காதிர் முகைதீன் கல்லூரி : 57 ‘ம் ஆண்டு “விளையாட்டு விழா” நிகழ்ச்சிகள் !


அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதி மாணவ, மாணவிகளுக்கு “கல்வி” என்ற சிறந்த சேவையை வழங்கி வருகிற அதிரை காதிர் முகைதீன் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறந்த “கல்வி நிறுவனங்களில்” ஒன்றாக விளங்கி “அதிரைப்பட்டினம்” என்ற நமதூருக்கு பெருமையை தேடித்தந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக காலஞ்சென்ற “கொடை வள்ளல்” காதிர் முகைதீன் அப்பா மற்றும் “கல்வித்தந்தை” S.M. சேக் ஜலாலுதீன் மரைக்காயர் போன்றவர்கள் ஆற்றிய எண்ணிலடங்காத் தொண்டுகளை நினைவு கூர்வது என்பதே சிறந்தது.
என்னற்ற கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர்களை உருவாக்கிய இக்கல்லூரி மென்மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நல் உதவி புரிவானாக  ஆமின் !
“விளையாட்டு” என்பது உடல் வலிமை, மன புத்துணர்ச்சி போன்றவைகளுக்கு அடிப்படை என்பது நிதர்சனமான உண்மை.
இந்தியாவில்  ஏறக்குறைய 73 விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் ஒரு சில குறிப்பிட்ட போட்டிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஊக்கிவிப்பது என்பது வேதனையான செய்தி.

இன்று ( 01-03-2012 )  காலை காதிர் முகைதீன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 57 ‘ம் ஆண்டு “விளையாட்டு விழா” நிகழ்ச்சிகள் “கிராத்” ஓதுதலுடன் இனிதே ஆரம்பமானது.


இவ் விழாவிற்கு காதிர் முகைதீன் கல்லூரியின் தாளாளர் டாக்டர் சகோ.  S. முஹமது அஸ்லாம் அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி பேராசிரியர் டாக்டர் R. காளிதாசன் அவர்களும், மேலும் நமதூரைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியின் நிரலாக.....................................
1.       காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.


2.       கல்லூரியின் தாளாளர் டாக்டர் சகோ. S. முஹமது அஸ்லாம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி பேராசிரியர் டாக்டர் R. காளிதாசன் ஆகியோர்கள் சிறப்புரைகள் ஆற்றினார்கள்.

3.       ஆசிரியர்களுக்கான சிறப்பு போட்டிகளும், பழைய மாணவர்களுக்கான ஓட்டப் போட்டி போன்றவைகள் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

4.       வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
5.       நிகழ்ச்சியின் இறுதியாக காதிர் முகைதீன் கல்லூரியின் உடற்கல்வி பேராசிரியர் அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுப்பெற்றது.

3:44:00 PM 9 கருத்துக்கள்
Labels:

Post a Comment

1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நம் காதிர் முகைதீன் கல்லூரியின் 57 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகளை இத் தளத்தில் காணும் போது அளவற்ற ஆனந்தம் அடைகின்றேன்.

வாழ்த்துக்கள் பல.

நூர் முஹம்மது
முன்னால் மாணவர் - நாவலர் (1975 - 1979)

1995 ம் வருடம் நான் வாங்கிய சிறந்த விளையாடு வீரர் (கலந்துக்கொண்ட போட்டிகளிலெல்லாம் முதல்/இரண்டாம் பரிசு) க்காக பெற்ற ஷீல்ட்கள் இன்னும் வீட்டில் மின்னிக்கொண்டிருக்கின்றன, இதற்காக ஊக்குவித்த அனைத்து ஆசிரியர்களையும், நண்பர்களையும் இந்நேரத்தில் நன்றி கூறுகிறேன், இந்த பதிவை பார்த்தவுடன் பழைய நினைவுகளுக்குள் இட்டுச்செல்கின்றன, அதிரை எக்ஸ்பிரஸுக்கு என் நன்றிகள்...

அஸ்ஸலாமு அழைக்கும், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் விடவும் நம் காதிர் முஹைதீன் கல்லூரி பழைமையானது ஆனால் படிப்பிலும் விளையாட்டு துறைளும் மிகவும் பின்தங்கிய நிலை உள்ளது மற்றும் இவ் உலகின் பரிமாற்றங்களுக்கு ஆங்கில மொழி அவசியமானது.. ஆங்கில மொழியை பற்றி அவசியத்தை அறிந்தவர்கள் நம் கலுரியை பற்றி குறை கூற முடியும்.. வருமானத்திலும், பொருளாதாரத்திலும் வசதி படைத்த நம் கல்லூரி சற்று முன் வந்த கலூரியை விடவும் பிந்தன்கிவுள்ளது.. ஆகையால் நம் கலூரிக்கு ஆங்கில மொழி முக்கியத்தும் கொடுத்து நம்மை சுற்றயுள்ள மாணவ, மாணவியர்களை ஆங்கில மொழி முன்நேற்றதுற்கு காரணமாக இருக்கு வேண்டும்..

மின்னஞ்சல் கருத்து

காதிர் முகைதின் கல்லூரியின் 57 ஆம் ஆண்டுவிழா விளையாட்டு போட்டிகளின் குறைந்த படங்களை கண்டேன் மேலும் கல்லூரியின் வளர்ச்சியை புகை படம் எடுத்து போட்டால் வெளிநாட்டில் வாழும் முன்னால் மாணவர்களுக்கு மேலும் விருந்தாக அமையும்.

செய்தியை உடனுக்குடன் தருவதுடன் மலரும் நினைவுகளை நினைவு படுத்தியதற்கு அதிரை எக்ஸ்பிரஸ் க்கு என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும்.திரிவித்து கொள்வதுடன் மேலும் கல்லுரி சம்பந்தப்பட்ட விபரங்களை எதிர்பார்கின்றோம். இத்தகைய விஷயங்கள் வரும் கல்வி ஆண்டில் நம் ஊர் மாணவர்களை சேர்க்க தூண்டுதலாக இருக்கும்.

ஜிலானி - ஜெட்டாஹ்

//இவ் உலகின் பரிமாற்றங்களுக்கு ஆங்கில மொழி அவசியமானது.. ஆங்கில மொழியை பற்றி அவசியத்தை அறிந்தவர்கள் நம் கலுரியை பற்றி குறை கூற முடியும்.. வருமானத்திலும், பொருளாதாரத்திலும் வசதி படைத்த நம் கல்லூரி சற்று முன் வந்த கலூரியை விடவும் பிந்தன்கிவுள்ளது.. ஆகையால் நம் கலூரிக்கு ஆங்கில மொழி முக்கியத்தும் கொடுத்து நம்மை சுற்றயுள்ள மாணவ, மாணவியர்களை ஆங்கில மொழி முன்நேற்றதுற்கு காரணமாக இருக்கு வேண்டும்..//

But who will do the honours?

Who is responsible for this snafu?

Who will bell the cat?

//். இத்தகைய விஷயங்கள் வரும் கல்வி ஆண்டில் நம் ஊர் மாணவர்களை சேர்க்க தூண்டுதலாக இருக்கும்.//
அன்பு மகனார் ஜீலானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,

மேலே சகோதரர் இப்றாஹீம் அவர்களின் ஆதங்கம் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும் பட்சத்தில் எங்ஙனம் நம் பிள்ளைகளைச் சேர்க்க முன் வருவர்? நாம் படித்தக் கல்லூரியில்- நம் சமுதாயப் பிள்ளைகள் படிக்க முன்வராமல் சென்னை/ திருச்சி என்று போவதேன்? சகோதரர் இப்றாஹீம் அவர்களும் என் நீண்ட நாளைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டார்கள். இதனைப் படிக்கும் கல்லூரி முதல்வர் அவர்கள், அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களான எங்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுத்தால் நமது பிள்ளைகள் உள்ளூரில் படிப்பார்கள்.

ஆழமாய்ச் சிந்தித்து முடிவு செய்யுங்கள்; ஆதரிப்போம்

பனிரெண்டாம் வகுப்புவரையிலும் அதிரை காதிர் முகைதீன் பள்ளியில் படித்து கல்லூரி பருவத்தை சென்னையில் தொடர்ந்ததால் காதிர் முகைதீன் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை. எனினும் எமதூரின் பாரம்பர்ய கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியைக் காணும்போது இனம்புரியாத ஏக்கமும், கடந்தகால நினைவுகளும் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.

சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மரியாதைக்குரிய R.ராமச்சந்திரன் ஐயாவை அதே இளமையுடனும் சிரித்த முகத்துடனும் கண்டது மிக்க மகிழ்வை தந்தது.

முன்னாள்,இந்நாள் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Excellent..........Kalvithithanthai,kodaivallal,Late,Hajee.S.M.S.Shaikjalahudeen and their family and sons who are example for the word it is calling gentleman who are and were serving to our community in without any expectation.It is really appreciated.

நான் கல்வி பயின்ற என் கல்லூரியில் எனக்கு கல்வியை கற்றுத் தந்த என் ஆசான்கள் காதர் சார், சொக்கலிங்கம் சார், லெனின் சார், சந்திரசேகர் சார் மற்றும் மற்ற துறைகளின் பேராசிரியர்கள் ஆகியோர்களை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மேலும் என் நண்பர்கள் சாதிக், சீனிவாசன் போன்றோர்கள் பேராசிரியர்களாகக் உயர்ந்து இருப்பதைக் கண்டவுடன் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

என்னற்ற கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர்களை உருவாக்கிய இக்கல்லூரி மென்மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நல் உதவி புரிவானாக ஆமின் !

excellent service mappla nijam
i wish u to continue this for the benefit of all those who are living outside of the adirampattinam
B.Srinivan
Assistant Professor of CS
KMC

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget