Friday, August 31, 2012

அதிரை அருகே பறவைகளை வேட்டையாட சென்றபோது ஏற்பட்ட விபரிதம்

அதிரையை அடுத்த  பள்ளிக்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேஷ், தங்கவேல், கமலக்கண்ணன், கார்த்திக். இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளி.

இவர்கள் அதிரை,தம்பிகோட்டை, முத்துபேட்டை  போன்ற  சுற்றுப்புறங்களில் காடுகள், வயல்வெளிகளில் சுற்றிதிரியும் காடை, மான், முயல் போன்ற பல வகையான விலங்குகளையும் பறவைகளையும் துப்பாக்கியால் வேட்டையாடி வருகிறார்கள்.

இவ்வாறு வேட்டையாடுவதற்காக தங்களுடைய லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கியை கணேஷ் என்பவர் எடுத்து அதில் வெடி பொருட்களை நிரப்ப துடைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராமல் தனது கை பிஸ்டல் மீது பட்டுவிட்டது. அதில் இருந்து சீறிப்பாய்ந்த துப்பாக்கி குண்டு எதிரே நின்ற அவருடைய நண்பர் தங்கவேலின் மார்பில் பாய்ந்தது. இதில் மார்பிலிருந்து ரத்தம் வந்த நிலையில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து   பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து அதிரை  காவல் துறை அதிகாரி செங்கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

டெக்சாசில் உலக தமிழ் முஸ்லிம்கள் ஈத் பெருநாள் கொண்டாட ஏற்பாடு செய்த அதிரை சகோதரர்

டெக்சாஸ்:டெக்சாசில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை சிறப்பாக கொண்டாடினர்.

இரு மகன்களுடன் வெள்ளை நிற சட்டை அணிந்து நிற்கிறார் ஷேக் தாவூத்
அமெரிக்காவில் கடந்த 19ம் தேதி அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகிய டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள 'ப்ளேனோ' பள்ளியில் சுமார் 7,000 பேரும், மற்றொரு பகுதியாகிய ‘இர்விங்' பள்ளியில் சுமார் 5,000 பேரும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகைக்குப் பிறகு இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த உலக தமிழ் முஸ்லிம்கள் ஒன்றுகூடி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சுமார் பத்து ஆண்டுகளாக இப்பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம்களை ஒன்றிணைத்து சமூக சேவை செய்து வரும் 'டீ.எப்.டபிள்யு நண்பர்கள்' அமைப்பின் சார்பில் அன்றிரவு 'கஸ்ரா' உணவகத்தில் நடைபெற்ற ஈத்- பெருநாள் விருந்தில் 200க்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிரை ஷேய்க் தாவூத் நிக‌ழ்ச்சிக்கான ஏற்பாடுக‌ளைச் செய்திருந்தார்.
தகவல்:oneindia 


அதிரையில் அதிசயம் ! 24 மணி நேர மருந்தகம் !!அதிரையில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வந்தது. டாக்டர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே உள்ளன. இதற்காக அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன.

அதிரை மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமைந்துள்ளது நமதூரில் புதிதாக திறந்துள்ள '24 மணி நேர மருந்தகம்'

24 மணி நேர மருந்தகத்தின் சிறப்புகள் சில:

1. 24 மணி நேர மருந்தகச் சேவை

2. முதலுதவிக்கென்று தகுதியுள்ள செவிலியர் ( நர்ஸ் )

3. இலவச டோர் டெலிவரி

4. வெளிநாட்டில் வாழும் உள்ளூர் சகோதரர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச டோர் டெலிவரி வசதி.

5. விரைவில் தகுதியுள்ள டாக்டர்களை மருந்தகத்திலே பணி நியமனம் செய்வதற்கு முயற்சித்தல்.

போன்ற சேவைகளுடன் அதிரை மக்களின் நல்ல ஒத்துழைப்பை பொறுத்தே தங்களின் மருத்துவ சேவைகள் தொலை நோக்குப் பார்வையுடன் மேலும் வலுப்படுத்தப்படும்' என அதன் உரிமையாளர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 30, 2012

கா.மு. குழந்தை சேக்காதிஅவர்களை பற்றிய சில நினைவுகள்:

 கா.மு. குழந்தை சேக்காதிஅவர்களை பற்றிய சில நினைவுகள்:
 சிலர் பாரம்பரியத்தால் சிறப்பிடம் பெறுவதுண்டு ஆனால், பாரம்பரியமிக்க ம.மீ.செ. குடும்பக்கிளையில் தோன்றியிருந்தாலும் தன்னுடைய கல்விப்பணி, அமைதியான ஆளுமைகுணம், அல்லாஹ்வின் பள்ளிகளுக்காக உழைத்தல் என தனிச்சிறப்பியல்புகளால் மக்கள் மனதில் மேலும் நிறைந்திருந்தார்கள். குறிப்பாக...
1. இமாம் ஷாஃபி எனும் இன்றைய ஆலமரம் தழைக்க வித்திட்ட நிறுவனர்களில் ஒருவர்.
2. பட்டுக்கோட்டையில் முதன்முதலாக டுட்டோரியல் கல்வியகத்தை ஆரம்பித்து நடத்தியவர்.
3. மேலத்தெருவில் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அமைய காரணியாக இருந்தவர்களில் ஒருவர், மேலும் அப்பள்ளி உருவாக அமீரகத்தில் தலைமையேற்று பொருளாதராத்தை திரட்டி வழங்கியவர்.
4. சமீபத்தில் சிறிது காலம் அப்பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவராக பங்காற்றியவர்.
5. மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி கட்டுமானத்தின் போதும் அதற்காக தன் நேரத்தை ஒதுக்கி நன்கொடைகள் பெற்றுத் தந்தவர்.
6. அன்னாருடைய தந்தையும் மேலத்தெரு ஜூம்ஆ பள்ளியின் நிர்வாகியாக இருந்துள்ளார்கள்.
7. இதற்கெல்லாம் மேல் தன்னுடைய அமைதி சுபாவத்தால் அனைவரின் உள்ளங்களை வென்றவர் என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
குழந்தை சேக்காதி அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல நாடுவோர் அபுதாபியில் வசிக்கும் அன்னாருடைய மூத்த மருமகன் பஷீர் அஹமது அவர்களை 0555143963 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
யா அல்லாஹ் சகோதரர் குழந்தை சேக்காதி மறுமையில் வெற்றி பெற, மஃஷரில் உன்னால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் சுவர்க்கதிற்குரிய நல்லடியார்களில் ஒருவராக எழுப்புவாயாக! யா அல்லாஹ் நரகிலிருந்தும் பாதுகாப்பளிப்பாயாக. யா அல்லாஹ் ரஸூல் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் எனும் பாக்கியத்தை அன்னாரின் மீது அருள்வாயாக.

தகவல்:குழந்தை சேக்காதி அவர்களால் அதிரை கிட்டங்கி தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இமாம் ஷாஃபி பள்ளியின் ஆரம்ப வருட மாணவனாக பயின்ற, பயன்பெற்ற நன்றியுடன்...அதிரைஅமீன்

நாளை துபையில் (ADT) அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசணை கூட்டம்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31.08.2012 மஃரிப் தொழுகைக்குப்பின் துபை, தேரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணை கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து அதிரை தவ்ஹீத் சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

பொருள்:

1. கடற்கரை தெருவில் நடைபெற்று வரும் பெண்கள் மதரஸா மேம்பாடு.

2. பிலால் நகர் பிரச்சார மைய கட்டுமானம்.

என இன்னும் பல...
 
தவ்ஹீத் இல்லம்

டேரா, நைஃப் ரோடு, அல் புத்தைம் பள்ளி (AL FUTTAIM MASJID) எதிர்புறம் அமைந்துள்ள டல்ஃப் (DULF) ஹோட்டல் பின்புறமுள்ள அல் ஜர்வானி பில்டிங், அறை எண்:109, இடைத்தளம். (MEZZANINE FLOOR)

  தொடர்புக்கு:அப்துல் காதர் 055 2829759  ஜமாலுதீன்   055 2177618

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர அறிவிப்பு !!!


நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் பெண்களுக்கான வாராந்திர பயான் சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களால் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் ஆயிஷா மகளிர் அரங்கத்தின் நிர்வாகியும், அதிரை பேரூராட்சி தலைவருமாகிய சகோ. அஸ்லம் அவர்கள் தான் வசிக்கும் முஹல்லாவிற்கு உட்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பு: "இந்தப்பதிவு தகவலுக்காக மட்டுமே; சார்பு/எதிர்ப்பு விமர்சனங்களும் பின்னூட்டங்களும் சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் இப்பதிவுக்கு மட்டுறுத்தப் படுகிறது.

புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி..

Wednesday, August 29, 2012

'சந்திப்பு' : மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி [காணொளி]இணைய ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள நமதூர் சகோதரர்களுக்கு நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும் சில கேள்விகளை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, இதன் தொடர்ச்சியாக ஏராளமான மூத்த பதிவர்கள் மற்றும் இளம் பதிவர்கள் என அவரவர்களுக்குரிய தனித்தன்மையுடன் கருத்துகளைக் காணொளியில் பதிந்தும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பியும் வருகின்றனர். ( அல்ஹம்துலில்லாஹ் )

இதன் மூலம் ஒன்று மட்டும் மிகத்தெளிவாக நாம் அறிய முடிகின்றது. அவை ஊடக ஒற்றுமை, புரிந்துணர்வு, சமூக அக்கரை மற்றும் தன்னலமற்ற சேவைகள் மட்டுமே என்றால் மிகையாகாது. மேலும் இவர்களால் பதியப்படும் கருத்துகள் இளம் பதிவர்களுக்கு ஊடகத்துறையில் காலூன்றுவதற்கு உதவும். ( இன்ஷா அல்லாஹ் ) !

இந்த வாரம்...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளை முன்வைத்து மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு :

‘பொருளாதார நிபுணர்’, ‘சமூக நீதியின் முரசு’ என இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற மூத்த சகோதரர் இப்ராகிம் அன்சாரி அவர்கள் நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி போன்றவற்றில் பயின்றவர் ஆவார்.

கல்லூரி நாட்களில் நமது சமுதாயம் சார்ந்த பல கட்டுரைகளை துடிப்புடன் எழுதி அதற்கு பல பரிசுகளும் பெற்றுவர். குறிப்பாக கல்கத்தா பாரதி தமிழ் சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு “பாரதி இதயம்” என்ற தலைப்பிற்காக அகில இந்திய முதல் பரிசு பெற்றிருப்பது இவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெருமை.

பல்வேறு உலக நாடுகளில் கணக்காளராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறையிலும் பணிபுரிந்துள்ள இவர் அமீரகத்தில் இந்திய தூதரகம் சார்பாக நடத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பற்றிய கருத்தரங்கில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பங்கேற்று உரை நிகழ்த்தியது. மேலும் ORACLE மென்பொருள் நிறுவனம் சார்பாக மனிதவள மேம்பாட்டுத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்றதற்கான பாராட்டு கேடயம் பெற்றிருப்பது இவருக்கு கூடுதல் சிறப்பாகும்.

நமது சகோதர வலைதளங்களில் பொருளாதார, சமூக, அரசியல் போன்ற விழிப்புணர்வு ஆக்கங்கள் எழுதிவருவதோடு மட்டுமல்லாமல் இயற்கையாகவே சமுதாயப்பணி மற்றும் கல்விப்பணியில் ஆர்வமிக்கவர். குறிப்பாக இவர் எழுதி வரும் மனு நீதி மனித குலத்துக்கு நீதியா ?என்ற நெடுந்தொடர் அனைவரும் பயன்பெறும் நோக்கில் விரைவில் புத்தகமாக வெளியிடுவதற்குரிய முயற்சியில் இறங்கியுள்ளார்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பதிவர்களின் சந்திப்பு தொடரும்...
பதிவர் சந்திப்பு : பகுதி -1- ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

இமாம் ஷாபி பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான கா.மு. குழந்தை சேக்காதிஅவர்கள் இன்று மரணம் அடைந்தார்.

இமாம் ஷாஃபி பள்ளியின்  நிறுவனர்களில் ஒருவரான  கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் உடல்நல  குறைவால்  திருச்சி மருத்துவமனையில் இன்று  பகல் மரணம் அடைந்தார். இதையொட்டி இன்று மதியம் இமாம் ஷாபி பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது.அன்னாரின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்கு பிறகு 9  மணியளவில் பெரிய ஜும்ஆ  பள்ளி மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.  

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு!

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த குறுந்தொடர், புதிய எழுத்தாளர்களை வளர்ப்பதற்க்காகவும் எழுத்தின் மீது ஆவல் கொண்டுள்ள புதியவர்களை ஊக்குவிப்பதற்க்காகவும்  பதியப் படுகிறது. மேலும் சகோ. நஜ்முத்தீன் அவர்கள், பல தகவல்களை சேகரித்து இதனை கட்டுரையாக வடிவமைத்துள்ளார் .

ஏற்கனவே  இவரின் சில கட்டுரைகள் பதியப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. புதிய எழுத்தாளர்களை வரவேற்ப்போம் ஊக்கப் படுத்துவோம் 

அன்புடன்

அதிரை எக்ஸ்பிரஸ் குழு

இனி.....

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு! இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளை கடந்தும் சுதந்திரத்திற்கு தொடர்புள்ள இஸ்லாமியர்கள் இருட்டடிக்கப் பட்டதையும் அதன் உன்மையான வரலாறுகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இதை நம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உணர்த்த வேண்டும். 

அறிஞர் டாக்டர் ஜேம்ஸ் கூறுகிறார்: "இந்திய திருநாட்டின் உண்மையான திருமக்கள் அதிக உரிமைகள் கொண்டர்வர்கள் இஸ்லாமியர்கள் தான்.அவர்கள் தான் நாட்டின் விடுதலையில் பெரும் பங்கு வகித்தனர்."

நாடறிந்த அறிஞர்,தேசியவாதி -குஷ்வந்த் சிங் கூறுகிறார்:இந்திய நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும்,உயிர் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் அதிகம் இருக்கிறார்கள் அவர்கள் தமது மக்கள் தொகை விகிதத்தைவிட நாட்டு விடுதலைப்போராட்டத்தில் உயிர் நீத்த முஸ்லீம்கள் விகிதம் அதிகம் இருந்தது.

இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது பலரின் கூட்டு ஒத்துழைப்பினாலும் விடா முயற்சியாலும், பலரின் உயிர் தியாகத்தினாலும் கிடைத்தது என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல தியாகிகள் மாவீரர்கள் என்று பலரும் போராடி உயிர் நீத்த பின்னரே இன்றைய சுதந்திர இந்தியா அயல் நாட்டவரின் அடிமை தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சுதந்திரம் ஒரு தனி மனிதானலோ அல்லது ஒரு தனி மதத்தவராலோ கிடைத்தது அல்ல.

வரலாற்றை சற்று புரட்டி பார்த்தல் இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமும் பொருள் வசதியும் அளித்தவர்களில் இஸ்லாமியர்களே முதல் இடம் வகிப்பார்கள். இதில் வரலாற்றில் வெளிவந்தது சில மறைக்கப் பட்டவை பல.முதல் இந்திய சுதந்திர போரில் பங்கேற்றவர்கள்

பாட புத்தகத்தில் வந்தவைகள்: முஸ்லீம் தலைவர்கள் பெயர்கள்:1.;நானா சாகிப் 2.தாந்தியாதோப் பேகம் ஹள்ரத் மஹால்                         (10ம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்:59)

பாட புத்தகத்தில் வராதவைகள்: 

1.ஹள்ரத் மௌலானா ஷைக் முஹம்மத் (ரஹ்) 2; காஸிம் நானுத்தவி (ரஹ்) 3.மௌலானா ரஷித் அஹ்மத் (ரஹ்) அவர்கள் மற்றும் பலர்.  ஆனால் வரலாற்றில் ஒரு சில நபர்களையும் மட்டுமே பதிவு செய்து பலர் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளனர். 


- தொடரும் 

ஆக்கம்:  நஜ்முதீன்
                (தீனியாத் ஆசிரியர் : காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி)

Tuesday, August 28, 2012

ட்விட்டர் கருணாநிதி - ஊர்சுத்தி வழங்கிய பட்டம்!


"வாங்க காக்கா, ரொம்பநாளு கழிச்சு இப்பதான் ஒரே சஹன்ல உட்கார்ரோம்!" - காதரு

"யாங்காதரு! 30 நாளும் 29 பள்ளியாசல்ல ஒன்னாத்தானே உட்கார்ந்து நோம்பு கஞ்சி குடிச்சோம்! மறந்துட்டியா?" - ஊர்சுத்தி

"ஆயிரந்தான் ஈந்தாலும் சஹன்ல உங்களோட உட்கார்ந்து சாப்புடுறமாதிரி வருமா காக்கா!" - காதரு

"அதுக்காக நோம்புக்கஞ்சிய சஹன்ல தரமுடியுமா காதரு?. சரி..சரி வேட்டிய லூசாக்கிக்க. விக்கல் கிக்கல் வந்துட போவுது" - ஊர்சுத்தி

"உங்களுக்கு ரொம்பத்தான் நக்கல் காக்கா! சரி. நம்ம கருணாநிதி புதுசா முகநூல், ட்விட்டர்னு கலக்குறாராமே!"

"இந்தமன்சன் ஆட்சில ஈந்தாலும் இல்லாட்டியும் எப்போதும் மீடியாவ்ல தொடர்ந்து ஈக்கிறது கருணாநிதியோட தெறமெ. இந்தக்காலத்து இளவட்டங்களெல்லாம் முகநூலில் (Facebook) காலந்தள்ளுவதால் கருணாநிதியும் அதுக்கு வந்துட்டார். சென்னைல நடந்த டெசோ மாநாட்டு செய்திகளையும் அந்தஅமைப்பு பத்தியும் பிரபலப்படுத்தலாம்னு முகநூலில் கணக்குத் திறந்து வந்தா, அவர்மேல செமஎரிச்சலில் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களும், அமெரிக்க புலம்பெயர்ந்த ஆரியர்களும் கஞ்சிகாய்ச்சி எடுத்துட்டாங்களாம்.முகநூலில் நுழைந்த முதல்நாளே அவரது கணக்கு முடங்குமளவுக்கு ஹிட் (திட்டு) உழுந்திருக்குன்னா பார்த்துக்கவேன்!"

"எப்புடியோ கலைஞர் கருணாநிதியை ட்விட்டர் கருணாநிதியா ஆக்கிட்டாங்க! இனி திமுகவில் டிவிட்டர் அணி, FACEBOOK அணி, ப்ளாக்கர் அணின்னு புதுப்புது அணிகள் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே! கருணாநிதியும் உங்கள மாதிரியே ரொம்ப வெவரமானவருதான் காக்கா!"

"பாத்தியா சஹன திருப்பிப்போட்டு நம்மலையே கவுக்கப் பார்க்குறா! இந்தக் குசும்புதானே வாணாங்குறது. சரி நம்ம ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியோட வெளிநாட்டுக்காரு ரிப்பேராமே கேள்விப்பட்டியா?"

"யாங்காக்கா! காருன்னா ரிப்பேராகாமயா ஈக்கிம்.தெரியாமத்தான் கேட்குறேன்.ஏன் நம்மநாட்டுல நல்லகாருவொலே இல்லையாமா? ஜெர்மனிலேர்ந்து இறக்குமதிசெஞ்ச காருதான் பாதுகாப்புன்னு சொன்னதெல்லாம் இப்போ என்னா ஆச்சு பாத்தியலா? மொதல்ல முதல்குடிமகனே நம்மநாட்டு பொருளுக்கு முதல் நுகர்வோராகவும் ஈக்கனும். நான் மட்டும் ஜனாதிபதியா ஈந்தா அம்பாஸ்டர் காருலதான் போவேன்!"

"யாண்டா காதரு. உருளைக்கிழங்குல ஈரல் ஏதுவும் கூடுதலா கிடைச்சிடுச்சா? ரொம்ப உற்சாகமா ஈக்கிறே? சரி. பள்ளிக்கூட ஆசிரியர்கள் பலர் பெயிலாப்போயிருக்கறது தெரியுமா ஒனக்கு?"

"என்னா காக்கா சொல்றிய? வழக்கமா மாணவர்கள்தானே பெயிலாவாங்க? அதுக்குத்தான் பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது செல்போனு கொண்டுபோகக்கூடாதுன்னு சொல்றது. சரிதானே காக்கா!"

"அடேய்! ரொம்பத்தான் நக்கலடிக்கிறாடா! கத்திரிக்கா பச்சடி கிண்ணிய தலையில கொட்டிடுவேன் ஆமா!"

"ஹி..ஹி..நானும் நேத்து நியூஸ்ல பாத்தேன் காக்கா. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு மத்தியஅரசு தகுத்தேர்வு அவசியம்னு சட்டம்போட்டுச்சு.ஆறரை லட்சம் ஆசிரியர்களில் வெரும் 2500 ஆசிரியர்கள்தான் காக்கா பாஸாகி ஈக்கிறாஹ.சும்மாவே இந்தக்காலத்து புள்ளைங்க ஆசிரியர்களை மதிக்க மாட்டானுவோ. இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையும் இந்த தகுதித்தேர்வு கெடுக்காம ஈந்தா சரி. ஆறுதல் என்னான்னா தேர்வில் குளறுபடி நடந்ததால் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்புள்ளதாம். அதுலயாச்சும் நல்லமார்க் எடுத்து பாஸானா சரி"

"காதரு! ஏற்கனவே மறுசோறு வாங்கியாச்சு. இன்னும் கொஞ்சம் கொண்டுவரச் சொல்லு. முக்கியமான ஊர் செய்தி ஒன்னு டிஸ்கஸ் பண்ணனும்"

"மறுசோறு ஒருதடவைதான் காக்கா! யாராச்சும் நம்மளப்பார்த்துட்டு நெட்டுல கிட்டுல எழுதிப்போட்டுட போறாங்க. வேணும்னா பக்கத்து சஹன்ல சின்னப்பசங்க கஷ்டப்படுதுவ. அப்புடியே கொஞ்சம் திரும்பி ஒக்கார்ந்து ஒலப்பாம நீங்களும் சாப்புட்டுறுங்க. இந்தாங்க பிர்னிய அவனுவட்ட கொடுத்துட்டு சாப்பாட்ட நீங்க முடிச்சிடுங்க காக்கா"

"சரி பரவாயில்லே காதரு! விசயம் என்னான்னா ஹைதர் அலி ஆலிம்சாமேல நம்மூராளு ஒருத்தரு போலீஸ்ல கேஸ் கொடுத்திருக்காராம் கேள்விப்பட்டியா?!"

"என்னா காக்கா சொல்றிய?ஆலிம்சா நெறைஞ்சுள்ள ஊருல மொதமொத இப்பத்தான் இதுமாதிரி கேள்விப்படுறேன். இது எங்கபோயி முடியுமோ? இதையெல்லாம் யாரும் தட்டிக்கேட்க மாட்டாங்களா? ஒருகாலத்துல பஞ்சாயத்துல ஆலிம்சாக்கள் சொன்ன தீர்ப்புக்கு மதிப்பு ஈந்துச்சு. இப்ப என்னடான்னா ஆலிம்சாமேலயே போலிஸ் கேசு! என்னா கொடும காக்கா!"

"அதவிட கொடும என்னான்னா ஹைதர் அலி ஆலிம்சா தீவிரவாதத்த தூண்டுறமாதிரி பேசுறாருன்னு கோர்ட்டுல கேஸு போட்டிருக்காரு. கடந்த 10 வருசமா முஸ்லிம்கள்மேல சங்பரிவாரங்கதான் இப்புடி சொல்லிக்கிட்டு புரளி கெளப்புனாங்க. இப்ப நம்ம ஆளே இதுமாதிரி கேசு போட்டதுதான் வேதனை. கடைசில நம்ம சமுதாய இயக்கத்து புள்ளைங்க கொதிச்சு எழுந்ததால கேஸை வாபஸ் வாங்கிட்டாராம். ஈந்தாலும் மனசுக்கு கஷ்டமா ஈக்கிது காதரு"

ஈக்காதா! இந்த மாதிரி செய்யிரவங்களுக்கு அல்லாதான் நல்ல புத்தியக்கொடுக்கணும். சரி வாங்க! மெயின்ரோட்டுல சர்பத் குடிச்சிட்டு, ரெண்டு வாழப்பழத்தைச் சாப்பிட்டுட்டு ஊட்டுக்குப்போவோம். காலைலயும் பசியாறக் கூப்புட்டிருந்தாங்க. சுபுஹு தொழுதுட்டு வேட்டியக் கழுவி காயவைச்சாத்தான் வெள்ளலமே வரமுடியும்"

மப்பும் மந்தாரமுமா ஈக்கிது. இதுக்குமேல கழுவி, காயப்போட்டுட்டு வரமுடியுமான்னு தெரியல. அதுனால பேசாம பெருநா வேட்டியையே உடுத்திக்கிட்டு வந்துட வேண்டியதுதான். சரி வா போவலாம் கடைய மூடிடப்போறாங்க.

Monday, August 27, 2012

சின்னச் சின்ன ஆசைகள்

ஆசைகள் அனைவருக்கும் பொதுவானவை. மனிதனை ஆசைகளின் மூட்டை என்று வர்ணிப்பார்கள். சிலருக்கு தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் பல ஆசைகள் இருப்பது இயற்கை மற்றும் இயல்பு. மிகச் சிலருக்கு தான் சார்ந்து இருக்கும் சமூகத்தைப் பற்றிய ஆசைகள், சுயநல அரசியlவாதிகளுக்கு சுரண்ட ஆசைகள், சுருட்டும் ஆசைகள், தனது பத்தாவது தலைமுறை பேரனுக்குக்கூட சொத்து சேர்த்து வைக்கும் ஆசைகள். இந்த சூழ்ல்நிலைக்கு ஆளாகி இருக்கும் இவ்வுலகில் ஒரு அறுபத்து ஐந்து வயது நிரம்பிய இளைஞருக்கு தனது காலம் முடிவதற்குள் தான் பிறந்த ஊரில் அமைந்திட வேண்டும் - அவற்றை கண்களால் காண வேண்டுமென்று என்று சில பாராட்டுக்குரிய பொது நல ஆசைகள். அவை சின்ன சின்ன ஆசைகள் தான். ஆனால் ஒரு பெரிய பரந்த மனத்தில் உதித்தெழுந்த ஆசைகள். இந்த ஆசைகளைப் பட்டியலிடுவதில் ஆனந்தம் அடைகிறேன்.


இந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட அதிரைப்பட்டினத்தை இம்மண்ணில் பிறந்த அனைவரும் கற்பனை செய்து பார்த்தால் நினைத்தாலே இனிக்கிறது. இவைகள் அறுபது வயது தாண்டியவரின் ஆசையாக இருக்கலாம். இதுபோன்ற ஆசைகளே இதைப் படிக்கும் இளைஞர்களின் கனவாகவும் - குறிக்கோளாகவும் இருக்க முடியும்.

1. ஊர் முழுவதுக்கும் பொதுவான முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் (Drainage) :
கழிவு நீர் சூழாத அதிரைப்பட்டினம் - கழிவு நீர்களே கொசுக்களின் தாயகம். வியாதிகள் ஆரம்பிக்கும் அரிச்சுவடி. சீர்கேடுகளின் மூலகாரணம். இவைகளைக் களையப்பட்ட அதிரைப்பட்டினம் இந்த இளைஞரின் கனவுகளில் முதலிடம்.

2. சிறு வணிகத் துறைமுகம் - (mini harbor with recreation facilities):
வளரும் நாடுகளில் புதிய புதிய வசதிகள் மேம்பட்டு வருகின்றன. சரித்திர காலத்தில் தான் பெற்றிருந்த சிறு துறைமுகத்தை இழந்து நிற்கும் அதிரைப்பட்டினத்தில் மீண்டும் நவீனப்படுத்தப்பட்ட - பொழுது போக்கு வதிகளுடன் கூடிய ஒரு சிறு வணிகத் துறைமுகம் நிறுவப்பட வேண்டும்.

3. எல்லாத் தெருக்களிலும் இணையதள மையங்கள் (internet cafe center for all street) :
காலத்தின் மாற்றத்திற்கேற்ப அதிரைப்பட்டினத்தின் அனைத்து தெருக்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக தெருவுக்கு ஒன்றென இணையதள மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

4. மேம்படுத்தப்பட்ட பொதுவான பன்முக விளையாட்டுத் திடல்கள் (play grounds, stadiums) :
அதிரைப்பட்டினத்தில் அமைந்திட வேண்டும். இந்த விளையாட்டுத் திடல்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற வேண்டும். விளையாட்டுத் திடல்களில் எதிரபாராத விபத்துகள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சைக்காக ஷிஃபா மருத்துவமணை போன்ற பன்முக சேவை கொண்ட மருத்துவமணையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும். அங்கே அவசர ஊர்திகள் எந்நேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

5. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தொழில் அமைப்புகள். (Industries suitable for ladies and gents) :
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் ஏற்றதான தொழில்கள் அதிரைப்பட்டினத்தில் அமையப்பெற வேண்டும். பெண்களின் சுய தற்சார்பு ஊரின் பொருளாதாரத்தை வளர்க்கும் திறனுடையது.

6. அதிரைப்பட்டினத்தில் அனைவருக்கும் வீடு:
ஊரில் அனைவருக்கும் 600 to 800 சதுர அடிகளில் கட்டப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் (all houses to be built for all 600 to 800 sq.ft.) அதிக ஆடம்பரமில்லாத, பிரம்மாண்டமில்லாத ஆனால் சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அதிரைப்பட்டினத்தில் பாகுபாடு இன்றி அனைவருக்கும் அமையப்பெற வேண்டும்.

7. பணி மேம்பாட்டுக்கான தகுதி வளர்க்கும் வசதிகள் (career development facilities):
வெளிநாட்டில், உள்நாட்டில் பணியாற்றி விடுமுறையில் ஊர்வரும் படித்த அதிரைப்பட்டினத்து இளைஞர்கள், தங்களின் பணியில் மென்மேலும் ஏற்றம் பெற உதவிடும் பயிற்சி வகுப்புகள் நடத்தும் நிறுவனங்கள் அமையப்பெற வேண்டும்.

8. தோட்டக்கலை, மரம் வளர்ப்பு, (gardening, tree plantations):
இல்லங்கள்தோறும் மணம் பரப்பி பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், வீதிகள் தோறும் நிழல் தரும் மரங்கள் கொண்ட சோலை வனமாக அதிரைப்பட்டினம் செழிக்க வேண்டும்.

9. அயல்நாடுகள் செல்வதற்கான வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு நிலையங்கள் (international recruitment) :
எதுவுமே தெரியாமல் வெளிநாடு செல்ல எண்ணும் இளைஞர்களுக்கு ஏதாவது தொழில் பயிற்சி கொடுத்து வெளிநாடு அனுப்பும் நிறுவனங்கள் அமைந்திட வேண்டும்.

10. 5000 மாணவ மாணவிகளைக் கொண்ட ஒற்றைப் பள்ளி அதுவும் இமாம ஷாஃபி (ரஹ்) பள்ளி (One School with strength of 5000 students):
பல்வேறு பள்ளிகளில் சிதறிப்போகாமல் ஒற்றைப் பள்ளியில், குறைந்த பட்சம் ஐந்தாயிரம் மாணவமணிகள் கொண்ட பள்ளி, அதிலும் மார்க்க அடிப்படைகளைப் போதிக்கும் பள்ளி என்னும் உயர்ந்த நிலையில் இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளி அடைய வேண்டும்.

இன்னும்...

11. விதவைகளுக்கு மாற்றமில்லாத மறுவாழ்வு (rehabilitation for all widows).

12. மத்திய அரசுப்பணிகளுக்கான தேர்வு பயிற்சி மையங்கள் (IAS/IFS/COACHING CENTRES).

13. மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள் (road facilities)

14. இடையூறு இல்லாத மின்சாரம் மற்றும் தண்ணீர் (uninterrupted water and electricity)

15. பெண்களுக்கான தனி பூங்காக்கள் (Exclusive parks for ladies)

16. அல் அமீன் பள்ளி முழுமையாக கட்டி முடிக்கப்படுதல் (al-ameen masjed)

17. பெண்களுக்கான தனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (exclusive women's college)

18. சமுதாயக் கூடங்கள் (Community centers)

19. இடையில் படிப்பை நிறுத்தியவர்களுக்கு (dropout students) வழிகாட்டு மையமாக திறந்தவெளி கல்லூரி (open college) அமைத்து படிப்பை நிறைவு செய்ய வைக்க வேண்டும்.

19. அனைத்து தெருக்களிலும் நூல் நிலையங்கள் (Library in all streets)

20. இரயில்வே அகலப் பாதை அமைந்து காரைக்குடி - சென்னை மார்க்கம் இனிய இரயில் பயணங்கள் அமைய வேண்டும்.

21. வானூர்தி ஏறு இறங்கு தளம் (helipad stage) கரிசல்மணி குளம் அருகில் அமைத்து அதிரை உடன்பிறப்புகள் யாரெல்லாம் வெளிநாடுகள் பயணப் போக்குவரதில் இருக்கிறார்களோ அவர்கள் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து தனி அல்லது வாடகை ஹெலிகாப்டரில் அதிரைக்கு வந்து சேரும் தளம் அமைய வேண்டும்.

22. சென்னை புதுக்கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து முஸ்லிம் மாணவர்களுக்கு குறைந்த செலவில் இலாப நோக்கமின்றி மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் முஸ்லீம்கள் நிறைந்த ஒரு பகுதியில் அமையப் பெற வேண்டும். இறைவனிடம் துஆவோடு எழுந்த இவ்வெண்ணம் அவன் அருளால் நிறைவேறக்கூடிய சாத்தியக்குறுகள் தற்போது தென்பட்டுள்ளன. இதைப் பற்றிய விவரங்களை எனது அடுத்தப் பதிவில் கோடிட்டுக்காட்டுவேன்.

இது அதிரை இளைஞனின் சின்னச் சின்ன ஆசைகளின் தொடக்கமே !

J.A. தாஜுதீன்
செல் : +91 98408 85773
மின்னஞ்சல் : taj47@yahoo.com

விட்டாச்சு லீவு!

நாளையதினம் இமாம் ஷாபி பள்ளியில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதால் நாளை ஒரு நாள் மட்டும் LKG முதல் 5 ஆம் வகுப்புவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என இமாம் ஷாபி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மரணத்தின் பிடிப்பிலே....மகத்தான படிப்பினை!!

மச்சானின் இறப்பு
    .....மாபெரும் போதனை
    அச்சாகப் பதிந்து
    ..... அச்சமாய் ஆனதே

    முடிவாகும் நாளில்
    ....முடிவைக் கண்டேனே
    முடிவாக நானே
    .....முடிவு செய்தேனே


    கலிமாவைச் சொல்லி
    .....கடைசி மூச்சுபோக
    சலியாமல் நாவும்
    ....சதாவும் ஓதவேண்டும்

    அசைவுகள் எல்லாம்
    .....ஆன்மாவில் அடங்கும்
    அசைவிலாத் தோற்றம்
    ....அங்கேதான் கிடக்கும்

    அகத்தின் ஒளியே
    ....அழகாய் மிளிர
    முகத்தின் சிரிப்பில்
    .....முழுதாய் உணர்ந்தேன்

    ஓடி உழைப்பதும்
    ....ஓரதிர்வில் ஓயும்
    ஆடி அடங்கிடும்
    ...ஆறடியில் சாயும்

    மரணம் பயமன்று
    ...மறுமையின் பயணமென்று
    வரணும் விசுவாசம்
    ....வளரணும் சுயமுயற்சி

    நன்மைகள் செய்தாலே
    .....நல்லவர்கள் வழுத்தும்
    தன்மையில் கைகூடும்
    ...தன்னிறுதிப் பயணம்
-அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

Sunday, August 26, 2012

அதிரையில் அதிகரிக்கும் நாய்தொல்லை !!

அதிரையில் சமிப கலாமாக நாய்தொல்லைகள் அதிகரித்து வருகின்றன இதனால் பெண்கள் சிறார்கள் வீதிகளில் நடமாட அச்சப்படுகின்றனர் .

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு ஆடுகள் ஒரு மாடு போன்ற கால்நடைகளை கடித்து குதறியதால் அவைகள் மாண்டு போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை இவ்வாறிருக்க சமிபத்திய தகவல்களின் படி அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் நாய்கடி தடுப்பூசிகள் இல்லை என்று கூறப்படுகிறது மேலும் மாநில முதல்வர் அவர்கள் இனி தெரு நாய்களை பிடிக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் இனி நாய் தொல்லைகள் அதிகரித்து பொதுமக்களை கடித்து குதறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது இதனால் ரேபிஸ் போன்ற கொடிய நோய்களால் பொதுமக்கள் பீடிக்க வாய்ப்புள்ளது.

எனவே தமிழக முதல்வர் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்து பொதுமக்களை "ரேபிஸ்"எனும் கொடிய நோயிலிருந்து காத்திட கேட்டுக்கொள்ள படுகிறது.

'சந்திப்பு' : எழுத்தாளர் மூத்த சகோ. அதிரை அஹ்மது [காணொளி] !ஜனநாயகத்தின் நான்காவது தூணாக !? வர்ணிக்கப்படும்  ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊடகத்துறை.

ஊடகத்துறை என்பது சமூகத்தில் நடைபெறும் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கும் சென்றடைந்து அதற்குரிய தீர்வும் எட்டுகிறது. இதனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது.

இத்தகைய ஊடகத்தை நமது சமூகத்தினர் பயன்படுத்தி நமது சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு போன்ற நல்ல நோக்கங்களுக்காக சரித்திரம் படைக்க இளம் தலைமுறையினர் சவால் நிறைந்த ஊடகங்களில் அடியெடுத்து வைத்து சாதிப்பதற்கு தயாராக வேண்டும் !

இதற்கு எடுத்துக்காட்டாக நமதூரைச் சேர்ந்த பிரபல பதிவர்கள் மின்னணு துறையாகிய இணையதளத்தைப் பயன்படுத்தி சமூகம், கல்வி, அரசியல் போன்றவற்றை சார்ந்த விழிப்புணர்வு ஆக்கங்கள், மார்க்க விளக்கங்கள், முக்கிய நிகழ்வுகள், சிந்தணையத் தூண்டும் செய்திகள், உடல் நல குறிப்புகள், விளையாட்டு செய்திகள், அறிவிப்புகள், வரலாற்று ஆய்வுகள், அழகிய கவிதைகள், புகைப்படங்கள், காணொளிகள், கடிதங்கள் போன்றவற்றை அவரவர்களின் தனித்தன்மையுடன் பிறர் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் நமது சகோதர இணையதளம் மற்றும் வலைத்தளங்களில் பதிந்து வருகின்ற இவர்களால் பலர் பயனுற்று பாராட்டுகளையும் அளிக்கின்றனர்.

நமதூர் பதிவர்களிடம் ...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளை முன்வைத்து ஒவ்வொருவராக தனித்தனியே சந்தித்து அவர்களின் கருத்தைப் பெறுவது என உத்தேசித்துள்ளேன். இதன் அடிப்படையில் வாரம் ஒரு பதிவர் என அவர்களின் கருத்துகளைப்பெற்று கூடுதலாக அவர்களைப்பற்றிய சிறு குறிப்புகளுடன் நமது சகோதர வலைதளங்களில் தொடராகப் இடம்பெறுவதற்கு முயற்சித்துள்ளேன் ( இன்ஷா அல்லாஹ் ) !

வெளிநாடு வாழ் நமதூர் பதிவர்களுக்கு தனித்தனியே மின்னஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்தைப்பெற்று அவர்களைப்பற்றிய சிறு குறிப்புகளுடன் பதிவு செய்யப்படும் ( இன்ஷா அல்லாஹ் ) !

அந்த வரிசையில் பிரபல எழுத்தாளார், மூத்த பதிவர் சகோ. அதிரை அஹ்மது அவர்களை இந்த வாரம் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

இவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :

“தமிழ் அறிஞர்” என்று இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற மூத்த சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள் மார்க்கப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி போன்றவற்றில் மூழ்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் நமதூருக்கு பெருமை சேர்க்கும் அளவு பல புத்தகங்களை எழுதிருப்பவர் குறிப்பாக இஸ்லாமிய இலக்கிய சிந்தனை, இஸ்லாம் ஓர் அறிமுகம், மழைப்பாட்டு உரை, ஒருமைப்பாட்டு, சிறுமிப்பாட்டு, பெண்மணி மாலை, அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன், நபி வரலாறு சிறுவருக்கு, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் ஓன்று, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் இரண்டு, வட்டியை ஒழிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்), தமிழ்மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட ஆங்கில நூல்களாகிய Salma Al Farisi, Khabbab Bin Aratt, Abu Zar Ghifari, Abu Abdullaah Zubair Bin Al Awaam, Miqdad Bin ‘Amr Al Aswad’, தன்னால் எழுதப்பட்ட ஆங்கில நூலாகிய Wisdom in the Dawn மற்றும் அதன் தமிழாக்கம் இளமை பருவத்திலே போன்ற நூல்களும், நமது சகோதர வலைதளங்களில் ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ மற்றும் ‘கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை’ போன்ற நெடுந்தொடர்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல நூல்களுக்கு முன்னுரை, கருத்துரை வழங்கியுள்ளார் என்பதும் இவர்களின் கூடுதல் சிறப்பாகும்.இறைவன் நாடினால் ! பதிவர்களின் சந்திப்பு தொடரும்...

சேக்கனா M. நிஜாம்

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ஜும்ஆ பயான்

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ஜும்ஆ பயான்

Saturday, August 25, 2012

ரமலான் வசூல் - அமீரகவாழ் அதிரைவாசிகளின் பங்களிப்பு விபரம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இவ்வருடம் (2012) ரமலானில் துபாய் மற்றும் ஏனைய அமீரகங்களிலுள்ள அதிரைவாசிகளிடமிருந்து பித்ரா, ஜகாத்  மற்றும் ஸதாக தர்மங்களை திரட்டி அல்லாஹ்வின் பெருங்கிருபையால் மொத்தம் ரூ.114,975 அளவுக்கு அதிரை  பைத்துல்மாலுக்கு அனுப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.அமீரகத்தில் சுமார் 3000 க்கும் அதிகமான அதிரைவாசிகள் இருந்தபோதும் 200க்கும் குறைவானவர்களே தங்களது  கடமையான தர்மங்களை பைத்துல்மால் துபாய் கிளை மூலம் வழங்கினர்.ஒருசிலர் நேரடியாகவும் வழங்கியதாகச்  சொன்னார்கள். மொத்த தொகையில் பெரும்பாலோர் தங்களது ஃபித்ரா தொகையையே அதிகம் வழங்கினர். இதன்  மூலம் இவ்வருட ரமலானில் அதிரை பைத்துல்மால் சார்பில் 120 மூட்டைகள் தரமான அரிசியை அதிரைக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டது.துபாயில் பைத்துல்மால் கிளை 2004 முதல் செயல்பட்டு வந்தாலும் கடந்த எட்டாண்டுகளில் துபாயிலிருந்து வசூல்  செய்யப்பட்டு அனுப்பப்பட்ட தொகைகளில், இவ்வருடம் சுமார் 80%க்கும் அதிகமான பங்களிப்பு சம்சுல் இஸ்லாம்  முஹல்லாவாசிகளிடம் இருந்து வசூலானது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.


ஜகாத் தொகை குறைவாக இருந்தபோதிலும் மார்க்க அடிப்படையில் ஆண்டு முழுவதும் பயன்படும் வகையிலான சில நலத்திட்டங்களுக்குப் ஜகாத் தொகையே பயன்படுத்தப்படுவதால்,இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் அதிரைவாசிகள் தங்கள்  ஜகாத் தொகையைக் கணக்கிட்டு ஒரு பகுதியை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கினால் அதிகமான ஏழைகளின் நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும்.


மேலும், ஏனைய நலத்திட்டங்களுக்கு ஸதகா மற்றும் உறுப்பினர் நன்கொடை மூலமே உதவ முடிகிறது என்பதால் அதிரைவாசிகள் பைத்துல்மாலின் புரவலர் மற்றும் ஆயுட்கால  சந்தா ரூ.1000 செலுத்தி தங்கள் பங்களிப்பை உறுதி செய்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது நல்லமல்களை அங்கீகரித்து ஈருல பாக்கியங்களையும் வழங்குவானாக!!!

குறிப்பு: அட்டவனை மற்றும் வரைபடங்கள் அதிரையர்களின் பங்களிப்பை மென்மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் துபாய் கிளை
நிர்வாகிகள் & உறுப்பினர்கள்.

“கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளை சார்பாக சந்திப்பு நிகழ்ச்சி !கடந்த ( 23-08-2012 ) அன்று மாலை நமதூர் நடுத்தெருவில் அமைந்துள்ள EPMS ( English  Preparatory Model School ) பள்ளி வளாகத்தில்  “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் சார்பாக அதன் தலைவர் சகோ. M.C. அலி அக்பர் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.


நிகழ்ச்சியின் நிரலாக......

1. வரவேற்பு:  சகோ. அதிரை அஹமது அவர்கள்

2. சகோ. முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் தமது சிறப்புரையாக “இஸ்லாமியப் பொருளாதாரம்” பற்றிப் பேசினார்கள்.

3. “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்களுள் ஒருவரான சகோ. A.S. அப்துல் காதர் M.A. அவர்கள் “இஸ்லாமிய வங்கியை நோக்கி” என்ற தலைப்பை ஒட்டிய தனது சிறப்புரையில் அதற்குரிய விளக்கங்களை எடுத்துரைத்தார்கள்.

4. “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் சார்பாகப் பெறப்பட்ட “ஜக்காத்” நிதியை, ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவர்களால்  கைவிடப்பட்டோர், வட்டிக்கடனில் மூழ்கியிருப்போர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர் போன்றவர்களுக்கு விநியோகம் செய்தது குறித்த தகவல்களை அதன் தலைவர் சகோ. M.C. அலி அக்பர் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

5. “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் கடன் விவரங்கள் பற்றி அதன் பொருளாளர் ஆசிரியர் A.M. மஹபூப் அலி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

6. “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் செயலாளர் சகோ. M. I. ஜமால் முஹம்மது அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு இறுதியாக துவாவுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.

குறிப்பு :

1. இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2. இச்சந்திப்பு நிகழ்ச்சியின் செலவினங்கள் இதன் நிர்வாகிகள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

Friday, August 24, 2012

அதிரை த.த.ஜ கிளையின் ஃபித்ரா விநியோகம் விபரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இந்த வருடம் ஃபித்ராவாக ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா பொருட்களை பெற தகுதியானவர்களை தேடி சென்று வழங்கியது.  அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்தில் 87,640 ரூபாய் அதிரை கிளை வசூல் செய்தது.  மீதமுள்ள 63,800 ருபாய் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையால் அதிரை கிளைக்காக வழங்கப்பட்டது. இந்த தொகை மூலம் நமது ஊரில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இவற்றிக்கான கணக்கு விபரம் கீழே தரப்பட்டுள்ளது.


Thursday, August 23, 2012

ஆட்கள் தேவை

பிரசித்தி பெற்ற ஓமன் நாட்டு துறைமுகத்தில் உள்ள இண்டஸ்ட்ரீஸ் பகுதிகளை சுத்தம் செய்ய கிளினிங் வேலையாட்கள் தேவை .
நல்ல சம்பளம் சாப்பாடு தங்குமிடம் இலவசம் .
தற்பொழுது வளைகுடா பகுதிகளில் அதிகப்படியான முன்னேற்றம் கண்டு வரும் இந்த ஓமன் நாட்டில் பணிபுரிய அழைக்கிறார்கள் .

மேலும் விபரங்களுக்கு.

சாகுல் ஹமீத்
அஜ்மீர் ஏஜென்சிஸ்.
+91 98945 55982
+91 95513 10938

**வேலைவாய்ப்பு குறித்த தகவலுக்காக மட்டுமே இப்பதிவு அதிரை எக்ஸ்பிரஸில் வெளியிடப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, நிறுவனம் குறித்த தகவல்களை நன்கு உறுதி செய்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பாகும். இவ்விளம்பரம் மூலம் அதிரை எக்ஸ்பிரஸுக்கு எவ்வித லாபமும் இல்லை என்பதால், அதிரை எக்ஸ்பிரஸ் எவ்விதத்திலும் பொறுப்பாகாது" என்பதை வாசகர்களுக்கு மிக்க அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.**

அதிரை மின்சார வாரியத்திற்கு நன்றி அறிவிப்பு !
நமதூரைச் சார்ந்த பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் புனித ரமலான் மாதம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்த மாவட்ட, வட்ட மின்சார வாரிய அலுவலருக்கும், அதிரை உதவி மின் பொறியாளர், போர்மேன் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் அதிரைப்பட்டினம் உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் சார்பாக இன்று நேரடியாக துறை அலுவலர்களைச் சந்தித்து தங்களது நன்றியை இனிப்பு வழங்கி மகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டனர்.

சகோ. நெய்னா ( அஜ்வா ) அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நன்றி அறிவிப்பில், சகோ. முஹம்மது மொய்தீன், சகோ. தாஜுதீன், சகோ. ஹுசைன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Wednesday, August 22, 2012

நியூ யார்க் அதிரை சகோதரர்களின் பெருநாள் கொண்டாட்டம்!

நியூ யார்க்கில்  உள்ள அதிரை சகோதரர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாட்ட புகைப் படங்கள்:Tuesday, August 21, 2012

இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சகோ. M.S. தாஜுதீன் அவர்களின் அழகிய ஆலோசனைகள் [காணொளி ] !அதிரை கல்வி அறக்கட்டளை ( A E T ) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகக் கமிட்டி கூட்டம் இன்று மாலை நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் அதன் செயலாளர் சகோ. M.S. தாஜுதீன் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.நிகழ்ச்சியின் நிரலாக......

1. பள்ளியின் வரவு / செலவினங்கள் பற்றிய விளக்கங்கள் அதன் A E T யின் செயலாளர் சகோ. M.S. தாஜுதீன் அவர்களால் விளக்கிக் கூறப்பட்டன.

2. கல்வி ஆர்வலர்களால் இக்கூட்டத்தில் வைக்கப்பட்ட ஒரு சில நிறை குறைகளுக்கு அதற்குரிய விளக்கங்களும், அதற்குன்டான மாற்று ஏற்பாடுகளும் செய்வதாக பள்ளியின் பொறுப்பாளர்களால் உறுதியளிக்கப்பட்டன.

3. இக்கூட்டத்தில் நமதூரைச்சேர்ந்த கல்வி ஆர்வலர்கள், முக்கியஸ்தர்கள் என கலந்துகொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

4. இக்கூட்டத்திற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

5. இறுதியாக துவாவுடன் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.


இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சகோ. M.S. தாஜுதீன் அவர்களின் அழகிய ஆலோசனைகள் :இறைவன் நாடினால் ! கூடுதல் செய்திகள் விரைவில்....

பெருநாள் மறுநாள் காய்கறிநாள் - ஊர்சுத்தி


"ப்ஏவ்வ்வ்....." - ஊர்சுத்தி

"என்னா காக்கா நேற்று பெருநாள் சாப்பாடு இன்னும் செமிக்கலையா? - காதரு

"அடயாங் காதரு கேக்கிறா. நேத்து காலைல 4 பொரிச்ச ரொட்டி, 4 இடியப்பம், ஜவ்வரிசி கஞ்சி, வட்லப்பம், கடப்பாசி  சாப்பிட்டேனா. கொஞ்ச நேரம் தூக்கம் சொக்கியது. அப்புறம்,பொரிச்ச கறி, பிரியாணி லைட்டா கொஞ்சம் சாப்டேன்"

"எல்லாஞ் செஞ்சிய சரி இஞ்சி டீ கொஞ்சம் குடிச்சிருந்தா இந்த "ப்ஏவ்" நேத்தே முடிஞ்சிருக்கும். சரிசரி புதுவேட்டி  எங்கே எடுத்திய? பளிச்சின்னு ஈக்கிது! குதுரையா கிப்ஸா?"

குதுரை வேட்டி நாம வேங்கமுடியுமா காதரு! 480 ரூபாய் விக்கிறாங்க. ஒருநாள் கூத்துக்கு இவ்ளோ செலவளிக்க  நம்மால முடியாது. போன ஹஜ்ஜு பெருநாளைக்கு உடுத்துன வேட்டிய அப்படியே கழுவி இந்தப்பெருநாளைக்குப்  போட்டுட்டேன். நாமளும் கலறி காய்ச்சின்னு அடிக்கடி போறதால மாத்துக்கு வெலைகொறைஞ்ச ரெண்டு வேட்டி  எடுத்து வச்சிருக்கேன். மத்தநேரம் கலர் வேட்டிதான் நமக்கு சரிவரும்.

"சரியா சொன்னிய காக்கா! குதுர வேட்டி விலைய ஏத்தி உட்டதே நம்ம ஆட்களுவொதான். சைனாக்காரன் எது  எதுக்கோ டூப்ளிகேட் போட்றான். இந்த குதுர வேட்டிக்கும் போட்டாலும் போடுவான். பார்ப்பம். அப்பவாச்சும் வெல  கொறையுதான்னு!"

சரி காதரு நீ எங்க போனா நேத்து? ராத்திரி நாயக்கர் கடைக்கு போகலாம்னு தேடுனேன். ஃபோனும் சுச்சிஆஃப்னு  சொன்னுச்சு!

நான் எங்க காக்கா போவப்போறேன். சும்மா கருச்சமணி ரோட்டுல வாக்கிங் போய்ட்டு வண்டிப்பேட்ட பள்ளில  தொழுதுட்டு வெள்ளனமே ஊட்டுக்குப் போயிட்டேன். அப்புறம், நாட்டு நடப்பு எதாச்சும் சொல்லுங்களேன் காக்கா.

என்னத்தடா சொல்றது. மருவண்டி (மருதாணி) இட்டதால் மெட்ராஸ்ல ரெண்டுபேர் மெளத்தாப் போயிட்டாங்கன்னு  யாரோ கெளப்பிவிட்ட புரளிய நம்பிக்கிட்டு நம்மூரு பள்ளியாசல்லயும் நள்ளிரவில் அறிவிப்பு செஞ்சாங்கடா. அது  புரளின்னு தெரிஞ்சதும் அதையும் மைக்ல அறிவிச்சிட்டாங்க.

யாங்காக்கா "புரளி வாரம்னு" யாரும் அறிவிச்சிருக்காங்களா? வடமாநில மக்களை அடிக்கிறாங்கன்னு புரளி, பாலுல  விஷம்னு கர்நாடகாவுல புரளி, மருதாணியால மவுத்துன்னு புரளி! இதையெல்லாம் நம்பாமயும் ஈக்க முடியலே.  உசுரு விசயம்ல காக்கா!

காதரு. ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்க. காலங்காலமா நம்ம பொம்புலைங்க இடும் மருதாணி மூலிகை வகையைச்  சார்ந்தது. ஒடம்புக்கு குளிர்ச்சி, தோலுக்கும் நல்லது. வகைவகையா டிசைன் போடுறேன்னு கோனுல கிடைக்கும்  மருதாணிய வாங்க ஆரம்பிச்சாங்க. மொதல்ல அதுலயும் இந்த அரைச்ச மருதாணிதான் வந்துச்சு. செவக்கனும்னு  கெமிக்கல் சேர்த்து விக்க ஆரம்பிச்சிட்டாங்க. அத தெரியாம நம்ம மக்களும் வாங்கிடுறாங்க. அதுல கலந்திருக்கிற  கெமிக்கல்ல அலர்ஜி இருக்க வாய்ப்பு இல்லாம இல்லை. இருந்தாலும் பெருநாளன்று இதை பரப்பி ஈக்கிறதால  இதுக்கு மதரீதியான வன்மமும் காரணமாக ஈக்கலாம்னு நினைக்கிறேன்.

ஆமா காக்கா! இயற்கையை விட்டுட்டு செயற்கைல மயங்காம விழிப்பா ஈக்கனும். அப்புறம், பெருநாள் தொழுகைல  நம்ம புள்ளையலுவோ அடிச்சிக்கிட்டாங்களாமே? அது என்னா விசயம்னு தெரியுமா காக்கா?

நானும் லேசுமாசா கேள்விப்பட்டேன். அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வசூல் செஞ்ச  நம்மூரு இயக்கப் பிள்ளைங்க. பொம்புளையலுவோ பகுதிக்குள் நுழைந்து வசூல் செஞ்சதால் தொழுகைக்கு ஏற்பாடு  செஞ்ச அமைப்பைச்சார்ந்த சிலபுள்ளையலுவோ தடுத்ததால கைகலப்பு ஏற்பட்டதா கேள்விப்பட்டேன். நல்லநாளு  பெரியநாளுமா இப்புடி சண்டை போடுறாங்களேன்னு வருத்தமா ஈந்திச்சு.

அடப்பாவமே! இதுக்கு எப்பதான் முடிவு கிடைக்குமோன்னு எனக்கும் கவலையா ஈக்கிது. முஃமீன்கள் அனைவரும்  ஒருவருக்கொருவர் சகோதரர்களேன்னு சொல்லிக்கொண்டே, இன்னொரு பக்கம் இப்புடி நடந்துக்கிட்டா பார்க்குற  மத்தவங்க காறித்துப்பிட்டு போவாங்க.

காதரு! அரசியல் தலைவர்கள் பெருநாள் வாழ்த்து சொன்னதக் கவனிச்சியா? எல்லொருமே நோன்பின் மாண்பு,  இஸ்லாம் போதிக்கும் நல்லறங்களை மேற்கோளிட்டு வாழ்த்து தெரிவிச்சிருந்தாங்க. கேட்குறதுக்கு சந்தோசமாக  ஈந்திச்சு.

ஆமாங்காக்கா! அதுசரி நம்ம சமுதாய தலைவர்கள் எப்போ ஒத்துமையா இதுமாதிரி வாழ்த்து சொல்வாங்கன்னு  கேட்க ஆசையா ஈக்கிது.முன்மாதிரியா நம்ம ஊருலேர்ந்தே இதைத் தொடங்கலாம் காக்கா! நம்ம சேர்மன்,அதிமுக,  மமக, ததஜ, பாப்புலர் ப்ராண்ட், முஸ்லிம் லீக்,  இவங்களைலாம் ஒருநாளைக்காச்சும் ஒன்னாசேர்த்து பார்க்கனும்னு  ஆசையா ஈக்கிது. யாராச்சும் இதுக்கு ஏற்பாடு செஞ்சா நல்லா ஈக்கிம்.

செய்வோம்டா காதரு. இப்பதானே நாம மொஹல்லாவாரியா ஒன்னா சேர்ந்திருக்கிறோம். இப்போதைக்கு துவாச்  செய்வோம்.

சரிவாங்க காக்கா, கடைத்தெருவுக்குப்போயி மீனு வாங்கிட்டு வந்துடுவோம். ஒரே கறியாகச் சாப்பிட்டு வவுத்துக்கு  கபகபன்னு ஈக்கிது.

அடகாதரு! காசு கொட்டிக்கிடக்குதா? இன்னைக்கி மீனுவாங்க வருவாங்கன்னு தெரிஞ்சி வெலை அநியாயத்துக்கு  ஈக்கிம். ஒருநாளைக்கு மொளவு தண்ணியும் இன்னொரு நாளைக்கு காய்கறியும் சாப்புட்டுட்டு வெள்ளிக்கிழமை  மீன் வெல குறைஞ்சிருக்கான்னு பார்ப்பம். இல்லாட்டி தலைக்கறி சல்லிசா கிடைக்கும் அதவாங்கி சூப்புகீப்பு வச்சு  சாப்புடுவோம். என்னா நாஞ்சொல்றது!

அதுவும் சரிதான் காக்கா! கொடுவா மீனு விலை குதுர வேட்டி விலையை விட அதிகம். சரி வாங்க கருவாடாச்சும்  வாங்கிட்டு அப்புடியே ஐஸ்மோர் குடிச்சிட்டு வருவோம்.

ஜித்தாவில் அதிரை சகோதரர்கள் ஒன்றிணைந்த ஈத் மிலன் (கலந்துரையாடல்)


ஜித்தாவில் 20.08.2012 திங்கள் கிழமை மாலை மஃரிபுக்கு பின் ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் ஈத் மிலன் கலந்துரையாடல் நிக்ழ்ச்சி நடைபெற்றது. ஜித்தாவில் உள்ள அதிரை சகோதரர்கள் மற்றும் ஊரில் இருந்து உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள மவுலானா ஹாரூன் ஆலிம் மற்றும் சகோ.அப்துல்ரஜ்ஜாக் (சேஸ்காம்) மற்றும் அமெரிக்காவிலிருந்து உம்ரா வந்துள்ள சகோ.ரஃபீக் ஆகியோரும் தம்மாம் மற்றும் ரியாத் திலிருந்து விடுமுறை மற்றும் உம்ரா நோக்கத்தில் ஜித்தா வந்துள்ள அதிரை சகோதரர்களும் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.

மவுலானா ஹாரூன் ஆலிம் அவர்கள் நோன்புக்கு பின் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பொதுநல ஆர்வலர் சகோ. சேஸ்காம் ரஜ்ஜாக் அவர்கள் நமதூரின் தற்போதைய நிலை குறித்தும் ஷிஃபா மருத்துவமனை மற்றும் பல முக்கிய பொது விசயங்கள் குறித்து விளக்கினார்கள்.

மேலும் அய்டாவின் மூத்த ஆலோசகர் சகோ.ரஃபியா..மற்றும்... சகோ.பஷீர் அவர்கள் நமதூரில் கூடுதல் மையத் அடக்கஸ்தலம் தேவை குறித்தும்.. பெண்கள் மதரஸாவின் முன்னேற்றம் குறித்தும் விளக்கம் அளித்தார்கள்.

பின்பு இஷா தொழுகையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை சகோ. ரஃபியா அவர்கள் செய்திருந்தார்கள்.

மவுலானா ஹாரூன் ஆலிம்  அவர்களின் பயான் (ஒலிப்பேழை)
Monday, August 20, 2012

அதிரையில் நடந்த பெருநாள் தொழுகை (காணொளி)


இன்று தமிழகம் முழுவதும் நோன்புப் பெருநாள் சிறப்பாக கொண்டாடப் பட்டது அந்த வகையில் அதிரையிலும் இது சிறப்பாக கொண்டாடப் பட்டது

பள்ளிவாசல்களிலும், திடல்களிலும் மக்கள் திரளாக பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டனர்.

அதிரை ECR ரோட்டில் அமைத்துள்ள NMS ஜெகபர் அலி மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகை காணொளி

நோன்பு பெருநாள் சந்திப்பு (2012) துளிகள் [ காணொளி ] !அல்லாஹ்வின் பேரருளால் 19-08-2012 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.
காலை 6:15 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 6:45 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.
சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது, மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அதிரை தவிர்த்து கீழக்கரை, காயல்பட்டினம், லெப்பைக் குடிக்காடு மற்றும் ஓரிரு ஊரைச்சார்ந்தவர்களும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அதிரைவாசிகள் 400 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அதிகாலை வெயிலின் வெட்கையையும் பொருட்படுத்தாமல் வேட்கையுடன் வந்திருந்தது அதிரைவாசிகளுக்கு இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த அதிரைவாசிகளுக்கு “ஈட்ரானிக்ஸ்” நிறுவனத்தார் சார்பில் இனிப்பு மற்றும் உலர் பழங்கள் அடங்கிய அன்புப்பரிசு வழங்கப்பட்டது.

இலவசமாக வாழ்த்தலாம் வாங்க!

உலகெங்கிலுமுள்ள அதிரை உறவுகளுக்கு இனிய பெருநாள் வாழ்த்துகளை இலவசமாகப் பகிர்ந்து கொள்ள இத்தளத்தில் வலப்புறத்தில் "வாருங்கள் வாழ்த்தலாம்" என்ற சாளரத்தில் உங்கள் facebook, yahoo, gmail, hotmail & twitter கணக்குகளில் ஏதேனும் ஒன்றில் உள்நழைந்து ஒலி,காணொளி மற்றும் எழுத்து வடிவில் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்ளலாமே!இதன் சுட்டியை
ஏனைய வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டு, அனைத்து வாழ்த்துகளும் ஓரிடத்தில் தெரியும்படிச் செய்யலாம்.

Sunday, August 19, 2012

சவுதி ரியாத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள்


சவுதி தலைநகர் ரியாதில், 'ரியாத் மலாஸ் ஈத்கா மைதானத்தில்' நோம்புப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட அதிரை சகோதரர்கள்.

தகவல்: ஷர்ஃபுதீன் ஃபயாஸ்

பேரூராட்சி தலைவரின் இனிய பெருநாள் வாழ்த்துச் செய்தி [கானொளி]
பேரூராட்சி தலைவர் சகோ. S.H. அஸ்லம் அவர்களின் இனிய பெருநாள் வாழ்த்துச் செய்தி !

அஸ்ஸாம் இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யுங்கள்


அஸ்ஸாம் இன  கலவரத்தால்  பாதிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளின்  ஜீவாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளதை கவனத்தில் கொண்டு பாப்புலர் ஃப்ரென்ட் ஆஃப் இந்தியா இந்தியா முழுதும் உள்ள இஸ்லாமியர்களிடையே  வசூல்   செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று வழங்க உள்ளது .

அதன்படி இன்ஷா அல்லாஹ் நாளை ஈதுள் பித்ர் கொண்டாடும் நாம் நம்மால் இயன்ற உதவிகளை பதிக்கபட்ட மக்களுக்கு வழங்கி அல்லாஹ்வின் நல்லருளை பெற்றுகொள்ள கேட்டுகொள்கிறது அதிரை PFI.
Contact  : 97901 02710: 

மரண அறிவிப்பு (சிங்கம் ஆலிம் மனைவி)

மேட்டு தெருவை சார்ந்த மர்ஹும் முஹம்மது சேக் அலி அவர்களின் மகளும் முகைதீன் அப்துல் காதர்(சிங்கம் ஆலிம்) அவர்களின் மனைவியும் ஹாபிழ் யாகூப் ஹசன்,ஹாபிழ் முகமது யூசுப் ,ஹாபிழ் அபுல் ஹசன் ,பைசல் அஹமது இவர்களின் தாயாருமான அஹமது மரியம் அவர்கள் இன்று மாலை 4:30௦ மணியளவில் தஞ்சை தனியார் மருத்துவ மனையில் காலமாகி விட்டார்கள் . இன்னா....

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்க படும் என அன்னாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தொடர்புக்கு : +91 99404 77389