Sunday, December 30, 2012

வந்து மறையும் வருசங்கள்...


உலக மக்கள் காத்திருக்க
ஒவ்வொரு ஆண்டும் வந்து மறையும்

ஆனால் மறையாமல் நிலை கொண்ட
மற்ற பல யாவும் என்று மறையும்...???

வறுமைகள் யாவும் மறையவில்லை
வெறுமைகள் யாவும் உறங்கவில்லை

கலவரங்கள் யாவும் ஓயவில்லை
கயவர்கள் யாவும் மடியவில்லை

ஊழல்கள் யாவும் ஒழியவில்லை
ஒவ்வாதவர்கள் யாவும் அகலவில்லை

தர்மங்கள் யாவும் தழைக்கவில்லை
தவறுகள் யாவும் குறையவில்லை

நீதிகள் யாவும் நிலைக்கவில்லை
நியாயங்கள் யாவும் ஜெயிக்கவில்லை

பாலியல்கொடுமைகளுக்கு முடிவேதுமில்லை
பகற்கொள்ளையர்களுக்கு பயமேதுமில்லை

வன்செயல்கள் யாவும் களையவில்லை
வான் மழைகள் யாவும் பொழியவில்லை

அக்கிரமங்கள் யாவும் அழியவில்லை
அனாச்சாரங்கள் யாவும் அகலவில்லை

அவலங்கள் யாவும் அயரவில்லை
அகிலங்கள் யாவும் அமைதியில்லை

ஆதிக்கம் யாவும் சாகவில்லை
அழிவுகள் யாவும் நிற்கவில்லை

மேற்சொன்ன அனைத்தும் நீங்கி
மேலோங்கி உயர்ந்து நிற்கும்
நன்னாள் தான் என்று வரும்..???
அதுவே எங்களின் புதுமை தினம்...!

அவலங்கள் மாறி மறைந்து
அகிலமெல்லாம் மகிழ்ச்சியில் மூழ்கும்
நன்னாள் தான் என்று வரும்..???
அதுவே எங்களின் புதுமை தினம்...!

சென்றபல ஆண்டு சம்பவங்கள்
செவி சாய்த்து நினைவு கூர்ந்து
இனிவரும் நாட்களை
புதுமை தினமாய் மாற்றிடுவோம். 
புகழ் மணக்கச் செய்திடுவோம்...!

அதிரை மெய்சா 

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி- சென்னையில் குவிந்த அதிரை கிரிக்கெட் ரசிகர்கள்

இந்தியா பாகிஸ்தான் முதல் கிரிக்கெட் போட்டி சென்னை சிதம்பரம் ஸடேடியத்தில் இன்று காலை 10.00 மணி முதல் நடந்து வருகிறது.இந்த கிரிக்கெட் போட்டியை  பார்ப்பதற்கு அதிரையிளுருந்து சுமார் 25க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ரயில்,மற்றும் தனியார் பேருந்துகளில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.மேலும் சென்னை வாழ் அதிரை மக்களும் இந்த போட்டியை பார்ப்பதற்கு ஸடேடியத்தில் குவிந்து உள்ளனர். 

அதிரையில் அதிகளவில்  இந்தியா மற்றும்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.நமதூரில் பள்ளி,கல்லூரி விடுமுறை என்றாலே! கிராணி மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் .அதாவது இந்தியா அணி ரசிகர்கள் ஒரு அணியாகவும், பாகிஸ்தான் அணி ரசிகர்கள் ஒரு அணியாகவும் விளையாடுவார்கள். 

[ 9 ] ஏன் அழுதாய்...? 'அழும் குரல்' தொடர்கிறது...

தேர்தல் காலம் வந்ததுமே
தொண்டனுக்கு குதூகலம்
தலைவனின் வெற்றிக்கு
துணிந்து அவன் உழைத்திட்டான்
உக்கிரமான உச்சி வெயிலில்
கட்சி கொடிபிடித்து
பாதகைகள் பல தூக்கி
சுவரொட்டிகள் பல ஒட்டி
வெற்றிக்கு உழைத்திட்டான்
உழைப்பு வீண் போகாமல்
அவன் கட்சி வென்றதுவே..!

நாட்கள் பல கடக்க
தொண்டன் பதறி அழுதான் ஏன்...?
தொண்டனின் சாலையோர
சில காணி நிலம் மந்திரியின்
கண்ணில் பட
மந்திரியும் தந்திரமாய் 
அபகரித்தார் அவன் நிலத்தை
வெகுண்டெழுந்து எதிர்த்தும்
ஒன்றுமே உதவ வில்லை
தொண்டை கிழிய கோஷமிட்டு
மக்களிடம் சேர்த்ததை போல்
அவன் குறையை தலைமையிடம்
கதறியழுது சொன்னபோது 
பாராமுகமாய் இருந்ததுவே
தேம்பி அழுதான் தொண்டனுமே...!

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...
[ எட்டாவது அழும் குரலை கேட்க ]

Saturday, December 29, 2012

அதிரையில் ஃபேஷன் லைஃப் மென்ஸ் வியர் புதிய கிளைதிறப்பு விழா

சென்னை பாரிமுனையில்(parrys)  இயங்கி வரும்  பேஷன் லைப் மென்ஸ்  வியர் தற்பொழுது புதிய கிளை அதிரை பேருந்து நிலையம் எதிரில்  அமைந்துள்ள எவர் கோல்ட் ஷாப்பிங் மால் முதல் மாடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் திறக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஸ்தாபனத்தின் சிறப்பம்சம் ஆண்களுக்கு தேவையான உயர்ரக ஆடைகள் ,மற்றும் வாசனை திரவியங்கள்,சன் கிளாஸ் வகைகள் ,மற்றும் கை கடிகாரங்கள் கிடைக்கும்.

 பேஷன் லைப் 
எவர் கோல்ட் ஷாப்பிங், NO.6x, மால் முதல் மாடி, மெயின் ரோடு, அதிரை. தொடர்புக்கு: 04373-326428,9841045673. கவிதைச் சமையற்குறிப்பு:


சாடல் நெருப்பைச்
சட்டென மூட்டி
பாடல் பதியும்
பாத்திரம் வைப்பாய்

அறிவால் அறிந்த
அனைத்துப் பொருட்களும்
நிறைவாய்ப் பகிர்ந்து
நிறைநெய்த் தமிழிடு

கருவிளம் என்னும்
கறிவேப்பிலையும்
தரு(ம்)மணம் என்றும்
தனியாய்ச் சுவைக்கும்


சீரசை  பிரித்தல்
சீரகம் தரும்குணம்
நேரசை புரிதல்
நேசமாய் நறுமணம்

சாம்பலைப் பிரித்தல்
சோம்பலைத் துறத்தல்
சோம்புடன் மிளகும்
சேர்த்திடச் சுவைக்கும்


எதுகை மோனை
ஏலம் கிராம்புமாய்
விதிகள் பாவில்
வீசும் நறுமணம்

கருவாய் அமையும்
கருத்தை அழகாய்த்
தருவாய்ச் சமையல்
தகிக்கும் தருவாய்

புளிமா கொஞ்சம்
பதமுடன் கலந்தால்
புளிபோல் மிஞ்சும்
புதுசுவை உணர்வாய்

தேமாங்காய் போன்ற
தேங்காய்ப் பாலுடன்
மாமாங்காய்க் கீற்றும்
மாற்றும் பாவினம்

“அசலாய்” சேர்த்த
அறிவுப் பெட்டக
”மசலா” கொஞ்சம்
மணக்கச் சேர்த்திடு

சுண்டி இழுக்கும்
சுவைமிகு உவமை
கிண்டிக் கிளறும்
”கரண்டியின்” பெருமை

ஒற்றுப் பிழைபோல்
உப்பின் குறைதான்
கற்றுத் தருவர்
கல்வி நிறைந்தோர்

ஆவி அடங்க
ஆறப் போட்டிடு
கூவி அழைத்து
கூடிச் சாப்பிடு

மாசிலா வாழ்வை
மணத்துடன் வாழ
மாசிபோல் தூய
மரபினைப் போடுபாலும் பருப்பும் பசுநெய்யும் சேர்ந்தது
போலுன்றன் பாடலைப் போடு

(இக்குறட்பா போலிருக்கும் அப்”பா”யாசம்)

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Friday, December 28, 2012

அதிரையில் அதிரடி நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் !


மழைக் காலங்களில் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, பொதுமக்கள் மற்றும் கல்வி பயிலும் மாணாக்கர்கள் அவ்வழியே நடந்து செல்லும்போதும் ஏற்படுகிற பாதிப்புகள் ஏராளம். குறிப்பாக அப்பகுதியை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இருந்ததால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வந்தனர். பெரும்பாலான கடைகள் தங்களுக்கு சொந்தமான இடத்தை தவிர சுமார் 2 முதல் 5 அடி வரை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவது மாமூலாக காணப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாகவே இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையினரும், கிராம நிர்வாகிகளும் போலீஸாரின் ஒத்துழைப்போடு சாலைகளை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை JCB இயந்திரம் மூலம் அகற்றி வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைகளுக்கு முன்பு இருந்த கீற்று கொட்டகை, ஆஸ்பெட்டாஸ் சீட்டு, தடுப்பு பலகைகள், விளம்பர போர்டுகள் ஆகியவை அகற்றப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் வியாபாரிகளே தங்கள் கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி நெடுஞ்சாலைத் துறையினருக்கு ஒத்துழைப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.  நெடுஞ்சாலைத் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைகளை பொதுமக்கள் பலரும் பாராட்ட தவறியதில்லை.


ஒரு சில நாள்களிலேயே அவர்கள் மீண்டும் அதே இடத்தில் கடைகளை விரிப்பதை நிரந்தரமாக தடுக்கும் நோக்கில் காவல்துறையின் கண்காணிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பது அதிரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்!

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளியைத் தவிர அதிரையின் அனைத்து ஜுமுஆ பள்ளிகளிலும் இன்று வினியோகிக்கப்பட்ட நோட்டீஸ் ....

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...
மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்!

அல்லாஹ்வின் அடியார்களே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் கபுருக்குச் சந்தனம் பூசுவதற்காகக் கடந்த 23.12.2012 பகல் 2.45 மணியளவில் மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து லெப்பை அலாவுத்தீன் இறந்து விட்டார்!  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).  இந்த இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.

ஒரு வீட்டிலுள்ள குளியலறைக்குள் குளிப்பதற்காகச் சென்ற ஒருவர் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் வெளிவராவிட்டால், அந்த வீட்டார் என்ன செய்வார்கள்அதுவும், குளிக்கச் சென்றவர் இரத்த அழுத்த நோயாளியாகவும் சர்க்கரை நோயாளியாகவும் இருப்பாராயின், எவ்வளவு கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்கள்? வழக்கமாகப் பதினைந்து நிமிடத்தில் தம் குளியலை முடித்துக்கொண்டு வெளிவரவேண்டியவர், அரைமணி நேரமாகியும் வெளிவராவிட்டால்?

ஒரு மணி நேரம் தாண்டிய பின்னரும் உள்ளே சென்றவர் என்னவானார் எனும் கவலையற்று இருந்துவிட்டு, கடைசியில் அவரை உயிரிழந்தவராகத் தூக்கிவந்து போட்டு, அவருக்கு அநியாயம் இழைத்துவிட்டு, எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல், தம் குற்றங்களை அல்லாஹ்வின்மீது திசை திருப்புவது அறிவற்றவர்களின் செயலாகும்.  அப்படிப்பட்ட ஓர் அறிவீனம்தான் மர்ஹூம் அலாவுத்தீன் விஷயத்தில் அரங்கேறியது.  வழக்கமாக, ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர், ஏறத்தாழ மூன்று மணி நேரம் (மாலை ஐந்தரை) வரை என்னவானார்? என்று கபுருக் கதவைத் திறந்து அல்லது உடைத்துப் பார்ப்பதற்கு தர்ஹாவில் குழுமியிருந்தவர்களைத் தடுத்து நிறுத்திய அறிவீனம் எதுஅல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மௌட்டீகக் கொள்கையான தர்ஹா வழிபாட்டு நம்பிக்கை நிகழ்த்திய அநியாம்தான் அது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. 

அல்லாஹ் கூறுகிறான்:
"மனிதர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எவ்வித அநியாயமும் செய்வதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்." (அல் குர்ஆன் 10:44).

அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக நம்மை ஆக்கியருளியிருக்க, அவனளித்த அருட்கொடையான அறிவை, என்றோ இறந்துவிட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டு, அல்லாஹ்வுடைய மௌத்து’ என்று கூர் மழுங்கிப்போய் கூறுதல் முறையல்ல.

"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் (4:78) எச்சரிப்பது, மௌத்துக்கு அஞ்சி ஓடி எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது என்ற பொருளிள்தானே அன்றி, நம்முடைய மடமையினால் ஓர் உயிரை அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவல்ல.

என்றோ மரணித்து, பதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் கபுருக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும், அந்தக் கபுருக்குச் சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை இன்னும் ஏற்க மறுப்பது மடமையின் உச்ச கட்டமாகும்.

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ
"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரால் ஆண்டு தோறும் கந்தூரி எடுப்பதும், அதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றனஅல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளக்கும் இதோ சில நபிமொழிகள்:

 وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا 
"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கிவிடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்." அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746 .

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا يُعْبَدُ
"... இறைவா, எனது சமாதியை வழிபடும் இடமாக ஆக்கிவிடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்." அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ 
"சமாதிகளை தரிசிக்கச் செல்லும் பெண்களையும், அவற்றில் வழிபாடு செய்யும் பெண்களையும், (சமாதிகளில்) விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்." இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

 لَعْنَ اللَّه الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا
"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றியும் எச்சரித்தார்கள்" - அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.

கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவங்கள் என்பதை நம் ஊர் மக்களுக்குத் தெளிவாக - உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும். குறிப்பாக, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும்ஏனெனில், மறுமையில் அவர்களுக்கு இது பற்றிக் கூடுதல் கேள்வியுண்டு!  ஜமாஅத்தின் பொறுப்பாளர்களுக்கும் அவ்வாறே கூடுதல் கேள்விகள் மறுமையில் காத்திருக்கின்றன!

தம் மூதாதையரின் மட நம்பிக்கையை ‘இபாதத்’ என்று நம்பிப் பின்பற்றி, உயிர் நீத்த அலாவுதீனின் மண்ணறையின் ஈரம் காயும் முன்னர், அவ்லியாவின் சமாதிக்கு எதிரில் ஆடல் பாடல் கச்சேரிகளை அரங்கேற்றிய மனசாட்சியற்ற கந்தூரிக் கமிட்டியினரும், அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் சாதித்து ஆதரவளித்த ஜமாஅத் பொறுப்பாளர்களும், கந்தூரி ஆதரவாளர்கள் அனைவரும் அவ்லியாவின்  பெயரால் கந்தூரி எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெற்றே ஆகவேண்டும்!

வெளியீடு 3/2012 - நாள் : 28.12.2012

அறிவுறுத்தும்,


அதிரை தாருத் தவ்ஹீத்
பதிவு எண் 4/130/2012
28G, Market (East) Street, P.O.Box 5 Adirampattinam – 614701
Tanjore Dist; Tamilnadu, India – Tel : +91-4373-240930; Email : salaam.adt@gmail.com

வீடு... மனைவி... மக்கள்...


வீதியில் உலாவந்து...
விகட கவியாய் திரிந்து...
பாடுகள் பல பட்டு...
பட்ட கஷ்டங்களின் பலனாக...
வீடு ஒன்றை உருவாக்கினான் அவன்...

குலம் மகிழ கோத்திரம் தழைக்க...
துணையொன்றை ஏற்படுத்தி...
துணிவாக துணை நின்று...
சந்ததிகள் பல உருவாக்கி...
சாந்தி மனம் கொண்டு...
சாய் நாற்காலியில் அமர்ந்தான் அவன்...!

மக்களை பெற்ற மகராசனாய்...
மானிடர் மத்தியில் நன் மதிப்பாய்...
சொக்கதங்கமென பேர் சொல்லும்...
செல்வங்களை செதுக்கியெடுத்து...
துணைவியின் துயர் போக்கிடும்...
தூயவனாய் இருந்து...

வீட்டையும் அழகு படுத்தி...
மனைவியையும் மகிழவைத்து...
மக்களையும் மதிக்க வளர்த்து...
வீடும் மனைவியும் மக்களுமாய்...
வீதியில் உலாவந்து...
விகட கவியாய் இன்று,,,
காடுவரை சென்ற பின்...
கடைசி வரை யாரென்று...
கண் விழித்துப்பார்க்கிறான் அவன்...!

அதிரை மெய்சா 

நிக்காஹ் (திருமண) வலிமா அழைப்பிதழ்தகவல்

சம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம்


உணவுக்கான அவசர உதவிகோரி மடல்


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

உணவுக்கான அவசர உதவி கோரி மடல்

என் அன்புச் சகோதரர்களுக்கோர் தாழ்மையான வேண்டுகோள்
السلام عليكم ورحمة الله وبركاته
தற்போது இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் அதனால் மக்கள் அடைந்துவரும் சிரமங்களும் செய்தி ஊடகங்கள் வழியாக தாங்கள் அறிந்திருப்பீர்கள். இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டுவருகின்றனர். இதற்கிடையில் எமது ஊரான மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்குட்பட்ட கரடிக்குளி மற்றும் அதைச்சூழவுள்ள பகுதிகளான மறிச்சுக்கட்டி, பாலைக்குளி போன்ற பகுதிகள் நான்கு பக்கங்களும் வெள்ளத்தினால் பாதைகள் மூடப்பட்ட நிலையில் சுமார் ஓரு வார காலமாக மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எற்கனவே 22 வருட அகதி வாழ்வை அனுபவித்த இவர்கள் மிக அண்மையில் தான் ஓலைக்குடிசைகளில் மீண்டும் தம் வாழ்வை தொடங்கினார்கள். இதற்கிடையில் மீண்டுமொரு சோதனை.

இந்நிலையிலிருந்து விடுபட இவர்களுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்வதோடு. முடியுமாக இருந்தால் இந்த மூன்று ஊர்களிலும் மொத்தம் 800 குடும்பங்கள் வாழ்கிறார்கள் இவர்கள் மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள். மின்சாரம் போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் இதுவரை அங்கு செய்து கொடுக்கப்படவில்லை. இவர்களின் மிக அத்தியாவசியமான உணவுக்கு தங்களில் யாராவது தனியாகவோ கூட்டாகவோ ஏற்பாடு செய்தால். அதனை மிக அவசரமாக கடல் வழியாக அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் தயாராகவுள்ளோம்.

இது மனிதாபிமான அடிப்படையில் அவசரமாக செய்யப்பட வேண்டிய உதவியாகும். குறைந்தது மூன்று நாட்களுக்கு தேவையான உணவு ஏற்பாட்டினை மூன்று கிராமங்களுக்குமோ அல்லது மூன்றில் ஒரு கிராமத்துக்கோ செய்வதற்கு உதவி செய்யுமாறு தங்களை அல்லாஹ்வுக்காக வேண்டிக்கொள்கிறோம். அண்ணளவாக சராசரி ஒரு குடும்பத்திற்கான உணவுக்கு அவசியமான பொருட்களும் அதற்கான பெறுமதிகளும்

kg அரிசி (1 kg70/)                              -350
kg கோதுமை மாவு (1 kg100/)      -200
kg சீனி 105(1 kg105/)                        -210
1 250g பால்மா 200/                            -200
1 மீன்டின் 96/                                        -105
250g பருப்பு                                           -55
200g தேயிலை                                    -70
___________________________________
மொத்தம்                                                1190  
ஒரு குடும்பக்கிற்கு சராசரி 1190 தங்களின் இயல்புக்கு ஏற்ப குடும்பங்களை பொறுப்பேற்கலாம்
صحيح البخاري (3/ 128)
2442 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ سَالِمًا أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُسْلِمُ أَخُو المُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ

2442. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன - புகாரி 2442                       

தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்
மௌலவி முஹம்மது நாஸர் 0094755216164 0094774224217

தௌபீக்- ஆசிரியர் 0094713555993 begin_of_the_skype_highlighting            0094713555993      end_of_the_skype_highlighting
அஸ்மல்- டெய்லர் 0094775993812 begin_of_the_skype_highlighting            0094775993812      end_of_the_skype_highlighting
தகவல் - மௌலவி முஹம்மது நாஸர்

தொலைபேசி   0094774224217 begin_of_the_skype_highlighting            0094774224217      end_of_the_skype_highlighting

Account Details:
T Thahir Mohammed Nasar
A/C No. 8148001279
Commercial Bank of Ceylon
Puttalam Branch
Sri Lanka

தகவல் உதவி - அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)

இந்த உதவியை நம்மால் ஒரு கரத்தாலும் செய்ய  முடியாத சூழ்நிலையில் இருந்தால்  இரு கரம் ஏந்தி பிரார்த்தனை என்ற பேருதவியை மறவாமல் செய்வோமாக..