அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர்-10



அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர்-10




Share:

Adirai Shifa Hospital has completed 24 Years.

Dear Brother,
Assalamu Alaikum. (Wa Rah)
HELP US TO LIGHT THE LAMP OF HEALTHY LIFE FOR THE BENEFIT OF THE POOR
Shifa Hospital has completed 24 Years.
We are not in a position to give free treatment for the poor as we lack the resources. However, we look forward with hope and prayers that this small hospital will one day be able to turn the corner. We look up to our friends and well wishers for their help to the hospital.  Whatever you are inspired to give will be greatly appreciated. You could  send your zakath/ sadaqa by cheque or draft in favour of
Shifa Hospital Zakath A/C, Indian Bank, Adirampattinam Branch, 614701
A/C NO          : 742262101
IFSC CODE   : IDIB000A110
MICR CODE : 613019013
Should you make the transfer through your bank please send us an sms or e-mail to let us know when you make payment to enable us to track your payment. May Allah's peace and blessing be with you and may you continue to prosper in the years ahead. May Allah guide us in the right path.
Aameen!
Good wishes,
S.M.Sibugathullah
Secretary
Cell # +91 88709 17199
SHIFA HOSPITAL
59 Pattukkottai Road
Adirampattinam 614 701
Share:

ரமளான் உணவு ஸ்பெஷல் ஜவ்வரிசி ரூஹப்சா ஜிகிர்தண்டா



ஜவ்வரிசி வயிற்று புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர் வயிறு எரிச்சல் உள்ளவர்கள் ஜவ்வரிசி பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தால்
வயிறு குளுமை அடைவதோடு புண்ணையும் அடியோடு அகற்றும், வயில் வரும் கொப்புளங்கள் வாய் புண்ணிற்கும் இந்த ஜிகர்தண்டா நல்லது,

வாங்க எப்படி செய்வதுன்னு பார்ப்போம்:



தேவையான பொருட்கள் (2 நபர்களுக்கு)

பால் - 1 டம்ளர்

ஜவ்வரி - 2 மேசை கரண்டி

பாதம் பிஸின் - ஒரு தேக்கரண்டி

ரூ ஆப்சா - 2 மேசை கரண்டி

ஐஸ்கிரீம் - ஒரு குழிகரண்டி

சர்க்கரை - தேவைக்கு

பிஸ்தா பிளேக்ஸ் - அலங்கரிக்க


செய்முறை

பாதம் பிசினை இரவே ஊறவைக்கவும்.

ஜவ்வரிசியை பத்து நிமிடம் ஊறவைத்து பாலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

வெந்ததும் ஆறவைத்து அத்துடன் ஊறிய பாதம் பிசினை மற்றும்ரூஆப்சா எசனன்ஸையும் தேவைக்கு சர்க்கரையும் சேர்த்து கலக்கி குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்கவும். குடிக்கும் போது ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்து குடிக்கவும்.


சும்மா குளு குளுன்னு இருக்கும். ஒரு முறை செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடனும் போல் இருக்கும். சுவைத்து மகிழுங்கள்.




குறிப்புகள்: சகோதரி ஜலீலா



Share:

“ஒளரங்கசீப்”பின் உணர வைக்கும் உயில் !


முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தவர் ஒளரங்கசீப். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ( 1657 – 1707 ).

'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா. தலையணைக்கடியில் இருக்கிறது. என் உடலைப் போத்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணம்  ரூ. 350  என் கைப்பையில் உள்ளது. அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்'.

'என் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும். ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது. கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்' என்று எழுதியிருந்தார்.

உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி : ஒளரங்கசீப் வரலாறு
படம் : கூகிள்
Share:

30 நாட்களில் தொழிலதிபராவது எப்படி?(ரமலான் ஸ்பெஷல் பேசும்படங்களின் அணிவகுப்பு)


தமிழ்வாணன் கட்டுரைகளின் தொகுப்பல்ல.ஒவ்வொரு வருடம் ரமலானிலும் அதிரையின் மூலை முடுக்குகளில் தோன்றும் இரவுக்கடைகளும் அவற்றின் உரிமையாளர்களும்தான் இவர்கள்! இப்தாருக்கு சிலமணி நேரங்களுக்கு முன்னதாகத் தொடங்கி தராவிஹ் தொழுகைக்குப் பிறகு நடைபெறும் குர்ஆன் ஹிஸ்பு முடியும்வரையில் காடா விளக்கு வெளிச்சத்தில் கலை கட்டியிருக்கும் இந்த கவாபு கடைகளின் வாடிக்கையாளர்கள் இவர்களையொத்த சிறார்கள் மட்டுமின்றி பெரிசுகளும் உளர்.

இந்த இரவுக்கடைகளுக்கு அதிக முதலீடு தேவையில்லை. ஒரு டால்டா நெய் டின், அரைகிலோ மரக்கரி, விசிரி மற்றும் அரைவேக்காடு கோழிக்கறி, மாட்டுக்கறி etc., மாட்டுக்கறி கவாப் ஒரு பீஸ் (பிஸ்க்கு?:) ஒருரூபாய் முதல் தொடங்குகிறது. தினம் 50 ரூபாய் முதல் 200 ரூபாய்வரை கல்லா கட்டும் பொடிபிஸுனஸ்மேன்களும் உள்ளனர்.

தகதக தனலில் வாட்டி கொழுப்பு வடியும் கவாப் துண்டத்தில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றைத் தடவி வாயில் போட்டால் அதன் சுவையே தனிதான் போங்க!.


பின்குறிப்பு: வாடிக்கையாளர்கள் குறைந்தாலோ அல்லது இரவில் ஊர்சுத்தக் கிளம்ப வேண்டும் என்றாலோ இந்த திடீர்கடை முதலாளிகளே வாடிக்கையாளர்களாகமாறி எஞ்சிய கவாபை விழுங்கி கடையை மூடுவதும் உண்டு:)))



படங்கள் உதவி: அதிரை போஸ்ட்
Share:

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர்-9



அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர்-9





Share:

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் மற்றும் TIYA உறுப்பினர்களுக்கு கணிவான வேண்டுகோள்

உலகெங்கிலும் வாழும் அன்பிற்கினிய தாஜுல் இஸ்லாம் சங்கம் முஹல்லாவாசிகள் மற்றும் TIYA உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்ஹம்துலில்லாஹ்! கடந்த வருடம் நமது முஹல்லா சகோதரர்களிடம் வசூலித்த பித்ரா தொகையின் இந்திய ரூபாய் 40,300/- வசூல் செய்யது மொத்தம் 80 குடும்பங்களுக்கு முறையாக 10 கிலோ அரிசி, சீனி, சேமியா, முந்திரி, திராட்சை, ஆயில், கடல்பாசி, பருப்பு, மசாலா தூள் மற்றும் ரூபாய். 120/- விதம் குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 503/- பெறுமதியான பொருகள் வழங்கப்பட்டது. கடந்த வருடங்களைப் போன்று இந்த வருடமும் நமது முஹல்லாவில் உள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு, அமீரகத்தில் வாழும் நமது முஹல்லா சகோதரர்களிடம் வசூல் செய்ய தங்கள் ரூம்களுக்கு அமீரக ( TIYA ) நிர்வாகிகள் வருகினறனர் தங்களின் பித்ரா 20 Dhs சை வாரி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம். 
இவண்,
TIYA நிர்வாகம் - அமீரகம்  
Share:

எங்கே மீடியாக்கள்...?


படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு கால் சுளுக்கு....
நாட்டின் ஜனாதிபதி, குடும்பத்துடன் கோவா பயணம்...
ஏழு ஆண்டுகளாக காவல் துறைக்கு உழைத்த நாய் மரணம்...
மழை வேண்டி கழுதையை மனம் முடித்த வாலிபர்...
அழகிப் போட்டிக்கு பங்கு பெற முடியாத நடிகை கதறல்...
இன்னும்... இன்னும்...
சொல்லிக் கொண்டே போகலாம்
இன்றைய சூடான செய்திகள்.

இதையெல்லாம் சொல்லும் மீடியாக்கள்
பல்லாயிரக்கணக்கானோர் பர்மாவில்
கொலை செய்யப்படும் கொடூரத்தை
சொல்ல மறுக்கிறது அல்லது மறைக்கிறது...?

எங்கே மீடியாக்கள்...?

கண்ணுக்கெதிரே தன்னுடைய பிஞ்சுக்
குழந்தைகளும், கணவனும்
கொலை செய்யப்படுகிறார்கள்...

எங்கே மீடியாக்கள்...?

தாயின் கரங்களையும் குழந்தையின்
கரங்களையும் ஒன்றாக கட்டி
கடலிலே வீசப்படுகிறார்கள்...!

எங்கே மீடியாக்கள்...?

நாய் வேட்டையில் கூட
இத்தனை உடல்கள் இருக்காது.
மனித வேட்டையில்
குவியல் குவியலாக
பல்லாயிரக்கணக்கானோர்...

எங்கே மீடியாக்கள்...?

மீடியாக்களே..!
நாங்கள் நோன்பை துறக்கும் செய்தியை
காட்ட வேண்டாம்.
பர்மாவில் உயிரை துறக்கும் செய்தியை
காட்டுங்களேன்...!

இறைவா...!
உன்னிடம் முறையிடாமல்
வேறு யாரிடம் முறையிடுவது?
அவர்களுக்கு உரிய பாதுகாப்பை
கொடுப்பாயாக...!
அவர்களுக்கு மன தைரியத்தை
கொடுப்பாயாக...!

அவர்களுக்கு மறுமையில் சுவனத்தை
கொடுப்பாயாக...! ஆமீன்.


- அபு ஷம்ஷீர்
Share:

நல்ல தமிழ் எழுதுவோம்! – 20


நல்ல தமிழ் ஏன் எழுதவேண்டும்?

புகழ் பெற்ற பேச்சாளர்கள் பலரிடம் கேட்டுப் பாருங்கள்.  அவர்கள், “மேடைகளில் பேச முடிகிறது; ஆனால் எழுதத்தான் முடியவில்லை” என்பார்கள்.  



“எழுத்து என்பது ஒரு தனிக் கலைதான்.  அந்தத் திறமையும் எனக்கிருந்தால், இதுவரை நான் பிஹெச்.டி. வாங்கியிருப்பேன்” என்று பேராசிரியர் ஒருவர் என்னிடத்தில் அங்கலாய்த்தார்.

வாழ்வில் முன்னேறுவதற்கு எழுத்துத் திருத்தமும் வேண்டற்பாலது என்பதை, இப்பேராசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம் உறுதிப் படுத்துகின்றதன்றோ?  எனவேதான் -  

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற பொது நன்னோக்கில் இத்தொடரை இவ்வளைத்தலத்தில் நான் எழுதத் தொடங்கினேன்.  பலரும் பாராட்டினார்கள்.  அவர்களுள் எத்தனை பேர் தம் மொழித் தவறுகளைத் திருத்திக்கொண்டார்கள் என்பதை யானறியேன்.
பிரியாணியைப் பிளாஸ்டிக் பையில் அலங்கோலமாகப் போட்டுக் கொடுப்பதற்கும், அதனை அழகாக silver pack செய்து, அதற்கொரு மூடியையும் இட்டுக் கொடுப்பதற்கும் எத்துணை வேறுபாடு உண்டு பாருங்கள்?   இவ்வாறுதான், ‘நல்ல தமிழ்’ எழுதுவதற்கும் கைக்கு வந்தபடி எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு.

கட்டுரை எழுதுவதாயினும், கவிதையாயினும், கதையாயினும், இன்னும் எந்த எழுத்தாக்கமாயினும், அழகு தமிழில் எழுதப் பழகிக் கொண்டால், அதன் உயர்வே தனி.  இதோ, இந்தச் சொற்றொடரைப் பாருங்கள்:

“மனித முயற்சியின் உயர்ச்சியானது, பாலைவனத்தைப் பசுஞ்சோலையாக்கியுள்ளது;  காடுகளை நாடாக்கியுள்ளது; மலை குடைந்து வழி கண்டு, நிலங்குடைந்து நிதி கண்டுள்ளது;  விண்ணை முட்டும் இல்லங்களையும், கண்ணைக் கவரும் சாலைகளையும் சமைத்துள்ளது.  உணவிலே புதுமை!  ஊர்தியிலே புதுமை!  உடையிலே புதுமை!  நடையிலே புதுமை!  அணியிலே புதுமை!  அனைத்திலும் புதுமை!”

-‘இறையருட்கவிமணி’யின் ‘இலக்கியம் ஈந்த தமிழ்’
இன்னுமோர் எடுத்துக்காட்டு:

“நீ உன் மொழியைக் கட்டாயம் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  திறம்படப் பேசுகின்ற வல்லமை பெறவேண்டும்.  நல்ல எழுத்தாற்றல் வெற்றி வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.  பேச்சும் எழுத்தும்தானே அன்றாட வாழ்வியலாக உள்ளன!  திறம்பட்ட பேச்சும் திறம்பட்ட எழுத்தும் சிறப்பித்துப் பாராட்டப்படும்.”

 -‘அதிரை அறிஞர்’ புலவர் பஷீர் அவர்களின் ‘படி! படி! படி!’
மொழியறிஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றோர் எழுதும் எழுத்தோவியங்களைப் படித்து, அவர்களைப் போல் எழுதப் பழகுவதில் தவறொன்றுமில்லை.  அவ்வாறு எழுதிப் பழகி, நாளடைவில் நமக்கென்றே தனி மொழிநடை அமைந்துவிட வாய்ப்புண்டு.  சிறந்த எழுத்தாளர்களாக இன்று விளங்குவோரின் முயற்சியும் தொடக்கத்தில் இவ்வாறுதான் அமைந்திருக்கலாம்.  இவ்வாறு எழுதப் பழகுவதைக் ‘காப்பியடித்தல்’ என்று தரம் தாழ்த்துவது கூடாது.

எனது இளமைப் பருவத்தில் ‘கல்கண்டு’ப் பத்திரிகையின் முதலாசிரியர் திருமிகு தமிழ்வாணன் அவர்களின் எழுத்து நடையால் கவரப்பெற்று, பின்னர் மொழியறிஞர் தேவநேயப் பாவாணரின் தனித்தமிழ் நடைக்கு மாறி, கல்லூரியில் ‘இறையருட்கவிமணி’யின் அழகு தமிழுக்கு ஆட்பட்டு, எழுத்துலகில் புகுந்த பின்னர்  அறிஞர் M.R.M. அப்துற்றஹீம் அவர்களின் அணுக்கத்தைப் பெற்று, பின்னர் ‘பிறை’ ஏட்டின் ஆசிரியப் பணியில் இருந்தபோது மவ்லவி அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th.  அவர்களின் நெறியில் வளர்ந்த எனது எழுத்துப் பின்னணியைப் பற்றி விளக்கிக் கூறுவதற்கு வெட்கப்படாதவன் நான்!   

நல்ல எழுத்து நடையில் சிறந்த எழுத்தாளர்களைக் கண்டறிந்து, அவர்களின் சாயலில் எழுதப் பழகுவதே நாம் நல்ல தமிழ் எழுதும் முனைப்பில் ஈடுபட்டுள்ளோம் என்பதன் அடையாளமாகும்.  இந்த அடையாளம், மிகக் குறுகிய காலத்தில் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக நம்மை மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை.  தொடரின் இந்த நிறைவுக்குப் பின் வரும் பின்னூட்டங்களின் தன்மையைப் பொறுத்து, ஆர்வலர்களுக்கு வேண்டிய தெளிவுரைகள் வழங்கப்படும்.  அல்லது, தனி மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொண்டாலும், வழிகாட்டல் வழங்க முடியும், இன்ஷா அல்லாஹ்.

      (நிறைவு)

அன்புடன்,
அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com  



Share:

“மஸ்ஜிதுல் இஜாபா” நிர்வாகத்தின் அன்பான வேண்டுகோள் !!!

அதிரைப்பட்டினத்தில் உள்ள 29 மஸ்ஜித்களில் “மஸ்ஜிதுல் இஜாபா” வும் ஓன்று. C.M.P லேன் குடியிருப்பு விரிவாக்கப் பகுதியில் அமையப்பெற்றுள்ள இப்பள்ளியால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகவும் பயன்பெறும் சிறப்பைப் பெறுகின்றனர். மேலும் நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் நமதூரைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் நமது ஐந்து கடமைகளில் ஒன்றாகிய “தொழுகை”யை இப்பள்ளியில் திறம்பட நிலை நிறுத்தி வருகின்றனர். இப்பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கான குர்ஆன் ஓதல் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இட நெருக்கடியை கருத்தில் கொண்டு பள்ளியை ஒட்டிய வடபுறப் பகுதியில் 1100 சதுர அடி பரப்பளவில் விரிவாக்கம் செய்வதென்று பள்ளியின் நிர்வாகத்தின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவையடுத்து, இதற்காக ரூபாய் 12 லட்சத்தில் மதிப்பீடு செய்து கட்டுமானப் பணியை தொடங்கி இருகின்றோம்.

இப்பணிக்காக உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களால் இயன்றளவு நிதி உதவி செய்து இக்கட்டுமானப் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கு உதவி செய்ய வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு ஈருலகிலும் பேரருள் புரிவானாக ! 

பள்ளியின் வங்கி கணக்கு விவரம் :
மஸ்ஜிதுல் இஜாபா
வங்கி கணக்கு எண் : 989629896 (Current Account )
இந்தியன் வங்கிக் கிளை
அதிராம்பட்டினம்

இப்படிக்கு,
நிர்வாகம்-மஸ்ஜிதுல் இஜாபா
C.M.P. லேன்








Share:

குர்ஆன் தஃப்சீர் (29.07.2012) M. முஹம்மது மன்சூர் காஷிஃபி



குர்ஆன் தஃப்சீர் (29.07.2012) M. முஹம்மது மன்சூர் காஷிஃபி  



Share:

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர் -8 (காணொளி)



அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர் -8





Share:

துஆ செய்வோம்..



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை ஆலடித்தெருவை சார்ந்த  தி.மு.க பிரமுகர் எஸ். ஜமாலுதீன் அவர்கள் குவைத்தில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அவர்கள் உடல்நலம் பூரண குணம் அடைய இந்த சங்கைமிகு ரமளானில் அனைவரும் துஆ செய்வோமாக.


இப்படிக்கு

குடும்பத்தினர்.
Share:

நேற்று நடந்த கோர விபத்தில் பலியானவர்களின் விபரங்கள்

விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில் நமது ஊரை சேர்ந்த முன்று பேர் பலியான சம்பவம் அதிரை மக்களை பெரும் அதிர்ச்சியில்ஆழ்த்தியதுநேற்று இவர்களின் பெயர்களை  விரைவாக நமது தளத்தில் பதிய முடியவில்லை.
ஆகவே இன்று பதிகிறோம். 

                                                           விபத்தில் சேதம் அடைந்த கார் 
விபத்தில் பலியானவர்களின் விபரம் வருமாறு:
ஆறுமுகம், வயது 55
ருத்ராபதி, வயது 45
ஜெயச்சந்திரன்,வயது 33
கார் ஓட்டுனரின் விபரம் 
அஹ்மத் நியாஸ் வயது 19
த/பெ கமாலுதீன் 
புதுமனைத்தெரு 
கார் ஓட்டுனர் அஹ்மத் நியாஸ் அவர்களுக்கு காலில் லும்பு முறிவு ஏற்பட்டு விக்கிரவண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு அவரின் உறவினர்களால் அதிரைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
Share:

பிலால் நகர் : வாருங்கள் நோன்பு கஞ்சி வாங்கலாம் !

புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமாகிய ரமலானில் நமதூரைச் சார்ந்த அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் நோன்பு திறக்கும் சகோதரர்களுக்கு அருந்துவதற்கும் பயன்படுத்தபட்டு வருகின்றதை நாம் அறிந்ததே !

நமதூர் நோன்புக் கஞ்சி என்றாலே மிகப்பிரபலம். அந்த அளவுக்கு அதன் தனி சுவையும் மணமும் அமைந்திருக்கும். இதற்கு மேலும் மெருகூட்டுவது போல் உள்ளது ஹழ்ரத் பிலால் ( ரலி ) நகர் பள்ளியின் கஞ்சி. நமதூரைச் சேர்ந்த பல சகோதர, சகோதரிகள் மற்றும் சிறுவர்கள் என பாத்திரங்களுடன் இப்பள்ளிக்கு வந்து வரிசையில் காத்திருந்து கஞ்சியை வாங்கிச் செல்கின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு 45 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியானது விநியோகம் செய்யும் சில நிமிடங்களில் தீர்ந்து விடுவது குறிப்பிடத்தக்கது.








நோன்புக் கஞ்சி விநியோகம் ( காணொளி ) :

Share:

குர்ஆன் தஃப்சீர் 28.07.2012 M. முஹம்மது மன்சூர் காஷிஃபி



குர்ஆன் தஃப்சீர் 28.07.2012  M. முஹம்மது மன்சூர் காஷிஃபி




Share:

சென்னை ஆயிஷா மஸ்ஜித் குர்ஆன் தஃப்சீர் மர்றும் (27.07.2012) ஜும்ஆ பயான்




குர்ஆன் தஃப்சீர் 27.07.12 Aysha Masjid (Purasiwakkam Chennai) M. முஹம்மது மன்சூர் காஷிஃபி காஸிமி







சென்னை ஆயிஷா மஸ்ஜித் முஹம்மது மன்சூர் காஷிஃபி ஜும்ஆ பயான் ( 27.07.2012 )


Share:

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர்-7



அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர்-7



Share:

FLASH NEWS சாலை விபத்தில் அதிரை சேர்ந்தவர்கள் 3 பேர் பலி

சென்னையிளுருந்து  அதிரை சேர்ந்த பயணிகளை விமானநிலையத்தில் இருந்து அழைத்து சென்ற நான்கு சக்கர வாகனம் (குவாலிஸ்) இருசக்கரவாகனத்தில்‌ ம‌ோதுவதை த‌விர்க்கும் பொருட்டு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.அதில் நான்கு பேர் சம்பவ இடத்திலயே உயிர் இழந்தனர். இவர்களில் முன்று பேர் அதிரை கரையூர் தெருவை  சேர்ந்தவர்கள். இவர்கள் சவுதியிளுருந்து விடுமுறையை  கழிப்பதற்காக அதிரைக்கு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.வாகன ஓட்டுனர் அஹ்மத்  நியாஸ் அவர்கள் பலத்த காயத்துடன்  விக்கிரவண்டி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.இவர் புதுமனை தெருவை சேர்ந்தவர் எனபது குறிப்பிடதக்கது.
Share:

ரமலான் பரிசு ...!


நான் வசிக்கும் கலிபோர்னியா மாகாணம் vallejo எனும் ஊரில் கணிசமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர் .
குறிப்பாக அதிரையை சேர்ந்தவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர்.அரேபியர் ,பாகிஸ்தானியர் , இந்தியா முஸ்லிம்கள் என பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் . 

இங்கு ஒரு பள்ளிவாசல் இருந்து,அது சிறியதாக இருப்பதாலும்,முஸ்லிம் சனத் தொகை கூடுவதாலும் அதிக மக்கள் தொழ சிரமமாக இருந்தது.அச் சூழ்நிலையில் புதிதாக பள்ளி வாசல் கட்டுவதாக இருந்தால் .இரண்டு மூன்று மில்லியன் டாலர் தேவைப்படும் .இதற்கிடையே ..நம்மவர்கள் பல தரப்பட்ட முயற்ச்சியில் ஈடு பட்டுவந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் பெரிய சர்ச் ...புதிய கட்டிடம் என்று கட்டிய   சில மாதங்களிலேயே மக்கள் வருகை தராததால் நிர்வாகம் தேவாலத்தை மூடி விட்டார்கள் .தேவாலயத்தை கட்டிட நிர்வாகம் குறிப்பிட்ட வங்கியில் கடன் வங்கி ..அதை செலுத்தாமல் போகவே ..வங்கி அந்த கட்டிடத்தை கையாக படுத்தி கொண்டது ...

  இதையறிந்த vallejo இஸ்லாமிக் சென்டர் ..நிர்வாகிகள் மிக நியாயமான விலையில் கட்டிடத்தை வாங்கி புனரமைப்பு செய்து நவீன வசதியோடு ..விசாலமான பெரிய பள்ளியாக காட்சி தருகிறது ..ரமலான் முதல் பிறையில் தொழுகையும் ஆரமமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது .அல்ஹம்துலில்லாஹ் 
*அதான் நவீன ஒலி பெருக்கியில் ஒலிக்கிறது.
*எல்லாத் தொழுகைகளுடன் - இரவுத் தொழுகையும் நடை பெறுகிறது .

இது எங்களுக்கு ரமலான் பரிசாக அல்லாஹ் தந்துள்ளதாக கருதுகிறோம் .

அதே போன்று எங்கள் ஊரில் அருகில் உள்ள பேர்பீல்ட் என்ற ஊரிலும்(முன்பு சிறிய பள்ளியாக இருந்தது) சென்ற வாரம் புதிய பள்ளிவாசல் திறக்கப்பட்டது.இங்கும் அதிரை மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,எங்கள் பக்கத்து கவுண்டியான சொனோமா கவுண்டியில் உள்ள பள்ளிவாசல் தற்போது - கிறிஸ்தவ ஆலயத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டு - தொழுகை நடந்து வருகிறது,இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் பள்ளி கட்ட உள்ளார்கள்.

அந்தப் பள்ளியின் ஜும்மா பயான் கேட்க இங்கு கிளிக்கவும் 


மேலும் உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களுக்கு இதே போன்று ரமலான் பரிசு கிடைக்கட்டும் ..ஆமீன் 


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
'உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!" 
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். SAHIH AL BUKHARI # 444

அதிரை சித்தீக்
Share:

ஏர்-இந்தியா - இறங்கு இந்தியா & தாயன்பு



சமீபத்தில் ஏர்-இந்தியா விமானிகளின் வேலை நிறுத்ததினால் நாட்டுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதோடு, பயணிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். பணிக்குத் திரும்பும்படி, கெஞ்சியும் கொஞ்சியும் பார்த்த மத்திய அரசு, இவர்களின் சங்க அங்கீகாரத்தை ரத்து செய்ததோடு சிலரை பணிநீக்கமும் செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏர்-இந்தியா நிறுவனம் ஊழியர்கள்மீது தாயன்போடு நடந்து கொள்ளவேண்டுமென நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

குளுகுளு ஏசி அறை, நட்சத்திர விடுதி, உயர்ரக உணவுகள் என்பதை மட்டுமே அறிந்துள்ள மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தினருக்கு, நடுத்தர மற்றும் ஏழைகள் படும்பாடு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விமான நிலையத்தில் சாமான்ய பயணிகள் படும் சிரமங்கள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய அவதிபட்டவர்கள் ஊர் திரும்பிய மகிழ்ச்சியில் அவற்றை மறந்துவிடுகின்றனர். ஏர்இந்தியா விமான சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு விதவிதமான அனுபவங்கள் கிடைக்கும். அவ்வகையில் ஏர்-இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் விமான சேவைகளை?! 'அனுபவித்த' விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வயிற்றைக் கட்டியும் வாயைக்கட்டியும் குருவிசேர்ப்பதுபோல் சம்பாதித்தப் பணத்தை சேமிக்க அல்லது விமான நிலையத்திலிருந்து ஊர்செல்லும்செலவை ஈடுகட்டும் நோக்கில்,நொந்துபோய் நூடுல்ஸ் ஆனாலும் பரவாயில்லை அல்லாட காவலா பத்திரமாக ஊருக்குவந்து சேர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் எல்லோரையும் போலவே நானும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸை சிலசமயம் நுகர்வதுண்டு.

அமீரகத்தின் ஏர்-அரேபியா விமான நிறுவனம் பட்ஜெட் ஏர்லைன்ஸ் என்ற மலிவுக் கட்டண விமானச் சேவையை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து ஏர்-இந்தியாவும் தனது பங்குக்கு ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற 'மட்ட(வி)மான'  சேவையை துபாய் மற்றும் சிலநாடுகளிலிருந்து செயல்படுத்தி வருகிறது. இதில் பயணக்கட்டணம் மலிவு என்று சொல்லப்பட்டாலும் அது எல்லா நாட்களுக்குமல்ல. ஜூன்-அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் விடுமுறை மற்றும் பண்டிகைகால பயண ஆர்வத்தைக் கவனத்தில் கொண்டு கட்டணங்கள் மானாவாரியாக இருக்கும். வியாழன் இரவு பயணத்திற்கு வழக்கமான கட்டணத்தைவிட பட்ஜெட் ஏர்லைன்ஸ் கட்டனம் அதிகம் என்ற போதிலும் திருச்சிக்கு நேரடி விமானம் என்பதால் இதற்கான மவுசு ஓரளவு இருந்து கொண்டுள்ளது.

லக்கேஜைப் பொருத்தவரை 30 +7 கிலோ கொண்டு செல்லலாம். கெஞ்சி கூத்தாடிக் கொள்ளலாம் என்று நினைப்பில் 32-35 கிலோ பொருட்களை அழுத்தி/அமுக்கி பொட்டி கட்டிக்கொண்டு வந்தாலும் 2-3 கிலோவுக்கு தலா 30 திர்ஹம் கணக்கில் 'தீட்டி' விடுவதும் ஏர்-இந்தியாவின் வாடிக்கை. ஏர்போர்ட்டில் தூக்கி/இறக்க வசதியாக ஒரு பெட்டியின் எடை அதிகபட்சம் 25 கிலோவைத் தாண்டக்கூடாது என்ற வரம்பு இருந்தாலும், 20 திர்ஹத்திற்கு விற்கும் பாத்ரூம் ஸ்கேல்மீது நிடோ பால்பவுடர் டப்பாவை செங்குத்தாகவைத்து வைத்து படுத்துக்கொண்டு எடையை பார்த்தாலும் ஏர்போர்ட்டில் 1-2 கிலோ கூடுதலாகக் காட்டி ஆப்படிக்கும் அனுபவத்தைதாண்டி நிம்மதியாக ஊர்வந்து சேர்ந்தால் 'இந்த' ஜென்மத்தில் செய்த புண்ணியத்திற்குக் கிடைக்கும் பலன் என்று கொள்ளலாம்.

விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பெட்டியின் எடை 7 கிலோதான் என்றாலும் டூட்டி ஃபிரீ (சுங்க வரியில்லா) கடையை நம்பி நம்மவர்கள் மூன்றடுக்கு ஜிப் வைத்து சுருக்கிய பேக்கை எடுத்து வருவதும் உண்டு. இதையறிந்த விமானநிலைய ஊழியர்கள், அவற்றைப் பிடுங்கி, டேக் கட்டி மீண்டும் லக்கேஜுக்கு அனுப்புவதும் உண்டு. இது போக, லேப்டாப்பை கூடுதலாக எடுத்துச் செல்லலாம்!!! என்பதால் அதனோடு லக்ஸ் சோப்,பேரிச்சம் பழமெல்லாம் சேர்த்துக் கட்டி மினி CPU அளவில் லேப்டாப்பை எடுத்துவரும் பயணிகளும் உள்ளனர். உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்டதால் இனி ஸ்மார்ட்போன் மட்டுமே அனுமதி என்று ஏர்-இந்தியா அறிவித்தால் பலரின் லேப்டாப் கனவு தொலைந்து விடும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கைக்குழந்தையுடன் ஏர்- இந்தியாவில் ஊர்வந்தபோது லக்கேஜ்களோடு ஹேண்ட் பேக்கேஜையும் சேர்த்துப்போட எத்தனித்தப்போது, தமிழ் சினிமாவில் கடைசி நேரத்தில் வரும் போலீஸ் மாதிரி "நிறுத்துங்க" என்று சொல்லி ஏர்லைன்ஸ் சூபர்வைசர் தடுத்தார். ஐயா! இரண்டு வயது கைக்குழந்தையை எப்படி 7 கிலோ லக்கேஜை கையில் எடுத்துச் செல்லமுடியும்? என்று 'வாப்பா'வியாகக் கேள்விகேட்டபோது, அதெல்லாம் தெரியாது சார். ஹேண்ட்-லக்கேஜை ஹேண்டில்தான் கொண்டு செல்லவேண்டும் என்று சட்டம் பேசிய கொடுமை யாருக்கும் வாய்க்கக்கூடாது.


-அதிரைக்காரன்
Share:

அதிரை ஷிஃபா மருத்துவமனையில் இலவச அலர்ஜி-ஆஸ்துமா விழிப்புணர்வு முகாம்

நமதூர் ஷிஃபா மருத்துவமனையில் இலவசமாக அலர்ஜி மற்றும் ஆஸ்துமா கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்






நாள்: 29.07.2012 (ஞாயிற்றுக் கிழமை)


நேரம் : காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை


முன்பதிவுக்கு முந்துங்கள் தொலைபேசி எண்:   04373-242324


இப்படிக்கு 

ஷிஃபா மருத்துவமனை
பட்டுக்கோட்டை ரோடு அதிராம்பட்டினம் 614701
Share:

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர்-6 (காணொளி)



அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமளான் தொடர்-6

Share:

ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - பேரா.ஜவாஹிருல்லாஹ் பேட்டி



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு  வந்திருந்தார். அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, ஏற்பாட்டாளர்கள் மூலம் வினவியபோது, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

வாக்களிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மேலும் பல மணித்துளிகள் நேர்காணல் நீடித்த போதும் எவ்வித சங்கடத்தையும் வெளிக்காட்டாமல் மிகுந்த பொறுமையுடனும் இன்முகத்துடனும் அரசியல் முதிர்ச்சியுடனும் ஜவாஹிருல்லாஹ் விடையளித்த பாங்கு பாராட்டிற்குரிய ஒன்று.

தேர்தலுக்குப் பின் அரசியல் ரீதியான அவரின் நிலைப்பாடுகள், சமுதாயம் குறித்து அவர் எடுத்து செல்லும் நடவடிக்கைகள், சட்டசபை தொடர்பானவை, இயக்கம் தொடர்பானவை என்று தொலைநோக்கில் நாம் கேட்க  நினைத்தவையும் அவரின் விளக்கங்களும் பரவலாய் விரிகின்றது.

அவருடனான  நேர்காணல் -

இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளாக எதைக் கருதுகிறீர்கள்? அதை எவ்வாறு தீர்க்கலாம்?

இந்திய அளவில் முஸ்லிம்களிடையே கல்வியறிவின்மை, வறுமை, அரசியல் விழிப்புணர்வின்மை, ஒருங்கிணைந்த அரசியல் தலைமை இல்லாதது ஆகிய பிரச்னைகளைக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் வறுமை தலைவிரித்தாடுகின்றது.  அரசியல் விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தவேண்டியது கட்டாயமாகிறது. மக்களை விழிப்பறிவுணர்வை எட்டச்செய்வதன் வாயிலாகவே இவற்றைத் தீர்க்கலாம்


மனிதநேய மக்கள் கட்சியை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் திட்டமுண்டா? மேலும், தேசிய தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதா?

“இல்லை; அதற்கான சாத்தியங்களில்லை, வட இந்திய முஸ்லிம்களுக்கும், தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் அடிப்படை மனநிலையில் பெரிதும் மாற்றங்கள் இருக்கின்றன. அவர்கள் (வட இந்திய முஸ்லிம்கள்) ஒரு தென்னிந்திய தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும் அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அங்கு பல்வேறு கூட்டங்களில் நான் பங்குக் கொண்டு பேசியுள்ளேன். சமீபத்தில் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பீஸ் கட்சி 2007ல் தமுமுக டெல்லியில் நடத்திய பேரணியினால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும். எனவே நாங்கள் அங்கு எங்கள்கட்சியை கட்டமைக்காவிட்டாலும் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்.


முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்கள் அரசை எவ்விதம் மதிப்பிடுகிறீர்கள்?

எதிராகச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை; வக்ஃப் வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன் அளிப்பதற்கும், அதிகரிக்கப்பட்ட ஊதியத்தினால் ஏற்பட்ட ஊதிய வித்தியாசத் தொகையை அளிப்பதற்காகவும் சென்ற ஆண்டு ரூ3 கோடியை தமிழக அரசு வழங்கியது. இதே போல் இந்த ஆண்டு பள்ளிவாசல் பராமரிப்பு பணிகளுக்காக ரூ 3 கோடி அரசு வழங்கியுள்ளது. மாவட்டங்களில் இயங்கும் முஸ்லிம் மகளிர் குழுவிற்கு அரசின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. உலமாக்களின் உதவி தொகையை ரூ750லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் பரப்புரையின் போது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கின்றது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனைப் பெற்ற அப்பாவி முஸ்லிம் கைதிகள் பல்லாண்டுகளுக்குப் பின்னரும்  பிணை வழங்கப்படாமல் இருக்கிறார்களே?

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஏழாண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருந்த கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், ஏழாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிய முஸ்லிம் கைதிகளை அப்போது  விடுவிக்கவில்லை. அதே நிலை இப்போதும் தொடர்கிறது.எங்கள் நிலைப்பாட்டின் படி, பத்தாண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த அனைத்து கைதிகளையும் மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த சிறைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.

ஆளுங்கட்சிக்கு, குறிப்பாக முதல்வருக்கு அளவுக்கதிகமாகத் துதிபாடுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே. மேலும் தானே புயல் நேரத்தில் நீங்கள் சட்டமன்றத்தில் பேசுகையில் “தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் துயர் நிவாரணம் பெற்றதன் பின்னால் மற்ற மாவட்ட மக்களும் ‘தானே புயல் தங்களைப் பாதித்திருக்கக் கூடாதா? என்று எண்ணத் தலைப்பட்டதாக”ச் சொல்லியிருந்தீர்கள், அதுபற்றி?

ஒவ்வொரு முதல்வருக்கும் ஒரு மனநிலை உண்டு. சிலர் விமர்சித்தால் அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். இன்னும் சிலர் பாராட்டினால் மேலும் ஊக்கம் பெற்று நல்லபல திட்டங்களைச் செயற்படுத்துவார்கள். அவ்வகையில் நமது தற்போதைய முதல்வரைப் பாராட்டினால் மென்மேலும் ஊக்கம் பெற்று நல்ல பல திட்டப்பணிகளைத் தொடர்வார்.  இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில் முதலில் பாராட்டிவிட்டு அதன்பின்பு வேண்டிய கோரிக்கைகளை வைக்கிறோம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்…


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு ஓராண்டு நிறைவடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் நமது மாண்புமிகு முதல்வர் தொலைநோக்குத் திட்டம் 2023 என்று திட்டம் வகுத்திருப்பது இதே போல் தமிழக இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. ஆனால் தமிழகத்தில் இளம் குடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரசுக்கு வருமானம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது புத்திசாலித்தனமானது அல்ல. இது எதிர்காலத்தில் வலிமையான தமிழகம் என்ற கருத்தோட்டத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டோம்..


மற்றபடி, தானே புயல் தொடர்பாக, நான் அப்படி பேசியது தவறுதான் என்று ஏற்றுக்கொள்கிறேன். நானும் மனிதன் தானே, அவ்வகையில் தவறிழைத்துவிட்டேன். இனி அவ்வாறு பேசமாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.நானும் எங்கள் கட்சி ஆம்பூர் உறுப்பினர் அஸ்லம் பாஷாவும் இதுவரை, ஒரு பைசா கூட இலஞ்சம் வாங்கியதில்லை;  இன்ஷா அல்லாஹ் இனிமேலும் வாங்க மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். இங்கே நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு எம்.எல்.ஏ வாக நீங்கள் இலஞ்சம் கேட்கக் கூட வேண்டாம், எல்லா நலத்திட்டங்களிலும் எம்.எல்.ஏ பங்கு என்று அவர்களாகவே ஒரு தொகையை ஒதுக்கிவிடுகிறார்கள். நாங்கள் அதைக் கூட பெறுவதில்லை என்பதை இங்கே உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

கேள்வி: பர்மிய முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறையும், இன அழிப்புப் படுகொலைகளும் நிகழ்த்தப்படுகின்ற வேளையில், நமது எந்த அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லையே? தமுமுக எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.?

இன்ஷா அல்லாஹ், விரைவில் இது பற்றி ஆலோசித்து, எங்களால் இயன்றதைச் செய்வோம்

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர், மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளாரே?

கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். வன்முறை மிகவும் தவறு. மெளலவி ஷம்சுத்தீன் காஸிமி மீதான தாக்குதலை தமுமுக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது..நான் வளைகுடா சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஊர் திரும்பி இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கையை அமைப்புடன் கலந்து பேசி முடிவெடுப்போம். மேலும் இது குறித்து கலகம் செய்தவர்கள் மேல் காவல் துறை நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்வோம்.


மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி கூறுங்களேன்?

2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை மே21 2007ல் சமர்பித்தது. 2009 டிசம்பரில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இது வரை இந்த ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்க வழங்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் முதன்மையான பரிந்துரை. இது இயலாவிட்டால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 7 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைச் செய்துள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரையை புறக்கணித்து உ.பி. தேர்தல் வரும் வேளையில் ஒத்துமொத்தமாக 4.5 விழுக்காடு முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்கும் வகையில் முஸ்லிம்களை ஏமாற்றும்  வகையில் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஏமாற்று வித்தைக்கு உ.பி. முஸ்லிம்கள் சட்டமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை படித்துக் கொடுத்தார்கள்.

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு  நீங்கள் பாடம் கற்ற இடம். இப்போது அந்த அமைப்பு தேசிய அளவிலான அரசியல் கட்சியொன்றை அமைத்துள்ளது. அவர்களுடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?


சென்ற   உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட சில ஊர்களில் அவர்களுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். நாங்கள் போட்டியிட்ட இடங்களில் அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது.. அமைப்பு என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பரஸ்பரம் தேர்தல் வெற்றிக்கு இரு தரப்புமே உதவிக் கொண்டோம்.

முஸ்லிம் சமுதாயத்துக்கு உங்களால் நிறைய பலன் கிடைக்க கூடும் என்று தான் உங்களை சட்டசபைக்கு அனுப்பினோம். ஆனால் இதுவரை ஒன்றும் நீங்கள் அது குறித்து பேசியதாக ஒன்றும் தெரியவில்லையே..?

(சிரிக்கிறார்) என் தொகுதியில் ஓட்டு போட்ட மற்ற சமுதாயத்தினரும் இது போலதான் கேட்கிறார்கள்


நீங்கள் உங்கள் சமுதாய மக்களுக்கு மட்டுமே சட்டசபையில் பேசுவதாக தெரிகிறது. அன்றைக்கு கூட உங்கள் சட்டசபை பேச்சை கேட்டேன். 60 70 சதவீதம் உங்கள் மக்களுக்காக மட்டும்தான் பேசினீர்கள் என்று ஒருவர் என்னை கேட்டார். அவர்கள் அப்படிக் கேட்கிறார்கள். நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். நான் என்னளவுக்கு இரு சாரருக்கு பொதுமானதாகவே பேசுகிறேன். தொலைக்காட்சிகளில் சட்டசபை நிகழ்வுகள் மிகவும் சுருக்கமாக ஒளிபரப்பபடுவதால் நாங்கள் பேசுவது முழுமையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை.

தமிழக முஸ்லீம்களுக்கு என்று தனித்த ஒரு செய்தித் தாள் இல்லை. தொலைக்காட்சி சேனலும் இல்லை.. இவையிரண்டில் ஏதேனும் ஒன்று கொண்டு வரும் திட்டம் உள்ளதா?

அவசியமான ஒன்றுதான். கேரளாவில் கூட மாத்யம் போன்ற பிரபல செய்தி தாள்கள் இருக்கின்றன. அவையெல்லாம் பெரும் முதலீட்டில் செய்ய வேண்டியவை. அந்தளவு இப்போது நம்மிடம் நிதி நிலைமை இல்லை. சமுதாயம் குறித்தான அக்கறையுள்ள பெரும் முதலீட்டாளர்கள் முன் வரும்போது இதெல்லாம் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


கேரளாவில் இஸ்லாமிய வங்கி போன்று அல்பரகா நிதியகம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வரும் முயற்சிகளை எடுப்பீர்களா?

இல்லை கேரளாவில் நீங்கள் குறிப்பிடுகிற அல்பரகா நிதி நிறுவனம் வங்கி என்பதாக ரிசர்வ் வங்கியில் பதிவிடப்படவில்லை. மாறாக அது வங்கி அல்லாத நிதி நிறுவனம் அதாவது Non Banking Financial Corporation   என்றே ரிசர்வ் வங்கியில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வங்கிப் போன்று எல்லா செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் காசோலையோ, வரைவோலையோ வழங்க விதிமுறை அனுமதிக்காது. மேலும், இந்த அல்பரகா வளைகுடா வாழ் கேரள அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம். அப்படி தமிழகம் சார்ந்த வளைகுடா அமைப்புகள் அத்தனை வலிமையாக இதனை முன்னெடுக்குமா என்பதைப் பொறுத்தே இதற்கு விடையளிக்கமுடியும்.


கேரளாவிலேயே முந்தைய ஆட்சியின் முதல்வர் இது குறித்து எல்லா நடவடிக்கைகளும் எடுத்து செயல்படுத்த துவங்குமுன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

சக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றல் குறித்து……….


சமுதாயத்திற்கு பொதுவான விஷயங்களில் பிற அமைப்புகளுடன் கடந்த காலங்களில் இணைந்தே செயல்பட்டுள்ளோம். எடுத்துக்காட்டாக சென்ற திமுக ஆட்சியில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக அனைத்து அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளோம். சமீபத்தில் 15 வயது பெண் திருமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எடுத்து நடவடிக்கையை கண்டித்து அனைத்து அமைப்பினருடன் இணைந்து போராட்டத்தில் பங்குக் கொண்டோம்.


ஒவ்வொரு அமைச்சரும் மானியக் கோரிக்கை விவாதத்திற்க்குப் பதிலளித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு யாரும் பேசக்கூடாது. சந்தேகங்கள் விளக்கங்கள் இருப்பினும் அவர் பேசி முடித்தபிறகுதான் பேசவேண்டும் என்பது அவை மரபு. அப்படி பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை மீது அதன் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது இந்துக்கள் இராமனை வணங்குவது போல் கிறிஸ்துவர்கள் இயேசுவை வணங்குவது போல் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவது போல் .. என்று தொடரும்போதே நமது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்  அஸ்லம் பாஷா எழுந்து “மன்னிக்கவும் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவதில்லை.அல்லாஹ்வைத் தான் வணங்குவோம் என்று குறுக்கிட்டுக் குறிப்பிட்டார். (அப்போது நான் (ஜவாஹிருல்லாஹ்) மும்பையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழுவில் இருந்தேன்) உடனே முதல்வர் ஜெயலலிதா எழுந்து முஸ்லீம்கள் அல்லாஹ்வைத்தான் வணங்குகிறார்கள். முகமது நபியை இல்லை. அமைச்சரின் அந்த பேச்சு சபைக்குறிப்பில் திருத்தப்பட்டுப் பதியப்படும்” என்று கூறியதாக ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டார்.





Share:

ஜித்தா "மெப்கோ"வின் இஃப்தார் நிகழ்ச்சி



ECONOMICALLY POOR  EDUCATIONALLY BRIGHT என்ற தாரக மந்திரத்திரத்தின் அடிப்படையில், பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக்கு உதவி வரும் MEPCO(Muslim Educational Promotion Counsil) அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி ஜித்தா ஷரஃபிய்யா இம்பாலா அரங்கில் 26.07.2012 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.


நிக்ழ்ச்சியை சகோ.ரஃபியா தலைமை ஏற்று தொகுத்து வழங்கினார் .. மெப்கோவின் தலைவர் சகோ.கமாலுதீன் முன்னிலை வகித்தார்...சகோ. நூருல்அமீன் நன்றி நவிழ இரவு உணவுடன் நிக்ழச்சி இனிதே நிறைவேறியது.



இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அதிரை சகோதரர்களும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


Share:

குர்ஆன் தஃப்சீர் (25.07.12)சென்னை ஆயிஷா மஸ்ஜிது


குர்ஆன் தஃப்சீர் (25.07.12)சென்னை ஆயிஷா மஸ்ஜிது  M. முஹம்மது மன்சூர் காஷிஃபி 






Share:

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமலான் தொடர்-5 (காணொளி)


அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ரமலான் தொடர்-5 

Share:

வாடாவை காணோம்? (பேசும்படங்களின் அணிவகுப்பு-2)




நோன்புக் கஞ்சியுடன் வாடாவோ சமோசாவோ இல்லாவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது மாதிரி இருக்கும். என்ன அநியாயம் பாருங்க. நமதூர் பலகாரக் கடையில் காலங்காலமாக இருந்துவந்த வாடாவை ஓரங்கட்டிவிட்டு சமோசாவின் ஆக்கிரமிப்பு!
வாடாவுக்கு நேர்ந்த அவல நிலைக்கு யார் காரணம்? இரால் விலை உயர்வா? உள்ளடத்திற்கான செலவா? 
இப்படிக்கு,
வாடா பிரியன்




 படங்கள் உதவி, அதிரை போஸ்ட்
Share:

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பட்டுக்கோட்டையில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை மின்சார வாரிய செயற்பொறியாளர் சின்னையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது. தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தங்கராசு தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று குறைகளை மனுக்கள் மூலமாக கொடுத்து தீர்வு பெறலாம்.


நன்றி :தினகரன் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சமிப காலமாக அதிரையில் உள்ள மின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட இந்த முகமாய் பயன் படுத்திக்கொள்ள கேட்டுகொள்ளபடுகிறது .
Share:

முகவரி இல்லா முகம்


(கள்ள காதலில் அகப்பட்டு சீரழிந்த 
அபலையின் கண்ணீர் கவிதை ..).!

கவலைகள் பல அடுக்கி ..
செந்நீரை கண்ணீராய் பொழியும்
இளம்மங்கை
குழந்தைக்கு பால் கொடுப்பாள் ...
பசி தீர்ந்து தாயை பார்த்து 
புன்னகைக்கும் ...

**************************
வறுமையின் வலி தன்னை ..
மனதில் அவள் ஏற்றியதால் ..
மனதறியா பாலகனிடம் ...
மனம் விட்டு பேசுகிறாள் இதோ ...!

***********************
ஓரிரவு வாழ்க்கையிலே ..
வந்த நீ பாலகனே ...!
வறியோர் வீட்டில் வந்து வசமாக
மாட்டி கொண்டாய்...!

**************************
வம்பிழுத்து வசைபாட ..
உனக்கு ஒரு நாதி இல்ல...
வாஞ்சையாக கொஞ்சிடவும் ..
வளமும் இங்கே கொஞ்சம் இல்லே ..

**********************
உன் வயிறு நிறைஞ்சிருச்சு ..
என் வயிறு காஞ்சிருச்சு ..
பசிஎடுத்தா பாலகனே ..
பொறுமை  காத்திடுவாய் ..

*************************
நான் பசிச்சா யாரிடமோ ..
கத்தி நானும் கேட்டிடுவேன் ..
உடல் பசி எனக்கு வந்து 
பல கால மாயாச்சி
உனை தந்த கள்வனுமே 
ஊர்மறைந்து நாளாச்சி ..

*****************
அதி காலை எழுந்ததுமே ..!
ஏன் புலர்ந்தே என கேட்பேன் .!
நாட்கள் நகர்ந்து விட்டால் ..
நாலு காசு வேணுமடா ..

**********************
நாலு வீட்டில் நானும் போயி ..
பத்து பாத்திரம் கழுவிடணும் ..
வீட்டு கார எசமானி பேச்சு கேட்டு ..
வீடு வந்து அழுதிடனும் ...

*******************
அதுக்குள்ளே நீ அழுது..
என் அழுகையை அடக்கி புட்டே ..
என் தங்கம் அழுகாதே ...
நாளை நானும் அழுகமாட்டேன்

*********************
இன்று மட்டும் அழுதுகிறேன் '...
அதுவரை நீ கரையாதிரு ..
கண்ணே நீ அழுகாதே ..நான்
கொஞ்சம் அழுதுகிறேன் ..

*****************
என் அம்மாவிடம் சொல்லி அழ
எனக்கு அருகதையும் இல்லையடா ..
சொல் பேச்சு கேட்காம நான்
சோரம் தான் போய் விட்டேன் ..

****************************
நீ அழுதா நானிருக்கேன் ..
நான் அழுதா யாரிருக்கா ..
திசை மாறி சென்றதாலே ...
வசை பொழியுது ,,ஊர் சனங்க .

******************
இசுலாத்தின் கொள்கை தனை ..
இயல்பாக்கி கொண்டாலே ..
வளமான வாழ்வு தன்னும் ..
தனங்கத்தே வந்து சேரும் ..
**********************
கூடாத பழக்கமெல்லாம் ..
கூட்டி நாமும் வந்துபுட்டா
ஈருலக வாழ்க்கையும்தான்
நாசமாக போய் விடுமே ...

*****************
இவ்வுலக வாழ்க்கையிலே
தடம் மாறி போகாம ..
தக்க பலன் பெற்றிடவே
இசுலாம் மார்க்கத்தை பேணிடனும்...

**************************
இசுலாம் சொன்ன சொல்லை
நகைப்பாக கருதாதே ...
உடம்புக்கு புர்காவை போட்டு விடு
உள்ளத்திற்கும் புர்காவை போட்டு விடு
என்று நானும் எனக்கு 
நானே சொல்லிக்கிறேன் ..

******************************
சோரம் போனதினால் ..
சொந்தமாய் நீ வந்துப்புட்டே ..
வளந்து நீயும் சமத்தாக
என் சொல்லை கேள் மகவே ..

***********************
உனக்கென்று ஒரு கொள்கை
ஒரு போதும் எடுக்காதே ..
ஊரில் நல்ல பிள்ளை என்று
பேரு நீயும் வாங்கிடனும் ...

வழுக்கி யாரும் விழ வேண்டாம் ..ஆனா
வளமாக வாழ்ந்திடுங்க ...
இப்போ எனக்கு முகவரியும் வந்தாச்சு ..
என்மகனின் வளத்தாலே ...
நான் அழுது நாளாச்சு ...
புர்காவை உள்ளத்துக்கு முதலில் போடுங்க
உடம்புக்கும் சேர்த்து தாங்க ....

அதிரை சித்தீக்
Share: