரெத்தெரு ஜமீலுடன்..இவனும் "அவந்தான்"


****

அண்ணன் வினவினார்: நேர்முகத் தேர்வுக்கு முன் கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டாமா ?

பார்ப்போம்.. நீங்களும் வர வேண்டும்.

நான் வந்தால் சரிப்படாது. .. இது வேலை விஷயம்

அல்லாஹ் நாடியது நடக்கும் . வாங்கண்ணே!

இருவரும் போய் அப்போதைய முதல்வராயிருந்தவரின் வீட்டு வாசலில் நின்றோம்.

வெளியிலிருந்து மிதிவண்டியில் வந்தார்  அவர். ஜமீல் அண்ணனைப் பார்த்ததும் அவரது முகம் மேலும் கறுத்து விட்டது.

நான் அவரின் வீட்டினுள் போய் ஸலாம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன்.


எங்கிருந்து வாறீங்க?

மெட்ராஸிலிருந்து..

குளிச்சாச்சா  ? சாப்பிட்டாச்சா  ?

ஆமா!. ஜமீல் அண்ணன் வீட்டில்

ஜமீல் நம்பர் ஒன் வஹ்ஹாபியாச்சே?

ஆமாம்

அப்ப நீங்களும்

ஆமாம் நானும்தான்.

நேர்முகத் தேர்வு அங்கேயே  முடிந்துபோனது

பிறகு கல்லூரியில் நடந்தது ஒரு சடங்கு.


அண்ணன் தம்மை ஒளித்துக் கொள்பவரல்லர். தாம் யாரென அடையாளம் காட்ட அஞ்சுபவருமல்லர் என்று மேலே நான் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

எங்கள் இருவரின் உறவுக்கும் உள்ள அடிப்படையை அது உணர்த்தும்.

********

அது 1995 ஆம் ஆண்டு.... நான் சில பல அழுத்தங்களால் இந்தியாவை விட்டு வெளிநாடு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஷார்ஜாவிலிருந்து அழைப்பும் வந்தது. மதுரையில் பீஜேயின் வீட்டில் நான் இருந்தபோது அங்கு வந்த ஜமீல் அண்ணனிடம் தகவலாகச் சொன்னேன்.

ஷார்ஜா வரவேண்டும்;  என்னோடுதான் தங்க வேண்டும்..

அன்புக்கட்டளை ..மீறவில்லை நான்.

மூன்று மாதம் விஸிட் விஸாக் காலம் அண்ணனுடன் தங்கினேன்.

உண்டி ,உறையுள் என என்னைத்தாங்கி, கணினியில் தட்டச்சும் பழகச் செய்தார்.

**********

அண்ணன் மிக எளிமையானவர். அதிக ஆடம்பரமோ வசதிகளோ எதிர்பாராதவர்.

இவ்வாண்டு என் தாயார் மரணப் படுக்கையில் கிடந்தபோது , இறுதியாக ஒரு முறை பார்ப்பதற்காக அதிராமப்பட்டினத்திலிருந்து நள்ளிரவில் ஒரு மீன் லோடு வண்டியில் ஏறி, தூத்துக்குடி போய் அங்கிருந்து எங்கள் வீட்டிற்கு வந்தார்.இக்கால இளைஞர்கள் புஷ் பேக் ஸீட்டும் ஏ ஸி வசதியும் உள்ள வண்டிகளை நாடும்போது , அறுபதை நெருங்கும் வயதில் மீன் வண்டியில் நெடுந்தொலைவுப் பயணம்.. நெகிழ்ச்சியாக இருந்தது எனக்கு. ஆனால் அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை.

***

 அண்ணனின் மூத்தவருக்கு எங்கள் ஊர் இருதயம் மருத்துவ மனையில் சிகிச்சை. அதுபற்றி என் குடும்பத்தவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

"ம்மாடீ..! அவருக்கும் அண்ணனா.? அப்ப அந்த அண்ணனுக்கு என்ன வயசிருக்கும்?
என்  தம்பி மனைவி வியப்புடன் வினவினாள்

நான் சிரித்தபடி , அண்ணன் என்னிலும் ஒன்றரை வயதே மூத்தவர். தலையும் தாடியும்தான் வெண்மையே தவிர வயது எனக்கு முன் பிறந்த  அக்காவின் வயது தான்" என்றேன்.


நான் அண்ணன் என அழைப்ப்து ஒருவரை மட்டுமே!

எங்கள் ஊரில் என்னிலும் மூத்த சிலரை அவர்களின் பெயரோடு சேர்த்து அண்ணன் என அழைப்பேன்.

ஆனால் பெயர் சுட்டாது , "அண்ணன்" என நான் குறிப்பிடுவது இவர் ஒருவரை மட்டுமே. எங்கள் குழுமங்களில் நானிடும் மடல்களிலும் அவ்வாறே குறிப்பிடுவேன். குழுமத்தவருக்கும் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று தெரியும்.

***
 
நான் உண்மையிலேயே பிரமித்துப் போனது அண்ணனின் எழுத்து வன்மை கண்டுதான்.. நானே எதிர்பாராத கோணத்திலும் வீச்சிலும் அமைந்த மிக உயரிய நடை.

திண்ணை இணைய தளத்தில் படித்துப் பாருங்கள்..நான் சொல்வதன் உண்மை முழுமையாகப் புரியும்..


தம் கருத்தில் உறுதியாக இருப்பார். அதை அழுத்தமாக வெளிப்படுத்தவும் செய்வார்.

அவரது கருத்தில் இருக்கும் முரண்களைச் சுட்டிக் காட்டினால் ஒப்புக்கொண்டு திருத்திக் கொளவார்.

ஆனால் அது அவ்வளவு எளிதான செயலன்று  என்பதை அவரிடம் பழகியவர்கள அனைவரும் அறிவர்.

"ஏன்னு எனக்குச் சொல்லுங்க" என்று எழும் வினாவுக்கு உரிய விடையைச் சொல்லி விட்டால்  நம் கருத்தை ஏற்பதில் "ஈகோ" பார்ப்பதில்லை.

***

சிறந்த பழுது நீக்கும் ஆற்றல் பெற்றவர் அண்ணன் .. அது கார் ஆக இருந்தாலும் கம்ப்யூட்டர் ஆக இருந்தாலும் .


ஷார்ஜா எக்ஸ்போவில் அண்ணன் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையில் பின்னிரவிலோ விடுமுறைநாள் காலையிலோ எக்ஸ்போவிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும். சக ஊழியர் ரவி அழைப்பார். கம்ப்யூட்டர் அல்லது ப்ரோகிராமில் ஏற்பட்டிருந்த  சிக்கல்களுக்குத்  தொலைபேசி வழியாகவே  தீர்வு சொன்னதைப் பன்முறை கண்டிருக்கிறேன்.


அண்ணனுடன் மிக நெருங்கியவர்கள் ஏதாவ்து கார் வாங்க வேண்டும் என்றால் அவரிடம் ஒரு முறை ஓட்டிப் பார்க்கச் சொல்வது வழக்கம். ஒரு ரவுண்டில் தெரிந்து விடும் எஞ்சின் எப்படி; பிற பாகங்கள் எப்படி; வண்டியின் மதிப்பு என்ன என்று.

***

அண்ணனிடம் அரபு மொழி கற்கலாம் என ஆலோசித்தேன். தனியாகக் கற்பிப்பதில்லை என்று சொல்லிவிட்டார். குர் ஆன் கற்கும்போதே அரபு மொழி இலக்கணத்தையும் கற்றால்தான் சரிப்படும் என்பார்.

"என் உஸ்தாத் குர்ஆனைக் கற்றுக்கொடுப்பதைத்தான் வலியுறுத்தியுள்ளார்" என என்னிடம் அண்ணன் சொன்னதுண்டு.


என் வேலையின் பொருட்டால் நான் வேறிடம் சென்று தங்க வேண்டியிருந்ததால் அண்ணனிடம் குர்ஆனும் அரபு மொழியும் கற்க முடியவில்லை. ஆயினும் குர்ஆனை, அமுஸ்லிம் தமிழர்கள் விளங்கிக் கொள்ளும் அளவு , இயன்றவரை பிற மொழிக்கலப்பில்லாமல் நேரடியான தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆவல் எங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் தோன்றியது. அவ்வகையில் பிறந்ததுதான் "இணையத்தில் இறைமறை".


எங்கள் இருவரின் அலைவரிசையும் ஒன்றே..சிந்தனையும் ஒன்றே

அதனால் இதுவரை சிக்கல் இல்லாமல் சீராக எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அல்ஹம்து லில்லாஹ்


Tuesday, March 27, 2012

அதிரையில் நிலத்தின் அரசு மதிப்பீடு உயர்வு !


நிலத்தை வாங்கும்போது பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி (GUIDELINE VALUES) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து புதிய பட்டியல் தயாரித்து அரசிற்கு அளித்தனர்.

இதன் அடிப்படையில் நேற்றைய தினம் வெளியிட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் “நிலத்தின் வழிகாட்டி மதிப்பு” வருகின்ற ஏப்ரல் 1– ந் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்டு புதிய வழிகாட்டி மதிப்பீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அரசிற்கு கூடுதலாக ரூ 600 கோடி வருவாய் கிடைக்கும்.

அதிரைப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர அடியின் விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளார்கள்தெருவின் பெயர்
வழிகாட்டி மதிப்பீடு
வழிகாட்டி மதிப்பீடு

( பழையது )
( புதியது )
ஆலடித் தெரு
120
250
பிலால் நகர்
40.00
100  &  150
ஆறுமுக கிட்டங்கி தெரு
70.00
150.00
ஆதம் நகர் ( M.S.M  NAGAR &  K.S.A  LANE )
40.00
100.00
செட்டித்தெரு
120.00
500.00
ஹாஸ்பிட்டல் ரோடு
120.00
500.00
காட்டுபள்ளிவாசல் தெரு
70.00
250.00
வெற்றிலைக்காரத் தெரு
80.00
200.00
சின்ன நெசவுக்காரத் தெரு
100.00
250.00
ஹாஜா நகர்
70.00
150.00
கடற்கரைத் தெரு
80.00
250.00
தரகர் தெரு
80.00
300.00
பாத்திமா நகர்
40.00
100.00
காலியார் தெரு
70.00
150.00
மேலத்தெரு
80.00
200.00
மேலத்தெரு (சவுக்கு கொல்லை & சானா வயல்)
70.00
250.00
பெரிய நெசவுக்காரத் தெரு
120.00
250.00
நடுத்தெரு
150.00
300.00
செக்கடி தெரு
100.00
250.00
சேது ரோடு
150.00
400.00
தட்டாரத் தெரு
120.00
300.00
வண்டிப்பேட்டை
90.00
200.00
புதுத் தெரு
130.00
300.00
புதுமனைத் தெரு
130.00
500.00
புதுக்குடி நெசவுத் தெரு
70.00
100.00
கீழத் தெரு
80.00
200.00
சால்ட் லேன்
70.00
200.00
செட்டி தோப்பு
150.00
500.00
ஹாஜியார் லேன்
90.00
200.00
கரையூர் தெரு
70.00
250.00
வள்ளியம்மை நகர்
25.00
100.00
மதுக்கூர் ரோடு
90.00
200.00
மரைக்காயர் லேன்
100.00
300.00
பழஞ்செட்டித்தெரு
120.00
500.00
பழஞ்செட்டித்தெரு கீழ் பக்கம்
70.00
200.00
பட்டுக்கோட்டை ரோடு
90.00
300.00
சாயக்காரத் தெரு
130.00
200.00


ஏற்கனவே நமதூரில் மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதில் பத்திரப்பதிவுக்காக செய்யப்படுகிற செலவுகளும் உயர்ந்தால் பாதிக்கப்படுவது ஏழை எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்கள் நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டி குடியேறும் திட்டம் என்பது வெறும் கனவாகவே அமைந்துவிடும் சூழல் ஏற்பட்டுவிடும்......................

குறிப்பு : ஒரே ஒரு ஆறுதலான செய்தி முத்திரைத் தீர்வையாக நாம் செலுத்தும் கட்டணத்திலிருந்து 1  சதவிதம் தமிழக அரசால் குறைக்கப்பட்டுள்ளது.


இறைவன் நாடினால் ! தொடரும்......................