அதிரையில் புயல் எச்சரிக்கை(வீடியோ காணொளி)

                                        அதிரையில் புயல் எச்சரிக்கை


கூடுதல் செய்தி:சென்னை அருகில் நிலம் புயல் காற்று வீசி வருவதால் நமதூரில் இருந்து சென்னைக்கு செல்லும்   ராஹத், சிவராஜன்,ஆப்பிள் ஆகிய பேருந்துகள் இன்று நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 
Share:

ஹாஜிகளுக்கு IFF தன்னார்வத் தொண்டர்களின் அபார சேவை


மக்கா:IFF என்னும் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் வருடா வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு தன்னலமற்ற தொண்டுகள் பல ஆற்றி வருகின்றது. இந்த வருடமும் அவர்களின் சேவை அபாரமாக இருந்தது. IFF தன்னார்வத் தொண்டர்கள் அரஃபாவிலும், முஸ்தலிபாவிலும், கூடார நகரமான மினாவிலும் பெரு வெள்ளமாகத் திரண்டு சென்ற ஹாஜிகளுக்கு இடைவிடாது சேவைகள் செய்தனர். இது ஹாஜிகளுக்கு மிகுந்த உதவியாகவும், நிவாரணமாகவும் இருந்தது.

குறிப்பாக கூடார நகரமான மினாவில் IFF தன்னார்வத் தொண்டர்களின் சேவை தனித்துவமிக்கதாக இருந்தது.

ஏற்கனவே மக்காவிலிருந்து மினாவிற்கு வந்து சேர்ந்த ஹாஜிகளுக்கு அவர்களின் கூடாரங்களுக்குச் சென்று சேர உதவி புரியும் வகையில் துல்ஹஜ் ஏழாம் நாள் அன்றே IFF தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் சேவைகளைத் தொடங்கினர்.

பின்பு துல்ஹஜ் எட்டாம் நாள் துவங்கி ஹாஜிகள் அரஃபாவிற்குச் சென்று சேர தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

இது ஒரு புறம் இருக்க, IFF தன்னார்வத் தொண்டர்கள் அனைத்து இரயில்வே நிலையங்களிலும் ஹாஜிகள் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட இரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கும் உதவிகள் புரிந்தனர்.

குறிப்பாக வயோதிகளுக்கும், பலவீனமானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் IFF தன்னார்வத் தொண்டர்கள் செய்தனர். மேலும் முஸ்தலிபாவிலிருந்து மினாவிற்குத் திரும்பும் சமயத்தில் பல ஹாஜிகளுக்கு சக்கர நாற்காலிகளின் மூலமும் தங்களின் உதவிகளை வழங்கினர்.

“இந்தச் சேவைகள் ஏனோதானோவென்று வழங்கப்படுவது இல்லை. போதுமான பயிற்சியுடனும், நன்கு தயார் செய்யப்பட ஒருங்கிணைப்புடனும் கூடிய திட்டம் இருந்தால் மட்டுமே மேற்கூறப்பட்ட அனைத்து சேவைகளும் சாத்தியப்படும்” எனக் கூறினார் ஹஜ் சேவை ஒருங்கிணப்பாளர் இக்பால்.

இவரது சீரான ஒருங்கிணைப்பிலும், IFFன் தலைவர் அஷ்ரஃப் மோராயூர் அவர்களின் வழிகாட்டுதலிலும் இந்தச் சேவைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

மினாவில் பல வருடங்கள் ஹாஜிகளுக்குச் சேவை செய்த அனுபத்தின் அடிப்படையில் IFF முழுமையான வரைபடம் ஒன்றை மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் தயாரித்து, ஹாஜிகளுக்கு வழங்கியது.

கூடாரத்தை எளிதில் கண்டுபிடிக்கவும், வழி தவறிய ஹாஜிகள் தங்கள் கூடாரங்களுக்கு மிக எளிதாகத் திரும்பி வரவும் எளிதான தோற்றம் கொண்ட இந்த வரைபடம் மிகவும் பயனுள்ளதாகவும், உதவிகரமாகவும் இருந்ததாக ஹாஜிகள் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

நன்றி : தூது ஆன்லைன்.காம்.
தகவல் : யாஸீன் அன்சாரி, ஜித்தா
Share:

சந்திப்பு : 'பதிவர்' சகோ. ஜஃபருல்லாஹ் [ஜாஃபர்] - காணொளி
இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் அடுத்தக் கட்டம் என்று அழைக்கும் இவற்றை பயனுள்ள வகையில் நம்முடைய நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டு நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் பயனுற உறுதுணையாய் இருப்போம் [ இறைவன் நாடினால் ! ]

'சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
நமதூர்  காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.

சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுயதாய அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், .ஊடக ஆர்வலர், அதிரை எக்ஸ்பிரஸ் தள  நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது இவருக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் பலவற்றை நமதூர் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன.

இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து அவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்


சேக்கனா M. நிஜாம்

இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...
Share:

நான் மோட்டார் சைக்கிள் பேசுகின்றேன்


இன்றைய கால இளைஞர்களின்.......

உல்லாச வாகனம் நான்...!

உங்களது வாழ்வினில்.......

பெரும்பங்கு எனக்கும் உண்டு....!

ஆனால் நீ..என்மீது அமர்ந்த பின்னர்.......

என்னையே மறந்து போகின்றாய்...!

கைபேசி மணியொலி கேட்டு.......

என்னை கைவிட்டபடி ஓட்டுகின்றாய்.....!

தோழன் உன் தோளில் கை வைத்ததும்.....

துறத்தி துறத்தி நீ செல்கின்றாய்...!

தயங்காது நீ பிறரை முந்திச்செல்கையில்.....

தயங்குகிறது எந்தன் இருசக்கரம்….!

ஒவ்வொரு முறை நீயும் என்னை......

மயிரிலையில்  தப்பவைக்கிறாய்....!

நீ எதிர்கொள்ளும் அனைத்து விபத்தும்...

என்னையே சபியாய் சபிக்கின்றது....!

ஏன் இந்த சோதனை எனக்கு.....

எப்போதென்னை புரிந்து கொள்வாய்...!

கரடுமுரடு பாதையிலும்.......

கவிழாது நான் போவேன்..!

பகலானாலும் இரவானாலும்......

பார்த்து பார்த்து நான் செல்வேன்....!

வெயிலானாலும் மழையானாலும்....

வென்று வருவேன் உன் வேலைகளை...!

எரிபொருள் தீர்ந்த பின்னும்.....

எத்திவைப்பேன் நீ செல்லுமிடம் வரை...!

முறையாக நீ உபயோகித்தால்.....

முழுவிசுவாசியாக நானிருப்பேன்....!

அயராது உழைக்கும் என்னை........

அரவணைத்து காப்பாயாக...!ஆக்கம் ;- A. முகைதீன் சாகிப் (மெய்சா  அதிரை
Share:

மரண அறிவிப்பு

மேலத்தெருவை   சேர்ந்த நெய்னா முகமது (LIC) அவர்களின் மனைவியும் N.முகமது சலீம் N.அலாவுதீன் N.பாவா பகுருதீன் இவர்களின் தாயாரும் பகுருதீன் ,அமீர்  முகைதீன் .ஆகியோரின்  மாமியாருமான மைமூன் சரிபா அவர்கள் நேற்று இரவு 8.00  மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று  பெரிய ஜும்ஆ  பள்ளி மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும். 

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்.

தகவல்:tiya   

Share:

HR-யை கவரும் Curriculam Vitae தயாரிக்க வேண்டுமா?


எந்தவொரு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கும் Curriculum Vitae மிக அவசியம்.
தற்போதைய தொழில்நுட்ப உலகில் வசீகரமான, பார்த்தவுடன் பிடிக்கின்ற Curriculum Vitae-யே வேலைவாய்ப்பை வழங்கும் எந்தவொரு நிறுவனத்தினாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில் அநேகமானவர்கள் மைக்ரோசொப்ட்டின் Word மென்பொருளின் உதவியுடன் தமக்குரிய Curriculum Vitae-யினை தயாரிக்கின்ற போதிலும், சில சமயங்களில் Curriculum Vitae-யின் வடிவம், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்பனவற்றை தெரியாத நேரத்தில் இணையத்தளங்கள் சில வழிகாட்டியாக அமைகின்றன.
அதாவது உங்களுக்குத் தேவையான Curriculum Vitae-யினை ஆன்லைனில் உருவாக்கும் வசதியினை சில இணையத்தளங்கள் தருகின்றன. அவற்றுள் சிறந்த ஐந்து இணையத்தளங்கள் இதோ!
1. VisualCV – http://www.visualcv.com/
2. CV Maker – http://cvmkr.com/

3. pdfCV –  http://www.pdfcv.com/
4. CeeVee – http://www.ceevee.com/Share:

அதிரையில் தொடர் மழை-நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

அதிரையில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது.இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.மழை காரணமாக நமது ஊரில் அணைத்து குளங்களும் நிரம்ப தொடங்கி உள்ளன.மேலும் தொடர் மழை காரணமாக நாளை (31-10-12) அதிரை பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.  

கூடுதல் செய்தி: நமதூர் வாசிகள் பலர் வசிக்கும்  நியூயார்க் நகரில்  சாண்டி புயல் வீசி வருகிறது.இதனால் இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளதாகவும்,இதனால்  நமதூர் வாசிகளின்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தொலைப்பேசி வாயிலாக செய்திகள் வருகிறது.    
Share:

சூரிய சக்தி

ஒருமுறை நிறுவி விட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்னையும் இன்றி மின் உற்பத்தி செய்ய முடியும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். வேறு பராமரிப்புச் செலவு எதுவும் இருக்காது.
ஒருமுறை நிறுவி விட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்னையும் இன்றி மின் உற்பத்தி செய்ய முடியும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். வேறு பராமரிப்புச் செலவு எதுவும் இருக்காது.

தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், பல்வேறு சலுகைகளுடன் "சூரிய சக்தி கொள்கையை' அரசு வெளியிட்டிருப்பது பொதுமக்களிடையேயும், பிற நிறுவனங்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டதற்குப் பிறகு வீடுகளில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவுவதற்கான ஆலோசனையைப் பெறுவதற்காக தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) அலுவலகத்தை அணுகி வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனது வீட்டில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ திட்டமிட்டு ஆலோசனை பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஏனெனில், இதுவரை சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ பல லட்சங்கள் செலவாகும் என்றும், அதன் பிறகும் தொடர்ந்து பராமரிப்புச் செலவுகள் இருக்கும் எனவும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அரசு கொள்கையை வெளியிட்ட பிறகுதான், இந்தத் திட்டத்துக்கு ஒருமுறை செலவு செய்தால் போதும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன என "டெடா' அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷெரிஃப் என்பவர் கூறினார்.
மானியம் மற்றும் ஊக்கத் தொகை: மக்களிடையே சூரிய சக்தி மின் உற்பத்திக்கான ஊக்குவிப்பை ஏற்படுத்தும் வகையில், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இத்திட்டத்தை நிறுவுபவர்களுக்கு மானியத்தை அரசு அளித்து வருகிறது.

அதிகபட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது திட்டச் செலவில் 30 சதவீதம் என்ற அளவில் மானியத்தை அரசு அளித்து வருகிறது.
இதுமட்டுமின்றி ஊக்கத் தொகையையும் அரசு இப்போது அறிவித்துள்ளது. அதாவது வீட்டுக் கூரைகளில் இத்திட்டத்தை நிறுவிய நாளிலிருந்து முதல் இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 (உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை) என்ற வீதத்திலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 1 என்ற அடிப்படையிலும், அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு 50 பைசா என்ற அடிப்படையிலும் ஊக்கத்தொகையை அரசு வழங்கும்.

2014 மார்ச் 31-ம் தேதிக்குள் இத்திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே இந்த ஊக்கத்தொகையை பெற முடியும். அதோடு, மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அளவை கணக்கிடும் வகையில் தனிப்பட்ட மீட்டரை (நெட் மீட்டர்) பொருத்த வேண்டியதும் கட்டாயம்.

இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரி ஒருவர் கூறியது:
வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவித் தருவதற்கென தமிழகம் முழுவதும் ஏராளமான முகவர்கள் உள்ளனர். இவர்களில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையில் 112 முகவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்துள்ள முகவர்கள் மூலம், சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே அரசின் மானியத்தைப் பெற முடியும். இந்த முகவர்கள் குறித்த விவரங்களை அறிவதற்கு முகமை அலுவலகத்தை மக்கள் அணுகலாம். மேலும் வீடுகளில் 1 கிலோ வாட் அளவு நிறுவு திறனுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கும்.

நிறுவனங்களைப் பொருத்தவரை 100 கிலோ வாட் நிறுவு திறன் வரை அரசு மானியம் கிடைக்கும். இத்திட்டத்தை நிறுவ வங்கிக் கடனும் கிடைக்கிறது.
15 ஆண்டுகளுக்குபிரச்னை இருக்காது: சூரிய சக்தி மின் திட்டம் என்பது ஒரு முறை செய்யப்படும் செலவு என்பதால், இப்போது நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஒருமுறை நிறுவி விட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்னையும் இன்றி மின் உற்பத்தி செய்ய முடியும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். வேறு பராமரிப்புச் செலவு எதுவும் இருக்காது.

அதே நேரம் அவ்வப்போது சூரிய தகடுகளைத் தூசுகள் படியாமல் துடைக்க வேண்டும். தூசுகள் படிந்தால் உற்பத்தித் திறன் குறையும்.
மானியத்தை கழித்துவிட்டு செலுத்தினால் போதுமானது...வீடுகளில் 1 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை செலவாகும். இதில் அதிகபட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது மொத்த திட்டச் செலவில் 30 சதவீத அளவு மானியத்தை அரசு வழங்கும்.
இந்த மானியத்தை கழித்துவிட்டு மீதித் தொகையை முகவரிடம் செலுத்தினால் போதுமானது.
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1 கிலோ வாட் மின்சாரத்தில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டிவி அல்லது கம்ப்யூட்டரை இயக்க முடியும்.
Share:

அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு - (A A F) உதயம்

 அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு - American Adirai Forum [A A F]

சிறப்புரை: ஷைக் நஜீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்.

அமெரிக்கா வாழ் அதிரையர்களின் கூட்டமைப்பு வெற்றிகரமாக இன்று  28-Oct-2012 (ஞாயிற்றுக் கிழமை) துவங்கப்பட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேற வல்லமை நிறைந்த அல்லாஹ்வின் உதவியே அன்றி வேறில்லை.

முக்கிய இந்நிகழ்வுக்கு குடும்பத்துடன் வந்து சிறப்பித்த அனைத்து அதிரை சகோதரர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன் ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

மேலும் வல்லேஹோ மஸ்ஜிதில் சிறப்புடன் ஏற்பாடு செய்த சகோதரர்கள் அப்துல் மாலிக், மதீனா, ஷேக் அலி இவர்களின் முயற்சிக்கும் பங்களிப்பிற்கும் எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 சகோதரர்களின் சந்திப்பின் நிறைவாக கீழ்கண்ட சகோதரர்கள் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-

அமெரிக்கா அதிரை சகோதரர்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள்

தலைவர் : சகோ. ஹக்கீம்

துணைத் தலைவர் : சகோ. ஷிப்ளி முஹம்மது

செயலாளர் : சகோ. ஷைக் நஸீர்

இணை செயலாளர் : சகோ. தமீம்

பொருளாளர் : சகோ. இக்பால் M.ஸாலிஹ்

Peer Assistant Leader : சகோ. ஜுபைர்


இறைவன் நாட்டப்படி விரைவில் மண்டல பொறுப்பாளர்களை அந்தந்த பகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்படும்.

 கூட் டமைப்பின் நெறிமுறைகள்:-

1. நம் சமூகத்திற்கு (அமெரிக்க அதிரையர்கள்) சேவை செய்வதே முக்கிய குறிக்கோளாகும்.

2. சந்தாதாரர் மட்டுமே கூட்டமைப்பின் சகல வசதிகளையும் பெறமுடியும், சந்தாதாரர் அல்லாதவர்களுக்கு கூட்டமைப்பின் நலன்களில் பங்களிப்பு இல்லை.

3. மாதம் டாலர் 25/- சந்தாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

4. அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு, நம் சமூக சகோதரர்களின் இறப்பு மற்றும் அதற்கான இறுதிக் கடமைக்கான (கஃபன், நல்லடக்கம்] செலவினங்களை சந்தாதரர்களுக்கு மட்டுமே ஏற்கும்.

5. உறுப்பினர்களுக்கிடையே ஒருவருக்கொரு உதவிபுரிதல், எதிர்பாராத விபத்துக்கள் அல்லது இடர்களுக்கு உதவுதல்.

6. அதிராம்பட்டினத்தில் வாழும் நலிந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும்

7.  A.A.F..தனது முழு ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை அதிரை பைத்துல் மால் வழியாகவே செய்யும் அதுவும் AAFன் செயற்குழு அனுமதி பெற்ற பின்னரே செயல்படுத்தும்.

8. ஜகாத், தர்மங்கள், ஃபித்ரு சதக்கா முறையாக வசூல் செய்யப்பட்டு அதனை தேவையுடைய மக்களுக்கு வழங்குவ து.

9. ஆகுமாக்கப்பட்ட  (ஹலால்) சம்பாத்தியமே நிரந்தரம் என்பதை உறுப்பினர்களுக்கு கட்டாயமாக வழியுறுத்தி அதன்படியே செயல்பட தூண்டுவது.

10. AAF புதிதாக அமெரிக்கா வரும் அதிரை சகோதரர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் தங்குமிட வசதி, வேலை வாய்ப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்னின்று உதவுவது.

11. சமூக கட்டமைப்பு உருவாக்குவது (சமூக கூடல், பொழுது போக்கு விடயங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ஒன்று கூடல்)

12. இளைஞர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தினை செப்பனிட வழிகாட்டுவது.

13. AAF எவ்வகையிலும் நேரடியாக பள்ளிவாசல் கட்டிட நிதிக்காக பொருளாதார உதவியினை அதன் பொருளாதரத்திலிருந்து வழங்காது. உறுப்பினர்கள் தங்களின் சொந்த முயற்சியில் தனியாகவோ அலல்து கூட்டாகவோ நேரடியாக நிதி திரட்டுவதில் AAF எவ்வகையிலும் தலையிடாது.

14. AAF ஏழைக் குமர்களுக்கு அல்லது திருமண நிதி உதவிகள் செய்யாது.

15. அதிரை அல்லாத சகோதரர்கள் கூட்டமைப்பில் இணைந்து செயல்படலாம், அவர்கள் அமெரிக்காவில் அதிரையர்களுக்கு என்ன சலுகைகளோ அவையனைத்தும் பெறுவார்கள். ஆனால், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அந்த உதவி நீட்டிக்கப்படமாட்டாது.

16. கூட்டமைப்பின் நிகழ்வுகளை யாரும் முன் அனுமதியின்றி நேரடியாக மீடியாவிற்கு அனுப்பக்கூடாது அல்லது மின்னஞ்சல் பகிர்வுகள் செய்யக்கூடாது.

17. இறைவன் நாடினால், ஒவ்வொரு வருடமும் (முஹர்ரம் - துல்ஹஜ்) இஸ்லாமிய கால அட்டவணைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
 


நிகழ்வு சரியாக லுஹர் தொழுகைக்கு பின்னர் துவங்கியது. அனைவருக்கும் கோழி பிரியானி மற்றும் தந்தூர் கறி (ஃப்ரிமோண்ட்லிருந்து ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஜசாகல்லாஹு கைரன்!

தகவல் : இக்பால் M.ஸாலிஹ்


நன்றி : அதிரை நிருபர்
Share:

எது நிரந்தரம் !?

இவ்வுலகம் வந்தேன், இவ்வுலகும் நிரந்தரமா ?
பெற்றோர்கள் உண்டு, பெற்றோர்களும் நிரந்தரமா ?

உறவுகள் உண்டு, உறவுகளும் நிரந்தரமா ?
உடைகள் உண்டு, உடைகளும் நிரந்தரமா ?

உணவுகள் உண்டு, உணவுகளும் நிரந்தரமா ?
நட்புகள் உண்டு, நட்புகளும் நிரந்தரமா ?

பள்ளி சென்றேன், பள்ளிகளும் நிரந்தரமா ?
கல்வி கற்றோம்ம், கல்வியும் நிரந்தரமா ?

வசதிகள் உண்டு, வசதிகளும் நிரந்தரமா ?
காசு பணம் உண்டு, இவையெல்லாம் நிரந்தரமா ?

இல்லறம் உண்டு, இல்லறமும் நிரந்தரமா ?
சொத்து சுகம் உண்டு, இவைகளும் நிரந்தரமா ?

துணையாள் உண்டு, துனையாளும் நிரந்தரமா ?
பிள்ளைகள் உண்டு, பிள்ளைகளும் நிரந்தரமா ?

சரீரம் உண்டு, சரீரமும் நிரந்தரமா ?
உயிர் உண்டு, உயிரும் நிரந்தரமா ?

எது நிரந்தரம் ? அது மறுமையே,
அதுக்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ?

K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
Share:

காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா !!!


அரசின் நலத்திட்டங்களில் ஒன்றாகிய மாணவர்களுக்கான 'விலையில்லா மடிக்கணினி' வழங்குவதும் ஒன்றாகும். நமதூர் காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தாளாளர் ஹாஜி ஜனாப் K.S. சரஃபுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 'விலையில்லா மடிக்கணினி'யை பெற்றுக்கொண்டனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் என கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விழாவிற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் சார்பாக செய்யப்பட்டு இருந்தன.தகவல் : நஜ்முதீன் [ தீனியாத் ஆசிரியர் ]
Share:

அதிரை PFI நடத்திய பதிவாளர்கள் சந்திப்பு

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை பற்றி திட்டமிட்டு ஆதிக்க சக்திகளால் பரப்பபடும் வதந்திகளுக்கு எதிராக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஏன் ? என்கின்ற பெயரில் தேசிய அளவில் பத்திரிக்க ஊடகவியளாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ,மற்றும் பெரிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து அவர்களது  செயல்பாடுகளை  குறித்து விளக்கம் அளித்து  வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அதிரையிலும்  ஊடகவியளாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை4.00  மணிக்கு நடைப்பெற்றது


இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக முஸ்லிம்கள் மீது  தீவிரவாத பழி சுமத்தும்  உளவு துறை மற்றும் மீடியாக்கள்  செயல்பாடுகளை குறித்தும்
விவாதிக்கப்பட்டது.மேலும்  நமதூரில் PFI  அமைப்பை பற்றி நிலவும் தவறான கருத்துக்கள்,மற்றும் அவர்களது செய்பாடுகளை குறித்து அவர்களிடம் நமது  திவாளர்கள் விளக்கம் கேட்டனர்.அதற்கு PFI அமைப்பினரால்  விளக்கம் அளிக்கப்பட்டது.   
இதில் நமது ஊர் வலைதளங்கலான அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை.இன்,அதிரை நிருபர்,அதிரை போஸ்ட் மற்றும் அதிரை தண்டர் ஆகிய வலைதள பதிவாளர்கள் பங்கேற்றனர்.       
Share:

மரண அறிவிப்பு! (ஆஸ்பத்திரி தெரு அஹமது தாயார்)


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த மர்ஹூம் லெப்பைக்கனி மரைக்காயர் அவர்களின் மகளும், சேகுகனி அவர்களின் சகோதரியும், மர்ஹூம் நெ.செ.மு ஹாஜமுகைதீன் அவர்களின் மனைவியும், சாகுல் ஹமீது, மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம், ஜஹபர் சாதிக், பாவா பகுருதீன், நெய்னா முஹம்மது இவர்களின் தாயாரும், சி.மு.க முஹம்மது முகைதீன் மற்றும் முகைதீன் அப்துல்காதர் ஆகியோரின் மாமியாருமாகிய அஹமது தாயார் அவர்கள் இன்று 29/10/2012 திங்கள்கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப் படும்.

அன்னாரது ஹக்கில் துஆ செய்வோம்

Share:

அதிரை- பட்டுக்கோட்டை செல்லும் வழியில் இரு விபத்துகள் !

இன்று அதிகாலை அதிரை- பட்டுக்கோட்டை செல்லும் வழியில் இரு விபத்துகள் ஏற்பட்டன. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லையென்றாலும் இரு வாகனங்களும் உருக்குலைந்து காட்சியளித்தது.
தகவல் : J.M. நிஜாமுதீன்
                    [ N-Planners , Adirai ]


Share:

அதிரையில் குதிரை பந்தயம் (வீடியோ காணொளி)

அதிரை EB அருகில் தொடங்கப்பட்ட இந்த குதிரை பந்தய போட்டி பட்டுகோட்டை செல்லும் வழியான கரிகாட்டில்  நிறைவடைந்தது.இப்போட்டியில் ஒரு கருப்பு நிறத்தான குதிரை  முதல் பரிசு  தட்டி சென்றது. Share:

அயல்நாட்டு தியாக நாட்கள் - Married Bachelor Special


தியாகப்பெருநாள் கேள்விபட்டிருக்கின்றோம்..அது என்ன தியாகிகளின் பெருநாள்! அதற்கும் கல்யாணத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்கின்றீர்களா?

வேற ஒன்றும் இல்லைங்க 'எம்மைப்போன்ற திருமணமான பிரம்மச்சாரிகள்தான் (Married Bachelor) நமதூர் வலைத்தளங்களிலும் சரி, உலகத்தின் அனைத்து மூலைகளிலும் சரி உலா வருவதாக'ஏசி நீல்சன் பார்வையாளர் அளவீட்டில்(AC Nielson Audience Rating) சொல்லாவிட்டாலும் எங்களுக்கு தெரியாமலா இருக்கும்! அவர்களை பற்றிய உண்மை நிலைமையை இந்த தியாகப்பெருநாளில் தாயகத்தையும்,தாய் தந்தைகளையும், தன்னை நம்பி வந்தவளையும்,நட்பையும் தியாகம் செய்து வந்தவர்களின் உண்மை நிலையை நினைவுகூரும்வண்ணம் ஒரு சில பிரசத்திபெற்ற கவி வரிகள் (கிட்டத்தட்ட பிரம்மச்சாரிகளின் தேசிய கீதம்போலத்தான் இருக்கின்றது. கேட்டுவிட்டு சொல்லுங்கள்).மேலே கேட்ட கவியின் எழுத்து வடிவம்.

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால்
வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு

கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
மரஉச்சியில் நின்று ...
ஒரு
தேன் கூட்டை கலைப்பவன் போல!

வாரவிடுமுறையில்தான்..                                                                              
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்
ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த
உள்ளு@ர் உலககோப்பை கிரிக்கெட் !

இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !

கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
வறட்டு பிடிவாதங்கள் !

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!

மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு
கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;!

இறுதிநாள் நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?


ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின்
திடீர்மறைவு ...

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

ரசிகவ் ஞானியார்
துபாய்


இதோ அக்காலத்து(திலிருந்து) தியாகிகளின் ஸ்பெசல்.. என்னுடன் பணிபுரியும் 40,45 வயது மதிக்கத்தக்க ஒரு அய்யம்பேட்டைகாரருக்கு 'உங்களுக்கு ஒரு  special gift' என்று சொல்லி இதை பதிவிறக்கம் செய்து கொடுத்தேன்.. மனுஷன் நொந்து போய் சிரிக்கிறதா, அழுகுரதா என்று தெரியாமல் ஒருகணம் ஆடிப்போகிட்டார்.. (ஊருக்கு முடித்துக்கொண்டு போகப்போகிறேனென்று அவர் கிட்டத்தட்ட மூன்று வருசமாக சொல்கின்றார்..போனபாடில்லை..பலர் முப்பது வருசமா சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.. Middle East Magnet அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுவிடுமா என்ன?!)அதுசரி இவ்ளோ தியாகம் பன்றோமே நம்ம ஊரு பஞ்சாயத்து வாரியத்திலயோ, exit  visa  அடித்தபிறகு இந்திய தூதரகத்துலையோ தியாகி பட்டம் ஏதும் கொடுத்து அனுப்பலாம்/வரவேர்கலாமுல? அடுத்த பஞ்சாயத்து தேர்தல்ல இப்படி ஒரு திட்டம் கொண்டு வர்றதா சொன்னா பலே ஓட்டு கிட்டுமப்பா!..

(நாம் உழைத்து உருகிப்போன நிறுவனத்தில் சேவை பணத்தை(service benefit) வாங்குவதற்கே வேட்டி கிழிஞ்சிடுது..இதுல இது வேரயாக்கும்னு யாரோ முனங்குவது என் காதுகிழிய கேட்கின்றதப்பா..)
Share:

‘சந்திப்பில் கலந்துரையாடல்’... அறிமுகம் [ காணொளி ]
[1] சமுதாய விழிப்புணர்வு...
[2] ஆசிரியர், மாணவன், பெற்றோர் ஆகியோரின் செயல்பாடுகள்...

மேற்கண்ட தலைப்புகளை எடுத்துக்கொண்டு சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் இல்லத்தில் இன்று [ 28-10-2012 ] மாலை நடைபெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடல் நிகழ்ந்தது. இதில் இணையத்தோடு தொடர்புடைய நமது சகோதரர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இப்பயனுள்ள நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடலில் பங்குபெற்றோர் :

 ‘தமிழ் அறிஞர்’ அதிரை அஹமது
 ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன்
 ‘மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்’ இப்ராகிம் அன்சாரி
 ‘கணினித் தமிழ் அறிஞர்’ ஜமீல் M. ஸாலிஹ்
 ‘நாவலர்’ நூர் முஹம்மது
 ‘கவியன்பன்’ அபுல் கலாம்
 ‘தொழில் அதிபர்‘ சபீர் அஹமது [மு.செ.மு]
 ஜமாலுதீன் [ அதிரைக்காரன் ]
 சேக்கனா M. நிஜாம்
 தாஜுதீன் [ அதிரை நிருபர் ]
 ஆஷிக் அஹமது [ அதிரை.இன் ]
 இர்பான் [ அதிரை தென்றல் ]
 முஹம்மது தம்பி [ வழக்கறிஞர் ]
 ரியாஸ் [ அதிரை.இன் ]
 முபீன் [ அதிரை எக்ஸ்பிரஸ் ]

பங்களிப்பாளர்களின் அறிமுகங்கள் :

இறைவன் நாடினால் ! விரைவில் விவாதங்கள் சூடு பிடிக்கும்...
Share:

FLASH NEWS அதிரையில் பலத்த காற்றுடன் மழை

தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகிய காரணத்தால் கடலோர பகுதியான நமது ஊரிலும் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. 
Share:

அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெருநாள் திடல் தொழுகை!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இன்று (27.10.2012) ECR ரோட்டில் அமைத்துள்ள NMS ஜெகபர் அலி மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் ஆண்களும் பெண்களும் திரளாக  கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள்.


Share:

அதிரை கீழத்தெரு மஹல்லா அமீரக நிர்வாகிகளி​ன் நன்றி அறிவிப்பு !!!உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர்சிறுமிகள் மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமானதொன்றாகிறது. இதைக்கருத்தில் கொண்டு அதிரை கீழத்தெரு மஹல்லா அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல் மற்றும் அதன் நிர்வாகிகளின் சீரிய முயற்சியின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட நான்கு இடங்களில் சிறார்களுக்கான குரான் ஓதும் பயிற்சிகளை மேற்கொள்வது என்ற முடிவையடுத்து, இதன் முதல் முயற்சியாக கீழத்தெரு மஹல்லா அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல் அவர்களின் வீட்டில் முதல் பயிற்சி ஆரம்பம் செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நமதூரைச்சார்ந்த அனைத்து சிறுவர் சிறுமிகளும் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மார்க்க அடிப்படைக் கல்வியை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டு, இதற்காக ஒத்துழைப்பு வழங்கி நிதி உதவிசெய்த கீழத்தெரு மஹல்லாவாசிகள் அனைவருக்கும் கீழத்தெரு மஹல்லா அமீரக நிர்வாகிகளின் சார்பாக நன்றிகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை கீழத்தெரு மஹல்லா - அமீரகம்
Share:

அதிரை அருகே ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பிஜேபி யினர் தடை

அதிரை அருகில் உள்ள வெட்டிகாடு என்ற கிராமத்தில் பல இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள்.  இன்று ஹஜ் பெருநாள் என்பதால் அவர்கள் பள்ளிவாசலில்  தக்பீர்  முழங்கி கொண்டு இருந்த போது அந்த  ஊரில் உள்ள பாரதிய ஜனதா  கட்சியினர் பள்ளிவாசல் அருகில் கோயில் இருப்பதால் தக்பீர் மற்றும் தொழுவதற்கு தடை போட்டுள்ளனர்.இதனால் அங்கு  இருவர்களுக்கு இடையே    வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.இதனை தகவல் அறிந்த  20 க்கு மேற்பட்ட நமதூர் SDPI சகோதரர்கள், பட்டுகோட்டை SDPI  மற்றும் கரம்பக்குடி SDPI யினரும்  காவல்துறை துணையோடு அங்கு சென்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பிறகு காவல்துறை பாதுகாப்புடன் ஹஜ் பெருநாள் தொழுகை நடை பெற்றுள்ளது.  
Share:

அதிரையில் நடந்த ஹஜ் பெருநாள் திடல் தொழுகை


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் பேரருளால் வழமைபோல் சானா வயல் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. மழை தூரலின் மிரட்டலையும் மீறி பெருந்திரளாக குழுமிய மக்களிடையே சகோதரர் ஜமீல் எம். ஸாலிஹ் அவர்கள் குத்பா பேருரை நிகழ்த்தினார்கள்.

நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் வழங்கிய கண்ணியங்களை எடுத்துச் சொன்ன சகோதரர் அவர்கள் இவ்வரிய பேற்றை அடைவதற்காக நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் குடும்பம் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தார்கள்.
உரையின் முத்திரையாய், நாகரீகத்தின் பெயரால், முன்னேற்றத்தின் பெயரால் ஓர் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நம்முடைய இளைய சமுதாயம் காப்பாற்றப்பட மொபைல், டிவி, லேப்டாப், இன்டெர்நெட் (குறிப்பாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள்) போன்ற நவீன சாதனங்களை நாமும் தியாகம் செய்ய கடமைபட்டுள்ளோம், குறைந்தபட்சம் பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பையும் கட்டுக்கோப்பையும் அதிகப்படுத்தி தங்களின் நேரங்களை தியாகம் செய்திட முன்வர வேண்டுமென சில சமீபகால நாட்டுநடப்புகளை மேற்கோள்காட்டி உரையை நிறைவு செய்தார்கள்.

களத்திலிருந்து
அதிரைஅமீன்

படங்கள்
ஆசிக் அஹமது

Share:

கலிபோர்னியா அதிரை சகோதரர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு!

கலிபோர்னியா அதிரை சகோதரர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு
Share:

அதிரையில் மழை பெருநாள்

அதிரையில் காலை மேக மூட்டமாகவே  காணப்பட்ட நிலையில் 8 .00 மணியிலுருந்து  மிதமான  மழை பெய்து வருகிறது.இந்த மழை  இன்று குர்பானி கொடுப்பவர்களுக்கு  சற்று இடையுறாகவே இருக்கும். 
Share:

ஏணிப்படிகளை மனிதா ஏனிப்படிநீ மறந்தாய்
முதற்பள்ளி நமக்காகி அமுதம் ஊட்டும்
....முதலிற்றாய் மடியிற்நீ பார்த்த மேனி
பதம்பெற்றுப் பக்குவமாய் உன்னைச் சீராய்ப்
... பழக்கிவிட்ட அன்பேதான் முதலாம் ஏணி
நிதம்கற்றுத் தந்துதவும் அறிவாம் தந்தை
...நீவாழத் தானுழைத்த இரண்டாம் ஏணி
விதம்சொல்லில் கல்விக்கண் திறந்து வைத்த
....வித்தைகள்தாம் குருவென்னும் மூன்றாம் ஏணிதொழில்சீராய் வணிகம்நே ராய்நீ செய்ய
...தொடர்ந்துவரும் அனுபவமே நான்காம் ஏணி
எழில்பெற்ற இன்பமுடன் வாழ்க்கைத் தேடி
...இணையாக வருபவரே ஐந்தாம் ஏணி
வழியெல்லாம் வசந்தங்கள் பூக்கக் காண
...வளர்த்தெடுத்த நன்மக்கள் ஆறாம் ஏணி
பழியில்லா நற்புகழும் பணமும் பேறும்
...பெற்றுவாழ ஏற்றிவிடும் எட்டாம் ஏணிகடும்முயற்சி யும்தோல்வி யடைதல் கண்டு
.. கலங்காதுப் படிக்கட்டாய்க் கருத்திற் கொண்டு
தடுப்புகளாம் சோதனைகள் தாண்டும் போழ்துத்
.. தாளாண்மை வெற்றியெனும் கனியைக் காண்பர்
படுத்துகொண்டே வெற்றிகளைப் படைப்பேன் என்னும்
.. பகற்கனவுத் தோல்வியிலே தோய்த்துக் காண்போர்
எடுத்துணர்த்து வோர்கூறும் அறிவுப் பாடம்
.. ஏற்பதுவே ஒன்பதான உச்சி ஏணி!


ஏணிகளும் ஏற்றிவிட்ட பின்னர் ஏணி
...எதுவென்றே அறியாத வேட மிட்டு
ஏனிவனும் மாறிவிட்டுப் பேசு கின்றான்?
..இறங்குவதற் கும்ஏணி வேண்டும் என்று
மானிடனும் மறப்பதனால் நன்றாய்ப் பெய்யும்
....மழைகூடப் பொய்த்துவிடும் உணர்வா யோநீ
வானிலையில் மழையின்றிக் காணு தற்போல்
....வாழ்க்கையிலும் வறட்சியைநீ காண் கின்றாய்!”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
 
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச் சோலை)
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி:             00971-50-8351499       / 056-7822844


Share: