பிரார்த்தனைக்குத்தான் எத்துணை வலிமை!


சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அஃது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரைக் கௌரவிக்க இருந்தார்கள்.

அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்குப் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காகத் தான் பட்டச் சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்புச் செய்தார்.

தான் உரிய நேரத்தில் மாநாட்டை அடைவோமா என்று கவலை கொண்ட டாக்டர் அஹ்மத் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக உதவி மேடைக்கு ஓடினார். அங்கே இருந்த பெண்மணியிடம் அவரது நிலையை எடுத்துச் சொன்னார். தான் போக வேண்டிய இடத்திற்கு உடனடியாகக் கிளம்பக் கூடிய அடுத்த விமானத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

அந்தப் பெண்மணி அடுத்தக் குண்டைப் போட்டார். அடுத்தப் பத்து மணி நேரத்திற்கு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானமே இல்லை என்றும், அதனால் தன்னால் அவருக்கு உதவ முடியாது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால் ஓர் ஆலோசனை கூறினார். ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று கூறினார்.

வேறு வழியில்லாததால் அந்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக நீண்டதூரப் பயணத்திற்கு கார் பயணத்தை அவர் விரும்ப மாட்டார்.

ஒரு காரை வாடகைக்கு எடுத்துத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தட்பவெப்ப நிலைத் திடீரென்று மாறியது. கனமழையுடன், கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியது. மழையின் அடர்த்தியில் அவரால் காரை ஓட்டிச் செல்ல முடியவில்லை. சாலையைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அவர் போக வேண்டிய ஒரு வளைவைத் தவற விட்டார். அவரை அறியாமலேயே வண்டி வழி மாறிச் சென்று கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பின்னர்த் தான் வழி தவறி விட்டோம் என்பது அவருக்கு உறுதியானது. பாலைவனச் சாலையில், பயங்கரப் புயல் காற்றுக்கிடையில், பயமுறுத்தும் மழையினூடே அவரின் இந்த நீண்ட கடினமான பயணம் அவரை மிகவும் தளர்த்தி. கடும் களைப்பை ஏற்படுத்தியது. நல்ல பசியும் எடுத்தது. ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றார். ஒன்றும் தென்படவில்லை. சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு சிறிய ஓட்டு வீடு கண்ணில் தென்பட்டது. காரை நிறுத்தி, அந்த வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு வயதானப் பெண்மணிக் கதவைத் திறந்தார். அந்தப் பெண்மணியிடம் தனது நிலையை விளக்கிய டாக்டர் அஹ்மத், தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கேட்டார்.

அந்த வீட்டில் தொலைபேசியும், மின்சாரமும் இல்லை என்று தெரிவித்த அந்த வயதானப் பெண்மணி அவரை உள்ளே வருமாறு அழைத்தார். மிகவும் களைத்துப் போய் இருப்பதால் தேநீரும், உணவும் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். டாக்டர் போக வேண்டிய இடத்திலிருந்து வழி தவறி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும், சரியான பாதையை அடைவதற்கே இன்னும் நிறைய நேரம் பிடிக்கும் என்றும் அந்தப் பெண்மணிக் கூறினார்.

பசியும், களைப்பும், குளிரும் அவரை யோசிக்க விடவில்லை. அந்தப் பெண்மணியின் அழைப்பை ஏற்று உள்ளே சென்றார். மேசையில் சூடான தேநீரும், உணவும் இருக்கிறது என்றும், அதனை அருந்துமாறும் கேட்டுக்கொண்ட அந்தப் பெண்மணி தான் தொழுது விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

தேநீரை உறிஞ்சிய டாக்டர் அஹ்மத் அப்பொழுதுதான் அதனைக் கவனித்தார். மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் தொழுது கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் ஒரு குழந்தைத் தொட்டிலில் படுத்துக் கிடந்தது.

ஒரு தொழுகை முடிந்ததும், கையேந்தி  மன்றாடிப் பிரார்த்தனை புரியும் அந்தப் பெண்மணி அடுத்தத் தொழுகையை ஆரம்பித்து விடுவார். மீண்டும் பிரார்த்தனை. மீண்டும் மன்றாட்டம். இதனைக் கவனித்துக்கொண்டிருந்த டாக்டர் அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் அவசியத் தேவை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

தொழுகையை முடித்து அந்தப் பெண்மணி எழுந்ததும் டாக்டர் மெல்லப் பேச்சுக் கொடுத்தார். அவரது தேவைகளை அல்லாஹ் பூர்த்திச் செய்வான் என்ற நம்பிக்கையும், ஆறுதலும் கூறினார்.

அவர் நிறையப் பிரார்த்தனைகளைச் செய்ததையும், மிக நீண்ட நேரம் தொழுததையும் தான் கவனித்ததாகவும், ஏதாவது தன்னாலான உதவிகள் வேண்டுமென்றால் தான் செய்து தருவதாகவும் டாக்டர் அந்தப் பெண்மணியிடம் கூறினார். அந்தப் பெண்மணிப் புன்முறுவல் பூத்தார். அல்லாஹ் தன் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவும், ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.

அந்தக் குறிப்பிட்டப் பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாஹ் ஏன் இன்னும் பதில் தரவில்லை என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது பலஹீனமான ஈமான் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். சொல்லத் தடையில்லையென்றால் அந்தத் தேவை என்னவென்று தன்னிடம் கூறும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.

அதனைச் சொல்வதாக ஆமோதித்துத் தலையாட்டிய அந்த அம்மையார் சொன்னார்:

“அந்தத் தொட்டிலில் இருக்கும் குழந்தை என் பேரன். அவனுடைய பெற்றோர்கள் அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார்கள். இந்தக் குழந்தைக்கு அரிய வகைப் புற்றுநோய் உள்ளது. நான் போகாத மருத்துவமனை இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. குழந்தைக்குச் சிகிச்கை அளிக்க முடியாது என்று எல்லோரும் கையை விரித்துவிட்டனர். என் பேரனுக்கு உள்ள அரிய வகைப் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு ஒரே ஒரு மருத்துவரால்தான் முடியுமாம். அவர் பெயர் டாக்டர் அஹமதாம். ஆனால் அவர் இருக்குமிடம், நான் இருக்குமிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. அவரை நான் காண்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் நான் அல்லாஹ்விடம் அல்லும், பகலும் டாக்டர் அஹமதுவைச் சந்திப்பதற்கும், அவர் என் பேரனுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மன்றாடிப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்.” இதனைக் கேட்ட டாக்டர் அஹ்மதின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. “அல்லாஹ் மிகப் பெரியவன். விமானத்தில் கோளாறு, பயங்கரப் புயல், பாதை தவறியது… இவையெல்லாம் ஏற்பட்டது எதற்கு என்று இப்பொழுதுதான் எனக்கு நன்றாகப் புரிகிறது. அல்லாஹ் டாக்டர் அஹ்மதுவைச் சந்திப்பதற்கு உங்களுக்கு வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, டாக்டர் அஹ்மதுவையே உங்களிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான். ஆம்! நான்தான் டாக்டர் அஹ்மத்…” என்று கூறினார் டாக்டர்.

திடுக்கிட்ட அந்த அம்மையாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே தன் கைகளை உயர்த்தி இவ்வாறு கூறினார்: “யா அல்லாஹ்! நீ மிகவும் பெரியவன், மிக்கக் கருணையாளன்…!”

அந்த மின்னஞ்சல் இத்தோடு நிறைவுற்றது. மின்னஞ்சலின் இந்தக் கடைசி வரிகளைப் படித்தவுடன் என் கண்கள் குளமாயின. பிரார்த்தனைக்குத்தான் எத்துணை வலிமை! கருணையாளனான அல்லாஹ் தன் அடியார்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறெல்லாம் பதிலளிக்கின்றான்!

தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)

“பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.

பிரார்த்தனைகள்தான் எத்தனை வகை? மனிதர்கள் பலவிதம். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான தேவைகள். பல்வேறு விதமான பிரச்னைகள். அந்தத் தேவைகளை அடைவதற்கு, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கிருக்கும் ஒரே வழிப் பிரார்த்தனைதான்.

பிரார்த்தனைக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. பிரார்த்தனை செய்யும்பொழுது ஏனோதானோவென்று செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்வதுதான் மிக்கப் பலன்களைத் தரும். எங்கோ சிந்தனைகளை வைத்துப் பிரார்த்தனை செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

“இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.

“அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

“என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.

“என் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது” என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் அருளிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டும், தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“இறைவா! நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வழிபடுவதற்குத் தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

பிரார்த்தனை புரியும்பொழுது அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.

“துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

“மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்துச் செய்தார்கள்.

பிரார்த்தனை புரியும்பொழுது எந்தவித அவசரத்தையும் காட்டக் கூடாது. நிதானமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

பிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும்.

“தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்” என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ)

“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்திப் பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்:

1. நோன்பு துறக்கும்பொழுது.

2. லைலத்துல் கத்ர் இரவு.

3. இரவின் கடைசிப் பகுதி (தஹஜ்ஜுத் நேரம்).

4. ஃபர்லான தொழுகைகளின் இறுதிப் பகுதி.

5. பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில்.

6. அரஃபா தினத்தில்.

7. ஜும்ஆவுடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.

8. கடமையான தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்லப்படும் போது.

9. தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது.

“உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் ஸஜ்தா செய்யும் நேரம். ஆகவே ஸஜ்தா செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

“ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். (அதில் கேட்கப்படும் பிரர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு) தகுதியுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. சேவல் கூவும் பொழுது.

“சேவல் கூவுவதைக் கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக் கேளுங்கள். அது மலக்கைக் காணும்போதுதான் கூவுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)

11. பிரயாணித் தன் பிரயாணத்தின் போது. (பைஹகீ)

12. பிற சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் பொழுது.

“ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாகக் கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். மற்றச் சகோதரனுக்காகப் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு, “இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக. இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக” எனவும் பிரார்த்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்று கற்றுத் தந்த கருணை நபிகள் (ஸல்) அவர்கள் எப்படிப் பிரார்த்திக்கக் கூடாது என்றும் கற்றுத் தந்துள்ளார்கள்.

“உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்து விடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அஃது இருப்பின் உங்களுக்கே எதிராக அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும்.” (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், நூல் : முஸ்லிம்)

இரத்த உறவை துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்குப் பிரார்த்திக்கக் கூடாது.

“யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தைத் துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் மற்ற விஷயங்களுக்காகப் பிரார்த்தனை செய்தால் இறைவன் மூன்றில் ஏதேனும் ஒரு விதத்தில் இவ்வாறு பதில் அளிக்கிறான்:

1) அவன் கேட்டதைக் கொடுத்து விடுகிறான்,

2) மறுமைக்காக அதன் நன்மையைச் சேர்த்து வைக்கிறான்,

3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கைப் போக்கி விடுகிறான்

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித்தோழர்,

“அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்யப் போகிறோம்” என்றார். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது” என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி), நூல் : ஹாகிம்)

ஆக, நாம் கேட்கும் எந்தப் பிரார்த்தனையும் வீண் போகாது. நமது பிரார்த்தனைகளை ஒன்று அல்லாஹ் உடனே ஏற்று பதில் தருவான். அல்லது நாம் பிரார்த்தனை செய்த அளவுக்கு நன்மை மறுமையில் நமக்கு வந்து சேரும். அல்லது நமக்கு ஏற்படும் தீங்குகள் அகற்றப்படும். அந்தத் தீங்குகளின் அளவு நாம் செய்யும் பிரார்த்தனையின் அகல, ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். நாம்  மன்றாடிக் கேட்கும் துஆக்கள் கபூல் ஆகவில்லையென்றால் அந்த அளவுக்கு நமக்கு வரப் போகும் வேறு பல துன்பங்களை அல்லாஹ் அகற்றி விடுவான் என்று பொருள்.

ஆதலால் எத்தனை காலம்தான் பிரார்த்திப்பது, ஒன்றும் நடக்கவில்லை என்று நாம் சலித்துக்கொள்ளவோ, நிராசையடையவோ தேவையில்லை. விடாமல் நமது தேவைகளை அல்லாஹ்வின் மன்றத்தின் முன் வைத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அது தட்டுகின்ற இடத்தைத் தட்டி, முட்டுகின்ற இடத்தை முட்டும். அல்லாஹ் அதில் கண்டிப்பாக மேற்கண்ட மூன்றில் ஒரு பலனை வைத்திருப்பான்.

கருணையுள்ள ரஹ்மான் திருக்குர்ஆனில் நமக்குப் பல பிரார்த்தனைகளைக் கூறியுள்ளான். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அழகிய பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அந்தப் பிரார்த்தனைகளைக் கவனித்தீர்கள் என்றால் அங்கே ஓர் அழகு மிளிர்வதைக் காண்பீர்கள். சுருக்கமான வார்த்தைகளில் அதிகப் பொருட்கள் அடங்கியவையாக அவை இருக்கும். எனவே நாமே சுயமாக வார்த்தைகளைப் போட்டுப் பிரார்த்திப்பதை விட இந்தப் பிரார்த்தனைகளைக் கேட்டால் அதிகப் பலன்கள் விளையும்.

பிரார்த்தனைகளைக் கேட்கும்பொழுது அல்லாஹ்விடம் உரிமையுடன் கேட்க வேண்டும்.

“உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். ‘நீ விரும்பினால் தா!’ என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை.” (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரீ)

மனிதனுக்குப் பிரச்னைகள் அதிகாமாகும்பொழுது அதனை மனதிலேயே போட்டுப் பாரத்தை ஏற்றிக்கொண்டிராமல் இன்னொரு மனிதரிடம் அந்தப் பிரச்னைகளைச் சொன்னால் மனதின் பாரம் இறங்கிப் போகும்.

இந்த மனக்குறைகளை யார் யாரிடமோ சொல்வதை விட வல்ல இறைவனிடம் இறக்கி வையுங்கள். மனச் சுமையும் நீங்கும். பிரார்த்தனை வணக்கம் என்பதால் நன்மையும் கிட்டும். அதற்குத் தகுந்த பலன்களும் பலிக்கும்.

இன்றைய பரபரப்புக் காலகட்டத்தில், பணிச் சுமைகளுக்கிடையில் நமக்கு ஏற்படும் படபடப்பு, மன உளைச்சல் போன்றவற்றைக் களைய இறைப் பிரார்த்தனை அதிகம் செய்தல் நலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. எனவே பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து, உளப்பூர்வமாக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து ஈருலகிலும் வெற்றிகளை ஈட்டுவோமாக!

"கவியன்பன்" கலாம், 
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Share:

'சந்திப்பு' : பதிவர் சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)பின்னூட்டம் என்பது ஒரு தனிக்கலை. நல்ல பின்னூட்டமும், விமர்சனமும் படைப்பாளிக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதோடு மட்டுமல்லாமல் நல்ல ஆக்கங்களும் அவரிடமிருந்து பெறுவதாக அமையும் .

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
இணையத்தோடு அதிக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தனது தமிழ் ஆர்வத்தை நன்கு வளர்த்துக்கொண்டவர். நமது சகோதர வலைதளங்களில் பதியும் சிறந்த ஆக்கங்களுக்கு பதிவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருகின்றார்.

கட்டுரை, கவிதைகள் என நமது சகோதர வலைத்தளத்தில் பதிந்துள்ள இவர் சமூக ஆர்வலரும் கூட.

சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) அவர்களின் தந்தை M.A.M. முஹம்மது ஹனீபா அவர்கள் :
ஊடகத்துறையைப் பற்றி...
இது நமது சமுதாயத்துக்கு மிக முக்கியம். காரணம் அக்காலங்களில் இதில் நம்மவர்கள் ஈடுபடாததன் விளைவை நாம் சந்தித்திக் கொண்டிருக்கிறோம்.

அவையில் சில,
வரலாற்றின் பின்னணியில் பெரும்பாலும் நம்மவர்களின் பங்கு புறக்கணிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.மேலும் நம்மவர்களை பற்றி இட்டுக்கட்டி தவறாகவே அதிகம் சொல்லப்பட்டு வருகிறது.பெரும்பாலான இத்துறையில் நம்மவர்களின் பங்கு மிகக் குறைவாக இருப்பதால் நமக்கு ஏற்படும் பாதகங்களை இருட்டடிப்பு செய்து நம்மை படிப்படியாக பின்னோக்கி  2 ம் தர குடிமகனாக தள்ளி வருகிறது இந்த ஊடக குறையை களைய நம்மவர்கள் பங்கு அவசியம்.

இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
தற்போது இதில் ஈடுபடும் இளம் பதிவர்களின் சேவை பாராட்டக் கூடியது. அவர்களின் வளர்ச்சியும் சொல்லத்தக்க புகழத்தக்க வகையில் இருப்பது மகிழ்ச்சி. அதே சமயம் ஏதாவது செய்தி வேணுமே என்று இல்லாததை இட்டுக்கட்டி எழுதுவதை தவிர்க்க வேண்டும். செய்தி சாராம்சத்தில் ஆதாரம் உண்மை  அறிந்து அவசரப்படாமல் நிதானமாக வெளியிடுவது பல்வேறு சர்ச்சைகளை தவிர்க்கும்.ஆள்பவர்களை அணுசரித்து அவர்களிடம் அழகாக பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.அது போல ஆளாத அடுத்த நிலையில் உள்ளவர்களுடனான விரோதப் போக்கு ஏதும் இருந்தால் அதை இரு தரப்பாரிடம் நடுநிலையாளர்களை வைத்து இஸ்லாமிய அடிப்படையில் தீர்த்து வைக்க பாடுபட வேண்டும். குறைகளை இணையத்தில் வெளியிடுவதோடு நின்று விடாமல் அத்தகவல் ஆள்பவரையும் அடையச்செய்திடல் வேண்டும்.

மேலும் வெளியிடப்படும் செய்திகள் ஒரு சார்பில்லாமல் நடுநிலையோடு இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ்த்தவறுகள் நம் ஊடகங்களில் அதிகம் காணப்படுகிறது. இவற்றை களைய அதிரை அகமது காக்கா, இப்ராஹிம் அன்சாரி காக்கா, ஜெமீல் காக்கா மற்றும் நம் தமிழ் அறிஞர்களை நாடி நல்ல தமிழுக்கு முக்கியத்துவம் காட்ட வேண்டும். CMN சலீம் அவர்களின் விழிப்புணர்வு தகவல்களையும் அவ்வப்போது பிரசுரிக்கச் செய்திடல் வேண்டும்.

பின்னூட்டம் என்பது மேலும் பண்படுத்தும் ஊக்கமாக மட்டும் இருக்க வேண்டுமே ஒழிய மனதை புண்படுத்தும் தாக்கமாக இருக்கக் கூடாது. மாற்று கருத்தென வரும் போது அதில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். போலிப் பெயர்களில் வரும் கருத்துக்கள் ஆக்கத்திற்கு எதிராகவும் வரலாம், நாளை அதை வெளியிடும் தளத்திற்கு எதிராகவும் அமையலாம். எனவே போலிகள் இன்று நல்லதாக தெரிந்தாலும் அறவே அனுமதிக்ககூடாது. நம்மவர்களின் எழுத்துக் கூர்மை எதிர்காலத்தில் தமிழகம் முழுக்க அனைத்து பத்திரிக்கை துறைகளிலும் பிரதிபலிக்க ஆயத்தமாவோமாக !

நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
அல்ஹம்துலில்லாஹ் நமது பெரும்பாலான பதிவர்கள் மிகச்சிறப்பாக நமதூர் செய்திகளை வீடியோ புகைப்பட ஆதாரத்தோடு சிறப்பாக வழங்குவதோடு சமுதாய, மார்க்க  செய்திகளையும் சிறப்பாக வெளியிட்டு சிறந்த சேவை செய்யும் நம்மவர்கள்  மேலும் மேலோங்கிட துஆ செய்தவனாக.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...
Share:

இருதய சிகிச்சைக்காக உதவி நாடி…(வேண்டுகோள் காணொளி)

 
இதயம் என்றொரு பதமெடுத்து உணர்வுகளை காட்டவில்லையென்றால் இரக்கமற்றவன் என்று பின்னுக்குத் தள்ளப்படும் மனிதம், அதே இதயத்தை கருவாகக் கொண்டு காவியம் படைக்கிறான், கவிதை புனைகிறான், காதல், கோபம் கொள்கிறான, அது மட்டுமா மன்னிக்கவும் செய்கிறான்.

இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் நபரின் தற்போதைய உடல் ஆரோக்கியமும் அவரின் உருக்கமான வேண்டுகோளும் வாசகர்கள் முன்னால் வைக்க வேண்டிக் கொண்டதனால் இங்கே பதிகிறோம்.

படைத்தவனின் திருப் பொருத்தத்தை நாடி இயன்ற உதவிகளை அவருக்கென்று இருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டுகிறார்.

Bank name: India Bank, Account number: 6068577000, account holder name: K. Shahul Hameed (Mobile No. : ++91 8220-351291), இருப்பிடம்: கடற்கரை தெரு ஜமாத்திற்கு உட்பட்ட ஏறிப்புரக்கரையில் உள்ள குப்பம்.


தகவல்: அதிரை நிருபர்.
Share:

மரண அறிவிப்பு ஹாஜர் அம்மாள்(பாட்சா மரைகாயர் சகோதரி)

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு.முஹமது சேகாதி அவர்களின் மகளும், மர்ஹூம் சி.ப.மு.அபூபக்கர் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.செ.மு.அசனா தம்பி மரைகாயர், அபுல்ஹசன், பாட்சா மரைகாயர் அவர்களின் சகோதரியும், மஹ்மூத் (குட்டி சாட்சா), முஹமது ஸாலிஹ் அவர்களின் தாயாருமாகிய ஹாஜர் அம்மாள் அவர்கள் இன்று காலை பெரிய நெசவு தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

 இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்..

அன்னாரின் ஜனாசா இன்று (29-Sep-2012) இரவு 8.30 மணிக்கு மரைகாயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.நன்றி: அதிரை போஸ்ட்Share:

முயலாமையைத் தோல்வியடைச் செய்வோம்!


விரிக்காதவரைச்
சிறகுகள் கூடப் பாரம்தான்
விரித்து விட்டால்
வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்

முறுக்காதவரை
மீசை கூட வேசம் தான்
முறுக்கி விட்டால்
வீரம் தானாய் பேசும்தான்

பெருக்காதவரை
வீடுகூட நரகம் தான்
பெருக்கிவிட்டால்
"பர்கத்" பொங்கும் சுவர்க்கம்தான்

படிக்காதவரைப்
பாடம்கூடச் சுமைதான்
படித்து விட்டால்
பாடம் சொல்லும் வாழ்க்கைப் பாடம்தான்

முடிக்காதவரைச்
செயல்கள்கூட முடக்கம்தான்
முடித்து விட்டால்
முயலாமைக்குத் தோல்வியே என்றாகும்!

உழாதவரை
நிலம் கூடப் புஞ்சைத்தான்
உழுது விட்டால்
புஞ்சையும்கூட நஞ்சைதான்

எழாதவரை
உடல்கூடப் பிணம்தான்
எழுந்து விட்டால்
பணம்தேடும் யாக்கைதான்

பிறக்காதவரைக்
குழந்தைகூடக் கருதான்
பிறந்து விட்டால்
கருகூட முழுமையான உருதான்

கறக்காதவரைப்
பால்கூட மடியில்தான்
கறந்துவிட்டால்
பாலும் பல்கிப்பெருகும் சத்தாகத் தான்

முயலாதவரைக்
கால்களும் முடமேதான்
முயன்று விட்டால்
உன்வாழ்வும் முன்னேற்றப் "படிக்கட்டில்" தான்!


"கவியன்பன்" கலாம், 
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
Share:

கியூ பிராஞ்ச் போலிசை கண்டித்து INTJவின் கண்டன போஸ்டர்

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருப்பூர் கிளையின்   சார்பில் நமதூர் சகோதரர் தமீம் அன்சாரியின் மீது புனையப்பட்டுள்ள போய் வழக்கினை கண்டித்தும்

கியூ பிராஞ்ச்சில் ஊடுருவியுள்ள (கருப்பு)காவி  ஆடுகளை களையெடுக்க  கோரி திருப்பூர் நகர INTJ சார்பில் சுவரொட்டிகள் நகரெங்கும்  ஒட்டப்பட்டுள்ளது .


Share:

முற்காலத்தின் அதிரை வரைப்படம்

                                             முற்காலத்தின் அதிரை வரைப்படம் 

Share:

அதிரை தமீம் அன்சாரிக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமுமுக


நேற்று (26.09.2012) தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும், குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும், இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை என்பதும், போலீசார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, அன்னிய கைக்குகூலியோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

காஷ்மீர், குஜராத், டெல்-, பீஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல இங்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியை "க்யூ பிராஞ்ச்' போலீசார் தொடங்கி வைத்திருப்பதாக நிர்வாகக்குழு கருதியதால், இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டுவது என்றும், விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி க்யூ பிராஞ்ச் போலீசின் சதியை அம்பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Share:

அன்சாரிக்கு ஆதரவாக தமிழ்நாடு மக்கள் கட்சி சுவரொட்டி

இலங்கைக்கு காய்கறி ஏற்றுமதி வியாபாரம் செய்துவந்த அதிராம்பட்டினம் தமீம் அன்சாரிமீது சுமத்தப்பட்டுள்ள பொய்வழக்குக்கு எதிராக தமுமுக களம் இறங்கியுள்ள நிலையில் மற்றொரு கட்சியான தமிழ்நாடு மக்கள் கட்சியும் கண்டன சுவரொட்டி வாசகத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Share:

கத்னா செய்யாவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்து!-ஆய்வில் தகவல்!வாஷிங்டன்:அமெரிக்காவில் கத்னா எனும் சுன்னத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஹெச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் pathology துறையில் துணை பேராசிரியராக பணியாற்றும் டாக்டர். ஆரான் தோபியான் தலைமையில் நடந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
கத்னா செய்யாததால் ஏற்படும் பாதிப்புகள் அமெரிக்காவில் 4 பில்லியனுக்கும் அதிகமான டாலர் தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
“ஆண்கள் கத்னா செய்வதால் ஏற்படும் நன்மைகள் ஏராளமாகும். இருந்தபோதிலும் அமெரிக்காவில் கத்னா செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று டாக்டர் ஆரான் தோபியான் கூறுகிறார்.
அமெரிக்காவில் கத்னா செய்வோரின் எண்ணிக்கை 1970 களில் 79 சதவீதமாக இருந்தது. 2010-ல் இந்த எண்ணிக்கை 55 சதவீதத்திற்கும் கீழே உள்ளது.
3 சீரற்ற(random) சோதனைகள் மூலமாக கத்னா செய்வது ஹெச்.ஐ.வி, ஆண்களுக்கு தோல் அழற்சி மற்றும் கருப்பை வாய்ப்புற்று நோய் மற்றும் ஆண்குறி புற்றுநோயை ஏற்படுத்தும் ஹெச்.பி.வி வைரஸ் ஆகியவற்றை குறைப்பது தெரியவந்துள்ளது என்று ஆரான் கூறுகிறார்.
கத்னா சதவீதம் அதிகரித்தால் ஹெச்.ஐ.வி பாதிக்கப்படுவதை குறைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Share:

இரு பள்ளி மாணவர்கள் தற்கொலை

அதிரை சால்ட் லைனை சார்ந்த ரஞ்சித் குமார் என்பவர் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து  இரண்டு நாளைக்கு முன்பு அவரின் விட்டிற்கு அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கோலை செய்து கொண்டார்.இவர் காதர் மொய்தீன் பள்ளியில் பண்ணிரெண்டாம்  வகுப்பு படித்து வந்தார்.

மற்றொரு சம்பவம் :ஆசிரியர் திட்டியதால் லாரல் பள்ளி மாணவன் தீக்குளிப்பு :

பட்டுகோட்டையை அடுத்த சிவக்கொல்லை பகுதியில் வசிக்கும் ஜெயசூரியன் மகன் வெங்கடேஷ், 15. இவர் பள்ளிகொண்டான் பகுதியிலுள்ள லாரல் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வந்தார்.

நேற்று முன் தினம் காலாண்டு பரிட்சையின் ஆங்கில  விடைத்தாள்களை ஆசிரியர்  மாணவர்களுக்கு வழங்கினார் .அதில் வெங்கடேஷ் சரியாக பதில் அளிக்காததால் ஆசிரியர் கடுமையான வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. ஆசிரியர் திட்டியதை மனம் பொறுக்காத  மாணவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன்னுடைய  உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.இதில், 60 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டு, மிக ஆபத்தான நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருச்சி கே.எம்.சி. தனியார் மருத்துவமனையில் மாணவர் வெங்கடேஷை சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வெங்கடேஷ் நேற்று காலை இறந்தார். இது குறித்து பட்டுகோட்டை காவல்துறை விசாரித்து வருகிறது.மேலும்  பள்ளி காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு அளிக்காமல் இருந்த லாரல் பள்ளி நிர்வாகம் இந்த மாணவர் தீக்குளிப்பு சம்பவத்தால் பள்ளிக்கு ஒரு வார காலம் விடுமுறை அளித்து உள்ளது. இறந்த மாணவரின் குடும்பத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு  வருகின்றனர். இதனால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க  பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.      
குறிப்பு:இந்த பள்ளியில் நமதூர் சேர்ந்த ஏராளமான மாணவ/ மாணவிகள் கல்வி  பயின்று வருகிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
Share:

‘சந்திப்பு’ : ‘சமுதாயச் சேவகர்’ சகோ. ராஃபியா அவர்கள் [காணொளி]


வாழ்வில் அறிவைத்தேடுதல் மிகவும் முக்கியம்...அதிலும் தான் பெற்ற/கற்ற அறிவை பிறர் அறியவைப்பது என்பது மிகச்சிறந்த சேவையாகும்.

'சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. ராஃபியா அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. ராஃபியா அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
ஜித்தா நகரில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் இவர் 'ராஃபியா' என்ற பெயரில் அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். பல நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பன்மொழி பேசும் திறன்கொண்டவரும் ஆவார். நகைச்சுவை உணர்வுடன் தன் கருத்தை அழகாக  எடுத்துரைப்பது இவரின் தனிச்சிறப்பாகும்.

பல்வேறு பொது அமைப்புகளில் நிர்வாகியாகத் தொடர்ந்து சமுதாயச் சேவை ஆற்றிவருவது நமதூருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளன. குறிப்பாக அதிரை  பைத்துல்மாலின் ஓவர்சீஸ் பிரதிநிதி-அய்டாவின் முன்னாள் தலைவர்-மெப்கோ பொது நிதி கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர்  - மற்றும் ஜெத்தா தமிழ் சங்கம் -GRIT (GULF RESIDENCE OF INDIAN TAMILS) போன்றவை குறிப்பிடத்தக்கது ஆகும்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...
Share:

அதிரை அல் நூர் ஹஜ் சர்விஸ் நடத்திய ஹஜ் செய்முறை விளக்க கூட்டம்அதிரையைச் சார்ந்த பிரபல ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ் நிறுவனமான  அல் நூர் ஹஜ் சர்விஸ் சார்பாக ஹஜ்  செய்முறை விளக்க கூட்டம்  23-09-12 அன்று  சென்னை மன்னடியில் உள்ள  மியாசி உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்நிறுவனம் சார்பாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் 300 -க்கும் மேற்பட்ட ஹாஜிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர், அல் நூர் ஹஜ் சர்விஸ் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ்.M .S.முஹம்மது அலி  அவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் அதிரைவாசிகள் திரளாக கலந்து கொண்டனர்.Share:

நல்ல கும்டும்பம் நல்ல பிள்ளை - சுகி சிவம் - Part 1/6
Share:

அதிரையில் நடைபெற்ற ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி!

அதிரையில் 23-9-12 அன்று ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி நடுத்தெரு EPMS பள்ளிக்கூடத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.

இதில் மேலப்பாளையம் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவி: M.S சுலைமான் பிர்தௌசி அவர்கள் ஹஜ் செய்வது எப்படி? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி ஹஜ் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார். 

இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்துக் கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்! 


Share:

அதிரை தமீம் அன்சாரிக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமுமுக


நேற்று (26.09.2012) தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும், குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும், இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை என்பதும், போலீசார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, அன்னிய கைக்குகூலியோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

காஷ்மீர், குஜராத், டெல்-, பீஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல இங்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியை "க்யூ பிராஞ்ச்' போலீசார் தொடங்கி வைத்திருப்பதாக நிர்வாகக்குழு கருதியதால், இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டுவது என்றும், விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி க்யூ பிராஞ்ச் போலீசின் சதியை அம்பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: தமுமுக.இன்ஃபோ
Share:

Updated !தொடர் மின்வெட்டை கண்டித்து அதிரை மின் வாரியம் முற்றுகை (video)

அதிரையில் தொடர் மின்வெட்டு காரணமாக 12 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபடுகிறது. 

இதனால் குடிநீர்தேக்க தொட்டிகளில் முழுமையாக குடிநீர் ஏற்ற முடியவில்லை. குறைந்தஅளவே குடிநீர் ஏற்றுவதால் சில தெருக்களுக்கு மட்டுமே குடிநீர் செல்கிறது. தூரத்தில் உள்ள தெருக்களுக்கு குடிநீர் சென்றடைவதில்லை காந்தி நகர், கரையூர் தெரு, கடற்கரைத் தெரு நடுத்தெரு,ஹாஜா நகர்  உட்பட 10க்கு மேற்பட்ட தெருக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.

இதனால் காந்திநகர் தெருவாசிகள் ஒன்று சேர்ந்து தனியாரிடம் பணம் கொடு த்து குடிநீர் வரவழைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் இதுபோன்று குடிநீர் பிரச்னை பல தெருக்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த பிரச்னைக்கு முக்கிய தீர்வு காண வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை நமதூர் மின்சாரவாரிய அலுவலகம் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும்  அதிரை நகர திமுகவினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிரையின் மின்சார நிலவரம்:இன்றும் காலை 10.00 மணிமுதல் மாலை 6.00  மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
காணொளி உதவி:அதிரை தன்டர்


Share:

கூகிலில் கிடைக்கும் ராணுவ ரகசியங்களை வைத்திருந்த தீவிர(!)வாதி கைது!!


இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி 65 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திடமிருந்து இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அன்றைய மக்கள்தொகை சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய முஸ்லிம்கள், நம்நாட்டு சிறைச்சாலைகளில் சந்தேகத்தின் பேரிலும், நிரூபணமில்லாத குற்றவாளிகளாகவும், நீதி மன்ற விசாரணைக் கைதிகளாகவும் அதிகமான சதவீதம் பேர் இருந்து வருகிறார்கள். ஆட்சிகள் மாறினாலும் முஸ்லிம்களின் அவலக் காட்சிகள் மாறுவதாக இல்லை.

கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் புறந்தள்ளப்பட்டுள்ள இந்திய முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரப் போக்கிடமாக வளைகுடா மற்றும் கீழைத்தேய நாடுகளுமே இருந்து வருகின்றன. செலவு குறைந்த வணிகம் செய்யும் நாடுகளாக இலங்கையும் பர்மாவும் உள்ளன. பல்லாண்டுகளாகத் தமிழகத்துடன் வர்த்தக உறவு கொண்டிருப்பதால் இவ்விரண்டு நாடுகளில் தமிழக முஸ்லிம் வணிகர்களுக்கு ஆர்வமுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான கொலைவெறியில் குஜராத்தையும் விஞ்சிய கொலைவெறி தேசமாக பர்மா மாறியபிறகு, இந்திய வணிகர்களின் ஒரே அண்மைய வர்த்தக தளமாக இலங்கை மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கை வழியாகப் பாகிஸ்தானுக்குக் கடத்த முயன்றதாக நாட்டின் அனைத்து ஊடகங்களும் தலைப்புச் செய்தியொன்றைப் பரபரப்பாக வெளியிட்டிருந்தன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்திருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. வழக்கமாக சந்தேகத்தின் பேரில் கைதாகும் முஸ்லிம்கள் வெடிகுண்டு அல்லது தீவிரவாத குற்றச்சாட்டுகளின் பெயரில்தான் கைது செய்யப் படுவர். ஆனால் தற்போது கைதாகியுள்ள தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி, ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது பிடிபட்டதாகப் புதிய கதை வசனம் எழுதப்பட்டுள்ளது.

அப்பாவி முஸ்லிம்களை, திட்டமிட்டுத் தீவிரவாதிளாக உருவகிக்கும் உளவுத்துறையைப் பற்றி ஏற்கனவே சத்தியமார்க்கம்.காம் விரிவாக எழுதியிருப்பதை வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரியிடமிருந்து கைப்பற்றியதாகச் சொல்லப்படும் இந்திய ராணுவ ரகசியங்கள், கூகிலில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. மேலும் குறுந்தகடுகள், பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு ஆகிய 'பயங்கர ஆயுத'ங்களையும் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. பட்டிதொட்டியெல்லாம் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு இந்தப் பயங்கர ஆயுதங்கள் குப்பனிடமும் சுப்பனிடமும்கூட உள்ளதை அறியாத நமது உளவுப்பிரிவு போலிஸாரின் தொழில்நுட்ப அறிவு கேலிக்குரியதாகிறது.

27-09-2012 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ள செய்தியின்படி, தஞ்சாவூரில் ஏற்றுமதி வியாபாரத்திற்கான அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துள்ள தமீம் அன்சாரியைக் கட்டிட உரிமையாளர் ஒப்பந்தக்காலத்திற்கும் முன்பே காலிசெய்யச் சொல்லியுள்ளார். வர்த்தகத்திலிருந்து வரவேண்டிய தொகைகள் வசூலாக வேண்டிய நிலையில் அந்த இடத்தைக் காலிசெய்வது மேலும் இழப்பு ஏற்படுத்தும் என்பதாலும், ஒப்பந்தக்காலம் முடிவடையாததாலும் விரைவில் காலிசெய்வதாகக் கூறியுள்ள நிலையில், ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றதாக பொய்வழக்கு புனையப்பட்டுள்ளதில் கட்டிட உரிமையாளரின் கைங்கர்யமும் இருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தமீம் அன்சாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ராணுவ ரகசியங்களில் ஊட்டியிலுள்ள வெல்லிங்டன் ராணுவப் பயிற்சி முகாம் புகைப்படங்களும் இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் விபரமாகச் சொல்லவேண்டுமெனில், ராணுவப் பயிற்சி முகாம் நடக்கும் வெலிங்டன் கட்டடத்தைத் தம் காருக்குள் இருந்து தமீம் அன்சாரி எடுத்ததாகக் குப்பைச்சாட்டை க்யூ ப்ராஞ்ச் போலீஸார் பதிவு செய்திருக்கின்றனர். இந்த ராணுவ முகாமில்தான் சிலமாதங்களுக்குமுன் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டதும், தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர்கள் வேறுமாநிலத்திற்கு அனுப்பப்பட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அதாவது மத்திய அரசே இலங்கை ராணுவ வீரர்களைப் பயிற்சிக்கு அழைத்தபோது எடுக்கமுடியாத ராணுவ ரகசிய புகைப்படங்களை தமீம் அன்சாரி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அமர்ந்து எடுத்திருக்கிறார் என்பதும், அதை சிடி, மெமரிகார்டில் வைத்திருந்தார் என்பதும் இந்த ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாகும். இவற்றின் அடைப்படையில்தான் திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (FIR 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). க்யூ ப்ராஞ்ச் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி தமீம் அன்சாரி மீதான குற்றங்கள்:
1. மதவிரோதம்
2. சொந்த லாபம்
3. இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் முயற்சி
4. தென்னிந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி, இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கம்

உலக வரைபடத்தை இணையத்தில் காணும் கூகில் எர்த் (Goolge Earth) மற்றும் கூகில் மேப் (Goolge Map) ஆகியவவை மூலம் எவரும் உலகின் எந்தப்பகுதியை வேண்டுமானாலும் துல்லியமாகக் காண்பதோடு அவைகுறித்த மேலதிக தகவல்களை கூகிலில் தேடினால் ஆயிரக்கணக்கான சுட்டிகளும் படங்களும் கிடைக்கின்றன. கூகில் எர்த் இலவச மென்பொருள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தபோது அப்போதைய குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களும் இதைச் சுட்டிக்காட்டி, "கூகிலின் வரைபடங்கள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்றார். ஆக, கூகில் வெளியிட்ட ராணுவ ரகசியங்களை ஒருவர் குறுந்தகடுகளில் பதிவு செய்து கடத்த முயன்றார் என்பது கேலிக்குரியதும், கணினி மற்றும் இணைய நுட்ப அறிவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இந்தியர்களை அவமதிக்கும் செயலுமாகும்.

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வருவதற்கும், அவ்வாறே வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் திருச்சி-இலங்கை வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் பயணிக்கின்றனர்.அவர்களால் கொண்டுசெல்ல முடியாதவற்றைப் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு உள்நாட்டில் விவசாய உற்பத்திப்பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் ஒருவரை ராணுவ ரகசியங்களைக் கடத்தியதாக கைது செய்திருப்பது 'நிலக்கரி ஊழல், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு மற்றும் கூடங்குளம் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் யுக்தியே' என்று நாம் சொல்வோமெனில் அதற்கான அடிப்படை உள்ளது. ஏனெனில், இலங்கை வியாபாரியிடமிருந்து தமக்கு வரவேண்டிய பணத்தை வசூல் செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்ற தமீம் அன்சாரியைக் கைது செய்தபோது க்யூ ப்ராஞ்ச் கதைவிட்ட 'பயங்கர ஆதாரங்கள்' அவரிடமிருந்து கைப்பற்றப்படவில்லை. மாறாக, அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்ட ரவி எனும் அதிகாரி பறிமுதல் செய்த தமீம் அன்சாரியின் லேப் ட்டாப்பில்தான் கூகுள் மேப்புகள் இருந்தன. இதை, பேரா. அ. மார்க்ஸின் தலைமையில் விசாரித்த உண்மை அறியும் குழு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதோடு, க்யூ ப்ராஞ்ச் ஜோடித்த வழக்கைக் கேலி செய்திருக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி, தமிழகத்தில் இயங்கி வரும் எந்தவொரு இஸ்லாமிய அமைப்பிலும் எக்காலத்திலும் பங்கு வகிக்காதவர். அவரது பங்களிப்பெல்லாம் இந்திய மாணவர்கள் அமைப்பு, இலக்கிய மன்றங்கள், பொதுவுடமைக் கட்சிகள் ஆகியவற்றில் மட்டுமே அடக்கம். இவ்வாறு பொதுவிசயங்களிலும், உள்நாட்டு வணிகத்திலும் ஈடுபட்டுள்ள ஒருவர் கூகிலில் கொட்டிக் கிடக்கும் புகைப்படங்களை இலங்கை வழியாக பாகிஸ்தானுக்குக் கடத்தி, இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றப் போகிறாராம் தமீம் அன்சாரி. இதுவே ஒரு கேவலமென்றால், இந்தக் கதையை நாள்தோறும் பல்வேறு வசனங்களோடு வெளியிடும் ஒளி மற்றும் அச்சு ஊடகங்களின் போக்கு, படு கேவலம்.

தமீம் அன்சாரி மீது புனையப்பட்டிருக்கும் வழக்கு, சிபிசிஐடி மூலம் முறையான விசாரணை நடத்தப்பட்டு அநியாய வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளவருக்கு நீதிகிடைக்க வேண்டும் என்பதோடு, பொய்வழக்குப் புனைந்தவர்களுக்கு எதிராகக் கடும் சட்டநடிவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்திய சட்டத்தை நம்பிக்கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- அதிரையிலிருந்து தோழர் எழில்

தோழர் வினவின் பதிவு : http://www.vinavu.com/2012/09/25/tamim-ansari/

Share:

மாஷா அல்லாஹ்.அஸ்ஸாம் மக்களுக்கு 25 டன் ஆடைகளை மக்கள் வாரி வழங்கியுள்ளனர்! அறிக்கை மற்றும் காணொளி

அஸ்ஸாம் முஸ்லிம்களுக்காக அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதுமிருந்து வசூலிக்கப்பட்ட பழைய மற்றும் புதிய துணிமணிகள்.

தொண்டரணியினர் பிரித்து அடுக்கி அஸ்ஸாமுக்கு அனுப்பி வைக்கும் காட்சி. இதுவரை சுமார் 25 டன் (TON ) துணிமணிகள் அனுப்பப்படவுள்ளன.
நன்றி : makkamasjid.com

இது பற்றிய முந்தைய அறிவிப்பை காண இங்கே சொடுக்கவும்.

நமதூரில் அஸ்ஸாம் மக்களுக்காக ஆடைகளை வழங்க பைத்துல்மாலை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு :

அதிரை பைத்துல்மால் 
+91 9842411490 
04373 241690
adiraibaithulmal@yahoo.com


Share:

சகோ. தமீம் அன்சாரி கைது - உண்மை அறியும் குழுவின் அறிக்கை


தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது உண்மை அறியும் குழு அறிக்கை

                                                                    
செப்டம்பர் 24, 2012, திருச்சி

சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.
குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி குறித்து வேறு வகையான தகவல்களும் கிடைத்தன. அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் அது சார்ந்த வெகுமக்கள் அமைப்புகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர் எனவும், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்வது என்கிற அளவிலேயே அவருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்தது எனவும், அவரும் அவரது குடும்பத்தாரும் கியூ பிரிவு போலீசின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர் எனவும் அறிந்தோம்.

எனவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. எஸ்.வி. ராஜதுரை, மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி,
4. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
5. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி,
6. வழக்குரைஞர் அ.கமருதீன், திருச்சி.

இக்குழு உறுப்பினர்கள் சென்ற 21, 22, 23 தேதிகளில் திருச்சி, தஞ்சை முதலான இடங்களுக்கு நேரில் சென்று சிறையிலிருந்த தமிம் அன்சாரியைச் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.. அவரது வழக்குரைஞர் ஜே. கென்னடி என்கிற ஸ்டீபன் செல்வராஜ் மற்றும் அன்சாரியின் மனைவி நபீலா (23), தாயார் முத்து நாச்சியார் (50), மாமா லியாகத் அலி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோரைச் சந்தித்தனர். திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் பேசினர்.. அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறி முடித்துக் கொண்டனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டோம். இறுதியாகப் பேசிய ஆய்வாளர் ஒருவர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்..

நாங்கள் அறிந்த உண்மைகள்

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு ஏழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படும் என்பதால் இவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும் யூகிக்கலாம். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை. தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதுமில்லை.

தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.

16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப்
முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.
அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று (17) மாலை  தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடந்தது இதுதான்.  காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.

கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்

1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும்  பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?

2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம்.  செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

3. தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

4. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.

5. தூதரக அதிகாரிகளுக்கே  உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்,, செயப்பட்டதாகவே உள்ளது.  

6. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை  கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும்.

‘கியூ’ பிரிவு போலீஸ்

கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.

உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு.  ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை  என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக  அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால்  ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.

காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால்,   முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு  நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது  வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.

கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலானாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள  சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது  தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம்.
கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமிலை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

எமது கோரிக்கைகள்
  1. முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள பொய்கள் மற்றும் சட்ட விரோதக் காவல், கைது விவரங்கள் வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட்ட டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் மீறப்ப்பட்டது ஆகியன குறித்து விசாரித்து பொறுப்பான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும். 
  2. ‘கியூ’பிரிவு போலீசின் விசாரணை நம்பத்தகுந்ததாக இல்லை, எனவே தேசப் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டும். 
  3. ‘கியூ’ பிரிவு போலீசிடமிருந்து காவல்துறை அதிகாரம் பறிக்கப்பட வேண்டும். 
  4. அன்சாரியின் வழக்குரைஞர் கென்னடியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் சென்று உளவுத்துறையினர் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளனர். எத்தனை பெரிய குற்றமானாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்ட பூர்வமான உதவிகளைச் செய்ய வழக்குரைஞர்களுக்கு உரிமை உண்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களின் மகன் சென்ற ஆண்டு குரூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினரும் சக வழக்குரைஞர்களும் காவல்துறையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டுவதும் இங்கே நினைவுக்குரியது. வழக்குரைஞரின் வீட்டாரை உளவுத்துறை மிரட்டும் நோக்கில் விசாரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். 
--------------------------------------------------------------------------------------------------------                                              -தொடர்புக்கு: அ. மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை – 600 020. செல்: 9444120582. 
Share:

மிரட்டும் மின்வெட்டால் அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு [காணொளி] !!!

கடும் மின் பற்றாக்குறை காரணமாக  அதிரையில் மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களில் மட்டும் 16  மணி நேர அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து வருகின்றன.

குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால் பொதுமக்கள் மாத்திரமல்ல பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு எழுத தயாராகும் மாணவ, மாணவிகளும் மிகவும் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளன.

மேலும் இதனால் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களின் அன்றாட பணிகளும் முடங்கிப் போயுள்ளன.

குடிநீருக்காக ஆங்காங்கே பொதுமக்கள் காலிக்குடத்துடன் காட்சியளிப்பது மனதை நெருடவைக்கின்றன. ஒரே ஒரு ஆறுதலான விஷயமென்றால் குறிப்பிட்ட பகுதிகளில் டேங்கர் வண்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதுதான்.

குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கில் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக நமதூர் பேரூராட்சி தலைவர் அவர்களிடம் விளக்கத்தைக் கேட்டோம்.

Share:

அதிரையில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுபாடு !


அதிரையில் தினமும் 12 மணிக்கு குறைவிலாமல்   நிலவும் மின்வெட்டினால் அதிரையில் உள்ள குடி நீர்  தேக்க தொட்டிகளில் நீர் ஏற்றுவதில் சிரமமம் உள்ளது .
இதனால் முன் எப்பொழுதும்  இல்லாத அளவிற்கு அதிரையில் தண்ணீர் தட்டுபாடு உள்ளது  இதனை கருத்தில் கொண்டு அதிரை நகர திமுகவின் சார்பில் நாளை மின்வாரிய முற்றுகை போராட்டம் நடத்தபோவதாக அதிரை திமுக அறிவித்துள்ளது .

இந்த போராட்டத்தில் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அதிரை நகர திமுக அழைப்புவிடுத்துள்ளது .
 
Share:

உண்மையை எழுதுங்கள் : சகோ. தமீம் அன்சாரி

பத்திரிகைகளும் ஊடகங்களும் என்னைப் பற்றி நன்கு விசாரணை செய்து உண்மையை எழுத வேண்டும் என, திருச்சியில் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி நீதிமன்றத்தில் தமீம் அன்சாரியை போலீசார் ஆஜர்படுத்தினர். தமீம் அன்சாரியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த க்யூ பிராஞ்ச் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். அக்டோபர் 1 வரை நீதிமன்ற காவல் உள்ளதால் தமீம் அன்சாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

சிறை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய தமீம் அன்சாரி,

நான் மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். பத்திரிகைகளும், ஊடகங்களும் என்னை மிகப் பெரிய தீவிரவாதியாக சித்தரித்து எழுதுகிறீர்கள். எனக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. நான் ஒரு அப்பாவி.

டிவிஎஸ் டோல்கேட்டில் வைத்து என்னை கைது செய்ததாக க்யூ பிரான்ஞ்ச் போலீசார் சொன்னதாக எழுதியுள்ளீர்கள். ஆனால் நான் திருச்சி ஏர்போட்டுக்குள் போடிங் பாஸ் வாங்கி விமானத்தில் செல்ல காத்திருந்தேன். என்னோட பாஸ்போர்ட் டேமேஜ் ஆகிவிட்டது என விமான நிலைய அதிகாரிகளிடம் காண்பித்தேன். அப்போது உள்ளே புகுந்த க்யூ பிரான்ச் போலீசார் என்னை கடத்தி கொண்டு வந்துவிட்டார்கள். தயவு செய்து என்னை பற்றி விசாரித்து உண்மையை எழுதுங்கள்.

என்று கோரிக்கை விடுத்தார்.

நன்றி : நக்கீரன்
Share:

‘சந்திப்பு’ : பதிவர் சகோ. அப்துல் மாலிக்
‘சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. அப்துல் மாலிக் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. அப்துல் மாலிக் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
ஆசிரியர் மர்ஹூம் அப்துல் சமது அவர்களின்  இளைய மகனான இவர் , தற்போது துபாயில் ஐடி துறையில் பணி செய்துக்கொண்டிருக்கிறார். விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய இவர் நமதூர் காதிர் முகைதின் கல்லூரியில் சாம்பியனாக இருந்தவர். எண்ணற்ற கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ள இவர் சமூக ஆர்வலரும் கூட.

நமது சகோதர வலைதளங்களில் பதியும் சிறந்த ஆக்கங்களுக்கு பதிவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருகின்றார்.

சகோ. அப்துல் மாலிக் அவர்களின் தந்தை மர்ஹூம் ஆசிரியர் அப்துல் சமது அவர்கள் (முன்னாள் உதவி தலைவர் - அதிரை பைத்துல்மால், தலைவர் - பெற்றோர்-ஆசிரியர் கழகம் )


ஊடகத்துறையை பற்றி :
ஊடகத்துறை என்பது மக்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடையே ஒன்றெனக்கலந்து விவாதிக்கும் ஒரு இத்தியாதியாக இருக்கிறது. முன்னெல்லாம் ஜர்னலிசம் (Journalism) பட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து செயல்படுத்தியது போக இப்போ கூகிளின் கட்டற்ற சேவையான பிளாக் (BLOG) என்ற தனகென்ற வலைத்தளம் கணக்கை உருவாக்கி தன் மனதில் பட்டது, கண்டது, செயல் படுத்த நினைப்பது, விருப்பு, வெறுப்பு அனைத்தையும் எழுத்தின் வடிவில் மக்களை சென்றடைய எழிய வழியாக உருவாகி இருக்கிறது. இதற்கென ஒரு வரைமுறையை கையாண்டு புரட்சியின் மூலம் எதையும் சாதிக்கமுடியும், இயலாத பட்சத்தில் அந்த துறையை கொஞ்சமேனும் அசைத்துப்பார்க்கலாம்.

நானும் ஒரு ரேஞ்சர் சைக்கிள் வைத்திருக்கிறேன் என்று சொல்லுவதற்காக மட்டும் எனக்கு ஒரு வலைத்தளம் ஆரம்பித்து பிறகு அதன் வளர்ச்சியால், எழுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வரும்போதுதான் ஊடகத்துறையில் என்னாலும் முடிந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துசொல்ல ஏதுவாக இருந்தது.  முதன் முதலில் கருத்துக்கள் வரவில்லை என்று எண்ணி யாருமேயில்லாத டீக்கடையில் யாருக்காக தேத்தனி ஆத்தனும் என்று சோர்வுற்ற போதெல்லாம் மூத்த பதிவர்கள் சிலர் உன் பதிவுகள் பதிவிட்ட அடுத்த நிமிடம் பல நூறு வாசகர்கள் வாசிக்கிறாங்க என்ற உண்மையை சொன்னாங்க.

இதுலே நிறைய பேர் வாசிக்க மட்டுமே செய்றாங்க, யாருமே கருத்து சொல்லுறது இல்லை, இது நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி செல்கிறார்களா இல்லை பயமா இல்லை தட்டச்சு பிராப்ளமா என்று தெரியவில்லை. நம் சமூகத்தில் நடக்கு அவலங்களை நோட்டீஸ் அடிச்சி ஒட்டவேணாம், ஒரு சில கருத்து சொல்லி நம் மனதை தேத்திக்கலாம், நல்லவற்றை எடுத்து சொல்லி பாராட்டலாம். இப்படி ஒரு சிறு உந்துத்தால் சிறந்த சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்கள் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கமாக அமையும்.

ஊடகத்துறையில் அச்சுத்துறையை விட எலக்ட்ரானிக் துறையே அதிவீத வளர்ச்சி கண்டுள்ளது என்பதற்கு இணையம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அச்சில் ஏற்றியவகைகளை தேடி காலங்கார்த்தாலே தேத்தனியும் பேப்பர் கையுமா இருக்கனும் என்ற அவசியமில்லை. அதற்காக நேரம் விரயம் செய்து படித்த காலம் போய் இன்று கையடக்க ஆண்ட்ராய்ட் அலைபேசியினூடே அனைத்து செய்திகளையும் அறிய முடிகிறது என்பது மறக்கமுடியாத உண்மை

ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
மாநிலத்துக்கு ஒன்று ஊடகம் இருந்த காலம் போய் தெரு/ஆளுக்கு ஒன்று என்று விரிவடைந்திருப்பது ஊடகத்துறையில் நம்மவரின் பங்கு அலப்பறியது. ஆலிம்சாமார்களை தேடிப்போய் விளக்கம் கேட்ட காலம்போய் இன்று கையடக்கத்தில் எல்லாமே. கடந்த நோன்பில் ஒரு நாள் சரியாக காலை 6 மணிக்கு உணவு சரியில்லாமல் வாந்தியும் பேதியும் போனது, நிறைய பேர் நோன்பு முறிந்துவிட்டது எனவே மறுபடியும் நோன்பிருக்கவேண்டும் என்று சொன்னார்கள், இணையத்தில் தேடினேன் ஆதாரமுள்ள ஹதீஸ் கிடைத்து நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிந்தேன், ஆகவே இன்று எந்தவித கேள்விக்கும் விடை எலக்ட்ரானிக் ஊடகத்துறையினால் சாத்தியமே.

மேலும் எது வளர்ச்சியடைகிறதோ அதுவே வீழ்ச்சிக்கும் வழிவகை செய்கிறது. நம் சமுதாயத்தவர்கள் இந்த ஊடகத்தை வைத்துக்கொண்டு தன்னை சார்ந்த சமூகத்தவரையே எதிரியாக்கி அவர்களை பற்றிய கட்டுரைகளை பரப்பும் குணம் அதிகரித்துள்ளது. ஒரு மெயில் குழுமத்தில் என்னை இணைத்தனர் அது ஹதீஸ் குரானை ஆராயும் தளமாக இருந்தது. நாள் பட அத்தளம் இவர்/அவரை தாக்கியும் குறிபிட்ட செய்தியை எடுத்து வாதாடுவதும் எந்தளவுக்கு நாம் கால விரயத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்றெண்ணி வருத்தம்தான் மிஞ்சுகிறது. இவ்வளவு வளர்ச்சியுள்ள இந்த ஊடகத்தை நாம் சரியான வழியில் சிந்தித்து செயல்படுத்தினால் நாளை நம் சமுதாயம் உச்சத்தில் இருக்கும், நம் மரபுவழி சமுதாயம் பயனடைய நாம் ஏன் அடிக்கோலிடக்கூடாது..

அறிவுரை..! 
அறிவுரை என்பது எல்லோரும் எல்லோருக்கும் இலவசமாக தருவாங்க,  அதையே நானும் செய்ய விரும்பல, திறமையானவங்க நிச்சயம் நல்ல ஆரோக்யமான ஊடகமாக செயல்பட்டு இச்சமுதாயத்தை கல்வியின் பக்கம் முன்னேற்றமடைய செய்வாங்க. இன்று நம்மூரில் நிறைய இளைஞர்கள் நகைச்சுவையாகவும், அறிவுடனும் திறமையாகவும் எழுதுறாங்க என்பது மிக்க சந்தோஷம். எனக்கு தெரிந்து அதிரையில்தான் அதிகமானோர் தனித்தனி பிளாக் வைத்திருக்காங்க. நல்லவழிகளில் பயன்படுத்தினால் நாளை நீயும் வரலாற்றில் ஒரு அங்கமாக இருப்பாய்.

நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு :
இதை பற்றி சொல்லவேண்டுமானால் தனி பதிவே போடவேண்டும், எவ்வளவு கவிதைகள், கட்டுரைகள், சமுதாய சிந்தனைகள் மாஷா அல்லாஹ். நம்மவர்கள் சாப்பிடதான் லாயக்கு என்ற காலம் போய் இன்று எல்லா துறைகளிலேயும் சாதித்த்து சாதித்துக்கொண்டிருப்பதை கண்கூடாக காண்கிறோம். ஊரில் இருப்பவர்களை விட வெளிநாடுகளில் வாழுவோர் உடனுக்குடன் உள்ளூர் செய்திகளை அறிய தருகிறார்கள், இதை நானு அனுபவித்திருக்கேன். எந்த ஒரு நிகழ்வும் இந்த ஊடகத்துறையின்மூலம் சாத்தியமே அதை நம்மக்கள் செய்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...
Share: